சனி, 28 அக்டோபர், 2017

ஜமீன் சிங்கம்பட்டி-2
திருநெல்வேலிப் பகுதியில் தவறு செய்தவர்களைப் பார்த்து “முதுகுத் தோலை உரிச்சிப் போடுவேன் படுவா’
என்பார்கள். முதுகுத் தோலை உரிக்க முடியுமா என்ன? இன்றைக்கு
“சும்மாக்காச்சும்’ இப்படி வெத்து மிரட்டல் விட்டாலும் தவறு செய்தவரின் முதுகுத் தோலை நிஜமாகவே உரிக்கும் தண்டனையும் ஒரு காலத்தில் வழக்கத்தில் இருந்திருக்கிறது என்றால் நம்புவீர்களா?
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிங்கம்பட்டி ஜமீனில்தான் இக்கொடிய தண்டனை முறை இருந்திருக்கிறது.
முருகதாஸ் தீர்த்தபதி
ஆயிரம் ஆண்டுகள் வரலாறு உடையது சிங்கம்பட்டி ஜமீன். இதன் 32-வது பட்டத்துக்காரர் தென்னாட்டுப்புலி நல்லகுட்டி சிவசுப்பிரமணிய கோமதிசங்கர ஜெய தியாகமுத்து சண்முகசுந்தர முருகதாஸ் தீர்த்தபதி (72). என்ன தலைசுற்றுகிறதா? இதுதான் அவரது முழுப் பெயர். சுருக்கமாக, டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி. இவர் சற்று வித்தியாசமானவர்.
இன்றும் “சிங்கம்பட்டி குறுநில மன்னர்’ என அழைக்கப்படும் இவர், ஜமீன் பட்டத்தைத் துறந்தவர். இலங்கை கண்டியில் உள்ள ஆங்கிலேயக் கல்வி நிறுவனத்தில் பயின்றவர் என்பதால் நல்ல ஆங்கிலப் புலமை பெற்றவர். 1953-க்குப் பின்பு ஜமீன்கள் மறைந்துவிட்டாலும், அதன் பாரம்பரியங்களை அறிந்து கொள்ளும் வகையில் சில பொருள்களைப் பாதுகாத்து வருகிறார் முருகதாஸ் தீர்த்தபதி.
சிங்கம்பட்டி ஜமீன் அரண்மனை.
சிங்கம்பட்டி ஊரின் மூன்றில் ஒரு பங்கு நிலத்தில் (சுமார் 5 ஏக்கர்) கட்டப்பட்டுள்ள அரண்மனையின் ஒரு பகுதியில் இந்த கலைப் பொருள்கள் காப்பகம் உள்ளது. இக் காப்பகத்தில் உள்ள ஓலைச் சுவடிகளில் ஒன்றில்தான் தோலை உரிக்கும் தண்டனை குறித்தும் கூறப்பட்டுள்ளது. இப்போது இருக்கிற குண்டர் சட்டம், என்.எஸ்.ஏ. மாதிரி அப்போது சட்டம் எதுவும் கிடையாதே! எனவே, திரும்பத் திரும்ப தவறு செய்பவர்கள், இனிமேல் இவனைத் திருத்தவே முடியாது என்ற நிலைக்குப் போய்விட்டவர்களுக்கு ஜமீனில் கொடுக்கும் தண்டனைதான்
“தோலுரித்தல்’.
தவறு செய்தவரைப் பிடித்து நையப் புடைத்து, ரத்தம் கசியும் வரை போட்டுத் துவைத்து, உப்புத் தடவப்பட்ட ஆட்டுத் தோலை அவன்மேல் சுற்றிக்கட்டி ஊர் பொது இடத்தில் உள்ள கல்தூணில் கட்டிவிடுவார்களாம். இரண்டொரு நாள்கள் வெயிலில் காய்ந்து, காற்றில் உலர்ந்த பின்னர், அவர் மேல் சுற்றப்பட்ட ஆட்டுத் தோலை அவிழ்த்து எடுக்குபோது, அது மனிதத் தோலையும் பிய்த்துக் கொண்டுதான் வருமாம். கற்பனைக்கு எட்டாத கொடூரம்தான்!
குதிரைக் குளம்பு ஆஷ்ட்ரே.
இந்த சிங்கம்பட்டி ஜமீனில் முக்கியமான வரலாற்றுச் சின்னம் ஒன்று உள்ளது. சிகாகோ சென்று திரும்பிய சுவாமி விவேகானந்தர், ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதிக்கு பரிசளித்த மரத்தாலான யானைச் சிற்பம் அது. பாஸ்கர சேதுபதி மகாராஜா, முருகதாஸ் தீர்த்தபதியின் தாய்வழிப் பூட்டன் ஆவார். விவேகானந்தரின் அன்புப் பரிசை பெற்ற அவர், அதைத் தனது பேத்தி வள்ளிமயில் நாச்சியாருக்கு வழங்கினார்.
வள்ளிமயில் நாச்சியார் சிங்கம்பட்டி ஜமீனுக்கு மணமகளாக வந்தபோது, தாத்தா அளித்த பரிசையும் பிறந்த வீட்டுச் சீதனமாகக் கொண்டு வந்தார். அதை இன்றும் பாதுகாப்பாக வைத்துள்ளார் முருகதாஸ் தீர்த்தபதி. இந்த ஜமீன்தாரர்களில் ஒருவர் ஆசையோடு வளர்த்த குதிரை ஒன்று திடீரென இறந்துவிட்டதாம். குதிரை இறந்துவிட்டாலும் அதன் நினைவைப் பாதுகாக்க விரும்பிய அந்த ஜமீன்தார், அதன் காலில் ஒன்றை வெட்டி,
அதில் குளம்புக்கு அடியிலும்,
மேலேயும் வெள்ளிப் பூண் போட்டு அதை
“ஆஷ் டிரே’ யாக பயன்படுத்தி வந்துள்ளார். (புகைவிடும் நேரமெல்லாம் புரவியின் நினைவு வந்து போகும் போலும்!)
அதுவும் இந்தக் கலைக் கூடத்தில் உள்ளது. சிங்கம்பட்டி ஜமீனுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து ஆண்டுதோறும் 10
ஆயிரம் மூட்டை நெல் வருமாம். அதைச் சாதாரணமாக அளந்தால் எப்போது அளந்து,
எப்போது முடிப்பது? எனவே நெல்லை அளக்க ஒரு பெரிய மரக்காலைப் பயன்படுத்தியுள்ளனர்.
தேக்கு மரத்தாலான இந்த மரக்காலை 2 பேர் சேர்ந்தால்தான் தூக்க முடியும். இப்போது நாம் பயன்படுத்தும் மரக்கால் அளவுப்படி 14 மரக்கால் நெல்லை அதில் ஒரு மரக்காலாக அளந்து போட்டுவிடுவார்கள். அதுவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஜமீனில் பயன்படுத்திய பூட்டு ஒன்று உள்ளது. மூன்று கிலோ எடை இருக்கும் அந்தப் பூட்டை பயன்படுத்த இரண்டு பேர் வேண்டும். பூட்டின் மேலே உள்ள மூடி போன்ற பகுதியை ஒருவர் இழுத்து பிடித்துக் கொண்டால்தான் அதை பூட்டவோ, திறக்கவோ முடியும்.
அந்தக் காலத்திலேயே அப்படி ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உள்ளனர். அந்தப் பூட்டு இன்றும் நல்ல நிலையில் உள்ளது. ஜமீன் பரம்பரை என்றால் தர்பார் வேண்டுமே! அதற்கென பயன்படுத்திய அலங்கார நாற்காலி ஒன்றும் உள்ளது. உயர்ந்த வகை மரத்தாலான அந்த நாற்காலி விலை மதிப்புள்ளதாம். தர்பார் கூடத்தில் 7
அடி நீளம், 7 அடி அகலம் கொண்ட கல் மேடை ஒன்று உள்ளது.
இந்த கல் மேடை, அதன் நான்கு கால்கள் அனைத்தும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. ஜமீன்தாரர்களுக்கு பட்டம் சூட்டும்போது அவர்கள் இந்தக் கல் மேடையில்தான் அமர்ந்திருப்பார்களாம். பழைய தமிழ் சினிமாக்களில் அரண்மனைச் சுவர்களில் சிங்கம், புலி, தலைகளை தொங்கவிடப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.
ஜமீன் பரம்பரையினர் வேட்டையாடிக் கொன்ற யானையின் தலை எலும்புக் கூடு ஒன்று காப்பகச் சுவரில் மாட்டப்பட்டுள்ளது. ஜமீனில் வளர்ந்த 2
நாய்கள் இறந்தபோது அவற்றுக்கு சமாதி கட்டப்பட்டுள்ளது. அந்தச் சமாதியில் இருந்த நினைவுத் தூண்களும் காப்பகத்தில் உள்ளன. ஜமீனில் வளர்ந்த நாய்க்குக் கூட எவ்வளவு மரியாதை!
இங்கிலாந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட சிங்கம்பட்டி ஜமீனின் சிங்கக் கொடி பொறிக்கப்பட்ட பீங்கான் கோப்பைகள், “சோடா மேக்கர்’ போன்றவையும் உள்ளன. இவையெல்லாம் ஆங்கிலேயர்களால் ஜமீன்தார்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டவை. ஜமீன் அரண்மனையில் வளர்க்கப்பட்ட செல்லப் பிராணிகளின் நினைவாக அவற்றின் தோல் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
கடிகாரம், வாள், கடிதங்கள், திருமண அழைப்பிதழ்கள் ஆகியவையும் பாதுகாப்பாக உள்ளன. திருநெல்வேலியில் இருந்து 47 கி.மீ. தூரத்தில் உள்ள சிங்கம்பட்டி அரண்மனைக்குச் செல்வோர் விரும்பினால் இவற்றைப் பார்வையிடலாம். அதன் பொறுப்பாளர் பொ. கிட்டு, இந்தப் பழம் பொருள்கள் குறித்த விளக்கங்களை பொறுமையாக எடுத்துக்கூறுகிறார்.
ராஜ தர்பார்!
சிங்கம்பட்டி மன்னர் 32-வது பட்டம் மேதகு தென்னாட்டுப் புலி, நல்லகுட்டி,
சிவசுப்பிரமணிய கோமதிசங்கர ஜெய தியாகமுத்து சண்முக சுந்தர முருகதாஸ் தீர்த்தபதி மகாராஜா பட்டத்துக்கு வந்ததில் இருந்து இன்று வரை ஆண்டுதோறும் அரசவை தர்பார் கொலுவில் வீற்றிருந்து ராஜ தரிசனம் தருகிறார்.
காரையாறு சொரிமுத்து அய்யனார் தேவஸ்தான அறங்காவலர் என்ற முறையில் ஆண்டுதோறும் கோயில் பெருவிழா நடைபெறும் ஆடி அமாவாசை தினத்தன்று ராஜ தர்பார் நடத்துகிறார். இதைக் காண திரளான கூட்டம் வருகிறது.
சிங்கம்பட்டி அரசு கி.பி. 1100-ல் உதயமானது. பாண்டியப் பேரரசின் கீழ் சிற்றரசாக இருந்தது. விஜயநகர மன்னர் காலத்தில் கி.பி. 1433-ல் பாளையமாகத் திகழ்ந்தது. ஆங்கிலேயர் ஆட்சியில் 1802-ல் ஜமீன்தாரியாக மாறியது. 900
ஆண்டுகளுக்கு மேல் பழைமைவாய்ந்தது சிங்கம்பட்டி ஜமீன் சமஸ்தானம். 1948-ல் ஜமீன் ஆட்சி முறை முடிவுக்கு வந்தது. சிங்கம்பட்டி சமஸ்தானத்தை 31 மன்னர்கள் பட்டம் தரித்து ஆட்சிபுரிந்து வந்தனர். தற்போது உள்ளவர் 32-வது “மன்னர்’.
தற்போதைய “மன்னர்’ எஸ். முருகதாஸ் தீர்த்தபதி ஆன்மிகத் திருப்பணிகளைச் செய்து வருகிறார். இதுவரை 23
திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தியிருக்கிறார்.
அரச பதவியைத் துறந்தாலும் ஆன்மிகப் பணிகளில் ஈடுபட்டு 50 ஆண்டுகள் முடிவடைந்ததால் அன்பர்கள் அவருக்கு கடந்த செப். 29-ல் பொன்விழா கொண்டாடினார். அப்போது “மன்னரை’
தர்பார் கோலத்தில் மக்கள் தரிசித்தனர்.
Posted 23rd January 2013 by kumar pandian
23
JAN ஜமீன் சிங்கம்பட்டி
Sign out
Notify me
Comment as:
Publish Preview
0 Add a comment
விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு
இராமநாதபுரம் மன்னராக இருந்தவர் பாஸ்கர சேதுபதி. இவர் ஆன்மீகத்தில் அறிவாற்றல் மிக்கவராகவும் சொறபொழிவு நிகழ்த்துவதில் வல்லவராகவும் திகழ்ந்தார். அதனால் அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் நடக்க இருந்த உலக ஆன்மீக மாநாட்டில், இந்து மதத்தின் பிரதிநிதியாகக் கலந்து கொள்ள மன்னருக்கு அழைப்பு வந்தது.
இந்த அழைப்பு மன்னருக்கு வந்த வேலையில்தான் விவேகானந்தர் இராமநாதபுரம் வந்திருந்தார். விவேகானந்தருக்கும் மன்னருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அறிமுகம் நட்பாக மாறியது. நட்பு விவேகானந்தரிடம் மன்னரை பக்தி செலுத்த வைத்தது.
விவேகானந்தர் அறிவாற்றலும், ஆன்மீகச் சிந்தனையும் தெளிந்த பார்வையும்,
தேர்ந்த ஞானமும் மன்னரை வியக்க வைத்தது. அதனால் தம்மைவிடச் சிறந்தவரான விவேகானந்தர் சிகோகோ செல்வதே சிறந்தது என்று மன்னர் முடிவு செய்தார். முடிவை விவேகானந்தரிடம் தெரிவித்தார். யோசித்துச் சொல்வதாகச் சொல்லிவிட்டு விவேகானந்தர் மன்னரிடம் விடைபெற்றார்.
அதன்பின் தாம் அமெரிக்கா செல்வதாக விவேகானந்தர் சென்னையிலிருந்து அறிவித்தார். அதையறிந்த இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி, விவேகானந்தர் அமெரிக்கா செல்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்தார்.
1893 மே 31 அன்று அமெரிக்கா புறப்பட்ட விவேகானந்தர், ஜூலை மாதத்தில் அமெரிக்காவில் உள்ள சிகாகோவை அடைந்தார்.
உலக ஆன்மீக மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன் ‘மெட்காப்’ என்ற நகரில் மகளிர் மன்றக் கூட்டத்தில் ‘இந்தியப் பெண்கள்’ என்ற தலைப்பில் விவேகானந்தருக்குப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. இதுதான் அமெரிக்க மண்ணில் ஒலித்த விவேகானந்தரின் முதல் முழக்கமாகும்.
பெண்கள் நிறைந்த அந்த மாநாட்டில் விவேகானந்தரின் முழக்கம் எழுச்சியோடு வரவேற்கப்பட்டது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஒரு இளம் பெண் விவேகானந்தரின் மீது அளவற்ற அன்பு கொண்டாள். அதனால் அமெரிக்காவில் விவேகானந்தரின் ஒவ்வொரு காலடியையும் இந்த இளம் பெண் உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினாள்.
இந்த மாநாட்டிற்குப் பின் உலக ஆன்மீக மாநாட்டில் கலந்து கொண்ட விவேகானந்தர், அனைத்துச் சமயத்தைச் சார்ந்தவர்கள் பேசுவதையும் கவனித்தார். அங்கு பேசிய மேலைநாட்டு மத போதகர் அனைவரும் “ஜென்டில்மேன்” என்று தங்களின் பேச்சைத் தொடங்கினர். இந்த வார்த்தை கூடியிருப்போருக்கும்,
சொற்பொழிவாளருக்கும் இடைவெளி ஏற்படுத்துவதாக விவேகானந்தர் எண்ணினார்.
செப்டம்பர் 1-ம்தேதி விவேகானந்தர் பேச வேண்டிய முறை வந்தது. அவர் மேடை ஏறியதும், வேடிக்கைப் பொருளைப் பார்ப்பதுபோல் அனைவரும் விவேகானந்தரைப் பார்த்தனர். அவருடைய காவி உடையும், தலைப்பாகையும் மேலை நாட்டவர்களுக்குச் சிரிப்பை உருவாக்கியது.
பேண்ட், கோர்ட், டை என் மேடையில் பேசியவர்கள் மத்தியில் இப்படியொரு கோலத்தில் விவேகானந்தர் மேடையில் தோன்றியதும், கூடியிருந்தோரில் பலர் முகம் சுளித்தனர். இதுபற்றி அவர் கவலை கொள்ளவில்லை; கண்டு கொள்ளவும் இல்லை.

சகோதர சகோதரிகளே!’ என்று தமது சொற்பொழிவைக் கம்பீரமாக விவேகானந்தர் தொடங்கினார். ஏளனம் செய்தவர்கள் வாய் மூடினர். ஆடையைக் கண்டு அறுவறுப்டைந்தவர்கள் ஆச்சரியப்பட்டனர்.
சிறிது இடைவெளிவிட்டு மீண்டும் விவேகானந்தர் தமது பேச்சைத் தொடங்கினார். அரங்கம் முழுவதம் அவரையே பார்த்தது; அவர் பேச்சை மட்டுமே கேட்டது; அவர் சொல்வதைத் தங்கள் மனதில் பதிந்து கொண்டது. இந்தக் கூட்டத்தில ஆடையிலும், தோற்றத்திலும் அவர் தனித்து நின்றார் மேடை முழக்கத்திலும் அவரே தனித்து வென்றார். பேசி முடித்த பின் அவரைத் தொடர்ந்து ஒரு கூட்டமே வந்தது.
அந்தக் கூட்டத்தில் ‘மெட்காப்’ நகர் மகளிர் மன்றத்தில் விவேகானந்தர் பேசிய போது மனதைப் பறிகொடுத்த அந்த இளம் பெண்ணும் இருந்தாள்.
இந்த மாநாட்டில் மீண்டும் செப்டம்பர் 15, 19, 20
ஆகிய மூன்று நாட்கள் விவேகானந்தர் முழங்கினார். அப்போது,
“அளவுக்கு மீறிய மதப்பற்று, மூடபக்தி இவற்றிலிருந்து தோன்றிய மதவெறி,
இவை இந்த அழகிய உலகை நெடுநாளாகப் இறுகப் பற்றியுள்ளன; வன்முறையை நிரப்பியுள்ளன; அடுத்தடுத்து உலகை உதிரப் பெருக்கில் மூழ்கடித்து,
நாகரீகத்தை அழித்து, எத்தனையோ சமுதாயங்களை நம்பிக்கை இழக்கச் செய்து விட்டன. அந்தப் பயங்கரப் பைசாக் கொடூரச் செயல்கள் தோன்றாதிருப்பின், மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பன்மடங்கு உயர் நிலை எய்திருக்கும்” என்று விவேகானந்தர் முழங்கினார்.
விவேகானந்தர் பேசிவிட்டு வெளியில் வந்ததும் ஒரு பெரும் கூட்டம், அவரிடம் கையெழுத்துப் பெறுவதற்காகக் காத்திருந்தது
அதன்பின் விவேகானந்தரின் மந்திரச் சொற்பொழிவைக் கேட்டு மயங்கிய அமெரிக்கர்கள், அயோவா, செயிண்ட் லூயிஸ், கேம்பிரிட்ஜ், வாஷிங்டன்,
நியூயார்க் ஆகிய இடங்களில் எல்லாம் விவேகானந்தரைப் பேச வைத்து மகிழ்ந்தனர்.
விவேகானந்தர் அமெரிக்காவில் இருந்தபோதே அவருடைய சொற்பொழிவுகள் நூல்வடிவம் பெற்று அமெரிக்க மக்களிடத்தில் மகத்தான வரவேற்பைப் பெற்றன.
ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர்
ராமநாதபுரம் : ஊழல் செய்த தனது மருமகனின் தலையை வெட்டி நல்லாட்சிக்கு 16 ம் நூற்றாண்டில் வித்திட்டவராக திகழ்கிறார் மன்னர் விஜயரகுநாத சேதுபதி.தமிழகத்து மூவேந்தர்களுக்கு பின் 13ம் நூற்றாண்டு இறுதியிலிருந்து சுதந்திர காலம் வரை தமிழ், இறையாண்மை, தர்மங்களை பண்பாடு மாறாமல் பாதுகாத்து வந்தவர்கள் சேதுபதி மன்னர்கள்.
ராமபிரான் வானரவீரர்கள் துணையுடன் அமைக்கப்பட்டதாக கருதப்படும் சேதுவையும் (சேது என்றால் சமஸ்கிருதத்தில் அணை எனப்படும்) சீதாபிராட்டியால் உருவாக்கப்பட்ட ராமேஸ்வரம் ராமலிங்கத்தையும் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டவர்கள் சேதுபதிகள். உலகெங்கிலும் இருந்து வரும் யாத்திரிகர்களை ராமேஸ்வரம் தீவுக்கு தோணிக்கரை( மண்டபம்) வழியாக படகுகளில் அழைத்து சென்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி தரிசனத்திற்குபின்பு மீண்டும் பாதுகாப்பாக அழைத்து வருவது இவர்களின் தலையாய கடமையாக இருந்து வந்தது. 1674 முதல் 1710 வரை ஆண்ட கிழவன் சேதுபதிக்கு ஆண் வாரிசு இல்லாததால் அவரது மருமகன் விஜயரகுநாத சேதுபதி என்ற பெயருடன் பட்டத்துக்கு வந்தார். இவர் தோணித்துறையிலிருந்து யாத்திரிகர்களை அழைத்து செல்லும் பொறுப்புகளை தனது இரண்டு மகள்களான சீனிநாச்சியார்,
லட்சுமிநாச்சியார்களின் கணவரான தண்டபாணியிடம் ஒப்படைத்திருந்தார்.
பாம்பனில் இருந்து ராமேஸ்வரத்துக்கு 9
கி.மீ., தூரத்துக்கு சாலை அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தண்டபாணி யாத்திரிகர்களிடம் தலா ஒரு பணம் (தற்போதைய மதிப்பு 96 காசு) கட்டணமாக வசூலித்து வந்தார். இமயமலையிலிருந்து நடந்து வந்த பைராகியிடம் (நிர்வாண சாமியார்) பணம் கொடுத்தால்தான் படகில் ஏற்றுவேன் என்று தகராறு செய்தார். இதனால் விரக்தியடைந்த பைராகி, ராமநாதபுரம் அரண்மனைக்கு சென்று அங்கிருந்த மன்னனிடம்” இறைவனை தரிசிக்க விடாத நீயும் ஒரு அரசனா? என தூற்றினார். கட்டணம் வசூல் செய்யும் தகவல் விஜயரகுநாத சேதுபதிக்கு தெரியவர அதை மாறுவேடத்தில் சென்று உறுதி செய்தார்.
தனது இரண்டு மகள்களையும் அழைத்து விஷயத்தை கூறாமல் “அம்மா சிவதுரோகம் செய்தவருக்கு என்ன தண்டனை தரலாம் என கேட்க, அவர்களோ
“சிரச்சேதம் (தலைமை துண்டித்தல்) செய்வதுதான் சரியான தண்டனை’
என்றனர்.மன்னரோ “மிக வேண்டியவராக இருந்தால்’ என்ன செய்வது என கேட்க
“யாராக இருந்தாலும் தண்டனை வழங்க வேண்டும்’ என மகள்கள் கூறினர்.இதன்பின் மன்னர் விஷயத்தை கூறியதும் பதறிய மகள்கள் ,”தாங்களும் கணவரோடு உடன்கட்டை ஏற அனுமதிக்க வேண்டும்’ என கேட்டனர்.
மன்னர் உத்தரவுப்படி மருமகன் தண்டபாணி தலை துண்டிக்கப்பட்டு இரண்டு மகள்களும் உடன்கட்டை ஏறினர். இறுகிய மனதோடு கடமையை நிறைவேற்றிய மன்னர் மருமகன் சேர்த்து வைத்திருந்த சொந்த நிதியிலிருந்து தனது மகள்களின் நினைவாக பாம்பனிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் தங்கச்சிமடம் மற்றும் அக்காள்மடத்தில் யாத்திரிகர்கள் தங்கி செல்லும் வகையில் மடங்களை உருவாக்கினார். தற்போது சாலை விரிவாக்கம் என்ற பெயரில் அக்காள்மடத்தில் உள்ள மடம் இடிக்கப்பட்டுவிட்டது. தங்கச்சிமடத்தில் உள்ள மடம் மட்டும் சிறிது சிறிதாக அழிந்துவருகிறது. ஊழலே இருக்க கூடாது என நினைத்த மன்னர் வாழ்ந்த பூமியில் தற்போது ஊழலுக்கு பஞ்சமில்லை என்பதுதான் வேதனையான விஷயம்
ராமநாதபுரம் சேதுபதி மாமன்னர்களின் கொடைகள் :
1) குமாரமுத்து விசய ரகுநாத சேதுபதி,
பிற மதத்தினரையும் மதித்து 1734ல் ராமநாதபுரம் ஈசா பள்ளிவாசலுக்கு
‘கிழவனேரி ‘ எனும் ஊரைத் தானம் செய்தார்.
2) 1742ல் முத்துக்குமார விசய ரகுநாத சேதுபதி ஏர்வாடி பள்ளிவாசலுக்கும்,
ராமேஸ்வரத்தில் உள்ள ஆபில்,காபில் தர்காவுக்கும் நிலக்கொடைகள் அளித்துள்ளார்.
3) கடைசி சேதுபதியான முத்துராமலிங்கம், முத்துப்பேட்டை கிறிஸ்தவ தேவாலயத்திற்கு 1781ல்
‘தெஞ்சியேந்தல் ‘ எனும் ஊரைக் கொடையாகத்தந்துள்ளார்.
மடங்கள் பெற்ற கொடை:
சேதுபதி மன்னர்கள் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு கொடையளித்த ஊர்களும்,
நிலங்களும் எக்கச்சக்கம்.
1) கிபி 1661 ஆம் ஆண்டில் திருமலை சேதுபதி ரகுநாதத்தேவர், ‘மதுரை திருமலை நாயக்கரின் புண்ணியத்திற்கும், தம் தந்தை தளவாய் சேதுபதி காத்த தேவரின் புண்ணியத்திற்கும், தமது பெற்றோர்களின் பற்றகத்திற்குப் புண்ணியம் ஏற்படவும், திருவாவடுதுறை சைவ மடத்தின் கீழுள்ள திருப்பெருந்துறைக்கோவிலின் உஷாக்கால பூஜைக்காக, ஆதீனத்திற்கு வெள்ளாம்பற்றுச் சீமையிலிருந்து,
முத்து நாட்டுச்சிமை வரை ஏராளமான ஊர்களைக் கொடையளித்தார். இதே ஆதீனத்திற்கு 1668ல் பெருங்காடு எனும் ஊரையும், 1673ல் உச்சிக்கால பூஜைக்கு
‘தச்ச மல்லி ‘ எனும் ஊரையும் இறையிலி ஆக்கி உள்ளார்.
2) கிழவன் சேதுபதி 1678ல் ஆதீனத்திற்கு உச்சிக்கால பூஜைக்காக ‘புல்லுக்குடி ஏந்தல் ‘ ஊரைத்தானமாக அளித்தார்.
3) 1680ல் சேதுபதி ரகு நாதத்தேவர் அவர்கள்,
திருமலை சேதுபதி காத்ததேவர் புண்ணியத்திற்காகவும், சாத்தக்காள் ஆயி,
தம்பியாயி ஆகியோர் புண்ணியத்திற்காகவும், ‘நரிக்குடி ‘
உள்ளிட்ட ஐந்து கிராமங்களை வரியின்றி அனுபவிக்கச் செய்தார்.
4) பொசுக்குடி செப்பேடு (காலம்: 1731)
குமாரமுத்து விசய ரகுநாத சேதுபதியால் வெட்டப்பட்டது. இது திருவாவடுதுறை ஆதீனத்திற்கு பொசுக்குடி எனும் ஊரை ஈந்த செயலை
‘மடப்புறம் ‘ என்றது. (இதன்மூலம் மடப்புறம் என்பது சைவ மடத்திற்கு அளிக்கப்பட்ட தானம் எனலாம். மதுரையை அடுத்த மடப்புரம் எனும் ஊரும் இத்தகைய சிறப்பைப் பெற்றிருக்கலாம்). இதே சேதுபதி 1733ல் வணிகர்கள் இவ்வாதீனத்திற்கு ‘மகமை ‘
தரச்சொல்லி திருப்பொற்கோட்டை செப்பேட்டில் சொல்லி உள்ளார்.
5) முத்துராமலிங்க சேதுபதி 1782ல் ஆதீனத்தின் ஆவுடையார் கோவில் உச்சிக்காலபூஜைக்கு சில நிலங்களையும் (ரெவ்விரண்டு குறுக்கம் நன்செய் உட்பட), தோப்புகளையும் ஆண்டனுபவிக்கச் செய்தார். வள்ளைக்குளம் எனும் ஊரினை திருவாவடுதுறை மகேசுவர பூசைக்குக் கொடையாகத் தந்தார்.
மேலும் 1706ல் சேதுபதி காத்த தேவர் கால செப்பேட்டில், அரசு ஊழியரின் ஒரு நாள் சம்பளம், மாதாமாதம்,
திருப்பூந்துறைக்கோவிலுக்குப் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
ஆதீன நிலங்களில் உழவர் நிலை:
சேதுபதி மன்னர்கள் மாதிரியான குறுநில மன்னர்களின் ‘புண்ணியம் / சொர்க்கம் ‘ ஆசையாலேயே இத்தானங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதனால் வளம் பெற்ற ஆதீனங்கள் அந்நிலங்களை வைத்துக்கொண்டு என்ன செய்தனர் ?
குவிந்து கிடந்த நன்செய்களில் வேலை செய்த விவசாயிகளின் ரத்தத்தை உறிஞ்சிக்கொண்டிருந்தார்கள். சூரியன் எழுமுன் வயலில் இறங்கி, மறைந்தபிறகே வயலைவிட்டு வெளியேறும்படி மக்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது. ஆதினங்களின் காறுபார்கள்,
அம்மக்களுக்குக் கள்ள மரக்காலில் கூலி அளந்தார்கள். எதிர்ப்பேச்சுப் பேசின தலித்களுக்கு சவுக்கடியும்,
சாணிப்பாலும் இருந்தன.
பருவ மழை பொய்த்தாலும் மேல்வாரம்,
கீழ்வாரம் என்று கடுமையான வரிகளைப்போட்டு, குத்தகை பாக்கி அளக்காத கூலி விவசாயிகளைக் கொன்று, புதைத்த இடத்தில் தென்னங்கன்றை நட்டு வைத்த மடங்களின்
‘சிவத்தொண்டை ‘ இன்றும் தஞ்சை,
புதுக்கோட்டை மக்கள் வாய்வழிக்கதைகளாகப் பேசிவருவது கண்கூடு.
திருவாவடுதுறை ஆதீன மடத்து நிலங்களில் விதைத்துப் பயிரிட்டு விளைவித்துக் கொடுப்பது சாதாரண மக்கள். அவர்களுக்கு ஏதோ ஒரு பகுதிதான் நெல் கிடைக்கும். மடத்து நிலங்களில்தான் சிறுவிவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் குடியிருப்பார்கள். பயிரிடும் நிலத்தை எந்த சமயத்தில் வேண்டுமானாலும் திரும்பப் பெற்றுக்கொள்வார்கள் ‘ என இம்மடத்தின் சுரண்டலை நல்லகண்ணு தனது பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார்.
1930, 40 களில் பொது உடைமை இயக்கம் எழுந்து நின்று இம்மடாதிபதிகளின் உழைப்புச் சுரண்டலை எதிர்த்துப்போராட வேண்டி இருந்தது.
ஏராளமாய்ப் பெருகிய சொத்தை அனுபவிக்க எப்போதுமே பெரிய மடாதிபதியும், சின்ன மடாதிபதியும் ஒருவரை ஒருவர் அழிக்கத்திட்டமிட்டு (உதாரணமாக, சமீபத்தில் திருவாவடுதுறை சின்ன ஆதீனம், பெரிய ஆதீனத்தைக் கொல்ல முயன்ற விச ஊசி வழக்கு) சைவத்திற்குப் புறம்பான பல வேலைகளை செய்தார்கள்.
அந்தணருக்கு செய்த தானங்கள்:
நிலங்களைப் பெருவாரியாகத் தானம் தர மறவர் சீமை ஒன்றும் முகலாய சாம்ராஜ்யம் மாதிரிப் பரந்த நாடும் அன்று. பொன் விளையும் பூமியும் அல்லதான். பெரும்பாலும் வானம் பார்த்த மானாவரி நிலங்களையே மறவர் சீமை கொண்டிருந்தது.
அந்தணர்களுக்கு இச்சேதுபதிகள் அளித்த கொடைகள் பின்வருமாறு:
1)கெளண்டின்ய கோத்திரத்து ஆபஸ்தம்ப ஸூத்ரத்து செவிய்யம் ராமய்யன் புத்ரன் அஹோபாலய்யனுக்கு, திருமலை தளவாய் சேதுபதி காத்த தேவர் 25/1/1658ல் காளையார் கோவில் சீமையில் ஆனையேறி வயல், சூரநேம்பல்,
கீளைச்சூரநேம்பல், மாவூரணி,
திருப்பராதியான் வூரணி, பெரிய நேந்தல் ஆகிய ஊர்களை புத்ர, பெளத்ர பாரம்பரியமாக சந்திராதித்திய சந்திரப்பிரவேசமாக சறுவ மான்னியமாக ஆண்டு அனுபவித்துக் கொள்ளச் செய்தார்.
2)1684ல் சுந்தரபாண்டியன் பட்டணத்துக்குள் உள்ள அக்ரகாரம், மடம், ஏகாம்பர நாதர் கோவில் பூசைக்காக எட்டு கிராமங்கள் –
புல்லூரும், மருதூரும் உள்ளிட்ட- அக்ரகாரத்துக்காக வழங்கப்பட்டன.
3)ரகுநாத சேதுபதியால், 13-1-1682ல் முருகப்பன் மட தர்மத்துக்கும்,
அக்ரகாரத்துக்கும் கொடையாகத் திருப்பொற்கோட்டை, பகையனி,
பிராந்தனி ஆகிய ஊர்கள் கொடையளிக்கப்பட்டன.
4) 1709ல் கிழவன் சேதுபதியின் 47
மனைவியரில் அரசியான காதலி நாச்சியார், குமரண்டூர் வீரமநல்லூரில் இருந்த வெங்கடேசுவரய்யன் மகன் சங்கர நாராயணய்யனுக்கு தேர்போகி நாட்டு களத்தூரின் 55 சதவீத நிலத்தை இறையிலியாகத் தந்தார்.
5) விசய ரகுநாத சேதுபதி, 1719ல் காக்குடி, கணபதியேந்தல் எனும் 2
ஊர்களை கற்றறிந்த அந்தணருக்குத் தானம் செய்தார்.
6) முத்து விசய ரகுநாத சேதுபதி 1722ல் காஸ்யப கோத்திரம் ஆபஸ்தம்ப சூத்திரத்தைச் சேர்ந்த யசுர்வேதம் தாதாசிவன் என்பார் மகன் ரகுநாதக்குருக்கள் எனும் அந்தணருக்கு
‘பால்குளம் ‘ எனும் ஊரைக் கொடையளித்தார்.
7)சிவகங்கை பிரதானி தாண்டவராயன் தனது தர்மத்தின்பொருட்டு, 1727ல் சங்கரய்யர் பேரன் வேங்கிட கிருட்டிண அய்யரிடத்தில்,
சேதுமூலத்தில் ஆதிசேது நவ பாஷாணத்தின் கிழக்கே தோணித்துறை சத்திரக்கிராமம் தேர்போகித்துறையில் நிலதானம் அளித்து, அக்கிரகாரம் கட்டிக்கொள்ள அனுமதி தந்தார்.
8)1731ல் குமாரமுத்து விசய ரகுநாத சேதுபதி, கற்றறிந்த அந்தணர்கள் 24
பேருக்கு ராமநாதபுரம்,
பாலசுப்பிரமணியர் சந்நிதியில் அக்கிரகாரம் அளித்துள்ளார்.
9) 1737ல் காசியப கோத்ரம், ஆசிவிலயன சூத்திரம் ரிக்வேதம் பயின்ற கலாநிதி கோனய்யர் மகன் ராமனய்யருக்கு கோவிந்த ராச சமுத்திரம் எனும் முதலூரை, ரகுநாத சேதுபதியின் மருமகன் தானம் செய்தார்.
10) முத்து விசய ரகுநாத சேதுபதி 1760ல் உத்திரகோச மங்கை மங்களேஸ்வர சுவாமி கோவில் ஸ்தானிகரான ராமலிங்க குருக்கள் மகன் மங்களேஸ்வரக் குருக்களுக்கு கருக்காத்தி கிராமம் கொடையளிக்கப்பட்டது.
செப்பேடுகளை வாசிக்க, வாசிக்க,
தானமாய்த் தந்த ஊர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
முத்து விசய ரகுநாத சேதுபதி சூரிய கிரகணத்துக்காக, 1762ல் சின்ன நாட்டான்,
பெரிய நாட்டான் ஊர்களைக் கற்றறிந்த அந்தணருக்குத் தந்தார்.
பரத்வாஜ கோத்திரம் ஆவஸ்தம்ப சூத்திரம் யஜூர் வேதம் வல்ல அவதானம் செய்ய வல்ல சேஷ அவதானியின் மகன் சந்திரசேகர அவதானிக்கு 1763ல் அரியக்குடியை தானம் செய்தார்.
தண்ணீர்ப்பந்தல், அன்னதானமடம், அக்ரகாரம் ஆகியன வேதாளை கிராமத்தில் இருந்தன. இத்தர்மங்கள் தொடர, ரெங்கநாதபுரம் வெங்கிட நாராயண அய்யங்காருக்கு
‘அனிச்சகுடி ‘ 1768ல் முத்துராமலிங்க சேதுபதியால் வழங்கப்பட்டது. இச்சேதுபதிதாம் 1772ல் கப்பம் கட்ட முடியாத காரணத்தால் நவாப் வாலாஜா முகம்மது அலியால் திருச்சியில் சிறை வைக்கப்பட்டு இருந்தார்,கிட்டத்தட்ட 10
ஆண்டுகள். வரிகட்ட முடியாமைக்கு கம்பெனி எதிர்ப்பு ஒரு காரணமானாலும்,
தான தருமங்களால், அரசின் வருவாயும் குறுகிக்கொண்டே போனதும் முக்கியக் காரணமாய் இருந்தது.
1781ல் சிறை மீண்டு வந்து, அமாவாசை புண்ணிய நாளில்,
அனுமனேரிக்கிராமத்தை கற்றறிந்த அந்தணர் 10 பேருக்கு அளித்தார். 1782ல் அய்யாசாமிக்குருக்களுக்கு சொக்கானை, மத்திவயல் ஊர்களையும்,
திருப்புல்லாணியில் உள்ள புருசோத்தம பண்டிதர் சத்திரத்தில் பிராமணருக்கு அன்னமிட கழுநீர் மங்கலம் ஊரையும்,1782ல் யஜூர் வேதம் வல்ல ராமசிவன் மகன் சுப்பிரமணிய அய்யருக்கு குளப்பட்டிக்கிராமத்தின் பாதியையும், 1783ல் யஜூர் வேதம் கற்ற கிருஷ்ணய்யங்காருக்கு செப்பேடுகொண்டான் எனும் ஊரையும் தந்தார்.
Posted 23rd January 2013 by kumar pandian
23
JAN விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு - ராமநாதபுரம் சேதுபதி மாமன்னர்களின் கொடைகள்
0 Add a comment
மறவர் நாடு
இப்போது இராமநாதபுரம் மாவட்டமாக உள்ள பகுதி மற்றும் சிவகங்கை மாவட்டம்,
விருதுநகர் மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்கள் அடங்கிய பகுதி பாண்டிய நாட்டின் கீழ்த்திசைப் பகுதியாக இருந்தது. இந்த நிலப்பரப்பு மறவர் நாடு என்றும் அழைக்கப்பட்டது. மறவர் நாடு பாண்டிய பேரரசி…ன் ஆட்சிக்குள் அடங்கிய பகுதியாகவே எப்போதும் விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
மறவர் நாட்டைச் சேர்ந்தவர்கள் அன்றும் சரி,
இன்றும் சரி பாண்டியகள் என்றே சாதாரணமாக அழைக்கப்படுகின்றார்கள். சாதாரணப் பொது மக்களும் பெருமையோடு தாங்களுக்குப்
‘பாண்டியர்” என்று பெயர் வைத்துக் கொள்கின்றார்கள். மறவர் நாடு பிற்காலத்தில் ‘சேதுநாடு”
என்றழைக்கப்பட்டது. ‘சேது” என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்கு புராண காலச் செய்தி ஒன்று உள்ளது. ‘சேதுநாடு”
என்று அழைக்கப்படும் இன்றைய இராமநாதபுரம் இராமாவதாரத்தோடு பெரிதும் இணைத்துப் பேசப்படுகிறது.
இராவணனின் நாடாக இருந்த இலங்கைத் தீவுச் சீதாதேவி சிறை அடைக்கப்பட்டிருப்பதை அனுமார் வழியாக தெரிந்து கொண்ட இராமபிரான் அங்கு செல்ல வேண்டிச் சுக்கீரவனின் வானரப் படைகளைக் கொண்டு பாலம் அமைத்தார். அந்தப் பாலத்திற்குத் திருவணை என்றும்
‘சேது” என்றும் பொருள் உள்ளது. அந்தப் புனிதமான பாலத்திற்கு சேதுவிற்கு பொருத்தமான காவலர்களை நியமிக்க நினைத்தாராம் இராமபிரான். அச்சமயம் அந்த பகுதியில் வீரத்தோடு விளங்கிய மறவர்குலத் தலைவர் ஒருவரை நியமித்தார். அவருக்கு சேதுபதி என்று பெயராகி வந்ததாம்.
அப்படிப்பட்ட புனிதமான வழியில் வந்தவர்கள் சேதுபதிகள் என்று புராண கால வழி வந்த செய்திகள் கூறுகின்றன. இந்த சேதுபதி மரபினருக்கு
‘திருவணை”க் காவலன் என்ற பெருமைக்குரிய பெயரும் உண்டு. இராமபிரானுக்கு பாலம் கட்ட உதவி செய்து வானரர்கள் கட்டிய பாலத்திற்குக் காவல் உதவி சேது என்ற பாலத்தைக் காத்து, சேதுபதி திருவணைக் காவலன் என்ற சிறப்புப் பெயர்களைப் பெற்றது என்பது எல்லாம் புராண காலச் செய்திகள் என்று சொல்பவர்களும் உண்டு. மதுரையை ஆட்சி செய்த முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் வரலாற்று ஆவணங்கள் இராமநாதபுரம் சீமையை ஆண்ட அரசர்களை சேதுபதி என்றே அழைக்கின்றனர்.சேதுபதி அவர்களால் தேசத்தில் ஆளப்பட்ட பூமி இராமநாதபுரம் சீமை, சிவகங்கை சீமை, புதுக்கோட்டை பகுதி தஞ்சாவூர் சில பகுதிகளைக் கொண்டதாக இருந்தது.
அதற்கு மறவர் நாடு என்று பெயர். இந்த மறவர் நாட்டை ஆளும் பொறுப்பு எப்படி சடையக்கத் தேவர் என்றழைக்கப்படும் உடையன் சேதுபதிக்கு வந்தது?
மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு கிருஷ்ணப்ப நாயக்கர் சிறந்ததொரு வலிமையான ஆட்சியை நடத்தி வந்தார். அச்சமயம் மறவர் நாடு என்றழைக்கப்படும் இராமநாதபுரம் பகுதி முழுவதற்கும் அவர் அரசராக இருந்தார். மறவர் நாட்டில் காடுகள் நிறைந்திருந்தன. காடுகளென்றால் சாதாரணமான காடுகள் அல்ல. மிக அடர்ந்த காடுகளாக இருந்தன. காடுகளில் பாம்புகளும், துஷ்ட மிருகங்களும் தாக்கி வழிப் பயணிகளுகக்குத் துன்பம் தந்ததைவிட பல மடங்கு துயரத்தைக் கள்வர்கள் கொடுத்தார்கள். மறவர் நாட்டில்,
இந்தியாவின் தென்முனைக் கிழக்காக அமையப் பெற்றிருந்த இராமேஸ்வரம் பாரத தேசம் முழுவதும் புகழ்பெற்ற புண்ணியத்தலமாக விளங்கியது.
அத்தோடு தனுஷ்கோடி என்ற உலகப்புகழ் வாய்ந்த புண்ணியத் தீர்த்தமும் இங்குதான் அமைந்துள்ளது. பாரத தேசத்தில் காசியில் இருந்தும் பக்தர்கள் தங்களின் பாவங்களைத் தொலைக்கக் காடுகளையும்,
கள்வர்களையும் கடந்து உயிரை வெறுத்து புண்ணியத்திற்காக இராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி காலத் தரிசித்த வண்ணம் இருந்தார்கள். இந்த நிலையில் மதுரையை மாட்சிமை பொருந்தி ஆண்ட முத்து கிருஷ்ணப்பருக்குக் குருவானவர் ஒருவர் இராமேஸ்வரம் சென்று இராமனாத சுவாமிகளைத் தரிசித்துவிட்டுத் தனுஷ்கோடியில் தீர்த்தமாடப் பெரிதும் விரும்பினார்.
ஏன் இப்படி குருஜிக்காக முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் பதறுகின்றார்?
அதற்குரிய காரணம் இருந்தது. அரசருக்கு மத விஷயத்தில் மட்டும் குருவாக குருஜி விளங்கவில்லை. அரசியல் ஆட்சி விவகாரத்திலும் தன்னிகரற்ற தகுந்த ஆலோசனைகளை குருஜி மதி யூகத்தோடு காத்து கொண்டிருந்தார். அரசருக்கு ‘தளபதி எங்கே – உடனே வரச் சொல்” மன்னர் வீரன் ஒருவனுக்கு கட்டளையிட்டார். தளபதி வந்து பணிந்து நின்றார். ‘தளபதி” அவர்களே! நமது குருஜி இராமேஸ்வரம் தீர்த்தயாத்திரை செல்ல ஆசைப்படுகிறார். அதற்குப் பொருத்தமான படை வீரர்களைத் தேர்ந்தெடுத்து என் முன்னால் கொண்டு வாருங்கள்.
அத்தோடு மறவர் நாட்டில் இருந்து ஒரு மாவீரனையும் குருஜிக்கு துணையாக அனுப்பினால் நல்லது அல்லவா? ‘ஆமாம் அரசே! மறவர் நாட்டிலிருந்தே ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்தால் நல்லது அரசே!” ஒரு வாரம் கழிந்தது. போகலூர் என்ற ஊரின் தலைவராக இருந்த சடையக்கத் தேவர் எனப்படும் மாவீரர் முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கரின் முன்னால் பெருமையோடு கொண்டுவரப் பெற்றார். மன்னர் சடையக்கத் தேவரைப் பார்த்தவுடன் அவரது உருவம், பேச்சில் வீசிய அறிவொளி முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கரைப் பெரிதும் கவர்ந்து தன் வயப்படுத்தியது. சடையக்கத் தேவரும் மன்னருக்கு ஏற்ற மாதிரி நடந்து கொண்டார். உன்னை நம்பி என் குருநாதரை உங்களுடன் தீர்த்த யாத்திரைக்கு அனுப்பி வைக்கின்றேன் என்றார்.
உங்கள் ஆணை மன்னவா! என்றார் பதில் முழக்கமாக சடையக்கத் தேவர். மறவர் நாட்டில் காடுகளைக் களைந்து கள்வர்களை ஓட.. ஓட விரட்டி குருஜியை இராமேஸ்வரம் – தனுஷ்கோடி தீர்த்த யாத்திரைக்கு சடையக்கத் தேவர் அழைத்துச் சென்றார். குருஜியின் மனம் முழுவதிலும் இடம் பிடித்தார் சடையக்கத் தேவர். குருஜி மதுரைக்குத் திரும்பியதும் தன் மன்னனும் மாணவனுமான முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கரைச் சந்தித்தார். மன்னவா… என் மனம் குளிர்ந்தது! உன் நண்பன் சடையக்கத்தேவன் மூலம் இறைவனின் பரிபூரணமான அருளை நான் பெற்றேன். உன் ஆட்சி நிலைக்க நீ நீடித்த ஆயுளைப் பெற அந்த இராமநாதஸ்வாமி உனக்கு அருள்பாலிப்பார்” என்று மனம் மகிழ்ந்து ஆசீர்வதித்தார் குருஜி.
சடையக்கத் தேவருக்கு ஏதாவது செய்தே தீருவது என்ற உறுதிப்பாட்டுடன் அன்றிரவு நிம்மதியாகத் தூங்கச் சென்றார். மறுநாள் அரசரின் ஆலோசனைக் குழு மறவர் நாடு பற்றியும், சடையக்கத் தேவரைப் பற்றியும் நிறைய ஆலோசனை செய்தது. சடையக்கத் தேவரிடம் சீர்கெட்டுக் கிடக்கும் மறவர் திருநாட்டை முறைப்படுத்திட ஒரு காவலன் தேவை,
அதற்கு சரியான ஆள் இந்த சடையக்கத் தேவர் தான் என முடிவு செய்யப்பட்டது. மன்னர் சொல்லைக் கேட்டு மகிழ்ந்த சடையக்கத் தேவர் தனது வீரத்திற்குக் கிடைத்த பரிசை எண்ணி மகிழ்ச்சி அடைந்தார். புதிதாக ஒரு மறவர் நாட்டைச் சடையக்கத் தேவர் மூலமாக உருவாக்கிய பெருமை முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கரையே சேரும்.
கி.பி. 1605ஆம் ஆண்டு முதல் சேதுபதியாக பதவி ஏற்ற சடையக்கத் தேவர் மிகச் சிறந்த முறையில் ஆட்சிப் பணியைத் தொடங்கினார். அதன் பிறகு திருமலை நாயக்கர் என்ற புகழ்பெற்ற நாயக்க மன்னர் மதுரையை ஆண்டு வந்தார். அவர் மிகச் சிறந்த நாயக்க மன்னர் மட்டுமல்ல, சிறந்த ராஜ தந்திரம் உடையர். சடையக்கத் தேவர் கி.பி.
1621ஆம் ஆண்டில் மறைந்தார். கி.பி. 1621ஆம் ஆண்டு முதல் 1635ஆம் ஆண்டு வரை கூத்தன் சேதுபதி மறவர் நாட்டை மிகச் சிறந்த முறையில் ஆண்டார். கூத்தன் சேதுபதிக்கு குழந்தை இல்லை. அவரது மறைவுக்குப் பிறகு இரண்டாம் சடையக்கத் தேவர் என்று பெயர் பெற்றிருந்த தளவாய் சேதுபதி மறவர் நாட்டின் சேதுபதியாகப் பதவி ஏற்றார்.
தளவாய் சேதுபதி அவர்கள் திடீரென ஓர் அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு மறவர் சீமையில் பெரும் உள்நாட்டுப் போரை உருவாக்கிப் பங்காளிகளைப் பகையாளிகளாக மாற்றி வெறி கொள்ள வைத்தது. அந்த அறிவிப்பு
‘எனக்குப் பின் மறவர் நாட்டை ஆளும் உரிமை என் தமக்கையின் மகன் இரகுநாத தேவருக்குத்தான்” என்பது. இந்த அரசுரிமை பற்றிய அறிவிப்பால் மிகுந்த கோபம் கொண்டவர் கொதித்தெழுந்தவர் தம்பித் தேவராவார். தம்பித்தேவர் யார்?
இவர் சடையக்கத் தேவரின் காதல் மனைவிக்குப் பிறந்தவராவார். மேலும் இவர் காளையார் கோவிலை ஆண்டு வந்தவர். தம்பித்தேவர் தொடர்ந்து தளவாய் சேதுபதிக்குத் தொல்லை கொடுத்து வந்தார்.
உள்நாடடில் இரத்த ஆறு ஓடியது. தம்பித்தேவரைத் திருமலை நாயக்கர் ஆதரிக்கின்றார் என்ற செய்தி வதந்தியாக மறவர் நாடு முழுவதும் பேச வைக்கப்பட்டது. திருமலை நாயக்க மன்னர் மேற்கொண்ட இராஜ தந்திரத்தால் மறவர் நாட்டை தளவாய் சேதுபதி பலமிழந்தார். திருமலை நாயக்கரின் மனோநிலையை உணர்ந்து கொண்ட தம்பித்தேவர் மதுரைக்குச் சென்று அவரிடம் சரணம் என்று சேர்ந்தார். திருமலை நாயக்கரும் தளவாய் சேதுபதியை கலகக்கார் என்று அறிவித்தார். தம்பித் தேவர்தான் மறவர் நாட்டின் மன்னர் என்றும் அறிவித்தார். தம்பித் தேவருக்குத் தேவையான பணத்தையும் படையையும் வேண்டிய அளவிற்கு விரும்பிக் கொடுத்தார் திருமலை நாயக்க மன்னர்.
தம்பித் தேவரும் படைகளுடன் மறவர் நாட்டுக்கு வந்து தளவாய்ச் சேதுபதியோடு மோதினார். தளவாய் சேதுபதி இராமேஸ்வரத் தீவுக்குள் அகழிபோலப் பயன்படுத்திப் பாதுகாப்பாக இருந்தார். இறுதியில் திருமலை நாயக்கர் படையுடன் இராமப்பையர் மற்றும் அவரின் மருமகன் உதவியுடன் தளபதி சேதுபதியையும், தணக்கத் தேவரையும் கைது செய்து மதுரைக்கு கொண்டு வந்தார். மறவர் சீமையில் சேதுபதியாக ஆன தம்பித்தேவர் அமைதியான மனநிலையில் ஆட்சியைத் தொடர முடியாது பெரிதும் தொல்லைப்படுத்தப்பட்டார். தம்பித் தேவருக்குத் தாளாத தொல்லை தந்தவர்கள் இரகுநாதத் தேவர், நாராயணத் தேவர் ஆகியோர் ஆவார்கள். மேற்குறிப்பிட்ட இரண்டு பேரின் ஓயாத உரசல்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தம்பித் தேவர் மறுபடியும் திருமலை நாயக்க மன்னரின் உதவியை நாடினார்.
ஆனால் இப்போது திருமலை நாயக்க மன்னரின் மனம் முழுவதுமாகத் தம்பி தேவருக்கு எதிராக நின்றது. தளவாய் சேதுபதியை மீண்டும் மறவர் சீமைக்கு தம்பித் தேவருக்குப் பதில் சேதுபதி மன்னர் என மன்னர் திருமலை நாயக்கர் அறிவித்தார். இது காலத்தின் மாற்றம் தான். தளவாய் சேதுபதி மாட்சிமை மிக்க மன்னராக மீண்டும் இராமநாதபுரம் நகருக்குள் நுழைந்தார். அவருக்கு மக்கள் அமோக வரவேற்பு கொடுத்தார்கள். கி.பி.
1646ஆம் ஆண்டு தளவாய் சேதுபதி தம்பித் தேவரால் படுகொலை செய்யப்பட்டார். மறவர் நாட்டில் ஏற்பட்ட குழப்பத்தை முடிவிற்குக் கொண்டுவர நினைத்தார் திருமலை நாயக்கர் மன்னர். கி.பி. 1646ஆம் ஆண்டில் மறவர் நாடு மூன்றாக பிரிக்கப்பட்டது.
கீழ்க்கண்டவாறு திருமலை நாயக்க மன்னர் பிரித்தார். இரகுநாதத் தேவருக்கு –
இராமநாதபுரம் பகுதி, தம்பி தேவருக்கு –
சிவகங்கைப் பகுதி, தணக்கத் தேவர்,
நாராயணத் தேவர் ஆகிய இருவருக்குமாக
– திருவாடனைப் பகுதி என மூன்றாகப் பிரிக்கப்பட்டது. கி.பி. 1647ஆம் ஆண்டு இராமநாதபுரம் பகுதியை ஆளவந்த இரகுநாத சேதுபதி அதிர்ஷ்டமுள்ளவராகவும், சிறந்த ஆட்சித் திறமை உடையவராகவும் இருந்தார். இரகுநாத சேதுபதி என்ற திருமலை சேதுபதியின் புகழ் மறவர் நாட்டையும் தாண்டி எல்லைகளை எல்லாம் கடந்து பரவிடும் காலம் என்று அவரைத் தேடிவந்து நின்றது. மறவர் சீமை பிரிவதற்குக் காரணமாக இருந்த தணக்கத்தேவர் மற்றும் தம்பித்தேவர் ஆகியோர் இறைவனடியில்
சேர்ந்தனர்.
இதன் விளைவாக மறுபடியும் இரகுநாத சேதுபதியின் கீழ் மறவர் சீமை ஒன்றுபட்டது.
1659ஆம் ஆண்டு மைசூர்ப்படை மதுரை நகரைத் தாக்கியது. அந்தப் பயங்கரத் தாக்குதலை கண்ட திருமலை நாயக்கரால் எதிர்கொள்ள முடியவில்லை. உடனே இராமநாதபுரம் உதவியை மன்னர் திருமலை நாயக்கர் நாடினார். ஒரே நாளில் இருபத்தைந்தாயிரம் படை வீரர்கள் உடன் மதுரைக்குச் சென்று மைசூர் படையை ஓட ஓட விரட்டி அடித்தனர். திருமலை நாயக்கர் திகைத்துப் போனார். இரகுநாத சேதுபதியின் உதவியை நினைத்து பெரிதும் மகிழ்ச்சியடைந்தார். அதன் பயனாக ‘தாலிக்கு வேலி” என்ற பட்டத்தைக் கொடுத்து இரகுநாத சேதுபதியை பெருமைப்படுத்தினார். அத்தோடு மறவர் சீமையை ஆளுவதால்
‘முன்னோர் வழக்கப்படி மறவர் சீமையை ஆண்டுவந்த சேதுபதிகள் தவறாது செலுத்தி வந்த கப்பத் தொகையை இனி இரகுநாத சேதுபதி செலுத்த வேண்டாம் என்று கட்டளையிட்டார்.
திருப்புவனம், திருச்சுழி, பள்ளிமடம் ஆகிய பகுதிகளை திருமலை நாயக்ர் மனமுவந்து இரகுநாத சேதுபதிக்குக் கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் தான் மட்டும் பரம்பரையாகக் கொண்டாடி மகிழும் மதுரைக்கே அக்காலத்தில் பெருமை சேர்த்த நவராத்திரி விழாவை இரகுநாத சேதுபதியும், இராமநாதபுரத்தில் தனக்கு இணையாகக் கொண்டாடி மகிழும் உரிமையைத் தந்தார். அந்த விழா இன்றும் இராமநாதபுரத்தில் சீரும் சிறப்புமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. சிறிது காலம் கழித்து மதுரை மீது முற்றுகையிட வந்த யூசுப்கானையும் இரகுநாத சேதுபதி பெரும் படையுடன் விரட்டி அடித்து திருமலை நாயக்கருக்கு உதவி செய்தார்.
தனது காலத்தில் மறவர் சீமையை வளப்படுத்திய பலப்படுத்திய புகழ் ஒளி நிறைந்த வீரத்திருமகன் இரகுநாதசேதுபதி அவர்கள் 1672ஆம் ஆண்டில் மறைந்தார். இரகுநாத சேதுபதிக்குப் பிறகு பட்டமேற்ற இராசசூய சேதுபதி ஆறு மாதத்தில் கொல்லப்பட்டார். இராசசூய சேதுபதிக்கு பிறகு பட்டத்திற்கு வந்த அவரது தம்பி ஆதன இரகுநாத சேதுபதி மூன்று மாதங்களில் ஆட்சியை முடித்துக் கொண்டார். இராசசூய சேதுபதி மற்றும் ஆதன சேதுபதி ஆகியோருக்கு குழந்தை இல்லாததினால் அவர்களின் நெருங்கிய உறவினர் ஆன கிழவன் சேதுபதி என்றழைக்கப்பட்ட இரகுநாததேவர் 1674ஆம் ஆண்டில் மறவர் சீமையின் ஒப்பற்ற சேதுபதி ஆனார். கிழவன் சேதுபதி மறவர் சீமையின் வரலாற்றில் கரும்பு நெஞ்சம் கொண்டவர்.
இவர் ஆட்சி செய்த காலம் முழுவதும் எதிர்ப்பே இல்லாத உயர்ந்த நிலையில் விளங்கிய காலமாகும். புதுக்கோட்டையை ஆண்ட பல்லவராயர் கிழவன் சேதுபதிக்கு முரணாகத் தஞ்சை மன்னனுடன் நேசம் கொண்டிருந்ததால் இதைத் தெரிந்து கொண்ட கிழவன் சேதுபதி பல்லவராயனைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, தனது கள்ளர் இன மனைவி ‘கதலி” என்பவளின் சகோதரனாகிய இரகுநாதத் தொண்டைமானை அரசன் ஆக்கினார். இப்படித்தான் புதுக்கோட்டையில் தொண்டைமான் அரசு உதயமாயிற்று. கிழவன் சேதுபதி முப்பத்தாறு ஆண்டுகளாக மறவர் நாட்டை ஆண்டு மகத்தான வெற்றிகளைப் பெற்றவர். இரகுநாத சேதுபதியைப் போல கிழவன் சேதுபதியும் மதுரை மன்னருக்கு ஆரம்ப காலத்தில் உதவி செய்தவர் தான். ருஸ்தம்கான் தலைமையில் வந்த முஸ்லீம் படையெடுப்பின் போது மதுரை மன்னருக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்.
சில காரணங்களை மையமாக வைத்து மதுரை மன்னருக்கும் கிழவன் சேதுபதிக்கும் பகை உருவாயிற்று. அது போராகத் தோன்றி இருதரப்பினருக்கும் வெற்றி தோல்வி இன்றி முடிந்தது.
1702ஆம் ஆண்டில் ராணி மங்கம்மாள் மறவர் நாட்டின் மீது படையெடுத்தார். ராணி மங்கம்மாள் அனுப்பிய பெரும் படையுடன் தஞ்சாவூர் படையும் கலந்து சேது நாட்டின் மீது தாக்கிட வந்தது. இந்த கூட்டுப்படையை கிழவன் சேதுபதி மிக துணிச்சல் உடன் எதிர்கொண்டு போரிட்டு விரட்டி அடித்து முகவையை பெரிய அழிவில் இருந்து காப்பாற்றி சேது நாட்டை கிழவன் சேதுபதி முழுமையான சுதந்திரப் பகுதியாக அறிவித்தார்.
1709ஆம் ஆண்டில் படையெடுத்து வந்து தஞ்சை நாட்டின் படைகளை வென்று அறந்தாங்கி கோட்டையையும் கைப்பற்றினார் கிழவன் சேதுபதி. மறவர் நாட்டில் புகழை தமிழகம் முழுவதுமாகப் பரப்பிய கிழவன் சேதுபதி 1710ஆம் ஆண்டில் காலமானார். கிழவன் சேதுபதி தன் மறைவிற்கு முன்னதாக தன் காதலியின் மகன் பவானி சங்கரத்தேவனுக்கு முடிசூட்ட நினைத்தார். ஆனால் மக்களின் விருப்பம் வேறு விதமாக இருந்ததால் விஜய ரகுநாதனுக்கு அரசுரிமையை கொடுக்க ஒப்புக்கொண்டார். விஜய இரகுநாத சேதுபதியின் ஆட்சி 1711ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கியது. உடனே பவானி சங்கரத் தேவரின் தொல்லையும் தொடர்ந்து தொடங்கியது. பவானி சங்கரத் தேவன் தனக்குத் துணையாக புதுக்கோட்டை மன்னன், தஞ்சை மன்னன் ஆகியோரைச் சேர்த்துக் கொண்டு விஜய இரகுநாத சேதுபதியை அறந்தாங்கிக் கோட்டையில் வைத்து சண்டையில் சந்தித்தார். நோயின் தாக்குதலுக்கு ஆளாகி இருந்து விஜய இரகுநாத சேதுபதி தனது சாவை எண்ணி கிழவன் சேதுபதியின் பேரனான தண்டத் தேவன் என்ற சுந்தரேச இரகுநாத சேதுபதியை மறவர் சீமையின் அரசரராக நியமித்தார்.
இந்த காலக்கட்டத்தில் விஜய இரகுநாத சேதுபதி 1720ஆம் ஆண்டில் மரணமடைந்தார். மறவர் சீமை மக்களிடம் தனது நிலையை உயர்த்திக் காட்டி பவானி சங்கரன் மறவர் சீமையின் ஆட்சியைக் கைப்பற்றினார். பதவியில் இருந்து துரத்தப்பட்ட தண்டத் தேவன் தனது ஆட்சி உரிமையை மறுபடியும் நிலைநாட்டிக் கொள்வதற்காகப் போராட்டத்தில் இறக்கினார். தண்டத்தேவன் தனக்குத் துணையாக மதுரை மன்னன்,
புதுக்கோட்டை மன்னன் ஆகியோரைச் சேர்த்துக் கொண்டு மறவர் சீமையின் சேதுபதியாக அறந்தாங்கிக் கோட்டையில் வீற்றிருந்து ஆட்சிபுரிந்து கொண்டிருந்த பவானி சங்கரத்தேவனைத் தாக்கி அறந்தாங்கிக் கோட்டையைக் கைப்பற்றினார். மறவர் சீமையின் அரசனாகப் பதவியேற்றார் தண்டத்தேவன்.
இந்நிலையில் பவானி சங்கரத் தேவன் நாட்டைவிட்டு ஓடி தனது சொந்தமான தஞ்சை மன்னரிடம் சரணடைந்தார். மன்னர் பிரானே எனக்கு உதவி செய்து மறவர் நாட்டை எனக்கு மீண்டும் கிடைக்கும்படி நீங்கள் செய்துவிட்டால் பாம்பாற்றிற்கு வடக்கே உள்ள பகுதிகளை எல்லாம் உங்களுக்கே தந்துவிடுகிறேன் என்றார் பவானி சங்கரன். பவானி சங்கரனுக்கு ஆதரவாகத் தஞ்சையின் படைகள். தண்டத்தேவனுக்கு ஆதரவாக மதுரையின் படைகளும், புதுக்கோட்டை படைகளும் களத்தில் சந்தித்தன. தஞ்சை படைத் தளபதி புதுக்கோட்டைத் தொண்டைமானின் இரண்டு மக்களையும் கைது செய்தார்.
தஞ்சை தளபதியுடன் உடன்பாடு செய்து கொண்டு சண்டையிலிருந்து விலகினார் புதுக்கோட்டை மன்னர். இறுதியில் தஞ்சைப் படை தண்டத்தேவனின் படையையும், மதுரைப் படையையும் எளிதாகத் தோற்கடித்தது. தண்டத்தேவனுக்கு நெருக்கமாக இருந்தவர்களும் கொல்லப்பட்டனர். பவானி சங்கரத்தேவன் மீண்டும் மறவர் நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த போது மறவர் நாட்டைச் சேர்ந்த பகுதிக்கும் தலைவராக இருந்தார். இந்தச் சமயத்தில் தான் சிவகங்கைக்கு அருகாமையில் உள்ள நாலுகோட்டை பாளையத்தில் சொந்தக்காரர் சசிவர்ணத்தேவர் மிகச் சிறந்த வீரர் என்ற பெயர் பெற்றிருந்தார். இவர் மறவர் நாட்டின் மன்னராக பவானி சங்கரத்தேவர் வரக்கூடாது என்ற எண்ணத்தில் இருந்ததினால் இவரது செல்வாக்கு,
செல்வம், வீரம் இவைகள் மீது பொறாமை கொண்ட பவானி சங்கரத்தேவன் சசிவர்ணத் தேவரின் உடைமைகளைப் பறித்து மறவர் சீமையை விட்டுவிரட்டினார்.
சசிவர்ணத் தேவர் தஞ்சை அரண்மனைக்குச் சென்றார். தன்னை யார் என்று காட்டிக் கொள்ளாமல் அங்குள்ள அமைச்சர்கள் மற்றும் அரசப் பிரதானிகளின் முன்பாக தனது வீரதீரங்களைக் காட்டினார். பல வீரர்களை வெற்றி கொண்டார். சசிவர்ணத்தேவர் புலியோடு சண்டையிடுவதைப் பார்த்த தஞ்சை மன்னரின் நெருங்கிய உறவினர்கள்கூடப் பயத்தில் அலறினார்கள். தஞ்சை மன்னரின் நெருக்கம் சசிவர்ணத்தேவருக்கு வீரத்தின் பரிசாக கிடைத்தது. ஒரு சமயம் தஞ்சாவூர் மன்னரைக் கொல்ல அவரது எதிரிகள் திட்டம் போட்டனர். மன்னரை எப்படிக் கொல்வது என்று பலவாறு ஆலோசித்து மன்னரின் எதிரிகள் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள்.
மூர்க்கமான காளை ஒன்றினை ஆரம்ப காலம் தொட்டே மன்னரின் உடையில் வீசும் வியர்வை வாடையைப் பிடிக்கச் செய்து வெறி கொள்ள வைத்து வளர்த்தனர். சமயம் பார்த்து மன்னர் மீது அந்தக் கொலை வெறிக் காளையை ஏவிவிட்டனர். சசிவர்ணத் தேவருக்கு அவர்களின் துர்குணம் எப்படியோ தெரிந்தது. காளையின் முன்னே பாய்ந்து அதன் வலிமை மிக்க கொம்புகளை உடைத்து அந்த முரட்டு காளையை அடக்கி மன்னனின் உயிரைக் காப்பாற்றினார். இந்த நிகழ்ச்சியால் தஞ்சை மன்னர் மனதில் சசிவர்ணர் நீங்கா இடம் பெற்றார். தஞ்சையில் ஏற்கனவே மறவர் சீமையைச் சேர்ந்த ஒருவர் அடைக்கலமாகி இருப்பதால் அவர் விஜய இரகுநாத சேதுபதியின் நெருங்கிய உறவினர் தட்டையத் தேவர் ஆவார்.
தட்டையத்தேவரும், சசிவர்ணத்தேவரும் பவானி சங்கரத்தேவரால் பல துன்பத்திற்கு ஆளானவர்கள். இவர்களின் பொது எதிரியாக பவானி சங்கரத் தேவர் கருதப்பட்டார். தஞ்சை மன்னருக்கு பவானி சங்கரத் தேவ சேதுபதி மீது ஏராளமான கோபம் இருந்தது. ‘பாம்பாற்றில் வடக்கே உள்ள பகுதிகளைத் தருகின்றேன் என்று வாக்குறுதியை கைப்பற்றினார். பவானி சங்கரத்தேவ சேதுபதி நிறைவேற்றாதது”
தஞ்சை மன்னனுக்குப் பெரும் வெறுப்பை ஏற்படுத்தி இருந்தது. தட்டையத் தேவரிடமும், சசிவர்ணத் தேவரிடமும் சரியான முறையில் ஒப்பந்தங்களை எழுதி வாங்கிக் கொண்ட தஞ்சாவூர் படை பவானி சங்கரத்தேவ சேதுபதியின் படைகளை ஓரியூரில் எதிர்கொண்டது.
தோல்வி அடைந்த பவானி சங்கரத்தேவர் சேதுபதி சிறையில் அடைக்கப்பட்டார். ஒப்பந்தப்படி தஞ்சை மன்னர் பாம்பாற்றின் வடக்கே பரவிக் கிடந்த பெரும் நிலப் பகுதிகளைத் தஞ்சை தரணியுடன் சேர்த்துக் கொண்டார். தான் எடுத்துக் கொண்ட பாம்பாற்றின் வடபகுதி போக எஞ்சியவற்றை ஐந்து பகுதிகளாகப் பிரித்தார் தஞ்சை மன்னர். ஐந்து பகுதிகளில் மூன்று பகுதிகளை தட்டையத் தேவர் எடுத்துக் கொண்டார். இவர்தான் குமாரமுத்து விஜயரகுநாதர் ஆவார். மீதி இருந்த இரண்டு பகுதிகளை சசிவர்ணத்தேவர் எடுத்துக் கொண்டார். இவருக்கு நாலுக்கோட்டை உடையத்தேவர் என்ற பெயரும் உண்டு. நாலுக்கோட்டை உடையத்தேவர் ஆண்ட பகுதிதான் சிவகங்கை சீமை என்றழைக்கப்பட்டது.
சசிவர்ணத் தேவர் என்ற நாலுக்கோட்டை உடையத்தேவர் சிவகங்கை சீமைக்கு ராஜமுத்து விஜயரகுநாத பெரிய உடையத்தேவர் என்ற பெயரில் அரசரானார். சசிவர்ணத் தேவரின் தந்தையார் பெயர் கண்டுமேச்சி பெரிய உடையத்தேவர். இராமநாதபுரத்தின் சேதுபதி விஜய இரகுநாத சேதுபதியின் மகளான அகிலாண்டேஸ்வரி நாச்சியாரை மணந்து கொண்டவர் சசிவர்ணத் தேவர். தன் மனைவி வழியாக வந்த சீதனங்களுக்கு எல்லாம் சசிவர்ணத்தேவர் உரிமையாளரானார் என்பது குறிப்பிடத்தக்கது. கி.பி.1730ஆம் ஆண்டில் தான் சிவகங்கை சீமை உருவாயிற்று. இதற்கு ‘சின்ன வாடகை”
என்றும் சிறிய மறவர் நாடு என்றும் பெயர் விளங்கப் பெற்றது. தட்டையத்தேவர் என்ற குமாரமுத்து விஜயரகுநாதர் ஆண்ட இராமநாதபுரம் பகுதிக்குப் ‘பெரிய வாடகை” என்றும் பெரிய மறவர் நாடு என்றும் பெயர்கள் வழங்கப்பட்டன..
தமிழ்நாட்டிலுள்ள சாதிகளில் ஆப்பனாடு கொண்டையைங் கோட்டை மறவர் சாதியும் ஒன்று. இது முக்குலத்தோர் என அழைக்கப்படும் “கள்ளர்” “மறவர்” “அகமுடையர்” சாதிகளில் மறவர் சாதியின் உட்பிரிவுகளில் ஒன்றாகும்.
இச்சாதியில் கிளைகள் (branches) எனும் பிரிவு உள்ளது. அதாவது ஒரு கொத்து இரு கிளைகள் கொண்டது. ஊதாரணமாக தங்கமுடி(மகுடம்) என்ற கொத்துக்கு அரசங்கிளையும், சேது கிளையும்(சேது பாண்டி) உள்ளது.அது போல் ஓணான் என்ற கொத்துக்கு வெட்டுமன் கிளையும் (வெட்டுமான்), வீனியங் கிளையும் (வீரியன்) உள்ளது. ஒரு கொத்தைச் சேர்ந்த இரு கிளைகளுக்குள் திருமண உறவு இருக்காது. இந்த சாதியினரிடையே தமிழகத்தில் பெரும்பான்மையான சாதிகளில் இருக்கும் அக்காள் மகளைத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் இல்லை. தாயின் வழியைப் பிள்ளைகளுக்குக் கொண்டுள்ள சிவகளைப் பிள்ளைமார் எனப்படும்
“நன்குடி வேளாளர்”நன்குடி வேளாளர்”இல்லத்துப்பிள்ளைமார்”
இல்லத்துப்பிள்ளைமார் போன்ற சாதியினரைப் போல் இவர்களுக்கு தாயின் கிளையே மகனுக்கும் மகளுக்கும் உள்ளதால் அக்காள் மகள் சகோதர உறவாகும். அதாவது அம்மா, மாமா, ஆகியோர் சகோதரப் பிரிவினராகவும், தந்தை, அத்தை போன்றோர் சம்பந்தப் பிரிவினராகவும் இருக்கும்.
இந்த சாதிப் பெண்கள் காது வளர்த்து (தமிழ் பண்பாட்டுக்கு உட்பட்ட நடப்பு நிகழ்வுகள்) பாப்படம் (தண்டட்டி) அணியும் வழக்கம் உடையவர்கள். இந்த தகவல்கள்
“இராமநாதபுரம் மாவட்டம்” இராமநாதபுரம் மாவட்டம்”முதுகுளத்தூர்”கமுதி வட்டங்களிலும், “திருநெல்வேலி மாவட்டம்”திருநெல்வேலி மாவட்டம்”சங்கரன்கோவில்”சங்கரன்கோவில்”
வாசுதேவநல்லூர்” வட்டங்களிலும், “தூத்துக்குடி மாவட்டம்” மற்றும் விருதுநகர் மாவட்டத்திலும் தற்போதும் நடைமுறையில் உள்ளது.

ஜல்லிக்கட்டு
ஜல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக்
குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும்
வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது.
ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக் கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’
என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. பண்டைக்காலத்தில் ஐந்திணை நிலங்களுள் ஒன்றாகிய முல்லை நிலத்தின் ஆயர் மக்களிடம் இவ்வேறு தழுவுதல் (மலைபடுகடாம் 330-335, முதல் ஏழு முல்லைக்கலிப் பாடல்களில் ஆறாம் பாடலைத் தவிர மற்ற பாடல்கள்) இடம் பெற்றது. ஏறு தழுவலுக்கும், குரவைக் கூத்திற்கும் தொடர்பிருந்தது (சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை: 17-18).
குரவைக் கூத்து ஏறு தழுவலுக்குரிய நாளுக்கு முதல் நாள் மாலையிலாவது,
ஏறு தழுவும் நாளின் மாலையிலாவது ஊர் பொதுமன்றே நிகழும். முதல் நாளாயின் தம் காதலரை ஏறு தழுவுவதற்குத் துண்டும் பாட்டுகளையும், ஏறுதழுவிய நாளாயின் தம் காதலர் வெற்றியைக் கொண்டாடும் பாட்டுகளையும் மகளிர் பாடுவர். ஏறுதழுவுதல் மண வினையுடன் தொடர்புடையதாய் அமைந்திருந்தது. காளையை அடக்கிய மணமாகா இளைஞர்
பெண்ணினைப் பரிசாகப் பெறுவதுண்டு. இன்று ஏறு தழுவுதல் என்ற பெயர் வழக்கில்
இல்லை. இருப்பினும் ஏறுதழுவலின் எச்சமாக இன்றைய ஜல்லிக்கட்டு விளங்குகிறது.
ஏறு தழுவதற்கும் ஜல்லிக்கட்டுக்கும் சில வேறுபாடுகளே உள்ளன. முல்லை நிலத்து
மக்களாகிய ஆயரிடம் மட்டுமே ஏறுதழுவுதல் இடம் பெற்றது. தற்போது ஜல்லிக்கட்டில் ஆயர் மட்டுமின்றி பல திறத்தவரும் பங்கேற்கிறார்கள். ஏறு தழுவுதலில் உள்ளது போன்றே ஜல்லிக்கட்டு கள்ளர், மறவரிடையே பெண் கொடுப்பதற்கான தேர்வு களனாக உள்ளது. இருப்பினும் ஜல்லிக்கட்டில் வென்றவர் பண முடிப்பினைப் பரிசாகப் பெறுதல் பெரும்பான்மையாக உள்ளது. ஜல்லிக்கட்டு தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் நாளன்று விழாப் போல் கொண்டாடப்படுகிறது. ஏறு தழுவுதல் விழா தெய்வ நம்பிக்கையுடன் தொடர்புடையதாக இருக்கவில்லை. ஆனால் ஜல்லிக்கட்டு கிராமிய
தேவதைகளின் வழிப்பாட்டு நம்பிக்கையுடன் தொடர்புடையதாகத் திகழ்கிறது. அம்மை, வைசூரி போன்ற கொடிய நோய்கள் பரவிய காலத்திலும்,
மழையில்லா வறட்சி காலங்களிலும்,
பிள்ளை வரம் கேட்கும் நிலையிலும் வேண்டுதல் நடைபெறும். இக்குறைகள் நீக்கப்பட்டால் பொங்கல் நாளன்று ஜல்லிக்கட்டுகிறோம் என்பதே வேண்டுகோளாய் அமைகிறது. ஸ்பெயின், போர்ச்சுக்கல்,
மெக்ஸிகோ நாடுகளில் காளைப் போர் முக்கியமான தேசியப் பொழுதுப் போக்கு விளையாட்டாக இன்றும் நடைபெறுகிறது. காளைகளை அரங்கத்திற்குள் விரட்டி,
ஆத்திரமூட்டி சண்டையிட்டுக் கொல்வதே இக்காளைப் போரின் நோக்கம். இம்மேனாட்டுக் காளைப் போரும் ஜல்லிக்கட்டும் ஒன்று போலத் தோன்றினாலும், இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை ஆகும்.
thanks : http://thaainilam.com/yarl/?p=994
.. கச்சத் தீவு மறவர்களுக்கு உரிமையானது – அடுக்கடுக்கான ஆதாரங்கள்
‘கச்சத்தீவு’ – தமிழ்நாட்டுக்கே உரிமையானது என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகளை முன்வைத்து, கல்வெட்டு –
தொல்லியல் துறை ஆய்வாளரும் பேராசிரியருமான புலவர் செ. இராசு, ‘நமது கச்சத் தீவு’ என்ற நூலை எழுதியுள்ளார். அதிலிருந்து
முக்கிய பகுதி:
சேதுபதி அரச மரபினருக்கு அளிக்கப்பட்ட நிலப்பகுதி யில் கச்சத் தீவும் அடங்கியிருந்தது. குத்துக்கால் தீவு,
இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு, குருசடித் தீவு, நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய தீவுகளும், 69 கடற்கரைக் கிராமங்களும் சேதுபதி அரசர்க்கு உரிமையாக்கப்பட் டிருந்தன.
தளவாய் சேதுபதி காத்த தேவர் என்ற கூத்தன் சேதுபதி (1622-1635) காலத்துச் செப்பேடு ஒன்றில் தலைமன்னார் வரை சேதுபதி அதிகாரத்திற்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
சேதுபதிக்குரியது இராமேசுவரம் இராமநாதசுவாமி மலைவளர் காதலி அம்மை ஆலயம். அந்த ஆலயத்திற்குரிய நந்தவனம் கச்சத் தீவில் இருந்தது. அங்கிருந்து கோயில் பூசைக்கு மலர்கள் கொண்டு வரப்பட்டன. இராமேசுவரம் கோயிலுக்குக் கொடையாகக் கொடுக்கப்பட்ட கால்நடைகள் கச்சத் தீவில் மேய்ச்சலுக்கு விடப்பட்டன. அங்கிருந்து அபிசேகத்திற்குப் பாலும், தேவையான பஞ்சகவ்யங்களும் வந்தன. இவை பற்றி இலங்கை தினகரன் ஏட்டில் 1.5.1975 அன்ற விரிவான கட்டுரை வெளி வந்தது.
தாயுமானவர், இலங்கையின் வடபகுதியிலிருந்து தமிழகம் நோக்கி வந்த டச்சுக்காரர்களைச் சேதுபதிக்கு ஆதரவாகப் படை நடத்திச் சென்று,
கச்சத்தீவுக்கு அப்பால் விரட்டியடித்துக் கச்சத்தீவைச் சேதுபதிக்கு உரித்தாக்கினார் என்பர்.
1803 முதல் சென்னை மாகாணத்தில் ஜமீன்தாரி முறை கொண்டு வரப்பட்டது.
1795 ஆம் ஆண்டு முத்துராமலிங்க சேதுபதி மன்னர் பல்லாண்டுகள் சிறையில் இருந்து மறைந்தபின் சேதுபதி அரச கட்டிலில் எவரும் ஆட்சி புரியவில்லை. இருப்பினும் முத்துத் திருவாயி நாச்சியார் மகளும் 1795 இல் மரணம் அடைந்த முத்துராமலிங்க சேதுபதியின் தமக்கையுமாகிய இராணி மங்களேசுவரி நாச்சியாரை, இந்தியாவில் நிர்வாகம் நடத்தி வந்த பிரிட்டிஷ் கம்பெனியார் ஜமீன்தாரிணியாக்கினர். அவர் 1803 இல் பட்டம் ஏற்று 1812 வரை நிர்வாகத்தில் இருததார்.
ஜமீன்தாரிணிக்கு “இஸ்திமிரார் சன்னது”
என்ற ஜமீன் உரிமைப் பட்டயம் கொடுக்கப்பட்டது. அந்தப் பட்டயத்தில் சேதுபதி ஜமீனுக்கு உரியதாகக் கச்சத்தீவு தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிழக்கிந்தியக் கம்பெனியார் 1822 ஆம் ஆண்டு சேதுபதி ஜமீன்தாரிடமிருந்து கச்சத் தீவைக் குத்தகைக்குப் பெற்றனர். அப்போது நீதிமன்ற அதிகாரத்தின் கீழ் நிர்வாகம் நடைபெற்றாலும் தீவுகள் ஜமீன் வசமே இருந்தன.
ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் வருமானம் பெரிய அளவில் பெருகியதாலும், கம்பெனி இயக்குநர்கள் மீது பல புகார்கள் கூறப்பட்டதாலும்,
இந்திய ஆட்சியைக் கம்பெனியார் வசமிருந்து இங்கிலாந்து அரசு மேற் கொண்டது. 1.9.1858 இல் கம்பெனிக் கொடியை இறக்கி யூனியன் ஜாக்கொடியை ஏற்றி இந்திய நாட்டைக் கம்பெனி யார் இங்கிலாந்து அரசிடம் ஒப்படைத்தனர். விக்டோரியா மகாராணியார் தன் பிரகடனத்தில் இராமநாதபுரம் ஜமீனுக்கு உரியதாகக் கச்சத்தீவைக் குறிப்பிட்டிருந்தார். இதைப் பின்னாளில் இலங்கை அமைச்சரவைச் செயலாளர் பி.பி.பியரீஸ் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
“நான் 1936-40 ஆம் ஆண்டுகளில் நில அளவைத் துறையில் உதவி வரைவாளராக இருந்தேன். இலங்கை வடக்கு மாவட்ட எல்லைகள் பற்றிப் பரிசீலனை செய்தேன். பழைய ஆவணங்கள், வரலாற்றுச் சான்றுகளைப் பார்வை யிட்டேன். விக்டோரியா மகாராணியாரின் பிரகடனத்தில் கச்சத் தீவு சேதுபதி மன்னர்கட்கு உரியதாகக் கண்டிருந்தது. அவ்வாறே கச்சத்தீவை நீக்கி வடக்கு மாவட்டப் படம் வரைந்தேன்”.
என்பது இலங்கை அமைச்சரவை அரசுச் செயலாளர் கூறிய சொற்களாகும். இவை கூறப்பட்டது 8.5.1966 அன்று ஆகும். இச் செய்தி இலங்கை “டெய்லி மிர்ரர்”
நாளிதழிலும், இந்தியாவில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிலும் வெளிவந்தது.
ஜமீன் நில உரிமைச் சட்டப்படி இருபதுக்கும் மேற்பட்ட தீவுகள் கரையோரக் கிராமங்களுடன் இணைக்கப்பட்டன. பெருவாரியான காலங்களில் கச்சத் தீவு,
இராமேசுவரத் துடனும், சில சமயம் தனுஷ்கோடியுடனும் இணைக்கப்பட்டது.
இராமேசுவரம் நகரியத்தின் ஒரு பகுதியாகவும், இராமேசுவரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதியாகவும் கச்சத் தீவு இருந்தது. ஒரு சமயம் இராமேசுவரம் நகரியக் குழுவினர் கச்சத் தீவில் காடு வளர்க்கும் திட்டம் ஒன்றை மேற்கொள்ளத் தீர்மானித்தனர். பின் இத்திட்டம் கைவிடப்பட்டது.
23.06.1880 ஆம் வருடம் இராமநாதபுரம் ஜமீன்தாரியைச் சேர்ந்த எட்டு கடற்கரைக் கிராமங்களையும், கச்சத் தீவு, மண்ணாளித் தீவு, முயல் தீவு, குத்துக்கால் தீவு ஆகிய நான்கு தீவுகளையும் இராமநாதபுரம்,
மதுரை மாவட்டச் சிறப்பு ஆட்சியர் எட்வர்டு டர்னர் அவர்களிடமிருந்து, கீழக் கரை சாயபு மாப்பிள்ளை மரக்காயர் மகன் ஜனாப் முகம்மது அப்துல் காதர் மரக்காயர் அவர்களும், இராமசாமிப் பிள்ளை மகன் முத்துசாமிப் பிள்ளையும் கூட்டாக வருடம் ஒன்றுக்கு எழுநூறு ரூபாய் குத்தகைக்கு எடுத்தனர். அதற்குரிய பத்திரம் இராமநாதபுரம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் 2.7.1880 அன்று பதிவு செய்யப்பட்டது. சேதுபதி ஜமீன்தாரிட மிருந்து குத்தகைக்குப் பெற்ற கிராமங்களையும், தீவுகளை யுமே மாவட்ட ஆட்சியர் இவ்வாறு குத்தகைக்கு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இடங்கள், “இராமநாதபுரம் ஜமீன்தாரியைச் சேர்ந்தது” என்று தெளிவாகப் பத்திரத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
4.12.1885 அன்று சேதுபதியவர்களின் எஸ்டேட் மேலாளர் டி. ராஜாராமராயரிடமிருந்து முத்துசாமிப் பிள்ளை என்பவர் சாயவேர் சேகரிக்கக் கச்சத்தீவை ஆண்டுக்குப் பதினைந்து ரூபாய்க்குக் குத்தகைக்கு எடுத்தார்.
முத்துராமலிங்க சேதுபதி 1767 ஆம் ஆண்டு முத்துக் குளிக்கும் சில கடற்கரைக் கிராமங்களையும், தீவுகளையும் பெற்றிருந்தபோது, மன்னாரிலிருந்து பாம்பனுக்கு டச்சுக் காரர்களை வர அனுமதியளித்தார். டச்சுக் கப்பல் வரும் இடங்களில் ஒன்றாகக் கச்சத் தீவு குறிக்கப்பட்டிருந்தது. டச்சுக்காரர் அனுமதியைப் பெற்றிருந்தாலும்,
ஜமீனைச் சேர்ந்தவர்கள் எவர் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமென்றாலும் கச்சத் தீவுக்குச் செல்லலாம். டச்சுக்காரர்கள் தடுக்கக் கூடாது என்ற விதி ஒப்பந்தத்தில் எழுதப்பட்டிருந்தது. இதன் மூலம் சேதுபதி ஜமீன்தாரின் கச்சத் தீவு பரம்பரை உரிமை நிலைநாட்டப்பட்டது.
இராமநாதபுரம் சேதுபதி அவர்களின் ஆட்சிச் செயலர் 20.4.1950 இல் எஸ்டேட் மேலாளருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் கச்சத்தீவு பற்றியும், 1929-1945 ஆம் ஆண்டுகளில் சென்னை மாகாண அரசின் மீன்பிடித் துறை, அதனைக் குத்தகைக்கு எடுத்து அனுபவித்தது பற்றியும், மீன் பிடிப்பவர்கட்கும், சங்குகள் சேகரிப்பவர்கட்கும் அவைகளைக் குத்தகைக்கு விடப்பட்டது பற்றியும் எழுதியுள்ளார்.
இலங்கை நெல்லிமலைத் தோட்டத்திலுள்ள சோலை மலை ஆசாரி என்பவர் தாம் எழுதிய கடிதம் ஒன்றில் ஒரு முக்கியமான செய்தியைக் குறிப்பிட்டுள்ளார். இராமநாதபுரம் ஜமீன்தாரர் பாஸ்கர சேதுபதியவர்களும், சுவாமி விவேகானந்தரும் ஒருங்கு வீற்றிருக்கும் அரிய காட்சியைக் கண்ட சுந்தரப் புலவர் என்பவர் சில பாடல்கள் பாடியதாகவும்,
அதைக் கேட்டு மகிழ்ந்த பாஸ்கர சேதுபதியவர்கள் கச்சத் தீவின் ஒரு பகுதியை அனுபவிக்கச் சுந்தரப் புலவருக்கு உரிமை கொடுத்ததாகவும் சோலைமலை ஆசாரி எழுதி யுள்ளார். விவேகானந்தர் பாஸ்கர சேதுபதியவர்களுடன் இருந்த நாள் 27.1.1897
ஆகும்.
சென்னை மாகாணத்தில் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சராக இருந்த டாக்டர் எஸ். சுப்பராயன் ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்து நிறைவேறச் செய்தார். அதன்பின் சென்னை மாகாண அரசின் ஆவணங்களில் “இராமநாதபுரம் மாவட்டம்,
இராமநாதபுரம் வட்டம், இராமேசுவரம் கிராமப்புல எண்.1250, 285 ஏக்கர் 20 சென்ட் கச்சத்தீவு அரசுப் புறம்போக்கு” என்ற குறிக்கப்பட்டது.
1921 ஆம் ஆண்டு கொழும்பு நகரில் நடைபெற்ற குழுக் கூட்டம் ஒன்றிய சென்னை மாகாண ஆங்கிலேய அதிகாரி ஏ.ஜி.லீச் என்பவர் கச்சத் தீவு பற்றிய சேதுபதி மன்னர்களின் உரிமை ஆவணங்கள் பற்றி மிக விரிவாக எடுத்துரைத்தார்.
“கச்சத் தீவின் உரிமை பற்றி இப்போது பேசவில்லை. எல்லை மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது. பிற்காலத்தில் ஆவணப்படி இந்திய அரசோ அல்லது சென்னை மாகாண அரசோ கச்சத்தீவிற்கு உரிமை கொண்டாடுவதை இந்த ஒப்பந்தம் தடுக்காது” என்று இலங்கைக் குழுவின் தலைவர் கூறினார். இது ஒப்பந்தத்தில் எழுதப்பட்டுள்ளது.
சென்னை நிலத் தீர்வை உதவி அலுவலர் எஸ்.ஏ.விசுவ நாதன், 11.11.1958 இல் வெளியிட்ட இராமேசுவர நிலப் பதிவேடு எண்.68 இல் கச்சத் தீவு இராமேசுவரம் கிராமத்தைச் சேர்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
1.7.1913 இல் சென்னை மாகாண அரசுச் செயலர், சேதுபதி மன்னரிடமிருந்து சில தீவுகளைப் பதினைந்து ஆண்டுகட்குக் குத்தகைக்கு எடுத்தார். சேதுபதியரசர்க்குச் செலுத்தப்பட்ட தொகை ரூபாய் ஐம்பதாயிரம். அதில்
“ஜமீன்தாரிக்குச் சொந்தமான இராமேசுவரத்தின் வட கிழக்கில் உள்ள கச்சத்தீவு” என்று குறிக்கப்பட்டுள்ளது.
1957 ஆம் வருடம் வெளியிடப்பட்டு, 1.1.1966
இல் திருந்திய இரண்டாம் பதிப்பாக வெளிவந்த ஆவணப் பதிவு நூலில் 107 ஆம் பக்கம் தனுஷ்கோடிக்குச் சேர்ந்த குடியில்லாத சிறு கிராமமாக (ழயஅடநவ) கச்சத் தீவு குறிக்கப்பட்டுள்ளது.
1913 முதல் 1928 வரை சென்னை மாகாண அரசின் மீன்வளத் துறை குத்தகைக்கு விட்ட இடங்களில் கச்சத் தீவும் ஒன்று. சேதுபதியரசரிடமிருந்து சென்னை மாகாண அரசு அதிகாரிகள் கச்சத்தீவைக் குத்தகைக்குப் பெற்று மீனவர் கட்குக் குத்தகைக்கு விட்டதுடன்,
சேதுபதியரசர்களின் அதிகாரிகளும் நேரடியாகக் குத்தகைக்கு விட்டுள்ளனர். அனைத்திலும் கச்சத்தீவு இடம் பெற்றுள்ளது.
தொண்டி, நம்புதாழையைச் சேர்ந்த மீனவர் பலர் அவ்வாறு குத்தகைக்குப் பெற்றுள்ளனர். 19.2.1923 இல் இராமநாதபுரம் திவான் ஆர். சுப்பைய நாயுடு, அரசர் ஆர். ராஜேஸ்வர சேதுபதிக்கு ஜமீன் கடல் எல்லைப் பற்றி எழுதிய கடிதத்தில் கச்சத்தீவு பற்றிய விவரங்கள் அடங்கியுள்ளன. இதைப் பரிசீலித்து சேதுபதியவர்கள் 27.2.1922 இல் கையொப்ப மிட்டுள்ளார்கள்.
கச்சத்தீவு பற்றிப் பல இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள் அனைத்திலும் கச்சத்தீவு சேதுபதி அரசர்க்கு உரியதென்றும்,
இராமேசுவரம் கிராமத்தைச் சேர்ந்தது என்றும் தவறாமல் குறிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு தமிழக மண்.
இந்திய அளவைத் துறையினர் 1874 ஆம் ஆண்டுஇந்திய நில அளவைத் துறை உயர் அலுவலர் கர்னல் வாக்கர் அவர்களும், அவர் உதவியாளர் மேஜர் பிரான்ஃபீல்டு அவர்களும் இந்தியாவின் நில அளவைத் துறைக்காகச் சென்னை மாகாணத்தில் அளவை மேற்கொள்ளும்போது கச்சத் தீவையும் அளந்தனர். கச்சத்தீவுக்குக் கச்சத் தீவு தெற்கு, கச்சத் தீவு வடக்கு என்று பெயரிட்டனர்.
கச்சத்தீவு 285 ஏக்கர் 20 சென்ட் என்று அளந்து கூறினர். கச்சத்தீவுக்கு சர்வே எண்.1250
என்றும் குறித்தனர். அதை ஒரு கல்லிலும் பொறித்துக் கச்சத்தீவில் நட்டனர்.
அந்தோணியார் கோயில் முன்பும் அக்கல் நடப்பட்டது. அக்கல் இன்னும் உள்ளது.
இந்திய நில அளவைத் துறையினர் 1895, 1930 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் கச்சத்தீவு வந்தனர். அவர்கள் வரைந்த வரைபடங்களின் அடிப்படையில் 1952, 1956 ஆம் ஆண்டு வெளியீடுகளில் வெளியிட்ட அதில் கச்சத் தீவையும் குறித்தனர். இராமேசுவரத்தின் ஒரு பகுதி கச்சத் தீவு என்றும் குறிப்பிட்டனர்.
1874 முதல் 1956 வரை நில அளவை ஆவணங்களில் கச்சத்தீவு இந்தியப் பகுதியாகவே காட்டப்பட்டுள்ளது.
கச்சத்தீவு சேதுபதியின் சீமை; தமிழகப் பகுதி; இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கம் என்றும் இவ்வளவு ஆவணங்கள் இருந்தும், கச்சத் தீவுக்குரிய ஆதாரங்களை ஆவணக் காப்பகங்கள் (இந்தியா, தமிழ்நாடு) பம்பாய் ஆகிய இடங்களில் தேடியதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் வெளிப்படையாகக் கூறுகிறார்.
பிரதமர் இந்திரா அம்மையாரோ கச்சத் தீவு ஆவணங்கள் அடிப்படையில் இலங்கைக்கு அளிக்கப்பட வில்லை. வேறு அரசியல் காரணங்களுக்காகக் கொடுக்கப் பட்டது என்று கூறுகிறார்.
இந்திய வழக்கு மன்றமும் கச்சத் தீவும்
கீழக்கரை வாசுதேவன் செட்டியார் என்பவர் கச்சத் தீவிற்குச் சில பொருட்களைக் கொண்டு சென்றார். இந்திய அரசின் சுங்க இலாகாவினர் அவரைத் தடுத்தனர். பொருள்களைப் பறித்தனர். வழக்கு உச்சநீதிமன்றம் வரைச் சென்றது. விசாரணை செய்த நீதிபதிகள், “கச்சத் தீவு இந்தியாவின் ஒரு பகுதியே. அங்கு
சென்று வாணிகம் செய்ய ஒவ்வொரு இந்தியருக்கும் உரிமையுண்டு. இந்தியர் யார் வேண்டுமானாலும் அங்கு போகலாம்” என்று தீர்ப்பளித்தனர்.
ஒரு முறை கச்சத் தீவுப் பகுதியில் ஒருவர் முத்துக்குளித்து எடுத்து வைத்திருந்த சங்குகளை வேறொருவர் திருடிவிட்டார். சென்னை உயர்நீதிமன்றம் அவ்வழக்கை ஏற்று விசாரித்துத் தீர்ப்பளித்தது. இதனால் கச்சத் தீவுப் பகுதியில் சென்னை உயர்நீதிமன்றம்,
உச்சநீதிமன்றம் ஆகியவைகளின் அதிகாரம்
அமுல்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இந்திய அரசின் முன்னாள் வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) நிரேன்டே “அன்றும் சரி,
இன்றும் சரி, கச்சத் தீவு இந்தியாவின் ஒரு பகுதியே” என்று கூறினார்.
மற்றொரு தீர்ப்பில் இராமநாதபுரம் துணை ஆட்சியர் இலங்கையின் தலைமன்னாருக்கு
5 கிலோ மீட்டர் மேற்கு வரை தன் அதிகாரத்தைச் செலுத்தியுள்ளார். பாம்பன் வந்த அரபுப் பயணிகளைக் குள்ளக்காரன் பெட்டியிலேயே இறக்கிவிட்ட இலங்கைப் படகோட்டிகள் மீது தொடரப்பட்ட வழக்கில் இலங்கைப் படகோட்டிகட்கு அபராதம் விதித்து மேற்கண்ட தீர்ப்பு வழங்கப்பட்டது.
அரசு அதிகாரிகளின் அலட்சியம்
அ) 1972 ஆம் ஆண்டு சூலை மாதம் 15 ஆம் தேதி தமிழக அரசு ஆவணக் காப்பகத்தின் மூலம் இராமநாதபுரம் மாவட்ட அரசு இதழின் திருத்திய புதுப்பதிப்பு வெளியிடப்பட்டது. அந்நூலின் தொடக்கத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தின் வரைபடம் அச்சாகியுள்ளது. அந்த வரைபடத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தின் பகுதியாகக் கச்சத்தீவு காட்டப்படவில்லை. அன்றைய தேதியில் இந்தியப் பகுதியான கச்சத்தீவை விட்டுவிட்டு எப்படி வரைபடம் வரைந்தார்களோ தெரியவில்லை. முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் முன்னுரையையும் பெற்றுள்ளனர்.
ஆ) பத்தாண்டுகட்கு ஒரு முறை எடுக்கப்படும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மக்கள் குடியில்லாத ஊர்ப் பகுதிகள் கூடத் தவறாமல் குறிக்கப்படுவது வழக்கம். ஆனால் 1951, 1961, 1971 ஆண்டுகளில் ஆள் அற்ற பல இடங்களும் தீவுகளும் குறிக்கப்பட்டிருக்கக் கச்சத்தீவு விடுபட்டுள்ளது. இது தவறான செயல் ஆகும்.
இ) சென்னை மத்திய நில அளவை அலுவலகத்தின் எச்.2, 38482/81, நாள் 29.9.1981
மற்றும் சென்னை நில அளவைப் பதிவாளர் அவர்களது எச்.2, 38495/91 நாள் 11.9.1981
குறிப்பின்படி கச்சத்தீவை இராமநாதபுர மாவட்ட வரைபடத்திலிருந்து நீக்குவதற்கு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் இராமேசுவரம் கிராமப் புல எண்.1250
சர்க்கார் புறம்போக்கு கச்சத் தீவு ஆர்.சி.எப்.23, 75/83பி ஏ.சி. நாள் 6.2.1982
குறிப்பாணையின்படி உத்தரவிட்டார்.
இராமநாதபுரம் வட்டாட்சியரும் 118/82 நாள்
19.2.1982 மூலம் இராமநாதபுரம் மாவட்ட வரைபடத்திலிருந்து கச்சத் தீவை நீக்க டேராடூனிலிருக்கும் இந்திய வரைபட அலுவலகத் திற்குக் கடிதம் எழுதினார். அதன்படி இராமநாதபுரம் மாவட்ட வரைபடத்திலிருந்து கச்சத்தீவு நீக்கப்பட்டது.
இந்திய அரசின் இமாலயத் தவறு
சேதுபதி சீமை என்று இவ்வளவு ஆவணங்கள் இருக்க, இலங்கை அரசு கச்சத் தீவுக்கு ஏன் உரிமை கொண்டாடியது?
அது இந்திய அரசின் மெத்தனத்தினால்தான்.
1955, 1956 ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசு கச்சத் தீவில் போர்ப் பயிற்சி செய்தது. பயிற்சியைக் கண்டிக்காத மத்திய அரசு
“தூதர்கள் பேசும்வரை பயிற்சியை ஒத்திப் போடுக” என்றது.
தொடர்ந்து பலமுறை கச்சத் தீவு தன்னுடையது என்று இலங்கை அரசு கூறியது. இந்திய அரசு ஒரு போதும் வன்மையாகக் கண்டிக்கவில்லை.
1971 முதல் 1974 ஆம் ஆண்டு வரை அந்தோணியார் விழாவின் போது இலங்கை முப்படைகளம் அங்கு முகாமிட்டன. இராணுவ ஹெலிகாப்டர் கச்சத் தீவில் வட்டமிட்டுக் கொண்டேயிருந்தது. போர்க் கப்பல் கஜபாகு கச்சத் தீவில் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்தியா கடுமையான எதிர் நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை; தன் படையையோ அதிகாரிகளையோ அனுப்பி உரிமையை நிலைநாட்டவில்லை. தன் நாட்டுத் தீவு என்ற அக்கறையே இல்லாமல் இருந்தது. பாகிஸ்தான், சீனப் போரில் பல்லாயிரக்கணக்கான சதுர மைல் பூமிகளை அந்நாட்டிடம் இழந்து இன்னும் அதை மீட்க வக்கற்ற இந்திய அரசு – மேற்கு வங்கத்தின் பெருவாரியை வங்க நாட்டுக்கும், அந்தமான் நிக்போபர் அருகில் உள்ள கொக்கோ தீவை பர்மாவிற்கும் தானம் செய்த இந்திய அரசு அதுபோல் கச்சத் தீவைத் தாமாகவே இலங்கைக்குக் கொடுக்க முடிவு செய்து விட்டது. வினோபா பாவேயின் “பூமிதானம்” என எண்ணிவிட்டனர்.
இந்திய அரசு கச்சத் தீவைக்
“கண்டுகொள்ளாததால்” இலங்கை எளிதாக ஆக்கிரமிப்புச் செய்தது. இந்திய மண்ணில் அடிக்கடி கால் வைத்தது.
“ஒரு நாட்டின் ஒரு பகுதியை மற்றொரு நாடு தன்னுடைய பகுதி என்று அறிவித்தால், அதனை உரிய நாடு வலிமையாக எதிர்க்காமல் அமைதியாக இருந்தால், அது ஆக்கிரமித்த நாட்டின் உரிமையை வாய்ச் சொல்லில் சொல்லாமல் ஒப்புக் கொண்டது என்றே பொருள்” –
என்பதுதான் சர்வதேசச் சட்டமாகும்.
இலங்கை முப்படையினர் கச்சத் தீவில் முகாம் இட்டும் இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டதால் கச்சத் தீவு இலங்கைக்கு உரியது என்று ஒப்புக் கொண்டது என்பதே பொருளாகும். இது இந்திய அரசின் மாபெரும் தவறாகும். தமிழகம் அவற்றைக் கண்டு மவுனம் காத்தது அதைவிடப் பெரிய தவறு.
Posted 23rd January 2013 by kumar pandian
23
JAN மறவர் நாடு
ஆப்பனாடு கொண்டையைங் கோட்டை மறவர்
உறவுமுறைகள்
பண்பாடு
0 Add a comment
பாண்டியர்கள்
பாண்டியர்கள் பழந்தமிழ்நாட்டை ஆண்ட
மூவேந்தர்களுள் ஒருவராவர். மற்ற இரு
மூவேந்தர்கள் சேரர்களும் சோழர்களும்
ஆவர். பாண்டியர்கள் மதுரை,
திருநெல்வேலி, மற்றும் தற்போதைய
கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை
ஆட்சி செய்தனர்.
பாண்டிய நாடு :
இந்து சமுத்திரத்தில் மூழ்கிவிட்டதெனக்
கருதப்படும் குமரிக்கண்டத்தில் 72
நாடுகளும் தலைநகராக தென்மதுரையும்
விளங்கியது. பாண்டிய மன்னர்களின்
தலைநகராக விளங்கிய இத்தென்மதுரை
கடற்கோளினால்
அழிவுற்றது.இக்கடற்கோளில் அழியாது
இருந்து எஞ்சிய நாடுகளின் தலைநகராக
கபாடபுரம் விளங்கியது.இரண்டாம்
கடற்கோளால் அந்நாடும்
அழிவுற்றது.இவ்வழிவின் பின்னர்
தற்போதுள்ள மதுரை பாண்டியர்களின்
தலைநகராயிற்று. பாண்டிய மன்னர்களால்
தமிழ்ச் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டது.
பாண்டியரின் தோற்றம் :
சேர,சோழர்கள் போன்ற பேரரசுக்களைக்
காட்டிலும் மூத்த குடியினர் பாண்டியரே
ஆவர்.இவர்களின் தோற்றம் கூற முடியாத
அளவிற்குத் தொன்மை வாய்ந்ததாகக்
கருதப்படுகின்றது.குமரிக் கண்டத்தில்
தோன்றிய ஆதி மனித சந்ததியினரே
பாண்டியராக உருப்பெற்றிருக்கலாம்
என்பது பொதுவாக நிலவும்
கருத்து.பாண்டியர்களின் தோற்றத்திற்குச்
சான்றாக கி.மு 7000 ஆண்டளவில்
உருப்பெற்றதனக் கருதப்படும்
தொல்காப்பியத்தில் கூறியபடி
"முன்னீர் விழவின் நெடியோன்
நன்னீர் மணலினும் பலவே" —(புறம் - 9)
அதாவது குமரிநாடானது முதற்
கடற்கோளால் அழிவுற்ற வேளை "அங்கு
பஃறுளி ஆற்றை வெட்டுவித்துக் கடல்
தெய்வங்களிற்கு விழா எடுத்தவர்
பாண்டியர்" என விளக்குகின்றது இப்பாடல்
வரிகள்.மேலும் இச்செய்தியைக் கூறும்
தொல்காப்பியம் பாண்டிய மன்னர்களால்
தலைச்சங்கத்தில் அரங்கேற்றப்பட்டது எனவும்
கடைச்சங்கத்தில் அரங்கேற்றப்பட்டது எனவும்
பொதுவான கருத்து நிலவுகின்றது.
பாண்டியர்கள் மீன் கொடியினைகொண்டு
ஆண்டதால் மீனவர் என்றும்,பின்னாட்களில்
பரத கண்டம் என்று
அழைக்கப்பட்டதாலும்,பாண்டியர் கடல் சார்ந்த
ஆளுகை கொண்டிருந்ததாலும் பரதவர்
எனும் இனத்தவராக இருக்கக்கூடும் என்றும்
சொல்லப்படுகிறது.
பாண்டியரைப் பற்றிய பதிவுகள் :
இராமாயணத்தில் :
பாண்டிய மன்னர்களின் தலைநகர்
பொன்முத்துக்களால்
அலங்கரிக்கப்பட்டிருந்தது.முத்து,பொன்
அலங்கரித்த கோட்டை வாயில் இருந்தது
இவ்வாறு இராமாயணத்தில் உள்ளது.
மகாபாரதத்தில் :
திருச்செங்குன்றில் பாண்டவர் படுக்கை
உண்டு.திருப்பாண்டி கொடுமுடிதான்
விராடநாடு.பாண்டவர் கொடுமுடியின்
புறநகரில் வன்னி மரத்தில்தான்
ஆடைகளையும் ஆயுதங்களையும்
மறைத்து வைத்தனர்.மேலும் அர்ச்சுனன்
பாண்டிய மன்னன் ஒருவன் மகளை
மணந்தான் எனவும் உள்ளது.
அசோகனின் கல்வெட்டுக்களில் :
மகத நாட்டு அரசர்கள் மௌரியர்கள்.மௌரிய
அரசன் அசோகன் கல்வெட்டுக்களில்
பாண்டிய நாடு பாண்டியர் பற்றிய
செய்திகள் உள்ளன.
மகாவம்சத்தில் :
இலங்கையை ஆண்ட விஜயன் தனியாட்சி
புரிந்தவன் இவன் பாண்டிய மன்னன்
ஒருவனின் மகளை மணந்தான்.அப்பாண்டிய
மன்னனுக்கு ஆண்டுதோறும் பல
பரிசுகளை அனுப்பினான் என்று
மகாவம்சம் கூறுகின்றது.
பிற நாட்டவர் பதிவுகள் :
கி.மு மூன்றாம் நூற்றாண்டு
சந்திரகுப்தன் ஆண்ட காலமான கடைச்சங்க
காலத்தின் துவக்கம் 'மெகஸ்தனீஸ்' என்ற
யவன நாட்டுத் தூதுவன் பாண்டிய
நாட்டிற்கு வந்ததாகக் கருதப்படுகின்றது
மேலும் அவனது நாட்டுக் குறிப்பில்
பாண்டிய நாடு பற்றி தகவல்கள் பல உள்ளன.
கொக்கிளிசுக்குப் 'பண்டேயா' என்ற பெண்
பிறந்தாள்.அவளுக்கு கடல்சார்ந்த
தென்னாட்டைக் கொடுத்தான்.அதில் 350
ஊர்கள் இருந்தன.நாள்தோறும் அரசிக்கு ஓர்
ஊர் மக்கள் திறை செலுத்த வேண்டும்
என்று ஆணையிட்டான்" என்ற செய்தி யவன
நாட்டுத் தூதுவனின் குறிப்பில் உள்ளது
குறிப்பிடத்தக்கது.
கி.பி. 9 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் 'பிளைனி' என்ற மேனாட்டான் தமிழகத்தைக்
காண வந்தான்.அவனது பயண நூலில்
பாண்டிய அரசி பற்றி "இந்தியாவின்
தெற்கில் 'பண்டோ' என்ற ஒரு சாதி மக்கள்
இருந்தனர்.பெண் அரசு புரியும் நிலை
உண்டு.கொக்கிளிசுக்கு ஒரு பெண்
பிறந்தாள்.அவளுக்கு அன்போடு பெரிய
நாட்டை ஆளும் உரிமை
கொடுத்தான்.முந்நூறு ஊர்கள் அவளது
ஆட்சியில் இருந்தது.பெருஞ்சேனை
வைத்திருந்தாள்.அவளது மரபினர்
தொடர்ந்து ஆண்டனர்.என குறித்துள்ளார்
பிளைனி.
சங்க காலப் பதிவுகள் :
பாண்டியர்கள் சந்திர வம்சத்தைச்
சார்ந்தவர்கள் எனவும்.வேப்பம் பூ மாலை
அணிந்தவர்கள் எனவும் மீன்கொடியினை
உடையவர்கள் எனவும் பாண்டியன்
தென்னவன்,மீனவன்,மாறன்,கடலன்
வழுதி,பரதவன் மற்றும் முத்தரையன்
போன்ற பல பெயர்களால் அழைக்கப்பட்டான்
எனவும் சங்க கால நூற்குறிப்புகள்,
கல்வெட்டுக்கள், சாசனங்கள் மற்றும்
மெய்க்கீர்த்திகளும் வரலாற்று மூலங்களாக
உள்ளன.
இமயம்வரை பாண்டியரின் ஆட்சி :
மலையத்துவசப் பாண்டியன் மகள்
மீனாட்சி,இவளது திருமணம் மதுரையில்
சிவனுடன் நடந்தது. சோமசுந்தரப்
பெருமானாக மதுரை தமிழ்ச் சங்கத்தில்
இருந்து தமிழ் வளர்த்தார் இவர்.மதுரை
மீனாட்சி பெரும்படையோடு இமயம்வரை
படையெடுத்து சென்றாள்.இவளது
வழிமுறையினரே மௌரியர்கள்.அந்த
வழியில் சித்திராங்கதன் வந்தான் என்பதும்
அவன் மகளே சித்திராங்கதை என்பதும்
குறிப்பிடத்தக்கது.
பாண்டிய நாட்டுக் குறுநில மன்னர்கள் :
மானாபரணன்,வீரகேரள பாண்டியன்,சுந்தர
பாண்டியன்,விக்கிரம
பாண்டியன்,வீரபாண்டியன் ஆகிய ஜந்து
மன்னர்களும் பாண்டிய நாட்டில் சோழராட்சி
இருந்த சமயம் சோழ மன்னன்
இராசாதிராசனால் அடக்கி வைக்கப்பட்டனர்.
மானாபரணன் மற்றும் வீரகேரளன் ஆகியோர்
இராசராசனிடம் போரிட்டுத் தோற்று
இறந்தனர். சுந்தர பாண்டியன் போரில்
தோற்று முல்லையூரில்
ஒளிந்துகொண்டான். விக்கிரம பாண்டியன்
ஈழ நாட்டிற்குத் தப்பி ஓடினான்.
வீரபாண்டியன் கி.பி. 1048 ஆம் ஆண்டளவில்
கொல்லப்பட்டான். கோலார் மிண்டிக்கல்
கல்வெட்டு மற்றும் இராசாதிராசன்
திருக்களச் செப்பேடு போன்றனவற்றில்
இத்தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.
பாண்டியர் ஆட்சி இயல் :
நாட்டியல் :
தமிழகத்தின் தென்பகுதியில் பாண்டிய
நாடு அமைந்திருந்தது.மேற்கே சேர
நாடும்,மலை நாடும்;கிழக்கே கடல்,வடக்கே
சோழ நாடும் ,கொங்கு நாடும்;தெற்கே
கடலும் குமரிமுனை இதன்
எல்லையாகவும்
இருந்தன.இன்றைய   மதுரை,திருநெல்வேலி,இராமநாதபுரம்,கன்னியாகுமரி,
புதுக்கோட்டை வெள்ளாற்றுக்குத்
தெற்குப் பகுதியில் அமையப்
பெற்றிருந்தது எனலாம்.சங்க காலத்தில்
ஊர்,கூற்றம்,மண்டலம்,நாடு என்ற பிரிவில்
அமைந்திருந்தன.
"முந்நூறூர்த்தே தண்பறம்பு நன்னாடு" —(புறம்-110)
"வல்வேல் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர்
நாட்டே" —(புறம்-242)
என்ற புறப் பாடல்கள் ஊரும்,நாடும் எனக்
கூறும். இரணியமுட்டத்துப்
பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
என்ற தொடர்மொழி அமைப்புச் சான்றாக
விளங்குகின்றது.
ஊர்கள்,கூற்றங்கள்,வளநாடுகள்,மண்டலம்
என்ற அமைப்பில் பிரிக்கப்பட்டிருந்தது.
குடும்ப இயல் :
அரசன்,அரசி,இளவரசன்,பட்டத்தரசி என்ற
முறையில் குடும்பம் அமைந்தது.பட்டத்தரசி
பாண்டிமாதேவி எனப்பட்டாள்.பட்டத்தரசியை
அன்றி பிற பெண்களையும்
மணந்திருந்தனர் சில பாண்டிய
அரசர்கள்.பெண்களும் முடிசூடி ஆட்சி
நடத்தியதோடு போரும்
செய்திருக்கின்றனர்.அரசனின் மூத்த
மகனே பட்டம் பெற முடியும்.இளவரசு பட்டம்
பெற இயலும்.மாற்றாந்தாய் மக்களுடன்
பகைமை வருதலும் உண்டு.உதாரணமாக
வீரபாண்டியன்,சுந்தர பாண்டியன்
போன்றவர்களின் வரலாறுகள் இதற்குச்
சான்றாகும்.
கொற்கை பாண்டியரது
துறைமுகம்.ஆரியப்படை கடந்த
நெடுஞ்செழியன்
ஊழ்வினையால்,கண்ணகி நீதி கேட்டதால்
இறந்தான்.அச்சமயம் இளவரசனாக
கொற்கையில் இருந்த
வெற்றுவேற்செழியன் மதுரைக்கு வந்து
முடிசூடினான்.ஜந்து பேர் ஒரே சமயத்தில்
பாண்டிய நாட்டை ஆண்ட நிலையும்
இருந்தது.ஆட்சியின் காரணமாக அண்ணன்
தம்பி,தந்தை மகன் சண்டைகள் வந்தன மேலும்
ஆட்சிக்காக தந்தையை மகன் கொன்ற
சம்பவங்களும் பாண்டியரின்
குடும்பவியலில் இருந்தன
குறிப்பிடத்தக்கது.
அரசியல் ஆட்சி இயல் :
பாண்டியரின் ஆட்சிக்கு உற்ற துணையாக
இருந்தவர்கள் அமைச்சர்கள்.அடுத்த
நிலையில் அரசியல் அதிகாரிகள்,படைத்
தலைவர்கள் இருந்தனர்.அரையர்,நாடுவகை
செய்வோர்.வரியிலார்,புரவுவரித்
திணைக்களத்தார்,திருமுகம் எழுதுவோர்
ஆகியவர்களும் அரசனுக்கு ஆட்சியில்
துணை செய்தவர்கள் ஆவார்கள்.
1-அரையர் உள்நாட்டுப் பணி புரியும்
நாட்டதிகாரிகள்
ஆவார்கள்.இவர்கள்,நாட்டைச் சிற்றி
வந்து,குடிமக்கள் குறை கேட்டு நீதி
வழங்குவர்.
2-நாடுவகை செய்வோர் ஊரில் உள்ள
நிலங்களில் அளந்து பணி செய்வர்.
3- வரியிலார் அனைத்து வகையிலும் ஊர்
மக்கள் அரசுக்கு வரி செலுத்துவதை
கணக்கு வைப்பார்கள்.
4-புரவு வரித்திணைக் களத்தார்
வட்டாட்சியர்போல் செயல்படுபவர்கள்.
அரசின் வரி :
பாண்டியர் காலத்தில் வரியை இறை
என்றழைத்தனர்.இறை பெறுதல்முறை
என்பது வழக்கத்திலிருந்துவந்தது.குடிகள்
அரசனுக்கு நிலவரி
கொடுத்தனர்.விளைநெல்,காசு,பொன்
வரியாகக் கொடுத்தனர்.ஊர்த் தலைவர்கள்
மக்களிடம் பெற்று அரசிடம்
அளித்தனர்.தளியிறை,செக்கிறை,தட்டார்ப்
பட்டம்,இடைவரி சான்று
வரி,பாடிகாவல்,மனையிறை,உல்கு
முதலான வரி முறைகள்
இருந்தன.இறை,பாட்டம் என்பன வரியினை
உணர்த்தும் சொற்களாகத் திகழ்ந்தன.தட்டார்ப்
பாட்டம் கம்மாளரின் வரியாகும்.நாடு
காவலையே பாடி காவல்
என்றழைக்கப்பெற்றது.ஊர்க்காவலிற்கு
வாங்கிய வரியே
இப்பெயர்பெற்றது.பாண்டிய அரசர்களுள்
சில அரசர்களும் ஊர்க்காவலிற்குச்
சென்றனர்.பொற்கைப்பாண்டியன் இதற்குச்
சான்றாக விளங்குகின்றான்.வீட்டு
வரியினை மனை இறை
என்றழைத்தனர்.கலத்தினும்,காலினும்
வரும் பொருள்களுக்கு வாங்கும் வரியே
சுங்க வரி எனப்படும்.உல்குவின் பொருள்
இதுவேயாகும்.
நில அளவியல் :
ஊர்தோறும் உள்ள நிலங்களை அளந்து வரி
விதிக்கப்பட்டது.பாண்டிய நாடு
முழுவதும் அளக்கப்பட்டது.நாடு வகை
செய்வோர் அளந்தனர்.நிலத்தினை அளக்கும்
கோல் 'சுந்தர பாண்டியன் கோல்' என்ற
பெயரைக் கொண்டிருந்தது. 24 அடி
கொண்ட தடியாகும்
இக்கோல்.குடிதாங்கிக் கோலும் அளவு
கோலாக புழக்கத்தில்
இருந்தது.நிலங்களை குழி,மா,வேலி
என்று பெயரிட்டு அளந்தனர்.அளந்த
நிலத்திற்கு எல்லைக் கல்
நாட்டனர்.இக்கற்களே புள்ளடிக்
கற்களாகும்.சிவன் கோயில்களிற்கு
இடப்பட்ட நிலத்திற்கு திரிசூலக்கல்
நடப்பட்டது.திருமால் கோயிலுக்கு இடப்பட்ட
நிலத்திற்கு திருவாழிக்கல் நடப்பட்டது.நீர்
நிலம் நன்செய் எனவும் மேட்டு நிலம்
புன்செய் என
அழைக்கப்பட்டது.நத்தம்,தோட்டம் என்ற
வழக்கும் புழக்கத்தில் இருந்தது.
இறையிலி :
இறைவன் கோயிலுக்கு அளிக்கப்படும்
கொடை இறையிலி என
அழைக்கப்பட்டது.சிவன் கோயிலுக்கு
அளிக்கப்பட்ட இறையிலி தேவதானம் என
அழைக்கப்பெற்று திருமால் கோயிலுக்கு
அளிக்கப்பட்ட இறையிலிக்கு
திருவிடையாட்டம் என்று
பெயர்.சைன,பௌத்த கோயில்களுக்கு
அளிக்கப்பட்ட கொடை பள்ளிச்சந்தம் என
அழைக்கப்பட்டது.அந்தணர்களுக்கு
வழங்கப்பட்டது பிரமதேயம்;பட்டவிருத்தி
எனவும்,மடங்களுக்கு வழங்கப்பட்டது
மடப்புறம் எனவும் புலவர்களுக்கு
முற்றூட்டும்,சோதிடர்களுக்கு
கணிமுற்றூட்டும் எனவும் கொடைகள்
அழைக்கப்பட்டன.
அளவை இயல் :
எண்ணல்,எடுத்தல்,முகத்தல்,நீட்டல் ஆகிய
நான்கு அளவைகள் பாண்டியர் ஆட்சியிக்
காலங்களில் புழக்கத்தில் இருந்து
வந்திருக்கின்றன.எடுத்தல் என்பது
நிறுத்தல்
ஆகும்.பொன்,வெள்ளி,கழஞ்சு,காணம்
ஆகிய நிறை கற்களால்
நிறுத்தனர்,சர்க்கரை,காய்கறிகள்,புளி
ஆகியவற்றை துலாம்,பலம் என்பவற்றால்
நிறுத்தனர்.சேர் ,மற்றும் மணங்காலும்
நிறுக்கப்பட்டன.நெல்,அரிசி,உப்பு,நெய்,பால்,தயிர்,மிளகு,சீரகம்,கடுகு ஆகியன
செவிடு,ஆழாக்கு,உழக்கு, உரி,நாழி,
குறுணி போன்ற முகக்கும் கருவிகளால்
அளக்கப்பட்டன்.
நாணய இயல் :
பாண்டிய மன்னர்களின் ஆட்சியில்
மன்னர்களின் பெயராலும்,சிறப்புப்
பெயராலும் நாணயங்கள் வெளியிடப்பட்டன.
பொன்,செம்பால் செய்யபட்ட காசுகள்
புழக்கத்தில் இருந்தன. மீன் சின்னம்
பொருத்தப் பட்டதாக வெளியிடப்பட்டது
பாண்டியர் ஆட்சிக் கால நாணயங்கள்.
சீமாறன் சீவல்லபவன் - அவனிப சேகரன்
கோளலிக என்ற பெயரில் நாணயம்
வெளியிட்டான்.இதற்குச் சான்றாக
சிற்றண்ண வாசல் கல்வெட்டு
விளங்குகின்றது.முதல் மாறவர்மன் சுந்தர
பாண்டியன் சோணாடு கொண்டான்
நாணயம் வெளியிட்டான் சீவல்லபன் "அவனிப
சேகரன் கோளகை" என்ற பெயரில்
வெளியிட்டான்.1253 ஆம் ஆண்டில்
வீரபாண்டியன் "வாளால் வழி திறந்தான்
குளிகை" என்ற பெயரில் நாணயத்தினை
வெளியிட்டான்.காசு என்பது ஒரு கழஞ்சு
எடை உடையது 10 பொன் கொண்டது ஒரு
காசு 10 காணம் - 1 கழஞ்சு ஒரு காணம் 4
குன்றி 'காசும் பொன்னும் கலந்து
தூவியும்' என்ற தொடர் இதனை
உணர்த்துகின்றது.காணம்,கழஞ்சு,காசு,பொன் புறத்திலே வந்தன என்பதும்
குறிப்பிடத்தக்கது.
படை இயல் :
யானைப்படை,குதிரைப்படை,காலாட்படை,
தேர்ப்படை போன்ற நால்வகைப்
படைகளினையும் வைத்திருந்தனர்
பாண்டியர்.கொற்கை,தொண்டி
துறைமுகங்களில் வெளிநாட்டுக்
குதிரைகள் ஆண்டுதோறும்
வந்திறங்கியது.ஆண்டுக்கு
பதினாராயிரம் குதிரைகள் வந்தன என 'வாசப்' கூறியுள்ளான்,மார்க்கோபோலோ "குதிரைகள் வாங்க மிகுதியான
பொருளைச் செலவிடுகின்றனர்" என்று
பாண்டியர்களைப் பற்றிக்
குறித்துள்ளார்.வாட்போர்வல்ல பெரிய
காலாட்படை இருந்தது பாண்டியர்
ஆட்சிக்காலத்தில்."பெரும் படையோம்"எனக்
கையெழுத்திடும் குழு பாண்டி நாட்டில்
இருந்தது.'முனையெதிர் மோகர்' 'தென்னவன் ஆபத்துதவிகள்' போன்ற
படைகளும் இருந்தன என கல்வெட்டுக்களில்
குறிப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
"கடி மதில் வாயிற் காவலிற் சிறந்த
அடல்வாள் யவணர்"
சிலப்பதிகாரத்தில் வரும் இப்பாடல்
வரியிலிருந்து உரோமாபுரிப் போர்ப்
படை வீரர்கள் மதுரைக் கோட்டையைக்
காத்திருந்தனர் என்று கூறுவதற்கிணைய
அத்தகு வலிமையுடன் சிறப்புற்றிருந்தது
பாண்டியர் படை என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகவியலும் தொழிலியலும் :
* பாண்டிய நாட்டில் கடைச்சங்க
நாளிலேயே வணிகமும் தொழிலும்
மிகச்சிறப்பாக இருந்தன.மதுரை,கொற்கை
முதலான நகரங்களில் கிடைத்துள்ள
உரோமாபுரி நாணயங்களே இதற்குச்
சான்றாகும்.
* வெளிநாட்டு வணிகங்கள் சிறப்புற்றும்
உள்நாட்டில் பண்டங்களை எடுத்துச்
செல்வதற்கேற்ற பெருவழித் தடங்களும்
இருந்தன.நாடு முழுதும் இச்சாலைகள்
அமைந்திருந்தன.
* வணிகர்கள் கோவேறு கழுதை,மாட்டு
வண்டிகளில் பண்டங்களை ஏற்றிச்
சென்றனர்.வழியில் களவு போகாமல்
இருக்க காவற்படைகள் இருந்தன.வணிகர்கள்
கூட்டமாகச் செல்வதனை வணிகச்சாத்து
என அழைத்தனர்.வணிகரில் சிறந்தோர் 'எட்டி'
என்றழைக்கப்பட்டனர்.
* பாண்டி நாட்டு கொற்கைப்
பெருந்துறையில்
முத்துக்களும்,சங்குகளும்
பெருவாரியாகக் கிடைத்தன.கொற்கை
முத்து உலகெங்கும் சென்றதும்
குறிப்பிடத்தக்கது.இதற்குச் சான்றாக
"மறப்போர் பாண்டியர் அறத்திற் காக்கும்
கொற்கையம் பெருந்துறை முத்து" —(அகம்-27)
"பாண்டியன் - புகழ்மலி சிறப்பில் கொற்கை
முன்துறை
அவர்கதிர் முத்தமொடு வலம்புரி
சொரிந்து" —(அகம்-201)
இவ்விரு அகநானூற்றுப் பாடல்களும்
கொற்கை முத்து பற்றிக்
கூறுகின்றன.மேலும்
மதுரைக்காஞ்சி,சிறுபாணாற்றுப்படை,சிலப்பதிகாரம் ஆகிய நூல்களிலும்
இவ்வகைச்செய்திகள் உள்ளது
குறிப்பிடத்தக்கது.
பல்வகைத் தொழில்கள் :
பாண்டிய நாட்டில் முத்துக்
குளித்தல்,சங்கறுத்தல்,வளையல்
செய்தல்,உப்பு விளைவித்தல்,நூல்
நூற்றல்,ஆடை நெய்தல்,வேளாண்மை
செய்தல்,ஆடு,மாடு மேய்த்தல் போன்ற பல
தொழில்களும் செய்து
வந்தனர்.மதுரையில் நுண்ணிய பருத்தி
நூலினாலும்,எலி மயிரினாலும்,பட்டு
நூலினாலும் ஆடைகள் நெய்யப்பட்டன எனச்
சிலப்பதிகாரப் பாடல்வரிகளான இவ்வரி
விளக்கும்.
"நூலினும்,மயிரினும்,நுழைநூற்
பட்டினும்
 பால்வகை தெரியாப் பன்னூல் அடுக்கத்து
நறும்படி செறிந்த அறுவை வீதியும்" —(சிலப்பதிகாரம் -ஊர்-205,207)
முத்து,பவளம்,மிளகு,பலவகை பட்டாடைகள்
மேனாடுகளுக்கு
அனுப்பப்பட்டன.மேனாடுகளிருந்து
குதிரைகளும், மது வகைகளும்,
கண்ணாடிப் பொருள்களும் கொற்கைத்
துறைமுகத்திற்கு வந்திறங்கின.சுங்க
வரியினால் ஆண்டுதோறும் அரசுக்கு
அதிக வருவாய் கிடைத்தது.கப்பல்கள்
திசைமாறாமல் இருக்க துறைமுகத்தில்
கலங்கரை விளக்கம்
அமைக்கப்பட்டிருந்தது.வெளிநாட்டு
வணிகர்களும் யவனர்களும் (கிரேக்கர்களும்,உரோமர்களும்),சோனகரும் (அரேபியர்கள்),பாண்டிய நாட்டு மக்களுன்
அன்புடன் பழகினர் என்பது
குறிப்பிடத்தக்கது.
வணிகத்திலும்,கைத்தொழிலிலும்
சிறந்து விளங்கிற்று பாண்டிய நாடு.
பண்டைக் காலத்தில் தமிழகத்தின் பாண்டி
நாட்டில் தான் வணிகமும்,வெளிநாட்டார்
தொடர்பும் சிறப்புற்று இருந்தது.
கல்வி இயல் :
பாண்டிய நாடு சங்கம் வைத்து தமிழ்
வளர்த்த பெருமையைப்
பெற்றிருந்தது.புலமை நலம் சான்ற
முடிமன்னர்களும் இருந்தனர்.ஆண்,பெண்
இருபாலரும் கல்வி கற்றனர்.கல்வியின்
சிறப்பை நெடுஞ்செழியன் போல் யாரும்
பாண்டியராட்சியில் கூறியதில்லை
எனலாம் அதற்கு எடுத்துக்காட்டாக
"உற்றுழி உதவியும் உறுபொருள்
கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே!
ஒரு குடிப்பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன்வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறுஅரசும் செல்லும்!" —(புறநானூறு)
என்று புறநானூற்றில் கூறப்பட்டுள்ளது.
தலையாலங்கானத்துச் செருவென்ற
பாண்டியன் நெடுஞ்செழியன்,
"பலர் புகழ்சிறப்பின் புலவர் பாடாது வளர்க
என் நிலவரை"
என்று புறப்பாட்டில் பாடியுள்ளார்.
"கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க
அதற்குத்தக!"
என்றும்,
"கண்ணெனப் படுவது வாழும் உயிர்க்கு
கல்வியே!"
என்றும் வள்ளுவர் கூறினார்.இவை
அரங்கேற்றமானது பாண்டியரின்
தமிழ்ச்சங்கத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.
உடன்கட்டை ஏறிய பாண்டிமாதேவி
புறம்பாடிவளாவாள். செல்வமும் ஒருங்கே
பெற்ற இவள் பூத பாண்டியன் மனைவி
பெருங்கோப் பெண்டு ஆவாள்.
பல்சான்றீரே என்ற புறப்பாடல் (246) அவள்
புலமை காட்டும்.
"நகுதக்கனரே நாடுமீக் கூறுநர்" —(புறம்-72)
என்று பாடிய நெடுஞ்செழியன் கல்வியில்
வல்லமை பெற்று
விளங்கியிருந்தான்.அகநானூறு
தொகுப்பித்த உக்கிரப்பெருவழுதி
குறிஞ்சி,வருதம் பாடுவதில் வல்லவனாக
விளங்கினான். சங்க காலப் புலவர்களிலும்
மேலாக கவிதை பாடிய பாண்டிய
மன்னர்களும் ஆட்சி புரிந்தவர்கள் என்பதனை
இவர்கள் மூலம் அறியலாம்.பாண்டியர்களும்
மதுரைத் தமிழ்ச் சங்கமும் தலைச்சங்கம்
தொடங்கி கடைச்சங்கம்வரை தமிழ்
எழுச்சியும்,வளர்ச்சியும் பெற்றது.
இன்றைய மதுரையில் பாண்டியர்
கடைச்சங்கம் வைத்து தமிழை வளர்த்தனர்.
"கண்ணுதற் பெருங்கடவுளும்
கழகமோடமர்ந்து
 பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த இப் பசுந்தமிழ்"
என்னும் பாடல் சான்றாகும். சிவனே
பாண்டிய மன்னந்தான்,மீனாட்சியும்
பாண்டியன் மகள் தான். "பாண்டிய நின்
நாட்டுடைத்து நல்லதமிழ்" என்று
அவ்வையார் கூறியுள்ளது
குறிப்பிடத்தக்கது. "வியாத
தமிழுடையான் பல்வேல் கடல்தானைப்
பாண்டியன்" என யாப்பருங்கல விருத்தி (229) கூறுகின்றது.
நல்லூர் நத்ததனார்,
"தமிழ்நிலை பெற்ற தாங்கருமரபின்
மகிழ்நனை மறுகின் மதுரை" —(சிறுபா-66-67)
என்று பாடியுள்ளார்.
"தமிழ் வையத் தண்ணம் புனல்" —(பரிபாடல் - 6 - வரி - 60)
என்று பரிபாடல் (பாடல்-6-வரி-60)
கூறுகின்றது. செந்தமிழ்நாடு என்று
பாண்டிய நாட்டை மட்டுமே
இளங்கோவடிகள்,சேக்கிழார்,கம்பர்
ஆகியோர்
கூறியுள்ளனர்.தொல்காப்பியம்,திருக்குறள் அரங்கேற்றப்பட்டது இங்கென்பது
குறிப்பிடத்தக்கது.தமிழ்த்தொண்டெனில்
அது பாண்டி
மண்டலந்தானாகவிருந்தது.பாலாசிருயர்,
கணக்காயர் தமிழ் கற்பித்தனர்.ஆசிரியர்
புலவராகவும் இருந்தனர்.குருவே
தெய்வம் என்றனர்.பாண்டிய நாட்டில்
குலவேறுபாடு இன்றி கல்வி
கற்றனர்.கற்றவர்க்குச் சென்ற இடமெல்லாம்
சிறப்பு என்பது பாண்டிய நாட்டில்
நிலவியது.
ஆன்மீக இயல் :
உமையாள் மதுரை மீனாட்சியாக வந்து
பாண்டியன் மகளாகப் பிறந்தாள் என்றும்
பின்னர் சோமசுந்தரப் பெருமானை
மணந்தாள் என்றும் பாண்டி நாட்டை
சோமசுந்தரர் ஆண்டார் என்று புராணங்கள்
கூறும். பாண்டிய வரலாற்றினைக் கூறும்
இலக்கிய நூற்களிலும் இவ்வாறு ஆட்சி
செய்தார்கள் எனச் சான்றுகள் உள்ளது
குறிப்பிடத்தக்கது. பாண்டியர் ஆட்சியில்
சைவ சமயமே தழைத்தோங்கியிருந்தது.
ஆனாலும் வைணவம்,சமணம்,புத்த மதம்
போன்ற பிற மதங்களும் இருந்தன. சிவன்
கோயிலில் விண்ணகரங்கள்,அருகன்
கோட்டங்கள்,புத்த பள்ளிகள்
போன்றனவையும் அடங்கியிருந்தன.
அனைத்து மதத்திற்கும்
மதிப்பளிக்கப்பட்டிருந்தன. கோயில்களுக்கு
நிபந்தங்கள்,இறையிலிகள்
விடப்பட்டன.பாண்டிய
அரசர்கள்,அமைச்சர்கள்,அதிகாரிகள்,
மேற்பார்வையில் கோயில்கள்
கட்டப்பெற்றன. சங்க காலத்தில் சமயப்
பூசல்கள் தோற்றம் பெறவில்லை.17 ஆம்
நூற்றாண்டு கால கட்டத்தில் சமயப் பூசல்கள்
தோற்றம் பெற்றன.மன்னர்களும்,அமைச்சர்
மற்றும் அதிகாரிகளும் பிறந்த நாளில்
கோயில்களில் விழா எடுத்து
மகிழ்ந்தனர்.அதற்கென நிலம் அளிக்கப்பட்டன.
தேவாரம்,திருவாய் மொழிகள் போன்றன
ஓதப்பட்டன.இயல்,இசை, நடனம்,கூத்து
முதலியன நடைபெற்றன.செங்கற்
கோயில்கள்,கற்றளிகள்,செப்புத்
திருமேனிகள் கல்படிமங்கள்,அமைக்கப்பட்டு
அணிகலன்களினை வழிபாடு செய்யத்
தானம் செய்தனர்.கோயில் வழிபாட்டுத்
தலமாக அன்றி பொருள்,பணம் சேர்த்து
வைக்கும் இடமாகவும்
விளங்கியது.கோயிலின் பொதுப்பணம்
மக்களுக்குக் கடனாகக்
கொடுக்கப்பட்டது.தினமும் கோயில்களில்
அன்னதானம்
வழங்கப்பட்டது.புத்தகசாலைகள்
கோயில்களில் அமைக்கப்பெற்றிருந்தன.
கோயில் காரியங்களை ஊர் அவையோரும்
அதிகாரிகளும் செய்தனர்.கோயில் மற்றும்
அறநிலையங்கள் திட்டப்படி நடக்கின்றனவா
என கவனிக்கப்பட்டன.தவறுகள் இழைப்போர்
தண்டனையும் பெற்றனர். கோயிலில்
அமைந்த கல்வெட்டுக்கள் வரலாற்று
ஏடுகளாக அமைந்திருந்தன. கோயில்
புதுப்பிக்கும் சமயம்
படியெடுத்துவைத்துப் புதுப்பித்தனர்.
மீண்டும் அவை பொறிக்கப்பட்டன.
பாண்டியர் பழக்க வழக்கங்கள் :
மன்னன் மகன்,பெயரன் என்ற முறையில்
முடிசூடினர்.சிங்காதனங்களுக்கு
மழவராயன் காலிங்கராயன்
முனையதரையன்,தமிழ்ப் பல்லவராயன்
என்று பெயரிடப்பட்டனர்.அரசன் பிறப்பிக்கும்
ஆணை திருமுகம்,ஓலை மூலம்
மக்களுக்கு அனுப்பப்படும்.அரசர்கள் பிறந்த
நாள் விழா நடத்தினர்.போரில் இறந்த
வீரர்களின் குடும்பத்திற்கு உதிரப்பட்டி என்ற
இறையிலி நிலம்
அளிக்கப்பட்டது.உடன்கட்டை ஏறும் வழக்கமும்
இருந்துவந்தது.பாடிய புலவர்களுக்குப்
பொன்னும்,பொருளும் பரிசாக
அளிக்கப்பட்டன.நீதி தவறாது செங்கோல்
முறை கோடாது வழங்கப்பட்டன.நீதியை
நிலைநாட்ட கை குறைத்தும்,உயிர்
கொடுத்தும் காத்தனர் சில
பாண்டியர்கள்.நீதி காக்க பாண்டியன்
நெடுஞ்செழியன் உயிர்
கொடுத்தான்.பொற்கைப் பாண்டியன்
நீதிக்குத் தன் கையை வெட்டிக்
கொண்டான்.தினமும் மக்கள்
குறைகேட்கும் வழக்கம்
இருந்தது.போட்டிகளில் வெற்றி
பெற்றவர்களுக்கு பரிசும்,பாராட்டும்
செய்யப்பட்டன்.காசுகள்
வெளியிடப்பட்டன.பிறவிப் பெருங்கடல் நீந்த
நாளும் இறைவனை வழிபட்டனர்.அறம்
ஈகையாக,நீதியாகக் காக்கப்பட்டது."மழை
வளம் சிறக்க!மண்ணுயிர் வாழ்க! மன்னனும்
வாழ்க!" என்று வாழ்த்தும் வழக்கமும்
இருந்து வந்தது.இடுவதும்,சுடுவதும்
இறந்தோர்க்கு உண்டு!முன்னோடு
வழிபடும் வடிக்கமும் இருந்திருந்தன.
பாண்டியர் பண்பாட்டில்
"பன்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்"
என்று இலக்கணத்தினைக் கூறும்
கலித்தொகை. பாண்டிய மன்னர்கள்
பண்புடையவர்களாகவிருந்தனர் இதனை
விளக்கும் சான்றாக
"பண்பட்டமென்மொழிப் பைந்தொடி மகளிர்"
எனச் சுந்தரபாண்டியனின் மெய்க்கீர்த்தியில்
உள்ளது குறிப்பிடத்தக்கது.
"உற்றுழி உதவியும் உறுபொருள்
கொடுத்தும்"
எனப் பாண்டிய மன்னன் ஒருவன்
கூறுகின்றான்.இப்பாடல் வரிகளானது
உதவி செய்தல் ஈதல் அறஞ்செய்தல் எல்லாம்
பண்பாட்டின் கூறுகள் என
விளக்குகின்றது.
"அவரவர் வேண்டிய அவரவர்க்கு
அருளியவன்"
பராக்கிரம பாண்டியன் என அவன்
மெய்க்கீர்த்திகள் கூறும் அளவிற்குப்
பண்புடையவனாக இருந்தான்.இவ்வாறான
பல நல்ல பண்புகளையுடைவர்களாக பல
பாண்டிய மன்னர்கள் திகழ்ந்திருந்தனர்.
நன்றி : விக்கிபீடியா.
Posted 23rd January 2013 by kumar pandian
23
JAN பாண்டியர்கள் (Maravars)
0 Add a comment
பாண்டியர்கள்
பாண்டியர்கள் பழந்தமிழ்நாட்டை ஆண்ட
மூவேந்தர்களுள் ஒருவராவர். மற்ற இரு
மூவேந்தர்கள் சேரர்களும் சோழர்களும்
ஆவர். பாண்டியர்கள் மதுரை,
திருநெல்வேலி, மற்றும் தற்போதைய
கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை
ஆட்சி செய்தனர்.
பாண்டிய நாடு :
இந்து சமுத்திரத்தில் மூழ்கிவிட்டதெனக்
கருதப்படும் குமரிக்கண்டத்தில் 72
நாடுகளும் தலைநகராக தென்மதுரையும்
விளங்கியது. பாண்டிய மன்னர்களின்
தலைநகராக விளங்கிய இத்தென்மதுரை
கடற்கோளினால்
அழிவுற்றது.இக்கடற்கோளில் அழியாது
இருந்து எஞ்சிய நாடுகளின் தலைநகராக
கபாடபுரம் விளங்கியது.இரண்டாம்
கடற்கோளால் அந்நாடும்
அழிவுற்றது.இவ்வழிவின் பின்னர்
தற்போதுள்ள மதுரை பாண்டியர்களின்
தலைநகராயிற்று. பாண்டிய மன்னர்களால்
தமிழ்ச் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டது.
பாண்டியரின் தோற்றம் :
சேர,சோழர்கள் போன்ற பேரரசுக்களைக்
காட்டிலும் மூத்த குடியினர் பாண்டியரே
ஆவர்.இவர்களின் தோற்றம் கூற முடியாத
அளவிற்குத் தொன்மை வாய்ந்ததாகக்
கருதப்படுகின்றது.குமரிக் கண்டத்தில்
தோன்றிய ஆதி மனித சந்ததியினரே
பாண்டியராக உருப்பெற்றிருக்கலாம்
என்பது பொதுவாக நிலவும்
கருத்து.பாண்டியர்களின் தோற்றத்திற்குச்
சான்றாக கி.மு 7000 ஆண்டளவில்
உருப்பெற்றதனக் கருதப்படும்
தொல்காப்பியத்தில் கூறியபடி
"முன்னீர் விழவின் நெடியோன்
நன்னீர் மணலினும் பலவே" —(புறம் - 9)
அதாவது குமரிநாடானது முதற்
கடற்கோளால் அழிவுற்ற வேளை "அங்கு
பஃறுளி ஆற்றை வெட்டுவித்துக் கடல்
தெய்வங்களிற்கு விழா எடுத்தவர்
பாண்டியர்" என விளக்குகின்றது இப்பாடல்
வரிகள்.மேலும் இச்செய்தியைக் கூறும்
தொல்காப்பியம் பாண்டிய மன்னர்களால்
தலைச்சங்கத்தில் அரங்கேற்றப்பட்டது எனவும்
கடைச்சங்கத்தில் அரங்கேற்றப்பட்டது எனவும்
பொதுவான கருத்து நிலவுகின்றது.
பாண்டியர்கள் மீன் கொடியினைகொண்டு
ஆண்டதால் மீனவர் என்றும்,பின்னாட்களில்
பரத கண்டம் என்று
அழைக்கப்பட்டதாலும்,பாண்டியர் கடல் சார்ந்த
ஆளுகை கொண்டிருந்ததாலும் பரதவர்
எனும் இனத்தவராக இருக்கக்கூடும் என்றும்
சொல்லப்படுகிறது.
பாண்டியரைப் பற்றிய பதிவுகள் :
இராமாயணத்தில் :
பாண்டிய மன்னர்களின் தலைநகர்
பொன்முத்துக்களால்
அலங்கரிக்கப்பட்டிருந்தது.முத்து,பொன்
அலங்கரித்த கோட்டை வாயில் இருந்தது
இவ்வாறு இராமாயணத்தில் உள்ளது.
மகாபாரதத்தில் :
திருச்செங்குன்றில் பாண்டவர் படுக்கை
உண்டு.திருப்பாண்டி கொடுமுடிதான்
விராடநாடு.பாண்டவர் கொடுமுடியின்
புறநகரில் வன்னி மரத்தில்தான்
ஆடைகளையும் ஆயுதங்களையும்
மறைத்து வைத்தனர்.மேலும் அர்ச்சுனன்
பாண்டிய மன்னன் ஒருவன் மகளை
மணந்தான் எனவும் உள்ளது.
அசோகனின் கல்வெட்டுக்களில் :
மகத நாட்டு அரசர்கள் மௌரியர்கள்.மௌரிய
அரசன் அசோகன் கல்வெட்டுக்களில்
பாண்டிய நாடு பாண்டியர் பற்றிய
செய்திகள் உள்ளன.
மகாவம்சத்தில் :
இலங்கையை ஆண்ட விஜயன் தனியாட்சி
புரிந்தவன் இவன் பாண்டிய மன்னன்
ஒருவனின் மகளை மணந்தான்.அப்பாண்டிய
மன்னனுக்கு ஆண்டுதோறும் பல
பரிசுகளை அனுப்பினான் என்று
மகாவம்சம் கூறுகின்றது.
பிற நாட்டவர் பதிவுகள் :
கி.மு மூன்றாம் நூற்றாண்டு
சந்திரகுப்தன் ஆண்ட காலமான கடைச்சங்க
காலத்தின் துவக்கம் 'மெகஸ்தனீஸ்' என்ற
யவன நாட்டுத் தூதுவன் பாண்டிய
நாட்டிற்கு வந்ததாகக் கருதப்படுகின்றது
மேலும் அவனது நாட்டுக் குறிப்பில்
பாண்டிய நாடு பற்றி தகவல்கள் பல உள்ளன.
கொக்கிளிசுக்குப் 'பண்டேயா' என்ற பெண்
பிறந்தாள்.அவளுக்கு கடல்சார்ந்த
தென்னாட்டைக் கொடுத்தான்.அதில் 350
ஊர்கள் இருந்தன.நாள்தோறும் அரசிக்கு ஓர்
ஊர் மக்கள் திறை செலுத்த வேண்டும்
என்று ஆணையிட்டான்" என்ற செய்தி யவன
நாட்டுத் தூதுவனின் குறிப்பில் உள்ளது
குறிப்பிடத்தக்கது.
கி.பி. 9 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் 'பிளைனி' என்ற மேனாட்டான் தமிழகத்தைக்
காண வந்தான்.அவனது பயண நூலில்
பாண்டிய அரசி பற்றி "இந்தியாவின்
தெற்கில் 'பண்டோ' என்ற ஒரு சாதி மக்கள்
இருந்தனர்.பெண் அரசு புரியும் நிலை
உண்டு.கொக்கிளிசுக்கு ஒரு பெண்
பிறந்தாள்.அவளுக்கு அன்போடு பெரிய
நாட்டை ஆளும் உரிமை
கொடுத்தான்.முந்நூறு ஊர்கள் அவளது
ஆட்சியில் இருந்தது.பெருஞ்சேனை
வைத்திருந்தாள்.அவளது மரபினர்
தொடர்ந்து ஆண்டனர்.என குறித்துள்ளார்
பிளைனி.
சங்க காலப் பதிவுகள் :
பாண்டியர்கள் சந்திர வம்சத்தைச்
சார்ந்தவர்கள் எனவும்.வேப்பம் பூ மாலை
அணிந்தவர்கள் எனவும் மீன்கொடியினை
உடையவர்கள் எனவும் பாண்டியன்
தென்னவன்,மீனவன்,மாறன்,கடலன்
வழுதி,பரதவன் மற்றும் முத்தரையன்
போன்ற பல பெயர்களால் அழைக்கப்பட்டான்
எனவும் சங்க கால நூற்குறிப்புகள்,
கல்வெட்டுக்கள், சாசனங்கள் மற்றும்
மெய்க்கீர்த்திகளும் வரலாற்று மூலங்களாக
உள்ளன.
இமயம்வரை பாண்டியரின் ஆட்சி :
மலையத்துவசப் பாண்டியன் மகள்
மீனாட்சி,இவளது திருமணம் மதுரையில்
சிவனுடன் நடந்தது. சோமசுந்தரப்
பெருமானாக மதுரை தமிழ்ச் சங்கத்தில்
இருந்து தமிழ் வளர்த்தார் இவர்.மதுரை
மீனாட்சி பெரும்படையோடு இமயம்வரை
படையெடுத்து சென்றாள்.இவளது
வழிமுறையினரே மௌரியர்கள்.அந்த
வழியில் சித்திராங்கதன் வந்தான் என்பதும்
அவன் மகளே சித்திராங்கதை என்பதும்
குறிப்பிடத்தக்கது.
பாண்டிய நாட்டுக் குறுநில மன்னர்கள் :
மானாபரணன்,வீரகேரள பாண்டியன்,சுந்தர
பாண்டியன்,விக்கிரம
பாண்டியன்,வீரபாண்டியன் ஆகிய ஜந்து
மன்னர்களும் பாண்டிய நாட்டில் சோழராட்சி
இருந்த சமயம் சோழ மன்னன்
இராசாதிராசனால் அடக்கி வைக்கப்பட்டனர்.
மானாபரணன் மற்றும் வீரகேரளன் ஆகியோர்
இராசராசனிடம் போரிட்டுத் தோற்று
இறந்தனர். சுந்தர பாண்டியன் போரில்
தோற்று முல்லையூரில்
ஒளிந்துகொண்டான். விக்கிரம பாண்டியன்
ஈழ நாட்டிற்குத் தப்பி ஓடினான்.
வீரபாண்டியன் கி.பி. 1048 ஆம் ஆண்டளவில்
கொல்லப்பட்டான். கோலார் மிண்டிக்கல்
கல்வெட்டு மற்றும் இராசாதிராசன்
திருக்களச் செப்பேடு போன்றனவற்றில்
இத்தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.
பாண்டியர் ஆட்சி இயல் :
நாட்டியல் :
தமிழகத்தின் தென்பகுதியில் பாண்டிய
நாடு அமைந்திருந்தது.மேற்கே சேர
நாடும்,மலை நாடும்;கிழக்கே கடல்,வடக்கே
சோழ நாடும் ,கொங்கு நாடும்;தெற்கே
கடலும் குமரிமுனை இதன்
எல்லையாகவும்
இருந்தன.இன்றைய   மதுரை,திருநெல்வேலி,இராமநாதபுரம்,கன்னியாகுமரி,
புதுக்கோட்டை வெள்ளாற்றுக்குத்
தெற்குப் பகுதியில் அமையப்
பெற்றிருந்தது எனலாம்.சங்க காலத்தில்
ஊர்,கூற்றம்,மண்டலம்,நாடு என்ற பிரிவில்
அமைந்திருந்தன.
"முந்நூறூர்த்தே தண்பறம்பு நன்னாடு" —(புறம்-110)
"வல்வேல் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர்
நாட்டே" —(புறம்-242)
என்ற புறப் பாடல்கள் ஊரும்,நாடும் எனக்
கூறும். இரணியமுட்டத்துப்
பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
என்ற தொடர்மொழி அமைப்புச் சான்றாக
விளங்குகின்றது.
ஊர்கள்,கூற்றங்கள்,வளநாடுகள்,மண்டலம்
என்ற அமைப்பில் பிரிக்கப்பட்டிருந்தது.
குடும்ப இயல் :
அரசன்,அரசி,இளவரசன்,பட்டத்தரசி என்ற
முறையில் குடும்பம் அமைந்தது.பட்டத்தரசி
பாண்டிமாதேவி எனப்பட்டாள்.பட்டத்தரசியை
அன்றி பிற பெண்களையும்
மணந்திருந்தனர் சில பாண்டிய
அரசர்கள்.பெண்களும் முடிசூடி ஆட்சி
நடத்தியதோடு போரும்
செய்திருக்கின்றனர்.அரசனின் மூத்த
மகனே பட்டம் பெற முடியும்.இளவரசு பட்டம்
பெற இயலும்.மாற்றாந்தாய் மக்களுடன்
பகைமை வருதலும் உண்டு.உதாரணமாக
வீரபாண்டியன்,சுந்தர பாண்டியன்
போன்றவர்களின் வரலாறுகள் இதற்குச்
சான்றாகும்.
கொற்கை பாண்டியரது
துறைமுகம்.ஆரியப்படை கடந்த
நெடுஞ்செழியன்
ஊழ்வினையால்,கண்ணகி நீதி கேட்டதால்
இறந்தான்.அச்சமயம் இளவரசனாக
கொற்கையில் இருந்த
வெற்றுவேற்செழியன் மதுரைக்கு வந்து
முடிசூடினான்.ஜந்து பேர் ஒரே சமயத்தில்
பாண்டிய நாட்டை ஆண்ட நிலையும்
இருந்தது.ஆட்சியின் காரணமாக அண்ணன்
தம்பி,தந்தை மகன் சண்டைகள் வந்தன மேலும்
ஆட்சிக்காக தந்தையை மகன் கொன்ற
சம்பவங்களும் பாண்டியரின்
குடும்பவியலில் இருந்தன
குறிப்பிடத்தக்கது.
அரசியல் ஆட்சி இயல் :
பாண்டியரின் ஆட்சிக்கு உற்ற துணையாக
இருந்தவர்கள் அமைச்சர்கள்.அடுத்த
நிலையில் அரசியல் அதிகாரிகள்,படைத்
தலைவர்கள் இருந்தனர்.அரையர்,நாடுவகை
செய்வோர்.வரியிலார்,புரவுவரித்
திணைக்களத்தார்,திருமுகம் எழுதுவோர்
ஆகியவர்களும் அரசனுக்கு ஆட்சியில்
துணை செய்தவர்கள் ஆவார்கள்.
1-அரையர் உள்நாட்டுப் பணி புரியும்
நாட்டதிகாரிகள்
ஆவார்கள்.இவர்கள்,நாட்டைச் சிற்றி
வந்து,குடிமக்கள் குறை கேட்டு நீதி
வழங்குவர்.
2-நாடுவகை செய்வோர் ஊரில் உள்ள
நிலங்களில் அளந்து பணி செய்வர்.
3- வரியிலார் அனைத்து வகையிலும் ஊர்
மக்கள் அரசுக்கு வரி செலுத்துவதை
கணக்கு வைப்பார்கள்.
4-புரவு வரித்திணைக் களத்தார்
வட்டாட்சியர்போல் செயல்படுபவர்கள்.
அரசின் வரி :
பாண்டியர் காலத்தில் வரியை இறை
என்றழைத்தனர்.இறை பெறுதல்முறை
என்பது வழக்கத்திலிருந்துவந்தது.குடிகள்
அரசனுக்கு நிலவரி
கொடுத்தனர்.விளைநெல்,காசு,பொன்
வரியாகக் கொடுத்தனர்.ஊர்த் தலைவர்கள்
மக்களிடம் பெற்று அரசிடம்
அளித்தனர்.தளியிறை,செக்கிறை,தட்டார்ப்
பட்டம்,இடைவரி சான்று
வரி,பாடிகாவல்,மனையிறை,உல்கு
முதலான வரி முறைகள்
இருந்தன.இறை,பாட்டம் என்பன வரியினை
உணர்த்தும் சொற்களாகத் திகழ்ந்தன.தட்டார்ப்
பாட்டம் கம்மாளரின் வரியாகும்.நாடு
காவலையே பாடி காவல்
என்றழைக்கப்பெற்றது.ஊர்க்காவலிற்கு
வாங்கிய வரியே
இப்பெயர்பெற்றது.பாண்டிய அரசர்களுள்
சில அரசர்களும் ஊர்க்காவலிற்குச்
சென்றனர்.பொற்கைப்பாண்டியன் இதற்குச்
சான்றாக விளங்குகின்றான்.வீட்டு
வரியினை மனை இறை
என்றழைத்தனர்.கலத்தினும்,காலினும்
வரும் பொருள்களுக்கு வாங்கும் வரியே
சுங்க வரி எனப்படும்.உல்குவின் பொருள்
இதுவேயாகும்.
நில அளவியல் :
ஊர்தோறும் உள்ள நிலங்களை அளந்து வரி
விதிக்கப்பட்டது.பாண்டிய நாடு
முழுவதும் அளக்கப்பட்டது.நாடு வகை
செய்வோர் அளந்தனர்.நிலத்தினை அளக்கும்
கோல் 'சுந்தர பாண்டியன் கோல்' என்ற
பெயரைக் கொண்டிருந்தது. 24 அடி
கொண்ட தடியாகும்
இக்கோல்.குடிதாங்கிக் கோலும் அளவு
கோலாக புழக்கத்தில்
இருந்தது.நிலங்களை குழி,மா,வேலி
என்று பெயரிட்டு அளந்தனர்.அளந்த
நிலத்திற்கு எல்லைக் கல்
நாட்டனர்.இக்கற்களே புள்ளடிக்
கற்களாகும்.சிவன் கோயில்களிற்கு
இடப்பட்ட நிலத்திற்கு திரிசூலக்கல்
நடப்பட்டது.திருமால் கோயிலுக்கு இடப்பட்ட
நிலத்திற்கு திருவாழிக்கல் நடப்பட்டது.நீர்
நிலம் நன்செய் எனவும் மேட்டு நிலம்
புன்செய் என
அழைக்கப்பட்டது.நத்தம்,தோட்டம் என்ற
வழக்கும் புழக்கத்தில் இருந்தது.
இறையிலி :
இறைவன் கோயிலுக்கு அளிக்கப்படும்
கொடை இறையிலி என
அழைக்கப்பட்டது.சிவன் கோயிலுக்கு
அளிக்கப்பட்ட இறையிலி தேவதானம் என
அழைக்கப்பெற்று திருமால் கோயிலுக்கு
அளிக்கப்பட்ட இறையிலிக்கு
திருவிடையாட்டம் என்று
பெயர்.சைன,பௌத்த கோயில்களுக்கு
அளிக்கப்பட்ட கொடை பள்ளிச்சந்தம் என
அழைக்கப்பட்டது.அந்தணர்களுக்கு
வழங்கப்பட்டது பிரமதேயம்;பட்டவிருத்தி
எனவும்,மடங்களுக்கு வழங்கப்பட்டது
மடப்புறம் எனவும் புலவர்களுக்கு
முற்றூட்டும்,சோதிடர்களுக்கு
கணிமுற்றூட்டும் எனவும் கொடைகள்
அழைக்கப்பட்டன.
அளவை இயல் :
எண்ணல்,எடுத்தல்,முகத்தல்,நீட்டல் ஆகிய
நான்கு அளவைகள் பாண்டியர் ஆட்சியிக்
காலங்களில் புழக்கத்தில் இருந்து
வந்திருக்கின்றன.எடுத்தல் என்பது
நிறுத்தல்
ஆகும்.பொன்,வெள்ளி,கழஞ்சு,காணம்
ஆகிய நிறை கற்களால்
நிறுத்தனர்,சர்க்கரை,காய்கறிகள்,புளி
ஆகியவற்றை துலாம்,பலம் என்பவற்றால்
நிறுத்தனர்.சேர் ,மற்றும் மணங்காலும்
நிறுக்கப்பட்டன.நெல்,அரிசி,உப்பு,நெய்,பால்,தயிர்,மிளகு,சீரகம்,கடுகு ஆகியன
செவிடு,ஆழாக்கு,உழக்கு, உரி,நாழி,
குறுணி போன்ற முகக்கும் கருவிகளால்
அளக்கப்பட்டன்.
நாணய இயல் :
பாண்டிய மன்னர்களின் ஆட்சியில்
மன்னர்களின் பெயராலும்,சிறப்புப்
பெயராலும் நாணயங்கள் வெளியிடப்பட்டன.
பொன்,செம்பால் செய்யபட்ட காசுகள்
புழக்கத்தில் இருந்தன. மீன் சின்னம்
பொருத்தப் பட்டதாக வெளியிடப்பட்டது
பாண்டியர் ஆட்சிக் கால நாணயங்கள்.
சீமாறன் சீவல்லபவன் - அவனிப சேகரன்
கோளலிக என்ற பெயரில் நாணயம்
வெளியிட்டான்.இதற்குச் சான்றாக
சிற்றண்ண வாசல் கல்வெட்டு
விளங்குகின்றது.முதல் மாறவர்மன் சுந்தர
பாண்டியன் சோணாடு கொண்டான்
நாணயம் வெளியிட்டான் சீவல்லபன் "அவனிப
சேகரன் கோளகை" என்ற பெயரில்
வெளியிட்டான்.1253 ஆம் ஆண்டில்
வீரபாண்டியன் "வாளால் வழி திறந்தான்
குளிகை" என்ற பெயரில் நாணயத்தினை
வெளியிட்டான்.காசு என்பது ஒரு கழஞ்சு
எடை உடையது 10 பொன் கொண்டது ஒரு
காசு 10 காணம் - 1 கழஞ்சு ஒரு காணம் 4
குன்றி 'காசும் பொன்னும் கலந்து
தூவியும்' என்ற தொடர் இதனை
உணர்த்துகின்றது.காணம்,கழஞ்சு,காசு,பொன் புறத்திலே வந்தன என்பதும்
குறிப்பிடத்தக்கது.
படை இயல் :
யானைப்படை,குதிரைப்படை,காலாட்படை,
தேர்ப்படை போன்ற நால்வகைப்
படைகளினையும் வைத்திருந்தனர்
பாண்டியர்.கொற்கை,தொண்டி
துறைமுகங்களில் வெளிநாட்டுக்
குதிரைகள் ஆண்டுதோறும்
வந்திறங்கியது.ஆண்டுக்கு
பதினாராயிரம் குதிரைகள் வந்தன என 'வாசப்' கூறியுள்ளான்,மார்க்கோபோலோ "குதிரைகள் வாங்க மிகுதியான
பொருளைச் செலவிடுகின்றனர்" என்று
பாண்டியர்களைப் பற்றிக்
குறித்துள்ளார்.வாட்போர்வல்ல பெரிய
காலாட்படை இருந்தது பாண்டியர்
ஆட்சிக்காலத்தில்."பெரும் படையோம்"எனக்
கையெழுத்திடும் குழு பாண்டி நாட்டில்
இருந்தது.'முனையெதிர் மோகர்' 'தென்னவன் ஆபத்துதவிகள்' போன்ற
படைகளும் இருந்தன என கல்வெட்டுக்களில்
குறிப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
"கடி மதில் வாயிற் காவலிற் சிறந்த
அடல்வாள் யவணர்"
சிலப்பதிகாரத்தில் வரும் இப்பாடல்
வரியிலிருந்து உரோமாபுரிப் போர்ப்
படை வீரர்கள் மதுரைக் கோட்டையைக்
காத்திருந்தனர் என்று கூறுவதற்கிணைய
அத்தகு வலிமையுடன் சிறப்புற்றிருந்தது
பாண்டியர் படை என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகவியலும் தொழிலியலும் :
* பாண்டிய நாட்டில் கடைச்சங்க
நாளிலேயே வணிகமும் தொழிலும்
மிகச்சிறப்பாக இருந்தன.மதுரை,கொற்கை
முதலான நகரங்களில் கிடைத்துள்ள
உரோமாபுரி நாணயங்களே இதற்குச்
சான்றாகும்.
* வெளிநாட்டு வணிகங்கள் சிறப்புற்றும்
உள்நாட்டில் பண்டங்களை எடுத்துச்
செல்வதற்கேற்ற பெருவழித் தடங்களும்
இருந்தன.நாடு முழுதும் இச்சாலைகள்
அமைந்திருந்தன.
* வணிகர்கள் கோவேறு கழுதை,மாட்டு
வண்டிகளில் பண்டங்களை ஏற்றிச்
சென்றனர்.வழியில் களவு போகாமல்
இருக்க காவற்படைகள் இருந்தன.வணிகர்கள்
கூட்டமாகச் செல்வதனை வணிகச்சாத்து
என அழைத்தனர்.வணிகரில் சிறந்தோர் 'எட்டி'
என்றழைக்கப்பட்டனர்.
* பாண்டி நாட்டு கொற்கைப்
பெருந்துறையில்
முத்துக்களும்,சங்குகளும்
பெருவாரியாகக் கிடைத்தன.கொற்கை
முத்து உலகெங்கும் சென்றதும்
குறிப்பிடத்தக்கது.இதற்குச் சான்றாக
"மறப்போர் பாண்டியர் அறத்திற் காக்கும்
கொற்கையம் பெருந்துறை முத்து" —(அகம்-27)
"பாண்டியன் - புகழ்மலி சிறப்பில் கொற்கை
முன்துறை
அவர்கதிர் முத்தமொடு வலம்புரி
சொரிந்து" —(அகம்-201)
இவ்விரு அகநானூற்றுப் பாடல்களும்
கொற்கை முத்து பற்றிக்
கூறுகின்றன.மேலும்
மதுரைக்காஞ்சி,சிறுபாணாற்றுப்படை,சிலப்பதிகாரம் ஆகிய நூல்களிலும்
இவ்வகைச்செய்திகள் உள்ளது
குறிப்பிடத்தக்கது.
பல்வகைத் தொழில்கள் :
பாண்டிய நாட்டில் முத்துக்
குளித்தல்,சங்கறுத்தல்,வளையல்
செய்தல்,உப்பு விளைவித்தல்,நூல்
நூற்றல்,ஆடை நெய்தல்,வேளாண்மை
செய்தல்,ஆடு,மாடு மேய்த்தல் போன்ற பல
தொழில்களும் செய்து
வந்தனர்.மதுரையில் நுண்ணிய பருத்தி
நூலினாலும்,எலி மயிரினாலும்,பட்டு
நூலினாலும் ஆடைகள் நெய்யப்பட்டன எனச்
சிலப்பதிகாரப் பாடல்வரிகளான இவ்வரி
விளக்கும்.
"நூலினும்,மயிரினும்,நுழைநூற்
பட்டினும்
 பால்வகை தெரியாப் பன்னூல் அடுக்கத்து
நறும்படி செறிந்த அறுவை வீதியும்" —(சிலப்பதிகாரம் -ஊர்-205,207)
முத்து,பவளம்,மிளகு,பலவகை பட்டாடைகள்
மேனாடுகளுக்கு
அனுப்பப்பட்டன.மேனாடுகளிருந்து
குதிரைகளும், மது வகைகளும்,
கண்ணாடிப் பொருள்களும் கொற்கைத்
துறைமுகத்திற்கு வந்திறங்கின.சுங்க
வரியினால் ஆண்டுதோறும் அரசுக்கு
அதிக வருவாய் கிடைத்தது.கப்பல்கள்
திசைமாறாமல் இருக்க துறைமுகத்தில்
கலங்கரை விளக்கம்
அமைக்கப்பட்டிருந்தது.வெளிநாட்டு
வணிகர்களும் யவனர்களும் (கிரேக்கர்களும்,உரோமர்களும்),சோனகரும் (அரேபியர்கள்),பாண்டிய நாட்டு மக்களுன்
அன்புடன் பழகினர் என்பது
குறிப்பிடத்தக்கது.
வணிகத்திலும்,கைத்தொழிலிலும்
சிறந்து விளங்கிற்று பாண்டிய நாடு.
பண்டைக் காலத்தில் தமிழகத்தின் பாண்டி
நாட்டில் தான் வணிகமும்,வெளிநாட்டார்
தொடர்பும் சிறப்புற்று இருந்தது.
கல்வி இயல் :
பாண்டிய நாடு சங்கம் வைத்து தமிழ்
வளர்த்த பெருமையைப்
பெற்றிருந்தது.புலமை நலம் சான்ற
முடிமன்னர்களும் இருந்தனர்.ஆண்,பெண்
இருபாலரும் கல்வி கற்றனர்.கல்வியின்
சிறப்பை நெடுஞ்செழியன் போல் யாரும்
பாண்டியராட்சியில் கூறியதில்லை
எனலாம் அதற்கு எடுத்துக்காட்டாக
"உற்றுழி உதவியும் உறுபொருள்
கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே!
ஒரு குடிப்பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன்வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறுஅரசும் செல்லும்!" —(புறநானூறு)
என்று புறநானூற்றில் கூறப்பட்டுள்ளது.
தலையாலங்கானத்துச் செருவென்ற
பாண்டியன் நெடுஞ்செழியன்,
"பலர் புகழ்சிறப்பின் புலவர் பாடாது வளர்க
என் நிலவரை"
என்று புறப்பாட்டில் பாடியுள்ளார்.
"கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க
அதற்குத்தக!"
என்றும்,
"கண்ணெனப் படுவது வாழும் உயிர்க்கு
கல்வியே!"
என்றும் வள்ளுவர் கூறினார்.இவை
அரங்கேற்றமானது பாண்டியரின்
தமிழ்ச்சங்கத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.
உடன்கட்டை ஏறிய பாண்டிமாதேவி
புறம்பாடிவளாவாள். செல்வமும் ஒருங்கே
பெற்ற இவள் பூத பாண்டியன் மனைவி
பெருங்கோப் பெண்டு ஆவாள்.
பல்சான்றீரே என்ற புறப்பாடல் (246) அவள்
புலமை காட்டும்.
"நகுதக்கனரே நாடுமீக் கூறுநர்" —(புறம்-72)
என்று பாடிய நெடுஞ்செழியன் கல்வியில்
வல்லமை பெற்று
விளங்கியிருந்தான்.அகநானூறு
தொகுப்பித்த உக்கிரப்பெருவழுதி
குறிஞ்சி,வருதம் பாடுவதில் வல்லவனாக
விளங்கினான். சங்க காலப் புலவர்களிலும்
மேலாக கவிதை பாடிய பாண்டிய
மன்னர்களும் ஆட்சி புரிந்தவர்கள் என்பதனை
இவர்கள் மூலம் அறியலாம்.பாண்டியர்களும்
மதுரைத் தமிழ்ச் சங்கமும் தலைச்சங்கம்
தொடங்கி கடைச்சங்கம்வரை தமிழ்
எழுச்சியும்,வளர்ச்சியும் பெற்றது.
இன்றைய மதுரையில் பாண்டியர்
கடைச்சங்கம் வைத்து தமிழை வளர்த்தனர்.
"கண்ணுதற் பெருங்கடவுளும்
கழகமோடமர்ந்து
 பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த இப் பசுந்தமிழ்"
என்னும் பாடல் சான்றாகும். சிவனே
பாண்டிய மன்னந்தான்,மீனாட்சியும்
பாண்டியன் மகள் தான். "பாண்டிய நின்
நாட்டுடைத்து நல்லதமிழ்" என்று
அவ்வையார் கூறியுள்ளது
குறிப்பிடத்தக்கது. "வியாத
தமிழுடையான் பல்வேல் கடல்தானைப்
பாண்டியன்" என யாப்பருங்கல விருத்தி (229) கூறுகின்றது.
நல்லூர் நத்ததனார்,
"தமிழ்நிலை பெற்ற தாங்கருமரபின்
மகிழ்நனை மறுகின் மதுரை" —(சிறுபா-66-67)
என்று பாடியுள்ளார்.
"தமிழ் வையத் தண்ணம் புனல்" —(பரிபாடல் - 6 - வரி - 60)
என்று பரிபாடல் (பாடல்-6-வரி-60)
கூறுகின்றது. செந்தமிழ்நாடு என்று
பாண்டிய நாட்டை மட்டுமே
இளங்கோவடிகள்,சேக்கிழார்,கம்பர்
ஆகியோர்
கூறியுள்ளனர்.தொல்காப்பியம்,திருக்குறள் அரங்கேற்றப்பட்டது இங்கென்பது
குறிப்பிடத்தக்கது.தமிழ்த்தொண்டெனில்
அது பாண்டி
மண்டலந்தானாகவிருந்தது.பாலாசிருயர்,
கணக்காயர் தமிழ் கற்பித்தனர்.ஆசிரியர்
புலவராகவும் இருந்தனர்.குருவே
தெய்வம் என்றனர்.பாண்டிய நாட்டில்
குலவேறுபாடு இன்றி கல்வி
கற்றனர்.கற்றவர்க்குச் சென்ற இடமெல்லாம்
சிறப்பு என்பது பாண்டிய நாட்டில்
நிலவியது.
ஆன்மீக இயல் :
உமையாள் மதுரை மீனாட்சியாக வந்து
பாண்டியன் மகளாகப் பிறந்தாள் என்றும்
பின்னர் சோமசுந்தரப் பெருமானை
மணந்தாள் என்றும் பாண்டி நாட்டை
சோமசுந்தரர் ஆண்டார் என்று புராணங்கள்
கூறும். பாண்டிய வரலாற்றினைக் கூறும்
இலக்கிய நூற்களிலும் இவ்வாறு ஆட்சி
செய்தார்கள் எனச் சான்றுகள் உள்ளது
குறிப்பிடத்தக்கது. பாண்டியர் ஆட்சியில்
சைவ சமயமே தழைத்தோங்கியிருந்தது.
ஆனாலும் வைணவம்,சமணம்,புத்த மதம்
போன்ற பிற மதங்களும் இருந்தன. சிவன்
கோயிலில் விண்ணகரங்கள்,அருகன்
கோட்டங்கள்,புத்த பள்ளிகள்
போன்றனவையும் அடங்கியிருந்தன.
அனைத்து மதத்திற்கும்
மதிப்பளிக்கப்பட்டிருந்தன. கோயில்களுக்கு
நிபந்தங்கள்,இறையிலிகள்
விடப்பட்டன.பாண்டிய
அரசர்கள்,அமைச்சர்கள்,அதிகாரிகள்,
மேற்பார்வையில் கோயில்கள்
கட்டப்பெற்றன. சங்க காலத்தில் சமயப்
பூசல்கள் தோற்றம் பெறவில்லை.17 ஆம்
நூற்றாண்டு கால கட்டத்தில் சமயப் பூசல்கள்
தோற்றம் பெற்றன.மன்னர்களும்,அமைச்சர்
மற்றும் அதிகாரிகளும் பிறந்த நாளில்
கோயில்களில் விழா எடுத்து
மகிழ்ந்தனர்.அதற்கென நிலம் அளிக்கப்பட்டன.
தேவாரம்,திருவாய் மொழிகள் போன்றன
ஓதப்பட்டன.இயல்,இசை, நடனம்,கூத்து
முதலியன நடைபெற்றன.செங்கற்
கோயில்கள்,கற்றளிகள்,செப்புத்
திருமேனிகள் கல்படிமங்கள்,அமைக்கப்பட்டு
அணிகலன்களினை வழிபாடு செய்யத்
தானம் செய்தனர்.கோயில் வழிபாட்டுத்
தலமாக அன்றி பொருள்,பணம் சேர்த்து
வைக்கும் இடமாகவும்
விளங்கியது.கோயிலின் பொதுப்பணம்
மக்களுக்குக் கடனாகக்
கொடுக்கப்பட்டது.தினமும் கோயில்களில்
அன்னதானம்
வழங்கப்பட்டது.புத்தகசாலைகள்
கோயில்களில் அமைக்கப்பெற்றிருந்தன.
கோயில் காரியங்களை ஊர் அவையோரும்
அதிகாரிகளும் செய்தனர்.கோயில் மற்றும்
அறநிலையங்கள் திட்டப்படி நடக்கின்றனவா
என கவனிக்கப்பட்டன.தவறுகள் இழைப்போர்
தண்டனையும் பெற்றனர். கோயிலில்
அமைந்த கல்வெட்டுக்கள் வரலாற்று
ஏடுகளாக அமைந்திருந்தன. கோயில்
புதுப்பிக்கும் சமயம்
படியெடுத்துவைத்துப் புதுப்பித்தனர்.
மீண்டும் அவை பொறிக்கப்பட்டன.
பாண்டியர் பழக்க வழக்கங்கள் :
மன்னன் மகன்,பெயரன் என்ற முறையில்
முடிசூடினர்.சிங்காதனங்களுக்கு
மழவராயன் காலிங்கராயன்
முனையதரையன்,தமிழ்ப் பல்லவராயன்
என்று பெயரிடப்பட்டனர்.அரசன் பிறப்பிக்கும்
ஆணை திருமுகம்,ஓலை மூலம்
மக்களுக்கு அனுப்பப்படும்.அரசர்கள் பிறந்த
நாள் விழா நடத்தினர்.போரில் இறந்த
வீரர்களின் குடும்பத்திற்கு உதிரப்பட்டி என்ற
இறையிலி நிலம்
அளிக்கப்பட்டது.உடன்கட்டை ஏறும் வழக்கமும்
இருந்துவந்தது.பாடிய புலவர்களுக்குப்
பொன்னும்,பொருளும் பரிசாக
அளிக்கப்பட்டன.நீதி தவறாது செங்கோல்
முறை கோடாது வழங்கப்பட்டன.நீதியை
நிலைநாட்ட கை குறைத்தும்,உயிர்
கொடுத்தும் காத்தனர் சில
பாண்டியர்கள்.நீதி காக்க பாண்டியன்
நெடுஞ்செழியன் உயிர்
கொடுத்தான்.பொற்கைப் பாண்டியன்
நீதிக்குத் தன் கையை வெட்டிக்
கொண்டான்.தினமும் மக்கள்
குறைகேட்கும் வழக்கம்
இருந்தது.போட்டிகளில் வெற்றி
பெற்றவர்களுக்கு பரிசும்,பாராட்டும்
செய்யப்பட்டன்.காசுகள்
வெளியிடப்பட்டன.பிறவிப் பெருங்கடல் நீந்த
நாளும் இறைவனை வழிபட்டனர்.அறம்
ஈகையாக,நீதியாகக் காக்கப்பட்டது."மழை
வளம் சிறக்க!மண்ணுயிர் வாழ்க! மன்னனும்
வாழ்க!" என்று வாழ்த்தும் வழக்கமும்
இருந்து வந்தது.இடுவதும்,சுடுவதும்
இறந்தோர்க்கு உண்டு!முன்னோடு
வழிபடும் வடிக்கமும் இருந்திருந்தன.
பாண்டியர் பண்பாட்டில்
"பன்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்"
என்று இலக்கணத்தினைக் கூறும்
கலித்தொகை. பாண்டிய மன்னர்கள்
பண்புடையவர்களாகவிருந்தனர் இதனை
விளக்கும் சான்றாக
"பண்பட்டமென்மொழிப் பைந்தொடி மகளிர்"
எனச் சுந்தரபாண்டியனின் மெய்க்கீர்த்தியில்
உள்ளது குறிப்பிடத்தக்கது.
"உற்றுழி உதவியும் உறுபொருள்
கொடுத்தும்"
எனப் பாண்டிய மன்னன் ஒருவன்
கூறுகின்றான்.இப்பாடல் வரிகளானது
உதவி செய்தல் ஈதல் அறஞ்செய்தல் எல்லாம்
பண்பாட்டின் கூறுகள் என
விளக்குகின்றது.
"அவரவர் வேண்டிய அவரவர்க்கு
அருளியவன்"
பராக்கிரம பாண்டியன் என அவன்
மெய்க்கீர்த்திகள் கூறும் அளவிற்குப்
பண்புடையவனாக இருந்தான்.இவ்வாறான
பல நல்ல பண்புகளையுடைவர்களாக பல
பாண்டிய மன்னர்கள் திகழ்ந்திருந்தனர்.
நன்றி : விக்கிபீடியா.
Posted 23rd January 2013 by kumar pandian
23
JAN பாண்டியர்கள் (Maravars)
0 Add a comment
பாண்டித்துரை தேவர்
பாண்டித்துரை தேவர் (மார்ச் 3, 1867 –
டிசம்பர் 2, 1911; பாலவ நத்தம், தமிழ்நாடு) நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த அமைப்பாளர்களில் ஒருவரும்,
தமிழிறிஞரும் ஆவார். இவரே நான்காம் தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவராக பணியாற்றினார். இவர் செந்தமிழ் (இதழ்) என்னும் இதழ் வெளியிடவும், ‘கப்பலோட்டிய தமிழர்’ வ.உ.சி யின் சுதேசிக் கப்பல் விடும் பணிக்கும் பொருள் உதவி நல்கினவர்.
பாண்டித்துரைத் தேவர் பாலவனத்தம் ஜமிந்தார் என்றும், மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவர் என்றும், தலைமைப் புலவர் என்றும், செந்தமிழ்கலாவிநோதர் என்றும்,
செந்தமிழ் பரிபாலகர் என்றும், தமிழ் வளர்த்த வள்ளல் என்றும், பிரபுசிகாமணி என்றும்,
செந்தமிழ்ச் செம்மல் என்றும் அழைக்கப்பட்டவர். மூவேந்தரும் போய் முச்சங்கமும் போய்ப் பாவேந்தருங் குறைந்து பழைய நூலுரைகளும் மறைந்து படிப்பருமின்றிக் கேட்பாருமின்றித் தமிழ்க் கல்வி மழுங்கிவரும் காலகட்டத்தில் மதுரை மாநகரில் தமிழ்ச்சங்கங் கூட்டியும்,
அருந்தமிழ் நூல்களை ஈட்டியும், படித்து வல்லவராவர்க்கு பரிசில் கொடுத்தும்,
செந்தமிழ் என்னும் மாசிக வாசிக பத்திரிகையை வெளிவிடுத்தும், இப்படிப் பலவாறான தமிழ்த் தொண்டினை திறம்படச் செய்த செந்தமிழ் ஆர்வலராவார்.
பிறப்பு :
புகழ் பூத்த தேவர் மரபில் தோன்றிய பொன்னுசாமித் தேவருக்கும் முத்து வீராயி நாச்சியாருக்கும் மூன்றாவது மகனாக 1867ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் நாள் பிறந்தார்.பொன்னுசாமித் தேவரவர்கள் இராமநாதபுர மன்னருக்கு அமைச்சராகயிருந்தவர்.இவர் சிறுவராக இருக்கும் போதே தந்தையை இழந்தமையால், சேஷாத்திரி ஐயங்கார் என்பவரின் மேற்பார்வையில் வளர்ந்தார். இக்காலகட்டத்தில் அழகர் ராஜ் என்ற தமிழ் புலவர் இவரின் தமிழ் ஆசானாவார் மற்றும் வழக்குரைஞர் வெங்கடேஸ்வர சாஸ்த்திரி இவரின் ஆங்கில ஆசிரியராவார். இவர்களிடம் இருந்து மிக்க ஆர்வத்தோடு கற்ற தேவர், இரு மொழியிலும் நல்ல தேர்ச்சி எய்தி இராமநாதபுரத்தில் சிவர்டிஸ் என்ற அங்கிலேயாரால் நடத்தப்பட்ட உயர்பள்ளியில் மேல் கல்வி கற்றார்.
சேஷாத்திரி ஐயங்காரால் மேற்பார்வை செய்யப்பட்ட தேவரின் சொத்துக்கள் எல்லாம் இவர் பதினேழு வயதை அடைந்ததும் இவரிடமே கையளிக்கப்பட்டன. இச்சொத்துக்களில் பாலவந்தனம் ஜமீனும் அடங்கும். இளம் வயதில் தமிழில் நல்ல தேர்ச்சியும் ஆர்வமும் பெற்றிருந்த தேவர்,
அதன் வளர்ச்சிக்காக தன் உடல், உயிர்,
பொருள் எல்லாவற்றையும் அர்ப்பணித்தார் என்றால் மிகையாகாது. இக்காலகட்டத்தில் தேவரின் நெருங்கிய உறவினராகிய பாஸ்கர சேதுபதி அவர்கள் இராமநாதபுர அரியணையில் அமர்ந்து, இவரின் தொண்டுகளுக்கு துணை புரிந்தார் என்பர்.
