திங்கள், 29 மே, 2017

இராஜராஜ சோழனின் கப்பற்படைப் பற்றிய அரிய தகவல்கள்!!!



 இராஜராஜ சோழனின் கப்பற்படைப் பற்றிய அரிய தகவல்கள்!!!

இராஜராஜ சோழன் என்றாலே காலாற்படை முதல் யானை படை வரை நடுநடுங்கிப் போகும். வானுயர் வெற்றிகளை முடிசூடிய மாமன்னன் என்றால் சாதாரணமா என்ன! பண்டையக் காலத்திலேயே கப்பற்படை வைத்து உலகை ஆட்டம் காண வைத்த பேரரசு, சோழ பேரரசு!

ஆயிரம் வருடம் ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல, ஆயிரம் வருடங்களாக கப்பற்படையை வைத்து ராஜாங்கம் நடத்தியப் பெருமை உலகிலேயே சோழ சாம்ராஜ்யத்திற்கு மட்டும் தான் இருக்கிறது.

"கனம்" இந்த கப்பற்படையில் நிறைய போர் வீரர்களை கொண்ட குழு ஒன்று பிரிக்கப்பட்டிருக்கும், அவர்களை "கனம்" என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர்களை தலைமை தாங்கி இருந்தவரை, "கனாதிபதி" என்று அழைக்கப்பட்டிருக்கிறார்

"கன்னி" தமிழில் "கன்னி" என்பதற்கு இளம் மங்கை என்று மட்டும் பொருள் அல்ல, "பொறி" என்ற மற்றொரு பொருளும் இருக்கின்றது. எதிரிகளை பொறி வைத்துப் பிடிக்கும் கப்பற்படை வீரர்களை, "கன்னி" என்று அழைத்திருக்கின்றனர். இவர்கள் தான் சிறப்பு பணியில் நியமிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை நிர்வாகிப்பவர், "கலபதி" என்று அழைக்கப்படுவார்

"ஜதளம்" அல்லது "தளம்" கப்பற்படையில் சக்தி வாய்ந்த குழுவாக திகழ்பவர்களை, ஜதளம் என்பார்கள். சுருக்கமாக இவர்களை "தளம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இவர்களை நிர்வகிப்பவர், "ஜலதலதிபதி" என்னும் நபர் ஆவார்.

"மண்டலம்" கப்பற்படையின் பாதி நிரந்திர போர் குழுவை, மண்டலம் என்று குறிப்பிடுகிறார்கள். இவர்களை தலைமை வகிக்க மண்டலாதிபதி என்பவர் நியமிக்கப்பட்டிருப்பார். இந்த பிரிவிடம் 40 முதல் 50 கப்பல்கள் வரை இருக்கும். இவர்கள் தனி, தனியாகவும், குழுவாகவும் சென்று போர் புரிவதில் வல்லமைப் பெற்றவர்கள்.

நிரந்திர போர் பிரிவு நாம் முன்பு குறிப்பிட்டிருந்த, "கனம்" பிரிவை சேர்ந்தவர்கள் தான் நிரந்திர போர் பிரிவை சேர்ந்தவர்கள். இவர்களிடம் 100 இருந்து 150 கப்பல்கள் வரை இருக்கும். மூன்று "மண்டலம்" குழுவை உள்ளடக்கி இருக்கும் குழுவானது "கனம்" என்று கூறப்படுகிறது.

அணி பெரிய போர்களில் ஈடுபட மட்டுமே உபயோகப்படுத்தப்படும் குழுவை "அணி" என்று கூறுகின்றனர். ஒரு அணியில் மூன்று "கனம்" குழு உள்ளடங்கி இருக்கும். 300-500 கப்பல்கள் வரை இந்த குழுவில் இருக்கும். மாபெரும் அணியான இதை தலைமை தாங்குபவர், "அணிபதி" என்று அழைக்கப்படுவர்.

"அதிபதி" இதெல்லாம் போக இந்த அனைத்து குழுக்களையும் தலைமை தாங்கும் நபர் தான் "அதிபதி". இவரின் கட்டளைகளுக்கு இணங்க அனைத்து குழுக்களும் இயங்கும்.

இவர் இளவரசருக்கு கீழ் இருப்பவர்.
கைப்பற்றிய பகுதிகள் இந்த மாபெரும் கப்பற்படையை வைத்து தான், இந்தோனேசியா, ஜாவா, மாலத்தீவு, சிங்கப்பூர், இலங்கை, ஆங்கோர், கடாரம் போன்ற பல பகுதிகளை வென்றுள்ளது சோழப் பேரரசு.

"நாவாய்" பண்டைய தமிழர்களின் "நாவாய்" என்ற கப்பற்படையின் பெயர் தான் ஆங்கிலத்தில் "நேவி" (Navy) என்று அழைக்கப்படுகிறது.

சமுத்திரக்கனியின் பதிவிலிருந்து..............

சனி, 27 மே, 2017

மள்ளர் வரலாறு




மள்ளர் வரலாறு

மள்ளர் அல்லது பள்ளர் எனப்படும் சமுதாயத்தினர் தமிழகத்தில் பள்ளர்,வாய்காரர்,காலாடி, மூப்பன், குடும்பன், பண்ணாடி,தேவேந்திரக் குலத்தான் எனும் வேறு சில பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர்
.இவர்கள் தங்களை தேவேந்திரன் வழி வந்தவர்கள் என்கிறார்கள்.எனவே தேவேந்திர குல வேளாளர் எனும் பெயரால் அழைக்கப் படுகின்றார்கள்
.இவர்கள் முழுமையாக வேளாண்மைத் தொழில்களையே செய்து வந்தனர்;வருகின்றனர். பள்ளர் எனும் மள்ளர் இனத்தினர் தமிழ்நாடு சாதிகளின் அனைத்து பட்டியலிலும் உள்ளனர் . கீழுள்ள ஏழு பள்ளர் உட்பிரிவுகளையும் சேர்த்து தேவேந்திர குல வேளாளர் என தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பெயரை மாற்ற இந்த சமூகத்தினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
1. தேவேந்திர குலத்தார், பட்டியல் சாதிகள் (எண் 17)
2. குடும்பன், பட்டியல் சாதிகள் (எண் 35)
3. பள்ளர், பட்டியல் சாதிகள் (எண் 49)
4. பன்னாடி, பட்டியல் சாதிகள் (எண் 54)
5. மூப்பன், பிற்படுத்தப்பட்டோர் (எண் 72)
6. காலாடி, பிற்படுத்தப்பட்டோர் (எண் 35)
7. காலாடி, சீர்மரபினர் (எண் 28) [8]
இதற்கிடையே பள்ளர்களின் வரலாற்றுப் பெயராக கல்வெட்டுகளும், இலக்கியங்களும் குறிக்கும் மள்ளர், மல்லர் என்ற பெயர்களும், நீர்க்கட்டி, நீர்க்காணிக்கர் ஓடும்பிள்ளை, அக்கசாலை போன்ற பெயர்களும் உள்ளன. இந்திய அரசின் அமைச்சரவையிலும், தமிழ்நாடு அரசின் அமைச்சரவையிலும் பலர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றி இருக்கின்றனர்.
மள்ளர் என்பதன் பொருள்
மள்ளர் என்றால் திண்மை (பலம்) உடைய போர்வீரர்கள் என்று விளக்கம் சொல்கின்றன நிகண்டுகள் என்று சொல்லப்பட்ட பழைய அகராதிகள்.
‘அருந்திறன் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் மள்ளர்...’ என்று பெயர் என்கிறது திவாகர நிகண்டு. ‘செருமலை வீரரும் திண்ணியோடும், மருத நில மக்களும் மள்ளர்’ என்கிறது பிங்கல நிகண்டு.
சுமார் 400 பள்ளு இலக்கியங்கள், பள்ளர் குலம் பற்றி எழுதப்பட்டுள்ளன. பிற்கால பள்ளு சிற்றிலக்கியங்கள் பள்ளர் பற்றியும் அவர்களின் வேளாண் குடிபற்றியும் பல்வேறு செய்திகளைக்கொண்டுள்ளன .இவ்விலக்கியங்களில் பள்ளர், மள்ளர், தேவேந்திரன், குடும்பன், காலாடி, பண்ணாடி என பல பெயர்களில் பள்ளர்கள் அழைக்கப்படுகின்றனர்[9] . மேலும் பள்ளர்கள் இன்றுவரையிலும் பள்ளர், மள்ளர், தேவேந்திரன், குடும்பன், காலாடி எனும் பெயர்களில் வாழ்ந்து வருகின்றனர்.
நெல் முதலிய வித்துக்களை கண்டுபிடித்தல்
திருநெல்வேலி மாவட்டம் சங்கரநாயினார் கோவில் கோபுர வாசல் உள்புறம் கீழ்பக்கம் உள்ள கல்வெட்டு
“ விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 14 நாள்
திங்கட்கிழமையும் உத்திராடமும் பெற்ற நாள்
தெய்வேந்திரக் குடும்பன் பலாத்துப்படி : முன்
துவாபர யுகத்தில் உக்கிரப் பெருவழுதியும்
சோழனும் சேரனும் உலகம் வறுமைப்பட்டு
இருக்கின்ற காலத்திலே தெய்வேந்திரன் பக்கல் மழை
கேட்கப் போனவிடத்திலே பகவானும் மனம்
மகிழ்ந்து இரும் என்ன சேரனும் சோழனும்
வணங்கியிருக்க பாண்டியன் தெய்வேந்திரனுடனே
கூடியிருக்க, தேவேந்திரனும் வரிசை செய்தாற்போல
கவடு நினைக்க. பாண்டியன் கோபித்து எழுந்து
தேவ கன்னிகை மக்கள் நாலு குடும்பத்தாரை
கைப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு சென்னல்
விதையும், கன்னல் விதையும் (கதலி) விதையும்
பனைவிதையும் முதலான பல வித்தும் ஒரு ரிசபமும்
ஒரு சாவியும் கொண்டு பூமியில் வந்தான்
நால்வரில் முதல்வனுக்கு தேவேந்திரக் குடும்பப்
பட்டமும் கட்டி, மூன்று பேருக்கு வாரியன்,
அக்கசாலை, (இளந்தாரியன்) என்று வரிசைப்
பட்டமும் கட்டி ஒரு நாளையிலே 12000 கிணறு
வெட்டி வேளாண்மை கண்ட படியினாலே
ராஜாவும் மனம் மகிழ்ந்து வெள்ளானையும்
வெள்ளை வட்டக் குடையும் சேறாடியும் பகல் பந்தம்
பாவாடை ரெட்டைச் சிலம்பும் ரெட்டைக்
கொடுக்கும் நன்மைக்கு 16 பந்தக்காலும் துன்மைக்கு
2 தேரும் பஞ்சவன் விருந்தும் . . . . .18 மேளமும்
கட்டளையிட்டு நடக்கிற காலத்திலெ . . . . . ”
—- தென்னிந்திய கோயிற் சாசனங்கள்ஃ பாகம் ஐஐ எண் 863ஃ பக்கம் 803
நெல் , கரும்பு, வாழை, பனை முதலிய வித்துக்களையும் நீர்ப் பாசனத் தொழில் நுட்பத்தையும் முதன் முதலில் துவாபர யுகத்தில் கண்டுபிடித்த தெய்வேந்திரக் குடும்பன் பற்றிய செய்தியை மேலே காட்டப்பட்ட கல்வெட்டு கூறுகிறது.
மள்ளர் பற்றிய குறிப்புகள்
மள்ளர் காலாடி, ஆற்றுக்காலாட்டியர் எனப்பட்டனர். உழவுத் தொழிற் தலையாகிய தொழிலாகவாகவும் உழவர்கள் தலை மக்களாகவும் போற்றப்பட்டனர். உழவர், வீரர் என்ற மூன்று சொற்களுக்கும் பொருள்படுவதாக மள்ளர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இவ்விருவரும் மள்ளர் குலத்தினராதலால் மள்ளர் என்பதற்கு இலக்கணமாக
“ "அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்
வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்" ”
—- என்று திவாகர நிகண்டும் .
“ "செருமலை வீரரும் திண்ணியோரும்
மருத நில மக்களும் மள்ளர் என்ப" ”
—- என்று பிங்கல நிகண்டும் கூறுகின்றன.
மள்ளர் – தேவேந்திர குல வேளாளர் வளமை – நெல் வேளாண்மைக்கு இன்றியமையாத நீரை இம்மக்கள் வேண்ட அவர்களின் இறைவனும் மாரிக் கடவுளுமான தேவேந்திரர் கோடை காலத்திலும் கொடுப்பார் என்கிறார் பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் பெருமான்.
“ பிள்ளை தைவரப் பெருகுபால் சொரி முலைத்தாய்போல்
மள்ளர் வேனிலின் மணல் திடர் பிசைந்து கைவருட
வெள்ள நீரிரு மருங்குகால் வர்p மிதந் தேறிப்
பள்ள நீள் வயல் பருமடை உடைப்பது பாலி. ”
—- பெரியபுராணம், திருக்குறிப்புப் தொண்டர் நாயானார் புராணம், பாடல் 22.
இவர் விளைத்துக் குவித்த வானளாவிய நெற்குன்றுகள் மருத நிலத்தைக் மலைகளடர்ந்த குறிஞ்சி நிலமாகக் காட்டியது என்கிறார் இன்னொரு பாடலில்.
“ கைவினை மள்ளர் வானங் கரக்க வாக்கிய நெற் குன்றால்
மொய் வரை யுலகம் போலும் மளரிநீர் மருத வைப்பு. ”
—- பெரியபுராணம், – திருநாட்டுச் சிறப்பு, பாடல் 25
“ “குன்றுடைக் குலமள்ளர் ” ”
என்னும் கம்பர் தமது இராமாயணத்தில் இவர்கள் போர்க்களத்தில் பகைவர்களின் தலைகளை வெட்டி வீழ்த்தியதை உழவு, தொளி கலக்குதல், நாற்று முடிகளைப் பரவுதல் முதலிய நிகழ்வுகளோடு ஒப்பிட்டு கூறுவார்.
“ நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின்
உதிர நீர் நிறைந்த காப்பின்
கடும் பகடு படி கிடந்த கரும் பரப்பின்
இன மள்ளர் பரந்த கையில்
கடு ங்கமல மலர் நாறும் முடிபரந்த
பெருங்கிடக்கைப் பரந்த பண்ணை
தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே
எனப் பொலியும் தகையும் காண்மின் ”
—- கம்பராமாயணம்.
வானரர் களம் – காண் படலம், செய்யுள் 25. பழனிச் செப்புப்பட்டயம் கி.பி. 1528 (மள்ளர் மலர் அக்டோபர் 1998 பக. 20 – 21). கி.பி. 1528ஆம் ஆண்டு கிருஷ்ணதேவராயர் காலத்திய செப்பேடான இது தற்சமயம் மதுரை அருங்காட்சியகத்தில் இருந்து திருட்டு போய்விட்டதாக கூறப்படுகிறது.
இம்மக்களின் தோற்றம்; மற்றும் வரலாறு பற்றிக் கூறும். உலக மக்களுக்கு செந்நெல் அமுது படைப்பதற்காக சிவனும் உமையும் மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர்களைப் படைத்ததார்கள். இவர்கள் இப்பூமியில் செந்நெல் தோற்றுவித்தார்கள் என செப்புப்பட்டயம் பெருமைப்பட கூறும்.
தெய்வேந்திரர் வரலாறு
“ சிவனுயுமையும் மதிறுக் காஞ்சி தன்னில்
ஏகாம்பரரா இருந்தருள் புரிந்து
மதுரையை நோக்கி வரும் வழியதனில்
உலகலாமீன்ற உமையவள் மனதில்
திருவருள் தோன்றி சிவனிடத்துரைக்க
அரன்மன மகிழ்ந்து முகமது வேர்க்க
கரமதில் வாங்கி வரமதுக்கியந்து
வைகையில் விடுக்க
வருணன் பொழிந் துருழிக் காத்தடித்து
குளக் கரையதனில் கொடி வள்ளல் தாங்க
ஓமம் வளர்ந்து உற்ப்பணமாக
ஈசுவரி தேடி யிருளில் நடக்க
கூவிய சத்தம் குமரனை நோக்கி
வாரிடியடுத்து வள்ளலை வலபுறம் வைத்து
வலமார் பிய்ந்து அமுர்தம்
பொழிந்து அ~;த்தம் கொடுக்க
பாலன் நரிவு பணிவிடைக்காக
புரந்தரன் மகிழ்ந்து ப+ரித்தெடுக்க. ”
தெய்வேந்திரன் அன்னம் படைத்தல் :
“ கன்னல் சென்னல் கதழி பிலாவுடன்
தென்னை கமுகு செறந்த வெள்ளிலை
அன்ன மிளகு மாந்துளிற் மஞ்சள்
மல்லிகை முல்லை மகழி நுவர்ச்சி
பரிமள சுகந்தம் பாங்குடன் கொண்டு
தெய்வ சபையை தெரிசிக்க வென்று
காராவின் பாலை கரகத்திலேந்தி
சீறாக அன்னம் சிறப்பித்த போது. ”
தெய்வேந்திரன் விருதுகள் :
“ ஈஷ்வரன் மகிழ்ந்து இணைமுடி தரிக்க
அமரர்கள் மகிழ்ந்து இணைமுடி தரிக்க
அமரர்கள் மகிழ்ந்து அதிசயத் திவாகும்
விமரிசையாக விருது கொடுக்க
மாலயன் ருத்திரன் மகேஷ்பரன் மகிழ்ந்து
பொன்முடி யதனில் பூசன மணிய
வாடாத மாலை மார்பினி லிலங்க
வெட்டுப் பாவாடைகள் வீணைகள் முழங்க
செந்நெல் சேறாடி சிறப்புடன் சூழ
வெள்ளைக் குடையும் வெங்களிறுடனே
டாலுடம்மான சத்தம் அதறிட
மத்தாளம் கைத்தாமம் மகெஷ்பரத் துடனெ
எல்லா விருதும் இயல்புடன் கொண்டு
தெய்வ சபையை தெரிசனம் செய்து
பதினெட் டாயுதம் பாங்குட னெடுத்து
புரவியிலேறி பூலோக மதனில்
சென்னலா யெங்கும் சிற்ப்பிக்கும் போது
விசுவ கண்ணாளர் மேழியும் கொடுக்க
மூவராசாக்கள் முடிமணம் சூட்ட
செந்நெல்லை படைத்தோர்
குகவேலருளால் குடும்பன் தழைக்க
சிவனரளாலே திருநீறணிந்து
யெல்லா வுலகும் யிறவியுள் ளளவும்
தெள்ளிமை யாத செந்நெலை படைத்தோர்
சேத்துக்கால்ச் செல்வரான
செந் நெல் முடி காவரலான
முத்தளக்கும் கையாதிபரான
பாண்டியன் பண்டான பாறதகதபரான
அளவு கையிட்டவரான
மூன்று கைக்குடையாதிபரான
பஞ்ச கலசம் பாங்குடன் வயித்து
அஞ்சலித் தேவர்கும் அன்னம் படைத்தவரான
மண்ணை வெட்டிக் கொண்டு மலை தகத்தவரான
கடல் கலங்கினும் மனங் கலங்காத வல்லபரான
மாடக் குளத்தில் வந்துதித்தவறான
பரமசிவனுக்கு பாத பணிவிடை செய்கின்றவரான
தெய்வலோகத்தில்
தெய்வேந்திரன் பிள்ளைகளாகிய
பழனித் தலத்தில் காணியாளனாகிய
கொங்குப் பள்ளரில் பழனிப் பண்ணாடி. ”
—– பழனிப் பட்டயம், வரி 195 – 217.
சங்க காலம் தொட்டு சென்ற நூற்றாண்டு வரை இயற்றப்பட்ட தமிழ் இலக்கியங்களில் இவர்களைப்பற்றிய குறிப்புகள் உள்ளன. நாட்டு வளம் என்னும் படலம் நெல் நாகரிகத்தின் மேன்மையையும் அம்மக்களின் சிறப்பையும் கூறும். ஏர் மங்கலம், வான் மங்கலம், வாள் (கலப்பையில் உள்ள கொழுவு) மங்கலம் உழத்திப்பாட்டு முதலியன அரசர்களுக்கு இணையாக இம்மக்களின் சிறப்பை உயர்த்திப் பாடும்.
பள்ளு இலக்கியம்
பள்ளர் என்ற பெயர் தமிழ் இலக்கியத்தில் முதன்முதலில் பள்ளு இலக்கியத்தில் தான் வருகின்றது. தமிழில் தோன்றிய முதல் பள்ளு நூல் முக்கூடற் பள்ளு. பள்ளு இலக்கியம் சிற்றிலக்கிய வகையை சேர்ந்தது, சிற்றிலக்கிய வகையில் மிகுதியான நூல்களை கொண்டது. இது வடுகர் ( நாயக்கர் ) ஆட்சி காலத்தில் தோன்றியது. இந்த பள்ளு நூல்கள் இவர்களை பள்ளர் என்று அழைத்தாலும் இவையே 'மள்ளர் தான் பள்ளர்' என்பதற்கு ஆதாரமாக இருக்கின்றன.
“ "மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்கோர்
பள்ளக் கணவன்" ”
—-முக்கூடற் பள்ளு
இவ்வாறு பல பள்ளு நூல்கள் இவர்களை மள்ளர் என்று கூறுகின்றன

‬பட்டியல் மாற்றத்திற்கான பதிவு:-
(பாகம் -1)

தேவேந்திர குல வேளாளர் சமுதாய மொத்த மக்கள்தொகை
சுமார் ஒரு கோடிக்கு மேல் அகில இந்திய அளவில் 25 கோடி ( குடும்பர் குர்மி பட்டேல் காபு கவுடா மள்ளர் வர்மன்)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, இலங்கை, உலகமுழுவதும்.
மொழி(கள்)
தமிழ்.
சமயங்கள்
இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம் , பௌத்தம்
.
.
மள்ளர் என்னும் தேவேந்திர குல வேளாளர் இனத்தினர் தமிழ்நாடு சாதிகளின் அனைத்து பட்டியலிலும் உள்ளனர்.
கீழுள்ள எட்டு உட்பிரிவுகளையும் சேர்த்து தேவேந்திர குல வேளாளர் என்ற பெயர் அரசானை வெளியிட மற்றும் பட்டியல் வெளியேற்றம் பெற நமது சமூகத்தினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
1,தேவேந்திர குலத்தார், பட்டியல் சாதிகள் (எண் 17)
2,குடும்பன், பட்டியல் சாதிகள் (எண் 35)
3,பள்ளர், பட்டியல் சாதிகள் (எண் 49)
4,பன்னாடி, பட்டியல் சாதிகள் (எண் 54)
5,மூப்பன், பிற்படுத்தப்பட்டோர் (எண் 72)
6,காலாடி, பிற்படுத்தப்பட்டோர் (எண் 35)
7,காலாடி, சீர்மரபினர் (எண் 28)
8,பாண்டி(யன்) பட்டியல் சாதிகள் (எண் 09)
போன்ற பெயர்களால் அறியப்படுகிறார்கள்.
.
.
மள்ளர்களின் தோற்றம் பற்றி பல கதைகள் உள்ளன. இவை அனைத்தும் ஒத்த கருத்தையே தருகின்றனர். மள்ளர்கள் மருத நிலத்தில் வாழ்லும் உழவர்கள். இவர்கள் போர் என்றுவந்தால் போருக்கு செல்லும் விரர்களாகவும் விளங்கியுள்ளன. எனவே இவர்களின் குலத்தொழில் ஏரும் போருமாக உள்ளது. மருத நிலத்தின் போர் வீரர்களின் தலைவன், வேந்தன் நிலைக்கு உயர்ந்தப்படுகிறான். வேந்தன் பின்பு தேய்வ நிலைக்கு உயர்ந்தப்பட்டு தேய்வவேந்தன் ஆகிறான். அவனே பின்பு தேவேந்திரனாக மாறுகிறான். வேளான்மையே கண்டறிந்த முதல் இனம் என்பதால் தேவேந்திர குல வேளாளர் என தங்களை அழைக்கின்றன, அழைக்கப்படுகின்றன.
பட்டியல் மாற்றத்திற்கான தொடர்ச்சி:-
(பாகம்:02)
.
.
வரலாற்றினை மீட்டுருவாக்கம் செய்யக் கல்வெட்டுச் சான்றுகள் மிகவும் இன்றியமையாததாகும். “மள்ளர்” என்ற பெயரில் இதுகாறும் ஒரு கல்வெட்டு மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளது. ‘ள’கரம், ‘ல’கரமாகி “மல்லர்” என்று பதிவு பெற்ற கல்வெட்டுப் பொறிப்புகளே ஏராளம் காணக் கிடைக்கின்றன. கல்வெட்டுகள் மிகவும் காலத்தால் பிற்பட்டன. ஆதலால் இலக்கியங்களைப் போன்று கல்வெட்டுகளில் தொன்மையையும், பிழையின்மையையும் காணமுடியாது. ஏனெனில் இலக்கியங்கள் மொழிப்புலமை வாய்ந்த புலவர்களாலும், கல்வெட்டுகள் தொழில்புரியும் கல்தச்சர்களாலும் எழுதப் பட்டவை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ‘ள’ கரம் ‘ல’ கரமாவது இயல்புதான் ‘மள்ளர்’ என்பதை ‘மல்லர்’ எனக் கொள்ளின் அக்து பிழையுமாகாது. மள்ளர், மல்லர் என்ற இரு சொற்களையும் தமிழ்ப் புலவர்களும் கையாண்டுள்ளனர். மல்லர் வரலாற்றை மீட்டெடுக்கக் கல்வெட்டுகள் ஆற்றியுள்ள பங்களிப்புகள் பற்றி இங்கே பார்ப்போம்.
.
.
மள்ளர்
“திருமள்ள வீரசோழப் பேரரையன் மகன் அத்திப் பேரரையன்” (ஞா.தேவநேயன் (பாவாணர்), பழந்தமிழராட்சி, ப.107 ) சந்தி விளக்கு வைத்த செய்தியை, செங்கல்பட்டு மாவட்டம், திருவள்ளூர் வட்டம், கூவம் திருப்புராந்தககேசுவர் கோயில் கல்வெட்டு (தெ.க.26 – 360 ) தெரிவிக்கின்றது.
.
.
மல்லர்
வடஆர்க்காடு மாவட்டம், வாலாசாபேட்டை வட்டம், திருமால்புரம் மனிகண்டேசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.22 / 298 , கி.பி.943 -44 ). நிலம் விற்றுக் கொடுத்த அதிகாரி “கடகன் குஞ்சரமல்லனாகிய சோழமாராயன்” என்கிறது.
.
.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், திருமழவாடி வைத்தியநாதர் கோயில் கல்வெட்டு (தெ.க.5 /635 ) கோயிலுக்கு விளக்கெரிக்க நெய்கொடுக்க சாவா மூவாப்பேராடுகளை ஏற்றுக் கொண்ட மள்ளர்கள் “குஞ்சிர மல்லன் பெருவழுதி,குஞ்சிர மல்லன் காடன், குஞ்சிர மல்லன் திருமால்” (ஞா.தேவநேயன் (பாவாணர்), பழந்தமிழராட்சி, ப.59 ) என்கிறது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கல்வெட்டு (தெ.க.4 /816 ) நெய்க்காக கோயிலுக்கு பசுக்கள் 32 கொடை அளித்தவர், “திரிலோகிய மல்லன்,கிரிதுர்க மல்லன்,புவனேகநேத்திரன் வைதும்ப மகாராஜன் ராஜேந்திர சோழ மும்முடி விஷ்ணுதேன் துரை அரசன்” (ஆய்வுக்கோவை – 2010 , பாரதியார் பல்கலைக் கழக வெளியீடு, ப.572 ) என்கிறது.

“காஞ்சிபுரம் வைகுந்தப் பெருமாள் கோயில் கல்வெட்டு (தெ.க.4 /315 பகுதி சி). போருக்குச் செல்ல ஒப்புக்கொண்ட “பரமேசுவர மல்லர் அதுக்கு ஹிரண்யவரம்ம மகராஜ குல மல்லரையும் கூவி விவை ஆகும். போகராத்தம் மகன் ஸ்ரீ மல்லனு,ரண மல்லனு,சங்கரராம மல்லனு என்பார்கள் விவை குடு என்பர் நி……தாமரவோ செய்வர் நாம் போகாமென பந்தாபந்தா மருப்ப…..வ மல்லனான பரமேஸ்வர நான் போவானேன்று தொழுது நின்ற இடம்” என்கிறது.
திருவாமாத்தூர் அபிராமேசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.3 /95 பகுதி – 3 கி.பி.910 ) கோயிலுக்கு விளக்கு வைக்க பொன் கொடை அளித்தவர். “கற்பூண்டி நாடுடைய பரபூமிகன் மல்லனாகிய கண்டராதித்தப் பல்லவரையன்” என்கிறது.


 போளூர் திருமலையில் வண்ணச் சித்திரங்கள் உள்ள குகைக்கு கீழே உள்ள சிறிய கோயில் கல்வெட்டு (தெ.க.1 /73 ) “திருமலை பரவாதி மல்லர் மாணாககர் அரிஷ்டனேமி ஆச்சாரியார் செய்வித்த யக்ஷித் திருமேனி” என ஆசிரியராக மல்லர் இருந்த செய்தியைத் தெரிவிக்கின்றது.
.
.
காஞ்சிபுரம் வட்டம், சின்னக் காஞ்சிபுரத்தில் அருளாளப் பெருமாள் கோயில் கல்வெட்டு (தெ.க.4 /861 ) நந்தவனத்திற்கு நிலம் கொடை அளித்த மள்ளர் “கங்க மண்டலத்து மகாமண்டலிகள் சோழமாராசன் கட்டி நுளம்பன் ஸ்ரீ மன்னு புசபெலவீரன் ஆகோ மல்லரசன்” என்கிறது.
.
.
தென்னார்க்காடு மாவட்டம், திருக்கோயிலூர் வட்டம், கீழூர் வீராட்டானேசுவரர் கோயில் கல்வெட்டு (இராசேந்திர சோழன் II ,கி.பி.1072 ) (தெ.க.7 /877 ) விளக்கு வைக்க பசு 16 கொடை அளித்த மள்ளர், “கோதண்டன் கண்டனான மதுராந்தக வளநாடாள்வானின் சிற்றப்பன் உபகாரி மல்லன்” என்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம், திருசென்னம்பூண்டி சடையார் கோயில் கல்வெட்டு (பராந்தக சோழன் I , கி.பி.941 ) (தெ.க.7 /512 ) மள்ளருடைய மனைவி அரசன் மகளாவார். “இவ்வூருடையான் குணகல்வன் வீர மல்லன் மனைவாட்டி அரசன் கொற்ற பிராட்டி” (ந.சி.கந்தையா பிள்ளை , தமிழ் இந்தியா , பக்.46 -47 ) எனக் கூறுகின்றது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருவலஞ்சுழி கபாலீசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.8 / 223 ) அரசு அதிகாரி “சேந்தன் மல்லன்” என்கிறது.
.
.
திண்டிவனம் வட்டம், திண்டீசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.7 / 156 ) கி.பி.1003 ) கோயிலுக்குக் கொடை வழங்கிய நிலக்கிழார் “மல்லன் பராதயன்” என்கிறது.
திருச்சி மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், மேலை பழுவூர் அகத்தீசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.13 / 227 ) “பழ்வூர்ச் சங்கரபடி மல்லன் சங்கன்” கொடை பற்றிக் குறிப்பிடுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், பண்டாரவாடை தேவராயன் பேட்டை மத்தியபுரீசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.13 /15 ) கோயிலுக்குக் கொடை வழங்கிய மள்ளர் “கருகாவூர் கிழவன் வேளாண்குஞ்சிர மல்லன் மகன் குஞ்சிர மல்லன் கண்டராபணனான கணபதி” (பரிபாடல் 18 :38 :39 ) என்கிறது.
கிரிட்டிணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம், கம்பையநல்லூர் தேசீகாதீசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.7 / 11 ) “அதிகாரி மல்லணார்” (ஐங்குறுநூறு 62 :12 )என்ற மள்ளர் குல அரசு அலுவலர்ப் பற்றி கூறுகிறது.
.
.
கோயமுத்தூர் மாவட்டம், அன்னூரில் மள்ளீசர் கோயில் கல்வெட்டு (ARE 586 /1922 ) அமுதுப் படிக்கு காசு கொடை அளித்தவர் “வல்லங்கிழான் மல்லன் அழகிய திருச்சிற்றம் பலமுடையானான முனையதரன்” (வை.கோவிந்தன், மகாகவி பாரதியார் கவிதைகள், தமிழ் சாதித் தொகுப்பு) என்கிறது.
தஞ்சாவூர்ப் பெருவுடையார் கோயில் கல்வெட்டு (தெ.க.2 /66 , கி.பி.985 -1014 ) நட்டுவம் செய்தவர் கோயில் கட்டிய தலைமை சிற்பி “1 .நட்டுவஞ் செய்த மல்லன் இரட்டையன், 2 .தச்சாசாரியார் வீர சோழன் குஞ்சர மல்லனான ராஜ ராஜப் பெருந்தச்சன்” என்று கூறுகிறது.


தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருக்கோடிக் காவல் திருகோட்டீசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.12 /78 ) பொன் கொடை அளித்த மள்ளர் “கொண்ட நாடுடைய வெட்டுவதி அரையனான மல்லன் வெங்கடேவன் கொடுத்த பொன் பதினைங்கழஞ்சி” என்கிறது.
விருத்தாச்சலம் வட்டத்தில் விருத்தகிரீசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.12 / 123 ) விளக்கு நெய்க்குப் பசு வளர்த்தவர் “மல்லன் ஆளப்பிறந்தி” (இ.அப்பாசுமந்திரி, புதுக்காப்பியம் (இலக்கணமும்) ப.297 ) என்கிறது.
.
.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், தாமரைப் பாக்கம் அக்னீசுவரர் கோயில் கல்வெட்டு மள்ளர் குலத்தாரை “இலத்தூர் சேக்கிழான் அத்திமல்லன் சீராளன் பாடாநாட்டு கங்கநல்லூர் மாதெட்டல் இருங்கோளன்” என்றும், “மல்லன் நக்கன் என்றும், பங்கள நாடுடைய பிரிதியங்கரையன்” மகன் அத்தி மல்லனாகிய கன்நரதேவப் பிரிதியங்கரையன்” என்கிறது.
திருமய்யம் வட்டம், சித்தூர் திருவாகீசுவரர் கோயிலுக்குத் தேவதானமாக நாட்டு நியமனம் செய்கின்றவர் “பராந்தக குஞ்சிர மல்லனான இராசசிங்க பல்லவரையன்” என்கிறது.
தென்னார்க்காடு மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், சம்பை சம்புநாதர் கோயில் மூலதன வடக்குச் சுவரிலுள்ள இக்கல்வெட்டு முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தியது. வாணகோவரையன் சுத்த மல்லன் வேண்ட வேந்தர் இசைவு தந்து அந்த ஊருக்கு எல்லை வகுத்தது பற்றி ” ….. ஓர் ஊர்ரிட வேண்டுமென்று வாணகோவரையன் சுத்த மல்லன் விண்ணப்பஞ் செய்ய…..” எனக் கூறுகின்றது.
.
.
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், நார்த்தாமலை அருமைக்குளத்தின் வடபுறமுள்ள பாறையில் வெட்டப் பட்டுள்ள கல்வெட்டு “ஸ்ரீ அணிமதயேறி வென்றி மதத்தமிழ தியாரைனனான மல்லன் விட்மன் செய்வித்த குமிழி இது செ……தா தச்சன் சொனானனாரையனுக்கு குடு…..த குமிழ்த்துட… குழச்செய் வடவியது” என்கிறது.
குடிமக்களிடம் இருந்து விளைச்சலில் ஆறில் ஒரு பங்கினை வரியாக பெற்றதை முற்பராந்தகனின் செங்கல்பட்டு கல்வெட்டு,
“ஆறு கூறில் புரவுமாயதியும் பொன்னும் பெறுமாறு சோழ கோன்… பறிவையர் கோன் மங்கல வீர சோழன் அத்தி மல்லன் முங்கில் வரி என்னும் வயல்தான் கொடுத்தான்”எனக் கூறுகிறது.
ரைசின் மைசூர் கல்வெட்டில் கொடுக்கப் பட்டுள்ள அரசர்களின் வரிசைப் பட்டியலில் “திரிபுவன மல்லர்” என்ற மல்லர் குல மன்னரின் பெயர் இடம்பெற்றுள்ளது.
வரலாறு தொடரும்...

வெள்ளி, 26 மே, 2017

திருச்சி வரலாறு


திருச்சி

திருச்சிராப்பள்ளியின் சுருக்கம்

 இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ளது. இது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் தலைநகர் ஆகும். மேலும் இது உள்ளாட்சி அமைப்பில் மாநகராட்சி எனும் தகுதி பெற்றது. காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி தமிழகத்தில் உள்ள நான்கு முக்கியமான நகரங்களில் ஒன்றாகும். இதைப் பொதுவாகத் திருச்சி என்று சுருக்கமாக அழைக்கிறார்கள். இந்தியாவின் தூய்மையான 10 நகரங்களில் திருச்சியும் ஒன்று.



_*திருச்சி பெயர்க்காரணம் :*_

திரிசிரன் என்னும் அரக்கன் மூன்று சிரங்களைக் கொண்டவன். அவ்வரக்கன் இவ்வூரில் பூசித்ததனால் திருச்சிராப்பள்ளி என்னும் பெயர் ஏற்பட்டது. இது தென்னாட்டு கைலை மலை என்றும் புகழப்படுவது. திருச்சி மலைக்கோட்டையில் காணப்படும் குகையில் சிரா என்னும் சமணத் துறவி தங்கியிருந்து தவமிருந்ததாக அக்குகையில் உள்ள பதினோராம் நு}ற்றாண்டுக் கல்வெட்டு கூறுகிறது. சிரா துறவியின் பள்ளி சிராப்பள்ளி என்றாகி அதுவே இவ்வூருக்கு பெயராகி உள்ளது என்றும் கருதப்படுகிறது.

_*திருச்சியின் வரலாறு :*_

தென்னகத்தின் மத்தியில் திருச்சி மாவட்டம் அமைந்துள்ள காரணத்தால், தென்னகத்தின் மீது படையெடுத்து வெற்றி கொண்ட அத்தனைப் பேரரசுகளின் ஆதிக்கத்திலும் பரந்தும் குறுகியும் இம்மாவட்டம் விளங்கியது.
சேர,சோழ, பாண்டியர்களாலும், விஜய நகரப் பேரரசாலும் பாளையக்காரர்களாலும் திருச்சி மாவட்டம் ஆளப்பட்டது. ஆங்கிலேயர்களின் நிலையான ஆட்சி அமைந்த பிறகே, இம்மாவட்டத்தில் அமைதியும் வளர்ச்சியும் ஏற்படத் தொடங்கின.
1948இல் புதுக்கோட்டை சமஸ்தானம் திருச்சி மாவட்டத்தில் இருந்தது. இப்பகுதி 1974 இல் திருச்சியிலிருந்து பிரிக்கப்ட்டு தனி மாவட்டமாக அமைந்தது.
நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சி மாவட்டம் 1995, செப்டம்பர் 30ஆம் தேதி திருச்சி, கரூர், பெரம்பலு}ர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.

_*திருச்சி மாநகரத்தின் அமைப்பு :*_

திருச்சிராப்பள்ளி 10.8050°N 78.6856°நு என்ற புவியியல் கூறுகளில் அமைந்துள்ளது. மாநகரத்தின் சராசரி உயரம் 88 மீட்டர்கள் (289 கவ) ஆகும். இது தமிழ்நாட்டின் புவியியல் மையத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது. இதன் தரைப்பகுதி பெரும்பாலும் தட்டையாகச் சிற்சில இடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குன்றுகளுடன் காணப்படுகிறது.

_*மக்கள்தொகை :*_

இந்திய 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இம் மாநகரின் மக்கள்தொகை: 8,46,915 ஆகும். . இவர்களில் 50 சதவீதம் ஆண்கள், 50 சதவீதம் பெண்கள் ஆவார்கள். திருச்சிராப்பள்ளி மக்களின் சராசரி கல்வியறிவு 91.32 சதவீதம் ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94.66 சதவீதம் , பெண்களின் கல்வியறிவு 88.08 சதவீதம் ஆகும். இது இந்தியத் தேசிய சராசரிக் கல்வியறிவான 59.5 சதவீதம் விடக் கூடியதாகும். திருச்சிராப்பள்ளி மக்கள் தொகையில் 10 சதவீதம் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

_*திருச்சி மாவட்டத்தின் எல்லைகள் :*_
வடக்கில் பெரம்பலு}ர் மாவட்டத்தையும், கிழக்கில் பெரம்பலுர், தஞ்சாவூர் மாவட்டங்களையும், தெற்கில் புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டங்களையும், மேற்கில் கரூர், திண்டுக்கல் மாவட்டங்களையும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

_*கோட்டங்கள் :*_

திருச்சி
லால்குடி
முசிறி
திருவரங்கம்

_*வட்டங்கள் :*_

திருச்சிராப்பள்ளி (மேற்கு)
திருச்சிராப்பள்ளி (கிழக்கு)
ஸ்ரீரங்கம்
திருவெறும்பூர்
மண்ணச்சநல்லு}ர்
துறையூர்
முசிறி
தொட்டியம்
லால்குடி
மருங்காபுரி
மணப்பாறை

_*மாநகராட்சி :*_திருச்சி

_*நகராட்சிகள் :*_

மணப்பாறை
துறையூர்
துவாக்குடி

_*பேரூராட்சிகள் :*_

கூத்தப்பர்
காட்டுப்புத்தூர்
பாலகிருஷ்ணம்பட்டி
பூவாலு}ர்
மேட்டுப்பாளையம் (திருச்சி)
எஸ்.கண்ணணு}ர்
லால்குடி
புள்ளம்பாடி
மண்ணச்சநல்லு}ர்
பொன்னம்பட்டி
முசிறி
தொட்டியம்
தத்தையங்கார் பேட்டை
உப்பிலியாபுரம்
சிறுகமணி

_*ஆறுகள் :*_

திருச்சி மாவட்டத்தை வளங்கொழிக்க வைக்கும் முக்கிய ஆறு காவிரி. காவிரியுடன் அய்யாறு, அமராவதி, நொய்யாறு, மருதையாறு, வெள்ளாறு போன்றவை வந்து சேர்கின்றன.
திருச்சி வட்டத்தில் முக்கொம்பூர் எனுமிடத்தில் காவிரியிலிருந்து கொள்ளிடம் தனியாகப் பிரிகிறது. காவிரியின் முக்கிய கிளை நதிகள் கொள்ளிடம், வெண்ணாறு, உய்யகொண்டான் ஆறு, குடமுருட்டி, வீரசோழன், விக்ரமனாறு, அரசலாறு முதலியனவாகும்.

_*பொருளாதாரம் :*_

பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் திருச்சிராப்பள்ளி எண்ணெய் செக்குகள், தோல் பதனிடும் தொழில் மற்றும் சுருட்டு தயாரிப்பிற்கு புகழ் பெற்றிருந்தது.
திருச்சி தமிழ்நாட்டின் பொறியியல் சாதனங்கள் தயாரிக்கும் முனையமாக விளங்குகிறது.
1928ஆம் ஆண்டில் தொடர்வண்டி பணிப்பட்டறை நாகப்பட்டினத்திலிருந்து திருச்சிராப்பள்ளியின் கோல்டன் ராக்கிற்கு மாற்றப்பட்டது. தமிழ்நாட்டின் மூன்று பட்டறைகளில் இது ஒன்றாகத் திகழ்கிறது. இந்தப் பட்டறையிலிருந்து 2007-08 ஆண்டில் 650 வழமையான மற்றும் குறைந்த மட்ட சரக்கு வண்டிகள் தயாரிக்கப்பட்டன.
இந்தியாவின் மிகப்பெரும் பொதுத்துறை பொறியியல் நிறுவனமாக மே 1965இல் உயரழுத்த கொதிகலன்கள் தயாரிக்கும் பாரத மிகு மின் நிறுவனம் (டீர்நுடு)இ நிறுவப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐனெயைn சுரிநந ளலஅடிழட.ளஎப58 கோடி (ருளுகூ13 மில்லியன்) செலவில் ஒட்டற்ற எஃகு ஆலையும் கொதிகலன் துணைஉதிரிகள் தொழிற்சாலையும் நிறுவப்பட்டன. இவை மூன்றும் இணைந்து 22,927.4 சதுர மீற்றர்கள் (246இ788 ளங கவ) பரப்பளவில் பிஎச்ஈஎல் தொழிற்சாலை வளாகமாக அறியப்படுகிறது.
இங்கு நிலக்கரியைப் பயன்படுத்தி 6.2 ஆறு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
2010இல் ஐனெயைn சுரிநந ளலஅடிழட.ளஎப60 கோடிகள் (ருளுகூ13.5 மில்லியன்) செலவில் எல்காட் தகவல்தொழில்நுட்ப பூங்கா திறக்கப்பட்டது.
தமிழ்நாடு மின்னனுக்கழகம் வரையறையால் 59.74 எக்டேர்கள் (147.6 ஏக்கர்கள்) பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வளாகம் சிறப்பு பொருளாதார மண்டலமாக விளங்குகிறது.
இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ், திருச்சிராப்பள்ளியில் தனது செயற்பாட்டைத் துவக்கத் திட்டமிட்டுள்ளது.

_*கல்வி :*_

*கல்லுரிகள் :*

துவாக்குடியில் உள்ள திருச்சி தேசிய தொழிற்நுட்பக் கழகம் திருச்சியிலும் அதன் புறநகர் பகுதியிலுமாக 30க்கும் மேற்பட்ட கல்லுரிகள் உள்ளன.

_*கலை மற்றும் அறிவியல் கல்லுரி :*_

20 கலை மற்றும் அறிவியல் கல்லு}ரிகள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகக் கலை மற்றும் அறிவியல் கல்லுரி, மாத்தூர்
ஜமால் முகம்மது கல்லுரி
நேரு நினைவுக் கல்லுரி, புத்தனாம்பட்டி
பிஷப் ஹீபர் கல்லுரி
ஏ. ஏ. அரசு கலைக்கல்லுரி
காவேரி கலை மற்றும் அறிவியல் கல்லுரி

_*சட்டக் கல்லுரி :*_

அரசு சட்டக் கல்லுரி,திருச்சிராப்பள்ளி.
அகில இந்திய சட்டப்பள்ளி, நவலுர்குட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி.

_*பொறியியல் கல்லுரிகள்:*_

11 பொறியியல் கல்லுரிகள் உள்ளன.

_*வேளாண்மைக் கல்லுரி :*_

அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லு}ரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்.

_*பள்ளிகள் :*_

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 16 பள்ளிகள் உள்ளன.

_*முதன்மை தொழிலகம்:*_

பாரத மிகுமின் நிறுவனம்
கொதிகலன் உற்பத்தி தொழிற்சாலை
சிமெண்ட் தொழிற்சாலை
உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை

_*முக்கிய விளைபொருட்கள் :*_

வெங்காயம், வாழை, சாமந்தி ஆகியவை அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.

_*திருச்சியில் குறிப்பிடத்தக்கவர் :*_

வ.வே.சு.ஐயர் - வரகனேரி (திருச்சி)

_*திருச்சி விமான நிலையம் :*_

திருச்சி பன்னாட்டு விமான நிலையம், இந்தியாவில் உள்ள பழமையான விமான நிலையங்களில் ஒன்றாகும். திருச்சி விமான நிலையமானது இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பன்னாட்டு விமான நிலையங்களில் முதலிடத்தில் உள்ளது.
தமிழகத்தில் சென்னை மற்றும் கோவைக்கு அடுத்து திருச்சி விமான நிலையம் தான் சர்வதேச விமான போக்குவரத்து கொண்ட விமான நிலையமாக 20 ஆண்டுகளுக்கு மேலாக விளங்கி வருகிறது.
திருச்சி விமான நிலையத்துக்கு விமான போக்குவரத்து அமைச்சகத்தால் 4 அக்டோபர் 2012 இல் சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டது இந்த விமான நிலையம் தினமும் கிட்டத்தட்ட 3000 வெளிநாட்டு பயணிகளை கையாண்டு வருகிறது. வாரத்திற்கு 77 விமானங்கள் திருச்சியிலிருந்து இயக்கப்படுகின்றன.

_*ஆன்மிக தலங்கள் :*_

அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயில், திருச்சி மலைக் கோட்டை, திருச்சி
அருள்மிகு உச்சிப் பிள்ளையார் திருக்கோயில், மலைக்கோட்டை, திருச்சி
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம்
அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம்
அருள்மிகு வெக்காளி அம்மன் திருக்கோயில், உறையூர்
அருள்மிகு சம்புகேசுவரர் திருக்கோயில், திருவானைக்காவல்
வயலுர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில் குணசீலம்
அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில் திருப்பைஞ்ஞீலி
அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், பொன்மலை
சுற்றுலாத் தலங்கள் :

*திருச்சி மலைக் கோட்டை :*

திருச்சி மாநகரின் அடையாளச் சின்னமாகத் திகழ்வது மலைக்கோட்டையாகும். காவிரியின் தென்கரையில் இது கம்பீரமாக அமைந்துள்ளது. நடுவில் ஒரு மலையும், அதைச் சுற்றி கோட்டையும் கொண்டு அமைந்துள்ளதால் இது மலைக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது.
இம்மலையில் மூன்று நிலைகளில் கோவில்கள் அமைந்துள்ளன. கீழே மாணிக்க விநாயகர் கோயில், மேலே உச்சிப்பிள்ளையார் கோயில், மற்றும் இடையே தாயுமானவர் கோவில் ஆகியவை உள்ளன. இதைத் தவிர பல்லவர் கால குடைவரை கோவிலும், பாண்டியர் கால குடைவரை கோவிலும் இம்மலையில் உள்ளன.
பொதுவாக சமதரை அமைப்பிலேயே உள்ள திருச்சி மாநகரின் மத்தியில் சுமார் 83 மீட்டர் உயரமான இம்மலை அமைந்திருப்பது இயற்கையின் சிறப்பாகும். மிகப் பழமையான மலைகளுள் ஒன்றான இது, ஏறத்தாழ 3400 மில்லியன் வருடங்கள் பழமையானதாகக் கணக்கிடப்படுகிறது.

_*ஸ்ரீரங்கம் :*_

திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் (அருள்மிகு ரெங்கநாதர் கோவில்) 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம்.
காவிரி ஆற்றினால் சூழப்பட்டதும், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும்.
இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (220 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987 ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது.

_*திருவானைக்கோவில் :*_

திருவானைக்காவல், அல்லது திருஆனைக்காவல் எனப்படும் திருவானைக்கோவில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள மாபெரும் சிவன் கோவில் நகரமாகும். இதனை திருவானைக்காவல் என்றும் அழைப்பர். சிலர் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர்.
அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால் இதை பாடல் பெற்ற தலம் என்பர்.
இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 60வது சிவத்தலமாகும்.

_*சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் :*_

தமிழ் நாட்டில் உள்ள மாரியம்மன் கோவில்களில் முக்கியமானது சமயபுரம் மாரியம்மன் கோயில். இது, திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே காவிரியின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
தற்போது, சமயபுரம் மாரியம்மன் கோயில் இருக்குமிடம் கண்ணனு}ர். சமயபுரம் மாரியம்மன் சிலை அம்மன் எட்டு கைகளுடன், தலை மாலை கழுத்தில், சர்ப்பக் கொடையுடன், ஐந்து அசுரர்களின் தலைகளைத் தன் காலால் மிதித்து தனது சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் படி அமைந்துள்ளது.

*_இராணி மங்கம்மாள் கொலு மண்டபம் :*_

இராணி மங்கம்மாள் கொலு மண்டபம் கிபி 1700ல் நாயக்க அரசியான இராணி மங்கம்மாளினால் திருச்சியில் கட்டப்பட்டது. இது மங்கம்மாளின் கணவரான சொக்கநாத நாயக்கரால் 1666ல் கட்டப்பட்ட அரண்மனையின் ஒரு பகுதியாக உள்ளது.
இது திருச்சி மலைக்கோட்டைக்கு அண்மையில் உள்ளது. 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகளில் இது நகர மண்டப நிர்வாகத்தினர் கூடுவதற்கான மண்டபமாகச் செயற்பட்டது.
1999 ஆம் ஆண்டில் இது இந்திய அருங்காட்சியகத் துறையால் கையகப்படுத்தப்பட்டது. இங்கே தற்போது அருங்காட்சியகம் ஒன்று அமைந்துள்ளது.

_*முக்கொம்பு :*_

முக்கொம்பு திருச்சியில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 67-ல் அமையப்பெற்றுள்ள சுற்றுலாத்தலமாகும்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர், ஜீயபுரம் போன்ற பகுதிகளைக் கடந்து வடமேற்குப் பகுதியில் சென்றால் காவிரி ஆற்றினை தடுத்து நிறுத்தி மூன்றாகப் பிரித்துவிடும்பகுதியான முக்கொம்புவை அடையலாம்.
முக்கொம்புக்கு அருகாமையிலேயே புதைமணல் பகுதியும் கொள்ளிடமும் அமைந்திருக்கின்றன.

*_கல்லணை :_*

கல்லணை இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள உலக பழமை வாய்ந்த அணையாகும். இது காவிரி மீது கட்டப்பட்டுள்ளது. இது திருச்சிக்கு மிக அருகில் உள்ளது. திருச்சியில் அகண்ட காவேரி என அறியப்படும் காவிரி முக்கொம்பில் உள்ள மேலணையில் காவேரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது. அதில் காவிரி ஆறு கிளை கல்லணையை வந்தடைகிறது. கல்லணை காவிரியை காவிரி ஆறு, வெண்ணாறு, புது ஆறு, கொள்ளிடம் என 4 ஆக பிரிக்கிறது.

_*வயலூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் :*_

வயலூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இது திருச்சிராப்பள்ளி மாநகரிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது. இக்கோயில் முருகப் பெருமானுக்காகச் சிறப்புற்றதாகும். கௌமார வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக முருகப் பெருமானின் அடியாரான அருணகிரிநாதர் பாடிய தலமாகவும் திருமுருக கிருபானந்த வாரியார் போற்றிய தலமாகவும் இது விளங்குகிறது

*_கங்கை கொண்ட சோழபுரம் :_*

கங்கைகொண்ட சோழபுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும்.
இந்நகரம் இராசேந்திர சோழனால் கங்கையை வெற்றி கொண்டதைக் கொண்டாடுவதற்காகக் கட்டப்பட்டது. 1022-ல் இராசேந்திர சோழன் இந்தியாவின் கிழக்குக் கடற்கரை முழுவதையும் வென்று கங்கையையும் வென்றான். அந்த வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழன் என்ற பட்டப்பெயர் கொண்டான். மேலும் கங்கைகொண்ட சோழேஸ்வரம் என்ற சிவன் கோவிலையும் கட்டினர்
enga ouuru...

வியாழன், 25 மே, 2017

தமிழர் பரம்பரை


பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள்...

நாம் - முதல் தலைமுறை,

தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை,

பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை,

பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை,

ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை,

சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை,

பரன் + பரை - ஏழாம் தலைமுறை,

ஆக,

பரன் + பரை = பரம்பரை

ஒரு தலைமுறை - சராசரியாக 60 வருடங்கள் என்று கொண்டால்,

ஏழு தலைமுறை - 480 வருடங்கள்..

ஈரேழு தலைமுறை - 960 வருடங்கள்..
(கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள்)ஆக,

பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு, பதினான்குதலை
முறையாக என்று பொருள் வரும்.

வேறெந்த மொழிகளிலும் இப்படி உறவு முறைகள் இல்லை..

இதுவும் தமிழுக்கு ஒரு தனிச் சிறப்பு!..

*பகிர்ந்து கொள்ளுங்கள் எல்லோரும் தெரிந்து கொள்ளட்டும்*

திங்கள், 22 மே, 2017

மறவர்



மறவர் யார்?

முன்னர் போரில் ஈடுபட்டுள்ளவர்களை 'மறவர் 'என்னும் பொதுப் பெயரில் அழைக்கப்பெற்றனர்.ஆனால் பின்னர் தொடர்ந்து வந்த பல போர்கள் ஈடுபட்டு வீரத்திற்கே முதலிடம் கொடுக்கபட்டு வந்த பிரிவினருக்கே நிரந்தரமாக 'மறவர்' என்னும் பெயர் நிலைத்து விட்டது.

ராமநாதபுரம் மறவர் ஜமின்கள்
1. பாலவனத்தம்- பாண்டி துரை தேவர்
2. பாளையம்பட்டி – தசரத சின்ன தேவர்
3. படமாத்துர்-வேங்கை உடையன தேவர்
4. கட்டனூர்- தினுகாட்டுதேவர்
5. அரளிகோட்டை- நல்லன தேவர்
6. செவேரக்கோட்டை – கட்டனதத் தேவர்
7. கார்குடி- பெரிய உடையன தேவர்
8. செம்பனூர்- ராஜ தேவர்
9. கோவனூர்- பூலோக தேவர்
10. ஒரியுர்- உறையூர் தேவர்
11. புகலூர்- செம்பிய தேவர்
12. கமுதி கோட்டை – உக்கிர பாண்டிய தேவர்
13. சாயல்குடி- சிவஞான பாண்டியன்
14. ஆப்பனூர்- சிரை மீட்ட ஆதி அரசு தேவர்.

 திருநெல்வேலி மறவர் ஜமின்கள்:
1. சிவகிரி-சங்கிலிவீர பாண்டிய வன்னியனார்(மறவர் இனம்)
2. சேத்துர்-ராஜ ராம சேவுக பாண்டிய தேவர்
3. சிங்கம்பட்டி-நல்லகுட்டி தீர்த்தபதி
4. கொல்லம்கொண்டன்-வீரபுலி வாண்டாய தேவர்
5. கங்கைகொண்டன்-சிவதுரை சோழக தேவர்
6. சுரண்டை- வெள்ளைதுரை பாண்டிய தேவர்
7. ஊர்க்காடு- சேது ராம தலைவனார்
8. தெங்காஞ்சி- சீவல மாறன்
9. வடகரை- சின்னஞ்சா தலைவனார்
10. திருக்கரங்குடி-சிவ ராம தலைவனர்
11. ஊற்றுமலை- ஹிருதலய மருதப்ப பாண்டியன்
12. குமாரகிரி- குமார பாண்டிய தலைவனார்
13. நெற்கட்டன் செவ்வல்- வரகுன ராம சிந்தமனி பூலி துரை பாண்டியன்
14. தலைவன் கோட்டை-இரட்டைகுடை இந்த்ர தலைவனர்(அ)ராம சாமி பாண்டியன்
15. கொடிகுளம்- முருக்கனட்டு மூவரயன் (அ) மூவரய கண்டன்
16. கடம்பூர்- சீனி வள்ளால சொக்கதலைவனார்(அ) பூலோக பாண்டியன்
17. மனியச்சி- தடிய தலைவனார் பொன்பாண்டியன்
18. குற்றாலம்- குற்றால தேவன்
19.புதுகோட்டை(திருனெல்வெலி)- சுட்டால தேவன்
20. குருக்கள்பட்டி-நம்பி பாண்டிய தலைவனார்
21. அழகபுரி- சின்னதம்பி வன்னியனார்(மறவர் இனம்)
22. எழயிரம்பன்னை- இரட்டைகுடை வன்னியனார்(மறவர் இனம்)
23. தெண்கரை- அருகு தலைவனார்
24. நடுவகுரிச்சி- வல்லப பாண்டிய தேவர்

சிவகங்கைச் சீமை பதவி வகித்த மன்னர்கள்
1. 1728 - 1749 - முத்து வீஜயரகுநாத உ. சசிவர்ணத்தேவர்
2. 1749 - 1772 - சசிவர்ண விஜயரகுநாத முத்துவடுகநாதப்பெரிய உடையத்தேவர்
3. 1780 - 1789 - வீரமங்கை ராணி வேலு நாச்சியார் முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர்
4. 1790 - 1793 - இளவரசி வெள்ளச்சி நாச்சியார் - ராணி வேலு நாச்சியாரின் ஒரே மகள்
5. 1793 - 1801 - வேங்கை பெரிய உடையணத்தேவர் இளவரசி வெள்ளச்சி நாச்சியாரின் கணவர்
6. 1801 - 1829 - கெளரிவல்லப உடையணத்தேவர் மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையணத்தேவரின் உடன் பங்காளி ராணி வேலு நாச்சியாரின் தத்து மைந்தன்
7. 1829 - 1831 - உ.முத்துவடுகநாதத்வேர்
8. 1831 - 1841 - மு. போதகுருசாமித்தேவர்
9. 1841 - 1848 - போ. உடையணத்தேவர்
10. 1048 - 1863 - மு.போதகுருசாமித்தேவர்
11. 1863 - 1877 - ராணி காதமநாச்சியார் போதகுருசாமி
12. 1877 - முத்துவடுகநாதத்தேவர்
13. 1878 - 1883 - துரைசிங்கராஜா
14. 1883 - 1898 - து. உடையணராஜா
15. 1898 - 1941 - தி. துரைசிங்கராஜா
16. 1941 - 1963 - து. சண்முகராஜா
17. 1963 - 1985 - து.ச.கார்த்தகேயவெங்கடாஜலபதி ராஜா
18. 1986 - முதல் ராணி டி.எஸ்.கே.மதுராந்தகி நாச்சியார்.


மறவர்களின் கிளைகள்
கிளைகள் என்றால் என்ன?
அகராதியில் இந்தச் சொல்லுக்கு வம்சம் என்று பொருள் கூறப்பட்டுள்ளது. இந்த வம்சத்தைச் சார்ந்தவர் என்பதைச் சொல்லுவதுதான் கோத்திரம். கிளை என்பது திருமண நிகழ்ச்சிகளுக்காக உருவாக்க பட்டது. ஒரே கிளை சார்ந்த ஆனும்,பென்னும் உறவினர்கள் ஆகவிடினும் சகோதர உறவு முறையே. கிளை என்பது பெண்ணை சார்ந்தது.
இதை பெண் வழி சேரல் என கூறுவர். பென்னுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெண்ணின் கிளையே சாரும்.
ஆதாவது தகப்பன்(வெட்டுவான்) கிளையும் மகன்(தருமர்) கிளையும் இருக்கும் காரணம் அவ்விருவரின் தாய் எக்கிளையோ அக்கிளையே இருவரும்.ஒரே கிளை சார்ந்த இருவருக்கும் திருமனம் கூடாது வேறு கிளையுடனே பன்னவேண்டும். இதில் செம்பி நாட்டு மறவர்கள் சகோதிரியின் மகளை திருமனம் செய்வது கிடையாது காரணம் அது மருமகள் உறவு எனவே தன் மக்களுக்கே சம்பந்தம் செய்வர்.
கொண்டையன் கோட்டை கொத்தும் கிளையும்:
1. மருதசா கிளை (மறுவீடு)
அகத்தியர் கிளை கற்பகக் கொத்து
2. வெட்டுவான் கிளை
அழகுபாண்டியன் கிளை முந்திரியக் கொத்து
3. வீணையன் கிளை
பேர் பெற்றோன் கிளை கமுகங்கொத்து
4. சேதரு கிளை
வாள் வீமன் கிளை சீரகக் கொத்து
5. கொடையன் கிளை
அரசன் கிளை ஏலக்கொத்து
6. ஜெயங்கொண்டர் கிளை
வீரமுடிதாங்கினார் கிளை தக்காளி கொத்து
7. சங்கரன் கிளை
சாத்தாவின் கிளை மிளகுக் கொத்து
8. ஒளவையார் கிளை
சாம்புவான் கிளை தென்னங்கொத்து
9. நாட்டை வென்றார் கிளை
தருமர் கிளை மல்லிகை கொத்து
10. வன்னியன்
-வெற்றிலை கொத்து
அன்புத்திரன்
11. சடைசி
-ஈசங்க்கொத்து
பிச்சிபிள்ளை
12. லோகமூர்த்தி
-பனங்க்கொத்து
ஜாம்பவான்
அஞ்சுகொடுத்து மறவர்:
1.தாது வாண்டார்
2.மனோகரன்
3.வீரன்
4.அமரன்
5.வடக்கை
6.தொண்டமான்
காரன[சக்கரவர்த்தி] மறவர்.
1.தேவன்
2.ராயர்
3.பன்டயன்
4.பருவச்சான்
5.முருகதினி
6.வளத்தான்
செம்பிநாட்டு மறவர்:
1.மரிக்கா
2.பிச்சை
3.தொண்டமான்
4.கட்டூரான்
5.கருப்புத்திரன்
6.சீற்றமன்
7.தனிச்சன்
8.கற்றார் கிளை
ஆறு நாட்டு வடாகை மறவர்:
1.பொன்னன்
2.சீவலவன்
3.பீலிவலன்
4.கொட்டுரான்
5.நம்புனார்
6.குழிபிறை
உப்புகட்டு மறவர்:
1.புரையார்
2.குட்டுவான்
3.கொம்பன்
4.வீரயன்
5.கானாட்டன்
6.பிச்சை தேவன்
7.கோனாட்டன்
கார்குறிச்சி மறவர்:
1.நம்பியன்
2.மழவனார்
3.கொடிபிரியான்
4.படைகலைசான்
5.கூற்றுவ
6.குத்துவான்
பட்டம்கட்டி மறவர்:
1. காஞ்சிவனத்தார் - காஞ்சி கிளை
2. குட்டினி கிளை - கானாட்டான் கிளை
3. காவடி கிளை - மின்னாட்டன் கிளை
4 . பெயரில்லா கிளை - வெட்டுவான் கிளை
5. தோப்பர் கிளை - குத்துவான் கிளை
6. ஆட்டுக்குட்டி கிளை - குருகுலத்தான் கிளை
7. நயினார் சர்க்கரவர்த்தி கிளை - சர்க்கரவர்த்தி கிளை
அனைத்து உட்பிரிவு மறவர்களுக்கும் கிளை இருக்கும் ..சில கிளைகள் விடுபட்டிருந்தால் பதிவு செய்க
இந்த தொகுப்பில் 50 கிளைகள் மற்ற மறவரில் 50 கிளைகள்:செம்பியன், வெட்டுவன், விரமண், அரசன், வீரமுடி தாங்கினான், நாட்டுக் குழைத்தான், மரிக்கார், வடக்கு அறியாதான், கோபாலன் மங்கலம், சுதந்தர பாண்டியன், கங்கை, பிச்சை, தொண்டைமான், முத்துக்கிளியான், வீணியம், தேரூர்வான், கம்பத்தான், கிழவி, மறுவீடு, வாப்பா, நச்சாண்டி அமர், கருப்பத்திரன், வெட்டியனர், மாப்பானசம்பந்தன், செற அளவண்டன், சங்கரன், அகத்தா, நாலாப்பிறைகெங்கண்டா, பாச்சாலன், காலா, இராக்கி, வன்னிபண்டாரம், விடிந்தான், கருகளத்தான், வேம்பளத்தான், மகுடி, அம்பியுடுக்கி, அடுகலை, எருமை குளத்தான், கீரைக்கடியான், இத்தி, விளித்திட்டான், வயநாடுவெம்பக்கடி, கொண்டையன் கோட்டையார்.

வெள்ளி, 19 மே, 2017

உதகை தாவரவியல் பூங்கா வரலாறு


உதகை தாவரவியல் பூங்கா வரலாறு

நீலகிரி மாவட்டம் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாகும். இங்கு ஆண்டு தோறும் பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களை வெகுவாக கவர்வது உதகை தாவரவியல் பூங்காவாகும். ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்தப் பூங்காவிற்கு தனி வரலாறு உள்ளது.

உதகையில் உள்ள தாவரவியல் பூங்கா 1840 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களின் காய்கறி தேவைகளுக்காக முதன் முதலில் ஆங்கிலேய காய்கறிகளான காரட், பீன்ஸ், பீட்ரூட் உள்ளிட்ட பல காய்கறிகள் இங்கு விவசாயம் செய்யப்பட்டது.

இங்கு விவசாயம் செய்யப்பட்ட காய்கறிகள் ஆங்கிலேயர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் காலம் செல்லச் செல்ல இந்த முறையை அமுல்படுத்த முடியாமல் சென்றது. இதனைத் தொடர்ந்து 1847 ஆண்டு ஆங்கிலேய ஆளுநர் மார்பிஸ் டிவின்டேல் என்பவர் அந்த இடத்தைப் பூங்காவாக மாற்ற முயற்சி மேற்கொண்டார்.

அதன்படி 1848 ஆம் ஆண்டு பூங்கா உருவாக்கப்பட்டது அப்போது ஆங்கிலேய தாவரவியல் நிபுணரான வில்லியம் கிரஹாம் மெக் ஐவர் என்பவர் பூங்காவை வடிவமைத்ததோடு மட்டுமல்லாமல் இங்கிலாந்தின் புகழ்பெற்ற தாவரவியல் பூங்காவான கியு கார்டனில் இருந்து பல்வேறு மலர் செடிகளை கொண்டு வந்து உதகை தாவரவியல் பூங்காவிற்கு நடவு பணிகளை மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து 1896 ஆம் வருடம் முதல் உதகை தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி ஆங்கிலேயர்களால் ஆரம்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது வரை மே மாதத்தில் மலர் கண்காட்சி நடந்து வருகிறது.

மேலும் இந்தத் தாவரவியல் பூங்காவில் ராணுவத்தினரால் பேண்டு வாத்தியம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் பூங்காவை கை தேர்ந்த சிறப்பு வல்லுனர்களால் அமைக்கடவேண்டும் என்பதால் தாவரவியல் பூங்காவில் உள்ள இத்தாலியன் கார்டன் என்றிழைக்கப்படும் இடத்தை இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இத்தாலிய ராணுவத்தினர் மூலம் உருவாக்கினர்.

மேலும் இந்தப் பூங்காவில் ஜப்பானிய பூங்கா, புதிய பூங்கா, கண்ணாடி மாளிகை, பரந்த புல் வெளி மைதானம் ஆகியவை ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்டது.

இப்பூங்காவில் நுழைந்த உடன் கண்களுக்கு விருந்தாக அமையும் பரந்த புல்வெளி மைதானம் ஆங்கிலேய புல் என்றழைக்கப்படும் புற்களை இங்கிலாந்திலிருந்து கொண்டு வந்து நடப்பட்டது.

இந்தப் பூங்காவை மேலும் அழகு படுத்துவதற்காக இந்திய புவியியல் ஆராய்ச்சி துறை சார்பாக 20 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்லாகிப போன மரத்தை பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இப்பூங்காவில் டைனோசார் காலத்து மரமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலேயர்களால் ஊருவாக்கப்பட்ட இப்பூங்காவில் உலகம் முழுவதும் இருந்து பல்வேறு மலர்கள் மற்றும் மரங்கள் இங்குக் காணக்கிடைப்பது சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமின்றி தாவரவியல் படிக்கும் மாணவர்களுக்கு அறியப் பொக்கிஷமாக உள்ளது.

புதன், 17 மே, 2017

வேளாங்கண்ணியின் உண்மையான வரலாறு தான் என்ன?



வேளாங்கண்ணியின் உண்மையான வரலாறு தான் என்ன?

வேளாங்கண்ணி முதலில் இருந்தே ஒரு கிறித்தவத் தலம் என்றே நம்மில் பெரும்பாலானோர் நம்ப வைக்கப்பட்டுள்ளனர். நாம் நினைப்பது போல் இது கிறித்தவத் தலமன்று, *சைவத் திருத்தலம்*.

‘கண்ணி’ என்பது அழகிய விழிகள் பொருந்திய பெண்ணைக் குறிக்கும் சொல்.

தமிழ் சைவ வரலாற்றில் நாம் கருத்திற் கொள்ள வேண்டிய செய்தி ஒன்றுண்டு. சமய குரவர் காலத்திற்குப் பின் எழுந்த சிவாலயங்களிலும் தேவார மூவர் அமைத்த முறையில் இறைவர் – இறைவியர்க்கு அருந்தமிழ்ப் பெயர்களே வழங்கின என்பதே அது.

தேவாரப் பாக்களை ஊன்றிப் படிக்கும் போது அம்பிகையின் இத்தகைய பெயர்கள் பல தெரிய வருகின்றன.

வேளாங்கண்ணியின் உண்மையான, பழைய பெயர்  *“வேலனகண்ணி”*
அம்பிகைக்குத் தேவாரம் சூட்டிய திருநாமம் இது.

”மாலை மதியொடுநீ ரர வம்புனை வார்சடையான்
‘வேலனகண்ணி’யொடும் விரும்பும்மிடம்………”
(திருஞானசம்பந்தர்)

சேல் [மீன்] போன்ற கண் அமைவதால்
“சேலன கண்ணி”
வேல் போன்ற விழி இருப்பதால் “வேலன கண்ணி”. *பிற்காலத்தில் வேளாங்கண்ணி எனத் திரிந்தது.*

வேலன கண்ணி, சேலன கண்ணி என்பன உவமையால் அமையும் பெண்பாற் பெயர்கள்.

”கருந்தடங் கண்ணி” என்னும் பெயரும் அம்மைக்கு உண்டு. ”வேலினேர்தரு கண்ணி” எனவும் தேவாரம் அம்மையைப் போற்றுகிறது.



*”இருமலர்க் கண்ணி”* இமவான் திருமகளாரின் மற்றோர் அழகிய பெயர்.

மதுரையம்பதியின் மங்காப்புகழுக்குக் காரணம் மலயத்துவசன் மகளார் அன்னை *அங்கயற்கண்ணி*யின் ஆளுமை.

திருக்கற்குடி எனும் தலத்தில் அம்மையின் பெயர் *“மையார்கண்ணி”*
*”மைமேவு கண்ணி”*

கோடியக்கரை – குழகர் ஆலயத்தில் அம்மையின் நாமம் *’மையார் தடங்கண்ணி’*.

சேரமான் பெருமாள் நாயனாரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் ஒருசேர வருகை புரிந்து வழிபட்ட மிக முக்கியமான திருத்தலம். அருணகிரிநாதரும் பாடியுள்ளார்.

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வனில் இந்த இடம் சுட்டப்படுகிறது. இதுவும் ஒரு கடற்கரைச் சிவத்தலம்.
மற்றொரு பெயர் *“வாள்நுதற்கண்ணி”*

*இதே ரீதியில் காவியங்கண்ணி,
நீள் நெடுங்கண்ணி, வேல்நெடுங்கண்ணி,
வரி நெடுங்கண்ணி, வாளார் கண்ணி
என்று இன்னும் சில பெயர்களும் உண்டு.

*“மானெடுங்கண்ணி”* என்று ஒரு திருநாமம். ’மான்போன்ற மருண்ட பார்வையை உடையவள்’ என்பது பொருள்*

’மானெடுங்கண்ணி’ மணிக்கதவு அடைப்ப
இறையவன் இதற்குக் காரணம் ஏது என
மறிகடல் துயிலும் மாயவன் உரைப்பான்…..
அம்பிகையின் கயல் போன்ற விழிகளைக் காழிப்பிள்ளையார் பாடுகிறார்:

’நீலநன் மாமிடற்ற னிறைவன் சினத்தன் நெடுமா வுரித்த நிகரில்
”சேலன கண்ணி”வண்ண மொருகூ றுருக்கொள் திகழ்தேவன் மேவு பதிதான்…..’

இவ்வாறு, அழகியலில் தோய்ந்த அடியார்கள் இது போல அம்மையின் கண்ணழகையும், கண்களின் கருணையையும் வைத்தே பல இனிய நாமங்களைச் சூட்டி மகிழ்ந்துள்ளனர்.

இதெல்லாம் தேவாரப் பாதிப்பன்றி வேறில்லை என உறுதி படச் சொல்ல முடியும்.


கடற்கரைச் சிவாலயங்கள்:

தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரை முழுவதும் எல்லாப் பகுதிகளிலும் சைவம் செழிப்புற்றிருந்தது.

”மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்……”
என்று சம்பந்தர் முன்பு கடலோரம் அமைந்திருந்த கபாலீஸ்வரர் கோயிலின் மாசி மகத் திருவிழாவை வர்ணிக்கிறார். கடற்கரைத் தலங்களில் எல்லாம் மாசி மகம் தீர்த்தவாரிக்கு இறைத் திருமேனிகளைக் கடற்கரைக்குக் கொண்டு சென்று தீர்த்தவாரி செய்விப்பது இன்று வரை நடைபெற்று வருகிறது.

கீழைக் கடல் சார்ந்த பல ஆலயங்கள் – திருவொற்றியூர், மயிலைக் கபாலீசுவரர் ஆலயம், திருவான்மியூர் மருந்தீசுவரர் ஆலயம், புதுவை வேதபுரீசுவரர் ஆலயம், நாகபட்டினம் காயாரோஹணேசுவரர் ஆலயம், கோடியக்கரைக் குழகர் ஆலயம், வேதாரண்யம் -காரைக்கால் – புகார் ஆலயங்கள் போன்றவை முக்கியமானவை. வேளாங்கண்ணி ஆலயமும் இவற்றுள் ஒன்று என்பதில் மாற்றம் இல்லை.

மயிலையில் மட்டும் வாலீசுவரர், மல்லீசுவரர், வெள்ளீசுவரர், காரணீசுவரர், தீர்த்த பாலீசுவரர், விரூபாக்ஷீசுவரர் எனும் தலங்கள்; கபாலீசுவரர் ஆலயம் தவிர. தரும மிகு சென்னையில் பேட்டைகள் தோறும் இன்னும் பல சிவாலயங்கள். இங்கு அவற்றைப் பட்டியலிடவில்லை.

திருவதிகை வீரட்டானம் – அப்பரடிகள் வரலாற்றோடு தொடர்புடையது  சமய குரவர் பாடல் பெற்ற தலம்.

சுவாமி – வீரட்டானேசுவரர்
அம்மை – பெரியநாயகி

திருச்சோபுரம் – சம்பந்தர் பாடிய கடல் தலம். கடலூர் அருகில்.
சுவாமி – சோபுரநாதர்
அம்மை – வேல்நெடுங்கண்ணி

திருச்சாய்க்காடு – காவிரியாறு கடலில் கலக்கும் இடத்தே அமைந்துள்ள ஒரு கடல் தலம்.கோச்செங்கட் சோழர் செய்த மாடக்கோயில். இயற்பகை நாயனார் வழிபட்டு, முத்தி பெற்ற திருத்தலம். நாவுக்கரசரும், காழிப்பிள்ளையாரும், ஐயடிகள் காடவர்கோனும் பாடியுள்ளனர். போருக்குத் தயாராக வில்லேந்திய வேலவரை இவ்வாலயத்தில் காணலாம். எதிரிகள் தொல்லையால் பாதிப்புக்கு உள்ளானோர் முருகனை வழிபட்டுத் துயர் நீங்கப் பெறலாம்.

சுவாமி : சாயாவனேச்வரர்
நித்த லுந்நிய மஞ்செய்து நீர்மலர் தூவிச்தூவிச்i
சித்த மொன்றவல் லார்க்கரு ளுஞ்சிவன் கோயில்
மத்த யானையின் கோடும்வண் பீலியும் வாரித்
தத்துநீர்ப் பொன்னி சாகர மேவுசாய்க் காடே !
– திருஞானசம்பந்தர்

நாகப்பட்டினம் பகுதியில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான மீனவர் குலத்தி் உதித்த *அதிபத்த நாயனார்* வாழ்ந்த நுழைப்பாடி என்ற கிராமக் கடல் கோயில்.

முருகப்பெருமான் போருக்குப் புறப்படும் முன்பாக முக்கட்பிரானை வழிபட்ட கடல் தலம் திருச்செந்தூர்;
இராமேசுவரம் இராமபிரான் வழிபட்ட உலகப்புகழ் பெற்ற கடல் தலம்.

இது போன்ற ஒரு கடல் தலம்தான் வேளாங்கண்ணியும்.



*இப்பகுதியில் புதையுண்ட தெய்வச் சிலைகளும் ஐம்பொன் தெய்வத் திருமேனிகளும் மிகுந்த அளவில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப் பட்டுள்ளன.*

இன்றைய வேளாங்கண்ணியில் ரஜதகிரீசுவரர் சிவாலயம் ஒன்றும் அமைந்துள்ளது.

இது பழமையான ஆலயமா அல்லது இன்றைய கபாலீசுவரர் ஆலயம் போன்ற புத்துருவாக்கமா என்பதை ஆய்வுக்குட் படுத்த வேண்டும்.

அப்போது இப்பகுதி குறித்த சரித்திர உண்மைகள் வெளி வர வாய்ப்பு இருக்கிறது.

சில நூற்றாண்டுகளுக்கு முன் கடற்கரைப் பகுதிகளில் குடியேறி அவற்றைக் கைப்பற்றிய போர்த்துகீசியர், டேனிஷ்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள் ஆகியோர் அங்கிருந்த பல இந்து ஆலயங்களை அழித்தனர்.

அவ்விடங்களில் கிறிஸ்தவ சர்ச்சுகளையும் அமைத்தனர். சென்னை கபாலீசுவரர் ஆலயம், புதுவை வேதபுரீசுவரர் ஆலயம் இவை இரண்டும் இந்த கிறித்தவ “சகிப்புத்தன்மைக்கு” மிகச் சிறந்த சான்றுகளாகும்.

‘கோவா’ கடற்கரைப் பகுதியிலும் பல ஆலயங்களை போர்ச்சுகீசியர் அழித்தனர். 1567ல் போர்த்துகீசிய மிஷனரிகள் கோவாவில் தரைமட்டமாக்கிய ஆலயங்களின் எண்ணிக்கை 350.

அக்காலகட்டத்தில் இந்துக்கள் துளசிச் செடி வளர்ப்பதற்குக் கூட அங்கு தடை இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

கிறித்தவ மிஷனரிகளின் கலாசாரத் திருட்டு:
காவி உடை அணிதல், ஆலய விமானங்களின் பாணியில் சர்ச் எழுப்புதல், சர்ச்சுக்கு முன்பாகக் கொடிமரம் நிறுவுதல், ’வேதாகமம்’,‘சுவிசேஷம்’ ‘அக்னி அபிஷேகம்’ , ‘ஸர்வாங்க தகன பலி’ போன்ற சங்கதச் சொற்களை வலிந்து புகுத்துதல், கொடியேற்றுதல், தேரிழுத்தல் போன்ற சடங்குகளைத் தம் சமயத்துக்குள் புகுத்தி இந்துக்களைக் கவர்ந்து மதம் பரப்பும் முயற்சிகளைப் பல நூற்றாண்டுகளாகவே கிறித்தவ மிஷனரிகள் தமிழ்நாட்டில் செய்து வருகின்றனர்.

*இதன் ஒரு அங்கமாகவே மேரி மாதாவுக்குத் தமிழர் முறையில் சேலை அணிவித்து , ‘வேலன கண்ணி’ எனும் பெயர் வேளாங்கண்ணி என்று ஆக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை*.

இந்து தெய்வங்களைச் சாத்தான், பிசாசு என ஒருபுறம் இகழ்ந்துகொண்டு, மறுபுறம் இந்து தெய்வப் பெயர்களைக் கவர்ந்து ஏசுவுக்கும் மேரிக்கும் சூட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்பதை குறைந்த பட்ச மனச்சாட்சியுள்ள தமிழ்நாட்டுக் கிறித்தவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.



*சில கேள்விகள்:

*வேளாங்கண்ணி இப்போது மிகப் பிரபலமான கிறித்தவப் புனிதத் தலம் என்றே வெங்கையா நாயுடுவால் நிலை நிறுத்தப் பட்டு விட்டது. ஆனால், இது எப்படி கிறித்தவத் தலமாகிறது என்பதற்கான அடிப்படையான சில கேள்விகள் அப்படியேதான் உள்ளன
.
1)  ’வேளாங்கண்ணி’ கிறித்தவப் பெயரா ?.

 2)  விவிலிய ஆதாரம் உள்ளதா ?.

இல்லையெனில்,

 3) வேளாங்கண்ணி என்ற பெயரை சூட்டியது யார்?.

போர்த்துகீசிய மாலுமிகளா, வாடிகனில் உள்ள போப் அரசரா அல்லது பின்னால் வந்த மிஷனரிகளா?.

