திங்கள், 25 டிசம்பர், 2017

கீழ்வெண்மணியில் நடந்தது என்ன?



கீழ்வெண்மணியில் நடந்தது என்ன?
தோழர் Chandra Mohan அவர்களின் பதிவு.
(1968 டிசம்பர் - 1980. டிசம்பர் வரை)
******************************************
“இந்திய கிராமங்கள் மிகவும் புராதனமானவை. நிலம் சமூகத்தின் பொதுச் சொத்தாக இருக்கிறது. விவசாயமும், கைத்தொழில்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், வேலைப் பிரிவினைகள் மாற்ற முடியாத வகையில் கலாச்சார தர்மப்படி ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்று கூறிய கார்ல் மார்க்ஸ்,
´நியூயார்க் ட்ரிப்யூன்´ பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் “இந்தியாவின் சமுதாய அமைப்பைப் புரிந்து கொள்ள கிராமத்தின் அமைப்பைப் புரிந்து கொள்வதுதான் முக்கியமானது” என்கிறார்.

வர்க்கப் போராட்டம் இந்தியாவைப் பொருத்தவரை சாதியத் தன்மையும் கொண்டிருக்கிறது.....
தமிழ்நாட்டில் நடந்த வர்க்கப்போராட்டங்களில் சாதியப் போராட்டத்தின் வெறித்தனத்தின் உச்சம் எந்நிலைக்கு சென்றது என்பதற்கு கீழ்வெண்மணி கிராமத்தின் சம்பவங்களை ஆராய்வோம்.

நிலப்பிரபுத்துவ நுகத்தடியின் கீழ்...
***************************************
தஞ்சையில் நிலச்சுவான்தார்கள், தாழ்த்தப்பட்ட மக்களை ‘பண்ணையாள் முறை’ கட்டமைப்பில் வைத்திருந்தது. இதில் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் பண்ணை அடிமைகளாக வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் பிள்ளைகளுக்கு கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது. நிலங்களில் செய்யும் வேலைகளுக்கு கூலியாக 1968-வரையிலும் ஒருபடி நெல்லே கூலியாக கொடுக்கப்பட்டது.

மேலும் வேலை நேரத்தின் போது கடுமையான தண்டனைகளும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. வேலை நேரத்தில் களைப்பாக இருந்தால் உடம்பில் இரத்தம் வரும் அளவுக்கு சாட்டையாலும், சவுக்கு தடியாலும் தண்டிக்கப்பட்டனர். மாட்டுச் சாணியை தண்ணிருடன் கரைத்து குடிக்கச் சொல்லும் தண்டனையும் கொடுக்கப்பட்டது. மறுக்கும் கூலி தொழிலாளர்கள் அடியாட்களால் உதைக்கப்பட்டனர்.

1960-க்கு மேல் அப்போதைய கம்யூனிஸ்ட் தலைவர்களாக இருந்த மணியம்மையும், சீனிவாசராவும் தஞ்சை விவசாயத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அத்துடன் விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் ஏற்படுத்தி விவசாயத் தொழிலாளர்களை ஒன்றிணைத்தனர்.

இராஜாஜி ‘தஞ்சை மாவட்ட விவசாயிகளை கம்யூனிஸ்ட் என்கிற பேய் பிடித்திருக்கிறது´ என்று வர்ணித்ததும் அப்போதுதான்.

பற்றி எரிந்த வர்க்கப் போராட்டம் !
****************************************
உழைப்புக்கு ஏற்ற கூலி வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முதலாக விவசாயத் தொழிலாளிகள் 1967-இல் முன்வைத்தனர். அதாவது இதுவரையில் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நாள் கூலியாகிய 1படி நெற்களுடன் மேலும் ஒருபடி நெற்கள் கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையே அவை.

ஆனால் பல மிராசுதாரர்கள் விவசாயத் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தனர். நமக்கு கீழே கைகட்டி வாய் பொத்தி வேலை செய்தவர்கள் இன்று நிமிர்ந்து கேள்வி கேட்க ஆரம்பித்தது ஆதிக்க வர்க்கத்தால் ஜீரணிக்க முடியவில்லை.

விவசாய தொழிலாளர் சங்கம் இருப்பதால் தான் விவசாய தொழிலாளிகள் துணிந்து நிற்கிறார்கள் என்று சங்கத்தை ஒழித்துக் கட்ட நினைத்தனர். சங்கத்தில் இருந்த தொழிலாளர்களை தாக்குவதும், சங்கத்தில் இருப்பவர்களுக்கு வேலை தர மறுத்து சங்கத்தை அடக்கி ஒடுக்கி விடலாம் என நினைத்தனர்.

மேலும் நாகை வட்டார நிலப் பிரபுக்கள் தலைமையில், ´நெல் உற்பத்தியாளர்´ சங்கத்தை ஏற்படுத்தினர். அதன் மூலம் உள்ளுர் விவசாயத் தொழிலாளர்களைப் பணிய வைக்க வெளியூர் விவசாய தொழிலாளர்களை வரவழைத்தனர். நிலச்சுவான்தார்களுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் இடையே அவ்வப்போது சச்சரவுகள் தொடர்ந்தவண்ணம் இருந்தன.

நிலச்சுவான்தார்களின் தலைமையில் உருவாக்கப்பட்ட சங்கத்தில் விவசாய சங்கத்தைச் சேர்ந்த சில முக்கிய உறுப்பினர்களை கொல்லும்படி சதி திட்டம் தீட்டப்பட்டது. தஞ்சை மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கங்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களும் இணைந்து இச்சதி திட்டத்தை குறித்து அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தாக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் புகார் கொடுத்தாலும் காவல் துறை கண்டுகொள்ளவில்லை.

நிலைமை இழுபறியாக போய்க் கொண்டிருந்த நேரத்தில் தான் 25.12.1968-அன்று மாலை 5-மணியளவில் வெண்மணிக் கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி, கணபதி என்ற இரண்டு தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களை மிராசுதாரர் சவரிராஜ் [நாயுடு] வீட்டில் கட்டி வைத்து அடித்து உதைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கேள்விப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் ஒன்றுகூடி நிலச்சுவான்தார் சவரிராஜ் [நாயுடு] வீட்டுக்கு வந்து முத்துச்சாமி, கணபதியின் கட்டை அவிழ்த்து அழைத்துச் சென்றனர்.

அப்போது நிலச்சுவான்தார் ஆட்களுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கிடையிலும் வாக்குவாதம் ஏற்பட்டது. இச்சம்பவத்தை அறிந்த நிலச்சுவான்தார்கள் ஆத்திரம் கொண்டனர். ´கோபால கிருஷ்ண´நாயுடு துப்பாக்கிகளுடன் காவல்துறை மற்றும் அடியாட்களோடு வெண்மணி கிராமத்துக்கு சென்றார்.

வெறிகொண்ட நிலப்பிரபுக்கள்!
எரிந்தது வெண்மணி !
************************************
கீழ்வெண்மணி கிராமத்திற்குள் நுழைந்தவுடன் கண்ணில் தென்பட்ட விவசாயத் தொழிலாளர்களை காட்டில் மிருகங்களை வேட்டையாடுவதைப் போல் கண்ணில் பட்டவர்கள் மீதெல்லாம் துப்பாக்கி சூடு நடத்தினர். தற்பாதுகாப்புக்காக விவசாயத் தொழிலாளர்களும் திருப்பி தாக்கினர். இதில் பக்கிரிசாமி என்பவர் கொல்லப்பட்டார். துப்பாக்கித் தாக்குதலில் பல தொழிலாளர்களுக்கு உடலில் குண்டுகள் பாய்ந்தன. தங்களால் துப்பாக்கி தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாது என்பதை உணர்ந்த விவாசாய தொழிலாளர்கள் ஓடினர்.

தப்பித்து ஓட முடியாத குழந்தைகள், பெண்கள், சில முதியவர்கள் கலவரம் நடந்த தெருவின் கடைசியாக இருந்த ராமைய்யா என்பவரின் குடிசைக்குள் பாதுகாப்புக்காக புகுந்தனர். எட்டடி நீளம், ஐந்தடி அகலமுள்ள சிறிய குடிசைக்குள் புகுத்தவர்களின் எண்ணிக்கையோ மொத்தம் 48.

ஆத்திரம் அடங்காத கோபால கிருஷ்ண நாயுடு குடிசையின் கதவை பூட்டி தீ வைக்கும்படி அடியாட்களிடம் கட்டளை இட்டார். அதன்படி குடிசையின் கதவு அடைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது. குடிசைக்குள் இருந்த 48-பேர்களும் மரண பயத்தில் கதறினர். குடிசையை தீ ஆக்ரோஷமாக பிடித்துக் கொண்டு தகி தகித்துக் கொண்டு இருந்தது.

தீயின் வெப்பத்தை தாங்க முடியாமல் மக்கள் வெளியே வந்துவிடக் கூடும் என்று அடியாட்கள் சுற்றி நின்றுக் கொண்டிருந்தனர். இருப்பினும் குடிசையில் இருந்து ஆறுபேர் வெளியே ஓடி வந்திருக்கிறார்கள். அதில் இரண்டு பேர் பிடிபட்டு மீண்டும் குடிசைக்குள் தூக்கியெறியப்பட்டார்கள். ஒரு தாய் தன் ஒரு வயது குழந்தையை நெருப்பில் இருந்த காப்பாற்ற வெளியே வீசினாள். பாதகர்களோ குழந்தை என்றும் பார்க்காமல் மீண்டும் குடிசைக்குள்ளே தூக்கியெறிந்தார்கள்.

இக்காட்சிகளை வெளியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த 3-சிறுகுழந்தைகளும் பயத்தில் கத்தின. அவர்களையும் தூக்கி நெருப்பில் போட்டது வன்முறைக்கூட்டம். பெருங்கூச்சலும், மரண ஓலமும் வெகுநேரத்திற்கு பின்பே அடங்கியது.

சம்பவம் நடைப்பெற்ற அன்று இரவு எட்டு மணிக்கு கீவளுர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் துறையினர் புகாருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இரவு 12-மணிக்கே காவல் துறையினர் வந்தனர். கனன்று கொன்டிருந்த குடிசையின் உள்ளே பார்த்த போது மனித உயிர்கள் கருகி தீச்சுவாலைகள் சதைகளை சாம்பல்களாக்கி விட்டிருந்தன. இரவு இரண்டு மணிக்கு தீயணைப்புப் படை வந்தது.

மறுநாள் காலை 10- மணி அளவில் எரிந்து சாம்பலாகிப் போயிருந்த குடிசையின் கதவு திறக்கப்பட்டது. மிகச் சிறிய குடிசைக்குள் கருகிய நிலையில் 44-மனித உடல்களை எண்ண முடியாத அளவில் எலும்பும் சாம்பல் குவியலுமாய் கிடக்கிறது. அதில் மாதாம்பாள் (வயது 25) என்ற பெண் தன் குழந்தை தீயில் கருகிவிடக் கூடாதே என்று இறுக்கி அணைத்தபடி குழந்தையோடு கருகி பிணமான பின்னும் அவளுக்குள் குழந்தையை பாதுகாப்பாக வைத்திருப்பதாக நினைத்தபடி இறந்து போய் இருந்த காட்சியும் குழந்தை தாய் மார்பின் முலையில் வாய் வைத்தபடி இறந்து கிடந்த காட்சி பார்ப்பவர்கள் நெஞ்சை உறைய வைத்தது.

பிணங்களின் உடல்களை பரிசோதிக்கும்படி அரசாங்க டாக்டருக்கு செய்தி தெரிவிக்கப்பட்டிருந்தது. நேரில் வந்த டாக்டர் இதற்குள் புகுந்து சாம்பலாகிப் போன உடல்களை பரிசோதிப்பது சிரமம் என மறுத்துவிட்டார். இன்னொரு பக்கம் காவல்துறையோ தோராயமாக 29-பேர்தான் இறந்திருக்கின்றனர் என்று கணக்கை குறைத்து எழுத முற்பட்டது. ´இது மக்களுக்குள்ளேயே நடந்த மோதல்´ என்றும் விசாரணையில் தெரியவந்ததாக கதையும் சொல்லியது.

நாளேடுகளில் முகப்பு செய்திகளாக கீழ்வெண்மணி படுகொலை நிகழ்வு குறித்து பரபரப்பாக செய்திகள் வெளியிட்டன. தமிழகம் அதிர்ந்தது. கோவை நகரத் தொழிலாளி வர்க்கமும், வேலூர் பீடித் தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்தார்கள். தி.க மற்றும் கம்யூனிஸ்டு இயக்கத்தினர் கண்டனக் குரல் எழுப்பினார்கள். சீனாவில் வானொலியில் தொடர்சியாக கீழ்வெண்மணி கொடூரம் குறித்து செய்தி வெளியிட்டது.

உலக நாடுகள் இந்தியாவில் வர்க்க வெறுப்பில் நடந்த படுகொலையைக் கண்டு உறைந்து போனது. ‘பாட்ரியாட்´, ´நியுஏஜ்´ போன்ற டெல்லிப் பத்திரிகைகள் “நாட்டுக்கே அவமானம்” என்று எழுதின. கீழ்வெண்மணி சம்பவத்தின்போது பெரியார் உடல்நலம் மோசமாகி சென்னை பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். [ஆதாரம்: பெரியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி 1968-டிசம்பர் 27-ஆம் தேதியில் விடுதலையில் வந்திருக்கிறது.]

28.12.1968-அன்று கீழ்வெண்மணியில் நடந்த படுகொலைகள் குறித்து பெரியாரிடம் தெரிவிக்கப்பட்ட உடன் அன்று மாலையே வீடு திரும்பினார். கீழ்வெண்மணி படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து இரு அறிக்கைகளும் வெளியிட்டார்.

சி.பி.எம். கட்சியின் அரசியல் தலைமைக் குழு கூட்டம் கேரளாவில் நடந்து கொண்டிருந்தது. அதில் பி.டி.ரணதிவே, ஜோதிபாசு, பி.ராமமூர்த்தி உட்பட பல முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கும் சம்பவம் நடந்த அன்றே செய்தி தெரிந்ததும் கிளம்பி மறுதினமே கீழ்வெண்மணிக்கு வந்தனர்.

கிட்டத்தட்ட ஒரு லட்சம் விவசாயக் கூலி தொழிலாளிகள் கீழ்வெண்மணியில் முற்றுகையிட்டனர். எப்போது என்ன நடக்கும் என்று உணரமுடியாத வண்ணம் பதட்ட நிலையில் இருந்தது. எல்லாரிடமும் மிராசுதாரையும், அடியாட்களையும் பழிவாங்க வேண்டும் என்ற உணர்வு மிகுந்திருந்தது.

கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமசாமி அம்மக்களை அமைதிப்படுத்தி நீண்ட நேரம் உரையாற்றினார். கொடூரமாக நடைப்பெற்ற நிகழ்வுக்கு சட்டப்படி நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். காவல் நிலையத்தில் கீழ்வெண்மணி படுகொலைகள் குறித்து புகார் தரப்பட்டது. கீழ்வெண்மணி படுகொலையை நேரில் பார்த்தவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் சாட்சிக்கு வந்தார்கள்.

கீழ்வெண்மணி வன்முறை நடந்தபோது போது தி.மு.க ஆட்சியில் இருந்தது. அண்ணா முதலமைச்சராக இருந்தார். இச்சம்பவம் தொடர்பாக கோபால கிருஷ்ண நாயுடு உட்பட 106-பேரை காவல் துறை கைது செய்தது. கைதானவர்களில் அதிகம் பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். இவ்வளவு கொடுமைகளுக்கு பிறகும் நிலசுவான்தாரர்கள் கூட்டம் வேறொரு மோசடி வேலையில் ஈடுபட்டது.

“விவசாயத் தொழிலாளர்களே தங்கள் பெண்டு பிள்ளைகளை இச்சிறு அறையில் தள்ளி வெளியில் தாழ்ப்பாளிட்டுக் கொன்றனர்” என்று நிலச்சுவான்தார்கள் மீது ஆத்திரம் ஏற்படாமலிருக்க கவனமாக வார்த்தைகள் கையாளப்பட்டு ஊடகங்களில் செய்தி வரச் செய்தனர். நெருப்புக்கு இரையாக்கப்பட்டதற்கு காரணம் சொன்ன நிலச்சுவான்தார்களுக்கு துப்பாக்கிச் சூட்டில் காயமுற்ற 11-விவசாயத் தொழிலாளிகளுக்கு என்ன காரணத்தை சொல்ல முடிந்தது?

முதல் தகவல் அறிக்கை FIR
-----------------------------------------------
கீழ்வெண்மணியை சாா்ந்த முனியன் என்பவா் கீவளூா் காவல்நிலையத்தில் 25.12.1968-அன்று இரவு 11.15மணிக்கு புகாா் அளிித்தாா்.
குற்ற எண்:327/68ன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது

புகாாில்....

"இன்று இரவு பத்துமணிக்கு
இரிஞ்சூா் நெல் உற்பத்தியாளா் சங்க தலைவா் கோபாலகிஷ்ணநாயுடு மற்றும் சுமாா் இருபதுக்கும் மேற்ப்பட்ட நபா்களுடன் எங்கள் ஊருக்குள் புகுந்து என் வீட்டிற்கு தீ வைத்து என்னை துப்பாக்கியால் சுட்டாா். ரவைக்குண்டுகள் பட்டு காயங்கள் என் முகத்திலும் என் கழுத்திலும் இருக்கிறது. மற்ற வீடுகளும் எாிந்துவிட்டன.
அதில் உள்ளவா்கள் என்னவானாா்கள் என எனக்குத் தொியாது"-என அதில் குறிப்பிட்டாா்.

இப்புகாாின் அடிப்படையில் பிரிவுகள் 147,148,323,307,436- இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது
ஆனால்
கொலைக்குற்றத்திற்கான 302-? பிரிவு அதில் சோ்க்கப்படவில்லை
இதன் தொடக்கமே எவ்வளவு திட்டமிடலுடன் காவல்துறை செயல்படுகிறது என்பதை அறியவும்

எாித்துக்கொல்லப்பட்டவா்கள் பட்டியல்
------------------------------------------------------------------
1]சுந்தரம்-வயது/45
2]சரோஜா/12
3]மாதம்பாள்/25
4]தங்கையன்/5
5]பாப்பா/35
6]சந்திரா/12
7]ஆசைத்தம்பி/10
8]வாசுகி/3
9]சின்னப்பிள்ளை/28
10]கருணாநிதி/12
11]வாசுகி/5
12]குஞ்சம்மாள்/30
13]பூமயில்/18
14]கருப்பாயி/35
15]இராஞ்சியம்மாள்/16
16]தாமோதரன்/1
17]ஜெயம்/10
18]கனகம்மாள்/25
19]இராஜேந்திரன்/7
20]சுப்பன்/50
21]குப்பம்மாள்/35
22]பாக்கியம்/35
23]ஜோதி/10
24]இரத்தினம்/35
25]குருசாமி/15
26]நடராசன்/5
27]வீரம்மாள்/25
28]பட்டு/46
29]சண்முகம்/13
30]முருகன்/40
31]ஆச்சியம்மாள்/30
32]நடராசன்/6
33]ஜெயம்/6
34]செல்வி/3
35]கருப்பாயி/50
36]சேது/26
37]நடராசன்/10
38]அஞ்சலை/45
39]ஆண்டாள்/20
40]சீனிவாசன்/40
41]காவோி/50
42]வேதவள்ளி/10
43]குணசேகரன்/1
44]இராணி/4

குற்றவாளிகள்:
--------------------------
1]கோபலகிருஷ்ணநாயுடு
2]பாலு நாயுடு
3]கோவிந்தராஜ் நாயுடு
4]இராமுபிள்ளை
5]ராஜ் நாயுடு
6]மூா்த்தி நாயுடு
7]இராமதாசு
8]சீனிவாசநாயுடு
9]மூா்த்தி
10]இராமனுஜம்
11]இராமையா நாடாா்
12]பாலு
13]தாமோதரன்
14]கோவிந்தராஜிலு நாயுடு
15]கிருஷ்ணமூா்த்தி
16]பொருமாள் சுவாமி
17]காியய்யா நாயுடு
18]முத்துநாயுடு
19]கிருஷ்ணசுவாமி
20]கோதண்டவம் பிள்ளை
21]முருகைய்யாத்தேவா்

கொலையாளிகளை விடவும் தீா்ப்பு கொடூரமானது !
**********************************************
போலீஸ் ஐஜி கீவளுர் வட்டாரத்தில் லைசன்ஸ் துப்பாக்கிகள் 42- இருப்பதாகவும், 28-ஆம் தேதி முடிய 5-துப்பாக்கிகளே போலீசுக்கு வந்துள்ளன என்று கூறியதையும் இங்கே பதிவு செய்ய வேண்டும். மிகக் கொடுமையாக நடந்த இப்படுகொலையில் முக்கியக் குற்றவாளியான கோபாலகிருஷ்ண [நாயுடு]வுக்கு 1970-இல் நாகப்பட்டினம் அமர்வு நீதிபதி குப்பண்ண [முதலியார்] 10-ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தார்.

இத்தீர்ப்புக்கு எதிராக கோபால கிருஷ்ண [நாயுடு] சென்னை உயர்நீதிமன்றத்தில் தான் நிரபராதி என்று மேல் முறையீடு செய்தார். 4-வருடங்கள் 3-மாதங்களாக விசாரணையில் இருந்த வழக்குக்கு 1975-ஏப்ரல் 6-ஆம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த மகராஜன் கோபால கிருஷ்ண [நாயுடு] மீது எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.

“Upon the consideration of the evidence on record the Judges felt constrained to hold that the prosecution had failed to bring home the guilt of any of them and consequently acquitted them. They said that the intrinsic infirmities in the prosecution evidence prevended them from convincting the persons who were probable innocene.” -‘ The Hindu´'

“பதிவான சாட்சியங்களைப் பரிசீலித்ததில் குற்றவாளிகள் மீது குற்றத்தை நிரூபிக்க வாதிகள் தரப்பில் (பிராசிகேஷன் தரப்பில்) தவறி விட்டதாக நீதிபதிகள் முடிவுக்கு வரவேண்டி இருப்பதாக உணர்கிறார்கள். இதன் காரணமாகப் பிரதிவாதிகள் அனைவரையும் விடுதலை செய்கிறோம். பிராசிகேஷன் தரப்பு சாட்சிகளில் உள்ளடங்கிய குறைபாடுகள் இருப்பதால் நிரபராதிகளாக உள்ள நபர்கள் தண்டிக்கப்பட்டு விடாமல் தடுக்கப்பட்டிருக்கிறோம்.” – ´இந்து´

மேலும் “கார், நிலம், உடைமை உள்ள பணக்காரர்கள் தாங்களே சென்று கொலை செய்திருப்பார்கள் என்பதை நம்ப முடியவில்லை” என்று புத்திசாலித்தனமான கருத்தையும் வெளியிட்டார். தமிழகம் முழுவதும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு அதிர்ச்சியை கொடுப்பதாக இருந்தது. ஆதிக்க வர்க்கத்திற்கு ஆதரவாகவும், நீதிக்கு எதிராகவும் வழங்கப்பட்ட அநீதியை எதிர்த்து என்ன செய்வது? தமிழகத்தில் மக்களிடம் பெரும் கொந்தளிப்பு உருவாகவில்லை.

விவசாயத் தொழிலாளர்கள் பெரிதும் விரக்தியடைந்தனர். எத்தனை சாட்சிகள் இருந்தும் ஜனநாயகமும், சட்டமும் ஆதிக்கவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டன. அதன் பின்னணி அரசியல் நகர்வுகள் கொஞ்சம் நஞ்சமல்ல….திமுக முதல் காங்கிரஸ் வரை...

நிலச்சுவான்தார்களின் கௌரவப் பிரச்சனையாக கருதப்பட்டு எப்படியும் கோபால கிருஷ்ண நாயுடுவை வெளிக்கொணருவதில் கங்கனம் கட்டிக் கொண்டிருந்தனர்.

வெண்மணி கொடுமைக்கு கணக்கு தீர்த்தனர்!
********************************************
கோபால கிருஷ்ண நாயுடு விடுதலை செய்யப்பட்டு 12-ஆண்டுகள் சென்ற நிலையில் 1980-ஆம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் தலைமறைவு புரட்சியாளர்களான நக்சல்பாரி இயக்க கொரில்லாக்கள் மிராசுதார் கோபால கிருஷ்ண நாயுடுவை தியாகிகள் நினைவிடத்தின் அருகில் வெட்டிக் கொன்றனர். பிணத்தின் அருகில் ´வினோத் மிஸ்ரா´ வாழ்க! என CPIML இயக்கத் தலைவரின் பெயரில் துண்டு அறிக்கைகளை வீசிவிட்டு சென்றனர்.

காவல் துறை வன்முறையாளர்கள் கோபால கிருஷ்ண நாயுடுவை கொன்றதாக குற்றம் சாட்டியது. தமிழகத்தில் தொழிலாளர்களோ இனிப்பு கொடுத்து கொண்டாடினர்.

கீழ்வெண்மணி படுகொலையும் அதற்கு சட்டம் கொடுத்த தீர்ப்பின் யோக்கியதையைக் குறித்தும் கேள்வி எழுப்ப முடியாத நிலையில் தான் இந்திய சனநாயகம் இருக்கிறது…

வர்க்கப் போராட்டங்கள் நடக்கும் பொழுதெல்லாம் நமக்கு சட்டத்தின் பங்களிப்பின் நம்பகத்தன்மையை குறித்து பல கேள்விகள் எழுகிறது. வர்க்கப் போராட்டங்களுடன் சாதீய ஒடுக்குமுறைகளுக்கும் கணக்குத் தீர்க்க வெண்டியுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து பல வருடங்களாகிறது. இன்னமும் தாழ்த்தப்பட்ட மக்கள், ‘நாங்களும் மனுசங்க தாண்டா’ என்று போராடக்கூடிய நிலையில் தான் இன்றைய நிலை நீடிக்கிறது.

கம்யூனிஸ்ட்களின் கடமை மென்மேலும் அதிகரித்துச் செல்கிறது.

வெண்மணித் தியாகிகளுக்கு வீரவணக்கம் !

நீங்கள் விட்டுச் சென்ற இலட்சியத்தை நிறைவேற்ற பாடுபடுவோம்!

நிலபிரபுத்துவத்தின் மிச்சங்களை கணக்குத் தீர்ப்போம் !
********************************************
குறிப்புகளுக்கு நன்றி :
கடையநல்லூர் முழக்கம்

ஞாயிறு, 17 டிசம்பர், 2017

மணி மேகலை- இன்றைய புதுமைப் பெண்ணகளுக்கு முன்னோடி! காரணம் ?



மணி மேகலை- இன்றைய புதுமைப் பெண்ணகளுக்கு முன்னோடி! காரணம் ?

*சங்ககாலத்தின் இறுதியில் கடைச்சங்க காலத்தில் தோன்றிய நூல்களில் சமயம் சார்ந்த வரலாற்றைப் படைத்ததில், முதன்மையான முதல் காப்பியமானது, மணிமேகலை!*

அதுகாலம் வரை, புராணங்கள், வாழ்க்கை வழிகாட்டும் கதைகளே ஆண்டுவந்த தமிழ் இலக்கிய உலகில், முதன்முறையாக, ஒரு சாதாரணப் பெண்மணியை, அதுவும் கணிகையர் எனும் நடன மாந்தர் குலத்தில் பிறந்த பெண்ணை கதையின் நாயகியாக, பெரும்பான்மை இந்து சமய நெறிகளுக்கு மாறான பவுத்த மதத்தைப் பின்புலமாகக் கொண்டு, சமயம் சாதி பாடுபாடு, ஆண் மேலாதிக்கம் போன்றவை உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் படைத்தார் சீத்தலைச் சாத்தனார் என்றால், அது மிகவும் தைரியமான ஒரு செயல் என்பதைவிட, புரட்சிகரமான செயல் என்பதே, சரியாக இருக்கும்.

சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாகக் கருதப்படும் மணிமேகலை, துறவறத்தைக் கருப்பொருளாகக் கொண்டதாகும்.

*சிலப்பதிகாரம்:*

மணிமேகலையின் முதல் நூலான சிலப்பதிகாரம், இளங்கோவடிகளால் இயற்றப்பட்டு, குடும்ப வாழ்வை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட நூலாகும்.

அதில், காவிய நாயகி கண்ணகியின் கணவன், பெருவணிகன் கோவலன், நடன மங்கை மாதவியிடம் மையல் கொண்டு, அவளுடன் சேர்ந்து பின்னர், மனம் பேதலித்து, மீண்டும் மனைவியிடம் சேர்ந்த சமயத்தில், தவறான சூழ்நிலைகளின் பாதிப்பால் கள்வனாகி, கொல்லப்பட்டு, கண்ணகியின் கோபத்தில் பற்றியெரிந்த மதுரை மாநகரின் வெம்மையில் இருந்து விலகி, இறைவருளால் இறந்த கணவனுடன் மேலுலகம் செல்லும் கண்ணகி, கோவலன் வதத்தில் மனம் கலங்கிய மாதவி, அவன் நினைவால் துறவு பூண்டு, கோவலனுக்குப் பிறந்த மகளான மணிமேகலையையும் இளந்துறவியாக்கி, தவ வாழ்வு வாழ்ந்த வரலாறுதான், சிலப்பதிகாரம்.


*மாதவியின் துறவிலிருந்து துவங்குகிறது, மணிமேகலை!.*

சிலப்பதிகாரம் முடிந்த மாதவியின் துறவிலிருந்து துவங்குகிறது, மணிமேகலை. முழுக்க முழுக்க, பவுத்த மதக்கருத்துகளை நேரடியாக செலுத்தாமல், மணிமேகலை எனும் காப்பிய நாயகியின் வாழ்வின் வழியே, வாழைப்பழத்தில் ஊசி நுழைப்பது போல, சமண சமயத்தின் நெறிகளை செலுத்துகிறது, மணிமேகலை.

மத நெறிகளைக் கடந்து, தமிழ் மொழியில் உள்ள ஆளுமை மற்றும் கவித்திறனில் செறிவு கொண்ட நூலாகும், மணிமேகலை. சொல்லப்போனால், மற்ற இதிகாசங்களைப் போல, உயர்வாக வைத்துப் போற்றியிருக்க வேண்டிய இந்நூல் ஏனோ, அதற்கான இடத்தை அடையவே இல்லை.

இதற்குக் காரணமாக, கதையின் களமாக மையப்பொருளாக விளங்கிய சமண சமயம் ஒரு காரணமாக இருக்கலாம் என்று சிந்திக்க தோன்றுகிறது.

ஏனெனில், திராவிட நாடுகளில் முற்காலத்தில் இருந்து, சமண மதங்கள் அதிக ஈர்ப்பைப் பெறவில்லை, அவையெல்லாம் வட இந்தியாவில் மட்டுமே, புகழ்பெற்று விளங்கியதாகவே இருந்தன.


*மணிமேகலையின் வரலாறு:*

மணிமேகலை காப்பியத்தில் நாயகி, கோவலன் மாதவியின் மகளாவாள், நடன குலத்தில் பிறந்தாலும், கோவலனின் மீது மாதவி கொண்ட காதல், அவன் பிரிவில் மனம் வாடி, அதன்பின் அவன் கொலையுண்ட செய்தி அறிந்து மனம் கலங்கி, துறவறம் பூண்டவள், தன் மகளையும் நல்லொழுக்கம் மிக்க பெண்ணாக வளர்த்து, அவளையும் துறவு பூண வைத்து, உலகில் உள்ள எந்த பந்த பாசத்திலும் சிக்காமல் நல்வழியில் நடத்தி வந்தாள்.

பூம்புகார் நகரில் வளரும் மணிமேகலை அங்குள்ள இளவரசனால் பல்வேறு இன்னல்களுக்குள்ளாகி, அவனிடம் இருந்து தப்பிக்க செய்யும் முயற்சிகளில் ஒருநாள், கடலின் தெய்வம் மணிமேகலாவால் காப்பாற்றப்பட்டு, மணிபல்லவத் தீவில் சேர்க்கப்படுகிறாள்.

மணிபல்லவத்தீவு என்பது, தற்கால இலங்கை. அங்கே, தன் வாழ்வின் பிறவி இரகசியங்களை அறிகிறாள், மேலும் கடல் தெய்வத்திடம் இருந்து மூன்று வரங்கள் பெறுகிறாள், வேற்று உருவம் பெறுதல், பசியை அடக்குதல், வான் வழி பறத்தல் எனும் அந்த வரங்கள் மணிமேகலையின் வாழ்வில் பல முக்கிய தருணங்களில் அவளை காப்பற்றுகிறது.

பின்னர், அங்குள்ள ஒரு குளத்தில் அவளுக்கு அமுதசுரபி எனும் அட்சய பாத்திரம் கிடைக்கிறது. அள்ளஅள்ளக் குறையாத அந்த பாத்திரத்தின் மூலம், அவளை, உலக மக்களின் பசிப்பிணி போக்க, இறை கட்டளை இடுகிறது. அதன் பின்னர் தனது இருப்பிடம் திரும்பியவள், நிகழ்வை அன்னை மாதவி மற்றும் தோழியிடம் விவரித்து, தன் அட்சய பாத்திரம் மூலம், ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கி பசிப்பிணி போக்குகிறாள்.


மீண்டும் இளவரசன் தொல்லை தர, வேறு ஒரு உரு மாற, அந்த உருவில் அவள் இருப்பதை அறிந்த இளவரசனும் அவளைத் தேடி வர, நடந்ததை அறியாத, உருவின் கணவன் இளவரசனைக் கொன்றுவிட, பின்னர் காயசண்டிகை எனும் உருவில் இருக்கும் மணிமேகலை சிறையில் அடைக்கப்பட, தவநெறி சார்ந்த அவளின் செயல்களில் ஈடுபாடு கொண்ட அரசி, மாதவியின் மூலம் உண்மை அறிந்து, அவளை விடுவிக்க, மணிமேகலை சமய நெறிகளில் தேர்ச்சி பெற, வஞ்சி மாநகர் செல்கிறாள்.

தற்கால கரூர் நகரமே, அக்காலத்தில் வஞ்சி மாநகர் என்று அழைக்கப்படும் சேர மன்னர்களின் தலைநகராக விளங்கியது. அங்கு பல சமய நெறிகளைப் பற்றி அறிந்து பின்னர் காஞ்சி மாநகர் சென்று, மக்கள் பசிப்பிணி போக்கி, தனது குருநாதர், அறவண அடிகள் மூலம், சமண நெறிகளை கற்றுத் தேர்ந்து, முழுமையான புத்த மதத் துறவியாகி, தவத்தில் கலந்தாள்.

மணிமேகலையின் வீரமும் மன உறுதியும்! தன்னை ஒரு இளவரசனே பின்தொடர்ந்து வந்து உறவை நாடியபோதும், அதை துச்சமென மதித்து, தன் இலக்கில், தவ வாழ்வில் அவள் உறுதியாக இருந்திருக்கக் காரணம், தனது அன்னையை விட்டு பிரிந்த தனது தந்தையின் காரணமாக ஏற்பட்ட வெறுப்பால் இருக்கலாம் அல்லது அரச குடும்பத்தால் தந்தை கொலையுண்ட பகையாலும் இருக்கலாம்.

ஆயினும் அத்தகைய ஒரு கடினமான உறுதிக்கு, பெரு வணிகக் குலத்தில் பிறந்த அவள் தந்தையின் உறுதியும், நடன மங்கையானாலும் கோவலனே கணவன் எனும் சிந்தை மாறாது வாழ்ந்த மாதவியும் ஒரு காரணமாக இருக்கலாம், அல்லவா!


*புதுமைப் பெண் மணிமேகலை!*

ஆண் பெண் சம உரிமைச் சூழல் உள்ள இன்றைய நவீன காலகட்டத்திலேயே, பெண்களுக்கு இன்னமும் முழு சுதந்திரமும், செயல்படும் ஆற்றலும் இல்லாதபோது, கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பெண்கள் அடிமைப்பட்டிருந்த ஆணாதிக்க சமூகத்தில், மூட நம்பிக்கை கொண்டிருந்த மக்கள் முன், பெண்களின் நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை நாம் எண்ணிப்பார்த்தால், மணிமேகலை பாத்திரப் படைப்பின் புரட்சி, பெருமை நமக்கு விளங்கும்.

முற்போக்கு சமுதாயத்தில் இன்னமும் சாதி, இன மத மாச்சரியங்கள் ஒழியாத நிலையில், மணிமேகலையை காப்பிய நாயகியாகப் படைத்து, அதிலும் அவளை பெண் துறவியாக்கி, கருணைக்கடலாக, உலகிற்கே, அன்னதானம் அளித்த பூரணியாக, குறையே இல்லாத முழு நிலவாக, மணிமேகலையை படைத்திருக்கிறார், சீத்தலை சாத்தனார்.

மாசற்ற மாதவி! கணவனை கொடுங்கொலை செய்த மன்னனை வீழ வைத்து, மதுரையை சினங்கொண்டு எரித்த கண்ணகி கற்பின் தெய்வம் என்றால், நடன மங்கையர் குலத்தில் பிறந்து கோவலன் பால் மனம் சென்றபின், குலத்தொழிலை விடுத்து, உலக இச்சைகளை விலக்கி, தவவாழ்வு வாழ்ந்தவள், கணவனாக வரித்த கோவலன் கொலையுண்டான் என்றவுடன் துறவு பூண்டு, இந்த உலகின் மீது உள்ள வெறுப்பால், கோவலன் மீது உள்ள அன்பால், தங்களுக்குப் பிறந்த மகளையும், துறவு பூண வைத்து, வரலாற்று நாயகியாக்கினாளே, அவள்தான், காவியத்தலைவி!

*ஒருவேளை, இதுதான், அக்கால, பெண்ணடிமைத்தனமோ !?

வெள்ளி, 15 டிசம்பர், 2017

மருது பாண்டியர் ஓர் அறிமுகம்...



மருது பாண்டியர் ஓர் அறிமுகம்...

*1857ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட பிரித்தானிய வல்லாதிக்க எதிர்ப்புப் போர் தான் “ முதல் இந்திய விடுதலைப் போர்” என்று தில்லி அரசு தமிழர்கள் மீது திணித்து வருகிறது.*

இந்து – இசுலாமிய மதச் சாயலோடு வெளிப்பட்ட இந்தப் போரில் பல்வேறு பகுதிகளின் கூட்டு ஒருங்கிணைவோ, அடித்தட்டு மக்களின் பங்களிப்போ இருந்ததில்லை. தொடக்கத்தில் புரட்சிக்கான எல்லாக் கூறுகளையும் கொண்டிருந்த போதிலும், இறுதியில் குறுகிய மதவாதச் சேற்றில் மூழ்கி தோற்றுப் போனது.

ஆனால் தென்னிந்தியாவில் இந்தப் போருக்கு முன்னர் நடத்தப்பட்ட பல்வேறு பிரித்தானிய எதிர்ப்புப் போர்கள் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. சாதி, மத, மொழிகளைக் கடந்து பூலித்தேவன், கட்டபொம்மன், ஹைதர் அலி, திப்புசுல்தான், மருது பாண்டியர்கள், தீரன் சின்னமலை ஆகியோர் போராடி வந்துள்ளனர்.
குறிப்பாக, மருது பாண்டியர்கள் நடத்திய போராட்டம் தென்னிந்தியாவில் நடந்த விடுதலைப் போரில் முதன்மையானதும், திருப்புமுனையும் கொண்டதாகும். மருது பாண்டியர் தளபதியாகவும் ஆட்சிப் பொறுப்பிலும் இருந்த ஆண்டுகள் 1780 முதல் 1801 வரை.

இந்திய வரலாற்று ஆய்வாளர்கள் வடதிசையின் மீது மனச்சாய்வு கொண்டவர்களாக இருப்பதால், இந்திய விடுதலை வரலாற்றை தென்திசையிலிருந்து தொடங்குவதில்லை. இந்திய விடுதலை வரலாற்றை காலவரிசைப்படியும் எழுத மறுக்கின்றனர். ஆங்கிலேயர்கள் தென்பகுதியில் தான் காலடிவைத்து தங்கள் ஆதிக்கத்தை முதன் முதலாக நிறுவினர். அதன்பிறகே வடபுலம் நோக்கி நகர்ந்து, விரிந்த வணிகச் சந்தையை உருவாக்கினர்.

ஆங்கிலேயர்கள் தென் மண்ணில் நிலைபெற்று ஆதிக்கம் செலுத்தியபோது பல்வேறு சிற்றரசுகள் (பாளையப்பட்டுகள்) வரி வசூலிக்கும் முகவாண்மையாக செயல்பட்டன. பின்பு வரிவசூலிக்கும் உரிமையை தானே எடுத்துக் கொண்டு சிற்றரசுகளின் அதிகாரத்தை ஆங்கிலேயர் பறித்துக் கொண்டனர். அப்போது தான் சிற்றரசுகள் சில விழித்துக் கொண்டு பொது எதிரில் எனும் அடிப்படையில் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து ஒன்றுபடுகின்றன. இந்த ஒன்றுபடுத்துதல் முயற்சிக்கு முதலில் அடித்தளமிட்டவர்கள் பெரிய மருது, சிறிய மருது என்று அழைக்கப்படும் மருது பாண்டியர்கள் ஆவார்கள்.

தூந்தாஜி வாக் (வட கன்னடம்), கேரள வர்மா (மலபார்) தீரன் சின்னமலை (கோவை) கோபால நாயக்கர் (திண்டுக்கல்) கிருஷ்ணப்ப நாயக்கர் (மைசூர்) ஊமைத்துரை (நெல்லை) மயிலப்பன், முத்துக்கருப்பர் (இராமநாதபுரம்) ஞானமுத்து (தஞ்சை) ஆகியோரோடு இணைந்து தென் பகுதி கூட்டமைப்பை முதன் முதலில் உருவாக்கி, ஆங்கிலேயப் படையினரை நிலைகுலையச் செய்த பெருமை மருது பாண்டியர்களையேச் சாரும்.

சின்னமருது வெளியிட்ட ’ஜம்புத்தீவுப் பிரகடன’ அறிக்கைக்கு இணையாக வடநாட்டில் எந்த மன்னனும் வெளியிட்டதில்லை. அதில், “ஐரோப்பிய ஈனர்களுக்கு தொண்டு செய்பவனுக்கு மோட்சம் கிடையாது. அவன் வைத்திருக்கும் மீசை எனது அடிமயிருக்குச் சமம். அவன் பெற்ற பிள்ளைகள் தன் மனைவியை ஐரோப்பிய ஈனப் பிறவிக்கு கூட்டிக் கொடுத்துப் பெற்ற பிள்ளைகள். ஐரோப்பியக் குருதி ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்” என்ரு அறைகூவல் விடப்பட்டது.

ஜம்புத்தீவு (நாவலந்தீவு என்பது தமிழ்ப்பெயர்) புரட்சிப் பிரகடன அறிக்கை திருச்சி மலைக்கோட்டையிலும், திருவரங்கத்திலும் ஒட்டப்பட்டது. இதைப் படித்து ஆத்திரமுற்ற ஆங்கிலேய அரசு மருது பாண்டியர்களின் உற்றார், உறவினர், மகன்கள், பேரன்கள் ஆகியோரை சிறைபிடித்து தூக்கிலிட ஆணை பிறப்பித்தது.

மருது பாண்டியர்களும், ஏனையோரும் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு நடந்த நிகழ்வுகளை கோர்லே (Gourley) எனும் ஸ்காட்லாந்துக்காரர் ஒரு இராணுவ அதிகாரி தன்னிடம் தெரிவித்ததாகக் கூறுகிறார்; “மருதுவின் அறிக்கை கீழ்த்தரமான பழிவாங்கும் எண்ணத்தை உசுப்பிவிட்டது. இதன் காரணமாகவே அவரது சீமைக்குத்  தீவைத்து அழிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவரது குடும்பத்தில் இருந்த ஆண், பெண் அனைவரையும் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. பிடிபட்ட அனைவரையும் இராணுவ விசாரணை எதுவுமின்றி தூக்கிலிட ஆணை தரப்பட்டது. இந்த ஆணைகள் சிறிதுகூட மாற்றமின்றி, காலதாமதமின்றி நிறைவேற்றப்பட்டன.” மருது இராணுவ மன்றத்திடம் “தனக்கு தயை ஏதும் காட்ட வேண்டாம்” என்று சொன்னார். “நான் என் நாட்டைக் காப்பாற்றுவதற்காகப் போரிட்டு தோற்கடிக்கப்பட்டுள்ளேன். என்னுடைய உயிரைப் பறிக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். நான் அது பற்றி ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்தச் சிறுவர்கள்? இவர்கள் என்ன தவறு செய்தனர்? இவர்கள் உங்களுக்கு எதிராக ஆயுதம் எடுத்தார்கள? இவர்களைப் பாருங்கள்! இவர்களால் ஆயுதம் எடுக்க முடியுமா?”

(கோர்லே எழுதிய நூலின் பெயர் Mahradu – An Indian Story Of The Beginning Of The Ninteenth Century – 1813, London) மேற்கண்ட மருதுவின் இறுதி உரையினை படிப்பவருக்கு அண்மையில் நடந்த முள்ளிவாய்க்கால் போர்தான் நினைவுக்கு வரும். அதில் குழந்தைகள், பெண்கள், வயது முதிர்ந்தோர் என்று வேறுபாடின்றி கொடுங்கோலன் இராசபக்சே அரசால் கொன்று குவிக்கப்பட்டதையும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனது குடும்பம் பூண்டோடு அழிக்கப்பட்டதையும் நெஞ்சில் ஈரங்கொண்டோரால் எப்படி மறக்க முடியும்?

ஆயுதமென்றால் என்னவென்று தெரியாத பச்சிளம் பாலகன் பாலச்சந்திரனை, கொல்ல உங்களுக்கு மனம் எப்படி வந்தது? என்று நாம் சிங்கள ஆட்சியாளர்களிடம் கேள்வி கேட்பதைப் போலத்தான் அன்றைக்கு இராணுவத்திடம் பிடிபட்ட மருதுவும் கேட்டுள்ளார்.
24.10.1801இல் மருது பாண்டியர்கள் உள்ளிட்ட அனைவரையும் தூக்கிலிட்டப் பிறகும் ஆங்கிலேய அரசின் பழிவாங்கும் இரத்தவெறி அடங்கவில்லை.

மருதுவின் எஞ்சிய வாரிசாகிய 15 வயதுடைய துரைச்சாமி உள்பட 73 பேரை மலேசியாவின் பினாங்கு தீவிற்கு (Prince of Wales Island) 11.02.1802இல் நாடு கடத்த உத்தரவிட்டது.

1818இல் பினாங்கு சென்ற இராணுவத் தளபதி வெல்ஷ் என்பவர் துரைச்சாமியை பார்த்துள்ளார். அதுகுறித்து ‘எனது நினைவுகள்’ நூலில் பின்வருமாறு கூறுகிறார் “உடல்நலம் குன்றிய தோற்றத்தோடு துரைச்சாமியை காண நேரிட்டது. இதைப் பார்த்த பொழுதில் என் இதயத்தில் கத்தி சொருகியதைப் போல உணர்ந்தேன்.”

சிவகங்கையை ஆண்ட மருது பாண்டியர்கள் அரசப் பரம்பரையினர் அல்லர். சிவகங்கையை சேதுபதி மன்னர் வழியாக ஆட்சி செய்தவர்கள் முத்து வடுகநாதரும், அவரது மனைவி வேலு நாச்சியாருமே. ஆண் வாரிசு இல்லாத காரணத்தால் வேலு நாச்சியார் விருப்பத்தின் பேரில் படைத் தளபதிகளாக பொறுப்பு வகித்த மருது பாண்டியர்கள் வசம் ஆட்சி நிர்வாகம் ஒப்படைக்கப்படுகிறது.

1800ஆம் ஆண்டுகளில் விவசாயிகளை கொடுமைப்படுத்திய மன்னர்கள் நிறையவே உண்டு. இதற்கு விதிவிலக்காக மருது பாண்டிய மன்னர்கள் விளங்கினர். மருது பாண்டியர்களின் அரசு, மக்கள் அரசாக – குறிப்பாக விவசாயிகள் விரும்பிய அரசாக விளங்கியது. அதற்குக் காரணம் அவர்கள் விவசாயிகளுக்கு பல அரசு உதவிகளை (சலுகையாகவோ, மானியமாகவோ) வழங்கிடும் நிர்வாக சீர்திருத்தங்களைச் செய்தனர். அடித்தள மக்களின் ஆதரவாளர்களாக மருது பாண்டியர்கள் விளங்கியதை வெளிப்படுத்தும் சான்றாக பேரா. கதிர்வேலின் “History of Maravas” நூலில் நரிக்குடி சத்திரச் செப்பேட்டில் காணப்படும் செய்தியை தந்துள்ளார்.

விவசயிகளின் நல்லெண்ணத்தை அவர்கள் ஈட்டியிருந்ததால்தான் புரட்சி இயக்கம் மூலம். அவர்கள் விடுதலைப் போரை நடத்தியபோது சிவகங்கை சீமைக்கு வெளியிலும் விவசாயிகளின் ஆதரவு பெருகியது. மருதிருவர் படை தஞ்சை நோக்கிச் சென்றபோது அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் அவர்களுடன் இணைந்து கொண்டனர் என மார்க்சிய அறிஞர் கோ. கேசவன் அவர்கள் “சமூகமும் கதைப் பாடலும்” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மருது பாண்டியர்களின் மாண்பினை உயர்த்தும் வரலாற்றுச் சான்றுகள் எண்ணிலடங்கா. பல சான்றாவணங்களை எடுத்துக் கூறியும்கூட, தில்லி அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கக்கூடிய இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழு (ICHR)வானது, மருது பாண்டியர்களின் வீரஞ்செறிந்த விடுதலைப் போரை முதல் சுதந்திரப் போராக ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இது தமிழினத்தின் மீதான பகையுணர்ச்சியை வெளிப்படுத்தும் செயலாகும்.

‘தென்னாட்டுக் கிளர்ச்சிகள்’ (South Indian Rebellion – The First war of Independence 1800 - 1801) எனும் நூலின் மூலமாக அதன் ஆசிரியர் இரா. ஐயப்பன் முதல் சுதந்திரப் போராக இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழு (ICHR) மருது பாண்டியர் நடத்திய போரை அறிவிக்க வேண்டுமென்று வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருவதும் குறிப்பிடத்தக்கது.

*“வட இந்தியத் தலைவர்கள் வான்புகழ் பெறுகின்றனர். தமிழ்நாட்டுத் தலைவர்கள் ஏற்ற அறிவும், ஆற்றலும் பெற்றிருந்தும் அவ்வாறு உயர்ந்து விளங்குதல் அரிதாக உள்ளது. காரணம் தமிழர் தம்மவர்களின் சிறப்புகளை உணராமையும், உணர்ந்தாலும் போற்றாமையும் ஆகும்”*

The_Great_Emperors_Maruthu_pandiyars

வியாழன், 14 டிசம்பர், 2017



மதுரை குஞ்சரத்தம்மாள் தெரியுமா?

தாது வருடப் பஞ்சம் என்ற பெயரை நாம் கேள்விப்பட்டிருப்போம் -
1875 தொடங்கி 80 வரை தமிழகத்தைப் புரட்டிப் போட்ட பஞ்சம் அது -

கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த வேதனை மிகுந்த காலம் அது -

பஞ்சம் தந்த பாடங்கள் ஒரு பக்கம் இன்றும் பேசப்பட்டு வருகிறது -

அதில் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கதை குஞ்சரம்மாவினுடையது -

குஞ்சரம் தாசி குலத்துப் பெண்மணி -
மதுரையில் கொடிகட்டிப் பறந்த தாசி -

பெரும் செல்வச் செழிப்பு -
மதுரை நகரைச் சுற்றி இருந்த செல்வந்தர்கள் எல்லாம் குஞ்சரத்தின் அழகில் மயங்கிக் கிடந்த காலம் அது -

வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள சந்தில் இருந்த இரண்டு பெரும் வீடுகளும் அவளுடையவைதான் -

தாது வருடம் துவங்கிய இரண்டாவது வாரத்தில் அந்த முடிவினை எடுத்தாள் -

கொடும் பஞ்சத்தில் மக்கள் கஞ்சிக்கு வழியின்றி, கணக்கின்றிச் சாவதைப் பார்த்து -
வேதனையால் துடித்து தினமும் கஞ்சி காய்ச்சி ஊற்றத் துவங்கினாள்.

