வியாழன், 29 மார்ச், 2018

மறைக்கப்பட்ட சரித்திரம்: வளம் நிறைந்த குலசேகரபட்டிணம்



மறைக்கப்பட்ட சரித்திரம்: வளம் நிறைந்த குலசேகரபட்டிணம்

திருச்செந்தூரில் இருந்து குலசேகரன் பட்டிணம் வழியாக திசையன்விளைக்கு ஆங்கிலேயர் காலத்தில் தினசரி மூன்று முறை இயக்கப்பட்ட ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வளம் நிறைந்த குலசேகரபட்டிணம்:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா உடன்குடி பஞ்., யூனியனுக்கு உட்பட்ட குலசேகரன்பட்டிணம் ஒரு அழகான கடற்கரை கிராமம், முந்தைய காலத்தில் இவ்வூரை குலசேகரபாண்டியன் என்ற மன்னன் ஆண்டு வந்ததால், அம்மன்னனின் பெயரால் குலசேகரபட்டணம் என அழைக்கப்படுகிறது.

மன்னர்கள் காலம் தொட்டு குலசை கடற்கரை இயற்கை துறைமுகமாக விளங்குவருகிறது. அருகில் உள்ள இலங்கை மற்றும் சுற்றியுள்ள நாடுகளுக்கு இங்கு விளையும் நெல், பயிர் வகைகள், கருப்புகட்டி, தேங்காய், உப்பு போன்ற விளைப்பொருட்கள் மற்றும் குதிரைகள் கூட இறக்குமதி செய்துள்ளனர்.

குலசையில் இருந்து திருச்செந்தூருக்கு ரயில் ரூட்
மேலும் குலசை உடன்குடி பகுதியில் இயற்கை வளம் மிகுந்து இருந்ததாலும் பனைத்தொழில் சிறந்து விளங்கியதாலும் குலசையில் பதனீரில் இருந்து சீனி தயாரிக்கும் ஆலையை ஆங்கிலேயர்கள் அமைத்தனர்.

இதற்கு கே.பி.எம் ஆலை எனவும், குலசை துறைமுகத்திற்கு கே.பி.எம் போர்ட் எனவும் பெயர் வைத்திருந்தனர்.

இப்பகுதி மக்களுக்கு போக்குவரத்திற்காக குலசேகரன் பட்டிணத்தை தலைமையிடமாக கொண்டு இரயில் இயக்கப்பட்டுள்ளது.
 திசையன்விளையில் இருந்து காலை 9 மணிக்கு புறப்படும் ரயில் இடைச்சிவிளை, தட்டார்மடம், சொக்குன் குடியிருப்பு, படுக்கப்பத்து, பிச்சிவிளை வழியாக குலசேகரன்பட்டணம் சென்ரல் ஸ்டேசன், கே.பி.எம் போர்ட், கே.பி.எம் பாக்டரி, ஆலந்தலை வழியாக திருச்செந்தூருக்கு காலை 9 மணிக்கு சென்றுள்ளது.
சுமார் 3 மணி நேரம் ஆகியுள்ளது.

இதற்கு கட்டணமாக அப்போது 13 அணாவும், 8 பைசாவும் வசூலித்துள்ளனர்.
தினசரி மூன்று முறை இந்த ரயில் இயக்கப்பட்டுள்ளது.

இது போன்று திசையன்விளையில் நடைபெறும் வெள்ளிக்கிழமை சந்தைக்கு குலசை கே.பி.எம் பேக்டரியில் இருந்து சிறப்பு ரயிலும் இயக்கப்பட்டுள்ளது. மேலும் குலசேகரன்பட்டிணம் சென்ட்ரல் ஸ்டேசனில் இருந்து கொட்டாங்காடு வழியாக உடன்குடிக்கு மூன்று முறையும் ரயில் இயக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திசையன்விளை, உடன்குடி, திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதியில் விளைந்த பொருட்களை குலசேகரன்பட்டணம் பகுதிக்கு கொண்டு வந்து விற்பனை செய்தது மட்டுமில்லாமல் வெளியிடங்களுக்கு ஏற்றுமதியும் செய்துள்ளனர்.
ரயில்தடம் இருக்கிறது
கோரிக்கை மட்டும் கிடப்பில் கிடக்கிறது.

இன்னும் குலசையில் துறைமுகத்தில் இருந்து பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கும், இறக்குமதி செய்வதற்கும் உள்ள பண்டகசாலை உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடந்த சுதந்திர போராட்டத்தின் போது இப்பகுதி மக்கள் கடுமையாக ஆங்கிலேயர்களை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

இதனால் குலசை உப்பளத்தில் வைத்து ஆங்கிலே அதிகாரி லோன்துரை கொல்லப்பட்டார். அவரது கல்லறையும் குலசையில்தான் உள்ளது.

இதனால் சீனி ஆலை மற்றும் ரயில் சேவையும் ஆங்கிலேயர்கள் நிறுத்திவிட்டனர். பின்னர் வந்த இந்திய அரசும் சீனி ஆலையும், ரயில் சேவையும் தொடர்ந்து நடத்தாமல் விட்டுவிட்டனர். தற்போது சீனி ஆலை இருந்த இடம் மட்டுமே உள்ளது. ஆனால் ரயில் ஓடிய ரயில்வே தடங்களை ஆக்கிரமித்துவிட்டனர். இது குறித்து பல முறை இப்பகுதி மக்கள் ரயில்வே துறையிடம் மனு கொடுத்தும் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வரலாற்று உண்மை மறைக்கப்பட்டுள்ளது;
இது முற்றிலும் ஒரு வரலாறு உண்மை மறைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மிக சிறப்பாக தொழில் நடந்துள்ளது. மிகப்பெரிய தொழில் நகரமாக விளங்கவேண்டிய குலசேகரன்பட்டணம் அப்போது இருந்த அதிகாரிகளின் அலட்சிய போக்கினால் தன்னுடைய பெருமைகளை இழந்து காணப்படுகிறது.

நாடு சுதந்திரம் பெற்றவுடன் தியாகிகள் நிறைந்து காணப்படும் இப்பகுதிகளில் அதிகாரிகள் அதிக கவனம் செலுத்தி மீண்டும் சீனி ஆலையை துவங்க நடவடிக்கை எடுத்திருக்கலாம். இது போன்று திசையன்விளை-திருச்செந்தூர் ரயில் சேவையும், உடன்குடி - குலசேகரன்பட்டணம் ரயில் சேவையும் தொடர்ந்து இயக்கி இருந்தால் திசையன்விளை, உடன்குடி, திருச்செந்தூர் பகுதிகளில் இருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட கிராமங்கள் வளர்ச்சி அடைந்திருக்கும்.

ஆனால் மிகப்பெரிய வரலாற்றை அதிகாரிகள் மறைத்துவிட்டனர். இனியாவது மத்திய அரசு கவனத்தில் கொண்டு உடனடியாக திருச்செந்தூரில் இருந்து குலசேகரன்பட்டணம், உடன்குடி, கொட்டங்காடு, பிச்சிவிளை, தட்டார்மடம், இடைச்சிவிளை, திசையன்விளை, நாங்குநேரி, நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரி வரை ரயில் இயக்க நடவடிக்கை எடுத்தால் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் இப்பகுதி மக்களுக்கு ஓரளவு  பயன் உள்ளதாக இருக்கும்.

மேலும் விவசாயம் முற்றிலும் அழிந்து விட்டதால் சீனி ஆலையை மீண்டும துவங்கினால் இப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படும். எனவே தற்போதுள்ள அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு தங்களின் கோரிக்கைை முன்வைக்கிறார்கள். நன்றி: #மீடியா கான்டக்ட்.


குலசேகரபட்டிணம் பளுவற்ற ரயில்வே(Kulasekarapatnam Light Railway (KLR)

 எங்க ஊரு நல்ல ஊரு


குலசேகரன்பட்டிணம்..எங்க ஊரு ஒரு ஜீவ பூமி. இன்று மற்ற வளர்ச்சி பெற்ற ஊர்களுக்கு மத்தியில் ஒரு பாவ பூமியாக காட்சியளிக்கிறது. எந்தவிதமான முன்னேற்றமும் காணப்படவில்லை. 1952லிருந்து எத்தனையோ காங்கிரஸ்,திமுக,அதிமுக mla,MP க்கள் எங்கள் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்படும் போதெல்லாம் அதைச் செய்கிறேன்,இதைச் செய்கிறேன் என்று பொய்யான வாக்குறுதிகளை அள்ளி விட்டது தான் மிச்சம். இது வரை ஒரு துரும்பை கூட எடுத்துப் போட்டதில்லை. எங்க ஊரின் சாபக் கேடு இது. அனல் மின் நிலையம் வருகிறது வருகிறது என கடந்த 10 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். “வரும் ஆனா வராது” என்பது போலத் தானிருக்கிறது. ஒரு காலத்தில் துறைமுகம் என்ன, சீனி ஆலை என்ன, ரயில்வே என கொடிகட்டி பறந்த ஒரு நகரம் இன்று பொழிவிழந்து,களையிழந்து மௌனமாய் கண்ணீர் சிந்திக் கொண்டிருப்பது தான் மிச்சம். எங்க ஊர் கடல் நீர் கொஞ்சம் கரிப்பு ஜாஸ்தி. எங்களின் கண்ணீரும் அதனுடம் கலந்து விட்டதால் இருக்குமோ?
இந்நிலையில் ராக்கெட் ஏவு தளம் வரப் போவதாக ஒரு இனிப்பான செய்தி நாளிதழ்களில் .. இத்திட்டத்தையும் ஆந்திரா பக்கம் கொண்டு செல்ல அங்குள்ளவர்கள் கச்சை கட்டி நிற்கிறார்கள். எங்க தொகுதி mla,Mp எந்தவொரு முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை. ஏற்கனவே பாரி கம்பெனிக் காரன் போட்ட ரயில் ரூட்டையாவது திரும்ப கொண்டு வர எத்தனையோ முயற்சிகள் பல பத்திரிகைகள் வாயிலாக,மனுக்கள் மூலமாக தனிப்பட்ட முறையில் செய்து வருகிறேன். நடக்கிறதா பார்ப்போம்.இனி இன்றைய தலைமுறையினரான இளசுகள் தான் போராட வேண்டும்.
இன்றுஅந்த ரயில் தடங்கள் இருந்த இடம் கூட மறைந்து ஊர் மக்கள் சிலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. எனது இளமை பருவத்தில்(1955 களில்) எங்க வீட்டுக்கு அருகிலேயே ரயில் தடங்கள் இருந்ததற்கான சுவடுகள், எரிந்த நிலக்கரி துண்டுகள் ரயில் பாதையின் இரு புறமும் கொட்டி கிடந்ததை பார்த்திருக்கிறேன். வீட்டுக்கு வெகு அருகாமையில் கூட ரயில்வே ஸ்டேஷன் கட்டிடம் ஒன்று சிதிலமடைந்து காணப்பட்டது. அதன் புகைப் படம் இங்கு இணைத்திருக்கிறேன். ஹூம் அது ஒரு பொற்காலம்.
சிதிலமடைந்த ரயில்வே ஸ்டேஷன் கட்டிடம்
சரி,சரி வாங்க எங்க ஊரு ரயில்வே பற்றி சில சுவார்சியமான தகவல்களத் தெரிந்து கொள்வோம்.
குலசேகரபட்டிணம் பளுவற்ற ரயில்வே(Kulasekarapatnam Light Railway (KLR) 

குலசை ரயில்வே ஸ்டேஷன்””
சென்னையை தலைமையிடமாக கொண்ட “கிழக்கு இந்திய காய்ச்சி வடிக்கும் தொழிற்சாலை மற்றும்  பாரி அன் கோ “East India Distilleries and Sugar Factories Limited of Madras” எனும் ஆங்கிலேயே நிறுவனம் குலசேகரன்பட்டினத்தில் சர்க்கரை ஆலையை துவங்கியது. இந்த ஆலைக்கு சரக்கு போக்குவரத்துக்காகவும் ஆலைக்கு வேலையாட்கள் வந்து செல்வதற்கு எனவும் ரயில் பாதை அமைக்க திட்டமிட்டது. இதன் அடிப்படையில் திருச்செந்தூரிலிருந்து குலசேகரன்பட்டினம் வழியாக திசையன்விளைக்கும், குலசேகரன்பட்டிணத்திலிருந்து உடன்குடிக்கு தனி ரயில்பாதை என மொத்தம் 46.671 கி.மீ அதாவது 28 மைல் தூரத்திற்கு ரயில் பாதை அமைத்தனர். இந்த ரயில்பாதை இரண்டு அடி அகலம் கொண்ட அகலமற்ற ரயில் பாதையாக அமைத்து குலசேகரபட்டிணம் பளுவற்ற ரயில் என்ற பெயரில் அமைத்தனர். இந்த ரயில் பாதை முழுக்க முழுக்க இந்த நிறுவனத்தின் சொந்த உபயோகத்துக்காகவே நிறுவனத்தின் செலவிலேயே அமைக்ப்பட்டது. இந்த பகுதியில் பணி புரிந்து வந்த ஆங்கிலேயே அரசு அதிகாரிகள் வற்புறுத்திலின் பேரில் பொது மக்களின் போக்குவரத்துக்காகவும் இந்த ரயில் பாதை திறந்து விடப்பட்டு ரயில்கள் இயக்கப்ட்டது. இந்த பாதையில் ரயில்கள் 1914 முதல் 1940 வரை இயக்கப்ட்டதாக ரயில்வே வாரிய ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ரயில் திசையன்விளை, இடைச்சிவிளை, தட்டார்மடம், சொக்கன்குடியிருப்பு, படுக்கப்பத்து, பிச்சிவிளை, குலசேகரன்பட்டினம சென்ட்ரல் நிலையம், குலசேகரன்பட்டினம் கே.பி.என் துறைமுகம், குலசேகரன்பட்டினம் கே.பி.என் தொழிற்சாலை, ஆலந்தலை திருச்செந்தூர், உடன்குடி போன்ற இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கப்ட்டிருந்தன. இது தவிர இந்த ரயிலின் பிரிவு ரயில் பாதையாக குலசேகரன்பட்டினம சென்ட்ரல் நிலையத்திலிருந்து காட்டான்காடு, வழியாக உடன்குடிக்கும் குறைந்த தூரத்துக்கு ரயில்பாதையும் அமைக்கப்பட்டது. திசையன்விளையில் இருந்து திருச்செந்தூர் மற்றும் உடன்குடி – கே.பி.என் சந்தைக்கு ஆங்கிலேயர்காலத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
ரயில்வே கால அட்டவணை
இந்த வழி தடத்தில் இயங்கப்ட்ட ரயில்கள் அனைத்தும் நிலக்கரியில் மூலமாக இயக்கப்ட்டு இந்த ரயில்களில் பொருத்தப்பட்ட இஞ்சின்கள் 30முதல் 40 குதிரைதிறன் கொண்டது.
இந்த பாதையில் திசையன்விளையிலிருந்து திருச்செந்தூருக்கு இரண்டு ரயில்களும் மறுமார்க்கம் திருச்செந்தூரிலிருந்து திசையன்விளைக்கு மூன்று ரயில்களும் இயக்கப்பட்டன. இது தவிர  திசையன்விளை வாரச் சந்தை நாளான வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு ரயில் ஒன்றும் இயக்கப்பட்டது. குலசேகரன்பட்டினம் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து உடன்குடிக்கு இருமார்க்க்ங்களிலும் தினசரி நான்கு சேவைகள் ரயில்கள் இயக்கப்பட்டன. திசையன்விளைக்கும் திருச்செந்தூருக்கும் இடையிலான பயணக்கட்டணம் 13 அனாவாக பயணக்கட்டணம் இருந்தது.
திசையன்விளையிலிருந்து திருச்செந்தூருக்கு இந்த ரயிலில் பயண நேரம் மூன்று மணி நேரம் ஆகும். இது போன்ற இரண்டு அடி அகலமற்ற ரயில்பாதை தற்போது டார்ஜிலிங் பகுதியில் ரயில்கள் இன்னமும் இயங்கிகொண்டிருக்கிறது. இந்த காலகட்டங்களில் திருநெல்வேலியிருந்து திருச்செந்தூருக்கு மீட்டர் கேஜ் வழிதடத்தில் தென் இந்திய ரயில்வே நிறுவம் ரயில்களை இயக்கி வந்தது. இந்த வழிதடம் தான் தற்போது அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டு ரயில்கள் இயக்கப்ட்டு வருகிறது. இதில் திருச்செந்தூர் ரயில் நிலையம் தென் இந்திய ரயில்வே நிறுவனத்தின் கட்டுபாட்டில் இருந்து வந்தது. பின்னர் தென் இந்திய ரயில்வே நிறுவனம் 1944-ம் ஆண்டு அரசுடமையாக்கப்பட்டு இந்திய ரயில்வேதுறையின் கீழ் கொண்டு வரப்பட்டது.
ரயில் ரூட்டை குறிக்கும் படம்
குலசேகரபட்டிணம் பளுவற்ற ரயில்வேயில் 1935-36-ம் ஆண்டில் புள்ளியியல் தகவல்கள்
ரயில் இஞ்சின்கள் : 4
ரயில் மோட்டார் கார் : 6
பயணிகள் பயணம் செய்யும் ரயில் பெட்டிகள் : 24
மூன்றாவது வகுப்பு பயணிகள் மொத்த இருக்கைகள் : 746
சரக்கு ரயில் பெட்டிகள் : 45
சோதனை செய்யும் ரயில் பெட்டிகள் : 2
இரண்டாம் உலகப் போரை தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாகவும் குலசேகரன்பட்டினத்தில் நடைபெற்ற பல்வேறு வேண்டதகாத சம்பங்கள் காரணமாகவும் குலசேகரன்பட்டினம் கே.பி.என் தொழிற்சாலை அதன் உற்பத்தியை நிறுத்தி தொழிற்சாலையை மூடியது. இதனால் இதை நடத்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு இந்த ரயில் வழி தடத்துக்கு உரிமையாளரான பாரி அன் கோ’ எனும் நிறுவனம் இந்த ரயில் வழி திட்டத்தை படிபடியாக நிறுத்துவது என முடிவெடுத்தது. இரண்டாவது உலகபோருக்குமுன்பு இந்த நிறுவன அதிகாரிகள் இந்த ரயிலை நிறுத்த முயற்சி மேற்கொண்டனர். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட ஆங்கிலேய அரசு நிர்வாகம் இந்த ரயில் வழிதடத்தையும் ரயில் சேவையையும் இணைத்து வாங்க முயற்சி மேற்கொண்டது. இந்த திட்டத்துக்கு வங்கிகளும் கடன் கொடுத்து உதவுவதாக வாக்குறுதி அளித்தன. ஆனால் ஏனோ காரணத்தால் இந்த திட்டம் கைவிடப்பட்டு ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இவ்வாறு தொழிற்சாலை மூடிய காரணத்தாலும் இந்த ரயில்வே திட்டதை பொறுப்பேற்று தொடர்நது நடத்த யாரும் வராத காரணத்தாலும் இந்த பகுதியில் இயக்கப்ட்ட ரயில் சேவை முற்றிலும் முடங்கிபோனது. தற்போது இந்த பகுதியில் ரயில்கள் இயக்கப்ட்டதற்கான எந்த ஒரு அறிகுறியும் இன்றி காணப்படுகிறது. இந்த குலசேகரபட்டிணம் பளுவற்ற ரயில்வே நிறுவனம் துவங்கப்பட்ட போது ரயில்வே வாரியமும் இந்த நிறுவனமும் சேர்ந்து போடப்பட்ட ஒப்பந்தத்தை இந்திய அரசு  ஜனவரி 5 1972 தேதி இந்த ரயில்வே திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யப்பட்டு  பயனற்றது என்று கைவிடப்பட்டது. இதன் பிறகு தற்போது இந்த ரயில்கள் இயக்கப்ட்ட வழி தடத்தில் உள்ள நிலங்கள் அனைத்தும் படிபடியாக தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு இந்த பகுதியில் எந்த சுவடும் இல்லாமல் அனைத்தும் அழிந்துவிட்டது.  தென் இந்திய ரயில்வே நிறுவனம் 1944-ம் ஆண்டு அரசுடமையாக்கப்ட்டது போல் இந்த குலசேகரபட்டிணம் பளுவற்ற ரயில்வே நிறுவனமும் அரசுடமையாக்கப்டிட்டிருந்தால் இந்த பகுதியும் மற்ற இடங்களில் ரயில்கள் தற்போது இயங்கி வருவது போன்று ரயில் அகல ரயில்பாதையில் ரயில்கள் இயங்கிகொண்டிருக்கும். இந்த குலசேகரபட்டிணம் பளுவற்ற ரயில் தனியார் நிறுவனத்தால் அமைக்கப்பட்டதால் இந்திய ரயில்வேதுறை இந்த ரயில் வழித்தடத்தை அரசுடையாக்காமல் விட்டு விட்டது. இது மட்டும் இல்லாமல் பொருளாதாரத்தில் பின் தங்கிய வறட்சி நிறைந்த இந்த பகுதி நல்ல வளர்ச்சி பெற்றிருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
தற்போது இந்த பகுதியில் ரயில் வழித்தடம் பற்றிய நிலை:-
கன்னியாகுமரியிலருந்து தொடங்கி கூடங்குளம், திசையன்விளை திருச்செந்தூர், தூத்துக்குடி, காயல்பட்டிணம், ஆறுமுகநேரி, சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை,  ராமநாதபுரம் வழியாக காரைகுடி வரை புதிய ரயில்வே இருப்புபாதை தடம் அமைக்க 2008-09 ரயில் நிதிநிலை அறிக்கையில் தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு செய்ய அறிவிக்கப்பட்டது. கிழக்கு கடற்கரை புதிய ரயில் இருப்புபாதை அமைக்க தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வுபணி முடிவடைந்து திட்ட மதிப்பீடை ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே சமர்பித்துவிட்டது. இந்த ஆய்வுப்பணியில் 462.47 கி.மீ தூரம் ரயில்பாதை அமைக்கப்படும் என்றும் இதற்கான திட்ட மதிப்பீடு 1965 கோடிகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வுப்பணி இரண்டு பிரிவுகளாக நடந்தது. காரைக்குடி – ராமநாதபுரம் மற்றும் ராமநாதபுரம் – கன்னியாகுமரி என ஆய்வு செய்து முடிக்கப்பட்டது. இந்த வழி தடத்தில் புதிய ரயில்பாதை அமைக்க எந்த இடங்களில் எத்தனை ரயில்நிலையங்கள் அமைக்கப்படும், எந்த ஊர்கள் எல்லாம் ரயில் மூலமாக இணைக்கப்படும், எவ்வளவு மேம்பாலங்கள் கட்ட வேண்டும், எத்தனை பாலங்கள் அமைக்க வேண்டும் என அனைத்து விதமான கட்டுமான செலவீனங்கள் பற்றி அறிக்கை தயாரித்து ரயில்வே வாரியத்திடம் தெற்கு ரயில்வேயின் கட்டுமான பிரிவு சார்பாக சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த தடத்தில் காரைக்குடி முதல் கன்னியாகுமரி வரை மொத்தம் 462.47 கி.மீ தூரத்தில் 34 ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரயில்வே வாரியம் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஏனென்றால் இந்த திட்டம் சுமார் 2000 கோடிகள் கொண்ட பெரிய திட்டமாக இருப்பதால் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் ரயில்வே வாரியம் தயக்கம் காட்டுகிறது. பொதுவாக ரயில்வே வாரியம் மற்றும் திட்டகுழு ஒரு புதிய ரயில்வே இருப்புபாதை திட்டத்தை பல கோடிகள் முதலீடு செய்து செயல்படுத்தும் முன்பு அந்த திட்டம் பொருளாதார அளவில் ஆண்டுக்கு எவ்வளவு வருமானம் திருப்பி கிடைக்கும் என்பதை கணக்கில் கொண்டு திட்டத்தை அறிவிப்பார்கள். குறைவாக வருமானம் வரும் திட்டங்களை ஆய்வு கைவிட்டு விடுவார்கள். இந்த ரயில்வே திட்டம் முக்கிய துறைமுகம், புதிய மின்திட்டங்கள், சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா, இந்த பகுதியில் உள்ள தொழில்சாலைகள், சரக்கு போக்குவரத்து என பல்வேறு வழிகளில் வரும் பொருளாதார வருமானங்களை கணக்கில் கொண்டு இந்த திட்டத்தை செயல்படுத்த தென்பகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து ரயில்வே வாரியம் மற்றும் திட்டகுழுவிடம் நேரடியாக சென்று திட்டத்தை விளக்கி அமுல்ப்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந்த வழி தடத்தில் சுற்றுலா மற்றும் பல்வேறு ஆன்மீக தலங்கள் உள்ளன. இந்த தடம் அமைக்கப்படும் பட்சத்தில் தூத்துகுடி துறைமுகத்துக்கு சரக்கு போக்குவரத்துக்கு மிகவும் வசதியாக அமையும். இந்த வழி தடத்தில் கூடங்குளம், உடன்குடி போன்ற பகுதிகளில் பல கோடி முதலீட்டுடன் கூடிய புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத் நிறைவேற்றபட்டால் கடலோர மாவட்டங்கள் அதிகமாக பயண்பெறும். இந்த திட்டம் வரண்ட மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மிகவும் வரபிரசாதமாக அமையும்.
இந்த திட்டத்தில் தமிழக அரசின் பங்கு:-
கர்நாடகம் மற்றும் ஆந்திரா மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் செயல்படுத்தும் புதிய ரயில்வே திட்டங்களுக்கு ஐம்பது சதவிகித நிதியை அளித்து இது மட்டும் இல்லாமல் திட்டத்துக்கு தேவையான நிலத்தையும் இலவசமாக ரயில்வே துறைக்கு கொடுத்து பல்வேறு புதிய ரயில் வழிதடங்களை ஒப்புதல் பெற்று பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ரயில் பட்ஜெட்டில் கூட கேரள மாநிலம் தங்கள் மாநிலத்தில் சபரிமலை ரயில் திட்டத்துக்கு இது போன்று ரயில்வே துறைக்கு உதவ தயார் என்று அறிவித்துள்ளது. இதை போன்று தமிழக அரசும் 2000 கோடியில் அமைய உள்ள இந்த கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டத்துக்கு ஐம்பது சதவிகித நிதியை அளித்து இந்த திட்டத்துக்கு தேவையான நிலத்தையும் இலவசமாக ரயில்வே துறைக்கு கொடுத்தால் இந்த திட்டம் ஐந்து ஆண்டுகளில் நிலைவு பெற்று பயன்பாட்டுக்கு வந்து விடும் என்பதில் ஐயம் இல்லை. இவ்வாறு தமிழக அரசு செய்ய வேண்டும் என்று தென்தமிழக பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர். இந்த புதிய கிழக்கு கடற்கரை ரயில்பாதை திட்டம் அமைக்கும் போது குலசேகரபட்டிணம் பளுவற்ற ரயில்வே பாதை அமைக்கப்ட்ட வழி தடத்தில் இந்த புதிய ரயில்பாதையை அமைத்து அனைத்து கிராமங்கள் பயன்படும் படியாக அந்த கிராமங்கள் புதிய ரயில்நிலையங்கள் அமைத்து ரயில்கள் இயக்கினால் இந்த பகுதி மக்களுக்கு மிகவும் பயனள்ளதாக இருக்கும்.  இந்த திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற தென்தமிழக எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என தென் தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 நன்றி:தி ஹிந்து
P.Edward Jeni
Secretary 
Kanyakumari District Railway User’s Association (KKDRUA)

