புதன், 17 ஜூன், 2020

மிகவும் பிரபலமான மாயன்கள் வரலாறு பற்றி தெரிந்துக் கொள்வோம்

மிகவும் பிரபலமான மாயன்கள் வரலாறு பற்றி தெரிந்துக் கொள்வோம்


வணக்கம் நண்பர்களே மீண்டும் ஒரு சுவாரசியமான தொகுப்பில் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

  • கதையின் சுருக்கம்

மாயா நாகரிகம் குவாத்தமாலாவின் வெப்பமண்டல தாழ்வான பகுதிகளை மையமாகக் கொண்டது.இதன் காலம் கி பி ஆறாம் நூற்றாண்டில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து செல்வாக்கின் உச்சத்தை அடைந்தது.

மாயான்கள் விவசாயம், மட்பாண்டங்கள், ஹைரோகிளிஃப் எழுத்து, காலண்டர் தயாரித்தல் மற்றும் கணிதம் ஆகியவற்றில் சிறந்து விளங்கினார்.மேலும் வியக்க வைக்கும் கட்டிடக்கலைகளிலும் சிறந்து விளங்கினர். இருப்பினும் மாயாவின் மிகப் பெரிய கல் நகரங்கள் ஏ.டி. 900ஆம் ஆண்டு கைவிடப்பட்டது.மாயன்களின் வீழ்ச்சிக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

  • மாயன்கள் அமைவிடம்

மாயா நாகரிகம் மெசோஅமெரிக்காவின் மிகவும் ஆதிக்கம் செலுத்தி வந்த பழங்குடி சமூகங்களில் ஒன்றாகும்.மெசோஅமெரிக்காவில் வாழ்ந்த பிற சிதறிய பழங்குடி மக்களைப் போலல்லாமல்,மாயான்கள் யுகடன் தீபகற்பம் மற்றும் இன்று சொல்லப்படும் நவீனகால குவாத்தமாலா ஆகிய அனைத்தையும் ஒன்றாக கொண்ட இடத்தை மையமாக வைத்து வாழ்ந்தனர்.

மாயன்கள் மூன்று தனித்தனி துணைப் பகுதிகளில் தனித்துவமான சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார வேறுபாடுகளுடன் வாழ்ந்தனர்.மாயா நாகரிகத்தின் கிளாசிக் கால கட்டத்தில் அதாவது ஏ டி 250 முதல் 900 வரை காலங்களில் தெற்கு தாழ்நிலப் பகுதியின் மாயன்கள் நாகரிகம் உச்சத்தை எட்டியது,தெற்கு தாழ்நில மாயன்கள் தான் மிகவும் பிரபலமானவர்கள்.மேலும் பெரிய கல் நகரங்களையும் நினைவுச் சின்னங்களையும் கட்டினர்.

  • ஆரம்பக்காலத்தில் மாயா பி சி 1800 முதல் ஏ டி 250

ஆரம்பகால மாயன்களின் காலகட்டம் சுமார் 1800 பி.சி ஆகும்.ஆரம்பகால மாயன்கள் மக்காச்சோளம்,பீன்ஸ்,போன்றவற்றை விவசாயம் செய்தனர்.சுமார் 300 பி.சி.வரை இந்த விவசாயம் நீடித்தது.மேலும் மாயன்கள் மலைப்பகுதி மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் தங்கள் இருப்பை விரிவுபடுத்தத் தொடங்கினர்.இந்த காலகட்டத்தில் முதல் பெரிய மெசோ அமெரிக்க நாகரிகமான ஓல்மெக்கின் எழுச்சி பெற்றது.மாயன்கள் பல மத மற்றும் கலாச்சார பண்புகளை பெற்றிருந்தன.விவசாயம் மட்டுமல்லாமல் பிரமிட் கட்டிடம், நகர கட்டுமானம் மற்றும் கல் நினைவுச்சின்னங்களின் பொறிப்பு போன்ற மேம்பட்ட கலாச்சார பண்புகளையும் பெற்றிருந்தனர்.

  • கிளாசிக் மாயா ஏ டி 250 முதல் 900

ஏ.டி. 250 இல் தொடங்கிய கிளாசிக் காலம் மாயன்களின் பொற்காலம் ஆகும்.கிளாசிக் காலத்தில் மாயா நாகரிகம் டிக்கல்,யாக்சாக்டின்,கோபன்,போனம்பக்,டோஸ் பிலாஸ், கலக்முல்,பலென்க் மற்றும் ரியோ பெக் உட்பட சுமார் 40 நகரங்களில் வளர்ந்தது; ஒவ்வொரு நகரத்திலும் 5,000 முதல் 50,000 மக்கள் வசிக்கின்றனர். அதன் உச்சத்தில் மாயா மக்களின் எண்ணிக்கை 2000000ஐ எட்டியிருக்கலாம் என்று சொல்லப்பட்டது.மாயா தளங்களின் அகழ்வாராய்ச்சியில் அரண்மனைகள்,கோயில்கள் மற்றும் பிரமிடுகள் மற்றும் பிரபலமான மாயா பந்து விளையாட்டு போன்றவையும் காணப்பட்டன.இவை அனைத்தும் சடங்கு மற்றும் அரசியல் ரீதியாக மாயா கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன.மாயா நகரங்கள் ஏராளமான விவசாயிகளால் சூழப்பட்டு ஆதரிக்கப்பட்டன. மாயா ஒரு பழமையான வகை "குறைத்தல் மற்றும் எரித்தல்" விவசாயத்தை கடைப்பிடித்த போதிலும், நீர்ப்பாசனம் மற்றும் மொட்டை மாடி போன்ற மேம்பட்ட விவசாய முறைகளின் ஆதாரங்களையும் அவர்கள் பின்பற்றினர்.மாயாக்கள் ஆழ்ந்த மதத்தவர்கள், சூரியன், சந்திரன், மழை மற்றும் சோளம் போன்றவை முதல் தெய்வங்கள் உட்பட இயற்கையுடன் தொடர்புடைய பல்வேறு கடவுள்களை வணங்கினர். மாயா சமுதாயத்தின் ராஜாக்கள் அல்லது புனித பிரபுக்கள் அவர்கள் தெய்வங்களுடன் தொடர்புடையவர்கள் என்று நம்பினர்.

  • மாயா கலை மற்றும் கலாச்சாரம்

கிளாசிக் காலத்தில் மாயன்கள் பல கோயில்களையும் அரண்மனைகளையும் பிரமிடு வடிவத்தில் கட்டினார்கள் அவற்றை விரிவான நிவாரணங்கள் மற்றும் கல்வெட்டுகளால் அலங்கரித்தார்.அவர்கள் கணிதம் மற்றும் வானியல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்திருந்தன.

இதில் பூஜ்ஜியத்தைப் பயன்படுத்துதல் மற்றும் 365 நாட்களை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டி சுற்று போன்ற சிக்கலான காலண்டர் அமைப்புகளை கண்டுபிடித்தனர்.அதன் பின்னர் 5000 ஆண்டுகள் கணக்கிட நீண்ட எண்ணிக்கை நாட்காட்டியையும் வடிவமைத்தனர்.மாயா தளங்களின் தீவிர ஆய்வு 1830களில் தொடங்கியது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி முதல் நடுப்பகுதி வரை,அவர்களின் ஹைரோகிளிஃப் எழுதும் முறையின் ஒரு சிறிய பகுதி புரிந்துகொள்ளப்பட்டது, மேலும் அவர்களின் வரலாறு மற்றும் கலாச்சாரம் பற்றி மேலும் அறியப்பட்டது.அவர்கள் கட்டிடக்கலை மற்றும் கலைகளில் வல்லமை பெற்றிருந்தனர்.அங்கு காணப்பட்ட கல் சிற்பங்கள்,கட்டிடங்கள் நினைவுச்சின்னங்கள் மற்றும் கல்வெட்டுகள் இருந்தன. மாயன்கள் மரத்தின் பட்டைகளிலிருந்து காகிதத்தை தயாரித்து புத்தகங்கள் எழுதினார்.இது குறியீடுகள் என அழைக்கப்பட்டது.இந்த குறியீடுகளில் நான்கு மட்டும் கிடைத்ததாக சொல்லப்படுகிறது.

  • மாயன் நாகரிகத்தின் சரிவு

எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை,மாயா நாகரிகம் வலுவிலக்க ஆரம்பித்தன.தெற்கு தாழ்நிலப்பகுதிகளில் உள்ள கிளாசிக் நகரங்கள் கைவிடப்பட்டன, ஏ டி 900 காலகட்டங்களில் மாயா நாகரிகம் சரிந்தது. இந்த மர்மமான வீழ்ச்சிக்கான காரணம் அறியப்படவில்லை.ஒன்பதாம் நூற்றாண்டில் மாயன்கள் மற்ற மாயா அறிஞர்களுடன் கொண்ட போட்டி நகர-மாநிலங்களிடையே தொடர்ச்சியான யுத்தம் சிக்கலான இராணுவம் போன்றவற்றால்அவர்களுக்கிடையேயான வர்த்தக கூட்டணிகளை உடைந்தது.புனித பிரபுக்களின் அந்தஸ்து குறைந்து வந்ததால் அவர்களின் சடங்குகள் மற்றும் சடங்குகளின் சிக்கலான மரபுகள் காலப்போக்கில் மறைந்து போகின.இறுதியாக, சில பேரழிவு தரும் சுற்றுச்சூழல் மாற்றம் மற்றும் மிக நீண்ட தீவிரமான வறட்சி காலம் கிளாசிக் மாயா நாகரிகத்தை அழித்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.மீண்டும் ஒரு சுவாரசியமான தொகுப்பில் உங்களை சந்திக்கின்றேன்.

இந்த தொகுப்பு பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க

SHARE பண்ணுங்க

இந்த மாதிரியான தகவல்களை தெரிந்துக்கொள்ள FOLLOW பண்ணுங்க

திங்கள், 1 ஜூன், 2020

கீழடிக்கும் மூத்த சிவகளை. (தாமிரபரணி நாகரிகம்)



கீழடிக்கும் மூத்த சிவகளை
(தாமிரபரணி நாகரிகம்)

எங்கோ அல்ல, நம் 
தூத்துக்குடி மாநகரில் இருந்து 30 கிமி தொலைவில் தான் உள்ளது..

*'கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி'*

என்பதை மிக சர்வ சாதாரணமாக நிரூபிக்கும் *சிவகளை* பரம்பு பகுதிக்கு செல்லும் வாய்ப்பு நேற்று கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது...

( சமீபத்தில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடத்தப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களின் மூலம் *தமிழர் நாகரிகம் 2600 ஆண்டுகளுக்கும் முன்புள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது..*)

தமிழர் நாகரிகம் அதை விடவும் பழமையானது என்பது அனைவரும் அறிந்த ஒன்று என்றாலும், அதை நிரூபிக்க தொல்லியல் ஆதாரங்கள் தேவை..

*தாமிரபரணியின் கரையில் செழுமை நிறைந்து அமைந்துள்ள சிவகளை பரம்பு பகுதியில்* 
*10,000 ஆண்டுகளாய்*
*பேரற்புதம் மண்ணுக்கடியில் புதைந்து கிடக்கிறதை நேரில் கண்டு ஆச்சரியதில் ஆழ்ந்துப் போனேன்..*

*ஆதியில்* வாழ்ந்த தமிழ் பெருமக்கள் பயன்படுத்திய 

● *முதுமக்கள் தாழிகள்,*

● *கருப்பு சிவப்பு மண்பாண்டங்கள்,*

● *பழங்கற்கால கருவிகள்,*

● *இடைக்கற்கால கருவிகள்,*

● *புதிய கற்காலத்தைச் சார்ந்த இரும்பு பொருட்கள்,* 

● *வேறு எங்கும் காணக் கிடைக்காத சுண்ணாம்பிலான முதுமக்கள் தாழிகள்,*

● *தானியங்கள்,*

● *எலும்புகள்,*

● *நடுகற்கள்,*

● *கல்வெட்டுகள்,*

● *தமிழ் வட்டெழுத்துக்கள்,*

● *மேட்டு கற்குடி பகுதிகள்,*

● *எரிமலைக் குழம்பு ஓடிய பகுதிகள்,* 

● *பழங்காலத்தில் தாமிரபரணி ஓடிய பாதைகள்..*

என அடுக்கடுக்காக பல்வேறு தொல்லியல் எச்சங்கள் என இங்கு புதைந்து கிடப்பதை..

சிவகளையைச் சார்ந்த திருவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் வரலாற்று ஆசிரியர் மற்றும்
முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவருமான 
அய்யா *சிவகளை மாணிக்கம்* அவர்கள் தான் கண்டறிந்தார்..

மாணிக்கம் அய்யா அவர்கள் சிவகளை பரம்பு பகுதியில் 5 வருடத்திற்கும் மேல் மேற்கொண்ட தேடல்களின் 
மூலம் கிடைத்த பொருட்களை தான் பணிபுரியும் பள்ளியில் காட்சிப்படுத்தி
*தமிழர்களின் நாகரிகத்தை உலகறியச் செய்யும் முயற்சியை முதன்முதலில் துவக்கினார்.*

இதுகுறித்த தகவல்களை புகைப்படத்துடன் 
மத்திய & மாநில தொல்லியல்துறைக்கு 
*வரலாற்று ஆசிரியர் திரு.சிவகளை மாணிக்கம்* அய்யா தொடர்ச்சியாக அனுப்பி வந்தார். 

இதையடுத்து தமிழக தொல்லியல் துறை ஆணையாளர் *உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்* உத்தரவின் பேரில் தமிழக தொல்லியல் துறை அலுவலர்கள் இப்பகுதியை பார்வையிட்டு தமிழக தொல்லியல் துறைக்கு அறிக்கையை அனுப்பினர்.

அதில் சிவகளை பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தொல்லியல் களம் இருந்ததற்கான தடயங்கள் பல காணப்படுகிறதையும்..

மேலும் இப்பகுதிகளை அகழாய்வு செய்தால் மேற்கொண்டு பல்வேறு உண்மைகளை வெளிக்கொண்டு வரலாம் என்றும், பழங்காலத்தில் சிவகளையின் வடக்கே தாமிரபரணி ஆறு ஓடியதற்கான தடயங்கள் காணப்படுகின்றது என்பதையும் 
கண்டு அடுத்த கட்ட நகர்வாக..

இந்திய தொல்லியல்துறை அலுவலர்களும் சிவகளையில் ஆய்வு செய்து, இங்கு இடைக்கற்கால மற்றும் பெருங்கற்கால குடியேற்றங்கள் இருந்ததற்கான தடயங்கள் காணப்படுகின்றன என்ற அறிக்கையை இந்திய தொல்லியல் துறைக்கு அனுப்பினர்..

சிவகளையில் 
*மிகப்பெரிய தொல்லியல் களம்* இருப்பதை கண்ட இந்திய தொல்லியல் துறையினர்,
இதுவரை யாராலும் கண்டுபிடிக்கப்படாத மிகவும் முக்கியமான பரந்து விரிந்த தொல்லியல் களம் ஒன்றை கண்டுபிடித்துள்ளது *மிகப்பெரிய சாதனை* என்றே தெரிவித்துள்ளது..

அதே வேளையில், ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் ஏற்கனவே நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கைகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி *காமராசு* அவர்கள், ஆதிச்சநல்லூர் தொல்லியல்களத்தை விட பெரியதான சிவகளை தொல்லியல் களத்திலும் அகழாய்வு செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்..

நீதியரசர்கள் *கிருபாகரன்* மற்றும் *சுந்தர்* ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து மத்திய மற்றும் தமிழக தொல்லியல் துறையின் உயரதிகாரிகள் சிவகளை தொல்லியல் களம் குறித்து விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டனர்.

இதை தொடர்ந்து இந்திய மற்றும் தமிழக தொல்லியல் துறை உயரதிகாரிகள மதுரை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சிவகளையில் ஜனவரி 2020 முதல் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என 
தெரிவித்திருந்தனர். 

பின்னர் *அமைச்சர் பாண்டியராஜன்*, 
*ஆணையாளர் உதயச்சந்திரன்* ஆகியோர் டெல்லி சென்று மத்திய அரசிடம் சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல் மற்றும் கீழடியை அகழாய்வு செய்ய அனுமதி கேட்டனர்.

இதில் ஆதிச்சநல்லூர், கொடுமணல் மற்றும் கீழடி போன்ற தொல்லியல் களங்களில் அடுத்த கட்ட அகழாய்விற்கும் 
சிவகளை தொல்லியல் களங்களில் முதற்கட்ட அகழாய்வு செய்வதற்கும் அனுமதி வழங்கியது. 

*சரி, எங்கிருக்கிறது* *இந்த*
*சிவகளை..?*

தூத்துக்குடி மாவட்டத்தின் 
முக்கிய வணிக நகரங்களில் ஒன்றான ஏரலிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அழகிய கிராமம். 

தற்போது சுமார் 1800 குடும்பத்தினர் வசிக்கின்றனர். 

ஊரின் தென்புறம் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் தாமிரபரணி பாய்கிறது. 

வடபுறம் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 
மேலகுளம், 
கீழகுளமும், 
கீழ்புறம் வயல்களும் 
பெருங்குளம் ஊரும், 
மேல்புறம் வயல்களும் பேட்மாநகரம் ஊரும் அமைந்துள்ளது. 

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மேலகுளம், கீழகுளம் அமைந்துள்ள பகுதி வழியாக பாய்ந்த தாமிரபரணி ஆறு, 
ஏரல், நட்டாத்தி வழியாக 
கொற்கை கடலில் சங்கமித்துள்ளது. 

சிவகளையிலிருந்து 
கிழக்கே 
7 கி.மீ தொலைவில் 
கொற்கை அமைந்துள்ளது. 

சிவகளையிலிருந்து 
மேற்கே 
7 கிலோ மீட்டர் தொலைவில் ஆதிச்சநல்லூர் அமைந்துள்ளது.

சிவகளையில் 

● *பழைய கற்கால குடியேற்றங்கள்,* 

● *இடைகற்கால குடியேற்றங்கள்,*

● *பெருங்கற்கால குடியேற்றங்கள்* 

● *வரலாற்று கால குடியேற்றங்கள்*

என நான்கு விதமான குடியேற்றங்கள் இருந்ததற்கான தடயங்கள் காணப்படுகின்றன...

சிவகளையிலுள்ள 
• தம்ளார் முக்கு, 
• தாரசுகுளம். 
• கல்மேட்டு பரம்பு, 
• வெள்ளத்திரடு போன்ற பகுதிகளில் இவ்வகையான குடியேற்றங்கள் இருந்துள்ளன, அங்கே பல்வேறு 
வகையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

சிவகளை பரம்பில் ஏராளமான பாறைக்கிண்ணங்கள் (Cup Marks ) காணப்படுகின்றன.. 

அவைகளின் அருகே *எரிமலையின் குழம்பு* (லாவா) ஓடியதற்கான தடயங்களும் காணப்படுகின்றன..🌋

சிவகளை தொல்லியல் களத்தில் *இரும்புத்தாதுக்கள்* மற்றும் *குவார்ட்ஸ்* வகை கற்கள் அதிகம் காணப்படுகின்றன. 

அதேபோல் தமிழர்களின் சிறப்பான கருப்பு சிவப்பு வண்ண மண்பாண்டங்கள் அதிகம் காணப்படுகின்றன. 

வல்லநாடு மலையிலிருந்து சிவகளை தொல்லியல் களத்தில் மான்கள் இன்றும் வந்து செல்கின்றன. 

சிவகளை ஒரு காலத்தில் 
வளநாடாக இருந்துள்ளது..

சிவகளையின் அருகேயுள்ள மீனாட்சிபட்டி மற்றும் புதுப்பட்டி கிராமங்களிலுள்ள மிகப்பெரிய மேய்ச்சல் இடம் ஆடு மாடுகளை மேய்க்கும் இடமாக இருந்துள்ளது..

ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கீழ, மேல குளங்களிலும் தொல்லியல் எச்சங்கள் அதிகம் காணப்படுகின்றன. 

இந்த குளங்கள் ஒரு காலத்தில் தாமிரபரணி ஆறு ஓடிய பகுதியாக இருந்ததால் இந்தக்குளக்கரைகளிலும் அருகே உள்ள வயல்களிலும் ஆற்று மணல் படிந்து காணப்படுகின்றன.

சிவகளையின் தொல்லியல் களத்தை இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை.

ஆதிச்சநல்லூரை பற்றி கூறியிருந்த 
*அலெக்ஸாண்டர் ரியா,* தென்தமிழகத்தை பற்றி முழுமையாக ஆய்வு செய்த *ஜி.யு.போப்* மற்றும் *கால்டுவெல்* போன்ற ஆளுமைகளின் கண்களில் கூட இந்த இரண்டாயிரம் ஏக்கர் நிலபரப்பளவுள்ள தொல்லியல் களம் படாமல் இருந்தது ஆச்சரியமான ஒரு விஷயமாக தமிழக மற்றும் இந்திய தொல்லியல் துறை அலுவலர்கள் தெரிவித்தனர். 

தற்போது சிவகளை தொல்லியல் களத்தை கண்டறிந்தவர் என்கிற பெருமையை *வரலாற்று ஆசிரியர் திரு.சிவகளை மாணிக்கம் அய்யாவிற்கு சாரும் ..*

வரலாற்று ஆசிரியர்.திரு.மாணிக்கம் அய்யா மற்றும் என்னுடைய  சிறுவயதில் இருந்து நான் மிகவும் நேசிக்கும் அப்பகுதி முக்கியஸ்தர்களில் ஒருவரும், முன்னாள் பஞ்சாயத்து தலைவரும் பாசத்திற்குறிய அண்ணன் சிவகளை ராஜா அவர்களோடு இணைந்து 
நேற்று உச்சி வெயிலில் 
மதியம் 12 மணி முதல் 
இரவு 7 மணி வரை பயணித்தது 
எனக்கு கிடைத்த பெரிய பாக்கியம்..

சிறிதும் சளைக்காமல் மிகப்பெரிய
வரலாற்றின் தொகுப்பை மனதில் எளிதில் புரியும்படி விளக்கினார்..

ஒருக்காலத்தில் வல்லநாடு 
மலைப் பகுதிகள் கடலுக்குள் இருந்ததையும்..,

கடலுக்குள் அமிழ்ந்து போன லெமூரியா கண்டம்.., 

அதற்குப் பின் சங்க காலத்தில் நடைப்பெற்ற வரலாற்று முக்கிய சம்பவங்களை விளக்கும் போதும்.., 

செம்புவினால் மிக நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட அழகிய 
ஜாடிகள் மற்றும் 
அக்கால தமிழர்கள் 
கடல் கடந்து வாணிபம் செய்த நிகழ்வுகள் போன்ற செய்திகளை கேட்டு ஆச்சரியத்தில் உறைந்து 
அதிர்ந்துப் போனேன்..

இருள் சூழ்ந்த காரணத்தால், 
அந்த இடத்தை விட்டு பிரிய 
சிறிதும் மனமில்லாமல் பிரிந்தோம்..

*சிந்து சமவெளி மட்டும் அல்ல,*
*அதற்கும் முந்திய ஆதி கற்கால தமிழர்களின் நாகரிகமும்*
*இனி உலகின் கண்களுக்கும் புலப்படட்டும்..*