வியாழன், 21 நவம்பர், 2019

இந்திய கோவில் கோபுரம் மற்றும் சுவர்களில் பாலுணர்வு தூண்டும் சிலைகள் இருப்பது ஏன்?

இந்திய கோவில் கோபுரம் மற்றும் சுவர்களில் பாலுணர்வு தூண்டும் சிலைகள் இருப்பது ஏன்?

உலகில் மக்களால் பின்பற்றி வரப்படும் பெரும் மதங்களில் ஒன்று இந்து மதம். பல கோடி பேர் இந்து மதத்தை பின் பற்றி வருகிறார்கள். இந்து மதத்தில் பெரும் பங்கு வகிப்பது அதன் கோவில்கள் தான். கட்டுமானத்தில் இருந்து, தனித்துவம் வாய்ந்த அதன் தோற்றம், அதனுள் புதைந்திருக்கும் சில அறிவியல் விஷயங்கள் பல வெளிநாட்டவரையும் ஈர்க்க தவறியதில்லை.

கடவுள் சிலைகளை தாண்டி, பல வகையான சிலைகள் இந்து கோவில்களின் கோபுரங்கள் மற்றும் சுவர்களில் இடம் பெற்றுள்ளன. பெரும்பாலான பழைய கோவில்களில் நாம் நிர்வாண கோலத்தில் இருக்கும் சிலைகளை காண இயலும்.

அதிலும், சில சிலைகள் தாம்பத்திய உறவை, அதன் நிலையை, நுணுக்கங்களை எடுத்துரைக்கும் வகையிலும் நாம் காண இயலும். இந்து கோவில்களில் இப்படியான பாலுணர்வு தூண்டும், வெளிப்படுத்தும் சிலைகள் எப்படி? ஏன்? எதற்காக? இடம் பெற செய்தனர்?

இந்தியாவில் இப்படியான கவர்ச்சிமிகு தாம்பத்திய நிலைகளில் வெளிப்படுத்தும் சிலைகள் கொண்ட கோயில்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்...


கஜுராஹோ, மத்தியப் பிரதேசம்!

கஜுராஹோ கோவில் சாண்டெலா (Chandela) எனும் மத்திய பிரதேச மன்னரால் கட்டப்பட்டது. பண்டையக் கால வரலாற்றில் இந்த கோவில் கவர்ச்சிக்காகவே சாண்டெலா மன்னரால் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது.

இந்த கோவிலில் இடம்பெற்றுள்ள சிலைகள் மணல் கற்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. சரியான கோணத்தில், வட்ட வடிவில் இந்த கோவிலில் இருக்கும் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கஜுராஹோ கோவிலில் அகன்ற இடை, பெரிய மார்பங்கள் என வளைவு, நெளிவுகளுடன் கந்தர்வ பெண் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி முதல் வாரத்தில் இங்கே கஜுராஹோ நடன திருவிழா நடைபெறுகிறது. ஒளியின் வெள்ளோட்டத்தில் இந்த கோவில் மிகவும் அழகான தோற்றத்தில் தெரியும். சுற்றுலா பயணிகள் யாரும் தவறவிட்டுவிட கூடாத விழா இது.

மார்க்கண்டேஸ்வரர் கோவில், மகாராஸ்டிரா!
வைங்கங்கா (Wainganga) எனும் ஆற்றின் அருகே அமைந்துள்ளது மார்க்கண்டேஸ்வரர் கோவில். இந்த கோவிலை கவர்ச்சி தூறல் என்று கூறுகிறார்கள். சில வரலாற்று தகவல்களில் இந்த கோவில் தானவர்களால் ஒரே இரவில் கட்டப்பட்டது என்றும் இவர்கள் தீய சக்திகள் கொண்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் மகா சிவராத்திரி அன்று அதிக எண்ணிக்கையில் மக்கள் இங்கே வந்து சிவனை வழிப்பட்டு செல்கிறார்கள்.


படவலி கோவில், மத்தியப் பிரதேசம்!

மொரீனா மாவட்டத்தின் அருகே சம்பல் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்திருக்கிறது இந்த கோவில். இங்கே முன்னர் வழிப்பறிக் கொள்ளையர்கள் தங்கி வந்தனர் என்றும் கூறப்படுகிறது.

இதன் கோட்டை பகுதியில் பல கவர்சிக் கரமான சிலைகள் இடம் பெற்றுள்ளது. இந்த இடத்தை சிறிய கஜுராஹோ என்றும் அழைக்கிறார்கள்.


ரணக்பூர் ஜெயின் கோவில், ராஜஸ்தான்!

வெள்ளை சலவை கற்களால் உருவாக்கப்பட்ட ரணக்பூர் கோவில்கள் ஏறத்தாழ 1444 தூண்கள் கொண்டுள்ளது. இதுப்போக இந்த கோவிலில் நிறைய கவர்ச்சியான சிற்பங்கள், ஒற்றல் வெள்ளை சலவை கற்களில் உருவான பாம்பு சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த கோவிலின் மூலமாகவே ஜெயின் கோவில்களில் திகப்மர (நிர்வாண) கருத்துக்கள் கொண்ட சிற்பங்கள் இருப்பது அறிய வருகிறது.


சூரிய கோவில், ஓடிஸா!

கஜுராஹோ கோவிலுக்கு பிறகு அதிக தனிமைப்படுத்தப்பட்ட பிரசித்தி பெற்ற அற்புதமான சிலை வேலைபாடுகள் செய்யப்பட இடம் ஒடிஸாவின் சூரிய கோவில். ஒருவனுக்கு ஒருத்தி, பலதாரமணம், ஓரினச் சேர்க்கை என பல வகையான காதலை வெளிப்படுத்தும் சிலைகள் இங்கே இருக்கின்றன.

கோனார்க் என்று அழைக்கப்படும் இந்த கோவிலின் பெயருக்கு ஒரு அர்த்தம் உண்டு. கோனா என்றால் மூலை என்றும், ஆர்கா என்றால் சூரியன் என்றும் பொருள். இந்த கோவில் பாலுணர்வு தூண்டும் / வெளிப்படுத்தும் சிலைகள் நிறையவே இருக்கின்றன.


சூரிய கோவில், குஜராத்!

கட்டிடக்கலைக்கு பெயர்போன மற்றுமொரு இந்திய கோவில் குஜராத் சூரிய கோவில். இந்த கோவில் மோதேரா எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த கோவில் சோலாங்கி வமிச அரசரான முதலாம் பீமதேவரின் மனைவி கிபி 1026ல் கட்டியதாகவும். இதை சூரிய கடவுளுக்கு அர்ப்பணம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

அரக்க குணம் பெற்று இருந்தாலும், ராவணன் பிறப்பால் வேதியனாக இருந்ததால். அவனை கொன்ற பாவம் நீங்க மேதோராவில் இந்த இடத்தில் தான் ராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்க யாகம் செய்து மகாதேவரை வணங்கினார் என்று கூறப்படுகிறது.


ஓசியான், ராஜஸ்தான்!

இந்து மற்றும் ஜெயின் மதம் பின்பற்றுபவர்கள் இந்த கோவிலில் வழிப்பட்டு வருகிறார்கள். இந்த கோவில் கிமு 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது. சாட்சியா மாதா எனும் பெண் கடவுளை இந்த கோவிலில் மக்கள் வழிப்படப்பட்டு வருகிறார்கள். இந்த கோவலில் தம்பதிகளின் காதலை வெளிப்படுத்தும் கவர்ச்சிகரமான சிலைகள், பல நிலைகளிலான தாம்பத்திய சிலைகளும் இடம்பெற்றுள்ளன.



விருபாக்ஷா கோயில், கர்நாடகா!
துங்கபத்ரா நதிக்கரையில் இடம்பெற்றுள்ளது விருபாக்ஷா கோயில். இந்த கோவில் ஒரு சிவ ஆலயம் ஆகும். இங்கே பல அழகான தூண்களில் சிவனின் அவதாரம் சிலைகளாக வடிக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நிர்வாண பெண் சிலைகள் இடம்பெற்றுள்ளன. ஹம்பி திருவிழாவின் போது நவம்பர் மாதத்தில் இந்த கோயிலில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
நன்றி ஓன்இந்தியா .

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக