வியாழன், 23 நவம்பர், 2017

கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவில் வரலாறு.......



கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவில் வரலாறு.......

சாத்தூர் தாலுகாவை சார்ந்த சிற்றூராக இருந்த கோவில்பட்டி இன்று தூத்துக்குடி மாவட்டத்தின் வருவாய் தரும் தொழில்சார்ந்த நகரமாக விளங்குகிறது. இவ்வூருக்கு கோயிற்புரி, திருப்பூவனம், பொன்மலை, கோயில்புரி என்றெல்லாம் பெயர் விளங்குகிறது.சிற்றூராக இருந்துவந்த இவ்வூரானது இன்று ஒரு சிறப்பு நிலைநகராட்சியாகத் திகழ்கிறது. பல வகைகளிலும் சிறப்புப் பெற்ற பல ஊர்கள் செண்பகவல்லியம்மன் கோவில் திருத்தலத்தை  சுற்றிலும் அமைந்துள்ளது தனிச்சிறப்பான ஒன்றாகும்.

சுமார் 20 கி.மீ. தொலைவில் இருக்கின்ற வெம்பக்கோட்டையை அரசாண்டசெண்பகமன்னன், களாக்காட்டினை வெட்டித் திருத்தி கோயிலும், ஊரும் எழுப்பித்தான் என்று இக்கோயில்தல வரலாறு சொல்கிறது. இவ்வூரிலிருந்து சுமார் 5கி.மீ. தொலைவில் இருக்கின்ற மந்தித்தோப்புசங்கராபதி திருமடத்தில் உள்ள செப்புப்பட்டையம் மூலமாக இவ்வூரானது கலி 4131க்குமுற்பட்டது என்று அறியமுடிகிறது. அதேபோல் இத்திருக்கோயிலை உள்ள முடையான் என்னும் அரசன் புதுப்பித்த ஆண்டை சகரனாண்டு 1100 என்று கோயில்புரி புராணத்தின்மூலமாக அறிய முடிகிறது.

புராணச்சிறப்பு........ ஆயிரத்து தொளாயிரத்து முப்பத்து மூன்று முப்பத்து நாலாம்ஆண்டுகளில் இத் திருக்கோயில் பலிபீடம், கொடிமரம்,நந்திதேவர் ஆகியவை பிரதிஷ்டைசெய்யப்பட்டதற்கான கல்வெட்டுக்கள், தூண்கள் மற்றும் வாயில்கள் நிறுவப்பட்டதற்கான கல்வெட்டுக்களும் ஆங்காங்கே காணப்படுகின்றன. இத்திருக்கோயில் முழுவதும் கல்வெட்டுக்களினால் கட்டப்பட்டுள்ளதால் இரண்டாம் நரசிம்மவர்மன் (கி.பி.700)காலத்திற்கு பிற்ப்பட்டதாகவும் கருதப்படுகிறது.

மேலும் சிவஞானயோகிகள் இயற்றிய கோயில்புரி புராணத்தில் இப்புராண வரலாறுகள் தொகுத்துக் கூறப்படுகின்றன. 18படலங்கள் கொண்ட இந்நூலில் முதல் 16 படலங்களில் இவ்வரலாறுகள் கூறப்பட்டுள்ளன.

அகத்தியர் வந்த வரலாறு:-

சிவனாரின் மனம் மகிழதவமியற்றிய பார்வதி தேவிக்கு இறைவன் காட்சி கொடுத்துதிருமணம் முடிக்க வந்து சேர்ந்தார். ஈடிணையில்லா ஈசன்திருமணம் காண யாவரும் வந்து ஒருங்கே கையிலைமலையில் கூடியதால் உலகின் வடபுலம் தாழ்ந்து தென்புலம்உயர்ந்தது. செண்பக வல்லியம்மன் திருக்கோயில் தலவரலாறு: அகத்தியரை இறைவன் பணித்தார். அவ்வண்ணம் தென்புலத்திசையில் உள்ள பொன்மலை என்னும் இவ்விடத்தில் களாமரக்காட்டில் லிங்கத் திருமேனியாய் எழுந்தருளியுள்ள ஈசன்பூவனநாதரை வழிபட்டு விட்டு தவமியற்றி வந்த முனிவர்களைக் கண்டார்.

அம் முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சிவலிங்கத்திற்கு வடகிழக்கில் பொன்மலையில் தட்டியவுடன் அருவி ஒன்று ஓடிவரலாயிற்று .அதுவே அகத்தியர் தீர்த்தம் என்று அழைக்கப்பட்டு பின்னர் அதுவேஇத்திருக்கோயிலின் திருக்குளமாகவும் காட்சியளிக்கின்றது.

சங்கன் ,பதுமன் சந்தேகம் தீர்த்தது:- முன்னொரு காலத்தில் சங்கன், பதுமன் என்னும் இரு பாம்புத் தலைவர்களுக்கு சிவன், திருமால் இருவரில் யார் பெரியவர் என்றஐயம் ஏற்பட்டது. ஐயம் தெளிவு பெற களாக் காட்டிடையே லிங்கவடிவில் எழுந்தருளிஇருந்த ஈசனைப் பூவனப் பூக்களால் அர்ச்சித்து வழிபட்டனர். அவர்களுக்கு முன் தோன்றியஇறைவன் இன்றுமுதல் இச்சிவலிங்கம் பூவனநாதர் என்றுஅழைக்கப்படுவார்.புன்னைக் காவலில் (சங்கரன்கோவில்) உங்கள் ஐயம்தீர்க்க சிவன் பெரியவன், திருமால் பெரியவளாகி (எம் மனைவி)காட்சியளிப்போம் என்றுரைத்தார்.

செண்பக வேந்தன் வரலாறு....... வெள்ளிமலை சிவக்குழுவில்  சிறந்தவனான வாமனன் பெண்மயக்கமுற்று தன்நிலை தாழ்ந்து கண்மு நந்திதேவரின் சபத்திற்கு ஆளாகிவெம்பக்கோட்டையில் செண்பகமன்னன் என்னும் பெயர்பெற்றுவிளங்கினான். இவரின் கனவில் இறைவன் தோன்றியகூறியவாறு பொன்மலைக் காட்டிலிருந்து களாக் காட்டினைவெட்டி லிங்கமாக காட்சியளித்த பூவனநாதருக்குத் தனித்திருக்கோயில் அமைத்தான். அருவிக்கு மேற்கே பிள்ளையார்கோவிலும், அருவிக்குளம், அருவிக்கு தென்மேற்கே வடக்குப்பார்த்தப் பிள்ளையார், அதன் தென்மேற்கே அம்பாளுக்குத் தனிக்கோயிலும் காமிகா ஆகமமுறைப்படி அமைத்தான். செண்பகமன்னன் அமைத்ததால் அவன் பெயரையே தனது பெயராகக்கொண்டு அம்பாள் செண்பகவல்லி அருள்பாலித்து வருகிறாள்.

மூர்த்தியின் சிறப்பு...... இத் திருக்கோவிலில் வீற்றிருக்கும் அன்னை செண்பகவல்லி 7அடி உயரத்தில் நின்ற நிலையில் எழில் கொஞ்சும் வடிவில் காட்சித் தருகின்றாள். இப்பகுதி வாழ் மக்கள் வேண்டியதை அருள்கின்ற வேண்டுதல் தெய்வமாக காட்சி தருகிறாள்.தன்னை சரணடைந்த மக்கள் துயர்நீக்கும் தெய்வமாகவும், அவர்களின் வேண்டுதல்களைஎல்லாம் வாரி வழங்கும் வள்ளலாகவும் காட்சித்தருகிறாள்.

கடனாகவும், அம்பாளின் பெயரையே தங்கள் குழந்தைகளுக்குச்சூட்டி வாழ்கின்ற நிலையும் இப்பகுதியில் அதிகமாக காணப்படுகின்றது. எல்லாருக்கும்அருள்பாலிக்கின்ற செண்பகவல்லியம்மன் மீதுகோவில்பட்டி நீலமணியும் இன்னும் பாடல்கள்பாடியுள்ளனர். கோவில்பட்டி நீலமணியோசெண்பகவல்லி அருள்மாலை, செண்பகவல்லி நூற்றந்தாதி என்னும் இரண்டு நுல்களைஎழுதியுள்ளார். இதில் செண்பகவல்லி அருள்மாலை 5ம் பதிப்பு வரை வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முடிசார்ந்தமன்னரும்முடிவில்
பிடிசாம்பல்என்பதைமறவாதிருமனமே

திராவி இயக்க போராளி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்



திராவி இயக்க போராளி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

"தேவதாசி' முறை நம் நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்தது. இந்த முறை கோயில் பணிகளுக்காக ஏற்படுத்தப்பட்டதாகக் கூறினாலும் உண்மையில் இந்தப் பெண்களை கோயில்களை நிர்வகிக்கும் மேல் சாதியினரும், செல்வந்தர் மற்றும் அரசர்களும் பாலியல் இச்சைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளவே இருந்து வந்தது.
இந்தப் பெண்கள் தேவரடியார் என்று அழைக்கப்பட்டனர். அதாவது தேவர் (கடவுள்) + அடியாள். பின்னர் "தேவடியாள்''
கொச்சைச் சொல்லால் அழைக்கப்பட்டனர்.


தேவதாசி முறையில் ஒரு பெண்ணுக்குப் பொட்டுக் கட்டி விடுதல் என்பது பல்வேறு சடங்குகளைக் கொண்டு நிகழ்ந்தது.இவர்களுக்கு நடத்தப்படும் சடங்குகள் பெரும்பாலும் பிராமணர்களின் திருமணச் சடங்குகளை ஒத்திருந்தன. இளம் தேவதாசிப் பெண் பருவம் அடையும் முன்பே, கடவுளுக்குத் திருமணம் செய்து வைக்கப்படுகிறாள். அப்பெண்ணுக்கும் கடவுளுக்கும் திருமணம் முடித்து வைக்கும் சடங்குகளைக் கோயில் குருக்கள் (பிராமணர்) நடத்தி வைப்பார். அப்போது கடவுளின் சார்பில் அவரே தேவதாசி கழுத்தில் தாலி கட்டுவார். இதுவே பொட்டுக்கட்டுதல் என்று அழைக்கப்பட்டது.
அடுத்ததாக அப்பெண் பருவம் அடைந்த உடன் அப்பெண்ணுக்குச் சடங்கு செய்தல் என்ற நிகழ்ச்சி விமரிசையாக நடத்தப்படும். உள்ளூர் நிலப்பிரபுக்களும்,கோயில் அறங்காவலர்களும் இந்த நிழ்ச்சிக்கான அனைத்துப் பொருளுதவியும் வழங்குவர். இந்த முக்கிய சடங்கின் மூலம் அந்தப்பெண் கடவுளுக்கு அடிமையானவள் ஆகிறாள். அதாவது "தேவரடியாள்'' ஆகிவிட்டார். அப்பெண் சுதந்திரமானவளாகிவிட்டாள் என்று பொருள். அதாவதுதிருமணம் செய்துகொள்ளாமலேயே தாம் விரும்பும் பாலியல் துணைவர் ஒருவரைத் தேர்வு செய்யும் உரிமை அப்பெண்ணுக்கு வழங்கப்படுகிறது. அதாவது இத்தகைய பாலியல் துணைவர்கள் பெரும்பாலும் பொருள் வசதி படைத்த நிலப்பிரபுக்களும், ஜமீன்தார்களும் கோயில் அறங்காவலர்களும் ஆவர். இவர்கள் பெரும்பாலும் பிராமணர்களாகவும் உயர்சாதி இந்துக்களாகவும் இருப்பர். இப்போது புரியும் இவர்களெல்லாம் ஏன் கோயிலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வந்தனர் என்று.

 தேவதாசிகள் கடவுளுக்கு மனைவி, இவர்களுக்கு ஆசை நாயகிகள்.
இத்தகைய தேவதாசிப் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் வேறு எந்தத்தொழிலும் ஈடுபடக்கூடாது. பெண் குழந்தைகளை மீண்டும் தேவதாசியாக்குவதன் மூலமே அப்பெண்கோயில் வருமானத்தைப் பெற முடியும். தேவதாசி முறை அழிந்துவிடாமல் பாதுகாக்க இப்படி ஒரு சட்டம். தேவதாசிகளுக்குப் பிறக்கும் ஆண்கள் மேளக்காரர்களாகவும், நாயனக்காரர்களாகவும், நட்டுவனர்களாகவும் செயல்படுவர்.
தமிழ்நாட்டில் தஞ்சை, திருநெல்வேலி, மதுரை, புதுக்கோட்டை பகுதிகளில் தேவதாசி முறை அதிகமாகப் பின்பற்றப்பட்டு வந்தது.இதில் தஞ்சை மாவட்டம் முன்னணியில் நின்றது.
முதலாம் இராசராசன் (கி.பி.985 – 1014) பல ஊர்களிலிருந்து 400 நடனப் பெண்களை அழைத்துவந்து தஞ்சை பெரிய கோயிலில் நியமித்தான். தஞ்சை பெரிய கோயிலைச்சுற்றி தனி வீதிகளே இவர்களுக்காக இருந்தன என்பதைக் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.
தமிழர்களின் பாரம்பரிய இசையையும், நடனத்தையும் பேணிகாத்து வந்த இசைவேளாளர்கள், ஆண்களின் பாலியல் இச்சைகளுக்காகவே உருவாக்கப்பட்ட தளைகளிலிருந்து விடுபட முடியாமல் திணறிவந்தனர். இந்த அடிமை முறையிலிருந்து எவரும் விடுபடாமல் தடுத்திட தஞ்சை மாவட்ட சனாதனிகளும் நிலப்பிரபுக்களும், மடாதிபதிகளும் தேவதாசி முறையைப் பேணிப் பாதுகாத்து வந்தனர்

அத்தகைய ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம் திருவாரூரில் வறுமையில் வாழ்ந்த வந்த இசைவேளாளர் குடும்பம் ஒன்றில் கிருஷ்ணசாமி சின்னம்மாள் இணையருக்கு 1883 ஆம் ஆண்டு பிறந்தார் இராமாமிர்தம்.
வறுமையின் காரணமாக, கிருஷ்ணசாமி மனைவியையும் நான்கு வயது மகள் இராமாமிர்தத்தையும் தனியே விட்டுப் பிரிந்தார். அடுத்த ஆண்டு தாயார் சின்னம்மாள் குழந்தை இராமாமிர்தம் தூங்கும்போது ரூ.10/– க்கும் ஒரு பழைய புடவைக்கும் ஒரு தேவதாசியிடம் விற்று கணவனைத் தேடிச் சென்னைக்குப் புறப்பட்டார்.

இராமாமிர்தம் தாசியிடம் வளர்ந்தார். நன்கு படித்து தமிழ் தெலுங்கு மற்றும் சமசுகிருதம் மொழிகளில் தேர்ச்சி பெற்றார். நடனத்திலும் சிறந்து விளங்கினார்.
7ஆவது வயதில் தாசி குல வழக்கப்படி இராமாமிர்தத்துக்குத் தாசித் தொழிலுக்கு முன்னோட்டமாக "சலங்கை பூசை'' செய்யப்பட்டது. பருவமடைந்தப்பின் பொட்டுக்கட்டி தேவதாசி யாக்கப்படுவாள். அவள் யாரையும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. 13 ஆவது வயதில் பருவமடைந்தார். 17 ஆவது வயதில் இராமாமிர்தத்துக்குக் கோயிலில் பொட்டுகட்ட வளர்ப்புத்தாய் ஆச்சிக்கண்ணு அம்மாள் முடிவு செய்து, அதற்கு அனுமதிக் கேட்டுக் கோயில் பஞ்சாயத்திடம் மனு செய்தார்.

இராமாமிர்தம் தாசி வளர்த்த பெண்ணாக இருந்ததாலும் வெளியூரைச் சேர்ந்தவர் என்பதால் கோயிலில் பொட்டுக்கட்ட அனுமதிக்க கூடாது என ஏற்கனவே கோயிலில் உள்ள தாசிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். உள்ளூர் தாசிகளின் உரிமைப் பிரச்சனை எழுப்பியதால் ஆச்சிக்கண்ணு அம்மாளின் கனவு தகர்ந்த போயிற்று. இராமாமிர்தத்துக்கோ அளவு கடந்த மகிழ்ச்சி.
ஆனால் ஆச்சிக்கண்ணு அம்மாள் இராமாமிர்தத்துக்கு 65 வயது தனவந்தர் ஒருவரைத் திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்தார். இராமாமிர்தம் மறுக்கவே, அன்றிலிருந்து அவரை வெறுக்க ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில் சலங்கை பூஜை செய்துகொண்ட இராமாமிர்தம் துணிந்து தடையை மீறித் தனக்கு இசை கற்றுத் தந்த ஆசிரியர் சுயம்புப்பிள்ளையை திருமணம் செய்து வாழ முடிவு செய்தார்.
தேவதாசி முறை கட்டுப்பாட்டை உடைத்து வெளியே வந்த முதல் பெண் என்பதோடல்லாமல், இவரின் திருமணம் சீர்திருத்தத் திருமணமாக எந்தச் சடங்குகளும் இல்லாமல். ஒரு கோயிலில் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் பிரிவதில்லை என்று உறுதிமொழி எடுத்து வாழத் தொடங்கினர்.

 இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தனர்.
கடவுளின் பெயரால் ஒரு சமூகம் மட்டும் இழிவு வாழ்க்கையை மேற்கொள்ளவேண்டும் என்ற நியதியைத் தகர்ப்பதே தனது வாழ்நாள் இலட்சியம் என முடிவெடுத்து வாழத் தொடங்கினார் இராமாமிர்தம். அவரை அவரின் உறவினர்கள் மட்டுமின்றி தேவதாசிகளில் பலரும் எதிர்த்தனர். இருப்பினும் மனம் தளராது இக்கொடுமைக்கு எதிராகப் போராடினார்.
1919 ஆம் ஆண்டு காந்தி காங்கிரசுக் கட்சிக்கு தலைமை ஏற்றபோது, பெண்கள் பலர் அக்கட்சியில் சேர்ந்து பணியாற்றினர். இராமாமிர்தம் தன்னைக் காங்கிரசுக் கட்சியில் இணைத்துக் கொண்டார். அதற்கு முக்கிய காரணம் காந்தி தேவதாசி முறைக்கு எதிராகப் பேசியதோடு தேவதாசிகளை "வழுக்கி விழுந்த சகோதரிகள்' என்று அன்புடன் அழைத்தார்.
அந்தக் காலத்தில் காங்கிரசுக் கட்சியில் பெண் பேச்சாளர்கள் கிடையாது. இராமாமிர்தம் காங்கிரசுக் கட்சியின் முதல் பெண் பேச்சாளராகத் திகழ்ந்தார். அதனால் பொது மக்களிடமும், காங்கிரசுப் பிரமுகர்களிடமும் மிகுந்த மரியாதையும் பெற்று விளங்கினார்.
காந்தி தேவதாசி முறை ஒழிப்பை ஆதரித்து இராமாமிர்தம் அம்மையாருக்குக் கடிதம் எழுதினார். அம்மையார் நீண்ட காலம் அக்கடிதத்தைப் போற்றிப் பாதுகாத்துவந்தார்.

1925 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரசுக் கட்சி மாநாட்டில் "வகுப்புரிமை' தீர்மானத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள மறுத்ததால், பெரியார் பலருடன் காங்கிரசுக் கட்சியிலிருந்து வெளியேறினார். இராமமாமிர்தம் அம்மையாரும் பெரியாருடன் காங்கிரசுக் கட்சியிலிருந்து வெளியேறினார். பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
சுயமரியாதை திருமணம், விதவை மறுமணம், பால்ய விவாகம் எதிர்ப்பு, சாதி மறுப்புத் திருமணம், தேவதாசி முறை ஒழிப்பு, இந்தி மொழி எதிர்ப்பு, பெண்ணுரிமை என சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்யப் பொதுக்கூட்டங்களையும் மாநாடுகளையும் பயன்படுத்திக்கொண்டார்.


1925 ஆம் ஆண்டு மாயவரத்தில் தேவதாசி முறைக்கு எதிராக மாநாடு ஒன்றினை அம்மையார் அவர்கள் நடத்தினார். அம்மாநாட்டில் தந்தை பெரியார் திரு.வி.க., எஸ். இராமநாதன் மற்றும் பல தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.
தேவதாசி முறை ஒழிப்புக்குச் சி.பி. இராமசாமி அய்யர், சத்திய மூர்த்தி போன்ற பிரமுகர்கள் எதிராக செயல்பட்டனர். தந்தை பெரியார் குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களைக் கோயிலுக்கு நேர்ந்துவிடும் வழக்கத்தைச் சாடினார். கோயில்களில் விபச்சாரத்துக்குத் துணை போகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

1944 ஆம் ஆண்டு நீதிக்கட்சியின் சேலம் மாநாட்டில் "தென் இந்திய நல உரிமைச் சங்கம்' என்ற பெயரில் இருந்த நீதிக்கட்சிக்குத் "திராவிடர் கழகம்'' என்று பெயர் சூட்டப்பட்டது. அம்மையார் திராவிடக் கழகத்தில் தந்தை பெரியாரோடு இணைந்து செயல்பட்டார்.

1949 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா திராவிடக் கழகத்திலிருந்து பிரிந்து தி.மு.க.வைத் தோற்றுவித்தபோது அம்மையார் தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டார்.

இராமாமிர்தம் அம்மையார் 1962 ஆம் ஆண்டு சூன் திங்கள் 27 ஆம் நாள் தனது 79 ஆவது வயதில் மாயவரத்தில் முடிவெய்தினார். தி.க. சார்பில் சித்தகாடு இராமையாவும், தி.மு.க. சார்பில் நாவலர் நெடுஞ்செழியனும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இளமை முதல் இறக்கும் வரை பொதுவாழ்விற்காக தன்னை அர்பணித்துக் கொண்ட அந்த அம்மையாரை நினைவில் ஏந்துவோம்

சனி, 18 நவம்பர், 2017

ரேக்ளா வண்டிப் பந்தயம் என்பது, திருவிழாக் காலங்களில் தமிழகத்தின் கிராமப்புரங்களில் நடைபெறும் காளை மாட்டுவண்டிப் பந்தயம்.


கலாச்சார பதிவு!

*தகவல் களஞ்சியம்!*
*===================*

ரேக்ளா வண்டிப் பந்தயம் என்பது, திருவிழாக் காலங்களில் தமிழகத்தின் கிராமப்புரங்களில் நடைபெறும் காளை மாட்டுவண்டிப் பந்தயம்.

*தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களிலும், கொங்கு நாட்டிலும் இந்த வகைப் பந்தயங்கள் நடைபெறுகின்றன.*

*உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளிலும் இதுபோன்ற ரேக்ளா வண்டிப் பந்தயங்கள் பரவலாக நடத்தப்படுகின்றன.*

*பெரும்பாலும் இவ்வகை போட்டிகளில் காளை மாடுகள் ஈடுபடுத்தப்படுகின்றன.*

*நீலகிரி மாவட்டப் பகுதிகளில் எருமைக் கடாவையும் பந்தயங்களில் ஈடுபடுத்துகின்றனர்*

*'ரேக்ளா,*
*=========*

*ரேக்ளா என்பது ஒருவர் மட்டும் அமரக்கூடிய ஒருவகை மாட்டு வண்டி அகும். இது பந்தயத்தை கருத்தில் கொண்டே உருவாக்கப்படும் சிறிய வகை மாட்டு வண்டி ஆகும்.*

*இதன் சக்கரங்கள் சிறிய அளவிலும் வேகமாக சுழலக்கூடிய வகையிலும் வடிவமைக்கப் படுகின்றன.*

*போட்டியாளர்கள் சிவகங்கை, இராமநாதபுரம், ஈரோடு, கரூர், கோயம்புத்தூர், மதுரை, தஞ்சாவூர், திண்டுக்கல், தேனி , திருச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து உழவர்கள் தங்கள் ரேக்ளா வண்டிகளுடனும் காளைகளுடனும் பந்தயங்களில் கலந்து கொள்கின்றனர்.*

*பந்தயம் நடைபெறும் குறிப்பிட்ட கிராமத்தையோ நகரையோச் சேர்ந்த பஞ்சாயத்து அமைப்புகள் இந்த ரேக்ளா வண்டிப் பந்தயத்தை நடத்துகின்றன.*

*சில இடங்களில்*
*தனியார் அமைப்புகளும் இந்தப் போட்டியை நடத்துவதுண்டு.*

*பந்தையக் காளைகள்*
*===================*

*பந்தயத்தில் ஈடுபடும் காளைகளின் உயரம், திறன், பலம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு இவற்றை நான்கு பிரிவுகளாக வகைப்படுத்துகின்றனர்*:

*#பெரிய மாடு*

*#நடுத்தர மாடு*

*கரிச்சான் மாடு,*

*பூஞ்சிட்டு மாடு*

*பந்தய தூரம் மாடுகளின் வகைகளை வைத்தே முடிவுசெய்யப்படுகின்றது தமிழகத்தின் அய்யம்பாளையம் என்ற ஊரில் நடக்கும் பந்தயத்தில் பெரிய மாடு 15 கி.மீ தூரமும், நடுத்தரம் 12 கி.மீ தூரமும், கரிச்சான் 10கி.மீ தூரமும், பூஞ்சிட்டு 07 கி.மீ தூரமும் ஓட வேண்டும் என்று தீர்மானித்துள்ளனர்.*

*காளைகளின்*
*பரிசு பெறும் திறன்!*
*=====================*

*ரேக்ளா வண்டிப் பந்தயத்திற்கு தேர்வாகும் ஓர் இணை காளைகள் 25 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் இந்திய ரூபாய் வரை விற்கப்படுகின்றன.*

*கொங்கு நாட்டு உழவர்கள் தங்கள் காளைகள் வெற்றிப் பெறுவதை பெருமையாக நினைக்கின்றனர்.*

*இப்போட்டியில் ஈடுபடும் மாடுகளுக்கு உணவாக இஞ்சி, எலுமிச்சை, கருப்பட்டி, பேரீச்சை, வெங்காயம் ஆகியவற்றை வெந்நிரிற் பிசைந்து கவளம் கவளமாக ஊட்டுகின்றனர்.*

*வேகமாக ஓடுவதில் காளைகளுக்கு இணையாக வேறு எந்த காளைகளும் இல்லை என்பது பரவலான கருத்தாகும். கொங்கு நாட்டில் தற்போது காங்கேயம், மூலனூர்,  வெள்ளக்கோவில் , சிவகிரி, கரூ‌ர் ஆகிய பகுதிகளில் மட்டுமே இந்த இன காளைகள் வளர்க்கப்படுகின்றன.*

*காங்கேயம் காளைகளுக்கு போட்டியாக தற்போது பந்தயத்தில்  'லம்பாடி' இன காளைகளையும்  ஈடுபடுத்துகிறார்கள்*

*ஆனால்*

*காங்கேயம் இன காளைகளே பெரும்பாலும் பரிசுகளைப் பெருகின்றன.*

*பரிசு பெறும் காளைக்கு ஒரு சவரன், அரை சவரன்,  தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்படுகின்றன.*

செவ்வாய், 14 நவம்பர், 2017

கல்லிலே கலைநயம் தமிழனி்ன் கைவண்ணம்...




கல்லிலே கலைநயம் தமிழனி்ன் கைவண்ணம்...

யானையின் தும்பிக்கையும், கால்களும் கனமாக இருக்க வேண்டும் என்பதற்காக மங்கைகளின் இரண்டு கால்களும் ஆடைக்குள் ஒன்றோடு ஒன்று ஒட்டி இருக்கும் போது கிடைக்கும் கனத்தை கச்சிதமாக பொருத்தியாகிவிட்டது,

தும்பிக்கையை தந்த படி நின்றுகொண்டிருக்கும் அந்த பெண், அந்த நிலையில் நிற்க முடியாது என்பதற்காக இன்னொரு பெண்ணை தாங்கியபடி நிற்கிறாள்.

யானையின் கண்ணிற்கு பெண்ணின் மார்பு , காது வளைவிற்கு ஒருவரை ஒருவர் தாங்கி நிற்கும் கைகள் !.

யானையின் கழுத்துப் பகுதி வளைவாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு பெண் கால் நீட்டி உட்கார்ந்த நிலையில் இருக்கிறார், கால் நீட்டி இருப்பதால், குறுக்கில் இருக்கும் பெண்ணின் மீது தடுத்து, ஆடை சற்று விலகி அது யானையின் தந்தமாகிவிடுகின்றது !

யானையின் வாய் திறந்த நிலையில் இருப்பதை போன்று காட்ட ஒரே ஒரு பாதம் அந்த இடத்தில் கொடுத்தாகிவிட்டது.

கால் மடக்கி தொங்கிய நிலையில் அமர்ந்திருக்கும் பெண்,யானை நடந்து முன்னேறி செல்கின்றது என்பதையும் அழகாக காட்டுகிறது.

அதன் வால் பகுதி ஒரு மங்கையின் கால் பகுதி .

அடடா என்ன ஒரு கற்பனை திறன் இருந்திருக்க வேண்டும்!!!

இடம் : திருக்குறுங்குடி, திருநெல்வேலி.

தாமிரபரணி வெள்ளம் நவம்பர் 13, 1992



தாமிரபரணி வெள்ளம்   நவம்பர் 13, 1992.

சென்னை பெரும் வெள்ளம் பார்த்திருப்போம்...தாமிரபரணி அசுர வெள்ளம் பார்த்ததுண்டா??மிகச்சரியாக 25 ஆண்டுகளுக்கு முன் இதே நாள் திருநெல்வேலி மாவட்டத்தை களேபரம் செய்த ஒரு வெள்ளம்...

                 நவம்பர் 13, 1992 - சூறாவளியின் தூண்டலால் எட்டு மணி நேர மிக கனமழை திருநெல்வேலி மாவட்டத்தில் விடாமல் பெய்தது.அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் மற்றும் பாபநாசம் பகுதி மக்கள், என்னை உட்பட அனைவரும் அவரவர் வீட்டில் இருளில் பயத்தோடு இருந்த தருணம். நம் பகுதி மக்கள்அனைவரும் இதுவரை கண்டிராத ஒரு பெரும் மழை. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பாபநாசம் மற்றும் சேர்வலார் அணைகள் நெருக்கமாக அமைந்துள்ள பகுதிகளிலும் இடைவிடாத மழை பெய்து கொண்டிருந்த நாள்.

                தாமிரபரணி நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் போதே இந்த இரண்டு அணைகள் - பாபநாசம்( பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டது) அணையில் மழை அளவு 310 மிமீ...சேர்வலார் அணை 210 மிமீ மழை பதிவு செய்தது..லோயர் பாபநாசம் அணை 190 மிமீ மழை பெற்றது.அதே நேரத்தில்,  அருகிலுள்ள அணை மணிமுத்தாறு 260.80 மிமீ மழை பெற்றது. மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில்  உள்ள விக்கிரமசிங்கபுரம் மற்றும் அம்பாசமுத்திரம் 320.60 மிமீ மழை பொழிவை  பெற்றது...நினைவுக் கொள்ளுங்கள்...இவை அனைத்தும் ஒரெ நாளில் பெய்த மழை...தமிழகத்தின் சராசரியை விட அதிகம்!!!

வேறு எந்த வழியும் இல்லாமல் அணை ஊழியர்கள் முன் அறிவிப்பு செய்யாமல்,  அதெ இரவில் பாபநாசம்(143 அடி) மற்றும் சேர்வலார்(156 அடி) அணைகளின் மதகுகளை  பாதுகாப்புக் காரணங்களால் திறக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள்.

இரண்டு அணைகளில் இருந்து டிஸ்சார்ஜ் நீர் நவம்பர் 14, 1992 அதிகாலை திருவள்ளுவர் நகரில் 17 நபர்களை மூழ்கடித்து கொலை செய்தது. ஆம் தாமிரபரணி நீர்வழிப்பாதை அருகே திருவள்ளுவர் நகரில் வாழும் சில குடும்பங்கள், காலையில் மழை குறையும் என்ற நம்பிக்கையில் இரவு படுக்கைக்கு சென்றனர். எனினும், இரவில் நீர்த்தேக்கங்களில் இருந்து முன்னெப்போதும் இல்லாத அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் அவர்கள் வீடுகளில் இருந்த 17 நபர்கள் தண்ணீரில் பிணமாகினர்..ஆற்றின் குறுக்காக இருந்த முன்டந்துறை பாலம் நிமிடங்களிலேயே அடித்துச் செல்லப்பட்டது...மில்கேட் வாசலில் இருந்து இருசக்கர வாகனத்தின் முக விளக்கின் ஒளியில் சிலர் பார்த்த போது மதுரா கோட்ஸ் பாலத்தின் மேலே வரை தண்ணீர் நிரம்பி ஓடிக்கொண்டிருந்தது.

                        அடுத்த 60 நிமிடங்களில்  நிலைமை மோசம் அடையக்காரணம் , மணிமுத்தாறு அணை(118 அடி) 60,000 க்கும் மேற்பட்ட கன அடி தண்ணீரை திறந்தது. தாமிரபரணியின் மூன்று அணைகள் தனியாக அந்த நாளில் மட்டும் திறந்த தண்ணீரின் உபரி  2,04,273.80 கன அடி! அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் பகுதி மழை சேர்ந்து ஆற்றில் வழிந்தோடி செல்லப்பட்ட தண்ணீர் கணிக்கமுடியாத அளவு ஓடியதாக, பொதுப்பணித் துறை ஊழியர்கள், நினைவு கூறுகின்றனர்.

                 இதன் விளைவாக, வெள்ள பேரழிவு பாபநாசத்தில் இருந்து 45கிமீ தொலைவில் உள்ள திருநெல்வேலி ஜங்ஷன் , நெல்லை இரயில்வே நிலையம், வணிக நிறுவனங்கள், ஆட்சியர் அலுவலகம், சிந்துப்பூந்துறை,  கைலாசபுரம், மீனாட்சிபுரம் குடியிருப்புகள் உட்பட அருகில் எல்லா இடங்களிலும், பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த10 க்கும் மேற்பட்ட பஸ்கள் சேர்த்து நீரில் மூழ்கடித்தது... சரியாக 48 மணி நேரம் பிறகு வெள்ளம் முழுமையாக தணிந்தது..

                 #தாமிரபரணி_தாயவள் சினம் கொண்டு பொங்கிய 25 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!!!

திங்கள், 13 நவம்பர், 2017

வரலாற்றி்ல் புகழ்பெற்றவர்களின் அரியதொரு புகைப்படம் இது.



வரலாற்றி்ல் புகழ்பெற்றவர்களின் அரியதொரு புகைப்படம் இது.

இதில் உள்ளவர்கள் அனைவரும்
பெருமைக்குரியவர்களே.

நிற்பவர்கள் இடமிருந்து வலம் :
* எட்டையபுரம் சோமசுந்தர பாரதியார்,
* திருமையம் சத்தியமூர்த்தி அய்யர்,
* சென்னை குருசாமி முதலியார்,
* மாயூரம் வேதநாயகம் பிள்ளை,

நாற்காலியில் வீற்றிருப்பவர்கள் :
* சேலம் வரதராஜ நாயுடு,
* வ.உ.சிதம்பரம் பிள்ள,
* பசும்பொன் முத்துராமலிங்க தேவர்,

தரையில் உட்கார்ந்திருப்பவர்கள் :
* விருதுநகர் முத்துசாமி ஆசாரி,
* மன்டையம் சீனிவாச ஐயங்கார்,
* பெருந்தலைவர் காமராசர்.

புதன், 1 நவம்பர், 2017

கடை வள்ளல் அதியமான் ஆண்ட தகடூர்(எ) தருமபுரி மாவட்டம்

கடை வள்ளல்  அதியமான் ஆண்ட தகடூர்(எ) தருமபுரி மாவட்டம்

தருமபுரி உதயமான நாள்: (அக்டோபர்-02), தருமபுரி மாவட்டத்தின் 51-வது பிறந்த நாள்.