பெரும் வட்டையில் காய்ச்சிய கஞ்சியை விசாலமான தனது வீட்டுத் திண்ணையில் வைத்து அவள் ஊற்றும் செய்தி ஊரெங்கும் காட்டுத் தீ போல் பரவியது -

வடக்கு ஆவணி வீதியை நோக்கி மக்கள் சாரை சாரையாக வர ஆரம்பித்தனர்-

இவளுக்கு எதற்கு இந்த வேலை? சொத்தையெல்லாம் விட்டுட்டு தெருவுக்கு வரப்போறா என்று பெருந்தனக்காரர்கள் பேசிக் கொண்டனர் -

அவளின் செய்கை அவர்களை கூசச் செய்தது -
ஆனால், கஞ்சி ஊத்தும் செய்தி கேட்டு மக்கள் வந்து கொண்டேயிருந்தனர் -

அந்தக் கூட்டத்தை கண்கொண்டு பார்க்க முடியவில்லை.

பரட்டைத் தலையும் எலும்பும் தோலுமாக துணியென்று சொல்ல முடியாத ஒன்று இடுப்பிலே சுற்றியிருக்க குழந்தைகளைத் தூக்கியபடி வரிசை, வரிசையாக வந்து கொண்டிருந்தனர் -

ஒரு வட்டையில் துவங்கியது, மூன்று வட்டையானது, அதற்கு மேல் அதிகப்படுத்த முடியவில்லை -
தினமும் ஒரு வேளைக் கஞ்சி ஊற்றப்பட்டது -
அந்தக் கஞ்சியை வாங்க, காலையிலிருந்தே கால்கடுக்க நின்றனர் -

தேவையின் பயங்கரம் நினைத்துக் கூட பார்க்க முடியாதபடி இருந்தது -
ஆனாலும், அவள் அடுப்பிலே விறகுகளைத் தள்ளி தன்னம்பிக்கையோடு எரித்துக் கொண்டிருந்தாள் -

தாது வருடத்தின் ஆறாவது வாரத்தில் தான் கலெக்டர் கஞ்சித்தொட்டியைத் திறக்க முன் வந்தார்,
ஒரு வகையில் அதற்கு குஞ்சரத்தின் செயல்தான் காரணம் -

நகரில் மூன்று இடங்களில் அரசு கஞ்சித்தொட்டியைத் திறந்தது.

நகரின் மொத்தப் பசிக்கு குஞ்சரத்தின் அடுப்பே கதி என இருந்த நிலைமை கொஞ்சம் மாறியது -

ஆனாலும், தாது வருடம் முழுவதும் குஞ்சரத்தின் அடுப்பு எரிந்தது -

பதிமூன்று மாத காலம் எரிந்த அடுப்பு -
எல்லாவற்றையும் எரித்தது -
அவள் தனது வாழ்க்கை முழுவதும் சேமித்த சொத்துக்களை உலையிலே போட்டாள் -
கல் பதித்த தங்க நகைகள் -
வெள்ளி நகைகள் -
முத்துக்கள் - காசு மாலை - மோதிரம் - ஒட்டியாணம், தோடு-ஜிமிக்கி எல்லாம் கஞ்சியாய் மாறி தட்டேந்தி நின்ற நீண்ட வரிசைக்கு பசிப்பிணி தீர்த்தது.

தொடர்ந்து எரிந்த அடுப்பின் புகையடித்து கரி படிந்திருந்த இரண்டு பெரிய வீடுகளும் விற்கப்பட்டு கஞ்சியாய் மாறியது.

தாது கழிந்த இரண்டாவது மாதத்தில் அவள் அடுப்பு அணைந்தது -

அவள் ஓட்டு வீட்டிற்குள் படுத்த படுக்கையானான் -

யாரைப் பற்றிப் பேச -
யாரிடமும் எதுவும் இல்லாத கொடும் பஞ்சத்தில் கூட குஞ்சத்தைப் பற்றி ஊரெல்லாம் பேசினார்கள் -

அவள் முகம் மலர்ந்திருந்தது -
தாய்மையின் பூரிப்போடு அவள் படுத்துக்கிடந்தாள் -

ஒரு நாள் மலர்ந்த முகத்தோடு -
விடைபெற்றாள் அந்தத் தெய்வத்தாய் -
தங்கள் வீட்டில் நடந்த சாவாகத்தான் நகரவாசிகள் பலரும் பார்த்தார்கள் அவர் இறப்பை.

சின்ன ஓட்டு வீட்டிலிருந்து குஞ்சரத்தாயை வெளியில் தூக்கிய பொழுது வடக்கு ஆவணி வீதி -
கொள்ள முடியாத அளவு கூட்டம் நின்றது -

கோவில் திருவிழாக்களைத் தவிர மதுரையில் மனிதர்கள் கூடிய மிகப்பெரிய கூட்டம் இது தான் -
என்று கலெக்டர் தனது குறிப்பிலே எழுதி வைத்தார் -

நாடி நரம்புகளில் ஓடுவதெல்லாம் அவளின் ரத்தமென நினைத்து நினைவுகளின் வழியே கட்டிப்புரண்டு கதறியழுதனர். -
அவள், நாதியற்றவர்களின் பெரும் தெய்வமானாள் -
எண்ணிலடங்கா மனிதக் கூட்டம் அந்தத் தெய்வத்தை நாள்தோறும் வணங்கிச் செல்ல வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள உள் சந்துக்கு அலையலையாய் வந்து கொண்டிருந்தது -

அவளுக்கு எதைப் படையலிட்டு வணங்குவது எனத் தெரியாமல் தவித்த பொழுது -

சலங்கையைப் படையிலிட்டு வணங்கி தெய்வமாக்கிக் கொண்டனர் -

மாமதுரை மக்கள் .

- படித்ததில் கண் கலங்கியது.

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

புராணம் என்றால் பூரிப்பு; வரலாறு என்றால் வக்கரிப்பா?



புராணம் என்றால் பூரிப்பு; வரலாறு என்றால் வக்கரிப்பா?
---------------------------------------------------------------------
வரலாற்றைச் சொன்னால் வாரிச் சுருட்டி எழுகிறார்கள். புராணங்களைச் சொன்னால் புளகாங்கிதம் அடைகிறார்கள்.

காரணம், வரலாறு காகப்பட்டர் கூட்டத்தின் காழ்ப்புக் காரிருள் முகத்தை வெளிச்சத்துக்கே கொண்டு வந்து விடும். புராணங்களை சொன்னால் அவர்களின் புனை சுருட்டுகள் புரோகித கூட்டத்தின் பூர்சுவா தனம் கெட்டிப்படுத்தப்பட்டு விடும். சிறுபான்மைக் கூட்டம் பெரும்பான்மை இனத்தை பக்திப் போதை ஏற்றிக் கீழே உருட்டி விடும்.

வரலாறு, கைபர் கணவாயை நினைவுபடுத்தும்; வேத புராணக் குப்பைகளோ பிரம்மாவின் முகத்தில் பிறந்தவன் பிராமணன், காலில் பிறந்தவன் சூத்திரன் அதற்கும் கீழே பஞ்சமன் என்று நம்ப வைத்து விடும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், எழுச்சித் தமிழர் மானமிகு தொல்.திருமாவளவன் அண்ணல் அம்பேத்கர் நினைவுநாளில் (அந்நாளை தேர்ந்தெடுத்துதானே பார்ப்பனப் பாசிசக் கும்பல் 450 ஆண்டு வரலாறு படைத்த முசுலிம் மக்களின் வழிபாட்டுத் தலத்தை அயோத்தியில் இடித்து துவம்சம் செய்தது) எழுச்சி தமிழர் சில வரலாற்று உண்மைகளை முன் வைத்தார். (6.12.2017)

அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமன் கோயில் இருந்தது. அதனை இடித்து விட்டுத்தான் அங்கே பாபர், மசூதியைக் கட்டினார் என்று வரலாற்றைத் திரித்துக் கூறி பாபர் மசூதியை இடித்துத் தள்ளினார்கள். அவ்விடத்தில் ராமன் கோயிலை கட்டியே தீருவோம் என்று காவிகள் களேபரம் செய்கின்றனர்.

காவிகளின் அந்தக் கண்ணோட்டத்தை பார்க்கப் போனால் எத்தனை எத்தனையோ புத்தர் கோயில்களை இடித்து விட்டு இந்துக் கடவுள்களின் கோயில்கள் கட்டப் பட்டுள்ளனவே - அந்த இடங்களில் எல்லாம் மீண்டும் பவுத்த கோயில்களை கட்ட சம்மதிப்பார்களா? என்ற திருமா. அவர்களின் கேள்வியில் அறிவுப்பூர்வமான சுணை இருக்கிறது.

ஏதோ பொத்தாம் பொதுவில் அவர் சொல்லவில்லை. வரலாற்று உண்மைகளை ஒளிவுமறைவில்லாமல் உடைத்துக் காட்டினார்.

சங்பரிவார் கூட்டத்திற்கு அறிவு நாணயம் இருக்குமே யானால் திருமா அவர்களின் கூற்றை ஆதாரங்களுடன் மறுக்க முன்வரவேண்டும். மாறாக பந்தை அடிக்க முடிய வில்லையென்றால் காலை அடிக்கும் கெட்ட விளையாட்டை (FOUL GAME) ஆட முயற்சிப்பது அவர்களின் அடவாடித் தனத்தையும், ஆற்றாமையையும்தான் வெளிப்படுத்தும்.

1. திருப்பதி ஏழுமலையான் கோயில் ஒரு காலத்தில் புத்தக் கோயிலாக இருந்தது என்று பேசினார் எழுச்சித் தமிழர். அதில் என்ன தவறு இருக்கிறது?

மகாராட்டிரா மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் கே.ஜமனாதாஸ் F.R.C.S. என்பவர் TIRUPATHI BALAJI WAS A BUDDHIST SHRINE    எனும் ஆய்வு நூலை எழுதினாரே.

Lord vengatrama presiding deity.on the famous tirumalai hills. Popular known as balaji of tirupathi, is important vaishnava Shrine of south india. The natives of lord venkatrama has always peen a matter of dispute for centuries.

Some consider him-as Vishnu, skanda, siva. some as sakti same as skanda and some as harithra. In fact it was on old Buddhist shrine murthi itself being Buddhist; and it was taken over for bramine worship during the general fall off Buddhism he was a god of tribal Buddhist and was vaishanavized by saint and lattu sankarithzed and brahmanized by pandits in his present form.

The weapons on him are not original but provided at a lattu date . how this was brought about is captained with all historical and archeological evidence. Cult’s of vitiated of pandharpur jagannath of puri. Ayappa on sabarimala etc. which were originally Buddhists are directed and many other Buddhist shrines which was buried are destroy and the history.of india in general and south India in particular from seventh to tenth century during the period of fall in Buddhist and rise of Brahmin tirupathi in Tread.

“திருப்பதி பாலாஜி என்று அறியப்பட்ட வெங்கட்ராமன் முதன்மையான கடவுளாக உள்ளது. தென்னிந்தியாவில் திருமலை கோயில் முக்கிய வைணவக் கோயிலாக உள்ளது.  பல நூற்றாண்டுகளாக வெங்கட்ராமக்கடவுளின் இருப்பிடம் என்பது எப்போதுமே பிரச்சினைக்குரியதாக இருந்து வந்துள்ளது. சிலர் விஷ்ணுவாகவும், கந்தனாகவும், சிவனாகவும், இன்னும் சிலர் கந்தனைப்போல் சக்தியாகவும், சிலர் ஹரித்ராவாகவும் கூறிவருகின்றனர்.

உண்மையில் இது ஒரு பழைமைவாய்ந்த புத்தர் கோயிலாக (புத்த விகாரமாக) இருந்துள்ளது. கருவறைக்குள் உள்ள சிலையும் புத்தரின் சிலையாகும். பல இடங்களைப்போலவே புத்த மத வீழ்ச்சியைத் தொடர்ந்து பார்ப்பனர்களின் வழிபாட்டு முறைக்கு மாற்றப்பட்டது. பழங்குடியினரின் புத்தராக இருந்த சிலை பார்ப்பனர்களால் வைணவமாக்கப்பட்டது. லட்டு பிரசாதமாக்கப்பட்டது. கருவறையில்   தற்போதும் உள்ள சிலையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் பண்டிதர்களால் பார்ப்பன மயமாக்கப்பட்டது. தற்போது சிலையில் பொருத்தப் பட்டுள்ள கருவிகள் யாவும் தொடக்கத்தில் இருந்தவை கிடையாது. லட்டு அறிமுக காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டது. இவை யாவும் வரலாற்றுத்துறை, தொல்லியல்துறை ஆய்வுகளின் ஆதாரங்களின்மூலமாக  வெளியாகியுள்ளன.

பூரியில் உள்ள பந்தர்பூர் ஜெகனாதன், சபரிமலை அய்யப்பன் உள்ளிட்ட பல இடங்களிலும் இதேபோன்றே வழிபாட்டு முறைகள் உருவாக்கப்பட்டன. இவை யாவும் தொடக்கத்தில் புத்த விகாரங்களாகவே இருந்தன.
இந்தியாவின் வரலாற்றில் பல இடங்களிலும் புத்த விகாரங்கள் இடிக்கப்பட்டு புதைக்கப்பட்டன. தென்னிந் தியாவில் குறிப்பாக ஏழாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் புத்த மதம் வீழ்ச்சியடைந்ததும், திட்டமிட்டு திருப்பதியில் பார்ப்பனியம் கோலோச்சத் தொடங்கியது” என்கிறார் டாக்டர் ஜமனாதாஸ்.

வைணவக் கோயில்களில் மொட்டை அடிப்பது கிடையாது.  ஆனால் திருப்பதி ஏழுமலையான் என்னும் வைணவக் கோயிலில் பக்தர்கள் மொட்டை அடித்துக் கொள்கின்றனர். மொட்டையாக இருப்பது என்பது புத்த மார்க்கத்தைச் சார்ந்ததே!

இந்த நூலுக்கு இந்தப் பூணூல் கூட்டம் மறுப்பு எழுதியதுண்டா?

2. அய்யப்பன் கோயில் புத்தர் கோயில் என்று சொன்னார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர். ஏதோ மேம்போக்கில் கூறவில்லை. மயிலை சீனி வேங்கடசாமி அவர்களால் எழுதப்பட்ட ஆய்வு நூலான “பவுத்தமும் தமிழும்” எனும் நூலில் இதுகுறித்து ஆய்வு செய்து நிறுவி உள்ளாரே!

சாஸ்தா என்பது புத்தருக்குரிய பெயர். ‘அமரகோசம்‘, ‘நாமலிங்கானு சாசனம்‘ நிகண்டுகள் இதற்கு ஆதாரம். சாத்தனார் என்னும் பெயர் புத்த மார்க்கத்தை சேர்ந்தவர்கள் சூட்டிக் கொள்வதாகும். சீத்தலைச் சாத்தனார், பெருந்தலைச் சாத்தனார், மோசி சீத்தனார், வடமவணக்கன் பெருஞ்சாத்தனார், ஒக்கூர் மாசாத்தனார், கருவூர்க் கந்தப்பிள்ளை சாத்தனார் முதலிய சங்க காலப் புலவர்களை எடுத்துக் காட்டியுள்ள மயிலை சீனிவேங்கடசாமி, புத்தருக்கும், புத்தக மார்க்கத்தைச் சேர்ந்தவருக்கும் மத்தியில் இருந்த பெயர் அய்யப்பனுக்கு வந்தது எப்படி? சாஸ்தா என்று அய்யப்பனை அழைத்ததன் மர்மம் என்ன?

அதே போல சாத்தான், சாஸ்தா என்றால் அதன் பொருள் அய்யன், அல்லது அய்யனார் என்பதாகும். குரு, ஆசான் என்பது விளக்கம். புத்தருக்கு உள்ள இந்தப் பெயரையே அய்யனார், அய்யப்பன். இந்துக்கடவுள்களாக உருட்டல் புரட்டல் வேலையில் இறங்கினர்.

இன்னொரு கட்டத்தில் இந்த சாத்தனாரை, திருமாலுக்கும் சிவனுக்கும் பிறந்த பிள்ளை என்றே கூறிவிட்டனர்.

திருநாவுக்கரசரான அப்பர் பாட்டாகவே பாடித் தீர்த்து விட்டார்.

பார்த்தனுக் கருளும் வைத்தார்

பரம்பரை பாட வைத்தார்
சாத்தனை மகனா வைத்தார்
சாமுண்டி சாமவேதங்
கூத்தொடு பாட வைத்தார்
கோமள ராமதிய நல்ல
தீர்த்தமுஞ் சடைமேல் வைத்தார்
திருப்பயற்றூரனாரே!
என்பது தேவாரப்பாடல்.

அய்யப்பனை அரிகரபுத்திரன் என்று சொல்லுவதை இத்தோடு இணைத்துப் பார்த்தால் இவர்களின் தில்லுமுல்லு திருகுதாளம், தாளம் தப்பாமலேயே தெரிந்து விடும்.

புத்தரை, மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று மாய்மாலம் செய்ததெல்லாம் இப்படித்தான்.

புத்தரின் அறமொழிகளில் (பஞ்சசீலங்கள்) முக்கியமானது பிறன் மனைவியை விரும்பாதே என்பது. இந்தக் கொள்கைக்கு எதிர்ப்பாக கிருஷ்ண அவதாரக் கதை ஆரிய பார்ப்பனர்களால் இட்டுக்கட்டி பரப்பப்பட்டது. காமவிளையாட்டுகளை மக்களிடையே அதிகரிக்கச் செய்வதே கிருஷ்ண லீலா கதையின் நோக்கம். புத்தர் கொள்கையின் செல்வாக்கை ஒழிக்கவே கிருஷ்ணாவதாரக் கதை இட்டுக் கட்டப்பட்டது. (என்சைக்கிளோபீடியா பிரிட்டானிக்கா தொகுதி -4)

3. விநாயகர் என்பதும் புத்தரை உருமாற்றியதுதான் என்ற கருத்தையும் திருமாவளவன் முன்வைத்தார். புத்தருக்கு, விநாயகன் என்றப் பெயரும் உண்டு. அந்த அடிப்படையில் பிள்ளையாரை, விநாயகர் ஆக்கி அரசமரத்தடியின் கீழ் வைத்து விட்டனர்.

அரசமரம் என்பது புத்தர் அரசர் என்ற அடிப்படையில் அமைந்தது. அரச மரத்தடியில் இருந்த விநாயகரான புத்தரை இந்துக் கடவுளாக உருமாற்றி விநாயகராக்கிய (பிள்ளையார்) சூழ்ச்சி இந்த அடிப்படையில்தான்.

பழைய சைவ சமயத்தில் விநாயகர் கிடையாது. கி.பி. 6ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு விநாயகர் வணக்கம் சைவ சமயத்தில் புதிதாக புகுத்தப்பட்டது என்று தமிழ்க்கடல் மறைமலை அடிகள் கூறுவதும் கவனிக்கத்தக்கதாகும்.

காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோயில், புத்தரின் தாராதேவி கோயில் என்றும், ஏகாம்பரேஸ்வரர் கோயில் புத்தர் கோயில் என்றும், பவுத்தமும் தமிழும் என்ற நூலில், ஆய்வின்  அடிப்படையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

பூரி ஜெகந்நாதர் ஆலயம் பழங்காலத்தில் புத்தர் கோயிலாக இருந்தது என்று சொல்லி இருப்பவர் யார் தெரியுமா? அமெரிக்கா வரை சென்று இந்து மதத்தை பரப்பி வந்த சாட்சாத் விவேகானந்தர்தான் (நூல்: “இந்தியத் தாயின் பணிக்கு இளைஞர்களே வருக”)

நாகப்பட்டினத்தில் புத்தர் தெய்வம் பசும் பொன் னால் செய்யப்பட்டிருந்தது. அதனை ஆலிநாடர் (திருமங் கையாழ்வார்) களவில் கொண்டு வந்து திருவரங்கத்து மதில் செய்வித்தார். அவர் அச்சமயத்தில் கடவுள் தன்மையராய் விளங்கினார். அவரைக் குற்றம் கூறுநர் ஒருவரும் இலர். (சைவ சித்தாந்த கழகம் - சென்னை வெளியிட்டுள்ள ‘தஞ்சைவாணன், கோவை’, பக்கம் -7, வரிகள் 26 - 30)

திருடியவனுக்கு தெய்வாம்ச முத்திரையைக் குத்தும் இந்த சாமர்த்தியம் பார்ப்பனருக்கே உரித்தான தனிக்குத்தகையே!.

புத்தருக்கு தருமராசர் என்ற பெயரும் உண்டு. பிற்காலத்தில் இந்த தருமராசன் கோயிலை மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரமான தருமராசன் கோயிலாக உரு மாற்றினார்கள்.

இன்னொரு வகையில் புத்தர் சிலைகளை சின்னத்தனமாக கேவலமாகப் பேசும் பொருளாக்கிய கொடுமையும் உண்டு.

தஞ்சாவூர் மாவட்டம், திருவலஞ்சுழியில் உள்ள புத்தர் சிலையை கடன்காரச் செட்டி என்று ஏகடியம் செய்ய வைத்தனர்.

திருஞானசம்பந்தன் என்னும் தேவாரம் பாடிய சிறுவன் பவுத்தர்களையும், சமணர்களையும் எவ்வளவு கேவலமாகப் பாடியிருக்கிறான்.

மண்ணகத்திலும் வானிலும் எங்குமாய்த்
திண்ணகத் திருவால வாயருள்
பெண்ணகத் தெழில் சாக்கியர் பேயமன்
பெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே
என்பது தேவாரப்பாடல்.

பவுத்தர், சமணர் வீட்டு அழகிய பெண்களை கற்பழிக்க மதுரையில் வீற்றிருக்கும் சிவனே அருள்புரிவாயாக  என்பதுதான் இப்பாடலின் கருத்தாகும்.

16 வயதில் அற்பாயுளில் செத்துப்போன சிறுவனான, பிஞ்சில் பழுத்த இந்தப் பார்ப்பனன் இவ்வளவுக் கீழ்த்தரமாக பாடினான் என்றால் அவனின் வாரிசுகளான இந்த இந்துத்துவக் காவிக் கும்பல் என்னதான் பேசமாட்டார்கள் - எந்தக் கேவலத்தின் எல்லைக்குத்தான் செல்லமாட்டார்கள்!

எண்ணாயிரம் சமணர்களை கழுவில் ஏற்றிய கோயில் திருவிழா, பிரம்மோற்சவமாக  ஆண்டுதோறும் மதுரையில் நடந்து கொண்டுதானே உள்ளது.

திருநீறு இல்லாத நெற்றியைச் சுடு, சிவாலயம் இல்லாத ஊரைக் கொளுத்து என்று உபநிடத் திருமொழி கூறுவதை சமஸ்கிருதத்தில் கரை கண்ட மறைமலை அடிகள் கூறுகிறார். (அறிவுரைக் கொத்து - பக்கம் 17)
இந்த லட்சணத்தில் அன்பே சிவமாம்!

புஷ்யமித்திரன் என்னும் பெயர் தாங்கிய அரசன் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் பல்லாயிரக்கணக்கான ஆராமங்களை (புத்த பிக்குகளின் இடம் வனங்களில் அமைந்ததால் ஆராமம் என்று அழைக்கப்பட்டது) அழித்ததோடு பல்லாயிரக்கணக்கான புத்த பிக்குகளையும் கொன்றொழித்தான்.

சுதன்யா என்னும் மன்னன் சேது முதல் இமயம் வரை உள்ள குடிகளில் யாரேனும் ஒருவன் பவுத்தர்களைக் கொலை செய்யாமல் இருந்து வருவதாகத் தெரிந்தால் அக்கணமே அவனைக் கொன்று விடும்படி கட்டளையிட்டிருந்ததாக ‘சங்க விஜயம்’ என்னும் நூல் கூறுகிறது.

இந்தப் பின்னணிகளைத் தெரிந்து கொண்டால் எழுச்சித் தமிழரின் தலைக்கு விலை பேசும் சக்திகளின் யோக்கியதை எத்தகையது என்பது விளங்கும். சங்பரிவார்கள் படுகொலையை பகிரங்கமாக செய்யும் பான்மையின் யோக்கியதை புலப்படும்.

தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் உருவாக்கி யுள்ள சனாதன எதிர்ப்பு பார்ப்பனீய ஒழிப்பு என்னும் ஊழிக்கனல், அத்தகைய சக்திகளை ஊதித்தள்ளிவிடும் எச்சரிக்கை! எச்சரிக்கை!!.

சனி, 9 டிசம்பர், 2017

காஞ்சியில் அழிக்கப்பட்ட (மறைக்கப்பட்ட) பௌத்த அடையாளங்கள்.


ஸ்டாலின் தி

காஞ்சியில் அழிக்கப்பட்ட (மறைக்கப்பட்ட) பௌத்த அடையாளங்கள்.

மு.நீலகண்டன் எழுதி "உங்கள் நூலகம்", ஆக 2013 இதழில் வெளிவந்த முக்கிய கட்டுரை.

காஞ்சி “ஆயிரம் கோயில்களின் மாநகரம்” என்று பெயர் பெற்றது. காஞ்சிபுரம் இந்தியாவின் தொன்மையான வரலாற்றுச் சிறப்பு மிக்க நகர்களில் ஒன்றாகும். “நகர்களில் சிறந்தது காஞ்சி” எனக் காளிதாசரும், “கல்வியில் கரையிலாத காஞ்சி” எனத் திருநாவுக்கரசரும் காஞ்சியைப் புகழ்ந்துள்ளனர். பாலாறு, வேகவதி மற்றும் செய்யாறு ஆகிய மூன்று ஆறுகளும் இங்கு ஓடுகின்றன. வடமொழிப் புராணங்களின் கூற்றுப்படி காஞ்சி மாநகரம், இந்தியாவில் உள்ள புண்ணியப் பதிகள் ஏழனுள் ஒன்றாகும். புத்தர் கி.மு. 5-ஆம் நூற்றாண்டில் காஞ்சிக்கு வந்து பௌத்த சமயக் கொள்கையைப் பரவச் செய்தார் என சீன பௌத்தப் பயணி யுவான்சுவாங் குறிப்பிட்டுள்ளார். தமிழ் இலக்கியத்தில் இப்பகுதி “தொண்ட மண்டலம்” என்று குறிப்பிடப்படுகிறது.

சங்க இலக்கியங்களான மணிமேகலை, பெரும் பாணாற்றுப்படை, ஆகியவற்றில் காஞ்சி நகர் குறிப் பிடப்பட்டுள்ளது. இந்நகரம் சிவக்காஞ்சி, விஷ்ணுக் காட்சி, ஜீனக் காஞ்சி, பௌத்தக் காஞ்சி என்ற நான்கு பிரிவுகளாக இருந்தது. இன்று சிவக்காஞ்சி பெரிய காஞ்சிபுரம் ஆகும். விஷ்ணுக் காஞ்சி சின்னக் காஞ்சிபுரம் ஆகும். திருப்பருத்திக்குன்றம் என்ற சிற்றூர் சமணம் வளர்த்த ஜீனக் காஞ்சியாகும். காமாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதியே பௌத்தக் காஞ்சி யாகும். காஞ்சி பௌத்த, சமண, சைவ சமயங்களின் முக்கடல் நகரமாக இருந்துள்ளது. காஞ்சி, பௌத்த சமயத்தின் நிலைக்களமாக இருந்தது. தொன்மைக் காலத்தில் காஞ்சியில் பௌத்தர்கள் அதிகமாக இருந்தனர். ஆனால் தற்போது காஞ்சியில் பௌத்த அடையாளங்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்டுவிட்டது அல்லது மறைக்கப்பட்டுவிட்டது எனலாம். பௌத்தம் தொடர்பான குறியீடுகள், அகழாய்வுக் கண்டுபிடிப்புகள், தமிழ் இலக்கியங்கள், பௌத்த ஆய்வு நூல்களில் திரட்டப் பட்ட தரவுகள் களப்பணியில் பெறப்பட்ட தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் “காஞ்சியில் அழிக்கப் பட்ட (மறைக்கப்பட்ட) பௌத்த அடையாளங்கள்” என்ற தலைப்பில் சிறு ஆய்வு ஒன்று இங்குப் பதிவு செய்யப்படுகிறது.

அசோகரின் பௌத்த ஸ்தூபி:-
கி.பி.ஏழாம் நூற்றாண்டில் (கி.பி.640) காஞ்சிக்கு வந்த சீன பௌத்தப் பயணி யுவான்சுவாங், தனது பயணக் குறிப்பில் காஞ்சியில் கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் அசோகப் பேரரசரால் கட்டப்பட்ட ஸ்தூபிகள் பழுது பட்டுக் கிடந்தன என்றும் இந்நகரில் நூற்றுக்கும் மேற் பட்ட புத்த மடங்கள் இருந்தன, இவற்றில் ஆயிரத்துக்கு மேற்பட்ட புத்த துறவிகள் வாழ்ந்தனர், இவையன்றி எண்பதுக்கு மேற்பட்ட இந்து சமணர் கோயில்களும் இருந்தன என்கிறார்.
தற்போது, காஞ்சியில் நூற்றுக்கு மேற்பட்ட இந்துக் கோயில்கள் உள்ளன. இதில் இந்து ஓதுவார்களும், குருக்களும் பணியாற்றுகிறார்கள். ஆனால் பௌத்த மடங்களோ தூபிகளோ, பௌத்த துறவிகளோ காண முடியவில்லை. அனைத்து பௌத்த அடையாளங்களும் இந்துக்களால் அழிக்கப்பட்டுள்ளன.

காஞ்சியில் புத்தர் கோயில்
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""
கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் சோழநாட்டை அரசாண்ட கிள்ளிவளவன் என்னும் சோழனின் தம்பி இளங்கிள்ளி என்பவன் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை அரசாண்ட காலத்தில் “புத்தருக்குக் கோயில்” ஒன்றைக் கட்டினான் என்று மணிமேகலையினால் அறிகிறோம்.
“பைம் பூம் போதிப் பகவற்கு இயற்றிய
சேதியந்தொழுது தென் மேற்காகத்”
மணிமேகலை-28:174-175
மேலும், காஞ்சியில் “தருமத வனம்” என்னும் தோட்டத்தில் இளங்கிள்ளி ஒரு புத்த பீடிகையை அமைத்து விழாவும் சிறப்பும் செய்தானென்றும் மணிமேகலை கூறுகிறது. ஆனால் இன்று காஞ்சியில் புத்தர் கோயிலும், புத்த பீடிகையும் காண முடியவில்லை. அத்தனையும் அழிக்கப்பட்டுள்ளது.

காஞ்சியில் இராஜ விகாரம்
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
காஞ்சியை அரசாண்ட பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் (கி.பி. 590-629) தான் எழுதிய மத்த விலாசப் பிரகசனம் என்னும் நூலில், காஞ்சியில் பல பௌத்த விகாரங்கள் இருந்தன என்றும் அவ்விகாரங்களுக் கெல்லாம் தலைமையாக இருந்த பெரிய விகாருக்கு “இராஜ விகார்” என்று பெயர் இருந்ததென்றும் கூறுகிறார். இந்த விகாரம் கட்டுவதற்குச் சில மன்னர்கள் உதவி புரிந்து இருப்பர் என்று கருதப்படுகிறது. இருப்பினும், ஆரம்ப காலப் பல்லவ மன்னர்களால் இந்த விகாரம் கட்டியிருக்கக் கூடும் என்று யூகிக்கப்படுகிறது. யுவான்சுவாங் தனது பயணக் குறிப்பில் இந்த விகாரத்தைப்பற்றிச் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த இராஜ விகார் பின்னாளில் அழிக்கப் பட்டுவிட்டது. அதன் அடையாளங்கள் காஞ்சியில் தென்படவில்லை.

காஞ்சியில் அழிக்கப்பட்ட விகார்கள்
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
(1) காஞ்சியில், காமாட்சி அம்மன் கோயில் அருகில் வசந்தத் தோட்டத்தில் சென்னைப் பல்கலைக் கழகத் தொல்லியல் துறையினர் 1969-70ஆம் ஆண்டு நடத்திய அகழாய்வில் பௌத்த விகாரை (விகாரம் - தமிழில்) என்று கருதப்படும் சிதைந்த கட்டடம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. இக்கட்டடத்தில் சுட்ட செங்கற்களும், வட்டவடிவிலான சிறிய ஸ்தூபியின் அடிப்பகுதி ஒன்றும் காணப்பட்டது. பௌத்த ஸ்தூபி அமைப்புடைய கட்டடம் நான்கு வரிசையிலான செங்கற்களைக் கொண் டிருந்தது. கீழ் இரண்டு வரிசை வட்ட வடிவிலும், மேல் வரிசைகள் நீண்ட செவ்வக அமைப்பிலும் இருந்தன. இத்தூபி கி.மு.3-ஆம் நூற்றாண்டுக் காலத்தியதாகக் கணிக்கப்பட்டது. இக்கட்டடத்தின் கீழ்வரிசை 56 X 33 X 8 செ.மீ அளவு செங்கற்களையும், மேல் வரிசை 40 X 18 X 6 செ.மீ செங்கற்களையும் கொண்டதாக இருந்தது. இதன்கீழ் மண் அடுக்கில் “புதலதிச’ என்ற பழந்தமிழ் எழுத்துப் பொறிப்பு (தமிழ் பிராமி) உடைய சாம்பல் நிற மட்கல ஓடு ஒன்று கிடைத்தது. ‘புதலதிச’ என்பது பௌத்தத் துறவியின் பெயராக இருக்கலாம் எனப் பேராசிரியர் டி.வி. மகாலிங்கம் அவர்கள் கூறுகிறார். இந்த எழுத்துப் பொறிப்பு கி.மு.3-ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருப்படுகிறது. காஞ்சியில் பௌத்த விகாரைகள் இருந்துள்ளன. பின்னாளில் அவை அழிக்கப்பட்டன என்பது தெரியவருகிறது.

(2) காஞ்சியில் உள்ள “கச்சபேசுவரர்” கோயில்
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
பூர்வீக புத்தர் கோயில் எனத் தெரிகிறது. இக்கோயிலின் கோபுரத்தில் புத்த உருவங்கள் இன்றும் காணமுடிகிறது. ஒரு சில பகுதிகளில் முன்பு இருந்த புத்த உருவம் தெரியா மலிருக்குமாறு அழிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் கோயிலின் உள் மண்டபத்தின் கல் தூண்களில் புத்தர் உருவம் இருக்கின்றன. இது புத்தர் கோயில் என்பதற்கு மற்றொரு ஆதாரம், இக்கோயில் மேற்குத் திசையில் உள்ள ஏரிக்கு “புத்தேரி” என்றும் அதன் வீதிக்கு “புத்தேரித்தெரு” என்றும் இப்போதும் வழங்கி வருகின்றன. எனவே காஞ்சி கச்சபேசுவரர் கோயில் தொடக்கத்தில் புத்தர் விகாரமாக இருந்திருக்கலாம், தற்போது இந்துக் கோயிலாக மாற்றப்பட்டுள்ளது
காஞ்சியில் “ஏகாம்பரநாதர்” கோயில் உள்ள இடத்தில் ஆதியில் புத்த விகாரம் இருந்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. காரணம் ஏகாம்பரநாதர் கோயிலின் வெளி மதில்சுவரில் சில புத்த உருவங்கள் சிற்பங்களாக அமைக்கப்பட்டிருக்கின்றன. ‘புத்தர் பரிநிர்வாணம்’ அடையும் நிலையில் கற்சிலை ஒன்று கோயில் கிழக்கு மதில் சுவரில் வைத்துக் கட்டப் பட்டிருக்கிறது. இதனை நோக்கும்போது பூர்வீகமாக இங்கிருந்த புத்தவிகாரம் அழிக்கப்பட்டு அக்கற்களைக் கொண்டு மதிற்சுவர் கட்டியிருக்க வேண்டும். அதனால் தான் இந்த புத்த உருவச் சிற்பங்கள் இந்தக் கோயிலின் மதிற்சுவரில் காணமுடிகிறது.

காஞ்சியில் காமாட்சி அம்மன் கோயில், கைலாச நாதர் கோயில், வரதராசபெருமாள் கோயில், கருக்கலில் அமர்ந்தவள் அம்மன் கோயில் போன்ற இடங்களில் புத்த விகார்கள் இருந்ததாகவும், பின்னாளில் அவைகள் அழிக்கப்பட்டன என்றும் திருமதி சி.மீனாட்சி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

காஞ்சியில் மணிமேகலைக் கோயில்
காஞ்சிபுரம், தலைமை மருத்துவ மனையைக் கடந்து தொடர்வண்டி நிலையத்திற்குப் போகும் வழியில் “ஸ்ரீதர்ம ராஜா- திரௌபதி அம்மன்” ஆலயம் ஒன்று உள்ளது. இது முற்காலத்தில் “மணிமேகலைக் கோயிலாக” இருந்தது என்று மரபுவழி நம்பிக்கை ஒன்று நிலவி வருகிறது. தற்போது உள்ள தர்மராஜா - திரௌபதி அம்மன் கோயிலின் முன்பு இருந்த மணிமேகலை, புத்த பிக்குணிகள் சிற்பங்கள் உடைக்கப்பட்டு மூன்று கி.மீ. தூரத்தில் உள்ள நத்தப்பேட்டை ஏரி கரையில் போட்டுவிட்டார்கள் என்று கூறப்படுகிறது. உடைந்து, சிதைவடைந்த சிற்பங்களைத் தவிர்த்து, முழு அளவில் உள்ள மணிமேகலை, புத்த பிக்குணிச் சிற்பங்களை ஏரி கரையில் திறந்த வெளியில் வைத்து இந்து முறைப்படி வணங்கி வருகிறார்கள்.

மேலும், காஞ்சி மாவட்டத்தில், நாவலூர், மாங்காடு, பல்லாவரம், கூவம் போன்ற இடங்களில் புத்தர் (விகாரங்கள்) கோயில்கள் இருந்ததாகவும், அவைகள் அழிக்கப்பட்டு, பிற்காலத்தில் விநாயகர் கோயிலாகவும் தர்மராஜா கோயிலாகவும் மாற்றப் பட்டன எனத் தெரிகிறது என்று மயிலை சீனி.வேங்கட சாமியும், டாக்டர் டி.என்.வாசுதேவராவும் குறிப்பிட்டு உள்ளார்கள்.

காஞ்சி ஆர்ப்பாக்கம் - புத்தப் பள்ளி
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
காஞ்சிபுரம் - உத்தரமேரூர் செல்லும் சாலையில் 13-வது கி.மீ. தொலைவில் பாலாறு மற்றும் செய்யாறு ஆகிய நதிகளுக்கிடையே “ஆர்ப்பாக்கம்” என்ற பூர்வீக கிராமம் உள்ளது. தற்போது இந்தக் கிராமத்தில் உள்ள “ஆதிகேசவப் பெருமாள் கோயில்” முன்னோர் காலத்தில் பௌத்தப் பள்ளியாக இருந்திருக்கவேண்டுமெனக் கூறுகிறார்கள்.
இந்தக் கோயிலின் உள்ளே வெளி வட்டத்தில் ஓர் இடத்தில் நின்ற நிலையில் புத்தர் சிலை ஒன்றைக் காண முடிகிறது. இக்கோயிலின் தெற்குச் சுற்றுச் சுவரை ஒட்டிய “புத்தர் தோட்டம்” (100 ஏக்கர் நிலம் இன்றும் உள்ளது) என்ற இடத்தில் தலை உடைந்த நிலையில் புத்தர் சிலை ஒன்று காணப்படுகிறது. அடுத்து, ஐந்து அடி உயரமும், மூன்று அடி அகலமும் தாமரைப் பீடத்தில் அமர்ந்த நிலையில் இருந்த புத்தர் சிலை 25.11.2003 அன்று மர்ம ஆசாமிகளால் கடத்தப்பட்டுள்ளது. காவல் துறை வழக்கு பதிவு செய்து 10 ஆண்டுக்காலம் ஆகியும் புத்தர் சிலை கண்டுபிடிக்க முடியவில்லை. முன்னோர் காலத்தில் இந்த ஆர்ப்பாக்கம் செல்வாக்குப் பெற்ற பௌத்த பூமியாக விளங்கியது என்று மரபு வழிச் செய்திகள் உண்டு.

திருமதி.சி.மீனாட்சி அவர்களின் கூற்றுப்படி, புத்தர் சிலைகள் உள்ள புத்தப்பள்ளி தோட்டத்தில் தான் இன்றைய ஆதிகேசவப் பெருமாள் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. புத்தப் பள்ளி அழிக்கப்பட்டுள்ளது.

நிறைவாக,
""""""""""""""""""""
காஞ்சிபுரம் மற்றும் அதனைச் சுற்றி யுள்ள பகுதிகளில் பௌத்த சமயம் செல்வாக்குப் பெற்று கி.பி.6-ஆம் நூற்றாண்டு வரையிலும் தொடர்ந்து இருந்தது என்ற தகவல்களை, இலக்கியச் சான்றுகள், தொல்பொருள் சான்றுகள், கல்வெட்டுச் சான்றுகள், வரலாற்றுச் சான்றுகள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. காஞ்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்த விகாரங்கள் இருந்துள்ளன. அதற்கான அடையாளங் களும், புத்தர் சிலைகளும் ஏராளமான அளவில் கிடைத்துள்ளன. காஞ்சிபுரத்தில் புத்தர் கோயில்கள் பல மாற்றங்களுக்கு உள்ளாகிவிட்டன. அவற்றின் அடை யாளங்களும் அழிக்கப்பட்டுவிட்டன.

களப்பிரர்களின் ஆரம்பக்கால ஆட்சியில் அரசு மதமாக செல்வாக்குப் பெற்றிருந்த பௌத்தம், அவர்கள் சமணம் மாறிய பின்பு, பௌத்தம் வீழ்ச்சி அடைய நேர்ந்தது. பௌத்தர்களின் இருப்பிடமான காஞ்சியில் சைவ, வைணவ மதம் செல்வாக்குப் பெற்று ஆதிக்கம் செலுத்தியபோது, பௌத்தமும் அதன் அடையாளங் களும் படிப்படியாக நலிந்து, சிதைந்து, மறைந்தது.

பயன்படுத்திய நூல்கள்
""""""""""""""""""""""""""""""""""""""""""
1. இணையத்தளம்: http :llen. wikipedia/org/ wiki.kancheepuram
2. ஏ.கே.எஸ்.விஜயகுமார் கட்டுரை, “காஞ்சிக் கோயில்களில் உற்சவங்கள்” காஞ்சி மாவட்டக் கலைகள் தொகுதி -மணிவாசகர் பதிப்பகம், சென்னை
3. டாக்டர். மா. இராசமாணிக்கனார், தமிழ்நாட்டு வரலாறு” காவ்யா வெளியீடு, 2008,
4. டாக்டர். க. வெங்கடேசன், “முற்காலத் தமிழ்நாட்டு வரலாறு” வி.சி. பப்ளிகேஷன்ஸ், இராசப்பாளையம்,
5. Prema Nandakumar, Kancheepuram, HINDU PEDIA Website
6. மயிலை சீனி.வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும்
7. C. Meenakshi “Buddhism in south India” south Indian Studies,
8. Indian Archaeology - A review 1969-70-
9. Dr. K. Sivaramalingam, Archaelogical Atlas of the Antique Remains of Buddhism in Tamil Nadu, Institute of Asian studies, Chennai, 1977,
10. T.N. Vasudev Rao, Buddhism in the Tamil country, Annamalai University, 1979
11. நடன காசிநாதன், மா.சந்திரமூர்த்தி காஞ்சிபுரம் மாவட்டத் தடயங்கள்
12 முனைவர் சீதாராம் குருமூர்த்தி, காஞ்சிபுரம் மாவட்டத் தொல்லியல் கையேடு
13. முனைவர் ஜி.ஜான் சாமுவேல், உலகளாவிய தமிழாய்வு ஓர் அறிமுகம். மற்றும்
14. களப்பணியில் சேகரிக்கப்பட்ட தகவல்கள்.

(நன்றி:தோழர். கி.நடராசன்)


செவ்வாய், 5 டிசம்பர், 2017

தெரியாத உண்மைகள் சித்திரை1,ஆடி1,ஐப்பசி1,தை1...



தெரியாத உண்மைகள் சித்திரை1,ஆடி1,ஐப்பசி1,தை1...
--------------------------------------------
எல்லாம் விழா வாக கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்...
நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியல வச்சிருக்காங்க....!
Ok. Lets look at the science behind it...
"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு" னு school பசங்களுக்கு சொல்லிதறோம்....
என்னைக்காச்சும் ஒரு #compass வச்சு சூரியன் உதிக்குறப்போ check பன்னி இருக்கோமா?
கண்டிப்பாக இல்ல...
--------------------------------------------
நம்ம education system அ design பன்னின வெள்ளகாரன், நம்ம கிட்ட இருந்த அறிவியல் அ அழிச்சிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்திட்டு போயிறுக்கான்றதுக்கு இதுவும் ஒரு சான்று....
--------------------------------------------
ஆமாங்க சூரியன் ஒரு குறிப்பிட்ட நாள்ல மட்டும் தான் exact ah கிழக்கே உதிக்கும்....
அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு extreme point la, மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்...
அப்பறம் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...
இப்படி correct ஆ கிழக்கு ல ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் correct ஆ கிழக்குக்கு வர ஆகிற time., Correct ah "1 year"...!!!!
--------------------------------------------
சரி... இதுக்கும் தமிழ் மாததுக்கும் என்ன சம்பந்தம் னு தானே யோசிக்குறீங்க....
--------------------------------------------
சூரியன் correct ah கிழக்கு ல start ஆகுற நாள் தான் #சித்திரை1.., புத்தாண்டு...!!! (In science it is called Equinox)
அப்புறம் extreme வடகிழக்கு point தான் #ஆடி1 .... (solstice)
மறுபடியும் கிழக்குக்கு வரது #ஐப்பசி1 (equinox)
Going to extreme தென்கிழக்கு is #தை1 (solistice)
--------------------------------------------
இந்த வானியல் மாற்றங்கள், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களை நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனணவரும் அறியும் வகையில் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...
--------------------------------------------
சித்திரை (equinox) - புத்தாண்டு
ஆடி (summer solstice) - ஆடிப்பிறப்பு
ஐப்பசி (equinox)- தீபாவளி
தை (winter solstice) - பொங்கல்
--------------------------------------------
நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதன் அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்...
--------------------------------------------
நமது முன்னோர்கள்.....
"தன்னிகரற்ற"
மாபெரும் அறிவாளிகள்
மிகவும் மகத்தானவர்கள்

ஞாயிறு, 3 டிசம்பர், 2017

சித்தூரில் அலாவுதீன் கில்ஜி ’ராணி பத்மினி’யின் அழகைக் கண்டு மயங்கிய கண்ணாடிகள் உடைந்தன!


சித்தூரில் அலாவுதீன் கில்ஜி ’ராணி பத்மினி’யின் அழகைக் கண்டு மயங்கிய கண்ணாடிகள் உடைந்தன!

முகமதியர் காலத்தில் வாழ்ந்த இந்திய மகாராணிகளில், என்றும் குன்றாப் புகழுடைய பேரழகிகள் வரிசையில் சித்தூர் ராணி பத்மினிக்கு இப்போதும் தனி இடம் உண்டு. சித்தூர் ராணி பத்மினியின் அழகில் மயங்கிய அலாவுதீன் கில்ஜி, அவளைக் கவர நினைத்து சித்தூரின் மீது படையெடுத்து கோட்டையை முற்றுகை இட்ட நிலையில் ராணி பத்மினி, தனது அந்தப்புரத்துப் பெண்கள் அனைவருடனும் கில்ஜியின் கண் முன்னே நெருப்பில் பாய்ந்து உயிரைப் போக்கிக் கொண்டாள். தடுக்க வந்த கில்ஜியை நோக்கி, ‘ இது தான் இந்தியப் பெண் உனக்களிக்கும் பரிசு என்று கூறியவாறு அவள் நெருப்பில் இறங்கியதாக வரலாறு கூறுகிறது.
ராணி பத்மினியை ‘பத்மாவதி’ என்றும் குறிப்பிடுகிறார்கள். சமீபத்தில் ‘ஜோதா அக்பர்’ ‘பாஜிராவ் மஸ்தானி’ உள்ளிட்ட சரித்திரத் திரைப்படங்களை எடுத்து வெற்றி கண்ட பாலிவுட் இயக்குனாரான சஞ்சய் லீலா பன்சாலி ராணி பத்மினியின் வாழ்க்கையையும் தீபிகா படுகோன், சித்தூர் ராணி பத்மினியாக நடிக்க ‘பத்மாவதி’ என்ற பெயரில் திரைப்படமாக்க முயன்று வருகிறார். அதற்கான படப்பிடிப்புகள் சித்தூர் கோட்டைப் பகுதியில் நடைபெற்று வந்த நிலையில் ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் சிலர் தொடர்ந்து படப்பிடிப்புக்கு இடைஞ்சல் செய்து வருகின்றனர்.
ராஜபுத்திர பெண்ணான சித்தூர் ராணியின் கதையை திரைப்படமாக்கி அவளது புகழுக்கு களங்கம் விளைவிக்கப் பார்க்கிறார்கள் பாலிவுட் சினிமாக்காரர்கள் என்பதே கிளர்ச்சியாளர்களின் வாதம். ராணியின் பெருமையை உலகறியச் செய்யவே இந்தப் படத்தை உருவாக்குவதாக இயக்குனர் தரப்பு அவர்களிடம் போதுமான விளக்கம் அளித்தும் அவர்கள் கேட்பதாக இல்லை.
தொடர்ந்து பத்மாவதி திரைப்படத்தின் படப்பிடிப்புகளில் கலவரங்களை நிகழ்த்திக் கொண்டிருந்த ராஜபுத்திர வன்முறைக் கும்பல் அதன் உச்ச கட்டமாக ‘ பல்லாண்டுகளுக்கு முன்பாக ராணியின் அழகை டெல்லி சுல்தான் கண்டதாகக் கருதப்பட்ட அலங்காரமான கண்ணாடிகளை உடைத்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கு காரணம் கர்னி சேனா எனப்படும் ராஜபுத்திர கலக அமைப்பே என காவல்துறையினர் கருதுகின்றனர். ஏனெனில் படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல் திட்டமிட்டு கலகங்களை நடத்தி வரும் இந்த அமைப்பினர் முன்னரே படப்பிடிப்புக் குழுவினருக்குச் சொந்தமான விலையுயர்ந்த கேமிராக்கள், மற்றும் தொழில்நுட்பக் கருவிகளை சேதப்படுத்தி வலிந்து படப்பிடிப்பை நிறுத்தும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளனர், என்பதும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ராணி பத்மாவதி நெருப்பில் பாய்ந்து இறந்ததன் பின் நெடுநாட்களுக்குப் பின்னரே இந்தக் கண்ணாடிகள் அடையாளம் காணப்பட்டனவாம். காலத்தால் அழியாத அற்புதமான இந்த கலைப்படைப்புகள் கிளர்ச்சியாளர்களுக்கு பலியாகின என்று சித்தூர் கோட்டை வட்டாரத்தில் கூறப்படுகிறது. நன்றி தினமணி.


ராணி பத்மாவதி- சித்தூர்- 14ஆம் நூற்றாண்டின் இந்திய கிளியோபாட்ரா
யார் இந்த பத்மாவதி ?
சித்தூரின்(Chittor) மன்னன் ராவல் ரத்தன் சிங்கின் இரண்டாவது மனைவி தான் இந்த ராணி பத்மாவதி (சுயம்வரத்தில் வென்று திருமணம் முடித்தார்).
அறிவில் அழகில், வீரத்தில் இவளுக்கு நிகர் இவரே..
அலாவுதீன் கில்ஜி இந்த ராணி பத்மாவதியின் அழகை கேள்விப்பட்டு சித்தூரை கைப்பற்ற புறப்பட்டு வருகிறான்.
ராணி பத்மாவதியை காட்டினாலே தான் சென்று விடுவதாக தூது அனுப்புகிறான். தூதை ஏற்று அரண்மனைக்கு அழைக்கப்படும் அலாவுதீனுக்கு கண்ணாடி(Mirror) மூலம் ராணி பத்மாவதி காண்பிக்கப்படுகிறாள்..
பத்மாவதியின் அழகில் மயங்கிய அலாவுதீன் திரும்ப செல்லும் வழியில் துணைக்கு வந்த மன்னன் ரத்தன் சிங்கை கைது செய்து ராணி பத்மாவதியை அனுப்பினால் மன்னனை விடுவிப்பதாக அறிவிக்கிறான்.
பல்லக்கில் வருவதாக ராணி பத்மாவதி செய்தி அனுப்புகிறார்.
ஒரு பல்லக்கில் 2 வீரர்கள் உள்ளே, 4 வீரர்கள் வெளியில் தூக்கியும் மொத்தம் 150பல்லக்கு செல்கிறது.
அலாவுதீனின் பாசறையை அடைந்தவுடன் 900 வீரர்கள் கண் இமைக்கும் நேரத்தில் போரிட்டு மன்னனை மீட்கின்றனர்.
பிறகு ஏற்பட்ட பெரும் போரில் ராணி பத்மாவதி மற்றும் அணைத்து ராஜ்புத் பெண்களும் போரில் தோற்ப்போம் என்று தெரிந்தவுடன் தீயில் இறங்கி தங்களை மாய்த்துக் கொள்கின்றனர்.
அலாவுதீன் மற்றும் இஸ்லாமிய படைகள் சித்தூர் கோட்டையில் நுழைந்த போது ஒரு பெண்கள் கூட உயிருடன் இல்லை.
அனைவரும் தீயில் இறங்கி தங்கள் உயரை மாய்த்துக்கொண்டனர்...
உயிரை விட மானமே பொிது என்று எதிரியின் கையில் சிக்காமல் இருக்க இந்திய ராஜ்புட் பெண்கள் தீயில் ஏறி உயிர்துறக்கும் நிகழ்வே சதி எனப்படுகிறது.
ராணி பத்மாவதியின் உண்மை வரலாறு இதுவே...

ராணி பத்மினி ( Rani Padmini) அல்லது பத்மாவதி ( Padmavati)



ராணி பத்மினி ( Rani Padmini) அல்லது பத்மாவதி ( Padmavati , இறப்பு: 1303)
இந்தியாவின் சித்தோர்கார் இராச்சியத்தின் இராணியும், மன்னர்
ராவல் ரத்தன்சென்னின் மனைவியும், சிங்கால் என்ற இடத்தில் வாழ்ந்த கந்தர்வேசன் என்ற அரசனின் மகளும் ஆவார்.

வரலாறு

வட இந்தியாவில் முகமதியப் பேரரசு உருவாகி வளர்ந்த காலத்தில் சித்தூர் ராணி பத்மினியின் அழகின் புகழ் பிரபலமாகப் பரவியது. ராணி பத்மினியின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்ட சுல்தான் அலாவுதீன் கில்சி அவளைத் தன்
அந்தப்புரத்திற்கு அனுப்புமாறு கடிதம் அனுப்பினான். அதன் காரணமாக சித்தூர் மன்னனுக்கும் சுல்தானுக்கும் நடந்த மாபெரும் போரில் சித்தூர் முற்றுகையிடப்பட்டது.
எதிர்த்துப் போரிட முடியாத சூழ்நிலையில் ராஜபுத்திரர்கள் தங்கள் வாளால் தங்களையே வெட்டிக் கொண்டு இறந்தனர். அந்தப்புரப் பெண்கள் கூட்டாகத் தீக்குளித்து இறந்தனர்.
ஆண்கள் அனைவரும் இறந்த பின் நகரத்தினுள் நுழைந்த சுல்தான் தெருவில் இருந்து எழுந்த மாபெரும் நெருப்பைக் கண்டான். சித்தூர் ராணி பத்மினியின் தலைமையில் ஏராளம் பெண்கள் அந்த நெருப்பைச் சுற்றி வந்ததைக் கண்ட சுல்தான் அவர்கள் நோக்கத்தைப் புரிந்து கொண்டு தடுக்கச் சென்றான். அதற்கு ராணி, ’இதுதான் ராஜபுத்திரப் பெண் உனக்குக் கொடுக்கும் வரவேற்பு’ என்று கூறி
கூட்டுத் தீக்குளித்து உயிர் துறந்தாள்.
74,500 க்கு தரப்பட்ட மதிப்பு
கில்ஜியிடமிருந்து தங்கள் கற்பைக் காக்க அன்று 74,500 பெண்கள் அந்தத் தீயில் வீழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
சுவாமி விவேகானந்தர் காலத்தில் கடிதம் எழுதும் போது, கடிதத்தை மூடி அதன்மீது 741/2 என்று எழுதிவிட்டால், அக்கடிதத்தை அனுமதியின்றி திறக்கும் நபர் 74,500 பெண்களைக் கொன்ற பாவத்திற்கு ஆளாகிறான் என இருந்த நடைமுறை, சித்தூர் ராணி பத்மினிக்கும் அவருடன் உயிர் துறந்த பெண்களுக்கும் சமுதாயம் அளித்த உயரிய மதிப்பைக் காட்டுகிறது.
இன்னமும் பாடல்களில் எதிரிகளின் கைகளில் அகப்பட விரும்பாத இப்பெண்களின் புகழ் பாடப்படுகிறது.
ரக்சா பந்தன்
ராணி பத்மினி மன்னர் உமாயுனைச் சகோதரனாக உதவி கோரி, ராக்கி கயிறு அனுப்பியதாகவும், உமாயுன் வரும் முன்பே கில்ஜியின் முற்றுகை முற்றி, பத்மினி இறந்ததாகவும் கூறப்பெறுகிறது. பத்மினி அனுப்பிய ராக்கி கயிறே பின்நாளில் ரக்சா பந்தன் என்ற விழாவாக வட இந்தியாவில் கொண்டாடப் பெறுகிறது.
திரைப்படம்
சித்தூர் ராணி பத்மினி என்ற பெயரில் 1963 ஆம் ஆண்டு தமிழில் திரைப்படம் வெளிவந்தது.

சனி, 2 டிசம்பர், 2017

திருவண்ணாமலை தீபம் உண்மை என்ன தெரியுமா?



திருவண்ணாமலை தீபம் உண்மை என்ன தெரியுமா?

- மஞ்சை வசந்தன்

திருவண்ணாமலை இமயமலையைவிட பழைமையான மலை. அது ஓர் எரிமலை. அந்த எரிமலை வெடித்து விண்முட்ட நெருப்பைக் கக்கியது. எரிமலை என்ற விவரம் அறியாத அக்கால மக்கள், கடவுள் (சிவன்) ஜோதியாக வெளிப்பட்டுவிட்டார் என்று வணங்கினர்.

மலையின் உச்சியில் எரிமலை நெருப்பு வெடித்து வெளிப்பட்டதால் அதன் நினைவாக மலை உச்சியில் பெரிய தீபம் ஆண்டுதோறும் ஏற்றுகிறார்கள். இதில் கடவுள் தன்மை ஏதும் இல்லை. இது ஓர் இயற்கை நிகழ்வு. காரணம் புரியாமையே கடவுள் நம்பிக்கைக்கும், பக்திக்கும் காரணம் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

இந்த உண்மையை விளக்கி 20 ஆண்டுகளுக்கு முன் ‘விடுதலை’ நாளேட்டில் கட்டுரை எழுதினேன். அக்கட்டுரையில் திருவண்ணாமலையை ஆய்வு செய்தால் அது ஓர் எரிமலை என்பது விளங்கும். எரிமலை கக்கிய மண் மலைமீது இருக்கிறது என்பதும் தெரியும் என்றேன். நிலவியல் ஆய்வாளர் ஆய்வு செய்து அது எரிமலை என்பதை அறிவியல்பூர்வமாக உறுதி செய்ததை ‘தினமணி’ நாளேடு செய்தியாக வெளியிட்டது.

பகுத்தறிவாளர்களின் ஆய்வுகள் பொய்ப்பதில்லை என்பதை இது உறுதி செய்தது. இதுசார்ந்த எனது முழு கட்டுரை விரைவில் முகநூல் மற்றும் பிளாக்ஸ்பாட்டில் வெளிவரும்!

அண்மையில் இந்தோனேசியாவில், பாலித் தீவில் ‘ஆகங்’ என்ற எரிமலை வெடித்து 2300 அடி உயரத்திற்கு நெருப்பும் புகையும் வெளிப்பட்டதை இங்கு ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மையை அறியலாம். இந்தியாவில் எரிமலை மிக அரிது. அதனால் இந்த உண்மை புரியாத மக்கள், அக்காலத்தில் அதை கடவுள் வெளிப்பாடு என்று கருதினர்.

எனவே, திருவண்ணாமலை ஓர் எரிமலை. அதில் சிவன் வெளிப்பாடு என்பது கற்பனை. எனவே, மூடநம்பிக்கையில் முட்டி மோதி அங்கு சென்று அலையாது, பகுத்தறிவோடு வாழுங்கள்.
இச்செய்தியைப் பலருக்கும் பகிருங்கள், பரப்புங்கள்!

வியாழன், 23 நவம்பர், 2017

கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவில் வரலாறு.......



கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவில் வரலாறு.......

சாத்தூர் தாலுகாவை சார்ந்த சிற்றூராக இருந்த கோவில்பட்டி இன்று தூத்துக்குடி மாவட்டத்தின் வருவாய் தரும் தொழில்சார்ந்த நகரமாக விளங்குகிறது. இவ்வூருக்கு கோயிற்புரி, திருப்பூவனம், பொன்மலை, கோயில்புரி என்றெல்லாம் பெயர் விளங்குகிறது.சிற்றூராக இருந்துவந்த இவ்வூரானது இன்று ஒரு சிறப்பு நிலைநகராட்சியாகத் திகழ்கிறது. பல வகைகளிலும் சிறப்புப் பெற்ற பல ஊர்கள் செண்பகவல்லியம்மன் கோவில் திருத்தலத்தை  சுற்றிலும் அமைந்துள்ளது தனிச்சிறப்பான ஒன்றாகும்.

சுமார் 20 கி.மீ. தொலைவில் இருக்கின்ற வெம்பக்கோட்டையை அரசாண்டசெண்பகமன்னன், களாக்காட்டினை வெட்டித் திருத்தி கோயிலும், ஊரும் எழுப்பித்தான் என்று இக்கோயில்தல வரலாறு சொல்கிறது. இவ்வூரிலிருந்து சுமார் 5கி.மீ. தொலைவில் இருக்கின்ற மந்தித்தோப்புசங்கராபதி திருமடத்தில் உள்ள செப்புப்பட்டையம் மூலமாக இவ்வூரானது கலி 4131க்குமுற்பட்டது என்று அறியமுடிகிறது. அதேபோல் இத்திருக்கோயிலை உள்ள முடையான் என்னும் அரசன் புதுப்பித்த ஆண்டை சகரனாண்டு 1100 என்று கோயில்புரி புராணத்தின்மூலமாக அறிய முடிகிறது.

புராணச்சிறப்பு........ ஆயிரத்து தொளாயிரத்து முப்பத்து மூன்று முப்பத்து நாலாம்ஆண்டுகளில் இத் திருக்கோயில் பலிபீடம், கொடிமரம்,நந்திதேவர் ஆகியவை பிரதிஷ்டைசெய்யப்பட்டதற்கான கல்வெட்டுக்கள், தூண்கள் மற்றும் வாயில்கள் நிறுவப்பட்டதற்கான கல்வெட்டுக்களும் ஆங்காங்கே காணப்படுகின்றன. இத்திருக்கோயில் முழுவதும் கல்வெட்டுக்களினால் கட்டப்பட்டுள்ளதால் இரண்டாம் நரசிம்மவர்மன் (கி.பி.700)காலத்திற்கு பிற்ப்பட்டதாகவும் கருதப்படுகிறது.

மேலும் சிவஞானயோகிகள் இயற்றிய கோயில்புரி புராணத்தில் இப்புராண வரலாறுகள் தொகுத்துக் கூறப்படுகின்றன. 18படலங்கள் கொண்ட இந்நூலில் முதல் 16 படலங்களில் இவ்வரலாறுகள் கூறப்பட்டுள்ளன.

அகத்தியர் வந்த வரலாறு:-

சிவனாரின் மனம் மகிழதவமியற்றிய பார்வதி தேவிக்கு இறைவன் காட்சி கொடுத்துதிருமணம் முடிக்க வந்து சேர்ந்தார். ஈடிணையில்லா ஈசன்திருமணம் காண யாவரும் வந்து ஒருங்கே கையிலைமலையில் கூடியதால் உலகின் வடபுலம் தாழ்ந்து தென்புலம்உயர்ந்தது. செண்பக வல்லியம்மன் திருக்கோயில் தலவரலாறு: அகத்தியரை இறைவன் பணித்தார். அவ்வண்ணம் தென்புலத்திசையில் உள்ள பொன்மலை என்னும் இவ்விடத்தில் களாமரக்காட்டில் லிங்கத் திருமேனியாய் எழுந்தருளியுள்ள ஈசன்பூவனநாதரை வழிபட்டு விட்டு தவமியற்றி வந்த முனிவர்களைக் கண்டார்.

அம் முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சிவலிங்கத்திற்கு வடகிழக்கில் பொன்மலையில் தட்டியவுடன் அருவி ஒன்று ஓடிவரலாயிற்று .அதுவே அகத்தியர் தீர்த்தம் என்று அழைக்கப்பட்டு பின்னர் அதுவேஇத்திருக்கோயிலின் திருக்குளமாகவும் காட்சியளிக்கின்றது.

சங்கன் ,பதுமன் சந்தேகம் தீர்த்தது:- முன்னொரு காலத்தில் சங்கன், பதுமன் என்னும் இரு பாம்புத் தலைவர்களுக்கு சிவன், திருமால் இருவரில் யார் பெரியவர் என்றஐயம் ஏற்பட்டது. ஐயம் தெளிவு பெற களாக் காட்டிடையே லிங்கவடிவில் எழுந்தருளிஇருந்த ஈசனைப் பூவனப் பூக்களால் அர்ச்சித்து வழிபட்டனர். அவர்களுக்கு முன் தோன்றியஇறைவன் இன்றுமுதல் இச்சிவலிங்கம் பூவனநாதர் என்றுஅழைக்கப்படுவார்.புன்னைக் காவலில் (சங்கரன்கோவில்) உங்கள் ஐயம்தீர்க்க சிவன் பெரியவன், திருமால் பெரியவளாகி (எம் மனைவி)காட்சியளிப்போம் என்றுரைத்தார்.

செண்பக வேந்தன் வரலாறு....... வெள்ளிமலை சிவக்குழுவில்  சிறந்தவனான வாமனன் பெண்மயக்கமுற்று தன்நிலை தாழ்ந்து கண்மு நந்திதேவரின் சபத்திற்கு ஆளாகிவெம்பக்கோட்டையில் செண்பகமன்னன் என்னும் பெயர்பெற்றுவிளங்கினான். இவரின் கனவில் இறைவன் தோன்றியகூறியவாறு பொன்மலைக் காட்டிலிருந்து களாக் காட்டினைவெட்டி லிங்கமாக காட்சியளித்த பூவனநாதருக்குத் தனித்திருக்கோயில் அமைத்தான். அருவிக்கு மேற்கே பிள்ளையார்கோவிலும், அருவிக்குளம், அருவிக்கு தென்மேற்கே வடக்குப்பார்த்தப் பிள்ளையார், அதன் தென்மேற்கே அம்பாளுக்குத் தனிக்கோயிலும் காமிகா ஆகமமுறைப்படி அமைத்தான். செண்பகமன்னன் அமைத்ததால் அவன் பெயரையே தனது பெயராகக்கொண்டு அம்பாள் செண்பகவல்லி அருள்பாலித்து வருகிறாள்.

மூர்த்தியின் சிறப்பு...... இத் திருக்கோவிலில் வீற்றிருக்கும் அன்னை செண்பகவல்லி 7அடி உயரத்தில் நின்ற நிலையில் எழில் கொஞ்சும் வடிவில் காட்சித் தருகின்றாள். இப்பகுதி வாழ் மக்கள் வேண்டியதை அருள்கின்ற வேண்டுதல் தெய்வமாக காட்சி தருகிறாள்.தன்னை சரணடைந்த மக்கள் துயர்நீக்கும் தெய்வமாகவும், அவர்களின் வேண்டுதல்களைஎல்லாம் வாரி வழங்கும் வள்ளலாகவும் காட்சித்தருகிறாள்.

கடனாகவும், அம்பாளின் பெயரையே தங்கள் குழந்தைகளுக்குச்சூட்டி வாழ்கின்ற நிலையும் இப்பகுதியில் அதிகமாக காணப்படுகின்றது. எல்லாருக்கும்அருள்பாலிக்கின்ற செண்பகவல்லியம்மன் மீதுகோவில்பட்டி நீலமணியும் இன்னும் பாடல்கள்பாடியுள்ளனர். கோவில்பட்டி நீலமணியோசெண்பகவல்லி அருள்மாலை, செண்பகவல்லி நூற்றந்தாதி என்னும் இரண்டு நுல்களைஎழுதியுள்ளார். இதில் செண்பகவல்லி அருள்மாலை 5ம் பதிப்பு வரை வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முடிசார்ந்தமன்னரும்முடிவில்
பிடிசாம்பல்என்பதைமறவாதிருமனமே

திராவி இயக்க போராளி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்



திராவி இயக்க போராளி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

"தேவதாசி' முறை நம் நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்தது. இந்த முறை கோயில் பணிகளுக்காக ஏற்படுத்தப்பட்டதாகக் கூறினாலும் உண்மையில் இந்தப் பெண்களை கோயில்களை நிர்வகிக்கும் மேல் சாதியினரும், செல்வந்தர் மற்றும் அரசர்களும் பாலியல் இச்சைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளவே இருந்து வந்தது.
இந்தப் பெண்கள் தேவரடியார் என்று அழைக்கப்பட்டனர். அதாவது தேவர் (கடவுள்) + அடியாள். பின்னர் "தேவடியாள்''
கொச்சைச் சொல்லால் அழைக்கப்பட்டனர்.


தேவதாசி முறையில் ஒரு பெண்ணுக்குப் பொட்டுக் கட்டி விடுதல் என்பது பல்வேறு சடங்குகளைக் கொண்டு நிகழ்ந்தது.இவர்களுக்கு நடத்தப்படும் சடங்குகள் பெரும்பாலும் பிராமணர்களின் திருமணச் சடங்குகளை ஒத்திருந்தன. இளம் தேவதாசிப் பெண் பருவம் அடையும் முன்பே, கடவுளுக்குத் திருமணம் செய்து வைக்கப்படுகிறாள். அப்பெண்ணுக்கும் கடவுளுக்கும் திருமணம் முடித்து வைக்கும் சடங்குகளைக் கோயில் குருக்கள் (பிராமணர்) நடத்தி வைப்பார். அப்போது கடவுளின் சார்பில் அவரே தேவதாசி கழுத்தில் தாலி கட்டுவார். இதுவே பொட்டுக்கட்டுதல் என்று அழைக்கப்பட்டது.
அடுத்ததாக அப்பெண் பருவம் அடைந்த உடன் அப்பெண்ணுக்குச் சடங்கு செய்தல் என்ற நிகழ்ச்சி விமரிசையாக நடத்தப்படும். உள்ளூர் நிலப்பிரபுக்களும்,கோயில் அறங்காவலர்களும் இந்த நிழ்ச்சிக்கான அனைத்துப் பொருளுதவியும் வழங்குவர். இந்த முக்கிய சடங்கின் மூலம் அந்தப்பெண் கடவுளுக்கு அடிமையானவள் ஆகிறாள். அதாவது "தேவரடியாள்'' ஆகிவிட்டார். அப்பெண் சுதந்திரமானவளாகிவிட்டாள் என்று பொருள். அதாவதுதிருமணம் செய்துகொள்ளாமலேயே தாம் விரும்பும் பாலியல் துணைவர் ஒருவரைத் தேர்வு செய்யும் உரிமை அப்பெண்ணுக்கு வழங்கப்படுகிறது. அதாவது இத்தகைய பாலியல் துணைவர்கள் பெரும்பாலும் பொருள் வசதி படைத்த நிலப்பிரபுக்களும், ஜமீன்தார்களும் கோயில் அறங்காவலர்களும் ஆவர். இவர்கள் பெரும்பாலும் பிராமணர்களாகவும் உயர்சாதி இந்துக்களாகவும் இருப்பர். இப்போது புரியும் இவர்களெல்லாம் ஏன் கோயிலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வந்தனர் என்று.

 தேவதாசிகள் கடவுளுக்கு மனைவி, இவர்களுக்கு ஆசை நாயகிகள்.
இத்தகைய தேவதாசிப் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் வேறு எந்தத்தொழிலும் ஈடுபடக்கூடாது. பெண் குழந்தைகளை மீண்டும் தேவதாசியாக்குவதன் மூலமே அப்பெண்கோயில் வருமானத்தைப் பெற முடியும். தேவதாசி முறை அழிந்துவிடாமல் பாதுகாக்க இப்படி ஒரு சட்டம். தேவதாசிகளுக்குப் பிறக்கும் ஆண்கள் மேளக்காரர்களாகவும், நாயனக்காரர்களாகவும், நட்டுவனர்களாகவும் செயல்படுவர்.
தமிழ்நாட்டில் தஞ்சை, திருநெல்வேலி, மதுரை, புதுக்கோட்டை பகுதிகளில் தேவதாசி முறை அதிகமாகப் பின்பற்றப்பட்டு வந்தது.இதில் தஞ்சை மாவட்டம் முன்னணியில் நின்றது.
முதலாம் இராசராசன் (கி.பி.985 – 1014) பல ஊர்களிலிருந்து 400 நடனப் பெண்களை அழைத்துவந்து தஞ்சை பெரிய கோயிலில் நியமித்தான். தஞ்சை பெரிய கோயிலைச்சுற்றி தனி வீதிகளே இவர்களுக்காக இருந்தன என்பதைக் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.
தமிழர்களின் பாரம்பரிய இசையையும், நடனத்தையும் பேணிகாத்து வந்த இசைவேளாளர்கள், ஆண்களின் பாலியல் இச்சைகளுக்காகவே உருவாக்கப்பட்ட தளைகளிலிருந்து விடுபட முடியாமல் திணறிவந்தனர். இந்த அடிமை முறையிலிருந்து எவரும் விடுபடாமல் தடுத்திட தஞ்சை மாவட்ட சனாதனிகளும் நிலப்பிரபுக்களும், மடாதிபதிகளும் தேவதாசி முறையைப் பேணிப் பாதுகாத்து வந்தனர்

அத்தகைய ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம் திருவாரூரில் வறுமையில் வாழ்ந்த வந்த இசைவேளாளர் குடும்பம் ஒன்றில் கிருஷ்ணசாமி சின்னம்மாள் இணையருக்கு 1883 ஆம் ஆண்டு பிறந்தார் இராமாமிர்தம்.
வறுமையின் காரணமாக, கிருஷ்ணசாமி மனைவியையும் நான்கு வயது மகள் இராமாமிர்தத்தையும் தனியே விட்டுப் பிரிந்தார். அடுத்த ஆண்டு தாயார் சின்னம்மாள் குழந்தை இராமாமிர்தம் தூங்கும்போது ரூ.10/– க்கும் ஒரு பழைய புடவைக்கும் ஒரு தேவதாசியிடம் விற்று கணவனைத் தேடிச் சென்னைக்குப் புறப்பட்டார்.

இராமாமிர்தம் தாசியிடம் வளர்ந்தார். நன்கு படித்து தமிழ் தெலுங்கு மற்றும் சமசுகிருதம் மொழிகளில் தேர்ச்சி பெற்றார். நடனத்திலும் சிறந்து விளங்கினார்.
7ஆவது வயதில் தாசி குல வழக்கப்படி இராமாமிர்தத்துக்குத் தாசித் தொழிலுக்கு முன்னோட்டமாக "சலங்கை பூசை'' செய்யப்பட்டது. பருவமடைந்தப்பின் பொட்டுக்கட்டி தேவதாசி யாக்கப்படுவாள். அவள் யாரையும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. 13 ஆவது வயதில் பருவமடைந்தார். 17 ஆவது வயதில் இராமாமிர்தத்துக்குக் கோயிலில் பொட்டுகட்ட வளர்ப்புத்தாய் ஆச்சிக்கண்ணு அம்மாள் முடிவு செய்து, அதற்கு அனுமதிக் கேட்டுக் கோயில் பஞ்சாயத்திடம் மனு செய்தார்.

இராமாமிர்தம் தாசி வளர்த்த பெண்ணாக இருந்ததாலும் வெளியூரைச் சேர்ந்தவர் என்பதால் கோயிலில் பொட்டுக்கட்ட அனுமதிக்க கூடாது என ஏற்கனவே கோயிலில் உள்ள தாசிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். உள்ளூர் தாசிகளின் உரிமைப் பிரச்சனை எழுப்பியதால் ஆச்சிக்கண்ணு அம்மாளின் கனவு தகர்ந்த போயிற்று. இராமாமிர்தத்துக்கோ அளவு கடந்த மகிழ்ச்சி.
ஆனால் ஆச்சிக்கண்ணு அம்மாள் இராமாமிர்தத்துக்கு 65 வயது தனவந்தர் ஒருவரைத் திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்தார். இராமாமிர்தம் மறுக்கவே, அன்றிலிருந்து அவரை வெறுக்க ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில் சலங்கை பூஜை செய்துகொண்ட இராமாமிர்தம் துணிந்து தடையை மீறித் தனக்கு இசை கற்றுத் தந்த ஆசிரியர் சுயம்புப்பிள்ளையை திருமணம் செய்து வாழ முடிவு செய்தார்.
தேவதாசி முறை கட்டுப்பாட்டை உடைத்து வெளியே வந்த முதல் பெண் என்பதோடல்லாமல், இவரின் திருமணம் சீர்திருத்தத் திருமணமாக எந்தச் சடங்குகளும் இல்லாமல். ஒரு கோயிலில் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் பிரிவதில்லை என்று உறுதிமொழி எடுத்து வாழத் தொடங்கினர்.

 இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தனர்.
கடவுளின் பெயரால் ஒரு சமூகம் மட்டும் இழிவு வாழ்க்கையை மேற்கொள்ளவேண்டும் என்ற நியதியைத் தகர்ப்பதே தனது வாழ்நாள் இலட்சியம் என முடிவெடுத்து வாழத் தொடங்கினார் இராமாமிர்தம். அவரை அவரின் உறவினர்கள் மட்டுமின்றி தேவதாசிகளில் பலரும் எதிர்த்தனர். இருப்பினும் மனம் தளராது இக்கொடுமைக்கு எதிராகப் போராடினார்.
1919 ஆம் ஆண்டு காந்தி காங்கிரசுக் கட்சிக்கு தலைமை ஏற்றபோது, பெண்கள் பலர் அக்கட்சியில் சேர்ந்து பணியாற்றினர். இராமாமிர்தம் தன்னைக் காங்கிரசுக் கட்சியில் இணைத்துக் கொண்டார். அதற்கு முக்கிய காரணம் காந்தி தேவதாசி முறைக்கு எதிராகப் பேசியதோடு தேவதாசிகளை "வழுக்கி விழுந்த சகோதரிகள்' என்று அன்புடன் அழைத்தார்.
அந்தக் காலத்தில் காங்கிரசுக் கட்சியில் பெண் பேச்சாளர்கள் கிடையாது. இராமாமிர்தம் காங்கிரசுக் கட்சியின் முதல் பெண் பேச்சாளராகத் திகழ்ந்தார். அதனால் பொது மக்களிடமும், காங்கிரசுப் பிரமுகர்களிடமும் மிகுந்த மரியாதையும் பெற்று விளங்கினார்.
காந்தி தேவதாசி முறை ஒழிப்பை ஆதரித்து இராமாமிர்தம் அம்மையாருக்குக் கடிதம் எழுதினார். அம்மையார் நீண்ட காலம் அக்கடிதத்தைப் போற்றிப் பாதுகாத்துவந்தார்.

1925 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரசுக் கட்சி மாநாட்டில் "வகுப்புரிமை' தீர்மானத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள மறுத்ததால், பெரியார் பலருடன் காங்கிரசுக் கட்சியிலிருந்து வெளியேறினார். இராமமாமிர்தம் அம்மையாரும் பெரியாருடன் காங்கிரசுக் கட்சியிலிருந்து வெளியேறினார். பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
சுயமரியாதை திருமணம், விதவை மறுமணம், பால்ய விவாகம் எதிர்ப்பு, சாதி மறுப்புத் திருமணம், தேவதாசி முறை ஒழிப்பு, இந்தி மொழி எதிர்ப்பு, பெண்ணுரிமை என சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்யப் பொதுக்கூட்டங்களையும் மாநாடுகளையும் பயன்படுத்திக்கொண்டார்.


1925 ஆம் ஆண்டு மாயவரத்தில் தேவதாசி முறைக்கு எதிராக மாநாடு ஒன்றினை அம்மையார் அவர்கள் நடத்தினார். அம்மாநாட்டில் தந்தை பெரியார் திரு.வி.க., எஸ். இராமநாதன் மற்றும் பல தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.
தேவதாசி முறை ஒழிப்புக்குச் சி.பி. இராமசாமி அய்யர், சத்திய மூர்த்தி போன்ற பிரமுகர்கள் எதிராக செயல்பட்டனர். தந்தை பெரியார் குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களைக் கோயிலுக்கு நேர்ந்துவிடும் வழக்கத்தைச் சாடினார். கோயில்களில் விபச்சாரத்துக்குத் துணை போகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

1944 ஆம் ஆண்டு நீதிக்கட்சியின் சேலம் மாநாட்டில் "தென் இந்திய நல உரிமைச் சங்கம்' என்ற பெயரில் இருந்த நீதிக்கட்சிக்குத் "திராவிடர் கழகம்'' என்று பெயர் சூட்டப்பட்டது. அம்மையார் திராவிடக் கழகத்தில் தந்தை பெரியாரோடு இணைந்து செயல்பட்டார்.

1949 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா திராவிடக் கழகத்திலிருந்து பிரிந்து தி.மு.க.வைத் தோற்றுவித்தபோது அம்மையார் தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டார்.

இராமாமிர்தம் அம்மையார் 1962 ஆம் ஆண்டு சூன் திங்கள் 27 ஆம் நாள் தனது 79 ஆவது வயதில் மாயவரத்தில் முடிவெய்தினார். தி.க. சார்பில் சித்தகாடு இராமையாவும், தி.மு.க. சார்பில் நாவலர் நெடுஞ்செழியனும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இளமை முதல் இறக்கும் வரை பொதுவாழ்விற்காக தன்னை அர்பணித்துக் கொண்ட அந்த அம்மையாரை நினைவில் ஏந்துவோம்

சனி, 18 நவம்பர், 2017

ரேக்ளா வண்டிப் பந்தயம் என்பது, திருவிழாக் காலங்களில் தமிழகத்தின் கிராமப்புரங்களில் நடைபெறும் காளை மாட்டுவண்டிப் பந்தயம்.


கலாச்சார பதிவு!

*தகவல் களஞ்சியம்!*
*===================*

ரேக்ளா வண்டிப் பந்தயம் என்பது, திருவிழாக் காலங்களில் தமிழகத்தின் கிராமப்புரங்களில் நடைபெறும் காளை மாட்டுவண்டிப் பந்தயம்.

*தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களிலும், கொங்கு நாட்டிலும் இந்த வகைப் பந்தயங்கள் நடைபெறுகின்றன.*

*உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளிலும் இதுபோன்ற ரேக்ளா வண்டிப் பந்தயங்கள் பரவலாக நடத்தப்படுகின்றன.*

*பெரும்பாலும் இவ்வகை போட்டிகளில் காளை மாடுகள் ஈடுபடுத்தப்படுகின்றன.*

*நீலகிரி மாவட்டப் பகுதிகளில் எருமைக் கடாவையும் பந்தயங்களில் ஈடுபடுத்துகின்றனர்*

*'ரேக்ளா,*
*=========*

*ரேக்ளா என்பது ஒருவர் மட்டும் அமரக்கூடிய ஒருவகை மாட்டு வண்டி அகும். இது பந்தயத்தை கருத்தில் கொண்டே உருவாக்கப்படும் சிறிய வகை மாட்டு வண்டி ஆகும்.*

*இதன் சக்கரங்கள் சிறிய அளவிலும் வேகமாக சுழலக்கூடிய வகையிலும் வடிவமைக்கப் படுகின்றன.*

*போட்டியாளர்கள் சிவகங்கை, இராமநாதபுரம், ஈரோடு, கரூர், கோயம்புத்தூர், மதுரை, தஞ்சாவூர், திண்டுக்கல், தேனி , திருச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து உழவர்கள் தங்கள் ரேக்ளா வண்டிகளுடனும் காளைகளுடனும் பந்தயங்களில் கலந்து கொள்கின்றனர்.*

*பந்தயம் நடைபெறும் குறிப்பிட்ட கிராமத்தையோ நகரையோச் சேர்ந்த பஞ்சாயத்து அமைப்புகள் இந்த ரேக்ளா வண்டிப் பந்தயத்தை நடத்துகின்றன.*

*சில இடங்களில்*
*தனியார் அமைப்புகளும் இந்தப் போட்டியை நடத்துவதுண்டு.*

*பந்தையக் காளைகள்*
*===================*

*பந்தயத்தில் ஈடுபடும் காளைகளின் உயரம், திறன், பலம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு இவற்றை நான்கு பிரிவுகளாக வகைப்படுத்துகின்றனர்*:

*#பெரிய மாடு*

*#நடுத்தர மாடு*

*கரிச்சான் மாடு,*

*பூஞ்சிட்டு மாடு*

*பந்தய தூரம் மாடுகளின் வகைகளை வைத்தே முடிவுசெய்யப்படுகின்றது தமிழகத்தின் அய்யம்பாளையம் என்ற ஊரில் நடக்கும் பந்தயத்தில் பெரிய மாடு 15 கி.மீ தூரமும், நடுத்தரம் 12 கி.மீ தூரமும், கரிச்சான் 10கி.மீ தூரமும், பூஞ்சிட்டு 07 கி.மீ தூரமும் ஓட வேண்டும் என்று தீர்மானித்துள்ளனர்.*

*காளைகளின்*
*பரிசு பெறும் திறன்!*
*=====================*

*ரேக்ளா வண்டிப் பந்தயத்திற்கு தேர்வாகும் ஓர் இணை காளைகள் 25 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் இந்திய ரூபாய் வரை விற்கப்படுகின்றன.*

*கொங்கு நாட்டு உழவர்கள் தங்கள் காளைகள் வெற்றிப் பெறுவதை பெருமையாக நினைக்கின்றனர்.*

*இப்போட்டியில் ஈடுபடும் மாடுகளுக்கு உணவாக இஞ்சி, எலுமிச்சை, கருப்பட்டி, பேரீச்சை, வெங்காயம் ஆகியவற்றை வெந்நிரிற் பிசைந்து கவளம் கவளமாக ஊட்டுகின்றனர்.*

*வேகமாக ஓடுவதில் காளைகளுக்கு இணையாக வேறு எந்த காளைகளும் இல்லை என்பது பரவலான கருத்தாகும். கொங்கு நாட்டில் தற்போது காங்கேயம், மூலனூர்,  வெள்ளக்கோவில் , சிவகிரி, கரூ‌ர் ஆகிய பகுதிகளில் மட்டுமே இந்த இன காளைகள் வளர்க்கப்படுகின்றன.*

*காங்கேயம் காளைகளுக்கு போட்டியாக தற்போது பந்தயத்தில்  'லம்பாடி' இன காளைகளையும்  ஈடுபடுத்துகிறார்கள்*

*ஆனால்*

*காங்கேயம் இன காளைகளே பெரும்பாலும் பரிசுகளைப் பெருகின்றன.*

*பரிசு பெறும் காளைக்கு ஒரு சவரன், அரை சவரன்,  தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்படுகின்றன.*