மள்ளர் வரலாறு
மள்ளர் அல்லது பள்ளர் எனப்படும் சமுதாயத்தினர் தமிழகத்தில் பள்ளர்,வாய்காரர்,காலாடி, மூப்பன், குடும்பன், பண்ணாடி,தேவேந்திரக் குலத்தான் எனும் வேறு சில பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர்
.இவர்கள் தங்களை தேவேந்திரன் வழி வந்தவர்கள் என்கிறார்கள்.எனவே தேவேந்திர குல வேளாளர் எனும் பெயரால் அழைக்கப் படுகின்றார்கள்
.இவர்கள் முழுமையாக வேளாண்மைத் தொழில்களையே செய்து வந்தனர்;வருகின்றனர். பள்ளர் எனும் மள்ளர் இனத்தினர் தமிழ்நாடு சாதிகளின் அனைத்து பட்டியலிலும் உள்ளனர் . கீழுள்ள ஏழு பள்ளர் உட்பிரிவுகளையும் சேர்த்து தேவேந்திர குல வேளாளர் என தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பெயரை மாற்ற இந்த சமூகத்தினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
1. தேவேந்திர குலத்தார், பட்டியல் சாதிகள் (எண் 17)
2. குடும்பன், பட்டியல் சாதிகள் (எண் 35)
3. பள்ளர், பட்டியல் சாதிகள் (எண் 49)
4. பன்னாடி, பட்டியல் சாதிகள் (எண் 54)
5. மூப்பன், பிற்படுத்தப்பட்டோர் (எண் 72)
6. காலாடி, பிற்படுத்தப்பட்டோர் (எண் 35)
7. காலாடி, சீர்மரபினர் (எண் 28) [8]
இதற்கிடையே பள்ளர்களின் வரலாற்றுப் பெயராக கல்வெட்டுகளும், இலக்கியங்களும் குறிக்கும் மள்ளர், மல்லர் என்ற பெயர்களும், நீர்க்கட்டி, நீர்க்காணிக்கர் ஓடும்பிள்ளை, அக்கசாலை போன்ற பெயர்களும் உள்ளன. இந்திய அரசின் அமைச்சரவையிலும், தமிழ்நாடு அரசின் அமைச்சரவையிலும் பலர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றி இருக்கின்றனர்.
மள்ளர் என்பதன் பொருள்
மள்ளர் என்றால் திண்மை (பலம்) உடைய போர்வீரர்கள் என்று விளக்கம் சொல்கின்றன நிகண்டுகள் என்று சொல்லப்பட்ட பழைய அகராதிகள்.
‘அருந்திறன் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் மள்ளர்...’ என்று பெயர் என்கிறது திவாகர நிகண்டு. ‘செருமலை வீரரும் திண்ணியோடும், மருத நில மக்களும் மள்ளர்’ என்கிறது பிங்கல நிகண்டு.
சுமார் 400 பள்ளு இலக்கியங்கள், பள்ளர் குலம் பற்றி எழுதப்பட்டுள்ளன. பிற்கால பள்ளு சிற்றிலக்கியங்கள் பள்ளர் பற்றியும் அவர்களின் வேளாண் குடிபற்றியும் பல்வேறு செய்திகளைக்கொண்டுள்ளன .இவ்விலக்கியங்களில் பள்ளர், மள்ளர், தேவேந்திரன், குடும்பன், காலாடி, பண்ணாடி என பல பெயர்களில் பள்ளர்கள் அழைக்கப்படுகின்றனர்[9] . மேலும் பள்ளர்கள் இன்றுவரையிலும் பள்ளர், மள்ளர், தேவேந்திரன், குடும்பன், காலாடி எனும் பெயர்களில் வாழ்ந்து வருகின்றனர்.
