ஞாயிறு, 23 ஜூன், 2019

திருக்குறுங்குடி

#திருக்குறுங்குடி .....


திருநெல்வேலில இருந்து 45 கிலோமீட்டர், கன்னியாக்குமரியில் இருந்து 45 கிலோமீட்டர் தூரத்துல இருக்க ஒரு சின்ன ஊர்.

        முழுக்க முழுக்க விவசாயம்தான் ஊரோட பிரதான தொழில். ஊர சுத்தி நெல் வயலும், வாழைதோப்பும் தான்..
 
கொடுமுடியாறு அணை, ஆறு, குளம், கால்வாய் என ஊரே பசுமையாய் காட்சி தருகிறது.

நல்ல அகலமான தெருக்களுக்கு நடுவுல இருக்கு "அழகிய நம்பிராயர் கோவில்"

ஊருக்கு நடுவே அந்த காலத்திலே 6அடி உயரத்திற்க்கு மண் இட்டு கோவில் எழுப்பியிருக்கிறார்கள்.

கோவில் முழுக்க கல்தூண்கள், கற்கள் கொண்டு எழுப்பப் பட்டதால், எவ்வளவு வெயில் அடித்தாலும் கோவில் உள்ளே குளுமையாகவும், நல்ல காற்றோட்டத்துடன் இருக்கிறது.

30 அடி உயர மதில்சுவர், தெப்பகுளம், கோவில் உள்ளே 20 அடி ஆழத்தில் நீர் ததும்பும் கிணறு என மிகப்பெரும் உள்கட்டமைப்பு வசதியோட கோவில் வடிமைக்கப்பட்டுள்ளது.

கோவில் என்பது மதத்தை பற்றி மட்டும் சொல்லாமல் அந்த கால மக்களின் திறமை பண்பாடு, அறிவியல், உறவுமுறை, வாழ்வியல் என பல விஷயங்கள அந்த கோவில் சிற்பங்கள் பேசுது..

சாமி சிலைகளை விட சாதாரண குடிமக்கள் சிற்பங்கள்தான் அதிகம்.

குறவப்பெண், அரக்கன், முனிவர், போர்வீரன், பணிப்பெண் என சமகால சரித்தித்தை சொல்கிறது.

மனிதர்கள் மட்டுமின்றி யானை, சிங்கம், யாளி, குதிரை, பாம்பு, ஒட்டடகம், குரங்கு, ஆமை, மயில்,  அன்னம், கிளி என பறவை பட்சிக்கும் சிற்பங்கள் உள்ளன.

குதிரையின் மூக்கனாங்கயிறு, மனிதகால் நகம்,  கால்நரம்புகள்,  தலைமுடி என தத்ரூபமாய் இருக்கிறது.

ஒவ்வொரு சிலைகளும் 7 அடி உயரத்தில் அதிசயிக்க வைக்கிறது. அந்நாளைய அணிகலன், ஆபரணம், கூடைகள் என வரலாறு சொல்லி செல்கிறது.

கால் தண்டை, வில்அம்பு என தொட்டு பார்க்கும்போதே அதன் உயிர்பை உணரலாம்.

பாகுபலி கிராபிக்ஸ் பார்த்து வாய்பிளந்த நாம் இதுபோன்ற உண்மையான பிரமாண்டத்தின் அருமை உணர்வதில்லை..

ஒவ்வொரு சிற்பத்தின் பிண்ணனியிலும் சில கதைகளும் பல விஞ்ஞான உண்மைகளும் ஒளிந்திருக்கின்றன.

இப்போதுள்ள அரசு நிர்வாகம் போல் அல்லாமல், அந்நாளைய ஆலய பணிகளை மன்னனும் மக்களும் செய்வேனே செய்ததால்தான், இத்தனை ஆயிரம் ஆண்டுக்குப் பின்னும் கம்பீரமாய் நிற்கிறது.

கோவிலின் வயது 5000 ஆண்டு என்கிறார்கள், பல்லாயிரம் ஆண்டுக்கு முன்பே தமிழனின் சிற்ப்பக்கலையும், விஞ்ஞான அறிவும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

கோவில் கோபுரத்திலும் சிற்ப்பங்களுக்கு பஞ்சமில்லை.

எத்தனை மன்னாதி மன்னன், அறிஞன், ஞானி, சித்தர்கள் என பல ஆயிரம் தலைமுறையை பார்த்து கொண்டு இன்றும் நிற்கிறது.

வாழ்ந்தவன், தாழ்ந்தவன் அழிந்தவன் என இன்று நம்மையும் பார்த்துக் கொண்டு இருக்கிறது.

இந்த காலத்திலும் நம்ம பக்கத்தில் இருக்கும் இதுபோன்ற பொக்கிஷங்கள் பெருமைகளை உணர்ந்து அடுத்த சந்ததிக்கு உணர்த்துங்கள்.

இதுமாதிரியான பழமை வாய்ந்தவை எல்லாம் நம் நாட்டின் ஒளிகுன்றா செல்வங்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக