பத்ம சாம்பவர்.
புத்தரின் கருத்துகளை பரப்பியவர்களுள் முதன்மையானவர் இவர். இந்தியாவிலிருந்து சென்று பூடான் உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளில் பௌத்தம் பரப்பியவர் இவர். பூட்டானில் அமைந்துள்ள இவரின் சிலை உயரம் 100 அடிக்கும் உயரமானது.
*இவரின் பெயர் பத்ம "சாம்பவர்".*
( *சாம்பவர் பெயரில் வந்து நாங்க இந்துக்கள் என்று பினாத்துவோர்களின்கவனத்திற்காக.*)
சாம்பவர் என்ற பெயர் தென்மாவட்டங்களில் பறையர்கள் பயன்படுத்தும் சொல்.
அறம் வளர்த்த பறையன்
சாம்பவர் என்பது பறையர்களில் ஒரு கிளை சமூகத்திலும், சாம்பசிவம் என்பது பெயர் முதலியார் பிள்ளை போன்ற மக்களிடையே பெரிய அளவில் வழங்கப்படும் (அங்கோர் வாட் கோவில் ஒரு சிவன் கோவில் என்பதையும் இந்த இடத்தில் நினைவில் கொள்ள வேண்டும்) பெயராகவும், சம்புவராயர் என்பது வன்னியர் என்றழைக்கப்படும் பௌத்த பாரம்பரியம் கொண்ட பள்ளி என்ற சமூக குழுவிலும், சம்பன் குலம் என்பது தற்போது மறவர்கள் என்று அழைத்துக் கொள்ளும் சமூக குழுக்களில் உள்ள ஒரு கிளை கொத்தாகவும் உள்ளது.
அதே போல் மற்றுமொரு விசயமும் நினைவில் கொள்ள வேண்டும். "பத்ம சாம்பவா" என்பது ஒரு புத்த துறவியின் பெயர் கூட. தமிழர்கள் பெரிய அளவில் புத்த மார்க்கத்தையும் சமண மார்க்கத்தையும் பின்பற்றிய வரலாற்று உண்மையையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். இன்றைய இசுலாமிய தமிழர்களில் பெரும்பான்மையானோர் முன்பு சமண மதத்தை பின்பற்றியதும் சைவ மதத்தினர் கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறைகளை தாக்குபிடிக்க முடியாமல் இசுலாம் மார்க்கத்தை தழுவினர் என்று கருதப்படுவதும் உண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக