அம்பேத்கரின் கர்ஜனை:
உங்களை மனிதராகவே ஏற்றுக் கொள்ளாத மதத்தில் இன்னும் ஏன் இருந்து கொண்டு இருக்கிறீர்கள்..?
உங்களை கல்வி கற்கவே அனுமதிக்காத மதத்தில் இன்னும் ஏன் இருந்து கொண்டிருக்கிறீர்கள்..?
உங்களை கோயிலுக்குள் நுழைவதை தடுக்கும் மதத்தில் இன்னும் ஏன் இருந்து கொண்டிருக்கிறீர்கள்.?
தண்ணீருக்கான உரிமையைக் கூட தர மறுக்கும் மதத்தில் இன்னும் ஏன் இருந்து கொண்டிருக்கிறீர்கள்..?
உங்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைகளுக்கு தடையாக இருக்கும் மதத்தில் இன்னும் ஏன் இருந்து கொண்டிருக்கிறீர்கள். .?
ஒவ்வொரு நிலையிலும் உங்களை அவமதிக்கும் மதத்தில் இன்னும் ஏன் இருந்து கொண்டிருக்கிறீர்கள். .?
மனிதருக்கும் மனிதருக்குமான நியாயமான உறவுகளைக் கூட ஒரு மதம் மறுக்குமென்றால் அது மதமல்ல;
வன்முறையின் வடிவம்.
ஒருவரை மனிதராகவே ஏற்றுக்கொள்ளாத மதம், மதமல்ல; நோய்!
விலங்குகள் கூடத் தொடலாம்; ஆனால், மனிதன் தொட்டால் தீட்டு என்று விரட்டும் மதம், மதமல்ல;
கேலிக்கூத்து!
ஒரு வகுப்பாரையே கல்வி கற்காதே, சொத்து சேர்க்காதே, ஆயுதம் தரிக்காதே என்று சொல்லும் மதம், மதம் அல்ல;
மனித வாழ்வையே ஏளனப் படுத்தும் பகடி!
படிக்காதவனை படிக்காதவனாகவே இரு,
வறியவனை வறியவனாகவே இரு என்று கட்டாயப்படுத்தும் மதம், மதமல்ல;
தண்டனை!
இது முக்கியமான காலகட்டம்.
நீங்கள் இன்று எடுக்க போகும் முடிவு தான் நாளைய உங்கள் தலைமுறைகளின் ஒளிமயமான வாழ்க்கைக்கான பாதையை அமைத்துத் தரப் போகிறது.
இன்று நீங்கள் விடுதலை பெற வேண்டும் என்ற முடிவை எடுத்தால், நாளைய உங்கள் தலைமுறை விடுதலை பெற்றதாய் இருக்கும்.
இல்லை, அடிமைகளாகவே இருப்போம் என்று முடிவெடுத்தீர்களேயானால் நாளைய தலைமுறை அடிமையாகவே இருக்கும்.
முடிவை தேர்ந்தெடுக்க வேண்டிய கடினமான பொறுப்பு உங்களையே சேர்ந்தது.
- புரட்சியாளர் அம்பேத்கர்.
(27-06-1936. ஜனதா இதழ்)
புரட்சியாளருக்கு வீரவணக்கம்!! ஜெய்பீம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக