திங்கள், 30 ஏப்ரல், 2018

அம்பேத்கர் இந்திய தொழிலாளி வர்க்கத்திற்கு செய்த பணிகள்


அம்பேத்கர் இந்திய தொழிலாளி வர்க்கத்திற்கு செய்த பணிகள்


மேதினத்திற்கு எதற்கு அம்பேத்கர் படத்தை பதிவிட்டு வாழ்த்து சொல்லவேண்டும் என்று சிலர் கேட்கலாம்.

அவர்களுக்காகவே, அம்பேத்கர் இந்திய தொழிலாளி வர்க்கத்திற்கு செய்த பணிகளை பட்டியலிடுகின்றோம். கொஞ்சம் கேளுங்கள்...

1. பிரிட்டீஷ் இந்தியாவிலேயே 8 மணிநேர வேலையை முதலில் அரசாணை வர காரணமானவர்.

2. பெண் தொழிலாளர்களுக்கான பேருகால விடுப்பிற்கு காரணமானவர்.

3. இந்தய தொழிலாளர்களுக்கான பி.எஃப். முறைக்கு காரணமானவர்.

4. தொழிலாளர்களுக்கான ESI திட்டத்தை வடிவமைத்துக்கொடுதவர்.

5. தொழிலாளர்கள் பிரச்சனை குறித்து பேச இரு தரப்பு பேச்சுவார்த்தையாக இல்லாமல், முத்தரப்பு பேச்சுவார்த்தையாக (அரசையும் உள்ளடிக்கிய) மாற்றியவர்.

6. இன்றைக்கு இந்திய தொழிலாளி வர்க்கம் அனுபவிக்கும் சட்டப்பாதுகாப்புகளுக்கு காரணமானவர்.

7. இந்திய விடுதலைக்கு முன்பே "சுதந்திர தொழிலாளர் கட்சி" என்று தொழிலாளர்களுக்காகவே கட்சி தொடங்கியவர்

என்று இன்னும் ஏராளமாக அம்பேத்கர் குறித்து சொல்லலாம்.

ஆங்கிலேய ஆட்சியாளர்களால், அம்பேத்கருக்கு அப்போதிருந்த வைஸ்ராய் கவுன்சிலில் ‘தொழிலாளர் நலத்துறை உறுப்பினராக’ 1942ம் ஆண்டு பதவி வழங்கப்பட்டது. இந்தப் பதவியானது நாடாளுமன்ற அமைச்சருக்குச் சமமான அதிகாரமுள்ள பதவியாகும். இதை பயன்படுத்தி முழுக்க முழுக்க தொழிலாளர் நலன்களுக்காகவே செயல்பட்டார் அம்பேத்கர்.

தொழிலாளர்களுக்கான சட்டங்கள் ஒரே சீராக அமைவதன் அவசியம்,

காகித கட்டுப்பாட்டு ஆணை,

இந்திய தேயிலை கட்டுப்பாடு மசோதா,

தேர்ச்சிபெற்ற மற்றும் பகுதி தேர்ச்சிபெற்ற பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு நிலையங்கள்,

தொழிலாளர்களுக்கு கிராக்கிப்படி வழங்கப்படுவது பற்றிய அறிவிப்பு,

தொழிலாளர் சட்டங்கள்,

தொழிலாளர் நலன்கள் பற்றிய திட்டத்தில்

சமூக பாதுகாப்பு,

சம்பளம்,

வாழ்க்கை நலம்,

மோட்டார் வாகனங்கள் (ஓட்டுனர்) மசோதா,

சுரங்க மகப்பேறு நல உதவி (திருத்த) மசோதா,

இந்திய தொழிற்சங்கங்கள் (திருத்த) மசோதா, தொழிற்சாலைகள் (திருத்த) மசோதா,

ஆலைத் தொழி லாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறைகள்,

ஊதிய வழங்கீடு (திருத்த) மசோதா சுரங்க தொழிலாளர் மகப்பேறு நல உதவி (திருத்த) மசோதா,

தொழிற்சாலைப் பணியாளார் நலக் காப்பீடு

இந்திய தொழிற்சாலைப் பணியாளார்களுக்கான வீட்டு வசதித் திட்டம்,

தொழிலாளர் இழப்பீடு (திருத்த) மசோதா,

தொழிலாளர்கள் மறுவாழ்வுத் திட்டம்

என்பது உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் தொடர்பான விவாதங்களை மத்திய சட்டமன்றத்தில் (தற்போதைய நாடாளுமன்றம்) அன்றே கொண்டு வந்தவர் அம்பேத்கர்.

மேலும் தொழிலாளர்களோடு நெருங்கிய தொடர்பை மேற்கொள்ள, அவர்களது குறைகளைக் கேட்டறிய எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு வேகமாக தீர்வுகளைப் பெற, தொழிற்சாலைகளில் தொழிலாளர் நல அதிகாரிகள் நியமிக்கப்படுவது விரும்பத்தக்கது என்று அன்றே மத்திய அமைச்சரவையை பொதுவாக ஒப்புக்கொள்ள வைத்தவர்.

அண்ணல் அம்பேட்கர் அவர்களின் படத்தை மேதின கொண்டாட்டத்தில் இணைப்பதே தொழிலாளி வர்க்கத்தின் தற்போதைய புரட்சிகர செயலாகும்.

இதுவே அம்பேத்கரை, தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்  என்று குறுக்கிப்பார்க்கும் அதிகார வர்க்கத்திற்கு தொழிலாளி வர்க்கம் கொடுக்கும் மே தின பரிசாகும்

தொழிலாளர் தினத்தில் மறைக்கப்பட்ட தலைவர் பாபாசாஹிப் டாக்டர் பிஆர். அம்பேத்கர்


தொழிலாளர் தினத்தில் மறைக்கப்பட்ட தலைவர் பாபாசாஹிப் டாக்டர் பிஆர். அம்பேத்கர்.

உலகெங்கிலும் மே 1 தொழிலாளர் தினமாக நெகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது. அந்தந்த நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் தங்களுக்காக குரல் கொடுத்த, போராடிய, பாதுகாப்பளித்த, சட்டம் நிறைவேற்றிய தலைவர்களை நினைவு கூறுவர்.

இந்திய தேசத்தில் தொழிலாளர் நலன் சார்ந்த பல  போராட்டங்களை அமைப்புகளும் தனி மனிதர்கள் பலரும் ஆங்காங்கே பிரச்சனைகளின் அடிப்படையில்  முன்னெடுத்தனர் என்கிறது நம் வரலாறு.

ஆனால் ஒரு தலைவர் மட்டும் தொழிலாளர் நலன் சார்ந்த 28 சட்ட மசோதாக்களை சத்தமில்லாமல் நிறைவேற்றினார்.

அவரிடம் எந்த தொழிலாளர்களும் தங்களது துயரங்களை போக்க மனு கொடுக்கவில்லை. தங்களுக்காக போராட அழைக்கவில்லை. ஆனாலும் மனிதர்கள் மீது அவர் கொண்டிருந்த அன்பினாலும், மனிதர்களை பாரபட்சமின்றி சமமாக நடத்தும் பண்பை கொண்டிருந்ததாலும் தன்னிச்சையாக அந்த 28 சட்ட மசோதாக்களை வடிவமைத்தார், முன்மொழிந்தார், நிறைவேற்றினார், அமுல்படுத்தினார்

அவர் தான் நமது நவீன இந்தியாவின் தந்தை பாபாசாஹிப் டாக்டர் பிஆர். அம்பேத்கர் (M.A., Ph.D., M.Sc., D.Sc., Barrister-at-Law, L.L.D., D.Litt) அவர்கள்.

அவை:-
1. சம வேலைக்கு பாலின பேதமற்ற சம ஊதியம்

2. தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலை நேரத்தை நீக்கி 8 மணி நேர வேலை திட்டத்தை அமுல்படுத்தினார்

3. முத்தரப்பு தொழிலாளர் மாநாட்டை, ஆகஸ்டு 7, 1942ல் புது டில்லியில் நடத்தினார். முத்தரப்பு பேச்சுவார்த்தையை அமுல்படுத்தினார்.

4. சுரங்க பெண் தொழிலாளர்கள்​ மகப்பேறு அனுகூலச் சட்டம்

5. பெண் தொழிலாளர்கள் சேமநல நிதி

6. பெண்கள் மற்றும் குழந்தைகள், தொழிலாளர் பாதுகாப்பு சட்டம்

7. பெண் தொழிலாளர் மகப்பேறு அனுகூலம்

8. நிலக்கரி சுரங்கங்களில் நிலத்தடி வேலைத் திட்டத்தில் பெண்கள் வேலைவாய்ப்பு குறித்த தடை மீட்பு

9. தொழிற்சங்கங்களை கட்டாயமாக அங்கீகரித்தல்

10. தேசிய வேலைவாய்ப்பு மையங்கள்

11. ஊழியர் அரசாங்க காப்பீட்டு திட்டம்

12. குறைந்தபட்ச ஊதிய திட்டம்

13. நிலக்கரி மற்றும் மைகா சுரங்கங்கள் வருங்கால வைப்புநிதி திட்டம்

14. தொழிலாளர் சேமநல நிதி

15. தொழில்நுட்ப பயிற்சி திட்டம் மற்றும் திறன் தொழிலாளர்கள் திட்டம்

16. மகப்பேறு நலச் சட்டம்

17. கிராக்கிப்படி

18. தொழிற்சாலை தொழிலாளர் சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாட்கள்

19. தொழிற்துறை ஊழியர்களுக்கான சுகாதார காப்பீடு

20. சட்டப்பூர்வ வேலைநிறுத்தம்

21. வருங்கால வைப்புநிதி சட்டம்

22. ஊழியர் சம்பள உயர்வு மீளாய்வு செய்தல்

23. இந்திய தொழிற்சாலை சட்டம்

24. இந்திய தேயிலை கட்டுப்பாடு மசோதா,

25. இந்திய தொழிற்சாலைப் பணியாளார்களுக்கான வீட்டு வசதித் திட்டம்,

26. மோட்டார் வாகனங்கள் (ஓட்டுனர்) மசோதா

27. தொழிலாளர்கள் மறுவாழ்வுத் திட்டம்

28. தொழிலாளர் இழப்பீடு (திருத்த) மசோதா

இந்தியாவில் வருடாவருடம் மே 1 தொழிலாளர் தினத்தை அனுசரிக்கிறோம். ஆனால் ஏனோ தெரியவில்லை இவ்வளவு நன்மைகளை செய்த நவீன இந்தியாவின் தந்தை பாபாசாஹிப் டாக்டர் பிஆர். அம்பேத்கர் அவர்களை மட்டும் தொழிலாளர் தினத்தன்று நினைவுகூற மறந்துவிடுகிறோம்

இது மறதியின் விளைவா அல்லது இருட்டடிப்பா என்று நமக்கு நாமே நேர்மையாக சுயபரிசோதனை செய்துகொள்ளுதல் அவசியம்

இந்தியாவில் தொழிலாளர்களை உறுப்பினர்களாக கொண்டு வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்சங்கங்களும் அதன் தாய் கட்சிகளும் அம்பேத்கரை கொண்டாடுவதை தவிர்த்தது மறதியல்ல. இருட்டடிப்பே.

தொழிலாளர்களை பெரும்பான்மையாகக் கொண்ட அட்டவணை சமூகத்தில் பிறந்த காரணத்திற்காகவே அம்பேத்கர் கொண்டாடப்படுவதில்லை என்பதே கசப்பான உண்மை

காரணம் பெரும்பாலான தொழிற்சங்க தலைவர்களும், அதன் தாய் கட்சிகளின் தலைமைகளும் பார்ப்பனர்களாகவும் சூத்திரர்களாகவும் இருப்பதே இந்த இருட்டடிபுக்கு பின்னணி.

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு”

இந்த குறள் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, இந்த விடயத்தில் பாபாசாஹிப் அம்பேத்கர் அவர்களை கொண்டாட மறந்த நமக்கு பொருந்தும்.

மே 1 தொழிலாளர் தினத்தை கொண்டாடுவோம்
அம்பேத்கர் அவர்களை நினைவு கூறுவோம் ....


வெள்ளி, 27 ஏப்ரல், 2018

தமிழகத்தில் பலருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரியாது: தோண்ட தோண்ட மீண்டு வரும் பல்லாயிரம் ஆண்டுகால வரலாறு?


 தமிழகத்தில் பலருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரியாது: தோண்ட தோண்ட மீண்டு வரும் பல்லாயிரம் ஆண்டுகால வரலாறு?

சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர் திருவிழிச்சில்.
இங்கே தான் (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது.இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான் இந்த இடமும் உள்ளது.

இதே போன்ற பல கட்டிடங்கள் இன்று கடலுக்கு அடியில் தான் உள்ளது, ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பது அதிர்ஷ்டம்.
தமிழகத்தில் பலருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரியாது.

 எப்போதோ வந்த ஒரு சுனாமியால் உருத்தெரியாமல் அழிந்து மண்ணுக்குள் புதைந்து போன இது, அதே சுனாமியால் மீண்டும் வெளிவந்துள்ளது. 2004 சுனாமியால் நடந்த ஒரே நல்ல விஷயம் இது மட்டுமே.

இத்தனை ஆயிரம் வருடங்களாக யார் கண்ணிலும் படாமல் மண்ணுக்குள் இருந்த இந்த கட்டிடம் சுனாமியின் போது படத்தின் பின்புறமாக இருக்கும் கல்லில் இருந்த கல்வெட்டு வெளிப்பட்டதனால், அந்த இடம் தோண்டப்பட்டு கிடைத்தது.

படத்தில் நீங்கள் பார்ப்பது ஏதோ ஒரு இடிந்து போன சாதாரண கட்டிடம் அல்ல, தமிழகத்திலேயே இதுவரை கண்டுபிடிகப்பட்டுள்ள புதையுண்ட மிகப்பழமையான கோயிவில்களில் முதல் இடம் பிடித்திருப்பது இது தான்.
அதாவது கிறிஸ்து பிறப்பிற்கு முன் கட்டப்பட்ட முருகன் கோவில். அடித்தளத்தில் இருக்கும் செங்கல் கட்டுமானம் சங்க காலத்தை சேர்ந்தது.
செங்கற்கள் ஒவ்வொன்றும் தற்போதைய அளவை விட இரண்டு மடங்கு பெரியதாக உள்ளது.

இந்த சங்க கால கட்டிடம் சுனாமியால் அழிந்ததையொட்டி, இதில் பல்லவர்கள் இந்த செங்கல் கட்டுமானத்தை அப்படியே அடித்தளமாக வைத்து அதன் மீது கற்றளியை எழுப்பியுள்ளனர்,

அதன் பின்னர் சோழர் காலத்திலும் திருப்பணிகள் நடந்துள்ளது.
பின்னர் அதுவும் ஒரு சுனாமியால் அழிந்து தற்போது அதே சங்ககால அடித்தளமே மீதம் உள்ளது.
அதை மிக சிறப்பாக தற்போது தோண்டி எடுக்கப்பட்டு பாதுகாத்து வருகின்றது தொல்லியல் துறை.

இந்த செங்கற்கள் சங்க கால இடங்களான "பூம்புகார், உறையூர், மாங்குடி, அரிக்கமேடு" ஆகிய இடங்களில் கிடைக்கபெற்ற கற்களோடு ஒத்துப்போகின்றது.

"சிலப்பதிகாரத்தில்" கூறப்பட்டுள்ள "குறவன் கூத்து" பற்றிய மண் சிற்பங்களும் இங்கு கிடைக்கபெற்றுள்ளது.

கோவிலின் முன் புறத்தில் கல்லிலேயே செய்யப்பட்ட முருகனின் வேல் ஒன்று உள்ளது. சுடுமண்ணால் ஆன ஒரு நந்தி, ஒரு பெண்ணின் சிலை, விளக்குகள், சிவ லிங்கம், சோழர்களின் செப்பு காசு போன்ற ஏகப்பட்ட சங்க காலத்திய பொருட்கள் கிடைத்துள்ளது.

இங்கு கிடைக்கப்பெற்ற இந்த ஒரு நந்தி தான் சுடுமண்ணால் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே எவ்வளவு நாகரிகமாக வாழ்ந்திருக்கிறோம் என்பது புரியும்.

அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம், நாம் நிற்கும் இதே இடத்தில் தானே இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் நம் இனத்தாரும் நின்று இதை கட்டியிருப்பார்கள் என்ற உணர்வோடு பாருங்கள், மிகுந்த பூரிப்போடு இருக்கும்.

நன்றி: தமிழ் இனியன்

தமிழன் பெருமை & பழமை அறியாத  மத மொழிவெறி பிடித்த ஆட்சியாளர்கள்  தவறான  செயல்களால்  அன்னிய நிறுவனங்களின் அமில கழிவுகளை கொட்டும் நமது பூமி வேதனையான உண்மை.

வரலாறு அறியாதவர்கள்.

விழித்திடுவோம்.

உத்தரவின்றி உள்ளே வராதீர்கள்... மீறினால் கொல்லப்படுவீர்கள்! - திகில் தீவு செண்டினல்



உத்தரவின்றி உள்ளே வராதீர்கள்... மீறினால் கொல்லப்படுவீர்கள்! - திகில் தீவு செண்டினல்...

அந்தமான் பக்கத்தில் இருக்கிற குட்டித் தீவு செண்டினல். நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இத்தீவில் இருக்கிற மனிதர்கள் பற்றிய குறிப்புகளைப் பல நாடுகளைச் சேர்ந்த பல ஆராய்ச்சியாளர்கள் வலை வீசித் தேடி கொண்டிருக்கிறார்கள். இதுவரை அவர்கள் பற்றிய ஒரு துரும்பைக் கூடக் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது ஒட்டு மொத்த உலகமும். அவர்களை எப்படி அணுகினாலும் பதிலாக வருவது வில்லும் அம்புகளும்தான். தப்பிப் பிழைத்தவர்கள் வெளி உலகத்துக்குச் சொன்ன செய்திகள் ஒவ்வொன்றும் திகில் ரகம். செண்டினல் தீவு மக்கள் இந்த உலகத்துக்குச் சொல்வதெல்லாம் ஒன்றேயொன்றுதான் “உத்தரவின்றி உள்ளே வராதீர்கள்.”


சம்பவம் ஒன்று:

ஆவணப்படக் குழு ஒன்று படப்பிடிப்புக்காக செண்டினல் தீவுக்குப் படகில் செல்கிறது. போகும் பொழுது சில பரிசுப் பொருள்களைக் குழு கொண்டு செல்கிறது. தீவில் கரை இறங்கிய இரண்டொரு வினாடிகளில் நான்கு புறமிருந்து ஈட்டிகளும் அம்புகளும் வந்து விழுகின்றன. பதறிப் போன மொத்த குழுவும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு திரும்பி வந்திருக்கிறார்கள். திரும்பி கரையைப் பார்க்கும்போது  ஒரு அம்பு படகில் வந்து குத்துகிறது. திரும்பி வரக் கூடாது என்பதற்கு எச்சரிக்கைதான் அந்த அம்பு. சம்பவம் நடந்த ஆண்டு 1974

சம்பவம் இரண்டு:

கப்பல் ஒன்று செண்டினல் தீவின் பவளப்பாறைகளில் மோதிக் கரை தட்டி நிற்கிறது. கப்பல் கேப்டன் உதவிக் கேட்டு காத்திருக்கிறார். இரண்டாவது நாள் அதிகாலையில் கரையை நோக்கி சிலர் வருகிறார்கள். உற்றுக் கவனித்ததில் வந்தவர்கள் எல்லோர் கையிலும் வில் அம்பு ஈட்டி என வைத்திருக்கிறார்கள். கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் எல்லோரும் நிர்வாணமாக இருந்திருக்கிறார்கள். ஏதோ ஆபத்து வருகிறது என்பதை உணர்ந்த கேப்டன் பதறிப்போய் வயர்லெஸ்ஸில் கடற்படைக்குத் தகவல் சொல்ல ஹெலிகாப்டரில் வந்து எல்லோரையும் மீட்டு வந்திருக்கிறது இந்திய கடற்படை. சம்பவம் நடந்த ஆண்டு 1981. கப்பலின் பெயர் ப்ரைம்ரோஸ். கூகுள் மேப்பில் இப்போதும் இந்த சிதிலமடைந்த கப்பலின் உருவம் தென்படுகிறது.

சம்பவம் மூன்று:

2006 ஜனவரி மாதம் இரண்டு மீனவர்கள் மீன்பிடித்துவிட்டு தீவின் கரையில் ஒதுங்குகிறார்கள். இரண்டு நாள்கள் கழித்து அவர்களின் இறந்துபோன உடல்கள் கரை ஒதுங்கி இருக்கின்றன. உடலெங்கும் ஈட்டி குத்திய தடயங்களுடன் கிடந்திருக்கின்றன. உடல்களை மீட்கச் சென்ற கடலோர காவல்படையினரை நோக்கி அம்புகளும் ஈட்டிகளும் வர உடல்களை மீட்காமலே திரும்பி இருக்கிறது கடற்படை.


60000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பழங்குடியினர் வசிக்கிற தீவு செண்டினல். வங்காள விரிகுடா கடலில் இருக்கிறது. உலகம் இத்தீவில் இருக்கிற மக்களை செண்டினலீஸ் என அழைத்துக்கொண்டிருக்கிறது. அந்தமான் தீவுக்கு அருகில் இருக்கும் இந்தத் தீவு இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பசுமை சூழ்ந்த காடுகள் அழகிய மணல் பரப்புகளைக் கொண்ட தீவின் மொத்த பரப்பளவு 72 சதுர கிலோ மீட்டர்கள். தீவில் எத்தனைப்  பேர் இருக்கிறார்கள், அவர்களின் பழக்கவழக்கம் என்ன என்பது பற்றிய எந்தக் குறிப்பும் இதுவரை இல்லை. மரங்களும் செடிகளும் சூழ்ந்திருப்பதால் ஆகாய மார்க்கமாக எடுக்கப்பட்ட படங்களில் அவர்கள் பற்றிய எந்த விவரங்களும் இல்லை. விலங்குகள், மீன்களை வேட்டையாடுவதை முக்கியத் தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். உலகின் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருக்கிற தீவில் 50ல் இருந்து 250 வரை மக்கள் தொகை இருக்கலாம் எனத் தரவுகள் தெரிவிக்கின்றன.

2004-ம் ஆண்டு சுனாமியின்போது இந்தத் தீவு அழிந்துவிடும் என நினைத்தவர்களுக்கு எதிர்மறையான பதில்களே கிடைத்திருக்கின்றன. ஆழிப்பேரலையில் எந்தப் பாதிப்பும் நிகழாமல் இருந்திருக்கிறது. சுனாமியை முன் கூட்டியே உணர்ந்த தீவு மக்கள், உயர்ந்த இடங்களுக்குச் சென்று தப்பித்திருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சுனாமிக்கு பிறகான நாள்களில் செஞ்சிலுவைச் சங்கம் சென்டினல் தீவு மக்களுக்கு மருந்து மற்றும் உணவுகளை விமானத்தில் இருந்தபடியே போட்டிருக்கிறது. ஆனால், தீவு மக்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளாமல் ஈட்டிகளையும் அம்புகளையும் திருப்பி அனுப்பி இருக்கிறார்கள். விமானத்தை ஈட்டி பதம் பார்க்க, போன வழியிலேயே திரும்பி இருக்கிறது செஞ்சிலுவைச் சங்கம்.

இந்தத் தீவுக்குச் சென்று வெற்றிகரமாகத் திரும்பியவர்களும் இருக்கிறார்கள். 1991-ம் ஆண்டு இந்திய தொல்லியல் துறையின் திருலோகிநாத் பண்டிட் என்கிறவரின் தலைமையில் ஒரு குழு சென்றிருக்கிறது. பல ஆண்டுகளாக அவர்களைப் பற்றி முழுதும் தெரிந்து கொண்டு பயணித்திருக்கிறார். பல தடைகளுக்குப் பிறகு ஒரு முறை அம்மக்களை சந்தித்திருக்கிறார்கள். குழுவினர் கொடுத்த தேங்காய்களைப் பழங்குடியினர் பெற்றுக்கொண்டு அடுத்த பத்தாவது நிமிடத்தில் குழுவினரை திரும்பிப் போகச் சொல்லி சைகை செய்திருக்கிறார்கள். குழு சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டு திரும்பியிருக்கிறது.

அந்தமானின் ஜாரவா, கிரேட் அந்தமானிஸ், சென்டினலிஸ் போன்ற பழங்குடியின மக்களிடம்தான் உலகின் ஒட்டு மொத்த மனித வரலாறும் புதைந்து கிடக்கிறது. ஜாரவா இன மக்கள் நவீன மக்களுடன் இணைந்து வாழும்போது பல பிரச்னைகளை சந்திக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு ஜாரவா மக்களிடம் சில வெளிநாட்டுப் பயணிகள் பழங்களைக் கொடுத்து ஆடச் சொல்கிற காணொளி ஒன்றை யூடியூபில் காணமுடிகிறது. பல ஆயிரம் வருடப் பாரம்பர்யம் கொண்ட ஒர் இன மக்களை ஆடச் சொல்லி வேதனைப் பட வைத்திருக்கிறார்கள் சுற்றுலாப் பயணிகள். செண்டினல் தீவு மக்கள் வெளி நபர்களை அனுமதிக்காமல் இருப்பதால்தான் இன்னமும் அங்கே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒரு வேளை அனுமதித்திருந்தால் ஜாரவா இன மக்களுக்கு நேர்ந்ததைப் போல நடப்பதற்குச் சாத்தியம் இருக்கிறது.

இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இத்தீவுக்கு யாரும் போக கூடாது என்ற உத்தரவும் இன்று வரை இருக்கிறது. தீவைச் சுற்றிய மூன்று கடல் மைல்களைப் பாதுகாப்பு வளையமாக அறிவித்திருக்கிறது  இந்தியக் கடற்படை. அந்தமான் அரசு 2005-ம் ஆண்டு செண்டினல் மக்களின் வாழ்வியல் மீதும் வாழ்விடங்கள் மீதும் ஒரு போதும் தலையிடப் போவதில்லை என அறிவித்திருக்கிறது.

இறுதியாக ஒரு விஷயம். செண்டினல் என்கிறப்  பெயருக்கு “காவலாளி” என்று பொருள்.

சனி, 14 ஏப்ரல், 2018

சுறவம் தை முதல்நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப்புத்தாண்டு என்று எடுத்து உரைத்தவர்கள் யாரெல்லாம் தெரியுமா?



சிறப்பு பார்வை

சுறவம்
தை முதல்நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப்புத்தாண்டு என்று எடுத்து உரைத்தவர்கள் யாரெல்லாம் தெரியுமா?

01. மறைமலை அடிகளார் (1921)
02. தேவநேயப் பாவாணர்
03. பெருஞ்சித்திரனார்
04. பேராசிரியர் கா.நமசிவாயர்
05. இ.மு. சுப்பிரமணியனார்
06. மு.வரதராசனார்
07. இறைக்குருவனார்
08. வ. வேம்பையனார்
09. பேராசிரியர் தமிழண்ணல்
10. வெங்காலூர் குணா
11. கதிர். தமிழ்வாணனார்
12. சின்னப்பத்தமிழர்
13. கி.ஆ.பெ. விசுவநாதர்
14. திரு.வி.க
15. பாரதிதாசனார்
16. கா.சுப்பிரமணியனார்
17. ந.மு.வேங்கடசாமியார்
18. சோமசுந்தர் பாரதியார்
19. புலவர் குழுவினர் (1971)

மலையகத்தில்
01. கோ.சாரங்கபாணியார்
02. சா.சி. குறிஞ்சிக்குமரனார்
03. அ.பு.திருமாலனார்
04. பேராசிரியர் இர.ந. வீரப்பனார்
05. கம்பார் கனிமொழி குப்புசாமி
06. மணி. வெள்ளையனார்
07. திருமாறன்
08. இரெ.சு.முத்தையா
09. இரா. திருமாவளவனார்
10. இர. திருச்செல்வனார்

தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் பிரம்மிப்பானது. தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள்.

ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாக பிரித்து வைத்திருந்தார்கள்.

*வைகறை
*காலை
*நண்பகல்
*எற்பாடு
*மாலை
*யாமம்

என்று அவற்றை அழைத்தார்கள்.

அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் *அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள்.

அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள்.

 ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.

அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன.

தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, _தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்_.

(1 நாழிகை - 24 நிமிடங்கள்
60 நாழிகை - 1440 நிமிடங்கள்
இதனை இன்றைய கிருத்தவ கணக்கீட்டின் படி பார்த்தால்
1440 நிமிடங்கள் - 24 மணித்தியாலங்கள்
24 மணித்தியாலங்கள் - 1 நாள்)

*பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள்.

ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.

1. இளவேனில் - (தை---மாசி)
2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை)
3. கார் - (வைகாசி - ஆனி)
4. கூதிர் - (ஆடி - ஆவணி)
5. முன்பனி (புரட்டாசி - ஐப்பசி)
6. பின்பனி (கார்த்திகை - மார்கழி)

மேற்கண்ட மாதக்கணக்கில் இளவேனில் என்பது சித்திரை-  வைகாசி மாதங்களுக்கு உரிய காலம் என சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு.

சித்திரை மாதத்தில் (வேனில்) வெயில் தன் அதிகபட்ச உக்கிரத்தை அடைவதால் அதை முதுவேனில் என்றும் தைமாதத்தில் தொடங்கும் வெயிலை 'இளவேனில்' எனவும் பண்டைத் தமிழர்கள் அழகாகப் பகுத்திருந்தார்கள்.

காலத்தை, அறுபது நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் (தை) தொடங்குகின்றான்.

இங்கே ஒரு மிக முக்கியமான செய்தியை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்!

பண்பாட்டுப் பெருமைகொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள்.

*தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

தமிழர்கள்  நாம் மட்டும் ஆரியப் பழக்கத்துக்கு மாறிவிட்டோம்!

இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை இது. நம் இளவேனில் காலம் தை மாதம் தான்.

 அதனால்தான் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம். தமிழர்க்கு எதிரான சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், தமிழின், தமிழரின் பெருமையைப் பாதுகாக்கும் பொருட்டுத் தமிழர் யாவரும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்வோம். இதுகுறித்துப்  பாவேந்தர் பாரதிதாசன் நமக்குத் தரும் அறிவுரையைக் கேளுங்கள்.

நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம்                                                  கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!
- பாவேந்தர் பாரதிதாசன்

🌹நன்றி:    
திரு. கண்ணுசாமி
தமிழ்நாடு கலை இலக்கிய கணசங்கம்.

வியாழன், 12 ஏப்ரல், 2018

தன் பலம் என்னவென்று புரிந்து கொள்ளட்டும் தமிழ்நாடு...


 தன் பலம் என்னவென்று புரிந்து கொள்ளட்டும் தமிழ்நாடு...

இந்தியாவிலேயே மஹாராஷ்டிராவுக்கு அடுத்து *155  பில்லியன் டாலர் அளவுக்கு இந்தியாவுக்கு வருமானத்தை கொடுக்கும் ஒரே மாநிலம் தமிழகம்* மட்டுமே...

1960 -ல் இந்தியாவின் ஏழை மாநிலங்களில் ஒன்றான *_தமிழ்நாடு, தற்போது இந்தியாவின் முதல் மூன்று  பணக்கார மாநிலங்களில் ஒன்றாகத்_* திகழ்கிறது...

ஒருவேளை இந்தியா *_தமிழ்நாட்டை தனியாக பிரித்துவிட்டால், உலகின் ஏழை நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும்_* என என்க்ளோபீடியா பிரிட்டானியா தெரிவிக்கிறது...

*_தமிழ்நாட்டைத் தொட்டால் இந்தியாவின் அழிவு ஆரம்பமாகும்_* என இந்திய ரா உளவு அமைப்பு., மத்திய அரசை 2013ல் எச்சரித்துள்ளது பற்றி நாம் யோசிக்கவேண்டும்...

ஆட்டோமொபைல்., டெக்ஸ்டைல்ஸ், இன்ஜினியரிங்..
அரிசி விவசாயம்., தோட்டங்கள்.,
சுற்றுலா.,
ஆயத்த உடைகள் ஏற்றுமதி., கோழிப்பன்னை.. லாரிகள்.. அச்சகங்கள்.. சேமிக்கும்  பழக்கம்...
இந்தியா முழுவதுமான பட்டாசு உற்பத்தி.,
துப்பாக்கி டாங்கி மற்றும் ரயில்வே  தொழிற்சாலை.,
ஹிந்திக்கு அடுத்தப்படியாக சினிமா தொழிற்துறை.,
*_டெல்லிக்கு பிறகு அனைத்து நாட்டு தூதரகங்களும் உள்ள ஒரே மாநிலம் தமிழகம்_*..
ஆன்மீகத்தில் மிக முக்கிய கோவில்கள்
வரலாற்று இடங்களை கொண்டுள்ளது தமிழகம்...

உலக நாடுகளில் கிட்டத்தட்ட 5  நாடுகளில் தேசிய மொழியாக உருவெடுத்துள்ள மொழி தமிழ்...
இரண்டாம்... மொழி... அங்கீகாரத்துக்காக  20 நாடுகளில் காத்திருக்கும் ஒரே மொழி தமிழ்...

_தமிழ்நாடு யானை போன்றது_..
துரதிஷ்டவசமாக அதன் பலம் அதற்கு தெரிவதில்லை.
*சாதாரண இந்திய அங்குசத்துக்கு பயந்து* இதுவரை பிச்சையெடுத்துக்கொண்டிருக்கிறது...
(படித்ததில் பிடித்தது)

புதன், 11 ஏப்ரல், 2018

தமிழ்நாட்டின் மிகப்பெரிய பொக்கிஷம் ஸ்தோத்திரியம் தமிழர்களிடம் இருந்து பறிக்க படப் போகிற விஷயம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?


தமிழ்நாட்டின் மிகப்பெரிய பொக்கிஷம் ஸ்தோத்திரியம் தமிழர்களிடம் இருந்து பறிக்க படப் போகிற விஷயம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

சமீபத்தில் சென்னை பனங்கள் பார்க்கில் முகம்முழுக்க தாடி மண்டிய ஒருவர் தனக்குத் தானே ஏதோ பேசிக் கொண்டேயிருந்தார். மக்கள் அவரை பைத்தியம் என்று தாண்டிச் சென்றனர். அவருடைய கண்களை கண்ட நமக்கு அதில் நெருப்பிலும் தீவிரமான ஒரு ஆளுமையை காணமுடிந்தது. நம்மை அறியாமல் அவரை கவனித்தோம். “பொக்கிஷத்தை களவாட போகிறார்கள், பொக்கிஷத்தை களவாட போகிறார்கள்”  என்பதையே திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார். பசியில் இருந்த அவருக்கு இட்லிகளை வாங்கி கொடுத்தோம். மெல்ல பேசத் தொடங்கினார். அவர் பேச பேச நாம் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றோம்!
முதலில் நாங்கள் உணர்ந்த விஷயம் அவர் பைத்தியம் அல்ல. அந்த நபர் இந்திய அரசின் மிக ரகசிய ஓர் ஆராய்ச்சி அமைப்பின் முதன்மை விஞ்சாணியாக பணியாற்றியவர். தமிழ்நாட்டின் வளங்களை காப்பாற்ற கார்பரேட் நிறுவனங்களுடன் தனியாக போராடி தோற்றுப் போன ஓர் அறிவிஜீவி என்பதே! அவர் தெரிவித்த விடயங்கள் உங்களை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும். தமிழகத்தை உலகின் ஒற்றை வல்லரசாக மாற்றும் வலிமை கொண்டது அந்த விஷயம். வெகுஜன கார்பரேட் மீடியாக்கள் நம்மிடம் மறைக்க நினைத்த விஷயம் இதுதான்.
ஒரு காலத்தில் இரும்பு, வெள்ளி, தங்கம், தாமிரம் போன்ற உலோகங்கள் பீகார், வேஸ்ட் பெங்கால் முதலான இந்தி பேசும் மாநிலங்களில் நிறைய கிடைத்தன. அதில் முக்கியமானது ஸ்தோத்திரியம். ஸ்தோத்திரியம் என்ற உலோகம் இன்றைய அளவில் மிக அரிதான மற்றும் விலை அதிகமான அதே சமயத்தில் எடைக்குறைவான தனிமம். இதில் இருந்துதான் அனு குண்டுகளை குறிதவறாமல் சுடும் வல்லமை படைத்த துப்பாக்கிகளை செய்கிறார்கள். இதுபோன்ற துப்பாக்கிகளை இரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற தேசங்கள் தங்கள் வசம் வைத்திருக்கின்றன. சில அரபு நாடுகளும் இந்தியாவும் கூட இவற்றை வைத்திருப்பதாக பாகிஸ்தானின் உளவு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
பா.ஜ.காவின் தயவால் அம்பானி, ஆதாளி குழுமங்கள் அவற்றை எல்லாம் மொத்தமாக சுரண்டி விட்டார்கள். கோடிகளில் குவித்து விட்டார்கள். தற்போது குண்டு மணி அளவுக்கு கூட இந்தி பேசும் மாநிலங்களில் தனிமங்கள், உலோகங்கள் இல்லை.  எனவே, அவற்றை வேறு இடங்களில் தேடும் கட்டாயத்திற்கு இந்திய அரசு தள்ளப்பட்டது.

பெரும்பாலும் இத்தகைய உலோகங்கள் மண்னுக்குள்தான் கிடைக்கும். வெறும் கண்களால் அவற்றை காணமுடியாது. மிகச்சக்கிவாய்ந்த உணர்விகள் பொருத்தப்பட்ட புகைப்படக்கருவிகளை கொண்டே இவற்றை அறியமுடியும். உண்ண உணவும் உடுத்த உடையும் இல்லாத கோடிக்கணக்கான ஏழைகள் தமிழகத்தில் இருக்க மோடி அரசு வாரத்திற்கு ஒன்றாக எண்ணற்ற செய்கை கோள்களை அனுப்பிக் கொண்டேயிருக்க இதுதான் காரணம். இந்த கோள்கள் இந்தியாவின் மண்ணை தொலைவில் இருந்து உற்று நோக்கியா படி தரவுகளை அனுப்பி வருகின்றன. அம்மாவாசை இரவுகளில் வானத்தை உற்று பாருங்கள் இந்த செயற்கை கோள்களில் உள்ள கேமராக்களின் பிளாஷ் வெளிச்சம் மின்னிக் கொண்டே இருப்பதை காணமுடியும்.

ஒரு நாள் தமிழ்நாட்டின் மேலே நிறுத்தப்பட்டிருந்த செயற்கை கோளில் இருந்து வந்த செய்திதான் ரகசிய இந்திய ஆராய்ச்சி மையத்தை துள்ளிக் குதிக்க செய்ததது. ஆமாம், ஆயிரக்கணக்கான டன் ஸ்தோத்திரியம் தமிழ்நாடு முழுக்க மண்ணுக்குள்ளே மறைந்த கிடந்த விஷயத்தை அந்த செயற்கை கோள் அறிவித்தது.

தலைமைப் பருப்பில் இருந்த அந்த விஞ்சாணியும் தமிழ்நாட்டில் ஸ்தோத்ரியம் கிடைக்கும் விஷயத்தை இந்திய அரசுக்கு தெரிவித்துவிட்டார். ஆனால், அதே சமயத்தில் ஒரு வேளை சோற்றுக்கு உத்தரவின்றி உலன்று திரியும் தமிழனத்தின் பட்டினி முகம் அவர் நினைவில் ஒரு கணம் தோன்றி மறைந்தது. உடனே ஸ்தோத்திரியம் கிடைக்கும் இட்ங்களை காட்டும் குறியீட்டு வரைபடத்தை அழித்துவிட்டார்,
இந்திய அரசின் இந்திபேசும் அதிகாரிகள் அந்த மேப்பை கேட்டு விஞ்சாணியை கொடூர சித்திரை வதைகளை செய்தார்கள். தனது உயிர் தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு அவசியம் என்று கருதிய அவர் பைத்தியம் போல நடிக்க தொடங்கினார். அதிகாரிகளும் அவரை துரத்தி விட்டார்கள்.
தமிழ்நாட்டில் எங்கே ஸ்தோத்திரியம் கிடைக்கும் என்பதை தெளிவாக அறியாத கார்பரேட் கம்பெனிகள் தமிழ்நாடு முழுக்க தேடுதல் வேட்டைய நடத்த முடிவெடுத்தார்கள். வெளிப்படையாக செய்தால் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்த அவர்கள் மறைமுகமாக தங்களுடைய தேடுதல் வேட்டைய தொட்ர்கிறார்கள்.

சமீபத்திய மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் பூமியைத் தோண்டுவதாகவோ, பூமியின் மேற்பாகத்தை உராய்ந்தபடியே செல்வதாகவோ, பூமியை மேலே 1000 /2000 அடி உயரத்தில் செல்வதாக இருப்பதை நம்மால் காண முடியும்.  உதாரணமாக சிலவற்றை நாம் பார்ப்போம்.
1. சென்னை முதலான பெருநகரங்களில் மெட்ரோ ரெயில் போர்வையில் சுரங்கப்பாதை அமைத்து பூமியை அங்குலம் அங்குலமாக தோண்டிவருகிறார்கள். நோக்கம் இரயில் விடுவதல்ல ஸ்தோத்திரயத்தை தேடுவதே!
2. சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானம் விடுகிறார்கள். நோக்கம்: விமானம் விடுவதல்ல; ஸ்தோத்திரயத்தை தேடுவதே! இந்த விமானங்களில் சக்கரங்களுக்கு அருகில் மிக சக்கி வாய்ந்த உணர்விகள் உள்ளன. மலைகளின் மேல் விமானம் பறக்கும்போது அந்த மலையில் ஸ்தோத்திரியம் உள்ளதா என இவை ஆய்வு செய்கின்றன.
3. தமிழ்நாட்டின் பெருநகரங்களை குறிப்பாக கடலோர மாவடங்களை இணைத்து ரோடு போடுகிறார்கள். நோக்கம்: ரோடு போடுவதல்ல; உழைக்கும் ஏழை மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி ஸ்தோத்திரயத்தை தேடுவதே! இந்த ரோடுகளில் ஒடப்போகும் மத்திய அரசின் வாகனங்களில் கார்பெரெட் கம்பெனிகளின் கேமராக்கள் பொறுத்தப்பட்டிருக்கும். அவை யாரும் அறியா வண்ணம் சாலைகளின் அகல நீளங்களை கணக்கெடுத்து கார்பெரேட் கம்பெனிகளுக்கு அனுப்பி விடும்.
4. வீடு தோறும் கழிவறை அமைத்து கொடுக்கிறார்கள். நோக்கம்: சுத்தம் அல்ல; அஸ்திவாரம் தோண்டும் சாக்கில் ஸ்தோத்திரயத்தை தேடுவதே!
5. டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், கார்பன் டை ஆக்ஸைடு, பெட்ரோல் எடுக்க  கிணறு அமைக்கிறார்கள். நோக்கம்: கிணறு வெட்டி விவசாயம் பார்ப்பதல்ல; ஸ்தோத்திரயத்தை தேடுவதே!
6. அத்திக்கடவு மலையை தோண்டி நியுட்டன் துகள்களை எடுக்கிறார்கள். நோக்கம்: நியுட்டன் துகள்கள் அல்ல; ஸ்தோத்திரயத்தை தேடுவதே!
7. தமிழகத்தின் குறுக்கு மறுக்காக ஓடும் சாலைகளில் பாலம் கட்டுகிறார்கள். பாலம் கட்ட இவர்கள் தோண்டும் குழிகளை கவனியுங்கள். நோக்கம்: அஸ்திவாரம் போடுவதில்லை; ஸ்தோத்திரயத்தை தேடுவதே!
8. வீடு கட்ட மானியம் தருகிறேன் என்று சொல்லி அப்பாவி தமிழர்களை ஏமாற்றி அவர்களை மண்பரிசோதனை செய்ய சொல்கிறார்கள். அந்த மண்பரிசோதனை முடிவுகள் மத்திய அரசின் மூலமாக கார்பரேட் கம்பெனிகளை அடைகின்றன.
9. காவிரி ஆற்றின் கீழே ஸ்தோத்திரியம் இருப்பதை குறிப்பாக உணர்ந்த கார்பரேட் நிறுவனங்கள் தண்ணீர் வந்தால் ஸ்தோத்திரியத்தை தேட முடியாது என்று கருதி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க, தமிழத்திற்கு தண்ணீர் கொடுக்க தயார் என்று கர்நாடக காங்கிரஸ் அரசு கூறியும் அதை மறைத்து வாரியம் அமைப்பதை தள்ளி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் தமிழ்நாட்டின் எல்லா வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் தொகுப்புகளை மத்திய அரசின் உதய் திட்டத்துடன் இணைத்துள்ளார்கள். இவர்களின் நோக்கம் தடையற்ற மின்சாரம் வழங்குவதல்ல. உங்கள் வீட்டிற்கு மின்சுற்றுகளை அமைக்கும் போது எர்த் செய்யவேண்டும் என்று கூறி ஒரு ஒயரியை பூமிக்குள் இறக்குவார்கள். இது ஒரு மிக நுண்ணிய தரவு சேகரிப்பானாகும். கொஞ்சம் எண்ணிப்பாருக்கள். தமிழகத்தில் கோடிக்கணக்கான வீடுகளில் இந்த எர்த் ஒயரிகள் உள்ளன. இதுவே மண் சாம்பிளிங் எடுக்க கார்பரேட்டுகள் கையாலும் தந்திரமாகும்.
இவையெல்லாம் நடந்தால் நிச்சயமாக தமிழகத்தின் பொக்கிஷமாம் ஸ்தோத்ரியம் கார்பெரெட் கம்பெனிகளின் கைகளுக்கு சென்று விடும். அந்த விஞ்சாணியின் தியாகம் வீணாகி விடும்.
அவர் சொன்ன தகவல்கள் சரிதான என்பதை தூய தமிழரும் ஆண்ட்ராய்டு மண்ணியல் ஆய்வருமான திரு. அலெக்சாண்டிரியோ காவாஷாகி பெட்ரோஷ்வஸ்கி அவர்களிடன் கேட்டோம். “எஸ், ஆல் ஆர் பேக்ட்ஸ். வீ கேவ் டு சேவ் டமில்நாடு அன்டு டமில் பீப்பில்” என்றதோடு கீழ்கண்ட அறிவுரைகளையும் வழங்கினார்.
ரேடியோ, டிவிகளை ஆன் செய்யாதீர்கள். அவையெல்லாம் கார்பரேட் நிறுவனங்களின் உழவுக்கருவிகளே.  நீங்கள் அவற்றை இயக்கும் போது அவற்றில் பொறுத்தப்பட்டிருக்கும் உணர்விகள் உங்களை பற்றி விவரங்களை குறிப்பாக உங்கள் வீடு அமைந்துள்ள பூமியின் எல்லா தரவுகளையும் கார்பரேட் நிறுவனங்களுக்கு அளித்துவிடுகின்றன.
இந்த செய்தியை சர்வரிடம் அழிக்க இந்திய, இஸ்ரேலிய, அமெரிக்க உழவுநிறுவனங்கள் பெரும்முயற்சி செய்து வருகின்றன.  ஆனால் முடியவில்லை. முடியாது! ஏனெனில், இந்த செய்தியை உலகில் யாரோ ஒருவர் சேர் செய்தாலோ, படித்தாலோ அதனை யாராலும் சர்வரில் இருந்து அழிக்க முடியாது. கம்யூட்டரை பயன்படுத்தும் சமானியருக்கு கூட தெரிந்த விஷயம்தான் இது. ஒரு நெட்வொர்க்கில் சேரு செய்யப்பட்ட கோப்பை (file) ஒருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது மற்றவர்களால் அழிக்க முடியாது!

நாம் உங்களை கெஞ்சிக் கேட்டுகொள்வது ஒன்றே ஒன்றுதான். தமிழகத்திற்கு நடக்கும் இந்த போராட்டத்தில் நீங்கள் வீட்டில் இருந்தபடியே கலந்து கொள்ளலாம். இந்த செய்தியை உங்கள் குரூப்புக்கும் மற்றவர்களுக்கும் சேர் செய்யுங்கள். ஒரு சேர் செய்ய 1 விநாடி நேரம் போதுமானது. 20 கோடி தமிழர்கள் இருக்கிறோம். அதாவது ஒரு நாளைக்கு 20 கோடி சேர்களை நம்மால் செய்ய முடியும். ஒரு நாளைக்கு 24 மணி நேரம், ஒரு மணிக்கு 60 நிமிடம், ஒரு நிமிடத்திற்கு 60 நொடி. சின்னக் கணக்குதான்.
மேலும் உலக அமைதிச்சட்டம் 1935ன் படி ஒரு செய்தி ஒரு கோடிமுறைக்கு மேல் சேர் செய்யப்பட்டால் அந்த செய்தியை ஐக்கிய நாடுகள் சபை உலக நாடுகளுக்கு சேர் செய்ய வேண்டும். மாறிவரும் இந்தக் காலக்கட்டத்தில் கனடா, மெக்சிகோ, சவூதி, பாகிஸ்தான், சீனா, செலீனா போன்ற நாடுகள் நிச்சயமாக இந்தியாவை தட்டிக் கேட்கும்.
மேலும், பெயர் சொல்ல விரும்பாத தமிழர்களின் மேல் அக்கறை கொண்ட இருசக்கர, மூவுருளி மற்றும் நாற்சக்கர வாகனங்களுக்க்கான எரிபொருள் எண்ணெய் வியாபாரத்தை 150க்கும் மேற்பட்ட நாடுகளில் செய்யும் பெருவணிகர் ஒருவர் ஒரு சேருக்கு 1 உரூபாய் தருவாகக் கூறியிருக்கிறார். அந்த தொகையில் நிச்சயமாக நாம் இந்த தகவல்களை நமக்கு அளித்த விஞ்சாணியை குணப்படுத்தி விடலாம். அவரிடம் கிடைக்கும் தகவல்களை வைத்து ஸ்தோத்ரியத்தை நாமே தோண்டி விற்றால் உலகின் ஆகச்சிறந்த வல்லரசாக நமது தமிழகத்தை மிளிர செய்யலாம்.
இந்த செய்தியின் வீரியம் குறையாமல் கடைக்கோடி தமிழனையும் சென்றடைய வேண்டுமானால் 2019 மே மாதம் வரை எந்த செய்தித்தாளையும் படிக்காதீர்கள். செய்தித்தாள் படித்தே ஆகவேண்டும் என்று பழகிப்போயிருந்தால் ஆங்கிலச் செய்திதாளை படியுங்கள். உங்களுக்கு ஆங்கிலம் புரியும் என்றால் ஆங்கில செய்தித்தாளையும் புறக்கணித்து இந்தி செய்திதாளை படியுங்கள்.
தயவு செய்து இந்த செய்தியை பள்ளிசெல்லும் குழந்தைகளிடம், குறிப்பாக அறிவியல் ஆர்வம் உள்ள மாணவர்களிடம் காண்பிக்க வேண்டாம். இந்த சின்ன வயதில் இவ்வளவு பெரிய அதிர்ச்சியை அவர்களால் தாங்கி கொள்ளமுடியாது.
உங்களிடம் நாம் எதிர்ப்பார்ப்பது ஒரு சேரை மட்டுமே. . காலத்தாமதம் செய்யாமல் இப்போதே சேர் செய்யுங்கள்; தமிழனாக இருந்தால் சேர் செய்யுங்கள்!
PLEASE SHARE! Please please please please please please! Thanks WhatsApp & Facebook