ஞாயிறு, 25 ஜூன், 2017

உலகிலேயே மிகப்பழமையான திருவண்ணாமலை



உலகிலேயே மிகப்பழமையான திருவண்ணாமலை!

260 கோடி வயது: திருவண்ணாமலையை ஆர்க்கேயன் காலத்தியது என்கிறார்கள். அதாவது, இந்த காலம் 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த காலத்திலேயே திருவண்ணாமலை தோன்றி விட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிட்டுள்ளார்கள். இது உலகிலேயே மிகப்பழமையான மலை என்று, டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். முதல் கணக்கெடுப்பின் படி மலையின் உயரம் 2665 அடி.

ரொம்ப ரொம்ப சிறந்த மாதங்கள்: திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதம் பவுர்ணமியன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். ஆனால், ஐப்பசி, கார்த்திகை, மார்கழியில் எல்லா நாட்களும் வலம் வரலாம். இவை மிகச்சிறந்த மாதங்கள் என்கிறார்கள் பெரியவர்கள். இப்போ இருக்கிற கூட்டத்துக்கு இதையெல்லாம் பார்த்தால் முடியுமா! எந்த மாசம் வந்தால் என்ன! மனசு அண்ணாமலையார் கிட்டே இருக் கணும், என்கிறார்கள் மூத்த பக்தர்கள்.

தீபதரிசன மண்டபம்: அண்ணாமலையார் கோயிலிலுள்ள கிளிக்கோபுரம் அருகில் தீபதரிசன மண்டபம் உள்ளது. மங்கையர்க்கரசி அம்மையார் என்பவர் இந்த மண்டபத்தை 1202ல் எழுப்பினார். இதை மங்கையர்க்கரசி மண்டபம் என்றும் சொல்வர். இங்கு தான் தீபம் ஏற்றும் முன்பு,பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர்.

கரும்புத்தொட்டில்: அண்ணாமலையின் முக்கிய நேர்த்திக்கடன்களில் ஒன்று கரும்புத் தொட்டில். குழந்தை பாக்கியமில்லாதவர்கள் இங்கு கிரிவலம் வருவர். தங்களுக்கு மகப்பேறு வாய்த்தால், அந்தக் குழந்தையை கரும்புத்தொட் டிலில் இட்டு, கிரிவலம் வந்து அண்ணாமலையாரைத் தரிசிக்க வருவதாக வேண்டிக்கொள்வார்கள். இவ்வாறு செய்தால், இன்னும் பல இனிய குழந்தைகளை அந்த தம்பதிகள் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

ஆறுவிரல் ஆறுமுகம்: திருவண்ணாமலை திருப்புகழ் புலவர் அருணகிரியாருக்கு கைகளில் ஆறுவிரல் இருந்தது. அவர் ஆறுமுக பக்தர் என்பதால், அந்த முருகனே அவருக்கு அப்படி கொடுத்தான் போலும்! அவர் கால்களை சற்று உயர்த்தி எக்கி நடப்பார். அந்த நடை மயில்போல இருக்குமாம்! முருகனின் வாகனத்தை இது நினைவுபடுத்தியது.

கண்ணொளி கீரையும் உண்ணாமுலையாளும்: பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவது கண்ணுக்கு நல்லது என்பார்கள் சித்த வைத்தியத்தில்! இதை அழுத்தம் திருத்தமாக இந்தப் பகுதி மக்கள் இளசுகளுக்கு எடுத்துச் சொல்வதற்காக, பொன்னாங்கண்ணியை புளிபோட்டு கடைஞ்சா உண்ணாமுலை தாயே ஓடி வந்து சாப்பிடுவா! என்கிறார்கள். இப்படி சொன்னால் தான், இளசுகள் அம்பாளே விரும்பும் கீரையாயிற்றே என்று விரும்பிச் சாப்பிடுவார்களாம்.

மீனின் பெயர் செல்லாக்காசு: திருவண்ணாமலையிலுள்ள ரமணர் ஆஸ்ரமம் அருகேயுள்ள தீர்த்தத்தை அகத்தியர் தீர்த்தம் என்பர். இது இருக்கும் இடத்தின் பெயர் பலாக்கொத்து. இதில் வசிக்கும் மீனின் பெயர் செல்லாக்காசு. அடேங்கப்பா! இப்படி ஒரு பெயர் வைக்க என்ன காரணம் என்று கேட்டால், இது அந்தக்காலத்து மீன் சாமி! அபூர்வ இனம் சாமி, என்ற பதில் மட்டும் தான் கிடைக்கிறது.

தங்கமலை ரகசியம்: அண்ணாமலை தங்கமலையாக இருந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா? கைலாயத்தில் லிங்கம் இருப்பதால் கயிலாயம் சிறப்பு. ஆனால், லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு. இந்த மலை மிகப்பெரும் புனிதமாக கருதப்படுகிறது. இதை சிவலிங்கமாக கருதி சித்தர்கள், முனிவர்கள், ஞானி களெல்லாம் வழிபட்டுள்ளனர். உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே இம்மலை உள்ளதாக தல வரலாறு கூறுகிறது. கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், இன்றைய கலியுகத்தில் கல்மலையாகவும் விளங்குகிறது.

கிரிவலம் செய்யும் முறை: திருவண்ணாமலைக்கு காந்த சக்தி இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். கிரிவலம் செல்லும்போது எங்காவது துவங்கி, எங்காவது முடிக்கக்கூடாது. மலையைச் சுற்றி 14 கி.மீ. பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லக் கூடாது. கிரிவலப்பாதையில் எட்டு திசையிலும் ஒவ்வொரு லிங்கம் உள்ளது. இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயுலிங்கம், குபேர லிங்கம், ஈசான லிங்கம் ஆகிய இவற்றை வணங்கி செல்ல வேண்டும். மலையை ஒட்டிய பக்கம் செல்லாது இடது பக்கமாகவே செல்ல வேண்டும். இறைவனை தியானித்தபடியே அண்ணாமலைக்கு அரோகரா என்று மனதில் சொல்லியபடி நடக்க வேண்டும். மலையைப் பார்த்து கைகூப்பி வணங்க வேண்டும். தினமும் கிரிவலம் வரலாம் என்றாலும் பவுர்ணமியன்று கிரிவலம் வந்தால் மனோசக்தி அதிகரிக்கும்.

நந்திக்கு பெருமை: மாட்டுப்பொங்கலன்று திருவண்ணாமலை கோயிலில் உள்ள நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும். அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் நைவேத்யம் செய்து, கதம்பமாலை அணிவித்து பூஜை செய்வர்.அவ்வேளையில் அண்ணாமலையார், நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு காட்சி தருவார். தனது வாகனமான நந்தியைப் பெருமைப்படுத்தும் விதத்தில் சிவன் இவர் முன் எழுந்தருள்கிறார்.

அண்ணாமலை பொருள்: அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பொருள். அண்ணா என்றால் நெருங்கவே முடியாதது என்பதாகும். பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என பெயர் வந்தது.

செந்தூர விநாயகர்: ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி அலங்கரிப்பது வழக்கம். ஆனால், திருவண்ணாமலையில் விநாயகருக்கு செந்தூரம்பூசுகின்றனர். சம்பந்தாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் வதம் செய்த போது, அவனது ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர். எனவே, விநாயகர் அவனது ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டார். இதன் அடிப்படையில் சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில்ஓர் நாள் என ஆண்டில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்தூரம் சாத்துகின்றனர்...,

வியாழன், 22 ஜூன், 2017

கமுதியை லபக்கிய கவுதம்!



கமுதியை லபக்கிய கவுதம்!

*கவின்மிகு முல்லை திருநகரம்* என்ற ஊர், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிக்கும் வங்காள விரிகுடாவுக்கும் இடையில் உள்ளது. வருடத்திற்கு 300 நாட்களுக்கும் அதிகமாக மிகச்சரியான அளவு சூரிய வெப்பத்தை குவி மையமாக ஈர்க்கக்கூடிய பூமி.

இன்றைக்கு கமுதி என்று அழைக்கப்படுகிற அந்த ஊரின் மக்களுக்கு இந்த வரலாறு தெரிந்திருக்கிறதோ  இல்லையோ – மோடியின் அருமை நண்பர், இந்தியாவின் மிகப்பெரும் பணக்கார கார்ப்பரேட் முதலாளி கவுதம் அதானிக்குத் தெரிந்திருக்கிறது.

இராமநாதபுரம் மாவட்டமும் அதில் அமைந்திருக்கும் கமுதி வட்டமும் அதன் சுற்றுவட்டாரத்தில் அருப்புக்கோட்டை துவங்கி முதுகுளத்தூர், சாயல்குடி உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் வறண்ட பூமி என்றே தமிழக அரசால் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

வறட்சியைத் தவிர இங்கு வேறு எதுவும் இல்லை என்றே இந்த மக்களும் நம்பவைக்கப்பட்டிருக்கிறார்கள். வறண்டு, காய்ந்து, கருவேல மரங்களே கடல்போலக் காட்சியளிக்கும் இந்தப் பகுதியில் யார் வந்து எதைச் செய்தால் என்ன? என்ற கருத்து வலுவாக்கப்பட்டு, கண்ணுக்கெட்டிய தூரம் வரை கவுதம் அதானிக்கு தாரைவார்த்து விட்டார்கள்.

வறண்ட பூமி, கவுதம் அதானிக்கு ஒரே வருடத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய்களை வருமானமாக ஈட்டித் தந்திருக்கிறது. நிலத்தைப் பறிகொடுத்த மக்கள் தவித்த வாய்க்குத் தண்ணீர் கூட இல்லாமல் காய்ந்து கிடக்கிறார்கள்.

உண்மையில் கமுதி வறண்ட பூமி அல்ல. அதன் வரலாறு வளம்மிக்கது. ஐவகை நிலங்களில் முல்லை நிலப்பகுதியைச் சார்ந்தது. கவின்மிகு முல்லை நிலத்தின் திருநகரமாக இது இருந்தது. முல்லை நிலத்தின் கவின்மிகு வளம் பற்றி கி.பி. 4-5 ஆம் நூற்றாண்டுக் கால பதினெண்கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான ‘கார் நாற்பது’ பாடல்களில் விரிவாக இடம்பெற்றுள்ளது.

“கார்கால தொடக்கம்.
இரவு முழுவதும் விடாத மழை.
காலைப் பொழுதில் உழவர்கள் தத்தம் நிலத்தில் சென்று ஏர்பூட்டி செம்மண்
பூமியின் புழுதி மேலும் கீழும் சென்றிடுமாறு உழுது தொழில் செய்தனர்.
உழுத நிலத்தில் விதைத்த வரகுகளின் முளைகள் மேலே தெரிந்தன.
உழவர்கள் தங்கள் தலைமேல் ஓலைக்குடை
யை பிடித்து தொழில்செய்த நிகழ்வு அங்கிருந்த கலைமான்கள் பரந்து திரிந்ததுபோல் காட்சி அளித்தது.
பறை ஒலிக்க உழவர்கள் களையைக் களைய, களைந்தபின் வரகு செழித்து வளர்ந்துவிட்டது.
இரண்டு இரண்டாக பிளந்து காணப்பட்ட கதிர்களை மயில்கள் கொத்தித் தின்றன”.

– இப்படியாக செழித்து நின்ற பூமி தான் கமுதி. இந்தச் செழிப்புக்கு காரணம் இங்கு ஓடும் குண்டாறு.

மேற்குத்தொடர்ச்சி மலையில் புறப்பட்டு மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதி, விருதுநகர் மாவட்டத்தின் ஒரு பகுதி வழியாக கமுதியை வளம்கொழிக்கச் செய்து வங்கக் கடலில் கலக்கிறது குண்டாறு.

*குண்டாறு*

இப்போது குண்டாறைக் காணவில்லை. கால வெள்ளத்தில் குண்டாறு ஒரு காட்டாறாக மாறிப்போனது. மழை பெய்தால் இதன் வழியாக வெள்ளம் வரும் என்று மட்டும் மக்களுக்குத் தெரிந்திருக்கிறது.ஆனால் மழை பெய்யாத காலத்திலும், வெள்ளம் வராத காலத்திலும் கூட தன்னுடைய நிறுவனத்தின் 25லட்சம் சூரிய மின்தகடுகளை குளிப்பாட்டுவதற்கு ஒவ்வொரு நாளும் சுமார் 20 லட்சம் லிட்டர் நீரை இதே குண்டாற்றின் மணல் வெளிகளின் கீழிருந்து உறிஞ்சி எடுக்க முடியும் என்ற உண்மை மோடியின் நண்பர் கவுதம் அதானிக்கு தெரிந்திருக்கிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் சதுரகிரி மலைப்பகுதியில் புறப்பட்டு மதுரை மாவட்டத்தின் சிவரக்கோட்டை, திருமங்கலம் பகுதிகளை வளமாக்கி, விருதுநகர் மாவட்டத்தின் காரியாபட்டி, திருச்சுழி வழியாக கமுதிக்கு வரும் இந்தக் குண்டாற்றின் கரைகளில் கவின்மிகு முல்லைத் திருநகரம் என்ற மாபெரும் மக்கள் சாம்ராஜ்யம் இருந்திருக்கிறது.

அதன் அழியாச் சுவடாகவே இன்றைக்கும் குண்டாற்றின் கரையில் கமுதி(கோட்டைமேடு) நின்று கொண்டிருக்கிறது. இந்தக் கோட்டை மேட்டில் இருந்துதான் அதானியின் கம்பெனிக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் அதே கோட்டை மேடு உள்ளிட்ட பகுதிகளில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் மக்கள் தத்தளிக்கிறார்கள்.

அதானியின் சாம்ராஜ்யம் இந்தியாவில் இதுவரைக்கும் உருவான சாம்ராஜ்யங்களை விடப் பெரியது. ஒட்டுமொத்த இந்தியாவின் விவசாயிகளும், வங்கிகளில் வாங்கியிருக்கிற பயிர்க்கடனின் மொத்தத் தொகை சுமார் ரூ.75 ஆயிரம் கோடி. ஆனால், ஒரே ஒரு கவுதம் அதானி மட்டும் இந்தியாவின் வங்கிகளில் வாங்கியிருக்கிற கடன் தொகை ரூ.72 ஆயிரம் கோடி. எப்பேர்ப்பட்ட சாம்ராஜ்யம் இது.

இந்தியாவின் மிகப்பெரும் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு கவுதம் அதானி, கமுதியை தேர்வு செய்தார். சூரிய வெப்பம் 300 நாட்களுக்கும் அதிகமாக மிகச்சரியான கோணத்தில் – அதாவது 35 டிகிரி கோணத்தில் – சிந்தாமல் சிதறாமல் அதே நேரத்தில் மிகக்கொடூரமாகச் சுட்டெரிக்காமல் மின்சார உற்பத்திக்கு ஏதுவான முறையில் வந்து விழுகிற இடம் கமுதி.

கிழக்கிலிருந்து வரும் கடல்காற்றின் வெப்பம் மேற்கிலிருந்து வரும் மலைப்பகுதியின் தென்றல் காற்று இரண்டும் சங்கமித்து சூரிய வெப்பத்தை மிகச்சரியான சூட்டுடன் மின் உற்பத்தி தகடு களுக்கு அனுப்பி வைக்கிற இடம் இது.

நரேந்திர மோடி மூன்றாண்டுகளுக்கு முன்பு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், முக்கியத்துவம் வாய்ந்த மின்சாரத்துறையை பியூஷ் கோயலிடம் கொடுத்தார். பியூஷ் கோயல், பாரதிய ஜனதா கட்சியின் பொருளாளர். ஆடிட்டர். மிகப்பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆலோசகர்.

இந்தியாவின் செல்வ வளம் கொழிக்கும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் இன்றைய நிலையில் முதன்மையானது எரிசக்தி மற்றும் மின்சாரத்துறைதான். ஜப்பானில் புகுஷிமா அணுஉலை விபத்திற்குப் பிறகு உலகம் முழுவதும் அதுவரையிலும் தீவிரமாக இருந்த அணுசக்தி மின் உற்பத்தி முயற்சிகள் சற்று தொய்வடைந்திருந்த தருணத்தில்தான் இந்திய மின்சாரத்துறை அமைச்சராக பியூஷ் கோயல் வந்தார்.

முதலாளிகளின் கவனம் இந்தக் காலக்கட்டத்தில் சூரிய மின்சார உற்பத்தியின் பக்கம் திரும்பியது. மாற்று எரிசக்தி – மரபு சாரா எரிசக்தி துறையில் கவனம் செலுத்தப்போகிறோம் என பியூஷ் கோயல் அறிவித்தார். அரசாங்கம் எந்த உதவி வேண்டுமானாலும் செய்யத் தயார்
என்று அறிவித்தார். மோடியின் நண்பர் கவுதம் அதானி அதுவரையிலும் இந்தியாவில் நிலக்கரி
மூலமான மின்சார உற்பத்தி நிலையங்களைத்தான் வடமாநிலங்களில் நடத்திக் கொண்டிருந்தார்.

மோடியும், கோயலும், அதானியும் கைகோர்த் தார்கள். சூரிய மின் உற்பத்தித் துறையில் அதானி நுழைந்தால் இதுவரையில் இந்திய முதலாளிகள் சம்பாதிக்காத அளவிற்கு கொள்ளை லாபம் சம்பாதிக்க முடியும் என்று கணக்குப் போட்டார்கள். இடத்தைத் தேடினார்கள். சிக்கியது கமுதி.

2015 இறுதிவாக்கில் சூரிய மின்சார உற்பத்தி செய்ய முதலீடு செய்ய வாருங்கள் என பெயரளவில் பெரு முதலாளிகளுக்கு அழைப்பு விடுத்தது மத்திய அரசு. அதைத்தொடர்ந்து தமிழகத்தில் தொழில் தொடங்க தயாராக இருப்பதாகக்கூறி அதானி குழுமம் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேச்சு நடத்தியது. ஒப்பந்தம் தயாரானது.

*இராமநாதபுரம் மாவட்டம்; கமுதி வட்டாரம், செங்கப்படை கிராமத்தை மையமாகக் கொண்டு கிட்டத்தட்ட 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.* ‘கையகப்படுத்தல்’ என்றால் அது அரசாங்க வார்த்தை. உண்மையில் கமுதியின் கிராமப்பகுதிகள் முழுவதும் உள்ள விவசாயிகளிடம் மிரட்டியும், ஆசை காட்டியும் நிலங்கள் கைப்பற்றப்பட்டன.

வறண்ட பூமியில் தொழில் செய்து வந்தால் நல்லது தானே என்று நியாயம் பேசப்பட்டது. இந்த அநியாயத்தின் பின்னணியில் தமிழக அமைச்சர் பெருமக்களுக்கும் கோடி கோடியாக பணம் கைமாறியது. அன்றைய தமிழக மின்சாரத்துறை, அதானியின் சூரிய மின்சார நிறுவனத்தை உருவாக்குவதற்காக தன்னையே ‘அர்ப்பணித்துக்’ கொண்டது.

2016 பிப்ரவரியில் கமுதி சூரியமின் திட்டம் என்ற பெயரில் அதானி குழுமம் பிரம்மாண்ட மான மின் உற்பத்தி நிலையத்தை கட்டமைக்கத் துவங்கியது. 8500 தொழிலாளர்கள் எட்டு மாத
காலத்தில் மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கி னார்கள். வெளிநாடுகளிலிருந்து கப்பல்கள் மூலம் வரவழைக்கப்பட்ட சுமார் 25 லட்சம் சூரிய மின் தகடுகள் கிட்டத்தட்ட 2500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டன.

3லட்சத்து 80 ஆயிரம் தூண்கள், 27 ஆயிரம் மீட்டர் அளவிற்கு கட்டுமானம், 576 மின்சேமிப்புக் கலங்கள், 154 டிரான்ஸ்பார்மர்கள், சுமார் 6 ஆயிரம் கிலோமீட்டர் அளவிற்கான மின் வயர்கள் என கிட்டத்தட்ட ரூ. 4, 500 கோடி அளவிற்கு முதலீடு செய்யப்பட்டு கமுதி சூரிய மின்திட்டம் என்ற பெயரில் அதானி கிரீன் எனர்ஜி (தமிழ்நாடு) நிறுவனம் உருவாக்கியது.

மேற்படி ரூ.4,500 கோடி பணம், அதானியின் பாக்கெட்டிலிருந்து எடுக்கப்பட்டது அல்ல.

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளிடம் அதானி கடனாக வாங்கிய 72 ஆயிரம் கோடி ரூபாயில் இந்தப் பணமும் அடங்கும்.

எனவே அது அவரது சொந்தப் பணம் அல்ல. மார்ச் 2017 இல் கமுதி சூரிய மின்திட்டம் தனது உற்பத்தியை துவக்கியது. கமுதி சூரியமின் பூங்கா என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்திலிருந்து 648 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரத்தை தேசிய மின்தொகுப்பிற்குள் கொண்டு செல்வதற்காக 5 துணை மின் நிலையங்கள் அரசாங்கத்தால் அமைத்து தரப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஒரு பிரிவான தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழ கத்திற்குச் சொந்தமான 400 கிலோ வாட் துணை மின்நிலையம் ஒன்று, அதானி நிறுவனத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதானிக்காக கமுதி மக்களும் தமிழக அரசும், தமிழக மக்களும் தங்களையே அர்ப்பணித்திருக்கிறார்கள்.

மார்ச் 2017இல் கமுதி சூரிய மின்திட்டம் உற்பத்தியை துவங்கிய இரண்டே மாத காலத்தில் – மே 2017- அதானி குழுமத்தின் நிகர லாபம் இதுவரை இல்லாத அளவிற்கு 60 சதவீதம் அதிகரித்தது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 130 கோடி ரூபாயாக இருந்த அதானி குழுமத்தின் நிகர வருமான உயர்வு இந்த ஆண்டு 221 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

மரபு சாரா எரிசக்தி விற்பனை மூலமாக – அதாவது சூரியமின்சக்தி விற்பனை மூலமாக 13 மடங்கு அதிகமாக அதானி குழுமம் லாபம் சம்பாதித்துள்ளது. அதாவது, நடப்பாண்டில் இத்துறையில் மட்டும் 14,300 கோடி ரூபாய் வருமானம் பார்த்துள்ளது.அத்தனையும் கமுதி மக்களின் சொத்து. யூனிட் ஒன்றுக்கு 7 ரூபாய்க்கு தமிழக மக்களிடம் விற்றுச் சம்பாதித்த லாபம்.

அதானியைப் பொறுத்தவரை இந்த லாபம் போதவில்லை. லாபம் குறையக்கூடாது. அப்படியானால் சூரிய மின்சார உற்பத்தியின் அளவு லேசாகக் கூட குறையக்கூடாது.
கமுதி செங்கப்படையில் அமைந்துள்ள சூரியமின்சார உற்பத்தி மையத்தில் *25லட்சம் சூரியமின் தகடுகளும் முழு அளவில் வெப்பத்தை ஈர்த்து மின்சாரத்தை தயாரிக்க வேண்டுமானால் அவை அனைத்தும் பளிச்சென்று சுத்தமாக வைக்கப்பட்டிருக்க வேண்டும்.*

இதற்காக *பிற நாடுகளில் பிரத்யேகமான ரோபோட்டிக்ஸ் சாதனங்கள் உள்ளன.* ஆனால் அவை விலை உயர்ந்தவை. அதானிக்கு அதனால் லாபம் இல்லை. 25லட்சம் மின் தகடுகளையும் தினந்தோறும் தண்ணீரால் கழுவ முடிவு செய்தார்கள். தண்ணீரை இயந்திரக் குழாய்கள் வழியாக சூரியத்தகடுகளில் பீய்ச்சி அடித்து கழுவும் பணி தினந்தோறும் நடந்தாக வேண்டும்.

தண்ணீர் கமுதி கோட்டைமேடு குண்டாற்றின் மணல்வெளியில் ஆழத்தில் கிடக்கிறது என்று அதானிக்குத் தெரியும். இஸ்ரோவின் சேட்டிலைட்டுகள் இதற்கு உதவுகின்றன என்பது தனிக்கதை. குண்டாறு நீர்வளம் முழுவதையும் உறிஞ்சத் துவங்கிவிட்டது அதானியின் ராட்சதக் கரங்கள்.

 காவிரி – வைகை- குண்டாறு – வைப்பாறு;   குண்டாற்றை வைகையுடனும் காவிரியுடனும் இணைக்க தமிழக அரசு நீண்டகாலத்திற்கு முன்பே ஒரு திட்டம் போட்டது. ஆனால் அது கிடப்பில் கிடக்கிறது. புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட விவசாயிகள் அத்திட்டத்தை தூசி தட்டி எடுத்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். காவிரி – வைகை- குண்டாறு – வைப்பாறு ஆகிய நான்கு நதிகளை இணைத்தால் மீண்டும் கவின்மிகு நிலமாக மாறும் என்று விவசாயிகள் ஆர்ப்பரிக்கிறார்கள்.

ஆனால் ஏற்கெனவே ஒருபுறம் குண்டாற்றின் மணல்வளம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இப்போது *நாளொன்றுக்கு சுமார் 20லட்சம் லிட்டர் தண்ணீரை அதானி சூரியமின் ஆலை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது.*

இது பற்றிய விபரங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் முதன் முறையாக கடந்த ஜூன் 8ந்தேதி வெளியானது. மற்றவர்கள் சுதாரித்து பிரச்சனை ஆவதற்குள், சூரிய மின் ஆலையின் அதிகாரிகள் தலையிட்டு அவசர அவரசமாக விளக்கம் கொடுத்தனர். சூரியமின் தகடுகளை தினமும் கழுவுவதில்லை; மாதம் ஒரு முறை கழுவுகிறோம். அவ்வளவுதான் என்றனர்.

அப்போதும் கூட தண்ணீரை நாங்களே உறிஞ்சவில்லை; தனியார் காண்ட்ராக்டரிடம் தண்ணீர் வேண்டுமென்று கேட்கிறோம். அவர்கள் எங்கிருந்தோ தண்ணீர் கொண்டுவந்து தருகிறார்கள்; எனவே அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்றும் விளக்கினார்கள்.அதோடு நிற்காமல், ஒரு சூரியமின் தகடை கழுவுவதற்கு வெறும் 2 லிட்டர்தான் தண்ணீர் தேவை;

*ஏற்கெனவே ஆலைக்குள்ளேயே அமைக்கப்பட்டுள்ள போர்வெல்களிலிருந்து 50 ஆயிரம் லிட்டர் ஒவ்வொரு நாளும் எடுக்கப்படு கிறது;* அதுவே எங்களுக்கு போதுமானது; மாதம் ஒரு முறை சுத்தப்படுத்துவதற்காக மட்டுமே வெளியிலிருந்து தண்ணீர் விலைக்கு வாங்கு கிறோம் என்று ஆலையின் தலைமை இயக்குநர் சந்தோஷ்குமார் மால் விரிவான விளக்கம் சொன்னதாக செய்திகளும் வெளியாகின.

இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டின் செய்தியாளர் மீண்டும் எழுதினார்:

“அதானியின் ஆலையில் அமைக்கப்பட் டுள்ள சூரியமின்தகடுகள் ஒவ்வொன்றும் 125 அடி நீளமும் 28 அடி அகலமும் கொண்டவை. ஒவ்வொரு தகடும் பிரம்மாண்டமானவை. ஒரு தகடை கழுவுவதற்கு ஆலை நிர்வாகியின் கூற்றின்படி வெறும் 2 லிட்டர் போதுமானது என்பதை ஒப்புக்கொண்டு, அந்தக் கணக்கின்படியே பார்த்தாலும் 25லட்சம் தகடுகள்  2 லிட்டர் = 50லட்சம் லிட்டர். மாதம் ஒன்றுக்கு 50லட்சம் லிட்டர் என்றால் நாள் ஒன்றுக்கு 1.67லட்சம் லிட்டர். அதாவது கிட்டத் தட்ட நாள் ஒன்றுக்கு 2லட்சம் லிட்டர்.

அப்படியானால் நான் எழுதியது சரிதானே; ஒவ்வொரு நாளும் அதானி குழுமம் சுமார் 2லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சுகிறது; காண்ட்ராக்டர் ர்களிடம் அந்த வேலையை கொடுத்திருக்கிறது. காண்ட்ராக்டர்கள் கோட்டைமேடு குண்டாற்றி லிருந்து உறிஞ்சுகிறார்கள்’.

*குண்டாறு எவ்வித கேள்வியும் இல்லாமல், யாருடைய அனுமதியும் இல்லாமல் எந்தவிதமான உரிமமும் இல்லாமல் உறிஞ்சப்படுகிறது.* மொத்த நீரும், அதானியின் கொள்ளை லாபத்திற்காக உறிஞ்சப்படுகிறது. கமுதி வட்டத்தின் பரிதாபத்திற்குரிய அதிகாரிகளிடம் இதற்கு பதில் இல்லை.

அதானி நிறுவனத்தைப் பகைத்துக்கொண்டு, இராமநாதபுரம் ஆட்சியர் என்ன செய்வார் பாவம்! ஆனால் தமிழக அரசின் கிராமப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளரான ஹன்ஸ்ராஜ் வர்மாவிடம் பதில் இருக்கிறது; ‘மரபு சாரா மின்சக்தி உற்பத்திக்கு கமுதி ஒரு
அற்புதமான இடம்.

கடல் பகுதியிலிருந்து வரும் வெப்பக்காற்றும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலிருந்து வரும் தென்றல் காற்றும் சங்கமித்து மிகச்சரியான பதத்தில் மிகச்சரியான கோணத்தில் சூரியத் தகடுகளுக்கு சக்தியை அளிக்கின்ற இடம். பகலில் வெப்பமும் இரவில் காற்றும் வீசுகிற அற்புதம்.

24 மணிநேரமும் மின் உற்பத்திக்கான ஆதார வளம் கிடைக்கிறது. அத்தனை வளமும் இலவசம். என்னே அற்புதம்.ஆமாம், அத்தனையும் இலவசம், குண்டாறும் இலவசம்.

*மோடியின் ஆட்சியில் அதானிக்கு அத்தனையும் இலவசம்!*

கமுதி வட்டம் செங்கப்படை உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் விவசாயிகளிடமிருந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஆளும் அரசியல்வாதிகளின் துணையோடு அதானி நிறுவனம் கொள்ளையடித்தது முதல் இன்றுவரை போராடிக் கொண்டிருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும்.

இப்பகுதியில் அதானி நிறுவனம் இப்போது குடிநீரை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. இப்பகுதி கிராமங்கள் முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் துயரின்பிடியில் சிக்கியுள்ளன. ஆனால் குண்டாறிலிருந்து குடிநீர் ஆதாரத்தை நிதி ஒதுக்கி மக்களுக்கு அளிக்க முன்வராத மாவட்ட ஆட்சி நிர்வாகமும், தமிழக அரசும் அதானியின் குடிநீர் கொள்ளையை வேடிக்கை பார்க்கின்றன.

புதன், 21 ஜூன், 2017

உலகில் மனிதன் தோன்றியது எங்கே ??


உலகில் மனிதன் தோன்றியது எங்கே ?? 

*தி இந்து நாளிதழ் கட்டுரை* ஒவ்வொரு பிராமணின் வயிற்றிலும் புளியை கரைத்து ஒவ்வொரு பிராமணனும் Bjp காரனும் திட்டித்தீர்க்கும்  பெயர்கள் . . .
.
ஏன் ?? எதனால் ?? வாருங்கள் பார்ப்போம்

Richard Martin மற்றும் Tony Joseph இந்தப் பெயர் உலகில் உள்ள வரலாற்று ஆய்வாளர்களும் அறிஞர்களும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் பெயர்கள்
.
அதேசமயத்தில் இப்போது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பிராமணனும் Bjp காரனும் திட்டித்தீர்க்கும்  பெயர்கள் . . .
.
ஏன் ?? எதனால் ?? வாருங்கள் பார்ப்போம்
.
Professor Richard Martin மற்றும் Tony Joseph உலகப்புகழ்பெற்ற Oxford பல்கலைக்கழகத்தின் வரலாறு தொல்லியல் மற்றும் மரபணுவியல் (genetical) துறையின் பேராசிரியர்கள் . .
.
இவரின் ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் பல நாட்டவர்களின் அடிப்படை சித்தாந்தங்களை தகர்த்து எறிந்திருக்கிறது . . . .
.
நேற்று முன்தினம் இவருடைய குழுவினர் கடந்த நான்கு ஆண்டுகளாக . . .
.
உலகில் மனிதன் தோன்றியது எங்கே ??
.
ஆசியாவின் பூர்வ குடிகள் யார் ? இந்தியாவின் மற்றும் அமெரிக்காவின் ஆதி மக்கள் யார் ??

என்று இந்திய துணைக்கண்டம் மற்றும் ஈரான் ஈராக் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் பர்மா மலேசியா நேபாளம் பங்களாதேசம் ஆகிய நாடுகளில் மக்களிடம் லட்சக்கணக்கான மரபணுக்களை ஆராய்ச்சி செய்தனர் . . இந்தியாவில் மட்டும் 16500 க்கும் மேற்பட்ட மரபணுக்கள் ஆராய்ச்சி செய்தனர்
.
அந்த ஆராய்ச்சி முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிட்டனர்
.
அந்த ஆய்வறிக்கை தான் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பிராமணின் வயிற்றிலும் புளியை கரைத்திருக்கிறது
.
அப்படி என்ன விஷயம் ??
.
இந்தியாவுக்குள் நாடோடிகளான ஆரியர்கள் மாடுகளோடு ஈராக் ஈரான் வழியாக ஆப்கானிஸ்தானில் நுழைந்து இந்தியாவில் பரவினர் என்றும்
.
அப்படி சிந்துசமவெளி நாகரிகம் அழியும் தருவாயில் இருந்தது அந்த நேரத்தில் தான் ஆரியர்கள் உள்ளே வந்தார்கள் அது சரியாக ரிக் வேதம் எழுதப்பட்ட காலகட்டம்
.
அப்போது ஒரு இனம் இங்கே வீடுகள் கட்டி நகர நாகரீகத்துடன் வாழ்ந்து வந்தனர்
.
அவர்கள் திராவிடர்கள் என்று அழைக்கப்படும் தமிழர்கள் என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபித்தும் இருக்கிறார்கள்
.
இப்போது நமக்கு சொல்லப்பட்ட பல வரலாறுகள் பொய்யென்றாகிறது
.
அதாவது சிந்துசமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம் என்று நமக்கு சொல்லப்பட்டது பொய்
.
ஏனென்றால் அவர்கள் அப்போது தான் உள்ளேயே வருகிறார்கள்
.
அப்போது அவர்கள் நாகரிகமடையாத நாடோடிகளாக இருந்தார்கள் அப்படி இருந்தவர்கள் எப்படி நகர நாகரிகத்துடன் வாழ முடியும் ??
.
இரண்டாவது சமஸ்கிருதம் ஆதி மொழி என்று நமக்கு சொல்லிக்கொடுத்தது பொய் . .
.
ஏனென்றால் அதுதான் உலகமொழிகளிலேயே இளைய மொழி என்று இப்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது
.
அதனால் அதற்கு கொடுக்கப்பட்ட செம்மொழி அந்தஸ்து தவறு
.
மேலும் இப்போது தான் நமக்கு புரிகிறது . .
.
மதுரை கீழடி ஆராய்ச்சியை ஏன் தடுக்கிறார்கள் . .

ஆதிச்ச நல்லூர் அகழ்வாராய்ச்சி ஏன் மூடி மறைக்கப்பட்டுள்ளது என்றும் இப்படி பல கேள்விகளுக்கு இந்த ஆராய்ச்சி முடிவுகள் விடை சொல்கின்றன
.
மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றுகிறது அப்போது இந்திய துணைக்கண்டம் ஆப்பிரிக்காவுடன் ஒட்டியிருந்தது என்றும்
.
கடல்கோள்களால் இந்திய நிலப்பரப்பு பிரிந்தது என்றும் . .
.
இந்த மண்ணில் திராவிடர்கள் தான் முதலில் இருந்தனர் என்றும்
.
அவர்கள் முப்பது அல்லது நாப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கிறது என்றும்
இந்த ஆராய்ச்சி திட்டவட்டமாக உரக்கச் சொல்லுகிறது
.
இனிமேல் நெஞ்சை நிமிர்த்திச் சொல்லுவோம் இது எங்கள் மண் . . . வந்தேரிகள் வாலாட்டினால் குரல் உயர்த்துவோம் . . . தமிழன் என்பதில் மட்டற்ற பெருமை கொண்டு மார் தட்டுவோம்

***************************அவசியம் அதிகம் ஷேர் செய்யுங்கள்*    ******
How genetics is settling the Aryan migration debate

http://www.thehindu.com/sci-tech/science/how-genetics-is-settling-the-aryan-migration-debate/article19090301.ece

சனி, 17 ஜூன், 2017

ஆஷ் துரை சுட்டு கொல்லப்பட்ட நாள் .ஜூன் 17.06.1911.


ஆஷ் துரை சுட்டு கொல்லப்பட்ட நாள் .ஜூன் 17.06.1911.

ஜூலை /09/14 :பிரிட்டிஷ் ஆட்சியில் நெல்லை மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஆஷ்துரை, அம்மாவட்டத்தில் தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்ட அருந்ததி சமூகத்தினரை சமமாக மதித்தார். தனது அலுவலகத்தில் நிலவிய தீண்டாமையை ஒழித்தார்.
அலுவலகத்தில் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து சாப்பிட வேண்டும். ஒரே குடத்தில் தண்ணீர் எடுத்து குடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். குற்றால அருவிகளில் தெய்வங்களும், அவருக்கு பூசை நடத்தும் “பிராமணர்களும்” மட்டும் தான் குளிக்க வேண்டும் என்ற சாதித் தடையை நீக்கி அருந்ததியினர் உட்பட அனைவரும் குளிக்க ஆணையிட்டார். தானும் அதே அருவியில் குளித்தார்.
அது ஒரு மழைக் கால இரவு, ஆஷ் என்னும் வெள்ளை துரையின் குதிரை பூட்டிய வண்டி, சேரியைக் கடந்து பறக்கிறது. ஆஷ் ஒரு மனித நேயம் மிகுந்த மனிதன் என்பதால், இருள் விலகி கொஞ்சம் அவனுக்கு வழி விடுகிறது, மனிதர்களில் இருந்து விலக்கப்பட்டு மிருகங்களின் நிலையில் இருந்த ” தலித்” மக்களின் பகுதியை கடந்து ஆஷ் செல்லுகின்ற போது, அங்கே ஒரு அழுகுரல் இருளின் அமைதியை விலக்கி வருகிறது.
ஆஷ் தன் சாரதியிடம் சொல்கிறான், வண்டியை அந்த அழுகுரல் வரும் திசை நோக்கி செலுத்து என்று, சாரதி சொல்கிறான், அது தாழ்த்தப் பட்ட மனிதர்கள் வாழும் இடம், அங்கு நாம் செல்லக் கூடாது என்று, ஆஷ், கேட்கிறான், மனிதர்களில் தாழ்ந்தவர்களா, அவர்கள், திருடும் இனமா? என்றான்? இல்லை அய்யா பிறப்பால் தாழ்ந்தவர்கள் என்றான்? வியப்பின் எல்லைக்கு சென்ற ஆஷ், கட்டளை இடுகிறான், ” அந்த அழுகுரல் வரும் திசை நோக்கிச் செல்” - அதிகாரத் தோணி கேட்டு அடங்கிய சாரதி, மறுக்காமல் விரைகிறான்.
அவர்கள் சென்ற இடம், அந்த மனிதர்களைப் போலவே இற்றுப் போன ஒரு குடிசை, அங்கே, ஒரு மகவினைப் பெற்றெடுக்கும், வலி வேதனையில் ஒரு பெண் கதறுகிறாள், சுற்றிலும் நான்கைந்து பெண்களும் , தூரத்தில் சில ஆண்களும், ஆஷ் அருகில் சென்று கேட்கிறான், என்ன ஆனது என்று? பிரசவ வேதனையில் இருக்கும் இந்தத் பெண்ணுக்கு, ஒரு சிக்கல், அவளை மருத்துவமனை கொண்டு சென்றால், இரண்டு உயிர்களை காப்பாற்றலாம் என்று…….அவர்கள் சொன்னவுடன், ஆஷ் கேட்கிறான், பிறகென்ன கொண்டு செல்ல வேண்டியது தானே என்று, அதற்கு, அவர்களில் ஒருவன் சொன்னான், அய்யா, அக்ரகாரம் கடந்து இந்த இருளில் செல்வது என்பது, எம்மை நாங்களே அழித்துக் கொள்வது போலாகும்.
வண்டி கட்டிச் செல்ல வேண்டும் என்றால், அக்ரகாரம் கடக்க வேண்டும், ஆனால், அது இயலாத் காரியம், அந்தப் பகுதிகளுக்கு நாங்கள் செல்லத் தடை செய்யப் பட்டு இருக்கிறோம். ஆஷ், அந்தப் பெண்களை பார்த்துச் சொல்கிறான், ” இந்த ஜில்லா அதிகாரி சொல்கிறேன், உடன், என்னுடைய வண்டியில் அந்தப் பெண்ணை ஏற்றுங்கள், நான் அவளை மருத்துவமனை அழைத்துச் செல்கிறேன், சொன்னது போல் செய்தான், ஆஷ். அக்ரகாரத்தை ஒரு தலித் பெண் கடந்து விட்டால் என்ற செய்தி அப்போது ஒரு தலைப்புச் செய்தி, வாஞ்சிநாதன் ஒரு மேல்தட்டுத் தீவிர வாதி, எப்பாடு பட்டாவது வர்ணங்களையும், குல தர்மங்களையும் காப்பாற்ற முயலும் ஒரு குலக் கொழுந்து. அக்ரகாரத்தின், புனிதம் கெடுத்த ஆஷ் துரையின் ஆயுளுக்கு அன்று தான் முடிவு கட்டப்பட்டது.
மணியாச்சியின் புகை வண்டி நிலையத்தில் வைத்து ஆஷ் துரையை சுட்டுக் கொன்றனர். அப்போது வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்கள் பார்ப்பனர்கள், வெள்ளாளர்கள் (பிள்ளைமார்கள்) மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவருமே ஆஷ் துரை தீண்டாமைக்கு எதிராக செயல்பட்ட தென்காசி, செங்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்தக் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட ஹரிஹரன், வேம்பு, மகாதேவர், பிச்சுமணி என்ற வெங்கடாசலம், தரும ராசன், வெங்கடேசுவரன் ஆகிய அனைவரும் பார்ப்பனர்கள். குற்றம் சாட்டப்பட்ட டி.என்.சிதம்பரம், முத்துக்குமாரசாமி, சாவடி அருணாச்சலம், அழகப்பன் ஆகியோர் தென்காசி, செங்கோட்டையைச் சேர்ந்த வெள்ளாளர்கள். இதுவே ஆஷ் துரையின் மீதான வெறுப்புக்கு காரணம் சாதி வெறிதான் என்பதை தெள்ள தெளிவாக புரிந்து கொள்ளளாம்.

வரலாற்றை அறியாத கூட்டம்
வரலாறு படைக்க முடியாது -
இதை படித்து விட்டு விரும்பினால் ஷேர்
செய்யுங்கள்
''குற்றால அருவியில் குறிப்பிட்ட
ஒரு குலத்தவரே குளிக்க முடியும்,
ஏனைய சாதியைச் சார்ந்த யாரும் குளிக்க
கூடாது என்றிருந்த
ஜாதி வெறியை உடைத்து அனைவரும்
குளிக்கலாம் என்று உத்தரவிட்டவர்
ஆஷ்.''என்பது நம்மில்
எத்தணை பேருக்கு தெரியும்?
இது போன்ற சீர்திருத்த
நடவடிக்கைகளினாலேயே ஆங்கிலேய
கலெக்டர் ஆஷ் துரை சனாதன வெறியன்
வாஞ்சிநாதனால் சுட்டு கொல்லப்பட்டார்,
தகவல் உதவி - பரிமள ராசன்
ஆஷ் துரை மாலை நேரத்தில்
தனது குதிரையோட்டி முத்தா ராவுத்தர்
உடன் நடைபயிற்சி போகிறார்.
நடந்து கொண்டிருந்தவர் காதில்
ஏதோ அலறல் கேட்கிறது. ஓசை வந்த
திசை நோக்கினார் ஆஷ் துரை.
அங்கு போவதற்காய்
பாதையிலிருந்து இறங்கி குடிசை நோக்கி நடந்தார்.
பின்னால் வந்த ராவுத்தர்
ஓடி வந்து "துரை அங்கு போகாதீர்கள்"
என்று தடுக்கிறார். ஏன் என்று வினவிய
துரைக்கு "அது தாழ்த்தபட்டவர்களின்
குடிசை என்றும் நீங்கள்
அங்கு போகக்கூடாது என்றும்
சொல்லுகிறார். ஆஷ் துரை,
ராவுத்தரை பார்த்து நீ போய்
பார்த்து வா என்றார். சேரிக்குள் போன
முத்தா ராவுத்தர் திரும்பி வந்து சொன்னார்
" மொத பிரசவம் துரை சின்ன
பொண்ணு ரெண்டுநாள
கத்திட்டு இருக்காளாம்,
பிள்ளை மாறிக்கிடக்காம்"
எங்கிட்டு துரை பொழைக்கபோகுது என்றார்.
ஏன் மருத்துவமனைக்கு
அழைத்து செல்லலாமே என்று துரைக்கேட்க ,
அவங்க ஊருக்குள்ளேயே வரக்கூடாதுங்க
அய்யா பின்ன
எப்படி வண்டு கட்டி டவுணுக்கு கொண்டு போறது என்றார்
முத்தா ரவுத்தர்.
இதனிடையே சாரட்டில் அமர்ந்திருந்த
திருமதி.ஆஷ்
துரை இறங்கி அக்குடிசை நோக்கி போனார்.
மருத்துவமனை கொண்டு சென்றால்
ஒரு உயிரையெனும் காப்பாற்றலாம்
என்று துரையிடம் சொன்னார்.
அருகிலிருக்கும் ஊருக்குள்
சென்று உடனே ஒரு மாட்டுவண்டியை கொண்டு வருமாறு குதிரையொட்டியை பணித்தார்
துரை. ஓடிப்போன ராவுத்தர் ஊரின்
மேற்குபகுதியில் உள்ள அக்கிரஹாரம்
தாண்டிய பொழுது துரையின்
வண்டியொட்டி எனத்தெரிந்த
ஒரு பார்ப்பணர் வழிமறிக்கிறார். என்ன
விடயம்
என்வென்று சொல்லி ஒரு குடியானவனின்
வீட்டிலிருந்த
மாட்டு வண்டியை ஒட்டி வந்தார். அந்த
வழியாய்
வண்டிப்பாதை அக்கிரஹாரத்தை தாண்டிதான்
சென்றாகவேண்டும். சரியாய்
அக்கிரஹாரத்துக்குள்
மாட்டுவண்டு மறிக்கப்படுகிறது.
ஒரு சேரிப்பெண்ணை ஏற்றப்போகும்
வண்டி இப்பாதை வழியே போகக்கூடாது என்று பார்ப்புகள்
வழிமறித்து விடமறுக்கிறார்கள்.
வண்டி கொடுத்த குடியானவனையும் ஊர்
நீக்கம் செய்துவிடுவோம் என
எச்சரிக்கிறார்கள். வண்டி கொண்டு வர
சொன்னது துரையும் அவரின்
மனைவியும்தான் என்று விபரம் சொன்ன
பிறகும் ஏற்க மறுக்கிறார்கள் . இந்த
விபரத்தை துரையிடம் போய் சொல்லுகிறார்
ராவுத்தர்.
இதைக்கேட்ட ஆஷ் துரை அவர்கள்,
தனது வண்டியில் அந்த
பெண்ணை ஏற்றுமாறு உத்தரவிட்டார்.
குதிரையோட்டியின்
பக்கதிலேறி அமர்ந்து கொண்டார்.
வண்டி அக்கிரஹாரம் நுழைகிறது.
பார்ப்புகள் கூட்டமாய் வழிமறிக்கிறார்கள்
"ஒரு தாழ்த்தப்பட்ட
பெண்ணை ஏற்றிக்கொண்டு இந்த
அக்கிரஹாரத்துக்குள் வருவது யாராய்
இருந்தாலும் அனுமதிக்கமுடியா
து"என்கிறார்கள். வழிவிட சொல்லிப்பார்த்த
ார் மறுக்கவே வண்டியைக்கிளப்ப
ு என்று உத்தரவிடுகிறார். மீறி மறித்த
பார்ப்புகளின் முதுகுத்தோல்
துரை அவர்களின் குதிரைசவுக்கால்
புண்ணாக்கபடுகிறது. அந்த பெண்
மருத்துவமனைக்கு
கொண்டு செல்லபட்டு காப்பாற்றப்பட்டாள்.
ஆஷ் துரை அவர்களிடம் அடிவாங்கிய
கும்பலில் ஒரு 16 வயது இளைஞனும்
இருந்தான் அவன் பெயர் வாஞ்சிநாதன்.
அப்போது எடுத்த சபதம்தான்
வாஞ்சிநாதனை கொலைசெய்ய தூண்டியது.
சனாதான காவலனாக , மனித உயிரைவிட
அக்கிரஹார புனிதம் காக்க புறப்பட்ட
வரலாறு இன்று வரை மறைக்கபட்டு வருகிறது.
இதுவும் ழான் வோனிஸ் எழுதிய Ash Official
Notes எனும் குறிப்புகளில்
அரசு ஆவனக்காப்பகங்களில்
தெரிந்தே உறங்கிக்கொண்டிருக்கிறது

சனி, 10 ஜூன், 2017

பறையர் வரலாறு


பறையர் வரலாறு

       பறையர் அல்லது பெறவா என்போர்கேரளா , தமிழ் நாடு மற்றும் இலங்கையில் வசிக்கும் ஒரு சமூகக் குழுவாகும்.

தொடக்கம்
       பறையர், (அ)மறையர், சாம்பவர் என்பவர்கள் இந்தியாவின் ஒரு இன அல்லது சமூக குழுவினர், இவர்கள் அதிகமாக தமிழ் நாடு, கேரளா மற்றும் ஸ்ரீ லங்கா நாட்டில் வாழ்கின்றனர். தமிழ்நாட்டில் மூன்று வெவ்வேறு பெயர்களில் இவர்கள் அழைக்கப்பட்டாலும், பறையர் என்று பொதுவாக அறியப்படுகின்றனர். தமிழகத்தின் வட மாவட்டங்களில் பறையர் என்றும், தென் தமிழகத்தில் சாம்பவர் என்றும் அழைக்கப்பட்டாலும், இவர்கள் தங்களை [மறையர்] வள்ளுவ வேளாளர் /ஆதி திராவிடர் என்றே அறியப்பட விரும்புகின்றனர்.
2001 இந்திய மக்கள் தொகை கணக்கின்படி, ஆதி திராவிடர்களின் மக்கள் தொகை 90 லட்சமாக உள்ளது. தமிழ் நாடு அரசின் பட்டியல் இனத்தவருள் ஆதி திராவிடர்களே பெரும்பான்மையினராக உள்ளனர்.
இச்சமூகக்குழுவினது பெயர் "பறை " என்பதில் இருந்து தோன்றியதாகும். பறை என்ற தமிழ்வார்த்தைக்கு சொல் என்ற பொருளாகும். இன்னமும் கூட கேரளாவில் பறை என்பது சொல் என்ற பொருளிலேயே வழங்கப்படுகின்றது. மறை ஓதிய(பறைந்த)வர்கள் என்பதால் இப்பெயர் ஏற்ப்பட்டது. மேலும் பௌத்த தம்மத்தை பறைந்தவர்கள் என்பதாலே இப்பெயர் ஏற்ப்பட்டது என்று அயோத்தி தாச பண்டிதர் குறிப்பிடுகின்றார். பெறவா என்பது இலங்கையின் பௌத்த மக்களிடையான பறையர் மக்கள்குழுவுக்கு இணையானவர்களாவர்.

வரலாறு

         சங்க காலத்தில் பறையர்கள், மிகச்சிறந்ததொரு நிலையினை சமூகத்தில் பெற்றிருந்தனர். களப்பிரர் ஆட்சியின் வீழ்ச்சிக்கு பின்னர் பறையர்கள் பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சி அடைந்தார்கள், அதுமட்டுமின்றி பிற (சோழ, பல்லவ) மன்னர்களால் கொடுமை செய்யப்பட்டனர் என ஏ.பி. வள்ளிநாயகம் தன் ஆய்வின் மூலம் எடுத்துரைக்கிறார். பின்னர் பிற்கால பறையர்கள் உழவையும், நெசவையுமே தொழிலாக கொண்டிருந்தனர்.
கிளய்டன் அவர்கள் கூற்றிலிருந்து, பறையர்கள் தமிழகத்தில் நீண்டதொரு வரலாறு அமையப்பெற்றதும், துணைக் கண்டத்தில் முக்கிய இடம் பெற்றிருந்தனர் என்பதற்கும் சான்று பகர்கின்றார். பிரான்சிஸ் அவர்கள் 1901 ஆம் ஆண்டின் மெட்ராஸ் சென்சஸ் பட்டியலை இயற்றியவர். அவர் கூற்றின்படி, கிறித்தவ ஆதிக்கம் தழைத்தோங்கிய பண்டைய தமிழ் படைப்புகளில் "பறையர்" என்னும் சொலவடை உபயோகத்தில் இல்லை எனவும், ஆனால் தனித்ததொரு இயல்பினையும், கிராமங்களில் அல்லாது கோட்டைகளில் வாழும் பழங்குடியின மக்களைப் ("Eyivs") பற்றிய செய்திகள் நிரம்பியிருப்பதாக கூறுகின்றார். ஆம்பூர் மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் பெருவாரியாக வாழ்ந்த இவர்களே பறையர்களின் முன்னோர்கள் ஆவர்.
தஞ்சை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் உள்ள சிவன் விழாக்களில் பறையர்கள் வெண்குடை ஏந்தி சிவனுக்கு முன்பு செல்லும் மரபு வழி உரிமை உடையவர் ஆவர்.


பறையர் குடியிருப்பு

     ஜெயங்கொண்ட சோழ சதுர்வேதிமங்கலத்து தென்பிடாகை மணற்க்குடியிலிருக்கும் ஊர்ப்பறையன் மண்டை சோமனான ஏழிசைமோகப்படைச்சன் என்பவர் கோவில் ஒன்றிற்க்கு கொடை அளித்ததாக தென் இந்திய கல்வெட்டுக்கள் தொகுதி 7 எண் 794 கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது, இதன் மூலம் பறையர்கள் சதுர்வேதி மங்கலங்களில் குடியிருந்ததை அறிய முடிகின்றது.
பறையர் குடியிருப்பு, சேரி என்றே இன்றும் அழைக்கப்படுகின்றது. பெருளாதாரத்தில் கடுமையாக பின்தங்கிய பறையர்கள் வசிக்கும் சேரிகள் இன்று அவர்களின் பொருளாதார சூழலை பிரதிபலிப்பதால் இன்றை சூழலில் அச்சேரிகள் அழுக்கான என்ற பொருளுடைய Slum என்ற ஆங்கிலச்சொல்லோடு பொருத்திப் பார்க்கப்படுகின்றது. ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த சோமன், ரவிதாசன், பரமேஸ்வரன் ஆகியோரின் தம்பி ரேவதாச வித்தன் வாழ்ந்த ஊரின் பெயர் பாப்பனச் சேரி ஆகும். இம்மூவரும் பிராமணர் என்பது குறிப்பிடத்தக்கது .சோழர் கால கல்வெட்டானது
பறைச்சேரியும் கம்மாணங்சேரியும் ஊரின் நடுபட்ட குளமும் புலத்திற்குளமுங்கரையும் இவ்வூர்திருவடிகள் என்று குறிப்பிடுகின்றது .இதன் மூலம் கம்மாளர்கள் வாழ்ந்த கம்மாளஞ்சேரியும் பறைச்சேரியும் அருகருகே இருந்தன என்பதை அறிந்துகொள்ளலாம். ஆக சேரி என்பது தமிழர்கள் வாழும் பகுதிக்கான ஒரு பெயரேயாகும்.

பறையர் அரசுகள்

        வரலாற்றில் சிற்றரசர்களாக பறையர்கள் இருந்துள்ளனர்.
பறையூர் அரசன்
இன்றைய கேரளாவில் உள்ள பறூர் என்றழைக்கப்படும் பறையூரில் வசித்த மக்கள் பறையர்கள் எனவும் அவர்களின் அரசன் தாந்திரீகத்தை நன்குணர்தவர் என்றும், நம்பூதிரிகள் ஒரு போட்டியில் பறையூர் தலைவனை வீழ்த்தி பறையூருக்கு அரசன் ஆனதாக நாட்டார் கதை வழக்கொன்று உள்ளது.சிலப்பதிகாரத்திலும் 'பாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க் கூத்தன் சாக்கையன்' என்ற பாடல் வரி வருகின்றது, அந்த சாக்கையன் கூத்து இன்று வரை கேரளாவில் பறையன் துள்ளல் என்ற பெயரில் ஆடப்பட்டு வருகின்றது.


வில்லிகுலப் பறையர்கள்

        இலங்கையில் இருந்த அடங்காப்பதத்தில் நான்கு அரசுகள் இருந்தன அதில் கணுக்கேணியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செலுத்தியவர்கள் வில்லிகுலப்பறையர்கள் எனவும், இவர்கள் ஆதிக்குடிகள் எனவும், யாருக்கும் அடங்காதவர்களாக இருந்ததனால் அந்த பகுதிக்கு அடங்காப்பதம் என்று பெயர் வந்ததாகவும் வையாப்பாடலில் சொல்லப்பட்டுள்ளது. இவர்களை ஒடுக்க திடவீரசிங்கன் என்ற வன்னியர் வந்ததாக இப்பாடலில் கூறப்பட்டுள்ளது.

நந்தன் என்ற சிற்றரசன்

       சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, பட்டுச்சுரத்திற்கும் கும்பகோணத்திற்கும் நடுவே இருந்த சோழ மாளிகையைத் தலைமையிடமாகக் கொண்டு நந்தன் என்ற சிற்றரசன் ஆண்டு வந்தான். பிறகு மறவர்களால் நந்தனும் அவனது ஆட்சியும் அழிக்கப்பட்டது, அதன் பிறகு வந்த நாயக்கர் ஆட்சியில் விளாரியில் இருந்த நந்தன் கோட்டையும் அழிக்கப்பட்டது.

தொழில்

       கோலியர் (நெசவு தொழில் )
பறையர்களில் நெசவு தொழில் செய்தவர்கள் கோலியர்கள் ஆவார்கள் . இவர்கள் நெசவுப்பறையர் என்றும் அழைக்கப்பட்டனர். இவர்கள் இலங்கையில்
சாலியர் என்று அறியப்படுகின்றனர் .

மன்றாடி

         பறையர்களைப்பற்றிய நான்கு கல்வெட்டுக்கள் அவர்கள் சூத்திர ராயர்கள் என்று குறிப்பிடுகின்றது. அவற்றில் ஒன்று "மன்றாடி பூசகரி லரைசன் பறையனான பொய்யாத் தமிழ்நம்பி" என்று குறிப்பிடுகின்றது. ஆக இக்கல்வெட்டுக்களின் மூலம் பரையர்கள் பிரம்ம சூத்திரம் உட்பட சூத்திரங்கள் அறிந்த சூத்திர ராயர்கள்  என்பதும் மேலும் இவர்கள் பூசகர்களாக இருந்துள்ளனர் என்பதும் தெளிவாகின்றது.

மருத்துவம்

       தென் இந்திய குலங்களும் குடிகளும் என்ற நூலில் கிளைட்டன் என்பவர் பிராமண பெண் ஒருவர் பறையரின் கோவிலுக்கு சென்று தன் பிள்ளையை குணப்படுத்த வேண்டியதாகவும் அங்கு பறையன் மந்திரங்கள் சொல்லியதாகவும் குறிப்பிடுகின்றார். அயோத்தி தாச பண்டிதர் போன்றோர் சித்த மருத்துவர்களாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதது. இதன் மூலம் பறையர்கள் மருத்துவம் பார்த்து வந்தனர் என்பதை அறிந்து கொள்ளலாம்.


காவல்

        திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்தில் உள்ள சங்கரநயினார் ஆலய தல வரலாறு காவற்பறையனைப்பற்றி குறிப்பிடுகின்றது. சங்க நயினார் ஆலயம் கட்டுவதற்க்கு முன்பு அங்கு காவற்பறையன் என்பவன் புன்செய் நிலத்தை பாதுகாத்து வந்த வேளையில் ஒரு புற்றை இடிக்கையில் அதில் இருந்து லிங்கமும் பாம்பும் வந்ததாகவும், இச்செய்தியை மணலூரில் ஆட்சி செய்து வந்த உக்கிரப்பாண்டியனிடம் சொல்ல உக்கிரப்பாண்டியன் இந்த ஆலயத்தை கட்டுகின்றார். காவற்பறையனை சிறப்பிக்கும் வகையில் இந்த ஆலயத்தில் காவல் பறையனுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.
சாக்கைப் பறையனார் என்பவர் தனக்கு கீழ் இருந்த சில வீரர்களுக்கு கட்டலை இட்டபதைப்பற்றி செங்கம் நடுகல் ஒன்று குறிப்பிடுகின்றது. இதன் மூலம் பரையர் ஒருவர் வீரர்களுக்கு கட்டளையிடும் பொறுப்பில் இருந்தமை தெரிகின்றது.


வெள்ளாளன்

      "வடபரிசார நாட்டுக் கொற்ற மங்கலத்திலிருக்கும் வெள்ளாழன் பையரில் பறையன் பறையனேன்" என்றும், "வடபரிசார நாட்டு இடிகரையிலிருக்கும் வெள்ளாழன் பையயரில் சடையன் நேரியான் பறையனேன்" என்றும், "வடபரிசார நாட்டிலிருக்கும் வெள்ளாழன் புல்லிகளில் பறையன் பறையனான நாட்டுக் காமுண்டனேன்" என்றும் கோயம்பத்தூர் பகுதியைச்சேர்ந்த கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன, இதன் மூலம் பரையர்கள் வெள்ளாளர்களாகவும், காமிண்டனாகவும்(கவுண்டர்) இருந்துள்ளமையை அறிந் கொள்ளலாம்..

மீன் வியாபாரம்

மடிவலை, வாளை வலை, சாளை வலை, சணவலை, போன்ற வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பவர்களுக்கு ஒரு நபருக்கு ஒரு பணம் என்றும், அம்மீனை வாங்கி விற்க்கும் வியாபாரியான சாம்பானுக்கு ஒரு பணம் என்றும் வரி வசூலிக்கப்படுவதாக இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது. எனில் 15ஆம் நூற்றாண்டில் கடலில் இருந்து பிடித்து வரப்படும் மீனை விற்ப்பனை செய்யும் வியாபாரியாக கன்னியாகுமரி சாம்பவர்கள் இருந்துள்ளனர்.



பறையர் உட்பிரிவுகள்

1881-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட "CENSUS OF BRITISH INDIA" என்ற நூலில் "வேட்டுவ பறையன்", "திகிழு பறையன்", "மொகச பறையன்", "குடிமி பறையன்", "அத்வைத பறையன்" உட்பட "தமிழ், தெலுங்கு, மலையாளம் பேசிய" 83 பரையர் உட்பிரிவுகளை குறிப்பிடுகின்றது.
1. அச்சக்காசினியூர் பறையன்
2. அத்வைத பறையன்
3. அய்யா பறையன்
4. அழக காட்டு பறையன்
5. அம்மக்கார பறையன்
6. அங்கல பறையன்
7. அங்கையன் பறையன்
8. பூபு பறையன்
9. சுண்ணாம்பு பறையன்
10. தேசாதி பறையன்
11. இசை பறையன்
12. ககிமல பறையன்
13. களத்து பறையன்
14. கிழகத்து பறையன்
15. கிழக்கத்தி பறையன்
16. கீர்த்திர பறையன்
17. கொடக பறையன்
18. கெங்க பறையன்
19. கொடிக்கார பறையன்
20. கொரச பறையன்
21. குடிகட்டு பறையன்
22. குடிமி பறையன்
23. குளத்தூர் பறையன்
24. மகு மடி பறையன்
25. மா பறையன்
26. மரவேதி பறையன்
27. மிங்க பறையன்
28. மொகச பறையன்
29. முங்கநாட்டு பறையன்
30. நர்மயக்க பறையன்
31. நெசவுக்கார பறையன்
32. பச்சவன் பறையன்
33. பஞ்சி பறையன்
34. பரமலை பறையன்
35. பறையன்
36. பறையக்காரன்
37. பறையாண்டி
38. பசதவை பறையன்
39. பெருசிக பறையன்
40. பொய்கார பறையன்
41. பொறக பறையன்
42. பொக்கி பறையன் கூலார்
43. பிரட்டுக்கார பறையன்
44. ரெகு பறையன்
45. சம்மல பறையன்
46. சர்க்கார் பறையன்
47. செம்மண் பறையன்
48. சங்கூதி பறையன்
49. சேரி பறையன்
50. சிதிகரி பறையன்
51. சுடு பறையன்
52. தங்கமன் கோல பறையன்
53. தங்கம் பறையன்
54. தங்கினிபத்த பறையன்
55. தட்டுகட்டு பறையன்
56. தென்கலார் பறையன்
57. தெவசி பறையன்
58. தங்கலால பறையன்
59. தரமாகிப் பறையன்
60. தாயம்பட்டு பறையன்
61. தீயன் பறையன்
62. தோப்பறையன்
63. தொப்பக்குளம் பறையன்
64. தொவந்தி பறையன்
65. திகிழு பறையன்
66. உழு பறையன்
67. வைப்பிலி பறையன்
68. வலகரதி பறையன்
69. உறுமிக்கார பறையன்
70. உருயாதிததம் பறையன்
71. வலங்கநாட்டு பறையன்
72. வானு பறையன்
73. வேட்டுவ பறையன்
74. விலழ பறையன்
75. உடும பறையன்

தெலுங்கு பேசிய பரையர்கள்

1. முகத பறையன்
2. புள்ளி பறையன்
3. வடுக பறையன்

மலையாளம் பேசிய பரையர்கள்

1. ஏட்டு பறையன்
2. மதராஸி பறையன்
3. முறம்குத்தி பறையன்
4. பறையாண்டி பண்டாரம்
5. வர பறையன்



பறையர்களில் பிரபலங்கள்

வரலாற்றுச் சிறப்பு மிக்கவர்கள்
நந்தனார் அல்லது "திருநாளைப் போவார் நாயனார்", தமிழ் சாது , 63 நாயன்மார்களில் ஒருவர்.

சமூக சிந்தனையாளர்கள்

⧭ அயோத்தி தாசர் பண்டிதர் (1845–1914), சாக்கிய புத்த சமூகத்தின் நிறுவனர்

⧭ இரட்டைமலை சீனிவாசன் (1860–1945), போராளி மற்றும் தமிழக                 அரசியல்வாதி

⧭ எம். சி. ராஜா (1883–1943), அரசியல்வாதி, போராளி.

⧭ ஜே. சிவசண்முகம் பிள்ளை (1901–1975),சென்னையின் முதல் மேயர், சுதந்திர இந்தியாவின் முதல் மெட்ராஸ் சட்டமன்றத்தின் முதல் சபாநாயகர்

⧭ என். சிவராஜ் (1892–1964), வழக்கறிஞர், அரசியல்வாதி, சென்னை நகர மேயராகவும் லோக் சபா உறுப்பினராகவும் இருந்தவர்

⧭ வைரன் டி.ராஜ், நிறுவனர், தலைவர் - நம்மவர் கழகம், மலேசியா
காம்ரேட் எம். செல்லமுத்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மாநில செயலாளர்.

⧭ கேப்டன். எஸ். கலியபெருமாள், பேராசிரியர், வரலாற்று ஆய்வாளர்.


அரசியல்வாதிகள்

⧭ வி. ஐ. முனுஸ்வாமி பிள்ளை, இந்திய தேசிய காங்கிரஸ், விவசாய மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சி. ராஜகோபாலச்சாரி அமைச்சரவை (1937–39).

⧭ பி. கக்கன், பொதுப்பணித்துறை, உள்துறை, விவசாயத்துறை அமைச்சர், அகில இந்திய காங்கிரஸ்.

⧭ மரகதம் சந்திரசேகர், இந்திய தேசிய காங்கிரஸ், திருவள்ளூர் தொகுதி மாநிலங்களவை உறுப்பினர். சுகாதாரத்துறை அமைச்சர் (1951–1957), உள்துறை (1962–1964), சமூக நலத்துறை (1964–1967), முன்னாள் இந்திய தேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் (1972).

⧭எம். ஜி. பண்டிதன், நிறுவனர், அதிபர் "இந்திய முற்போக்கு முன்னணி", "மலேசியன் இந்தியன் காங்கிரசின்" முன்னாள் துணை அதிபர் , தபா மாநிலங்களவை உறுப்பினர் , தொழில் துறை பாராளுமன்ற செயலாளர், மலேசியா .

⧭ முனைவர் தொல்.திருமாவளவன்,  மக்களவை உறுப்பினர் , தலைவர் - விடுதலை சிறுத்தைகள் கட்சி.

⧭ டி. ரவிக்குமார், மக்களவை உறுப்பினர், பொதுச் செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி .

⧭ பரிதி இளம்வழுதி, முன்னாள் தகவல் துறை அமைச்சர், தமிழ்நாடு.

⧭ யு. மதிவாணன், முன்னாள் பால் வளத்துறை அமைச்சர், தமிழ்நாடு.

⧭ டி. ராஜா, தேசிய செயலாளர், இந்திய பொதுவுடமைக் கட்சி
ஜி. பழனிசாமி, மாநில துணை செயலாளர், இந்திய பொதுவுடமைக் கட்சி


⧭ தலித் எழில்மலை, முன்னாள் மத்திய குடும்ப நலத்துறை அமைச்சர், இந்தியா.

⧭ பாக்கியராஜ், தலைவர் - மக்கள் தேசம் கட்சி

⧭ அ. ராசா, முன்னாள் தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர், தி.மு.க

⧭ பூவை மூர்த்தியார், ஜெகன் மூர்த்தியார், புரட்சி பாரதம் கட்சி

கலைஞர்கள், நடிகர்

⧭ வெங்கட் பிரபு, தமிழ் சினிமா இயக்குனர்
⧭ ஜெய், நடிகர்
⧭ பிரேம்ஜி அமரன், நடிகர்
⧭ நடிகர் லிவிங்க்ஸ்டன்,
⧭ நடிகர் லாரன்ஸ் ராகவேந்திரா, நடன இயக்குனர்,
⧭ நடிகர் மிஷ்கின், இயக்குனர்
⧭ புவியரசன், புகைப்பட கலைஞர், பாடலாசிரியர்.,
⧭ இயக்குநர் பா.ரஞ்ஜித்.

இசைத் துறை

⧭ இளையராஜா — "சிம்போனி" இசையமைப்பாளர்
⧭ தேவா இசையமைப்பாளர்
⧭ கங்கை அமரன், இயக்குனர், பாடலாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர்
⧭ யுவன் ஷங்கர் ராஜா — இசையமைப்பாளர்
⧭ சிவமணி — இசைக்கலைஞர்
⧭ கார்த்திக் ராஜா - இசையமைப்பாளர்
⧭ சிறீகாந்த் தேவா - இசையமைப்பாளர்
⧭ சபேஷ் முரளி- இசையமைப்பாளர்
⧭ பவதாரிணி - தேசிய விருது பெற்ற பாடகி

கல்வியாளர்கள்

⧭ கிரிஸ்டி ஜெயரத்தினம் எலியேசர்.

இலக்கியம்

⧭ மீனா கந்தசாமி, சென்னையைச் சேர்ந்த ஆங்கில எழுத்தாளர், புலவர், சமூகப் போராளி
⧭ சுகிர்தராணி கவிஞர், "இரவு மிருகம்" இவரின் முக்கியத் தொகுப்பு
⧭ ஜே. பி. சாணக்யா, சிறுகதையாசிரியர், கதா விருது பெற்றவர். கனவுப்புத்தகம் இவரின் முக்கியத் தொகுப்பு. ஆகச்சிறந்த தமிழ்ச் சிறுகதையாசிரியருள் ஒருவர்
⧭ கே. ஏ. குணசேகரன், கல்வியாளர்
⧭ ஜோதிராணி, கல்வியாளர்
⧭ ஸ்டாலின் ராஜாங்கம், கட்டுரையாளர்
⧭ ராஜ் கௌதமன், கட்டுரையாளர்
⧭ யாழன் ஆதி, கவிஞர்

வெள்ளி, 9 ஜூன், 2017

திராவிடநாடு கோரிக்கையை எழுப்புவர்களும் அதனை நம்புபவர்களும் கி.ஆ.பெ.வி. தந்த 30 பதில்களைப் படியுங்கள்


திராவிடநாடு கோரிக்கையை எழுப்புவர்களும் அதனை நம்புபவர்களும் கி.ஆ.பெ.வி. தந்த  30 பதில்களைப் படியுங்கள்!

1. தமிழ் என்பது ஒரு நல்ல தமிழ்ச் சொல். திராவிடம் என்பது அழுத்தமான வடமொழிச் சொல்

2. திராவிடம் என்ற சொல்லே திரிந்து “தமிழ்” என்று ஆயிற்று என்பது தமிழ் பற்றாளர் சிலரது கூற்று. இது அவரவர் மொழிப்பற்றை காட்டுமேயன்றி உண்மையைக் காட்டாது-

3. பழைய சங்க காலத்திய தமிழ் நூல்கள் அனைத்திலும் “திராவிட” என்ற சொல் ஒன்று கூட இல்லை.

4. சங்க காலத்திற்குப் பின்னும், 700 ஆண்டுகளுக்கு முன்னும் தோன்றிய இன்றும் இருக்கும் எந்த நூலிலும் திராவிடம் என்ற சொல் இல்லை.

5.  650 ஆண்டுகளுக்குப் பிற்பட்ட வரலாற்று காலத்தில் தான் வரலாறு எழுதிய ஆங்கிலேயரும், ஆங்கிலேயரைப் பின்பற்றி ஆரியரும் தமிழரை தமிழ் நாட்டை தமிழ்மொழியை மட்டுமல்லாமல் தமிழ் இனத்தையும், தமிழ் இனத்தின் மொழிகளையும் சேர்த்து “திராவிடம் ” எனக் குறிப்பிட்டு இருக்கின்றனர்.

6. தமிழருக்கும், தமிழ் இனத்தாருக்கும் திராவிடர் எனப் பெயரிட்டு வரலாறு எழுதிய ஆங்கிலேயருக்கு அறிவித்தவர்கள் அக்காலத்தில் நன்கு கற்றறிந்த ஆரியர்களே!

7. “தமிழ்” என்ற தமிழ்ச் சொல்லிற்கு தம்மிடத்தில்  “ழ்”  ஐ உடையது. (தம்+ழ்) என்பது பொருள். “திராவிடம்” என்ற வடசொல்லிற்கு குறுகிய விடம் என்றும் திராவிடர் என்ற சொல்லிற்கு குறுகியவர்-அல்லது குறுகிய புத்தியுள்ளவர் என்றும் பொருள்.( திராவி- அற்பம், குறுகல் )

8. தமிழ்நாடு என்பது தமிழ்நாட்டை மட்டுமே குறிக்கும் – திராவிட நாடு என்பது ஆந்திரா, மலையாளம், கன்னடம், துளுவ நாடுகளையும் சேர்த்துக் குறிக்கும்.

9. தமிழ்நாடு என்று ஒரு தனி நாடும்; தமிழ் மொழி என்று ஒரு தனி மொழியும் உண்டு. திராவிட நாடு என்று ஒரு தனி நாடும், திராவிட மொழி என்று ஒரு தனி மொழியும் இல்லை.

10. தமிழ்நாடு , தமிழ் மொழி எனக் கூறலாம்- ஆனால் திராவிட நாடு, திராவிட மொழி எனக் கூற இயலாது. திராவிட நாடுகள், திராவிட மொழிகள் என்றே கூறியாக வேண்டும்.

11. தமிழ்நாட்டு எல்லை வரையறுத்துக் கூறப்பட்டிருக்கிற ஒன்று. திராவிட நாட்டின் எல்லை இதுவரை எவராலும் வரையறுத்து கூறப்படாத ஒன்று. ஒரு நாள் இந்திய மலை வரையில், மற்றொரு நாள் அசாம் வரையில், வேறொரு நாள் இந்தியா முழுவதுவமே “திராவிட நாடு” கூறப்பட்டதும் உண்டு..

12. தமிழ் என்றால் திராவிடம் தான், திராவிடம் என்றாலும் தமிழ் தான், தமிழர் என்றால் திராவிடர் தான், திராவிடர் என்றாலும்  தமிழர் தான், தமிழ்நாடு என்றால் திராவிடநாடு தான். திராவிட நாடு என்றாலும் தமிழ்நாடு தான் “அந்தக் கருத்தில்தான் அப்படிச் சொல்லப்பட்டு வருகிறது” என்பதில் புரட்டு இருக்குமே தவிர உண்மை இருக்காது.

13. தமிழர் என்று எழுதி (திராவிடர் ) என்று கூட்டுக்குள் போடுவதும், தமிழ்நாடு என்று எழுதி (திராவிட நாடு ) என்று கூட்டுக்குள் போடுவதும், பிறகு திராவிடர் ( தமிழர்) என்று எழுதி கூட்டுக்குள் போடுவதும் , திராவிட நாடு ( தமிழ் நாடு) என்று எழுதி கூட்டுக்குள் போடுவதும் தவறான எழுத்தாகுமேயன்றி நேர்மையான எழுத்தாகாது.

14. தமிழ்நாட்டைத் தாய்நாடாகக் கொண்டு, தமிழ்மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு, தமிழ்ப் பண்பை தாய்ப்பண்பாகக் கொண்டு வாழ்பவர் அனைவரும் தமிழரே என்பது ஜாதி பேதமற்று உறுதி செய்யப்பட்டு விட்டது. ஆனால் திராவிடர் யார்? என்பது இன்னும் உறுதி செய்யப்படாமலே இருந்து வருகிறது. ஒரு நாள் மகாராஷ்டிரரும் திராவிடர் என்றும், மற்றொரு நாள் வங்காளிகளும் திராவிடர் என்றும், வேறொரு நாள் “ஆரியர் தவிர அனைவரும் திராவிடரே” என்றும் சொல்லப்பட்டு வந்திருக்கிறது.

15. தமிழ்மொழி ஒன்று மட்டுமே தனித்து நிற்க எழுதப்பேச, இயங்க ஆற்றலுடையது. இத்தகைய ஆற்றல் தமிழ் ஒழிந்த திராவிட மொழிகளில் எதற்கும் இன்று இல்லை.

16. திராவிட மொழிகள் பலவும், வடமொழியோடு சேரச் சேர பெருமையடைகின்றன! தமிழ்மொழி ஒன்று மட்டுமே வடமொழியிலிருந்து விலக, விலக பெருமையடைகிறது!

17. தமிழ்நாடு ஒன்று மட்டுமே பிரிந்து வாழும் தகுதியையும் சிறப்பையும் பிற அமைப்பையும் உடையது. திராவிட நாடுகளில் எதுவும் இத்தகைய நிலையில் இன்று இல்லை.

18. தமிழ் மக்களுக்கு மட்டுமே வட நாட்டிலிருந்து பிரிந்து தனித்து வாழ வேண்டும் என்ற உணர்ச்சி இருந்து வருகிறது. இத்தகைய உணர்ச்சியில் சிறிதளவாவது பிற திராவிட மக்களிற் பலரிடத்திலும் காண முடியவில்லை.

19. “தமிழ்நாடு தமிழருக்கே” என்பது தமிழ்மக்களின் பிறப்புரிமையாக இருக்கும். “திராவிடநாடு திராவிடருக்கே” என்பதுவேண்டாதவர்களுக்கும், விரும்பாதவர்களுக்கும் சேர்ந்து கூப்பாடு போடுவதாக இருக்கும்.

20. திராவிட நாட்டினர்களிற் பலர் தமிழ் மக்களில் எவரையும் அறிவாளி என்று ஒப்பியதுமில்லை; ஒப்புவதுமில்லை. தமிழர்களில் எவரையும் தங்களின் தலைவனாக ஏற்றுக்கொண்டதுமில்லை. ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை.

21. திராவிட மக்களிற் பலரும் தமிழர்களிடமிருந்து பிரிந்து வாழவே ஆசைப்படுகிறார்கள். குறை கூறுகிறார்கள். வைகிறார்கள். மனிதனை மனிதனாகக்கூட மதிப்பதில்லை. இக்கூற்றை மெய்ப்பிக்க திராவிடத்தின் தலைவர் என்று தன்னை சொல்லிக் கொள்ளுகிறவர் வீர உணர்ச்சியுள்ள தமிழ்நாட்டு இளைஞர்களே “அதுகள்; இதுகள்” என அஃறிணைப்படுத்தி வைதும் செல்லுமிடமெல்லாம் தமிழ்நாட்டுத் தலைவர்களை, அறிஞர்களை இழிவுபடுத்தி வைவதுமே போதுமான சான்றாக இருந்து வருகிறது. இதனைப் பார்க்கும்போது திராவிடம் என்பதே தமிழ்ப் பகைவர் பேச்சாக இருக்குமோ என்ற ஐயம் உண்டாகிறது.

22. 10 ஆண்டுகளாக திராவிடப் பேச்சு, பிரச்சாரம், பத்திரிகை, கிளை அமைப்பு, பண வசூல், சுற்றுப் பிராயணம், கமிட்டி, தொண்டர்கள், உண்டியல்கள், ஆகிய 9-உம் தமிழ்நாட்டில் மட்டுமே நடைபெற்று வருவதால் அதை தமிழ்நாட்டுக் கழகம் எனச் சொன்னாலும் சொல்லலாமே ஒழிய திராவிட நாட்டுக் கழகம் எனச் சொல்லுவது உண்மைக்கு மாறானதாகும்.

23. தமிழ் நாட்டிற்குள்ளாக திராவிடம் பேசுவது, தமிழ் இளைஞர்களின் தமிழ்ப்பற்றை, தமிழ் நாட்டுப் பற்றை, வீர உணர்ச்சியை வேண்டுமென்றே வீணாக்கி, பாழ்படுத்துவதாக இருந்து வரும்.

24. காலம் செல்லச் செல்ல திராவிட நாடுகளுக்கும் சென்று, அங்கும் பிரச்சாரம் செய்து அவர்களுக்கும் உணர்ச்சி ஊட்டி விடலாம் என்று எவரேனும் கூறுவதானால், அவ்வாறு கூறுகிற அவர் தமது ஆற்றலைத் தவறாகக் கருதுகிறவர் என முடிவு கட்டி விட வேண்டும்.

25. திராவிடர் எவரும் விரும்பாத திராவிட நாட்டை, திராவிடர் எவரும் உறுப்பினரில்லாத திராவிடர் கழகத்தை, திராவிடர் எவரும் ஒப்புக் கொள்ளாத திராவிடத் தலைவர், அரசியல் கழகமல்லாத ஒரு கழகத்தைக் கொண்டு  “அடைந்தே தீருவேன் திராவிட நாடு”  என்றால் அது இல்லாத ஊருக்கு, போகாத பாதையை, தெரியாத மனிதனிடம், புரியாத விதமாகப் பேசிக் கொண்டிருப்பது போலவே இருக்கும்.

26. அப்படியே பிரிவதாக இருந்தாலும் திராவிடக் கூட்டாட்சியில் தமிழ் மொழி அரசியல் மொழியாக இருக்குமா? அதனை திராவிட நாட்டார்கள் அனைவரும் ஒப்புவரா? என்பதையும் ஒப்பிட்டுப் பார்ப்பது நலமாகும்.

27. அப்படியே ஒப்பினாலும் கூட்டாட்சியில் உறுப்பினராக இருக்கும் வடமொழிப்பற்றும், வடசார்பும் உள்ள ஆந்திரர், மலையாளி, கன்னடியர், துளுவர் ஆகிய நால்வருக்கும் எதிராக தமிழ் மொழிப்பற்றும் சார்பும் உள்ள ஒருவன் இருந்து தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் நலன்களை வளர்க்க முடியுமா? முடியாவிட்டாலும் பாதுகாக்கவாவது முடியுமா? என்பதும் எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்றாகும்-

28. அவ்விதமே முடிந்தாலும் அந்தக் கூட்டாட்சிக்கு உறுப்பினனாக தமிழ் நாட்டின் தலைவனைத் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டாமா? தேர்ந்தெடுக்க தமிழ்நாடு முழுவதும் அடங்கிய ஓர் அமைப்பு வேண்டாமா? அத்தகைய அமைப்பு திராவிடத் தலைவருக்கு போட்டியாகவும், அமைப்பை அமைக்கத் தொண்டு செய்பவர்கள் பித்தலாட்டக்காரர்களாக, அயோக்கியர்களாகத் தோன்றவும் காரணம் என்ன? என்பவைகள் அரசியல் அறிஞர்களால் ஆராய வேண்டியவைகளாகும்.

29. தமிழ் வாழ்க என்று கூறி தமிழ்நாடு தமிழருக்கே என அலறி தமிழர் கழகத்தைத் தோற்றுவித்துத் தமிழர் மாநாடுகளைக் கூட்டி, தமிழ்க்கொடியை உயர்த்தி, இந்தி எதிர்ப்பை நடத்தி, பண முடிப்புகளைப் பெற்றுக் கொண்ட பிறகு, அவைகளை அடியோடு ஒழித்துவிட்ட திராவிடம் வளர்க எனக் கூறி, திராவிட நாடு திராவிடருக்கே என அலறி திராவிட கழகத்தைத் தோற்றுவித்து, திராவிட மாநாடுகளை நடத்தி, திராவிடக் கொடிகளை உயர்த்தி திராவிடர்க்கு போராட வேண்டிய அவசியமும், அவசரமும் என்ன? என்பதற்கு திராவிடம் இதுவரை பதிற்கூறவேயில்லை. தமிழ் வேறு, திராவிடம் வேறு என்பதற்கும், இரண்டும் ஒன்றல்ல என்பதற்கும் இதுவும் போதுமான சான்றாகும்.

30. தமிழ்ப் பெரியார் என்றும், தமிழ்த் தாத்தா என்றும், தமிழ்நாட்டுத் தலைவர் என்றும், தமிழ்நாட்டு தனிப்பெருந்தலைவர் என்றும், தமிழ் மக்கள் அனைவரும் இந்தி எதிர்ப்புக் காலத்தில் அழைத்தும், சொல்லியும் வரலாற்றில் எழுதியும் கூட அவர் தன்னை கன்னடியர் என்று நினைக்கிற நினைப்பும், முனைப்புமே இம்மாற்றத்திற்குத் காரணம் என்பதை அவர் இன்றுவரை மறுக்க முன்வராததால், அது உறுதி செய்யப்பட  வேண்டியதேயாகும்.

இதுகாறுங் கூறியவைகளைக் கண்டு

தமிழ் எது?  திராவிடம் எது?

தமிழர் யார்?  திராவிடர் யார்?

தமிழ்நாடு எது? திராவிட நாடு எது?

தமிழ் மக்களுக்கு வேண்டுவது எது?

என்ற இவையும், இவை போன்ற பிறவும் ஒருவாறு விளங்கியிருக்கும் என எண்ணி உண்மையை விளக்க இவை போதும் என நம்பி இத்தோடு நிறுத்துகிறோம்.

நன்றி:”,தமிழர் நாடு” இதழ்,  1 மார்கழி 1980 (16.12.1949)

பேரா.கோ.வீரமணி தொகுத்த “முத்தமிழ்க் காவலர்” கி.ஆ.பெ.விசுவநாதம் நூலிருந்து.