புதன், 28 மார்ச், 2018


இராவண காவியமும் தமிழ்த் தேசியமும்

இராவண காவியம் - தமிழகக் காண்டம்

இராவண காவியத்தின் முதலாம் காண்டமான தமிழகக் காண்டத்தைக் கற்போர் மனதில் தமிழ்த் தேசியம் மலரும். அதில் வரும் கருத்துகளைப் பாயிரம் முதலாக ஒவ்வொரு படலமாக காண்போம்.

பாயிரம்:

இதில் இராமாயணம் என்னும் கற்பனை கதை புனையப்பட்டதன் நோக்கம் கூறப்பட்டுள்ளது. அதாவது, ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால் முதலில் மொழியையும் வரலாற்றையும் அழித்தல் வேண்டும். எனவே தான், தொன்மையான மொழியும் நாகரிகமும் தோன்றிய நம் குமரி கண்டத்தில் அரக்கர்களும் குரங்குகளும் வாழ்ந்ததாக இராமாயணம் கூறுகிறது.
இக்கொடிய கதையை கம்பன் தமிழில் இயற்றினான் என்னும் கருத்ததைப் பின்வரும் பாடல் வழியாக அறியலாம்.

தம்மி னப்பகை சார்தமிழ்க் கம்பனும்
அம்மு ழுப்பொ யதையெந் தமிழர்கள்
மெய்ம்மை யான விழுக்கதை யாமென
அம்ம வோநம்பி டச்செய்து விட்டனன்

கம்பன் செய்பொய்க் கவியினை மெய்யென
நம்பி யையகோ நந்தமிழ் மக்களும்
தம்ப ழம்பெருந் தாய்க்குல மக்களை
வெம்ப கைபோல் வெறுத்திட லாயினர்

என்னும் பாடல்கள் நம் அடையாளப் பறிப்புகளைப் பற்றி கூறுகிறது.  இப்போது, தமிழ்நாட்டில் நம் வரலாற்றுத் தொன்மையின் சான்றுகளான ஆதிச்சநல்லூர், பூம்புகார், கொடுமணல், கீழடி போன்ற இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பாடததும் நமது வழக்குமன்றங்களில் வழக்கு மொழியாகவும் கோவில்களில் வழிபாட்டு மொழியாகவும் தமிழ் புறக்கணிக்கப்படுவதும் நமது மொழி மற்றும் வரலாற்றை அழிக்கும் முயற்சியாக இருக்கின்றதை  நாம் காண்கிறோம்.

இவ்வாறாக நம் தமிழினத்திற்கு ஏற்பட்டுள்ள அடையாள மற்றும் உரிமை பறிப்புகளைக் கூறி விட்டு. பண்டைய தமிழர்களின் பண்பட்ட வாழ்வுதனை ஏழு படலங்களாக பிரித்துக் கூறுகிறது.

1.தமிழகப் படலம்

இதில் பண்டைய தமிழகம் எவ்வாறு பரந்து விரிந்து இருந்தது என்பதை கூறுகிறது. குமரியாறு பஃறுளியாறுடன் தமிழகம் திகழ்ந்தது. சிந்து வெளி நாகரிகம் மற்றும் நடுத்தரைக்கடலில் பல்வேறு நாகரிகங்களைப் பண்டைய தமிழ் பரதவர்கள் கண்டனர்.

உலக முன்னா டுயர்தமிழ் நாடதே
உலக முன்மக்க ளொண்டமிழ் மக்களே
உலக முன்மொழி யொண்டமி ழேயிதை
உலக மின்றறி யாநிலை யுள்ளதே.

கிபி 2-3 ஆம் நூற்றாண்டுகளிலிருந்து தனியரசு இல்லாமலிருப்பதால் நமது மொழியின் தொன்மை உலகரங்கில் அனைவரின் பார்வைக்கும் செல்லாதவாறு மறைக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக, வரும் ஐந்நிலம் பற்றிய பாடல்களைக் கற்போர் மனதில் தமிழகம் வரலாறு முழுவதும் தற்சார்பு பெற்றிருந்தது என்னும் கருத்து நன்கு பதியும். இப்பொழுது தில்லி குடியேற்ற(colony) அரசு இத்தற்சார்பு நிலை அழியும் நோக்கில் செயலாற்றும் திட்டத்தை எதிர்த்து போர்குணம் கற்போர் மனதில் தோன்றும்.

2. மக்கட் படலம்

இப்படலம் தமிழக மக்கள் பல்வகையான தொழில்கள் புரிந்து வளத்தோடு வாழ்ந்து வந்ததைப் பற்றி கூறுகிறது. ஜாதி என்னும் கொடிய மூடத்தனம் இல்லாமல் வாழ்ந்தனர் என்னும் கருத்தை

ஆங்கவர் தம்மு ளாண்டா னடிமையாங் கொடுமை யின்றிப்
பாங்குறு தொழிலுக் கேற்ற பயனைமவ் வவரே யெய்தி
........... வாழ்ந்தார்

என்னும் பாடல் மூலம் அறியலாம். இதை கற்போர் மனதில் ஜாதியை எதிர்க்கும் எண்ணம் உண்டாகும்

3. தலைமக்கட் படலம்

இப்படலம் நம் மூவேந்தர்களான சேர சோழ பாண்டியர்களின் ஒற்றுமையைப் பற்றி கூறுகிறது. ஆம், ஒடிசா மன்னன் காரவேலனின் கல்வெட்டில் 1300 ஆண்டுகளாக இருந்த மூவேந்தர்களின் ஒற்றுமையைப் பற்றி கூறுகிறது. அவர்கள் ஒற்றுமையோடிருந்து தமிழகத்தைக் காத்தனர். இதை கற்போர் மனதில் இப்போது தமிழகத்தில் நிகழும் தனிநபர் பகை அரசியலை புறக்கணிக்கும் எண்ணம் வரும்.

4. ஒழுக்கப் படலம்

இப்படலம் தமிழர்கள் அனைவரும் கல்வி கற்று விளங்கியதையும்  இல்லறத்தில் அன்பால் சிறந்து வளங்கியதையும் பற்றி கூறுகிறது.

..........
கல்லாரைக் காணாராய் கற்றுநல முற்றனரே

என்னும் பாடல் வரிகளுக்குச் சான்றுகளாக பண்டைய தமிழர்கள் வாழ்ந்த இடங்களில் கிடைத்த மக்கள் பயன்படுத்திய பொருட்களான பானை அணிகலன் முதலியவற்றிலும் எழுத்துகள் கிடைத்தன. வடக்கிலே கிடைக்கப்பட்டுள்ள எழுத்துகள் அரசர்கள் வெட்டிய கல்வெட்டில்தான் காணப்படுகின்றன.

5. தாய்மொழிப் படலம்

இப்படலத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் கற்போர் மனதை அள்ளும் தன்மையுடையது.

உலகிலேயே பழைமையும் இளமையும் பாங்குற பெற்ற மொழி தமிழே. மிகப் பழைமையான எழுத்திலக்கணத்தை உடையது. இத்தகைய அமைப்பு வேறெந்த மொழிக்கும் கிடையாது. இதற்கு முதல்காரணம் நம்முடைய தமிழ்ப் பற்றே.

ஏடுகை யில்லா ரில்லை யியலிசை கல்லாரில்லை
........
நாடுகை யில்லா ரில்லை நற்றமிழ் வளர்ச்சி யம்மா

நாடெலாம் புலவர் கூட்டம் நகரெலாம் பள்ளி யீட்டம்.
வீடெலாந் தமிழ்த்தாய்க் கோட்டம் விழவெலாந் தமிழ்க்கொண் டாட்டம்
.....

என்னும் பாடல் வரிகளுககேற்ப உள்ள
தாய்மொழி பற்றே நம் மொழியைப் பேணிக் காத்து பழைமையும் இளமையும் ஒருங்கே அமைய வழிவகுத்தது.

6. கடல்கோட் படலம்

இப்படலத்தில் உள்ள பாடல்கள் தம் வாழ்விடம் கடலில் மூழ்கியதால் தமிழக மக்கள் அடைந்த கையறுநிலையால் பெற்ற துயரத்தை கற்போர் மனதில் நன்கு பதியும்படி உள்ளன.
இப்போது தமிழகத்தில் நடக்கும் கனிம வேட்டையிலிருந்து காக்கும் தற்காப்புணர்ச்சி கற்போர் மனதில் தோன்றும்.

7. இலங்கைப் படலம்

புலப்பெயர்வு முடிவடைந்தபின் தமிழக மக்கள் தற்போதைய இடத்தில் குடிபெயர்ந்து இனிது வாழ்ந்துவந்தனர்.

.....
மன்னவர் மன்ன ரான மாபெருந் தலைவ ரெல்லாம்
தன்னைநேர் தமிழை யந்தத் தமிழ்பயில் தமிழ கத்தை
அன்னைபோ லினிது காத்தே யரசுவீற் றிருந்தா ரம்மா

இவ்வாறாக பண்பட்ட வாழ்க்கை வாழ்ந்த நம் முன்னோர்கள் பற்றி கூறும்
இக்காண்டத்தைக் கற்போர் மனதில் தமிழ்த் தேசியம் இயல்பாய் மலரும்.
*எமது தேசம் தமிழ்த் தேசம்*
*எமது தேசிய மொழி தமிழ்*
*எமது தேசிய இனம் தமிழர்*
*இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக்* *குடியரசு அமைப்பதே எமது இலக்கு*

ஞாயிறு, 25 மார்ச், 2018

பஞ்சமி நிலத்தை வாங்கலாமா? பஞ்சமி நிலம் என்றால் என்ன?



பஞ்சமி நிலத்தை வாங்கலாமா? பஞ்சமி நிலம் என்றால் என்ன?

_ஆங்கிலேயர்களுடைய ஆட்சிக் காலத்தில்செங்கல்பட்டு மாவட்டத்தின் பொறுப்பு ஆட்சியராகஇருந்த திரு ஜேம்ஸ் ட்ரெமென்கீர் என்பவர்தாழ்த்தப்பட்ட மக்களான பறையர்களைப் பற்றியஅறிக்கை ஒன்றை தயாரித்து, 1891ஆம் ஆண்டுஆங்கிலேய அரசிடம் தாக்கல் செய்தார். _

_அந்த அறிக்கையில் பறையர்களுக்கு இலவசமாகநிலம் வழங்குவதன் மூலம் அவர்களுடையவாழ்க்கையை அரசாங்கம் மேம்படுத்த முடியும்என்ற கருத்தை அதில் வலியுறுத்தி இருந்தார்.இந்த அறிக்கையானது ஆங்கிலேயநாடாளுமன்றத்தில் 1892ம் ஆண்டு, மே மாதம்16ஆம் தேதி விவாதத்துக்கு வந்தது._

*பஞ்சமி நிலம் தொடர்பான சட்டம்*

_1892ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிஇங்கிலாந்து நாடாளுமன்றத்தில்நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி இந்தியாமுழுவதும் 12.5 இலட்சம் ஏக்கர் விளைநிலங்களைதலித் மக்களுக்கு இலவசமாக அன்றையஆங்கிலேய அரசு வழங்கியது. அப்போதையசென்னை மாகாணத்தில் மட்டும் தலித்மக்களுக்கு, இலவசமாக  2 லட்சம் ஏக்கர்விளைநிலங்கள்  ஆங்கிலேய அரசால்வழங்கப்பட்டது.  இந்த நிலத்தை சுருக்கமாக D.C.Land (Depressed Class Land)என்றும் சொல்கிறார்கள்._

*சட்டத்திலுள்ள முக்கிய நிபந்தனைகள்*

_இவ்வாறு வழங்கப்பட்ட நிலங்களில், ஷைதாழ்த்தப்பட்ட மக்கள் விவசாயம் செய்தோ, வீடுகள்கட்டிக்கொண்டோ அதனை அனுபவிக்கலாம்.குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு பிறகு தான்,அவர்கள் இந்த நிலங்களை பிறருக்கு விற்கமுடியும். அதுவும், அவர்கள் வகுப்பைச்(Depressed Class) சார்ந்தவர்களிடம் தான் விற்கமுடியும். வேறு எந்த வகுப்பினரிடம் விறறாலும்அந்த விற்பனை செல்லாது._

_தெரிந்தோ அல்லது தெரியாமலோ யாராவது,இந்த பஞ்சமி நிலங்களை வேறு வகுப்பினரிடம்விற்க முயன்றால், பத்திரத்தை பதிவு அதிகாரி,அதனை பதிவு செய்யக்கூடாது. மீறி இந்த பஞ்சமிநிலங்களை வேறு ஒருவர் வாங்கினால், எந்தநேரத்திலும், அந்த நிலங்களைவாங்கியவரிடமிருந்து, அரசாங்கம் பறிமுதல்செய்யலாம். அதற்கு நஷ்ட ஈடு வழங்கப்படமாட்டாது._

_தாழ்த்தப்பட்ட மக்களை யாரும் ஏமாற்றிவிடக்கூடாது என்கிற எண்ணத்திலேயே இந்தசட்டத்தை, ஆங்கிலேய அரசு உருவாக்கியது._

*பூமி தான இயக்கம்*

_1950ம் ஆண்டுக்குப் பிறகு, ஆசார்ய வினோபாஅவர்கள் பூமி தான இயக்கத்தின் வழியாக பொதுமக்களிடம் இருந்து பெற்று, பல நிலங்களைஇதே சட்டப்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்குஅரசாங்கத்தின் மூலம் வழங்கினார். 1960ம்ஆண்டிலும் இந்த முறையில் நிலங்கள் தலித்மக்களுக்கு வழங்கப்பட்டன. ஆங்கிலஅரசாங்கத்தால் Depressed Class என்றுகுறிப்பிடப்பட்ட பெயர் இந்திய அரசியல் சட்டத்தில்,Scheduled caste - பட்டியல் வகுப்பினர்(அட்டவணை வகுப்பினர்) என்று பிற்பாடு மாற்றம் செய்யப்பட்டது. D.C.Lan (Depressed Class Land)_

*எச்சரிக்கை*

_நிலம் வாங்குகின்ற வேறு வகுப்பினர், பஞ்சமி நிலமாக இருந்தால் அதனை எக்காரணத்தை முன்னிட்டும் வாங்கக்கூடாது. நிலத்தை விற்பனை செய்பவர் வேறு வகுப்பினராகக்கூட இருக்கலாம். அவர் அந்த நிலத்தை ஒரு தலித்திடம் இருந்து அவர் பெற்று அதனை உங்களிடம் விற்றாலும் நீங்கள்தான் நஷ்டப்பட வேண்டியதிருக்கும். ஆகையால், ஒரு நிலம் வாங்கும் போது அந்த நிலத்தை விற்பவர் யாரிடமிருந்து வாங்கியுள்ளார் என்பதை பார்ப்பது அவசியம் ஆகின்றது.

சனி, 24 மார்ச், 2018

தேரிக்காடு ரகசியம்!!!



தேரிக்காடு ரகசியம்!!!

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும்போது, குரும்பூருக்கு முன்னதாக வலது புறம் திரும்பி நாலுமாவடி, திசையன்விளை வழியாகச் சென்றால் தேரிக்காட்டை அடையலாம்.

தாமிரபரணி ஆற்றின் தென்கரைப் பகுதியில் கடம்பாகுளத்திற்கு தெற்கே, நாலுமாவடி, புதுக்குடி, சோனகன்விளை, நாதன்கிணறு, காயாமொழி, பரமன்குறிச்சி, நாசரேத் ஆகிய ஊர்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தேரிக்காடு விரிந்து, பரந்து கிடக்கிறது.

மன்னார் வளைகுடாவை நோக்கி தெற்கு, தென்கிழக்காக சற்றே சரிந்த நிலையில் காணப்படும் இந்த தேரிக்காட்டின் மொத்த பரப்பளவு 12 ஆயிரம் ஏக்கர் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது.

கடல் மட்டத்தில் இருந்து 15 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த தேரிக்காட்டில் உள்ள மணல் மேடு சில சமயம், கடல் மட்டத்தில் இருந்து 25 மீட்டர் உயரம் வரை உயர்ந்துவிடும்.

ஒரு சமயம் உயரம் குறைவாக இருக்கும் இடம், காற்றின் போக்கு காரணமாக அடுத்த சில மணி நேரங்களில் பெரிய மணல் மேடாக மாறிவிடும்.

அப்போது அந்த மணல் குன்றுகளே மெதுவாக இடம் மாறி நகர்ந்து செல்வதுபோலத் தோன்றும்.

தென் மேற்கு பருவ மழை காலமான மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை அங்கு பலத்த காற்று வீசும்போது இதுபோன்ற மணல் குன்றுகள் இடம் விட்டு இடம் மாறும் மாயா ஜாலங்கள் அடிக்கடி அரங்கேறும்.

நிமிடத்துக்கு ஒருமுறை அங்கு காட்சிகள் மாறிக்கொண்டே இருப்பதால், அந்த தேரிக்காட்டில் திசை கண்டுபிடித்துச் செல்வது என்பது மிகவும் சிரமம்.

திரும்பிய இடம் எல்லாம் மணல் மேடாக இருப்பதால், இது விவசாயம் செய்வதற்கு ஏற்ற இடம் அல்ல.

ஆனால் மழை காலங்களில், அங்குள்ள பள்ளங்களில் தேங்கும் நீர் செயற்கை ஏரிபோல உருவாகும். அதுபோன்ற இடம் தருவை என்று அழைக்கப்படுகிறது. அந்தப் பகுதியில் தண்ணீர் இருக்கும் காலங்களில் நெல் அல்லது வேறு ஏதாவது பயிரிடுவார்கள்.
தேரிக்காட்டின் மற்ற இடங்களில் முந்திரி செடிகள் அங்கும் இங்குமாக வளர்ந்து இருக்கும். அவ்வப்போது வீசும் பலமான காற்று, மணலை அள்ளி வந்து அந்த முந்திரிச் செடிகள் மீது கொட்டிவிடும். அதுபோன்ற நேரங்களில் முந்திரிச் செடியின் மேல் கிளை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கும் காட்சி, சமாதிக் குழியில் இருந்து ஏதோ எட்டிப்பார்ப்பது போன்ற பயங்கர தோற்றத்தைத் தரும்.

திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இரு மாவட்டங்களிலுமாக இந்த தேரிக்காடு அமைந்து இருக்கிறது.

ஏறக்குறைய ஒரு பெரிய வட்டமான பகுதிபோல இது காட்சி அளிக்கிறது.

இதில் ஆச்சரியம் என்ன என்றால், அங்கே இருப்பது போன்ற செக்கச்செவேல் என்ற மணல் பகுதி, அந்த மாவட்டங்களின் வேறு எந்தப் பகுதியிலும் காணப்படவில்லை என்பது தான்.

அங்கு இருப்பது ஆற்று மணல் அல்ல. இதனால் அவை தாமிரபரணி நதியால் கொண்டு வந்து சேர்க்கப்பட்டவை அல்ல.

அதேபோல அவை கடல் மண்ணும் அல்ல. எனவே கடல் பொங்கி வந்து இந்த மணல் மேடு ஏற்பட்டது என்று சொல்வதற்கும் வாய்ப்பு இல்லை.

அப்படியானால் இந்த அதிசய மணல் மேடு எப்படித் தோன்றியது? வேறு எங்குமே இல்லாத வகையிலான மணல் எங்கு இருந்து எப்படி வந்தது? என்பது போன்ற வினாக்கள் இன்னும் விடைதெரியாத புதிராகவே இருக்கின்றன.

ஏதோ ஒரு மிகப்பெரிய இயற்கை விளைவு நிகழ்ந்து, அதன் காரணமாக அந்தப் பகுதியில் மட்டும் தேரிக்காடு உருவாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் இப்படி ஒரு அதிசய பூமியை உருவாக்கிய அந்த இயற்கை நிகழ்வு என்ன என்பது மர்மமாகவே இருக்கிறது.

அங்குள்ள மணல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது, மணல் மூன்று அடுக்குகளாக இருப்பது தெரிய வந்தது.

முதல் அடுக்கு 8 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முந்தியது என்றும், அதன் மேல் உள்ள இரண்டாம் அடுக்கு, 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டு இருக்கலாம் என்றும், மேல் தளத்தில் உள்ள மணல் பகுதி, ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

எனவே, தேரிக்காட்டின் மணலுக்கு அடியில், அந்தக் காலத்தில் புதையுண்ட நகரங்களின் எச்சங்கள் இருக்கலாம்.


அங்குள்ள மணலுக்கு அடியில் இறுக்கமான செந்நிற களிமண் பூமி தென்படுகிறது.

தென் மேற்கு சுழல் காற்றால் அந்தப் பகுதியின் மணல் இடம் மாறுகிறது. அப்போது, அங்குள்ள மரங்கள், வயல்வெளிகள், ஏன், சில கிராமங்களைக் கூட கால ஓட்டத்தில் அந்த மணல் மூடிவிடுகிறது என்று அங்கே ஆய்வு நடத்திய பாதிரியார் கால்டுவெல் தெரிவித்து இருக்கிறார்.

இங்குள்ள மணல் மேடுகள் காற்றின் போக்குக்கு ஏற்ப இடம் மாறுவதால் ஏற்படும் ஆபத்தைக் குறைக்க, இந்தப் பகுதியில் பனை மரங்களை அதிக அளவில் வளர்க்க வேண்டும் என்ற கருத்தை 1848–ம் ஆண்டு அங்கு ஆங்கிலேய ஆட்சியின் கலெக்டராக இருந்த இ.பி. தாமஸ் என்பவர் முன் வைத்தார்.

அவரது முயற்சியால் தேரிக்காட்டில் ஏராளமான பனை மரங்கள் வளர்க்கப்பட்டன. நிறைய பனை மரங்களைக் கொண்ட குதிரைமொழி தேரி இப்போது வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

தாமிரபரணி ஆற்று நாகரிகத்தைத் தேடியபோது, ஆதிச்சநல்லூர் போன்றே தாமிரபரணி ஆற்று நெடுகிலும் உள்ள வேறு சில இடங்களிலும் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

அதேபோல தேரிக்காட்டிலும் அகழ்வாராய்ச்சி நடைபெற்றது.

ஆதிச்சநல்லூர் போன்று மிகப்பெரிய அளவில் இல்லை என்றாலும், தேரிக்காட்டிலும் சில அபூர்வமான பொருட்கள் கிடைத்தன.

சில இடங்களில் முதுமக்கள் தாழிகள் புதைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்ட றியப்பட்டது.

பாலைவனம் போல இருக்கும் தேரிக்காட்டுக்கு அருகே வாழ்வாதாரத்தை அமைத்துக் கொண்டவர்கள், இந்த தேரியில் தங்களது மூதாதையர்களின் உடலை தாழிகளில் வைத்து புதைத்து இருக்கலாம் என்று தோன்றுகிறது.

அவை எந்தப்பகுதியில் வசித்தவர்களின் முதுமக்கள் தாழிகள் என்பது தெரியவில்லை.

அங்கு இருந்த தாழிகளில் கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்கள் மற்றும் இரும்பால் செய்யப்பட்ட கத்தி, ஈட்டி போன்ற ஆயுதங்கள் ஆகியவையும் கிடைத்தன.
எனவே, ஆதிச்சநல்லூருக்கும், தேரிக்காட்டுக்கும் தொடர்பு இருந்தது என்ற விவரம் தெரியவந்துள்ளது. இதுபற்றி இன்னும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த தேரிக்காட்டில் மற்றொரு அதிசயம், அந்தப் பாலைவனத்தில் ஒரு சோலையாக மேலப்புதுக்குடி என்ற இடத்தில் ஒரு சுனை இருக்கிறது. கோடை காலத்தில்கூட அந்த சுனையில் சுவையான தண்ணீர் கிடைக்கிறது. அந்த சுனையின் கரையில் உள்ள அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் கற்குவேல் அய்யனார் கோவில் போன்றவை புகழ்பெற்றதாகும்.

வெள்ளி, 23 மார்ச், 2018

பிராமணர்கள் SC, ST மற்றும் OBC அரசியலமைப்பு ஒதுக்கீட்டில் படையெடுத்த இடங்களைக் காண்க.



பிராமணர்கள் SC, ST மற்றும் OBC அரசியலமைப்பு ஒதுக்கீட்டில் படையெடுத்த இடங்களைக் காண்க.

1- ஜனாதிபதி செயலகத்தின் மொத்த இடுகைகள் 49.
'இவர்களில் 39 பிராமணர்கள்.
 SC'ST-4
"ஓ.பி.சி.-06

2- துணை ஜனாதிபதி செயலகத்தின் 7 பதவிகள்.
இங்கே 7 பிராமணர்கள் இருக்கிறார்கள்.
-00 எஸ்சி
எஸ்டி -00
ஓ.பி.சி. -00


3. கேபினட் செயலாளர் பதிவுகள் 20.
17 பிராமணர்கள்.
 SC'ST-1
ஓ.பி.சி.-002

4- பிரதமரின் அலுவலகத்தில் மொத்தம் 35 பதிவுகள்.
31 பிராமணர்கள்.
SC'ST-02
OBC - 02

விவசாயத் திணைக்களத்தின் மொத்த இடுகைகள் - 274.
259 பிராமணர்கள்.
SC'ST-5
ஓ.பி.சி.-10

மொத்த அமைச்சின் பாதுகாப்பு அமைச்சு 1379.
1300 பிராமணர்கள்.
 SC'ST-48.
 ஓ.பி.சி. -31

7- சமூக நல மற்றும் சுகாதார அமைச்சின் மொத்த இடுகைகள் 209.
132 பிராமணர்கள்.
SC'ST-17
ஓ.பி.சி. -60


8 - நிதி அமைச்சின் மொத்த இடுகைகள் 1008.
942 பிராமணர்கள்.
SC'ST-20.
ஓ.பி.சி.-46

9 - பிளானட் அமைச்சில் மொத்தம் 409 பதிவுகள்.
 327 பிராமணர்கள்.
 SC'ST-19.
 ஓ.பி.சி.-63


10- தொழில் அமைச்சகத்தின் மொத்த இடுகைகள் 74.
59 பிராமணர்கள்.
நேரங்களில் SCSI- 4.
ஓ.பி.சி. -9

11- கெமிக்கல்ஸ் மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் மொத்த இடுகைகள் 121. 91 பிராமணர்கள்.
-9, SCSI.
ஓ.பி.சி. -21


12 - கவர்னர் மற்றும் லெப்டினன்ட் கவர்னர் 27 வது ஒட்டுமொத்த.
25 பிராமணர்கள்.
-00, SCSI
ஓ.பி.சி. -2


13- தூதுவர்கள் வெளிநாட்டில் வாழ்ந்து வருகின்றனர் 140.
140 பிராமணர்கள்.
 SC'ST-00.
 ஓ.பி.சி.-00

14- மத்திய அரசு பல்கலைக்கழக துணைவேந்தர் 108.
108 பிராமணர்கள்.
 SC'ST -03
 OBC- 05

15 - மத்திய பொதுச் செயலாளர் பதிவுகள் 26.
18 பிராமணர்கள்.
SC'ST-1
ஓ.பி.சி.-7


16- உயர் நீதிமன்ற நீதிபதி 330. 306 பிராமணர்கள்.
SC'ST-4
ஓ.பி.சி. -20

17 - உச்ச நீதிமன்ற நீதிபதி 20.
23 பிராமணர்கள்.
SC'ST-01
ஓ.பி.சி.-02

18- மொத்த ஐஏஎஸ் அதிகாரி 3600.
2750 பிராமணர்கள்.
-300 essiest.
 -350 ஓ.பி.சி..

கோயில்கள், ஜோதிடம், எதிர்காலம் போன்றவை ஒரே பிராமணர்களில் 100% ஆகும். நாட்டின் மக்கள் தொகையில் 3% க்கும் குறைவான பிராமணர்கள் எவ்வாறு 90% பதில்களைப் பெற்றனர்? கடவுள் மதத்தின் பெயரா? மன்சுரிமியின் பெயர் என்ன? அல்லது அது நம்முடைய காரியமா? அதை யோசி!

சகோதரனே, அதை முடிந்த அளவுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள். பிராமணர்களின் நிறத்தை விளக்குங்கள். அரசியலமைப்பு ஒதுக்கீட்டை பாதுகாக்கவும்.

(டெலினை அடிப்படையாகக் கொண்ட நிறுவனம், 'யங் இந்தியா' எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டில் கிடைக்கிறது).

நாம் யார்? நம் வரலாறு என்ன?



#நாம் யார்? நம் வரலாறு என்ன?

சுமார் 4000 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் தமிழ் நாக அரச வம்சத்தினர் சிறப்பாக ஆட்சி செய்து வந்தனர்!

* நாக வம்சத்தினர் காலத்தில்தான் அரப்பா, மொகஞ்சதரோ,காளிபங்கன், போன்ற சிந்து சமவெளி ,நகரங்கள் உருவாக்கப்பட்டு, செழிப்பாக இருந்தது.

* அப்போது, நாடோடிகளாக, ஆடு, மாடுகளோடு வந்த, வெளிறிய ஆரியர்கள் இங்கு நிரந்தரமாகக் குடியேற வேண்டும் என ஆசைப்பட்டனர்.

* நீண்ட காலப் போரில் ஈடுபட்டனர். நாக அரசர்களிடம் பணியில் அமர்ந்து சூழ்ச்சி செய்து, அரசர்களிடையே பிரிவினையை உருவாக்கினர்.

* வெள்ளையர்கள் போல் பிரித்தாளும் கொள்கையைக் கடைப்பிடித்து சில ராஜ்யங்களைக் கைப்பற்றினர்.

* பிறகு வேதங்களைச் சொல்லி, அரசர்களிடம், நாங்கள் கடவுள் பாஷை தெரிந்தவர்கள் என சொல்லி பிராமணர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.

* பசு மாடுகள், குதிரைகள் போன்ற விலங்குகளைப் பலியிட்டு, யாக குண்டத்தில் சிறிது போட்டு யாகம் வளர்த்தனர். பலியான மிருகங்களை சமைத்து விருந்துண்பார்கள்.

* ரிக் வேதங்களில், மாட்டு இறைச்சியை எவ்வாறு சமைத்து உன்ன வேண்டும் என்று கூட குறிப்பிடப்பட்டுள்ளது.

* மாட்டு இறைச்சியை முதலில் அதிகமாக உண்டவர்கள் ஆரியர்களும், அரசர்களும் தான்.

* பிறகு நர பலி, பல்வேறு யாகம், சடங்குகளை திணித்து, அரசர்களை, மக்களை அடிமை படுத்தினார்கள்.

* அரசவைகளில் ஆலோசகர்களாக இருந்து, மறைமுகமாக ஆட்சி செய்தனர்.

* பிறகு வரனாசிரமத்தை நிறுவி பிராமணன், சத்ரியன், வைசியன், சூத்திரன் போன்ற பிரிவுகளை உருவாக்கினர்.

* அப்போது, சாக்கிய குலத்தைச் சார்ந்த சித்தார்த்தன்.

* தந்தை பெரியார் போல், சடங்கு, யாகம், உயிர்ப் பலி அனைத்தையும் எதிர்த்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

* அதன் பிறகு தான், புத்த மதம் உருவாகி வளரத் தொடங்கியது.

* புத்த மடங்கள் நிறுவப்பப்பட்டன.

* சாம்ராட் அசோகா, கலிங்கப் போருக்குப்வபின் மனமாற்றம் அடைந்து, புத்தம் தழுவினார்.

* பிறகு வேதமதங்களில் உள்ள தவறான, மூடநம்பிக்கை சடங்குகளை ஒழித்தார்....

* அப்போது, வாழ்விழந்த ஆரியர்களுக்கு மெளரிய வம்ச மன்னர்கள், வரிச் சலுகை வழங்கி, அவர்களுக்கு அக்ராஹாரங்கள் (வரி செலுத்த இயலாதவர்கள்) உருவாக்கி, காத்து வந்தனர், மற்றும் அரச பதவிகளும் சலுகை அடிப்படையில் முக்கியத்துவம் தரப்பட்டது.

* இந்தியா, இலங்கை, ஆப்பிரிக்கா, சீனா, மங்கோலியா, ரஷ்யா, தென் கிழக்கு ஆசிய நாடுகள்வரை புத்தம் பரவிகொண்டு இருந்தது.

* 700 வருடம் ஆட்சியில் இருந்த மெளரிய பேரரசு, இந்தியாவின் பொற்காலம் எனப்பட்டது.

* புத்த மதத்தை அழிக்க முடியாததால், ஆரியர்களும் புத்த மதத்தை ஏற்றனர்.

* இந்திய முழுவதும் புத்த மதம் அரச மதமாக்கப்பட்டு, மக்கள் அனைவரும் புத்தம் தழுவினர். சமணமும் செல்வாக்கோடு இருந்தது.

* அந்த கால கட்டத்தில் தான் நாகார்ஜுனன் என்ற பிராமன மன்னன் புத்தர் விஷ்ணுவின் அவதாரம் என சித்தரித்து, புத்த மதத்தில் பிளவை ஏற்படுத்தினான்.

* பிராமணர் உருவாக்கிய புத்தமதப் பிரிவிற்கு "மஹாயானம் புத்தம்" என்றும்,

* உண்மையான புத்த கொள்கைகளைப் பின்பற்றியவர்களின் பிரிவைக் குறிக்க "ஹீனயானம்" என்றும் அழைத்தனர்.

* ஹீனயானம் என்பது ஈன பிறவி. அதாவது தாழ்ந்த, குறையுடைய புத்தம் என்ற பொருளில், இகழ்ந்தனர்.

* புத்த மதத்தை அழிவுப் பாதைக்கு எடுத்துச் செல்ல முயன்றனர்.

* மெளரிய வம்சப் பேரரசின், இறுதி மன்னன் பிராகிருதன், இவர்...

* புஷ்ய மித்ர சுங்கன் என்ற, ஆரிய இனப் படைத் தளபதியால், சூழ்ச்சியால் கொல்லப்பட்டார்.

* புஷ்ய மித்ரன், சுங்க வம்சத்தை நிறுவினான்.

* அப்போது, மீண்டும் வேத மதம் எழத் தொடங்கியது.

* இந்தக் கால கட்டத்தில் தான் இதிகாசங்கள், புராணங்கள், கடவுள் கதைகள் எழுதப்பட்டு...

* புத்த விகார்களை அழித்து கோவில்கள் கட்டப்பட்டு வந்தன.

* புஷ்ய மித்திர சுங்கன் ஆட்சியில், புத்த பிக்ஷுக்களி்ன் தலைக்குப் பரிசுகள் அறிவித்து, ஒரு இனப் படு கொலையை நடத்தினான்.

* எப்படியென்றால், புத்த பிக்ஷுக்களின் தலை, வீட்டின் முன்புறம் தொங்க விடப்பட்டால் பரிசு வழங்கப்பட்டது.

* அந்த வழக்கம் தான், இப்போது நாம் வைக்கும் திருஷ்டி பூசணிக்காய் ஆக மாறி உள்ளது.

* குப்த பேரரசு உருவான பிறகுதான் மிகுந்த எழுச்சி பெற்றது ,வேத மதம்.

*புத்தமும், சமணமும் திட்டமிட்டே அழிக்கப்பட்டன.

* அந்தக் காலகட்டத்தில் தான் நாக அரசர்கள் சூழ்ச்சிகள் மூலம் சாகடிக்கப்பட்டனர்.

* ஆரியர்களை, கடவுள் அவதாரமாகவும், நாக அரசர்களை அசுரர்களாகவும் சித்ததரித்துக் கதைகள் எழுதப்பட்டன.

* "சுரா" என்ற மது பானத்தை அருந்தாத புத்த பஞ்ச சீல / கொள்கைகளைப் பின்பற்றி வந்த நாக பௌத்தர்கள், அசுரர்கள் எனப்பட்டனர்.

* அசுரர்கள் என்றால் சுரா என்ற மது பானத்தை அருந்தாதவர்கள் என்று பொருள். (உங்கள் / புரிதலுக்காக, சுத்தம் X அசுத்தம் என்ற எதிர்ச்சொல்லின் பொருளைப் பாருங்கள்).

* நல்லெண்ணம் கொண்ட,
நாக வம்ச அரசர்களைக் கொடுமையானவர்கள் என்ற பிம்பத்தை ஏற்படுத்த, கொடிய விசமுள்ள பாம்புகளை நாகம் என்று அழைத்தனர்.

* இந்திய முழுமையும் வேத மதம் பரப்பப் பட்டது.

* அரச மரத்தடியில் உள்ள புத்தர் சிலைகளை எல்லாம், அழிக்க வேண்டும் என்பதற்காக, அசிங்க படுத்தி புத்தர் தலையை வெட்டி, யானையின் தலை போல் செய்து புத்த சிலைகளை ஆற்றில் போட்டு அழித்தனர்.

* அது தான், தற்போதைய விநாயகர் சிலை ஊர்வலம் என்ற பெயரில் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைத்து கொண்டு இருக்கின்றனர்.

* அழகான புத்த பள்ளிகளை அசிங்க படுத்த, விகார் என்றால், விகாரம் என்றும் அசிங்கமான, அருவருப்பான என்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது.

* புத்த பிக்சு க்களை இகழ்வதற்காக,
அவர்களைப் பிச்சை என்று அசிங்கப்படுத்தி, பிச்சைக்காரர்கள் என்று அழைத்தனர்.

* மக்கள் மிரட்டப்பட்டு வேத மதத்தை ஏற்க வலியுறுத்தினர்.

* வேத மதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் தான் இப்போது உள்ள பிற்படுத்த பட்ட மக்களாகிய சூத்திரர்கள்.

* அந்தக் கால கட்டத்தில் இந்து மதத்தை ஏற்காத, பூர்விக குடிகளாகிய குறிப்பிட்ட மக்கள், புத்த மதத்தைத் தொடர்ந்து பின்பற்றியதால்... அவர்கள் தான் பஞ்சமர்கள் என்று அழைக்கப் படுகிறார்கள்.

* அதாவது, புத்தரின் பஞ்ச சீல கொள்கையைக் கடைப்பிடித்து வாழ்பவர்கள்.

* அவர்கள் புத்த மதத்தைத் தழுவி இருந்ததால் தான், பஞ்சமர்கள் கோவிலுக்குள், மற்றும் அவர்கள் தெருக்களுக்குள் , செல்லாமல் தனியாக சுயமரியாதையுடன் வாழ்ந்தனர்.

* தீண்ட முடியாதவர்களாக திறமையுடன் வாழ்ந்து வந்தனர்.

* சில நூறு ஆண்டு காலம் சென்ற பிறகு மக்கள் புத்த சிந்தணைகள்
மறக்கப்பட்டு வாழ்ந்து வந்தனர்.

* பிறகு பஞ்சமர்கள் சொத்துக்களைப் பிடுங்கி அரசுடமையாக்கி, நில பிரபுக்களிடம் ஒப்படைத்தனர்.

* பிறகு, ஏழ்மையின் காரணமாக வேறு வழியின்றி கொத்ததடிமைகள் ஆக்கப்பட்டு...

* இழி தொழில் செய்யப் பணித்தனர்.

* அப்போது உணவுக்கு வழியின்றி இருத்த பஞ்சமார்களுக்கு, இறந்த மாடுகளை வேறு வழி இல்லாமல், உன்ன வேண்டிய நிலை ஏற்பட்டது.

* இதையே காரணம் காட்டித்
தீண்ட தகாதவர்களாக, பஞ்சமர்களை ஊரைவிட்டு சேரியில் ஒதுக்கி வைத்தனர்.

* "பஞ்சமர்களை" (பட்டியல் இன மக்களை) அவர்கள் வெள்ளையன் வரும் வரை "இந்து" மதத்தில் சேர்க்கவும் இல்லை.

* 1865 ஆம் ஆண்டு வரை அதாவது 2000 வருடங்களாக, இந்து மனு தர்ம சாத்திரம் தான், இந்து மத சட்டமாகவும், அரசு சட்டமாகவும் இருந்து வந்தது.

* அதனால்தான் சூத்திரர்களுக்கும், பெண்களுக்கும் கல்வி மறுக்கப்பட்டு அடிமைகளாகவே இருந்தனர்.

* வெள்ளையர்கள் வந்து பிறகு இந்து மத சட்டம் அநீதியாக உள்ளது என்றும்,

* சட்டத்தை மாற்றி அமைத்தனர்.

* பிராமணர் மற்றும் உயர் சாதியினருக்கு மட்டும் தான் கல்வி, என்ற நிலை இருந்தது.

* அதுவும் வேதம், கிரக வானவியல், புரோகிதம் ஜோதிடம், புராணங்கள் போன், சமுதாய முன்னேற்றத்திற்குப் பயன்படாத கல்வி / முறைகள் இருந்ன.

* இதைப் பார்த்த ஆங்கிலேயன் மெக்காலே என்பவர் அனைவருக்குமே கல்வி வேண்டும், என கூறி, பள்ளிக் கல்வி முறையை ஏற்படுத்தினார்.

* இதற்கு, இந்து மதவாதிகள் இடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.

* மேலும், ஆங்கிலேயர்கள் அனைவருக்கும் ஒரே வகையில் குற்றத் தண்டனைகள் இருக்கவேண்டும் என்று சட்ட திருத்தும் செய்தனர்.

* இதற்கு முன்பு வரை, பிராமணர்களுக்கு மரணதண்டனை என்பதே கிடையாது..

* 1856-ல் பன்றி கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்ட போது, இந்து மதத்தைச் சேர்ந்த சிப்பாய்கள் எங்களால் இதைப் பயன்படுத்த முடியாது எனக் கூறி போராட்டம் செய்தனர்.(சிப்பாய் கலகம்)

* இது போல, இந்து மத சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஆங்கிலேயன் இறங்கியதால் தான்.

* பிராமணர்களுக்கு சாதகமான, இந்து மத சட்டத்தை நிலை நிறுத்தவும்,
வருணாசிரம தர்மத்தை காப்பாற்றவும்,

* உயர் சாதி இந்துக்கள் "சுயர்ஜ்யம் எனது பிறப்புரிமை" எனக் கோஷமிட்டு ஆங்கிலேயனை எதிர்க்க ஆரம்பித்தனர்.

* எனவே, இந்திய விடுதலை போராட்டம் என்பது ஒட்டு மொத்த மக்களுக்கான விடுதலைக்கான போராட்டம் இல்லை.

* உயர் சாதி இந்துக்கள்,வருனாசிராம தர்மத்தை நிலை நிறுத்த வேண்டும் என்றுதான் போராடினார்கள்.

* அதன் பிறகு விடுதலை அடைந்த பிறகு...

* அண்ணல் கொண்டு வந்த இந்துமத சட்டத்தை உயர் சாதி இந்துக்கள் கடுமையாக எதிர்த்தனர்.

* அதனால் அண்ணல் அவர்கள் சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார்.

#இந்து_சட்ட_மசோதாவின்_அம்சங்கள்:

1. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசு பணிகளில் இட ஒதுக்கீடு.

2. பெண்களுக்கு கல்வியுரிமை.

3.பெண்களுக்கு சொத்தில் பங்கு.

4.பெண்களுக்கு அரசியலில் இட ஒதுக்கீடு.

5. பெண்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமை

6.பல தார திருமணம் தடை செய்யப்படும்.

பிறகு, மிகுந்த எதிர்ப்புகளுக்கிடையே
1956-ல் சட்டம் நிறைவேறியது.

#ஆதார_நூல்கள்:

1. இந்திய தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும்,
அழிந்தனவும். -தேவிபிரசாத் சட்டோபத்தியாயா.

2. அம்பேத்கர் நூல் தொகுதிகள்-7,13,14.

3. இந்திய தத்துவ இயல் -தேவிபிரசாத் சட்டோபத்தியாயா.

4. ரிக் வேத கால ஆரியர்கள் -ராகுல சாங்கிருத்தியாயன்.

5.உலக வரலாறு -ஜவகர்லால் நேரு.

6. யுவான் சுவாங் -தமிழில் ராகவன்.

7. பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள். -வீர.சாவர்க்கர்.

8. பாகியான்.

9. புத்த சரித்தரம் மற்றும் புத்த தருமம் - உ. வே .சாமிநாதர்.

10. அபிதான சிந்தாமணி -சிங்காரவேலன்.

11. இந்தியாவின் வரலாறு -பொன்காரத்லேவின்.

12. அசோகர் இந்தியாவின்N பௌத்த பேரரசர் -வின்சென்ட். எ.ஸ்மித்

13. உலகாயுதம் -தேவிபிரசாத் சட்டோபத்தியாயா.

தமிழர்கள் ஏன் ஒருபோதும் இந்துக்கள் அல்ல?


தமிழர்கள் ஏன் ஒருபோதும் இந்துக்கள் அல்ல?

மூத்த ஊடகவியலாளர் விஷ்வா விஸ்வநாத் அவர்களது முகநூல் பதிவு:
தமிழர்களின் தோன்றல், வளமான வாழ்வு, மொழித்திறன், பண்பாடு, சுய சார்புத் தன்மை ஆகியவற்றின் வேர்கள் பதினைந்தாயிரம் ஆண்டுகளை சாதாரணமாகத் தொடுகின்றன. ஆனால் 1923 ல்தான் வீரசாவர்க்கர் என்ற ஒருவர் இந்து மதம் சார்ந்த அரசியலுக்கு விதை ஊன்றுகிறார். இதையே ஆர்எஸ்எஸ் பல்வேறு பெயர்களில் பல்வேறு தளங்களில் பல்வேறு அமைப்புகளை உருவாக்கி அவற்றை நாடு முழுவதும் பரப்பியது.
நமது டிவி புகழ் ராமசுப்பிரமணியம் போல ஒரு இடத்தில் ராமர் பக்தராகவும், இன்னொரு இடத்தில் சமூக ஆர்வலராகவும், இன்னுமொரு இடத்தில் இசை ஆர்வலராகவும், மற்றொரு இடத்தில் கல்வியாளராகவும் போல பல பெயர்கள் இருந்தாலும் நோக்கம் ஒன்றே.
அரசியல் ரீதியாக இந்து என்ற சொல்லின்கீழ் இஸ்லாமிய, கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்றால் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் Vs பிற இந்தியக் கண்டத்தின் மக்கள் என மோத விட வேண்டும். அதற்கு மத விரோதம் ஏற்படுத்தவேண்டும்.
இதோ இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உங்கள் பகைவர்கள், கோயிலைக் கொள்ளையடிக்க வந்தவர்கள் என்று பகைமை உணர்ச்சியை ஏற்படுத்தவேண்டும். அவர்களால் உங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல். உங்கள் வழிபாட்டு முறைகளை அழித்துவிடுவார்கள் என்று சொல்ல வேண்டும்.
அவ்வாறு ஏற்படுத்தினால் உருவாகும் மனநிலை கொண்டவர்களை “இந்து” என்ற வலைக்குள் சுலபமாக ஈர்த்துவிட முடியும்.
இதற்காகத்தான் பாகிஸ்தான் பிரிவினையின்போது இஸ்லாமியர்கள் இந்துப்பெண்களை கற்பழித்தார், கொலை செய்தார்கள், துண்டு துண்டாக வெட்டினார்கள் என்று ஆர்எஸ்எஸ் ஷாகாக்களில் சொல்லி சொல்லி வெறுப்பை வளர்க்கிறார்கள்.
சரி…ஈழத்தில் தமிழ் பெண்கள் எங்கள் கண்முன்னே இதேபோல கொல்லப்பட்டார்கள் ஆர்எஸ்எஸ், பாஜக, பஜ்ரங்தள், விஸ்வ இந்து பரிஷத்….எல்லாம் இதே போல சிங்களவர்களை வெறுக்க சொல்லி வலியுறுத்தியதா…?
இல்லையே..சிங்களவர்களை சுப்பிரமணியன் ஸ்வாமி போன்ற பாஜக தலைவர்கள் சொந்தம் கொண்டாடுகிறார்களே ? ஏன்.?? அவர்கள் இந்துக்கள் இல்லையா? அது ஏன் பாகிஸ்தான் எல்லையில் இருந்த பெண்கள் மட்டுமே இந்துக்கள் ஈழத்தில் இருந்தவர்கள் இந்துக்கள் அல்லாமல் போனார்கள்? கேட்கவேண்டாமா?
ஆக, இந்த இந்துத்துவ அரசியலுக்கு வயதே 1900 ம் ஆண்டுகளின் தொடக்கத்தில்தான்.

என்றால்….தமிழர்கள் எப்படி இயல்பில் இந்துவாக இருந்திருக்க முடியும்? தமிழர்கள் முருகன் வழிபாட்டில் தொடங்கி, குலதெய்வ வழிபாட்டைப் பின்பற்றி பின் ஞான மார்க்கிகளாக உயர்வு பெற்றவர்கள்.
தமிழர்கள் இங்கேதான் தோன்றினார்கள் என்று சொல்வதற்கு சான்றுகள் உள்ளன. சமஸ்கிருதம் எங்கே தோன்றியது? கேட்டால் தேவலோகத்தில் என்பார்கள். தேவலோகம் எங்கே உள்ளது என நாசா இதுவரை கண்டுபிடிக்கவில்லை.
காரணம் வேற்று நாட்டார் தாங்கள் என அறிந்தால. உள்நாட்டுக்கார மக்கள் மதிக்க மாட்டார்கள் என்பதாலும், மக்களை அடக்கி ஆளவுமே தேவலோக வண்ணக்கதைகளைத் துணைக்கழைத்தார்கள்.
தரவுகள், சான்றுகள், ஆதாரங்கள், ஆவணங்கள் வலுவாக உள்ள தமிழர்கள் முன்னோடிகளா வெறும் வேதப்புத்தகங்களை மட்டுமே வைத்துக் கொண்டு அதை நிரூபிக்க கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டவர்கள் முன்னோடிகளாக இருக்க முடியுமா? லாஜிக்கலாக இது சரியா?!
தாத்தா நேற்றுப் பிறந்தார் அவருக்குப் பேத்தி போனவாரம் பிறந்தார் என்கிறது இந்துத்துவம்.
தமிழர்கள் ஒருபோதும் இந்துக்கள் அல்ல. இருக்கவும் முடியாது.
இதில் சுவாரஸ்யம் என்னவெனில்…சங்க பரிவாரிகளின் தலைமைக்கு தெளிவாக, நன்கு தெரியும் …தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்று. ஆனால், தொண்டர்களுக்கு தெரியாமல் பார்த்துக்கொள்வார்கள்.

வியாழன், 22 மார்ச், 2018

இந்துத்துவவாதிகள் ஏன் "வால்மிகி ராமாயனத்தை" ஏற்ப்பதில்லை ??



இந்துத்துவவாதிகள் ஏன் "வால்மிகி ராமாயனத்தை" ஏற்ப்பதில்லை ??

வால்மிகிக்கு பின் 2000 ஆண்டுகள் கழித்து cutting, fitting செய்த ராமாயனத்தை ஏற்கிறார்கள் ??

வால்மிகி ராமாயனத்தில் கூறப்பட்ட விசயங்கள் வருமாறு . . .

1. ராமன் ஒரு மது பிரியன்.
2 . ராமன் காட்டு விலங்குகளை வேட்டையாடி இறைச்சி உண்டான்.
3. ராமனுக்கு சீதையுடன் சேர்த்து சில மணைவிகளும், பல வைப்பு பெண்களும் இருந்தனர்.
4. ராமன் ஒரு அரசனுக்கு பிறந்து அரசனானவன் மட்டுமே ஒழிய கடவுள் அவதாரம் இல்லை.
5. ராமனின் மணைவியான சீதை அவனுக்கு தங்கை முறை.
6. ராமன் இலங்கையில் அசோக வணத்தில் சீதையை சந்தித்தபோது, மது அறுந்திக்கொண்டு 3 பெண்களின் மடியில் படுத்துக்கொண்டு ஆடினான்.

7. சீதை ராமனுடனான உறவில் திருப்தியின்றி இருந்தாள்
8. தெரிந்தே தான் ராமன் போட்ட கோட்டை தாண்டினாள்
9. ராவணனின் அழகில் மயங்கினாள்
10. விருப்பபட்டே ராவணனுடன் லங்கை சென்றாள்.
11. அனுமன் லங்கை வந்தபோது வருத்தமடைந்தாள்.

12. ராவணன் ராமனை விட பன்மடங்கு அழகானவன்.
13. அதிகம் படித்ததோடு, அமைதி குணம் கொச்டவன்.
14. சீதையை கடத்தி வர சென்ற போதிலும், காட்டில் அவள் அழகை பார்த்து காதல் கொண்டான்.
15. சீதையின் விருப்பத்தோடே அவளை லங்கை அழைத்து சென்றான்.
16. ராமன் சீதையை நடத்தியதை விட மிக கன்னியமாக ராவணன் நடத்தினான்.
17.ராவணனின் பத்து தலைகள் என்பது அவனது அறவாற்றலை உவமைப்படுத்தவே.
18. ராவணன் ஜாதி கட்டமைப்புகளை (வர்ணாசிரமத்தை) எதிர்த்த ஒரு சிவ பக்தனாக இருந்தான்.
19. ராவணன் ஆட்சியில், லங்கை அழகிலும் வளத்திலும் திலைத்திருந்ததனால், பொறாமையுடன் தீயிட்டு கொளுத்தப்பட்டது.
20. ராவணன் மீது சீதைக்கு காதல் இருந்ததால், சீதையை தீயில் இறங்கி கற்பை நிறுபிக்க சொன்னான்.

******  கம்பராமாயனம், துளசிதாஸ் ராமாயனம், பௌத்த ராமாயனம், ஆதியாத்ம ராமாயனம், வைசித ராமாயனம், ஆணந்த ராமாயனம், அகத்திய ராமாயனம், அத்புத ராமாயனம், ரங்கநாத ராமாயனம், குமுன்டெண்டு ராமாயனம், கொத்த ராமாயனம், கிரித்திவாசி ராமாயனம், கன்னாச ராமாயனம், டன்டி ராமயனம், பவர்த்த ராமாயனம், மந்தனி ராமாயனம் . . . .

இவைகள் எல்லாம் 12 ம் நூற்றாண்டுக்கு பின் திரித்து, புதுப்பித்து எழுதப்பட்டவை !!!

original version என்பது 5 ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட *வால்மிகி ராமாயனம்" தான் !!!

அதை படித்தால் . . . ராவணன் நல்லவனாகவும், ராமன் அயோக்கியனாகவும், சீதை பாவப்பட்ட பெண்ணாகவும் உணரப்படும் !!!
#மீள்பதிவு

தியாகச்சிங்கம் உத்தம் சிங்


தியாகச்சிங்கம் உத்தம் சிங் 

ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த ஜெனரல் டையரை நமக்குத் தெரியும்...

இந்திய வரலாற்றின் மறக்க முடியாத அந்தக் ஜாலியன் வாலாபாக் கோரச் சம்பவம், 15 நிமிடங்களுக்குள் நடந்தேறியது.

 1000 பேருக்கும் மேலான மக்கள் ஜெனரல் டயர் என்பவனால், கொன்று குவிக்கப்பட்டனர்.

 2,000 பேருக்கும் அதிகமானோர் குற்றுயிரும் குலை உயிருமாகத் துடித்துக்கொண்டு இருந்தனர்.

 ஒவ்வொரு துப்பாக்கி வீரனும் 33 ரவுண்ட் சுட்டு இருந்தான். மொத்தம் 1,650 ரவுண்ட் சுடப்பட்டது. செத்து விழுந்த உடல்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தன. தப்பிப் பிழைத்தவர்கள், நடக்க முடியாமல் வீதியில் விழுந்து கிடந்தனர்.

"என்னை மதிக்காத இந்தியர்களுக்கு நான் அளித்த தண்டனை இது. ஒரு ராணுவ அதிகாரியாக இந்தச் செயலுக்காக நான் சந்தோஷம் அடைகிறேன். என்னிடம் இன்னும் அதிக ஆயுதங்கள் இருந்திருந்தால், அதிக நேரம் சுட்டிருப்பேன்’ என்று வெளிப்படையாகத் தெரிவித்தான் ஜெனரல் டயர்.

இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் 'மார்னிங் போஸ்ட்’ என்ற பத்திரிகை ஜெனரல் டயரை 'வெற்றி நாயகன்’ என்று பாராட்டி எழுதியது..

ஜாலியன் வாலாபாக் படுகொலை, இந்தியாவை உலுக்கியது. அந்தப் பாதகச் செயலுக்கு காரணமாக விளங்கிய பஞ்சாப் கவர்னர் மிக்கேல் ஓ டயர் மற்றும் ஜெனரல் டயர் ஆகியோரைப் பழிவாங்குவேன் என்று, உத்தம்சிங் என்ற பஞ்சாப்  இளைஞன் சபதம் செய்தான்...

சொன்னபடியே சரியாக 21 ஆண்டுகள் காத்திருந்து இங்கிலாந்தில் எச்சில் தட்டு கழுவி, கூலி வேலை செய்து கிடைத்த பணத்தில் துப்பாக்கி வாங்கி 1940-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி கவர்னர் ஓ டயரைச் சுட்டுத் தள்ளினார் உத்தம் சிங்.

உத்தம் சிங்கின் செயல் இந்திய மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் இதை “பைத்தியகாரத்தனமான செயல்” என்று கூறி காந்தி அறிக்கை வெளியிட்டார்.

நேருவும், காந்தியும் பஞ்சாப் காங்கிரஸ் அரசை,
உத்தம் சிங்கின் செயலைக் கண்டித்தும் ஜெனரல் டயரின் மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தும் தீர்மானம் இயற்ற வைத்தனர்.

இதனை கடுமையாக எதிர்த்து, உத்தம் சிங்கின்  செயலைப் பாராட்டி கடிதம் எழுதினார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இதனால் காந்தியின் வெறுப்புக்கு ஆளானார்.

காந்திக்கும் நேதாஜிக்கும் பிளவு ஏற்பட்டு காந்தியால் நேதாஜி காங்கிரசில் இருந்து திட்டமிட்டு இழிவுபடுத்தப்பட இது ஒரு முக்கிய
காரணமாக அமைந்தது.

அந்தக் கொலை வழக்கில், உத்தம் சிங்குக்கு தூக்குத் தண்டனை விதித்தது இங்கிலாந்து நீதிமன்றம்.

"தூக்கில் போட்டவுடன் இங்கிலாந்து மண்ணிலேயே என்னைப் புதைத்து விடுங்கள்.
 இத்தனை ஆண்டுகள் இந்திய மண்ணை இங்கிலாந்து ஆண்டது போல், இங்கிலாந்தின் ஆறடி மண்ணை ஓர் இந்தியன் நிரந்தரமாக அபகரித்துக்கொண்டான் என்பது ஒரு மாறாத அவமானமாக உங்களுக்கு அமையட்டும்"
என்று முழங்கினர் உத்தம் சிங்.

ஜூலை 31, 1940 அன்று அவர் வந்தேமாதர கோஷத்துடன் தூக்குக்கயிறை முத்தமிட்டார்.

“தியாகச்சிங்கம்” என அழைக்கப்பட்ட அவரது உடல் சீக்கிய மதச்சடங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டு சிறைச்சாலையில் புதைக்கப்பட்டது.

பஞ்சாப் மாநிலம் சுல்தான்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ்.சாது சிங்,

“உத்தம் சிங்கின் எலும்புக் கூடுகளையாவது இந்தியாவிற்கு எடுத்துவர வேண்டும்” என்று மைய அரசிடம் கேட்டுக் கொண்டார். அன்றைய பிரதமர் இந்திரா காந்தி இதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், 1975 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு உத்தம் சிங் புதைக்கப்பட்ட இடத்தை மீண்டும் தோண்டி, மிச்சம்மீதி எலும்புக்கூடுகளை பொறுக்கிக் கட்டி இந்தியாவிற்கு அனுப்பியது.

உத்தம்சிங்கின் எலும்புக்கூடுகள் ராஜ மரியாதையோடு இந்தியாவில் வரவேற்கப்பட்டு, உத்தம்சிங்கின் சொந்த ஊரில் எரியூட்டப்பட்டு, சாம்பல் கங்கை ஆற்றில் கரைக்கப்பட்டது.

தேசத்தை நேசிக்கும் அனைவரும் அவரது தியாகத்தைப் போற்றுவோம். எத்தனை பேர் அறிந்திருப்பீர்கள் உத்தம்சிங் பற்றி? இந்த பதிவைப் படித்தறிந்து இக்கால தலைமுறையினரையும் உத்தம் சிங் பற்றி தெரிந்து கொள்ள செய்யுங்கள்.

உங்கள் குழந்தைகளுக்கு வீர வரலாற்றை உணர்வாக சொல்லிக் கொடுங்கள்.


உதம் சிங்கின் சபதம்
- tamilhindu
1919 ஏப்ரல் 13 அன்று ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்தது. தற்காப்பு ஏதுமின்றி அமைதியாகக் கூடியிருந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை, ஜெனரல் ஓ டயர் பிறப்பித்த உத்தரவின் பேரில் சுட்டுக்கொன்றனர். 90 துப்பாக்கி வீரர்கள் கொண்ட படையும், ஒரு பீரங்கி வண்டியும் இதில் பயன்படுத்தப்பட்டன. அரசியல் காரணங்களுக்காக உண்மையான எண்ணிக்கை வெளியே சொல்லப்படாவிட்டாலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் எந்த முன்னறிவிப்புமின்றிச் சுட்டுக் கொல்லப்படனர் என்பது நிதரிசனம்.
உதம் சிங்கின் சபதம்
இப்படுகொலையைக் கண்டு மனம் கொதித்த உதம் சிங், அமிர்த சரஸில் நீராடி, ஹரிமந்திர் சாகிப்பில் ஜாலியன்வாலாபாக் படுகொலையை நடத்திய ஜெனரல் டயரைக் கொல்லுவதாகச் சபதம் எடுத்துக் கொண்டார். 1899ல் பிறந்த உதம் சிங் ஆசாத் இளவயதிலேயே தம் பெற்றோரை இழந்தவர். சீக்கிய தர்ம கால்ஸா அனாதை இல்லத்தில் தன் சகோதரருடன் வளர்ந்தவர். 1917ல் அவரது சகோதரர் சாது சிங் மரணமடைந்தார். 1918ல் அவர் மெட்ரிக் தேர்வில் வெற்றி பெற்றார். பலமுறை ஆப்பிரிக்கா இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்கே இந்திய தேசிய நடவடிக்கைகளில் தீவிரப் பங்கு பெற்றார் உதம்சிங். 1910களில் எவ்வாறு ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா இங்கிலாந்தில் இந்தியா ஹவுஸ் மூலம் இளைஞர்களை ஆயுதமேங்கிய புரட்சிக்குத் தயார் செய்து வந்தாரோ அதேபோல லாலா ஹர்தயாள் எனும் சிந்தனையாளர் அமெரிக்காவில் பாரத தேசியவாத இளைஞர்களை அரசியல் சித்தாந்தங்களில் பயிற்றுவித்து புரட்சியாளர்களாக்கிடச் செயல்பட்டு வந்தார்.
ஆரிய சமாஜம், சீக்கிய தருமம், மார்க்ஸியம் ஆகியவற்றால் லாலா ஹர்தயாளின் அரசியல் சித்தாந்தம் உருவாக்கப் பட்டிருந்தது. குருகோவிந்த சிங் பெயரில் மாணவர் உதவி நிதி நிறுவி அவர் தேசபக்தி கொண்ட பாரத இளைஞர்களுக்கு உதவி செய்து வந்தார். இவரது கதர் (புரட்சி) எனும் இயக்கத்துடன் உத்தம் சிங் இணைந்தார். 1927ல் பகத்சிங்கிற்காகத் துப்பாக்கிகளையும் தளவாடங்களையும் பாரதத்துக்குள் கடத்தி வந்தார். அதே ஆண்டு ஆகஸ்டில் அவர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் தாம் இந்தியப் பாட்டாளி வர்க்கத்தின் சார்பாக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளை கொலை செய்யப் போவதாக வெளிப்படையாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் சிறையில் இருந்த காலத்தில் (1931) பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
1931ல் உதம் சிங் விடுதலை செய்யப்பட்டார். அப்போது அவர் போலிஸ் கெடுபிடிகளில் இருந்து தப்புவதற்காகத் தமது பெயரை முகமது சிங் என மாற்றிக்கொண்டார். மிகத் தெளிவான திட்டத்துடன் அவர் வேலை செய்தார். அவரது உடனடி நோக்கம் இங்கிலாந்து செல்வதாக இருந்தது. அங்கே அவரது வாழ்க்கையின் நோக்கம் நிறைவேற்றப்பட வேண்டியதாக இருந்தது. பிரிட்டிஷ் சி.ஐ.டி.கள் அவரைத் தொடர்ந்து கண்காணித்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில் அவர் 1933ல் காஷ்மீருக்குச் சென்று அங்கிருந்து பிரிட்டிஷ் உளவாளிகள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ஜெர்மனிக்குச் சென்று அங்கிருந்து 1934ல் இங்கிலாந்துக்குள் நுழைந்தார். எண் 9, அட்லர் தெரு, கமர்ஷியல் ரோடு, அவரது முகவரியாயிற்று. அங்கே ஒரு காரும் துப்பாக்கியும் வாங்கிவிட்டு ஜாலியன்வாலாபாக் படுகொலையைத் திட்டமிட்டு நடத்திய மைக்கேல் டயரின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஆரம்பித்தார். அவருக்கு டயரைக் கொல்ல பல வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அவர் அமைதியாக இருந்தார். ஏனெனில் தமக்கு எளிமையாக இருக்கும் என்பதைக் காட்டிலும் அச்செயல் உலக மக்களுக்கு ஒரு செய்தியாக அமைய வேண்டும் என்பதில் அவர் தீர்மானமாக இருந்தார்.
“அதற்கு வாய்ப்பில்லை சர். டயர்”
1940 மார்ச் 13 – ஏறக்குறைய இருபது ஆண்டுகள் – சரியாக ஒரு மாத காலகட்ட இடைவெளி. காக்ஸ்டன் ஹாலில் கிழக்கு இந்திய அசோசியேஷன் மற்றும் ராயல் சென்ட்ரல் ஏஷியன் சொசைட்டி ஆகியவற்றின் கூட்டத்தில் பங்கு பெற வந்திருந்த சீமான்களில் முக்கியமானவனாக வந்திருந்தான் டயர். கூட்டத்தில் கையில் ஒரு புத்தகத்துடன் உதம் சிங். புத்தகத்துக்குள் கச்சிதமாக வெட்டப்பட்ட பக்கங்களுக்குள் 0.45 ஸ்மித் வெல்ஸன் கைத்துப்பாக்கி. பஞ்சாபில் தாம் செய்த செயலுக்காகத் தாம் சிறிதளவும் வருத்தப்படவில்லை என்றும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் நீடித்த வாழ்வுக்காக பஞ்சாபில் தாம் செய்ததை ஆப்பிரிக்காவிலும் தாம் வாய்ப்பு கிடைத்தால் அரங்கேற்றச் சித்தமாக இருப்பதாகவும் தன் பேச்சில் டயர் குறிப்பிட்டான். இத்தருணத்தில் கூட்டத்தில் இருந்த உத்தம் சிங் எழுந்தார். “அந்த வாய்ப்பு உமக்கு கிடைக்கப்போவதில்லை சர். மைக்கேல் டயர் அவர்களே” எனக் கூறியபடி துப்பாக்கியை எடுத்தார். உதம் சிங்கின் குறி தவறவில்லை முதல் குண்டு அவன் மார்பையும் இரண்டாம் குண்டு அவனது சிறுநீரகத்தையும் சிதைக்க, தாக்கப்பட்ட மைக்கேல் டயர் அங்கேயே மரணம் அடைந்தான். இந்திய அரசு செக்ரட்டரியான செட்லாண்ட் காயமடைந்தார். லாமிங்டன் என்கிற பிரிட்டிஷ் பிரபுவின் கை சிதறிப் போனது.
சிரித்த முகத்துடன் கைதானார் உதம் சிங். காவல் நிலைய விசாரணையில் உதம் சிங் தமது பெயராக “ராம் முகமது சிங் ஆஸாத்” என கூறினார். குறுகிய மதவாதம் நாட்டை உலுக்கியபடி இருந்த காலகட்டத்தில் அவரது இந்த பெயரே குறுகிய எல்லைகளைக் கடந்த பாரதிய தேசியம் எழும்புவதைக் கட்டியம் கூறுவதாக அமைந்தது.


உதம் சிங்கின் செயல் இந்திய மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் விடுதலைப் போராட்டத்தை அகிம்சைவழியில் கொண்டு செல்ல உறுதியேற்றிருந்த மகாத்மா மற்றும் பண்டித நேரு ஆகியோர் இதைக் கண்டித்தனர். “பைத்தியகாரத்தனமான செயல்” என்று கூறினார் காந்தியடிகள். பண்டித நேரு, மகாத்மா காந்தி ஆகிய இருவருமே இச்செயலினால் தமது இயக்கம் பிரிட்டிஷ் அரசிடம் நடத்திக்கொண்டிருக்கும் அரசியல் பேச்சுவார்த்தைகளுக்கு பங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். ஆனால் பொதுக்கூட்டங்களில் மக்களிடையே உதம் சிங்கின் செயல் பெருமதிப்போடு பேசப்பட்டது. “தேசத்தின் மீதிருந்த களங்கம் துடைக்கப்பட்டுவிட்டது” என்பதே மக்கள் மனதின் கீதமாக இருந்தது. பல வெளிநாட்டுப் பத்திரிகைகள் உத்தம்சிங்கின் தீரச்செயலைப் பாராட்டின. 1940ம் ஆண்டு ஜாலியன்வாலாபாக் படுகொலை நினைவு தினத்தன்று உதம் சிங் ஜிந்தாபாத் எனும் கோஷம் எழுப்பப்பட்டது. அதே நேரம் பஞ்சாப் காங்கிரஸ் அரசு உதம் சிங்கின் செயலைக் கண்டித்தும் ஜெனரல் டயரின் மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தும் தீர்மானம் இயற்றியது. இந்நிலையில் காங்கிரஸ் பிதாமகர்களால் ஓரங்கட்டப்பட்டு அதனை விட்டு விலகிச் சென்று பாரத விடுதலைக்குப் போராடத் தீர்மானித்திருந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மட்டுமே உதம் சிங்கை வெளிப்படையாகப் பாராட்டினார்.
“நான் மரணத்துக்கு அஞ்சவில்லை”
பிரிட்டிஷாருக்குத் தமது கோட்டையிலேயே தமது சாம்ராஜ்யத்தின் வலிமை வாய்ந்த தளபதியை ஓர் இந்தியன் கொன்றான் என்பது அவமானகரமாக இருந்தது. “உதம் சிங் மனநிலை பிறழ்ந்தவர்” என ஒரு பிரச்சாரத்தை அவர்கள் தொடங்கினார்கள். இந்நிலையில் பஞ்சாப் பிரமுகர்கள் பலர் உதம் சிங்கை எப்படியாவது விடுவிக்க வேண்டும் என வக்கீல்களைத் தேடி அலைந்து இறுதியில் கிருஷ்ண மேனனை வக்கீலாக அமர்த்தினர். கிருஷ்ண மேனன் உதம் சிங்கைத் தான் பைத்தியம் என ஒப்புக்கொள்ளும்படியும் அப்படிச் சொன்னால் தப்பித்துவிடலாம் என்றும் கூறினார். உதம் சிங் வேதனையுடன் அதனை மறுத்துவிட்டார். நீதிமன்ற விசாரணையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியக் கோர்ட்டுக்குத் தம்மை விசாரிக்க உரிமையோ தகுதியோ இல்லை என்று கூறியதுடன் பிரிட்டிஷ் நீதிபதியையும் அங்கிருந்த இதர பிரிட்டிஷாரையும் நோக்கி கூறினார்:


“நான் மரணத்துக்கு அஞ்சவில்லை. நான் உயிர் துறப்பதில் பெருமைப்படுகிறேன். என் தாய் நாட்டை விடுவிக்க உயிர்துறப்பதில் பெருமை அடைகிறேன். நான் போனபிறகு என்னுடைய இடத்தில் என் தேச மக்கள் வருவார்கள். வந்து அசிங்கம் பிடித்த நாய்களான உங்களை விரட்டுவார்கள். நீங்கள் இந்தியாவுக்கு வருவீர்கள், பிறகு பிரிட்டனுக்குத் திரும்பிப் பிரபு ஆவீர்கள், பாராளுமன்றத்துக்குப் போவீர்கள். நாங்கள் பிரிட்டனுக்குள் வந்தால் எங்களைத் தூக்கில் போடுவீர்கள். ஆனால் நீங்கள் பாரதத்திலிருந்து வேரும் வேரடி மண்ணுமின்றிக் களையப்படுவீர்கள். உங்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் சுக்கு நூறாகச் சிதறும். பாரதத்தின் வீதிகளில் எங்கெல்லாம் நீங்கள் சொல்லும் மேற்கத்திய ஜனநாயகத்தின் கொடியும் கிறிஸ்தவமும் ஆக்கிரமித்துள்ளதோ அங்கெல்லாம் இயந்திரத் துப்பாக்கிகள் குழந்தைகளையும் பெண்களையும் கொன்று குவித்து வருகிறது.”
இத்தகைய உணர்ச்சி மயமான உரையின்மூலம் அங்கு வந்திருந்த பத்திரிகையாளர், பார்வையாளர்களுக்கு அவர் ஒரு பைத்தியம் என்கிற பிரிட்டிஷ் பிரச்சாரம் எத்தனை பொய் என்பதையும் தான் ஒரு தேசபக்தர் என்பதையும் புரிய வைத்துவிட்டார். வேறு வழியில்லாமல் அவரை நீதிமன்றத்திலிருந்து காவலாளர்கள் இழுத்துச் செனறனர். இறுதியாக அவர் “பாரத மாதா கீ ஜே!” என முழக்கமிட்டபடி இழுத்துச் செல்லப்பட்டார். நீதிபதி அட்கின்ஸன் அங்கிருந்த பத்திரிகையாளர்களையும் பார்வையாளர்களையும் அங்கு நிகழ்ந்தவற்றை வெளியே சொல்லக்கூடாதென உத்தரவிட்டார். ஜூலை 31, 1940 அன்று அவர் வந்தேமாதர கோஷத்துடன் தூக்குக்கயிறை முத்தமிட்டார். “தியாகச்சிங்கம்” என அழைக்கப்பட்ட அவரது உடல் சீக்கிய மதச்சடங்குகளுக்கு தடைவிதிக்கப்பட்டு சிறைச்சாலையில் புதைக்கப்பட்டது.
1962ல் நேரு உதம் சிங்கை தேசபக்தர் என அறிவித்தார். 1974ல் உதம் சிங்கின் உடல் பாரதம் கொண்டு வரப்பட்டு அவரது மாநிலமான பஞ்சாபில் தகனம் செய்யப்பட்டு அவரது அஸ்தி கங்கை நதியில் கரைக்கப்பட்டது.

புதன், 14 மார்ச், 2018

சத்ரபதி சிவாஜியின் - தெரியாத பக்கங்கள்


சத்ரபதி சிவாஜியின் - தெரியாத பக்கங்கள்

சத்ரபதி சிவாஜி என்ற மாபெரும் மராட்டிய மன்னனை நாம் எல்லோரும் அறிவோம், ஆனால் அவன் தன உடன் வைத்திருந்த பார்பனரால், பட்ட துன்பம் நிறைய பேர் அறிந்திருக்கமாட்டார்கள்.

1627-ல் பிறந்து 1680--ல் இறந்தவர் சிவாஜி, 52 வயது வரையே வாழ்ந்த அவரின் வாழ்க்கை ஒரு விறுவிறுப்பான திரைப் படத்துக்கு ஒப்பானது. அவரது முழு பெயர் சிவாஜி ராஜே போன்ஸ்லே

அவரது சிறு வயது காலம், வறுமை என்று சொல்ல முடியாது என்றாலும், தந்தை இல்லாமல் வளரவேண்டிய சூழ்நிலை. அவரது தந்தை சாஹாஜி ராஜே போன்ஸ்லே, அஹமதுநகர் சுல்தானின் கீழ், பூனே மற்றும் சுபே ஆகிய இரண்டு நகரத்துக்கு ஜாகிர்தாராக (ஜமீன்தாருக்கு ஒரு படி மேலே) இருந்தார். சுல்தானிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில், பதவி இழந்து, பீஜாப்பூர் சுல்தானிடம், பின்னர் சேர்ந்தார், பின்னர் இஸ்லாத்துக்கு மதம் மாறி சுல்த்தானின் தங்கையை மணந்து, பெங்களூரில் கர்நாடகத்தின், பீஜாப்பூர் சுல்த்தானின் ஜாகிர்தாராக பணியாற்றி இஸ்லாமியராகவே மறைந்தார்.

சிவாஜி பிறந்த முதல் 4-5 வருடங்கள், அவர் தந்தை, பதவி இழந்து அலைந்து கொண்டிருந்த காலம், பின்னரும் அவர் தந்தை, பூனேவில் தாங்கமுடியாமல், நிரந்தரமாக, பீஜாப்பூரில் இருக்கவேண்டிய சூழல், பின்னர் அவர் தன குடும்பத்தை பார்க்க வரவேயில்லை. ஆக பிறந்தது முதல் சிவாஜி தாயாரின்(ஜிஜாபாய்) பிள்ளையாகவே வளரவேண்டிய சூழல், அவர்களுக்கு துணையாக, அவர் தந்தையின் ராஜகுருவான சமார்த் ராமதாஸ் என்ற பார்ப்பனர், சொத்துக்களையும், வயல்களையும் கணக்கு பார்க்கும் வேலை பார்த்துவந்தார். சிவாஜியின் படிப்பு மற்றும் போர்களை பயிற்சிகள் தடோஜி கொண்டதேவ் என்ற அவர் தந்தையின் தளபதியின் மூலம் பயின்றார்.

அவருக்கு 12 வயது இருக்கும் போது, பெங்களூருக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கே அவரது அண்ணன் சாம்பாஜி, தம்பி எக்கோஜி இருவருடன் கல்வி மற்றும் போர்களை பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. 13 வயதில் சாய்பாய்யுடன் திருமணம்.

15 வயதில் தொரனா கோட்டை, என்ற கோட்டையை அந்த கோட்டை தலைவனிடம் கைப்பற்றுகிறார்.(மிரட்டியோ, லஞ்சம் கொடுத்தோ), அதை தொடர்ந்து, சக்கன், கண்டார்பி, கொண்டானா மற்றும் பெங்களூரு கோட்டைகளையும் கைப்பற்றுகிறான். கோபம் அடைந்த பீஜாப்பூர் சுல்தான், சிவாஜியின் தந்தை சாஹாஜியை கைது செய்கிறான், சிவாஜியும் வேறு வழியின்றி தொரனா, சக்கன் கோட்டை தவிர பிறவற்றை சுல்த்தானிடம் ஒப்படைக்கிறார்.

அதன் பின் சுமார் 10 வருடங்கள், அவர் அமைதியாகவே இருக்கிறார், 1665- அவர் தந்தை இறக்கும் வரை, அதன் பின் முழு மூச்சாக கோட்டைகளை பிடிக்கும் வேலைகளில் இறங்குகிறார், சிவாஜியை ஒரு பெரிய சக்தியாக கருதாமல், எதோ ஒரு உள்ளூர் கலவரம் என்பது போல எண்ணி சுல்தான், கலவரத்தை அடக்க அப்சல்கான் என்னும் தளபதியை அனுப்புகிறான், அவனுக்கு நிகழ்ந்த கதை எல்லோருக்கும் தெரியும்.

தன் 15 வயதில் தொடங்கிய போராட்டம் சுமார் 32 வருடங்கள் தொடர்ந்தது.வெறும் 2 கோட்டைகளில் தொடங்கிய சிவாஜியின் வேட்டை 1674-ல் 370 கோட்டைகளாக விரிந்தது, இவைகளின் நடுவே பல போர்கள், மொகலாயர்களுடன், சில சமரசங்கள், எல்லாம் இருந்தும், அவரை எல்லோரும் ஒரு ஜமீன்தார், ஜாகிர்தார் என்ற அளவிலேயே பார்த்தனர்,

சிவாஜி இந்து மன்னனாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டாலும், தன் படைகளில், சூத்திரர், தாழ்த்தப்பட்டவர், பிராமணர், ஆப்கான் இஸ்லாமியர், போர்த்துகீசியர் என பல தரப்பட்ட மக்களை சேர்த்துக்கொண்டு எல்லோரையும் சமமாகவே நடத்தினார். 370 கோட்டைகளுக்கு தலைவன் என்றாலும், தன்னை பிற நாட்டினர் படை தலைவன் போலவே பார்ப்பதால் தன்னை மன்னனாக அறிவித்து முடி சூட்டிக் கொள்ள நினைத்து, தன் ராஜகுருவான ராமதாஸாரை அணுகினான்.

பார்ப்பன கோர நாக்குகள் வெளி வந்தன. குரு ராமதாசர் கூறியது என்ன தெரியுமா. சிவாஜி நீ ஒரு சூத்திரன், வேதமரபுப்படி ஒரு பிராமணன் அல்லது ஒரு சத்திரியன் இந்த இருவருக்கு தான் மன்னனாக முடிசூட்ட முடியும், நீ சூத்திரன் என்பதால் உனக்கு முடிசூட்ட முடியாது. மேலும் இந்தியாவில் எல்லா சத்ரியர்களும் பரசுராமனால் கொல்லப்பட்டுவிட்டார்கள், எனவே என்னை போல ஒரு பிராமனை மன்னனாக முடிசூட்டிவிட்டு அவனுக்கு தளபதியாக நீ பணி செய்வது தான் வேததர்மம் என்று கூறினார்.

மாராட்டியார்களின் நலனுக்காக மொகலாய சக்கிரவர்த்தி அவுரங்கசீப்புடன் போட்ட அமைதி ஒப்பந்தம் போட்டார் என்று முன்னர் நாம் சொன்ன ஏற்பாட்டிற்கு புராந்தர் கோட்டை ஒப்பந்தம் என்று பெயர், 1665-ல் அது கையெழுத்து இடப்பட்டது, பல நிபந்தனைகள் உண்டு, சிவாஜி ஒத்து கொண்டிருக்கவில்லை என்றால் மிர்சா ராஜா ஜெய்சிங் தலைமையில் வந்த 1,50,000 வீரர்கள் மொத்த மாராட்டியத்தையும் ரத்த ஆற்றில் மிதக்க விட்டுயிருப்பார்கள்,


அந்த நிபந்தனைகளில் முக்கியமான சில:
1. 23 கோட்டைகளையும், 4,00,000/- ரூபாய் பணமும் கொடுக்க வேண்டும்
2.. சிவாஜியின் படைகள் அவுரங்கசீப்புடன் சேர்ந்து பிஜப்பூர் சுல்தானை எதிர்த்து போராட வேண்டும்
3. சிவாஜியின் முக்கிய தளபதிகளில் ஒருவரான நேதாஜி பால்கர் முகலாய படைகளுடன் சேர்ந்து ஆப்கனிஸ்தான் சென்று 10 ஆண்டுகள் பணி செய்ய வேண்டும். அங்கே இவர் இஸ்லாமியராக மதம் மாற்றப்பட்டார், 10 ஆண்டுகளுக்கு பின் வந்த அவரை சிவாஜி இந்துவாக எல்லோரையும் ஏற்று கொள்ள செய்தார்
4. சிவாஜியின் மகன் சாம்பாஜி, முகலாயர், தர்பாரில் ஒரு சர்தார் ஆக (தளபதி) பணி புரிய வேண்டும், அவர்கள் போதும் என்று சொல்லும் வரை, இந்த மகன் சிவாஜி இறந்த பின் தான் புனேவுக்கு வந்தார்
5.சிவாஜியின் பேரன் சாஹுஜி, முகலாயரின் அரசு விருந்தினராக (மரியாதைக்குரிய கைதியாக) அவர்கள் போதும் என்று சொல்லும் வரை இருக்கவேண்டும். இந்த பேரன் அவுரங்கசீப் இறந்த பின் தான் விடுவிக்கப்பட்டார்

சிவாஜி மறுத்திருந்தால் மராட்டிய மண்ணே ரத்த பூமியாக மாறியிருக்கும், தலைவனாக செய்தவைகளை விட ஒரு தனி மனிதனாக தன் மகன், பேரன் வரை இழந்து பிரிந்து நாட்டுக்காக துன்பப்பட தியாகம் செய்த தலைவன், அரசனாக முடிசூட்டி கொள்ள கேட்டால், இந்த பார்ப்பனர் சொன்னது தான் நீ சூத்திரன், உனக்கு வேததர்மம் படி முடிசூட்ட முடியாது வேண்டுமானால் ஒரு பிராமனை மன்னனாக முடிசூட்டிவிட்டு அவனுக்கு தளபதியாக நீ பனி செய்.

இத்தனைக்கும் இப்படி சொன்ன ராஜகுரு ராமதாசருக்கு பராலி என்ற கோட்டையை மொத்தமாக ஒரு அரசனுக்கு உள்ள எல்லா உரிமைகளுடன் சிவாஜி கொடுத்திருந்தான், பிற்காலத்தில் ஸாஜான்காட் என பெயர் மாற்றப்பட்டு இன்றும் அதே பேருடன் இருக்கிறது ஆங்கிலேயர் காலத்துக்கு பின்னும் இன்றும் அதே குடும்ப வாரிசுகள் அங்கே அரச போகத்துடன் இருக்கிறார்கள், அந்த பேராசைக்கார ராமதாஸரின் சமாதியும் அங்கு இன்றும் இருக்கிறது.

இந்த நேரத்தில் தான் சிவாஜியின் நண்பன், அவர் தளபதிகளில் ஒருவரான பாலாஜி அவ்ஜி என்பவர் துணைக்கு வந்தார். இவர் மீது ஏற்கனவே பார்ப்பனர் எல்லோரும் சேர்ந்து ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தல் போன்ற காரியத்தை மறைமுகமாக செய்து வந்தனர், இவர் செய்த தவறு வேறு போன்றும் இல்லை, பிராமணன் அல்லாத தன் மகனுக்கு பூணூல் போட்டு வேதம் கற்றுக் கொடுத்தது தான் அந்த குற்றம்.

இவர் காசி நகரத்திலிருந்து காக பட்டர் என்ற ஒரு பிரபலமான வேதியர் ஒருவரை அழைத்து வந்தது, சிவாஜியின் முன்னோர்கள், ராஜஸ்தானில் உள்ள மேவார் பகுதியை சேர்ந்த சூர்ய வம்ச அக்னி குல சத்திரியர் என்று சொல்ல வைத்து, அவர் மூலமாகவே சிவாஜிக்கு வேதமரபுப்படி சத்ரியனாக மராட்டிய சக்கரவர்த்தியாக முடிசூட்டி வைத்தார், இந்த காரியத்துக்கு அந்த காசி பார்ப்பனன் வாங்கிய லஞ்சம் 1 கோடி ரூபாய், அவுரங்கசீப்புடன் போட அமைதி ஒப்பந்தத்திற்கே 4 லட்சம் தான் சிவாஜி கொடுத்தார்.

அப்படியும் உள்ளூர் பார்ப்பனர் ராமதாஸரின் தலைமையில் இதை முழுமையாக ஏற்கவில்லை. சிவாஜியின் மூன்றாவது மனைவி, சோயிரா பாய், மூலம் அவருக்கு மெல்ல கொல்லும் விஷத்தினை கொடுத்து வந்தனர், ஒரு காலகட்டத்தில் சிவாஜியின் உடல் நிலை மோசமாகி கொண்டே செல்ல, இந்த பார்ப்பனர், சூத்திரனாகிய நீங்கள் சத்திரியன் போல முடிசூட்டி கொண்டதால் தான் தெய்வ குற்றமாகி தங்கள் உடல் நிலை இப்படி ஆகிவிட்டது என்று சொல்லி சொல்லி அவரை அதற்காக வேறு சில பரிகார பூஜைகளை செய்ய வைத்தனர்.

கடைசியில் தனது 52-ஆவது வயதில் 1680-ல் (ஒரு அரசன் நோய்வாய்ப்பட்டு இறக்கும் வயதா இது) ஒரு விதமான மர்மக்காய்ச்சல் மற்றும் வயிற்று வலியால் உயிரிழந்தார்.

அதன் பின் அவரது மகன் சாம்பாஜி சிலகாலம் ஆட்சி செய்து பின் பீஜாப்பூர் சுல்தான் உடனான போரில் 1689-ல் இறக்க, சிவாஜியின் மூன்றாவது மனைவி, சோயிரா பாய்-யின்(விஷம் வைத்த மனைவி) மகன் ராஜாராமும் அவர் இறந்தபின் அவர் மனைவி தாரா பாய்-யும் ஆண்டனர்.

1707-ல் அவுரங்கசீப் இறந்த பின் அதுவரை 27 ஆண்டுகளாக டில்லியில் அரச கைதியாக இருந்த சிவாஜியின் பேரன் சாஹுஜி விடுவிக்கப்பட்டார் பின் அவர் அரசனாக பொறுப்பேற்றார்.
1707-1749 வரை ஆண்ட இவர், பாலஜி விசுவநாத பட் என்ற பார்ப்பனனை பேஷுவா (பிரதமமந்திரி) என்ற பதவியில் நியமித்து மொத்த ஆட்சி அதிகாரத்தை அவரிடம் கொடுத்த பின் தான் மராட்டிய மன்னர்களை பார்ப்பனர் நிம்மதியாக வாழ விட்டனர். அதன் பின் மராட்டியரின் சாம்ராஜ்யத்தின் வரலாறு பேஷுவாக்களின் வரலாறாக மாறிவிட்டது,

இந்த பேஷுவாக்களின் ஆட்சி 1713-ல் பாலாஜி விஸ்வநாத பட் காலத்தில் தொடங்கி பலமுறை ஆங்கிலேயரிடம் அடி பட்டு மன்னிப்பு கேட்டு கேட்டு தொடர்ந்தது இறுதியாக 1857-ல் நானா சாஹிப் காலத்தில் முடிவுக்கு வந்தது, மன்னர்களான போன்ஸ்லே-கள் (சிவாஜியின் வாரிசுகள் வெறும் பெயருக்கு மட்டுமே மன்னர்களாக இருந்தனர்) அதனால் தான் பார்ப்பன வரலாற்று ஆசிரியர்கள் மராட்டியரின் சாம்ராஜ்யத்தை இவ்வளவு தூக்கி பிடிப்பதன் ரகசியம்.

மேலே சொன்ன வரலாற்றுக்கு சான்று வேண்டுவோர், அறிஞர் அண்ணா எழுதிய "சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்" நூலையும், அண்ணல் அம்பேத்கர் எழுதிய "யார் சூத்திரன்" நூலையும் படிக்கவும்.

மேலதிக தகவல் அறிஞர் அண்ணா எழுதிய "சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்" மேடை நாடகமாக அரங்கேறியபோது, அதில் காகபட்டர் வேடத்தில் அறிஞர் அண்ணா-வே நடித்தார், சிவாஜியாக வி.கணேசன் என்ற புதுமுக நடிகர் நடித்தார், அந்த நாடகத்தை நேரில் கண்ட தந்தை பெரியார், அந்த புதுமுக நடிகரின் திறமையை பாராட்டி அவருக்கு சிவாஜி கணேசன் என புது பெயர் சூட்டினார்.

-------------------------------------------------------------------------------------
“தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள்” என்ற எனது நூலின் ஒரு பகுதியே மேலே உள்ள கட்டுரை.
-------------------------

செவ்வாய், 6 மார்ச், 2018

திருநெல்வேலி பக்கம் "பைய" என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்துவார்கள், கேட்டு இருக்கறீர்களா ?

திருநெல்வேலி பக்கம் "பைய" என்ற
வார்த்தை அடிக்கடி பயன்படுத்துவார்கள்,
கேட்டு இருக்கறீர்களா ? அந்த
சொல்லுக்கு "மெதுவாக" என்று பொருள் .
சைக்கிள்
எடுத்து ஊர் சுற்ற கிளம்பி விட்டால்
அடுப்பங்கரையில் இருந்து அம்மாவின் குரல் வரும் ,
"ஏல பைய போயிட்டு வா என்னா"
திருவள்ளுவர் காமத்துபாலில் ஒரு குறளில் பைய என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்.
காதலனும் காதலியும் சந்தித்துக் கொள்கிறார்கள்.
அப்போது காதலி காதலனைப் பார்த்து மெதுவாக
சிரிக்கிறாள். இந்த சூழ்நிலையை வள்ளுவர்
சொல்கிறார்
"அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்."
இரண்டாவது அடியில் தலைவி மெதுவாக
சிரிக்கிறாள் என்பதை "பைய நகும்" என்கிறார்
வள்ளுவர்.
அட, 2000 ஆயிரம் வருடதிற்கு முன் திருவள்ளுவர்
பயன்படுத்திய வார்த்தையை இன்னும் நாம்
பயன்படுத்திக் கொண்டிருக்கிறோமே என்று வியந்தேன்.
தமிழ் பிறந்த இடம் பொதிகை தானோ,
திருநெல்வேலி மக்கள் வார்த்தைகளில் இன்னும்
ஆதித் தமிழ் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
பெருமைப்படுகிறேன் அந்த தமிழ் கற்றதர்காக திருநெல்வேலி:

வரலாறு:

கி.பி.1790 செப்டம்பர் 1ல் இம்மாவட்டம் ஆங்கிலோயரால் உருவாக்கப்பட்டது. பிற்கால பாண்டியர்களின் தலைநகராகச் சிறிது காலம் இருந்தது.

நெல்லை தமிழ்:

தென்பாண்டி சீமை என்றும் அழைக்கப்படும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பிற தென்தமிழக மாவட்டங்களிலும் பேசப்படும் வட்டார வழக்கு மொழி திருநெல்வேலித் தமிழ் ஆகும்.[1] இவ்வழக்கை நெல்லை தமிழ் என்றும் அழைப்பர்.

தமிழ் மொழி பொதிகை மலையில் பிறந்தது என்பது ஒரு நம்பிக்கை. அந்தப் பொதிகை மலைத் தமிழே நெல்லைத் தமிழாகும். எனவே நெல்லை தமிழ் தமிழின் துவக்கநிலை மற்றும் தூய வடிவம் என்று சிலரால் கருதப்படுகிறது. பெரியோரை 'அண்ணாச்சி' என்று அழைக்கும் நெல்லைத் தமிழ் வேறு எந்தத் தமிழ் வட்டார வழக்கிலும் இல்லை.

சொற்கள்:

• அண்ணாச்சி - பெரியோர்களை மரியாதையாக அழைப்பது
• ஆச்சி : வயதான பெண்மணி - Elderly Women;. தமிழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 'பாட்டி'யை ஆச்சி என்று அழைப்பார்கள். .
• பைதா - சக்கரம் ( wheel; In maths (English) pie x Dia(meter) is circumference!!)
• கொண்டி - தாழ்ப்பாள்
• பைய - மெதுவாக
• சாரம் - லுங்கி
• கோட்டி - மனநிலை சரியில்லாதவர்.
• வளவு - முடுக்கு,சந்து
• வேசடை - தொந்தரவு
• சிறை - தொந்தரவு
• சேக்காளி - நண்பன்
• தொரவா - சாவி
• மச்சி - மாடி
• கொடை - திருவிழா
• கசம் - ஆழமான பகுதி
• ஆக்கங்கெட்டது - not cconstructive (a bad omen)
• துஷ்டி - எழவு (funeral)
• சவுட்டு - குறைந்த
• கிடா - பெரிய ஆடு (male)
• செத்த நேரம் - கொஞ்ச நேரம்
• குறுக்க சாய்த்தல் - படுத்தல்
• பூடம் - பலி பீடம்
• அந்தானி - அப்பொழுது
• வாரியல் - துடைப்பம்
• கூவை - ஆந்தை an owl (bird of bad omen)
• இடும்பு - திமிறு (arrogance)
• சீக்கு - நோய்
• சீனி - சர்க்கரை (Sugar)
• ஒரு மரக்கா வெதப்பாடு - சுமார் 8 செண்ட் நிலம்
• நொம்பலம் - வலி
• கொட்டாரம் - அரண்மனை
• திட்டு - மேடு
• சிரிப்பாணி - சிரிப்பு
• திரியாவரம் - குசும்புத்தனம்
• பாட்டம் - குத்தகை
• பொறத்தால - பின்னாலே
• மாப்பு - மன்னிப்பு
• ராத்தல் - அரை கிலோ
• சோலி – வேலை
• சங்கு – கழுத்து
• செவி – காது
• மண்டை – தலை
• செவிடு – கன்னம்
• சாவி – மணியில்லாத நெல், பதர்
• மூடு – மரத்து அடி
• குறுக்கு – முதுகு
• வெக்க - சூடு, அனல் காற்று
• வேக்காடு - வியர்வை

ஆனால் இன்று நம் நெல்லை தமிழ் அழிந்து போகும் நிலை உருவாயிற்று காரணம் நாமே நெல்லை தமிழ் பேசுவதை ஏளனமாகவும் கேவலமாகவும் நினைக்க வேண்டாம்.
அழகு தமிழ் நம்மிடம் தான் உள்ளது...

சனி, 3 மார்ச், 2018

சமஸ்கிருதம் என்னும் பிச்சைப்பாத்திரம்


சமஸ்கிருதம் என்னும் பிச்சைப்பாத்திரம்

எழுத்துக்கள் இல்லாதமொழி

“பெற்ற தாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்றார் பாரதி. பெற்ற தாயுடன், தாய்மொழியையும் சேர்த்துக் கொள்ளலாம், தாய்மொழி என்பது அவ்வளவு சிறப்பு வாய்ந்தது. தற்போது இந்தியாவில் பலநூறு மொழிகள் வழக்கில் இருந்தாலும், சில நூற்றாண்டுகள் பின்னோக்கி சென்றால் அவற்றின் எண்ணிக்கை மளமளவென்று குறைந்துவிடும். 2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் கிடைத்த கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றில் காணக்கிடைக்கின்ற மொழிகள் மிகவும் குறைவு. அவற்றில் முதன்மையானவை தமிழ் மற்றும் பிராகிருதம் (Prakrit).

இதுவரை இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன. மறைக்கப்படுகின்ற உண்மை என்னவென்றால் அவற்றில் 60,000 கல்வெட்டுகளுக்கும் மேற்பட்டவை தமிழ் மொழி தொடர்பான கல்வெட்டுகள். அதில் வெறும் 5 சதவீதம் மட்டுமே பிறமொழி கல்வெட்டுகள். மற்றவை அனைத்தும் தமிழ் மொழியில் எழுதப்பட்டவை. இந்தியாவில், வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் பேசப்பட்ட மொழிகள் பெருவாரியாக மூன்று, அவை தமிழ், பிராகிருதம் மற்றும் பாளி. புத்தர் பேசியது பாளி மொழிதான். அகழ்வாராய்ச்சியில் பூமியின் மறுபக்கம் வரை தோண்டினாலும் சமஸ்கிருதம் தொடர்பாக, 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சான்றுகள் என்று ஒன்றுகூட கிடைக்கவில்லை. அப்படி ஒரு மொழி இருந்ததற்கான சான்றுகளும் இல்லை. சமஸ்கிருதம் தொடர்பாக கண்டறியப்பட்ட சான்றுகள் அனைத்துமே 1000 முதல் 1500 ஆண்டு கால வரலாற்று சான்றுகள். ஆனால் என்ன சான்றுகளை வைத்துக்கொண்டு சமஸ்கிருதத்துக்கு 5151ம் ஆண்டு விழா கூச்சப்படாமல் கொண்டாடுகிறார்கள் என்று புரியவில்லை. தமிழ் சங்க இலக்கியங்கள் 3000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை. நாம் 2000 ஆண்டுகள் வரையிலான வரலாற்றை ஆராய்வதன் நோக்கம் என்னவென்றால், சமஸ்கிருதம் என்ற மொழி உருவாகி 2000 ஆண்டுகள் கூட நிறைவடையவில்லை என்பதை எடுத்துக்காட்டும் விதமாகத்தான்.

நம் எண்ணத்தை பேச்சாகவும், வரிவடிவமாகவும் (எழுத்து) மாற்றும் வல்லமை கொண்ட மொழிதான் காலங்களைக் கடந்து நிலைத்து நிற்கும். பேச்சு, எழுத்து இரண்டையும் ஒருங்கே கொண்டதுதான் மொழி. உலகின் பல மொழிகளில் பேச்சு வழக்கு மட்டும் உண்டு, எழுத்து வடிவம் கிடையாது. நம் இந்தியாவிலே பல மொழிகளைக் கூற முடியும். கொங்கனி, சௌராஷ்டிரா போன்ற மொழிகளுக்கு எழுத்து வடிவம் கிடையாது. நாம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல், உலகின் செம்மொழிகளில் ஒன்றான சமஸ்கிருதத்துக்கு இன்றுவரை எழுத்து வடிவமே கிடையாது. “Kaalaila saaptiyaa” என்று நாம் குறுஞ்செய்தி அனுப்புவது போல் தேவநகரி, கிரந்தம் போன்ற எழுத்துக்களைக் கடன் வாங்கித்தான் சமஸ்கிருதத்தை இன்றுவரை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். சமஸ்கிருதம் தொடர்பான சிறு ஆய்வுதான் இந்தக் கட்டுரை. தமிழை அழித்து, சமஸ்கிருத்தை வளர்க்க நினைக்கும் ஒரு கூட்டத்தின் முகத்திரையைக் கிழிக்கும் முயற்சியும் கூட.

செம்மொழி என்னும்சதி

நாம் முன்பே பார்த்தபடி, தமிழ், பிராகிருதம், பாளி போன்ற மொழிகள்தான் 2000 ஆண்டுகளுக்கும் முன்பாக இந்தியா என்று இப்போது அழைக்கப்படும் நாவலந்தீவில் பேசப்பட்ட மொழிகள். அப்போது சமஸ்கிருதம் என்ற வார்த்தையே கிடையாது. பிராகிருத மொழியை மூலமாகக் கொண்டு வளர்ந்த மொழிதான் சமஸ்கிருதம். அது மொழிகளின் பெயர்களிலே தெளிவாக விளங்கும். பிராகிருதம் என்றால் இயற்கை என்று பொருள். அதாவது இயற்கையாக காலப்போக்கில் உருவான ஒரு மொழி. சமஸ்கிருதம் என்றால் மெருகேற்றப்பட்ட என்று பொருள். அதாவது இயற்கையாக தோன்றிய பிராகிருத மொழியை சற்று மெருகேற்றி சமஸ்கிருதம் உருவானது என்று அர்த்தம்.

பிராகிருத மொழியிலிருந்து வார்த்தைகளைக் கடன் வாங்கி அதை சற்று மாற்றி, புது வார்த்தைகளை உருவாக்கி, பின்பு அதையே புதுமொழி ஆக்கிவிட்டார்கள். மிகவும் எளிதான காரியம். ஆனால் எழுத்துக்களை உருவாக்க அவர்கள் மெனக்கெடவில்லை. அப்போது வழக்கத்தில் இருந்த சில எழுத்துக்களை உபயோகித்துத் தங்கள் மொழியை எழுதிக் கொண்டார்கள். ஆக, மொழியும் கடன் வாங்கப்பட்டது. எழுத்துக்களும் கடன் வாங்கப்பட்டது. இது ஒன்றும் பிழையில்லை. உலகில் இன்று வழக்கில் உள்ள மொழிகளில் 99% மொழிகள் இவ்வாறு கடன் வாங்கப்பட்ட மொழிகள்தான். ஆனால் நாம் மற்ற மொழிகளை விட்டுவிட்டு சமஸ்கிருதத்தை விமர்சிக்க வேண்டிய காரணம் என்ன. காரணம் இருக்கிறது.

உலகில் தற்போது கிட்டத்தட்ட 6000 மொழிகளுக்கு மேல் வழக்கில் இருக்கின்றன. இவற்றில் 7 மொழிகள் மட்டும்தான் செம்மொழிகள் (Classical Languages) என்று அழைக்கப்படுகின்றன. தமிழ், கிரீக் (Greek), லத்தீன் (Latin), மாண்டரின் (Mandarin), ஹீப்ரு (Hebrew), அரேபி (Arabic), சமஸ்கிருதம். உலக செம்மொழிகளின் பட்டியலில் சமஸ்கிருதம் சத்தமில்லாமல் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஒரு மொழியை செம்மொழி என்று குறிப்பிட சில தகுதிகளை வகுத்திருக்கிறார்கள்.

1) மிகப்பழமை வாய்ந்த மொழியாக இருக்கவேண்டும்.

2) மொழி தனித்தியங்கும் ஆற்றல் உடையதாக இருக்கவேண்டும்.

மேலும் பல தகுதிகள் இருக்கின்றன. இவை முதன்மைத் தகுதிகள். முதல் தகுதி, மிகப்பழமையான மொழியாக இருக்க வேண்டும். ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு சமஸ்கிருதம் என்ற சொல்லே இந்தியாவில் இல்லை என்று பார்த்தோம். ஆகவே அது தொன்மையான மொழி என்று ஏற்றுக்கொள்ள முடியாது. இரண்டாவதாக, மொழி தனித்தியங்கும் ஆற்றலுடையதாக இருக்கவேண்டும். சமஸ்கிருத மொழியே பிராகிருத மொழியிலிருந்து உருவானதென்று பார்த்தோம். மொழியும் கடன் வாங்கிய மொழி, எழுத்துக்களும் கடன் வாங்கப்பட்டது. ஆக, சம்ஸ்கிருத மொழி தனித்தியங்கும் ஆற்றலும் இல்லாதது, மேலும் பழமை வாய்ந்த மொழியும் இல்லை. பின்னர் எதன் அடிப்படையில் சமஸ்கிருதம் செம்மொழி பட்டியலில் சேர்க்கப்பட்டது. சொந்தமாக எழுத்துக்கள் கூட இல்லாத ஒரு மொழியை இந்தியாவின் மூத்த மொழி என்று ஒரு கூட்டம் கூச்சலிடுவது ஏனென்று விளங்கவில்லை. வாழும்போதே நடைபிணம் போல வாழ்ந்த சமஸ்கிருத மொழிக்கு இறந்து குழிதோண்டி புதைத்த பின்னும் பாலூற்றி, தேனூற்றி கொண்டாடப்படுவதன் பின்னணி என்ன. அதை நாம் ஆராய வேண்டும்.


பெஹிஸ்டன் கல்வெட்டு(Behistun Inscriptions)

கி.மு. 522 முதல் கி.மு. 486 வரை பாரசீகத்தை (Persia) ஆண்ட மன்னரின் பெயர் டேரியஸ் (Darius). பாரசீகம் என்றால் இன்றைய ஈரான். டேரியஸின் வரலாற்றை விவரிக்கும் கல்வெட்டுதான் பெஹிஸ்டன் கல்வெட்டு. ஈரானில், கெர்மன்ஷா மாநிலத்திலுள்ள பெஹிஸ்டன் மலையில் எழுதப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டுக்கும் நாம் விவாதிக்கும் தலைப்புக்கும் பெரிய தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பதை தொல்பொருள் ஆராய்ச்சியாளரோ,  வரலாற்று ஆய்வாளரோதான் கூற முடியும். நமக்கும் அந்தக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ள மன்னனுக்கும் எந்த வாய்க்கால் தகராறும் இல்லை. ஆனால் அதில் பயன்படுத்தப்பட்ட ஒரு வார்த்தை நமக்கு மிகவும் தேவையான வார்த்தை. அது ஆரியன் என்ற வார்த்தை. ஆம், அந்த கல்வெட்டில் ஆரியன் என்ற வார்த்தை காணப்படுகிறது. இது இரானிய மக்களைக் குறிக்கும் விதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆதிகாலத்தில் ஆரியன் என்ற வார்த்தைதான் மருவி பின்பு இரான் என்று மாறிவிட்டதா என்று தெரியவில்லை. அந்த ஆராய்ச்சியை நாம் தொல்பொருள் துறைக்கே விட்டுவிடலாம். நமது  இப்போதைய தேவை அந்த ஆரியன் என்ற வார்த்தை மட்டும்.

ஆரியன் என்ற வார்த்தை, இந்தியாவைத் தாண்டிப் பயன்படுத்தப்பட்டதாக கண்டறியப்பட்ட மிகப்பழமையான கல்வெட்டென்றால் அது பெஹிஸ்டன் கல்வெட்டுதான். கி.மு. 6ம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்டது.  நாம் பெஹிஸ்டன் கல்வெட்டில் பார்த்தபடி ஆரியன் என்ற வார்த்தை இரானிய மக்களைக் குறிக்கிறது. அப்படியானால் இந்தியாவுக்குள் ஊடுருவிய ஆரியர்கள் என்பது இரானியர்களைத்தான் குறிக்கிறதா என்று எண்ணிவிட வேண்டாம். இந்தியாவில் இரானியர்கள் இன்றும் வாழ்கிறார்கள். அவர்கள் பார்சி (Parsi) என்று அழைக்கப்படுகிறார்கள். ஈரானுக்கு பாரசீகம் என்ற பெயர் உண்டென்பதை முன்பே பார்த்தோம். பாரசீகத்திலிருந்து வந்தவர்கள் என்பதால் அவர்கள் பார்சி என்று அழைக்கப்படுகிறார்கள். அப்படியானால் 4000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் ஊடுருவிய ஆரியர்கள் யார்?

தமிழ் இலக்கியங்களில்ஆரியர்கள்

இந்தியாவில் ராமாயணம், மகாபாரதம் போன்ற நூல்களிலும், தமிழில் சிலப்பதிகாரம், நற்றிணை,  குறுந்தொகை, பதிற்றுப்பத்து போன்ற நூல்களிலும் ஆரியன் என்ற வார்த்தை கையாளப்பட்டிருக்கிறது.

சிலப்பதிகாரத்தில் ஆரிய என்ற வார்த்தை இடம்பெற்றுள்ள பாடல் வரிகள்.

“வடவாரிய படை கடந்து

தென்தமிழ் நாடு ஒருங்கு காணப்

புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்

அரசு கட்டிலிற் றுஞ்சிய பாண்டியன்

நெடுஞ்செழியன்”

நற்றிணையில் ஆரியர் என்ற வார்த்தை இடம்பெற்றுள்ள பாடல் வரிகள்.

“ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்

பலருடன் கழிந்த ஒள்வாள் மலையனது”

பதிற்றுப்பத்தில் ஆரியர் என்ற வார்த்தை இடம்பெற்றுள்ள பாடல் வரிகள்.

“அமைவரல் அருவி இமையம்விற் பொறித்து

இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத்

தன்கோல் நிறீஇத் தகைசால் சிறப்பொடு

பேரிசை மரபின் ஆரியர் வணக்கி”

குறுந்தொகையில் ஆரியர் என்ற வார்த்தை இடம்பெற்றுள்ள பாடல் வரிகள்.

“ஆரியர்

கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி

வாகைவெண்நெற் றொலிக்கும்”

இவை மட்டுமல்ல, தமிழில் இன்னும் பல சங்கப்பாடல்களில் ஆரியர் என்ற வார்த்தையைக் காணமுடிகிறது. தமிழ் சங்கப்பாடல்களைப் பொறுத்தவரையில் ஆரியர் என்ற வார்த்தை பெரும்பாலும் வடஇந்தியர்களைக் குறிக்கிறது. ஆரியர்கள் என்பது தமிழர்களிடமிருந்து வேறுபட்ட இனம் என்பதை சங்கப்பாடல் மூலமாகவே உணரமுடியும். வடஇந்தியர்கள் மத்தியில் ஆரியர் என்ற வார்த்தை ராமாயணம், மகாபாரதம் போன்ற நூல்களில் இடம் பெற்றாலும், அது ஒரு இனத்தைக் குறிப்பது போல பயன்படுத்தப்படவில்லை. பிராகிருதம் மற்றும் சமஸ்கிருதத்தில் ஆரியன் என்ற வார்த்தை “மேன்மையான”, “உயர்வான” என்ற பொருள்படும்படி கையாளப்பட்டிருக்கிறது. அது ஒட்டுமொத்த இனத்தைக் குறிக்கும் வார்த்தைபோல் பயன்படுத்தப்படவில்லை. ஆடு, மாடுகளுடன் சேர்ந்து இந்தியாவுக்குள் ஊடுருவிய கும்பலுக்கு, தமிழர்கள் வைத்த பெயர்தான் ஆரியன். சரி அந்த ஆடு, மாடுகள் மேய்க்கும் கூட்டம் எங்கிருந்து வந்தது?