நெல் முதலிய வித்துக்களை கண்டுபிடித்தல்
திருநெல்வேலி மாவட்டம் சங்கரநாயினார் கோவில் கோபுர வாசல் உள்புறம் கீழ்பக்கம் உள்ள கல்வெட்டு
“ விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 14 நாள்
திங்கட்கிழமையும் உத்திராடமும் பெற்ற நாள்
தெய்வேந்திரக் குடும்பன் பலாத்துப்படி : முன்
துவாபர யுகத்தில் உக்கிரப் பெருவழுதியும்
சோழனும் சேரனும் உலகம் வறுமைப்பட்டு
இருக்கின்ற காலத்திலே தெய்வேந்திரன் பக்கல் மழை
கேட்கப் போனவிடத்திலே பகவானும் மனம்
மகிழ்ந்து இரும் என்ன சேரனும் சோழனும்
வணங்கியிருக்க பாண்டியன் தெய்வேந்திரனுடனே
கூடியிருக்க, தேவேந்திரனும் வரிசை செய்தாற்போல
கவடு நினைக்க. பாண்டியன் கோபித்து எழுந்து
தேவ கன்னிகை மக்கள் நாலு குடும்பத்தாரை
கைப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு சென்னல்
விதையும், கன்னல் விதையும் (கதலி) விதையும்
பனைவிதையும் முதலான பல வித்தும் ஒரு ரிசபமும்
ஒரு சாவியும் கொண்டு பூமியில் வந்தான்
நால்வரில் முதல்வனுக்கு தேவேந்திரக் குடும்பப்
பட்டமும் கட்டி, மூன்று பேருக்கு வாரியன்,
அக்கசாலை, (இளந்தாரியன்) என்று வரிசைப்
பட்டமும் கட்டி ஒரு நாளையிலே 12000 கிணறு
வெட்டி வேளாண்மை கண்ட படியினாலே
ராஜாவும் மனம் மகிழ்ந்து வெள்ளானையும்
வெள்ளை வட்டக் குடையும் சேறாடியும் பகல் பந்தம்
பாவாடை ரெட்டைச் சிலம்பும் ரெட்டைக்
கொடுக்கும் நன்மைக்கு 16 பந்தக்காலும் துன்மைக்கு
2 தேரும் பஞ்சவன் விருந்தும் . . . . .18 மேளமும்
கட்டளையிட்டு நடக்கிற காலத்திலெ . . . . . ”
—- தென்னிந்திய கோயிற் சாசனங்கள்ஃ பாகம் ஐஐ எண் 863ஃ பக்கம் 803
நெல் , கரும்பு, வாழை, பனை முதலிய வித்துக்களையும் நீர்ப் பாசனத் தொழில் நுட்பத்தையும் முதன் முதலில் துவாபர யுகத்தில் கண்டுபிடித்த தெய்வேந்திரக் குடும்பன் பற்றிய செய்தியை மேலே காட்டப்பட்ட கல்வெட்டு கூறுகிறது.
மள்ளர் பற்றிய குறிப்புகள்
மள்ளர் காலாடி, ஆற்றுக்காலாட்டியர் எனப்பட்டனர். உழவுத் தொழிற் தலையாகிய தொழிலாகவாகவும் உழவர்கள் தலை மக்களாகவும் போற்றப்பட்டனர். உழவர், வீரர் என்ற மூன்று சொற்களுக்கும் பொருள்படுவதாக மள்ளர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இவ்விருவரும் மள்ளர் குலத்தினராதலால் மள்ளர் என்பதற்கு இலக்கணமாக
“ "அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்
வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்" ”
—- என்று திவாகர நிகண்டும் .
“ "செருமலை வீரரும் திண்ணியோரும்
மருத நில மக்களும் மள்ளர் என்ப" ”
—- என்று பிங்கல நிகண்டும் கூறுகின்றன.
மள்ளர் – தேவேந்திர குல வேளாளர் வளமை – நெல் வேளாண்மைக்கு இன்றியமையாத நீரை இம்மக்கள் வேண்ட அவர்களின் இறைவனும் மாரிக் கடவுளுமான தேவேந்திரர் கோடை காலத்திலும் கொடுப்பார் என்கிறார் பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் பெருமான்.
“ பிள்ளை தைவரப் பெருகுபால் சொரி முலைத்தாய்போல்
மள்ளர் வேனிலின் மணல் திடர் பிசைந்து கைவருட
வெள்ள நீரிரு மருங்குகால் வர்p மிதந் தேறிப்
பள்ள நீள் வயல் பருமடை உடைப்பது பாலி. ”
—- பெரியபுராணம், திருக்குறிப்புப் தொண்டர் நாயானார் புராணம், பாடல் 22.
இவர் விளைத்துக் குவித்த வானளாவிய நெற்குன்றுகள் மருத நிலத்தைக் மலைகளடர்ந்த குறிஞ்சி நிலமாகக் காட்டியது என்கிறார் இன்னொரு பாடலில்.
“ கைவினை மள்ளர் வானங் கரக்க வாக்கிய நெற் குன்றால்
மொய் வரை யுலகம் போலும் மளரிநீர் மருத வைப்பு. ”
—- பெரியபுராணம், – திருநாட்டுச் சிறப்பு, பாடல் 25
“ “குன்றுடைக் குலமள்ளர் ” ”
என்னும் கம்பர் தமது இராமாயணத்தில் இவர்கள் போர்க்களத்தில் பகைவர்களின் தலைகளை வெட்டி வீழ்த்தியதை உழவு, தொளி கலக்குதல், நாற்று முடிகளைப் பரவுதல் முதலிய நிகழ்வுகளோடு ஒப்பிட்டு கூறுவார்.
“ நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின்
உதிர நீர் நிறைந்த காப்பின்
கடும் பகடு படி கிடந்த கரும் பரப்பின்
இன மள்ளர் பரந்த கையில்
கடு ங்கமல மலர் நாறும் முடிபரந்த
பெருங்கிடக்கைப் பரந்த பண்ணை
தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே
எனப் பொலியும் தகையும் காண்மின் ”
—- கம்பராமாயணம்.
வானரர் களம் – காண் படலம், செய்யுள் 25. பழனிச் செப்புப்பட்டயம் கி.பி. 1528 (மள்ளர் மலர் அக்டோபர் 1998 பக. 20 – 21). கி.பி. 1528ஆம் ஆண்டு கிருஷ்ணதேவராயர் காலத்திய செப்பேடான இது தற்சமயம் மதுரை அருங்காட்சியகத்தில் இருந்து திருட்டு போய்விட்டதாக கூறப்படுகிறது.
இம்மக்களின் தோற்றம்; மற்றும் வரலாறு பற்றிக் கூறும். உலக மக்களுக்கு செந்நெல் அமுது படைப்பதற்காக சிவனும் உமையும் மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர்களைப் படைத்ததார்கள். இவர்கள் இப்பூமியில் செந்நெல் தோற்றுவித்தார்கள் என செப்புப்பட்டயம் பெருமைப்பட கூறும்.
தெய்வேந்திரர் வரலாறு
“ சிவனுயுமையும் மதிறுக் காஞ்சி தன்னில்
ஏகாம்பரரா இருந்தருள் புரிந்து
மதுரையை நோக்கி வரும் வழியதனில்
உலகலாமீன்ற உமையவள் மனதில்
திருவருள் தோன்றி சிவனிடத்துரைக்க
அரன்மன மகிழ்ந்து முகமது வேர்க்க
கரமதில் வாங்கி வரமதுக்கியந்து
வைகையில் விடுக்க
வருணன் பொழிந் துருழிக் காத்தடித்து
குளக் கரையதனில் கொடி வள்ளல் தாங்க
ஓமம் வளர்ந்து உற்ப்பணமாக
ஈசுவரி தேடி யிருளில் நடக்க
கூவிய சத்தம் குமரனை நோக்கி
வாரிடியடுத்து வள்ளலை வலபுறம் வைத்து
வலமார் பிய்ந்து அமுர்தம்
பொழிந்து அ~;த்தம் கொடுக்க
பாலன் நரிவு பணிவிடைக்காக
புரந்தரன் மகிழ்ந்து ப+ரித்தெடுக்க. ”
தெய்வேந்திரன் அன்னம் படைத்தல் :
“ கன்னல் சென்னல் கதழி பிலாவுடன்
தென்னை கமுகு செறந்த வெள்ளிலை
அன்ன மிளகு மாந்துளிற் மஞ்சள்
மல்லிகை முல்லை மகழி நுவர்ச்சி
பரிமள சுகந்தம் பாங்குடன் கொண்டு
தெய்வ சபையை தெரிசிக்க வென்று
காராவின் பாலை கரகத்திலேந்தி
சீறாக அன்னம் சிறப்பித்த போது. ”
தெய்வேந்திரன் விருதுகள் :
“ ஈஷ்வரன் மகிழ்ந்து இணைமுடி தரிக்க
அமரர்கள் மகிழ்ந்து இணைமுடி தரிக்க
அமரர்கள் மகிழ்ந்து அதிசயத் திவாகும்
விமரிசையாக விருது கொடுக்க
மாலயன் ருத்திரன் மகேஷ்பரன் மகிழ்ந்து
பொன்முடி யதனில் பூசன மணிய
வாடாத மாலை மார்பினி லிலங்க
வெட்டுப் பாவாடைகள் வீணைகள் முழங்க
செந்நெல் சேறாடி சிறப்புடன் சூழ
வெள்ளைக் குடையும் வெங்களிறுடனே
டாலுடம்மான சத்தம் அதறிட
மத்தாளம் கைத்தாமம் மகெஷ்பரத் துடனெ
எல்லா விருதும் இயல்புடன் கொண்டு
தெய்வ சபையை தெரிசனம் செய்து
பதினெட் டாயுதம் பாங்குட னெடுத்து
புரவியிலேறி பூலோக மதனில்
சென்னலா யெங்கும் சிற்ப்பிக்கும் போது
விசுவ கண்ணாளர் மேழியும் கொடுக்க
மூவராசாக்கள் முடிமணம் சூட்ட
செந்நெல்லை படைத்தோர்
குகவேலருளால் குடும்பன் தழைக்க
சிவனரளாலே திருநீறணிந்து
யெல்லா வுலகும் யிறவியுள் ளளவும்
தெள்ளிமை யாத செந்நெலை படைத்தோர்
சேத்துக்கால்ச் செல்வரான
செந் நெல் முடி காவரலான
முத்தளக்கும் கையாதிபரான
பாண்டியன் பண்டான பாறதகதபரான
அளவு கையிட்டவரான
மூன்று கைக்குடையாதிபரான
பஞ்ச கலசம் பாங்குடன் வயித்து
அஞ்சலித் தேவர்கும் அன்னம் படைத்தவரான
மண்ணை வெட்டிக் கொண்டு மலை தகத்தவரான
கடல் கலங்கினும் மனங் கலங்காத வல்லபரான
மாடக் குளத்தில் வந்துதித்தவறான
பரமசிவனுக்கு பாத பணிவிடை செய்கின்றவரான
தெய்வலோகத்தில்
தெய்வேந்திரன் பிள்ளைகளாகிய
பழனித் தலத்தில் காணியாளனாகிய
கொங்குப் பள்ளரில் பழனிப் பண்ணாடி. ”
—– பழனிப் பட்டயம், வரி 195 – 217.
சங்க காலம் தொட்டு சென்ற நூற்றாண்டு வரை இயற்றப்பட்ட தமிழ் இலக்கியங்களில் இவர்களைப்பற்றிய குறிப்புகள் உள்ளன. நாட்டு வளம் என்னும் படலம் நெல் நாகரிகத்தின் மேன்மையையும் அம்மக்களின் சிறப்பையும் கூறும். ஏர் மங்கலம், வான் மங்கலம், வாள் (கலப்பையில் உள்ள கொழுவு) மங்கலம் உழத்திப்பாட்டு முதலியன அரசர்களுக்கு இணையாக இம்மக்களின் சிறப்பை உயர்த்திப் பாடும்.
பள்ளு இலக்கியம்
பள்ளர் என்ற பெயர் தமிழ் இலக்கியத்தில் முதன்முதலில் பள்ளு இலக்கியத்தில் தான் வருகின்றது. தமிழில் தோன்றிய முதல் பள்ளு நூல் முக்கூடற் பள்ளு. பள்ளு இலக்கியம் சிற்றிலக்கிய வகையை சேர்ந்தது, சிற்றிலக்கிய வகையில் மிகுதியான நூல்களை கொண்டது. இது வடுகர் ( நாயக்கர் ) ஆட்சி காலத்தில் தோன்றியது. இந்த பள்ளு நூல்கள் இவர்களை பள்ளர் என்று அழைத்தாலும் இவையே 'மள்ளர் தான் பள்ளர்' என்பதற்கு ஆதாரமாக இருக்கின்றன.
“ "மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்கோர்
பள்ளக் கணவன்" ”
—-முக்கூடற் பள்ளு
இவ்வாறு பல பள்ளு நூல்கள் இவர்களை மள்ளர் என்று கூறுகின்றன
பட்டியல் மாற்றத்திற்கான பதிவு:-
(பாகம் -1)
தேவேந்திர குல வேளாளர் சமுதாய மொத்த மக்கள்தொகை
சுமார் ஒரு கோடிக்கு மேல் அகில இந்திய அளவில் 25 கோடி ( குடும்பர் குர்மி பட்டேல் காபு கவுடா மள்ளர் வர்மன்)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, இலங்கை, உலகமுழுவதும்.
மொழி(கள்)
தமிழ்.
சமயங்கள்
இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம் , பௌத்தம்
.
.
மள்ளர் என்னும் தேவேந்திர குல வேளாளர் இனத்தினர் தமிழ்நாடு சாதிகளின் அனைத்து பட்டியலிலும் உள்ளனர்.
கீழுள்ள எட்டு உட்பிரிவுகளையும் சேர்த்து தேவேந்திர குல வேளாளர் என்ற பெயர் அரசானை வெளியிட மற்றும் பட்டியல் வெளியேற்றம் பெற நமது சமூகத்தினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
1,தேவேந்திர குலத்தார், பட்டியல் சாதிகள் (எண் 17)
2,குடும்பன், பட்டியல் சாதிகள் (எண் 35)
3,பள்ளர், பட்டியல் சாதிகள் (எண் 49)
4,பன்னாடி, பட்டியல் சாதிகள் (எண் 54)
5,மூப்பன், பிற்படுத்தப்பட்டோர் (எண் 72)
6,காலாடி, பிற்படுத்தப்பட்டோர் (எண் 35)
7,காலாடி, சீர்மரபினர் (எண் 28)
8,பாண்டி(யன்) பட்டியல் சாதிகள் (எண் 09)
போன்ற பெயர்களால் அறியப்படுகிறார்கள்.
.
.
மள்ளர்களின் தோற்றம் பற்றி பல கதைகள் உள்ளன. இவை அனைத்தும் ஒத்த கருத்தையே தருகின்றனர். மள்ளர்கள் மருத நிலத்தில் வாழ்லும் உழவர்கள். இவர்கள் போர் என்றுவந்தால் போருக்கு செல்லும் விரர்களாகவும் விளங்கியுள்ளன. எனவே இவர்களின் குலத்தொழில் ஏரும் போருமாக உள்ளது. மருத நிலத்தின் போர் வீரர்களின் தலைவன், வேந்தன் நிலைக்கு உயர்ந்தப்படுகிறான். வேந்தன் பின்பு தேய்வ நிலைக்கு உயர்ந்தப்பட்டு தேய்வவேந்தன் ஆகிறான். அவனே பின்பு தேவேந்திரனாக மாறுகிறான். வேளான்மையே கண்டறிந்த முதல் இனம் என்பதால் தேவேந்திர குல வேளாளர் என தங்களை அழைக்கின்றன, அழைக்கப்படுகின்றன.
பட்டியல் மாற்றத்திற்கான தொடர்ச்சி:-
(பாகம்:02)
.
.
வரலாற்றினை மீட்டுருவாக்கம் செய்யக் கல்வெட்டுச் சான்றுகள் மிகவும் இன்றியமையாததாகும். “மள்ளர்” என்ற பெயரில் இதுகாறும் ஒரு கல்வெட்டு மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளது. ‘ள’கரம், ‘ல’கரமாகி “மல்லர்” என்று பதிவு பெற்ற கல்வெட்டுப் பொறிப்புகளே ஏராளம் காணக் கிடைக்கின்றன. கல்வெட்டுகள் மிகவும் காலத்தால் பிற்பட்டன. ஆதலால் இலக்கியங்களைப் போன்று கல்வெட்டுகளில் தொன்மையையும், பிழையின்மையையும் காணமுடியாது. ஏனெனில் இலக்கியங்கள் மொழிப்புலமை வாய்ந்த புலவர்களாலும், கல்வெட்டுகள் தொழில்புரியும் கல்தச்சர்களாலும் எழுதப் பட்டவை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ‘ள’ கரம் ‘ல’ கரமாவது இயல்புதான் ‘மள்ளர்’ என்பதை ‘மல்லர்’ எனக் கொள்ளின் அக்து பிழையுமாகாது. மள்ளர், மல்லர் என்ற இரு சொற்களையும் தமிழ்ப் புலவர்களும் கையாண்டுள்ளனர். மல்லர் வரலாற்றை மீட்டெடுக்கக் கல்வெட்டுகள் ஆற்றியுள்ள பங்களிப்புகள் பற்றி இங்கே பார்ப்போம்.
.
.
மள்ளர்
“திருமள்ள வீரசோழப் பேரரையன் மகன் அத்திப் பேரரையன்” (ஞா.தேவநேயன் (பாவாணர்), பழந்தமிழராட்சி, ப.107 ) சந்தி விளக்கு வைத்த செய்தியை, செங்கல்பட்டு மாவட்டம், திருவள்ளூர் வட்டம், கூவம் திருப்புராந்தககேசுவர் கோயில் கல்வெட்டு (தெ.க.26 – 360 ) தெரிவிக்கின்றது.
.
.
மல்லர்
வடஆர்க்காடு மாவட்டம், வாலாசாபேட்டை வட்டம், திருமால்புரம் மனிகண்டேசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.22 / 298 , கி.பி.943 -44 ). நிலம் விற்றுக் கொடுத்த அதிகாரி “கடகன் குஞ்சரமல்லனாகிய சோழமாராயன்” என்கிறது.
.
.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், திருமழவாடி வைத்தியநாதர் கோயில் கல்வெட்டு (தெ.க.5 /635 ) கோயிலுக்கு விளக்கெரிக்க நெய்கொடுக்க சாவா மூவாப்பேராடுகளை ஏற்றுக் கொண்ட மள்ளர்கள் “குஞ்சிர மல்லன் பெருவழுதி,குஞ்சிர மல்லன் காடன், குஞ்சிர மல்லன் திருமால்” (ஞா.தேவநேயன் (பாவாணர்), பழந்தமிழராட்சி, ப.59 ) என்கிறது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கல்வெட்டு (தெ.க.4 /816 ) நெய்க்காக கோயிலுக்கு பசுக்கள் 32 கொடை அளித்தவர், “திரிலோகிய மல்லன்,கிரிதுர்க மல்லன்,புவனேகநேத்திரன் வைதும்ப மகாராஜன் ராஜேந்திர சோழ மும்முடி விஷ்ணுதேன் துரை அரசன்” (ஆய்வுக்கோவை – 2010 , பாரதியார் பல்கலைக் கழக வெளியீடு, ப.572 ) என்கிறது.
“காஞ்சிபுரம் வைகுந்தப் பெருமாள் கோயில் கல்வெட்டு (தெ.க.4 /315 பகுதி சி). போருக்குச் செல்ல ஒப்புக்கொண்ட “பரமேசுவர மல்லர் அதுக்கு ஹிரண்யவரம்ம மகராஜ குல மல்லரையும் கூவி விவை ஆகும். போகராத்தம் மகன் ஸ்ரீ மல்லனு,ரண மல்லனு,சங்கரராம மல்லனு என்பார்கள் விவை குடு என்பர் நி……தாமரவோ செய்வர் நாம் போகாமென பந்தாபந்தா மருப்ப…..வ மல்லனான பரமேஸ்வர நான் போவானேன்று தொழுது நின்ற இடம்” என்கிறது.
திருவாமாத்தூர் அபிராமேசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.3 /95 பகுதி – 3 கி.பி.910 ) கோயிலுக்கு விளக்கு வைக்க பொன் கொடை அளித்தவர். “கற்பூண்டி நாடுடைய பரபூமிகன் மல்லனாகிய கண்டராதித்தப் பல்லவரையன்” என்கிறது.
