வியாழன், 31 ஜனவரி, 2019

88 முறைதவறிய உறவுகள், நிர்வாண போஸ்! ராஜ குடும்பத்திற்கு அவமானம் ஏற்படுத்திய முதல் இளவரசி


88 முறைதவறிய உறவுகள், நிர்வாண போஸ்! ராஜ குடும்பத்திற்கு அவமானம் ஏற்படுத்திய முதல் இளவரசி

மேகன் மெர்க்கல் யுகத்திலேயே இத்தனை கட்டுப்பாடுகள் கொண்ட ராஜ குடும்பத்தில், 1963இலேயே ஒரு இளவரசி எண்ணிப்பார்க்கக்கூட இயலாத அளவிற்கு முறை தவறிய உறவுகளை வைத்துக் கொண்டு ராஜ குடும்பத்திற்கு வெளிப்படையாக அவமானத்தைக் கோண்டு வந்த முதல் இளவரசி என்னும் பெயரை பெற்றிருக்கிறார் என்பது உண்மையாகவே அதிர்ச்சியளிக்கும் ஒரு செய்திதான்.

Margaret Whighamஆகப் பிறந்து அமெரிக்க செல்வந்தர் ஒருவரை மணந்து மூன்று குழந்தைகளுக்கு தாயான Margaret, அவரை விவாகரத்து செய்துவிட்டு பிரித்தானிய இளவரசரான Ian Campbellஐ மணந்து Margaret Campbell ஆனார்.

திருமணமான குறுகிய காலத்திலேயே, இளவரசர் Ian Campbellக்கு Margaretமீது சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.



Margaret வீட்டிலிருந்த ஒரு பீரோவை தட்டான் ஒருவர் உதவியுடன் உடைத்துப் பார்த்த இளவரசருக்கு பெருத்த அதிர்ச்சி காத்திருந்தது.

Margaret Campbellஇன் பீரோவுக்குள் ஏராளமான காதல் கடிதங்களும், பல்வேறு ஆண்களுடன் Margaret பாலுறவு கொள்ளும் புகைப்படங்களும் கொட்டிக் கிடந்தன. அந்த புகைப்படங்களில் ஒன்றில் நிர்வாண மனிதன் ஒருவருடன், Margaret முத்துமாலை ஒன்றை அணிந்திருக்கும் படம் மிகவும் புகழ் பெற்றது.

அதாவது Margaret நிர்வாணமாக முத்துமாலை ஒன்றை மட்டும் அணிந்திருந்தார். கட்டுப்பாடுகள் நிறைந்த ராஜ குடும்பத்தில் இப்படி ஆபாசப் பெண் ஒருவர் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



பத்திரிகைகள் Margaretஐ Argyllஇன் அசிங்க இளவரசி என்றே அழைத்தன. ஏற்கனவே பிரித்தானிய மாகாணச் செயலரான Profumo என்னும் ஒருவர், மொடல் பெண் ஒருவருடன் தவறான உறவு கொண்டிருந்த விடயம் பிரித்தானியாவை உலுக்கிக் கொண்டிருந்த அதே நேரத்தில், Margaretஇன் அந்த தலையில்லா மனிதன் என்ற புகைப்படம் இன்னும் அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தியது.

அந்த தலையில்லா மனிதன் யார் என கண்டறிய பிரித்தானிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் வெற்றிபெறவில்லை.

அதோடு இல்லாமல் இளவரசரும் தன் பிள்ளைகள் இருவரும் தனக்கு பிறக்கவில்லை என Margaret மீது குற்றம் சாட்டினார்.



Margaret, Ian Campbell விவாகரத்து வழக்கு பல அதிர்ச்சித் தகவல்களை வெளிக்கொண்டு வந்தது.

அமைச்சர்கள் இருவர், ராஜ குடும்ப உறுப்பினர் மூவர் உட்பட Margaret 80 பேருக்கும் அதிகமான ஆண்களுடன் தவறான உறவு வைத்திருந்தது தெரியவந்தது. பிரித்தானிய ராஜ குடும்ப வரலாற்றிலேயே வெளிப்படையாக அவமானம் சம்பாதித்த முதல் இளவரசி Margaret என்பது குறிப்பிடத்தக்கது.

விவாகரத்து வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி Lord Wheatley, Margaret முற்றிலும் ஒழுக்கம் கெட்ட ஒரு பெண் என்றும், அவளுடைய பாலியல் இச்சைகளை ஏராளமான ஆண்களால் மட்டுமே தணிக்கமுடியும் என்றும் கூறியிருந்தார்.








சனி, 26 ஜனவரி, 2019

குடியரசு தினம் மலர்ந்த வரலாறு


குடியரசு தினம் மலர்ந்த வரலாறு

இந்தியா (India) அல்லது அதிகாரபூர்வமாக இந்தியக் குடியரசு, தெற்காசியாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்திய துணைக்கண்டத்தின் பெரும் பகுதியை தன்னுள் அடக்கியுள்ளது. இந்தியா பாரதம் என்றும் அழைக்கப்படுகிறது.  இந்தியா என்ற பெயர் சிந்து நதியின் பெயரிலிருந்து பெறப்பட்டது.

இந்தியப் பெருநிலம் தெற்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே அரபிக் கடல், கிழக்கே வங்காள விரிகுடா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் எல்லை நாடுகளாக மேற்கே பாக்கித்தான், வடக்கே பூட்டான், மக்கள் சீனக் குடியரசு, நேபாளம், கிழக்கே வங்காளதேசம், மியான்மர் ஆகியவை அமைந்துள்ளன. இலங்கை, மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் இந்தியப் பெருங்கடலில் இந்தியப் பெருநிலம், மற்றும் இலட்சத்தீவுகளுக்கு அண்மையில் அமைந்துள்ளன. இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாய்லாந்து, இந்தோனேசியாவின் சுமாத்திரா ஆகியவற்றுடன் அந்தமான் கடலில் கடல் எல்லையைக் கொண்டுள்ளன.

பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு. இந்தியா மொத்தம் 7,517 கிமீ (4,700 மைல்) நீளக் கடல் எல்லைக் கொண்டது. 110 கோடி மக்கள் தொகையைக் கொண்டு உலகின் இரண்டாமிடத்தில் இந்தியா உள்ளது. பொருளாதாரத்தில் பொருள் வாங்குதிறன் சமநிலை அடிப்படையில் நான்காவது இடத்தில் இருக்கின்றது. பண்டைய நாகரிகங்கள் பல இந்தியாவிலேயே தோன்றின. சிந்து சமவெளி நாகரிகம், அரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகங்கள் போன்றவை இவற்றுள் அடங்கும். இந்து சமயம், புத்தம், சமணம், மற்றும் சீக்கியம் ஆகிய நான்கு முக்கிய மதங்கள் இந்தியாவிலேயே தோன்றின. பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளினால் கைப்பற்றப்பட்டு, 1947, ஆகஸ்ட் 15 அன்று விடுதலை பெற்றது. பின்னர் 1950, சனவரி 26 அன்று குடியரசாக அறிவிக்கப்பட்டு உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாகத் திகழ்கிறது.

குடியரசு தினம் மலர்ந்த காரணம்

1929-ம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய மாநாட்டில், "பூரணசுயராச்சியமே நமது நாட்டின் உடனடியான இலட்சியம்" என்ற தீர்மானம் நிறைவேறிற்று. அதனை செயல்படுத்த 'எங்கு, எப்போது எவ்வாறு அகிம்சாபூர்வமான வரி கொடா இயக்கத்தைத் திரும்பவும் தொடரலாம் என்கிற விவரங்களை காந்திஜி அவர்களே நிர்ணயித்து அறிவிப்பார்' என்ற ஒருமனதான மற்றொரு தீர்மானத்தின்படி காந்திஜிக்குக் காங்கிரஸ் மகாசபை முழு அதிகாரம் வழங்கியது.

அதே நேரத்தில் நாட்டில் நிலவிய பொருளாதார மந்த நிலையும், அதன் விளைவாகப் பெருகிவிட்ட வறுமையும், மக்களிடையே கொந்தளித்த தேசிய ஆர்வமும் ஒருங்கே திரிந்து, நாட்டில் ஆங்காங்கே தீவிரவாதக் குழுவினர் அரசுக்கு எதிராக வன்முறையில் இறங்கினர். அச்சூழ்நிலையில் சட்ட மறுப்பு இயக்கத்தைக் காங்கிரஸ் துவக்கி வைத்தால் வன்முறைச் சம்பவங்கள் தீவிரமடையக் கூடிய அபாயத்தை காந்திஜி உணர்ந்தார். ஆகவே, தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்ப எவ்வகையான இயக்கத்தை மேற்கொள்வது என்பகு குறித்து காந்திஜி தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார்.

1930, ஜனவரி 26-ம் தேதி- முதல் குடியசு தினம்!

முதற் கட்டமாக, நாடு முழுவதும் ஜனவரி 26-ம் தேதி (1930) அன்று அமைதியாகச் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அந்த நாள் இந்தியா சுதந்திரம் பெற்ற பின் குடியரசு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி அன்றைய தினம் நகர்ப் புறங்களிலும் கிராமங்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்திஜி வழங்கிய சுதந்திர தினப் பிரக்ஞையை எடுத்துரைத்தனர்.

ஆங்காங்கே பல்லாயிரக்கணக்கான மக்கள் மேற்கொண்ட அந்த உறுதி மொழியின் வாசகம் இதுதான்.

"நமது தாய் நாட்டிற்கு நான்கு விதத்திலும் கேடு விளைவித்து வரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகமே ஆகும்." ஆங்கிலேய ஆட்சியின் கீழ், நாட்டின் பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் ஆகிய நான்கு வித சீரழிவைக் குறிப்பாக அவ்வாசகம் அமைந்திருந்தது.

அன்று, அதாவது சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய சுதந்திர தின நாள் தான்... சுதந்திரம் பெற்ற பின் அந்த நாளை குடியரசு தினமாகக் கொண்டாட 26 நவம்பர் 1949-ல் நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது 1950-ல்! இதுதான் குடியரசு நாள் தோன்றிய வரலாறு.

ஓங்கி வளர்ந்த கம்பம்தனில் பூக்களைக் கொட்டிக் கட்டி வைத்த கொடிக் கயிறின் முடிச்சு அவிழ்வதற்கு எத்தனை, எத்தனை தியாகிகளின் மனைவிமார்கள் தங்கள் தாலிக் கொடியை இழந்து இந்த வீர சுதந்திரத்தை வாங்கித் தந்திருக்கிறார்கள் என்று இந்த நாளில் நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்!

சுதந்திரமாகப் பறக்கத் துடி துடிக்கும் மூவர்ணக் கொடி உதிர்க்கும் மலர்கள் தியாகிகளின் மனைவியரின் கூந்தலிலிருந்து நிரந்தரமாகப் பிரிக்கப்பட்ட மலர்கள் என்று நம் பிள்ளைகளுக்கு அதன் வலியை உணரச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

வியாழன், 24 ஜனவரி, 2019

பாளையங் கோட்டை வரலாறு


பாளையங் கோட்டை வரலாறு

வெளிக் கோட்டை சுவர் 13 அடி உள் கோட்டை சுவர் உயரம் 18 அடி.

வடக்கு கடைவீதி
 #பாலாஸ்பத்திரியிலிருந்து கிழக்கே #சமாதானபுரம் மகளிர் காவல்நிலையம் வழி தெற்கே
#சேவியர்_பளளி வரை சென்று பாளைபஸ் ஸ்டாண்ட் வழி #கட்டபோம்மன் சிலையோடு வடக்கே  திரும்பி கோட்டை வாசல் பிள்ளையார் கோவில் வழி சித்த மருத்துவ கல்லூரி வழி பாலாஸ்பத்திரியை அடைந்ததாம். கோட்டைச்சுவர்.

கடடபொம்மன் சிலை இருக்குமிடம் தென்மேற்கு கோட்டைக் கொத்தளமாம்.
அதனடியில் படைக் காவல் வீரர்களது அறையிருந்ததாம்.

கோட்டையின் மையப் புள்ளி ஆயிரத்தம்மன் கோவிலாம்.
அதனருகில் தெப்பக்குளம் இருந்ததாம்.

மன்னர் காலத்தல் போருக்குப் போகும் பொழுது நரபலி இட்டார்களாம். நவகண்டம் பலியிடுவார்களாம்.

பின் எருமைபலியாக மாறியதாம்.
எருமைகளைத் தருவதால்.. யாதவர்களுக்கு  ஆயிரத்தம்மன கோவில் முதல் மரியாதையாம்.

ஆயிரம் படை வீரர்கள் தங்கியிருந்து கொற்றவைக் கோயிலாக தாய்க் கோயிலாக வழிபட்டதால் ஆயிரத்தம்மன்  என எண்ணுப் பெயராம்.

எருமை தலை அரக்கனை அழிப்பதே தசரா முதல் நோககம்.

போருக்குச் செல்லும் மன்னர்கள் வடதிசை வழியே செல்வதைப் போல அனைத்து தாய்த் தெய்வங்கள் கோவில்கள் வடக்குவாசலாய் இருக்கின்றனவாம்.

கோபாலசுவாமி இறைவனின் ஆதிப் பெயர் வீரநாராயணன்.

கோவிலுக்கு வடமேற்கே செண்பகமரங்கள் நிறைந்த
செண்பகவனம் என்றும்
புதுப்பேட்டை பகுதி முல்லை வனம் என்றும்
சிவன் கோவில் மேற்குப் பகுதி புன்னைவனம் எனப்பட்டதாம்.

இன்றும் செண்பகவனத் தெரு புன்னைவனத் தெரு இருப்பதை அறியலாம்.

பாளை கோபாலசுவாமி கோவிலுக்கு கிழக்கே ..சிவன கோவிலுக்கு மேற்கே உளள பகுதியில் விஜயநகரப் டேரரசு காலத்தில் 13ம் நூற்றாண்டில் சதாசிவதேவ மகாராயர் காலத்தில் நிறைய செளராஷ்டிர மக்கள் குடியேறினார்கள்.

-பாளையங்கோட்டை ஒரு மூதூரின் வரலாறு நூலில் திரு தொ.ப மற்றும் திரு.ச.நவநீதக்கிருஷ்ணன்

சனி, 19 ஜனவரி, 2019

பறையர் என்பது சாதி அல்ல... இந்த நிலப்பரப்பை ஆண்ட இனம்...


#பறையர் என்பது சாதி அல்ல...
இந்த நிலப்பரப்பை ஆண்ட இனம்...

ஆரியத்திடம் பறையர் இனம் அடிபடியாததால் அந்த இனம் கீழ்த்தரமாக சித்தரிக்கப்பட்டது.

தற்போது உள்ள உயர்சாதி போல பறையர் இனம் அடங்கி சேவை செய்து இருந்திருந்தால்...

இன்று அவர்களே பார்ப்பனியத்திற்கு
அடுத்த நிலையில் இருந்திருப்பார்கள்.

#நீங்கள்
#சாதிய_பெருமை_பேசுபவர்களா...
அப்படியானால் இதை கேட்டும் படித்தும் பாருங்கள்...

“துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று இந்நான்கல்லது குடியும் இல்லை” - புறநானூறு.335.7-8.

இது தான் தமிழ் இலக்கியம் சொல்லும் வரலாற்று உண்மை. அதாவது வரலாற்றுப்படி தமிழ் சமூகத்தில் குடி முறை மட்டும் தான் இருந்தது. இப்போது உள்ளது போல் சாதி முறை இல்லை.

மேலே குறிப்பிட்டுள்ள குடிகள் மட்டும் தான் இருந்தன. அந்த வகையில் இன்று இருக்கும் பல சாதிகள் பறையர் உட்பிரிவுகள் தான்.

ஆனால் இந்த உண்மையை எளிதில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

1881 மற்றும் 1891 கணக்கெடுப்பின்படி மெட்ராஸ் மாகாணத்தில் மொத்தம் 348 பறையர் பிரிவுகள் இருந்தது கணக்கிடப்பட்டது.


அவற்றில் 111 உட்பிரிவுகள் கீழ்காண்பவை:

1.    வள்ளுவ பறையர்
2.    கொங்கு பறையர்
3.    தோட்டி பறையர்
4.    மொட்டை பறையர் 
5.    ஆசாரி பறையர் 
6.    வேட்டுவ பறையர்
7.    திகிழு பறையர்
8.    மொகச பறையர்
9.    குடிமி பறையர்
10.    அத்வைத பறையர் 
11.    அச்சக்காசினியூர் பறையர்
12.    அத்வைத பறையர்
13.    அய்யா பறையர்
14.    அழக காட்டு பறையர்
15.    அம்மக்கார பறையர்
16.    அங்கல பறையர்
17.    அங்கையன் பறையர்
18.    பூபு பறையர்
19.    சுண்ணாம்பு பறையர்
20.    தேசாதி பறையர்
21.    இசை பறையர்
22.    ககிமல பறையர்
23.    களத்து பறையர்
24.    கிழகத்து பறையர்
25.    கிழக்கத்தி பறையர்
26.    கீர்த்திர பறையர்
27.    கொடக பறையர்
28.    கெங்க பறையர்
29.    கொடிக்கார பறையர்
30.    கொரச பறையர்
31.    குடிகட்டு பறையர்
32.    குடிமி பறையர்
33.    குளத்தூர் பறையர்
34.    மகு மடி பறையர்
35.    மா பறையர்
36.    மரவேதி பறையர்
37.    மிங்க பறையர்
38.    மொகச பறையர்
39.    முங்கநாட்டு பறையர்
40.    நர்மயக்க பறையர்
41.    நெசவுக்கார பறையர்
42.    பச்சவன் பறையர்
43.    பஞ்சி பறையர்
44.    பரமலை பறையர்
45.    பறையக்காரன்
46.    பறையாண்டி
47.    பசதவை பறையர்
48.    பெருசிக பறையர்
49.    பொய்கார பறையர்
50.    பொறக பறையர்
51.    பொக்கி பறையர் 
52.    கூலார் பிரட்டுக்கார பறையர்
53.    ரெகு பறையர்
54.    சம்மல பறையர்
55.    சர்க்கார் பறையர்
56.    செம்மண் பறையர்
57.    சங்கூதி பறையர்
58.    சேரி பறையர்
59.    சிதிகரி பறையர்
60.    சுடு பறையர்
61.    தங்கமன் கோல பறையர்
62.    தங்கப் பறையர்
63.    தங்கினிபத்த பறையர்
64.    தட்டுகட்டு பறையர்
65.    தென்கலார் பறையர்
66.    தெவசி பறையர்
67.    தங்கலால பறையர்
68.    தரமாகிப் பறையர்
69.    தாயம்பட்டு பறையர்
70.    தீயன் பறையர்
71.    தோப்பறையர்
72.    தொப்பக்குளம் பறையர்
73.    தொவந்தி பறையர்
74.    திகிழு பறையர்
75.    உழு பறையர்
76.    வைப்பிலி பறையர்
77.    வலகரதி பறையர்
78.    உறுமிக்கார பறையர்
79.    உருயாதிததம் பறையர்
80.    வலங்கநாட்டு பறையர்
81.    வானு பறையர்
82.    வேட்டுவ பறையர்
83.    விலழ பறையர்
84.    உடும பறையர்
85.    முகத பறையர்
86.    புள்ளி பறையர்
87.    வடுக பறையர்
88.    மலையாளப் பறையர் 
89.    ஏட்டு பறையர்
90.    மதராஸி பறையர்
91.    முறம்குத்தி பறையர்
92.    பறையாண்டி பண்டாரம்
93.    வர பறையர் 
94.    தாத பறையர்
95.    தண்ட பறையர்
96.    தவளைக் காளி பறையர்
97.    தீப் பறையர்
98.    முரசு பறையர்
99.    அம்பு பறையர்
100.    ஆழிய பறையர்
101.    வல்லை பறையர்
102.    வெட்டியான் பறையர்
103.    கோழிய பறையர்
104.    பெரும் பறையர்
105.    அகழி பறையர்
106.    தமிழ் பறையர்
107.    புள்ளை பறையர்
108.    சோழிய பறையர்
109.    வன்னிப் பறையர்
110.    பறைய நாயனார்
111.    பக்கடா பறையர்.

ஞாயிறு, 13 ஜனவரி, 2019

போகியின் வரலாறு


போகியின் வரலாறு!

*சூரிய நாட்காட்டியின் படி, தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.*

*இது தமிழ்நாடு, வடமாநிலங்கள், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பரவலாக கொண்டாடப்பட்டு வருகிறது.*

*இது பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது.இந்த நாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், தேவையற்றவற்றையும் தூக்கி எறியும் நாளாகக் கருதப்படுகிறது.*

*பழமையான துயரமான நினைவுகளை அழித்துப் போக்கும் இப்பண்டிகை "போக்கி' எனப்பட்டது. அந்தச் சொல் நாளடைவில் மருவி "போகி' என்றாகிவிட்டது. கடந்த ஆண்டுக்கு நன்றி சொல்லும் விதமாக கொண்டாடப்படுவது போகிப் பண்டிகையாகும்.*


*போகியன்று, வீட்டின் கூரையில் வேப்பிலை, பூலாப்பூ மற்றும் ஆவாரம் பூ செருகப்படும். அன்றைய தினம், வீட்டில் தேங்கி இருந்த குப்பைகள், தேவையற்ற பொருட்களை வீட்டிலிருந்து தூக்கி எறிவார்கள். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.*


*பல்வேறு தெய்வீகக் குணங்களை தூண்டுவதன் மூலம் ஆன்மாவை உணர்தல், ஆன்மாவை தூய்மையாக்குதல் போன்ற செயல்பாடுகளை இப்பண்டிகை பிரதிபலிக்கிறது.*

*பெரும் பொங்கல், மகர சங்கராந்தி மற்றும் லோரி எனப்படும் பண்டிகைக்கு முந்தைய நாளில் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகுப்படுத்துவார்கள்.*

*பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் அழகாக இருக்கும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும்.*

*போகி அன்று, வைகறையில் 'நிலைப்பொங்கல்' நிகழ்வுறும். வீட்டின் முன்வாயில் நிலைக்குப் மஞ்சள் பூசி, திலகமிட்டு, தோகை விரிந்த கரும்பொன்றைச் சாத்தி நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி வீட்டு தெய்வத்தை வணங்குவர். சிறு மணித்துளிகளில் இது முடிவுறும். இதைக் குடும்பத்தலைவி நடத்துவார்.*

*போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை சமைத்து கடவுளுக்கு படையலிடுவார்கள். மேலும் சிலர் போகி அன்று இறந்தவர்களின் நினைவாக சர்க்கரை பொங்கல், கருவாட்டு குழம்பு வைத்து வழிபடுவார்கள்.*

அனைவருக்கும் இனிய போகி, பொங்கல்
நல்வாழ்த்துக்கள்

புதன், 9 ஜனவரி, 2019

தைப்பொங்கல் பற்றிய தகவல்...


தைப்பொங்கல் பற்றிய தகவல்...

தமிழ் மாதங்களில் ஓரெழுத்து ஒருமொழிப் பெயராய் அமைந்த ஒரே மாதம் "தை"

இதன் பெருமை பல மடங்காகும்.

எல்லாவற்றையும் இணைப்பது என்ற நுட்பத்தில் எல்லா நலங்களையும் வளங்களையும் ஒருசேரக் கூட்டும் மாதமானதால் அதன் சிறப்பு கருதி "தை" எனத் தனித்து கூறப்பட்டது.

நாட்டியம் ஆடும் நிலையில் ஓர் ஒழுங்கான தாளப்பிரிவிற்குத் "தை" என்று பெயர். இதனால் வாழ்வியல் முறையில் வீட்டிற்கும் நாட்டிற்கும் ஓர் ஒழுங்கைக் கற்பிக்கும் மாதமாகத் "தை" உள்ளது எனலாம். ஏனைய மாதங்களுக்கும் பெயர்களுக்கும் இல்லாத இந்நுட்பம் "தை" மாதத்திற்கு மட்டுமே அமைந்திருப்பதால் தான் "தை பிறந்தால் வழி பிறக்கும்" என ஆன்றோர் இம்மாதத்திற்கான சிறப்பைப் பழமொழியாகக் கூறிக் கொண்டாடினர் போலும்.

ஆறு மாதத்திற்கு ஒருமுறை உலகில் நிகழும் இயற்கை மாறுதல் நிகழ்வைச் சூரியனைக் கொண்டே நம் முன்னோர் உணர்ந்ததால் வான மண்டலத்தில் சூரியன் நிலநடுக் கோட்டுக்குத் தெற்கிலிருந்து வடக்கு போகும் இத் "தை" மாதத் தொடக்கத்தை உத்தராயணம் என்றனர். வடக்கிருந்து சூரியன் தெற்கே பயணமாவதைத் தட்சிணாயணம் என்றனர்.

இந்த வகையில் ஆடிப்பட்டம் தேடி விதைத்து வேளாண்மைத் தொழிலைச் செய்யத் தொடங்கிய ஆறாவது மாதத்தில் அறுவடை கண்ட பூரிப்பால் தைதை எனக் குதித்தாடிய மகிழ்வைப் புலப்படுத்த வேண்டி அதைத் தைப் பொங்கலாகக் கொண்டாடினர் எனலாம்.
புதுவரவான நெல்லைக் கண்டதும் எல்லாம் புதுமையாகவே இருக்க வேண்டும் என்ற விருப்பமான தொடர்ச்சியில் புதுப்பானை, புதுக்கரும்பு, புதுமஞ்சள், புத்தாடை போன்ற பொலிவுகள் பொங்கலைத் தோரணங்கட்டி வரவேற்றன. இயற்கையின் உதவியால் இவையெல்லாம் கிடைத்தன என்ற நன்றிப் பெருக்கோடு புத்தரிசிப் பொங்கலிட்டு அதை இயற்கைக்குப் படைத்துத் தானும் சுற்றமும் சூழ இருந்து உண்டு களித்தனர் மக்கள்.

இப்புதுப் பொங்கலுக்குப் பயன்படும் பொருள்கள் யாவும்

மருதம்
முல்லை
நெய்தல்
குறிஞ்சி

நிலங்களின் பங்களிப்பாகும்.

எல்லாம் கூடினால்தான் சுவை கூடும் என்ற ஒற்றுமை உண்மையின் விளக்கமாகவே, ஆக்கிய பொங்கலைச் சூரியனுக்குப் படைக்கும் வழிபாட்டில் பகற்பொழுதாயினும் அறியாமை இருளைப் போக்கும் விதமாகவும் விளக்கேற்றி வைக்கப்படுகிறது. இதுமுதலாக எல்லாம் மங்கலகரமாகவே நடக்கவேண்டும் என்பதை உணர்த்தவே மஞ்சள் கொத்து வழிபாட்டில் சேர்க்கப்படுகிறது.

பொங்கல் பற்றி ஆண்டாள் நாச்சியார் "பாற்சோறு மூட நெய் பெய்து" என்றும், முழங்கை வழிவாரக் கூடியிருந்து உண்டு மகிழ்வதாகத் திருப்பாவையில் குறிப்பிடுகிறார். தனிமை எப்போதும் சுகம் தராது; கூட்டுறவுதான் எல்லா சுகமும் தரும் என்பதால் அந்த எளிய உண்மையையே "கூடியிருந்து" என்ற சொற்களால் ஆண்டாள் கூறியுள்ளார். ஆக தைப்பொங்கலைப் பெண்கள் கூடியிருந்து கொண்டாடினர் என்பது பெறப்படுகிறது.

இவ்வாறு கொண்டாடப்படும் பொங்கல் விழாவிற்கு வணக்கத்தோடு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்ளும் உறவுத் தொடர்ச்சியும் இருந்ததாக ஐங்குறுநூறு என்னும் சங்க இலக்கியத்தால் ஓரளவு உணரமுடிகிறது. இதில் கூறப்படும் வாழ்த்து, அரசனை முன்னிலைப் படுத்தும் வாழ்த்தாகத் தொடங்கிப் பொங்கலுக்குரிய பொருத்தமான சிந்தனையின் வழி சமூகத்தை வாழ்த்தும் வாழ்த்தாக அமைகிறது. நூலின் தொடக்கமாகிய மருதத்திணைப் பாடலை ஓரம்போகியார் என்பவர் பாடியுள்ளார். அகப்பொருள் நிலையில் பெண்கள் பாடுவதாக முதல் பத்துப் பாடல்களும் உள்ளன.

வாழி ஆதன்! வாழி அவினி! என்பதாகவே பத்துப் பாடல்களும் தொடங்குகின்றன. முடிவுடை வேந்தர் மூவேந்தர். மூவரில் சேரமன்னன் ஒருவன் அவினி. அவனது குடிப்பெயர் ஆதன். குடிப்பெயரும் இயற்பெயரும் சேர்ந்த நிலையில் மன்னனை வாழத்திய பிறகு அவனது அரசும், அவனது ஆளுகைக்கு உட்பட்டவையும் வாழ்த்தப்படுகின்றன. இவ்வாழ்த்து யாவும் பெண்களால் பாடப்படுபவை என்பது சிந்திக்கத்தக்கது. நோன்பிருந்து தைந்நீராடி, தக்க கணவரையடைந்து இல்லறத்தை அமைத்துக் கொண்ட தலைமைக்குரிய பெண்கள் தம் அனுபவத்தால் வாழ்த்தும் தகுதிபெற்றவர்கள் என்பதால் ஓரம்போகியார் பெண்கள் வாழ்த்துவதாகப் பாடியது பெண்மையைப் போற்றியதற்கான அடையாளம் எனலாம்.

நல்ல ஆட்சியாளரது ஆளுகைக்குக் கீழேதான் மக்கள் விழாக்கள் கொண்டாடி மகிழ்வோடும் அமைதியோடும் வாழ முடியும் என உணர்ந்த பெண்கள் "வாழி அவினி! வாழி ஆதன்" என முதலில் அரசனை வாழ்த்தினர். பின்னர் வாழ்த்தப்படுபவை யாவும் முன்பின்னாக அமைந்தாலும் அவற்றை ஒருமுகப்படுத்திக் காணும் போதுதான் ஒட்டுமொத்த வீட்டையும் நாட்டையும் ஒழுங்குபடுத்தி அறிந்து கொள்ளலாம். அந்த வகையில் பத்துப்பாடல்களுக்குள் கிடக்கும் வாழ்த்துகள் வரிசைப் படுத்தும்போது பொங்கல் சிந்தனையின் ஏற்றத்தை உணரலாம்.

அரசுமுறை செய்க(8) என்ற வாழ்த்து, ஒரு நாட்டிற்கான நல்ல தலைமைதான் வாழ்த்து பெறமுடியும் என்பதை உணர்த்துவதாக உள்ளது. அந்த அரசு மக்களுக்கான தேவையை நிறைவேற்றுவது கடமையானாலும் அமைதியான வாழ்வைத் தருவதே அதன் முதற்கடமை என்பதை நினைவூட்டும் விதமாக "வேந்து பகை தணிக" (6) என வாழ்த்தப்பட்டது. வேந்தனுக்குப் போரால் வரும் வெற்றிப் புகழைவிட போர் தவிர்த்ததால் அதாவது பகை உணர்ச்சி இல்லாமையால் வரும் சமாதானப் புகழே நிலையானது என்பதால் அவ்வாறு வாழ்த்தப்பட்டது.

அரசனுக்குப் பகை உணர்ச்சி நீங்குவதால் பகைவர்கள் இல்லாமையால் பகைவர்களால் வரும் உள்நாட்டு, வெளிநாட்டுத் தொல்லைகள் நீக்கும் வகையில் மக்கள் அமைதியாக வாழமுடியும். பகைவர்கள் வாழமுடியாமல் போவதால் அவர்கள் பொலிவிழந்து போவதையும் பெண்கள் "பகைவர் புல் ஆர்க" (4) என்று வாழ்த்துகின்றனர்.
இத்தகு நல்ல அரசால் நாட்டில் களவு போன்ற தீமைகள் நடவா என்ற எதிர்பார்ப்பில் "களவு இல்லாகுக" (8) என்றும் "தீது இல்லாகுக" (9) என்றும், "அல்லது கெடுக" (7) என்றும் பெண்கள் வாழ்த்தினர். ஆக அரசு எவ்வழி அவ்வழி குடிகள் என்றபடி நல்லாட்சியின் கீழ் வாழும் மக்கள் நம்பிக்கையோடு வாழும்போதுதான் நன்மைகளும் அறங்களும் ஓங்கும் என்பதால் "நன்று பெரிது சிறக்க" (9) என்றதோடு "அறம் நனி சிறக்க" (7) என்றும் வாழ்த்தப்பட்டது.

அறங்களும் நன்மைகளும் நாட்டில் ஓங்க வேண்டுமானால் சுற்றுப்புறச் சூழல் சிறப்பாக இருக்கவேண்டும் என்பதை நினைவுபடுத்தும் விதமாக "மாரி வாய்க்க" (10) என மழைபெய்தால்தான் வேளாண் தொழிலும் ஏனையவும் சிறக்கும் என்பதன் காரணத்தால் "விளைகவயலே" (2) என்றும் "நெல் பல பொலிக" (1) என்றும் வாழ்த்தப்பட்டது. உணவு உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெற்றுவிட்டால் நாட்டில் பசி, பட்டினி இல்லாமல் போகும் என்பதை உணர்த்தவே பசி இல்லாகுக (5) எனப்பட்டது.

இவ்வாறாக உழவால், உணவால், அறிவால், செல்வத்தால் நிரம்பிய நாடானாலும் நல்ல ஊட்டச்சத்தால் சுகாதாரக் கேடின்றி வாழமுடியும் என்பதைக் கூறவே "பால்பல ஊறுக, பகடு பல சிறக்க" (3) என்றதோடு "பிணிசேண் நீங்குக" (5) என்றும் வாழ்த்தப்பட்டது. இப்படி எல்லா நன்மைக்கும் அரசனே காரணம் என்பதால் அவனது வாழ்நாள் நீடிப்பதன் மூலம் குடிகள் நல்லாட்சியைப் பெறமுடியும் என்பதால் நிறைவாக அரசன் "யாண்டு பல நந்துக" (6) என அவனது வாழ்நாளை நீட்டிக்க வாழ்த்தினர் பெண்கள்.

பெண்கள், நல்லாட்சி செய்யும் அரசனையும் அவனது வாழ்நாளையும் ஆட்சியையும் வாழ்த்துவதன் மூலம் நாடும் வீடும் அமைதியுறும் என்பதைப் புரிந்து கொண்டு வாழ்த்திய ஐங்குறுநூற்றின் வாழ்த்துத் தொடர்கள் யாவும் தைப்பொங்கல் சிந்தனையை எதிரொலிப்பனவாகவே உள்ளன எனலாம்....

புதன், 2 ஜனவரி, 2019

Siege of Madras - 1759 மதராஸ் மீட்பு போர் - 1759


Siege of Madras - 1759
மதராஸ் மீட்பு போர் - 1759

8000 வீரர்களை கொண்ட பிரஞ்சு படைகளை சிதறடித்து மதராஸை மாகாணத்தை மீட்ட
2000 வீரர்களை கொண்ட
'பறையர் ரெஜிமென்ட்' படையின் வரலாறு.

1750-களில் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான அதிகார சண்டை உச்சத்தை அடைந்து இருந்தது. தெற்காசியாவின் முக்கிய வணிக நகரமாகிய 'மதராஸ் மாகாணத்தை' கைப்பற்ற பிரெஞ்சு அரசு திட்டம் தீட்டியது.

மதராஸை கைப்பற்றும் திட்டத்துடன் பிரஞ்சு அரசு போர் வீரன் 'Comte de Lally' யை பாண்டிச்சேரிக்கு அனுப்பியது.

'Comte de Lally' பாண்டிச்சேரியில் இருந்து
Dec 12, 1758 அன்று தனது பிரெஞ்சு படைகளை மதராஸ் நோக்கி செலுத்த துவங்கினார். Lally-யின் ஆக்ரோஷமான படை காரைக்கால், கடலூர் போன்ற ஊர்களை கைப்பற்றி "Fort St George" கோட்டையை நோக்கி முன்னேறியது.

தொடர் வெற்றிகளுடன் ஜார்ஜ் கோட்டையை நோக்கி வந்த பிரெஞ்சு படைக்கு பறையர்கள் செழுமையாக வாழ்ந்த "கருப்பர் நகரம்" எனும் "Black Town" இல் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

கருப்பர் நகரத்தில் 'பறையர் ரெஜிமென்ட் படை'
 பிரெஞ்சுக்காரர்களுடன் கடுமையாக போரிட்டது,
கடுமையான இந்த போரில் பறையர் ரெஜிமென்ட் படையுடன் ராமநாதபுரத்தை சேர்ந்த
 #மருதநாயகம்_சாம்பவர் (Muhammad Yusuf Khan) போர்ப்படை தளபதியாக சண்டை இட்டுள்ளார்.

பிரஞ்சு படைகள் பறையர் போர் படையின் ஆக்ரோஷ தாக்குதலால் முடக்கப்பட்டது. பூர்வீக மண்ணை காக்க பறையர் படை வீரியமாக சண்டையிட்டது. இந்த கடும் போரை ஆங்கிலேய ஆவணங்கள்  "Battle of Black Town" என்று பதிவு செய்துள்ளது.

2000 வீரர்களை கொண்ட பறையர் படையை
 "Black Army" என்று ஆங்கிலேயர்கள் பதிவு செய்துள்ளனர். 1500 பறையர்களையும் குதிரை படையையும் #மருதநாயகம்_சாம்பவர் தளபதியாக நின்று வழிநடத்தி உள்ளார்.

ஆங்கிலேயர்கள்  #மருதநாயகம்_சாம்பவரை  பற்றி தம் ஆவணங்களில் குறிப்பிடுகையில் 'வீரர்களின் அரசன்'- 'King Of Sepoy" என்று பதிவு செய்துள்ளனர்.

67 நாட்கள் தொடர்ந்த இந்த கடும் போரில்
பறையர் படையின் தாக்குதலால் பிரஞ்சு படை முற்றிலும் வீழ்த்தப்பட்டது.

#மருதநாயகம்_சாம்பவர் வழிநடத்திய பறையர் படையின் தாக்குதலில் சிதறிய 'Lally' தலைமையிலான பிரஞ்சு படை Feb 16, 1759-இல் தன்  தோல்வியை ஏற்று கொண்டு பாண்டிச்சேரி
சென்றது.

தெற்காசியாவின் முக்கிய வணிக நகரமாகிய மதராஸில் நடந்த இந்த போர் உலக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. உலக வல்லாதிக்க சக்தி யார் என்பதை தீர்மானித்த போர் என்று வரலாற்று ஆய்வாளர் "Frank McLynn" குறிப்பிடுகிறார்.

இந்த போரில் பறையர்களின் பங்கு அளப்பரியது. ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர் "Elder Smith" இதை குறிப்பிடும் பொழுது "மதராஸ் மீட்பு போரில் மதராஸ் பூர்வ குடி மக்களின் பங்கு சிறப்பு வாய்ந்தது ஏன் என்றால் அவர்கள்  சொந்த மண்ணை காக்க போரிட்டனர்." என்று குறிப்பிடுகிறார்.

இன்று 'தமிழ்நாடு அரசு' தலைமை செயலகமாக செயல் படும் "Fort St George" கோட்டையை காப்பாற்றிய பெருமை பறையர் படையையே சாரும்.

பறையர் படையின் வீரம் செறிந்த இந்த வரலாற்றை நம் அடுத்த தலைமுறையிடம் கொண்டு பொய் சேர்க்க வேண்டியது ஒவ்வொரு பறையரின் கடைமையாகும்.

மதராஸ் மீட்பு போரில் போரிட்ட பறையர்களுக்கு
"Fort St George" கோட்டையில் நினைவு தூண் எழுப்பி ஆண்டுதோறும் Feb-16 இல் அஞ்சலி செலுத்தி மரியாதையை செலுத்த வேண்டும்.

ஆதாரம்;-
Source:

1) History of the Services of the Madras Artillery, with a Sketch ..., Volumes 1-2
By Peter James Begbie

2) An Account of the War in India between the English and French on the Coast of Coromandel from the Year 1750 to the Year 1760 together with a Relation of the late Remarkable Events on the Malabar Coast, and the Expeditions to Golconda and Surat; with the Operations of the Fleet, London: T. Jefferys, 1761,

3) 1759: The Year Britain Became Master of the World. Pimlico, McLynn, Frank

4) A Journal of Siege of Fort St George by J Call Cheif Engineer.

5) A History of the British Army, Vol. II, MacMillan, London, 1899, by Fortescue, J. W.

6) Historical Record of the Honourable East India Company's First Madras Regiment, London: Smith, Elder and Co; 1843

7) https//en.wikipedia.org/wiki/Siege_of_Madras