 4)  ஐரோப்பிய மிஷனரிகள் இதே போன்று வேறு தூய தமிழ்ப் பெயர் எதையாவது சூட்டியுள்ளார்களா?.

5)  திரித்துவத்துக்குப் [Trinity] புறம்பாக மேரியைத் தனியாக பெண் தெய்வமாக வழிபடுவது விவிலியத்திற்கும் கிறித்தவ இறையியலுக்கும் ஏற்புடையதா?.

6)  இது ஒரு பொதுவான கிறித்தவ வழிபாட்டுத் தலம் என்றால், கிறித்தவரில் எல்லாப் பிரிவினரும் ஏன் வேளாங்கண்ணிக்கு வந்து வழிபடுவதில்லை ?.

7)  ஆரோக்கியத்துக்கும் வேளாங்கண்ணி எனும் பெயருக்கும் என்ன தொடர்பு ?.

8)  வேளாங்கண்ணிக்கும் கிழக்குத் தேசத்து லூர்து (Lourdes of the East) என்ற கருத்தாக்கத்திற்கும் ஏதாவது தொடர்பு உண்டா?.

9)  லூர்து மேரி (Lourdes) தலத்தில் கொடியேற்றமும், தேர் பவனியும் உண்டா ?.

10)   ஐரோப்பியர்கள் லூர்து ஆலயத்தில் மொட்டையடித்துக் கொள்வார்களா ?.

11) வேளாங்கண்ணியில் உள்ள மேரி மாதாவின் திருத்தோற்றங்களுக்கு (apparitions) எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை என்பது கிறித்தவர்களாலேயே ஒப்புக் கொள்ளப் படுகிறது. இவ்வாறிருக்க, இந்த சர்ச் ‘கிழக்கின் லூர்து’ ஆனது எப்படி ?.

12)  லூர்து மேரியை ஆரோக்கிய மாதாவாக ஏன் வழிபடுவதில்லை ?.

13) பல அற்புதங்கள் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் இவ்வழிபாட்டுத் தலத்துக்கு 1962 வரை பஸிலிகா என்ற அந்தஸ்து வழங்கப்படாததன் காரணம் என்ன ?.

14) அற்புதங்கள் முன்பே நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆயினும், ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் ஏன் பஸிலிகா அந்தஸ்துக் கிடக்கவில்லை ?.

15)  இது தொடக்கத்திலிருந்தே மகிமை கொண்ட திருத்தலமாக நம்பப்பட்டது என்கிறார்கள். ஆனால், வாரன் ஹேஸ்டிங்க்ஸ் முதல் மவுண்ட்பேட்டன் வரையில் இந்தியாவை ஆண்ட நாற்பதுக்கும் மேற்பட்ட ஆங்கிலேய கவர்னர்களில் ஒருவர் கூட ஆரோக்கிய மாதாவை வந்து வழிபட்டதாகக் குறிப்பு இல்லை.
இந்த முரணுக்கு என்ன காரணம்?.

16) மிகச் சமீப காலத்தில் வாழ்ந்த கிருஷ்ண பிள்ளை (இரட்சணிய யாத்திரிகம் எழுதியவர்), மாயூரம் வேதநாயகம் பிள்ளை போன்ற தொடக்க காலக் கிறித்தவத் தமிழ் அறிஞர்கள் கூட வேளாங்கண்ணி திருத்தோற்றம் குறித்து எழுதியுள்ளதாகவோ வேளாங்கண்ணியில் மொட்டைபோட்டு வழிபட்டதாகவோ குறிப்புகள் இல்லை.

17)  1981ல் மறைந்த தேவநேயப்பாவாணர் கூட‘கிறித்தவக் கீர்த்தனைகள்’ நூலில் ஆரோக்கிய மாதாவைக் குறித்துப் பாடல்கள் இல்லை. இதைக் குறித்து என்ன சொல்கிறீர்கள்?.

18)  ஏராளமான இந்தியக் கிறிஸ்தவர்கள் குழுமிக் கும்பிடும் வேளாங்கண்ணி சர்ச் ஆலயத்தில் இதுவரை எந்தப் போப்பும் ஆரோக்கிய மாதாவை மண்டியிட்டு வணங்கியுள்ளதாகத் தெரியவில்லையே!!. இதற்கு என்ன காரணம்?.

*இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் ஆதாரபூர்வமாக விடை காண முற்பட்டால், வேளாங்கண்ணியின் உண்மையான சரித்திரம் தெரிய வரக் கூடும்*

நம் வேலனகண்ணி விரைவில் நமக்கு உணர்த்துவாள்.

வெள்ளி, 12 மே, 2017

வன்னியர் வன்னியர் குல சத்ரியர் வரலாறு:



பள்ளி ( வன்னியர் வம்சம்)

வன்னியர் வன்னியர் குல சத்ரியர் வரலாறு:

வன்னியர்
வரலாறு சத்ரியர் பட்டம் தமிழகதில்
வன்னியர்களுக்கு மட்டுமே உள்ளது

சேர
சோழ
பாண்டிய
பல்லவ
சாளுக்கிய ,
களப்பிர ,
சம்புவராய,
கடையாழு வள்ளல்கள்,
நாயக்கர்,
வேளிர் . வழிவந்தவர்கள் என்றும்
அழைக்கபடும் ஒர்
மூத்தகுடி வன்னியர் குடியாகும்.



 மேலும் இவர்கள்
இந்தியாலே நேரடிய சத்ரியர்கள் என
18 புராணங்களில் 9
வது புரானமான
அக்கினேயபுராணம் மிக விரிவாக
கூறுகிறது.


இந்தியாவில் முதல்
சத்ரியரே வன்னியர்கள்தான்
முதல்
அரசன் வீர வன்னியன் மட்டுமே என இப்
புராணம் கூறுகிறது.

இது உண்மையே
வன்னியரின்
ஆட்சி செய்த முதல் இடம்
இன்று கடலில் மூழ்கியுள்ள
குமரிகண்டமே (லேமூரியா )
இதுவே முதல் மானிடன் தோண்றிய
இடம்மாகும் இங்கே 30,000
ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே,
முதல் ,இடை,
சங்கங்களை பாண்டியவன்னிய
மன்னர்கள் நிறுவி தமிழ் வளர்தனர் அழிந்த குமரிகண்டம் முதல்
கென்டு சிந்து சமவெளிக்கு
அப்பால் ஆப்கானிஸ்தான்
வரையிலும் சீனா மற்றும் ஈரான்
வரையிலும் ஆன்டவர்கள் வன்னியர்கள்
இவர்கள் இன்றும் தங்களை பாண்டவர் , இராமன் , மூவேந்தர் வழிவந்தவர்
என்றே அழைக்கப்படுகின்றனர்



வன்னியர்களை நவகண்ட நாயகர்
எனவும் அழைப்பர்
இதில் தென் இந்தியாவில்
உள்ளவர்களை பற்றி மட்டும்
பார்போம்.



வன்னியர்கள்:

1 அக்கினேய குல சத்ரியர்
2 சிவன்குலம்
3 சம்புகுலம்
4 தீகுலம்
5 தர்மராஜாகுலம்
6 கர்ணன் குலம்
7 வன்னியசத்ரியர்
8 மறவர்குலம்
9 தீக்குலத்தோர்
10 பாரதகுலம்
11 இரகு குலம்
12 சூரியகுலசத்ரியர்
13 சந்திரகுலசத்திரியர்
14 இந்திர குலம்
15 அம்சி குலம்
16 ஆணாற்புதல்வன்
அக்னிபுத்திரன்
17 குருகுலவம்சம்
18 திகளர் குல சத்ரியர்
எனபல ஆயிர எண்ணில்
அடங்கா குலமாகவும் கோத்திரமாக
உள்ளனர் .





இவர்களை ஒன்றினைப்பது மாகபாரத
விழா ஆகும்.

வன்னியர்களின் கோத்திரம்:

வன்னியரின் பிரிவுகள்:

1.கிருஷ்ண வன்னியர்
2.ஜம்பு வன்னியர்
3.பிரம்மவன்னியர்
4.கங்கவன்னியர்
5.அரசபள்ளியர்

வன்னியர்களின் கோத்திரம்

கிருஷ்ண வன்னியர்:
1)மத்ம
2)ஜம்பு
3)பிருகு
4)சத்ய
5)சாத்தியா
6)நித்திய
7) சதிய

ஜம்பு வன்னியர்:
1)ஜம்பு
2)முனிவர்
3)நிர்மல.

பிரம்மவன்னியர்:
1)பரம
2)வசு
3)வன்ய ,
4)தனஞ்சய
5)கிருஷ்ணன்

கங்கவன்னியர்:
1)கந்தர்வ
2) கமன்டல
3)கௌமாரி,,
4)நள
5)கந்தோத்திரம்

அரசபள்ளியர்:
1)வீர
2)விஜய
3)தாரா
4) ததி.

தமிழகவன்னிய அரசர்கள்:


1 அதியமான்
2 சேரன்
3 சோழர்
4 பாண்டியர்
5 பல்லவர்
6 கங்கர்கள்
7 சாளுக்கியர்
8 மழவராயர்
9 மலையமான்
10 வாணர்
11 சம்புவராயர்
12 காடவர்
13 வேளிர் ஆகிய அரசர் வழிவந்தவர்கள் வன்னியர்
ஆவர்.



பட்டபெயர்கள்:


1)வேணாட்டரசன்
2)வேட்டைக்காரார்
3)முத்தரையர்
4)பள்ளி
5)வாணகோவரையர்
6)வேள்,
7)ஆய்
8)ஆஅய்
9)வேளிர்
10)வேள்மான்
11)வேளிமான்,
12)வேளியன்
13)வேளார்
14)தேவன்
15)நாட்டார்
16)உடையார்
17)மூவேந்தன்,
18)மூவேந்தவேளார்
19)உடையான்,
20)ஒலைநாயகம்
21)சோழ
மூவேந்தன்
22)ஒலை நெறியுடையான்
23)சோழனார்
24)ஒலை மீனவன்
மூவேந்தன்
25)சோழங்கர் ,
26)நாற்பத்தெண்ணாயிரன்
27)வீரன்
28)வேகம்பன்
29) வேடர்
30) அரச குல
வேளிர்
31)எழ்வர் வழி
32)தொண்டைமான்
33)திரையன்
வம்சம்
34)வேளியன்
35)வேண்மாள்
36)வேளாவிக்
கோமான்
37)வேண்மாள் ,
38)வானகோவரையர்,
39)எருமையூரான்
40) வடுகர்பெருமாகன்
41) அதியமான்
42)மலையமான்,
43)ஆஆய் எயின்ன்
44)பாணன்,
45)பறம்பிற்கோமான்,
46)பாரிவேள்
47)மல்லன்
48)விச்சிகோ
49)வஞ்சியர்
50)கோற்கையார்
51)கொடைபுறிந்தோர்
52)ஆவியர்
53) ஆவினங்குடி
54)பெருங்கல்நாடன்
55)கண்டிரக்கோ
56)மலைநாடன்
57)விச்சிக்கோவினர்
58)அதியன்
59)அதிகன்
60)எழினி
61)மழவர்
பெருமகன்
62)மாறன்
63)அதியர்
கோமான்
64)வானவன்
65)தேவர்
66)மழவர்கோமகன்
67)மழவராயர்,
68)அஞ்சியோர்
69)செம்பியர்
70)ததியர்,
71)மறவர்
72)நாயனார்
73)வாணராயர்
74)தேவன்
75) காரணகையான்கள்
76)வர்மா
77)வர்மன்
78)வல்வில்லனார்
79) வேடான்
80)கொல்லி மழவர்
81)பல்லாண்டான்
82)சேதியார்
83)சேதிராயன்
84)மலையன்
85)மலையகுலராஜன்
86)கோவலராஜன்
87)வன்னியனாயன்,
88)வன்னிய தேவேந்திரன்
89)ராஜராஜர்
90)வன்னியனார்
91)மனபரணர்
92வயவர் பெருமகன்
93)எயினர்
94)குறும்பூடையான்
95)எயினன்
96) குறுந்தொடியார்
97)பல்லவர்,
98)தொங்கர்
99) சேரலர்
100)ஆய்வேள்
101)குறும்பர்
102)தாவேட்டுடாயன்,
102)பன்றியன்
103)புளியனேன்,
104)ஊரழிப்பன்
105) வேட்டுவர்,
106)வேட்டைக்காரர்
107) வஞ்சி முத்தரையன்
108)வடுகு முத்தரையன்
109)சோழ
முத்தரையன்
110)குறும்பினன்
111)மிழலைவூரான்
112)நிழல்வூரான்
113)நிடுருரான்.
114)எவ்வியர்,
115)இருங்கோவேள்,
116)துவாரகைவேள்,
117)துவாரகை வழி,
118)துவாரகை வாசன் ,
119)பூரியர்,
120)துவாரைக்கோமான்,
121)ஒய்மான்,
122)சம்பு குலத்தான் ,
123)நல்லியாதன்,
124)வில்லியாதன்,
125) நாகர்,
126)பல்லவதரையார்,
127)காலிங்கராயர்,
128)களப்பரர்,
129)காடவராயர்,
130)நுளம்பர்,
131)நுளம்ப பள்ளி,
132)களப்பிரர் ,
133)கள்வர் ,
134 கள்ளர்,
135)மோரியர்,
136)கொற்றன்,
138) வானவன்,
139) மறவன்,
140)குறும்பூரன்,
141) குடகோ,
142)பண்ணண்,
143) பண்ணாத்தியன்,
144)தித்தர்,
145)பெரியன்குலம்,
146)பொறையாற்றுக்கோமான்,
147)நாஞ்சில் வள்ளுவன்,
148)பொருநள்,
149) அவியன்,
150)
அவியர்,
151)காரியாதியன்வளவர் ,
152)சோழிங்கர்,
153)சோழியஎனாதியர்த
திருகுட்டுவனார் ,
154 அழூம்மிலிலார்,
155 குறவர்
பெருமகன்,
156)கங்கர்,,
157) கட்டியார்,
158)மலைநாடன்,
159) சேரநாடன்,
160)சோழநாடன்,
161) பாண்டியநாடன் ,
162)தேசிங்கர்,
163) கோய்மான்,
164)தேயன்குடி,
165) முவன்குலம்,
166)எழினியங்கார்,
167) ஆதன்,
168)தோன்றிக்கோன்,
169) அந்துவன் ,
170கிரன்,
171)தந்துமாறன்,
172)தருமபுத்திரன்,
173)வாணராஜன்,
174) வாணகோவரையார்,
175)பல்லவமல்லன்,,
176) மத்தியர்,
177)பரதவர் கோமான்,
178)வாணன்,
179)விராஅன் அழிசியர்,
180) அருமன்,
181)சொல்லியக்கோமன்,
182) தழபன்,
183)ஆயர்கோமான்,
184) கடலன்,
185வேங்கை மார்பன்,
186) பிண்டர்,
187)அறுவகையனார்,
188) கொடுமுடியைன்,
189)வோம்பியர்,
190) மும்முடியார்,
191)முடியார்,
192)காஞ்சியர்,
193)தேற்கத்தியர்
,194)தொல்குடியார்,
195)குடியாணவன்,
 196)குடியான்டவர்,
197)படையான்டவர்,
198) படையாச்சி,
199)இந்திரனார் ,
200)இமயவரம்பன்,
201)எவ்வியார் வழுதியார்
202)குமரனார்,
203) வளவன் ,
204)கொங்கர்,
205) கோசனார்,
206)கோசர் கோமான்,
207)செம்பியன்,
208)சேரலாதன்,
209) சேரமான்,
219)சோரல்.
211)சேரன்,
212)சோழன்,
213)நம்பி,
214)நல்வழதியார்,
215)நால்வகையார்,
216) நீலன்,
218)பசும்பூன் பாண்டியன்,
219)பரதன்குலம்,
230) நம்பியார்,
231)செழியன்,பெருவழுதி,
232)நன்மாறன்,
234)சடையன் வர்மன்,
235)வர்மர்,
236) சடைவர்மன்
237) வானவர்கள்,
238)மறையோன்,
239)மாலைமாறன்,
249)மலைமாறன்,
243) இரும்பொறை,
244 கடம்பூரான்
245 கள்ளர்
246 நாகர்கள்
247 தொண்டைமான்
248 ) பல்லவராயர்,
249)சேதிராயர்
 250)காடவராயர் காடவாராயர் "வன்னியர்
253 மேல்கொண்டான்,
254சோழங்கன்,
255 சோழகங்கன்,
256நாடாள்வார்
257 சோழர்கள்
258
மழவராயர்
259 ,பழுவேட்டரையர்
260 ,மலையமான்,
261தஞ்சைராயர்
262தஞ்சைக்கோன்
263பழையாறுகொண்டார்
264)பழுவேட்டரையர்
265) புலிக்கொடியோர்
266) வல்லக்கோன்
267)வல்லத்தரசர்
268) வாணாதிராயர்
279) வண்டைராயர்
270)வைதும்பர்
271)வைதும்பராயர்
272)காடவராயர்
273)கொடும்பாளுர்ராயர்
274) உறந்தையர்,
275)அடங்காப்பிரியர்
276உறந்தையாண்டார்
278)அருண்மொழித்தேவர்.
279)ஈழங்கொண்டர்
280) இருங்கோளர்
281)கச்சியராயர்
282)கொங்குராயர்
283)கங்கைநாட்டார்
284)கோட்டையாண்டார்
285)கலிங்கராயர்
286)கோனெரிமேல்கொண்டார்
287)கலிங்கராயதேவர்
288)சோழகங்கநாட்டார்,
289)செம்பியமுடையார்
290) சோழகேரளர்
291)சோழன்
292) சோழகங்கர்
293)கேரளாந்தகன்
294) சோழதேவர்
295)சோழகங்கதேவர்
296) சோழங்கர்,
297 ) செம்பியமுடையர்
298)சோழகோன்
299) சோழாட்சியார்
300) சோழபாண்டியர்
301)சோழராசர்
302) சோழரசர்
303)சம்புவராயர்
304)சோழநாயகர்
305)சோழபல்லவர்
306)சேரமுடியர்
307)சேனாதிபதி
308)சேனைத்தலையர்.
309) மும்முடிதேவர்
310)மும்முடி சோழனார் ,
311 சழனார்
312 தொண்டைமான்,
313 சோழனார்,
314 சேரனார் ,
315 படையாட்சி
316 பாண்டியனார்,
317 அஞ்சாத சிங்கம்
318  அதியர்
319 ஆறுமறையார்
320.அன்பனார்.
321 அண்னலங்காரர்
322 .ஆண்டுகொண்டார்
323 அஞ்சாத சிங்கம்
324 .பள்ளி
325 .படையாண்டவர்
326 துரைகள்
327 ஜெயப்புலியார்
328.புலிக்குத்தியார்
329.முனையரையர்
330 .முத்தரையர்
331 மானங்காத்தார்
332வாணத்தரையர்
333தேவர்தொண்டைமான்
334தொண்டாம்புரியார்
335 பள்ளி
336 ஞானியார்
337 ஒய்மான்
338 .சேத்தியார்
339 .வாண்டையார்
340 முதன்மையார் (முதலியார்)
341 நன்மையார்
342 .வணங்காமுடியார்
343 .நாயகர்
(நாயக்கர்)
344காலாட்கள்
345தோழஉடையார்
346 .சற்றுக்குடாதான்
347 .ரெட்டியார்
348கவுண்டர்
349கண்டர்
350 .வீரமிண்டர்
351 வன்னியனார்
352 .ரெட்டைக்குடையார்
353 .சேரனார்
354.சோழனார்
(சோழங்கனார்)
355 .சோழகங்கர்
356 .வல்லவர்
367 .அரசுப்பள்ளி
358.பாண்டியனார்
359 .பரமேஸ்வர
360வன்னியனார்
361.நயினார்
362.நாட்டார்
(நாட்டாமைக்காரர்)
363 .பல்லவராயர்
364 .காடவராயர்
365 .கச்சிராயர் .
366சம்புவராயர்
367 காளிங்கராயர்
368 .சேதுராயர்
369 தஞ்சிராயர்
370 .வடுகநாதர் .
371பாளையத்தார்
(பாளையக்காரர்)
372 .சுவாமி
373 .செம்பியன்
374 .உடையார்
375.நரங்கிய தேவர்
376 .கண்டியதேவர்
377 .சாமர்த்தியர்
378 .சாளுக்கியர்
379
சாமந்தர்
380.பல்லவர்
381 .பண்டாரத்தார்
382 .தந்திரியார்
383 .ராஜாளியார்
384 .கங்கண
385உடையார்
386 .மழவராயர்
387 .மழவர்
388 .பொறையர்(புரையர்)
389 .பூபதி
390 பூமிக்குடையார்
391 .ராயர்
392 .வர்மா
393.படையாட்சி
394 .காசிராயர்
395 ராய ராவுத்த
மிண்டார்
396 .மூப்பனார்
397 .வள்ளை(வள்ளல் என்பதன் மரூஉ)
398 பின்னடையார்
399 சேனைக்கஞ்சார்
400 .பரிக்குட்டியார்
401 .சேர்வை
402 கொங்குராயர்
403 .கட்டிய
நயினார்.
404 .கிடாரங்கார்த்தவர்
405 .சமுட்டியர்
406.ஷத்திரியக்கொண்டார்
407 .மருங்குப்பிரியர்
408 .பண்ணாட்டார்
409.கருப்புடையார்
410நீலாங்கரையார்
411 .கடந்தையார்
412.வில்லவர்
413 .கொம்பாடியார்
414.தென்னவராயர்
415 வண்ணமுடையார்.
416 .செட்டிராயர்
(செட்டியார்),
417 .மேஸ்திரி,
418.வேளிர்,
419 .தேசிகர்,
420 .நரசிங்கதேவர்,
421 . காடுவெட்டியார்,
422 .உருத்திரனார்,
423.,வானதிராயர்,
424.செங்கழுநீரர்,
425ஆணைகட்டின
பல்லவராயர்
 426.கரிகால் சோழனார்,
427.கங்கரையர்,
428 .வெற்றிக்களித்த
வீரமிண்டார்
429 களவென்றுடையார்,
430.படையெழுச்சியார்,
431 .களத்தில்
வென்றார்
432 .தொண்டையர்
(தொண்டலார்)
433.நாயக
வர்மா
434 .பிடாரியார்..
435 காடுவெடியார்
436 குடகுநாடான்,
437 காஞ்சி மன்ன்ன்,
438மலைநாடான் ,
439இராசகுலம்,
440 நாகமலையான்
441 இராசபோச,
442 இராசபோசர்
443 இரும்புதலை ,
444 கள்ளர் ,
445 கள்வர் ,
446 வீரகுடிமறவர்,
447சேர்வை ,
448 துளுநாடன்,
449 கிழ்மல்லர் ,
450 மேல்மல்லர் ,
451 பாண்டியமன்னர் நாடாள்வார்,
452 சட்டபள்ளியன் ,
453குணகுடியான் ,
454 உறவநாடான் ,
455 நாகமலையான் ,
456 குலசேகரன் ,
457 இரணியவர்மன் ,
458 ருத்ரவன்னியர் ,
459 கய்வன்னியர் ,
460  விரம்புவன்னியர் ,
461 நயினார் ,
462 இந்திரவன்னியர் ,
463 சூரியவன்னியர் ,
474 சந்திரவன்னியர் ,
465அக்னி,
466 அகமுடையான் ,
467அகமுடையார் ,
478 அரசு ,
469சத்திரியர் ,
470 நாகபடம் ,
471 நத்தமான் ,
472 ஒலை,
473 பந்த முட்டு,
474 கள்ளங்கி ,
475 கள்ளவேலி ,
476அஞ்சுநாள் ,
477 பன்னிரண்டு நாள் ,
478 வனப்பள்ளி ,
479  மீனபள்ளி ,
480 பாணபள்ளி ,
481 கோவிலார் ,
482 வலக்காரர் ,
483 வடமரக்காடு ,
484 எடகுலம் ,
485 ஜம்புகுலம் ,
486 சூரியபிரியன் ,
487 தொல்வட்டான் ,
488 வான்னாறுத்தான் ,
489 பாம்பறுத்தான் ,
490 பள்ளிகட்டராயர் ,
491 வன்னிகிழான் ,
492 வன்னியுடையான் ,
493 வன்னிபுரமுடையான் ,
494 சம்புகன் ,
495 விர வில்லிசயனார் ,
496 ராஜர் ,
497 படையாண்டவர் ,
498படைவெட்டியார் ,
499சோழனார்
500 சோழங்கனார்
501 கவுன்டர்

வன்னிய குல க்ஷத்ரியர்கள்
ஆட்சி செய்த சில பாளையங்களும்
அவர்களின் பட்டங்களும்:

1. பிச்சாவரம் -
புலிக்குத்தி புலிவாயில்
பொன்ணூஞ்சலாடிய வீரப்பசூராப்ப
சோழனார்.
2. முகாசா பரூர் - கச்சிராவ்
( கச்சிராயர்)
3. அரியலூர் – மழவராயர்
4. உடையார் பாளையம் - காலாட்கள்
தோழ உடையார்.
5. ஊத்தங்ககால் - பரமேஷ்வர வன்னிய
நயினார்.
6. கீழூர் - பாஷா நயினார்
7. செஞ்சி - வாண்டையார்,
முதன்மையார்(முதலியார்)
8. காட்டகரம் - கெடியரசு பெற்ற
கெங்கையாதிபதி
சென்னாமலைகண்டியத் தேவர்.
9. விளந்தை – வாண்டையார்,
கச்சிராயர்
10. பெண்ணாடாம் – கடந்தையார்
11. குன்ணத்தூர் – மழவராயர்
12. ஈச்சம் பூண்டி - கண்டியத் தேவர்.
13. பிராஞ்ச்சேரி - நயினார்
14. தத்துவாஞ்ச்சேரி – சேதுபதி
15. நெடும்பூர் – வண்ணமுடையார்
16. கடம்பூர் – உடையார்
17.ஓமாம்புலியூர் –
வண்ணமுடையார்
18. குண வாசல் – வண்ணமுடையார்,
உடையார்
19. மோவூர் - ராய ராவுத்த மிண்ட
நயினார்.
20. நந்திமங்கலம் பூலாமேடு –
மழவராயர்
21. கிளாங்காடு - சேதுவராயர்
22. கல்லை – நயினார்
23. நயினார் குப்பம் - காங்கேய
நயினார்
24. திருக்கணங்கூர் - கச்சிராயர்
25. தியாகவல்லி நடுத்திட்டு –
கச்சிராயர்
 26. ஆடூர் - நயினார்
27. மேட்டுப் பாளையம்
( சுண்ணாம்பு குழி) – பல்லவராயர்
28. சோழங்குணம் – முதன்மையார்
 29. வடக்குத்து - சமஷ்டியார்
30. வடகால் - ராய ரவுத்த மிண்ட
நயினார்
31. ஓலையாம்புதூர் -
வண்ணமுடையார், கச்சிராயர்
32. மயிலாடுதுறை - அஞ்சாத சிங்கம்
33.முடிகொண்ட நல்லூர் – உடையார்
34. கடலங்குடி - ஆண்டியப்ப
உடையார்
35. வடுவங்குடி - ஆண்டியப்ப
உடையார்
36. கு றிச்சி - உடையார்
37. செல்லப்பன் பேட்டை – சோழனார்
38. சோத்தமங்கலம் - வாண்டையார்
 39. கோடாங்க்குடி – சம்புவராயர்
 40. சென்னிய நல்லூர் - சம்புவராயர்
 41. கீழ்அணைக்கரை - வாண்டையார்,
உடையார்
 42. இடைமணல் – நயினார்
43. சுவாமிமலை – தொண்டைமான்
46. ஏழாயிரம் பண்ணை - ஆண்டுக்
கொண்டார்
47. விடால் – நாயக்கர்
 48. பன்ணீராயிரம் பண்ணை - கட்டிய
நயினார்
49. கருப்பூர் - மழவராயர்
50. காரக்குடி – மழவராயர்

சான்றுகள்:பள்ளி ( வன்னியர் வம்சம்)






திங்கள், 8 மே, 2017

வரலாற்று சிறப்புமிக்க மலைக்கோட்டை



வரலாற்று சிறப்புமிக்க மலைக்கோட்டை

திருச்சி  மலைக்கோட்டை. நமது கலாசாரம், பண்பாடு, தத்துவம், சமயத்தையு உணர்த்தி உயர்த்தும் கலங்கரை விளக்காக கோயில்கள் திகழ்கின்றன. கோயில்கள் அனைத்தும் மனித மனம் செம்மைப்படுவதற்கான திறவுகோலாய் அமைகின்றன. பழம்பெருமை கொண்ட பாரத நாட்டின் கோயில்கள் பல வரலாற்று உண்மைகளை நமக்கு இன்றும் எடுத்துரைக்கின்றன. காலத்தால் அழியாத இக்கோயில்கள் பண்பாட்டின் சின்னமாக இருக்கின்றன.
திருச்சி மாநகருக்கு பெருமை சேர்க்கக்கூடிய வகையில் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது. கோயில்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெருமை உண்டு. அந்த வகையில் இத்திருத்தலம் ஈசனே தாயாய் வந்த பெருமையை கொண்டது. மேலும் தவறுகளை தண்டித்தும் அன்புடன் வேண்டுவோர்க்கு வேண்டுவன தந்தும் அனுக்கிரக மூர்த்தியாக இத்தலத்தில் இறைவன் விளங்குகிறார்.
நில எல்லையிலிருந்து பார்த்தால் மூன்று அடுக்குகளை (நிலைகளை) உடையதாக தோற்றம் அளிக்கும். மலைமேல் மூன்று தள அமைப்பை கொண்ட இத்திருத்தலம் உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இத்தலம், சிறந்த வழிபாட்டு தலமாக மட்டுமில்லாமல் சிறந்த சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.
இந்த மலைக்கோட்டையின் மற்றுமொரு சிறப்பான மலைக்கோயில் கிழக்கு திசையில் இருந்து பார்த்தால் அருளே வடிவமான விநாயகர்போல் தோற்றம் தரும். வடக்கு திசையிலிருந்து பார்த்தால் பெரிய தோகைகளுடன் கூடிய அழகிய மயில்போல தோன்றும். மேற்கு திசையிலிருந்து பார்த்தால் (நங்கூரம் பாய்ச்சிய கப்பல் போல) சிவலிங்கமூர்த்தி போல காட்சியளிக்கும். தெற்கு திசையிலிருந்து பார்த்தால் யானைமேல் அம்பாரி அமர்ந்திருப்பது போல காணப்பெறும்.
இக்கோயிலில் ஆயிரங்கால் மண்டபம், வாகன மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், சகஸ்ரலிங்கம் மண்டபம், சித்திரை மண்டபம், பதினாறுகால் மண்டபம், மணிமண்டபம் போன்ற பல அழகிய மண்டபங்கள் உள்ளன.
இக்கோயிலில் மலையை குடைந்து கீழ்நிலையில் ஒரு குடைவரை கோயிலும், மேல்நிலையில் ஒரு குடைவரை கோயிலும் பழம்பெருமையுடன் அமைக்க பெற்றுள்ளன.
நவீன கருவிகள் இல்லா அன்றைய காலத்திலேயே இப்பெருங்கோட்டை கோயில் 417 படிகளுடன் 273 அடி உயரத்தில் உலக கட்டிட கலைக்கு எடுத்து காட்டாகவும், வரலாற்று முக்கியத்துவம் பெற்றதாகவும், ஒரு புராதன சின்னமாகவும் இம்மலைக்கோயில் விளங்கி இருக்கிறது. பழமையான சிவாலயமான இக்கோயில் 274 சைவத்தலங்களுள் ஈடு இணையற்ற தலமாகவும், தென்கயிலாயம் என்று அழைக்கப்படும் சிறப்பையும் கொண்டு விளங்குகிறது.
எட்டு திசைகளிலிருந்தும் மலைக்கோயிலை காணலாம். கம்பீரமாக எழுந்து நிற்கும் எழிற்காட்சி உலக மக்கள் கவனத்தை கவர்ந்துள்ளது. மலைமேல் இருந்து கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை பரந்து விரிந்து கிடக்கும் நகரின் அழகை காணலாம். இரவு நேரத்தில் பல வண்ண வண்ண மின்விளக்குகள் ஒளிர பரந்த நகரின் அரிய காட்சியை காணலாம். நகரின் மத்தியில் அமைந்துள்ளது.

வெள்ளி, 5 மே, 2017

சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்



சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

1980களில், ஒரிசாவில் நான் பார்த்த ஒரு ஊரின் பெயர்ப் பலகை என்னை தடுத்து நிறுத்தியது. அந்த பெயர் ‘தமிழி’. குவி என்கிற திராவிட மொழி பேசும் பழங்குடிகள் வசிக்கும் அந்த ஊருக்குள் என் கால்கள் என்னையும் அறியாமல் சென்றன. அதிலிருந்து ஊர்ப் பெயர்கள் மீது காதல் கொண்டேன். எங்கு மாறுதலாகிச் சென்றாலும் ஊர்ப் பெயர்கள் அடங்கிய மக்கள்தொகை கணக்கெடுப்புப் புத்தகங்களைத் தூக்கிச் சென்றேன்.மானுட வரலாறு என்பது பயணங்களால், இடப் பெயர்வுகளால் ஆனது. மனிதன் ஒரு ஊரை விட்டு இடம்பெயரும்போது, அவனது நினைவுகளைச் சுமந்து செல்கிறான்.

புதிய இடத்தில் குடியேறும்போது, பழைமையுடன் தொடர்புகொள்ளும் விதத்தில் தன் ஊர்ப் பெயரை அங்கே வைக்கிறான். இது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகிற சமூக உளவியல். அப்படி அவன் விட்டுச் சென்ற ஊர்ப்பெயர்களும், சுமந்து சென்ற ஊர்ப் பெயர்களும் சொல்வது மனித குலத்தின் வரலாறு.ஈரானில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஏராளமான ஊர்ப் பெயர்கள், அப்படியே ஒரிசாவில் கொனார்க்கில் உள்ள சூரியக்கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களில் இருப்பதைக் கண்டேன்.

இதன் சாத்தியம் என்னை ஆச்சரியப்படுத்தியது.பின்னர், தமிழ்நாடு – கேரள எல்லையில் உள்ள இடுக்கி, பழனி, குமுளி, தேனி, தேக்கடி, கம்பம், போடி போன்ற ஊர்ப் பெயர்கள், மத்தியப்பிரதேசம் மற்றும் வடமாநிலங்களில் இருப்பதைக் கண்டேன்.இன்னொரு ஆச்சரியமான விஷயம் – ஒரிசாவுக்கும் நைஜீரியாவுக்கும் உள்ள ஒற்றுமை. ஒரிசா – ஆந்திர எல்லையில் உள்ள கொராபுட் மாவட்டத்தில் உள்ள சுமார் 463 ஊர்களின் பெயர்கள் அப்படியே நைஜீரியாவில் உள்ளன.

ஆதிமனிதன் முதன்முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றினான் என்றும், பின்னர் அங்கிருந்து பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தான் என்றும் இன்றைக்கு நவீன மரபியல் ஆய்வுகள் சொல்வது, இந்த இடப் பெயர்வுடன் பெரிதும் பொருந்துகிறது. இது பற்றிய எனது கட்டுரை உலக அளவில் பலராலும் எடுத்தாளப்படுகிறது. சுமார் 9ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள் இரவு. சிந்து சமவெளி நாகரிகம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் (தற்போதைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிழக்கு ஈரான் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியில்) உள்ள பல்வேறு ஊர்களின் பெயர்களை கணினியில் சேமித்து, அவற்றில் தமிழகத்தின் பழங்கால ஊர்ப்பெயர்கள் ஏதேனும் இருக்குமா என்று தேடிக்கொண்டிருந்தேன்.

நான் முதலில் தேடிய பெயர் ‘கொற்கை’. ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் ‘கொற்கை’ என்ற பெயரில் ஊர்ப்பெயர் இருக்கிறது என்றது கணினி. முதலில் இதை ஒரு விபத்து என்றே கருதினேன்.அடுத்து ‘வஞ்சி’ என்ற ஊர்ப்பெயரைத் தேடினேன். அதுவும் அங்கே இருந்தது. எனக்குள் சுவாரஸ்யம் பெருகிற்று.தொண்டி, முசிறி, மதிரை(மதுரை), பூம்புகார், கோவலன், கண்ணகி, உறை, நாடு, பஃறுளி… என பழந்தமிழ் இலக்கியத்தில் வரும் பெயர்களை உள்ளிட்டுக் கொண்டே இருந்தேன். நூற்றுக்கும் மேற்பட்ட அத்தகைய பெயர்கள் இப்போதும் பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தானில் இருப்பதை கணினி காட்டிக் கொண்டே இருந்தது…4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக செழித்து விளங்கி, பின் காணாமல் போன சிந்து சமவெளி நாகரிகம், 1924-ல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நாகரிகம் விளங்கிய இடத்தில் வாழ்ந்த மக்கள் யார்? அவர்கள் என்ன மொழி பேசினார்கள்? ஏன் அந்த நாகரிகம் மண்ணோடு மண்ணானது? யாருக்கும் தெரியாது.

ஆனால், அந்த நாகரிகம் விளங்கிய பகுதிகளில் இருக்கும் ஊர்கள் இன்றும் தமிழ்ப் பெயர்களை தாங்கி நிற்கின்றன. எனில், சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும், சங்கத் தமிழ்ப் பண்பாடு தொட்ட இடமும் ஒன்றுதான். சுமார் 4ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சிந்துவெளிப் பண்பாடு அழிந்தது. தமிழகத்தில் கிடைத்துள்ள அகழாராய்வு முடிவில் கி.மு.800 வரையிலான சான்றுகள் கிடைத்துள்ளன. அதற்கு முந்தைய ஒரு 1000 ஆண்டுகள் இடைவெளியை பின்னோக்கி ஆய்வுகள் மூலம் சென்று நிரப்பினால் சிந்துவெளிப் புதிரை அவிழ்த்து விடலாம்.

பழந்தமிழர் வாழ்வுடன் தொடர்புடைய அவர்களின் தொன்மங்களுடன் தொடர்புடைய பெயர்கள் இன்று சிந்துவெளியில் கிடைத்திருப்பது ஏதோ விபத்தால் நிகழ்ந்தது அல்ல என்றே கருதுகிறேன். கிடைத்திருப்பது ஓர் ஊர்ப்பெயர் மட்டுமல்ல; சங்க இலக்கியத்தில் உள்ள அவ்வளவு பெயர்களும் அங்கு இருக்கின்றன. (வரைபடத்தைக் காண்க.) இடப்பெயர்வு நடந்திருக்கலாம். அங்கிருந்து இங்கு மனிதர்கள் புலம்பெயர்ந்து வந்திருக்கலாம். கொஞ்சம் பேர் அங்கிருந்து புலம் பெயர்ந்த பின், மிச்சம் இருந்தவர்கள் அங்கே வந்தவர்களுடன் கலந்து தங்கள் மொழியை, தனி அடையாளங்களைஇழந்திருக்கலாம்.

ஆனாலும் இன்னமும் அந்த ஊர்ப்பெயர்கள் மட்டும் தப்பிப் பிழைத்திருப்பதாக வைத்துக் கொள்ளலாம். அங்கிருந்து கிளம்பி வந்தவர்கள் புதிதாக குடியேறிய இடத்தில் பழைய நினைவுகளை தங்கள் ஊர்ப்பெயர்களாக வைத்திருக்கலாம். கொற்கை, வஞ்சி, தொண்டி, காஞ்சி எல்லாமே இப்படி இருக்கலாம்.சங்ககாலப் புலவர்கள் சமகால நிகழ்வுகளை மட்டும் இலக்கியத்தில் பதிவு செய்யவில்லை. அவர்களது காலத்திற்கு முற்பட்ட காலத்து பழைய நிகழ்வுகளையும் வாய்மொழி மரபுகளையும் தங்களது பாடல்களில் பதிவு செய்துள்ளார்கள். அவை வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம் என்கிற பரப்புக்குள் தமிழர் இருப்பைச் சொல்கிறவை மட்டுமல்ல. அவை சொல்லும் தொன்மங்கள் இந்த எல்லையைக் கடந்தவை.

சங்க இலக்கியத்தில் “வான் தோய் இமயத்து கவரி” என்று வரும். கவரி என்பது இமயத்தின் உச்சியில் திபெத் பக்கமாக வாழும் யாக் என்கிற விலங்கு. இந்த கவரி ஒரு வகை வாசனை மிகுந்த புற்களைத் தேடித்தேடி உண்ணும் என்றும் சங்க இலக்கியம் சொல்கிறது. இன்று இந்த யாக் விலங்கின் பால், ஒரு வகைப் புல்லை உண்பதால் மிகுந்த வாசனையுடன் இருப்பதாகவும், அதை ‘யாக் தேநீர்’ என்று விளம்பரப்படுத்தி திபெத்தில் விற்கிறார்கள் என்றும் அறிகிறோம். எங்கோ குளிர் பிரதேசத்தில் இருக்கும் யாக் விலங்கு பற்றி சங்ககால கவிஞனுக்கு எப்படித் தெரிந்தது? பழைய நினைவுகள், கதைகள், தொன்மங்களின் எச்சங்கள் அவனுக்கு இதை சாத்தியமாக்கி இருக்கலாம். (வள்ளுவர் “மயிர் நீப்பின் உயிர்வாழா கவரிமான்” என எழுதியிருப்பதாக பரவலாக ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் அவர் “கவரிமான்” என்று சொல்லவில்லை. “கவரிமா” என்றுதான் சொல்கிறார். மா என்பது விலங்குகளைக் குறிக்கும் பொதுச் சொல்.

கி.பி.535 வாக்கில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஆசியாவின் பல பகுதிகளில் பயணம் செய்த காஸ்மாஸ் இண்டிகோப்லுஸ்டெஸ் என்ற ஐரோப்பியப் பயணி, “வால்முடியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தனது உயிரையே விடத் தயாராக இருக்கும் விலங்கான கவரி” பற்றி தனது நூலில் குறிப்பிடுகிறார்.) தமிழர்களின் ஐந்திணைகளில் பாலையும் ஒன்று. நம்மிடம் அந்த நிலப்பரப்பு இல்லை. ஆனால் அகநானூற்றில் மருதன் இளநாகனார், “உணவுக்கே வழியில்லாத பாலையில் ஒட்டகம் எலும்பைத் தின்னும்” எனக் குறிப்பிடுகிறார். இது ஒட்டகம் வளர்க்கும் தார் பாலைவனத்தில் உள்ளவர்களுக்கே தெரிந்த செய்தி. தொல்காப்பியர், ஒட்டகத்தின் குட்டியை கன்று என்று சொல்ல வேண்டும் என இலக்கணம் வகுக்கிறார். உறையூர் மணல்மாரியால் மூடியதால் சோழர்கள் இடம் பெயர்ந்ததாக பழந்தமிழ் மரபுகள் சொல்கின்றன. மணல்மழை பாலைவனத்தில் தான் சாத்தியம்.

இன்னொரு உதாரணம் சொல்கிறேன். “பொன்படு கொங்கானம்” என்ற வரி. கொங்கணம் அதாவது கோவா, மகாராஷ்டிரப் பகுதி. இப்போதைய கொங்கண் பகுதியில் உள்ள டைமாபாத் என்ற இடத்தில் சிந்துவெளி நாகரிகக் கூறுகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.ஆக, சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும் தமிழ்ச் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாக இருக்கக் கூடும் என்றே கருதுகிறேன்.தமிழனின் பழைய வரலாறு என்ன என்கிற கேள்வியும், சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் யார் என்கிற கேள்வியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.ஊர்ப் பெயர்கள் சாகா வரம் பெற்றவை. அவை புலம்பெயரும் மனிதனின் நினைவோடு சென்று உயிர் பெறுகின்றன. பிறதுறை ஆய்வுகளின் உதவியுடன் செய்யப்படுகிற அறிவுப்பூர்வமான ஆய்வுகள், இந்திய வரலாற்றை உண்மையின் ஒளி கொண்டு மீட்டெடுக்க வழி செய்யும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.

-######

ஒரிசா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன். கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றவர். இவரது வீடு சென்னை பெருங்குடியில் இருக்கிறது. இடப் பெயர்களின் ஆய்வில் 20 ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கும் இவர், சிந்துவெளி ஆய்வு பற்றிய தன் கட்டுரையை முதலில் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்ப்போலா போன்ற அறிஞர்கள் முன்னிலையில் சமர்பித்தார். தனது ஆய்வுகளை முடிப்பதற்காக தன் அரசுப் பணிக்கு 2ஆண்டுகள் விடுமுறை சொல்லிவிட்டு வந்திருக்கிறார்

வியாழன், 4 மே, 2017

உலகின் முதல் மொழி தமிழ்!



உலகின் முதல் மொழி தமிழ்!
மொழி அறிவு இன சிறப்பு !!!
ஆங்கிலம் கூட தமிழிலிருந்துதான் வந்தது !!!
ஆதாரம் இதோ...........
W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி.
எடுத்துகாட்டுகள் :
Cry - ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.
கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.
Clay - களி (களிமண்) என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது.
Blare - ”பிளிறு” என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது.
Culture - கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது
இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர்.
ஆதாரம் : “உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள்” - ப.சண்முகசுந்தரம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.
========================
தமிழ் உலக மொழிக் எல்லாம் தாய் மொழி ,
உலக கலாச்சாரங்களின் தொட்டில் ,
உலக நாகரீகங்களின் ஊற்று ,
உலகத்தில் உள்ள மதங்களின் தொடக்கம் தமிழ் !
The mother of all languages is the TAMIL language ; the cradle of all cultures ; all relegions and all civilizations !
தமிழ் மொழியில் இருந்து வந்த ஒரு மொழியே ஆங்கிலம் .
S + பேசு = speach
S + பஞ்சு = sponge
S + மெது = smooth
S + பரவி = spray
S + உடன் = sudden
S + நாகம் = snake
S + சேர்த்தால் (ஸ் சத்தம் ) 600 க்கு மேட்பட்ட தமிழ் சொற்களுக்கு ஒரே அர்த்தம் உள்ள ஆங்கில சொற்கள் வரும் ..
உருளை = roll
(கல் கவியல் ஆக கணக்கு பார்க்கும் தமிழர் முறை )கற்குவியல் = Calculation ; calculatrice .
கொல் = kill ( தமிழில் "கொ " வரும் இடத்தில் " K " ஆங்கிலத்தில் போட்டால் 100 english word வரும் )
" பொத்தல் " ல இருந்து பொத்தான் = Button
உலகில் உள்ள , இருந்த அனைத்து மொழிகளிலும் தமிழ் மொழி இருக்கின்றது .
ஆங்கிலத்தில் 20 % தமிழ் மொழி உள்ளது .
ஆங்கிலத்தின் தாய் மொழியான :
லத்தீன் , கிரேக்கம் = 50 % தமிழ் மொழி உள்ளது .
2015 ஆய்வுகளின் படி :
( Germany-ல் உள்ள மொழி ஆய்வு பல்கலைக்கழகத்தில் படிப்பிக்கின்றார்கள். Germain மொழியின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் (Europe-ய மொழிகளின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் கூறுகிறார்கள்).
லத்தீன் , கிரேக்கத்தின் தாய் மொழியான சமஸ்கிரதம் ஓரு தமிழர் கண்ட எழுத்து மொழி.
("நிறைமொழி" மாந்தர் ஆணையில் கிளர்ந்த "மறைமொழி" தானே மந்திரம் என்ப) என்கிறது தொல்காப்பியம்.
நிறைமொழி - தமிழ்
மறைமொழி - சமஸ்கிரதம்
- சமஸ்கிரதம் என்றால் அர்த்தம் செய்யப்பட்ட மொழி .
- இயற்கிரதம் ( தமிழ் ) என்றால் அர்த்தம் இயற்கையான மொழி)
சமஸ் + கிரதம் என்றால்: செய்யப்பட்ட மொழி
சம = சமைத்தல் = செய்
கிரதம் = பாஷை = மொழி .
இயற் + கிரதம் என்றால் தமிழ் மொழி ( இறை மொழி , இயற்கையான மொழி )
இயற் = இயற்கை
கிரதம் = பாஷை = மொழி
மண்டரீன் சீனா ; கீபுரு யூதர்களின் ; அரபி = 65 % தமிழ் மொழி உள்ளது .
கீபுருவின் தாய் மொழி அரமைட் ,
அரபு மொழியின் தாய் மொழி zero-அரமைட் .
அரமைட் , zero-அரமைட் = 80 % தமிழ் மொழி உள்ளது .
தமிழ் மொழி பிறந்த இடத்தில் இருந்து : 1000 வருடங்களுக்கு ஒரு முறை மொழி சிதையும் .
1000 Km க்கு தூரத்திற்கு ஒரு முறை மொழி உடையும் !
" ழ " உச்சரிப்பு தமிழ் , மலையாளம் , மண்டரீன் சீனா ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே உள்ளது .
1500 வருடங்களுக்கு முன் தெளுகு என்ற ஒரு தனி மொழி இல்லை!
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய தெளுகு.
'தெள்ளு தமிழ் பாடி தெளிவோனே" என்று முருகனை புகழ்கிறது திருப்புகழ்.
1000 வருடங்களுக்கு முன் கன்னடம் என்ற ஒரு தனி மொழி இல்லை!
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய கன்னடம்.
700 வருடங்களுக்கு முதல் மலையாளம் என்ற ஒரு மொழி இல்லை!
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய மலையாளம் .
அம்மா , அப்பா என்ற தமிழ் சொல் இன்று உலகில் உள்ள 200 மொழிகளில் உள்ளது .
தமிழில் மட்டும் தான் சொற்களுக்கு பொருள் வரும் :
கட்டுமரம் என்ற தமிழ் சொல் உலகில் உள்ள அனைத்து ( 7102 ) மொழிகளிலும் கட்டுமரம் தான். மரத்தை கட்டுவதால் கட்டு மரம். இன்று உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் "கட்டு மரம்" தான்.
தமிழ் மொழியில் உள்ள தொன்மையான நூல்கள் போல வேறு எந்த மொழியிலும் இல்லை .
இன்று இருக்கும் பழமையான நூல்களில், யூத இனத்தில் உள்ள தொன்மையான நூல் "தோரா" (கி.முன் 2000 ஆண்டுகள்) ஒன்று மட்டுமே உள்ளது.
தமிழ் மொழியில் உள்ள தொன்மையான பல நூல்கள்:
கி.முன் 1000 ஆண்டுகள் - திருக்குறள்
கி.முன் 2000 ஆண்டுகள் - தொல்காப்பியம்
கி. முன் 3000 ஆண்டுகள் திருமந்திரம்
கி.முன் 5000 பரிபாடல்;
கி. முன் 7000 அகத்தியம் போன்றவற்றின்  நூல்கள் உள்ளன.