போளூர் திருமலையில் வண்ணச் சித்திரங்கள் உள்ள குகைக்கு கீழே உள்ள சிறிய கோயில் கல்வெட்டு (தெ.க.1 /73 ) “திருமலை பரவாதி மல்லர் மாணாககர் அரிஷ்டனேமி ஆச்சாரியார் செய்வித்த யக்ஷித் திருமேனி” என ஆசிரியராக மல்லர் இருந்த செய்தியைத் தெரிவிக்கின்றது.
.
.
காஞ்சிபுரம் வட்டம், சின்னக் காஞ்சிபுரத்தில் அருளாளப் பெருமாள் கோயில் கல்வெட்டு (தெ.க.4 /861 ) நந்தவனத்திற்கு நிலம் கொடை அளித்த மள்ளர் “கங்க மண்டலத்து மகாமண்டலிகள் சோழமாராசன் கட்டி நுளம்பன் ஸ்ரீ மன்னு புசபெலவீரன் ஆகோ மல்லரசன்” என்கிறது.
.
.
தென்னார்க்காடு மாவட்டம், திருக்கோயிலூர் வட்டம், கீழூர் வீராட்டானேசுவரர் கோயில் கல்வெட்டு (இராசேந்திர சோழன் II ,கி.பி.1072 ) (தெ.க.7 /877 ) விளக்கு வைக்க பசு 16 கொடை அளித்த மள்ளர், “கோதண்டன் கண்டனான மதுராந்தக வளநாடாள்வானின் சிற்றப்பன் உபகாரி மல்லன்” என்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம், திருசென்னம்பூண்டி சடையார் கோயில் கல்வெட்டு (பராந்தக சோழன் I , கி.பி.941 ) (தெ.க.7 /512 ) மள்ளருடைய மனைவி அரசன் மகளாவார். “இவ்வூருடையான் குணகல்வன் வீர மல்லன் மனைவாட்டி அரசன் கொற்ற பிராட்டி” (ந.சி.கந்தையா பிள்ளை , தமிழ் இந்தியா , பக்.46 -47 ) எனக் கூறுகின்றது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருவலஞ்சுழி கபாலீசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.8 / 223 ) அரசு அதிகாரி “சேந்தன் மல்லன்” என்கிறது.
.
.
திண்டிவனம் வட்டம், திண்டீசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.7 / 156 ) கி.பி.1003 ) கோயிலுக்குக் கொடை வழங்கிய நிலக்கிழார் “மல்லன் பராதயன்” என்கிறது.
திருச்சி மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், மேலை பழுவூர் அகத்தீசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.13 / 227 ) “பழ்வூர்ச் சங்கரபடி மல்லன் சங்கன்” கொடை பற்றிக் குறிப்பிடுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், பண்டாரவாடை தேவராயன் பேட்டை மத்தியபுரீசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.13 /15 ) கோயிலுக்குக் கொடை வழங்கிய மள்ளர் “கருகாவூர் கிழவன் வேளாண்குஞ்சிர மல்லன் மகன் குஞ்சிர மல்லன் கண்டராபணனான கணபதி” (பரிபாடல் 18 :38 :39 ) என்கிறது.
கிரிட்டிணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம், கம்பையநல்லூர் தேசீகாதீசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.7 / 11 ) “அதிகாரி மல்லணார்” (ஐங்குறுநூறு 62 :12 )என்ற மள்ளர் குல அரசு அலுவலர்ப் பற்றி கூறுகிறது.
.
.
கோயமுத்தூர் மாவட்டம், அன்னூரில் மள்ளீசர் கோயில் கல்வெட்டு (ARE 586 /1922 ) அமுதுப் படிக்கு காசு கொடை அளித்தவர் “வல்லங்கிழான் மல்லன் அழகிய திருச்சிற்றம் பலமுடையானான முனையதரன்” (வை.கோவிந்தன், மகாகவி பாரதியார் கவிதைகள், தமிழ் சாதித் தொகுப்பு) என்கிறது.
தஞ்சாவூர்ப் பெருவுடையார் கோயில் கல்வெட்டு (தெ.க.2 /66 , கி.பி.985 -1014 ) நட்டுவம் செய்தவர் கோயில் கட்டிய தலைமை சிற்பி “1 .நட்டுவஞ் செய்த மல்லன் இரட்டையன், 2 .தச்சாசாரியார் வீர சோழன் குஞ்சர மல்லனான ராஜ ராஜப் பெருந்தச்சன்” என்று கூறுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருக்கோடிக் காவல் திருகோட்டீசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.12 /78 ) பொன் கொடை அளித்த மள்ளர் “கொண்ட நாடுடைய வெட்டுவதி அரையனான மல்லன் வெங்கடேவன் கொடுத்த பொன் பதினைங்கழஞ்சி” என்கிறது.
விருத்தாச்சலம் வட்டத்தில் விருத்தகிரீசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.12 / 123 ) விளக்கு நெய்க்குப் பசு வளர்த்தவர் “மல்லன் ஆளப்பிறந்தி” (இ.அப்பாசுமந்திரி, புதுக்காப்பியம் (இலக்கணமும்) ப.297 ) என்கிறது.
.
.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், தாமரைப் பாக்கம் அக்னீசுவரர் கோயில் கல்வெட்டு மள்ளர் குலத்தாரை “இலத்தூர் சேக்கிழான் அத்திமல்லன் சீராளன் பாடாநாட்டு கங்கநல்லூர் மாதெட்டல் இருங்கோளன்” என்றும், “மல்லன் நக்கன் என்றும், பங்கள நாடுடைய பிரிதியங்கரையன்” மகன் அத்தி மல்லனாகிய கன்நரதேவப் பிரிதியங்கரையன்” என்கிறது.
திருமய்யம் வட்டம், சித்தூர் திருவாகீசுவரர் கோயிலுக்குத் தேவதானமாக நாட்டு நியமனம் செய்கின்றவர் “பராந்தக குஞ்சிர மல்லனான இராசசிங்க பல்லவரையன்” என்கிறது.
தென்னார்க்காடு மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், சம்பை சம்புநாதர் கோயில் மூலதன வடக்குச் சுவரிலுள்ள இக்கல்வெட்டு முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தியது. வாணகோவரையன் சுத்த மல்லன் வேண்ட வேந்தர் இசைவு தந்து அந்த ஊருக்கு எல்லை வகுத்தது பற்றி ” ….. ஓர் ஊர்ரிட வேண்டுமென்று வாணகோவரையன் சுத்த மல்லன் விண்ணப்பஞ் செய்ய…..” எனக் கூறுகின்றது.
.
.
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், நார்த்தாமலை அருமைக்குளத்தின் வடபுறமுள்ள பாறையில் வெட்டப் பட்டுள்ள கல்வெட்டு “ஸ்ரீ அணிமதயேறி வென்றி மதத்தமிழ தியாரைனனான மல்லன் விட்மன் செய்வித்த குமிழி இது செ……தா தச்சன் சொனானனாரையனுக்கு குடு…..த குமிழ்த்துட… குழச்செய் வடவியது” என்கிறது.
குடிமக்களிடம் இருந்து விளைச்சலில் ஆறில் ஒரு பங்கினை வரியாக பெற்றதை முற்பராந்தகனின் செங்கல்பட்டு கல்வெட்டு,
“ஆறு கூறில் புரவுமாயதியும் பொன்னும் பெறுமாறு சோழ கோன்… பறிவையர் கோன் மங்கல வீர சோழன் அத்தி மல்லன் முங்கில் வரி என்னும் வயல்தான் கொடுத்தான்”எனக் கூறுகிறது.
ரைசின் மைசூர் கல்வெட்டில் கொடுக்கப் பட்டுள்ள அரசர்களின் வரிசைப் பட்டியலில் “திரிபுவன மல்லர்” என்ற மல்லர் குல மன்னரின் பெயர் இடம்பெற்றுள்ளது.
வரலாறு தொடரும்...
பாவாணர் அவர்கள் கருத்துப்படி வரலாறு மாறும்
பதிலளிநீக்குசரியான ஆதாரங்கள்
பதிலளிநீக்கு