வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

தெரிந்து கொள்ளுங்கள் பழந்தமிழரின் ஆட்டுக்கல் மழைமானி


உங்களுக்கும் தெரிய வாய்ப்பில்லை.! தெரிந்து கொள்ளுங்கள் பழந்தமிழரின் ஆட்டுக்கல் மழைமானி என்றால் என்ன.?

ஆட்டுக்கல் என்பது வெறுமனே மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல ,அந்தக் காலத்தில் அதுதான் மழைமானி. வீட்டு முற்றத்தில்தான் பெரும்பாலும் ஆட்டுக்கல் இருக்கும். முதல்நாள் இரவில் மழை பெய்திருந்தால் அதன் குழிக்குள் நீர்நிறைந்திருக்கும். அந்நீரை விரலால் அளந்து பார்த்து அது ஓருழவுக்கு ஏற்ற மழையா அல்லது ஈருழவுக்கு ஏற்ற மழையா என்பதை அறிந்துக்கொள்வர்.

மழைப்பொழிவின் பழைய கணக்கு முறை “செவி” அல்லது “பதினு” எனப்படும். இது 10 மி.மீ அல்லது 1 செ.மீட்டருக்கு சமமானது. மழையின் அளவுக்கும் நிலத்தின் ஈரப்பதத்துக்கும் தொடர்பு உண்டு. இதனை ‘பதினை’ என்றனர். அறிவியல் கணக்குபடி 18 மி.மீ வரை மழை பெய்தால்தான் அதை முறையாக மண் உறிஞ்சிடும். ஆக எத்தனை “பதினு” மழை பெய்திருக்கிறது எனத் தெரிந்துக்கொண்டு முதல் உழவுக்கு அணியமாவார்கள்.

மழைக்குப் பெய்திறனின் அடிப்படையில் தமிழில் பெயர் வைக்கப்பட்டிருந்தது.

“தூறல்” – பசும்புல் மட்டுமே நனைவது. விரைவில் உலர்ந்துவிடும்.

“சாரல்” – தரைக்குள் ஓரளவு நீர் செல்லும்.

“மழை” – ஓடையில் நீர்ப்பெருக்கு இருக்கும்.

” பெருமழை” – நீர்நிலைகள் நிரம்பும்.

” அடைமழை” – ஐப்பசியில் பெய்வது

” கனமழை” – கார்த்திகையில் பெய்வது..

இதையே அறிவியல் வேறுவகையில் கூறுகிறது:

மழைத்துளியின் விட்டம் 0.5 மி.மீட்டருக்கு குறைவாக இருந்தால் அது தூறல்.

அதுவே விட்டம் 0.5 மி.மீட்டருக்கு மேல் இருந்தால் அது மழை.

4-6 மி.மீட்டருக்கு மேல் துளியின்விட்டம் இருக்குமானால் அது கனமழையாகும்.

மழையைப் பற்றித் திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மாறாநீர் என குறிப்பிட்டிருக்கிறார். இந்த உலகம் தோன்றியபோது எவ்வளவு நீர் இருந்ததோ அதில் ஒரு துளிக்கூடக் குறையவும் இல்லை கூடவும் இல்லை என்பதை நாம் ஏற்கனவே அறிந்தோம். அதாவது உலகில் இதுவரையுள்ள நீர், நிலையானது, அளவு மாறாதது என்கிறார்.

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்

மாறாநீர் வையக்கு அணி.

(குறள் 701)

இங்கு மாறாநீர் என்பது நீரின் தன்மையைக் குறிக்கும் எனச் சிலர் பொருள் கூறுவது பொருத்தமன்று என்று குறிப்பிடுவார்

பழ.கோமதிநாயகம். நிலத்திற்கு ஏற்ப நீரின் தன்மை மாறுபடும் என்பதை வள்ளுவரே பிறிதோர் குறளில் கூறியிருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு

இனத்தியல்ப தாகும் அறிவு.

(குறள் 452)

எனவே வள்ளுவர் ‘மாறாநீர்’ எனக் குறிப்பிடுவது நீரின் அளவைத்தான் என்பது தெளிவாகிறது.

ஒரு உழவு மழை :

‘பொதுவாக ஊர்ப்புறங்களில் மிக அதிகமாக 5 செ.மீஅளவுக்கு மழை பெய்தால் ஒரு உழவு மழை என சொல்வது உண்டு.பூமியில் ஒரு அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருந்தால், அது ஒரு உழவு மழை. ஓரிரு முறை நல்ல மழை பெய்தாலே இலகுவான மண்ணில் ஓர் அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருக்கும்.’

நிலத்தடி நீரைக் காப்பாற்ற பனை மரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்....

பனையை வெட்டினால் நதிகள் வறண்டு போகும்...

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர்.

அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர்..

அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்...

ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது..

இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்...

இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும்.

அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப் பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும்.

இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்...

இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டே வரும் என்பது மட்டும் உண்மை...

நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்...

மனிதனுக்கு இந்த உலகில் விலை மதிப்பற்ற செல்வம் அறிவு..!

பலமான ஆயுதம் பொறுமை..!

மிகச்சிறந்த பாதுகாப்பு உண்மை..!

அற்புதமான மருந்து புன்னகை..!

சிந்தித்து செயலாற்றுங்கள்.


சனி, 24 ஆகஸ்ட், 2019

மறைக்கப்பட்ட வரலாறுகள்


மறைக்கப்பட்ட வரலாறுகள்.

சுமார் 4000 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் தமிழ் நாக அரச வம்சத்தினர் சிறப்பாக ஆட்சி செய்து வந்தனர்….

நாக வம்சத்தினர் காலத்தில் தான் ஹரப்பா, சிந்து சமவெளி ,நகரங்கள் உருவாக்கப்பட்டு..செழிப்பாக இருந்தது…

அப்போது வந்த வெளிறிய ஆரியர்கள் …
இங்கு நிரந்தரமாக குடியேற வேண்டும் என ஆசைப்பட்டு…

நாக அரசர்களிடம் பணியில் அமர்ந்து சூழ்ச்சி செய்து அரசர்களிடையே பிரிவினையை உருவாக்கி…

வெள்ளையர்கள் போல் பிரித்தாளும் கொள்கையை கடைபிடித்து…சில ராஜ்யங்களை கைப்பற்றினர்..

பிறகு வேதங்களை சொல்லி, அரசர்களிடம் , நாங்கள் கடவுள் பாஷை தெரிந்தவர்கள் என சொல்லி பிராமணர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது..

பசு மாடுகள், குதிரைகள் போன்ற விலங்குகளை யாக குண்டத்தில் போட்டு யாகம் வளர்த்தனர்…

ரிக் வேதங்களில் மாட்டு இறைச்சியை எவ்வாறு சமைத்து உன்ன வேண்டும் என்று கூட குறிப்பிட பட்டுள்ளது..

மாட்டு இறைச்சியை முதலில் அதிகமாக உண்டவர்கள் ஆரியர்களும், அரசர்களும் தான்..

பிறகு நர பலி, பல்வேறு யாகம் ,சடங்குகளை திணித்து அரசர்களை, மக்களை அடிமை படுத்தி ,

அரசவைகளில் ஆலோசகர்களாக இருந்து மறைமுகமாக ஆட்சி செய்தனர்…

பிறகு வரனாசிரமத்தை நிறுவி பிராமணன், சத்ரியன்,வைசியன், சூத்திரன் போன்ற பிரிவுகளை உருவாக்கினான்….

அப்போது சாக்கிய குலத்தை சார்ந்த சித்தார்த்தன்…

தந்தை பெரியார் ,பாபாசாகேப் அம்பேத்கர் போல் சடங்கு,யாகம், உயிர் பலி அனைத்ததையும் எதிர்த்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்..

அதன் பிறகு தான் புத்த மதம் உருவாகி வளர தொடங்கியது…

புத்த மடங்கள் நிறுவப்பப்பட்டன….

சாம்ராட் அசோகா கலிங்க போருக்கு பின் மனமாற்றம் அடைந்து புத்தம் தழுவினார்..

பிறகு வேதமதங்களில் உள்ள தவறான, முடநம்பிக்கை சடங்குகளை ஒழித்தர்….

அப்போது வாழ்விழந்த ஆரியர்களுக்கு மெளரிய வம்ச மன்னர்கள் வரி சலுகை வழங்கி அவர்களுக்கு அக்ராஹாரங்கள் (வரி செலுத்த இயலாதவர்கள்) உருவாக்கி காத்து வந்தனர், மற்றும் அரச பதவிகளும் சலுகை அடிப்படையில் முக்கத்துவம் தரப்பட்டது…

இந்திய, சீனா, தென் கிழக்கு ஆசிய வரை புத்தம் பரவிகொண்டு இருந்தது…

700 வருடம் இருந்த மெளரிய பேரரசு இந்தியாவின் பொற்காலம் எனப்பட்டது…

புத்த மதத்தை அழிக்க முடியாததால் ஆரியர்களும் புத்த மதத்தை ஏற்றனர்..

இந்திய முழுவதும் புத்த மதம் அரச மதமாக்கப்பட்டு மக்கள் அனைவரும் புத்தம் தழுவினர்..

அந்த கால கட்டத்தில் தான் நாகார்ஜுனன் என்ற பிராமின மன்னன் புத்தர் விஷ்ணுவின் அவதாரம் என சித்தரித்து புத்த மதத்தில் பிளவை ஏற்படுத்தினான்..

பிராமணர் உருவாக்கிய புத்த மதத்திற்கு “மஹாயானம் புத்தம்” என்றும்,

உண்மையான புத்த கொள்கைகளை பின்பற்றியவர்களை “ஹீனயானம்” என்றும் அழைத்தனர்.

ஹீனயானம் என்பது ஈன பிறவி..அதாவது தாழ்ந்த ,குறையுடைய புத்தம் என்று இகழ்ந்தனர்..

புத்த மதத்தை அழிவு பாதைக்கு எடுத்து செல்ல முயன்றனர்…

மெளரிய வம்சம், பேரரசின் இறுதி மன்னன் பிராகிருதன்,

புஷ்ய மித்ர சுங்கன் என்ற ஆரிய இன படை தளபதியால், சூழ்ச்சியால் சாகடிக்கப்பட்டு…
சுங்க வம்சத்தை நிறுவினான் ..

அப்போது மீண்டும் வேத மதம் எழ தொடங்கியது…

இந்த கால கட்டத்தில் தான் இதிகாசங்கள், புராணங்கள், கடவுள் கதைகள் எழுதப்பட்டு..

புத்த விகார்களை அழித்து கோவில்கள் கட்டப்பட்டு வந்தன…

புஷ்ய மித்திர சுங்கன் ஆட்சியில் புத்த பிக்ஷுக்கள் தலைக்கு பரிசுகள் அறிவித்து ஒரு இன படு கொலையை நடத்தினான்…

அப்போதுதான் புத்த பிக்ஷுக்களின் தலை வீட்டின் முன்புறம் தொங்கவிடப்பட்டால் பரிசு வழங்கப்பட்டது.

அந்த வழக்கம் தான் இப்போ நம் வைக்கும் திருஷ்டி பூசணிக்காய் ஆக மாறி உள்ளது..

குப்த பேரரசு உருவான பிறகு மிகுந்த எழுச்சி பெற்றது வேத மதம்…

அந்த காலகட்டத்தில் தான் நாக அரசர்கள் சூழ்ச்சிகள் மூலம் சாகடிக்கப்பட்டனர்..

ஆரியர்களை, கடவுள் அவதாரமாகவும், நாக அரசர்களை அசுரர்களாகவும் சித்ததரித்து கதைகள் எழுதப்பட்டன…

“சுரா” என்ற மது பாணத்தை அருந்தாத புத்த பஞ்ச சீல கொள்கை பின்பற்றி வந்த நாக பௌத்தர்களை ,
அசுரர்கள் எனப்பட்டனர்…

அசுரர்கள் என்றால் சுரா என்ற மது பாணத்தை அருந்ததவர்கள் என்று பொருள்.

நல்லெண்ணம் கொண்ட ,
நாக வம்ச அரசர்களை கொடுமையானவர்கள் என்ற பிம்பத்தை ஏற்படுத்த கொடிய விசமுள்ள பாம்புகளை நாகம் என்று அழைத்தனர்..

இந்திய முழுமையும் வேத மதம் பரப்ப பட்டது…

மரத்தடியில் உள்ள புத்த சிலைகளை எல்லாம்,

அழிக்க வேண்டும் என்பதற்காக அசிங்க படுத்தி புத்தர் தலையை வெட்டி யானையின் தலை போல் செய்து புத்த சிலைகளை ஆற்றில் கரைத்து அழித்தனர்..

அது தான் தற்போதைய விநாயகர் சிலை ஊர்வலம் என்ற பெயரில் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைத்து கொண்டு இருக்கின்றனர்.

அழகான புத்த விகார் களை அசிங்க படுத்த விகார் என்றால், விகாரம் என்று அசிங்கமான ,அருவருப்பான என்ற சொல்லிற்கு பயன்படுத்த படுகிறது.

புத்த பிக்சு க்களை இகழ்வதற்காக
அவர்களை பிச்சை என்று அசிங்கப்படுத்தி பிச்சைக்காரர்கள் என்று அழைத்தனர்..

மக்கள் மிரட்டப்பட்டு வேத மதத்தை ஏற்க வலியுறுத்தினர்..

வேத மதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் தான் இப்போது உள்ள பிற்படுத்த பட்ட மக்களாகிய சூத்திரர்கள்.

அந்த கால கட்டத்தில் இந்து மதத்தை ஏற்காத பூர்விக குடிகளாகிய குறிப்பிட்ட மக்கள் புத்த மதத்தை தொடர்ந்து பின்பற்றியதால்…
அவர்கள் தான் பஞ்சமர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

அதாவது புத்த பஞ்ச சீல கொள்கையை கடைப்பிடித்து வாழ்பவர்கள்…

அவர்கள் புத்த மதத்தை தழுவி இருந்ததால் தான் பஞ்சமர்கள் கோவிலுக்குள், மற்றும் அவர்கள் தெருக்களுக்குள் , செல்லாமல் தனியாக சுயமரியாதையுடன் வாழ்ந்தனர்…

தீண்ட முடியாதவர்களாக திறமையுடன் வாழ்ந்து வந்தனர்..

சில நூறு ஆண்டு காலம் சென்ற பிறகு மக்கள் புத்த சிந்தணைகள்
மறக்கப்பட்டு வாழ்ந்து வந்தனர்..

பிறகு பஞ்சமர்கள் சொத்துக்களை பிடுங்கி அரசுடமையாக்கி, நில பிரபுக்களிடம் ஒப்படைத்தனர்…

பிறகு ஏழ்மையின் காரணமாக வேறு வழியின்றி கொத்ததடிமைகளாக்கப்பட்டு…

இழி தொழில் செய்ய பணித்தனர்..

அப்போது உணவுக்கு வழியின்றி இருத்த பஞ்சமார்களுக்கு இறந்த மாடுகளை வேறு வழி இல்லாமல் உன்ன வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதையே காரணம் காட்டி
தீண்ட தகாதவர்களாக பஞ்சமர்களை ஊரைவிட்டு சேரியில் ஒதுக்கி வைத்தனர்.

“பஞ்சமார்களை” (பட்டியல் இன மக்களை) அவர்கள் வெள்ளையன் வரும் வரை “இந்து” மதத்தில் சேர்க்கவும் இல்லை.

1865 ஆம் ஆண்டு வரை அதாவது 2000 வருடங்களாக இந்து மனு தர்ம சாத்திரம் தான் இந்து மத சட்டமாகவும், அரசு சட்டமாகவும் இருந்துவந்தது…

அதனால் தான்…

சூத்திரர்களுக்கும், பெண்களுக்கும் கல்வி மறுக்கப்பட்டு அடிமைகளாகவே இருந்தனர்…

வெள்ளையர்கள் வந்து பிறகு இந்து மத சட்டம் அநீதியாக உள்ளது என்றும் ,

சட்டடத்தை மாற்றி அமைத்தனர்.

பிராமணர் மற்றும் உயர் சாதியினருக்கு மட்டும் தான் கல்வி, என்ற நிலை இருந்தது…

அதுவும் வேதம் , வானவியல்,ஜோதிடம்,புராணங்கள் போன்ற சமுதாய முன்னேற்றத்திற்கு பயன்படாத கல்வி முறைகள் இருந்த்து..

இதை பார்த்த ஆங்கிலேயன் மெக்காலே என்பவர் அனைவருக்குமே கல்வி வேண்டும், என கூறி பள்ளி கல்வி முறையை ஏற்படுத்தினார்..

இதற்கு இந்து மதவாதிகள் இடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது…

மேலும் , ஆங்கிலேயர்கள் அனைவருக்கும் ஒரே வகையில் குற்ற தண்டனைகள் இருக்கவேண்டும் என்று சட்ட திருத்தும் செய்தனர்..

இதற்கு முன்பு வரை பிராமணர்களுக்கு மரணதண்டனை என்பதே கிடையாது..

1856-ல் பன்றி கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்ட போது, இந்து மதத்தை சேர்ந்த சிப்பாய்கள் எங்களால் இதை பயன்படுத்த முடியாது என கூறி போராட்டம் செய்தனர்..(சிப்பாய் கலகம்)

இது போல இந்து மத சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஆங்கிலேயன் இறங்கியதால் தான் …

பிராமணர்களுக்கு சாதகமான, இந்து மத சட்டத்தை நிலை நிறுத்தவும்,
வருணாசிரம தர்மத்தை காப்பாற்றவும் தான் ,

உயர் சாதி இந்துக்கள் ” சுயர்ஜ்யம் எனது பிறப்புரிமை” என கோஷமிட்டு ஆங்கிலேயனை எதிர்க்க ஆரம்பித்தனர்..

எனவே இந்திய விடுதலை போராட்டம் என்பது ஒட்டு மொத்த மக்களுக்கான விடுதலைக்கான போராட்டம் இல்லை…

உயர் சாதி இந்துக்கள்,வரனாசிராம தர்மத்தை நிலை நிறுத்த வேண்டும் என்றுதான் போராடினார்கள்..

அதன் பிறகு விடுதலை அடைந்த பிறகு…

அண்ணல் கொண்டு வந்த இந்துமத சட்டத்தை உயர் சாதி இந்துக்கள் கடுமையாக எதிர்த்தனர்..

அதனால் அண்ணல் அவர்கள் சட்ட அமைச்சர் பதவியை துறந்தார்..

இந்து சட்ட மசோதாவின் அம்சங்கள்:
1.பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசு பணிகளில் இட ஒதுக்கீடு.
2.பெண்களுக்கு கல்வியுரிமை.
3.பெண்களுக்கு சொத்தில் பங்கு.
4.பெண்களுக்கு அரசியலில் இட ஒதுக்கீடு.
5. பெண்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமை
6.பல தார திருமணம் தடை செய்யப்படும்.

பிறகு மிகுந்த
எதிர்ப்புகளுக்கிடையே
1956-ல் சட்டம் நிறைவேறியது…

இது எந்த ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு எதிரான பதிவு இல்லை ….

உண்மை வரலாறு மட்டுமே…

இவை அனைத்தும் மக்களிடையே மறைக்கப்பட்டுள்ளது…

சுருக்கமகா எழுதி உள்ளேன

ஆதார நூல்கள்:
1.இந்திய தத்துவ இயலில் நிலைத்திருப்பணவும் ,
அழிந்தனவும்.- தேவிபிரசாத் சட்டோபத்தியாயா

2.அம்பேத்கர் நூல் தொகுதிகள்-7,13,14.

3.இந்திய தத்துவ இயல்- தேவிபிரசாத் சட்டோபத்தியாயா.

4.ரிக் வேத கால ஆரியர்கள்-ராகுலை சங்கிருத்தியன்.

5.உலக வரலாறு-ஜவகர்லால் நேரு.

6.யுவான் சுவாங் -தமிழில் ராகவன்.

7.பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள். வீர சர்வாக்கர்.

8.பாகியான்.

9.புத்த சரித்தரம் மற்றும் புத்த தருமம் – உ. வே .சாமிநாதர்.

10.அபிதான சிந்தாமணி-சிங்கார வேலன்.

11.இந்தியாவின் வரலாறு- பொன்காரத் லேவின்.

12.அசோகர் இந்தியாவின் பௌத்த பேரரசர்- வின்சென்ட். எ.ஸ்மித்

13.உலகாயுதம் – தேவிபிரசாத் சட்டோபத்தியாயா.

இன்னும் பல வரலாற்று ஆய்வாளர்கள் நூல்கள் உள்ளன…

இன்று வரை யாராலும் இந்த வரலாறை மறுத்து கூற இயலவில்லை என்பது தான் உண்மை.

#நீலகுரல். ஜெய்பீம்.

கிருஷ்ண ஜெயந்தி பற்றி அம்பேத்கர் என்ன சொல்கிறார்..



கிருஷ்ண ஜெயந்தி பற்றி அம்பேத்கர் என்ன சொல்கிறார்..

*இதை படிக்காமல் கிருஷ்ணனை வழிபடுபவன் மஹாபாவி*


மகாபாரத்தில் அர்ச்சுனன் (பார்த்தன்) கிருஷ்ணன் என்ற இரு கதைமாந்தர்கள் இடம் பெற்றுள்ளனர். இவ்விரு கதைமாந்தர்களும் ஒருவருக்கொருவர் நெருக்கமானவர்கள். இவ்வகையில் இவர்களது உரையாடல்கள் மகாபாரதத்தில் இடம்பெறுவது இயல்பானதே. இதில் முக்கியமான உரையாடல் ஒன்றுண்டு.

பாரதப் போர்க்களத்தில் அர்ச்சுனன் தனக்கு எதிரே அணிவகுத்து நிற்பவர்களை ஒருகணம் பார்க்கிறான். தன் சொந்தப் பெரியப்பாவின் மகன்கள், போர்ப் பயிற்சியளித்த பீஷ்மர், துரோணர் போன்ற ஆச்சாரியார்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் அவன் கண்களில் படுகின்றனர். ஆட்சியைப் பெற இவர்களையெல்லாம் கொன்றழிக்க வேண்டுமா என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் தோன்றுகிறது. இவ் எண்ணம் போர் செய்வது குறித்த தயக்கத்தை அவனிடம் ஏற்படுத்துகிறது. அவனது தயக்கத்தைப் போக்கி அவனைப் போரிடத் தூண்டும் வகையில் கிருஷ்ணன் அவனுக்கு உபதேசம் செய்கிறார். இதுவே கீதா உபதேசம் அல்லது பகவத்கீதை என்ற நூலாக விளங்குகிறது. இதன் ஆசிரியனாக பகவான் கிருஷ்ணர் குறிப்பிடப்படுகிறார்.

ஒரு வினாவை சிலர் எழுப்புகிறார்கள். பாரதம் என்ற காவியத்தை எழுதிய வியாசர்தானே இவ்விரு பாத்திரங்களின் உரையாடலையும் எழுதியிருக்க வேண்டும். அதன் அடிப்படையில் கீதா உபதேசத்தின் ஆசிரியராக வியாசரைத்தானே கருத வேண்டும். ஒரு கதாபாத்திரத்தின் படைப்பாக அதை எப்படிக் கருதமுடியும் என்பதே வினாவாகும். இவ்வினாவுக்கு அம்பேத்கர் (1995:130) பின்வருமாறு விடை அளிக்கிறார்

பகவத்கீதை மகாபாரதத்தின் ஒரு பாகமாகவே இருக்க வேண்டும். ஆனால் மகாபாரதத்தில் இது ஒரு பாகமாகவே காணப்படவில்லை. இதிலிருந்து இது தனிப்பட்ட நூல் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆயினும் இன்றுவரை இதன் ஆசிரியர் யாரென்று தெரியவில்லை.

அருச்சுனனுக்கும் கிருஷ்ணனுக்குமிடையே நடந்த உரையாடலைத் திரிதராஷ்டிரனுக்குக் கூறும்படி சஞ்சயனை வியாசர் கேட்டுக் கொண்டாரென்பது நமக்குத் தெரிகிறது. இதை வைத்து வியாசர்தான் கீதையை எழுதினாரோ என்று சிலர் நினைக்கலாம்.

இது தொடர்பாக, பல அய்ரோப்பிய அறிஞர்களின் கூற்றுகளையும் திலகர், கோசாம்பி ஆகிய இந்திய அறிஞர்களின் கூற்றுகளையும் முன்வைத்து பகவத்கீதையின் காலம் குறித்தும் அவர் ஆராய்கிறார். இதற்குள் நுழையாமல் பகவத்கீதையின் சாரமாக அம்பேத்கர் (1995:109) கூறுவனவற்றை மட்டும் காண்பது பயனுடையதாய் இருக்கும். அவர் குறிப்பிடுவது வருமாறு:

1.    நானே நால்வகை (பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என மக்களை நான்கு வகையினராகப் பிரித்தல்) வருண அமைப்பினை அவரவர்களுக்குள்ள செயல் வேறுபாடுகளுக்கு ஏற்றவாறு படைத்துள்ளேன். எனவே நானே இந்த சதுர்வருணங்களை உருவாக்கியவனாவேன். - கீதை 4:13

2.    ஒருவன் இன்னொரு வருணத்தானின் தொழிலைச் செய்வது எளிதாக இருப்பினும், ஒருவன் தன் வருணத்திற்குரிய தொழிலை மிகுந்த திறனோடு செய்ய முடியாத போதிலும் தன் வருணத்திற்குரிய தொழிலைச் செய்வதே மிகச் சிறந்தது. ஒருவன் தன் வருணத்திற்குரிய தொழிலைச் செய்தால் மரணமே நேர்வதாக இருந்தாலும் தன் வருணத் தொழிலைச் செய்வதே இனியது; ஆனால் பிற வருணத்தாரின் தொழிலைச் செய்வது ஆபத்தானது. கீதை 3:35.

3.    மக்கள் தத்தமக்குரிய தொழில்களைச் செய்ய வேண்டும் என்று விரும்பும் அறிவாளியானவன், தம் தொழிலில் பற்றுடைய அறிவீனர்களுக்குப் புத்திக் குழப்பத்தை உண்டாக்கக் கூடாது. அவனவன் தமது வருணத்திற்குரிய தொழிலைச் செய்து மற்றவர்களையும் அவ்வாறே செய்விக்க வேண்டும். கற்றறிந்தவன் தன் தொழில் ஈடுபாடு இல்லாதவனாக இருக்கலாம். ஆனால் தம் தொழிலில் ஈடுபாடுடைய கல்லாதோரையும் மந்த புத்தியுள்ளவர்களையும் தம் தொழிலை விட்டு வேறு தொழிலைச் செய்வதற்குரிய கெட்ட வழியில் செல்வதற்குக் கற்றறிந்தவன் விட்டுவிடக் கூடாது. கீதை 3:26, 29.

4.    அருச்சுனா! கடமைகளும் தொழில்களுமான இந்தத் தருமம் (நால் வருணமான இந்த மதம்) தளர்வுறும் போதெல்லாம், இந்த இழிவுக்குக் காரணமானவர்களை அழித்துத் தருமத்தை நிலைநாட்டுவதற்காக நானே பிறப்பேன் -

_- கீதை 4:7-_8. அம்பேத்கரின் இக்கருத்துகள் கீதைக்கும் வருணப் பாதுகாப்பிற்குமான உறவைச் சுட்டுகின்றன. நான்கு வருணக் கோட்பாட்டை வலியுறுத்தும், புருஷசூக்தம் என்ற நூல் குறித்து.

இந்த புருஷசூக்தம் இரு அடிப்படைக் கொள்கைகளை அங்கீகரிக்கிறது. சமூகத்தை நான்கு பிரிவாகப் பிரிப்பதைச் சிறந்ததாக ஏற்கிறது. இந்த நான்கு பிரிவாருக்கும் இடையில் சமத்துவமில்லாமல் இருப்பதே சிறந்த உறவுமுறை என்பதையும் அது ஏற்கிறது.

என்று குறிப்பிடும் அம்பேத்கர் (1995:108_-109) இக்கருத்துடன் இயைபுடையதாகவே கீதையைக் காண்கிறார். அத்துடன் மனுஸ்மிருதி எனப்படும் மனுதர்ம சாஸ்திரத்திற்கும், கீதைக்கும் இடையில் வேறுபாடில்லை என்பதை,

கீதை மனுவின் சுருக்கம். மனுஸ்மிருதியை ஒதுக்கிவிட்டுக் கீதையில் புகலிடம் தேடுவோர், கீதையை அறியாதவர்களாக அல்லது மனுஸ்மிருதியை முற்றிலும் ஒத்துள்ளதும் கீதையின் உயிராக உள்ளதுமான பகுதிகளைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவதற்குத் தயாராக இருப்பவர்களாக உள்ளனர்.

என்று குறிப்பிடுகிறார் (மேலது 109). பகவத்கீதை, குறித்து அம்பேத்கர் முன்வைக்கும் கருத்துகளின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வது அவசியமான ஒன்று. இதற்கு ஒரே வழி பகவத்கீதையைப் படித்தறிவதுதான். தமிழில் பகவத்கீதைக்குப் பல மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன. அவற்றுள் சிறந்த பதிப்பாக இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட நூல் அமைந்துள்ளது. 1997ஆம் ஆண்டு தொடங்கி 2001 வரை மொத்தம் இருபத்திமூன்று பதிப்புகள் இந்நூலுக்கு வந்துள்ளன. அய்ந்து ஆண்டுகளில் 2,95,000 பிரதிகள் விற்பனையாகியுள்ளன. இதற்குப் பின்னரும் பதிப்புகள் வந்துகொண்டுள்ளன.

ஸ்ரீ ஜயதயால் கோயந்தகா என்பவர் தத்வவிவேசனீ என்ற பெயரில் இந்தியில் எழுதிய விளக்க உரையின் தமிழ் மொழிபெயர்ப்புடன் இந்நூல் வெளியாகியுள்ளது. பல தமிழ்ப் பதிப்பகங்கள் கீதையை வெளியிட்டிருந்தாலும், இந்து அமைப்பொன்று வெளியிட்ட நூல் என்பதன் அடிப்படையில் இந்நூல் இங்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இனி இந்நூலில் இருந்து கீதை சுலோகங்கள் சிலவற்றையும் அதற்கான விளக்கங்களையும் காண்போம்.

நான்கு வர்ணங்கள் எவ்வாறு உருவாயின என்ற வினாவை எழுப்பி சமூகவியலாளர்கள் விடை தேடுகின்றனர். ஆனால், இத்தேடலுக்கான விடை மிக எளிதாக பகவத்கீதையில் காணப்படுகிறது. நான்காவது அத்தியாயத்தில் பதிமூன்றாவது சுலோகம் பகவான் கிருஷ்ணரின் கூற்றாக,

சாதுர்வர்ணயம் மயா ஸ்ருஷ்டம் குணகர்ம விபாகா என்று குறிப்பிடுகிறது.

இதற்கு வேதியர், வேந்தர், வணிகர், வேளாளர் என்ற நான்கு வர்ணங்கள் கொண்ட ஸமூகம், குணங்களையும் கர்மங்களையும் ஒட்டிய பிரிவுகளாக என்னால் படைக்கப்-பட்டது என்று மேற்கூறிய உரையாசிரியர் உரை எழுதியுள்ளார். இதன்படி வருணவேறுபாடு என்பது சாட்சாத் கிருஷ்ண பகவானால் உண்டாக்கப்பட்டது என்பதாகிறது. இவ்வுண்மையை அவரே மேற்கூறிய சுலோகத்தின் வாயிலாகப் பிரகடனப்-படுத்தியுள்ளார். எனவே வருணப் பாகுபாடை எதிர்ப்பதென்பது கடவுளுக்கு எதிரான செயலாகிறது.

அடுத்து வர்ணம் என்பது பிறப்பின் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறதா? அல்லது செயலை வைத்து முடிவு செய்யப்படுகிறதா? என்ற வினாவை எழுப்பி அதற்கு இந்து தர்ம சாஸ்திரங்களின் அடிப்படையில் உரையாசிரியர் பின்வரும் விளக்கத்தைத் தருகிறார்.

பிறப்பு செயல் இரண்டுமே வர்ணப்-பிரிவிற்குத் துணை நிற்பவைதான். ஆகவே, ஒரு வர்ணத்தினர் என்று முழுமையாக நிர்ணயிக்க, பிறப்பு, செயல்கள் இரண்டையும் சேர்த்துத்தான் கணிக்க வேண்டும். ஆயினும் பிறப்பை வைத்துத்தான் ப்ராம்மணர் முதலிய வர்ணப்பிரிவு நடந்து வருகிறது என்று அறிய வேண்டும். ஏனெனில், இவை இரண்டில் பிறவிக்குத்தான் முதன்மை கொடுக்கப்பட்டு வருகிறது.

எல்லோருக்கும் பொதுவான புலன் அடக்கம், மனவடக்கம் முதலியவற்றைக் கடைப்பிடித்து, நல்லொழுக்கம் உள்ள நான்காம் வர்ணத்தவன், யாகம் செய்ய ஆரம்பித்துத் தன் வாழ்க்கையை நடத்த ஆரம்பித்தால் அவனுக்குப் பாவம்தான் ஸம்பவிக்கும். முதலாவதாக, வர்ண ஏற்பாட்டில் சிறிது தளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும், முழுமையாக அழிந்துவிட்டது என்று கூறமுடியாது. இரண்டாவதாக, ஜீவர்கள் முன்வினைப்பயனை அனுபவிக்க வேண்டும் என்று ஈசுவரன், அவர்களின் முன்வினைக் கேற்றவாறு அந்தந்த வர்ணங்களில் பிறப்பளிக்கிறார். பகவானின் இந்த ஏற்பாட்டை மாற்ற மனிதனுக்கு உரிமையில்லை. மூன்றாவது நடத்தையை மட்டும் வைத்து இன்ன வர்ணத்தவர் என்று தீர்மானிப்பதும் முடியாத செயல். ஒரே பெற்றோர்களுக்குப் பிறந்த பிள்ளைகளின் நடத்தையிலேயே மிகுந்த மாற்றத்தைக் காண்கிறோம். ஒரே மனிதன் ஒரு நாளில் ஒரு சமயம் ப்ராம்மணன் போலவும், வேறொரு சமயம் மற்ற வர்ணத்தவர் போலவும் நடந்து கொள்கிறான். இந்த நிலையில் எப்படி வர்ணத்தை நிர்ணயிப்பது? தாழ்வை எவர்தான் ஏற்றுக்கொள்வார்? இதனால் உணவுப் பழக்கத்திலும், திருமணம் முதலியவற்றிலும் குழப்பம் ஏற்படும். கடைசியில், வர்ண அமைப்பு தலைகீழாக மாறிவிடும். வர்ண ஏற்பாடு என்பதே குலைந்து போய்விடும். ஆகவே செயலினால் மட்டும் வர்ண வகுப்பைத் தீர்மானிப்பது சரியன்று.

கீதையின் பதினெட்டாவது அத்தியாயத்தில் இடம் பெறும் 44ஆவது சுலோகத்தில் வைசியர்களும், சூத்திரர்களும் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் இடம் பெற்றுள்ளன. இச்சுலோகத்தில் இடம்பெறும் பரிசர்யாத்மகம் என்ற வடமொழிச் சொல்லுக்கு உரையாசிரியர் தரும் விளக்கம் வருமாறு:

மேற்குறித்த இரு பிறப்பாளருக்கு அதாவது ப்ராம்மணர்கள், ஷத்திரியர்கள், வைசியர்களுக்கு ஸேவை செய்வது, அவர்களுடைய ஆணையை நிறைவேற்றுவது, வீடுகளில் நீர் நிரப்புவது, ஸ்நானத்திற்கு வகை செய்து வைப்பது, அவர்களுடைய வாழ்க்கைப் பணிகளில் வசதி செய்து கொடுப்பது, அவர்களுடைய அன்றாட வேலைகளில் முறைப்படி உதவி செய்வது, பசுக்களைப் பராமரிப்பது, அவர்களுடைய பொருட்களைக் காப்பது, துணி துவைப்பது, முடி திருத்துவது முதலிய அத்தனை ஸேவைகளையும் செய்து மகிழ்விப்பது அல்லது அவர்களுக்குத் தேவையான கருவிகளைத் தன் தொழில் திறமையால் தயார் செய்து கொடுத்து தன் வாழ்க்கையைக் கழிப்பது _ இவையெல்லாமே பரிசர்யை ஆகும்.

மற்ற வர்ணத்தாருக்கு எப்படி அவரவர் இயல்புக்கு ஏற்ப கடமைகள் உள்ளனவோ, அவ்விதமே நான்காம் வர்ணத்தவருக்கும்கூட இந்த சேவை என்ற ஒன்றுதான் இயல்பானதாகும். மேலும் பிற வர்ணத்தவர்க்குத் தொண்டு செய்தலே அவர்களது ஒரே கடமை என்பதை இங்கே வலியுறுத்துகிறார். ஆகவே, அது அவர்களுக்கு இயல்பானதால் எளிதுமாகும்.

இக்கருத்தை மேலும் வலியுறுத்த நான்காம் வர்ணத்தவருக்கு பகவான் ஒரு கடமையைத்-தான் விதித்தார். குறை காணாமல் மூவர்ணத்தாருக்கும் ஸேவை செய்வதே அது என்ற மனுதர்ம சுலோகத்தை (இயல் 1 சுலோகம் 91) மேற்கோள் காட்டுகிறார். இதே அத்தியாயத்தில் 46ஆவது சுலோகம் கூறும் கருத்து வருமாறு.

தத்தம் இயல்பான கடமைகளில் முழு முனைப்புடன் ஈடுபட்டிருக்கும் மனிதன் பகவானை அடைதலாகிற ஸிதம்தியை அடைகிறான். தன்னுடைய இயல்பான கடமையில் கருத்துடையவன் தன் செயலை எப்படிச் செய்து பரமநிலையை அடைகிறானோ அந்த முறையை நீ கேள்.

இச்சுலோகத்திற்கு உரையாசிரியர் தரும் நீண்ட விளக்கத்தில் நான்கு வருணத்தாரின் செயல்பாடு குறித்து,

ஷத்திரியன் தண்டனை அளிக்கலாம். ஆனால் அதற்குரிய சட்டத்தை அவன் தானாக இயற்றமாட்டான். ப்ராம்மணர்கள் வகுத்த சட்டத்தின்படி நடக்க வேண்டும். வரி வசூலிக்க வேண்டும்: வசூலித்த வரியை மக்கள் நலனுக்காகச் சரிவரச் செலவழிக்க வேண்டும். விதிக்கப்பட்ட சட்டத்தை நடைமுறையில் அமல்படுத்தி, அதைப் பேணிக் காப்பது அவன் கடமை. சட்டத்தை இயற்றுதல் ப்ராம்மணனின் வேலை. பொது நிதியம் வைசியனிடம் உள்ளது. ஷத்திரியன் சட்டப்படி நிர்வாகம் செய்து பாதுகாப்பவன் மட்டுமே.

இவ்விதம் குணங்களுக்கும், கடமைகளுக்கும் ஏற்ப வர்ணப்பிரிவினை ஏற்பட்டிருக்கிறது என்றால் தமக்குத் தோன்றிய கர்மங்களைச் செய்து தமது வர்ணநிலையை மாற்றிக் கொள்ளலாம் என்பது பொருள் அன்று. வர்ணத்தின் அடிப்படை பிறப்பு, அதன் தன்மையைக் காப்பதில் வர்ணத்தின் கர்மம் முதல் இடம் வகிக்கிறது. ஆகவே பிறப்பு, கர்மம் இரண்டுமே வர்ண அமைப்புக்குத் தேவைதாம். தானாக ஒரு கர்மத்தை ஏற்றுக் கடைப்பிடித்து இந்தக் கர்மத்தை நான் ஆற்றுவதால், தான் இன்ன வர்ணத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லிக் கொள்பவர் உண்மையில் வர்ணதர்மத்தை மதிக்கவில்லை. செயலுக்கு ஏற்ப ஒருவனுடைய வர்ணத்தைத் தீர்மானிப்பது என்று ஆரம்பித்தால் ஒரு நாளில் அவன் எத்தனை தடவை வர்ணத்தை மாற்றுவான் என்று கணக்கிட முடியாது. அப்பொழுது ஸமுதாயத்தில் ஒரு பிணைப்போ, கட்டுப்பாடோ இருக்க முடியாது. எல்லா வகைகளிலும் குழப்பம்தான் மிஞ்சும்.

இதே அத்தியாயத்தில் இடம்பெறும் 47ஆவது சுலோகம்,

நன்கு முறைப்படி கடைப்பிடிக்கப்பட்ட பிறருடைய தர்மத்தைக் காட்டிலும், குணக்குறை உள்ளதாயினும், தன்னுடைய தர்மம் உயர்ந்தது. ஏனெனில் இயல்புக்கேற்ப விதிக்கப்பட்ட தன்னுடைய கடமையைச் செய்கிற மனிதன் பாவத்தை அடைய மாட்டான் என்று கூறி குலத்தொழிலை மேற்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. இதுவே ஸ்வதர்மம் எனப்படுகிறது. ஸ்வதர்மம் என்பதற்கு உரையாசிரியர்.

வர்ணம், ஆசிரமம், இயல்பு, சூழ்நிலை இவற்றிற்கேற்ப எந்த மனிதனுக்கு எந்தக் கர்மம் விதிக்கப்பட்டுள்ளதோ, அது அவனுக்கு ஸ்வதர்மம்.

நான்காம் வர்ணத்தவரின் கடமைகள் ஷத்ரிய, வைசியர்களின் கடமைகளைக் காட்டிலும் தரக்குறைவாக இருக்கின்றன. இது தவிர அந்தக் கடமைகளை ஆற்றுவதில்  ஏதாவது விட்டுப் போனாலும் அதுவும் குறைபட்ட கர்மம்தான். மேலே சொன்னவிதம் ஸ்வதர்மத்தைக் கடைப்பிடிப்பதில் குற்றம் குறை இருந்தாலும், அது பரதர்மத்தைக் காட்டிலும் சிறந்ததுதான்.

குற்றமற்ற, குணம் பொருந்திய பரதர்மத்தைக் காட்டிலும் குற்றம் குறையுள்ள ஸ்வதர்மம் சாலச் சிறந்தது

என்று விளக்கமளிக்கிறார். அம்பேத்கர், பெரியார் ஆகியோரும் மார்க்சியவாதிகளும் பகவத்கீதையைக் குறித்து முன்வைக்கும் விமர்சனங்களின் உண்மைத்தன்மை குறித்து பகவத்கீதையைப் படித்து எது உண்மை என்பதை அறிந்து கொள்ளலாம். விமர்சனங் களைவிட மூலநூல் அறிவு சிறந்ததுதானே!

வீட்டின்  பூசை அறையிலும், வரவேற்-பறையிலும் கொலு வீற்றிருக்கும் பகவத்கீதை நூலை முறையாகப் படித்துச் சிந்தித்தால் கீதை யாருடைய நூல் என்பதைக் கண்டறியலாம். பழைய சூத்திரர்களும் இவர்களில் இருந்து தாம் வேறுபட்டவர் என்று காட்டிக் கொள்ளும் முகத்தான் சற்சூத்திரர்கள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டோரும் கீதையைப் பூசிப்பதை விட்டுப் படித்துச் சிந்திக்க வேண்டும்.

துணை நின்ற நூல்கள்:

பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் (1995) தொகுதி_6 (1995) தொகுதி_7

புதன், 21 ஆகஸ்ட், 2019

ஒண்டி வீரன்


நெற்கட்டுஞ்செவ்வல் பாளையக்காரன் பூலித்தேவனின் பலமே அவனது படை தான். அவனது படை வீரர்கள், தங்களது
பாளையத்திற்காகவும், பூலித்தேவனுக்காகவும் உயிரைக் கொடுப்பதைக் கூட பெருமையாக நினைத்தார்கள். அந்த அளவிற்கு, பூலித்தேவனும், தனது படையினருக்கு எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டான். சுயநலமற்று, மக்களின் பொது நலத்தையும், நாட்டையும் காப்பதற்காக, வாழ்ந்தார்கள் நெற்கட்டுஞ்செவ்வல் பாளையத்தில் வசித்த மக்கள்.

பூலித்தேவனுக்கு நிறைய படைத் தளபதிகள் இருந்தனர். அவர்களில் முக்கியமானவன் ஒண்டி வீரன். தாழ்த்தப்பட்ட அருந்ததி இனத்தைச் சேர்ந்தவன். பூலித்தேவனின் போர் வாள் என்று இவனை அழைத்தார்கள். பூலித்தேவனை எப்படியும் வீழ்த்துவது என்ற நோக்கத்துடன், ஆங்கிலேயரின் படையினர் தென்மலை என்ற பகுதியில் முகாமிட்டிருந்தனர்.

 அப்போது, அந்தப் பகுதி மக்களிடையே தங்களது வீரத்தைப் பற்றிப் பீற்றிக் கொண்டு ஒரு சவாலையும் வைத்தார்கள் ஆங்கிலேயர்கள்.  அதாவது, “எங்களது பட்டாக்கத்தியை எடுக்க வேண்டும். பட்டத்துக் குதிரையையும் பிடித்துக் கொண்டு, எங்கள் முகாமில் உள்ள வெங்கலா நகரத்ததையும் யாராவது முழங்கச் செய்து விட்டால், நீங்கள் சுத்த வீரர்கள் என்பதை ஒத்துக் கொள்கிறோம். உங்களது பாளையத்தில் அப்படி யாராவது இருக்கிறீர்களா? என்று கொக்கரித்தார்கள்.

இந்த சவால், ஒண்டி வீரனின் காதுகளையும் எட்டியது. அவன் அந்த ஆங்கிலேயருக்கு பாடம் புகட்ட நினைத்தான். மனதிற்குள் ஒரு திட்டம் தீட்டினான். அது பற்றி, பூலித்தேவனிடம் மட்டும் ரகசியமாகக் கூறினான். “கும்பினியர் ஏதோ வஞ்சகத்தோடு, இப்படிச் சவால் விட்டிருக்கிறார்கள். இதற்காக நான் உன்னை இழக்கத் தயாரில்லை” என்று பூலித்தேவன் ஒண்டி வீரனின் திட்டத்திற்கு முதலில் மறுத்தான். ஆனாலும், ஒண்டி வீரன் பிடிவாதமாக இருக்கவே, அரை மனதுடன் சம்மதித்தான்.

தன் திட்டப்படி, ஒண்டி வீரன், தன்னை அனாதை என்று சொல்லிக் கொண்டு, ஆங்கிலேயரின் கூடாரத்திற்குச் சென்று, வேலை கேட்டுப் பெற்றான். அங்கிருக்கும்  சூழ்நிலையை நன்கு அறிந்து கொண்டான். சில நாட்களிலேயே, அவர்களது பட்டாக்கத்தி இருக்கும் இடத்தையும் தெரிந்து கொண்டான். ஆங்கிலேயரின் பட்டக் குதிரைக்குத் தீனி வைத்துக் கொண்டு, அதனைப் பாசத்துடன் பராமரித்தான். குதிரையும் நாளடைவில் அவனிடம் நன்றாகப் பழகத் துவங்கியது. தன் திட்டத்தை விரைவில் நிறைவேற்றவும் முடிவெடுத்தான்.

ஒரு நாள் இரவில், ஆங்கிலேயர் அதிகமாக மதுவை குடித்து விட்டு, அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொண்டு, அவர்களது பட்டாக்கத்தியை எடுத்து, தன் இடுப்பில் மறைத்து வைத்துக் கொண்டான் ஒண்டிவீரன். அடுத்து, பட்டத்துக் குதிரையை அவிழ்த்துக் கொள்ள எத்தனித்த போது, அந்தக் குதிரை திடீரெனக் கலவரம் அடைந்தது. ஒண்டிவீரன், அதனை அதட்ட, அந்தக் குதிரை, தன்னைக் கட்டி வைத்திருந்த முளைக்கம்பை இழுத்துப் பிடுங்கி விட்டு, ஓடத் துவங்கியது. பட்டத்துக் குதிரை ஓடும் சத்தம் கூடாரமெங்கும் கேட்டது.

ஒண்டிவீரன், குதிரையின் காடிக்குள் ஒளிந்து கொண்டு, தன் மேல் புல்லைப் போட்டுக் கொண்டு, மறைந்து கொண்டான். குதிரையின் சத்தத்தைக் கேட்டு, காவல் வீரர்கள் விழித்துக் கொண்டார்கள். குதிரையைப் பிடித்து, மீண்டும், அதன் முளையைத் தரையில் வைத்து அடித்தார்கள். அப்போது, காடியில் ஒளிந்திருந்த ஒண்டி வீரனின் இடது கை தரையில் இருந்ததது. ஆதன் மேல் கொஞ்சம் புல் இருந்தது. அதனை அறியாத, ஆங்கிலேய வீரர்கள், போதையில், அவன் கையிலேயே அந்த முளையை அடித்துத் தரையில் இறக்கினார்கள்.

அந்த வலியை, இயேசுநாதரைப் போலப் பொறுத்துக் கொண்டவன், வீரர்கள் சென்றதும்,  இடுப்பில் வைத்திருந்த பட்டாக்கத்தியால், தனது இடது கையையே வெட்டிக் கொண்டு, ரத்தம் சொட்டச் சொட்ட மரண வலியுடன், அவர்கள் வைத்திருந்த பீரங்கிகளின் திசையை அவர்கள் பக்கமே திருப்பி வைத்து விட்டு, பட்டத்துக் குதிரையின் மீதேறிக் கொண்டு, அவர்களது, வெங்கல நகராவை ஓங்கி அடித்து விட்டுத் தப்பிச் சென்றான்.

முரசொலி கேட்ட வீரர்கள், தங்களது முகாமிற்குள் எதிரிகள் நுழைந்து விட்டதாக எண்ணி, இருட்டில் பீரங்கியின் விசைச் சங்கிலிகளைப் பிடித்து இழுத்தனர். அந்த பீரங்கிகள் அவர்களையே தாக்கியதால், கூடாரத்தில் உள்ளவர்கள் தூள் தூளாகினர்.

ஓண்டி வீரன், பூலித்தேவனைப் பார்த்து, அவன் கையில் பட்டாக்கத்தியைக் கொடுத்து விட்டு, மயங்கி விழுந்தான். உடன் அவனுக்கு தக்க சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தான் பூலித்தேவன். அவனது தியாகமும், தீரச் செயலும், அவனை மெய் சிலிர்க்க வைத்தன. ஒண்டி வீரன் நன்கு குணமடைந்ததும், வெட்டுண்ட அவனது இடது கைக்குப் பதிலாக, தங்கத்திலே, செயற்கைக் கையைப் பொருத்தினான் பூலித்தேவன். கையை இழந்தும், சவாலில் வெற்றி பெற்று, ஆங்கிலேயர்களைக் கூண்டோடு ஒழித்தவன் என்ற ஒண்டி வீரனின் பெருமையை, இன்றும் அந்தப் பகுதியில் மக்கள் பெருமையுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

திங்கள், 12 ஆகஸ்ட், 2019

சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில் வரலாறு


சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில் வரலாறு

தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் அமைந்துள்ளது சங்கரநயினார் கோவில். இக்கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி; இறைவி கோமதி அம்மன் என்ற ஆவுடையம்மன். உக்கிரப் பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோயிலின் தொன்மை கி.பி.1022 ( கோவிலமைப்பு ). இக்கோவிலில் ஆடித் தவசு விழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது
பொருளடக்கம்
1 மரபு வழி வரலாறு
1.1 காவற் பறையன்
1.2 உக்கிரபாண்டிய அரசர் கோவில் கட்டி ஊர் உண்டாக்கியது
1.2.1 "ஸ்ரீ கோமதி அம்மனைப்பற்றிய சில முக்கியமான் மரபு வழி தகவல்கள் :"
2 ஸ்ரீ கோமதி அம்மன் - மஹா யோகினி சக்தி பீடம்
3 அன்னையின் அருள்ட்சொருபம்
4 அன்னையின் சிறப்பு
5 அன்னைக்கு பூஜைகள் :
6 கோயிலும், அதன் பகுதிகளும்
7 ஆடித் தபசு
7.1 பாம்புப் புற்று
7.1.1 எச்.ஆர்.பேட்.ஐ.சி.எஸ். திருநெல்வேலி கெசட்டியரில் எழுதியுள்ளது ( தல வரலாறு பக்கம் 20 )
8 சங்கரன்கோவில் சிறுகுறிப்பு :
9 தலம் அமைதுள்ள இடம் ஊர் மற்றும் பயண விவரங்கள் :
10 மேற்கோள்கள்
11 துணைநூல்
12 இவற்றையும் பார்க்கவும்
13 வெளி இணைப்புகள்
மரபு வழி வரலாறு[1]
இந்த அம்மன், சிவனை வேண்டி ஊசி முனை மேலிருந்து தவம் செய்யும் யோகினி. சங்கன், பதுமன் என்ற இரு நாக மன்னர்களிடையே சண்டை மூண்டது. சங்கன் தன் கடவுளான சிவனே அதிக ஆற்றல் உள்ளவர் என்றும் பதுமன் தன் விருப்பக் கடவுளான திருமாலே அதிக ஆற்றல் உடையவர் என்றும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இருவரும் அம்மனிடன் சென்று முறையிட்டனர். சங்கன், பதுமன் மட்டுமின்றி, இறைவனின் முழு வடிவத்தை உலக மக்கள் உணர வேண்டும் என அம்மன் சிவனிடம் வேண்ட, அம்மனின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன், சங்கரநாராயணராகக் (சங்கரன்-சிவன்; நாராயணன்-திருமால்) காட்சியளித்தார்கள். கடவுளர் இருவருமே சமம் என்றும், அன்பினாலும் தியாகத்தாலும் மட்டுமே இவர்களை அடைய முடியும் என்றும், சிவனும் திருமாலும் இணைந்த சங்கரநாராயணர் தோற்றத்தால் உணர்த்தப்பட்டது. நாகர் இருவரும் இறைவனை வழிபட்டு, கோமதி அம்மனுடன் தங்கினர். நாகங்கள் அம்மனுடன் குடியிருப்பதால், இந்தத் தேவியை வணங்குவதன் மூலம், பயத்தைப் போக்கலாம். இங்கு உள்ள புற்று மண் மிகவும் பிரசித்தி பெற்றது. புற்று மண்ணை நெற்றியில் திருநீராக எண்ணி பக்தியுடன் பக்தர்கள் இட்டுக்கொள்வார்கள். பாம்பாட்டி சித்தர் இவ்வூரிலே வாழ்ந்து, தேவியின் மகிமைகளை உலகறியச் செய்தார். இவரது சமாதியும் கோவிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இத்தலம் தென்பாண்டி நாட்டின் பஞ்சபூத தலங்களில் மண்தலம் (ப்ரித்திவி) ஆகும்.[சான்று தேவை]
காவற் பறையன்
மணிக்ரீவன் என்ற தேவன் பார்வதி தேவியின் சாபத்தாற் பறையனாகிப் புன்னைவனக் காவலனாக இருந்தான். அதனால் அவன் காப்பறையன் என்றும், காவற் பறையன் என்றும் பெயர் பெற்றான். கரிவலம்வந்தநல்லூர்ப் பால்வண்ண நாதருக்குப் புன்னைவனத்திலே ஒரு பூந்தோட்டம் இருந்தது. அதற்கும் அவனே காவல். தோட்டத்தின் ஒரு பக்கம் புற்றொன்று வளர்ந்தது. அதை ஒரு நாள் அவன் வெட்ட அதிலிருந்த பாம்பின் வாலும் வெட்டுப் பட்டது. அப்போது அவன் புற்றின் பக்கத்தில் சிவலிங்கம் இருப்பதையும் கண்டான். அதே சமயத்தில் உக்கிரபாண்டியர் அடுத்த வனத்தில் வந்திருப்பதாக அறிந்து செய்தி தெரிவிக்க ஓடினான்.
உக்கிரபாண்டிய அரசர் கோவில் கட்டி ஊர் உண்டாக்கியது
திருநெல்வேலிக்கு மேலே பொருநையாற்றின் கரையிலுள்ள மணலூரில் அரசாண்டிருந்த உக்கிரபாண்டியர் அடிக்கடி மதுரை சென்று மீனாட்சியம்மையையும், சொக்கப்பெருமானையும் வழிபாடு செய்யும் வழக்கமுடையவர். காவற்பறையன் புற்றை வெட்டிச் சிவலிங்கத்தைக் கண்ட அன்று, பாண்டியருடைய யானை கொம்பினால் தரையைக் குத்திக் கீழே விழுந்து புரண்டது. பாண்டியர் ஒன்றும் செய்ய அறியாது திகைத்திருந்த போதுதான் காவற்பறையன் ஓடிவந்து அரசரிடம் செய்தி தெரிவித்து உடன் வர அழைத்தான். உக்கிரபாண்டியர் சென்று புற்றினையும் புற்றிடங் கொண்டாரையும், கூழைவாலினதாக்கிய பாம்பினையும் கண்டார். சங்கரனார் அசரீரியாக ஆனைதரப் பாண்டியர் காடு கெடுத்து நாடாக்கிக் கோவில் கட்டிச் சங்கரநயினார் கோவில் ஊரையும் தோற்றுவித்தார். கோவிலில் கோபுரத்தைத் தாண்டியதும் ( கோவில் நிர்வாக அலுவலக இடப்புறத் தூணில் ) காவற்பறையனுடைய திருவுருவத்தை இப்போதும் காணலாம்.
சங்கரலிங்கப் பெருமான் திருச்சந்நிதியுட் செல்லும்போது பலிபீடம், கொடிமரம் இவற்றைத் தாண்டியவுடன் தூண்களில் உக்கிரபாண்டியனையும், உமாபதி சிவாச்சாரியாரையும் காணமுடியும். யானை தனது பெரிய கொம்பினால் குத்தியமையினாலே அவ்விடத்தில் உண்டாயிருக்கிர ஊர் பெருங்கோட்டூர் என்று பெயர் பெற்றது. ( கோடு - கொம்பு ) உக்கிரபாண்டியர் கோயிற் பூஜைக்கு மிகுந்த நிலங்களைக் கொடுத்து ஒரு சித்திரை மாதத்திலே யானை மேலேறிக்கொண்டு தாம் இறைவனைக் காணக் காரணமாயிருந்த இடமாகிய பெருங்கோட்டூருக்குப் போய் யானை பிடிமண் எடுத்துத் தரக் கொண்டுவந்து பெருந்திருவிழா நடத்தி மகிழ்ந்தார். இத்திருவிழா இன்றும் நடைபெறுகின்றதை நாம் காணலாம்.
காவற்பறையனுக்கு ஊரில் தெற்கே ஒரு சிறு கோயில் இருக்கிரது. அது இருக்கும் தெரு காப்பறையந்தெரு என்று வழங்கிவந்தது. காப்பறையன் தெரு, தற்போது முத்துராமலிங்கம் தெருவென ஆகிவிட்டது. ஆனால், காவற்பறையன் கோவில் அதே தெருவில் இன்றும் உள்ளது. நித்திய பூஜைகளும் உண்டு. சித்திரைவிழா ஆரம்பமாகுமுன்பு, காவற்பறையனுக்குச் சிறப்பு வழிபாடு நடத்திய பின்னரே பெரிய கோயிலிலே கொடி ஏற்றம் நிகழும்.
"ஸ்ரீ கோமதி அம்மனைப்பற்றிய சில முக்கியமான் மரபு வழி தகவல்கள் :"
ஸ்ரீ கோமதி அம்மன் - மஹா யோகினி சக்தி பீடம்
தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி அந்த யாகம் அழியுமாறு சபித்து விட்டு, தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயிலேயே எரிந்து போகிறாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவி இறந்த வருத்தத்தில், சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். பிறகு சிவன் சாந்தமானார். சிதறிய தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள் பிரதான சக்தி பீடங்களாயின. அந்த உடல் பாகங்களில் இருந்து ரத்தம் , சதை பாகங்கள் தெறித்து விழுந்த பகுதிகள் உப சக்தி பீடங்கள் ஆயின . அந்த வகையில் அம்பிகையின் நெற்றியின் உள்பகுதி, அதாவது குண்டலினி எழும்பி பாம்பு போல் படம் விரித்து ஆடும் பகுதியான சஹஸ்ராரம் விழுந்த பகுதிதான் சங்கரன்கோவிலில் அமைத்துள்ள ஸ்ரீ கோமதி அம்மன் சன்னதி ஆகும் .
அன்னையின் அருள்ட்சொருபம்
ஸ்ரீ கோமதி அம்மன் கோவில் , சங்கரன்கோவில் ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி கோவிலில் உள்புறம் தனி தங்கக்கொடிமரத்துடன் தனி கோவிலாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது . தனி நந்தி பலிபீடம் அமைத்துள்ளது . ஸ்ரீ கோமதி அம்மன் அழகே உருவானவளாக ஸ்ரீசக்ர பீட பஞ்ச பிரம்மாசனத்தின் மேல் வலது இடை நெளிந்து , வலது கையில் மலர்பாணம் மற்றும் பூச்செண்டு எந்தியவளாக , இடது கையை பூமியைநோக்கி தளரவிட்டவளாக இளமங்கை கோலத்தில் புன்னகை பூத்த முகத்துடன் சர்வாலங்கார பூசிதையாக கருணை பொங்க காட்சி தருகிறாள் . மேலும் இது தசமஹா வித்யா பீடத்தில் சோடஷி பீடமாகும் . அன்னை சோடஷி ரூபமாக ஸ்ரீ லலிதாமஹா திரிபுர சுந்தரியாக, கமேஸ்வரியாக காட்சி தருகிறாள். அன்னையின் நான்கு கரங்களில் பாசம் அங்குசம் வைத்துள்ள மேல் இரு கைகளும் மற்றும் கரும்பு வில்லும் இங்கு அரூபமாக உள்ளன . அவற்றை நாம் நம் கண்களால் காண முடியாது என்றும், தவ வலிமை பெற்ற யோகிகளால் மட்டுமே அவற்றை காண முடியும் என்றும் , யாருக்கு அந்த தரிசனம் கிடைக்கபெறுகிறதோ அவர்களுக்கு அஷ்டமா சித்திகளும் வசப்படும் என்றும் கூறப்படுகிறது.
அன்னையின் சிறப்பு
அன்னை பராசக்தி கோமதி அம்பிகை ஹரியும் ஹரனும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்த , ஸ்ரீ சங்கர நாராயண கோலம் காண இந்த ஸ்தலத்தில் தவம் இயற்றினாள் . ஆடி பௌணமி உத்தராட நக்ஷத்திர தினத்தில் ஸ்ரீ சங்கரநாராயண தரிஷனம் அன்னை கோமதிக்கு கிட்டியது . இதை உணர்த்தும் விதமாக இங்கே ஆடி தபசு பிரம்மோத்சவம் ஆடி மாதத்தில் கொண்டாடபடுகிறது . இவ்விழாவில் அன்னை கோமதிக்கு தங்ககொடிமரத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டு 10 நாட்கள் அன்னையே காலையிலும் மாலையிலும் இரவிலும் வீதி உலா கண்டருள்கிறாள் . 11ஆம் நாள் இறைவன் , இறைவிக்கு சங்கரநாராயண கோலத்தில் காட்சியளிக்கிறார் . மேலும் இது அன்னையின் சஹஸ்ராரம் விழுந்த ஸ்தலமாகையால் அன்னை இங்கே மஹா யோகிநியாக , தபஸ் ஸ்வரூபிணியாக காட்சியளிக்கிறாள் . அம்பிகை சன்னதியின் முன்பு ஆக்ஞா சக்கரம் பதிக்கப்பட்டுள்ளது . இதில் அமர்ந்து பக்தர்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டிக்கொண்டு பயனடைகிறார்கள் . மேலும் மனநிலை சரியில்லாதவர்கள் , பேய் பிசாசு மற்றும் துர்சக்தியால் பீடிக்கப்பட்டவர்கள் இந்த சக்கரத்தின் மேல் அமர்ந்து குணமடைந்து செல்வது கண்கூடு . இங்கு அம்பிகையின் புற்றுமண் பிரசாதம் வெகுசிறப்பு. இதை உண்டால் வயிற்றுவலி மற்றும் உடல்வியாதிகள் தீரும் என்பது அனேக பக்தர்களின் நம்பிக்கை . குழந்தை வரம் வேண்டியும் பிரார்த்தனைகள் நடக்கிறது . இங்கேதான் 18 சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி அமைத்துள்ளது . பாம்பாட்டி சித்தர் கோமதி அம்மனை வாளைகுமாரியாகவும் , குண்டலினி சக்தியாகவும் , பாம்பு வடிவமாகவும் வழிபட்டிருக்கிறார் . எனவே காளஹஸ்திக்கு அடுத்தபடியாக இது கால சர்ப்ப தோஷம் போக்கும் ஸ்தலமாகவும் , ராகு கேது தோஷம் நீக்கும் ஸ்தலமாகவும் விளங்குகிறது . செவ்வாய் தோஷத்தை நீக்கி திருமணத்தடை அகற்றும் ஸ்தலமாகவும் சங்கரன்கோவில் விளங்குகிறது .
அன்னைக்கு பூஜைகள் :
கோவிலில் ஆறு கால பூஜைகள் நடக்கிறது . சுவாமிக்கு நடக்கும் அத்தனை பூஜை உபசாரனைகளும் அம்பிகைக்கும் நடக்கிறது . அம்பிகை கோவிலில் தங்க ஊஞ்சல் உள்ள பள்ளியறை உள்ளது . பள்ளிஎழுச்சி பூஜை முடிந்த பின் முதல் பெரிய தீபாராதனை அம்பிகைக்கே முதலில் நடக்கிறது . வொவ்வொரு தமிழ் மாத பிறப்பன்றும் கோமதி அம்பிகையின் தங்க ரத உலா நடக்கிறது . திங்கள் கிழமை மலர்ப்பாவாடையும் , செவ்வாய்கிழமை வெள்ளிபாவாடையும் , வெள்ளிகிழமை தங்க பாவாடையும் அம்பிகைக்கு சார்த்தபடுகிறது . வொவ்வொரு பவுர்ணமி அன்றும் அம்பிகைக்கு நவாவர்ண பூஜை நடைபெறுகிறது . தினமும் லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது . சிறுப்பு நாட்களில் அம்மனுக்கு சந்தனக்காப்பு நடக்கிறது . கோமதி அம்மனுக்கு தினமும் காலையிலும் , உச்சி வேளையிலும் , சாயங்கால பூஜையிலும் , இரவு பள்ளியறை பூஜைக்கு முன்பும் , 4 வேலைகள் அபிஷேகம் நடக்கிறது . இங்கு தங்கம், வெள்ளி காணிக்கை செலுத்துவதும்,முடி காணிக்கையும், மாவிளக்கு போட்டு பிரார்த்தனை செய்வதும் பிரதானமாக உள்ளது .
கோயிலும், அதன் பகுதிகளும்
கோயிலின் தென்பகுதியில் சங்கரலிங்கப் பெருமான் சந்நிதி அமைந்துள்ளது. வட பகுதியில் கோமதி அம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. இவ்விரண்டு சந்நிதிகளுக்கும் தனித்தனிக் கருப்பக் கிரகம், அர்த்த மண்டபம், அந்தராள மண்டபம், மணி மண்டபம், மா மண்டபம், பரிவார மண்டபம், சுற்று மண்டபங்கள் இருக்கின்றன. தென் பகுதியில் உள்ள சங்கரலிங்கப் பெருமான் சந்நிதியில் கொடிமரம், பலிபீடம், உத்திராட்சத் தொட்டில் ( மேல் நோக்கிப் பார்த்தல் வேண்டும் ) தாண்டி உள்ளே செல்ல முகப்பில் அதிகார நந்தியும் சுயஜா தேவியும் அமைந்திருக்கின்றன. கீழப் பிரகாரம் வலதுபுறத் தூணில் இக்கோயிலைக் கட்டிய உக்கிர பாண்டிய அரசன் உருவச் சிலையும் இடதுபுறத் தூணில் உமாபதி சிவமும் நின்று வணங்கும் கோலத்தில் தோற்றமளிக்கின்றனர். தெற்குப் பிரகாரத்தில் சைவ சமய குரவர், மாணிக்க வாசகர், திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரமூர்த்தி ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். இதனைத் தொடர்ந்து திருத்தொண்டர் புராணமியற்றிய சேக்கிழார் சுவாமிகள், மகா விஷ்ணு, அறுபத்து மூன்று நாயன்மார்கள், சுரதேவர், காந்தாரி, பிரம்ம சக்தி, ஈச சக்தி, குமார சக்தி, விஷ்ணு சக்தி, வரஹா சக்தி, இந்திர சக்தி, சாமுண்டி சக்தி எழுந்தருளியுள்ளனர். அடுத்து சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி இருக்கின்றார். வடக்குப் பிரகாரம் தென்பக்கம் ஒரு புற்றில் வன்மீகநாதர் இருக்கின்றார். சண்டிகேஸ்வரர் சந்நிதியும் இங்கே உள்ளது. வடபக்கம் சனி பகவான், காசி விசுவநாதர், பைரவர், துர்கா தேவியைக் காணலாம். கீழ்ப் பிரகாரத்தில் சந்திர சூரியர்கள் உள்ளனர்.
சங்கரலிங்கப்பெருமானின் மற்றொரு சிறப்பு. ஆண்டுதோறும் செப்டம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் 21, 22, 23 தேதிகளில் சூரிய ஒளி மானுடர்கள் சென்று தரிசனம் செய்யும் வாசல்கள் வழியாகவே நீள வாக்கில் சென்று, லிங்கத்தின் வலப்புறமாக விழத்துவங்கி சிறிது சிறிதாக நகர்ந்து சிவலிங்கத் திருமேனி முழுவதும் வியாபிக்கும். சிலசமயம் நான்கு நாட்கள் கூட விழும். இது போன்ற கோயில்கள் தமிழ் நாட்டில் சில உள்ளன. நான்கு நாட்கள் சூரியக் கதிர்கள் தவறாமல் விழும் களக்காடு கோவிலை உதாரணமாகக் கூறலாம்.
சங்கரனார் கோயில் ஓர் அழகிய கோயில். மகா மண்டபத்தைச் சுற்றி பல திருவுருவங்கள் நான்கு பக்கங்களிலும் செதுக்கப்பட்டிருக்கின்றன. உருவங்கள் சிறிதெனினும் சிற்பச் செறிவு பாராட்டத்தக்கது. அவையாவன : துவாரபாலகர், யோக நரசிம்மம், கார்த்த வீரியன், தசகண்ட இராவணன், ஹிரண்ய சம்ஹார மூர்த்தி, கணபதி, வீணா காளி, பத்திரகாளி, மாறியாடும் பெருமாள், அகோர வீரபத்திரர், நடராஜர், துவாரபாலகர் 2, ரிஷபாரூடர், உபதேச தஷ்ணமூர்த்தி, ருத்ர மூர்த்தி, ஐம்முகப் பிரம்மா, ஸிம்ஹவாஹன கணபதி, ஸ்ரீ இராமர், மன்மதன், வெங்கடாசலபதி, செண்பக வில்வவாரகி, சங்கரநாராயணர், சந்திர சேகரர், துவார பாலகர் 2 , உக்கிரபாண்டிய அரசர், ஸிம்ஹாசனேஸ்வரி, மஹாவிஷ்ணு, பாலசுப்பிரமணியர், துர்க்காதேவி, ஸ்ஹண்முகர், மகிஷாசுர மர்த்தினி, கபாலி, கால பைரவர், ஊர்த்துவ தாண்டவர், தில்லைக்காளி, கஜசம்ஹார மூர்த்தி, தக்ஷசம்ஹார மூர்த்தி, உச்சிட்ட கணபதி, ராமர், லட்சுமணர், பரமேஸ்வரர், மயூராரூடர், மஹா விஷ்ணு, வீரபத்திரர், பைரவர், த்ரிவிக்கிரமர், வாமனாவதாரம், ஹம்சாரூடர், துவாரபாலகர். மேலும், இம்மதிலைச் சுற்றி தென்பக்கம் தக்ஷிணாமூர்த்தி, மேல்பக்கம் நரஸிம்மமூர்த்தி, வடபக்கம் பிரம்மாவும் எழுந்தருளியுள்ளார்கள்,
திருக்கோயில் கர்ப்பக்கிரஹத்தில் சங்கரலிங்கப் பெருமான் சிறிய உருவமாயெழுந்தருளியிருக்கிறார். கூடவே மனோன்மணி தேவியும் வீற்றிருக்கின்றாள். மண்டபத்தில் தெற்கு பார்க்க நடராஜ மூர்த்தி ஊன நடனமும், ஞான நடனமும் செய்தருள்கின்றார்.சிவகாமியம்மையாரும் தாளம் போடுகின்றனர். காரைக்காலம்மையார் கூடவே இத்திருக்கூட்டத்தைக் கண்டு ஆனந்தத்தில் மூழ்கி பாடிக்கொண்டிருக்கின்றாள்.,
ஆடித் தபசு
ஆடி மாதத்தின் உத்திராட நாளில் சங்கரநாராயணர் கோமதி அம்மனுக்கும், சங்கன், பதுமன் ஆகியோருக்கும் காட்சியளித்த நாளை நினைவுகூரும் வகையில் இவ்விழா ஆடி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. அம்பலவாணதேசிகர் ஓர் மந்திரச் சக்கரத்தைப் பதித்துள்ளார். அந்த சக்கர பீடத்தில், . அம்மனுக்கு வழங்கப்படும் நைவேத்தியங்களில் மாவிளக்கு முக்கியத்துவம் பெறுகிறது. கோவிலுக்கு வருவோர், தங்கம், பித்தளை, வெண்கலச் சாமாங்கள், துணி, ஆடு, கோழி, உப்பு, மிளகாய், மிளகு, காய்கறிகள், பலவகைத் தானியங்கள் மற்றும் பாம்பு, தேள் ஆகியவற்றின் வெள்ளியால் செய்யப்பட்ட சிறு தகடுகளை காணிக்கையாகச் செலுத்துகின்றனர். இவை ஏலம் போடப்படும். உண்டியல்கள் மூலமாக ரொக்கப் பணமும் சாமான்களும் வரும்..ஆடித்தவசு குறித்த விவரமான கட்டுரை தனியாக இடம்பெற்றுள்ளது.
பாம்புப் புற்று
கோவிலின் உள்ளே சங்கரலிங்கப்பெருமான் சந்நிதியைச் சுற்றி அமைந்துள்ள பிரகாரத்தில் பாம்புப் புற்று அமைந்துள்ளதாக வரலாறு கூறுகிறது. அங்குள்ள சுவாமியின் பெயர் வன்மீக நாதர் என்று அழைக்கப்படுகிறது. ( அருள்மிகு சங்கரநாராயண சுவாமி தல வரலாறு - 2002 ) மேலும் இவ்விடத்தில் சுரங்கப்பாதை உள்ளதாகவும் அதுகுறித்த ஆய்வில் யாரும் இன்றுவரை ஈடுபடவில்லை என்றும் 90 வயதுக்கு மேல் உள்ளோர் கூறுகின்றனர்.
புற்றுமண் கோமதி அம்மன் சுற்றுப் பிரகாரத்தில், அம்மன் அபிஷேகத் தீர்த்தத் தொட்டிக்கு எதிரில் உள்ள கிணறு போன்ற தொட்டியில்தான் சேமிக்கப்பட்டுள்ளது. இறையன்பர்கள் நேர்த்திக்கடனாக வெள்ளி-செவ்வாய்க் கிழமைகளிலோ அல்லது திருவிழாக்காலங்களிலோ, சங்கரன்கோவிலுக்கு தெற்கே அமைந்துள்ள தெற்குப்புதூர் என்னுமிடத்திலிருந்து புதுமண் - புற்றுமண் என்று பனைஓலையிலான பெட்டிகளில் சுமந்து கொண்டுவந்து மேற்படித் தொட்டியில் கொட்டிச் சேமிப்பர். புற்றுமண் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். இதுதான் உண்மையான வரலாறு. புற்றுமண் சர்வரோக நிவாரணி என்பது ஆத்திகர்களின் நம்பிக்கை.
எச்.ஆர்.பேட்.ஐ.சி.எஸ். திருநெல்வேலி கெசட்டியரில் எழுதியுள்ளது ( தல வரலாறு பக்கம் 20 )
திருநெல்வேலி மாவ்ட்டத்தில் அமைந்துள்ள சங்கரன்கோயில் என்னும் ஊரானது சங்கரநயினார்கோயில் என்றே பலகாலம் அழைக்கப்பட்டு வந்தது. சங்கரன்கோவிலாக மாற்றப்பட்டத்திற்கான ஆதாரங்களைத் தேடும் முயற்சி துவக்கப்பட்டுள்ளது. ஆதியில் இக்கோயில், ஸ்ரீசங்கரலிங்கசுவாமி உடனுறையும் ஸ்ரீகோமதி அம்பிகை என்ற ஆவுடையம்மன் ஆகிய இரு சந்நிதிகளை மட்டுமே உடைத்தாயிருந்தது. இதனைப்பற்றிய குறிப்பு திருநெல்வேலி கெசட்டியர் ( Tinnevally Gazetter Vol ! என்ற நூலில், எச்.ஆர். பேட் ஐ..சி.எஸ் எழுதி அரசாங்கத்தார் வெளியிட்டது. பக்கம் 413 - 414 -ல் காணப்படுகிறது.
உக்கிரபாண்டியர் காப்பறையனோடு வந்து புற்றையும் பாம்பையும் சிவலிங்கத்தையும் கண்டு கோயில் கட்டினார். ஊரை உருவாக்கினார் இதுதான் சங்கரநயினார் கோவிலின் தொடக்கம். இங்கேதான் சிவபெருமான் தமது மனைவியார் கோமதியம்மைக்கும், சிவன்தான் பெரியவன், திருமால்தான் பெரியவன் என்று போரிட்ட சங்கனுக்கும் பதுமனுக்கும் தமது சங்கரநாராயணத் திருக்கோலத்தைக் காட்சி தந்தருளினார். சிவ வழிபாட்டிலிருந்து திருமால் வழிபாட்டிற்கு மாற்றப் பெற்றுள்ளனவாக நாம் கேள்விப்படுகிற கோவில்கள் பல இருக்கின்றன. வட ஆர்க்காட்டில் உள்ள திருப்பதிப் பெரிய கோவிலும், இராமநாதபுரம் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள பெருமாள் கோவிலும் இங்கே குறிப்பிடத்தக்கன. இந்த முயற்சி வீர வைணவர்களாக இருந்த விஜயநகர மன்னர் காலத்தியது. ஆனால், இம்முயற்சிக்குச் சங்கரநயினார் கோயிலில் முன்னாலேயே இரண்டு தெய்வங்களும் இருக்கின்றன என்ற தந்திரமான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எது எப்படியாயினும் சங்கரலிங்கப் பெருமானின் மனைவியாகிய கோமதியம்மையின் அருள் விளக்கமே இக்கோயிலின் மேன்மைக்கெல்லாம் காரணம் என்பதுதான் உண்மை.
தக்கணை தவமிருந்து முக்தி பெற்றது, வீர்சேனை பிணி தீர்ந்தது, சயந்தன் வினை தீர்ந்தது, கானவன் வீடுபேறடந்தது, கன்மாடன் நற்பேறடைந்தது போன்ற தகவல்களும் தலபுராணத்தில் காணக்கிடக்கின்றன. பத்திரகார முனிவன், இந்திரன், அகத்தியர், பைரவர், சூரியன், அக்கினி ஆகியவர்களும் சங்கரனாரையும் கோமதியம்மையாரையும் வழிபட்டுத் திருவருள் பெற்றுள்ளதாகவும் தல புராணம் கூறும்.
அருகில் உள்ள கரிவலம்வந்தநல்லூரை ஆட்சி செய்த பிரகத்துவச பாண்டியன் சங்க்கரனாரை வழிபட்டு விசய குஞ்சரபாண்டியன் என்ற வாரிசைப் பெற்றதாகவும் வரலாறு உண்டு.
சரித்திர வரலாறு -கல்வெட்டு
தச்சநல்லூர் சாமி வேதமூர்த்தி மடாலயத்தில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சில ஆலயத் திருப்பணிகள் அரசர்கள் காலத்தை விளக்கும் கல்வெட்டு ஒன்று இருக்கிறது. அதன்படி திருவாளர் கு.நல்லபெருமாள் பிள்ளையவர்களால் எழுதப்பெற்றுச் செந்தமிழ்ச் செல்வி பத்தாவது சிலம்பு 200-வது பக்கத்தில் வெளி வந்திருக்கிறது. அதில் கட்டுரைக்குச் சம்பந்தமான பகுதியை மட்டும் கீழே காணலாம்.
சாலிவாகன சகாப்தம் 945 ( கி.பி. 1022 ) கொல்லம் ஆண்டு 199-ல் மதுரைப் பாணியரசர், சேகரம் உக்கிர பாண்டிய அரசர், மானூருக்கு வந்து அதற்குச் சமீபமாக உக்கிரங்கோட்டையும் போட்டு அரசாண்டார். அக்காலத்தில் சங்க்கரநயினார்கோயில் ஆலயம் திருப்பணி உண்டானது. சகாப்தம் 1095 கொல்லம் ஆண்டு 349-இல் சீவலமாற பாண்டிய அரசர் வள்ளியூருக்கு வந்து சாமி தரிசனம் செய்து திருப்பணியும் கட்டி பிற்பாடு சங்க்கரநயினார் கோயிலுக்குப்போய், பெரிய பிரகாரம் முதலிய திருப்பணி செய்தார். பிற்பாடு மானூரைப் பிரபலம்பண்ணி வைத்து பெரிய குளமும் வெட்டினார். இவர் நாளையில் கரூர் சித்தர் திருநெல்வேலி முதலிய இடங்களைச் சபித்தது.
உக்கிரபாண்டியர் இக்கோயிலைக்கட்டிய காலத்திலேயே கருவை நகரை ஆண்ட பேரரசராகிய பிரசுத்துவச பாண்டியரும் இங்கே பல திருப்பணிகள் செய்தார் என்பதும், அவர் மகன் விசய குஞ்சர பாண்டியன் என்பதும், சங்கரநயினார் கோயில் இருக்கும் இடம் கருவை நகர்க் கோயிலுக்கு நந்தவனமாக இருந்ததென்பதும் தல புராணத்தால் அறிந்திடும் வரலாறுகள்.
சீவலமாறர்
சீவலமாற பாண்டியரே இத்தலபுராண ஆசிரியர். இவர் இவ்வூரிற் பலகாலம் தங்க்கியிருந்தனர். .அவர் பெயரால் ஊருக்குத் தென்மேற்கே இப்போதுள்ள சீவலப்பேரி என்ற குளத்தினாலும், கிழக்கே இரண்டு மைலுக்குள் உள்ள சீவலராயன் ஏந்தல் என்ற ஊராலும் நிலைநாட்டப்பெறும். இவர் பெயர் கங்கை கொண்டான், மானூர், தென்காசி, சீவலப்பேரி ஆகிய தலங்களிலும், சம்பந்தப்படுகிறது.
கோமதியம்மை திருமுன்பு சக்கரம்
இன்றைக்கு ஒரு 183 ஆண்டுகளுக்கு முன்னர் (2002-ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது ). கி.பி. 1785-இல் இறைவர் திருவடியடந்த மாபாடியம் சிவஞான முனிவர் சிறுபிள்ளையாக இருக்கும்போது திருவாவடுதுறையிற் பத்தாவது குருமூர்த்தமாக எழுந்தருளியிருந்தவர் மேலகரம் வேலப்ப தேசிகராவார். இரைவர் திருவடிக்கு மெய்யன்பராதலினாலே அவரிடம் குட்டம், குன்மம் போன்ற நீங்க்கா நோய்களையும் போக்கும் அருட் சக்தி பதிந்து விளங்கியது அவர் சங்கரன்கோயிலுக்கு வந்து மேலை வீதியிலுள்ள தமது திருமடத்தில் எழுந்தருளியமையை அறிந்த நெற்கட்டுஞ்ச்செவலின் குறுநில மன்னராகிய சிவக்னான பூலித்தேவர் குருமூர்த்தியைக் கண்டு பணிந்து அவர் திருவருளால் தமக்கிருந்த குன்ம நோய் நீங்க்கப் பெற்று ஞானதேசிகருக்கு விளைநிலம் முதலானவை சிவ பூஜை, குரு பூஜை, மகாசேசுர பூஜைகளின் பொருட்டு சாசனம் செய்து கொடுத்தார்.
வேலப்ப தேசிக மூர்த்திகள் கோமதியம்மையின் திருமுன்பு ஒரு மந்திரச் சக்கரத்தைப் பதித்தருளினார். அச்சக்கரத்திற்குக் கோமதியம்மை தந்தருளிய வல்லமையினாலே இன்றும் அதனருகில் வரும் ஆடாத பேயும் ஆடுகின்றது. தீராத நோயும் தீர்ந்து போகின்றது. இந்தத் தேசிக மூர்த்திகள் சங்கரன்கோவிலிலே வழிபாடியற்றி இருக்கும்போது ஒரு புரட்டாசி மாத மூல நாளிலே சங்கரனார் திருவடிமலர் சேர்ந்து பேரின்பம் எய்தினார். மேற்கு வீதியில் உள்ள திருவாவடுதுறை மடத்தில் வீற்றிருந்து இன்றும் அருள்பாலித்து வருகின்றார். ஆண்டுதோறும் குருபூஜையும் சமபந்தி போஜனமும் இன்றும் தவறாமல் நடைபெற்று வருகின்றது., . .
சங்கரன்கோவில் சிறுகுறிப்பு :
1. இறைவன் பெயர் : ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி மற்றும் ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி 2. இறைவி பெயர் : ஸ்ரீ கோமதி அம்பிகை (வேறு பெயர்கள் : சங்கரி, ஆவுடைய நாயகி , மனோன்மணி , வாளைகுமாரி மற்றும் மஹாயோகினி ) 3. உற்சவர் : ஸ்ரீ உமா மகேஸ்வரர் . 4. விநாயகர் : சித்தி விநாயகர் , சர்ப்ப விநாயகர் , புன்னைவன விநாயகர் . 5. முருகர் : ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி மற்றும் ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தேவசேனா சஹித ஸ்ரீ ஷண்முகர் . 6. பைரவர் : மஹா கால சர்ப்ப பைரவர் 7. ஸ்தல துர்க்கை : ஸ்ரீ விஷ்ணு துர்க்கை (தெற்கு நோக்கி தரிசனம்) 8. தீர்த்தம் : நாக சுனை தீர்த்தம் , சங்கர தீர்த்தம் , கௌரி தீர்த்தம் , இந்திர தீர்த்தம் , அகஸ்திய தீர்த்தம் , சர்வ புண்ணிய கோடி தீர்த்தம்(அம்பிகையின் அபிஷேக தொட்டி ) 9. ஸ்தல விருட்சம் : புன்னை மரம் 10. மேலும் இங்கு ஸ்ரீ சங்கர நாராயணர் சந்நிதியில் ஒரு வெள்ளி பேழையில் ஸ்படிக லிங்கமான ஸ்ரீ சந்திர மௌலீச்வர லிங்கம் உள்ளது . இதற்க்கு காலை வேளையில் தினமும் அபிஷேகம் உண்டு . இந்த லிங்கத்தை மறைந்த சிருங்கேரி பெரியவர் இந்த கோவிலுக்கு வழங்கினார் . மேலும் மறைந்த காஞ்சி மஹா பெரியவர் இங்கு தங்கி சுவாமியையும் அம்பாளையும் தரிசனம் செய்துள்ளார்கள் . 11. பாண்டி நாட்டு பஞ்ச பூத ஸ்தலங்களில் இது பிரிதிவி அதாவது மண் ஸ்தலமாகும் . 12. திருவிழாக்கள் : ஆடி தபசு பிரம்மோத்சவம் (12 நாட்கள்) , சித்திரை பிரம்மோத்சவம் (10 நாட்கள்) , ஐப்பசி திருக்கல்யாண திருவிழா (12 நாட்கள்), மார்கழி திருவாதிரை திருவிழா (10 நாட்கள்) , நவராத்திரி விழா (9 நாட்கள்) , விநாயகர் சதுர்த்தி , ஸ்கந்த சஷ்டிவிழா , வசந்த விழா , எண்ணெய் காப்பு உற்ச்சவம். வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு . 13. ஸ்ரீ சாஸ்தா பீடம் , சப்த மாதாக்கள் , ஸ்ரீ சரஸ்வதி , ஸ்ரீ பிரம்மா , ஸ்ரீ சனீச்வரன் தனி சன்னதி , நாகராஜர் தனி சன்னதி , நாகராஜர் புற்றுகோவில் , யானை மாடம் (கோமதி என்ற யானை இங்கு வளர்கிறது) , தனி நடராஜர் சன்னதி ,போன்றவை இங்கு உள்ளன . 125 அடி ராஜ கோபுரம் கோவிலின் நுழைவு வாயிலாக அமைந்துள்ளது . 14. மேலும் உள்ள சிறப்பு : இங்கே சுவாமி கோஷ்டத்தில் லிங்கோத்பவருக்கு பதிலாக ஸ்ரீ நரசிம்ஹர் கோயில் கொண்டுள்ளார். தாயார் ஸ்ரீ அமிர்தவல்லி தாயார் . ஸ்ரீ லக்ஷ்மி நாராயணருக்கும் சன்னதி உள்ளது . ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி சன்னதியின் பின்புறம் சித்திர வடிவமாய் ஸ்ரீ ரங்கநாதர் கோயில் கொண்டுள்ளார் ..
தலம் அமைதுள்ள இடம் ஊர் மற்றும் பயண விவரங்கள் :
சங்கரன்கோவில் ராஜபாளயதிலிருந்து திருநெல்வேலி செல்லும் சாலைக்கும் , கோவில்பட்டியிலிருந்து தென்காசி-கொல்லம் சாலைக்கும் இணைப்பாக (ஜன்க்ஷனாக) உள்ளது. சென்னையிலிருந்து செங்கோட்டை ரயில் பாதையில் ராஜபாளையம் ரயில் நிலையத்திற்கு அடுத்த ரயில் நிறுத்தும் நிலையமாக உள்ளது . இந்த வழியே பொதிகை தொடர்வண்டி நின்று செல்கிறது . மேலும் செங்கோட்டையிலிருந்து மதுரைக்கும் , மதுரையிலிருந்து செங்கோட்டைக்கும் மூன்று + மூன்று மொத்தம் 6 தடவை பயணிகள் ரயில்போக்குவரத்து உள்ளது . சங்கரன்கோவிலில் இருந்து மதுரை விமான நிலையம் 139 கிலோமீட்டர் தொலைவிலும் , திருவனத்தபுரம் சர்வதேச விமான நிலையம் 163 கிலோமீட்டர் தொலைவிலும் ,தூத்துக்குடி உள்நாட்டு விமான நிலையம் 96.2 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளன .

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

திருவில்லிப்புத்தூர் சிறப்புகள்


திருவில்லிப்புத்தூர் சிறப்புகள்

திருவில்லிப்புத்தூர் (Thiruvilliputhur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவில்லிப்புத்தூர் வட்டம் மற்றும் திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். விருதுநகர் மாவட்டத்தின் முதன்மை நீதிமன்றம் இந்நகரில் அமைந்துள்ளது. இது மதுரை - செங்கோட்டை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் உள்ளது.

ஸ்ரீவில்லிப்புத்தூர்
—  முதல் நிலை நகராட்சி  —

ஆண்டாள் கோவில்

ஸ்ரீவில்லிப்புத்தூர்
இருப்பிடம்: ஸ்ரீவில்லிப்புத்தூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம்
9°30′58″N 77°37′48″E
நாடு
 இந்தியா
மாநிலம்
தமிழ்நாடு
மாவட்டம்
விருதுநகர்
வட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஆளுநர்
பன்வாரிலால் புரோகித்
முதலமைச்சர்
எடப்பாடி க. பழனிசாமி
மாவட்ட ஆட்சியர்
எ. சிவஞானம் இ. ஆ. ப.
நகராட்சி தலைவர்
செந்தில்குமாரி
மக்கள் தொகை
75 (2011)
பாலின விகிதம்
1:1 ♂/♀
நேர வலயம்
இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு
• உயரம்


• 146 மீட்டர்கள் (479 ft)

குறியீடுகள்
சிறப்புகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழகத்தில் மிகவும் பழமைவாய்ந்த ஊர்களில் ஒன்றாகும். 1000 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில், 200 வருட சிறப்புப் பெற்ற இந்து மேல்நிலைப் பள்ளி, 137 வருட சிறப்புப் பெற்ற பென்னிங்டன் நூலகம் ஆகியவை இதற்குச் சான்று பகர்பவை. திருப்பாவை என்னும் தெய்வீகத் தமிழ் இலக்கியத்தைத் தமிழ் மக்களுக்கு அளித்தது இந்த கோவில் நகரமே ஆகும். ஸ்ரீவில்லிபுத்தூர் இங்கு அமைந்துள்ள ஆண்டாள் கோவிலுக்காக அதிகம் அறியப்படுகிறது. ஊரின் உள்ளாட்சி நிர்வாகம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமைக்குக் குறிப்பிடத்தக்க ஒரு மைல்கல்லாக விளங்குவது ஸ்ரீ வடபத்ரசாயி பெருமாளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட 11 அடுக்குகளைக் கொண்ட கோபுரம்கொண்ட கோவில் ஆகும். இந்த கோவில் கோபுரம் 192 அடி உயரமானது. இந்த சீர்மிகு கோவில் பெரியாழ்வார் என்னும் பெருமாளின் அடியாரால் கட்டப்பட்டது. ஆண்டாளை எடுத்து வளர்த்த தந்தையாகிய இவர், தனது மருமகனாகிய பெருமாளுக்கு இக்கோபுரத்தைக் கட்டினார் என்று கூறுவர். அவர் பாண்டிய மன்னன் வல்லபதேவனின் அரண்மனையில் நடைபெற்ற விவாதங்களில் வெற்றிகொண்டு, தாம் பெற்ற பொன்முடிப்பைக் கொண்டு இதைக் கட்டி முடித்தார் என்றும் நம்பப்படுகிறது. ஸ்ரீவில்லிப்புத்தூரின் மற்றொரு அதிசயம் ஆடிப்பூரம் அன்று இழுக்கப்படும் அழகியதேர் ஆகும். ஸ்ரீவில்லிபுத்தூர் இன்றும் அதன் பண்டைய மரபு மற்றும் பக்தி பங்களிப்புகளால் அறியப்படுகிறது.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம்9.31°N 77.37°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 146 மீட்டர்(482 அடி) உயரத்தில் இருக்கின்றது.

வரலாறு

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்பது திருவில்லிபுத்தூரில் அமைந்துள்ள பழமையானதும், ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம் மற்றும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்து மத வைணவ கோவில் ஆகும்.


திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்

பெயர்
வேறு பெயர்(கள்):
வன்புதுவை, ஸ்ரீ தன்விபுரம், திருவில்லிபுத்தூர் திவ்யதேசம்
பெயர்:
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
அமைவிடம்
நாடு:
இந்தியா
மாநிலம்:
தமிழ்நாடு
மாவட்டம்:
விருதுநகர்
அமைவு:

திருவில்லிபுத்தூர்

கோயில் தகவல்கள்
சிறப்பு திருவிழாக்கள்:
ஆனி ஆழ்வார் உற்சவம் (சூன்–சூலை), திருவாடிப்பூரம் (ஆகத்து), எண்ணெய்க்காப்பு (டிசம்பர்-சனவரி)
கட்டிடக்கலையும் பண்பாடும்
கோயில்களின் எண்ணிக்கை:
3 (ஸ்ரீ வடபத்திர சாயி, ஸ்ரீ ஆண்டாள் மற்றும் ஸ்ரீ பெரியாழ்வார்)

வரலாறு

இப்பகுதி மல்லி என்ற அரசியின் ஆட்சியில் இருந்தது. வில்லி காட்டை திருத்தி கோயில் எழுப்பி அழகிய நகரமைத்தான். இதனாலே வில்லிபுத்தூர் எனும் பெயர் பெற்றது.

புராணம்

ஸ்ரீவில்லிப்புத்தூர் முன்னொரு காலத்தில் வராக சேத்திரம் என்று அழைக்கப்பட்டது. சேத்திரத்தின் ஒரு பகுதியாக ஒரு காடும் இருந்தது. அதில் வில்லி, கண்டன் என்ற இரண்டு வேட்டுவ சகோதரர்கள் இருந்தார்கள். அவர்கள் ஒரு நாள் வேட்டையாடி வரும் போது கண்டன் புலி ஒன்றை துரத்தி செல்கிறான். அவனை புலி கொன்று விடுகிறது. இதை அறியாத வில்லி தன் தம்பியை தேடி அலைகிறான். சோர்வடைந்து மரத்தடியில் தூங்குகிறான். அவன் கனவில் பெருமாள் தோன்றி கண்டனுக்கு நேர்ந்த நிலையை கூறுகிறார். பின்னர் தாம் இங்கு 'காலநேமி' என்ற அசுரனை வதம் செய்வதற்காக எழுந்தருளியதாகவும் பின்னர் இந்த ஆலமரத்தினடியில் உள்ள புதருக்குள் "வடபத்ரசாயி" என்கிற திருநாமத்துடன் காட்சி அளிக்கபோவதாகவும் கூறி, இந்த காட்டை அழித்து நாடாக்கி தமக்கு கோயில் எழுப்பி ஆராதனை செய்து வரும்படி கூறி மறைகிறார். இதனால் இந்த ஊருக்கு "ஸ்ரீவில்லிப்புத்தூர்" என்று பெயர் வந்தது என்று தலபுராணம் கூறுகிறது.

ஆண்டாள் எண்ணெய்க்காப்பு

திருவில்லிபுத்தூர் திருக்கோயிலில், மார்கழி மாதம் ஆண்டாள் எண்ணெய்க்காப்புக்கு 61 வகை மூலிகைகள் அடங்கிய 40 நாட்களில் காய்ச்சிய தைலம் பயன்படுத்தப்படுகின்றது. நல்லெண்ணெய், பசும்பால், நெல்லிக்காய், தாழம்பூ, இளநீர் முதலான பல பொருட்கள் சேர்த்து ஏழுபடி எண்ணெய்விட்டு இரண்டு பேர் நாற்பது நாட்கள் காய்ச்சுவர். இதில் நாலுபடி தைலம் கிடைக்கும். மார்கழி மாதத்தின் ஆண்டாள் எண்ணெய்க்காப்பு உற்சவத்தின் எட்டு நாட்களிலும் ஆண்டாளுக்கு இந்த தைலமே சாற்றப்படுகின்றது. மார்கழி மாதம் முடிந்த பின்னர் பக்தர்களுக்குப் பிரசாதமாக இந்த தைலப்பிரசாதம் தரப்படுகின்றது. பக்தர்களால் நோய் தீர்க்கும் மருந்தாக இந்தத் தைலம் நம்பப்படுகின்றது.

தமிழ்நாட்டின் அரசு முத்திரையில்

இந்தியாவில் 1956 இல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது, தமிழ் பேசும் பகுதிகள் சென்னை மாகாணமாக உருப்பெற்றன. அந்த காலகட்டத்தில் சென்னை மாகாண முதல்வராக இருந்த காமராசர் தலைமையிலான அரசு, அரசாங்க சின்னமாக திருவில்லிபுத்தூர் கோயில் கோபுரத்தைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால் அதனை வடிவமைத்த ஓவியர் கிருஷ்ணா ராவ், மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் மேற்கு கோபுரத்தை மையமாக வைத்து கோபுரத்திலுள்ள காளை வாகனத்தின் மீது அமர்ந்திருக்கும் சிவ பார்வதி சிலைகள் உட்பட சேர்த்து வடிவமைத்தார்.


ஆடிப்பூர தேரோட்ட உற்சவம்

18 ஆண்டுகள் ஓடாதிருந்த ஆண்டாள் நாச்சியார் பெரியதேர் பல நூற்றாண்டு பழமைவாய்ந்தது. கலைநயமிக்க பல மரசிற்பங்களும் ஒன்பது மர சக்கரங்களும் ஒன்பது மேலடுக்கு சாரம் அலங்கார பதாகைகளும் அதன் உச்சியில் கும்ப கலசம் (ஐந்து பகுதி இணைக்கப்பட்டது) பட்டு கொடியும், ஒன்பது பெரிய வடமும் அமையப்பெற்றது. தேரோட்ட உற்சவத்தில் சுற்று வட்டார கிராமங்களுக்கு கோபுரமும் திருத்தேரும் கம்பீரமாக காட்சியளிக்கும். பத்து கி.மீ தொலைவிலும் தேர் எந்த ரதவீதியில் உள்ளது என அறியலாம். தேரோட்ட உற்சவத்தில் வடம் பிடித்து மக்கள் இழுக்க, நின்ற தேர் நகர மறுத்தால் தேரின் பின் சக்கரங்களில் பெரிய கனமான மரத்தடியால் உந்தித் தள்ளுவர். எண்ணெய் தடவிய கனமான மர சறுக்குக்கட்டைகளால் தேரை நிறுத்தவும் பக்கவாட்டில் திருப்பவும் செய்வர்.

காலபோக்கில் மரசக்கரங்கள் சேதமுற்றதால் அதிக செலவு கருதி 18 ஆண்டுகள் ஓடாதிருந்தது. மாற்று சிறிய தேர் பயன்பட்டது. மீண்டும் பெரிய தேரை சீரமைத்து இழுத்தபோது அலங்கார மேலடுக்கு சாரம்,கலசம் சரிந்து கீழே விழுந்து பல உயிர்பலி நேர்ந்தது.

முன்பு வலிமைவாய்ந்த மக்கள் இத்தேரை நான்கு ரதவீதிகளில் சுற்றி நிலைக்குவர மூன்று மாதங்கள் ஆகும். பாதுகாப்பு கருதி அலங்கார மேலடுக்கு எண்ணிக்கையைக் குறைத்து, இரும்பு அடிசட்டம்,விசைத்தடையுடன் கூடிய நான்கு இரும்பு சக்கரம் அமைத்து தேர் நவீனப்படுத்தப்பட்டது. தற்போது தேரோட்ட உற்சவம் ஒரேநாளில் நடந்து முடிந்து விடுகிறது.(தேர் நிலைக்குவர மூன்று மணி நேரமே)

ஆண்டாள் கோவில் கோபுரம்

தென்னிந்திய வரலாற்றில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு குறிப்பிடத்தக்க முக்கிய இடம் உண்டு. பல நூற்றாண்டுகளுக்கு முன், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நிலப்பகுதிகள் ராணி மல்லி என்பவரின் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த ராணிக்கு வில்லி மற்றும் கண்டன் என்ற இரு மகன்கள் இருந்தனர். ஒரு நாள், அவர்கள் காட்டில் வேட்டையாடிய போது, கண்டன் ஒரு புலியால் கொல்லப்பட்டார். இந்த உண்மை தெரியாமல், வில்லி, அவரது சகோதரர் என்ன ஆனார் என்று காட்டில் தேடிக் கொண்டு இருந்தார். வெகுநேரம் காட்டில் தேடிய பின்னர் களைத்துப்போய் சிறிது நேரம் தூங்கினார். அவரது கனவில், கடவுள் அவரது சகோதரருக்கு என்ன ஆயிற்று என்பதை அவருக்கு விளக்கினார். உண்மை புரிந்ததும், தெய்வீக உத்தரவின் பேரில் வில்லி அந்த காடுகளைத் திருத்தி அமைக்க, ஒரு அழகான நகரம் உருவாக்கப்பட்டது. இந்த காரணத்திற்காக, இந்த நகரம், வில்லிப்புத்தூர் என்ற பெயர் பெற்றது. மேலும் இந்த நகரம் திருமகளே தெய்வீக குழந்தையாக ஆண்டாள் என்று பிறந்ததின் காரணமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் என்று பெயரிடப்பட்டது, அது திருமகளைக் குறிக்கும் வண்ணம் தமிழ் வார்த்தையான "திரு" என்ற என்ற அடைமொழி கொண்டு திருவில்லிப்புத்தூர் என்று வழங்கப்பெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊர்ப்பெயர்

இந்த ஊருக்கு இப்பெயர் வரக்காரணம் இதனை உருவாக்கிய வில்லி என்பவார். வில்லிபுத்தூர் என்று பெயரிடப்பட்ட இவ்வூர், திருமகளாகிய ஆண்டாளின் அவதாரத் தலமாக இருப்பதால் "ஸ்ரீ" என்னும் பெயர் பெற்றது. "ஸ்ரீ" என்னும் சொல் வடமொழிச் சொல்லாக இருப்பதால் "திரு" என்று வழங்கப்படுகிறது.


இலக்கியங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர்

பெரியாழ்வார் இயற்றிய "திருப்பல்லாண்டு", ஆண்டாள் இயற்றிய "திருப்பாவை", "நாச்சியார் திருமொழி" ஆகியவை தமிழுக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் தந்த இலக்கியங்கள். அன்றைய நாளில் இவ்வூர் எப்படி இருந்தது என்பதற்கான குறிப்புகள் ஆண்டாளின் பாசுரங்களில் காணப்படுகின்றன.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 33 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 21,411 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 75,396 ஆகும். அதில் 37,423 ஆண்களும், 37,973 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 85.7%மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,015 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 6884 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 986 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடி மக்களும் முறையே 4,681 மற்றும் 10 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 90.7%, இசுலாமியர்கள் 2.27%, கிறித்தவர்கள்6.62% மற்றும் பிறர் 0.42% ஆகவுள்ளனர்.

முக்கியத் தொழில்கள்

நெசவுத் தொழில்
பால்கோவா தயாரிப்பு
இவ்வூர் நெசவுத் தொழிலுக்குப் புகழ் பெற்றது.மிகப் பிரபலமான துணி விற்பனை செய்யும் நிறுவம் போத்தீஸ் முதலில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் தான் துவங்கப்பட்டது. அதே போல், பால்கோவா என்ற இனிப்புத் தயாரிப்புக்கும் புகழ் பெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா வெளிநாட்டில் வாழும் தமிழர்களாலும் விரும்பி உண்ணப்படும் இனிப்பு ஆகும்.

பிற தொழில்கள்

சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் செய்பவர்கள் இருக்கிறார்கள். சிவகாசியில் உள்ள தீப்பெட்டி, பட்டாசுத் தொழிற்சாலைகளிலும், ராஜபாளையம் பகுதியில் உள்ள பஞ்சாலைகளிலும் வேலைக்கு மக்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து செல்வதுண்டு. ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை அருகில் உள்ள பகுதிகளில் கல் குவாரி, செங்கல் சூளை முதலியவை உண்டு.