நிற்க. சமஸ்கிருதம் பற்றி ஆழமாக தோண்டிக்கொண்டிருக்கும்போது திடீரென்று எங்கிருந்து ஆரியர்கள் வந்தார்கள்? அவர்களைப் பற்றி நாம் ஏன் இவ்வளவு விரிவாக நீட்டி முழக்கி ஆராய வேண்டும்? காரணம் உண்டு. இந்தியாவில் தமிழ் தழைத்திருந்த நேரம், ஆரியர்கள் என்று நாம் அழைக்கும் புல்லுருவிகள் ஊடுருவிய பின்தான்,  தமிழுக்கு நடுவே களைப்பயிராக சமஸ்கிருதம் முளைக்கத் தொடங்கியது. சமஸ்கிருத ஆராச்சியும், ஆரியர்கள் வரவும் பிரிக்க முடியாதது. அதனால் அவர்கள் பூர்வீகத்தைக் கிளறியே ஆகவேண்டியக் கட்டாயத்தில் இருக்கிறோம். அந்த வீகத்தைக் கொஞ்சம் பார்ப்போம்.

ஆரியர்கள் பூர்வீகம்

இந்தியாவில் ஊடுருவிய ஆரியர்கள், வடஐரோப்பாவிலிருந்து வந்தவர்கள் என்பது வரலாற்றாய்வாளர்கள் கருத்தாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக நார்டிக் பகுதியிலிருந்து (Nordic Region) வந்தவர்கள் என்றுதான் நம்பப்படுகிறது. நார்டிக் பகுதி என்பது இன்றைய டென்மார்க் (Denmark), பின்லாந்து (Finland), ஐஸ்லாந்து (Iceland), நார்வே (Norway), ஸ்வீடன் (Swedan) போன்ற நாடுகள் உள்ளடங்கிய பகுதிகளைக் குறிக்கும். இன்றும் சமஸ்கிருதத்துக்கும், நார்டிக் பகுதியில் பேசப்படும் மொழிகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்து ஏறத்தாழ 4000 ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்பது ஆய்வாளர்கள் கணிப்பு. ஒரு ஆட்டு மந்தை, அந்த மந்தையுடன் மந்தையாக ஆரியர்களும் வந்துவிட்டார்கள். இவ்வளவுதான் அந்த ஆரிய பூர்வீகம்.

பெஹிஸ்டன் கல்வெட்டில் பார்த்த ஆரியர்களுக்கும், இந்தியாவில் நுழைந்த ஆரியர்களுக்கும் தொடர்பில்லை என்பது தெளிவாக விளங்கும். இந்தியாவில் தமிழர்கள் மத்தியில் மட்டும் புழக்கத்தில் இருந்த ஆரியன் வார்த்தையை  உலகம் அறிந்ததில்லை. இந்தியாவுக்கு வெளியே கி.மு. 6ம் நூற்றாண்டில் பெஹிஸ்டன் கல்வெட்டில் மட்டும் ஆரியன் என்ற வார்த்தை காணப்பட்டது. அதிலிருந்து கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு மேல் ஆரியன் என்ற வார்த்தையை இந்தியாவைத் தவிர வெளிநாட்டவர் எவரும் சீண்டியதாகத் தெரியவில்லை. சும்மா இருந்த ஆரிய சங்கை 19ம் நூற்றாண்டில் ஒருவர் ஊதினார். அதன்பிறகு ஆரிய சங்கின் முழக்கம் இன்றுவரை அடங்கவில்லை. சங்கை ஊதியவர் ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர். அவரைத் தொடாமல் ஆரிய வரலாற்றை முடிக்க முடியாது.

பிரெய்ட்ரிக் மேக்ஸ்முல்லர் (Friedrich Max Muller)

பிரெய்ட்ரிக் மேக்ஸ் முல்லர் (1823 முதல் 1900 வரை வாழ்ந்தவர்) ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர். அந்த ஆரிய சங்கை ஊதியவர் இவர்தான். செம்மொழிகளான லத்தீன், கிரீக், அரபி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளைக் கற்றவர். ஜெர்மனியில் பிரெய்ட்ரிக் ஷெல்லிங் (Friedrich Schelling) என்பவரது வேண்டுகோளுக்கிணங்க சில உபநிஷதங்களை மொழிபெயர்த்திருந்தார். ரிக் வேதம் தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரை எழுத, கிழக்கிந்திய கம்பெனி வைத்திருந்த சமஸ்கிருதம் தொடர்பான நூல்களில் குறிப்பெடுக்க இங்கிலாந்துக்கு வந்தவர் அங்கேயே பாய்விரித்துப் படுத்துவிட்டார். 1846ம் ஆண்டு இங்கிலாந்து வந்தவர் அதன்பிறகு தாய்நாட்டுக்குத் திரும்பவே இல்லை. இங்கிலாந்து வந்ததும் ரிக் வேதத்தையும் மொழிபெயர்த்தார்.  சமஸ்கிருதம், இந்துமதம் தொடர்பான ஆராய்ச்சிகளில் கடைசிவரை மூழ்கி அதற்காக கணிசமானப் பங்களிப்பை அளித்தார் என்பது உண்மை.

மேக்ஸ் முல்லர் காலத்தில் இந்திய – ஐரோப்பிய மொழிகளிடையேயான ஒற்றுமை தீவிரமாக ஆராயப்பட்டது. இந்தியாவிலும், பெஹிஸ்டன் கல்வெட்டிலும் பயன்படுத்தப்பட்ட ஆரியன் என்ற வார்த்தையை வெற்றிகரமாக ஐரோப்பா கொண்டுபோய் சேர்த்த பெருமை மேக்ஸ் முல்லரைத்தான் சேரும். ஆரியன் என்ற வார்த்தையை ஒரு இனத்தின் அடையாளமாக மாற்றியது முல்லர்தான். முல்லர் தொடங்கி வைத்ததுதான் தாமதம், ஆரியன் என்ற வார்த்தைக்கு உரிமை கொண்டாட ஐரோப்பாவே திரண்டு வந்தது. ஐரோப்பியர்களில் பெரும்பாலானோர் தங்களை ஆரிய இனத்தை சேர்ந்தவர்கள் என்று நம்ப வைக்கப்பட்டார்கள். ஆரியர்கள்தான் ஆளப்பிறந்தவர்கள், மற்றவர்கள் அடிமைகளாக வாழப்பிறந்தவர்கள் என்று இறுமாப்பு  கொள்ளத்தொடங்கினார்கள். அந்த வரிசையில் ஆரியப்  விதையைத் தூவி விட்டுப் போன இன்னும் சிலரையும் பற்றி மேலாட்டமாகத் தெரிந்து கொள்ளவேண்டும்.

ஆரிய இனவாதத்துக்குபலியான 60 லட்சம்உயிர்கள்

மேக்ஸ் முல்லர் ஆரிய இனம், ஆரிய ரத்தம், ஆரிய கிட்னி என்று ஆரியத்துக்கு புது சாயம் பூசிய பிறகு, வேறு பலரும் ஆரியத்தைக் குறித்து பக்கம் பக்கமாக எழுதித் தள்ளினார்கள். சிலர் ஆராய்ச்சி என்ற பெயரில் ஆரிய இனம்தான் உலகில் உயர்ந்த இனம் என்று புரளியைக் கிளப்பினார்கள். அப்படி ஆரியப் புரளியைக் கிளப்பியவர்களில் மேக்ஸ் முல்லருக்கு அடுத்ததாக முதன்மையானவர் என்றால் அது ஹெலினா பெட்ரோவ்னா பிளாவட்ஸ்கி (Helena Petrovna Blavatsky) அம்மையாராகத்தான் இருக்க வேண்டும். பிளாவட்ஸ்கி அன்றைய ரஷ்யக் குடியரசின் கீழ் இருந்த உக்ரைனில் (Ukraine) பிறந்தவர்.  1888ம் ஆண்டு தான் எழுதிய ரகசிய கோட்பாடு (The Secret Doctrine) என்ற நூலில் இனங்களின் வேர் (Root Race) என்ற கொள்கையை முன்வைக்கிறார். பூமி தோன்றியது முதல், வருங்காலம் வரைக்கும் மொத்தம் 7 வகையான இனங்களைப் பட்டியலிட்டுக் கூறுகிறார்.

போலாரியன் (Polarian), ஹைப்பர்போரியன் (Hyperborean), லெமூரியன் (Lemurian), அட்லாண்டியன் (Atlantean), ஆரியன் (Aryan) ஆகிய 5 இனங்களை பிளாவட்ஸ்கி அறிமுகப்படுத்துகிறார். 6 மற்றும் 7வது இனங்கள் வருங்கால இனங்கள். அவற்றுக்கு பெயர் வைத்தாரா என்று தெரியவில்லை, ஆனால் இணையத்தளத்தில் அதற்கும் ஹோமோ ஸ்பிரிட்டாலிஸ் (Homo Spiritalis), சீல் (Seal) , ட்ரம்பெட் (Trumpet) என்றெல்லாம் பல பெயர்கள் கிடைக்கின்றன. மற்ற பெயர்களை விட்டுவிடலாம். பிளாவட்ஸ்கி வரிசையில் 5வது இனம்தான் ஆரிய இனம். தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இனம். ஆரிய இனத்தைப் போல இன்னும் பல இனங்கள் உண்டு  அதில் பல உட்பிரிவுகளும் உண்டு. ஆனால் பிளாவட்ஸ்கியைப் பொறுத்தவரை ஆரிய இனம்தான் உயர்ந்த இனம். மற்றவர்கள் ஆரியர்களுக்குக் கீழானவர்கள் என்பதுதான் அவர் கடைபிடித்த கொள்கை. 1875ம் ஆண்டு பிரம்ம ஞான சபை (Theosophical Society) பிளாவட்ஸ்கி மற்றும் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் (Henry Steel Olcott) மற்றும் சிலரால் உருவாக்கப்பட்டது. பிரம்ம ஞான சபையின் மந்திரச்சொல் என்னவென்றால் “உண்மையை விட உயர்ந்த மதம் வேறொன்றுமில்லை”. அவர்கள் சொல்லும் உண்மை என்னவென்றால், ஆரியன் ஆளப்பிறந்தவன். நாமெல்லாம் அடிமைகள். வேறொன்றுமில்லை.

பிரம்ம ஞான சபை தோற்றுவிக்கப்பட்ட அதே 1875ம் ஆண்டு இந்தியாவிலும் ஆரிய இனவாதத்தை தூக்கிப் பிடிக்கும் வகையில் “ஆரிய சமாஜம்” போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டது. அந்த அமைப்புகளும் ஆரிய நேரிடையாகவோ, மறைமுகமாகவோ ஆரிய இனவாதமே பேசின. ஆரிய சமாஜத்தை உருவாக்கியவர் தயானந்த சரஸ்வதி. இந்திதான் இந்தியாவின் மொழியாக இருக்கவேண்டுமென்று அப்போதே கூவியவர் தயானந்த சரஸ்வதி. சமஸ்கிருதத்தைத்தான் முதலில் பரப்பி வந்தார். பின்னர் என்ன நினைத்தாரோ, இந்தியைக் கையிலெடுத்து சமஸ்கிருதத்தை விட்டுவிட்டார். இது ஒட்டுமொத்த ஆரிய வரலாறு இல்லை. ஆரியன் என்ற சொல்லைப் பரவலாக்கிய சில முதன்மையான மனிதர்களைப் பற்றி மட்டும்தான் நாம் பார்த்தோம். 19ம் நூற்றாண்டில்தான் ஐரோப்பியர்கள் தங்களை ஆரியர்கள் என்று அழைத்துக்கொள்ளத் தொடங்கினார்கள் என்பது நிச்சயமான உண்மை. ஆரியன் என்ற சொல்லுக்குத்  தொடர்பே  இல்லாத ஐரோப்பியக் கூட்டம், தன்னை ஆரியன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு மற்ற இனத்தவரை அடிமைகள் போல கற்பனை செய்யத் துவங்கியது இந்த காலகட்டத்தில்தான். அந்த ஆரிய இறுமாப்பின் ஒட்டுமொத்த அடையாளமாக வாழ்ந்தவர் ஹிட்லர். ஹிட்லரும் ஜெர்மன் இன மக்களை ஆரிய இனம் என்று நம்பினார். அந்த நம்பிக்கை கிட்டத்தட்ட 60 இலட்சம் யூதர்களைக் காவு வாங்கியது. ஹிட்லர் கிளறிவிட்ட பின் ஆரியன் என்ற வார்த்தை ஒட்டுமொத்த உலகுக்கே போய் சேர்ந்தது.

ஆரிய மொழி செம்மொழி ஆனது

இந்தியாவில் சிந்துசமவெளி வரை பரவி வாழ்ந்த தமிழர்கள், ஆரியர்கள் நுழைவுக்குப் பின்தான் தென்னிந்தியாவை நோக்கி நகர்ந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தியாவில் ஆரியர்கள் பேசிய மொழி சமஸ்கிருதம் என்று நம்பவைக்கப்பட்ட இங்கிலாந்து வெள்ளைக்காரக்  கூட்டம்தான் சமஸ்கிருதத்துக்கும், இதர ஐரோப்பிய மொழிகளுக்கும் இடையிலான ஒற்றுமையை ஆராய மேக்ஸ் முல்லர் போன்ற முல்லன்களையும், இன்னும் பல வில்லன்களையும் ஏவி விட்டிருந்தது. சமஸ்கிருதம் ஆரிய மொழியென்று நம்பவைக்கப்பட்டது. ஆரிய இனம், ஆரிய ரத்தம் வரிசையில் ஆரிய மொழியும் உயர்ந்த மொழியென்று நம்பவைக்க பொய்யான பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆரிய இனவாதத்தைத் தூக்கிப் பிடிக்கும் முயற்சியின் விளைவாகத்தான் சொந்தமாக எழுத்துக்கள் கூட இல்லாத சமஸ்கிருதம் செம்மொழி என்ற தகுதி பெற்றது.

சமஸ்கிருதம்தான் இந்தியாவின் மூத்தமொழி என்று வெள்ளைக்காரன் வாயால் வடைசுட்டாகி விட்டது. ஆனால் சமஸ்கிருதத்துக்குப் போட்டியாக இந்தியாவில் மிக வலிமையாக, மிகத் தொன்மையாக தமிழ் இருக்கிறது. தமிழை எப்படி ஓரங்கட்டுவது என்று யோசித்தார்கள் இந்தியாவுக்குள் வாழும் ஆரியர்கள். நாம் வாழ்க்கையில் வெற்றிபெறக்  கடுமையாக உழைத்து முன்னேற வேண்டும். இது முதல் வழி. இரண்டாவது ஒரு குறுக்குவழி இருக்கிறது. நமது எதிரியை வளரவிடாமல் செய்வதுதான் இரண்டாவது வழி. தமிழின் பழமையை அழிக்க இந்த குறுக்கு வழிதான் கடைபிடிக்கப்பட்டது. சமஸ்கிருதம் பழமையான மொழி என்று கூவிக்கொண்டே தமிழின் பழமையை அழிக்கும் முயற்சிகள் கண்டறியப்பட்டன. அந்த சதிக்குப் பெயர் பிராமி.

பிராமி என்னும் கிருமி

இந்தியாவில் இதுவரை கண்டெடுத்த கல்வெட்டுகளில் பழமையானது என்றால் அது தமிழ் கல்வெட்டுக்கள்தான். ஆனால் அரசாங்க ஏடுகளில் தமிழ் எழுத்துக்கள் என்ற வார்த்தைக்கு பதிலாக தமிழ் பிராமி என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கும். அது என்ன பிராமி? அது மொழியா? இல்லை. பிராமி என்பது வெறும் எழுத்துக்களை மட்டுமே குறிக்கும். கி.மு. 238ல் அசோகர் தூண்களில் எழுதி வைத்துவிட்டுப் போன எழுத்துக்களுக்கு பிற்காலங்களில் பிராமி என்று பெயரிடப்பட்டது. தமிழ் கல்வெட்டுக்கள் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்படும் வரை அசோகர் கல்வெட்டுகளில் கண்டெடுக்கப்பட்ட எழுத்துக்கள்தான் இந்தியாவில் பழமையான எழுத்துக்கள் என்று நம்பப்பட்டது. ஆனால் ஆதிச்சநல்லூர், கொடுமணல், கீழடி, பொருந்தல் போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் கல்வெட்டுகள் அசோகர் காலத்துக்கும் முந்தியவை என்று நிரூபிக்கப்பட்டன.

பிராமி என்று பெயரிடப்பட்ட எழுத்துக்களுக்கும் முன்பே தமிழ் எழுத்துக்கள் வழக்கிலிருந்தது நிரூபிக்கப்பட்டது தெளிவாகிறது. ஆனால் இந்திய அரசுக்கு தமிழை இந்தியாவின் மூத்த மொழியாக ஏற்றுக்கொள்வதில் என்ன பிரச்னை என்று தெரியவில்லை. அவர்கள் தமிழ் எழுத்துக்களுக்கு தமிழ் பிராமி என்று பெயர் வைத்தார்கள். ஆக பிராமிதான் இந்திய எழுத்துக்களுக்கு மூலம் என்றும், தமிழ் எழுத்துக்கள் பிராமி எழுத்துக்களில் இருந்துதான் உருவாக்கப்பட்டது என்பது போன்ற பிம்பம் உருவாக்கப்பட்டது. தமிழ்பிராமி என்ற சொல்தான் இன்று வரை தமிழக அரசாங்கத்தால் கூட பயன்படுத்தப்படுகிறது என்பது தமிழுக்கு வந்த வேதனை.

தமிழ்நாட்டைத் தவிர்த்து வடநாட்டில் எழுதப்பட்ட நூல்களில் கூட தமிழ் எழுத்துக்களைப் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால், கி.மு. 3ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சமவயங்க சூத்ரா (Samavayanga Sutra), பண்ணவன சூத்ரா (Pannavana Sutra) போன்ற சமண மதம் தொடர்பான நூல்களில், அக்காலத்தில் வழக்கிலிருந்த எழுத்துக்களைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. அவற்றில், தமிழி என்று எழுத்துமுறை வழக்கிலிருந்ததாக அந்நூல்கள் குறிப்பிடுகின்றன. அந்த நூல் தமிழி என்றுதான் குறிப்பிடுகிறது, பிராமி என்ற சொல்லாடல் அந்நூல்களில் காணப்படவில்லை. இதிலிருந்து, தமிழுக்குப் பின்னால் பிராமி என்ற வார்த்தை வந்து சேர்ந்தது பிற்காலத்தில்தான் என்பது விளங்கும். இதற்குப் பின்னால் இருப்பது இந்திய அரசியல். தமிழின் பழமையை திட்டமிட்டு அழிக்க நினைக்கும் ஒரு கூட்டத்தின் சதி என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

பிச்சைப்பாத்திரம்

இந்தியாவின் தொன்மையின் அடையாளமென்றால் தமிழ்தான். ஒட்டுமொத்த இந்தியாவின் மொழி என்றால், ஆரியர்கள் வருகைக்கும்  முன்பிருந்தே  தமிழ்தான். தமிழின் திரிபுகளாக இருந்த சில மொழிகளை சற்று வார்த்தை மாற்றம் செய்து உருவாக்கப்பட்ட மொழிதான் சமஸ்கிருதம். புரியும்படி சொல்வதானால், இன்று தமிழ்நாட்டில் பிராமணர்கள் பேசும் தமிழ் போன்றது என்று சொல்லலாம். இந்தியாவில் அன்றைய காலத்தில் வழக்கிலிருந்த தமிழ், பிராகிருதம், பாளி போன்ற மொழிகளின் கலவைதான் சமஸ்கிருதம். இறந்துவிட்டவர்களை நாம் பொதுவாக தெய்வநிலையை அடைந்துவிட்டார் என்று சொல்வதுண்டு. அந்த வகையில் இறந்து போன சமஸ்கிருதத்தை தெய்வமொழி என்று அழைக்கலாம். நமது ஆராய்ச்சியின் முடிவாக சொல்வதானால், சமஸ்கிருதம், பல  மொழிகளின் தயவில் வாழ்ந்த பிச்சைப்பாத்திரம். நன்றி RAJESHLINGADURAI.WORDPRESS