தமிழ்த் தொண்டு:
அக்காலத்தில் அறிய தமிழ் நூல்களை கண்டெடுத்து, அவை அழியா வண்ணம் அச்சிட்டு வந்த சாமிநாதையருக்கு உதவும் பொருட்டு தேவர் அவர்கள், அவரை இராமநாதபுரம் வரவழைத்துக் கௌரவித்து மணிமேகலை, புறப்பொருள் வெண்பாமாலை போன்றவற்றை அச்சிட பொருளுதவி செய்தார். தனது ஆசிரியர் ஒருவரான இராமசாமிப்பிள்ளை என்றழைக்கப்படும் ஞான சம்பந்தப்பிள்ளை மூலம் தேவாரத் தலைமுறை பதிப்பையும்,
சிவஞான சுவாமிகள் பிரபந்தத் திரட்டையும் பதிப்பித்து வெளியிட்டார். பிற மதத்தவரின் சைவ எதிர்ப்பு ப் போக்கை மறுக்கும் பொருட்டு கோப்பாய் சபாபதி நாவலர் மூலம் மறுப்பு நூல்கள் வெளியிட்டார். மேலும் தண்டியலங்காரம் போன்ற சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் அவர்களின் நூல்களுக்கும், தேவர் அவர்கள் பதிப்பிக்கும் பொருட்டு உதவி புரிந்திருந்தார். குமாரசுவாமிப்புலவர், தேவரால் தொகுக்கப்பட்ட சைவமஞ்சரிக்கு வழங்கிய சிறப்புப்பாயிரம் இவரின் சிறப்பை நன்கு புலப்படுத்தும்.
சைவமஞ்சரி சிறப்புப்பாயிரத்தை கீழே காட்டுதும்:-
திக்குலவும் புகழாளன் பிரபுகுல சிகாமணியாய்ச் சிறந்த சீலன்
அக்கிரகண் ணியன்பொன்னு சாமியெனு நரபால னருளும் பாலன்
நக்கனடி யாவர்பாலன் பேறுளத்தன் வெண்ணீறு நண்ணும் பாலன்
தக்கபொரு ணிலவுகலை வினோதனுயர் சற்சங்க சனானு கூலன் .
பூதேவன் புகலியர்கோன் முதலறிஞர் தமிழ்நூலின் பொருள்க ளுள்ள
மீதேவன் பறமருவப் பதித்தேவன் றேவனெனும் வெளிறு நீங்கி
நீதேவ னெனக்கொண்டு நிலத்தேவன் பகைகடந்து நெறிநின் றீசன்
மாதேவன் பதத்தேவன் மகிழ் பாண்டித்துரைத்தேவ மன்னன் மாதோ
நான்காம் தமிழ்ச் சங்கம் :
துரை மாநகரில் தேவர் தங்கியிருந்த போது, அவ்வூர் அறிஞர்கள் தமிழ்ச் சிறப்புப் பற்றி சொற்பொழிவாற்றும்படி வேண்டிக் கொண்டனர். இதற்கு இணங்கிய தேவர், உரைக்கு வேண்டிய ஆராய்ச்சி செய்யும் பொருட்டு, திருக்குறள்,
கம்பராமாயணம் போன்ற நூல்களை ஈட்ட முயற்சித்த போது, அங்காடிகள், நூலகங்கள் மற்றும் அறிஞர்களின் மனைகளிலிருந்தும் பெற முடியவில்லை. இந் நிகழ்வு தேவரின் உள்ளத்தை மிக கடுமையாகப் பாதித்தது. பண்டைக்காலம் முதல் தமிழ்ச் சங்கங்கள் கூடிய மதுரை மூதூருக்கும்,
அங்கு வளர்ந்த தமிழுக்கும் ஏற்ப்பட்ட துன்பியல் நிலையை எண்ணி இவர் உள்ளம் வேதனையுற்றது. இந் நிலையை மாற்றும் நோக்குடன் மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவத் திட்டமிட்ட தேவர் அவர்கள், தனது திட்டத்தை
1901 ஆம் ஆண்டு வைகாசி மாதம் சென்னையில் கூடிய மாகாண அரசியல் மாநாட்டில் அவையோர் முன் வேண்டுகோளாக முன்வைத்தார். அம்மாநாட்டில் நான்காம் தமிழ் சங்கம் மதுரையில் நிறுவுவது என்று திர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் உடனடியாகவே நான்காம் தமிழ் சங்கம் நிறுவப்பட்டு செயல்பட தொடங்கியது. இத் தமிழ் சங்கதிற்கு தலைவராக தேவரே பொறுப்பேற்று சங்கத்தை கட்டியெழுப்பும் பொருட்டு அயராது செயல்பட்டார். மேலும் தமிழகம் மற்றும் ஈழம் முதலிய நாடுகளிலிருந்து தமிழ் வல்லுனர்களை அழைத்து, சங்கத்தில் அங்கத்தவராக்கி எதிர்கால தமிழ் வளர்ச்சிக்கு வழிவகுத்தவர் தேவராவார்.தமிழன்னைக்கு மேல் கூறிய தொண்டுகள் மட்டுமல்லாது, செய்யுள் இயற்றித் தொண்டாற்றும் புலமையும் ஆற்றலும் தேவரவர்களிடம் இருந்தது,
இதற்கு சான்றாக சிவஞானபுர முருகன் காவடிச்சிந்து, சைவ மஞ்சரி,
இராஜராஜேஸ்வரிப் பதிகம், பன்னூல் திரட்டு மற்றும் பல தனி நிலைச் செய்யுள்களும் பல சிறப்பாயிரங்களும் திகழ்கின்றன. தமிழுக்கு மட்டும் அல்லாது பிற நற்பணிகளுக்கும் பொருளுதவி செய்யும், வழக்கம் உடைய வள்ளலாக வாழ்ந்த தேவரவர்கள், வ. உ. சிதம்பரம்பிள்ளை அவர்கள் சுதேசி நாவாய்ச் சங்கம் நிறுவதற்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து உதவியது குறிப்பிடத்தக்கது. தமிழின் உயர்வுக்காக உறங்காது உழைத்த உத்தமர், 1911ஆம் ஆண்டு மார்கழி மாதம் இரண்டாம் நாள் வள்ளல் பாண்டித்துரைத் தேவர், உயிர் துறந்ததை எண்ணி தமிழ் உலகம் வருந்தியபோதும்,
அவரால் உருவாக்கப்பட்ட நான்காம் தமிழ் சங்கம் நூறாண்டுகளுக்கு மேலாக தமிழ்த் தொண்டாற்றி வருவது தேவரவர்களின் உண்மைத் தமிழ்ப் பற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
நாட்டின் விடுதலை இயக்கத்திலே பெரும் பங்கேற்று செயலாற்றி வந்தவர் சிதம்பரம் பிள்ளை அவர்கள். வ.உ.சி என்ற மூன்றெழுத்து பெயர் பெற்றவர். வெள்ளையருக்கு எதிராக மரக்கலம் (கப்பல்) விடுக்க முன் வந்தவர். அதற்கு உரிய திட்டங்கள் தீட்டினார். அதை நிறைவேற்ற பெரும் பொருள் தேவையாக இருந்தது அவருக்கு.
“தேசிய இயக்கத்தில் ஈடுபட்ட வ.உ.சி. வெறும் பிரச்சாரத்தோடு நின்றுவிடவில்லை. அன்று தூத்துக்குடிக்கும் இலங்கையிலுள்ள கொழும்புவுக்கும் இடையே கப்பலை நடத்திக் கொண்டிருந்தது ஒரு பிரிட்டிஷ் கம்பெனி. அதற்கு போட்டியாக ஒரு கம்பெனியின் மூலம் கப்பல் ஓட்டவேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது வ.உ.சிக்கு
ஓட்டப்பிடாரத்தில் அவருக்கு ஒரு சிறிய பூமிதான் சொந்தம். அந்த நிலத்தை விற்று கிடைத்த தொகையை “சுதேசி ஸ்டீம் நாவிகேசன் கம்பெனி” என்ற கப்பல் கம்பெனியின் மூலதனப் பங்குகளாகப் போட்டார்” என்று “விடுதலைப் போரும் திராவிட இயக்கமும்” என்ற தமது நூலின் பக். 27 ல் தோழர் பி.இராமமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
இந்த உண்மையான செய்தியை(!) பின்பற்றி அறிஞர் பலரும் எழுதியுள்ளனர்.
அன்று சிறிய பூமியை விற்றதில் எவ்வளவு பணம் கிடைத்திருக்கும்?
ஆயிரக்கணக்கான பணம் தேவையல்லவா?
வரலாற்றில் நடைபயின்று, தம் வாழ்க்கையையே நாட்டு வரலாறாக ஆக்கிக் கொண்ட தோழர் இராமமூர்த்தி அவர்கள் இளைய தலைமுறையினருக்கு உண்மை வரலாறுகளை எடுத்துக்காட்டும் வலிமையான ஊன்றுகோல் தான் இதுவா! ஊறுவிளைவிக்கும் கோலாகுமல்லவா!
தூத்துக்குடியில் சாதாரண வழக்குரைஞராக இருந்த வ.உ.சி. அவர்களுக்குப் பெரும் பொருள் தேடுவது எளிதாக இல்லை. அப்பொழுது, பாலவநத்தம் குறுநில மன்னர், செந்தமிழ்க் குரிசில் வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்களது கொடைச் சிறப்பினை அறிந்தார்.
1906ம ஆண்டு ஜூலைத் திங்கள் 25ம் நாள் முகவை சென்று வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்களைக் கண்டார். தமது எண்ணங்களைத் தெரிவித்தார். பொருள் உதவியும் வேண்டினார்.
தெய்வீகப் பற்றும் தேசிய உணர்வும் பொங்கிக் ததும்பி நின்ற வள்ளல் தேவர் அவர்கள் சிதம்பரம் பிள்ளை அவர்களது கருத்துக்களை முழுமையான ஏற்றுக் கொண்டார். அவரைப் பாராட்டி ஊக்குவித்தார். இரண்டு இலட்சம் வெண்பொற்காசுகள், கடனாக அல்ல,
நன்கொடையாக வழங்கினார். இந்தக் கப்பல் கம்பனி மூலமாக கிடைக்கும் வருவாயை மதுரைத் தமிழ்ச் சங்கம் பெற ஏற்பாடுகளும் செய்திருந்தார். மேலும் தனது நண்பர்களை எல்லாம் பங்கு பெறச் செய்து பெரும் பொருள் உதவி செய்தார்.
“சுதேசி ஸ்டீம் நேவிகேசன் கம்பெனி” என்ற பெயரில் மரக்கலப்பணி உருவானது. வெள்ளையர்களுக்கு எதிராக எவரும் முன்வராது அஞ்சி நின்ற நிலையில்,
வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்கள் மரக்கால அணிக்குத் தலைமையும்,
செயலாளர் பொறுப்பும் ஏற்றுக் கொண்டார். 1906ம் ஆண்டு அக்டோபர் திங்கள்
16ம் நாள் கம்பனி பதிவு செய்யப்பட்டது. – “தேவர் முரசு”, செப்டம்பர் 1981.
(வள்ளல் பாண்டித்துரைத் தேவர் தான் 1911ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 14 ம் நாள் தமிழ்க்கோவில் என்னும் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் தோற்றுவித்தார். உக்கிரப் பெருவழுதி பாண்டியன் காலம் 3ம் தமிழ்ச் சங்கம் அழிந்தது. மீண்டும் உக்கிரப் பாண்டியன் என்ற வள்ளல் பாண்டித்துரைத் தேவரால் 4ம் சங்கம் தோற்றுவிக்கப் பட்டது.)
என்றாலும், தொடர்ந்து இதர கம்பெனிகளுடன் போட்டியிட முடியா நிலையினாலும் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் இன்னல்களாலும் விரைவில் மூடப்பட்டது.
வெள்ளையர்களுக்குக் கட்டுப்பட்டிருந்த குறுநில மன்னர் வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்கள், அவர்களுக்கு எதிராகத் துவக்கப்பட்ட சிதம்பரம் பிள்ளை மரக்கலப்பணிக்கு உதவியதால்,
தலைமையும் ஏற்று தாமே ஏற்றுக் கொண்டதால் அடைந்த இன்னல்கள் ஏராளம்,
ஏராளம். எழுதத்தரமன்று அவையாவையும் இங்கே. பாலவநத்தம் ஜாமீனே அழிந்தது,
என்பது எல்லாம் இங்கே மறைக்கப்பட்டு விட்டது ஏன்?
சிதம்பரம் பிள்ளை அவர்கள் நேரடியாக வள்ளல் தேவர் அவர்களைக் கண்டும் இரண்டு இலட்ச வெண்பொற்காசுகள் நன்கொடையாகப் பெற்றுக் கொண்டும்,
அவர்களே தலைமையாகவும் ஏற்றுக் கொண்டுள்ள ஒரு செய்தியை தோழர் இராமமூர்த்தி மறைப்பதன் நோக்கம் என்ன?
ஏன்?
தேசியச் செம்மல்:
1901ம் ஆண்டு மே திங்கள் 21,22,23 ஆகிய நாட்களில் சென்னை மாகாண அரசியல் மாநாடு திரு . அனந்தா சாரலு தலைமையில் மதுரையில் நடைபெற்றது. வள்ளல் தேவர் அவர்கள் வரவேற்ப்புக் குழு தலைவராக இருந்து அரும்பணிகள் ஆற்றினார்கள். அம்மாநாட்டில் தாம்,
அறிவிக்கப்பட்ட படியே மதுரையில் தமிழ்ச் சங்கம் என்னும் தமிழ்க் கோவில் நிறுவினார்கள்.
இந்தச் தமிழ்ச் சங்கம் தான் வடக்கு வெளிவீதியில் கலையுலகு போற்றும் கன்னித் தமிழ் கோயிலாகக் காட்சி தருகிறது. தமிழ்க் கொண்டல் வள்ளல் தேவர் அவர்களது நூற்றாண்டு விழா நடத்தியும் மலர் ஒன்றும் வெளியிட்டது. (வள்ளல் பாண்டித்துரைத் தேவர் பைந்தமிழ் பேரவை, அதன் பொதுச் செயலாளர் தான்,
தமிழ்த் தொண்டன் வி.ஆ.ஆண்டியப்பத்தேவர் அவர்கள் இக்கட்டுரையின் ஆசிரியர்).
இதைப் பல அரசியல் கட்சிகளுடனும் தொண்டர்களுடனும் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த தோழர் இராமமூர்த்தி அறியாததா?
எந்த அடிப்படையில் எழுதினார்?
இளைய தலைமுறையினருக்கு வரலாறு எடுத்துக்காட்டும் முறையா? அவரது நினைவில் இல்லாமல் போய்விட்ட குறையா?
உண்மை வரலாறுகளை எடுத்க்காட்டத் தவறிவிட்டார் தோழர் இராமமூர்த்தி என்பதை சுட்டிக்காட்ட வேண்டியதிருக்கிறது.
(“செக்கிழுத்த செம்மல்”
திரு.வ.உ.சி.அவர்களை குறைத்து மதிப்பிடும் நோக்கம் சிஞ்சிற்றும் இல்லாது இக்கட்டுரை இங்கே பதியப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம், உண்மை விளம்ப வேண்டுதாயும், மறைக்கப்பட்ட உண்மை வரலாறு எம் தமிழர் புரியவேண்டுமாயும் இக்கட்டுரை பதியப்படுகிறது)
எனவே, கப்பலோட்டிய தமிழன் யாரென்றால் சேதுநாடு, செந்தமிழ்க் குரிசில்,
பாலவநத்தம் குறுநிலமன்னர், வள்ளல் பொன். பாண்டித்துரைத் தேவர் அவர்களேயாவர் என்பதை இமயத்தின் உச்சியில் நின்று கூறலாம்.
Posted 23rd January 2013 by kumar pandian
23
JAN பாண்டித்துரை தேவர்
கப்பலோட்டிய தமிழன் யார்?
0 Add a comment
கீழத்தூவல் - தேவரின ஐவர் படுகொலை (1957)
தமிழ்நாட்டு அரசியல், சமூக வரலாற்றில் 1957-ல் நடந்த முதுகுளத்தூர் கலவரம்
முக்கியமானதாகும். இம்மானுவேல்
சேகரனின் கொலையைத் தொடர்ந்து நடந்த
அந்தக் கலவரத்தை அடக்க காங்கிரஸ் அரசு பல
வழிகளில் முயன்றது.
இந்நிலையில் 1957 செப்டம்பர் 14 -ம் நாள்,
அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர்
மதுரைக்கு வந்தார். தொடர்ந்து மூன்று
நாட்கள் மதுரையில் தங்கியிருந்தார்.
மதுரைக்கு வந்த முதல் நாளே, ஐ.ஜீ மற்றும்
மாவட்ட காவல் துறையினர் உட்பட பெரிய
காவல்துறை அதிகாரிகளைக் கலந்து
பேசினார்.தானாக ஏற்படாத கலகத்தை சதி
ஆலோசனை செய்ய, அதன் விளைவு,
ஈவிரக்கமற்ற கொலை பாதகன், ரத்த வெறி
பிடித்த இன்ஸ்பெக்டர் "ரே" என்பவனையும்,
போலிஸ் பட்டாளத்தையும் கீழ்த்தூவல்
கிராமத்துக்கு அனுப்பி வைத்தனர்.அதன்
ஒரு கட்டமாக, 1957 செப்டம்பர் 14ம் நாள்
முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல்
கிராமத்திற்குள் புகுந்தனர் காவல்
துறையினர்.
கீழ்த்தூவலுக்குப் போன இன்ஸ்பெக்டர் "ரே"
அமைதியாக இருந்த கீழ்த்தூவல் கிராமத்து
மக்களை அடித்துத் துன்புறுத்தி,
அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டான்.
வயது வந்தவர்களைத் துன்புறுத்தி,
அவர்களைப் பிடித்து ஒரு பள்ளிக்
கூடத்தில் அடைத்து வைத்தான்.
முதுகுளத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜ்
அய்யர், குறிப்பிட்ட தவசியாண்டி தேவர் ,
சித்திரைவேலு தேவர், ஜெகநாதன் தேவர்,
முத்துமணி தேவர், சிவமணி தேவர்
யென்ற ஐந்து இளைஞர்களை மட்டும்
வெளியே இழுத்து வந்தார். அவர்களை ரத்த
வெறி பிடித்த இன்ஸ்பெக்டர் "ரே" தன்
பரிவாரங்களோடு கிராமத்தை ஒட்டி உள்ள
கண்மாய் கரைக்குக் கூட்டிச் சென்றான்.
அங்கே, கண்மாய்க் கரைக்கு அழைத்துச்
செல்லப்பட்ட அந்த ஐந்து வாலிபர்களின்
கைகளையும் கால்களையும் பின்பு
கண்களையும் கட்டினார்கள். என்ன
நடக்கப்போகிறதோ...? என்று அறியாமல்
கைகளும் கால்களும், கண்களையும் கட்டி
கருவேல மரத்தில் ஐவரையும் கட்டி
வைத்து கட்டிளம் காளையர்கள் ஐவரும்
அச்சத்தோடு திகைத்து நின்ற வேளையில்
சுட்டுக் கொன்றார்கள்.துப்பாக்கியின்
வெடி சத்தம் கேட்டு, பள்ளியில் அடைத்து
வைக்கப்பட்டிருந்த அனைவரும்
பதறித்துடித்துக் கோவெனக் கதறி
அழுதனர்.என்ன நடந்த அங்கே...? ரத்த வெறி
பிடித்தஇன்ஸ்பெக்டர் "ரே" , அந்த
இளைஞர்களின் நெஞ்சில் துப்பாக்கியால்
வெறிகொண்டு சுட்டு, அந்த ஐந்து
பேருடைய உயிரைப்
பலிவாங்கினான்.சுட்டப்பட்ட இந்த
வீரத்தியாகிகள் பிணமாக, ரத்த
வெள்ளதிதில் விழுந்த பின்னும் வெறி
பிடித்த மிருகம் இன்ஸ்பெக்டர் ரே, யின்
துப்பாக்கி வெடிச்சத்தம் முழங்கிக்
கொண்டு இருந்தது. கீழத்தூவல் கண்மாய்
இரத்தத் தடாகமாக மாறியது.
அந்த ஐந்து இளைஞர்கள் செய்த குற்றம்
என்ன...? எதற்கு இவ்வளவு கொடிய
தண்டனை...? முத்துராமலிங்க தேவரைத்
தலைவராக, இதய தெய்வமாக ஏற்றுக்
கொண்டு, பார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஓட்டு
அளித்தது தான் அவர்கள் செய்த குற்றம். இந்த
குற்றத்திற்காக தான், அந்த ஐந்து அப்பாவி
இளைஞர்களை சுட்டு கொன்றனர்.இறந்த
இளைஞர்களின் உடல்களை அவர்களது
மனைவிமார்களும் குழந்தைகளும் கூடப்
பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது.இறந்த
ஐந்து இளைஞர்களின் உடல்களை உடனே
பரமக்குடிக்குக் கொண்டு சென்று, பிரேத
சோதனை நடத்திய பின் ரகசியமாய்
போலிசாரே எரித்து விட்டனர். இதுதான்
இன்றுவரைக்கும் அனைவரும், குறிப்பாக
தேவர் குல மக்கள் மறக்க முடியாத
கீழத்தூவல் படுகொலை சம்பவமாகும்.
கீழத்தூவல் படுகொலைக்கு பின்பும்
காங்கிரச அரசின் கொலைவெறி
கீழத்தூவல் படுகொலையோடு நின்று
விட்டதா, நிலைமை...? இல்லை. காங்கிரஸ்
வெறியாட்டமும் போலிசின்
காடடுமிராண்டித்தனமும் விஸ்வரூபம்
எடுக்கத் தொடங்கியது. கீரந்தை என்ற
கிராமத்திற்குள் போலிஸ் வெறிப்பட்டாளம்
நுழைந்தது. அக்கிராம மக்களில் சிலர் ஒரு
சடங்கு வீட்டிலே விருந்து சாப்பிட்டுக்
கொண்டிருந்தார்கள். திடிரெனப் போலிஸ்
பட்டாளம் அந்த வீட்டினுள் நுழைந்தது.
விருந்து சாப்பிட்டுக்
கொண்டிருந்தவர்களில் ஏழு பேர்களை
விட்டுவிட்டு வெளியே இழுத்துக்
கொண்டு வந்தனர்.அவர்களின் குழம்பு
பிசைந்த கரங்கள், அதில் ஒட்டியிருந்த
பருப்பு உலராத நிலையில், அவர்களைச்
சுட்டுக் கொன்றனர். அந்தப் பிணங்களை
பக்கத்தில் இருந்த வைக்கோல் போரில் தீ
வைத்து, அதில் தூக்கிப் போட்டு எரித்தனர்.
அந்த ஏழு பேரில் ஒருவர் கிழவக் குடும்பன்
என்ற அரிஜன். அவர் மறவர்களுக்கு தரவாக
இருந்ததால் அவரும் கொல்லப்பட்டார்.
காங்கிரஸ் அரசின் வெறித்தனம்
மேலும் நரிக்குடிப் பக்கம் உள்ள
பனைக்குடி, சிறுவார் என்ற கிராமங்களில்
இருந்தவர்களை மலஜலம் கூடக் கழிக்க
விடாமல், போலிஸ் லாரியிலேயே
வைத்திருந்தனர். மறுநாள் அவர்களை
உளுத்திமடை என்ற கிராமத்திற்கு
கொண்டு சென்றனர். அங்கு போனதும்,
லாரியில் இருந்தவர்களில் நான்கு
பேர்களைக் குறிப்பிட்டு, " உங்களை
விடுதலை செய்து விட்டோம்; போகலாம்"
என்று அவர்களிடம் போலிசார் கூறினர்.
அந்த அப்பாவிகள் நான்கு பேரும்
போலிசார் சொன்னதை நம்பி, லாரியில்
இருந்து இறங்கினர். தங்கள் ஊரை நோக்கி
நடை போடத் தொடங்கினர்.போலிஸ்
வெறியர்கள் பின்னால் இருந்து அவர்களது
முதுகுப்புறமாக அந்த நான்கு
பேரையும் சுட்டுக் கொன்றனர். இத்தோடு
நின்று விட்டதா, போலிஸ் அட்டூழியம்...?
மழவராயனேந்தலில் ஒருவரைச் சுட்டுக்
கொன்றனர். கீழத்தூவல், கீரந்தை உளுத்தி
மடை, மழவராயனேந்தல் ஆகிய ஊர்கள்
மொத்தம் பதினேழு பேர்களைச் சுட்டுக்
கொன்றனர். அதில் ஒருவர் அரிஜன், இருவர்
அகம்படியர்.
தேவரை கைதுசெய்ய தீவிரம் காட்டிய
காங்கிரஸ் :
இப்படியாக பதினேழு பேரைப் பலி
வாங்கியதோடு காங்கிரஸ் அரசின்
வெறித்தனம் நின்று விட்டதா...? இல்லை.
ஐயாயிரம் பேரைக் கைது செய்து
சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது 836
பொய் வழக்குகள் போனர். இத்தனைக்கும்
மேலாக, முத்துராமலிங்க தேவர் மீது
கொலை வழக்குப் போட்டனர். தேவரின்
செல்வாக்கைக் குறைக்கக் காங்கிரஸ்
எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாயின.
தேவரின் மீது குற்றப்பட்டியல் 1952 ஆம்
ஆண்டு முதல் பொதுத்தேர்தலைத்
தொடர்ந்து, தேவரின் வளர்ந்து வந்த
செல்வாக்கும் பர்வர்ட் பிளாக் குறித்த
வெற்றிகளும் காங்கிரஸ் வட்டாரத்தில்
தேவரின் மீது ஒரு பகைமை தோன்றக்
காரணமாக அமைந்ன. தேவரின்
செல்வாக்கு, அவரது கட்சியின் வளர்ச்சி,
வெற்றியைப் பொறுத்துக் கொள்ள
முடியாத காங்கிரஸ், தேவருக்கு எதிராக
குறுக்கு வழிகளில் இறங்கத்
தொடங்கியது. தேவரின் நடவடிக்கைகள்,
அவரது மேடைப் பேச்சுக்கள் கண்காணிக்கப்
பட்டன.
இந்நிலையில் 1957 -ம் ஆண்டு செப்டம்பர்
மாதம் 28-ஆம் நாள் மதுரையில் தமுக்கம்
திடலில், காங்கிரஸ் சீர்திருத்தக் கட்சியை,
இந்த தேசிய ஜனநாயக காங்கிரஸ் கட்சியாக,
அமைப்பு ரீதியாக உருவாக்க, மாநாடு
நடைபெற்றது. மாநாட்டில்
ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் கலந்து
கொண்டனர். மாநாட்டைத் திறந்து வைத்து
தேவர் மூன்று மணி நேரம் பேசினார்.
இந்திய மக்களின் தொன்மை மிக்க
பண்பாட்டுப் பாரம்பரியம், வீரம், விவேகம்
போன்றவை பற்றியும், வாணிபம் செய்ய
வந்த வெள்ளையன் தனது பிரித்தாளும்
சூழ்ச்சியால் இந்தியாவை வளைத்துப்
போட்டதைப் பற்றியும் விரிவாக தேவர்
தனது உரையில் எடுத்துரைத்தார்.
காங்கிரஸ் ஆட்சியின் அராஜக அலங்கோல
ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்தார்.
அவரது பேச்சு ஒரு சரித்திர நிகழ்ச்சியாக
அமைந்தது. மறுநாளும் மாநாடு
நடைபெற்றது.
தேவரை கைது செய்து மகிழ்ந்த
காங்கிரஸ் :
தேவர் முதல் நாள் மாநாட்டைத் திறந்து
வைத்துப் பேசிவிட்டு அன்று இரவு 10
மணி அளவில் காரில், தனது
இருப்பிடமாகிய நேதாஜி ஆபிசிற்குச்
சென்று கொண்டிருந்தார். வைகை
ஆற்றுப் பாலத்தில் தேவரது கார் வந்த
போது போலிசார் காரை நிறுத்தி
தேவரை கைது செய்தனர். தேவர் சிறிதும்
பதற்றப்படாமல், தான் அணிந்திருந்த
ருத்ரதட்ச மாலையை, உடனிருந்த ஜனநாயக
காங்கிரஸ் தலைவர் டி.ஜி.
கிருஸ்ணமூர்த்தியிடம் கொடுத்து விட்டு, "மக்களை அமைதியாக இருக்கச்
சொல்லுங்கள். அஞ்ச வேண்டாம். சத்தியம்
வெல்லும்" என்று கூறிவிட்டு, போலிஸ்
வேனில் ஏறிக்கொண்டார். போலிஸ் வேன்
பலத்த பாதுகாப்புடன் பறந்தது.
நேரிடையாக தேவரிடம் மோதி வெற்றி
பெற முடியாத காங்கிரஸ்
கட்சித்தலைவர்கள்...
மறைமுகமாக
தேவரவர்களைப் பழிதீர்த்துகொண்டார்கள்.
1957 ல முதுகுளத்தூர் கலவரத்தை வெகு
நேர்த்தியாக திட்டமி்ட்டு உயிர் சேதங்களை
மட்டுமல்ல
இன்றுவரைக்கும் தலித்துகளுக்கும்
தேவரினத்துக்கும் குரோதத்தை
மூட்டிவிட்டு மன ஊனங்களை ஏற்படுத்திய
பெருமை காங்கிரஸாரையே சாரும்.
விரும்பத்தகாத அந்த சம்பவத்தால் மனம்
நொந்த தேவரவர்கள் "பரம்பரை பரம்பரையாக
அரிசனங்களும், தேவர்களும் தோளோடு
தோள் இணைந்தவர்கள்.
அவர்களைத்தாக்குவதும்
துன்புறுத்துவதும் என் ரத்தத்தைச்
சிந்தவைப்பதுபோலாகும்"
"அரிசன மக்கள் என் சகோதரர்கள்
அவர்களைத்தாக்காதீர்கள். அவர்களைத்தாக்க
வேண்டுமென்று நினைத்தால் முதலில்
என்னைக் கொன்று விட்டு அப்புறம்
அவர்களிடம் போங்கள்"
என்று 10.09.1957 பொதுக்கூட்டத்தில்
உரைத்தார்.
தேவரவர்கள் அனைத்து வகுப்பினருக்கும்
பா.பிளாக் கட்சியில் முக்கியத்துவம்
கொடுத்திருந்தார்; தலித் களுக்கும்
பொறுப்புக்களையும்,எம்.எல்.ஏ., போன்ற
பதவிகளையும் கொடுத்திருந்தார்
"எனக்கு வகுப்புவாதி என்று பெயரிட்டுப்
பார்த்தார்கள்.
நான் எல்லோருக்கும் பொதுவான தேசிய
வாதியாக இல்லாமல் வெறும்
வகுப்புவாதியாக மட்டும்
இருந்திருந்தால் நான் தேர்தலில்
ஜெயித்திருக்கவே முடியாது. ஏனெனில்
என் தொகுதியில் 18 ஆயிரம்பேர்தான் நான்
சார்ந்துள்ள வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
ஆனால் நான் இரண்டு லட்சம்
ஓட்டுக்களுக்கும் மேல்
ஒவ்வொருதடவையும் வாங்குகிறேன்"
மனம் நொந்து, விரக்தியாகி வாழ் நாளின்
கடைசி பொதுக் கூட்டத்தில் பேசும்போது
தேவரவர்கள் ஆற்றிய சோக உரை இது.
இம்மானுவேல் கொலை வழக்கில்
கடுமையாக அலைக்கழிக்கப் பட்டு...
இறுதியில் குற்றவாளியில்லையென
விடுதலை செய்யப் பட்டார்.
ஒரு எம்.பி -ஐ, ஒரு தேசியத்தலைவரை,
விடுதலைப் போராட்ட வீரரை,
ஆங்கிலத்திலும் தமி்ழிலும் சரளமாகச்
சொற்பழிவு நிகழ்த்துகின்ற அபூர்வத்
தலைவரை....... குற்றவாளி இல்லையெனச்
சொல்ல எடுத்துக்கொண்ட காலங்களில்
திட்டமி்ட்டே அவரது உடல் நலத்தைச்
சீர்குலைத்து...
துன்பத்தைக் கொடுத்து..
இறுதியில் மரணத்தையும் கொடுத்தார்கள்
இம்மானுவேல் கொலைவழக்கில் அவரது
மைத்துனரும், பரமக்குடி தேவேந்திர குல்
வேளாளர் பண்பாட்டு மையத்தின் தலைவர்
ஜி.பாலச் சந்திரன் கூறுகிறார் "தேவர் சட்ட
மன்றத்திலும், தனது சொந்த வீட்டிலும்
பள்ளர் இன மக்களை சமமாகப் பாவித்து
நானே நேரில் பார்த்துள்ளேன். மறவர்,
பள்ளர் இடையே நல்லுறவை வளர்த்தவர்
தேவர். அவர் இம்மானுவேல் கொலைக்கும்
காரணமாக இருந்தார் என்பதில்
நம்புவதிற்கில்லை"
தேவரவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்
பட்டதும் :
1962 ல் நடந்த அருப்புக்கோட்டை
பாராளுமன்றத்தேர்தலிலும்,
முதுகுளத்தூர் சட்டமன்ற தேர்தலிலும்
அமோக வாக்குளைப் பெற்று வெற்றி
பெற்றார். அமோக வாக்குகள் தலித்
மக்களேல்லொரும் சேர்ந்தளித்த வாக்.......
அவர் மேலிருந்த கலங்கம் துடைக்கப் பட்டது
ஆனால் அவரது உயிரையுமல்லவா
எடுத்துக்கொண்டுபோய் விட்டது 55
வயதிலேயே.
நன்றி : சகோதரர் முத்துராமலிங்கம் .
ஆர்குட் தேவர் குழுமம் .
Posted 23rd January 2013 by kumar pandian
23
JAN கீழத்தூவல் - தேவரின ஐவர் படுகொலை (1957)
0 Add a comment
உலகத்தில் எத்தனையோ உத்தமர்கள்
தோன்றினார்கள். ஆனால் 20 ஆம்
நுற்றாண்டில் உணர்ச்சிகளை உள்ளடக்கி
தியாகத்தை வெளிப்படுத்தி
மனோதத்துவம் என்பதை ஏற்படுத்தி
தெய்வீகத்தையும் தேசியத்தையும்
ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி
துல்லியமாக தனது பாதை விலகாது
நடந்தவர் முத்துராமலிங்கத் தேவர் ஆவார்.
அவரைத் தவிர மற்றையோர் யாரும்
இன்னும் பிறந்து வரவும் இல்லை;
இனிமேல் பிறக்கவும் முடியாது.
விவேகானந்தரின் தாசராகவும்
நேதாஜியின் நேசராக, சத்தியத்தை சீடராக
விளங்கியவர் பசும்பொன்
முத்துராமலிங்கத்தேவர். அவர் வார்த்தை
பிறழாது நடக்கக்கூடியவர். திடமானவர்,
நெறியாளர், திட வைராக்கிய மெய்ஞானி,
திறமைமிகு தியாகச்சுடர், தீரமிகு
அரசியல் தீர்க்கதரிசியாவார். வெண்மை
நிறங்கொண்டு உடையளவில்
மட்டுமல்லாது மனதளவிலும் விளங்கியவர்.
மன்னராக இல்லாமலும் மன்னராக
விளங்கினார்.’பசும்பொன்’ என்ற
சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு.
ஒன்று பசும்பொன் என்றால் சுத்தமான
தங்கத்தைக் குறிக்கும்.மற்றொன்று
பசும்பொன் என்றால்
தேவர்த்திருமகனாரையே
குறிக்கும்.திருமகனார் அவர்கள் தமிழகம்
உயர தமிழ் வளர தமிழ்ச்சமுதாயம் உயர
போராட்டக்கல்லில் உரசி உரசி
மக்களுக்காக பாடுபட்டிருக்கிறார். சேது
வேங்கை என்றும்
அழைக்கப்படுவார்.தவசிக்குறிஞ்சி,
பசும்பொன் என்ற இரண்டு பெயர்களும் ஒரே
ஊரைக்குறிக்கும். தவசிக்குறிச்சி
என்னும் ஊர் இராமநாதபுரம்
அரண்மனையில் இன்றும் யாரும்
நுழையமுடியாத அளவிற்கு
விளங்குகிறது என்றால் அப்போது எப்படி
இருந்திருக்கும்.
குடும்ப பரம்பரை :
அதிசிறை மீட்டத்தேவர் -கருப்பாயி என்கிற
தம்பதியினர்க்கு நான்கு மகன்கள்.
வெள்ளைச்சாமி என்ற சிறைமீட்டத்தேவர்
நாகலிங்கத்தேவர், முத்துராமலிங்கத்தேவர்,
நவநீதக் கிருஷ்ணத்தேவர் இதில்
முத்துராமலிங்கத்தேவரை
ஆதிமுத்துராமலிகத் தேவர் என
வைத்துக்கொள்வோம். இவர் தான் வீட்டை
பெரும் உழைப்பால்
பெருங்குடியாக்கினார். இருந்தாலும்
மிகவும் நேர்மையாளராகத் திகழ்ந்தார்.
ஆதி முத்துராமலிங்கத்தேவரின்
நேர்மையும் நெறிவழுவாத தன்மையும்
கண் இராமநாதபுர முத்துராமலிங்க
சேதுபதி ராஜா நெருங்கிய தொடர்பு
கொண்டார். அதன்பிறகு அரண்மணைக்கு
சாதாரணமாகப் போகக் கூடிய உரிமை
அவருக்கு மட்டும் இருந்து வந்தது.
இதனால் பெரும் ஜமீன்தார் ஆகும்
அளவிற்கு ஆதிமுத்துராமலிங்க
சேதுபதிராஜா அவர்கள் நிலபுலன்கள்
கொடுத்து ஜமீன்தார் ஆக்கினார்.
தேவர்த்திருமகனுக்கு பெரும் உதவியாக
இருந்தவர் பிறந்ததும் இக்கால
கட்டத்தில்தான் இவர் வேளாளர் என்ற
பிரிவைச் சேர்ந்தவர் பிறவியிலேயே
அனாதையான அவரை
ஆதிமுத்துராமலிங்கத்தேவரே வளர்த்து
வந்தார். இவரது பெயர் குழந்தைச்சாமி
என்ற வைத்திய பிள்ளையாகும். இவர்கள்
நான்கு பேர்களில் வெள்ளைச்சாமி என்ற
சிறை மீட்டத்தேவர் பொன்னம்மாள் என்பவரை
மணந்துகொண்டார். இந்த சிறப்பு பெற்ற
தம்பதியினர்க்கு மீனாம்பிகை என்ற மகளும்
உக்கிரபாண்டி என்ற மகனும் பிறந்தார்கள்.
காலம் மெல்ல நகர்ந்து வெள்ளைச்சாமி
தேவர் பெரும் செல்வந்தரானார். அதாவது (32 1/2) முப்பத்திரண்டரை “கிராம அகில்தா”
என்ற சிறப்பைப் பெற்று விளங்கியது.
இதனை முழுமையாக செயல்படுத்தும்
திறமையுடையராய் உக்கிரபாண்டித்தேவர்
செயல்பட முடியவில்லை எனவே
ஆதிமுத்துராமலிங்கத்தேவர்
சொந்தப்பிள்ளையாக வளர்த்து வந்த
வைத்திய பிள்ளை அவர்களை
உதவியாளராக நியமித்தனர்.பெரும்
குடும்பங்களில் இரண்டு மூன்று
முறைப்பெண்கள் இருந்தால் பெண்
திருமணம் செய்வதில் பெரும் சண்டை
வரும் எனவே உக்கிரப்பாண்டித்தேவருக்கு
இரண்டு அத்தைமார்கள் அவர்களிடையே
சண்டை வரக்கூடாது என்பதற்காக
இந்திராணி என்பவரையும் காசிலட்சுமி
என்பவரையும் உக்கிரபாண்டித்தேவர்
திருமணம் செய்துகொண்டார். 31.8.1906 ஆம்
ஆண்டு ஆவணித்திங்க்ள் 16 ஆம் நாள்
அரசர்கள் வீட்டுத்திருமணம் போல் வெகு
சிறப்பாக நடந்தது. இதில்
திருமணமானாலும் காசிலெட்சுமி
என்பது வயதான பருவமடைந்த பெண்
என்பது குறிப்பிடத் தக்கது.
அழகிலும் அறிவிலும் அடுத்தவரை
உபசரிக்கும் பண்பிலும் சிறந்தவராகவும்
பெண்களின் அரசியாகவும் இந்திராணி
அம்மையார் திகழ்ந்தார். இருவருக்கும்
பெண்குழந்தை பிறந்தது. அந்த
குழந்தைக்கு ‘ஜானகி’
எனப்பெயரிட்டார்கள். பெயரிட்ட நாளன்று
திருவிழா போல அந்நாளைக்
கொண்டாடினார்கள். குழந்தை ‘ஜனாகி’
வருகையால் உற்றார் உறவினர் எல்லோரும்
சந்தோஷ கடலில் மூழ்கினார்கள். ஐந்தாம்
மாதம் முடியும் தருவாயில் குழந்தை
ஜானகிக்கு விஷக் காய்ச்சல் வந்தது. தான்
வசதி என்றால் என்ன பண்ண முடியும்.
தனது ஐந்தாம் மாதம் உலக வாழ்க்கையை
முடித்துக் கொண்டது குழந்தை ஜானகி.
உக்கிரப்பாண்டித்தேவரும் இந்திராணி
அம்மையாரும் பெரும் துக்கத்தில்
ஆழ்ந்தார்கள். பலபேர் உலக
நடைமுறைகளைப் பற்றி எடுத்துக்கூறி
மீண்டும் பழைய நிலைமைக்குத்
திரும்பினார்கள்.முருகப் பக்தி கொண்டவர்
இந்திராணி அம்மையார். அந்த முத்துவயல்
ஞானியை இந்திராணி அம்மையார்
மீண்டும் பக்தியோடு நினைவுக்
கூறத்தொடங்கினார். அந்த முருகப்
பெருமானின் திருத்தொண்டரான
ஞானியை எண்ணி மனங்கலங்கி நீங்கள்
அன்று கனவில் தோன்றி நல்வாக்குச்
சொல்லி திருநீரு கொடுத்தீர்கள். ஆனால்
என் மகள் மறைந்தாளே என்று வாய்விட்டு
அழுது வருந்தினார். இந்திராணி
அம்மையார் ஏழை எளிய மக்களை மிகவும்
நேசமுடன் நடத்துபவர் ஆவார். இளகிய
மனமும் இனிமையான குணமும்
கொண்டவர் இந்திராணி அம்மையார்,ஆகவே
தேவர் திருமகன் தலையானங்கானத்துச்
செருவென்ற பாண்டியன் காலத்து
வந்தவர்தான் நமது
தேவர்திருமகன்.முத்துராமலிங்கத தேவர்
அவர்கள் பல்வேறு ஆவனங்களின் மூலம்
வெளிப்படுத்தியிருக்கின்றார்.
பிறப்பு :
30.10.1908 ஆம் ஆண்டு தேவர் திருமகன்
பிறந்தார். 32 கிராமங்களும் மகிழ்ச்சி
வெள்ளத்தில் திரண்டு வந்தது. ஊர்கள்
அனைத்தும் கூடி உள்ளம்
கனிந்தது.வீரமும், விவேகமும்,
நேர்மையும் கொண்டு வாழ்ந்த ஆதி
முத்துராமலிங்கத்தேவரின் பெயரையே
வைக்கவேண்டும் என்று அப்பெயரையே
தேவர் திருமகனுக்கு வைத்தனர். ஆகவே
இவர் முத்துராமலிங்கம் என்று
அழைக்கப்பட்டார். குழந்தையின் பாசத்தில்
அளவுகடந்த எல்லையைத் தாண்டிய
அவ்வம்மையார் தங்க தமிழ் மகனை தனியே
விட்டுவிட்டு இறந்துவிட்டார். காலனுக்கு
கருணை இல்லையே.
உக்கிரபாண்டியத்தேவர் இதயத்தில் பெரும்
இடி விழுந்தது என்றே சொல்ல முடியும்.
அப்போது இந்துமாதக் குழந்தையே தேவர்
திருமகன். அப்போது குழந்தையின்
அழுகைசத்தம் கேட்டு
உக்கிரபாண்டித்தேவர் வெறுப்படைந்தார்.
அப்பொழுது அவர் கொண்ட வெறுப்பு
உக்கிரபாண்டித்தேவர் இறந்துபோகும்
வரையிலும் இருந்தது. ஆகத் தன்
வாழ்நாளில் தாய் தந்தை பாசமே
அறியாது இருந்திருக்கிறார் என்பது
குறிப்பிடத்தக்கது.துன்பங்கள் என்பது
மழையில் இருக்கும் கல்லை உருட்டி
பாதளத்தில் தள்ளிவிடுவது போன்றது
அதுபோல் மனிதனின் துன்பம் தொடர்ந்து
வந்துகொண்டே இருக்கும். அதுபோல
மீண்டும் ஒரு துன்பம்
உக்கிரபாண்டித்தேவரை மேலும்
தாக்கியது. அவரது இரண்டாவது
மனைவியான காசிலெட்சுமியையும்
மரணம் வலை வீசிப்பிடித்து
இழுத்துக்கொண்டது. குழந்தை
முத்துராமலிங்கத்திற்கு இப்போது
ஆறாவது மாதம் தவித்து கலங்கியது.
தேவர் திருமகனார் அவர்களுக்கு மாட்டுப்
பாலோ ஆட்டுப்பாலோ கொடுக்க
விரும்பவில்லை, வைத்தியம் பிள்ளை
தாய்ப்பால் கொடுக்க வேண்டும்
அப்போதுதான் அறிவு நன்றாக வளரும் என
அவர் தெரிவித்தார். பசும்பொன் கிராமம்
முழுக்க தாய்மார்கள் தேடப்பட்டார்கள்.
தேடியதில் “மாதா சாந்த் பீவி” தாயாக
இருந்தார்கள். அந்தத் தாய் தன்
குழந்தையினும் மேலாக பாலுட்டி
வளர்த்தார்.இவர்க்கு பால் கொடுத்ததால்
பிற்காலத்தில் அந்த தாயின் பெயர்
வரலாற்றில் பொன் எழுத்துக்களால்
பொறிக்கப்படுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாட்டிமார்கள் :
இந்திராணி தேவியார் இறந்துபோன
பிறகு உக்கிரபாண்டித்தேவரின் போக்கில்
நிறைய மாறுதல்கள்
ஏற்பட்டன.இதற்கிடையில்
உக்கிரபாண்டித்தேவரிடம் குழந்தைச்சாமி
பிள்ளையைப்பற்றி இல்லாததும்
பொல்லாததும் சுமத்தி 32 கிராம
நிர்வாகத்தையும் பார்த்து வந்த
குழந்தைச்சாமி பிள்ளை நீக்கப்பட்டார். இவர்
பேச்சாற்றல் மிக்கவர். கணக்கு வழக்குகளை
சிக்கனமாக வைப்பதில் கெட்டிக்காரர்
என்றும் நல்ல விசுவாசி என்றும்
பெற்றிருந்தார். இருந்தும் மிகவும்
நன்றியோடு இருந்த குழந்தைச் சாமி
இந்திராணி அம்மையார் இருந்திருந்தால்
குடும்பம் இவ்வளவு சீரழிந்து
போயிருக்குமா? என்று எண்ணி
வருந்தினார்.
அதனால் முத்துராமலிங்கத் தேவரின்
பாட்டி ராணியம்மாள் அவரை வளர்க்கும்
பொறுப்பைப் பெற்றார்.கனிவு, வீரம், ஈகை,
சகோதரத்துவம் போன்ற குணங்களோடு,
தனது இளமையைத் துவங்கிய
முத்துராமலிங்கத் தேவர், தன் வாழ்நாள்
முழுவதும் அதே குணங்களோடு
வாழ்ந்தார். அதேபோல், அவர் ஒரு சித்தர்
என்கிற அளவிற்கு ஆன்மிகவாதியாகத்
திகழ்ந்தார்.சிறுகுழந்தை பருவத்தில்
மிகவும் துடிப்புடனும்
பொறுமையுடனும் எதையும்
நினைத்தால் செய்துமுடிக்கவேண்டும்
என்ற எண்ணத்துடனும்
சிறுவயதிலிருந்தே செயல்பட்டார்.
சிறுவயதில் ஒரே ஒரு விளையாட்டு
அவருக்கு மிகவும் பிடித்தமானது
மரத்தின் உச்சிக்கு ஏறி கால்களை
பிண்ணிக்கொண்டு தலைகீழாக
தொங்குவது அவருக்கு பிடித்தமான ஒர்
விளையாட்டு.
கல்வி வாழ்க்கை :
ஆறுவயதில் தேவர் திருமகனின் கல்வி
வாழ்க்கை தொடங்கியது. அக்கால
வழக்கப்படி குருகுல வாழ்க்கையைக்
கல்வியாக திண்ணைப்படிப்பு தஞ்சாவூர்
ஆசிரியர் வாயிலாக கற்றார். மேலும் பல,
ஆசிரியர்களிடம் கல்வி பயின்று
வந்தார்.1917 ஆம் ஆண்டு கமுதியில் இருந்த
அமெரிக்க மிசன் ஆரம்பப்பள்ளியில் சேர்ந்து
பயின்று வந்தார்.முத்துராமலிங்கத்தேவர்
இயற்கையாகவே பல நல்ல குணநலன்களைப்
பெற்றிருந்தார். அவர் இளைமையிலேயே
சொல்களை திருத்தமாக பயின்றுவந்தார்.
அவர் வேலையை அவரே
கவனித்துக்கொள்வார். இளமை
முதற்கொண்டு திருநீரு பூசும் பழக்கம்
தேவர் திருமகன் கடைபிடித்து வந்தாராம்.
ஆடம்பரமான ஆடை அணிகள்மேல் அவருக்கு
விருப்பம் இல்லை. துய ஆடை அணிவதில்
ஆர்வம் கொண்டு விளங்கினார்.
தேவர் திருமகனார் தெய்வீகச் செல்வராய்
வளர்ந்து பள்ளி வளாகத்தில் ஒளிவிளக்காக
நிமிர்ந்து நின்ற காலகட்டத்தில்
உக்கிரபாண்டியதேவர் பலவித அனாவசிய
செலவுகளை உண்டாக்கிக் கொண்டு
வேண்டாத நண்பர்களுடன் நட்பு கொண்டு
வருமானத்தையும் மீறிய செலவு
செய்தார். சொத்துக்கள் எல்லாம் அழிந்தன.
மீண்டும் குழந்தைச்சாமி பிள்ளை
அவர்களின் முயற்சியில் மீண்டும்
சொத்துக்கள் பெறப்பட்டது.
ஆசிரியருக்கே அறிவுரை :
1924 ஆம் ஆண்டு தெய்விகச் செல்வர் தமது
ஐந்தாம் வகுப்பை முடித்தார்.
உயர்நிலைக்கல்வி கற்பதற்காக இப்போது
மதுரையில் புகழ்பெற்று விளங்கும் ( u.c.school ) ஐக்கிய கிருஸ்தவ
உயர்நிலைப்பள்ளியில் போய்ச்
சேர்ந்தவர்.ஒருநாள் சிறுவனாக இருந்த
முத்துராமலிங்கத் தேவரிடம்,ஆசிரியராக
இருந்த ஒரு கிறிஸ்தவ பாதிரியார், “நீ
இந்து. உன்னை ஒன்று கேட்கிறேன்… இதோ
இங்கே கீழே கிடக்கிறதே இந்தக் கல்லும்
தெய்வமா?” என்று சிறு கல் ஒன்றை
எடுத்துக்காட்டிக் கேட்டார்.அதற்கு
சிறிதும் முகமாற்றமில்லாமல்
சிரித்தபடியே முத்துராமலிங்கத் தேவர்
பதில்சொன்னார்:
“ஐயா… ஒரு கல்லில் துணி துவைக்கலாம்.
ஒரு கல்லில் அம்மி அரைக்கலாம்…மற்றொரு
கல்லில் சுவாமி சிலை வடிக்கலாம்.
ஆனால், துணி துவைக்கும் கல்லில்
துணியை மட்டும்தான்
துவைக்கமுடியும். அதை கடவுளாகத்
தொழ முடியாது. அதேபோல
அம்மிக்கல்லை அரைக்க பயன்படுத்துவதை
விட்டுவிட்டு,கடவுளாக யாரும் கும்பிட
மாட்டார்கள். சுவாமி சிலையும்
அப்படித்தான்… அது
வணங்குவதற்காக,தொழுவதற்காக
மட்டும்தான். அதில் துவைக்கவோ,
அரைக்கவோ முடியாது. ஆக… கல் என்பது
ஒன்றுதான். அதில் மூன்று விதமான
செயல்கள் நிகழ்கின்றன. அதனால், கீழே
கிடக்கிற இந்தக் கல்லை எடுத்துஇதுவும்
தெய்வமா என்று நீங்கள் கேட்டால்
எப்படிய்யா…?” சிறுவனான
முத்துராமலிங்கத் தேவர் இப்படிக்கேட்க,
அவரின் விளக்கத்தால் வாயடைத்துப்போன
பாதிரியார், அன்றிலிருந்து தேவருக்கு
பள்ளிக்கூடத்தில் இரட்டிப்பு மதிப்பைக்
கொடுக்கத் துவங்கினார்.
தலித்சகோதரர்களும்... தேவரவர்களும்
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் :
மனிதம் வளர்வதற்குத் தம் வாழ்க்கையை
அரிப்பணித்த மாமனிதர்களுள் பசும் பொன்
தேவரும் ஒருவர். சமூக நீதிக்காகவும்,
ஒடுக்கப் பட்ட தாழ்த்தப் பட்ட மக்களுக்காகக்
குரல் கொடுத்த தேவர் திருமகனின்
தியாகப் பண்புகள் உலகளாவிய பொதுமை
நோக்கம் கொண்டவை..
திருக்குறள் பாடிய நூலாசிரியருக்கு
தெய்வப் புலவர், பெரு நாவலர், பிரம தேவர்
எனப்படுவதில் தேவர் விளித்துக் கூறப்
படுவதுபோல...
இலக்கியத்தில் தோலா மொழித்தேவர்,
திருத்தக்கத்தேவர் என்றிருப்பதைப் போல....
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்
என்பதும் அவரது இனத்தைக் குறிக்கின்ற
பெயரல்ல..
'தேவர்' என்பது ஐயா அவர்களை மட்டுமே
பெருமையாக அழைப்பதாகும்.
தலித் மக்களுக்காக தேவர்:
சூரியனையும், சந்திரனையும்,
மி்ன்மி்னிப்பூச்சிகளைப்
பாவித்தால் எப்படி இருக்கும்?
அப்படித்தான் இருக்கிறது பாரதி, வ.உ.சி.,
தேவர், அம்பேத்கார் போன்ற
தேசியத்தலைவர்களை சாதியத்
தலைவர்களாகச் சொல்வது...
தலித் மக்களுக்கான ஆலயப் பிரவேசம் நடத்த
ராஜாஜி மந்திரிசபை சுதந்திரப்
போராட்டவீரர் வைத்திய நாதய்யர் வழியாக
முயன்றபோது, வெளியில் கடுமையான
எதிர்ப்புக் கிளம்பியது.
செய்வதறியாது திகைத்துப் போயிருந்த
அய்யரவர்களுக்கு"தேவரை அணுகுங்கள்"
என்கிற ஆலோசனை ராஜாஜியிடமி்ருந்து
கிடைத்தது.
அப்பொழுது தேவரவர்களுக்கும்
ராஜஜிக்கும் அரசியல் ரீதியாக முரண்பட்டு
இருந்தாலும், இக்காரியத்தில் தேரரவர்கள்
உதவ முன் வந்தார்.
"உங்களின் எதிர்ப்பைக் கைவிடாமல்
மேலும் கெடுதல் செய்தால் நானே
பல்லாயிரக்கணக்கான ஹரிசனங்களையும்
மற்றுமுள்ளவர்களையும் படையாகத்
திரட்டி தமி்ழகம் முழுக்க ஆலயப் பிரவேசம்
செய்வேன்" - என்று சானாதனிகளைப்
பார்த்து தேவரவர்கள் கடுமையாக
எச்சரித்ததும் சானாதனிகள் பணிந்தனர்.
இதனைத் தேவரவர்களே தமி்ழக
சட்டமன்றத்திலும் தனது சொற்பொழிவில்
தெரிவித்திருக்கிறார்
1952 ல் மீண்டும் ராஜாஜி மந்திரிசபை
அமைந்தபோது "குலக் கல்வித்திட்டம்" என்ற
வர்ணாஸ்ரம அடிப்படையிலான திட்டம்
கொண்டுவந்தபோது இதை வன்மையாக
எதிர்த்து இவ்வாறு கூறினார்"ராஜாஜி
கொண்டு வந்த ஆலயப் பிரவேசத்தை
முன்பு ஆதரித்த நாங்கள், குலக்கல்வியை
எதிர்க்கிறோம்" என்று தலித்களுக்காகக்
குரல் கொடுத்தார்
மேலும் அதே சபையில் பலமுறை பேசும்
போதும் குலக் கல்வித்திட்டத்தை
கடுமையாக எதிர்த்தார்
"தகப்பன் தொழிலை மகன் செய்யத்தான்
வேண்டும் மென்ர ஒரு சூழ்னிலை ஒரு
சமுதாய அமைப்பு கல்வி முறை முன்பு
இருந்ததது. அதை நான் மறுக்க வில்லை.
ஆனால் இன்றைக்கு எந்த ஜாதியில்
பிறந்தவனாக இருந்தாலும் கூட,
தன்னுடைய திறமைக்கேற்ப
எந்தத்தொழிலையும் செய்யலாமென்ற ஒரு
சூழ் நிலை ஏற்பட்டுவிட்டது என்பது கணம்
முதலமச்சரப் போன்ற அறிவாளிக்குத்
தெரியாமலிருக்க முடியாது"
தலித் மக்களுக்காக 1954 மார்ச் 24 ல் அவர்
ஆற்றிய உரை:
"இந்த ஹரிசனம், அதில் முன்னேற்றம் என்று
சொல்லப் படுகிற விவகாரம்...
இந்திய தேசத்திற்கும், சிறப்பாக இந்து
மதத்திற்கும் ஒரு பெரும் களங்கம் என்று
சொன்னால் அது மி்கையாகாது - இந்த
(சாதி) பழக்கமானது மக்களைச்
சின்னாபீன்னப்படுத்திவிட்டது. இது
பரிதாப வளர்ச்சி, பிற்போக்கான
வளர்ச்சியுங்கூட
அதே போல சதோதரர்களாக வாழ்ந்த
சமூகத்தால் தொழிலின் காரணமாக
வகுப்பப்பட்ட பொழுது தீண்டாமை என்கிற
இழிவான நிலைக்கு ஆகிவிட்டார்கள்" - என
தீண்டாமைக்கொடுமைக்கு எதிராகக்
குரல் கொடுத்தார்.
அது மட்டுமல்ல தலித் மக்களின் வாழ்வு
உயரச் செய்ய வேண்டியது என்ன
என்பதையும் சுட்டிக்காட்டினார்.
"ஹரிசனங்கள் பணக்காரர்களாக
இருப்பார்களானால் அவர்களோடு
கைகோர்த்து கலந்து வாழவும், சம்பந்தம்
செய்து கொள்ளவும் தயாராக
இருக்கிறார்கள் என்பதைப் பழக்கத்தில்
பார்க்கிறோம்...
செய்யவேண்டியது என்னவென்று
கேட்டால், பெரும்பாலான நிலங்கள்
வீணாகக் கிடக்கின்றன. அந்த
பெரும்பாலான நிலங்களை தர்காஸ்து
கொடுக்கிறபோது பழைய அரசாங்கத்தின்
பழக்கப்படியே உயர்ந்தவர்கள், வேண்டியவர்கள்
என்பவர்களுக்குத்தான்
கொடுக்கப்படுகிறதே தவிர, அந்த
ஏழைகளுக்கு ஏன் சலுகை காட்டவில்லை...
பெரும்பாலான ஹரிசனங்கள்
உழுதுகொண்டே வாழ்வோர்களாக சர்க்கார்
ஆக்குமானால் பிறருக்கு கை கட்டி
வாழ்கிற இழிவான நிலைமையிலிருந்து
மாறி ஹரிசனங்கள் நல்ல
விவசாயிகளாவார்கள். அந்த முறையில்
ஹரிசனப் பிரச்சினையை 60%
செளகரியமாகத் தீர்க்கலாம்"
மதுரையில் ஹரிஜனங்களுக்கு என்று ஒரு
விடுதியை அரசு கட்டியது, அது
ஊருக்கு வெளியே ஒதுக்குப் புறமாகக்
கட்டினார்கள் இதனை தேவர் விமர்சித்தார்:
"அது நகரத்தின் மத்தியில்
இருந்திருக்குமானால் பல ஹரிஜனங்கள்
வந்து தங்கவோ, அவர்கள் இதர சமூகத்தோடு
பழகவோ வசதியளிக்கும்" என்றார்.
தலித் மக்களூக்காக வாதாடும்
உரிமையோடு
"ஹரிஜன சகோதரர்களுக்கு ஒரு வார்த்தை
சொல்ல விரும்புகிறேன் "ஹரிஜனங்களுக்குள்ளேயே
ஒருவருக்கொருவர் ஒன்று சேர, சாப்பிடக்
கூசுகிறபொழுது எங்களை ஒன்றாக
இருக்கச் சொல்கிறார்களே என்று உயர்
ஜாதியார் எங்களப் போன்ற
சீர்திருத்தவாதிகளைக் கேட்க முடியாத்
நிலையை உண்டாக்க வேண்டாம்"
ஆம்! தலித் மக்களின் வாழ்வு உயர சரியான்
கோரிக்கைகளை வைத்தது மட்டுமல்ல,
அவற்றிற்காக தலித் மக்களும் தலித்
அல்லாதவரும் சேர்ந்து நின்று போராட
வேண்டும் என்றும் வேண்டுகோள்
விடுத்தவர் தேவரவர்கள்
சித்தாந்தங்களையும் இந்துமதக்
கோட்பாடுகளையும் நன்கு உணர்ந்த
தேவரவர்கள் எல்லோரையும் சமமாகவே
பாவித்தார். சகோதரர்களாகவும்,
இறைவனின் திருவுருவாகவும் கண்டார். "மனித தெய்வங்களே" என அனைவரையும்
அழைப்பார்
"உயர்வு தாழ்வு அற்றது தான் மனித உலகம்.
உயர்வும் தாழ்வும் மனிதனாகக் கற்பித்துக்
கொண்டவை. மனிதன் தன் உடலில்
உண்டாக்கிக் கொண்ட உயர்வு தாழ்வில் ஒரு
உறுப்பை உயர்வாக எண்ணி, இன்னொரு
உறுப்பைத்தாழ்வாக நினைக்கக்கூடாது.
கரம் கூப்பி வணங்கும் போது இரு
கைகளும் இணைந்துதான் வணங்க
வேண்டும்" என்று கூறி உயர்வு தாழ்வு
கூடாது, சாதி வேறுபாடுகள் கூடாது
என்றார்.
நிறம், சாதி பார்த்தா மனிதனை இறைவன்
படைத்தான். அனல் நிறம் கொண்ட
சிவனையும், அட்டக்கரி நிறம் கொண்ட
கண்ணனையும் நாம் நிறம் பார்த்து
வணங்குவதில்லை. மனிதர்கள் சாதி
வித்தியாசம் பார்க்கக் கூடாது என்பதற்கு
அரன் மகன் குமரனையும், குறமகள்
வள்ளியையும் தம்பதியாக்கிக்
காட்டுகிறது நமது புராணம்.
"சாதி என்பது பச்சை அ நாகரிகம்
சாதியையும் நிறத்தையும் பார்ப்பவன்
அரசியலுக்கு லாயக்கில்லை
சாதி பார்ப்பவன் தெய்வத்தை
வணங்குவதில்
அர்த்தமி்ல்லை
சாதிக்காக எதையும் செய்பவன்
அரசியலில்
புகுந்தால அரசியல் கெடும்.
சாதியும், நிறமும்
அரசியலுக்குமி்ல்லை
ஆன்மீகத்துக்குமி்ல்லை"
என மனிதனுக்குச் செய்யும் சேவையே
மகேசனுக்குச் செய்யும் பூஜை என்று
கூறினார்.
தாழ்த்தப் பட்டவர்களும், ஆதி திராவிடர்களும்
வாழ்க்கையில் பொருளாதார
முன்னேற்றமடைய கல்வி மி்க முக்கியம் என
உரைத்தார்"ஒரு சாதி ஆதிக்கத்திலுள்ள
பள்ளியில் மற்றொரு சாதி மாணவருக்கு
இடம் கிடைக்காத நிலையா" என் மனம்
நொந்தார்.
சமுதாயத்தில் தாழ்த்தப் பட்ட நிலையில்
உள்ளோர் தங்கள் தொழிலை தூக்கி
எறிந்து விட்டு வாழ்க்கையின்
முன்னேற்றமான தொழிலை செய்து
பொருளாதார வசதிகளை பெருக்கி அதன்
மூலம் தங்கள் குழந்தைளின் கல்வி
வளர்ச்சியில் கவனம் அதிகம் பெற வேண்டும்-
என்ற கேட்டுக்கொண்டார்.
பெரும் பணக்காரர்களே நிலங்களை வாங்கி
குவித்து கொண்டிருப்பதை அறிந்து
ஏழை மக்களும் குறிப்பாக தாழ்த்தப் பட்ட
மக்களுக்கு அரசு நிலங்களைப் பகிர்ந்து
கொடுங்கள். அவர்களை சொந்த நிலமுள்ள
விவசாயிகளாக ஆக்குங்கள் என்று
வேண்டுகோள் விடுத்தார். தாங்களும்
மற்றவர்களுக்கு இணையானவர்கள் என்ற
நிலை வர வேண்டுமென்று வேண்டுகோள்
விடுத்தார்.
தாழ்த்தப் பட்டவர்களுக்காகக் கட்டப் படும்
குடியிருப்புகள் ஊரை விட்டு
தொலைவிலில்லாமல் ஊருக்குள்ளேயே
கட்டவெண்டுமென்றார்.
பஸ்ஸிலோ, ரயிலிலோ சம அந்தஸ்த்தோடு
பயணம் செய்ய வேண்டும்; மக்களோடு
மக்களாக இணைந்திருக்க வேண்டும் என்று
கூறினார்.
வெறும் பேச்சளவில் போலிவேடமி்ல்லாமல்
தமது சொத்துக்களை தனது ' ம ர ண சா ச ன
த் தி ல்'
கூட ஆதிதிராவிட மக்களுக்காக தனது
நிலத்தின் பெரும் பகுதியை
எழுதிவைத்துவிட்டு இறந்தார்.
சமபந்தி உணவுமுறையைத் தானே
முன்னின்று நடத்திக் காட்டினார்.
தனது கண்காணிப்பிலேயே பல ஆதி
திராவிடச் சிறுவர்களை தனது
இல்லத்திலேயே வளர்த்து அவர்களை படிக்க
வைத்து வாழ்க்கையில் உயர்வடையச்
செய்தார்.
Posted 23rd January 2013 by kumar pandian
23
JAN பசும்பொன் தேவர் வரலாறு
Sign out
Notify me
Comment as:
Publish Preview
1 View comments
சமூக நினைவுகளும் வரலாறும்
சமூக நினைவுகளும் வரலாறும் ஆ.சிவசுப்பிரமணியன்
சமூகத்தின் வரலாறு என்பது பல்வேறு வகைமைகளாகப் பார்க்கத்தக்கது. இதில்
பண்பாட்டு வரலாறும் ஒன்றாகும். பண்பாட்டு வரலாற்று வரைவிற்கான தரவுகளில் ஒன்றாக ‘சமூக நினைவு’
அமைகிறது. பீட்டர் பர்க் என்பவர் ‘சமூக நினைவாக வரலாறு’ (History as social memory) என்று இதைக் குறிப்பிடுவார். ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வரலாறு எப்படி அச்சமூகத்தின் நினைவுகளில் வாழ்கிறதோ அதுபோல் ஒரு குறிப்பிட்ட ஆட்சி மரபின் செயல்பாடுகளும் சமூக நினைவாகத் தொடர்கின்றன. இந்நினைவானது அடித்தள மக்களின் வரலாற்று வரைவிற்குப் பெரிதும் துணைநிற்கும் தன்மையது.
அடித்தள மக்கள் தம்வாழ்வில் எதிர்கொள்ளும் முக்கிய அவலங்களுள் பாலியல்
வன்முறையும் ஒன்றாகும். இன்றுவரை பல்வேறு வடிவங்களில் இது தொடர்கிறது.
இராமநாதபுரம் மன்னர்களின் ஆட்சியில் அடித்தள மக்களின் மீது ஏவப்பட்ட பாலியல் வன்முறை குறித்த சமூக நினைவுகள் இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றன.
இராமநாதபுரம் மன்னர்கள்:
இராமநாதபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சிபுரிந்தவர்கள்
‘சேதுபதிகள்’ என்றழைக்கப்பட்டனர். தனது இலங்கைப் படை எடுப்புக்கு உதவியாக இருந்தமைக்காக இப்பகுதியைக் காவல் செய்யும் பொறுப்பை சேதுபதி மரபினரிடம் இராஜராஜ சோழன் வழங்கினான் என்ற கருத்து உண்டு (இராமசாமி 1990-175). லங்காபுரன் என்ற ஈழ அரசனின் தளபதியால் நியமிக்கப் பட்டவர்களே சேதுபதிகள் என்ற கருத்தும் உண்டு (மேலது). கி.பி .1604ல் இராமநாதபுரம் பகுதிக்கு சேதுபதியாக,
போகளூரை ஆண்டுவந்த சடையக்கத் தேவர் உடையார் என்பவரை முத்துக்கிருஷ்ண நாயக்கர் (1601-1609) என்ற மதுரை நாயக்கர் மன்னர் நியமித்தார்.
இதன் அடிப்படையில் நோக்கும்போது இராமேஸ்வரம் பகுதியை உள்ளடக்கிய
நிலப்பகுதிக்கு மதுரை நாயக்கராட்சிக்குக் கட்டுப்பட்ட மன்னராக
விளங்கியவர்கள் சேதுபதி என்ற பட்டத்துக்குரியவர்களாக விளங்கினர் என்று கூறலாம்.
கிழவன் சேதுபதி (1674-1710) என்ற சேதுபதி மன்னன், மதுரை நாயக்கர்களின்
மேலதிகாரத்திலிருந்து தம் ஆட்சிப்பகுதியை விடுவித்துக் கொண்டு தனிநாடாக ஆக்கினார். அத்துடன் போகளூரிலிருந்த தலைநகரை இராமநாதபுரத்துக்கு மாற்றினார்.
கி.பி.1792ல் கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டிற்குள் சேதுபதி பரம்பரை கொண்டுவரப்பட்டது. 1803ல் இராமநாதபுரம் சேதுபதி மன்னரின் தகுதி, ஜமீன்தார் என்ற நிலைக்குத் தாழ்த்தப்பட்டு இராமநாதபுரம் ஜமீன் என்று அவரது ஆளுகைக்குட்பட்ட பகுதி அழைக்கப்படலாயிற்று.
சேதுபதி மன்னர்கள் தமிழ், தெலுங்கு வடமொழிப் புலவர்களையும் இசைவாணர்களையும் ஆதரித்துள்ளனர். இராமநாதபுரம் அரண்மனைச் சுவர்களில் தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள், ஓவியக்கலையின் மீது சேதுபதி மரபினர் கொண்டிருந்த ஆர்வத்தை வெளிப்படுத்தின. சமய வேறுபாடின்றி இஸ்லாமியர்கள்,
கிறித்தவர்கள் ஆகியோரின் வழிபாட்டுத் தலங்களுக்கு மானியங்கள் வழங்கியுள்ளனர்.
விவேகானந்தரின் சிக்காக்கோ பயணத்திற்கு உதவி செய்தவர் பாஸ்கர சேதுபதி (1889-1903) என்ற இராமநாதபுரம் சேதுபதி மன்னர்தான். இவரது உறவினரும்
பாலவநத்தம் ஜமீன்தாருமான பாண்டித்துரைத்தேவர் வ.உ.சி நிறுவிய சுதேசிக் கப்பல் நிறுவனத்திற்கு நிதி உதவி செய்ததுடன் அதன் தலைவராகவும்
பணியாற்றினார். நான்காம் தமிழ்சங்கம் என்று கூறப்படும் மதுரைத் தமிழ்ச்
சங்கத்தை 1901 செப்டம்பர் 4 ல் நிறுவினார். இதற்கு பாஸ்கர சேதுபதி நிதிஉதவி புரிந்தார். ரா.இராகவையங்கார்,
மூ.இராகவையங்கார் போன்ற தமிழ் அறிஞர்கள் இச்சங்கத்தில் பணியாற்றினர்.
‘செந்தமிழ்’ என்ற இதழையும் இச்சங்கம்
வெளியிட்டது. இத்தகைய வரலாற்றுப் பின்புலம் கொண்ட இராமநாதபுரம் ஜமீன்
ஆட்சியில் குடிமக்கள் மீது ஏவப்பட்ட பாலியல் வன்முறை தொடர்பான சமூக
நினைவுகள் இரண்டை இனிக்காண்போம்.
ஆளுவோரின் பாலியல் வன்முறை
ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியை ஆட்சிபுரிவோர் தம் ஆளுகைக்குட்பட்ட
பகுதியிலுள்ள அசையும் பொருட்கள்,
அசையாப் பொருட்கள் என அனைத்தின் மீதும் அதிகாரம் செலுத்தும் உரிமை பெற்றவராக இருந்தனர். இதற்கு மனிதர்களும் விலக்கல்ல. மனித உடலின் மீது வன்முறையைப் பயன்படுத்தவும் உயிரைப் பறிக்கவும் அவர்கள் உரிமை படைத்தவர்களாக இருந்தனர். இந்த அதிகாரத்தின் அடிப்படையில், அழகிய பெண்களைத் தமக்கு உரிமையாக்கிக் கொள்ளவும் அவர்கள் தயங்கியதில்லை. படையெடுப்புகளின்போது தமிழ் மன்னர்கள் பெண்களைக் கவர்ந்து வந்ததை,
இலக்கியங்களும் கல்வெட்டுகளும் பெருமையுடன் குறிப்பிடுகின்றன.
மன்னனின் மனைவியராக மன்னர் குடிப்பிறப்புடைய பெண்கள் அமைந்தனர். இவர்தம் மகன்களே ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் உரிமை படைத்தவர்களாக விளங்கினர். மன்னனது மறைவிற்குப்பின் அவனது அந்தபுர பெண்டிர் நிலை கேள்விக்குரியது. இந்தப் பின்புலத்தில்
‘மகட்கொடை மறுத்தல்’ என்ற துறையை ஆராய இடமுண்டு. தம் ஆளுகையின் கீழுள்ள பெண்களை விலைக்கு வாங்கியும், பெற்றோரை அச்சுறுத்திக்
கவர்ந்து வந்தும் அந்தபுர மகளிராக மன்னர்கள் ஆக்கிக் கொண்டனர்.
இச்செயலைச் ‘சிறை எடுத்தல்’ என்று குறிப்பிட்டனர். பெண்ணைப் பாதுகாத்து
இல்லத்தில் வைத்திருப்பதை ‘சிறை காத்தல்’ என்று வள்ளுவர் (குறள்:57)
குறிப்பிடுகிறார். பெற்றோரால் பாதுகாக்கப்படும் பெண்ணைக் காதலன் அழைத்துச் செல்வதையும், மன்னர்கள் அதிகாரத்தின் துணையுடன் கவர்ந்து செல்வதையும் ‘சிறையெடுத்தல்’ என்று பேச்சு வழக்கில் குறிப்பிடுவர்.
ஆளுவோரின் அதிகாரத்தைச் செலுத்தும் தளங்களில் ஒன்றாகப் பெண்ணின் உடல்
நிலவுடமைச் சமூகத்தில் விளங்கியது. ஐரோப்பாவில் குடியானவப் பெண்களின்
திருமணத்தில் முதலிரவு உரிமை நிலப்பிரபுக்களுக்கிருந்தது கேரளத்தில்
நம்பூதிரிகள் இவ்வுரிமையைக் கொண்டிருந்தனர். தமிழ்நாட்டில்
‘சிறையெடுத்தல்’ வாயிலாகப் பெண்கள் மீது தம் அதிகாரத்தைக் குறுநில மன்னர்கள் நிலை நாட்டியதற்குச் சான்றாக
‘புல்லு அறுத்தா மாட்டுத் தொட்டிக்கு
பொண்ணு சமைஞ்சா அரண்மனைக்கு’
என்ற பழமொழியைக் குறிப்பிடலாம்.
ஜமீன் பகுதிகளில் வழிபடப்படும் அம்மன்களில் சில ஜமீன்தார்களின் பாலியல்
வன்முறைக்கஞ்சி, பெற்றோர்களால் கொலை செய்யப்பட்ட அல்லது தற்கொலை
செய்துகொண்ட பெண்களின் நினைவாக உருவானவை தான். இப்பின்புலத்தில் மேலே குறிப்பிட்ட இராமநாதபுரம் ஜமீனை மையமாகக் கொண்டு இன்றுவரை வழக்கிலுள்ள இரு சமூக நினைவுகளை இனிக் காண்போம்.
சமூக நினைவு: ஒன்று
மறவர் சமூகத்தின் உட்பிரிவுகளில் ஒன்றாகக் ‘கொண்டையங் கோட்டை மறவர்’
என்ற பிரிவு உள்ளது. மறவர் சமூகத்தில் உயரிய பிரிவாக இதைக் கருதுவர்.
இராமநாதபுரம் ஜமீன்தார் செம்பிநாட்டு மறவர் பிரிவைச் சேர்ந்தவர். இப்பிரிவு தன்னைவிடத் தாழ்ந்தது என்பதே கொண்டையங்கோட்டை மறவர்களின் கருத்து. எனவே இருபிரிவினருக்கும் இடையே மண உறவு முன்னர் இருந்ததில்லை.
இராமநாதபுரம் ஜமீன்தார் ஒருவர் கொண்டையங்கோட்டை மறவர்களின் தலைவர் வீட்டிலிருந்த அழகிய பெண்ணொருத்தியைச் சிறை எடுக்க விரும்பினார். இது அப்பெண்ணின் தந்தைக்குத் தெரிந்துவிட்டது. இதை அவர் விரும்பாமைக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது காரணம்,
ஜமீன்தாரின் குலம் தம் குலத்தை விடத் தாழ்ந்தது என்பது. இரண்டாவது காரணம்,
மனைவி என்ற தகுதியின்றி, தன் பெண்
காமக் கிழத்தியாக வாழ வேண்டிய அவலம்.
ஆனால் ஜமீன்தாரின் விருப்பத்திற்கு இணங்காவிட்டால், பெண்ணை பலவந்தமாகத்
தூக்கிச் சென்றுவிடுவார். அத்துடன் அவரது பகையும் ஏற்படும். இவற்றைத்
தவிர்க்கும் முகமாக நெருங்கிய உறவினர்களுடன் இரவோடிரவாகப் புறப்பட்டு, கால்நடையாகப் பல நாட்கள் பயணம் செய்து திருநெல்வேலி மாவட்டத்திற்கு வந்து சேர்ந்தனர். நாங்குநேரி ஊருக்கு வடபகுதியில் உள்ள மறுகால்குறிச்சி என்ற கிராமத்தில் நிலையாகத் தங்கி வாழத் தொடங்கினார். இன்றும் மறுகால் குறிச்சிக் கிராமத்தில் கொண்டையங்கோட்டை மறவர்களே அதிக அளவில் வாழ்கின்றனர். மறுகால் குறிச்சி மறவர்களின் இடப்பெயர்ச்சியை
வெளிப்படுத்தும் வாய்மொழிக் கதையாகவும் இதைக் கொள்ளலாம்.
சமூக நினைவு- இரண்டு
இராமநாதபுரம் மாவட்டம் நாடு என்ற உட்பிரிவுகளாகப் பகுக்கப்பட்டிருந்தது.
இன்று அரசின் வருவாய்த் துறையின் ஆவணங்களில் நாடு என்ற பிரிவு இடம்
பெறாவிட்டாலும் நடைமுறையில் ‘நாடு’
என்ற பிரிவு அதிகார மையமாக இன்றும்
விளங்கி வருகிறது. இத்தகைய ‘நாடு’
என்ற அமைப்பில் ஒன்றாக ஆப்பநாடு
இருந்தது. ஆப்ப நாட்டு மறவர் தலைவரின் மகளைச் சிறையெடுக்க இராமநாதபுரம்
ஜமீன்தார் ஒருவர் விரும்பியபோது ஆப்ப நாட்டு மறவர்களின் தலைவர் அதற்கு
உடன்படவில்லை. மேல பார்த்த சமூக நினைவில் குறிப்பிட்ட காரணங்களே அவர்
உடன்படாமைக்கான காரணங்களாக இங்கும் அமைந்தன.
ஜமீன்தாரின் சிறையெடுப்பிலிருந்து காப்பாற்றும் வழிமுறையாக தென்திசையில் சற்றுத் தொலைவிலுள்ள வேம்பாறு என்ற கடற்கரைச் சிற்றூருக்குத் தன் மகளை அவர் அனுப்பிவிட்டார். அங்கு வாழ்ந்து வந்த பரதவர் சாதியினரின் தலைவரான அவரது நண்பர் வீட்டில் அடைக்கலமாக அப்பெண் ஒன்றிரண்டு உறவினர்களுடன் தங்கியிருந்தாள். பெண்ணை அழைத்துப்போக வந்த ஜமீன் ஆட்களிடம் பெண் எங்கோ ஓடிப்போய்விட்ட தாக கூறிவிட்டார்கள். அங்கு பெண்ணைத் தேடிக் கிடைக்காமல், விடாது தேடி,
வேம்பாறு பரதவர் தலைவர் வீட்டில் அப்பெண் இருப் பதை அறிந்து அவளைச் சிறையெடுக்கப் புறப்பட்டு வந்தனர்.
இதை அறிந்த பரதவர் தலைவர் இக்கட்டான நிலைக்கு ஆளானார். அவர்களை எதிர்க்க
வலிமையான படை அவரிடமில்லை. அதேநேரத்தில் தம்மிடம் அடைக்கலமாக
ஒப்படைக்கப்பட்ட பெண்ணைக் காப்பாற்றியாக வேண்டும். இறுதியில் அவர் ஒரு முடிவுக்கு வந்தார். அதன்படி ஆப்பநாட்டு மறவர்களின் முறைப்படி திருமணம் செய்து கொடுத்து விட்டார். கன்னிப் பெண்ணை, சிறையெடுக்க வந்தவர்கள் ஏமாந்து திரும்பிச் சென்றனர். இச்செய்தியையும் ஒரு வாய்மொழிக் கதையாகக் கொள்ள முடியும்.
சமூக நினைவுகளின் நம்பகத்தன்மை
மேற்கூறிய சமூக நினைவுகளின் நம்பகத்தன்மையை ஆராயும் முன் இதையொத்த எழுத்துச்சான்றுகள் சிலவற்றைக் கண்டறிவது அவசியம். முதாவதாக சேதுபதி மன்னர்களின் செப்பேடுகள் மூன்றில் சிறையெடுத்தல் தொடர்பாக இடம்பெறும் செய்திகளைக் காண்போம்.
முத்துராமலிங்க சேதுபதி என்பவர் தன் ஆட்சியில் அடங்கிய ஊர்களில் இருந்து
ஊருக்கு ஒரு பெண்ணைச் சிறையாகக் கேட்டபோது ஆயிரமங்கலம் ஊரைச் சேர்ந்த
கொளும்பிச்சரு தேவன் என்பவர் தமது மகள் முருகாயி என்பவளைச் சிறையாகக்
கொடுத்தார். ஊரவர்கள் கூடி இதற்காக அவருக்கு நிலம் கொடுத்துள்ளனர். (இராசு. 1994:525-528)
வயிரமுத்து விசைய ரகுநாத ராமலிங்க சேதுபதி என்பவர்க்கு மளுவிராயப் புரையார் அசையாவீரன் என்பவர் தன் மகள் முத்துக் கருப்பாயியை சிறையாகத் தந்தான். இதற்காக ஊரவர்கள் அவருக்கு நிலம் கொடுத்தனர் (இராசு, 1999: 523 -24)
இதே மன்னருக்கு விசையநல்லூர் பல்லவராயப் புரையர் மொக்கு புலித்தேவன் என்பவர் அழகிய நல்லாள் என்ற தன் மகளைச் சிறையாகக் கொடுத்தமைக்காக அவருக்கு ஊரவர் நிலம் கொடுத்துள்ளதைச் செப்பேடு ஒன்று தெரிவிக்கிறது. (1994:529-30)
ஊரவர்கள் கூடி தம் பெண்களைக் காப்பாற்றும் முகமாக வேறு ஒருவரது மகளைச் சிறை கொடுக்க வைத்து அதற்காக நிலம் வழங்கிய கொடுமை இம்மூன்று செப்பேடுகளிலும் காணப்படுகிறது. இச்செப்பேடுகளில் இடம் பெறும் சேதுபதிகளின் காலமும்,
செப்பேடு எழுதப்பட்ட காலமும் ஒத்து வரவில்லை. இது தனியாக ஆராய வேண்டிய செய்தி. செப்பேடு எழுதப்பட்டதன் அடிப்படை நோக்கம்,
பெண்ணைச் சிறை கேட்ட மன்னருக்குத் தன் மகளைச் சிறையாகக் கொடுத்த தந்தைக்கு, ஊரவர் கூடி நன்றிக்கடனாக நிலம் வழங்கிய செயலைக் குறிப்பிடுவதுதான். இதை மட்டும் நாம்
கவனத்தில் கொள்ளுதல் போதுமானது.
பெண்களைச் சிறை எடுக்கும் இப்பழக்கத்திற்கு பெரிய நாயகம் பிள்ளை என்பவர் எழுதிய அச்சிடப்படாத சுய சரிதையும் சான்றாக அமைகிறது. அமெரிக்கன் மதுரை மிஷனில் 19ம் நூற்றாண்டில் இவர் பணியாற்றியுள்ளார். தமது சுயசரிதையில் தொடக்கத்தில், தமது முன்னோர் இராமநாதபுரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு இடம் பெயர்ந்ததைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
என் பாட்டனார் ஞானப்பிரகாசம் பிள்ளை இராமநாதபுரம் சமஸ்தானத்தில் சம்பிரிதி வேலை பார்த்தார். இவர் இந்து மார்க்கத்தைச் சேர்ந்தவர். இந்து மார்க்கப்பேர் ஞாபகமில்லை. இராமநாதபுரம் சமஸ்தானத்தில் பேர் பிரஸ்தாபமாயும்,
ஜமீன்தாருக்குப் பிரியமும் உண்மையும் நடந்து வந்தார். இப்படி சம்பிரதி வேலை ஒழுங்காய் நடந்து வருகிற காலத்தில்,
அந்தக் காலத்திலிருந்த ஜமீன்தார், இவர்கள் வீட்டுப் பெண்ணைச் சிறை எடுக்க
யோசித்திருப்பதாக சமாசாரம் இவர் காதுக்கெட்டியது. அந்தக் காலத்தில் ரெயில் கிடையாது. சடுக்கா வண்டி கிடையாது. மாட்டு வண்டிகள்கூடக் கிடைக்கிறது ரொம்ப
வர்த்தமாயிருக்குமாம்.
சிறையெடுக்க யோசித்திருக்கிற சமாசாரம் இவர் காதுக் கெட்டியவுடனே இனிமேல் இவ்விடத்திலிருப்பது மரியாதையில்லையென்று எண்ணி,
ஊரைவிட்டுப் போகத் தீர்மானித்து நகைகளையும் எடுத்துக் கொண்டு இராத்திரியே புறப்பட்டு, பிள்ளை குட்டிகளெல்லாம் கால்நடையாய் நடந்து எட்டுநாள் போல் தங்கித் தங்கி
திருநெல்வேலி போய்ச் சேர்ந்தார்களாம்.
தம் முன்னோரின் இடப்பெயர்ச்சி தொடர்பாக,
குடும்ப உறுப்பினர்களிடம் வந்த
கர்ணபரம்பரைச் செய்தியை எழுத்து வடிவில் எழுதிவைத்ததன் வாயிலாக அச்
செய்தியைப் பெரிய நாயகம் பிள்ளை ஆவணப் படுத்தியுள்ளார்.
நிகழ்வும் சமூக நினைவும்
இக்கட்டுரையில் குறிப்பிட்ட இரு சமூக நிகழ்வுகளும் வாய்மொழியாக வழங்கி
வருபவை. இவற்றின் நம்பகத்தன்மைக்கு மேற்கூறிய எழுத்தாவணங்கள்
துணைபுரிகின்றன. இந்த இடத்தில் சமூக நினைவு குறித்து பீட்டர் பார்க் (2003-44)
என்பவர் கூறும் செய்தியை அறிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.
சமூக குழுக்களால் நினைவு கட்டமைக்கப்படுகிறது. அக்குழுவைச் சார்ந்த தனி மனிதர்கள் நினைவுகளை நினைவில் கொள்ளுகிறார்கள். ஆனால் அச்சமூகக் குழுக்கள் எது நினைவில் கொள்ளத்தக்கது, எப்படி நினைவில் கொள்ள வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றன. தாங்கள் நேரடியாக அனுபவித்தறியாத ஒன்றை அவர்கள் நினைவில் கொள்ளுகிறார்கள். எனவே ஒரு குழுவினர், கடந்த கால நிகழ்வுகளைக் கூட்டாக மறுகட்டமைப்பு செய்வதே நினைவு என்று கூறலாம். இக்கூற்றின் அடிப்படையில் முதல் இரண்டு சமூக நினைவுகளை ஆராய்வோம்.
முதல் நிகழ்வுடன் தொடர்புடைய தெய்வ வழிபாடு ஒன்றுள்ளது. மணியாச்சியில்
இருந்து ஒட்டப்பிடாரம் செல்லும் சாலையில் உள்ள ஊர் பாறைக்குட்டம்.
இவ்வூரில் உள்ள அய்யன் செங்கமல உடையார் கோவிலைப் பாதுகாத்துப் பூசாரியாக இருப்பவர்கள் இடையர் சமூகத்தினர். இத்தெய்வத்திற்கும் இவர்களுக்கும் இடையே உள்ள உறவு மேற்கூறிய சமூக நினைவுடன் தொடர்புடையது.
இதன்படி இராமநாதபுரம் பகுதியிலிருந்து கால்நடையாகப் புறப்பட்டு வந்த கொண்டையங்கோட்டை மறவர்கள் இவ்வூரில் இரவு நேரத்தில் தங்கி
ஓய்வெடுத்தார்கள். அவர்கள் புறப்பட்டு வரும்போது தம்முடன் தம் குலதெய்வமான சிலையையும் கொண்டு வந்திருந்தனர். அதற்குத் திருநீராட்டு செய்யப் பால்
தேவைப்பட்டது. அவ்வூரிலுள்ள இடையர்களிடம் பால் கேட்டபோது அவர்கள் தர மறுத்துவிட்டனர். மறுநாள் அங்கிருந்து புறப்படும்போது அத்தெய்வத்தின் உருவச் சிலையைத் தூக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. சரி இது தெய்வத்தின் விருப்பம் போல என்று கருதி தம் பயணத்தைத் தொடர்ந்து இறுதியில் மறுகால்குறிச்சியில் குடியேறினர்.
அவர்கள் சென்றபின்னர், பாண்டியாபுரம் கிராமத்து ஆயர்களின் கால்நடைகள்
இறந்து விழத் தொடங்கின. இது குறித்து அவர்கள் குறி கேட்டபோது, அய்யன்
செங்கமல உடையார்க்குப் பால் கொடுக்காமையால் அத்தெய்வத்தின் கோபத்தால் கால்நடைகள் அழிகின்றன என்றறிந்தனர். அத்தெய்வத்தின் கோபத்தைத் தவிர்க்கும் வழிமுறையாக, அதை வழிபடத் தொடங்கினர். அதன்பின்னர் அவர்களது கால்நடைகள் அழிவிலிருந்து தப்பின.
மறுகால்குறிச்சியில் குடியேறிய கொண்டையங்கோட்டை மறவர்கள் தம் குலதெய்வத்தை மறக்கவில்லை. திருமண நிகழ்ச்சிக்கு முதல் வெற்றிலை பாக்கு வைத்தல், புதுமணப்பெண் உறவினர்களுடன் வந்து பொங்கலிடல் ஆகிய செயல்களின் வாயிலாக,
குலதெய்வத்துடனான உறவை வெளிப்படுத்தி வருகின்றனர். நோய்த்தீர,
வழக்குகளில் வெற்றிபெற,
குடும்பச்சிக்கல்களில் இருந்து விடுபட இத்தெய்வத்தை வேண்டிக் கொண்டு அவ்வேண்டுதல் நிறைவேறினால் இங்கு வந்து விலங்கு உயிர்ப்பலி கொடுத்தல்,
பொங்கலிடல் ஆகிய சடங்குகளை மேற்கொள்கின்றனர். இங்கு குலதெய்வ
வழிபாடு என்ற சமயச் சடங்கின் வாயிலாக கொண்டையங்கோட்டை மறவர்களின்
இடப்பெயர்ச்சியும் அதற்கான காரணமும் சமூக நினைவாகத் தொடர்கின்றன.
இரண்டாவது சமூக நினைவை உறவுச்சொல் ஒன்று, இன்றும் மறக்கவிடாமல் வைத்துள்ளது. ஆப்பநாட்டு மறவர் தலைவரின் பெண்ணுக்கு திருமணம் செய்வித்த தன் வாயிலாக தந்தையின் கடமையை வேம்பார் பரதவர்களின் சாதித்தலைவர் செய்துள்ளார். இவ்வுதவியின் வாயிலாக, தம் குலமானத்தைக் காத்ததாக ஆப்பநாட்டு மறவர் சமூகம், இன்றளவும் கருதி வருகிறது. இதன் வெளிப்பாடாக ‘அப்பச்சி’
என்ற உறவுச் சொல்லால் வேம்பார் பரதவ சமூகத்தினரை அழைத்து வருகின்றனர்.
ஒரு சமூகத்தின் வரலாற்றில் நிகழ்ந்த நிலவுடமைக் கொடுமைகளைப் பெரும்பாலும் மரபுவழி வரலாற்றாவணங்கள் பதிவு செய்வதில்லை. ஆனால் மக்களின் சமூக நினைவுகள் அவற்றைப் பதிவு செய்து பாதுகாத்து வருகின்றன. ஆனால் ஒவ்வொரு சமூகமும்
ஒவ்வொரு வகையில் இதைப் பாதுகாத்து வருகின்றது.
மறுகால்குறிச்சி மறவர்கள் தம் குலதெய்வ வழிபாட்டின் வாயிலாகவும், ஆப்ப நாட்டு மறவர்கள் ‘அப்பச்சி’ என்ற உறவுச் சொல்லின் வாயிலாகவும், ஜமீன்தாரின் பாலியல் வன்முறையிலிருந்து தம் மூதாதையர்கள் தப்பியதை நினைவில் கொள்ளுகின்றனர்.
தம் முன்னோர்களின் இடப்பெயர்ச்சி குறித்து வாய்மொழியாக வழங்கி வந்த மரபுச் செய்தியை பெரியநாயகம் பிள்ளை எழுத்தாவணமாக்கியுள்ளார். இது எழுத்து வடிவிலான வரலாற்றுத் தரவாக அமைந்து மேற்கூறிய சமூக நினைவுகளின் நம்பகத்தன்மைக்குச் சான்றாகிறது.
தனியொரு மனிதனுக்கு ஊரவர் வழங்கிய நிலக் கொடையைத் தெரிவிக்கும் மேற்கூறிய மூன்று செப்பேடுகளும்,
நிலக்கொடையை வழங்கியமைக்கான காரணத்தையும் பதிவு செய்துள்ளன. இதன் அடிப்படையில் மேற்கூறிய இரு சமூக நினைவுகளில் இடம்பெற்றுள்ள பாலியல் வன்முறை தொடர்பான செய்திகள், கற்பனையல்ல, நடைமுறை
உண்மையே என்ற முடிவுக்கு நாம் வரமுடிகிறது.
நிலவுடமைச் சமூக அமைப்பில்,
பெண்ணின் உடல் மீதான வன்முறையானது,
தன் சாதி, அயற்சாதி என்ற பாகுபாடில்லாமல் ’சிறை எடுத்தல்’, ‘பெண் கேட்டல்’ என்ற பெயர்களால் நிகழ்ந்துள்ளது. இவற்றையெல்லாம் பல்வேறு வடிவங்களில் சமூக நினைவுகளாக மக்கள் குழு காப்பாற்றி வருகிறது. இத்தகைய சமூக நினைவுகளை முறையாகச் சேகரித்து ஆராய்ந்தால், தமிழக நிலவுடமைக் கொடுமைகளின் ஒரு பகுதி வெளிப்படும்.
குறிப்பு
1.சில நேரங்களில் இதற்கு மாறான நிகழ்வுகளும் நிகழ்ந்துள்ளன. ஆயினும் இவை விதிவிலக்கான நிகழ்வுகளே.
2.கொண்டையங்கோட்டை மறவர்களிடம், ‘கொத்து’, ‘கிளை’ என்ற பிரிவுகள் உண்டு. இதனடிப்படையில் இவர்கள் உயர்வாகக் கருதப்படுகின்றனர்.
3. பெண்ணின் மானத்தைக் காப்பாற்றியவர்களைத் தந்தை என்று போற்றும் வழக்கம் இருந்துள்ளமைக்கு செப்பேட்டுச் சான்று ஒன்று உள்ளது.
1873ஆம் ஆண்டைச் சேர்ந்த இச்செப்பேடு கூறும் செய்தியின் சுருக்கம் வருமாறு:
“கோம்பையில் வாழும் இடங்கையைச் சேர்ந்த ஐந்து ஜாதி ஆசாரிமார்கள் மற்றும்
குடும்பன்மார்களின் பெண்களை வலங்கையார் சிறைபிடிக்க முனைந்தபோது பக்கிரிவா சேர்வை ராவுத்தர் என்பவர் அவர்களைத் தடுத்துப் பெண்களின் மானத்தைக் காப்பாற்றினார்.
இதற்கு நன்றிக் கடனாக அவருக்கு மானங்காத்த தகப்பன் என்ற சிறப்புப் பெயர்
கொடுத்துச் சுருளி ஆற்றுப் பகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாழும் இவர்கள் அனைவரும் தங்கள் தலைவரான ஸ்ரீநவநீத கிருஷ்ண மேஸ்திரி ஆசாரி உத்தரவுப்படி தங்கள் கல்யாணங்கள் ஒவ்வொன்றுக்கும் 5 பணம் வீதமும் நவதான்யங்கள், அரிசி அஞ்சுபடியும் கொடுக்க இச்செப்புப்பட்டையம் எழுதித் தந்துள்ளனர்.” (ஸ்ரீதர், 2005 – 209)
வலங்கையார் கூட்டமாக வந்த செய்தியை
‘வலங்கையார் குமுசல் கூடிப் பெண் சிரை(றை) பிடிக்க வந்ததில்’ என்று செப்பேடு குறிப்பிடுகிறது.
பெண்களைக் கவர்ந்து செல்வதை ‘சிறை பிடித்தல்’ என்று குறிப்பிடும் பழக்கம்
இருந்தமைக்கு இச்செப்பேட்டு வரியும் சான்றாகிறது.
தகவலாளர்கள்:
1.தோழர் கிருஷ்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மறுகால் குறிச்சி.
2. திரு. தம்பி அய்யா பர்னாந்து, வேம்பாறு
துணை நூற்பட்டியல்:
இராமசாமி, அ., 1990. தமிழ்நாடு மாவட்ட விவரச் சுவடிகள், இராமநாதபுரம்.
இராசு, செ. (பதிப்பாசிரியர்), 1994.
சேதுபதி செப்பேடுகள்.
பெரியநாயகம் பிள்ளை வாழ்க்கை வரலாறு (அச்சிடப்படாத கையெழுத்துப்படி)
ஸ்ரீதர், தி.ஸ்ரீ, (பதிப்பாசிரியர்) 2005. தமிழகச் செப்பேடுகள் , தொகுதி 1.
thanks : maraththamizhar.blogspot.com
Posted 23rd January 2013 by kumar pandian
23
JAN சமூக நினைவுகளும் வரலாறும்
0 Add a comment
கள்ளர்களின் முன்னோர்களான நாகர்கள்
நாடாண்ட வரலாறு பாகம்-1
கள்ளர்களின் முன்னோர்களான நாகர்கள்
நாடாண்ட வரலாறு
(1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்
எழுதிய வி . கனகசபைப்பிள்ளையின்
அறியாமை )
முன்னுரை.
. கள்ளர்களைப்பற்றிய உண்மை வரலாறு
என்னும் ஆதவன் ஒளி உலகெங் கும் பரவி
பொய்மை வரலாறு என்னும் பனித்திரை
விலகவேண்டும்.. தமிழ் இலக்கியங்களில்
கள்ளர்கள் நாடாண்ட செய்திகள் ஏராளமாக
கூறப்பட்டுள்ளன . அதை 1800
ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் என்னும்
நூல் எழுதிய திரு . கனகசபைப்பிள்ளை
அவர்கள் மூடிமறைக்க முயன்றுள்ளதும்,
கள்ளர்களை இழிவுபடுத்தும்
வார்த்தைகளை எழுதியுள்ளதையும்
தவறு என்பதை எடுத்துக்காட்டவே
இக்கட்டுரையை எழுதுகிறேன் . கள்ளர்கள்
சாம்ராஜ்யவாதிகள் என்று மேனாட்டு
அறிஞர்கள் போற்றியிருக்கின்றனர். டாக்டர்
உ , வே , சாமிநாதய்யர் அவர்கள்
புறப்பொருள் வெண்பாமாலை ஓலைச்
சுவடிகளை கண்டுபிடித்து அச்சிலேற்றி ,
முக்குலத்து சமூகத்திற்கு பெரும்
தொண்டு ஆற்றினார் . அதைப்போலவே ,
அக்டோபர் 29,1950 முதல் மூன்றரை
ஆண்டுகாலம் கல்கியில் பொன்னியின்
செல்வன் என்ற இராசராசனின் இளமைகால
வரலாற்றுப்புதினத்தை அமரர் கல்கி
கிருட்டிணமூர்த்தி அவர்கள் எழுதி கள்ளர்
குலத்திற்கு மாபெரும் தொண்டு
செய்தார். இதை எழுதுவதற்கு வரலாற்று
ஆராய்ச்சிப் பேர - றிஞர்
சதாசிவப்பண்டாரத்தார் எழுதிய
பிற்காலச்சோழர் வரலாறுஅடிப்படையாக
அமைந் - தது என்று பிற்காலச்சோழர்
வரலாறு பதிப்புரையில் (பக்கம் xxல் )
திரு . மு. பெரி. மு. இராமசாமி
எழுதியுள்ளார் .. அமரர் கல்கி அவர்கள்
மயிலாடுதுறை, மணல்மேடு
கிராமத்திற்கு அருகில் புத்தமங்கலம்
என்னும் கிராமத்தில் பிறந்த பிராமணர் .
கல்கி , டாக்டர் உ . வே . சா ., சதாசிவப்
பண்டாரத்தார் , மு. பெரியசாமி
அனைவருமே முக்குலத்தோர்
அல்ல . ஆனால் , உண்மையை எழுதிய
மாசுமருவற்ற சான்றோர் பெருமக்கள் .
சான்றோர் -- கல்கி எழுதியுள்ளது (பொன்னியின் செல்வன்
பாகம் -1 அத்தியாயம் -6 ல் )
நடுநிசிக்கூட்டத்திற்கு ........”... பழுவேட்டரையரும் , சம்புவரையரும்
தவிர ……….. அங்கே மழபாடித் தென்னவன்
மழவராயர் வந்திருந்தார் . குன்றத்தூர்ப்
பெருநிலக்கிழார் வந்திருந் தார் .
மும்முடிப் பல்லவராயர் வந்திருந்தார் .
தான் தொங்கிக் கலிங்கராயர் ,
வணங்காமுடி முனையரையர்,
தேவசேநாபதி பூவரையர் , அஞ்சாத சிங்க
முத்தரையர் , இரட்டைக்குடை
ராஜாளியார், கொல்லிமலைப் பெருநில
வேளார் ( இருக்குவேளிர் ). . வந்திருந்தனர் . . .
இந்தப் பிரமுகர்கள் சாமான்யப்பட்டவர்கள்
அல்ல . எளிதாக ஒருங்கு சேர்ந்துக்
காணக்கூடியவர்களும் அல்ல . அநேகமாக
ஒவ்வொருவரும் குறுநில மன்னர்கள் ,
அல்லது குறுநில மன்னருக்குரிய
மரியாதையைத் தங்கள்
வீரச்செயல்களினால் அடைந்தவர்கள் . ராஜா
அல்லது அரசர் என்பது மருவி அக்காலத்தில்
அரையர் என்று வழங்கி வந்தது .
சிற்றரசர்களுக்கும் , சிற்றரசர்களுக்குச்
சமமான சிறப்பு வாய்ந்தவர்க்ளுக்கும்
அரையர் என்ற பட்டப் பெயர் சேர்த்து
வழங்கப்பட்டது . அவரவர்களுடைய ஊரை
மட்டும் கூறி அரையர் என்று
சேர்த்துச்சொல்லும் மரபும் இருந்தது .(மழவ + அரையர் = மழவரையர் , மழவராயர் என
மரூவியது. பல்லவ
+ அரையர் = பல்லவரையர். பல்லவராயர்.. கலிங்க
+ அரையர் = கலிங்கரையர் .
காலிங்கராயர் …)
அந்த நாளில் சிற்றரசர்கள் என்றால் ,
பிறப்பினால் மட்டும் அரசர் பட்டம் பெற்று
அரண்மனைச் சுகபோகங்களில் திளைத்து
வாழ்ந்திருப்பவர்கள் அல்ல . போர்க்களத்தில்
முன்னணியில் நின்று போரிடச்
சித்தமாயுள்ள வீராதி வீர்ர்கள்தான் தங்கள்
அரசுரிமையை நீடித்துக்
காப்பாற்றிக்கொள்ள முடியும் . எனவே,
ஒவ்வொருவரும் பற்பல போர்க் களங்களில்
போரிட்டுப்புகழுடன் காயங்களையும்
அடைந்தவர்களாகவே இருப்பார்கள். இன்று
அத்தனைபேரும் பழையாறைச் சுந்தர
சோழ சக்கரவர்த்தியின் ஆட்சிக்கடங்கித் தத்தம்
எல்லைக்குள்அதிகாரம் செலுத்தி
வந்தார்கள் . சிலர் சோழப்பேரரசில்
பெருந்தரத்து அரசாங்க
அதிகாரிகளாகவும் பதவிவகித்து
வந்தார்கள் . . . . “
கனகசபைபிள்ளை எழுதியது தவறு .
அத்தவறைச் சுட்டிக்காட்டும் ஆதாரங்கள்
வருமாறு
“ நாக மரபினரிடையே முற்றிலும்
அடங்காப் பண்புடையவர்கள் எயினர் அல்லது
வேடரே . நிரைகோடலும் கொள்ளையும்
கொலையுமே அவர்கள் வாழ்க்கையில்
மேற் கொண்ட ஒரே தொழிலாயிருந்தது .
அவர்கள் அச்சந்தரும் காளியை வணங்கினர் .
தம் கொள்ளையில் அத்தெய்வத்தின்
துணையைப் பெற அவர்கள் அத்தெய்வத்தின்
கோயில் களில் எருமைகளைப்
பலியிட்டனர் . சூறையாட்டுக்குப்
புறப்படுமுன் , அவர்கள் புட்குறிகளும்
பறவை ஒலிக்குறிகளும் எதிர்ப்புகளும்
பற்றிய அறிவுரை கேட்டனர் …( சிலப் .XII3 XII 120-128).
அவர்கள் மரபினர் இன்றும் அவர்கள்
பண்புக்கேற்றபடி கள்ளர் அல்லது கள்வர்
என்ற பெயருடன் குறிக்கப்படுகின்றனர் ……”
இவ்வாறு கனகசபைப் பிள்ளை அவர்கள்
எழுதியுள்ளார் (ஆதாரம் .1800
ஆண்டுகளுக்கு முற்பட்டத் தமிழகம்
பக்கம் -89). கள்ளர்களை வழிப்பறி
கொள்ளையர்களாக காட்டவேண்டும் என்ற
காழ்ப்புணர்ச்சியில் கனகசபைப் பிள்ளை
இப்பாராவில் மேற்கண்ட முதல் இரண்டு
வரிகளை எழுதியுள்ளார் . இவ்வாறு
எழுதியுள்ளது தவறு . பன்னிருபட லத்தில்
தொல்காப்பியரும், புறப்பொருள்
வெண்பா மாலையில் அய்யனாரிதனாரும்,
தொல்காப்பியம் பொருளதிகாரத்திற்கு
உரை எழுதிய இளம்பூரனார் ,
சேனாவரையர் , தெய்வச்சிலையார் ,
கல்லாடர் போன்ற சான்றோர் பெருமக்களும்
நிரைகோடல் நிமித்தம் நடைபெற்ற
போர்கள் (ஆநிரைகளை கவர்ந்த போதும்
ஆநிரைகளை மீட்டபோதும் நடந்த போர்கள் )
பிறந்த மண்ணின் மானம்காக்க வேந்தன்
ஏவியபோது கள்ளர்கள் நடத்திய போர்
என்பதையும் , அப்போரில் வீரமரணம் அடைந்த
கள்ளர்களுக்கு நடுகல் நட்டு , அரசன் முதல்
ஆண்டிவரை வீரவணக்கம் செய்து
தெய்வமாக வழிபட்டனர் என்பதையும்
தெளிவாக எழுதி யுள்ளனர். ஆனால் ,
கனகசபைப் பிள்ளை இவ்வுண்மையை
மறைத்து எழுதியுள்ளார் . நிரை கோடல்
சம்பந்தமான போர்களை பின்வரும்
பக்கங்களில் நான் விவரிப்பேன் .. அதற்கு
முன்பாக கள்ளர்களின் முன்னோர் களாகிய
நாகர்கள் நாடாண்ட வரலாற்றை முதலில்
எழுதி, போர்க்களங்களில் வீரமரணம் அடைந்த
முக்குலத்து மறவர்களுக்கு- அவர்களின்
வீரப் புகழ் வானளாவ ஓங்குக என வாழ்த்தி
வணங்கி இக்கட்டுரையை
சமர்ப்பிக்கின்றேன் .
இராமநாதபுரம் மன்னர் மாட்சிமைதங்கிய
இராஜராஜேஸ்வர சேதுபதி அவர்கள்
கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் ஐந்தாவது
ஆண்டுவிழாவில் தலைமை உரை
ஆற்றினார் . அத்தலைமை உரையில் அவர்
பேசியதாவது ”சோழர்களுக்கு முன் ,
இப்போதுள்ள மறவர் , கள்ளர் சாதியினரின்
முன்னோர்கள் , நாகர் என்ற பெயரில்
இச்சோழநாட்டை ஆட்சி புரிந்தனர் .
அப்போது அவர்களின் ( நாகர்களின் )
தலைநகரமாக காவிப்பூம்பட்டிணம் , தஞ்சை ,
திருக்குடந்தை விளங்கின என்பதை
சரித்திரங்கள் வாயிலாக அறிகிறோம் .”
மேன்மைபொருந்திய வா . கோபாலசாமி
இரகுநாத இராசாளியார் அவர்கள் , இந்திர
குலாதிபர் சங்கத்தின் நான்காவது
ஆண்டுவிழாவில் தலைவர் உரை
ஆற்றினார் . அவ்வுரை
யில் அவர் பேசியதாவது ”இந்நாட்டை
ஆண்ட அரசர் பெருமக்களுள் சோழரைக்
கள்வர் என டாக்டர் பர்னலும் , வெங்காசாமி
ராவ் அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.
திருவாளர் ம . சீனிவாச அய்யங்கார் அவர்கள் ,
சோழர் சாதியில் கள்ளரென்றும்,
பாண்டியர் சாதியில் மறவரென்றும் ஒரு
சாரார் கொள்கை ” என்றார் . (செந்தமிழ்
தொகுதி -2, பக்கம் 175)
நாகர் என்பார் முக்குலத்து மறவர்களின்
முன்னோர் ஆவார் . நாகர் என்ற பெயரில்
அவர்கள் நாடாண்டனர் சிலப்பதிகாரம் மங்கல
வாழ்த்து வரிகள் 19 & 20 ல் நாகநாடு
செல்வமும் அழகும் வாய்ந்த சிறந்த நாடாக்க்
குறிக்கப்பட்டுள்ளது. பாண்டிய நாட்டில்
நிறுவப் பெற்ற தலைச்சங்கத்தில்
முரஞ்சியூர் முடி நாகராயர் என்பார்
சங்கப்புலவர்களுடன்
வீற்றிருந்து முத்தமிழை வளர்த்தார் .
இன்னும் கடைச்சங்கப் புலவர்களில் நாகன்
என்னும் பெயருடையார் சிலர் இருந்தனர்.
நன்னாகன் , இளநாகன் , வெண்ணாகன்
என்னும் மூவரும் பாடிய பாடல்கள்
பழந்தொகை நூல்களில் சேர்க்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டிலுள்ள நாகப் பட்டிணம்,
நாகர்கோயில் முதலிய ஊர்கள் நாகர்கள்
ஆண்ட ஊர்களாகும் .
Posted 23rd January 2013 by kumar pandian
23
JAN கள்ளர்களின் முன்னோர்களான நாகர்கள் நாடாண்ட வரலாறு
0 Add a comment