*தருமபுரி தோற்றம்:*

1804 -ல் சேலம், ஒருமாவட்ட தலைமைச் சிறப்பை பெற்றிருந்தது, பல காரணங்களால் சேலமே மாவட்டத் தலைநகராக சிறப்புற்றது. தருமபுரி கிருஷ்ணகிரி, நாமக்கல் எல்லாமே சேலம் மாவட்டத்திற்குள் இருந்தன.
சுதந்திரம் அடைந்த பின்னரும் இந்தியாவிலேயே பெரிய மாவட்டமாக இருந்த சேலம் மாவட்டத்தை தென் சேலம், வட சேலம் என இரு மாவட்டங்களாக பிரிக்க வேண்டும் என அரசை வற்புறுத்தி இருக்கின்றனர்.

வட சேலம் மாவட்டம் அமையும் போது தலைநகரம் எது..? தருமபுரியா..? கிருஷ்ணகிரியா..? ஒசுரா..?

1962 ல் நடைபெற்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் சுயேட்சியாக நின்று வெற்றிபெற்றவர் காரிமங்கலம் R. S. வீரப்ப செட்டியார். வட சேலம் மாவட்டத்திற்கு அதாவது புதிய மாவட்டத்திற்கு தருமபுரியே தலைநகராக இருக்க வேண்டும் என்பதற்காக பாடுபட்டவர். ஆனால் தனது பதவி காலத்திலேயே இறந்து விட்டதால் 1965-ல் தருமபுரி தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது.

இடைத்தேர்தலில் D.N. வடிவேலு கவுண்டர் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். R.S. வீரப்ப செட்டியார் எடுத்த முயற்சி வீணாகி விடக்கூடாதல்லவா, ஆதலால் புதியதாக உருவாகும் மாவட்டத்திற்கு தருமபுரி மாவட்டம் என்றும் இம்மாவட்டத்தின் தலைநகரம் தருமபுரி தான் இருக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.

அப்போது முதலவராக இருந்த திரு. பக்தவச்சலம் அவர்கள் சேலம் மாவட்டத்தை வட மற்றும் தென் சேலம் என்றே பிரிக்கவேண்டும் என்று இருந்துள்ளார். ஆனால் D.N. வடிவேலு கவுண்டர் அவர்களின் விடா முயற்சியால் புதியதாக உருவான மாவட்டத்திற்கு *"தருமபுரி மாவட்டம்"* என்றும் தருமபுரி மாவட்டத்தின் தலைநகர் *"தருமபுரி"* என்றும் காந்தியடிகள் பிறந்த தினமான 02.10.1965 அன்று அறிவிக்கப்பட்டது.

இவ்வாறு தொன்மை வரலாற்று பெருமைகளால் உயர்ந்து நிற்கும் தருமபுரி மாவட்டமாக 02.10.1965 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் இருந்து தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.
*எல்லைகள்:*
வடக்கு-திருவண்ணாமலை
தெற்கு-சேலம்
கிழக்கு-சேலம்
மேற்கு-கிருஷ்ணகிரி
*சிறப்பு:-*
நீலகிரி மாவட்டத்திற்கு அடுத்தபடியாக உயரமான மலைகள் சூழ்ந்த மாவட்டம்..
*மக்கள் தொகை:*
 *மொத்தம்:*1506843
*ஆண்கள்:*774303
*பெண்கள்:*732540
*வரலாற்று இடங்கள்*
1.அதியமான் கோட்டை
2.தீர்த்தமலை
3.போடுவராமர் கோவில்
4.குள்ளர் குகைகள்
மற்றும் பல
*அனைகள்:*
1.ஈச்சம்பாடி அனை
2.வானியாறு அனை
3.பஞ்சப்பள்ளி அனை
4.வரட்டாறு அனை
*கிராம ஊராட்சிகள்-251*
*வட்டங்கள்*
1.தருமபுரி
2.பாலக்கோடு
3.பாப்பிரெட்டிப்பட்டி
4.பென்னாகரம்
5.அரூர்
*சட்டமன்ற தொகுதிகள்*
1.தருமபுரி
2.பாலக்கோடு
3.பாப்பிரெட்டிப்பட்டி
4.அரூர்(தனி)
5.பென்னாகரம்
*நாடாளுமன்ற தொகுதி*
1.தருமபுரி
*நகராட்சி*
1.தருமபுரி
*பேரூராட்சிகள்*
1.மாரண்டஹள்ளி
2.காரிமங்கலம்
3.பாப்பிரெட்டிப்பட்டி
4.அரூர்
5.பி.மல்லாபுரம்
6.கம்பைநல்லூர்
7.பாலக்கோடு
8.பாப்பாரப்பட்டி
9.பென்னாகரம்
10.கடத்தூர்
11.அலேதர்மபுரி சென்ஸ் டவுன்
12.இலக்கியம்பட்டி சென்ஸ் டவுன்
*மாவட்ட ஆட்சியர்:*
*கே.விவேகானந்தன்*
*மாவட்ட காவல் கன்கானிப்பாளர்*திரு
*பன்டிகங்காதர்*
புகார் தெரிவிக்க:
1077 *மாவட்ட ஆட்சியர் அலுவலகம்*
*குழந்தை திருமணத்தை தடுக்க*
1098
*வருவாய் கோட்டங்கள்:*
1.தர்மபுரி
2.அரூர்
சமூக வாரியான மக்கள் தொகை
1.வன்னியர் குல ஷத்திரியர் இந்த மாவட்டத்தில் அதிக மக்கள் தொகை.
2.மலையாளி பழங்குடியினர் இந்த மாவட்டத்தில் இரண்டாவது அதிகமான மக்கள் தொகை
3.ஆதிதிராவிடர்(எஸ்.சி) இன மக்கள் இந்த மாவட்டத்தில் மூன்றாவது அதிகமான மக்கள் தொகை
4.கொங்கு வேளாளர் சமூகம் இந்த மாவட்டத்தில் 4வது அதிகமான மக்கள் தொகையாகும்.
5.இது தவிர
1.போயர்
2.அருந்ததியர்
3.தேவர் சமூகம்
4.குறவன் சமூகம்
உள்ளிட்டவர்கள் பரவலாக வசித்து வருகிறார்கள். தமிழகத்தில் மற்ற மாவட்டத்தில் பரவலாக உள்ள கோனார் பள்ளர் போன்ற சமூகத்தினர் இங்கு இல்லை.
*பிற மதத்தினர்*
1.முஸ்லீம்-2 சதவீதம்
2.கிருஷ்துவர்கள்-1சதவீதம்
*மற்றவர்கள் இல்லை.*
*சட்டமன்ற உறுப்பினர்கள்*
1.தர்மபுரி-தடங்கம் பெ.சுப்ரமணி(தி.முக)
2.பாலக்கோடு-கே.பி.அன்பழகன்(அ.தி.முக)
3.அரூர்-ஆர்.ஆர்.முருகன்(அ.தி.முக)
4.பாப்பிரெட்டிப்பட்டி-பி.பழனியப்பன்(அ.தி.முக)
பென்னாகரம்-இன்பசேகரன்(திமுக)
*சட்டமன்ற தொகுதியில் சமூகத்தின் பலம்*
1.தர்மபுரி-வன்னியர்
2.பாலக்கோடு-வன்னியர்
3.அரூர்-ஆதிதிராவிடர்(எஸ்.சி) மற்றும் மலையாளி(எஸ்.டி)
4.பாப்பிரெட்டிப்பட்டி-வன்னியர்-ஆதிதிராவிடர் மற்றும் மலையாளி
5.பென்னாகரம்-வன்னியர்.
*நிகழ்கால துயரம்:*
தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவம்
இளவரசன்-திவ்யா காதல் பிரச்சினை தமிழ்நாட்டையே உலுக்கியது.
வாச்சாத்தி வன்முறை உள்ளிட்ட பிரச்சினைகள் தமிழகத்தில் அனைவரும் அறிந்ததே.
*மலைக்குன்றுகள்*
1.சேர்வராயன் மலை
2.கல்ராயன் மலை
3.வத்தல்மலை
4.சித்தேரி மலை
போன்றவை குறிப்பிடத்தக்க மலைகள்.
*காட்டெருமை, முயல், மான் காட்டு ஆடு ,கரடி முள்ளம்பன்றி* ஆகிய வன விலங்குகள்..
மற்றும்
*மயில் சிட்டுக்குருவி கருங்குருவி கொக்கு கழுகு காட்டுக்கோழி* போன்ற பறவை இனங்கள் அதிகமாக வசிக்கும் மாவட்டம்.
*தொழில்கள்*
விவசாயம் இங்கு 90 சதவீதம் மக்கள் செய்து வருகிறார்கள்.
*கிடைக்கும் பொருட்கள்:*
1.நெல்
2.கேல்வரகு
3.மஞ்சள்
4.கம்பு
5.கொள்ளு(உளுவல்)
6.தினை
7.சாமை
8.கரும்பு
9.புலி
10.தர்ப்பூசனி
11.அவரை
12.துவரை
13.மாம்பழம்
14.பலாப்பழம்
15.வாழை
16.தேங்காய்
இவை அனைத்தும் எளிமையாக கிடைக்கும் பொருட்கள்.
*புகழ் பெற்றோர்*
1.அதியமான்
2.ஔவையார்
3.இராஜாஜி
4.சுப்பிரமணிய சிவா
*அதியமான் ஆட்சியில்தான் "கரும்பு"முதன்முதலில் பயன்படுத்தியதும் மற்ற மாவட்டங்களுக்கு அறிமுகம் செய்ததும் இம்மாவட்டம் தான்.
*திருவிழாக்கள்*
பள்ளியில்லாத ஊர்களை கூட இங்கு பார்க்கலாம் ஆனால் கோவில் இல்லாத ஊர்களை காண்பது சாத்தியமில்லை
மாரியம்மனுக்கு சித்திரை திருவிழா இங்கு புகழ் பெற்று விளங்குகிறது.
மேலும் ராமர் சிவன் வழிபாடும் அதிகம்.
*விளையாட்டு*
வாலிபால் விளையாட்டிற்கும் அடுத்த படியாக தான் கிரிக்கெட் விளையாட்டிற்கும் இளைஞர்கள் முக்கியத்துவம் தருவார்கள்...
*தமிழ்நாடு புகழ்*
1983ல் தப்பாட்டத்த்தில் முதலிடம் பெற்று அப்போதைய முதல்வரான எம்.ஜி.ஆர் கையால் பரிசு பெறப்பட்டது.இந்த சாதனையை யாரும் இதுவரை முறியடிக்க முடியவில்லை.
2013ல் இந்தியாவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சார்ந்த இராணுவ வீரர் ஷ்ரீகாந்த் என்பவர் இந்திய தாய் திருநாட்டிற்காக தங்கப்பதக்கம் பெற்று தந்துள்ளார்.
சுதந்தீர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா மற்றும் தமிழகத்தின் முதல் ஆளுநர் இராஜாஜி ஆகியோர் புகழ் பெற்றவராவர்.
இவ்வளவு பெருமைகளை சுமந்து நிற்கும் *தர்மபுரி மாவட்டம்* அக்டோபர் 2ம் நாள் தனது 51வது பிறந்தநாள் கொண்டாடியது மகிழ்ச்சி.
*தர்மபுரி*-பெயரிலேயே தர்மத்தை கொண்டுள்ள மாவட்டம்.
*சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா*
தர்மபுரிக்காரன்கிட்ட
அன்பா பேசுனா-உயிரையும் கொடுப்பான்
அதிகமா பேசினா-உயிரையும் எடுப்பான்
பாசத்திற்கு-சிவன்
எதிர்த்தா-எமன்
தங்கச்சி பாசத்துக்கு இந்த ஊரை *தர்மபுரி*யை மிஞ்ச யாராலும் முடியாது.
மொய் வைக்க சொத்தையே அழித்து மொய் செய்யவும் தயங்க மாட்டார்கள் தருமபுரி மாவட்ட மக்கள்.
காரணம் மானம் மரியாதை இரண்டு கண்கள் இவர்களுக்கு.
*தர்மபுரி*ன்னு சொன்னாலே மற்றவனுக்கு *டர்* ஆகும்.
நானும் *தர்மபுரிக்காரன்*
நீங்க *தர்மபுரி*யா இருந்தால்
பகிருங்கள்....
எட்டுதிக்கும் கொட்டட்டும்
எமது *தர்மபுரி* புகழ் பரவட்டும்....