திங்கள், 28 அக்டோபர், 2019

தீபவதி நதிக்கரையில் துவங்கிய, தீப ஒளி(தீவாளி)திருநாள் பண்டிகை


தீபவதி நதிக்கரையில் துவங்கிய, தீப ஒளி(தீவாளி)திருநாள் பண்டிகை!

தென்னிந்திய சமூகப் புரட்சிக்கு தந்தையென அறியப்படும், அயோத்தி தாசப் பண்டிதர், பல்வேறு இலக்கியச் சான்றுகளை ஆராய்ந்து, அதன் வழியே தீப ஒளி திரு விழாவுக்கான உண்மையை வெளிக் கொணர்ந்தார்.

முன்பு, பௌத்தம் இந்தியா முழுவதும் மக்களால் பின்பற்றப்பட்டு வந்தது. இதன் மூலம் மக்களின் வாழ்வை பௌத்தம் வளமாக்கியது. எனவே, பௌத்தத்தை பரப்புவதற்காக பௌத்த பிக்குகள் இந்தியா முழுவதும் சென்று, மக்களுக்கு பௌத்தத்தை போதித்தது மட்டுமின்றி, பௌத்த மடங்களான விகார்களிலிருந்தும் தம்மம் குறித்து போதித்து வந்தனர்.

பௌத்த விகார் என்றழைக்கப்படும், பௌத்த மடங்களில் தங்கியிருக்கும் பிக்குகள் போதனை மட்டுமின்றி மருத்துவம், அறிவியல், வானவியல், வேளாண்மை உள்ளிட்ட ஆய்வுப் பணிகளையும் மேற்கொண்டனர். அந்த ஆய்வின் முடிவுகளையும், கண்டுபிடிப்புகளையும் மக்களிடமும் கொண்டு சேர்த்தார்கள்.

மக்களிடம் விரைவாகச் சேர்ப்பதற்காக, தாங்கள் தங்கியிருக்கும் மடம் அமைந்துள்ள நாட்டின் அரசனிடம் முறையான சான்றுகளுடன் தத்தமது கண்டுபிடிப்புகளைக் காட்டி, செயல்முறை விளக்கங்களுடன் முடிவுகளை விளக்கிக் காட்டுவர். பின்னர் அரசனின் இசைவு பெற்று மக்களிடம் விரை வாகக் கொண்டு சேர்த்தனர். இந்த வழக்கம் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் கடைபிடிக்கப்பட்ட தென்பதை, குறிப்பாக தமிழ்நாட்டில் நடந்த கண்டு பிடிப்பை அயோத்திதாசப் பண்டிதர் வெளிப்படுத்தினார்

தென்னாட்டில், “பள்ளி” எனும் நாட்டில்- பௌத்த மடத்தில் இருந்த பிக்குகள் “எள்” எனும் விதைகளைக் கண்டுபிடித்தார்கள். பிறகு, எள் விதை யிலிருந்து, நெய்யை (கவனிக்கவும் – நெய் என்பது பொதுப்பெயராகத் தமிழில் வழங்கும் சொல். அச்சொல்லுக்கு முன் சேர்க்கப்படும் பெயர அது எந்த நெய் என்பதைக் காட்டும்) வடித்து அதன் குணங்களையும், மருத்துவப் பயன்களையும் கண்டறிந்தார்கள். அந்த நெய் தான் மண்டை தொடர்பான நோய்கள், சுரங்கள், மேக நோய், சேத்மம், சாமரோகம், எலும்புருக்கி, ஈளை உள்ளிட்ட நோய்களைக் குணப்படுத்து வதுடன் சிறந்த மலமிளக்கியாகும் எனக் கண்டறிந்தனர். அந்த எள்நெய்யைத் தலையில் தேய்த்து தலை மூழ்கினால் இப்பயன் கிடைக்கும் என்பதையும், அந்த எள் நெய்யில் பலகாரங்களைச் செய்யலாம் என்பதையும் பிக்குகள் கண்டறிந்தார்கள்.

இதன்பிறகு, ‘பள்ளி’ நாட்டை ஆண்ட அரசரான “பகுவன்” என்பவரிடம் பிக்குகள் சென்று எள்ளையும், நெய்யையும் காட்டி அதன் பயன்களை விளக்கியதால், எள்ளின் மகிமையை உணர்ந்த மன்னர் பகுவன் எள்ளினை அதிகளவில் விளைவிக்க செய்தார். எள் விதையிலிருந்து நெய்யெடுத்து அதனை தன் நாட்டு மக்கள் தலையில் தேய்த்து, பள்ளி நாட்டின் தலை நகரில் ஓடிக்கொண்டிருந்த 'தீபவதி' ஆற்றில் குளிக்க வேண்டுமென கட்டளை யிட்டான். அதன்பிறகு பௌத்த பிக்குகள் மூலம் எண்ணெய்யை மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தான். மக்களுக்கு அந்த எள்நெய் பெரிதும் உதவியதால், அது முதல் பிக்குகளால் நல்லெண்ணெய் (நல்+ எள்+ நெய்) எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டது.

நல் + எள் + நெய் என்றழைக்கப்படும் நல்லெண்ணெயை தலையில் தேய்த்து ஐப்பசி மாதம் சதுர்த்தி நாளன்று தீபவதி ஆற்றில் குளித்ததோடு இணைத்து, தீபவதி குளியல் நாள் என வழங்கி வந்தார்கள் என்பதை பெருந்திரட்டு” எனும் பண்டையத் தமிழ் நூலில் ‘பாண்டி படலம்’ எனும் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை சான்றாக அயோத்திதாச பண்டிதர் விளக்கியுள்ளதை நாம் நினைவு படுத்தி கொள்ளவேண்டியுள்ளது.

இது மட்டுமின்றி, தீபவதி காலத்தில் மேற்கொள்ளப்படும் விரதத்தைப் பற்றி குறிப்பிடும் போது, அது ஐந்தொழுக்கக் கொள்கைகளான கொலை செய்யா மை, களவு செய்யாமை, மது அருந்தாமை, பிறன் மனை விழை யாமை, பொய் சொல்லாமை எனும் கோட்பாட்டை பின்பற்றி தமது வாழ்நாளில் கடைபிடிக்க வேண்டுமென்பதற்காக, அவற்றை விரதமாக மேற்கொண்டு வந்ததையும் அயோத்திதாசப் பண்டிதர் விளக்கியுள்ளார்.

பிற்காலத்தில் வந்த வேத பிராமணர்கள் தீப ஒளி தத்துவத்தை மறைத்து, அவர்களின் வசதிக்கேற்ப கதைகளாக திரித்து, தமது வயிற்றுப் பிழைப்பிற்காக மக்களை மூடர்களாக்கி, மூட நம்பிக்கைகளைக் கட்டி தீபவதி நாளை திரித்தார்கள். என்று அயோத்திதாசர் பண்டிதர் கூறுகின்றார்.

அக்காலத்தில் மக்களுக்கு பயன்படக் கூடிய பொருளை, பௌத்த பிக்குகள் கண்டுபிடித்த நாளை அவர்கள் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அதைப் போற்றி கொண்டாடி வந்தனர். வீட்டின் இருளைப் போக்கி ஒளியேற்றிய எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது கொண்டாடப்பட வேண்டியதென்பதால்தான் தீப ஒளி திருவிழா கொண்டாடப்பட்டது. அந்தப்புரிதளோடு தீப ஒளி திருவிழாவை மாசில்லாமல், ஒலி சீர்கேடு இல்லாமல், நமது வீட்டில் எள் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி கொண்டாடுவோம்.

அனைவருக்கும்
#தீபஒளித்_திருநாள் வாழ்த்துக்கள்

சனி, 26 அக்டோபர், 2019

தீபாவளி பற்றி தமிழறிஞர்கள் .... தீபாவளி தமிழர்க்கு உரியதன்று!


தீபாவளி பற்றி தமிழறிஞர்கள் ....
தீபாவளி தமிழர்க்கு உரியதன்று!

தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியதாகத் தோன்றவில்லை. நரகாசுரன் என்ற ஓர் அசுரனைக் கொன்றதற்காக மகிழ்ச்சி அடைதலைக் குறிப்பதற்காக அப்பண்டிகை வழக்கத்தில் கொண்டாடப்படுகிறது. அது புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் என்பதை இன்னார் என்று தீர்மானித்தல் கடினமாயினும் சரித்திர ஆராய்ச்சியாளர் ஆரியர் பகைவரே அசுரர் எனப்பட்டார் என்பர். ஆரியர் பகைவருள் ஆதியில் திராவிடர்களும் அடங்குவர் ஆதலின் அசுரர் கொலைக்காகத் தமிழர் மகிழ்ச்சி அடைதல் ஏற்றதன்று என்ப.



ஆசிரியர்: கா.சுப்பிரமணியன் (பிள்ளை)
நூல்: தமிழ் சமயம்   பக்கம் : 62

*****

வடநாட்டுப் பண்டிகையே தீபாவளி!

தீபாவளி குறித்து வெவ்வேறு கதைகள் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வழங்குகின்றன. தமிழகத்தில் தீபாவளிக்கு நரகாசுரன் கதை கூறப்படுகிறது. இக்கதைக்கும், தீபாவளிக்கும் தொடர்பே இல்லை.

தீபாவளி புதுக்கணக்குப் புத்தாண்டுப் பிறப்பு விழாவாகும். இது விஜய நகரத்திலும் புத்தாண்டுப் புதுக் கணக்கு விழாவாகக் கொண்டாடப்பட்டதை நிக்கோலோ டிகாண்டி என்பவர் குறிப்பிட்டுள்ளார். இது வடநாட்டுக் குஜராத்திகளுக்கும் மார்வாரிகளுக்கும் புதுக் கணக்குப் புத்தாண்டு விழாவாகும். விஜய நகரத்திலிருந்து வந்து மதுரையில் குடியேறிய சவுராஷ்டிரர்களும் இதைக் கொண்டாடி வருகிறார்கள். தீபாவளி அன்று புதுக் கணக்கு எழுதப்படும்.

வடநாட்டார் தீபாவளி அன்று விளக்கு அலங்காரம் செய்வதுண்டு. தீபம் = விளக்கு; ஆவலி = வரிசை; தீப + ஆவலி = தீபாவலி. அச்சொற்றொடர் பின்பு தீபாவளி என்று திரிந்தது. குஜராத்திகளும், மார்வாரிகளும் இன்றும் தீபாவளி அன்று வீடுகளில் விளக்கேற்றி வைக்கிறார்கள். புதுக்கணக்கு எழுதுகிறார்கள். ஆனால், தீபாவளி தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வந்த திருநாளன்று.

மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை - செஞ்சி நாயக்கர்களாலும் தமிழகத்தில் புகுத்தப்பட்டதால் பதினாறாம் நூற்றாண்டி லிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படவே இல்லை. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தீபாவளியில் புத்தாடை அணியும் வழக்கம் அண்மைக் காலம் வரையில் இருந்ததில்லை.

ஆசிரியர்: பேராசிரியர் அ.கி.பரந்தாமனார்

நூல்: மதுரை நாயக்கர் வரலாறு பக்கம் : 433-434



***********

பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி

வடநாட்டில் அக்காலத்தி லிருந்த தமிழ் மேன் மக்கள் அய்ப்பசித் திங்களில் விளக்கு வரிசை வைத்து அவற்றின் ஒளியிலே விளங்கா நின்ற முழு முதற் கடவுளுக்குத் திருவிழா கொண்டாடி வந்தனர். அதுதான் தீபாவளி என வழங்கி வருகிறது. வடநாட்டவர் தென்னாட்டில் குடியேறிய பின் தீபாவளித் திருவிழா இங்குள்ள தமிழரது கொள்கைக்கும் ஏற்றதாயிருத்தலின் அஃது இங்குள்ள தமிழ் மக்களாலும் கொண்டாடப்பட்டு வருவதாயிற்று. கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாளின் நினைவுக்கு அறிகுறியாகத் தீபாவளித் திருநாள் கொண்டாடப் படுவதாயிற்று என்னும் கதை பிற்காலத்தில் பார்ப்பனரால் கட்டிவிட்ட தொன்றாகும்.

பார்ப்பனர் தமது உயிர்க் கொலை கேள்விக்கு உடன்படாத நரகாசுரன் என்னும் தமிழ் மன்னன் ஒருவனைத் தமது உயிர்க்கொலை வேள்விக்கு உடன்பட்டுத் தமக்குத் துணையாயிருந்த மற்றொரு தமிழ் மன்னனாகிய கண்ணனை ஏவிக் கொலை செய்தனர். தீபாவளி என்னும் சொற்றொடர் பொருளை ஆராயுங்கால் அத்திருநாளுக்கும், கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நிகழ்ச்சிக்கும் ஏதொரு இயைபும் இல்லை என்பது தெளியப்படும். தீபாவளி என்பது தீபஆவலி எனப் பிரிந்து விளக்கு வரிசை என்றே பொருள் தரும்... ஆதலால் தீபாவளி நரகாசுரன் கதைக்குச் சிறிதும் இசைவது அன்று.

ஆசிரியர்: தமிழ்க்கடல் மறைமலை அடிகள்
நூல்: தமிழர் மதம்   பக்கம் : 200-201

***********

அகராதிக் குறிப்பில்

இரண்யாட்சதன்: இவன் கதாபாணியாக இந்திராதி தேவர்கள். இருடிகள் முதலியோரை வருத்தி ஒருமுறை பூமியைப் பாய்போற் சுருட்டிக் கொண்டு கடலில் ஒளிக்க, விஷ்ணுமூர்த்தி சுவேதவராக (பன்றி)வுருக் கொண்டு கொம்பினால் இவன் மார்பைப் பிளந்து பூமியைப் பழைமை போல் நிறுத்தினார். (இந்தக் கருத்து பூமி உருண்டை என்னும் அறிவியல் உண்மையை மறுத்து தட்டை என்னும் மதவாதத்தை வற்புறுத்துகிறது) (169)

நரகாசுரன்: வராக (பன்றி) உருக்கொண்ட விஷ்ணுவிற்கும், பூமி தேவிக்கும் பிறந்த அசுரன் (934)

சுரர்: பிரமன் சொற்படி மது உண்டதால் இப்பெயர் அடைந்த தேவர் (705)

அசுரர்: சுரராகிய தேவர்க்கு (அதாவது மது அருந்தும் ஆரியப்பார்ப்பனர்க்கு) விரோதிகள் (அதாவது தென் நாட்டைச் சேர்ந்த திராவிடத் தமிழர்கள்) (24)

ஆசிரியர்:சைவப் பேரறிஞர் ஆ.சிங்காரவேலு முதலியார்

-  நூல்: அபிதான சிந்தாமணி

***********

சமண சமயப் பண்டிகையே தீபாவளி

தீபாவளி சமணரிட மிருந்து இந்துக்கள் பெற்றுக் கொண்ட பண்டிகை. கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரிலே அவ்வூர் அரசனுடைய அரண்மனையிலே தங்கி இருந்தபோது அங்குக் குழுமி இருந்த மக்களுக்கு அறிவுரை செய்தருளினார். இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது. வைகறைப் பொழுது ஆனபடியினாலே சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கிவிட்டனர்.

வர்த்தமான மகாவீரரும் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்தபடியே இயற்கை எய்தினார். பொழுது விடிந்து எல்லாரும் விழித்தெழுந்து பார்த்தபோது மகாவீரர் இயற்கை எய்தி இருப்பதைக் கண்டு அரசனுக்கு அறிவித்தனர். அவ்வரசன் மற்ற அரசர்களை வரவழைத்து அவர்களோடு ஆலோசனை செய்து உலகத்திற்கு அறிவொளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவு கூர்ந்து வழிபடும் பொருட்டு அவர் இயற்கை எய்திய நாளில் வீடுதோறும் விளக்குகளை ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். அது முதல் இந்த விழா (தீபம் = விளக்கு, ஆவலி = வரிசை; தீபாவலி) மகாவீரர் விடியற்காலையில் இயற்கை எய்தியபடியால் தீபாவளி என்ற பெயரில் விடியற்காலையில் கொண்டாடப்படுகிறது. விடியற்காலையில் நீராடிய பின்னர் திருவிளக்கு ஏற்றித் தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறதன்றோ!

சமண சமயம் வீழ்ச்சி அடைந்தபிறகு சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள் வழக்கமாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்க முடியாத ஆரியர்கள் இதைத் தாமும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் பொருத்தமற்ற புராணக் கதைகளைக் கற்பித்துக் கொண்டார்கள். திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்த நாளைக் கொண்டாடுவதுதான் தீபாவளி என்றும் கூறப்படும் புராணக்கதை பொருத்தமானது அன்று. அன்றியும் இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர் வீரர்களின் முறையும் அன்று. சூரியன் புறப்பட்டபிறகுதான் போரைத் தொடங்குவது பண்டைக் காலத்துப் போர் வீரர்கள் நடைமுறையில் கொண்டிருந்த பழக்கம். சமணர் கொண்டாடி வந்த மகாவீரர் இயற்கை எய்திய நினைவு நாள் தீபாவளி என்பதில் அய்யமில்லை. ஆனால் இந்தப் பண்டிகையை ஏற்றுக் கொள்ளும் மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக்கொண்ட கதைதான் நரகாசுரன் கதை.

ஆசிரியர்: கல்வெட்டாராய்ச்சி     அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி
நூல்: சமணமும் தமிழும்,  பக்கம்: 79-80.

***********

அறிவுக்குப் பொருத்தமற்ற கதை:

வர்த்தமான மகாவீரர் சமண சமயத்தின் கடைசித் தீர்த்தங்கரர். அவர் பாவாபுரி அரசன் அரண்மனையில் தங்கி அங்குக் கூடி இருந்த மக்களுக்கு இரவு முழுவதும் அறிவுரைகள் செய்தார். நெடுநேரம் விழித்த காரணத்தால் மக்கள் அவ்விடத்திலேயே உறங்கி விட்டனர். மகாவீரரும் தான் இருந்த இடத்திலேயே வீடுபேறு அடைந்தார். பொழுது விடிந்ததும் எல்லாரும் விழித்து எழுந்தனர். மகாவீரர் வாழ்வு நீத்ததைக் கண்டனர். அரசன் சான்றோருடன் கூடி ஆலோசித்தான். மகாவீரரை மக்கள் ஆண்டுதோறும் நினைத்து வழிபடுவதற்காக அவர் வீடு பெற்ற நாளில் ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகள் ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். (தீபம் - விளக்கு; ஆவலி - வரிசை, தீபாவலி - விளக்கு வரிசை) மகாவீரர் விடியற்காலையில் வீடுபேறு அடைந்தார். ஆதலால் தீபாவளி விடியற்காலையில் மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த உண்மை நிகழ்ச்சி மறைக்கப்பட்டு அறிவுக்குப் பொருத்தமற்ற நரகாசுரன் கதை பிற்காலத்தில் இந்துக்களால் கட்டி விடப்பட்டது என்பது அறிஞர் கருத்து. சமண சமயம் செல்வாக்கு இழந்த காலத்தில் சமணர்கள் சைவ வைணவங்களைத் தழுவினர். அந்நிலையிலும் தீபாவளியைக் கொண்டாடினர். அப்பழக்கம் பிற சமயத்தாரிடையேயும் நாளடைவில் புகுந்துவிட்டது. சமண சமயத்தைச் சேர்ந்த மார்வாரிகள், குஜராத்திகள் முதலியோர் இன்றும் தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருவதற்கு இது ஏற்ற சான்றாகும்.

ஆசிரியர்: டாக்டர் மா.இராசமாணிக்கனார்

நூல்: தமிழர் நாகரிகமும் பண்பாடும்
பக்கம்: 33, 34.
நன்றி: கரூர் இராசேந்திரன்

வெள்ளி, 25 அக்டோபர், 2019

மதுரை என்ற பெயர் வந்தது எப்படி தெரியுமா?


மதுரை என்ற பெயர் வந்தது எப்படி தெரியுமா?

சிவபக்தனான குலசேகர பாண்டிய மன்னனிடம் சில பொருட்களை விற்க, தனஞ்ஜெயன் என்னும் வணிகர் வந்தார். வியாபாரத்தை முடித்துவிட்டு கடம்பமரங்கள் அடர்ந்த காட்டில் தங்கினார். அன்று இரவில், அங்கிருந்த சிவலிங்கத்திற்கு. வானிலிருந்து இறங்கி வந்த தேவர்கள் வழிபாடு நடத்தியதைக் கண்டார். ஆச்சரியமடைந்த அவர், மன்னனிடம் இதுபற்றி தகவல் தெரிவித்தார். மன்னன் இதைக்கேட்டு ஆச்சரியமடைந்தான். வணிகர் குறிப்பிட்ட இடத்தில் கோயில் எழுப்பி, சுற்றிலும் வீதிகளை உண்டாக்கி, ஒரு நகரத்தை அமைத்தான். அப்போது அந்நகரின் மீது சிவனின் நெற்றியில் இருந்த சந்திரனில் இருந்து அமிர்தம் தெளிக்கப்பட்டது. அதனால், அந்த நகருக்கு மதுரை என்ற பெயர் ஏற்பட்டது. (அமிர்தத்தை மது என்றும் சொல்வர்)

மாண்புமிகு மதுரை பிறந்தநாள் தெரியுமா?

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, மதுரை. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை.

திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் கூடல் என்றும், கலித்தொகையில் நான்மாடக்கூடல் என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் மதுரை என்றும் அழைக்கப் படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர், சோழர், பிற்கால பாண்டியர், இஸ்லாமியர், நாயக்கர் அரச வம்சத்தினரின் தலைநகராக விளங்கியது. 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் வசம் சென்றாலும், மதுரையின் கலைகள் அழியவில்லை. ஒவ்வொரு வம்சத்தினரின் ஆட்சி காலத்திலும் கலை, இலக்கியம், பண்பாடு, கலாச்சாரத்தில் மதுரை சிறந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது. பதியெழுவறியா பழங்குடி மூதூர் என சிலப்பதிகாரம் கூறுகிறது. இதன் அர்த்தம் என்ன தெரியுமா? தற்போதைய பழமொழியில் கூறப்படும் மதுரையைச் சுற்றிய கழுதை... வேறெங்கும் போகாது என்பது தான். பலவிதமான வணிகங்களுக்கு மையமாக விளங்கியது மதுரை. மதுரையைச் சுற்றி அழகர்கோயில், திருப்பரங்குன்றம், யானைமலை, சமணமலை, முத்துப்பட்டி, கொங்கர் புளியங்குளம், அரிட்டாபட்டி, கீழவளவு, செட்டிப்புடவில் சமணர்கள் வாழ்ந்த மலைகள் உள்ளன. மதுரையின் சிறப்புகளை ஒருபக்கத்தில் அடக்கிவிட முடியுமா? மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி சதுர வடிவில் மிக மிக நேர்த்தியாக, திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரம் என்ற பெருமை பெற்றது, நமது மதுரை. கோயிலைச் சுற்றி சதுர வடிவில் தெருக்களும் அமைக்கப்பட்டுள்ளன. தெருக்களிலும் குறிப்பிட்ட தொழில் செய்வோர், ஒரு சமூகமாகவே வாழ்ந்துள்ளனர், எனஅக்கால பரிபாடல் கூறுகிறது. அதுமட்டுமா...மதுரை மக்கள், அறவோர் ஓதும் மறையொலி கேட்டு துயில் எழுவர், என இறைமைத் தன்மையின் மேன்மையைப் போற்றுகிறது. நச் நகரமைப்பு: இந்தக் கால மதுரையை மறந்துவிட்டு, இந்த செய்தியை படியுங்கள், நகரமைப்பு (டவுன் பிளானிங்) என்ற துறை வளராத காலத்திலேயே, உலகுக்கே அதைக் கற்றுக்கொடுத்தது, பழைய மதுரையின் அமைப்பு. மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியே மதுரை நகர் அமைக்கப்பட்டது. கோயிலைச் சுற்றிலும் சதுர வடிவில் தெருக்கள் அமைக்கப்பட்டன. மதுரையை ஆண்ட நாயக்கர்களில் முதல் மன்னர் கி.பி 1159 முதல் 64 வரை ஆண்ட விஸ்வநாத நாயக்கர். இவர் ஷில்பா சாஸ்திர கட்டடக் கலை அடிப்படையில், மதுரை நகரை மீண்டும் வடிவமைத்தார். இவர் சதுர வடிவில் அமைத்த தெருக்களை, ஆடி, சித்திரை, ஆவணி, மாசி என தமிழ் மாதங்களின் அடிப்படையில் பெயரிட்டார். அப்போதுதான், தமிழ் மாத பெயர்களின் அடிப்படையில் விழாக்களும் துவங்கின. கோயில் பிரகாரத்தை சுற்றிலும் உள்ள தெருக்கள் விசாலமாக, திருவிழாக்கள் கொண்டாடும் வகையில் அமைக்கப்பட்டன. இத்தெருக்களில் கோயில் தேர்கள், சுவாமி வாகனங்கள் வரவழைக்கப்பட்டு விழா கொண்டாடப்பட்டது. பண்டைய தமிழ் இலக்கியங்களில், மதுரை நகரின் மத்தி மற்றும் தெருக்களில் தாமரை பூக்கள் வளர்க்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. சூரியன் உதிக்கும் திசையான கிழக்கு நோக்கி, கோயிலும், நகரமும் உருவாக்கப்பட்டது. கோயிலின் நான்கு பாகங்களிலும் நான்கு கோபுரங்கள் அமைக்கப்பட்டன. கோயிலின் முன் தெருக்களில், சமுகத்தில் உயர்ந்த இடத்தில் இருந்தவர்க்கும், கடைசி தெருக்களில் சாதாரண மக்களும் குடியமர்த்தப்பட்டனர். 19 நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது, காலனித்துவ அரசியல் மற்றும் தொழில்களின் தலைமையிடமாக மதுரை மாறியது. மதுரை நகரைச் சுற்றி வானளாவிய கோட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. பகைவர்கள் எளிதில் உள்ளே வராத வகையில், பாண்டிய மன்னனின் கொடிகள் காற்றில் அசைந்து பறந்தன. மதிலின் புறப்பகுதியில் பகைவர்களை சூழ்ந்து அழிக்க, வீரர்கள் இருக்கவில்லை. அதற்கு பதிலாக மதில்களில் இருந்து, பகைவர்களை நேரடியாக தாக்கும் வகையில், நெருப்பை, மணலை வீசுவது, வெந்நீர் ஊற்றுவது போல தானியங்கி ஏற்பாடுகள் இருந்தன. கோட்டையைச் சுற்றி ஆழமான, நீர் நிறைந்த அகழி இருந்தது. அதில் குவளையும், ஆம்பலும் மலர்ந்து செழிந்திருந்தன. இதனால் பகைவர், அதில் முதலை இருக்கும் என்று பயந்தனராம்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோட்டையும், அகழியும் ஆங்கிலேயர் காலத்தில் அகற்றப்பட்டன. 1790ல் மதுரையின் முதல் கலெக்டராக அலெக்ஸாண்டர் மக்லியோட் நியமிக்கப்பட்டார். 1840ல் கலெக்டராக இருந்த பிளாக்பர்ன் என்பவர் தான், பழைய நகரமைப்பை மாற்றாமல், புதிய நகராக்கினார். கோட்டையை இடித்து, அகழிகளை அகற்றி, வெளிவீதிகள் அமைத்து, மதுரை நகரை வெளியுலகுடன் இணைத்தார். நாயக்கர் ஆட்சிக் காலத்தில் இருந்தபடியே, ஆங்கிலேயர் காலத்திலும் குறிப்பிட்ட ஜாதியினர் ஒரே பகுதியில் இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

மாரட் வீதி, வெளிவீதிகள் எல்லாம் ஆங்கிலேயர் காலத்தில் பெயர் சூட்டப்பட்டன. கடைவீதிகள், அங்காடி வீதிகள் எனப்பட்டன. காலையில் கூடும் வீதிகள் நாளங்காடி எனவும், மாலையில் கூடும் வீதிகள், அல்லங்காடி எனப்பட்டன. மதுரை நகரில் ஆறு கிடந்தாற்போல, அகன்ற நெடிய தெருக்கள் அமைந்திருந்ததாக மதுரைக் காஞ்சி கூறுகிறது."


மதுரையின் வரலாறு( MADURAI HISTORY)
#மதுரை #Madurai

             இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம் ஆகும். மதுரை மாவட்டத்தின் தலைநகராக இருக்கும் மதுரை, மக்கள் தொகை அடிப்படையிலும், நகர்ப்புற பரவல் அடிப்படையிலும் தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய நகரமாகும் பத்து இலட்சத்துக்கு மேல் மக்கட்தொகைக் கொண்ட இந்திய மாநகரங்களின் பட்டியலில் 31ஆவது பெரிய நகரம் ஆகும்.வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை நகரம் இங்கு அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்காக அதிகம் அறியப்படுகிறது. நகரின் உள்ளாட்சி நிர்வாகம் மதுரை மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
        இந்திய துணைக்கண்டத்தில் தொன்மையான வரலாற்றைக் கொண்ட மதுரை நகரம் சுமார் 2500 ஆண்டுகள் பழமையான, தொடர்ந்து மக்கள் வசித்து வரும் உலகின் சில நகரங்களுள் ஒன்று.
          பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக விளங்கிய மதுரை தமிழ் மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது. சங்க காலம் எனக் குறிக்கப்படும் கி.மு. 4 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் தமிழ் மொழி அறிஞர்களைக் கொண்டு மூன்றாம் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டு தமிழை வளர்த்த பெருமையுடைய நகரம் மதுரை.
              மௌரியப் பேரரசின் அமைச்சர் கௌடில்யர் (கிமு 370 – கிமு 283), கிரேக்க தூதர் மெகஸ்தெனஸ் (350 கிமு – 290 கிமு) ஆகியோரின் குறிப்புக்களில் மதுரை குறிப்பிடப்பட்டுள்ளது.
            மரபுச் சின்னமாகப் பார்க்கப்படும் மதுரை நகரம் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. சங்ககாலப் பாண்டியர், இடைக்காலச் சோழர்கள், பிற்கால சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள், மதுரை சுல்தானகம், விஜயநகரப் பேரரசு, மதுரை நாயக்கர்கள், கர்நாடக இராச்சியம், ஆங்கிலேயர்கள் போன்றோர் மதுரையை ஆண்டுள்ளனர். நகரத்தில் பல வரலாற்று நினைவிடங்கள் அமைந்துள்ளன.

            மீனாட்சியம்மன் கோவில், திருமலை நாயக்கர் அரண்மனை போன்றவை அவற்றில் புகழ் பெற்றவை. நகரில் ஆண்டு முழுவதும் பல கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. சித்திரைத் திருவிழா என்று பொதுவாக அழைக்கப்படும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் ஆண்டுதோறும் 10 நாட்கள் கொண்டாடப்படும் நகரின் முக்கிய விழாவாகும். பத்து இலட்சம் பேராற் கண்டுகளிக்கப்படும் சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெறுகிறது.

                நகரின் ஒருபகுதியான அவனியாபுரம் பகுதியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெறும் ஏறுதழுவல், நகரின் அருகே உள்ள அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் நடைபெறும் ஏறுதழுவல் நிகழ்ச்சிகள் பெயர் பெற்ற நிகழ்வுகளாகும்.
            மதுரை தென் தமிழகத்தின் முக்கிய தொழிற்றுறை மையமாகவும் கல்வி மையமாகவும் திகழ்கிறது. இரப்பர், இரசாயனம், கிரானைட் போன்ற உற்பத்தித் தொழில்கள் மதுரையில் நடைபெறுகின்றன. தகவல் தொழில்நுட்பத் துறையில் இரண்டாம் அடுக்கு நகரமாகப் பட்டியலிடப்பட்டுள்ள மதுரையில் சில பன்னாட்டு, உள்நாட்டு மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் அமைந்துள்ளன.
                 மதுரை மருத்துவக்கல்லூரி, ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, மதுரை சட்டக் கல்லூரி, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் போன்ற கல்வி நிலையங்கள் நகரில் அமைந்துள்ளன.
            நகர நிர்வாகம் 1971 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மாநகராட்சி அமைப்பின் மூலம் நடைபெறுகிறது. இது சென்னைக்கு அடுத்த இரண்டாவது பெரிய மாநகராட்சி ஆகும்.

                மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளையும் உள்ளது. இது இந்தியாவில் மாநிலத் தலைநகரங்களுக்கு வெளியில் உள்ள நீதிமன்றங்களில் ஒன்றாகும்.

                 மதுரையில் பன்னாட்டுச் சேவைகளை வழங்கும் வானூர்தி நிலையமும், தென் மாவட்டங்களில் பெரிய தொடர்வண்டி நிலையமும் அமைந்துள்ளது. முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளால் மதுரை நகரம் இணைக்கப்பட்டுள்ளது.
                  உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தென்னிந்தியாவின் மாசில்லா மாநகரமாக மதுரை மாநகர் தெரிவு செய்யப்பட்டது.
                  மதுரை 147.99 கி.மீ.2 பரப்பளவு கொண்டது. 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் முதற்கட்டத் தகவலின் படி மதுரை நகரில் 1,017,865 பேர் வசிக்கின்றனர்...

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

திங்கள், 7 அக்டோபர், 2019

தமிழின் பெருமைகள் , தமிழனின் பெருமைகள்


தமிழின் பெருமைகள் , தமிழனின் பெருமைகள்

இந்த வரலாற்று உண்மைகள் வெளியே வந்து தமிழனுக்குப் பெருமை சேர்ந்து
விடக்கூடாது என்பதாலேயே சிலர் வரலாற்றை மறைக்கப் பார்க்கிறார்கள். ஆய்வு
முடிந்து ஆறு ஆண்டுகள் ஆன பின்னரும் ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கை
வெளியிடப்படாததற்கு இதுவே காரணம் என்றார் நடனகாசிநாதன் ஆவேசத்துடன்.

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே
பரவியிருந்தது. அசோக மாமன்னன் தமிழ் மொழியிடம் கடன் பெற்றுத்தான் அவனது
கல் வெட்டுக்களைப் பொறித்திருக்கிறான். தமிழனின் தொன்மையான வரலாற்றை
மறைக்க சதி நடக்கிறது என்று கூறி அதிர்ச்சியை அள்ளித்
தெளித்திருக்கிறார், ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அதிகாரி ஒருவர்.

நடன காசிநாதன்தான் அந்த அதிகாரி. நெல்லை பாளையங்கோட்டையில், மத்திய
செம்மொழி தமிழாய்வு மையமும், சென்னையிலுள்ள பெரியார் ஈ.வெ.ராமசாமி
நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய ‘தமிழ்நாட்டுத்
தொல்லியல் ஆய்வுகள் மற்றும் ஆதிச்சநல்லூர் சிறப்பும்,
எதிர்காலத்திட்டங்களும் என்கிற தலைப்பிலான தேசிய கருத்தரங்கில்தான்
இப்படிப் பேசி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் அவர். நடன காசிநாதனை நாம்
சந்தித்துப் பேசினோம்.

‘‘1989-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை தமிழ்நாடு தொல்லியல்துறை
இயக்குநராக நான் பணியாற்றிய போதுதான் தமிழ்நாட்டில் உள்ள வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடந்தன என்று
ஆரம்பித்தார் அவர்.

‘‘குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை ஆறு கடலோடு கலக்கும்
அழகன்குளம், ஈரோடு மாவட்டம் கொடுமணல், நாகை மாவட்டம் பூம்புகார் ஆகிய
இடங்களில் நிலம் மற்றும் கடல் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டன.
அழகன்குளத்தில் கொத்துக் கொத்தாய் ரோமானிய காசுகள், இடுப்பில்
குழந்தையுடன் கூடிய மரத்தால் ஆனதாய் சிற்பம், கண்ணாடி கைப்பிடியை
வைத்திருக்கும் மூன்று தாய்மார்களின் சிற்பம் போன்றவையும்
கண்டுபிடிக்கப்பட்டன. கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த அந்தப்
பொருட்கள் மூலம் பழங்காலத் தமிழன் ரோமானியர்களுடன் வணிகம்
புரிந்திருக்கிறான் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.

கொடுமணலில் சாம்பிராணிப் புகை போடப் பயன்படும் செப்புப் பாத்திரம்,
இரும்பு ஈட்டிகள், தவிர ராஜஸ்தானிலிருந்து தருவிக்கப்பட்ட கார்னிலியன்
கல்மணிகள் கண்டெடுக்கப்பட்டன. மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆய்வில்
சங்ககால படகுத்துறை, நீர்த்தேக்கம், புத்தவிகாரை போன்றவை கிடைத்தன. தமிழக
தொல்லியல்துறை சார்பில் நாங்கள் செய்த அகழ்வாராய்ச்சியில், கிழார்வெளி
என்கிற இடத்தில் 2400 ஆண்டுகளுக்கு முந்தைய இன்னொரு படகுத்துறை,
படகுகளைக் கட்டும் இலுப்பை மரம், எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகளைக்
கண்டுபிடித்தோம்.

அதேபோல் கோவா கடல் ஆய்வு நிறுவனத்துடன் சேர்ந்து நாங்கள் நடத்திய
ஆய்விலிருந்து, கடல் தற்போது 5 கி.மீ. தூரம் முன்னேறி ஊருக்குள்
வந்திருப்பதைக் கண்டறிந்தோம். தவிர, ‘சைட் ஸ்கேன் சோனார் என்கிற நவீன
தொழில்நுட்ப முறையின் மூலம் கடலுக்குள் 21 அடி ஆழத்தில் 5 கட்டடங்கள்
இருப்பதையும் கண்டுபிடித்தோம். அவை செம்புரான் கல்லினால் கட்டப்பட்ட
கோயில்கள் அல்லது புத்த விகாரைகளாக இருக்கலாம்.

அதுபோல பூம்புகார் அருகே வானகிரி பகுதியில் கடலுக்குள், 19-ம்
நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு டேனிஷ் கப்பல்மூழ்கிக் கிடப்பதைக்
கண்டுபிடித்தோம். அது டென்மார்க் அல்லது இங்கிலாந்திலிருந்து வந்த
கப்பலாக இருக்கலாம். அதிலிருந்த ஈயக்கட்டிகள் சிலவற்றை எடுத்து கடல் அகழ்
வைப்பகத்தில் வைத்தோம். நான் பதவியிலிருந்த காலத்தில்தான் இவை அனைத்தும்
நடந்தன என்றவர், அடுத்ததாக…

‘‘தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணிக் கரையிலுள்ள ஆதிச்சநல்லூரை
‘தமிழகத்தின் ஹரப்பா என்றே சொல்லலாம். அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த
தொல்லியல்களம் அது. கடந்த 2004-2005-ம் ஆண்டில் மத்திய தொல்லியல்
அகழாய்வு இயக்குநர் எஸ்.டி.சத்தியமூர்த்தி தலைமையில் அங்கே நீண்டநாட்களாக
நடந்த அகழாய்வுகளில் 150 -க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள்
கண்டெடுக்கப்பட்டன. அதில் ஒரு தாழி, 3000 ஆண்டுகள் பழைமையானது.
அதியற்புதமான அந்தத் தாழியில் ‘அப்ளிக்யூ முறையில் ஒரு பெண், மான், வாழை
மரம், ஆற்றில் இரண்டு முதலைகள் இருப்பது மாதிரியான உருவங்கள்
வரையப்பட்டிருந்தன.

அந்தப்பானைகளின் ஓட்டில் இருந்த சில குறியீடுகள் ஹரப்பா கால உருவ எழுத்தை
ஒத்திருந்தன. அது மூவாயிரம் முதல் ஐயாயிரம் ஆண்டுகள் பழைமையானது. தவிர,
அங்கு கிடைத்த செப்புப் பொருட்கள் குஜராத் டைமமாபாத்தில் கிடைத்தது போன்ற
ஹரப்பா காலப் பொருட்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்லாவற்றுக்கும்மேலாக ஒரு தாழியின் உட் பகுதியில் பழந்தமிழ்
எழுத்துக்கள் இருந்தன. அதைப் பார்த்த சத்தியமூர்த்தி உடனடியாக
கல்வெட்டுத்துறை இயக்குநர் எம்.டி.சம்பத்தை அழைத்து வந்து, அந்தக்
கல்வெட்டை வாசிக்கச் சொன்னார். அதில் ‘கரி அரவ நாதன் என்று
எழுதப்பட்டிருந்ததாக சம்பத் சொல்லியிருக்கிறார் ‘கதிரவன் மகன் ஆதன் என்று
அதற்குப் பொருள். ஆதனைப் புதைத்த தாழிதான் அது. கல்வெட்டு ஆய்வாளர்
ஐராவதம் மகாதேவன் போன்றோரும் அந்தத் தாழியை அபூர்வமானது, அந்தப்
பழந்தமிழ் எழுத்துக்கள் ஹரப்பா கால உருவ எழுத்துக்களைப் போல இருப்பதாக
கருத்துச் சொன்னார்கள். அந்தத் தகவல்கள் கடந்த 01.07.05-ம் தேதி
ஃப்ரண்ட்லைன் ஆங்கில இதழில் வெளிவந்தன.

ஆனால் அதன்பிறகு அவர்களுக்கு என்ன நெருக்கடி வந்ததோ? தற்போது தாழியில்
கல்வெட்டே இல்லை என்று சொல்கிறார்கள். ‘அது அபூர்வமான தாழி என்று சொன்ன
ஐராவதம் மகாதேவன், இப்போது, ‘அது ஹரப்பா கால எழுத்தல்ல என்கிறார்.
தாழியைக் கண்டுபிடித்த சத்தியமூர்த்தியும், சம்பத்தும் கூட இப்போது
அதுபற்றி வாய்திறக்க மறுக்கிறார்கள். அவர்கள் இருந்த பல மேடைகளில் நான்
இதுபற்றிப் பேசியும் அவர்கள் பதில் சொன்னதில்லை. இதையெல்லாம் நான் எழுதிய
‘தமிழகம் அரப்பன் நாகரிக தாயகம் என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறேன்.

‘வடநாட்டில் அசோகர் கால கல்வெட்டுக்கள் தான் முதன்மையானவை, பழைமையானவை,
அதன் காலம் கி.மு. 2300 ஆண்டுகள் என்பதுதான் இதுவரை சொல்லப்பட்ட வரலாறு.
ஆனால், ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியிலிருந்த
பழந்தமிழ் எழுத்துக்கள் கி.மு. 2500 ஆண்டுகளுக்கு முந்தையவை. அதாவது
அசோகர் கல்வெட்டை விட 200 ஆண்டுகள் பழைமையானவை.

அப்படியானால் தமிழ்மொழியில் இருந்து கடன்பெற்றுத்தான் அசோகர் அவரது
கல்வெட்டுகளைப் பொறித்திருக்கிறார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
இதுவரை வடக்கிலிருந்துதான் எழுத்துக்கள் வந்தன என்கிற வாதம் இதனால்
தவிடுபொடியாகிறது. ‘தமிழன் அந்தக் காலத்திலேயே கற்றறிந்தவனாக
இருந்திருக்கிறான். அவன் பயன்படுத்திய தமிழ் மொழியில்தான் இந்திய மக்கள்
அனைவரும் எழுதியிருக்கிறார்கள் என்பதும் உறுதியாகிறது.

இந்த வரலாற்று உண்மைகள் வெளியே வந்து தமிழனுக்குப் பெருமை சேர்ந்து
விடக்கூடாது என்பதாலேயே சிலர் வரலாற்றை மறைக்கப் பார்க்கிறார்கள். ஆய்வு
முடிந்து ஆறு ஆண்டுகள் ஆன பின்னரும் ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கை
வெளியிடப்படாததற்கு இதுவே காரணம் என்றார் நடனகாசிநாதன் ஆவேசத்துடன்.

உலகச்செம்மொழி மாநாடு நடைபெறவிருக்கும் இந்த நேரத்தில் ஆதிச்சநல்லூர்
அகழ்வாராய்ச்சி அறிக்கையை வெளியிட வைத்தால் அது தமிழுக்கு அளப்பரிய
பெருமை சேர்க்குமே!

நவராத்திரியின் வரலாறு அறிவுக்கு பொருந்துமா ? - தந்தை பெரியார்


நவராத்திரியின் வரலாறு அறிவுக்கு பொருந்துமா ? - தந்தை பெரியார்

நவராத்திரி என்ற பதம் ஒன்பது இரவு எனப் பொருள்படும். இது புரட்டாசி அமாவாசைக்குப் பின் உள்ள நவமியை இறுதியாக உடைய ஒன்பது நாள்கள் - இரவிலும் கொண்டாடப்படும் உற்சவம். இது சில வருடங்களில் அய்ப்பசி மாதத்துக்குள்ளும் வரும். இந்நாள்களின் ஆரம்பத்தில் எல்லோர் வீட்டிலும் அவரவர்கள் நிலைக்கேற்ப பொம்மைகள் கடவுள்களின் உருவமான படங்கள் வைத்து, ஒவ்வொரு சாயங்கால மும் ஒன்பது நாள் வரையில் பாட்டு முதலியவை பாடி, ஆரத்தி முதலியவைகள் சுற்றி, இந்த உற்சவத்தைப் பெண்கள் கொண்டாடுவது வழக்கம். இதில் புருஷர்கள் கொலு முதலியவைகளைக் கவனியாவிட்டாலும் நவராத்திரியைக் கொண்டாடுகிறார்கள். வேதபாராய ணம், சூரிய நமஸ்காரம் முதலியவைகளை நடத்த பார்ப்பனர்களை ஏற்படுத்தி, இந்த ஒன்பது நாளில் நமது வீடு வேத கோஷத்தில் நிறைந்து மங்களகரமாகும் படியாகச் செய்ய வேண்டுமாம். ஆனால் இந்த விதி பார்ப்பானுக்கும், அதிகாரம் படைத்த இராஜாக் களுக்கும், பணம் படைத்த வைசியனுக்கும் மாத்திரமாம்; மற்றவர்கள் பக்தியோடு சுந்தரகாண்டம் பாராயணம் செய்து முடித்து பார்ப்பனனுக்குச் சாப்பாடு, தட்சணை கொடுத்து, ஆசீர்வாதம் பெற வேண்டுமாம்.

நவராத்திரியில் கடைசி நாளாகிய நவமி தினத்தில் புருஷர்கள் தமது வீட்டிலிருக்கும் புத்தகங்களை ஒழுங்காக அடுக்கி வைத்து, காலை முதல் உபவாச மிருந்து சரஸ்வதியை பூசை செய்ய வேண்டும். இந்த நவமி அன்றைய தினமாவது அல்லது அடுத்த தினமாவது, தொழிலாளிகள் ஆயுதத்தையுடைய வர்கள் ஆகியவர்கள் தங்கள் தங்கள் ஆயுதங்களை வைத்துப் பூசை செய்வது வழக்கம். அதனாலேயே இந்தப் பூசைக்கு ஆயுத பூசை என்றொரு பெயரும் உண்டு. இந்த நவராத்திரியை இந்துமதப் பிரிவுகள் என்று சொல்லும் எல்லா மதத்தவர்களும் கொண் டாடுகிறார்கள். அன்றியும் சிவ, விஷ்ணு ஆலயங் களிலும் இதைப் பெரும் உற்சவமாகக் கொண்டாடு கிறார்கள். அங்கு அம்மனை அலங்கரித்து அநேக தீப அலங்காரங்கள் செய்து, ஒன்பது நாள் இரவும் ஆராதனை நடத்துவார்கள். இந்த வேடிக்கைகளைப் பார்க்கவே அநேகர் மைசூருக்குப் போவது வழக்கம். இதனால் கடவுள் பக்தி பரப்பும் தொழிலையுடைய பார்ப் பனரும் இவ்வுற்சவத்தால் தங்களுக்கு இலாபமிருப்ப தால் அவர்களே ஊர் ஊராய் நவராத்திரி உற்சவத்தைப் பற்றி விளம்பரப்படுத்துவார்கள். நிற்க; இதைச் சைவர், ஸ்மார்த்தர், வைஷ்ணவர், மாத்வர் முதலிய எல்லா மதத்தவர்களும் கொண்டாடக் காரணம் என்னவென் றால், கல்வியும், ஆயுதமும் அதற்குக் கற்பிக்கப்பட்ட தேவதையான துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி என்று சொல்லப்பட்டவர்கள் - ஒவ்வொரு மதத்தினுடைய தெய்வங்களின் அம்மன்களானதனாலும், இந்து மதத்தவர்களுக்கெல்லாம் இது சம்பந்தப்படுத்தப்பட்ட புராணக் கதைகளிலிருப்பதாலுமேயாகும். துர்க்கை முதலிய அம்மன்களை வைஷ்ணவர்கள் பூசிக்கா விட்டாலும், இது சம்பந்தமான கதைகள் அவர்களி டையேயும் உண்டு. மற்றவர்கள் சரஸ்வதி பூசையன்று துர்க்காலட்சுமி ஸரஸ்வதீப்யோ நம என்று கூறி பூசை தொடங்குவார்கள்.

முன்னொரு காலத்தில் மகிஷாசூரன் என்ற எருமை ரூபமான அசுரனும் அவன் பரிவாரங்களும் விருத்தி யாகி கடவுள் வரத்தால் சிறந்த பதவியை அடைந்து உலகை இம்சித்துக் கொண்டிருந்ததால்; இந்தக் கஷ்டம் பொறுக்க முடியாமல் தேவர்கள் பார்வதியிடம் முறையிட, பார்வதி ஒன்பது நாள் சிவபிரானைக் குறித்துத் தவமிருந்து, அவரிடமிருந்து தகுந்த சக்தி பெற்று, ஒன்பதாம் நாள் மகிஷாசூரனைக் கொன்று, பரிவாரங் களை நாசம் செய்து சாந்தமடைந்தார். மகிஷாசூரனைக் கொன்றதனால் பார்வதிதேவிக்கு மகிஷாசூரமர்த்தினி என்கிற பெயரும் வந்தது என்பர். எனவே, இந்தக் கதையின் ஆதாரத்தைக் கொண்டு அம்மன் தவமிருந்து விழித்த ஒன்பதாம் நாள் வேண்டிய வரங்கள் கொடுப்பார் என்னும் கருத்தைக் கொண்டே இவர்கள் இந்த உற்சவத்தைக் கொண்டாடுகிறார்கள்.

நம்முடைய உற்சவத்திற்கும் மூடநம்பிக்கை களுக்கும் புராணக் கதைகளுக்கும் பாமரர்களே பங்காளிகள். படித்தவர்களுக்கு இதில் வயிறு வளர்க்கும் பிரத்தியட்ச அனுகூலமிருந்தாலும் கூட இதுபோன்ற கதைகளைப் பற்றிய விவகாரங்கள் எழும்போது, தங்களுக்கெல்லாம் வேறு கருத்தை இதில் பெரியவர்கள் அமைத்திருக்கிறார்கள் என்று எதற்கும் தத்துவ நியாயம் சொல்வதுபோல், இதற்கும் ஒரு ரகசிய அர்த்தம் உண்டாம்! வேத பாராயணம், கோயிலில் நடக்கும் பூசை, ஆராதனைகள், ஒன்பது நாளும் பார்ப் பானுக்குப் போடும் சோறு, அம்மன் விழித்தவுடன் செய்யும் தானம் முதலியவைகளால் பாமரர்களுக்கு இகலோக சுகம் சித்திக்க வேண்டுமாம். அதனால் மனம் சுத்தப்பட்டுப் பின்னால் மோட்சத்திற்கு வருவார்களாம். படித்த பண்டிதர்கள் இந்த ஆடம்பரத்தில் சோறும் தட்சணையும் வாங்கிக் கொண்டாலும் அவர்கள் சொல்லும் உள் கருத் தென்னவென்றால் மகிஷாசூரன், அவன் பரிவாரங்கள் முதலியவைகள் என்பதை அஞ்ஞானமும் அதன் காரியங்களுமாகவும், பார்வதியை சித் சக்தியாகவும் அது பரம்பொருளாகிய ஆத்ம ஸாக்ஷாத்கார விசேடத்தால் அஞ்ஞானத்தை வேரறுப்பதாகவும் கொள்ள வேண்டுமாம். துர்க்காலட்சுமீ சரஸ்வதீப்யோ நம என்னும் மந்திரத்தைப் பார்ப்பானிலிருந்து அம்மனையே பிரதானமாகப் பூசிக்கும் சங்கரமடத்து சாஸ்திரிகள் வரையிலும், மக்களிடமிருந்து கிடைக்கும் வரையிலும், தங்கள் லவுகீக சுகத்திற்காக அவர்களை வேரறுக்கிறார்களே ஒழிய, அவர்களது அஞ்ஞானத்தை வேரறுப்பதாகத் தத்துவார்த்தம் சொல்லும் சமயவாதிகளெல்லாம் மகிஷாசூரனிடமல்லவா (அதாவது ஆசையில்) மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்?

முன்னொரு காலத்தில், லட்சுமிதேவி உலகில் அலர்மேலு மங்கையாக வந்து, பரமதபதவாசியாகிய விஷ்ணுவான திருப்பதி பெருமாளை அடைந்து ஆனந்திக்க, இந்த ஒன்பது நாள் தவமிருந்தாராம். இதன் முடிவில் அவர் எண்ணம் முற்றுப்பெற விவாகம் பெரிய ஆடம்பரமாக முடிந்ததாம். இந்த விசேடத்தை முன்னிட்டுத்தான் வைணவ மாத்வர்கள் இந்நாளைச் சிறப்பாகக் கொண் டாடுகிறார்கள். இந்நாள்களில் திருப்பதியில் பிரம்மோற் சவம் நடக்கிறது. பிரம்மாவின் பத்தினியான சரசுவதியும் இந்த நவராத்திரியில் தன் நாயகனை அடைந்து நிலைபெறத் தவமிருந்தாள் என்னும் கதையைக் கொண்டு, கடைசி மூன்று நாளும் சரசுவதிக்கு முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. பத்தாம் நாள் விஜயதசமி அன்று சரஸ்வதி தவம் முடிந்து சந்துஷ்டியாயிருப்பதால், அன்று வாசிப்போருக்குக் கல்வி நன்றாக வருமாம்; தொழில் செய்கிறவர்கட்குக் காரியங்கள் கைகூடி வருமாம்.

இதை நம்பி நடக்கும் நம்மைவிட, மற்றத் தேசங்களில் எல்லாம் சரஸ்வதி எந்நாளும் திருப்தியோடு கூடின சந்தோஷத்துடன் இருக்கிறாள். நம் தேசத்தில் வருடத் திற்கு ஒருநாள் தான் கண்ணைத் திறந்து திருப்திப்படு கிறாள். இதற்குக் காரணம், பார்ப்பானுக்குக் கொடுப்பது சரியாகக் கொடுக்கப்படுகிறதா? என்று பார்ப்பதற்காகவோ அல்லது பூசையின் திருப்திக் குறைவாலோ அல்லது நம்மிடம் ஆயிரமாயிரம் வருடமாக வாங்கியுண்ட நன்றி கெட்ட குணத்தை மறைப்பதற்கோ அல்லது தன்மொழி யான சமஸ்கிருத இலக்கணத்தைத் தன் முதற் பிள்ளைகள், மற்றப் பிள்ளைகளுக்கு எங்கே சொல்லி வைத்து விடுவார்களோ என்னும் அஞ்ஞானத்தாலோ என்பதை நாம் அறியோம்.

கிரேதாயுகத்தில் சுகேது என்னும் ஒரு அரசன் இருந்ததாகவும், அவன் சத்துருக்களால் அடிபட்டு காட்டை அடைந்து, காயத்தாலும், பசிப்பிணியாலும் நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டதாகவும், அங்கு வந்த அங்கிரஸ் என்னும் ரிஷி, அரசன் பெண்சாதியான சுவேதி என்பவளுக்கு லட்சுமி, சரஸ்வதி, பார்வதி இவர்கள் செய்த மாதிரி நீயும் தவம் செய்வாய் என்று இந்தப் பூசையை உபதேசித்ததாகவும், அவ்வாறே அவள் செய்து அங்கிரஸ் என்னும் புத்திரனும் பிறந்து, அவன் சத்துருக்களை ஜெயித்துத் தகப்பனுக்கு ராஜ்யத்தை வாங்கிக் கொடுத்ததாகவும் சொல்லப்படு கின்றது. நவராத்திரிக்கு இன்னும் இதுபோன்ற பல கதைகளும் உண்டு.

கிரேதாயுகம் முதற்கொண்டு, இதுநாள் பரியந்தம் செய்த பூசைகளும், மந்திரங்களும், அதைச் செய்த ஜன சமூகங் களும், நம் நாடும், அதை ஏற்றுக் கொண்ட தெய்வங்களும் அய்ந்நூறு வருடங்களாக அன்னியர் படையெடுப்பால் சின்னாபின்னப் பட்டு, வெள்ளைக்கார மந்திரத்தால் வெளியேற்றப் பட்டிருக்கையில், நமது சரஸ்வதியும், லட்சுமியும், பார்வதியும் அவர்களுக்குப் பூசையும், அதற்காகப் பார்ப்பனனுக்குப் பணமும், தட்சணையும் எதற்கு? என்று குடிஅரசு கேட்டு விட்டால், சமயவாதியும், சாஸ்திரவாதியும், அது சமயத்தை அடியோடு தூஷிக் கின்றது என்று சொல்லுவதனாலும், படித்தவர்கள் என்பவர்களான ஆங்கில, சரித்திர, சயின்ஸ், பி.ஏ., எம்.ஏ.,வாதிகளுக்குப் புத்தி இருக்கிறதா? இல்லையா? என்று தான் கேட்கிறோம்!

மேலும், விஜயதசமி அன்று சிவன் கோயிலில் பரிவேட்டை உற்சவம் என்பதாக ஒன்று நடத்துகின்ற வழக்கமுண்டு. அன்று பகவான் எழுந்தருளி வன்னி மரத்தில் அம்பு போடுவது வழக்கம். வன்னிமரத்தில் நெருப்பிருக்கிறதாம். அதில் அம்பு பாய்ச்சினால் அந்த வேகத்தால் நெருப்புண்டாகி, அந்த மரத்தை எரித்து விடுமாம். அதனால் வேட்டையாடுவோருக்கும், ராஜாக் களுக்கும் எளிதில் ஜெயத்தைக் கொடுக்குமாம். இந்தக் காரணத்தால், இந்த வேட்டைத் தினத்திற்கு விஜயதசமி அதாவது, ஜெயத்தைக் கொடுக்கும் நாள் என்று பெயர். என்றாலும், இதற்கும் உள்கருத்துண்டாம். உள்கருத்தை வைத்து வைத்துத்தான் நம் நாடு உள்ளேயே போயிற்று. பாமரர்களுக்கு உள்கருத்து ஸ்தூலமாகவும், படித்தவர் களுக்குச் சூட்சமமாகவும் இருப்பதாகச் சொல்லு கிறார்கள். (எந்தச் சூட்சுமமும் பாமரர்களைப் படித்தவன் ஏமாற்றவே உபயோகப்படுகிறதே ஒழிய, காரியத்திற்கு ஒன்றும் உபயோகப்படுவதில்லை). அதாவது, நெருப்பி லடங்கிய வன்னி மரத்தையே ஆத்மாவோடு கூடிய தேக மாகவும், அம்பை ஞானமாகவும், வேட்டையில் அம்புவிடு வதை ஞானோபதேசமாகவும், மரம் எரிந்து விழுவதை கரும சம்பந்தமானவைகளை ஞானத்தணல் சுட்டு வெண் ணீறாக்குவதாகவும் கொள்ள வேண்டுமென்பார்கள். இந்த உள்கருத்து உபதேசம் கேட்டுத்தான் ராஜவம்ச மெல்லாம் நடுத்தெருவில் நின்றதான வடதேசத்துக் கதைகள் அநேகம்.

மைசூர் மகாராஜா பரிவேட்டையால் அய்தருக்கு அடிமையானார். ஆனால், வெள்ளைக்காரப் பரிவேட்டை தான் அதை விடுவித்துக் கொடுத்தது. தஞ்சாவூர்ராஜா செய்த சரஸ்வதி பூசையும், ஆரிய பரிவேட்டையும் சரஸ்வதி மகாலில் அடுக்கி வைத்த குப்பைக் கூள ஏடுகளும், ஆயுதங்களும், முன்வாயிலில் துளசியைக் கொட்டி விட்டு, பின்வாயிலில் ராஜாவை ஓடச் செய்து விட்டது. அதுபோலவே, திப்பு காலத்தில் திருவனந்த புரத்து ராஜாவிற்கு வெள்ளைக்காரர்கள் அபயம் கொடுத் தார்களே ஒழிய, சரஸ்வதி பூசையும், பரிவேட்டையும் ஒன்றும் செய்யவே இல்லை. அந்தப்படி அபயம் கொடுத் திராவிடில், அனந்த சயனப் பிரபுவும், அவர் பெண்சாதி யும், அவர் மருமகளும் ஓடிப் போயன்றோ இருக்க வேண்டும்? அனந்தசயனப் பிரபு பின்னும் ஓடிவந்து தங்கள் சொத்தென்று, அங்கு சயனித்துக் கொண்டி ருப்பதாக இப்பொழுதும் சொல்லுகிறார்கள்.

கடவுளையும், பெரியவர்களையும் தூஷிக்கிறவர்கள் காட்டும் ஆதாரங்களையும், அதன் நியாய வாதங்களை யும் கூட்டி ஆலோசியுங்கள். சரஸ்வதியைக் கொலு விருத்தி, பெரிய உற்சவங்கள் செய்யும் நமது நாட்டில் ஆயிரத்திற்கு 50 பேருக்குக்கூட கல்வி இல்லை. சரஸ் வதியே இல்லாத நாட்டில் ஆயிரத்திற்கு 996 பேர்கள் கல்வி கற்றவர்களாக இருக்கிறார்கள்.

நாம் சரஸ்வதிக்குச் செய்த தொண்டு சாமானிய மல்லவே! ஒரு ஏட்டைக் கிழியோம்; ஒரு எழுத்தை மிதியோம்; இறைந்து கிடக்கும் இதழில் துப்போம்; படித்த ஒரு பழைய ஏட்டையும் வீசி எறியோம்; கால்பட்டால் தொட்டுக் கும்பிடுவோம்; கைபட்டால் கண்ணில் ஒத்திக் கொள்வோம்; எந்த ஏட்டிற்கும் காப்பு சொல்வோம்; செல்லரித்த ஏட்டையும் புண்ணிய தீர்த்தத்தில் கொண்டு போய் போடுவோமே ஒழிய தெருவில் போடோம்; கற்றவர் நாவின் கருத்தும், கம்பன் கவித்திறனும் அவளே என்போம். இத்தனையும் போதாமல் வருடம் ஒருதரம் பத்து நாள் பள்ளியறையில் வைத்துக் கும்பிடவும் செய்கிறோம். இத்தனையும் நாம் இங்கு செய்ய, இந்த சரஸ்வதி கொஞ்சமும் நன்றி விசுவாசம் இல்லாமல் மேனாட்டில் குடிபுகுந்த காரணம் என்ன? என்பதை வாசகர்கள் சரஸ்வதியையே கேட்கட்டும். ஏ சரஸ்வதி! மேனாட்டில் உனக்கு என்ன மரியாதை இருக்கிறது? உன்னைப் படித்து எறிகிறார்கள்; காலில் மிதிக்கிறார்கள்; செருப்புக் கட்டுகிறார்கள்; மலம் துடைக்கிறார்கள்; உன் பெயர் சொல்லுவதில்லை; நீ ஒருத்தி இருக்கின்றாய் என்றுகூட நினைப்பதில்லை; உனக்குப் பூசை இல்லை; புருஷன் இல்லை; வீணை இல்லை; எல்லா வித்தைக்கும் அவர்கள் தாங்களே எஜமானர்கள் என்கிறார்கள். எனவே நீ செய்வது நியாயமாகுமா? என்று நாங்கள் சொல்லி விட்டால், உன் பாஷையான சமஸ்கிருத இலக்கணத்தை எங்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்படாதென்று நீ சொன்னதாகச் சொல்லும் சாஸ்திரிகளே எங்களை நாஸ் திகர்கள் என்று சொல்கிறார்கள். உன் முதற்பிள்ளையான பார்ப்பனர்களின் தாசிப் பிள்ளை, அடிமை, வேலையாள், ஒழுக்கமற்றவன் என்று எங்களில் படித்த உணர்ச்சியற்ற பண்டிதர்களையும்கூட நீ சொல்லியிருப்பதாக உன் முதற் பிள்ளைகள் சொல்லும் ஏட்டைக்கூட கிழித்தெறியாமல் சற்றும் விசுவாசமற்றுப் போனாயே என்று நாங்கள் சொல்லிவிட்டால், தூஷித்தவர்களாகி விடுவோமா? நீயே சொல்லு!

நீ வாசம் செய்யும் மேனாட்டில் உனக்குப் பூசை யில்லை. நைவேத்தியமில்லை. பூசாரி, குருக்களுக்குக் காணிக்கையு மில்லை. பஞ்சமும் படியாமையுமுடைய இந்த நாட்டின் பேரில் மாத்திரம் உனக்கு வந்த வயிற் றெரிச்சல் என்ன? உன் முதற் பிள்ளைகளுக்கெல்லாம் உன் பேராலேயே அளித்தளித்து ஆண்டியானோமே என்று நாங்கள் சொல்லுவதாலேயே உன் பக்த கோடி கள், உன் புருஷனுடைய பிரம்மலோகத்திற்கும் உன் மாமனுடைய வைகுண்டத்திற்கும் உன் பாட்டனும் மகனு மான சிவனுடைய கைலாசத்திற்குப் போகும் கதவுகளை (சமயதூஷணையால்) சாத்தினவர்களாகி விடுகிறோ மாம். நீயும் உன் குடும்பத்துப் பெண்களும் குடிபோயி ருக்கும் நாட்டில் உங்கள் புருஷர்களுக்குக் கோயில் கிடையாது. கும்பாபிஷேகமில்லை. அப்படியிருக்க, நீங் களில்லாத நாட்டில் உங்களுக்குக் கோயிலும், கும்பாபி ஷேகமும், பூசையும் எதற்கு? இருக்கிற கோயில்களில் நீங்கள் குடியிருந்தால் போதாதா? காணிக்கையையும் நிறுத்தி, கும்பாபிஷேகத்தையும் விட்டு, கோயிலுக்கு எழுதி வைப்பதையும் நிறுத்திப் பணத்தையெல்லாம் படிப்பிற்கே வைத்துவிட்டுப் போங்கள் என்றால், பாமர மக் களுக்காக ஏற்பாடு செய்து வைத்த சமய ஒழுக்கங்களை யெல்லாம் தடுத்து மோட்ச வாசலை அடைக்கும் தாசர்க ளென்று எங்களை ராஜீயவாதிகள் கூடச் சொல்லலாமா?

ஆச்சாரிகளுக்கும், குருக்களுக்கும் அதைச் சேர்ந்த பார்ப்பனர்களுக்கும் கொடுப்பதை நிறுத்திவிட்டுப் பக்கத்து ஏழைக்குப் படிப்பும், தொழிலும் கற்பியுங் களென்றால் ஆச்சாரிகளையும், பெரியவர்களையும் நாங்கள் குற்றம் சொல்லுகிறவர்களாகி விடுவோமா? அறுப்பறுக்கும் காலத்தில் கருக்கரிவாள்கூட ஒரு மூலையில் கவலையற்றுத் தூங்குகிறதே! வருண பகவானுக்கும் சூரிய பகவானுக்கும் ஏற்பட்ட சண்டையில் வருண பகவான் முறியடிக்கப்பட்டு, ஓடி மறைந்த விட்டானே! சூரியனே இப்போது கழனியில் உள்ள எல்லாவற்றையும் காய்ந்து தொலைத்து விட்டானே! உன் ஆயுதங்களுக்குக் காட்டிலும் கழனியிலும்கூட வேலை யில்லை என்றால், பின்னை கருமார் வீட்டிலும் வேலை என்ன? எனவே வேலையில்லா ஆயுதத்திற்குப் பூசை ஏன்?

சரஸ்வதி மகாலும், லட்சுமி விலாசமும், பார்வதி மண்டபமும் கட்டி வைத்த தஞ்சாவூர் மகாராஜா குடும்பம் எங்கே? தப்பித் தவறி அந்த வம்சத்திற்கு ஒரு டிப்டி சூப்ரண்டெண்ட் வேலைக்குக்கூட எவ்வளவு கஷ்டமாய் இருக்கிறது? காரணமென்ன? வீண் பூசைகளும், கோயில் கும்பாபிஷேகமும் அல்லவா? அவர்கள் செய்த பிராமண போஜனமும், தட்சணையும், கோயில் பூசையும் என்ன பலனை அளித்தது? சரஸ்வதி பூசையின் கொலு வால் அல்லவா நாயுடுகளின் அரசாட்சி தஞ்சாவூரில் ஒழிந்தது? கிளைவும், டூப்ளேயும் எந்தச் சரஸ்வதியைப் பூசித்தார்கள்? அவரவர்கள் முயற்சியும், கடமையும், எந்தக் கஷ்டத்திலும் செய்து முடிக்கும் தைரியமும் இருந் தால் எல்லா லட்சுமியும் அங்கே வந்து தீர்வார்கள். இதுவே உலக அனுபோகமும் சாஸ்திரத்தின் கருத்துமாகும்.
நன்றி -நாத்திகம் பிளாக்கர்.

ஆயுத பூஜை உண்மையான வரலாறு ஆதாரத்துடன்




ஆயுத பூசை உண்மையான வரலாறு ஆதாரத்துடன்

தாழ்த்தப்பட்டவர்கள் என்று இந்து மதத்தால் சொல்லப்படுபவர்கள் யார்????

நேரம் ஒதுக்கிப் படிக்கவும்.
மறைக்கப்பட்ட வரலாறுகள்:-

சுமார் 4000 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் தமிழ் நாக அரச வம்சத்தினர் சிறப்பாக ஆட்சி செய்து வந்தனர்....

*நாக வம்சத்தினர் காலத்தில்தான் அரப்பா,மொகஞ்சதரோ,காளிபங்கன், போன்ற சிந்து சமவெளி ,நகரங்கள் உருவாக்கப்பட்டு..செழிப்பாக இருந்தது...*


*அப்போது,நாடோடிகளாக,ஆடு,மாடுகளோடு வந்த ,வெளிறிய ஆரியர்கள் ..இங்கு நிரந்தரமாகக் குடியேற வேண்டும் என ஆசைப்பட்டனர்..*

*நீண்ட  காலப் போரில் ஈடுபட்டனர்.நாக அரசர்களிடம் பணியில் அமர்ந்து சூழ்ச்சி செய்து,அரசர்களிடையே பிரிவினையை உருவாக்கினர்...*

*வெள்ளையர்கள் போல் பிரித்தாளும் கொள்கையைக் கடைப்பிடித்து...சில ராஜ்யங்களைக் கைப்பற்றினர்.*

*பிறகு வேதங்களைச் சொல்லி, அரசர்களிடம் , நாங்கள் கடவுள் பாஷை தெரிந்தவர்கள் என சொல்லி பிராமணர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது..*

*பசு மாடுகள், குதிரைகள் போன்ற விலங்குகளைப் பலியிட்டு, யாக குண்டத்தில் சிறிது போட்டு யாகம் வளர்த்தனர்...பலியான மிருகங்களை சமைத்து விருந்துண்பார்கள்.*

*ரிக் வேதங்களில் ,மாட்டு இறைச்சியை எவ்வாறு சமைத்து உன்ன வேண்டும் என்று கூட குறிப்பிடப் பட்டுள்ளது..*

*மாட்டு இறைச்சியை முதலில் அதிகமாக உண்டவர்கள் ஆரியர்களும், அரசர்களும் தான்..*

*பிறகு நர பலி, பல்வேறு யாகம் ,சடங்குகளை திணித்து, அரசர்களை, மக்களை அடிமை படுத்தினார்கள்.*

*அரசவைகளில் அலோசகர்களாக இருந்து, மறைமுகமாக ஆட்சி செய்தனர்...*

*பிறகு வரனாசிரமத்தை நிறுவி பிராமணன், சத்ரியன்,வைசியன், சூத்திரன் போன்ற பிரிவுகளை உருவாக்கினர்...*

*அப்போது, சாக்கிய குலத்தைச் சார்ந்த சித்தார்த்தன்...*

*தந்தை பெரியார் போல், சடங்கு,யாகம், உயிர்ப் பலி அனைத்தையும் எதிர்த்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்..*

*அதன் பிறகு தான்,புத்த மதம் உருவாகி வளரத் தொடங்கியது...*

*புத்த மடங்கள் நிறுவப்பப்பட்டன....*

*சாம்ராட் அசோகா,கலிங்கப் போருக்குப்வபின் மனமாற்றம் அடைந்து, புத்தம் தழுவினார்..*

*பிறகு வேதமதங்களில் உள்ள தவறான, மூடநம்பிக்கை சடங்குகளை ஒழித்தார்....*

*அப்போது ,வாழ்விழந்த ஆரியர்களுக்கு மெளரிய வம்ச மன்னர்கள்,வரிச் சலுகை வழங்கி, அவர்களுக்கு அக்ராஹாரங்கள் (வரி செலுத்த இயலாதவர்கள்) உருவாக்கி, காத்து வந்தனர், மற்றும் அரச பதவிகளும் சலுகை அடிப்படையில் முக்கியத்துவம் தரப்பட்டது...*

*இந்தியா, இலங்கை,ஆப்பிரிக்கா,சீனா, மங்கோலியா,ரஷ்யா,தென் கிழக்கு ஆசிய நாடுகள்வரை புத்தம் பரவிகொண்டு இருந்தது...*

*700 வருடம் ஆட்சியில் இருந்த மெளரிய பேரரசு ,இந்தியாவின் பொற்காலம் எனப்பட்டது...*

*புத்த மதத்தை அழிக்க முடியாததால், ஆரியர்களும் புத்த மதத்தை ஏற்றனர்..*

*இந்தியா முழுவதும் புத்த மதம் அரச மதமாக்கப்பட்டு, மக்கள் அனைவரும் புத்தம் தழுவினர்..சமணமும் செல்வாக்கோடு இருந்தது.*

*அந்த கால கட்டத்தில் தான் நாகார்ஜுனன் என்ற பிராமன மன்னன் புத்தர் விஷ்ணுவின் அவதாரம் என சித்தரித்து,புத்த மதத்தில் பிளவை ஏற்படுத்தினான்..*

*பிராமணர் உருவாக்கிய புத்தமதப் பிரிவிற்கு "மஹாயானம் புத்தம்" என்றும்,*
*உண்மையான புத்த கொள்கைகளைப் பின்பற்றியவர்களின் பிரிவைக் குறிக்க "ஹீனயானம்" என்றும் அழைத்தனர்.*

*ஹீனயானம் என்பது ஈன பிறவி..அதாவது தாழ்ந்த ,குறையுடைய புத்தம் என்ற பொருளில், இகழ்ந்தனர்..*
*புத்த மதத்தை அழிவுப் பாதைக்கு எடுத்துச் செல்ல முயன்றனர்...*

மெளரிய வம்சப் பேரரசின், இறுதி மன்னன் பிராகிருதன்,இவர்,
புஷ்ய மித்ர சுங்கன் என்ற, ஆரிய இனப் படைத் தளபதியால், சூழ்ச்சியால் கொல்லப்பட்டார்....

புஷ்ய மித்ரன் ,சுங்க வம்சத்தை நிறுவினான் ..

அப்போது, மீண்டும் வேத மதம் எழத் தொடங்கியது...

இந்தக் கால கட்டத்தில் தான் இதிகாசங்கள், புராணங்கள், கடவுள் கதைகள் எழுதப்பட்டு..

*புத்த விகார்களை அழித்து கோவில்கள் கட்டப்பட்டு வந்தன...*

*புஷ்ய மித்திர சுங்கன் ஆட்சியில், புத்த பிக்ஷுக்களி்ன் தலைக்குப் பரிசுகள் அறிவித்து, ஒரு இனப் படு கொலையை நடத்தினான்..*

எப்படியென்றால்,புத்த பிக்ஷுக்களின் தலை, வீட்டின் முன்புறம் தொங்கவிடப்பட்டால் பரிசு வழங்கப்பட்டது.

அந்த வழக்கம்  தான்,இப்போது நாம் வைக்கும் திருஷ்டி பூசணிக்காய் ஆக மாறி உள்ளது..

குப்த பேரரசு உருவான பிறகுதான் மிகுந்த எழுச்சி பெற்றது ,வேத மதம்... புத்தமும்,சமணமும் திட்டமிட்டே அழிக்கப் பட்டன.

*அந்தக் காலகட்டத்தில் தான் நாக அரசர்கள் சூழ்ச்சிகள் மூலம் சாகடிக்கப்பட்டனர்..*
ஆரியர்களை, கடவுள் அவதாரமாகவும், நாக அரசர்களை அசுரர்களாகவும் சித்ததரித்துக் கதைகள் எழுதப்பட்டன...
"சுரா" என்ற மது பானத்தை அருந்தாத புத்த பஞ்ச சீல கொள்கைகளைப் பின்பற்றி வந்த நாக பௌத்தர்கள் , அசுரர்கள் எனப்பட்டனர்...

*அசுரர்கள் என்றால் சுரா என்ற மது பானத்தை அருந்தாதவர்கள் என்று பொருள்.(உங்கள் புரிதலுக்காக, சுத்தம்Xஅசுத்தம் என்ற எதிர்ச்சொல்லின்  பொருளைப் பாருங்கள்.)*

நல்லெண்ணம் கொண்ட ,
நாக வம்ச அரசர்களைக் கொடுமையானவர்கள் என்ற பிம்பத்தை ஏற்படுத்த, கொடிய விசமுள்ள பாம்புகளை நாகம் என்று அழைத்தனர்..
இந்திய முழுமையும் வேத மதம் பரப்பப் பட்டது...

*அரச மரத்தடியில் உள்ள புத்தர் சிலைகளை எல்லாம்,அழிக்க வேண்டும் என்பதற்காக, அசிங்க படுத்தி புத்தர் தலையை வெட்டி, யானையின் தலை போல் செய்து புத்த சிலைகளை ஆற்றில் போட்டு அழித்தனர்..*

அது தான், தற்போதைய விநாயகர் சிலை ஊர்வலம் என்ற பெயரில் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைத்து கொண்டு இருக்கின்றனர்.

*அழகான புத்த விகார் களை அசிங்க படுத்த, விகார் என்றால், விகாரம் என்றும் அசிங்கமான ,அருவருப்பான என்ற பொருளிலும் பயன்படுத்தப் படுகிறது.*

புத்த பிக்சு க்களை இகழ்வதற்காக,
அவர்களைப் பிச்சை என்று அசிங்கப்படுத்தி, பிச்சைக்காரர்கள் என்று அழைத்தனர்..

மக்கள் மிரட்டப்பட்டு வேத மதத்தை ஏற்க வலியுறுத்தினர்..

வேத மதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் தான் இப்போது உள்ள பிற்படுத்த பட்ட மக்களாகிய சூத்திரர்கள்.

அந்தக் கால கட்டத்தில் இந்து மதத்தை ஏற்காத ,பூர்விக குடிகளாகிய குறிப்பிட்ட மக்கள், புத்த மதத்தைத் தொடர்ந்து பின்பற்றியதால்...
அவர்கள் தான் பஞ்சமர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

அதாவது, புத்தரின் பஞ்ச சீல கொள்கையைக் கடைப்பிடித்து வாழ்பவர்கள்...

அவர்கள் புத்த மதத்தைத் தழுவி இருந்ததால் தான், பஞ்சமர்கள் கோவிலுக்குள், மற்றும் அவர்கள் தெருக்களுக்குள் , செல்லாமல் தனியாக சுயமரியாதையுடன் வாழ்ந்தனர்...

தீண்ட முடியாதவர்களாக திறமையுடன் வாழ்ந்து வந்தனர்..

சில நூறு ஆண்டு காலம் சென்ற பிறகு மக்கள் புத்த சிந்தணைகள்
மறக்கப்பட்டு வாழ்ந்து வந்தனர்..

பிறகு பஞ்சமர்கள் சொத்துக்களைப் பிடுங்கி அரசுடமையாக்கி, நில பிரபுக்களிடம் ஒப்படைத்தனர்...

பிறகு ,ஏழ்மையின் காரணமாக வேறு வழியின்றி கொத்ததடிமைகளாக்கப்பட்டு...

இழி தொழில் செய்யப் பணித்தனர்..

அப்போது உணவுக்கு வழியின்றி இருத்த பஞ்சமார்களுக்கு,இறந்த மாடுகளை வேறு வழி இல்லாமல், உன்ன வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதையே காரணம் காட்டித்
 தீண்ட தகாதவர்களாக, பஞ்சமர்களை ஊரைவிட்டு சேரியில் ஒதுக்கி வைத்தனர்.

"பஞ்சமர்களை" (பட்டியல் இன மக்களை) அவர்கள் வெள்ளையன் வரும் வரை "இந்து" மதத்தில் சேர்க்கவும் இல்லை.

1865 ஆம் ஆண்டு வரை அதாவது 2000 வருடங்களாக,இந்து மனு தர்ம சாத்திரம் தான் ,இந்து மத சட்டமாகவும், அரசு சட்டமாகவும் இருந்துவந்தது...

அதனால் தான்...

சூத்திரர்களுக்கும், பெண்களுக்கும் கல்வி மறுக்கப்பட்டு அடிமைகளாகவே இருந்தனர்...

வெள்ளையர்கள் வந்து பிறகு இந்து மத சட்டம் அநீதியாக உள்ளது என்றும் ,

சட்டடத்தை மாற்றி அமைத்தனர்.

பிராமணர் மற்றும் உயர் சாதியினருக்கு மட்டும் தான் கல்வி, என்ற நிலை இருந்தது...

அதுவும் வேதம் , கிரக வானவியல்,புரோகிதம் ஜோதிடம்,புராணங்கள் போன், சமுதாய முன்னேற்றத்திற்குப் பயன்படாத கல்வி முறைகள் இருந்ன...

இதைப் பார்த்த ஆங்கிலேயன் மெக்காலே என்பவர் அனைவருக்குமே கல்வி வேண்டும், என கூறி ,பள்ளிக் கல்வி முறையை ஏற்படுத்தினார்..
*
இதற்கு, இந்து மதவாதிகள் இடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது...

மேலும் , ஆங்கிலேயர்கள்  அனைவருக்கும் ஒரே வகையில் குற்றத் தண்டனைகள் இருக்கவேண்டும் என்று சட்ட திருத்தும் செய்தனர்..

இதற்கு முன்பு வரை, பிராமணர்களுக்கு மரணதண்டனை என்பதே கிடையாது..

1856-ல் பன்றி கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்ட போது,  இந்து மதத்தைச் சேர்ந்த சிப்பாய்கள் எங்களால் இதைப் பயன்படுத்த முடியாது எனக் கூறி போராட்டம் செய்தனர்..(சிப்பாய் கலகம்)

இது போல, இந்து மத சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஆங்கிலேயன் இறங்கியதால் தான் ...

பிராமணர்களுக்கு சாதகமான, இந்து மத சட்டத்தை நிலை நிறுத்தவும்,
வருணாசிரம தர்மத்தை காப்பாற்றவும
உயர் சாதி இந்துக்கள் " சுயர்ஜ்யம் எனது பிறப்புரிமை" எனக் கோஷமிட்டு ஆங்கிலேயனை எதிர்க்க ஆரம்பித்தனர்..

எனவே ,இந்திய விடுதலை போராட்டம் என்பது ஒட்டு மொத்த மக்களுக்கான விடுதலைக்கான போராட்டம் இல்லை...

உயர் சாதி இந்துக்கள்,வருனாசிராம தர்மத்தை நிலை நிறுத்த வேண்டும் என்றுதான் போராடினார்கள்..

அதன் பிறகு விடுதலை அடைந்த பிறகு...

*அண்ணல் கொண்டு வந்த இந்துமத சட்டத்தை உயர் சாதி இந்துக்கள் கடுமையாக எதிர்த்தனர்..*

அதனால் அண்ணல் அவர்கள் சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார்..

இந்து சட்ட மசோதாவின் அம்சங்கள்:--
------------------------------------------------------------

1.பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசு பணிகளில்  இட ஒதுக்கீடு.
2.பெண்களுக்கு கல்வியுரிமை.
3.பெண்களுக்கு சொத்தில் பங்கு.
4.பெண்களுக்கு அரசியலில் இட ஒதுக்கீடு.
5. பெண்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமை
6.பல தார திருமணம் தடை செய்யப்படும்.

பிறகு, மிகுந்த எதிர்ப்புகளுக்கிடையே
1956-ல் சட்டம் நிறைவேறியது...

இது எந்த ஒரு குறிப்பிட்ட மக்களுக்கும் எதிரான பதிவு இல்லை ....

உண்மை வரலாறு மட்டுமே...

இவை அனைத்தும் மக்களிடையே மறைக்கப்பட்டுள்ளன...

சுருக்கமாக எழுதி  உள்ளேன்.நா.கௌதமர்

ஆதார நூல்கள்:----
--------------------------

*1.இந்திய தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் ,அழிந்தனவும்.தேவிபிரசாத் சட்டோபத்தியாயா*

*2.அம்பேத்கர் நூல் தொகுதிகள்-7,13,14.*

*3.இந்திய தத்துவ இயல்- தேவிபிரசாத் சட்டோபத்தியாயா.*

*4.ரிக் வேத கால ஆரியர்கள்-ராகுல சாங்கிருத்தியாயன்.*

*5.உலக வரலாறு-ஜவகர்லால் நேரு.*

*6.யுவான் சுவாங் -தமிழில் ராகவன்.*

*7.பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு  பொன்னேடுகள். வீர.சாவர்க்கர்.*

*8.பாகியான்.*

*9.புத்த சரித்தரம் மற்றும் புத்த தருமம் - உ. வே .சாமிநாதர்.*

*10.அபிதான சிந்தாமணி-சிங்கார வேலன்.*

*11.இந்தியாவின் வரலாறு- பொன்காரத் லேவின்.*

*12.அசோகர் இந்தியாவின் பௌத்த பேரரசர்- வின்சென்ட். எ.ஸ்மித்*

*13.உலகாயுதம் - தேவிபிரசாத் சட்டோபத்தியாயா.*

இன்னும் பல வரலாற்று ஆய்வாளர்கள்  நூல்கள் உள்ளன...

இன்று வரை யாராலும் இந்த வரலாறை மறுத்து கூற இயலவில்லை என்பது தான் உண்மை.*ஆயுத பூசை உண்மையான*

தாழ்த்தப்பட்டவர்கள் என்று இந்து மதத்தால் சொல்லப்படுபவர்கள் யார்????

நேரம் ஒதுக்கிப் படிக்கவும்.
மறைக்கப்பட்ட வரலாறுகள்:-

சுமார் 4000 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் தமிழ் நாக அரச வம்சத்தினர் சிறப்பாக ஆட்சி செய்து வந்தனர்....

*நாக வம்சத்தினர் காலத்தில்தான் அரப்பா,மொகஞ்சதரோ,காளிபங்கன், போன்ற சிந்து சமவெளி ,நகரங்கள் உருவாக்கப்பட்டு..செழிப்பாக இருந்தது...*


*அப்போது,நாடோடிகளாக,ஆடு,மாடுகளோடு வந்த ,வெளிறிய ஆரியர்கள் ..இங்கு நிரந்தரமாகக் குடியேற வேண்டும் என ஆசைப்பட்டனர்..*

*நீண்ட  காலப் போரில் ஈடுபட்டனர்.நாக அரசர்களிடம் பணியில் அமர்ந்து சூழ்ச்சி செய்து,அரசர்களிடையே பிரிவினையை உருவாக்கினர்...*

*வெள்ளையர்கள் போல் பிரித்தாளும் கொள்கையைக் கடைப்பிடித்து...சில ராஜ்யங்களைக் கைப்பற்றினர்.*

*பிறகு வேதங்களைச் சொல்லி, அரசர்களிடம் , நாங்கள் கடவுள் பாஷை தெரிந்தவர்கள் என சொல்லி பிராமணர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது..*

*பசு மாடுகள், குதிரைகள் போன்ற விலங்குகளைப் பலியிட்டு, யாக குண்டத்தில் சிறிது போட்டு யாகம் வளர்த்தனர்...பலியான மிருகங்களை சமைத்து விருந்துண்பார்கள்.*

*ரிக் வேதங்களில் ,மாட்டு இறைச்சியை எவ்வாறு சமைத்து உன்ன வேண்டும் என்று கூட குறிப்பிடப் பட்டுள்ளது..*

*மாட்டு இறைச்சியை முதலில் அதிகமாக உண்டவர்கள் ஆரியர்களும், அரசர்களும் தான்..*

*பிறகு நர பலி, பல்வேறு யாகம் ,சடங்குகளை திணித்து, அரசர்களை, மக்களை அடிமை படுத்தினார்கள்.*

*அரசவைகளில் அலோசகர்களாக இருந்து, மறைமுகமாக ஆட்சி செய்தனர்...*

*பிறகு வரனாசிரமத்தை நிறுவி பிராமணன், சத்ரியன்,வைசியன், சூத்திரன் போன்ற பிரிவுகளை உருவாக்கினர்...*

*அப்போது, சாக்கிய குலத்தைச் சார்ந்த சித்தார்த்தன்...*

*தந்தை பெரியார் போல், சடங்கு,யாகம், உயிர்ப் பலி அனைத்தையும் எதிர்த்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்..*

*அதன் பிறகு தான்,புத்த மதம் உருவாகி வளரத் தொடங்கியது...*

*புத்த மடங்கள் நிறுவப்பப்பட்டன....*

*சாம்ராட் அசோகா,கலிங்கப் போருக்குப்வபின் மனமாற்றம் அடைந்து, புத்தம் தழுவினார்..*

*பிறகு வேதமதங்களில் உள்ள தவறான, மூடநம்பிக்கை சடங்குகளை ஒழித்தார்....*

*அப்போது ,வாழ்விழந்த ஆரியர்களுக்கு மெளரிய வம்ச மன்னர்கள்,வரிச் சலுகை வழங்கி, அவர்களுக்கு அக்ராஹாரங்கள் (வரி செலுத்த இயலாதவர்கள்) உருவாக்கி, காத்து வந்தனர், மற்றும் அரச பதவிகளும் சலுகை அடிப்படையில் முக்கியத்துவம் தரப்பட்டது...*

*இந்தியா, இலங்கை,ஆப்பிரிக்கா,சீனா, மங்கோலியா,ரஷ்யா,தென் கிழக்கு ஆசிய நாடுகள்வரை புத்தம் பரவிகொண்டு இருந்தது...*

*700 வருடம் ஆட்சியில் இருந்த மெளரிய பேரரசு ,இந்தியாவின் பொற்காலம் எனப்பட்டது...*

*புத்த மதத்தை அழிக்க முடியாததால், ஆரியர்களும் புத்த மதத்தை ஏற்றனர்..*

*இந்தியா முழுவதும் புத்த மதம் அரச மதமாக்கப்பட்டு, மக்கள் அனைவரும் புத்தம் தழுவினர்..சமணமும் செல்வாக்கோடு இருந்தது.*

*அந்த கால கட்டத்தில் தான் நாகார்ஜுனன் என்ற பிராமன மன்னன் புத்தர் விஷ்ணுவின் அவதாரம் என சித்தரித்து,புத்த மதத்தில் பிளவை ஏற்படுத்தினான்..*

*பிராமணர் உருவாக்கிய புத்தமதப் பிரிவிற்கு "மஹாயானம் புத்தம்" என்றும்,*
*உண்மையான புத்த கொள்கைகளைப் பின்பற்றியவர்களின் பிரிவைக் குறிக்க "ஹீனயானம்" என்றும் அழைத்தனர்.*

*ஹீனயானம் என்பது ஈன பிறவி..அதாவது தாழ்ந்த ,குறையுடைய புத்தம் என்ற பொருளில், இகழ்ந்தனர்..*
*புத்த மதத்தை அழிவுப் பாதைக்கு எடுத்துச் செல்ல முயன்றனர்...*

மெளரிய வம்சப் பேரரசின், இறுதி மன்னன் பிராகிருதன்,இவர்,
புஷ்ய மித்ர சுங்கன் என்ற, ஆரிய இனப் படைத் தளபதியால், சூழ்ச்சியால் கொல்லப்பட்டார்....

புஷ்ய மித்ரன் ,சுங்க வம்சத்தை நிறுவினான் ..

அப்போது, மீண்டும் வேத மதம் எழத் தொடங்கியது...

இந்தக் கால கட்டத்தில் தான் இதிகாசங்கள், புராணங்கள், கடவுள் கதைகள் எழுதப்பட்டு..

*புத்த விகார்களை அழித்து கோவில்கள் கட்டப்பட்டு வந்தன...*

*புஷ்ய மித்திர சுங்கன் ஆட்சியில், புத்த பிக்ஷுக்களி்ன் தலைக்குப் பரிசுகள் அறிவித்து, ஒரு இனப் படு கொலையை நடத்தினான்..*

எப்படியென்றால்,புத்த பிக்ஷுக்களின் தலை, வீட்டின் முன்புறம் தொங்கவிடப்பட்டால் பரிசு வழங்கப்பட்டது.

அந்த வழக்கம்  தான்,இப்போது நாம் வைக்கும் திருஷ்டி பூசணிக்காய் ஆக மாறி உள்ளது..

குப்த பேரரசு உருவான பிறகுதான் மிகுந்த எழுச்சி பெற்றது ,வேத மதம்... புத்தமும்,சமணமும் திட்டமிட்டே அழிக்கப் பட்டன.

*அந்தக் காலகட்டத்தில் தான் நாக அரசர்கள் சூழ்ச்சிகள் மூலம் சாகடிக்கப்பட்டனர்..*
ஆரியர்களை, கடவுள் அவதாரமாகவும், நாக அரசர்களை அசுரர்களாகவும் சித்ததரித்துக் கதைகள் எழுதப்பட்டன...
"சுரா" என்ற மது பானத்தை அருந்தாத புத்த பஞ்ச சீல கொள்கைகளைப் பின்பற்றி வந்த நாக பௌத்தர்கள் , அசுரர்கள் எனப்பட்டனர்...

*அசுரர்கள் என்றால் சுரா என்ற மது பானத்தை அருந்தாதவர்கள் என்று பொருள்.(உங்கள் புரிதலுக்காக, சுத்தம்Xஅசுத்தம் என்ற எதிர்ச்சொல்லின்  பொருளைப் பாருங்கள்.)*

நல்லெண்ணம் கொண்ட ,
நாக வம்ச அரசர்களைக் கொடுமையானவர்கள் என்ற பிம்பத்தை ஏற்படுத்த, கொடிய விசமுள்ள பாம்புகளை நாகம் என்று அழைத்தனர்..
இந்திய முழுமையும் வேத மதம் பரப்பப் பட்டது...

*அரச மரத்தடியில் உள்ள புத்தர் சிலைகளை எல்லாம்,அழிக்க வேண்டும் என்பதற்காக, அசிங்க படுத்தி புத்தர் தலையை வெட்டி, யானையின் தலை போல் செய்து புத்த சிலைகளை ஆற்றில் போட்டு அழித்தனர்..*

அது தான், தற்போதைய விநாயகர் சிலை ஊர்வலம் என்ற பெயரில் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைத்து கொண்டு இருக்கின்றனர்.

*அழகான புத்த விகார் களை அசிங்க படுத்த, விகார் என்றால், விகாரம் என்றும் அசிங்கமான ,அருவருப்பான என்ற பொருளிலும் பயன்படுத்தப் படுகிறது.*

புத்த பிக்சு க்களை இகழ்வதற்காக,
அவர்களைப் பிச்சை என்று அசிங்கப்படுத்தி, பிச்சைக்காரர்கள் என்று அழைத்தனர்..

மக்கள் மிரட்டப்பட்டு வேத மதத்தை ஏற்க வலியுறுத்தினர்..

வேத மதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் தான் இப்போது உள்ள பிற்படுத்த பட்ட மக்களாகிய சூத்திரர்கள்.

அந்தக் கால கட்டத்தில் இந்து மதத்தை ஏற்காத ,பூர்விக குடிகளாகிய குறிப்பிட்ட மக்கள், புத்த மதத்தைத் தொடர்ந்து பின்பற்றியதால்...
அவர்கள் தான் பஞ்சமர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

அதாவது, புத்தரின் பஞ்ச சீல கொள்கையைக் கடைப்பிடித்து வாழ்பவர்கள்...

அவர்கள் புத்த மதத்தைத் தழுவி இருந்ததால் தான், பஞ்சமர்கள் கோவிலுக்குள், மற்றும் அவர்கள் தெருக்களுக்குள் , செல்லாமல் தனியாக சுயமரியாதையுடன் வாழ்ந்தனர்...

தீண்ட முடியாதவர்களாக திறமையுடன் வாழ்ந்து வந்தனர்..

சில நூறு ஆண்டு காலம் சென்ற பிறகு மக்கள் புத்த சிந்தணைகள்
மறக்கப்பட்டு வாழ்ந்து வந்தனர்..

பிறகு பஞ்சமர்கள் சொத்துக்களைப் பிடுங்கி அரசுடமையாக்கி, நில பிரபுக்களிடம் ஒப்படைத்தனர்...

பிறகு ,ஏழ்மையின் காரணமாக வேறு வழியின்றி கொத்ததடிமைகளாக்கப்பட்டு...

இழி தொழில் செய்யப் பணித்தனர்..

அப்போது உணவுக்கு வழியின்றி இருத்த பஞ்சமார்களுக்கு,இறந்த மாடுகளை வேறு வழி இல்லாமல், உன்ன வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதையே காரணம் காட்டித்
 தீண்ட தகாதவர்களாக, பஞ்சமர்களை ஊரைவிட்டு சேரியில் ஒதுக்கி வைத்தனர்.

"பஞ்சமர்களை" (பட்டியல் இன மக்களை) அவர்கள் வெள்ளையன் வரும் வரை "இந்து" மதத்தில் சேர்க்கவும் இல்லை.

1865 ஆம் ஆண்டு வரை அதாவது 2000 வருடங்களாக,இந்து மனு தர்ம சாத்திரம் தான் ,இந்து மத சட்டமாகவும், அரசு சட்டமாகவும் இருந்துவந்தது...

அதனால் தான்...

சூத்திரர்களுக்கும், பெண்களுக்கும் கல்வி மறுக்கப்பட்டு அடிமைகளாகவே இருந்தனர்...

வெள்ளையர்கள் வந்து பிறகு இந்து மத சட்டம் அநீதியாக உள்ளது என்றும் ,

சட்டடத்தை மாற்றி அமைத்தனர்.

பிராமணர் மற்றும் உயர் சாதியினருக்கு மட்டும் தான் கல்வி, என்ற நிலை இருந்தது...

அதுவும் வேதம் , கிரக வானவியல்,புரோகிதம் ஜோதிடம்,புராணங்கள் போன், சமுதாய முன்னேற்றத்திற்குப் பயன்படாத கல்வி முறைகள் இருந்ன...

இதைப் பார்த்த ஆங்கிலேயன் மெக்காலே என்பவர் அனைவருக்குமே கல்வி வேண்டும், என கூறி ,பள்ளிக் கல்வி முறையை ஏற்படுத்தினார்..
*
இதற்கு, இந்து மதவாதிகள் இடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது...

மேலும் , ஆங்கிலேயர்கள்  அனைவருக்கும் ஒரே வகையில் குற்றத் தண்டனைகள் இருக்கவேண்டும் என்று சட்ட திருத்தும் செய்தனர்..

இதற்கு முன்பு வரை, பிராமணர்களுக்கு மரணதண்டனை என்பதே கிடையாது..

1856-ல் பன்றி கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்ட போது,  இந்து மதத்தைச் சேர்ந்த சிப்பாய்கள் எங்களால் இதைப் பயன்படுத்த முடியாது எனக் கூறி போராட்டம் செய்தனர்..(சிப்பாய் கலகம்)

இது போல, இந்து மத சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஆங்கிலேயன் இறங்கியதால் தான் ...

பிராமணர்களுக்கு சாதகமான, இந்து மத சட்டத்தை நிலை நிறுத்தவும்,
வருணாசிரம தர்மத்தை காப்பாற்றவும
உயர் சாதி இந்துக்கள் " சுயர்ஜ்யம் எனது பிறப்புரிமை" எனக் கோஷமிட்டு ஆங்கிலேயனை எதிர்க்க ஆரம்பித்தனர்..

எனவே ,இந்திய விடுதலை போராட்டம் என்பது ஒட்டு மொத்த மக்களுக்கான விடுதலைக்கான போராட்டம் இல்லை...

உயர் சாதி இந்துக்கள்,வருனாசிராம தர்மத்தை நிலை நிறுத்த வேண்டும் என்றுதான் போராடினார்கள்..

அதன் பிறகு விடுதலை அடைந்த பிறகு...

*அண்ணல் கொண்டு வந்த இந்துமத சட்டத்தை உயர் சாதி இந்துக்கள் கடுமையாக எதிர்த்தனர்..*

அதனால் அண்ணல் அவர்கள் சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார்..

இந்து சட்ட மசோதாவின் அம்சங்கள்:--
------------------------------------------------------------

1.பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசு பணிகளில்  இட ஒதுக்கீடு.
2.பெண்களுக்கு கல்வியுரிமை.
3.பெண்களுக்கு சொத்தில் பங்கு.
4.பெண்களுக்கு அரசியலில் இட ஒதுக்கீடு.
5. பெண்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமை
6.பல தார திருமணம் தடை செய்யப்படும்.

பிறகு, மிகுந்த எதிர்ப்புகளுக்கிடையே
1956-ல் சட்டம் நிறைவேறியது...

இது எந்த ஒரு குறிப்பிட்ட மக்களுக்கும் எதிரான பதிவு இல்லை ....

உண்மை வரலாறு மட்டுமே...

இவை அனைத்தும் மக்களிடையே மறைக்கப்பட்டுள்ளன...

சுருக்கமாக எழுதி  உள்ளேன்.நா.கௌதமர்

ஆதார நூல்கள்:----
--------------------------

*1.இந்திய தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் ,அழிந்தனவும்.தேவிபிரசாத் சட்டோபத்தியாயா*

*2.அம்பேத்கர் நூல் தொகுதிகள்-7,13,14.*

*3.இந்திய தத்துவ இயல்- தேவிபிரசாத் சட்டோபத்தியாயா.*

*4.ரிக் வேத கால ஆரியர்கள்-ராகுல சாங்கிருத்தியாயன்.*

*5.உலக வரலாறு-ஜவகர்லால் நேரு.*

*6.யுவான் சுவாங் -தமிழில் ராகவன்.*

*7.பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு  பொன்னேடுகள். வீர.சாவர்க்கர்.*

*8.பாகியான்.*

*9.புத்த சரித்தரம் மற்றும் புத்த தருமம் - உ. வே .சாமிநாதர்.*

*10.அபிதான சிந்தாமணி-சிங்கார வேலன்.*

*11.இந்தியாவின் வரலாறு- பொன்காரத் லேவின்.*

*12.அசோகர் இந்தியாவின் பௌத்த பேரரசர்- வின்சென்ட். எ.ஸ்மித்*

*13.உலகாயுதம் - தேவிபிரசாத் சட்டோபத்தியாயா.*

இன்னும் பல வரலாற்று ஆய்வாளர்கள்  நூல்கள் உள்ளன...

இன்று வரை யாராலும் இந்த வரலாறை மறுத்து கூற இயலவில்லை என்பது தான் உண்மை.

செவ்வாய், 1 அக்டோபர், 2019

#நாதஸ்வரம்


"நாதஸ்வரம்'' என்ற வட மொழிச் சொல்லினால் நாம் வழங்கும் தமிழருக்கே உரித்தான சிறப்பான இசைக் கருவி"வங்கியம்'என்று பழங்காலத்தில் வழங்கப்பட்டது.சிலப்பதிகாரத்தில் அரங்கேற்றக் கதையில் இளங்கோவடிகள் குறிப்பிடும் வங்கியம் நாதஸ்வரமே என உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் விளக்குகிறார்.தமிழ்நாட்டில் இலங்கையில்,தமிழர் கலாசாரத்தில் மிகவும் புகழ் பெற்ற இசைக் கருவியாக விளங்குவது நாதஸ்வர இசைக்கருவியாகும்.தமிழக மக்கள் பெருமையோடு சொந்தம் பாராட்டுகிற வாத்தியமான நாகஸ்வரம் திருவிழாக்களிலும்,திருமண வைபவங்களிலும், திருக்கோயில் வழிபாடுகளிலும்,
இறைவனின் திருவீதியுலாக்களிலும்,உறுமி மேளம்,நையாண்டி மேளம் போன்ற கிராமிய இசை நிகழ்ச்சிகளிலும் மிகவும் சிறப்பாக இசைக்கப்படுகிறது. இது 'இராஜவாத்தியம்' என்றும், 'மங்களகரமான வாத்தியம்' என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழர்கள் கொண்டாடும் விழாக்கள் யாவற்றிலும் நாகஸ்வர இசையைக் கேட்கலாம்.

நாதசுவரம் துளைக்கருவி வகையைச் சேர்ந்த ஓர் இசைக் கருவியாகும். இது  நாதஸ்வரம், நாதசுரம், நாகசுரம், நாகஸ்வரம், நாயனம் என்று பலவாறு அழைக்கப்படுவது உண்டு.

தெய்வீகமான கர்நாடக இசையை இன்றளவும் பட்டிதொட்டி முதல் இசைவிழா வரையும் போற்றிக் காப்பவர்கள் நாகஸ்வரக் கலைஞர்களே.காற்றிசைக்கருவி வகையைச் சார்ந்த இந்த 'நாகஸ்வரம்' மக்களின் அன்றாட வாழ்க்கையில் தினசரி இடம்பெறும் வகையில் மிகவும் சிறப்பாக இசைக்கப்படுகின்றது.இது திறந்த வெளியில் இசைப்பதற்கு மிகவும் ஏற்ற கருவி. நெடுந்தூரம் வரையில் இதன் ஓசையைக் கேட்கலாம்.நாதஸ்வரம் என்றும்,நாகசுரம் என்றும் அழைக்கப்படும் இக்கருவி பொதுவாக ஆச்சா மரத்தினால் நரசிங்கன் பேட்டை,தெரெழுந்தூர்,வாஞ்சூர், திருவானைக்காவல் போன்ற ஊர்களில் அதற்கெனவுள்ள ஆச்சாரிகளால் மிகவும் சிறப்பாகச் செய்யப்படுகிறது.ஆச்சா மரத்தைவிட ரோஸ்வுட்,பூவரசு,பலாமரம், கருங்காலி, சந்தனம் போன்ற மரங்களாலும் செய்யப்படுகின்றன.

யானைத் தந்தத்தாலும்,உலோகமாகிய வெண்கலத்தாலும் கூட நாதஸ்வரம் செய்யலாம் என்பது நாவலரின் கருத்து. வெள்ளி,தங்கத்தினாலும் அபூர்வமாக அக்கருவி செய்யப் பட்டது.ஆண்டாங்கோயில் வீராசாமி பிள்ளை பொன்னால் ஆன நாதஸ்வரம் வைத்திருந்தார். ஆழ்வார்திருநகரி,திருவாரூர்,கும்பகோணம்,கும்பேசுவரர் கோயில்களில் கருங்கல்லில் செய்யப்பட்ட நாகஸ்வரங்கள் இன்றும் வாசிக்கப்படுகின்றன.தற்கால நாதஸ்வரங்கள் செங்கருங்காலி எனப்படும் ஆச்சா மரத்தினால் செய்யப்படுகின்றன.மரத்தின் வயது நாற்பத்திரண்டு எனில் உத்தமம்.இசைக் கருவி செய்யக் குறிப்பிட்ட ஒரு மரம் உகந்ததா என எளிய சோதனை ஒன்றினால் அறியலாம்.மரத்தை லேசாகச் சீவி நெருப்பில் காட்டினால் தீபம் போல எரிய வேண்டும்.கருகினால் அது கருவி செய்ய ஏற்றதல்ல.

ஏழு விரல்களினால் வாசிக்கப் படுவதால் "ஏழில்' என்றழைக்கப் படும் நாதஸ்வரத்தைப் பற்றிய குறிப்புகள் நூல்களிலும் கல்வெட்டுக்களிலும் விரவிக் காணப்படுகின்றன.பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த "சிங்கிராஜ புராண'த்தில் நாதஸ்வரம் பற்றிய விபரங்கள் காணக்கிடக்கின்றன.

பதினான்காம் நூற்றாண்டிலும் அதன் பின்னும் அடிக்கப்பெற்ற கல்வெட்டுகளிலும் எழுதப்பட்ட செப்பேடுகளிலும் நாதஸ்வரக் கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட பரிசில்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.குழல் கருவிகளில் நாதஸ்வரத் திற்குப் பிரதான இடம் உண்டு.கோவில்களில் இறைவன் புறப்படும் காலை அவனுக்கு நேராக முன் நின்று வாசிக்கப்படுவது நாதஸ்வரம் மட்டுமே.சங்கு,நபூரி,
முகவீணை,எக்காளம்,திருச்சின்னம் என்ற கோவிலில் பயன் படுத்தப்படும் வாத்தியங்களெல்லாம் மேளத்துக்குப் பின்புறமோ இறைவன் திருவுருவத்திற்குப் பின்புறமோ தான் இடம் பெறுகின்றன.

ஊமத்தம் பூ வடிவில் காட்சியளிக்கும் இந்த நாதஸ்வரம் இரண்டு பகுதிகளைக் கொண்டது.இதன் மேல்பகுதி 'உளவு' அல்லது 'உடல்' என்றும்,கீழ்ப்பகுதி'அணைசு' அல்லது 'அணசு' என்றும் அழைக்கப்படும். நாகசுரத்தில் வாசிப்பதற்காக ஏழு விரல் துளைகளைஅமைத்திருப்பர். இதற்கு 'சப்தஸ்வரங்கள்' என்று பெயர். இதில் எட்டாவதாக அமைக்கப்பட்டிருக்கிற துளைக்கு 'பிரம்மசுரம்' என்று பெயர். நாகசுரத்தில் செலுத்தப்படும் கூடுதலான காற்று இதன் வழியாகத்தான் வெளியேறும்.

நாகஸ்வரத்தின் நீளம் பலவாறாக இருக்கும்.மிகப் பழங்காலத்தில் 18.25 அங்குல நீளமாக இருந்தது (சுருதி 4.5 கட்டை).பல மாறுதல்களுக்குப்பின் 1941-ம் ஆண்டில் திருவாவடுதுறை டி.என்.இராஜரத்தினம்பிள்ளை அவர்கள் முயற்சிகள் பல மேற்கொண்டு 34.5 அங்குல நீளமும் 2 கட்டை சுருதியும் கொண்ட நாகஸ்வரத்தைக் கொண்டுவந்தார். இதை பாரி நாகஸ்வரம் என்பர். நீளம் குறைந்த நாகஸ்வரம் திமிரி எனப்படும்.நீளம் குறைந்தால் ஒலி உரத்து எழும்.சுருதி அதிகம்.நீளம் அதிகமாக இருந்தால் சுருதி குறைவாக இருக்கும்.

ரெங்கநாத ஆசாரி தயாரித்து அளித்த பாரி நாகசுரத்தில் மட்டும்தான் சுத்தமத்தியமம் சுத்தமாகப் பேசும் எனவும் அவரை அரசாங்கம் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்றும் டி.என்.ராஜரத்தினம் தன் கைப்பட எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.நாகசுரக் கருவிகளை
நரசிங்கம்பேட்டையில் உள்ள மறைந்த ரெங்கநாத ஆசாரியின் உறவினர்களான 5 குடும்பத்தினர் மட்டும்தான் செய்து வருகின்றனர்.
இருப்பினும் மத்திய மாநில அரசுகள் வழங்கும் கைவினைஞர்களுக்கான விருதுகள் இன்றளவும் இவர்களுக்கு வழங்கப்பட்டதில்லை என வேதனையுடன் தெரிவிக்கிறார் ரெங்கநாத ஆசாரியாரின் மகன் செல்வராஜ்.

நாகஸ்வரத்தில் காற்றை உட்செலுத்தி ஊதுவதற்கு உதவுவது 'சீவாளி' (ஜீவஒலி). காவிரிக் கரையில் விளையும் கொருக்கன் புல்லைப் பலவழிகளில் பதனிட்டு சீவாளியைச் செய்வர்.திருவாவடுதுறை, திருவீழிமிழலை,திருவிடைமருதூர் போன்ற ஊர்களில்
சீவாளி செய்யப்படுகின்றன. நாகசுரத்திற்கு சுருதி வாத்தியமாக அண்மைக்காலம்வரை 'ஒத்து நாகசுரத்தையே' பயன்படுத்தி வந்தனர்.இதுவும் நாகசுரம் வடிவிலேயே 2.5 அடி நீளத்தில் மெல்லியதாக இருக்கும்.விரல் துளைகள் இதில் இருக்காது. ஆந்திரா போன்ற மாநிலங்களில் வாசிக்கப்படும் நாகஸ்வரம் நீளம் குறைந்தவை (ஐந்து கட்டை). இவைகளின் சீவாளி பனைஓலையால் செய்யப்பட்டவை.அனசு என்ற அடிப்பாகம் பித்தளையாலானது.

கோயில் பூசைகளிலும்,திருவிழாக்களிலும் நாகஸ்வர இசை முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது. திருவீதியுலாவில் இறைவனின் புறப்பாட்டிற்கு முன்பாக தவிலில் 'அலாரிப்பு' வாசிக்கப்படும். இது 'கண்ட நடையில்' அமைந்த சொற்கோவையாக இருக்கும்.இதனைத் தொடர்ந்து நாகசுரத்தில் 'கம்பீரநாட்டை'யும் அதன்பின் 'மல்லாரி' ராகமும் வாசிக்கப்படும்.இந்த மல்லாரியை வாசித்தவுடனேயே வெகு தூரத்திலிருப்போரும் கூட திருக்கோயிலில் சுவாமி புறப்பாடு நடைபெறுகின்றதென்பதை அறிந்து கொள்வர்.இத்தகைய மல்லாரி பல வகைப்படும். தேர்த்திருவிழாவின் பொழுது 'தேர் மல்லாரி'யும்,சுவாமி புறப்படும் பொழுது அலங்கார மண்டபத்திலிருந்து யாகசாலைக்கு வரும்வரையிலும் 'பெரிய மல்லாரி'யும் வாசிக்கப்படும்.

இறைவன் யாகசாலைக்கு வந்ததும் தவிலும்,தாளமும் இன்றி நாகசுரத்தில் காப்பி,கானடா,கேதாரகெளளை போன்ற ராகங்கள் வாசிக்கப்படும்.
யாகசாலையிலிருந்து கோபுரவாசல் வழியாக சுவாமி வெளியில் வரும்பொழுது 'திரிபுடை தாளத்து மல்லாரி' வாசிக்கப்படும்.பின்பு கோபுர வாசலில் தீபாராதனை முடிந்ததும்,அந்தந்தத் தெய்வங்களுக்குரிய 'சின்ன மல்லாரி' வாசிக்கப்படும்.அதன்பின்பு காம்போதி,சங்கராபரணம்,
பைரவி,சக்கரவாகம் போன்ற ராகங்களில் ராக ஆலாபனை நடைபெறும். இந்த ராக ஆலாபனை கிழக்கு வீதியிலும்,மேற்கு வீதியில் பாதி வரையும் நடக்கும். அதன் பிறகு ரத்தி மேளமும்,ஆறுகாலத்தில் பல்லவியும் வாசிக்கப்படும்.இவ்வாறு கீழ் வீதியின் நடுப்பகுதி வரையிலும் பல்லவி,
சுரப்பிரஸ்தாரம்,ராகமாலிகை என்று வாசிக்கப்படும்.பின்பு கோபுர வாசலை அடைந்ததும் பதம்,தேவாரம் முதலிய பாடல்கள் வாசிக்கப்படும். தற்காலத்தில் இந்தப் பழைய மரபில் சில மாற்றங்கள் உள்ளன. மல்லாரி முடிந்த பின்பு 'வர்ணம்' என்ற இசை வகையும்,பின்பு சுவாமி கிழக்கு வாசலுக்கு வரும் பொழுது கீர்த்தனை,பதம்,ஜாவளி,தில்லானா,காவடிச் சிந்து போன்ற இசை வகைகளையும் வாசித்து வருகின்றனர்.
வீதியுலா முடிந்து சுவாமி கோயிலுக்குள்ளே நுழையும் பொழுது சுவாமிக்கு 'கண்ணேறு' கழிக்கப்படும். அப்பொழுது தாளத்தோடு தவில் மட்டும் தட்டிக் கொண்டு வருவார்கள்.இதற்குத்
'தட்டுச்சுற்று' என்று பெயர்.பின்பு பதம் அல்லது திருப்புகழ் வாசிப்பர்.பின்பு சுவாமி மூலஸ்தானத்திற்குச் செல்லும் பொழுது 'எச்சரிக்கை' என்னும் இசை வகை வாசிக்கப்படும்.இதற்குப் 'படியேற்றம்' என்று பெயர்.திருக்கோயிலின் பூசைக்கு நீர் கொண்டு வரும்போது 'மேகராகக் குறிஞ்சி' ராகமும், குடமுழுக்கின் பொழுது 'தீர்த்த மல்லாரி' யும்வாசிக்கப்படும்.                                        மடப்பள்ளியிலிருந்து இறைவனுக்குத் தளிகை எடுத்து வரும்போது 'தளிகை மல்லாரி' வாசிக்கப்படும்.இறைவனின் திருக்கல்யாணம் நடக்கும் பொழுது 'நாட்டைக் குறிஞ்சி'யோ 'கல்யாண வசந்த'மோ வாசிக்கப்படும்.பெரிய கோடி வாயிலிலிருந்து தேரடி வரையில் கலைஞர்கள் வாசிப்பது "மிச்ரமல்லாரி".

நாகஸ்வர இசையோடுதான் இறைவனின் நித்திய காலப் பூசைகள் நடைபெறும். ஒவ்வொரு காலப் பூசைகளிலும் என்ன என்ன ராகங்கள் வாசிக்கப்பட வேண்டும் என்பது தொன்றுதொட்டு மரபாகவும் பூசை விதிமுறைகளுக்கு அமையவும் அமைக்கப்பட்டுள்ளது.எடுத்துக்     காட்டாகப் பொழுது புலருமுன் நான்கு மணி தொடங்கி பூபாளம், பௌனி, மலையமாருதம் வாசிக்க வேண்டும்.உச்சி வேளை எனில் முகாரியும் பூரண சந்திரிகாவும் மாலை ஆறு மணிக்கு மேல் சங்கராபரணமும் பைரவியும் இசைக்கப்படும்.அதே போல விழாக் காலத்தில் இறைவன் உலா வரும் இடத்திற்கு ஏற்பவும் ராகங்கள் வாசிக்கப்படுகின்றன.

நாட்டை ராக ஆலாபனையைத் தொடர்ந்தே இறைவனின் புறப்பாடு நடைபெறும்.சில திருக்கோயில்களில் இந்த இந்த இடங்களில் இன்ன இன்ன ராகங்களைத்தான் வாசிக்க வேண்டும் என்ற நியதியும் உள்ளது.சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் திருவிழாவில் பத்துத் தினங்களிலும் அந்தந்த நாட்களில் அந்தந்த ராகங்கள வாசிக்கப்பட வேண்டும் என்ற முறை இன்றும் உள்ளது.வழிபாட்டில் மட்டுமல்லாமல் திருமணம் போன்ற மங்கலச் சடங்குகளின் போதும் வாசிக்கப் படும் நாகஸ்வரம் ஒரு மங்கள வாத்தியமாகும். சடங்குகளிலும் மதவிழாக்களிலும் நம்பிக்கை இல்லாத,இனிய இசையை இசைக்காகவே ரசிக்கும் சுவைஞர்களும் ஒரு முழு நீள நாதஸ்வரக் கச்சேரியை அனுபவிக்கலாம்.பாமரர்களிலிருந்து இசைவாணர்கள் வரை அனைவரது உள்ளங் களையும் உருக்குவது நாதஸ்வர இசை என்பதில் ஐயமில்லை.

கர்நாடக இசையை மிக விஸ்தாரமாக விவரணம் செய்யத்தக்க வாத்தியம் நாகஸ்வரம்தான்.அரியக்குடி ராமானுஜ ஐயங்கார்,முசிரி சுப்பிரமணிய ஐயர்,செம்பை வைத்தியநாத பாகவதர், காஞ்சிபுரம் நைனாபிள்ளை, செம்மங்குடி  சிறினிவாச ஐயர்,
ஜி.என். பாலசுப்பிரமணியம், மதுரை சோமு போன்ற பல சங்கீத வித்வான்கள் திருவீதியுலாக்களில் இரவு முழுவதும் நாகஸ்வரக் கச்சேரிகளைக் கேட்டே தங்களின் இராக பாவங்களை வளர்த்துக் கொண்டதாகக் கூறியுள்ளார்கள். இது நாகசுரத்தின் மேன்மையை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்துகின்றது.

(டாக்டர் கே. ஏ. பக்கிரிசாமி பாரதி அவர்கள் எழுதிய 'நாகஸ்வரம்' என்னும் கட்டுரையைத் தழுவி எழுதியது.)