சனி, 30 செப்டம்பர், 2017

பறையர் குல வீரவேங்கை குயிலி சாம்பான்

பறையர் குல வீரவேங்கை குயிலி சாம்பான்








வீரமங்கை குயிலி பதினெட்டாம் நூற்றாண்டில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் போராளி ஆவார்.

மண் விடுதலையும் பெண் விடுதலையும் தான் உண்மையான விடுதலை அதை தவிர்த்து நாமும் நாடும் விடுதலையடைந்து விட்டதாக நாம் பிதற்றிக்கொள்வது அபத்தமாகவே இருக்கிறது.


 இலட்சியத்திற்கான பயணத்தில் எதிரிகளை வீழ்த்துவதற்காகவோ, அல்லது சுரணையற்ற சமூகத்தில் ஒரு எழுச்சியை ஏற்படுத்துவதற்காகவோ, ஒருவர் தம் உயிரையே அர்ப்பணிப்பாரெனில் அவரைத் தற்கொலைப்படைப் போராளி என்கிறோம்.
தற்கொலைப் போராளிகளின் தொடக்கம் இரண்டாம் உலகப் போரில்தான் என்கிறது எழுதப்பட்ட வரலாறு. ஜெர்மனிக்கும், ஜப்பானுக்கும் இடையே நீர்மூழ்கிக் கப்பலில் நடைபெற்ற யுத்தத்தில் ஜப்பானிய வீரர்களின் தற்கொலைப் போராட்டமே இதற்கான தொடக்கமாகக் கருதப்படுகிறது.
ஆனால் இரண்டாம் உலகப்போர் நடைபெறுவதற்கு 150 ஆண்டுகளுக்கு முன்னரே, பிரிட்டிஷாரை எதிர்த்துத் தமிழ் மண்ணில் நடைபெற்ற போர்க்களத்தில்தான் முதன்முதலாக ‘தற்கொலைப் போராளி‘ உருவானார் என்பது நாம் அறியாதது. அந்த போராளி வீரமங்கையின் பெயர்தான் குயிலி.





1776ம் ஆண்டு வேலுநாச்சியார், வெள்ளையர் எதிர்ப்பில் தம் கணவர், சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்து வடுகநாதரைப் பறிகொடுத்து, எட்டாண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த காலம்.
அப்போது வேலுநாச்சியார் விருப்பாட்சி என்ற ஊரில் தங்கியிருந்தார்.
குயிலி. அதுதான் அவள் பெயர்.
வயது பதினெட்டு. பிறந்த மண்ணையும், வீரத்தாய் வேலு நாச்சியாரையும் உயிரென மதிப்பவள்.
வேலுநாச்சியாரின் சிலம்பு வாத்தியார் வெற்றிவேல்..ஒருநாள். குயிலியிடம் வந்தார்,
“குயிலி! எனக்கொரு உதவி செய்வாயா?”
“சொல்லுங்கள் ஐயா!”
“நீ உன் ஊரான பாசாங்கரைக்கு செல்லும்போது இந்தக் கடிதத்தை, சிவகங்கை அரண்மனைக்கருகில் இருக்கும் வீட்டில், மல்லாரிராயன் என்பவனிடம் சேர்ப்பிக்க வேண்டும். சேர்த்து விடுவாயா…?”
“சரி.” என்றபடி, குயிலி வாங்கிக் கொண்டாள்.
அன்றிரவு.
குயிலி. குத்தீட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு சிலம்பு வாத்தியாரின் இருப்பிடம் விரைந்தார். அடுத்த நிமிடம் சிலம்பு வாத்தியாரின் குடிசையிலிருந்து அலறல் சத்தம். இரத்த வெள்ளத்தில் மிதந்துகிடந்த சிலம்புவாத்தியாரின் உடலையும் அருகே ஒரு கையில் குத்தீட்டியோடும் மறு கையில் சிலம்பு வாத்தியாரின் கடிதத்தோடும் கண்கள் சிவக்க தலைவிரி கோலமாக நின்ற குயிலியையும் வேலு நாச்சியார் உள்ளிட்ட அனைவரும் கண்டார்கள்.
குயிலி ஓடிவந்து அவர் காலில் விழுந்து கதறியழுதாள். கடிதத்தை நீட்டினாள். கடிதத்தை வாங்கிப் படித்த வேலுநாச்சியாரின் முகம் உணர்ச்சியில் துடித்தது. கடிதத்தில், வெற்றிவேல் வாத்தியார் மல்லாரிராயன் என்பவனுக்கு வேலு நாச்சியார் குறித்த சில விஷயங்களை எழுதியிருந்தார்.
நம்பிக்கைக்குரியவராக இருந்த சிலம்பு வாத்தியார் தன் காலைச் சுற்றியிருந்த நச்சுப்பாம்பு என அறிந்து வேலுநாச்சியார் அதிர்ச்சியுற்றார். தன் மீதும் நாட்டின் மீதும் கொண்ட பற்றின் காரணமாக ஒரு பெண் துணிச்சலாக மேற்கொண்ட செயலைக் கண்டு அகமகிழ்ந்தார். கூட்டத்தில் பத்தோடு பதினொன்றாகப் பார்க்கப்பட்ட குயிலி அன்றிலிருந்து இராணி வேலுநாச்சியாரின் மெய்க் காப்பாளரானார்.
குயிலி பட்டியலினத்தில்  பறையர் பேரினத்தில் உள்ள சாம்பவர் என்னும் வகுப்பைச் சேர்ந்தவள். இதைக் காரணம் காட்டி ஒரு கும்பல், குயிலியின் மேல் துவேஷத்தை வளர்க்க முனைந்தது. வேலு நாச்சியாரோ குயிலிக்கு தம் ஆதரவுக் கரத்தை இரும்பு அரணாக வைத்து காத்து வந்தார்.
ஒருநாள். நள்ளிரவு.
வேலு நாச்சியார் மஞ்சத்தில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். குயிலி தூக்கம் வராமல் அங்குமிங்கும் நடைபயின்று கொண்டிருந்தாள். வெளியே காலடிச் சத்தம் கேட்டு உஷாரானாள். மறைந்து நின்று கொண்டாள். ஒரு உருவம் சாளரத்தின் வழியே குதித்து இறங்கியது. அங்குமிங்கும் பார்த்தபடி வேலுநாச்சியாரின் மஞ்சத்தினருகே மெதுவாகப் போனது. கையை ஓங்கி, கத்தியால் வேலு நாச்சியாரை குத்த முனைய மறைந்திருந்த குயிலி ஓடி வந்து தன் கைகளால் அந்தக் கத்தியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். அந்த உருவம் திமிற, கத்தியில் வெட்டுப்பட்ட குயிலியின் கரங்களில் ரத்தம் ஆறாக ஓடியது. சத்தம் கேட்டு வேலு நாச்சியார் எழுந்து கொண்டார். அந்தக் கயவன் சடாரெனத் துள்ளி, சாளரத்தின் வழியே குதித்து ஓடிப் போனான். மயங்கிச்சரிய இருந்த குயிலியை தாங்கிப் பிடித்துக் கொண்டார் வேலுநாச்சியார்.

அன்று முதல் குயிலி,

வேலுநாச்சியாரின் நெஞ்சில் பன்மடங்கு உயர்ந்தார். மெய்க்காப்பாளராக விளங்கிய குயிலி பெண்கள் படைக்குத் தளபதியாக்கப்பட்டார்.

 


நாட்கள் கடந்தன. 8 ஆண்டுகளுக்குப் பிறகு போருக்குத் தேவையான தளவாடங்கள் வந்து சேர்ந்தன. பன்னிரண்டு பீரங்கி வண்டிகள், நூற்றுக் கணக்கான துப்பாக்கிகள் திப்பு சுல்தானால் வேலு நாச்சியாரிடம் ஒப்படைக்கப்பட்டன. 1780ம் ஆண்டு ஐப்பசி மாதம் 5ம் நாள் விருப்பாச்சி பாளையத்திலிருந்து சிவகங்கையை நோக்கி வேலு நாச்சியாரின் படை புறப்பட்டது. உடையாள் பெண்கள் படைக்குத் தலைமையேற்று குயிலி கம்பீரமாக வந்து கொண்டிருந்தார்.
முத்துவடுகநாதரின் படுகொலையில் பெரும்பங்கு வகித்த மல்லாரி ராயன், முதலாவதாக வேலுநாச்சியாரின் படையை மதுரை கோச்சடையில் எதிர்த்து நின்றான். ஒரு மணிநேரப் போரிலேயே மல்லாரி ராயன் குத்திக் கொலை செய்யப்பட்டான். ஆங்கிலத் தளபதி ஜோசப் சுமித் காளையார் கோவிலில் வேலுநாச்சியாரின் படையை எதிர்கொண்டான். அங்கும் தமிழர் படை வெற்றிக்கொடி நாட்டியது. ஆங்கிலப் படைகள் புறமுதுகிட்டு ஓடின.
வேலுநாச்சியாரின் படைகள் சிவகங்கைச் சீமையில் வெற்றி முழக்கத்துடன் நுழைந்தன. ஆனால் அங்குதான் யாரும் எதிர்பாராத ஆபத்து காத்துக்கொண்டிருந்தது.
தனது நயவஞ்சகத்தால் மறைந்திருந்து வேலு நாச்சியாரின் கணவரது உயிரைப் பறித்த கொடுங்கோலன் ஆங்கிலத் தளபதி பாஞ்சோர் காளையார் கோவிலிலிருந்து சிவகங்கை அரண்மனை வரையிலும் அடிக்கு ஒரு போர் வீரனை நிறுத்தி யிருந்தான். அனைவரது கைகளும் துப்பாக்கி ஏந்தி யிருந்தன. பீரங்கிகளும் அரண்மனையைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்தன. ஆயிரக் கணக்கான துப்பாக்கிகளும் வெடிபொருட்களும் அரண்மனைக் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
என்னதான் வீரமறவர்கள் வேலுநாச்சியாரின் படையில் இடம்பெற்றிருந்தாலும் ஆங்கிலேயரின் நவீன ஆயுதங்கள் மிகப்பெரிய சவாலாக இருந்தன. விருப்பாச்சியிலிருந்து தொடர் வெற்றிகளைக் குவித்து வந்த வேலுநாச்சியாருக்கு இறுதிப் போரில் தோற்றுவிட்டால் என்ன ஆவது என நினைப்பதற்கே அச்சமாக இருந்தது. இருப்பினும் நம்பிக்கையைக் கைவிடவில்லை.
அந்த நேரம் அங்கே ஒரு தள்ளாத கிழவி ஒருத்தி வந்து கொண்டிருந்தாள்.
சபையின் நடுவே தடுமாறி நடந்து வந்த அவள், வேலுநாச்சியாரை வணங்கிவிட்டு, பேசத் தொடங்கினாள்.
“தளவாய் பெரிய மருது அவர்களே, இப்போது நவராத்திரி விழா நடந்து வருகிறது. நாளை மறுநாள் விஜயதசமி. அன்று சிவகங்கைக் கோட்டையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் கொலு வைக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்காக அன்று ஒருநாள் காலை மட்டும் மக்களுக்கு, அதுவும் பெண்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதைப் பயன்படுத்தி ராணியாரின் தலைமையில் பெண்கள் படை உள்ளே கோட்டைக்குள் புகுந்துவிடும். பிறகு என்ன? வெற்றி, நமது பக்கம்தான்.”
அவள் மூச்சுவிடாமல் சொல்ல, அத்தனை பேரின் கண்களும் வியப்பில் விரிந்தன.
பெரிய மருதுவின் சந்தேகப் பார்வையைக் கண்டதும் அந்தப் பெண் கடகடவென நகைத்தாள். “பேராண்டி பெரிய மருது, இப்போது என்னைத் தெரிகிறதா?” என்றபடியே மெல்ல தனது தலையில் கை வைத்து வெள்ளை முடியை விலக்கினாள். அந்த முடி, கையோடு வந்தது. குயிலி புன்னகை மின்ன நின்றிருந்தாள்.
ஆம், சிவகங்கைக் கோட்டையை உளவு பார்க்க ராணியின் உயிர்த்தோழி குயிலி மாறுவேடத்தில் சென்றாள் என்ற உண்மை வெளிச்சமிட்டு நின்றது.
“என்ன பெரிய மருது, உங்கள் சந்தேகம் தீர்ந்ததா? நாளை மறுநாள் நமது படைகள் போர்முரசு கொட்டட்டும், இந்த முறை ஒலிக்கும் முரசு, வெள்ளையரின் அடிமை விலங்கை ஒடித்து, விடுதலை வெளிச்சத்தைக் கொண்டுவரும் முரசாக ஒலிக்கட்டும்!” ஆணையிட்டுவிட்டு சென்றார் வேலுநாச்சியார்.
ராணி குறித்தது போல படைகள் இரண்டு பிரிவாகப் பிரிந்து, முரசறைந்து போர் முழக்கமிட்டுப் புறப்பட, ராணி வேலுநாச்சியாரின் தலைமையில் பெண்கள்படை சிவகங்கை நகருக்குள் புகுந்தது. அம்மனுக்கு சாத்தி வழிபட அவர்கள் கையில் பூமாலைகளோடு அணிவகுத்தனர்.
பூமாலைக்குள் கத்தியும், வளரியும் பதுங்கி இருந்தது பரங்கியருக்குத் தெரியாது. வேலுநாச்சியாரும் தனது ஆபரணங்களை எல்லாம் களைந்துவிட்டு சாதாரணப் பெண்போல மாறுவேடத்தில் கோயிலுக்குள் புகுந்தார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவரோடு கோட்டைக்குள் இருந்து வெளியேறிய பிறகு, இன்று தான் மட்டும் தனியே மாறுவேடத்தில் வரவேண்டி வந்துவிட்டதே என்றி எண்ணி வேலு நாச்சியார் ஒரு கணம் கலங்கினார். ஆனால், ஒரே நொடியில் அந்தக் கலக்கம் காலாவதியானது. “எனது கணவரை மாய்த்து நாட்டை அடிமைப்படுத்திய நயவஞ்சகரை ஒழிப்பேன். விடுதலைச் சுடரை நாடு முழுக்க விதைப்பேன்!” என்ற வீரசபதம் நினைவில் புகுந்தது.
அவரது கண்கள் கோட்டையின் ஒவ்வொரு பகுதியையும் அலச ஆரம்பித்தது. விஜயதசமி என்பதால் ஆயுதங்கள் அனைத்தையும் கோட்டையின் நில முற்றத்தில் வழிபாடு நடத்த குவித்து வைத்திருந்தனர். ஒரு சில வீரர்களின் கையில் மட்டுமே ஆயுதங்கள் இருந்தன.
ராணி கோட்டையை அளவெடுத்தது போலவே குயிலியின் கண்களும் அளவெடுத்தன. நிலா முற்றத்தில் குவிக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் கண்டதும், அவளது மனதில் ஒரு மின்னல் யோசனை தோன்றி மறைந்தது.
ஆனால், அந்த யோசனையை வெளியே சொன்னால் செயல்படுத்த அனுமதி கிடைக்காது என்பதை அறிந்திருந்த குயிலி, மெதுவாக ராணி வேலுநாச்சியாரைப் பிரிந்து கூட்டத்தோடு கலந்துகொண்டாள்.
அதே நேரத்தில் கோட்டையில் பூஜை முடிந்தது. அனைவரும் கோட்டையை விட்டு வெளியேற ஆரம்பித்தனர். பொதுமக்கள் கூட்டமும் மெதுவாக கலையத் தொடங்கியது. வேலுநாச்சியார் தனது போரைத் தொடங்க இதுவே தருணம் என்பதை உணர்ந்தார். அவரது கை மெல்ல தலைக்குமேல் உயர்ந்தது. மனத்திற்குள் ராஜராஜேஸ்வரியை வணங்கியபடியே, “வீரவேல்! வெற்றிவேல்!!” என்று விண்ணதிர முழங்கினாள்.
அந்த இடிக்குரல் அரண்மனையே கிடுகிடுக்கும் அளவிற்கு முழங்கியது. ராணியின் குரலோசையைக் கேட்டதும் பெண்கள் படை புயலாய்ச் சீறியது. புது வெள்ளமாய்ப் பாய்ந்தது. மந்திர வித்தைபோல பெண்களின் கைகளில் வாளும் வேலும் தோன்றின.
ஆயுதங்கள் அனைத்தையும் மின்னலெனச் சுழற்றி வெள்ளையர்களை சிவகங்கைப் பெண்கள் படை வெட்டிச்சாய்த்தது. இந்தக் காட்சியை மேல்மாடியில் நின்று பார்த்துக் கொண்டிருந்த ஆங்கிலேயன் பான்சோருக்கு இடிவிழுந்தது போலாயிற்று.
“சார்ஜ்!..” என்று பான்சோர் தொண்டை கிழியக் கத்தியபடியே, தனது இடுப்பில் இருந்த 2 கைத்துப்பாக்கிகளை எடுத்து சரமாரியாகச் சுட ஆரம்பித்தான். வெள்ளைச் சிப்பாய்கள் ஆயுதக் குவியலை நோக்கி ஓடிவர ஆரம்பித்தார்கள்.
வேலு நாச்சியார் பான்சோரைப் பிடிக்க மேல்மாடத்திற்குச் செல்வதற்குள் அங்கிருந்த யாரோ ஒரு பெண் தனது உடல் முழுக்க கொளுந்துவிட்டு எரியும் தீயோடு, “வீரவேல், வெற்றிவேல்” என்று, அண்டம் பொடிபடக் கத்தியபடியே ஆயுதக்கிடங்கை நோக்கி கீழே குதித்தாள்.




நிலா முற்றத்தில் இருந்த ஆயுதங்கள் அனைத்தும் வெடித்தும், தீ பிடித்தும் எரிந்தன.
ஆயுதக் குவியலில் பற்றிய தீயைக் கண்டதும் பான்சோரும், அவனது வீரர்களும் நிராயுதபாணியாகி பயந்து நின்றனர்.
பான்சோர் தப்பி ஓட முயன்றான். ஆனால் வேலுநாச்சியாரின் வீரவாள் அவனை வளைத்துப் பிடித்தது. தளபதி சரணடைந்தான். கோட்டை மீண்டும் ராணியின் கைக்கு வந்தது.
இதே நேரத்தில் பெரிய மருது வெற்றியோடு வந்தார். திருப்பத்தூர் கோட்டையை வென்ற சின்ன மருதுவும் தனது படைகளோடு வந்து சேர்ந்தார். வெற்றி முழக்கம் எங்கும் ஒலித்தது. ஆனால் வேலுநாச்சியாரின் கண்களோ தன் உயிரான தோழியும், இந்த வெற்றிக்கு வித்திட்ட பெண்கள் படை தளபதியுமான குயிலியைத் தேடியது.
குயிலி என்ன ஆனார்.
போர் தொடங்கிய போது குயிலின் எண்ணம் ஆயுதக் கிடங்கின் மேல் நின்றது. அப்போது அவள் எண்ணினாள், “நமது விடுதலைக்கான இறுதிப்போர் இது. இதில் நாம் தோல்வி அடைந்தால் இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் வெற்றி பெற முடியாது. நான் வெற்றிக்கு வழிகாட்ட ஒளியூட்டப் போகிறேன். என்று கூறியபடியே உடல் முழுவதும் நெய்யை ஊற்றிக்கொண்டு, கோயிலில் இருந்த எரியும் பந்தத்தோடு அரண்மனையின் உப்பரிகையை நோக்கிப் பறந்தாள்.

 அரண்மனை உப்பரிகையை அடைந்ததும் தீப்பந்தத்தால் தனது உடலில் தனக்குத்தானே தீவைத்துக்கொண்டு, அந்த ஆயுதக் குவியலில் குதித்து விட்டாள். வெள்ளையர்களை ஆயுதம் அற்றவர்களாக்கி தன் தலைவிக்கு வெற்றியை அள்ளித்தர, தன்னையே பலியிட்டுக்கொண்டாள்.
மானம் காக்கும் மறவர் சீமையின் விடுதலைக்காக குயிலி தன்னையே பலி கொடுத்தார் என்பதை அறிந்ததும் அந்தத் தியாக மறத்திக்காக வேலுநாச்சியாரின் வீர விழிகள் அருவியாய் மாறின. கண்ணீர் வெள்ளம் அவரது உடலை நனைத்தது.
அவர் மட்டுமா அழுதார்? குயிலிக்காக சிவகங்கைச் சீமையே அழுதது. குயிலி போன்ற தியாகச்சுடர்கள் தந்த ஒளியின் ஒட்டுமொத்தக் கூட்டுத்தொகைதான் இந்தியாவிற்கு விடுதலை வழிகாண வைத்தது. தங்கள் உடலையே எரிபொருளாக்கிய எத்தனையோ குயிலிகள் இன்னும் சரித்திரம் ஏறாமலேயே சருகாய்ப் போனார்கள்.

தமிழரின் வீரத்தை உலகிற்கு பறைசாற்றிய

 பறையர்

 குல வீரத்தாய் குயிலிக்காக தலைவணங்குகிறோம்....! நன்றி  குயிலி ப்ளாக்கர்.

வியாழன், 28 செப்டம்பர், 2017

சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை!



சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை!

கல்வியையும், தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்று சொல்லி நம்மை நமது பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முயற்சியில்லாமல் சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்த சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்து பெரிய படிப்பாளிகளாகிக் கொண்டு, நம்மை படிப்பு நுகர முடியாத மக்குகள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
முதலாவது சரஸ்வதி என்னும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால் அது பார்ப்பனர்களின் புராணக் கதைகளின் படியே மிக்க ஆபாசமானதாகும். அதாவது சரஸ்வதி என்கின்ற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்தில் இருந்து உண்டாக்கப்பட்ட பிறகு அவளுடைய அழகைக் கண்டு அந்த பிரம்மனாலேயே மோகிக்கப்பட்டு அவளைப் புணர அழைக்கையில் அவள் பிரம்மனை தகப்பன் என்று கருதி அதற்கு உடன்படாமல் பெண் மான் உரு எடுத்து ஓடவும், பிரம்மன் தானும் ஒரு ஆண் மான் வேடன் உருவெடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும், சிவன் வேடம் உருவெடுத்து ஆண் மானைக்கொல்லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் உயிர்ப்பிக்கச் செய்து, பிரம்மனுக்கு மனைவியாக சம்மதித்தாக சரஸ்வதி உற்பவக்கதை சொல்லுகிறது.
அதாவது தன்னை பெற்றெடுத்த தன் தகப்பனையே மணந்து கொண்டவள் என்று ஆகிறது. மற்றொரு விதத்தில் பிரம்மாவுக்கு பேத்தி என்று சொல்லப்படுகின்றது. அதாவது பிரம்மா ஒரு காலத்தில் ஊர்வசியின்மீது ஆசைப்பட்டபோது வெளியான இந்திரீயத்தை ஒரு குடத்தில் விட்டு வைக்க, அக்குடத்திலிருந்து அகத்தியன் வெளியாகி அவ்வகத்தியன் சரஸ்வதியைப் பெற்றான் என்று சொல்லப்படுகின்றது. இதனால் பிரம்மனுக்கு சரஸ்வதி மகன் வயிற்றுப் பேத்தி ஆகிறாள். எனவே, சரஸ்வதியின் பிறப்பும், வளர்ப்பும், நடவடிக்கையும் மேற்படி பார்ப்பனப் புராணப்படி மெத்த ஆபாசமும், ஒழுக்க ஈனமுமானதாகும்.
நிற்க, இந்த யோக்கியதையுடைய அம்மாளை எதற்காக மக்கள் பூஜை செய்கிறார்கள் என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான விஷயமாகும். அதாவது சரஸ்வதி வித்தைக்கு அதிபதியான தெய்வமாதலால் வித்தையின் பயன் தொழி லென்றும், தொழிலுக்கு ஆதாரமானது ஆயுதங்கள் என்றும் ஒரு நாளைக் குறித்துக்கொண்டு அந்த நாளை விடுமுறையாக்கி புஸ்தகங்களையும், ஆயுதங்களையும் வைத்து பூஜை செய்கிறார்கள். இந்த பூஜையில் அரசன் தனது ஆயுதங்களையும், வியாபாரி தனது கணக்குப் புத்தகங்கள், திராசு, படிக்கல், அளவு மரக்கால், படி, உழக்கு, பெட்டி முதலியவைகளையும், தொழிலாளிகள் தங்கள் தொழில் ஆயுதங்களையும், இயந்திர சாலைக்காரர்கள் தங்கள் இயந்திரங்களையும், மாணாக்கர்கள் புத்தகங்களையும், குழந்தைகள் பொம்மைகளையும், தாசிகள் தங்கள் ரவிக்கைகளையும், சீலைகளையும், நகைகளையும், வாத்தியார்கள் வாத்தியக் கருவிகளையும் மற்றும் இதுபோலவே ஒவ்வொருவர்களும் அவரவர்கள் லட்சியத்திற்கு ஆதாரமாக வைத்திருக்கும் சாமான்களை வைத்து பூஜை செய்கின்றார்கள். இதனால் அந்த தினத்தில் தொழில் நின்று அதனால் வரும் வரும்படிகளும் போய் பூஜை செலவு முதலிய ஆடம்பரங்களுக்காக தங்கள் கையில் இருக்கும் பணத்திலும் ஒரு பாகத்தை செலவு செய்தும், போதாவிட்டால் கடன் வாங்கியும் செலவு செய்வதைவிட யாதொரு நன்மையும் ஏற்படுவதாக சொல்லுவதற்கே இல்லாமல் இருக்கின்றது.
ஆயுதத்தை வைத்து பூஜை செய்து வந்த,- வருகின்ற அரசர்களெல்லாம் இன்றைய தினம் நமது நாட்டில் ஆயுதத்தை வைத்து பூஜை செய்யாத வெள்ளைக்கார அரசனுடைய துப்பாக்கி முனையில் மண்டி போட்டு சலாம் செய்துகொண்டு இஸ்பேட் ராஜாக்களாக இருந்து வருகின்றார்களே ஒழிய ஒரு அரசனாவது சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை ஆகிய பூஜையின் பலத்தால் தன் காலால் தான் தைரியமாய் நிற்பவர்களைக் காணோம்.
சரஸ்வதி பூஜை செய்யும் வியாபாரிகளில் ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக்குப் பயந்து பொய் கணக்கு எழுதாமலோ, தப்பு நிறை நிறுக்காமலோ, குறை அளவு அளக்காமலோ இருக்கிறார் என்று சொல்ல முடியாது. அதுபோலவே கைத் தொழிலாளிக்கும் தங்கள் ஆயுதங்களிடத்தில் வெகு பக்தியாய் அவைகளை கழுவி, விபூதி, சந்தனம், குங்குமப் பொட்டு முதலியவைகள் போட்டு விழுந்து கும்பிடுவார்களே தவிர ஒருவராவது நாணயமாய் நடந்துகொள்கின்றார்கள் என்றாவது அல்லது அவர்களுக்கு தாராளமாய் தொழில் கிடைக்கின்றது என்றாவது சொல்லுவதற்கு இல்லாமலே இருக்கின்றார்கள். அது போலவே புஸ்தகங்களையும், பென்சிலையும், கிழிந்த காகிதக் குப்பைகளையும், சந்தனப் பொட்டு போட்டு பூஜை செய்கின்றார்களே அல்லாமல் காலோ, கையோபட்டுவிட்டால் தொட்டு கண்ணில் ஒத்திக் கும்பிடுகின்றார்களே அல்லாமல் நமது நாட்டில் படித்த மக்கள் 100-க்கு 5 பேர்களுக்குள்ளாகவே இருந்து வருகின்றார்கள்.
இவ்வளவு ஆயுத பூஜை செய்தும், சரஸ்வதி பூஜை செய்தும், இவ்வளவு விரதங்கள் இருந்தும் நமது அரசர்கள் அடிமைகளாக இருக்கின்றார்கள், நமது வியாபாரிகள் நஷ்டமடைந்து கொண்டு வருகிறார்கள். நமது தொழிலாளர்கள் தொழிலில்லாமல் பிழைப்பைக் கருதி வேறு நாட்டிற்கு குடி போகின்றார்கள். நமது மக்கள் நூற்றுக்கு அய்ந்து பேரே படித்திருக்கிறார்கள். சரஸ்வதியின் ஜாதியைச் சேர்ந்த பெண்கள் ஆயிரத்திற்கு ஒன்பது பேரே படித்திருக்கிறார்கள்.
இதன் காரணம் என்ன?
நாம் செய்யும் பூஜைகளை சரஸ்வதி தெய்வம் அங்கீகரிக்கவில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத்திற்கும் இந்த விஷயங்களுக்கும் ஒன்றும் சம்பந்தமில்லையா? அல்லது சரஸ்வதி என்கின்ற ஒரு தெய்வமே பொய் கற்பனையா? என்பவையாகிய இம்மூன்றில் ஒரு காரணமாகத்தான் இருக்கவேண்டும்.
என்னைப் பொறுத்தவரையில் இவைகள் சுத்த முட்டாள்தனமான கொள்கை என்பதே எனது அபிப்பிராயம். வெள்ளைக்கார தேசத்தில் சரஸ்வதி என்கின்ற பேச்சோ, கல்வி தெய்வம் என்கின்ற எண்ணமோ சுத்தமாய் கிடையாது.
அன்றியும் நாம் காகிதத்தையும் எழுத்தையும் சரஸ்வதியாய் கருதி தொட்டுக் கண்ணில் ஒத்திக் கொண்டும், நமக்கு கல்வி இல்லை. ஆனால், வெள்ளைக்காரன் மல உபாதைக்குப் போனால் சரஸ்வதியைக் கொண்டே மலம் துடைத்தும், அவர்களில் நூற்றுக்கு நூறு ஆண்களும், நூற்றுக்கு அறுபது பெண்களும் படித்திருக்கிறார்கள். உண்மையிலேயே சரஸ்வதி என்று ஒரு தெய்வமிருந்திருக்குமானால் பூசை செய்பவர்களை தற்குறிகளாகவும் தன்னைக் கொண்டு மலம் துடைப்பவர்களை அபார சக்தி வாய்ந்த அறிவாளிகளாகவும், கல்வி மான்களாகவும் செய்யுமா என்பதைத் தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.
உண்மையிலேயே யுத்த ஆயுதம், கைத்தொழில் ஆயுதம், வியாபார ஆயுதம் ஆகியவைகளுக்கு உண்மையிலேயே சரஸ்வதி என்னும் தெய்வ அம்சமாயிருக்குமானால் அதை பூசை செய்யும் இந்த நாடு அடிமைப்பட்டும், தொழிலற்றும், வியாபார மற்றும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கவும், சரஸ்வதியை கனவிலும் கருதாததும் சரஸ்வதி பூசை செய்கின்றவர்களைப் பார்த்து முட்டாள்கள், அறிவிலிகள், காட்டுமிராண்டிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நாடு சுதந்திரத்துடனும் இருக்க முடியுமா என்பதையும் யோசித்துப் பாருங்கள். இந்தப் பூஜையின் மூலம் நமது முட்டாள்தனம் எவ்வளவு வெளியாகின்றது பாருங்கள்.
ராஜாக்கள் கொலுவிருப்பது, பொம்மைகள் கொலுவிருப்பது, சாமிகள் கொலுவிருப்பது, இதற்காக ஜனங்கள் பணம் செலவு செய்வது, பத்து லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு பொம்மைகள், சந்தனம், குங்குமம், கற்பூரம், சாம்பிராணி, கடலை, பொரி, சுண்டல், வடை, மேள வாத்தியம் வாழைக் கம்பம், பார்ப்பனர்களுக்கு தட்சணை, சமாராதனை, ஊர்விட்டு ஊர்போக ரயில் சார்ஜ் ஆகிய இவைகள் எவ்வளவு செலவாகின்றது என்பதை எண்ணிப் பாருங்கள். இவைகள் எல்லாம் யார் வீட்டுப் பணம்? தேசத்தின் செல்வமல்லவா என்றுதான் கேட்கின்றேன். ஒரு வருஷத்தில் இந்த ஒரு பூஜையில் இந்த நாட்டில் செலவாகும் பணமும், நேரமும் எத்தனை கோடி ரூபாய் பெறுமானது என்று கணக்குப் பார்த்தால் மற்ற பண்டிகை, உற்சவம், புண்ணிய தினம், அர்த்தமற்ற சடங்கு என்பவைகளின் மூலம் செலவாகும் தொகை சுலபத்தில் விளங்கி விடும். இதை எந்தப் பொருளாதார இந்திய தேசிய நிபுணர்களும் கணக்குப் பார்ப்பதே இல்லை.
(ஈரோடு உண்மை நாடுவோர் சங்கத்தில் தந்தை பெரியார் அவர்கள் பேசியது - 20.10.1929 குடிஅரசு இதழில் வெளியானது)

ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

#புஷ்கரம் என்றால் என்ன?



#புஷ்கரம் என்றால் என்ன?

காவேரி புஷ்கரம் என்று கூறி நீராட வரும்படி கூறுகிறார்களே,,, அதன் பின்னனி என்ன?

இந்தியாவில் மிக சிறப்பாக கொண்டாடப்படுவது புஷ்கரம் திருவிழா,,,,

அதற்கு ஒரு புராண கதை உண்டு,,,

நவக்கிரஹங்களில் ஒருவரான குருபகவான் பிரம்மனை நோக்கி கடும் தவம் செய்தார்.

அவரின் தவத்தை மெச்சிய பிரம்மன் தோன்றினார். குரு பகவானை நோக்கி "உனக்கு என்ன வேண்டும" என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த குருபகவான்," எனக்கு தங்களுடைய புஷ்கரம் தான் வேண்டும்" என்று கேட்டார்.

குரு பகவானின் விருப்பப்படியே தன்னிடமுள்ள புஷ்கரத்தை அவருக்கு அளிக்க ஒப்புக் கொண்டார் பிரம்மன். ஆனால் புஷ்கரம் பிரம்மனை விட்டுப் பிரிந்து குருவிடம் செல்ல மறுத்தது.

இதனால் தர்ம சங்கடமான பிரம்மன் புஷ்கரத்திற்கும் குரு பகவானுக்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்தினார்.

அதன்படி மேஷ ராசி முதல் மீன ராசி வரை 12 ராசிகளிலும் அந்தந்த ராசிக்கு உகந்த புண்ணிய நதிகளில் புஷ்கரம் இருக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி புஷ்கரம் மேஷம் ராசியில் (கங்கை நதியிலும்), ரிஷபம் ராசியில் (நர்மதை நதியிலும்), மிதுனம் ராசியில் (சரஸ்வதி நதியிலும்), கடகம் ராசியில் (யமுனை நதியிலும்), சிம்மம் ராசியில் (கோதாவரி நதியிலும்)

கன்னி ராசியின் போது (கிருஷ்ணா நதியிலும்), துலாம் ராசியில் (காவேரி நதியில்) விருச்சிக ராசியில் (தாமிரபரணி ஆற்றிலும்),

தனுசு ராசியின் போது (சிந்து நதியிலும்), மகரம் ராசியில் (துங்கபத்திரா ஆற்றிலும்), கும்பம் ராசியில் (பிரம்ம நதியிலும்), மீனம் ராசியில் (பிரணீதா ஆற்றிலும்)

என குருபகவான் எந்தெந்த ராசியில் பெயர்ச்சி செய்கிறாரோ அந்தந்த நேரத்தில் புஷ்கரம் அங்கு தங்கி இருக்கும்.

அப்போது பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன் முதலான முப்பது முக்கோடி  தேவர்கள் எல்லாம் இந்நதியில் தங்கியிருப்பார்கள் என்று உடன்படிக்கை செய்யப்பட்டது.

மேற்படி 12 நதிகளில் குரு பகவான் பிரவேசிக்கும் நேரத்தில் 12 நாட்கள் தொடர்ந்து நீராடுவது இந்தியாவில் உள்ள அனைத்து புனித நதிகளிலும் நீராடுவதற்கு சமம் என்று கூறப்படுகிறது.

இம்முறை குரு பகவான் துலா ராசியில் வரும் செப்டம்பர் 12 அன்று  பிரவேசிப்பதால் காவேரி ஆற்றில் புஷ்கரம் கொண்டாடப்படுகிறது.

மேலும் இம்முறை கொண்டாடப்படும் காவேரி புஸ்கரம் என்பது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் காவேரி மகா புஸ்கரம் ஆகும்....

அதனால் வரும் செப்டம்பர் 12 அன்று தொடங்கி செப்டம்பர்  24 அன்று காவேரி ஆதி புஷ்காரமாகவும். செப்டம்பர் 25 அன்று தொடங்கி அக்டோபர் 7 வரை  அந்திம புஸ்கரமாகவும் கொண்டப்படுகிறது.


கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் மாநிலத்தில் காவேரி புஷ்கரம் நடைபெறும் படித்துறைகள் வருமாறு:–
-----------------------------------------------------------
தலைக்காவேரி (Talakaveri) - (கர்நாடகா)
பாகமண்டலா ( Bhagamandala) - (கர்நாடகா)
குஷால் நகர் (Kushalnagar) - (கர்நாடகா)
ஸ்ரீரங்கப்பட்டினம் (Srirangapatna) - (கர்நாடகா)
கிருஷ்ணராஜ் சாகர் அணை (Krishna Raj Sagar Dam) - (கர்நாடகா)
மாண்டியா (Mandya) - (கர்நாடகா)
ஷிவனசமுத்திரா (Shivanasamudra) - (கர்நாடகா)
பன்னூர் (Bannur) - (கர்நாடகா)
திருமாக்குடல் நரசிபுரா (Tirumakudal Narasipura) - (கர்நாடகா)
தலக்காடு (Talakadu)
முடுகுத்தூர் (Mudukuthore) - (கர்நாடகா)
கனகபுர் (Kanakapur) - (கர்நாடகா)
மேட்டூர் (Mettur) - (தமிழ்நாடு)
பவானி (Bhavani) - (தமிழ்நாடு)
பள்ளிப்பாளையம்- ஈரோடு (Pallipalayam-Erode) - (தமிழ்நாடு)
கொடுமுடி (Kodumudi) - (தமிழ்நாடு)
பரமத்தி வேலூர் (Paramati Velur)- (தமிழ்நாடு)
ஸ்ரீரங்கம் -திருச்சிராப்பள்ளி (Srirangam Tiruchirappalli)- (தமிழ்நாடு)
திருவையாறு (Thiruvaiyaru)- (தமிழ்நாடு)
தஞ்சாவூர் (Thanjavur)- (தமிழ்நாடு)
சுவாமிமலை (Swamimalai) - (தமிழ்நாடு)
கும்பகோணம் (Kumbakonam)- (தமிழ்நாடு)
மயிலாடுதுறை (Mayavaram) - (தமிழ்நாடு)
பூம்புகார் (Poompuhar) - (தமிழ்நாடு)


மேலுள்ள ஏதாவது இடங்களில் அல்லது காவேரி நதி பிரயோகிக்கும் ஏதாவது ஒரு இடத்தில், காவேரி புஸ்கரம் நடைபெறும்

இந்த புண்ணிய தினங்களில் (செப்டம்பர் 12 முதல் அக்டோபர் 7 வரை) புனித நீராடி எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெறுவோம்....


வெள்ளி, 22 செப்டம்பர், 2017

கோவையை பற்றிய தகவல்கள்….!!!!



கோவையை பற்றிய தகவல்கள்….!!!!

தலைநகர் அந்தஸ்தில் இருக்கிறது சென்னை;

மதுரையைக் கடக்கிறது வைகை;

நெல்லையை தழுவிச் செல்கிறது தாமிரபரணி;

தூத்துக்குடியிலே துறைமுகம் இருக்கிறது;

திருச்சியிலே “பெல்’ (பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்) இருக்கிறது; என்.ஐ.டி., இருக்கிறது;

#என்னதான் இருக்கிறது இந்த கோவையில்…?.

வற்றாத ஒரு நதியுமில்லை;

வானளாவிய ஒரு கோவிலுமில்லை;

இதிகாசத்திலே இடமுமில்லை;

எந்த அரசும் இந்நகரைக் கவனிப்பதுமில்லை;

இன்னும் சொல்வதானால், 1927ம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆவணப்படி, “குடிநீரும், சுகாதாரமும் இல்லாத இந்த ஊரில்’, மக்கள் வாழத்தகுதியே இல்லை….

அப்புறம் எப்படி இந்த ஊரிலே குடியேறினார்கள் இத்தனை லட்சம் பேர்?.

தலைவர்கள் இருப்பதால், தலைநகருக்குக் கவனிப்பு அதிகம்; மற்ற ஊர்களுக்காக பரிந்து பேச, ஆங்காங்கே ஒரு தலைவர் இருக்கிறார்.

இந்த கோவை மண்ணுக்காக குரல் கொடுக்க, இன்று வரை ஒரு நல்ல அரசியல் தலைவர் இங்கே இல்லை;

ஆனாலும், இந்த நகரம் இத்தனை கம்பீரமாய் வளர்ந்து நிற்கிறதே…எப்படி?

விரக்திகளும், வேதனைக்குரிய கேள்விகளும் நிறைய இருந்தன; இப்போதும் இருக்கின்றன;

ஆனால், எல்லாவற்றையும் வெற்றிச்சரித்திரமாக்குவதுதான் இந்த கோவை மண்ணின் மகத்துவம்.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இது ஒரு நகரமில்லை; இன்றைக்கு இந்த நகரைத் தவிர்த்து, தமிழக வரலாறே இல்லை.

சென்னையிலே பிழைப்பது எளிது; வாழ்வது கடினம்.

மதுரையிலே வாழ்வது எளிது; பிழைப்பது கடினம்.

கோவையில் எளிதாய்ப் பிழைக்கலாம்; உழைத்தால் செழிக்கலாம்.

வந்தாரை மட்டுமல்ல; வாழ்வில் நொந்தாரையும் தந்தையாய் அரவணைத்து, வாழ வழி கொடுக்கும் உழைப்பின் பூமி இது.

எந்த அரசின் ஆதரவுமின்றி, இந்த நகரம் இத்தனை பெரிதாய் வளர்ந்ததன் ரகசியமும் இதுவே.

பஞ்சாலை நகரம் என்ற பெயரையும் கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து வந்தாலும், இந்த “டெக்ஸ் சிட்டி’, சமீபகாலமாய் “ஹை-டெக் சிட்டி’யாய் மாறி வருகிறது என்பதுதான் உண்மை.

உயர் கல்விச் சாலைகள், தகவல் தொழில் நுட்பப் பூங்காக்கள், அதிநவீன மருத்துவமனைகள், அகில உலகிற்கும் சவால் விடும் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள்…

அரசு அமைத்து சோபிக்காமல் போன “டைடல் பார்க்’ தவிர, இந்த நகருக்கு இத்தனை பெரிய வளர்ச்சியை வாரிக்கொடுத்தது இங்குள்ள தனியார் தொழில் முனைவோர்தான்.

எத்தனை வேகமாய் வளர்ந்தாலும், இன்னும் கட்டமைப்பு வசதிக்காகப் போராடுகிற நிலைதான் இங்கே. ஆனாலும், சோதனைகளைக் கடந்து சாதனை படைக்கிறது கோயம்புத்தூர் நகரம்.

இடையிலே ஒரு சங்கடம் வந்தாலும், அதிலும் “பீனிக்ஸ்’ பறவையாய் மீண்டெழுந்து, இன்று “ஒற்றுமையின் ஊராக’ பெயர் பெற்றிருக்கிறது கோவை.

அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவித்து, கூடுகிறார்கள் ஐயாயிரம் பேர்;

குளங்களைக் காக்க குரல் கொடுக்கிறது “சிறுதுளி’;

மரங்களை வெட்டினால், ஓடோடி வருகிறது “ஓசை’;

ரயில் சேவைக்காக போராடுகிறது “ராக்’.

மரியாதைக்குரிய கொங்குத் தமிழ்,

அத்துப்படியான ஆங்கிலம்,

இதமான காலநிலை,

சுவையான சிறுவாணி,

அதிரடியில்லாத அரசியல்…

இவற்றையெல்லாம் தாண்டி,

அமைதியை விரும்பும் மக்கள் இங்கே இருக்கிறார்கள். சாதி, மதங்களைக் கடந்து, உழைப்பால் ஒன்று பட்டு நிற்கும் கோவையின் மண்ணின் மைந்தர்களே, ஆலமரமாய் எழுந்து நிற்கும் இந்த நகரத்தின் ஆணிவேர்கள்.

புதுப்புது நுட்பங்களால் கண்டு பிடிப்புகளில் கலக்கும் தொழில் முனைவோராலும், சமூக அக்கறையும், சமத்துவ நேசமும் கொண்ட மனிதர்களாலும், கோயம்புத்தூர் நகரம் தினமும் புத்துணர்வோடு புகழின் சிகரம் நோக்கி நடை போடுகிறது…..

அந்த பெருமையுடன் எல்லா கோவை நட்புகளும் இறுமாப்பாய் சொல்லுங்க …

என்ர ஊரு கோயமுத்தூருங்கோ…..!!!!!

தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம்...



தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம்...

*இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன.*

*ஆம், இதுதான்*

*”நாவலன் தீவு”*
*என்று அழைக்கப்பட்ட*
*“குமரிப் பெருங்கண்டம்”.*

*கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்!*

*இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான்.!*

*“குமரிக்கண்டம்”. ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு*

*என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன!*

*பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!*

*குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன!*

*தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.*

*உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.*

*நக்கீரர்*
*“இறையனார் அகப்பொருள்”*
*என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார்.*

*தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென்மதுரையில்” கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது.*

*இதில்,*

*“பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்” ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர்.*

*இதில்*

*அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன.*

*இரண்டாம் தமிழ்ச் சங்கம்*

*"கபாடபுரம்" நகரத்தில்கி.மு 3700-ல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது.*

*இதில்*

*"அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.*

*இதில்*

*"தொல்காப்பியம்"*
*மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.*

*மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய "மதுரையில்" கிகி.ம1850-ல் 449- புலவர்களுடன் நடத்தப்பட்டது.*

*இதில்*

*"அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.*

*வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000-ம் வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20000-ம் வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம்...*

சனி, 16 செப்டம்பர், 2017

தமிழ்நாடு சாதிகள் பட்டியல்.



தமிழ்நாட்டில் எத்தனை ஜாதிகள் உள்ளன என்று தெரியுமா?
தமிழ்நாடு சாதிகள் பட்டியல்.
(தலை சுத்துதுடா சாமி!)

ஆதிதிராவிடர் பட்டியல்
1. ஆதி ஆந்திரர்
2. ஆதி திராவிடர்
3. ஆதி கர்நாடகர்
4. அஜிலா
5. அருந்ததியர்
6. அய்யனார் (சாதி) (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
7. பைரா
8. பகூடா
9. பண்டி
10. பெல்லாரா
11. பரதர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
12. சங்கிலியர், சக்கிலியன்
13. சாலாவாடி
14. சாமார், மூச்சி
15. சண்டாளா
16. செருமான்
17. தேவேந்திர குலத்தார்
18. டோம், தொம்பரா, பைதி, பானே
19. தோம்பன்
20. கொடகலி
21. கொடடா
22. கோசாங்கி
23. ஹொலையா
24. ஜக்கலி
25. ஜம்புவுலு
26. கடையன்
27. கக்காளன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
28. கல்லாடி
29. கணக்கன், பாடண்ணா (நீலகிரி மாவட்டம்)
30. கரிம்பாலன்
31. கவரா (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
32. கோலியன்
33. கூசா
34. கூத்தன், கூடன்(கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
35. குடும்பன்
36. குறவன், சித்தனார்
37. மடாரி
38. மாதிகா
39. மைலா
40. மாலா
41. மன்னன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
42. மாவிலன்
43. மோகர்
44. முண்டலா
45. நலகேயா
46. நாயாதி
47. பாதண்ணன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
48. பகடை
49. பள்ளன்
50. பள்ளுவன்
51. பம்பாடா
52. பாணன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
53. பஞ்சமா
54. பன்னாடி
55. பன்னியாண்டி
56. பரையன், பறயன், சாம்பவார்
57. பரவன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
58. பதியன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
59. புலையன்
60. புதிரை வண்ணான்
61. ராணேயர்
62. சாமாகாரா
63. சாம்பான்
64. சபரி
65. செம்மான்
66. தாண்டன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
67. தோட்டி
68. திருவள்ளுவர்
69. வல்லோன்
70. வள்ளுவன்
71. வண்ணான் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
72. வாத்திரியன்
73. வேலன்
74. வேடன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
75. வெட்டியான்
76. வேட்டுவன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

பழங்குடியினர் பட்டியல்

1. ஆதியன்
2. ஆரநாடான்
3. எரவள்ளன்
4. இருளர்
5. காடர்
6. கம்மாரா (கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)
7. காணிக்கர், காணிக்காரன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
8. கணியர், காணியான், கணியன்
9. காட்டு நாயகர், காட்டு நாயகன்
10. கொக்கவேலன்
11. கொண்டகாப்புகள்
12. கொண்டாரெட்டிகள்
13. கொராகா
14. கோடா (கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)
15. குடியா, மேலக்குடி
16. குறிச்சன்
17. குறும்பர் (நீலகிரி மாவட்டத்தில்)
18. குறுமன்கள்
19. மகாமலசார்
20. மலை அரையன்
21. மலைப் பண்டாரம்
22. மலை வேடன்
23. மலைக்குறவன்
24. மலசார்
25. மலயாளி (தர்மபுரி, வேலூர், புதுக்கோட்டை, சேலம், கடலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில்)
26. மலயக்கண்டி
27. மன்னன் (சாதி)
28. மூடுகர், மூடுவன்
29. முதுவர், முத்துவன்
30. பள்ளோயர், பள்ளேயன்
31. பள்ளியன்
32. பள்ளியர்
33. பாணியர்
34. சோலகா
35. தோடர் (கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)
36. உரளி

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல்
(பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபாண்மை நலத்துறையின் அரசாணைகள் எண்:85, நாள் 29-07-2008, எண்:97, நாள் 11-09-2008 மற்றும் எண்:37, நாள்: 21-05-2009)

1. தொழுவ அல்லது துளுவவெள்ளாளர் உட்பட அகமுடையார்
2. அகரம் வெள்ளாஞ் செட்டியார்
3. ஆழ்வார், அழவர் மற்றும் அளவர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
4. சேர்வை (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் நீங்கலாக)
5. அரயர், நுலயர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
6. அர்ச்சகர வேளாளர்
7. ஆர்யவதி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
8. ஆயிர வைசியர்
9. படகர்
10. பில்லவா
11. பொண்டில்
12. போயர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நீலகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் நீங்கலாக), பெத்தபோயர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை நீங்கலாக), ஒட்டர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் நீங்கலாக), கல் ஒட்டர்கள் (காஞ்சிபுரம், திருவள்ளூர், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாமக்கல், சேலம் மாவட்டங்கள் நீங்கலாக), நெல்லூர்பேட்டை ஒட்டர்கள் (வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் நீங்கலாக), சூரமாரி ஒட்டர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டம் நீங்கலாக)
13. சக்காலா (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்கள் நீங்கலாக)
14. சவலக்காரர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
15. செட்டு அல்லது செட்டி (கோட்டார் செட்டி, ஏலூர் செட்டி, பாத்திரச் செட்டி, வேலூர் செட்டி, புதுக்கடை செட்டி உட்பட) (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
16. சௌத்திரி
17. கல்வி நிலையங்களில் இருக்கைகள் மற்றும் அரசுப்பணிகளின் இருக்கைக்களுக்கும் இட ஒதுக்கீடு பெறும் நோக்கத்திற்காக தலைமுறையைப் பொருட்படுத்தாமல் ஆதிதிராவிடர் வகுப்பினர்களிலிலிருந்து கிறித்துவராக மாறியவர்கள்.
18. தென்னிந்திய திருச்சபை (முன்னாள் தெ.இ.கி.ஒ) (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
19. தொங்க தாசரிகள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சென்னை, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்கள் நீங்கலாக)
20. தேவாங்கர், சேடர்
21. தொம்மார்கள் (புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் நீங்கலாக), தோமர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் நீங்கலாக)
22. ஏனாதி
23. எழவதி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
24. எழுத்தச்சர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
25. எழுவா (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
26. கங்கவார்
27. கவரா, கவரை மற்றும் வடுகர் (வடுவர்) (கம்மா, காப்பு பலிஜா மற்றும் ரெட்டி இல்லாத பிற)
28. கௌண்டர்
29. கௌடா (கம்மாளர், கலாலி மற்றும் அனுப்பக் கவுண்டர்)
30. ஹெக்டே
31. இடிகா
32. இல்லத்துப்பிள்ளைமார், இள்ளுவர்(ஈழவர்), எழுவர், இல்லத்தார்
33. ஜெட்டி
34. ஜோகிகள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், மதுரை, தேனி, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் நீங்கலாக)
35. கப்போரா
36. கைக்கோளர், செங்குந்தர்
37. காலாடி (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலுர் மாவட்டங்கள் நீங்கலாக)
38. களரி குரூப், களர் பணிக்கர் உட்பட (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
39. கலிங்கி
40. கள்ளர், ஈசநாட்டுக் கள்ளர், கந்தர்வ கோட்டை கள்ளர்கள் உட்பட (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் நீங்கலாக) கூத்தப்பால் கள்ளர்கள் (புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் நீங்கலாக), பிரமலைக் கள்ளர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் நீங்கலாக), பெரிய சூரியர் கள்ளர்கள் ( திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் நீங்கலாக)
41. கள்ளர் குலத் தொண்டைமான்
42. கால்வேலிக் கௌண்டர்
43. கம்பர்
44. கம்மாளர் அல்லது விஸ்வகர்மா (விஸ்வகர்மாலா, தட்டார், பொற்கொல்லர், கன்னார், கருமார், கொல்லர், தச்சர், கல்தச்சர், கம்சாலா மற்றும் விஸ்வபிராமணர் உட்பட)
45. கணி, கணிசு, கனியர், பணிக்கர்
46. கனியால வேளாளர்
47. கன்னட சைனீகர், கன்னடியார் (மாநிலம் முழுவதும்) மற்றும் தசபலான்ஜிகா (கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில்)
48. கன்னடியநாயுடு
49. கற்பூர செட்டியார்
50. கரூணீகர் (சீர் கருனீகர், ஸ்ரீ கருணீகர், சரடு கரூணீகர், கைகட்டிக் கரூணீகர், மாத்து வழ கணக்கர், சோழிக் கணக்கர் மற்றும் சுண்ணாம்பு கரூணீகர்)
51. காசுக்கார செட்டியார்
52. கடேசர், பட்டம்கட்டி
53. கவுத்தியர்
54. கேரளமுதலி
55. கார்வி
56. கத்ரி
57. கொங்கு வைணவர்
58. கொங்கு வேளாளர்கள்(வெள்ளாளக் கௌண்டர், நாட்டுக் கௌண்டர், நரம்புக் கட்டிக் கௌண்டர், திருமுடி வேளாளர், தொண்டு வேளாளர், பாலக் கௌண்டர், பூசாரிக் கௌண்டர், அனுப்ப வேளாளக் கௌண்டர், குரும்பக் கௌண்டர், படைத்தலைக் கௌண்டர், செந்தலைக் கௌண்டர், பாவலன்கட்டி வெள்ளாளக் கௌண்டர், பால வெள்ளாளக் கௌண்டர், சங்கு வெள்ளாளக் கௌண்டர் மற்றும் ரத்தினகிரிக் கௌண்டர் உடபட)
59. கோப்பல வேலம்மா
60. கோட்டேயர்
61. கிருஷன்வாகா (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
62. குடிகார வேளாளர்
63. குடும்பி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
64. குக வேளாளர்
65. குஞ்சிடிகர்
66. லம்பாடி
67. இலத்தீன் கத்தோலிக்கர்கள் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
68. லிங்காயத் (ஜங்கமா)
69. மராட்டிய (பிராமணரல்லாதோர்) நாம்தேவ் மராட்டியர் உட்பட
70. மலயர்
71. மாலி
72. மானியகார்
73. மறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் நீங்கலாக) கருமறவர்கள், அப்பனாடு கொண்டையம் கோட்டை மறவர் உட்பட (சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள் நீங்கலாக) மற்றும் செம்பனாடு மறவர்கள் (சிவகங்கை, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் நீங்கலாக)
74. மூன்று மண்டை எண்பத்துநாலு (84) ஊர் சோழிய வெள்ளாளர்கள்
75. மூப்பன்
76. முத்துராசா, முத்துராச்சா, முத்திரியர், முத்தரையர்
77. நாடார்,சாணார் மற்றும் கிராமணி (கிறித்துவ நாடார், கிறித்துவ சாணார் மற்றும் கிறித்துவ கிராமணி உட்பட)
78. நகரம்
79. நாயக்கர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
80. நன்குடி வேளாளர்
81. நாஞ்சில் முதலி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
82. ஓடர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
83. ஓதியா
84. ஊற்று வளநாட்டு வேளாளர்
85. ஓ.பி.எஸ்.வேளாளர்
86. உவச்சர்
87. பய்யூர் கோட்ட வேளாளர்
88. பாமுலு
89. பாணர் (இந்த இனம் ஆதிதிராவிட வகுப்பினர்களாக இருக்கும் (கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக)
90. பாணிசைவன் (வீரக்கொடி வெள்ளாளர் உட்பட)
91. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கதிகாரர்
92. [பன்னிரண்டாம் செட்டியார்]] அல்லது உத்தமச் செட்டியார்
93. பார்க்கவகுலம் (சுரிதிமார், நத்தமார், மலைமார், மூப்பனார், நைனார் உட்பட)
94. பெருக்கி (பெரிகே, பலிஜா உட்பட)
95. பெரும்கொள்ளர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
96. பொடிகார வேளாளர்
97. பூலுவ கவுண்டர்
98. பொராயா
99. புலவர்(கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களில்)
100. புள்ளுவர் அல்லது பூலூவர்
101. புசலா
102. ரெட்டி (கஞ்சம்)
103. சாதுச் செட்டி (தெலுங்குச் செட்டி, இருபத்து நான்கு மனைத் தெலுங்குச் செட்டி உட்பட)
104. [[சக்கரவார்] அல்லது கவதி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
105. சாலிவாகனா
106. சாலியர், பத்மசாலியர், பட்டு சாலியர், பட்டாரியர் மற்றும் அடவியர்
107. சவலக்காரர்
108. சேனைத்தலைவர், சேனைக்குடியர், இலை வாணியர்
109. சௌராட்டிரா (பட்டுநூல்காரர்)
110. சோழிய வெள்ளாளர் (சோழ வெள்ளாளர், வெற்றிலைக்காரர், கொடிக்கால்காரர் மற்றும் கீரைக்காரர்)
111. ஸ்ரீசயர்
112. சுந்தரம் செட்டி
113. தொகட்டா வீரசத்திரியர்
114. தொல் கொல்லர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
115. துளவ நாய்க்கர் மற்றும் வெத்தலக்கார நாய்க்கர்
116. தொரையர்
117. தோரியர்
118. உக்கிரகுல சத்திரிய நாயக்கர்
119. உப்பாரா, உப்பிலியா மற்றும் சகாரா
120. ஊராளிக் கவுண்டர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் நீங்கலாக) மற்றும் ஒருடைய கவுண்டர் அல்லது ஊருடைய கவுண்டர் (மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் நீங்கலாக)
121. உரிக்கார நயக்கர்
122. வல்லம்பர்
123. வால்மீகி
124. வாணியர், வாணியச் செட்டியார் (கண்டல், கனிகா, தெலிகுல செக்கலார் உட்பட)
125. வேடுவர் மற்றும் வேடர் (இச்சமூகத்தினர் ஆதிதிராவிடராக இருக்கும் (கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக)
126. வீர சைவர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
127. [வேளர்]]
128. வெள்ளாஞ்செட்டியார்
129. வெலுதொடத்து நாயர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
130. வொக்கலிகர் (வக்கலிகர், ஒக்காலிகர், கப்பிலியர், ஒக்கலிக கௌடா, ஒக்காலியா கௌடா, ஒக்காலிய கவுடர், ஒக்காலிய கவுடா உட்பட)
131. வயநாடு செட்டி (நீலகிரி மாவட்டம்)
132. யாதவா (இடையர், வேடுக ஆயர் அல்லது வடுக இடையர் அல்லது கொல்லா மற்றும் அஸ்தந்திர கொல்லா என அழைக்கப்படுகிற தெலுங்கு மொழி பேசும் இடையர் உட்பட)
133. யவன
134. ஏருகுலா
135. மீனவர், பர்வதராஜகுலம், பட்டணவர், செம்படவர், முக்குவார் அல்லது மூகையர் மற்றும் பர்வரிலிருந்து கிறித்துவ மதத்திற்கு மதம் மாறியவர்கள் நீங்கலாக எந்த ஒரு இந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பு அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு அல்லது சீர்மரபினர்கலிலிருந்து கிறித்துவ மதத்திற்கு மதம் மாறியவர்கள்.
136. 10 வயதுக்கு முன்பு பெற்றோர்களை இழந்தவர்கள் மற்றும் ஆதரவற்றவர்கள். சட்டப்படியோ அல்லது வழக்கமாகவோ எவர் ஒருவரும் அவர்கள் மீது அக்கறை கொள்ளாதவர்கல் மற்றும் அரசால் ஏற்பளிக்கப்பட்ட பள்ளிகள் அல்லது அனாதைகள் மற்றும் ஆதரவற்றவர்கள்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல் (இஸ்லாமியர்)

(பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபாண்மை நலத்துறையின் அரசாணை எண்:85, நாள் 29-07-2008.)

1. அன்சார்
2. தக்கானி முஸ்லீம்
3. துதிகுலா
4. லப்பைகள் இராவுத்தர் மற்றும் மரைக்காயர் உட்பட (அவர்கள் பேசும் மொழி தமிழ் அல்லது உருது ஆக இருப்பினும்)
5. மாப்பிள்ளா
6. ஷேக்
7. சையத்
மிகவும் பிற்பட்ட வகுப்பினர்

1. ஆண்டிப்பண்டாரம்
2. பெஸ்தா, சீவியர்
3. பட்ராஜீ (சத்திரிய ராஜீக்கள் நீங்கலாக)
4. போயர், ஒட்டர்
5. தாசரி
6. தொம்மரா
7. எரவள்ளர் (இவ்வினத்தவர்கள் பட்டியலில் பழங்குடியினராக உள்ள கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக)
8. இசை வேளாளர்
9. ஜம்புவானோடை
10. ஜங்கம்
11. ஜோகி
12. கொங்குச் செட்டியார் (கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மட்டும்)
13. கொரச்சா
14. குலாலா (குயவர், கும்பரர் உள்ளிட்ட)
15. குன்னுவர் மன்னாடி
16. குறும்பர்
17. குறு உறனி செட்டி
18. மருத்துவர், நாவிதர், மங்கலா, வேலக்கட்டலவா, வேலக்கட்டல நாயர் மற்றும் புரோனோபகாரி
19. மோண்ட் கொல்லா
20. மவுண்டாடன் செட்டி
21. மகேந்திரா, மேதரா
22. முட்டலகம்பட்டி
23. நரிக்குறவர்
24. நோக்கர்
25. வன்னிய குலச் சத்திரியர்(வன்னியர், வன்னியா, வன்னியகவுண்டர், கவுண்டர் அல்லது கண்டர், படையாட்சி, பள்ளி மற்றும் அக்னிகுல சத்திரியர் உட்பட)
26. பரவர்,பரதவர்,பரதர் (இச்சமுதாயத்தினர் பட்டியல் வகுப்பினராக உள்ள கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக, கிறித்துவ மதத்திற்கு மாறியவர் உட்பட)
27. மீனவர் (பர்வதராஜகுலம், பட்டனவார், செம்படவர் கிறித்துவ மதத்திற்கு மாறியவர் உட்பட)
28. முக்குவார் அல்லது முகயர் (கிறித்துவ மதத்திற்கு மாறியவர் உட்பட)
29. புன்னன், வேட்டுவ கௌண்டர்
30. பண்ணையார் (கன்னியாகுமரி மாவட்டத்தில் கதிகாரர் நீங்கலாக)
31. . சதாத ஸ்ரீ வைஷ்ணவ (சதானி, சட்டாடி மற்றும் சட்டாட வைஷ்ணவ உட்பட)
32. சோழிய செட்டி
33. தெலுங்குப் பட்டி செட்டி
34. தொட்டிய நாயக்கர் (ராஜகம்பளம், கொல்லாவர், சில்லவர், தொக்களவார் மற்றும் தொழுவ நாயக்கர்)
35. தொண்டைமான்
36. வலையர் (செட்டிநாடு வலையர் உட்பட)
37. வண்ணார்(சலவைத் தொழிலாளர்), அகசா, மடிவளா, ஏகாலி, ராஜகுல வேலுத்தடார் மற்றும் ராஜாகா உட்பட) (இச்சமூகத்தினர் ஆதிதிராவிட வகுப்பினராக இருக்கும் கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக)
38. வேட்டைக்காரர்
39. வேட்டுவக் கௌண்டர்
40. யோகீஸ்வரர்

சீர்மரபினர் பட்டியல்

1. ஆத்துர் கீழ்நாடு குறவர்கள் (சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்)
2. ஆத்தூர் மேல்நாடு குறவர்கள் (சேலம், நாமக்கல் மாவட்டங்கள்)
3. அப்பநாடு கொண்டையம் கோட்டை மறவர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள்)
4. அம்பலகாரர் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
5. அம்பலக்காரர் (சூரியனூர், திருச்சிராப்பள்ளி மாவட்டம்)
6. போயர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நீலகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள்)
7. பட்டுதுர்காஸ்
8. சி.கே.குறவர்கள் (கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள்)
9. சக்கலா (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், மதுரை, திண்டுக்கல், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்கள்)
10. சங்கயம்பாடி குறவர்கள் (வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
11. செட்டிநாடு வலையர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டங்கள்)
12. தொம்பர்கள்(புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள்)
13. தொப்ப குறவர்கள் (சேலம், நாமக்கல் மாவட்டங்கள்)
14. தொம்மர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
15. தொங்கபோயர்
16. தொங்கஊர் கொறச்சார்கள்
17. தேவகுடி தலையாரிகள்
18. தொப்பை கொறச்சாக்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
19. தாபி குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
20. தொங்கதாசரிகள் (கரூர், பெரம்பலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
21. கொரில்லா தோட்ட போயர்
22. குடு தாசரிகள்
23. கந்தர்வ கோட்டை குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள்)
24. கந்தர்வ கோட்டை கள்ளர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
25. இஞ்சிக் குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும்புதுக்கோட்டை மாவட்டங்கள்)
26. ஜோகிகள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், சென்னை, கடலூர், விழுப்புரம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
27. ஜம்பவனோடை
28. காலடிகள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
29. கல் ஒட்டர்கள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கரூர், பெரம்பலூர், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
30. குறவர்கள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்கள்)
31. களிஞ்சி தாபி குறவர்கள்(தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
32. கூத்தப்பால் கள்ளர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
33. கல குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
34. கலவதிலா போயர்கள்
35. கேப்மாரிகள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள்
36. மறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்)
37. மொந்த குறவர்கள்
38. மொந்த கொல்லா (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
39. முடலகம்பட்டி (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
40. நோக்கர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
41. நெல்லூர்பேட்டை ஒட்டர்கள் (வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
42. ஒட்டர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள்)
43. பெத்த போயர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)




வெள்ளி, 15 செப்டம்பர், 2017

நவராத்திரி பூஜையினால் இழந்த ராஜ்ஜியத்தை மீட்டெடுத்த அரசரின் கதை !!


நவராத்திரி பூஜையினால் இழந்த ராஜ்ஜியத்தை மீட்டெடுத்த அரசரின் கதை !!

இந்தியா முழுவதும் நவராத்திரி விழா கொண்டாடப்பட இருக்கிறது. நவராத்திரி கொண்டாடப்படுவதற்கு முன்னதாக நவராத்திரி வழிபாட்டின் மகிமையை உணர்த்தும் கதையை தெரிந்து கொள்ளலாம்.
காட்டில் கணவர் மனைவி வாழ்ந்து வருகிறார்கள். மிகவும் வறுமையில் இருக்கும் அவர்கள் மிகவும் துன்பத்தில் இருக்கிறார்கள் கணவருக்கு தீர முடியாத நோய் வேறு அடுத்து என்ன செய்யப்போகிறோம்? உணவைத் தேடி செல்வதா? கணவருக்கான மருந்துகளை தேடுவதா? உணவா? பொருளா? மருந்தா என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது வாசலில் யாரோ அழைக்கும் ஓசை கேட்டது.



வாசலில் மகரிஷி :
உதவி கேட்டு மகரிஷி ஒருவர் வந்திருந்தார். அழுது வீங்கிய கண்களுடன் இந்தப் பெண்ணைப் பார்த்தவுடனேயே, மகரிஷி ஒரு உண்மையை கண்டுபிடித்தார். உன்னைப் பார்த்தால் அரச குடும்பத்தைச் சேர்ந்தவளைப் போல இருக்கிறது. என்ன ஆயிற்று? ஏன் இங்கே வந்திருக்கிறாய் ? என்று கேட்டார்.


வருத்தம் :
'எங்களுடைய தயாதிகள் எங்கள் மீது பொறாமைபட்டு எங்களுடன் போர்புரிந்து எங்களை தோற்கடித்துவிட்டார்கள்' என்று வருத்தப்பட்டிருக்கிறாள். உண்மையை அறிந்த முனிவர் ஆறுதல் அளித்ததோடு, அருகில் இருக்கும் பஞ்சவடியில் எழுந்தருளியிருக்கும் அம்பிகையை பூஜை செய்தால் இழந்த ராஜ்ஜியம் மீண்டும் கிடைக்கும் அதோடு வம்சத்தை விரித்தி செய்ய புத்திரனும் பிறப்பான் என்கிறார்.

தரிசனம் :
அதைக் கேட்டு மகிழ்ந்த அந்தப் பெண்மணி தன் கணவருடன் பஞ்சாவடிக்கு செல்கிறாள். இவரின் வீட்டிற்கு வந்த அங்கிரஸ முனிவர் அங்கே இருந்தார். அவர் முன்னின்று நடத்திய நவராத்திரி பூஜையை செய்து வைத்தார்.

வாழ்க்கைச் சக்கரம் :
பூஜையை முறைப்படி முடித்த பின்னர் அங்கிரஸர் முனிவருடன் அவரின் ஆசிரமத்திற்கே சென்றனர். அங்கே அரசர் நோயிலிருந்து மீண்டார். அரசிக்கு சூரியப் பிரதாபன் என்ற ஆண் குழந்தை பிறந்தது.


திரும்பிய வாழ்க்கை :
அங்கிரஸ முனிவரை குருவாக ஏற்ற சூரியப் பிரதமன் அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ந்தான். தன் பெற்றோர் ஏமாற்றப்பட்ட கதையை கேட்டு , பகைவர்களுடன் போரிட்டு தங்களின் நாட்டை மீட்டு வருகிறான்.
நன்றி தட்ஸ்தமிழ்.

புதன், 13 செப்டம்பர், 2017

காவேரி ஆறும், காவேரி புஸ்கரமும்






காவேரி ஆறும், காவேரி புஸ்கரமும்
================================

1873ல் ஆங்கிலேயர் ஆட்சியில் கொண்டாடிய புஷகர விழா இப்போது 2017ல் கொண்டாடபடுகிறது

இந்தியாவில் ஓடும் நதிகளை இமய நதிகள் என்றும், தீபகற்ப நதிகள் என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இமய நதிகள் இமய மலையில் உருவாகின்றன. சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆகியவை இமய நதிகளில் முக்கியமானவை. இவற்றில் மழைக் காலத்தில் மழை நீர் ஓடும். கோடையில் பனிக்கட்டி உருகிக் இந்த நதிகளில் நீர் ஓடும். ஆண்டு முழுவதும் இவற்றில் நீர் ஓடுவதால் இவற்றை ஜீவநதிகள் என்று கூறுகிறார்கள். இதேப்போல் தீபகற்ப நதிகள் என்பது மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகின்றன. கிருஷ்ணா, கோதாவரி, மகாநதி,காவிரி, வைகை, பீமா,  தாமிரபரணி முதலியவை தீபகற்ப ஆறுகளில் முக்கியமானவை.

காவேரி ஆறு
--------------------

காவேரி ஆறு என்பது தென்னிந்தியாவில் பாயும் முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும். கங்கை நதிக்கு அடுத்தப்படியாக புனிதமான நதியாக காவேரி கருதப்படுகிறது. காவேரி நீரிலும் நீரடி மணலிலும் த

ங்கத் தாது உண்டென்பதால், பொன்னி என்றும் அதற்கு ஒரு பெயர் உண்டு. மண்ணைப் பொன் கொழிக்கச் செய்யும் ஆறு என்றும் பொருள் கொள்ளலாம்.

காவேரி ஆறு  முறையே  கர்நாடக மாநிலத்திலுள்ள மேற்குத் சம மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்திலிருந்து தோன்றுகிறது. இதன் நீளம் 800 கிமீ. கர்நாடகத்தில் குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூர் (ரூரல்), சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் வழியாகவும் தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி , தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாகச் சென்று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது.


காவிரித் தடம்
----------------------

குடகு மாவட்டத்தில் உள்ள பிரம்மகிரி மலைப் பகுதியில் தலக்காவிரி என்ற இடத்தில் காவிரி பிறக்கிறது. காவேரி பிறந்த இடமாக கருதப்படும் தலக்காவேரி எனும் இவ்விடத்தில் தற்சமயம் ஒரு குளம் (தீர்த்தவாரி) உள்ளது. இந்த குளத்திற்கான நீரை கொண்டு வரும் சிறு பொய்கையாக காவேரி பிறக்கின்றது. பின்னர் அது தரைக்கடியில் கீழிறங்கி வெகு தூரத்திற்கப்பால் காவேரி எனும் ஆறாக வெளிப்படுகிறது. இதனுடன் குடகு மாவட்டத்தில் ஹாரங்கி எனும் ஆறு காவிரியில் கலக்கிறது. பிறகு, காவிரி மைசூரு அருகே மாண்டியா மாவட்டத்தில் கண்ணம்பாடியில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கத்தை அடைகிறது. இங்கு ஹேமாவதி, லட்சுமணதீர்த்தம் ஆகிய இரு ஆறுகளும் காவிரியில் கலக்கின்றன. கிருஷ்ணராஜ சாகரிலிருந்து வெளிப்படும் காவிரி, ஸ்ரீரங்கப்பட்டணம் தீவைத் தோற்றுவிக்கிறது. பின்பு கபினி, சொர்ணவதி ஆகிய ஆறுகள் காவிரியில் கலக்கின்றன. பின்பு, சிவசமுத்திரம் தீவைத் தோற்றுவிக்கும் காவிரி இரண்டாகப் பிரிந்து, வலப்புறம் ககனசுக்கி அருவியாகவும், இடப்புறம் பாறசுக்கி அருவியாகவும் 100 மீட்டர் உயரத்திலிருந்து விழுகிறது. (ககனசுக்கி அருவியில் தான் 1902-ல் ஆசியாவின் முதல் நீர்மின் நிலையம் அமைக்கப்பட்டு, கோலார் தங்க வயலுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.) இதன் பிறகு சிம்சா, அர்க்கவதி ஆறுகள் காவிரியில் கலக்கின்றன. இதையடுத்து ஆழமான குறுகிய பாறைகளின் வழியே காவிரி தமிழ்நாட்டை அடைகிறது. இந்த இடத்திற்கு ஆடு தாண்டும் காவிரி (மேகேதாட்டு) எனப்படுகிறது. ஆடு கூட இங்கு காவிரியைத் தாண்டி விடலாம் என்பதால் இவ்விடத்திற்கு ஆடு தாண்டும் காவிரி என்று பெயர் . இவ்விடத்தை மேகேதாட்டு (Mekedatu)  என்றும் அழைப்பர். இவ்விடத்திலிருந்து தமிழகத்தில் நுழையும் காவிரி, பிலிகுண்டு வழியாக ஒகேனக்கல் அருவியை அடைகிறது. அருவி நீர் பாறையில் மோதி புகைபோல் எழுவதால், புகைக் கல் என்னும் பொருளில் ஒகேனக்கல் எனப் பெயர் வந்ததாம். ஒகேனக்கலுக்குப் பின் பாலாறு, சென்னாறு, தொப்பாறு ஆகிய சிற்றாறுகள் காவிரியில் கலக்கின்றன. காவிரி, மேட்டூர் அணையை அடைந்து ஸ்டான்லி நீர்த்தேக்கத்தில் நிறைந்து, அங்கிருந்து தான் தமிழகத்தின் காவிரி நீர்ப்பாசனம் தொடங்குகிறது.  மேட்டூரிலிருந்து புறப்பட்டு வரும் காவிரியுடன் பவானி ஆறு இணைகிறது. அத்துடன் ஆகாய கங்கையும் வந்து கலக்கிறது என்ற ஐதீகத்தின் பேரில், பவானி கூடுதுறைக்குத் திரிவேணி சங்கமம் என்ற பெயரும் உண்டு. பவானியிலிருந்து காவிரி ஈரோட்டை அடைகிறது.  ஈரோடு நகரை கடந்து செல்லும் காவிரியுடன் கொடுமுடி அருகேயுள்ள நொய்யலில் நொய்யலாறு காவிரியுடன் கலக்கிறது. கரூர் அருகேயுள்ள கட்டளையில் அமராவதி காவிரியுடன் கலக்கிறது. கரூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் காவிரி விரிந்து செல்வதால் அகண்ட காவிரி என்று பெயர் பெறுகிறது. முசிறி, குளித்தலை நகரங்களைத் தாண்டி திருச்சிக்கு சற்று முன்னர் உள்ள முக்கொம்பில் மேலணையை அடைகிறது காவிரி. அங்கு இரண்டாகப் பிரிந்து, ஒரு கிளை கொள்ளிடம் என்றும் மற்றொன்றுக்கு காவிரி என்றும் பெயர். வெள்ள காலத்தில் பெருகி வரும் நீரானது கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்படுகிறது. கொள்ளிடம் காவிரியின் வெள்ள வடிகாலாக இருப்பதால் பெரும்பாலும் வறண்டே காணப்படும். கொள்ளிடம் மற்றும் காவிரிக்கு நடுவில் திருச்சிக்கு (திருச்சிராப்பள்ளி) அருகே ஸ்ரீரங்கம் (திருவரங்கம்) தீவை உருவாக்கிய பின் காவிரியானது கல்லணையை அடைகிறது. கல்லணையிலிருந்து செல்லும் காவிரி பல சிறு கிளைகளாக பிரிந்து தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை உருவாக்கி வங்கக்கடலில் கலக்கிறது.

புராண கதைகள் கூறும் காவேரி ஆற்றின் பெருமைகள்.
-------------------------------------------------------------------------------------
புராணக்கதைகளின் படி அகஸ்திய முனிவர் தன் கமண்டலத்தில் காவேரி ஆற்றை அடக்கி வைத்திருந்ததாகவும், விநாயக கடவுள் காக்கை ரூபம் கொண்டு அகஸ்திய முனிவர் தவத்தில் மூழ்கி இருந்த சமயம் அந்த கமண்டலத்தை சாய்த்து காவேரியை மலையிலிருந்து பெருக்கெடுத்து ஓட வைத்ததாகவும் கூறப்படுகிறது.

ஒரு முறை காவிரி நதி பகவான் விஷ்ணுவிடம் கங்கை நதியை விட தான் புண்ணிய நதியாக வேண்டும் என்று பிரார்த்தித்தாள். காவிரியின் கோரிக்கையைச் செவிமடுத்த விஷ்ணு, “கங்கை எனது திருவடிகளிலிருந்து பிறந்ததால், கங்கை புனிதமானது. காவிரியோ எனது மாலையாகி, எனது ஹிருதயத்திற்கு அருகில் இருப்பதால், காவிரி கங்கையைவிட புனிதமானதாகும் “ – என்று விளக்கமளித்தார். இதன் காரணமாகவே விஷ்ணுவின் மூன்று புனிதத் ஸ்தலங்கள் காவிரிக் கரையில் இருக்கின்றன. ஸ்ரீரங்கப்பட்டிணம், சிவனசமுத்திரம், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் முறையே ஆதி ரங்கா, மத்திய ரங்கா, அந்திய ரங்கா என்ற பெயர்களில் அந்த ஸ்தலங்கள் அமைந்துள்ளன. இந்த ஒவ்வொரு இடங்களிலும் அமைந்துள்ள கோயில் காவிரி நதி சூழ்ந்து, ஒரு தீவாக அமைந்து, அதுவே புராண நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஒரு மாலைபோல் காட்சி அளிக்கிறது. மேலும் இன்னொரு புராண வரலாறும் உண்டு. அதன் படி கங்கை தன் பாவத்தைப் போக்கிக் கொள்ள ஒவ்வொரு வருடமும், பூமியின் பாதாளம் வழியாக காவிரி நதிக்கு வந்து, குளித்து விட்டுப் போவதாக அந்த வரலாறு சொல்கிறது.

தன்னிடம் நீராடுபவர்களின் பாவங்களையும் அஞ்ஞானத்தையும் போக்கி சகல பாக்கியங்களையும் அளிப்பவள் காவிரி என்கிறது காவிரி புஜங்கம் என்னும் நூல்.

துலா மாதத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி முதலான பாரதத்தில் ஓடும் நதி தேவதைகள் அனைத்தும் காவிரியில் நீராடி, தங்களிடம் மானிடர்கள் கரைத்துச் சென்ற பாபக்கறைகளைப் போக்கிக் கொள்கின்றது என்று காவிரிள மகாத்மியம் என்னும் நூல் கூறுகிறது.

காவிரி தேவியை வணங்கி துதிப்பவர்கள் சொர்க்க லோகம் செல்லும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள். தன்னில் நீராடுபவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வளமான வாழ்வு தருபவள் என்கிறது காவிரி புராணம். நதி தேவதைகளும், தேவர்களும், மானிடர்களும் துலா மாதத்தில் காவிரியில் நீராடி தங்களிடம் உள்ள பாபங்களைப் போக்கிக்கொண்டதும், அந்தக் கறைகள் அனைத்தையும்  காவிரி போக்கிக் கொள்கிறாள் என்பது ஐதீகம்.
--------------------------------------------------------
காவேரி நதியில் புஷ்கர நீராடல் சிறப்பு புண்ணிய காலம்

இவ்வருடம் 2017 செப்-12 முதல் செப்-23 வரை புஷ்கர தொடக்கம். அடுத்த வருடம் 2018 செப்-30 முதல் அக்-11 வரை புஷ்கர முடிவு.


புஷ்கரம் என்றால் என்ன?

புஷ்கரர் என்பவர் படைப்புக் கடவுளான பிரம்மாவின் கமண்டலுவில் உள்ள புண்ணிய தீர்த்த அரசர். உலகில் உள்ள 3½ கோடி புண்ணிய தீர்த்த தேவதைகளுக்கு அதிபதி.

வியாழ பகவான் தேவ குரு என்று நாம் அறிவோம். அவர் ஒரு முறை பிரம்மாவை நோக்கி தவம் புரிந்தார். தவத்திற்கு மகிழ்ந்த பிரம்மா என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு வியாழனோ “நவ கிரகங்களுள் எனக்கு முக்கியத்துவமுள்ள பூஜைக்குரிய நிலை கிடைக்கவேண்டும். நான் அனைத்தும் அறிந்தவனாக ஆகவேண்டும். மேலும் உமது கமண்டலுவில் உள்ள இந்த புஷ்கரர் என்னிடம் வரவேண்டும்” என்று கேட்டார். பிரம்மா அப்படியே ஆகட்டும் என்று வரம் அருளினார். ஆனால் புஷ்கர தேவன் “நான் உம்மை விட்டுச் செல்ல விரும்பவில்லை” என்று பிரம்மாவிடம் வேண்டினார்.

பிரம்மாவோ “என் வாக்கு பொய்போகாது. ஆகையால் எனது உத்தரவுபடி நீர் குறிப்பிட்ட காலமாவது வியாழனுடன் இருக்கத்தான் வேண்டும்” என்று கூறினார். ஆகாயத்தில் உள்ள 12 ராசிகளில் வியாழன் ஒவ்வொரு ராசியிலும் இருக்கும் சுமார் 1 வருட காலத்தில் ஒவ்வொரு புண்ணிய நதியுடன் அவருக்கு தொடர்பு உண்டு. ஆகவே அந்தந்த ராசியில் வியாழன் இருக்கும் பொழுது முதலில் 12 நாளும் இறுதியில் 12 நாளும் முழுவதும் புஷ்கரர் அந்தந்த நதியில் இருக்க வேண்டும் என்று பிரம்மா உத்தரவிட்டார். அதே போல் இடைப்பட்ட சுமார் 1 வருட காலத்திலும் நடுப்பகல் வேளையில் 2 முகூர்த்த நேரம் (96 நிமிடங்கள்) அந்தந்த நதியில் இருக்கவேண்டும் என்றும் கூறினார்.

தீபாவளியன்று அதிகாலை அனைத்து நீர்நிலைகள் மற்றும் நீரோட்டங்களிலும் கங்கை வந்து இருப்பதாக நமது ஐதீகம் உள்ளதல்லவா! இதே போல் நமது பாரத தேசத்தில் உள்ள பன்னிரண்டு பிரதான நதிகளில் அந்தந்த காலத்தில் புஷ்கர தேவன் வந்து இருக்கிறார். ஆகவே இச்சமயம் அந்தந்த நதிகளில் நீராடுவது உலகில் உள்ள 3½ கோடி புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதற்கு சமமான புண்ணியத்தை அளிக்கும், பாபங்களை விலக்கும்.

இத்தகைய நதி நீராடலுக்கு உகந்ததான மிக உன்னதமான புண்ணிய காலமே புஷ்கரம் எனப்படுகிறது.

வியாழன் எந்தெந்த ராசிகளில் இருக்கும்பொழுது எந்தெந்த நதிகளில் புஷ்கரம்?

மேஷம் - கங்கை
ரிஷபம் - நர்மதை
மிதுனம் - ஸரஸ்வதி
கடகம் - யமுனை
சிம்மம் - கோதாவரி
கன்னி - கிருஷ்ணை
துலாம் - காவேரி
விருச்சிகம் - தாமிரபரணி
தனுசு - சிந்து
மகரம் - துங்கபத்ரை
கும்பம் - பீமா
மீனம் - பிரணீதா

நமது காவேரியில் புஷ்கரம்

நமது தமிழ்நாட்டில் வருடாவருடமும் துலா ராசியில் சூரியன் ஸஞ்சரிக்கும் ஐப்பசி மாதம் காவேரி நதி முழுதும் புண்ணிய தீர்த்த நீராடல் உண்டு என்பதை அறிவோம். மஹாமகம் என்பதாக பன்னிரண்டு வருடத்திற்கு ஒரு முறை வியாழன் சிம்ம ராசியில் இருக்கையில் மாசி மாதம் மக நக்ஷத்ரத்தில் ரிஷப லக்னத்தில் கும்பகோணம் மகாமகக் குளத்தில் புண்ணிய நீராடல் உண்டு என்பதும் பிரசித்தமே. இதே போல் இந்த புஷ்கர புண்ய காலத்தில் இன்ன இடத்தில் தான் என்றில்லாமல் காவேரி நதி முழுதும் புண்ணிய நீராடல் செய்து பயன்பெறுவோம்.

நிகழும் ஹேமலம்ப ௵ ஆவணி ௴ 27 ௳ (2017-செப்-12) முதல் புரட்டாசி ௴ 7 ௳ (2017-செப்-23) வரை புஷ்கர நீராடல் ஆரம்பம். இச்சமயம் காலை மதியம் மாலை என்றில்லாமல் எப்பொழுது காவேரியில் நீராடல் செய்தாலும் சிறப்பானதே. அது தொடர்ந்து ஒரு வருட காலம் புஷ்கர வருடம். இச்சமயம் நடுப்பகலில் காவேரி நீராடல் சிறப்பானது. இதன் நிறைவாக வரவிருக்கும் விலம்ப ௵ புரட்டாசி ௴ 14 ௳ (2018-செப்-30) முதல் அம்௴ 25 ௳ (2018-அக்-11) வரை புஷ்கர நீராடல் முடிவு. அச்சமயத்திலும் தொடக்கத்தில் போல் முழு நாளும் காவேரி நீராடலுக்கு சிறப்பானது.

பாபங்கள் மலிந்து புண்ணியங்கள் நலிந்திருக்கும் இக்கலிகாலத்தில் திருமூல நாயனார் -

யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.

என்றவாறு புஷ்கர நீராடல் போன்ற எளிமையான தர்மங்களையாவது செய்து வாழ்க்கையில் மேன்மையடைவோமாக!

 நன்றி :ஸ்ரீம்_மகேஷ்சுவாமிஜீ.

ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

அத்தா என்பது பழந்தமிழ்ச் சொல்.


அத்தா என்பது பழந்தமிழ்ச் சொல்.

தமிழ் இசுலாமியர்கள் தனது தந்தையை அத்தா என்றழைப்பர்...

அத்தன் என்பதுதான் அத்தா என்று அழைக்கப்படுகிறது...

அத்தன் என்றால் தகப்பன் என்று பொருள்...

பழைய இலக்கியங்களில் அத்தா என்ற சொல்லை நிறைய இடங்களில் காணலாம்...

அத்தா, அச்சன், முத்தன், அப்பா என்பதெல்லாம் தகப்பன் என்பதனையே குறிக்கும்...

“அத்தா இது கேள் என ஆரியன் கூறுவான்” கம்பராமாயணம்.

“அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே” தேவாரம்.

” சைவ சமயக் குரவர்களுள் ஒருவரான அப்பர் சிவனைத் தன் தந்தையெனக் கருதி இயற்றிய ஒரு பாடல் .

“அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்
அருள் நோக்கில் தீர்த்த நீராட்டிக் கொண்டாய்
எத்தனையும் அரியை நீ எளியை ஆனாய்
எனை ஆண்டு கொண்டு இரங்கி ஏன்று கொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
பிழைத்தனன் அத்தனையும் பொறுத்தாயன்றே
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ
எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறே”” என்ற பாடலில் அத்தா என்ற சொல் வருவதை கவனிக்கலாம்.

அப்பன் -அப்பா, அத்தன் – அத்தா. தகப்பன் அல்லது தலைவன் என்ற பொருள் படும்.

துருக்கியனை அத்தா என்று அழைக்க காரணம் தலைவன் என்ற பொருளில்தான்

தமிழ் முஸ்லிம்கள் உறவு முறைகளுக்கு பயன்படுத்தும் வார்த்தை அத்தா !!
 அப்பா என்கிறவன் தனக்கு வாழ்வு கொடுக்கிற இடத்தில் இருப்பதால் சிலர் அப்பாவை வாப்பா என்றழைப்பர்.

செம்மொழித் தமிழே தமிழக முஸ்லீம்களின் தாய்மொழி. அவர்களின் உள்ளத்திலும் இல்லத்திலும் உறைவதும் ஒலிப்பதும் செந்தமிழ். இதையே ‘எங்களுயிர்த் தமிழ் வழக்கு’ என்று அன்றே பாடினார் ஆபிதீன்.

‘பாத்திரத்தை ஏனம் என்போம்
பழையதுவை நீர்ச்சோறு என்போம்
ஆத்திரமாய் மொழி குழம்பை
அழகாக ஆணம் என்போம்
சொத்தையுரை பிறர் சொல்லும்
சாதத்தை சோறு என்போம்
எத்தனையோ தமிழ் முஸ்லிம்
எங்களுயிர்த் தமிழ் வழக்கே’

விளக்கவுரை தேவையில்லை. ஏனம், ஆணம், நீர்ச்சோறு, சோறு முதலான எண்ணற்ற உணவு மற்றும் உறவு முறைச்
சொற்களை தமிழ் முஸ்லிம்கள் ஆண்டாண்டு காலமாக
வழங்கி வருகின்றனர்.

இன்றைக்கு அத்துனை இஸ்லாமியர்கள் வீடுகளில் எல்லா நேரங்களிலும் தமிழ் நடைமுறைப் பேச்சில் வாழ்ந்து கொண்டிருக்கிறது

யாரெல்லாம் இன்றும் தொழுகை, நோன்பு ,ஆணம் பள்ளிவாசல்கள் என்று கூறுவாரோ அவரெல்லாம் சமணத்திலிருந்து வந்த தூய தமிழ் கடற்கரை வாழ் இஸ்லாமியர்களே!!!

தொல்காப்பியர்,திருவள்ளுவர்(வள்ளுவர் சமணரா என்ற கேள்வியும் உண்டு நாம் பிறகு பார்ப்பபோம் இதுபற்றி).

இளங்கோவடிகள் போன்றோர் சமணம் சார்ந்த படைப்பாளிகள்;அறிவாளிகள்!!!

தமிழ்நாட்டில்:-

கழுவில் ஏற்றப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்ட சமணர்கள் தான் முதன் முதலில் இஸ்லாத்திற்கு அதிகளவில் மாறினார்கள் என்றும் பள்ளிகள் என்பது சமணர்களின் வழிபாட்டுத்தலம்.

இதிலிருந்து தான் பள்ளிவாசல் என்று பெயர் வந்ததாகவும்,மேலும் தொழுகை நோன்பு என்பன தூய தமிழ் என்பதும் அதை முழுக்க முழுக்க சமணர்களே பயன்படுத்தினார்கள்.

இஸ்லாத்திற்கு வந்த சமணர்களே இன்றும் அதாவது இன்றைய தாய்மொழி தமிழ் பேசும் முஸ்லிம்களே இந்த வார்த்தைகளை இன்றும் பயன்படுத்துகிறார்கள்

மூதாதயரை தேடுவோம் அழிக்கப்பட்டவரலாரை   பரப்புவோம்!!

14ஆம் நூற்றாண்டுகளில்தான் இஸ்லாமியர்கள்  இலக்கண  இலக்கிய காப்பியங்களை இயற்றுபவர்கள் வருகை அதிகரித்தது அதிலும் கூர்ந்து கவனித்தால் தெரியும் அனைவருமே கடற்கரையை ஒட்டிய முஸ்லிம்கள் !!!

காரணம் சமணத்திலிருந்து இஸ்லாத்தை வாழ்வியல் முறையாக மாற்றிக்கொண்டார்கள் கடற்கரை சமணர்கள் !!

வள்ளுவர் புலால் உண்ணுதலையும் கசாப்பு கடைகளையும் எதிர்க்கிறார் ..
கொல்லாமையை வழியுறுத்துகிறார் வள்ளுவர்காலத்தில் மாமிசம் சாப்பிட்டவர்கள் யார்?

பௌத்தத்தை அழித்தவர்களே சமணத்தையும் அழித்த ஆரிய வந்தேரிகளே!!!

இன்று அவர்களுக்கு இஸ்லாம் இடையூறாக இருக்கிறது. ஒரு விசயத்தை கவனிக்கனும் இங்கே சமணம் வளர்ந்ததே அதிகம் அதிகம் புலால் உண்ணாத கொள்கையாலே . வேறு வழியின்றி வந்தேறிகளும் புலால் உண்ணாமையையும் சோம பானம் மதுவை அறுந்தாமலும் வாழவேண்டியகட்டாயம்!!!
இன்று அவர்கள் புலால் உண்ணாதவர்கள் நாங்கள் என்று சொல்லிக்கொண்டாலும் அவர்களின் தொழிலை விட முடியவில்லை ஆம் மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் முதலிடம் அவர்களே!!

முஸ்லிம்களை அடிப்பது தொழில்போட்டியே!!!

மதசாயம் உள்ளே பூசிகொண்டு வெளியில் ஏற்றுமதி அப்போதானே அதிகம் ஏற்றுமதி செய்து குல தொழிலை காக்க முடியும்.

ஆரிய சைவ கொடுமையால் வேறு வழியின்றி தற்காப்புக்காக.இருப்பினும் சமணர்கள் இஸ்லாத்திற்கு வந்து கொள்கையான புலாலை ஆரம்பத்தில் உண்ணாமலே இருந்துள்ளனர். காலப்போக்கில் இஸ்லாமிய கொள்கையில் பற்றுகொண்டும் பல நாடுகளின் வணிகதொடர்பாலும் வழக்கம் மாறியுள்ளது!!!

மது இஸ்லாத்தில் தடை சமணரளுக்கு இஸ்லாம் ஒரு கொடை!!

சமணர்கள் தான் இஸ்லாத்திற்கு வந்து தமிழ்காப்பியங்களையும் இலக்கியங்களையும் தமிழ் பற்றை நிறுபித்துள்ளனர்.
நாகூர் காயல்பட்டினத்தவரே அதிகம் தமிழ் இலக்கண, காப்பியங்கள் எழுத்தாளர்களை காணமுடிகிறது!!!
காரணம் சமணத்திலிருந்து இஸ்லாத்தை முழுவதும் படிப்படியாக உள்வாங்கி கொண்டு இஸ்லாத்தை ஏற்று  தமிழை வளர்த்துள்ளார்கள்!!

தான் எந்த மதம் ஜாதி வந்தோம் என்பதே மறக்கடித்து மதிப்பை வழங்கும் இஸ்லாமே வாழ்க போற்றி தழைக்க மென்மேலும்!!!

இஸ்லாமியர்கள் 14ஆம் நூற்றாண்டு முதல் இன்று வரை அதிகம் தமிழுக்கு தொண்டு செய்வதை காணலாம்

துலக்கமானவர்தான் துலுக்கன் இல்லை!!!

"
ஒப்பரிய சட்டையும் உடுத்திலகு பட்டும்
தொப்பியும் முகத்திடை துலக்க முளராகி"

(திருவாதவூர்ப் புராணத்தில்)

திருவாதவூரடிகள் புராணம்:-

கடவுள் மாமுனிவர் இயற்றிய திருவாதவூரடிகள் புராணம்
545 செய்யுட்களைக் கொண்டது. அளவில் இது சிறிய நூல்.

 சுந்தரரும், சேக்கிழாரும் மாணிக்கவாசகரைப் பாடவில்லை.
பின்னர் வந்த கடவுள் மாமுனிவர் அக்குறையைச் சரி செய்யும் வகையில் மாணிக்கவாசகர் வரலாற்றைப் பாடியதாகக் கொள்ளலாம். இதன் முக்கியச் சிறப்பு இதுவேயாகும்.

 மந்திரிச்சருக்கம், திருப்பெருந்துறைச் சருக்கம், குதிரையிட்ட சருக்கம், மண் சுமந்த சருக்கம், திருவம்பலச் சருக

பூதலூர் அப்துல்மாலிக்

சனி, 9 செப்டம்பர், 2017

500 வருடம் பழைமையான இங்கிலாந்து நாணயத்தில் சிவன் பார்வதி உருவம்



500 வருடம் பழைமையான இங்கிலாந்து நாணயத்தில் சிவன் பார்வதி  உருவம் ...

500 வருடம் பழைமையான இங்கிலாந்து நாணயத்தில் சிவன் பார்வதி  உருவம் பொறிக்கப்பட்டுள்ளது......இஸ்ட் இந்தியா கம்பனியால் 1616 ஆம் ஆண்டு வெளியானது......

கடலில் மூழ்கிய ரோம் ராஜ்ஜியம்: தேடி கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்!!​



கடலில் மூழ்கிய ரோம் ராஜ்ஜியம்: தேடி கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்!!​


துனிசியா நாட்டின் வடக்கிழக்கு கடற்கரையில் கடலில் மூழ்கி இருந்த ரோம் ராஜ்ஜியத்தின் பண்டைய நகரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நகரம் ரோம் ராஜ்ஜியத்தின் இரசாயன தயாரிப்பு மற்றும் மீன்கள் உற்பத்தி செய்யும் இடமாக இருந்திருக்க கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கிபி 4 ஆம் நூற்றாண்டிற்கு பின்னர் ஏற்பட்ட சுனாமி போன்ற பேரலையால் இந்த நகரம் கடலில் மூழ்கிப்போய் இருக்க கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.

சுமார் 20 ஹெக்டர் பரப்பளவில் இந்த நகரம் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும், பல சிலைகள், அந்த சிலைகளை உருவாக்க பயன்படுத்தப்பட்ட 100 டாங்குகள் ஆகியவையும் அங்கு இருந்துள்ளது.


இந்த சிலைகள் கரன் என்னும் இரசயானத்தால் இருவாக்கப்பட்டுள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.