முக்கிய ஆலயங்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில்
திருவண்ணாமலை கோயில்
பெரிய மாரியம்மன் கோயில்(mariamman kovil)
சந்தன மாரியம்மன் கோயில்
பிற வழிபாட்டுத் தலங்கள்

சி. எஸ். ஐ தேவாலயம்
ரோமன் கத்தோலிக்கர் தேவாலயம்
தரகுமலை மாதா கோவில்
மசூதி
நகரமைப்பு
தொகு
ஆண்டாள் கோவிலை சுற்றி தேர் செல்லும் வீதிகள் ரத வீதி என்று வழங்கப்படுகின்றன. அதைத் தொடர்ந்து கடைகள், பள்ளிகள் அமைந்து உள்ளன. பேருந்து நிலையம் ஊருக்கு மத்தியில் உள்ளது. காடுகளைத் திருத்தி உருவாக்கப்பட்ட ஊர் என்பதால், ஊரின் உட்புறம் தாண்டி முறையான கட்டமைப்பு இல்லை, மக்கள் குடியேற்றம் நிகழ்வதைப் பொறுத்து ஊரின் அமைப்பு மாறுதல் ஏற்படுகிறது.

நிர்வாகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் தெருக்களுக்கு கவுன்சிலர்களும், அவர்களுக்குத் தலைமையாக நகராட்சித் தலைவரும் ஊரின் நிர்வாகத்தைக் கவனிக்கின்றனர். இவ்வூரின் முன்னாள் சட்டசபை உறுப்பினர் தாமரைக்கனி மிகவும் பெயர் பெற்றவர்.

பண்பாடு

இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலானோர் தமிழ் பேசும் மக்களே. சிறுபான்மையில் தெலுங்கு பேசும் தமிழ் மக்களும் உள்ளனர். அனைவரும் உடை, உணவு, பழக்க வழக்கங்கள், திருமணம், சடங்கு, சம்பிரதாயங்களில் பின்பற்றுவது தம் இனத்தைச் சார்ந்த தமிழ் பண்பாடு.

உணவு

தமிழகத்தின் முக்கிய உணவான அரிசி சோறு இவ்வூரின் முக்கிய உணவாக உள்ளது. இவை தவிர பிற தமிழக உணவுகளும் ஸ்ரீவில்லிபுத்தூரில் கிடைக்கும். புரோட்டா என்று அழைக்கப்படும் மைதா மாவினால் செய்யப்படும் ரொட்டியும் இங்கு பிரசித்தம். பேருந்து நிலையத்தில் இருந்து வெளி வந்ததும், புரோட்டா கிடைக்கும் உணவகங்கள் இங்கு உண்டு. பதநீர் இங்கு கிடைக்கும் இனிமையான இயற்கை குளிர்பானம். பதநீர் அரசின் கூட்டுறவுக் கழகம் மூலம் விற்பனை செய்யப் படுகிறது.

கல்வி

பள்ளிகள்

(ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி எல்லைக்குள்)

சி. எம். எஸ். மேல்நிலைப் பள்ளி
குருஞான சம்பந்தர் இந்து மேல்நிலைப்பள்ளி
நகர்மன்ற திரு. வி. கலியாணசுந்தரனார் மேல்நிலைப்பள்ளி
மகாராஜபுரம் நாகம்மாள் ராஜையா பெண்கள் மேல்நிலைப்பள்ளி
புனித இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளி (கான்வென்ட்)
புனித இருதய நடுநிலைப் பள்ளி
மங்காபுரம் இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி
தியாகராஜா மேல்நிலைப்பள்ளி
புனித அந்தோணியார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
ஸ்ரீவி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
சூளை விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
அருகில் உள்ள கல்லூரிகள்
தொகு
அய்ய நாடார் ஜானகி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிவகாசி
கலசலிங்கம் பல்கலைக்கழகம், கிருஷ்ணன்கோவில்
வி. பி. எம் குழுமம் கல்வி நிறுவனங்கள், கிருஷ்ணன்கோவில்

போக்குவரத்து

ஸ்ரீவில்லிபுத்தூருக்கான ரயில் இணைப்பு, தெற்கு இரயில்வே விருதுநகர் -செங்கோட்டை பாதையில் உள்ளது. இது மதுரையில் இருந்து 74 கி.மீ. தெற்கே அமைந்து உள்ளது. மதுரை, சிவகாசி, ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, திருநெல்வேலி மற்றும் சாத்தூர் உடன் சாலை மற்றும் ரயில் இணைப்பு பெற்றுள்ளது. சென்னையில் இருந்து செங்கோட்டை வரும் செல்லும் அகல ரயில் பாதை இவ்வூரையும் கடக்கிறது. வாரத்தின் அனைத்து நாட்களும் பொதிகை விரைவு வண்டி இந்த ஊர் ரயில் நிலையத்தில் நிற்கும்.

அருகமைந்த ஊர்கள்

ராஜபாளையம் – 11 கி. மீ
சிவகாசி – 20 கி. மீ.
மதுரை – 74 கி.மீ.
தென்காசி -79 கி.மீ.
குற்றாலம் – 85 கி.மீ.
செங்கோட்டை – 86 கி.மீ.
விருதுநகர்- 45 கி.மீ. ( சராசரியாக)
சுற்றுலா
தொகு
சிறப்புமிக்க இடங்கள்
ஆண்டாள் கோவில்
பென்னிங்டன் நூலகம்
திருமுக்குளம்
செண்பகத் தோப்பு சாம்பல் நிற அணில் வனவிலங்கு சரணாலயம்
திருமலை நாயக்கர் அரண்மனை
அருகிலுள்ள பிற சுற்றுலாத் தலங்கள்
சதுரகிரி மலை
தாணிப்பாறை
பிளவக்கல் ஆணை

செண்பகத்தோப்பின் எழில்மிகு காட்சி
செண்பகத்தோப்பு, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சுமார் 8 கி.மீ. மேற்கே அமைந்துள்ள ஒரு காட்டு பகுதி. செண்பகத்தோப்பு செல்வது மலையேற்றம் செய்வதை விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு ஆகும். இரண்டு சக்கர அல்லது வாகனம் அல்லது மிதிவண்டி மூலம் இவ்விடம் வரலாம். காடுகள் மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச்சரிவுகளில் காணப்படுகின்றன. மலையின்மொத்த நிலப்பரப்பில் 6.3% (சதவீதம்)மட்டுமே காடுகள் உள்ளது. அரிய தாவரங்கள் மற்றும் விலங்கின வகைகள் மலைச்சரிவுகளில் இணைந்து காணப்படுகின்றன.

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் செண்பகத்தோப்பில் 1989 ஆம் ஆண்டு, 480 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஒரு வனவிலங்கு சரணாலயம் நிறுவப்பட்டது. இந்த சரணாலயத்தின் தென்மேற்குப் பகுதியில் 'பெரியார் புலிகள் காப்புக்காடுகள் சரணாலயம்' மற்றும் வடமேற்குப் பகுதியில் 'மேகமலை காப்புக்காடுகள்' அமைந்துள்ளன.

இந்த இடத்தின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 100மீ (மீட்டர்) முதல் 2010மீ (மீட்டர்) வரை வேறுபடுகிறது. இந்த சரணாலயம் அழிந்து வரும் இனமாகிய சாம்பல் நிற அணில்களுக்கு (Grizzled Giant Squirrel, Ratufa macrora)


சாம்பல் நிற அணில்
புகலிடமாகத் திகழ்கிறது.இந்த சாம்பல்நிற அணில் 1 முதல் 1.8 கிலோ எடையுள்ளதாகவும் மற்றும் ஒரு சிறிய பூனை அளவில் இருக்கும். இதன் நீளம் 735 மி.மீ. (மில்லிமீட்டர்), மூக்கில் இருந்து 400 மி.மீ.(மில்லிமீட்டர்) முதல் 360 மி.மீ.(மில்லிமீட்டர்) வால் வரை நீளம் இருக்கும். இந்த வகை அணில்கள் அருகருகேயுள்ள மரங்களின் உச்சியிலுள்ள சந்திக்கும் கிளைகளில் தமது கூட்டை கட்டும். இம்மாதிரி உயர்ந்த கிளைகளில் கூடு கட்டுவது, தான் ஏதேனும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது மரம் விட்டு மரத்தில் தாவி அந்த இடத்தில் இருந்து நகர்ந்து சாம்பல் நிற அணில் தப்பிக்க வழிவகை செய்கிறது. ஒரு சாம்பல் நிற அணிலின் சராசரி வசிப்பிடப் பரப்பு 1.970 சதுர மீட்டர் முதல் 6.110 சதுர மீட்டர் ஆகும்.

இந்த சரணாலயம் பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன மற்றும் பட்டாம்பூச்சிகள் முதலிய உயிரினங்களுக்கு இருப்பிடம். யானைகளும் இங்கே இருப்பதுண்டு. சில சமயங்களில் இடம்பெயர்ந்து வரும் யானைகள் காணப்படுகின்றன. புலி, சிறுத்தை, வரையாடு, புள்ளி மான்கள், மான், கடமான், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, நீலகிரி குரங்குகள், சிங்கவால் குரங்கு, குரங்குகள், தேவாங்கு, வானரம், குரைக்கும் மான், கரடி மற்றும் பறக்கும் அணில் என மற்ற விலங்குகளும் காணப்படுகின்றன. பறவை இனங்கள் 100-க்கும் மேல் அடையாளம் காணப்பட்டுள்ளன. அரிய வகை பறவை இனமான 'இந்திய பெரிய கருப்பு வெள்ளை இருவாயன்' இங்கே காணப்படுகிறது.

சரணாலயம் உள்ள வனப்பகுதிகளில் வசிக்கும் வனவிலங்குளைப் பாதுகாப்பதற்காகச் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. காட்டில் உள்ள பழங்கள் மற்றும் காட்டில் உள்ள பிற சிறிய இயற்கை உற்பத்திப் பொருட்களைச் சேகரித்து எடுத்துச் செல்வதற்குக் கொடுத்து வந்த ஆண்டு குத்தகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பழமரங்கள் மற்றும் மற்ற வகை மரங்கள் நடப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் அவ்விலங்குகளின் உணவு மூலங்களை அதிகரிக்கும், அதே போல் காடுகளின் தொடர்ச்சியை உறுதி செய்யும். இவ்வுயிரினங்களின் வாழ்விடம் மேம்படுத்தப்படுவதற்காக மண் பாதுகாப்பு மற்றும் மழைநீர் அறுவடை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அரிய மருத்துவகுணமுள்ள தாவரங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள அழகர்கோவில் பள்ளத்தாக்கு மற்றும் சதுரகிரியில் உள்ள காடுகளில் காணப்படுகின்றன. 275 மருத்துவ மூலிகைகள் கண்டறியப்பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆர்கிட் மலர் வகைகள் மற்றும் பல்வேறு மலரற்ற தாவரங்கள் இந்த காடுகளில் காணப்படுகின்றன.

மலையைச் சில அருவிகள் உள்ளன. சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மக்கள், குறிப்பாக குளிர் மற்றும் மழைக்காலங்களில் இங்கே கூடுகின்றனர். இங்குள்ள காட்டழகர் கோவிலும் பிரசித்தி பெற்றது. செண்பகத்தோப்பு மீன்வெட்டிப் பாறை நதி நீர்வீழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுபுறத்தில் பிரபலமானது. விடுமுறை தினங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் மற்றும் சிவகாசியில் இருந்து பல மக்கள் இந்த இடத்திற்கு வருகை தருவர். செண்பகத்தோப்பு அடிவாரப்பகுதிகளிலும் மற்றும் சுற்றுப்புறத்திலும், பல பழங்குடி சமூகங்கள் வழிவழியாக வாழ்ந்து வருகின்றனர்.

தகவல் தொடர்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குகிறது. மேலும் தனியார் சேவைகளும் உள்ளன. இங்கு அகலப் பட்டை இணைய இணைப்புச் சேவை உள்ளது. 3ஜி சேவைக்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. மதுரைப் பதிப்பு செய்தித்தாள்கள் இங்கு வருகின்றன. உள்ளூர் நிகழ்ச்சிகள், செய்திகளை அறிந்து கொள்ள கேபிள் சேனல் மூலம் வசதி உள்ளது. மதுரை, திருநெல்வேலி வானொலி பண்பலை ஒலிபரப்புகள் இவ்வூரில் அதிகம் கேட்கப்படுபவை.

கொண்டாட்டங்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெறும் ஆடிப் பூரத் திருவிழாவில் 12-ஆம் நாள், தேரோட்டம் நடைபெறும். மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஆண்டாள் கோயிலில் வருடாந்திர தேர்த் திருவிழா பார்க்க வருவர். இது விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் மிக பெரிய விழாக்களில் ஒன்றாகும். இது 108 திவ்ய தேசங்கள் எனப்படும் வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். காலையில் சிறப்பு பூஜைகள் முடிந்த பின்னர், உற்சவ தெய்வங்கள், ஸ்ரீ ரங்கமன்னார் மற்றும் ஆண்டாள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகள் மூலம் தேருக்குக் கொண்டு வரப்படுவர். பின்னர் தேர் நான்கு ரத வீதிகளில் பவனி வரும். பெரிய மாரியம்மன் கோவிலில் நடைபெறும் பூக்குழித் திருவிழாவும் சிறப்பானது. பல்வேறு ஊரில் இருந்து பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் இருந்து தீமீதித் திருவிழாவில் கலந்து கொள்வர்.

குறிப்பிடத்தக்க பிரபலங்கள்

ஆண்டாள்- வைணவத்தின் பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண். நாச்சியார் திருமொழி , திருப்பாவை இலக்கியங்களின் ஆசிரியர்.
பெரியாழ்வார்- வைணவத் தொண்டர்.
கே.எஸ்.கிருஷ்ணன் (கரியமாணிக்கம் ஸ்ரீனிவாச கிருஷ்ணன்), 1930- இல் நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர் சர். சி.வி.ராமன் அவர்களுடன் இணைந்து இராமன் விளைவு ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
டி. ராமசாமி (திருமாலாச்சாரி ராமசாமி ) - இந்திய அரசாங்கத்தில் அறிவியல் தொழில்நுட்பத் துறையில் அரசாங்க செயலர் பதவி வகித்தவர்.
ரா. கிருஷ்ணசாமி நாயுடு - சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர். 1957 - இல் சட்டசபை உறுப்பினராகவும் இருந்தவர்.
ஜஸ்டிஸ். கே. வீராசாமி - 1969 முதல் 1976 சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர்.
டி . ஏ . எஸ். ராமசாமி - குருஞான சம்பந்தர் ஹிந்து மேல்நிலைப்பள்ளியின் தாளாளர். 40 வருடங்கள் இப்பள்ளியின் உயர்வுக்குப் பாடுபட்டவர்.
கே.வி. போத்தி மூப்பனார் - போத்தீஸ் துணி விற்பனை அங்காடிகளைத் தோற்றுவித்தவர்.
பொழுதுபோக்கு

ஸ்ரீவில்லிபுத்தூரின் பிரதான பொழுதுபோக்கு திரையரங்குகள். புதிய திரைப்படங்கள் ராஜபாளையம் நகரில் உள்ள திரை அரங்குகளில் வெளியிடப்படும்.
ஆண்டாள் திரையரங்கம்
சந்தோஷ் திரையரங்கம்
தெய்வம் திரையரங்கம்
ரேவதி திரையரங்கம்