வெள்ளி, 13 ஜூலை, 2018

மறைக்கப்பட்ட பறையர் வரலாறு


மறைக்கப்பட்ட பறையர் வரலாறு- ஜெ.மு.இமயவர்மன் 
அண்ணன் காடுவெட்டி குரு காஞ்சிபுரம் கூட்டத்தில் வைத்து சொன்னார் ""பறையனிடம் மோளம் தான் இருக்கும்னு"" எனக்கு காடு வெட்டி குரு மேல் கடும் கோபம் வந்தது அண்ணன் குரு பேசிய பேச்சில், பறையன்னா கீழ் சாதியா? ? தீண்டத்தகாதவனா? ? எப்போது சமூகம் என்னை தீண்டத்தகாதவன் என்றது என்று கடும் குழப்பத்தில் இருந்தேன்.  இந்நிலையில் என்னை சேலம் போலீசார் ஒரு வெடிகுண்டு வழக்கில் பொய்யாய் குற்றவாளியாய் சேர்த்தனர்.  அதற்காக முன் ஜாமீன் வாங்க நான் சென்னை உயர் நீதிமன்றம் சென்ற போது என் சாதியை சேர்ந்த சென்னை வழக்கறிஞர்கள் எனக்காக கடும் சிரத்தை எடுத்தனர்,நான் அவர்கள் சாதி என்ற ஒற்றை காரணத்திற்காக .அதனால் என் மணதில் கடும் நெருடல் ஏற்பட்டது,எந்த சாதிக்காக அந்த வழக்கறிஞர்கள் எனக்காக உழைத்தார்களோ அந்த என் சாதிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று. இந்த சூழலில் ஒரு நாள் நள்ளிரவு 11.30 மணிக்கு நானும் என் மனைவி பொன்னியும் பொன்னியின் செல்வன் நாவல் பற்றி பேசிக்கொண்டிருந்தோம், அப்போது பொன்னி தான் சொன்னார் இராஜ இராஜ சோழனின் அண்ணன் ஆதித்ய கரிகாலனை பாண்டியர்களுக்காக கொன்றது ""சோமன் சாம்பான் என்று "" அப்போது நான் திடுக்கிட்டேன். சாம்பவர் சோழர் ஆயிற்றே அவர்கள் எப்படி ஆதித்ய கரிகாலனை கொல்ல முடியும் .எனில் பறையர் பாண்டியரா ?? என்று  ...அதன் பின் வரலாற்றை தேடிப்புறப்பட்டேன். ஒரு வருடம் கடும் முயற்சி. காடு ,மேடாய் சுற்றி திரிந்தேன் .கல்வெட்டு ,கல்வெட்டாய் தேடிப்படித்தேன் .செப்படுகள் ,ஒலைச்சுவடுகள் ,புத்தகங்கள் இப்படி ஒன்றும் விடாமல் படித்தறிந்தேன் .எனது தேடலில் பொக்கிசமே கிடைத்தது .இதற்கு காரணமான என் மனைவி பொன்னியை கை எடுத்து கும்பிட்டேன்.""பறையன் தான் ஆதி தமிழ்  சாதி என்பதை குறித்து  பல்வேறு ஆதாரங்கள் கிடைத்தன.பறையரின் ஆண்மை, வீரம், பண்பாடு குறித்த   ஆதாரங்கள் குவியல் குவியலாய் கிடைத்தது.வடதமிழ்நாட்டை அரசாண்ட பறையர், பறையர் வெளியிட்ட நாணயம், கொங்கு மண்டாலத்தை கோலோச்சிய பறையர், தென் தமிழ் நாட்டின் வீர சாம்பவ பறையர் பற்றி எல்லாம் அங்கொன்றுமாய், இங்கொன்றுமாய் சிதறி கிடந்த வரலாற்றை தேடி பிடித்தேன்.  விவசாயம் செய்த உழவு பறையர்,வீரமாய் வாழ்ந்த சாம்பவ பறையர், உலகிற்கே அறிவை போதித்த வள்ளுவ பறையர்,விஞ்சாணத்தை ஆதியில், தமிழ் சாதியில் கணித்த கணிய பறையர், நெசவு செய்த கோலிய பறையர், கோட்டை காட்டி வாழ்ந்த கோட்டை பறையர், இப்படி 108 வேலை செய்த பறையறை தேடி  பிடித்தேன்  அதை எல்லாம் தொகுத்து "பறையரின் மறைக்கப்பட்ட வரலாறு " என்ற புத்தகம் பதித்தேன் .இந்த புத்தகத்திற்கு ""ஈழ விடுதலைக்காய்  வாழும் ஐயா காசி ஆனந்தன் "" ஐயா அவர்களிடம் மதிப்புரை பெற்றேன்.மும்பையில் அகில பாரத பறையர் சாம்ராஜ்யம் ஏற்பாடில்அயோத்தி தாச பண்டியர் - தாத்தா இரட்டை மலை சீனிவாசன் அவர்களின் பேத்தி ரேவதி பறையர்  கையால்  வெளியிட்டேன்.என் சாதியிடம் மோளம் மட்டும் தான் இருக்கும் என்று சொன்ன  அண்ணன்  காடுவெட்டி குருவின் போக்கில் மாற்றம் கொண்டு வர காடுவெட்டி குருவிடம் இந்த புத்தகத்தை கொடுத்து இதோ பறையன் வாழ்ந்து, வளர்ந்த வரலாறு "" முந்தி பிறந்தவன் நான்,முதல் நூல் தரித்தவன் நான்  ""என்றும் ,புற நானூற்றிலே "" பாணன்,பறையன் ,துடியன் ,கடம்பன்,இந்நாண்கல்லது குடியல்ல "" என்று போற்றி புகழ பட்ட என் பறையர் வரலாற்றை அண்ணன் காடுவெட்டி குருவிடம் தர ஆசைப்பட்டேன்.   குரு காலமானதால் என் புத்தகம் முற்றுபெறவில்லை "" என்ற வேதனை ஒரு புறம் இருந்தாலும் --- ஆய்வின் அடிப்படையில் நான் கண்டு கொண்டது. "",பறையன் தான் ஆதி தமிழ் முதல் சாதி, ஆண்ட சாதி "'--- சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன். இந்த பதிவின் பின்னூட்டத்தில் என் அருமை எதிரி PMK சேலம் அருள் ,காடு வெட்டி குரு அவர்களிடம் நமது வரலாறு கொண்டு சேர்க்கப்பட்டதாக சொல்கிறார். என் வாழ்வில் நான் அடைந்த மிகப்பெரிய வெற்றியாக இதை கருதுகிறேன். நன்றி அதே போல் பறையர், தேவர், நாடார் ,கவுண்டர், படையாச்சி, நாயக்கர் சாதி பெயரா? ??? இல்லை.                                       தேவர் என்கிற ஒரு இனமோ, சாதியோ ஆதியில் இல்லை .ஆம் இருபதாம் நூற்றாண்டில் தான் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் முன் முயற்சியால்  கள்ளர், மறவர், அகமுடையார் என அழைக்கப்பட்ட முக்குலத்தோர் ஒன்றினைக்கப்பட்டு  அவர்களுக்கு ஏற்கனவே தமிழ் அகராதியில் உயர்வான பொருள் கொடுத்த தேவர் என்ற பெயரை முத்துராமலிங்க தேவர் சூட்டினார். அதே போல் நாடார் என்ற பெயரும் ஆதியில் கிடையாது சாணார் என அழைக்கப்பட்டவரே 19 ம் நூற்றாண்டில் தங்களுக்கு நாடார் என்ற பெயரை சூட்டி கொண்டனர். அதே போல் கவுண்டர் என்பதும் சாதி அல்ல. ஆம் கொங்கு மண்டலம் என சொல்லப்படும் சேலம், ஈரோடு, நாமக்கல்,திருப்பூர், கோவை பகுதிகளில் உள்ள வேளான்மை செய்யும் விவசாயிகள் தங்களுக்குள் கொங்கு மண்டல வேளாளர் என ஆரம்பத்தில் அழைத்து பின் தங்களுக்கு கவுண்டர் என்ற அர்த்தம் இல்லாத அடைமொழி சேர்த்தனர்.அதே போல் படையாச்சி என்பதும் சாதியல்ல. சாம்பவராயர் என்கிற பறையரின அரசர்களின் படைப்பிரிவின் தளபதிகளும் வீரர்களும் தங்களுக்கு சூட்டிக்கொண்ட பெயரே படையாச்சிகள் இதை பார்த்த தொண்டை மண்டலம் எனச்சொல்லப்பட்ட திருவள்ளூர், காஞ்சிபுரம்,வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம் போன்ற பகுதிகளில் வாழ்ந்த விவசாயிகளும் தங்களை படையாச்சிகள், கவுண்டர்கள், நாயக்கர் என அழைத்து கொண்டனர். அதே போல் நாயக்கர் என்பது சாதியா என்றால்? அதுவும் கிடையாது. விஜய நகர பேரரசின் படையெடுப்பு காலமான 13 ம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசை அண்டி பிழைத்தவர்கள் தங்களுக்கு வைத்து கொண்ட பெயர் நாயக்கர்கள் இவர்கள் வேறு நாயுடு வேறு.அதே போல் பறையர் சாதியா?  என்றால் கிடையாது இது ஒரு பேரினம். புற நாணூற்றிலே"" துடியன், பாணன், பறையன் ,கடம்பன் என்று இந்நான்கல்லது குடியில்லை" என்று பாடப்பட்ட ஒரு பேரினம். இவர்களில் பல தொழில் வல்லுநர் உண்டு .இவர்களில் பாடம் கற்பித்த ஆசிரியர்கள்  கணியன் என்றும்  வள்ளுவன் என்றும்,உண்ண உணவை தயாரித்த விவசாயிகள் சாம்பவ குல வேளாளர் என்றும், உடுக்க உடை கொடுத்த நெசவுப்பறையர் ,சாலியப்பறையர் என்றும் நீரை உருவாக்க கிணறு தோன்டிய தோண்டி பறையர், தோட்டி பறையராகவும்,மோளமடித்த முரசுபறையரும்,கோட்டை கட்டி வாழ்ந்த கோட்டை பறையரும், யாருக்கும் வீரத்தில் சலைக்காத கிழக்கத்திய பறையர் உட்பட 108  குழுக்கள் உள்ளன. இந்த பறையர்  என சொல்லப்படும் பேரினமே புரிதலில்லாமல் இன்று சாதியாய் பார்க்கப்படுகிறது.இன்றைய 2017 ம் ஆண்டு தமிழகத்தில் மட்டும் சுமார் 1 கோடி பறையர்  உள்ளனர் .இது ஐநா சபையில் இடம் பெற்றுள்ள பல நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகமாகும்.



பூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்

ட்டியல் இனத்தவரிலும் குறிப்பாக பறையர் சாதி தோன்றியதன் வரலாறு குறித்து ஏற்கனவே பல்வேறு ஆய்வு நூல்கள் வந்துவிட்டன. இப்போது சேலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன், ‘மறைக்கப்பட்ட பறையர் வரலாறு’ என்ற ஓர் ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார். வெளியீடு, கலகம் வெளியீட்டகம்.
ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன், பின் அட்டைக் குறிப்பு வழங்கி கூடுதல் வண்ணம் சேர்த்துள்ளார்.
இந்நூலை முழுவதும் வாசித்து முடிக்கையில், பறையர் என்ற இனமே இந்தியாவில் பேரினமாக இருந்திருக்க வேண்டும் என்று கருதத் தோன்றுகிறது. இசை பறையன், களத்து பறையன், கிழக்கத்தி பறையன், நெசவுக்கார பறையன், பரமலை பறையன், பஞ்சி பறையன், பறையாண்டி பறையன் உள்பட 100க்கும் மேற்பட்ட பெயர்களில் இந்த சமூகத்தினர் அழைக்கப்பட்டு வந்துள்ளதை அறிய முடிகிறது.
பறையர்கள் மீதான ஒடுக்குமுறை குறித்து பதிவு செய்யும்போது, அண்ணல் அம்பேத்கரை மேற்கோளாக பதிவு செய்துள்ளார். களப்பிரர் ஆட்சிக்காலம், இருண்ட காலம் என்பதே பொதுவில் சொல்லப்படுவது. ஆனால் அம்பேத்கரோ, கி.மு. 3 முதல் கி.மு.6ம் நூற்றாண்டு வரையிலான களப்பிரர் ஆட்சிக்காலத்தில், வர்ணமுறையற்றும், சாதி சமயம் பேதமின்றி இருந்ததாகவும் தகவலைச் சொல்கிறார்.
ஒரு காலத்தில் நாடார்களும், முக்குலத்தோர்களும் ஆதிக்க சாதியினரால் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகியுள்ளனர். தொடர் போராட்டத்திற்குப் பின்னர், இவ்விரு சாதிகளின் அந்தஸ்து உயர்த்தப்பட்டதாகவும், ஆனால் பறையர் சமூகம் இன்னும் தீண்டாமைப் பிடியில் இருந்து மீளவே இல்லை என்ற கவலையையும் வாசகர்களுக்கு கடத்தி விடுகிறார், நூலாசிரியர்.
தமிழகத்தில் பட்டியல் சாதியினர் மீது 1948ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல் சம்பவங்களையும் பார்வைக்குக் கொடுத்துள்ளார்.
கூலியை உயர்த்திக் கேட்டதற்காகவே 44 தலித்துகளை குடும்பத்தோடு தீ வைத்துக் கொளுத்தப்பட்ட கீழ் வெண்மணி சம்பவம் முதல் வாச்சாத்தி, தருமபுரி நத்தம் காலனி சூறையாடப்பட்டது வரை குறிப்பிட்டுள்ளார்.
துடியன், பாணன், பறையன், கடம்பன் ஆகிய குடிகளே சிறந்தது என்ற புறநானூறு பாடலும் பறையர் இனத்தின் தொன்மையை சான்று பகர்கிறது. அதற்காக புறநானூறு பாடல்களை அதிகமாகவே சான்றுக்காக கொடுத்திருப்பதால், வாசகர்களுக்கு சற்று அயற்சியை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது.
சேரர், சோழர், பாண்டியர்கள் மட்டுமின்றி கடையேழு வள்ளல்களும்கூட பறையர் இனத்தைச் சேர்ந்தவர்களே என்கிறார், நூலாசிரியர். குறிஞ்சி நிலம், பாறைகள் நிறைந்தது. பாறைகள் நிறைந்த பகுதியில் ஆட்சி செய்த மன்னர்களை ‘பாறையர்’ என்றும் அதுவே பின்னாளில் பறையர் என்றும் மருவியதாகச் சொல்கிறார்.
அந்தக் கணக்கின்படி அவர் சங்ககால மன்னர்கள் யாவருமே பறையர் என்ற பட்டியலுக்குள் சேர்த்துக் கொண்டதை சரியான தர்க்கமாகக் கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. அந்தளவில் இந்த ஆய்வு நூல் சற்று போதாமையுடன் இருக்கிறது.
மற்றோர் இடத்தில், சோழ மன்னர்களை ‘பரகேசரி’ என்றும் அழைப்பார்கள் (பக். 44) என்கிறார். பரகேசரி என்ற சொல் வாயிலாக சோழ அரசர்கள் பறையர் என்று நிறுவ முயற்சிக்கிறார். பரகேசரி என்ற சொல்லின் அர்த்தம் தெரியாமல் அவர் அப்படி கருதி இருக்கலாம் என்பது என் கருத்து.
ராஜகேசரி, பரகேசரி என்பது சோழ அரசர்களுக்கு வழங்கப்படும் பட்டப்பெயர்களே. ராஜகேசரி என்றால் ‘அரசர்களுக்கெல்லாம் சிங்கம்’ போன்றவன் என்பதும், பரகேசரி என்றால் ‘அயலக அரசர்களுக்கு சிங்கம் போன்றவன்’ என்ற பொருளில் அத்தகைய பட்டப் பெயர்கள் மொழியப்பட்டுள்ளன. ஆனால், அந்தச் சொல்லும் மருவி, பறையர் ஆனதாகச் சொல்வது ஏற்பதற்கில்லை.
பெரும்பாலும் மேற்கோள்களாகவே கடந்து செல்வதால், நூலாசிரியர் இன்னும் கொஞ்சம் கள ஆய்வை மேற்கொண்டிருக்கலாம். எனினும் பறையர் வரலாறு பற்றிய ஆரம்பக்கட்ட தகவல் திரட்டாக இந்நூலைக் கருதலாம்.
நூல்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு
வெளியீடு: கலகம் வெளியீட்டகம்
பக்கம்: 190 விலை: ரூ.200.
தொடர்புக்கு: 9597654190.

25 கருத்துகள்:

  1. சாம்பவர்கள் பறையர் இல்லை என்பது தான் உண்மை. ஏன் என்றால் சாம்பல் தீவில் இருந்து வந்தவர்கள். இவர்களது குல தொழில் என்ன என்று இன்றளவும் தெரியாது சாம்பவரின் தமிழ் உச்சரிப்பு குமரி மாவட்டத்தில் வசித்து வரும் மக்களிடம் இருந்து சற்று வித்தியாசமாக இருக்கும். இங்குள்ள பறையர் கலாச்சாரம் மற்றும் சடங்கு முறைகள் அடிப்படையில் ஒரு ஒற்றுமை கிடையாது. இத்தகவல் ஒரு குறிப்பில் இருந்து எடுக்கப்பட்டதாகும் பாதுகாப்பாய் மார்த்தாண்டம்கல்லூரியில்உள்ளது .நேச மணி கல்லூரி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சாம்பவ பறையன் தான்.. நீங்கள் சொல்வது என்னால் ஏற்று கொள்ள முடியாது.. தென் மாவட்டத்தில் வாழும் சாம்பவ பறையர் வேளாண்மை செய்யும் சாம்பவ குல வேளாளர் ஆவார்

      நீக்கு
    2. போய் சிலப்பதிகாரம் படியுங்கள்
      சாம்பவர்கள்🔥பறையர்கள்🔱தான்
      பறையர்கள்🔱சாம்பவர்கள்🔥தான்
      ஆதாரம் : சிலப்பதிகாரம் சொல்லும் “பறையூர்🔱நான் மறையோர்”🔱 சாம்பவ குலத்தாரே!
      சிலப்பதிகாரம் சொல்லும் "பறையூர் நான் மறையோர்" சாம்பவ🔱
      சேரன்🏹அவையில் "சாக்கையன்" சிவபெருமான்🔱 ஆடிய கொட்டிச் சேதம் என்னும் கூத்தை ஆடிக் காட்டினான். சிவபெருமான்🔱 உமாதேவியை இடப்பாகத்தில் தாங்கியபடி ஆடிய கூத்து 'கொட்டிச் சேதம்' ஆகும்.சிலம்பில் இக்கூத்தை ஆடியவன் பறையூரைச்🔱சேர்ந்தவன் என்றும், அவ்வூர் நான்மறையோரைக்🔱கொண்டதென்றும் சிலப்பதிகாரம் செப்புகிறது.
      பரையர்🔱குல சோழ🐅மன்னரான👑 🔥"பிறவிடை சாம்பான்"🔥 என்பாரது சமாதியே தஞ்சை பெருவுடையார் கோவில்🛕
      May 01, 2019
      தமிழக அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட " *இடங்கையர் வலங்கையர் சரித்திரம்* " என்னும் நூலில் இது ஆதாரபூர்வமாக உள்ளது வலங்கையர் வரலாறு ( டி 462 ) என்னும் சுவடியில்" *பிறவிடை சாம்பான்* "🔥 மன்னரது👑வரலாறு விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
      இந்த சுவடிகள்📝📚 இன்றும் தமிழ்நாடு கீழ்த்திசை சுவடிகள் நூலகத்தில் பாதுகாக்கப்படுகிறது சுவடி📜கூறும் வரலாறு *ராவணன்👑என்னும் மல்லியை பெருமானுக்கு🤴மூன்று மகன்கள் இருந்தனர்* .
      1)சாம்புகன்🔱⚔️🔥
      2)பிறவிடைசாம்பான்🔱⚔️🔥
      3)தியாகன்⚔️🔥
      என்னும் தியாகச் சாம்பான்🔱🔥

      இவர்கள் அக்கால சோழ🐅மண்டலத்தில் சிறிய கோட்டை🏰கட்டி பழங்குடி மன்னர்களாக*👑⚔️ வாழ்ந்துள்ளனர் பிறவிடை சாம்பானது கோட்டை " *விளாறுகோட்டை* "🏰 அதுவே பின்னாளில் 'விளாரிகோட்டை'🏰 என்று திரிந்தது என்கின்றனர். இந்த கோட்டை🏰 *வெண்கலத்தாலும் இரும்பு தூண்களாலும் மண்ணாலும் கட்டப்பட்டது* என்றும் அதனால் இக்கோட்டையானது🏰 என்றும் 'மலாரிகோட்டை"🏰என்றும் வழங்கப்பட்டது சோழ🐅மன்னன்👑 "பிறவிடை சாம்பான்"🔱மரித்த🪦⚰️ பின் இந்த கோட்டையில்🏰தகனம் செய்யப்பட்டான் .
      *கணவன் மரித்த துயரத்தில் அவனது மனைவி பெரிய நாயகியும்* அவ்விடத்திலே தீ🔥குளித்து இறந்தால்🪦 "பிறவிடை சாம்பான்"🔱 மரணித்த🪦⚰️ அந்த இடத்திலே ஒரு *வேப்ப மரமும்🌳ஒரு அரசமரமும்🌳வைத்து திண்ணை அமைத்து இரண்டு செங்கல்🧱🧱 வைத்து* அவர்களை✨"தெய்வமாக"✨🪔 அந்த ஊர் மக்கள் வணக்க🙏🏻துவங்கினர்.
      *அந்த இடத்திலே நந்தவனமும் கிணற்று தண்ணீர் 💧பந்தலும் பிற்காலத்தில் அமைக்கபட்டது* பிற்காலத்தில் "பரகேசரி🔱சோழ🐅 மாமன்னர்"👑 இவ்விடத்திற்கு வந்த பொழுது "பிறவிடை சாம்பான்"🔱தகனம் செய்யப்பட்ட🪦 *அவ்விடத்தின் சிறப்பை கேட்டு இரண்டு நாள் அங்கு தங்கினார்* அவ்வாறு 🔱"பரகேசரி மாமன்னர்"👑 *அங்கு தங்கும் பொழுது "பிறவிடை சாம்பனும்"🔱அவரது மனைவி "பெரிய நாயகியும்" பரகேசரி🔱 மாமன்னர்👑கனவில் தோன்றி அவ்விடத்தில் அவர்களுக்கு திருப்பணி செய்யுமாறு கூறினார்* என்றும் பரகேசரி🔱 மன்னர்👑 அவ்விடத்தில் வேண்டிய காரியம் கைகூடியதால்
      அதன் பேரில் அவ்விடத்திலேயே "பிறவிடை சாம்பானுக்கு🔱 கோவில்"🛕 *கோவில் எழுப்புவதாக 🛕 பிரதிக்கினை செய்ததை இச்சுவடி📜 குறிப்பிடுகிறது* .
      பின்னாளில் தான் எடுத்த பிரதிக்கினை நிரைவேற்றும் விதமாக
      விவசாய பூமியாய்🌾🌱 இருந்த பகுதியில் சுற்றிலும் மதில் எழுப்பி 🧱 கோபுரம் வைத்து🛕 "பிறவிடைசாம்பானுக்கு"🔱 உலகம் வியக்கும் வகையில் பெரிய கோவிலை🛕 காட்டினார் அக்காலத்தில் " *பிறவிடை சாம்பான் கோவில்* "🔱🛕 என்று அழைக்கபட்ட இக்கோவிலானது பின்னாளில் " *பெருவிடை நயினார் கோவில்* " 🛕என்று பெயர் மாற்றி பூசிக்கப்பட்டது என்றும் அதுவே பிற்காலத்தில் "வடுக தெலுங்கு மன்னர்கள்" கட்டுப்பாட்டில் " *பெருவிடை ஈசுவரன் கோவில்* "🛕 என்று அழைக்கப்பட்டதாகவும் மராட்டிய மன்னர்கள் கட்டுப்பாட்டில் வந்தபொழுது
      முழுக்க வடமொழியில் திரிந்து " *பிரகதீஸ்வரர் கோவில்* " 🛕என்று வழங்கப்படுகிறது என்று அறிய முடிகிறது படையெடுப்புகள் பல நிகழ்ந்தாலும் பெயர்கள் வடமொழியில் திரிந்தாலும் *பரையர்🔱குல மன்னர்👑 "பிறவிடை சாம்பான்" 🔱 அவர்களது புகழ் கதிரவன் போல் 🌅 இன்றும் என்றும் மறைக்க முடியாமல் நிலைத்திருக்கிறது* ....!!!
      நூல்: தமிழ்நாடு கீழ்த்திசை சுவடிகள்📜 பதிப்பகம் வெளியிட்ட
      "இடங்கையர் வலங்கையர் வரலாறு"
      *வாழ்க பறையர்🔱பேரினம்,
      வளர்க சாம்பவர்🔱குல ஒற்றுமை*

      நீக்கு
  2. சாம்பவர்கள் பறையர் இல்லை என்பது தான் உண்மை. ஏன் என்றால் சாம்பல் தீவில் இருந்து வந்தவர்கள். இவர்களது குல தொழில் என்ன என்று இன்றளவும் தெரியாது சாம்பவரின் தமிழ் உச்சரிப்பு குமரி மாவட்டத்தில் வசித்து வரும் மக்களிடம் இருந்து சற்று வித்தியாசமாக இருக்கும். இங்குள்ள பறையர் கலாச்சாரம் மற்றும் சடங்கு முறைகள் அடிப்படையில் ஒரு ஒற்றுமை கிடையாது. இத்தகவல் ஒரு குறிப்பில் இருந்து எடுக்கப்பட்டதாகும் பாதுகாப்பாய் மார்த்தாண்டம்கல்லூரியில்உள்ளது .நேச மணி கல்லூரி

    பதிலளிநீக்கு
  3. புத்தகம் வேண்டும். மேலும் எனது சொந்த ஊரில் வீரபாகு சாம்பவர் வாழ்ந்ததர்கான ஆதாரம் இன்றும் உள்ளது.

    பதிலளிநீக்கு
  4. பரகேசரி என்பது பரையர் குல சிங்கம் என தமிழ் அகராதி என பொருள் தருகிறது அதை ஏற்று கொள்ள மாட்டார்கள் அதையும் தான்டி புதுக்கோட்டை திருமயம் கல்வெட்டில் சோழ சிங்க பரையர் குடி என கல்வெட்டில் குறிக்கபட்டுள்ளது, புதுக்கோட்டை குடுமியான்மலை கல்வெட்டில் சோழகோன்பரையன் மகன் சூரண்டா என்பவர் நாட்டுக்காவல் செய்த குறிப்பு உள்ளது கோவை மாவட்டம் இடிகரையிலிருக்கும் சிவன் கோவில் கல்வெட்டில் சோழன் பரையனான தனபாலன் என சனத்துக்கு அதிபதியான உத்தமசோழன் பரையன் என்றே அடையாளபடுத்த படுகிறார் தொடர்ச்சியாக இது போன்ற சான்றுகளை 14நூற்றாண்டு வரை காட்ட முடியும் இடங்கை வழங்கை புராணம் நந்தனை சோழ சிற்றரசனாக கூறுகிறது அவனுடைய கோட்டை கும்பகோணத்திற்கும் தஞ்சாவூருக்கும் இடையில் பட்டீஸ்வரம் எனும் ஊரில் இருந்ததாக வேதநாயகம் சாஸ்திரி தொகுத்த அந்த இடங்கை வலங்கை வரலாறு கூறுகிறது குலோத்துங்கசோழன் பட்டீஸ்வரம் அரண்மனை சென்று வந்ததை குடவாசல் பாலசுப்பிரமணியன் போன்ற கல்வெட்டு ஆய்வாளர்கள் அதை பதிவு செய்திருக்கிறார்கள் சாம்பவர்கள் எனும் பரையர்கள் சம்புவராயர்களாக சோழர் ஆட்சிக்கு உட்பட்டு சிற்றரசர்களாக இருந்திருக்கிறார்கள் இவர்கள் சில கல்வெட்டில் சம்புராப்பரையன் எனவும் குறிக்கபட்டுள்ளனர் கொங்கு பகுதி பரையர்களில் அன்னமார்களுக்கு தளபதியாக இருந்த வீரபாகுசாம்புவன் குறிக்கபடுகிறார் பாண்டியர்களுடன் சம்புவராயர்கள் அரசியல் காரனங்களுக்காக இனைந்திருக்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியென்றால் ஒட்டுமொத்த சாதிகளும் பறை என்ற குடியில் அடங்கும் போல இருக்கே?! அப்போ கவுண்டர்களும் பறையர்தானா?

      நீக்கு
    2. ஆம் பறையர்களுக்கும் வெள்ளாழ காமுண்டர் (கவுண்டர்) பட்டம் உண்டு என்னிடம் ஆதாரம் உள்ளது...பறை அடித்ததால் பறையர் இல்லை பரையர் பறை இசை கருவிகளை உருவாக்கியதால் அந்த கருவிக்கு பறை‌ என்று பெயர் வைத்தார்கள்

      நீக்கு
  5. பரகேசரி என்பது பரையர் குல சிங்கம் என தமிழ் அகராதி என பொருள் தருகிறது அதை ஏற்று கொள்ள மாட்டார்கள் அதையும் தான்டி புதுக்கோட்டை திருமயம் கல்வெட்டில் சோழ சிங்க பரையர் குடி என கல்வெட்டில் குறிக்கபட்டுள்ளது, புதுக்கோட்டை குடுமியான்மலை கல்வெட்டில் சோழகோன்பரையன் மகன் சூரண்டா என்பவர் நாட்டுக்காவல் செய்த குறிப்பு உள்ளது கோவை மாவட்டம் இடிகரையிலிருக்கும் சிவன் கோவில் கல்வெட்டில் சோழன் பரையனான தனபாலன் என சனத்துக்கு அதிபதியான உத்தமசோழன் பரையன் என்றே அடையாளபடுத்த படுகிறார் தொடர்ச்சியாக இது போன்ற சான்றுகளை 14நூற்றாண்டு வரை காட்ட முடியும் இடங்கை வழங்கை புராணம் நந்தனை சோழ சிற்றரசனாக கூறுகிறது அவனுடைய கோட்டை கும்பகோணத்திற்கும் தஞ்சாவூருக்கும் இடையில் பட்டீஸ்வரம் எனும் ஊரில் இருந்ததாக வேதநாயகம் சாஸ்திரி தொகுத்த அந்த இடங்கை வலங்கை வரலாறு கூறுகிறது குலோத்துங்கசோழன் பட்டீஸ்வரம் அரண்மனை சென்று வந்ததை குடவாசல் பாலசுப்பிரமணியன் போன்ற கல்வெட்டு ஆய்வாளர்கள் அதை பதிவு செய்திருக்கிறார்கள் சாம்பவர்கள் எனும் பரையர்கள் சம்புவராயர்களாக சோழர் ஆட்சிக்கு உட்பட்டு சிற்றரசர்களாக இருந்திருக்கிறார்கள் இவர்கள் சில கல்வெட்டில் சம்புராப்பரையன் எனவும் குறிக்கபட்டுள்ளனர் கொங்கு பகுதி பரையர்களில் அன்னமார்களுக்கு தளபதியாக இருந்த வீரபாகுசாம்புவன் குறிக்கபடுகிறார் பாண்டியர்களுடன் சம்புவராயர்கள் அரசியல் காரனங்களுக்காக இனைந்திருக்கலாம்

    பதிலளிநீக்கு
  6. சாம்பவ குல வேளாளர்கள்...
    அருமை...

    பதிலளிநீக்கு
  7. எனது தாத்தா , பாட்டனார், எழுதிய பழைய பாத்திரங்களிலும் சாம்பான் என்று குறிப்பு உள்ளது ்்்்்

    பதிலளிநீக்கு
  8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  9. புத்தகம் வேண்டும் எவ்வாறு பெறுவது..
    my email revanthpal8@gmail.com

    பதிலளிநீக்கு
  10. சோழர்களும்🐅பறையர்கள்🔱தான் ஆதாரம் ✨
    பறையர் கல்வெட்டு ஆய்வு துறை,...
    திருச்சிராப்பள்ளி மாவட்டம் வடசேரி கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் காணப்படும் 'கோபறகேசரி🔱' உடையார் ஸ்ரீகுலோத்துங்க சோழர்🐅 காலத்திய கல்வெட்டில் நீர் ஆதாரத்தை உருவாக்கித்தந்த மாமன்னரான ✨"வீர சோழ பரையன்"🔱 குலோத்துங்க சோழர்🐅 பற்றிய செய்தி குறிப்பு.
    கல்வெட்டு :

    1. ஹஷிஸ்ரீ கோவி

    2. ராசகேசரி பன்மகி

    3. யாண்டு அ வது

    4. மேன்காகுள நெல்லு

    5.கலத்து [வா] நாழியும் குள

    6. செயும் முதியக்குடான் க

    7. ண்ட சாத்தன்🔴வீரசோழப் பே

    8. ரையன்🔴வச்ச தந்மம் இது இற

    9. க்குவான் குளம் அழிச்சான் பா

    10. வம் கொள்வான்

    பதிலளிநீக்கு
  11. பரகேசரி🔱கோப்பரகேசரி🔱 பறையர் குல சிங்கம் 🦁 என்று பொருள்
    சிலர் அதை எதிரிக்கு/பகைவன்கு சிங்கம் 🦁 போன்றவர் அதை பறையர் அல்ல என்று சுய சாதி வெறியோடு இருகிறார்கள்
    கேசரி என்றால் சிங்கம் 🦁
    அப்போது பர என்றால்? பகைவனா? எதிரியா? போர் என்றால் பறையர் அல்லது பரையர் என்று பொருள்

    பதிலளிநீக்கு
  12. பற என்றால் உயர்ந்த சிறந்த மேன்மையான என்று பொருள். இது என்னுடைய சொந்த கருத்து இல்லை. தமிழ் இலக்கணம், மொழி இலக்கணம், சொல் இலக்கணம். மொழியியல் விஞ்ஞானம்.

    உங்களுக்கு தெரிந்த தமிழ் இலக்கியம் இலக்கணதில் சிறந்த மொழி ஆளுமையுள்ள தமிழ் புலவர்கள் யாரவது இருந்தால்,

    பற என்பதை பிரித்து பொருள் கூற சொல்லுங்கள்.

    ப - பெரிய சிறந்த உயர்ந்த
    ற - ஆளுமை அரசு அறம்

    ஆதியில் பெரிய பெரிய வார்த்தைகள் கிடையாது. ஒரே ஒரு எழுத்து பல தன்மைகளை வியக்கும்.

    பற அய்யன் என்றால் ராஜன் அறம் ஓதுபவன் என்று அர்த்தம்.

    ஆனால் பற அய்யன் என்றால் பறை அடிப்பவன் என்று எந்த திருட்டு ராஸ்கல் தமிழ் புலவன் கண்டு பிடித்து வெள்ளைக்காரன் கிட்ட சொல்லி தமிழ் அகராதியில் போட்டான்னுதான் தேடிக்கிட்டு இருக்கோம்

    பதிலளிநீக்கு
  13. அகராதி என்னும் நூலை இயற்றியவர் யார் தெரியுமா? வீரமாமுனிவர் அவன் தமிழன் இல்லை கான்ஸ்டான்டினோ கியூசெப் பெஸ்கி

    பதிலளிநீக்கு
  14. விழுப்பரையர் நாடு
    ---------------------------------

    விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை சந்திரமௌலீஸ்வரர் கோயிலில் உள்ள கல்வெட்டுகள் "விழுப்பரையர் நாடு" என்பதைப் பற்றியும், அந்த விழுப்பரையர் நாட்டை சோழர் காலத்தில் அரசாட்சி செய்த "விழுப்பரைய நாடாழ்வான்" பற்றியும் குறிப்பிடுகின்றன.

    திருவக்கரை சந்திரமௌலீஸ்வரர் கோயிலில் உள்ள முதலாம் குலோத்துங்கச் சோழனின் மகனான விக்கிரம சோழனின் (கி.பி.1121) கல்வெட்டு ஒன்று "விழுப்பரைய நாட்டு மெயூர்" என்று குறிப்பிடுகிறது. அதாவது விழுப்பரைய நாட்டில் இருக்கும் ஓர் ஊரான மெயூர் என்று குறிப்பிடுகிறது.

    இந்த சான்றின் மூலமாக தெரியவரும் செய்தி என்னவென்றால், 900 ஆண்டுகளுக்கு முன்பாகவே "விழுப்பரைய நாடு" என்ற ஒரு நாடு இருந்தது என்பதாகும். இன்று இந்த "விழுப்பரைய நாடு" என்ற பெயரானது பெயர் மருவி "விழுப்புரம்" என்று வழங்கப்படுகிறது. விழுப்புரம் இன்று ஒரு மாவட்டமாக தமிழகத்தில் விளங்கிவருகிறது.

    இந்த விழுப்பரைய நாட்டை அரசாட்சி செய்தவர்கள் "விழுப்பரைய நாடாழ்வான்" என்றும் "விழுப்பாதிராசன்" என்றும் சோழர் காலத்தில் வழங்கப்பட்டனர். போரில் விழுப்புண் பெற்ற அரையர்களை "விழுப்பரையர்" என்று குறிப்பிடப்பட்டனர் போலும். திருவக்கரை சந்திரமௌலீஸ்வரர் கோயிலில் உள்ள சோழப் பெருவேந்தன் அதிராஜேந்திரனின் கல்வெட்டு (கி.பி.1069) ஒன்று :-

    "ராஜெந்திர சொழவளநாட்டுப் பனையூர் நாட்டு பொய்பாக்கத்து குடிப்பள்ளி குமாரிசெந்தனாந ஜயங்கொண்ட சொழ விழுப்பரைய நாடாழ்வான்" (S.I.I. Vol-XVII, No.227).

    என்று குறிப்பிடுகிறது. ஜெயம்கொண்ட சோழ விழுப்பரைய நாடாழ்வானின் மரபினர், அதே திருவக்கரை சந்திரமௌலீஸ்வரர் கோயிலில் உள்ள முதலாம் குலோத்துங்கச் சோழனின் கல்வெட்டில் (கி.பி.1097) :-

    "ராஜெந்திரசொழ வளநாட்டுப் பனையூர் நாட்டுப் பொய்கைபாக்கத்துக் குடிப்பள்ளி செந்தன் நாகநாந ராஜெந்திரசொழ விழுப்பாதிராசநெந்" (S.I.I. Vol-XVII, No.223).

    என்று குறிப்பிடப்பட்டுள்ளார்கள். திருவக்கரை கல்வெட்டுகள் மிகத் தெளிவாக "விழுப்பரைய நாட்டை ஆட்சி செய்பவன்" என்றும் "விழுப்பாதி ராசன்" என்றும் தெரிவிக்கின்றன.

    இந்த விழுப்பரையர் நாட்டை சேர்ந்தவர் தான் மழவரையரின் மகள் செம்பியன் மாதேவியார் என்று தெரியவருகிறது. இந்த ராணியம்மையாரின் மகன் உத்தமச் சோழனின் (973 - 985 A.D) பட்டத்தரசியார் "கிழானடிகள்" அவர்கள் விழுப்பரையரின் மகள் என்பதை சான்றுகள் தெரிவிக்கின்றன.

    விழுப்பரையரின் மகள் கிழானடிகள் அவர்கள் உத்தம சோழனின் அரசியர்களுள் ஒருவர் ஆவார். அரசியார் கிழானடிகள் அவர்களை, முதலாம் ராஜராஜ சோழனின் கல்வெட்டு ஒன்று ''மழவரையர் மகளார் கிழானடிகளார்'' என்று தெரிவிக்கிறது :-

    ''ஸ்ரீ கண்டராதித்த தேவர் திருமகனார் ஸ்ரீ உத்தம சோழ தேவர் தேவியார் மழவரையர் மகளார் கிழானடிகளார்''

    கிழானடிகளின் தந்தையார் அவர்கள் ''விழுப்பரையர்" என்றும் "மழவரையர்'' என்றும் குறிப்பிடப்பட்டார் என்று தெரியவருவதால் இவை இரண்டும் ஒன்றே என்பது தெளிவாகும். அதாவது, விழுப்பரையர் என்பதும் மழவராயர் என்பதும் ஒன்றாகும். விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் ''திருவக்கரை மழவராயர்'' என்ற அரசமரபினர்கள் அரசாட்சி செய்ததை சான்றுகள் நமக்கு தெரிவிக்கின்றன :-

    திருவக்கரை உடைய நயினார் ஸ்ரீ பண்டாரத்தாரும் (1515 A.D)

    எங்குமாய் நின்றார் மழவராயர் (1526 A.D)

    திருத்தாண்டவமுடைய மழவராயர் (1531 A. D)

    நயினார் வசவப்ப மழவராயர் (17th century A.D)

    திருவக்கரை சிதம்பர மழவராயர் (17th century A.D)

    திருவக்கரை வல்லவ நாட்டு மழவராய பண்டாரத்தார் (வில்லியனூர் செப்பேடு, கி.பி.1641).

    விழுப்புரம் பகுதியில் மழவர் பெயர்தாங்கிய ஊர்கள் இன்றும் இருக்கின்றன என்பதாகும். சோழ நாட்டின் காவிரிக்கரையில் இருந்து, விழுப்புரம் மாவட்டம் பெண்ணையாறு வரை இருந்த சிலை வீரர்கள் (மழவர்) வில்லுக்கு ஒரு பணம் வரி செலுத்தினார்கள் என்பதை ஆடுதுறை கல்வெட்டு தெரிவிக்கிறது.

    மழவரையர் பெற்ற செம்பியன் மாதேவியார் அவர்களின் மருமகள் தான் "கிழானடிகள்" ஆவார். தன்னுடைய தந்தையார் குடும்பத்தில் இருந்து செம்பியன் மாதேவியார் அவர்கள் தனது மகனுக்கு திருமணம் செய்ய பெண் எடுத்தார் என்பது தெளிவாகும். செம்பியன் மாதேவியார் அவர்கள் செய்த இறுதி திருப்பணி என்பது திருவக்கரை கோயில் திருப்பணியாகும்.

    செம்பியன் மாதேவியார் அவர்கள் தனது இறுதி காலத்தை, தான் பிறந்த விழுப்பரைய நாட்டு திருவக்கரையில் கழித்திருக்க வாய்ப்பிருக்கிறது என்பதாகும்.

    #பரையர்_kalvettu

    பதிலளிநீக்கு
  15. Viluppuram is named after a class of people🔥 known as"Vizhupparaiyar"(விழுப்பரையர்)🔱. One of the famous Tamil poets Jayamkondar wrote a book titled "Karanai Vizhupparaiyan🔱 madal"(also known as🔥Aadhinatha Valamadal) on the praise of🔱Aadhinathan Vizhupparaiyan🔱 who was a commander⚔️ in the army✨ of Kulottunga🐅Chola I. The town came to known after the "Vizhupparaiyan🔱" sect named after him. They are also known as "Vizhupaadharaiyar"🔱.Viluppuram is also affectionately called as "Vizhimaa Nagaram" (விழிமா நகரம்) in Tamil. It means a town with wide-eyed👁️👁️people.அரையர் பரையர் பறையர் இவை தான் ஆதி 🔱 குடிகள் ஆதி திராவிடர்களின் உண்மையான பெயர்கள் இவர்களுக்கு பகடை பிள்ளை வேளாளர் வன்னியர் பள்ளி சத்திரியர் என்று பட்ட பெயர்கள் உண்டு என்னிடம் ஆதாரம் இருக்கிறது 👍✨

    பதிலளிநீக்கு
  16. ஜெயங்கொண்டார் காமம் பாலியல் நூல் 🔥படைத்தளபதி🔥விழுப்பரையன்🔱🔥
    தமிழின் ஒரே லோகாயத நூல் : காராணை விழுப்பரையன்🔱🔥 மடல்.
    கடவுள் மறுப்பு தத்துவமான லோகாயதம் (Lokayata) பேசுகிற ஒரே தமிழ் இலக்கியம் "காராணை விழுப்பரையன்🔱🔥 மடல்" . இது காமத்தைப் பாடுபொருளாக கொண்ட அக இலக்கியம். 🔥குலோத்துங்க சோழனிடம் 🔥அமைச்சராகவும், படைத்தளபதி🔥 ஆகவும் இருந்த காரணி (சீர் கருணீகர்) 🔥ஆதிநாதன்🔥 மீது "கலிங்கத்துப் பரணி பாடிய ஜெயங்கொண்டார்" இயற்றிய நூல் இது. ஓலைச்சுவடியாக இருந்த இவ் அரிய நூலை" நாசா விண்வெளி ஆய்வு மையத்தில்" பணியாற்றும் திரு. நா. கணேசன் அவர்களால் சமீபத்தில் முதன்முதலாக அச்சில்📝 பதிப்பிக்கப்பட்டது.
    "விழுப்பாதராயன்" 🔱
    🔥(பிரம்ம க்ஷத்திரியன்/சத்திரியன்)⚔️
    பெயரிலேயே "விழுப்புரம்🔥🔱 (விழுப்பரைய புரம்) "🔱🔥 என்ற நகரின் பெயர் உருவானது.
    இவர்கள் வழி வந்தவர்களில் சிலர் பாண்டிய🦈🦈நாட்டிற்கு கணக்குப் பிள்ளைகளாக சென்றார்கள் என்றும் கூறப்படுகிறது.
    காரணை என்பது ஊர். 🔥விழுப்பரையன்🔱கடற்படையை 🌊🛶வழிநடத்தியவர்

    பதிலளிநீக்கு
  17. 🔱தங்கலான்🔥பறையர்🔱
    In general, Thangalaan ✨ might mean leader👑of a race, guardian🔱, warrior🔥of the frontier or protector✨of the people. But it is being said that the makers have specifically extracted this name from the 'Census of British India', released by the British Indian government in 1881.
    It is said that the census contains 84 sub-divisions of the Paraiyar🔱community and
    🔥'Tangalan Paraiyan'🔱 is listed as the 59th Tamil-speaking Paraiyar🔱 ethnic group. The movie's title is said to have derived from here. The communities are named after the job of the people. It was these aborigines who did the labour of mining gold🟡 in the ✨Kolar gold fields✨KGF
    The people from this depressed community are known for their hard work and⚔️warlike🔥 nature against the oppressors. Recently, the movie team launched a glimpse video of Thangalaan🔥 and Chiyaan Vikram's peculiar hairstyle in it turned many heads. The certain hairstyle is said to be based on the hairstyle of South Indian Tribal 🔱 Communities of the tamilan🔱 race in the early 19th century.

    பதிலளிநீக்கு