கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவில் வரலாறு.......
சாத்தூர் தாலுகாவை சார்ந்த சிற்றூராக இருந்த கோவில்பட்டி இன்று தூத்துக்குடி மாவட்டத்தின் வருவாய் தரும் தொழில்சார்ந்த நகரமாக விளங்குகிறது. இவ்வூருக்கு கோயிற்புரி, திருப்பூவனம், பொன்மலை, கோயில்புரி என்றெல்லாம் பெயர் விளங்குகிறது.சிற்றூராக இருந்துவந்த இவ்வூரானது இன்று ஒரு சிறப்பு நிலைநகராட்சியாகத் திகழ்கிறது. பல வகைகளிலும் சிறப்புப் பெற்ற பல ஊர்கள் செண்பகவல்லியம்மன் கோவில் திருத்தலத்தை சுற்றிலும் அமைந்துள்ளது தனிச்சிறப்பான ஒன்றாகும்.
சுமார் 20 கி.மீ. தொலைவில் இருக்கின்ற வெம்பக்கோட்டையை அரசாண்டசெண்பகமன்னன், களாக்காட்டினை வெட்டித் திருத்தி கோயிலும், ஊரும் எழுப்பித்தான் என்று இக்கோயில்தல வரலாறு சொல்கிறது. இவ்வூரிலிருந்து சுமார் 5கி.மீ. தொலைவில் இருக்கின்ற மந்தித்தோப்புசங்கராபதி திருமடத்தில் உள்ள செப்புப்பட்டையம் மூலமாக இவ்வூரானது கலி 4131க்குமுற்பட்டது என்று அறியமுடிகிறது. அதேபோல் இத்திருக்கோயிலை உள்ள முடையான் என்னும் அரசன் புதுப்பித்த ஆண்டை சகரனாண்டு 1100 என்று கோயில்புரி புராணத்தின்மூலமாக அறிய முடிகிறது.
புராணச்சிறப்பு........ ஆயிரத்து தொளாயிரத்து முப்பத்து மூன்று முப்பத்து நாலாம்ஆண்டுகளில் இத் திருக்கோயில் பலிபீடம், கொடிமரம்,நந்திதேவர் ஆகியவை பிரதிஷ்டைசெய்யப்பட்டதற்கான கல்வெட்டுக்கள், தூண்கள் மற்றும் வாயில்கள் நிறுவப்பட்டதற்கான கல்வெட்டுக்களும் ஆங்காங்கே காணப்படுகின்றன. இத்திருக்கோயில் முழுவதும் கல்வெட்டுக்களினால் கட்டப்பட்டுள்ளதால் இரண்டாம் நரசிம்மவர்மன் (கி.பி.700)காலத்திற்கு பிற்ப்பட்டதாகவும் கருதப்படுகிறது.
மேலும் சிவஞானயோகிகள் இயற்றிய கோயில்புரி புராணத்தில் இப்புராண வரலாறுகள் தொகுத்துக் கூறப்படுகின்றன. 18படலங்கள் கொண்ட இந்நூலில் முதல் 16 படலங்களில் இவ்வரலாறுகள் கூறப்பட்டுள்ளன.
அகத்தியர் வந்த வரலாறு:-
சிவனாரின் மனம் மகிழதவமியற்றிய பார்வதி தேவிக்கு இறைவன் காட்சி கொடுத்துதிருமணம் முடிக்க வந்து சேர்ந்தார். ஈடிணையில்லா ஈசன்திருமணம் காண யாவரும் வந்து ஒருங்கே கையிலைமலையில் கூடியதால் உலகின் வடபுலம் தாழ்ந்து தென்புலம்உயர்ந்தது. செண்பக வல்லியம்மன் திருக்கோயில் தலவரலாறு: அகத்தியரை இறைவன் பணித்தார். அவ்வண்ணம் தென்புலத்திசையில் உள்ள பொன்மலை என்னும் இவ்விடத்தில் களாமரக்காட்டில் லிங்கத் திருமேனியாய் எழுந்தருளியுள்ள ஈசன்பூவனநாதரை வழிபட்டு விட்டு தவமியற்றி வந்த முனிவர்களைக் கண்டார்.
அம் முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சிவலிங்கத்திற்கு வடகிழக்கில் பொன்மலையில் தட்டியவுடன் அருவி ஒன்று ஓடிவரலாயிற்று .அதுவே அகத்தியர் தீர்த்தம் என்று அழைக்கப்பட்டு பின்னர் அதுவேஇத்திருக்கோயிலின் திருக்குளமாகவும் காட்சியளிக்கின்றது.
சங்கன் ,பதுமன் சந்தேகம் தீர்த்தது:- முன்னொரு காலத்தில் சங்கன், பதுமன் என்னும் இரு பாம்புத் தலைவர்களுக்கு சிவன், திருமால் இருவரில் யார் பெரியவர் என்றஐயம் ஏற்பட்டது. ஐயம் தெளிவு பெற களாக் காட்டிடையே லிங்கவடிவில் எழுந்தருளிஇருந்த ஈசனைப் பூவனப் பூக்களால் அர்ச்சித்து வழிபட்டனர். அவர்களுக்கு முன் தோன்றியஇறைவன் இன்றுமுதல் இச்சிவலிங்கம் பூவனநாதர் என்றுஅழைக்கப்படுவார்.புன்னைக் காவலில் (சங்கரன்கோவில்) உங்கள் ஐயம்தீர்க்க சிவன் பெரியவன், திருமால் பெரியவளாகி (எம் மனைவி)காட்சியளிப்போம் என்றுரைத்தார்.
செண்பக வேந்தன் வரலாறு....... வெள்ளிமலை சிவக்குழுவில் சிறந்தவனான வாமனன் பெண்மயக்கமுற்று தன்நிலை தாழ்ந்து கண்மு நந்திதேவரின் சபத்திற்கு ஆளாகிவெம்பக்கோட்டையில் செண்பகமன்னன் என்னும் பெயர்பெற்றுவிளங்கினான். இவரின் கனவில் இறைவன் தோன்றியகூறியவாறு பொன்மலைக் காட்டிலிருந்து களாக் காட்டினைவெட்டி லிங்கமாக காட்சியளித்த பூவனநாதருக்குத் தனித்திருக்கோயில் அமைத்தான். அருவிக்கு மேற்கே பிள்ளையார்கோவிலும், அருவிக்குளம், அருவிக்கு தென்மேற்கே வடக்குப்பார்த்தப் பிள்ளையார், அதன் தென்மேற்கே அம்பாளுக்குத் தனிக்கோயிலும் காமிகா ஆகமமுறைப்படி அமைத்தான். செண்பகமன்னன் அமைத்ததால் அவன் பெயரையே தனது பெயராகக்கொண்டு அம்பாள் செண்பகவல்லி அருள்பாலித்து வருகிறாள்.
மூர்த்தியின் சிறப்பு...... இத் திருக்கோவிலில் வீற்றிருக்கும் அன்னை செண்பகவல்லி 7அடி உயரத்தில் நின்ற நிலையில் எழில் கொஞ்சும் வடிவில் காட்சித் தருகின்றாள். இப்பகுதி வாழ் மக்கள் வேண்டியதை அருள்கின்ற வேண்டுதல் தெய்வமாக காட்சி தருகிறாள்.தன்னை சரணடைந்த மக்கள் துயர்நீக்கும் தெய்வமாகவும், அவர்களின் வேண்டுதல்களைஎல்லாம் வாரி வழங்கும் வள்ளலாகவும் காட்சித்தருகிறாள்.
கடனாகவும், அம்பாளின் பெயரையே தங்கள் குழந்தைகளுக்குச்சூட்டி வாழ்கின்ற நிலையும் இப்பகுதியில் அதிகமாக காணப்படுகின்றது. எல்லாருக்கும்அருள்பாலிக்கின்ற செண்பகவல்லியம்மன் மீதுகோவில்பட்டி நீலமணியும் இன்னும் பாடல்கள்பாடியுள்ளனர். கோவில்பட்டி நீலமணியோசெண்பகவல்லி அருள்மாலை, செண்பகவல்லி நூற்றந்தாதி என்னும் இரண்டு நுல்களைஎழுதியுள்ளார். இதில் செண்பகவல்லி அருள்மாலை 5ம் பதிப்பு வரை வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முடிசார்ந்தமன்னரும்முடிவில்
பிடிசாம்பல்என்பதைமறவாதிருமனமே