வியாழன், 16 ஜனவரி, 2020

இந்தியாவின் அதீத குளிர்பிரதேச சுற்றுலாத் தளங்கள் எதுலாம் தெரியுமா?

ந்தியாவின் அதீத குளிர்பிரதேச சுற்றுலாத் தளங்கள் எதுலாம் தெரியுமா?

டிசம்பர் மாதம் வந்துட்டா போதும் அடிக்குற காத்து கூட மைனஸ் டிகிரி வெப்ப நிலையில உடம்ப எல்லாம் சிலிர்க்க வச்சிட்டு போய்டும். கோடைக்காலத்துல சில சுற்றுலாத் தளங்களுக்கு தங்களை ஆசுவாசப்படுத்திக்க போவாங்க சுற்றுலா பயணிகள். அதே இடங்களின் குளிர்காலம் எப்படி இருக்கும் தெரியுமா வாருங்கள் தெரிந்துகொள்வோம் இந்தியாவின் அதி தீவிர குளிர் பகுதிகளான இந்த சுற்றுலா பகுதிகள் பற்றி

கார்கில் 

கார்கில் இந்தியா-பாக்கிஸ்தான் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டிற்கு மிக அருகில் காஷ்மீர் பள்ளத்தாக்கை நோக்கியவாறு அமைந்துள்ளது. ஸ்ரீநகர், கார்கிலில் இருந்து 205 கி. மீ. தொலைவில் உள்ளது. டிசம்பர் மாதங்களில் இதன் வெப்பநிலை -10 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் .

சுற்றுலா தளங்கள்

இப்பகுதியில் சில சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் புத்த மதம் சார்ந்த மடாலயங்கள் உள்ளன. ஷானி, முல்பெகே, மற்றும் ஷார்கோலோ மடாலயங்கள் இவற்றுள் முக்கியமானவை.

சிரிக்கும் புத்தர் 

மலைப்பகுதியில் உள்ள முல்பெகே மடாலயத்தின் 9 மீ உயரம் உள்ள `மைத்ரேய புத்தர்' சிலை சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்கின்றது. இது உலகப் புகழ் பெற்ற `சிரிக்கும் புத்தர்' எனவும் அழைக்கப்படுகின்றது.

லடாக் 

சிந்து நதிக்கரையில் அமைந்துள்ள லடாக், ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திலுள்ள ஒரு குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலம். இது "தி லாஸ்ட் ஷங்ரி லா/கடைசி ஷங்ரி லா", "குட்டி திபெத்", "நிலவு பூமி", "உடைந்த நிலவு" என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. டிசம்பர் மாதங்களில் இதன் வெப்பநிலை -5 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் .

மற்ற சுற்றுலாத் தளங்கள் 

தலைநகரமான லெஹ்ஹை தவிர லடாக்கிற்கு அருகாமையில் அல்ச்சி, நூப்ரா பள்ளத்தாக்கு, ஹெமிஸ், லமயுரு, சன்ஸ்கர் பள்ளத்தாக்கு, கார்கில், பன்கொங்க் சோ, சோ கர் மற்றும் சோ மோரிரி போன்ற சுற்றுலாத் தலங்கள் உள்ளன.

இமயமலை நடுவில் 

உலகின் மிக முக்கியமான இரண்டு மலைத்தொடர்களான கரகோரம் மற்றும் இமயமலையின் நடுவில், கடல் மட்டத்தின் மேல் 3500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது லடாக். கூடுதலாக, இணைத்தொடர்களான சன்ஸ்கர் மற்றும் லடாக், லடாக் பள்ளத்தாக்கை சுற்றி உள்ளது.

 ஸ்ரீ நகர் 

அழகிய நகரமாக மட்டுமல்லாமல் வரலாற்றுச் சிறப்பு, மத முக்கியத்துவம் மற்றும் தொல்பொருள் சின்னங்கள் என பல்வகை அம்சங்களை ஸ்ரீ நகர் கொண்டிருக்கிறது. டிசம்பர் மாதங்களில் இதன் வெப்பநிலை -2 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.

 வரலாற்று நினைவுகள் 

இங்கிருக்கும் சில வரலாற்று தொடர்புடைய கட்டிடங்கள் மற்றும் மதத் தலங்கள் இந்நகரத்தின் வளமையான மற்றும் பெருமையான பழமையை நிரூபிக்கக் நின்றிருக்கும் இன்றைய ஆதாரங்களாகும்.

கற்கால மனிதர்கள் 

கிமு.1500-க்கும் கிமு.3000-க்கும் இடைப்பட்ட புதிய கற்கால மனிதர்களின் குடியிருப்பு பகுதியான பர்ஸாகோம் ஸ்ரீ நகரில் உள்ள ஒரு முக்கியமான வரலாற்றுத் தலமாகும்.

தவாங் 

இந்தியாவின் வடகிழக்குப்பகுதியின் உச்சியில் வீற்றிருக்கும் அருணாசலப்பிரதேச மாநிலத்தின் மேற்கு எல்லையில் இந்த தவாங் மாவட்டம் உள்ளது. டிசம்பர் மாதங்களில் இதன் வெப்பநிலை +2 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.

 கிறுகிறுக்க வைக்கும் உயரம் 

கடல் மட்டத்திலிருந்து 10,000 அடியில் கிறுகிறுக்க வைக்கும் உயரத்தில் இந்த தெய்வீக மலை எழிற்பிரதேசம் அமைந்திருக்கிறது. வடக்கில் திபெத்தையும், தென்மேற்கில் பூடானையும், மேற்கில் சேலா மலைத்தொடர்களையும், கிழக்கில் மேற்கு கேமேங் மலைகளையும் இது எல்லைகளாக கொண்டுள்ளது.

பெயர் காரணம்

 இங்குள்ள தவாங் மடாலயத்தின் பெயரிலேயே இந்தப்பகுதி அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. நிசப்தம் தவழும் ஏரிப்பரப்பு, ஆறுகள் மற்றும் எண்ணற்ற நீர்வீழ்ச்சிகள் நீல நிற ஆகாயத்தை பிரதிபலித்தபடி காட்சியளிப்பது பார்வையாளர்களை மெய்மறக்க செய்யும் அற்புத தோற்றங்களாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக