சனி, 26 மே, 2018

யானை கட்டி போர் அடித்தான் தமிழன்..! திப்பு சுல்தான் யானையை வைத்து என்ன செய்தான் தெரியுமா..?!

யானை கட்டி போர் அடித்தான் தமிழன்..! திப்பு சுல்தான் யானையை வைத்து என்ன செய்தான் தெரியுமா..?!



யானை கட்டி போர் அடித்தான் தமிழன்..! திப்பு சுல்தான் யானையை வைத்து என்ன செய்தான் தெரியுமா..?!

வெடி மருந்து அரைக்கும் அரவைக் கல்லைப் பார்த்திருக்கிறீர்களா….?
18-ஆம் நுாற்றாண்டில், மைசூர் மன்னரிடம் சேனாதிபதியாக இருந்தார், ஹைதர் அலி. அப்போது தான், சித்ர துர்கா கோட்டையின் மீது பல முறை போர் தொடுத்து இறுதியில் 1779-ஆம் ஆண்டு கைப்பற்றினார்.
ஐந்தாம் மடகரி நாயகாவின் காலத்திற்குப் பிறகு, ஹைதர் அலியின் ஆளுகைக்குள் வந்தது சித்ர துா்கா கோட்டை. ஹைதர் அலியின் காலத்திற்குப் பிறகு, அவரது மகன் திப்பு சுல்தானின் வசம் வந்தது.
திப்பு சுல்தான், பாதுகாப்பு கருதி, பல ரகசியப் பாதைகளை அமைத்துக் கொண்டார். இரும்புக் கோட்டை எனப்படும் இந்த வலிமையான கோட்டை, அவருக்கு பல விதங்களிலும் மிக உதவியாக இருந்தது.
1500 ஏக்கர் பரப்பளவில் இருந்த இந்தக் கோட்டையில், திப்புவின் ராணுவத்திற்கு தேவையான தளவாடங்களை இங்கே உற்பத்தி செய்து கொண்டார்கள்.
துப்பாக்கி தொழிற்சாலையையும், கோட்டையின் ஒரு பகுதியில் செயல் படுத்தினார் திப்பு. துப்பாக்கிகளும் பீரங்கிகளும், மிகச் சிறந்த, செயல்பாட்டாளர்களைக் கொண்டு உருவாக்கப் பட்டன.
அத்துடன் நிற்கவில்லை திப்பு சுல்தான். இங்கு தயாரிக்கப் பட்ட, பீரங்கிகளுக்கும், துப்பாக்கிகளுக்கும், மற்றும் வெடி குண்டுகளுக்கும் தேவையான கரி மருந்தினை, கோட்டையின் மேல் பகுதியில் தயாரிக்க ஏற்பாடு செய்தார்.
சித்ர துர்கா கோட்டையின் ஹை லைட்டான இடம், சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்ததும், இந்த இடம் தான். இதனை மிக வித்தியாசமாக வடிவமைத்திருக்கிறார்கள்.
பெரிய கல் மேடையினைச் சுற்றி, இந்த வெடி மருந்து அரைக்கும் கல் மேடையினை உருவாக்கி இருக்கிறார்கள். யானைகளைக் கொண்டு மட்டுமே, இந்தக் கற்களைச் சுழற்றி, வெடி மருந்தினை அரைக்க இயலும்.
இந்த இடத்தை இப்போது ஆய்வு செய்தாலும், எப்படி இந்த மாதரியெல்லாம் செய்ய முடிந்தது? என்று வியப்பாக எண்ண மட்டுமே தோன்றுகிறது!

இந்தோனேசியா நாட்டின் தனி இந்து மத தீவாக திகழும் பாலி தீவு!


இந்தோனேசியா நாட்டின் தனி இந்து மத தீவாக திகழும் பாலி தீவு!
---------------------------
உலக முஸ்லீம் மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள இந்தோனேசியாவின் பாலி தீவில் இந்துக்கள் மட்டும் 4.22 மில்லியன் (93%) உள்ளனர்.
 இந்தோனேசியாவில் பரவிக் கிடந்த இந்து மதத்தை இஸ்லாம் அழித்தொழித்த காலகட்டத்தில் தனியொரு மாமன்னனாக இந்து மன்னன் மஜாபகித் பாலித் தீவில் இஸ்லாத்தை புக விடாமல் விரட்டியடித்துள்ளார்.
 இந்தியாவின் பெரும்பான்மை மதமாக இந்து மதத்தினர் இருந்தே தனி இந்துமத கொள்கை கொண்ட ஆட்சியை நடத்த முடியாத நிலையில் முஸ்லீம் நாடான இந்தோனேசியாவின் பாலி தீவில் இது சாத்தியமானது ஆச்சரியத்தின் உச்சகட்டமே!


இவர்களைப் பற்றி சில!!!
 1. நெய்பி நாள் (Nyepi day) என்ற ஒரு நாளில் ஒட்டுமொத்த தீவே வருடத்திற்கு ஒரு நாள் மெளன விரதத்தை ஆண்டுதோறும் கடைப்பிடிக்கின்றது. அன்று Ngurah Rai International Airport முதல் கொண்டு 6 AM to 6 PM வரை மூடப்படுகின்றது. வாகனம், பொழுதுபோக்கு, தொலைக்காட்சி என அனைத்தும் தடை செய்யப்பட்டு மக்கள் ஆழ்ந்த சிந்தனையுடன் தியானத்தை மேற்கொள்ள வேண்டும்.
 இவர்களை போல இரைச்சல் மிகுந்த நம் நாட்டில் இதை கடைபிடிக்க முடியுமா?
 2. பாலித் தீவிற்கு இந்து மதக் கலாச்சாரம் இந்தியாவிலிருந்து சென்றுள்ளது. இந்து மதத்தின் முக்கிய ரிஷிகள் மற்றும் ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள 402 ரிஷி மற்றும் ரிஷிகஷ் அனைவரின் பெயர்களும் அவர்களின் செயல்களைப் பற்றியும் பாலித் தீவின் அனைத்து பள்ளிகளிலும் பொதுப் பாடமாக உள்ளது. புராணங்களில் வரும் மார்கண்டேயன், பரத்வாஜ், அகத்தியர் போன்றவர்களின் வரலாறுகளும் பயிற்றுவிக்கப் படுகின்றது.
ஆனால் இந்தியாவின் கல்வி நிலையோ ஆங்கிலேயனின் மெக்காலே கல்வித் திட்டத்தை வைத்து பாடம் நடத்துகின்றது.
3. பாலி நாட்டின் அனைத்து ஆண்களும்  பெண்களும் பாரம்பரியமிக்க வேட்டி அணிந்து கொண்டே கட்டாயமாக கோவிலுக்குச் செல்ல வேண்டும் அப்படி இல்லையென்றால் கோவிலுக்குள் நுழைய அனுமதி கிடையாது.
  ஆனால் வேட்டியை பாரம்பரிய உடையாக கொண்டுள்ள தமிழர்களும், தென்னிந்தியர்களும் வேட்டி அணிவதை கவுரவக் குறைச்சலாக எண்ணி அதை அணிபவரை பார்த்து சிரிக்கின்றோம்.  பாரம்பரியத்தை மறந்து !!
4. சமூக, பொருளாதார, அரசியல் என அனைத்து துறைகளிலும் இந்து மதக் கொள்கைபடியும், தத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. Tri - nita - karna என்ற 3 நிலைகளை கொண்டுள்ளது.
அவையாவன,
அ) கடவுளுடன் நமக்கு உள்ள உறவுமுறை (The relationship that we have with God)
ஆ) மனிதர்களுடன் நமக்கு உள்ள உறவுமுறை (The relationship that we have with human beings)
இ) இயற்கையுடன் நமக்கு உள்ள உறவுமுறை (The relationship that we have with nature)
போன்ற இந்து மதக் கொள்கைகளை பாலியின் அனைத்து பள்ளியிலும் ஆரம்ப வகுப்பிலிருந்தே கற்பிக்கின்றனர்.
 5. த்ரி கால சந்த்யா (sun worship three times a day) அதாவது இஸ்லாமியர்களின் 5 வேளை தொழுகை போன்றே பாலித் தீவில் அனைத்து பள்ளிகளிலும் வானொலி மூலமாக காயத்ரி மந்திரம்  மூன்று வேளை இசைக்கப்பட்டு இறை பிரார்த்தனை நடத்தப்படுகிறது.
  நாம் வாழும் இந்தியாவிலோ இந்து மாணவ மாணவி பொட்டு, விபூதி அணிய கூட தடை விதிக்கும் அவலநிலை!
 6. பாலி நாட்டில் அரிசி உற்பத்தி முதன்மையாக உள்ளது. அனைத்து விவசாயிகளும் தங்களது விவசாயப் பொருள்களை அங்குள்ள ஸ்ரீதேவி, பூமாதேவி கோவில்களில் முதல் அறுவடை பொருளை சமர்ப்பணம் செய்கின்றனர்.
 7. நம் நாட்டினரைப் போல பாலித் தீவு மக்கள் அச்சில் பதித்த இராமாயணம், மகாபாரதம் படிப்பதில்லை மாறாக பாரம்பரியம் மிக்க பனையோலையில் எழுதப்பட்ட நூல்களை படிக்கின்றனர்.
   எந்தவொரு கட்டிடம் கட்டுவதற்கும் முன் பூமி தாயிற்கு கட்டாயமாக பூமி பூஜை செய்யப் படுகின்றது.
இந்து மதத்தை தன் உயிரைவிட மேலாக நினைக்கும் இவர்களின் உறுதியான மனவலிமைக்கு முன் இந்தியாவின் இந்துக்களான நாம் சற்று சறுக்கியே இருக்கிறோம்.
 இந்தோனேசியாவிலிருந்து பாலித் தீவு ஒருவேளை பிரியும் என்றால் இந்நாடே முதல் இந்து நாடாகவும் திகழக்கூடும்.
 
கடல் கடந்து தூய இந்துவாக வாழும் இவர்களை எண்ணி நாமும் பெருமைப்படுவோம்.!!!  இந்துவாய் வாழ்வோம்! இந்து சமுதாயத்தைக் காப்போம்! இக்குள்ள இந்து மக்களிடம் நீங்கள் இந்துமதத்திலிருந்து கற்றது  என்று கேட்டால் அவர்கள் இறைவன் சிவன் வியாபகத்தில் நாம் இருக்கிறோம் என்றஎண்ணம் உண்டாகிறது என்பர்.
           ஹர ஹர மகாதேவா!

செவ்வாய், 15 மே, 2018

எல்லோராவின் எழிலான 34 குகைகள்..!!

எல்லோராவின் எழிலான 34 குகைகள்..!!


எல்லோராவின் எழிலான 34 குகைகள்..!!

வடக்கிலிருந்து தெற்காக, 2 கி.மீ, துாரம் வரை, பரவி இருக்கும், எல்லோராவில் 34 குகைகள் இருக்கின்றன. முதன் முதலாக, புத்த மதத்திற்காகவும், புத்தனுக்காகவும், முதல் 12 குகைகள் உருவாக்கப் பட்டுள்ளன. 
அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டு பிடிக்கப்பட்ட, மிகப் பழமையான குகைகளில் எல்லாம், புத்தரின் பிரம்மாண்ட தோற்றமும், அவர் உறங்கிக் கொண்டே, ஒரு கையை தலைக்கு வைத்து ஒருக்கழித்து, பார்வையிடுவது போன்ற சிலையை, மலையைக் குடைந்து  அளவெடுத்து, உருவாக்கி இருக்கிறார்கள்.
இது புடைப்புச் சிற்பம் என்று நம்புவதற்கு கடினமாக இருக்கிறது. மற்றொரு குகையில், நெருக்கமான துாண்கள் உள்ளன. மேல் விதானம், நீள் வட்ட வடிவில், அழகிய டிசைன்களில் உருவாக்கி இருக்கிறார்கள்.
ஒரு அரசவை போன்ற தோற்றத்தில், இந்தக் குகை குடையப் பட்டிருக்கிறது. அங்கே மன்னரைப் போன்ற தோற்றத்தில், புத்தன் சித்தார்த்தனைப் போன்ற தோற்றத்தில், வடிவமைக்கப் பட்டிருப்பது, புத்தனின், துவக்க வாழ்வினை வெளிப்படுத்துவது போல் மட்டுமல்லாமல் புத்தன் இளவரசனாக இருந்து, அதே பெருமையை விட்டுக் கொடுக்காமல், புத்தனாக தன் வாழ்நாள் இறுதி வரை வாழ்ந்தான் என்பதனை அடையாளப் படுத்துகிறது.
11, 12 குகைகள், மிக வித்தியாசமாக மூன்று அடுக்குகள் கொண்டதாக இருக்கிறது. இந்த மூன்றடுக்கு குகைத் தளங்கள், தீன்தள் என்றழைக்கப் படுகிறது. இந்த குகைகளில், புத்த பிட்சுகள் படுத்து உறங்குவதற்காக, கற் படுக்கைகளை உருவாக்கித் தந்துள்ளனர். அதனுள், சிறிய அறைகளும் காணப் படுகின்றன. இவை, புத்த மத குருமார்கள், தங்கும் அறைகளாக இருந்துள்ளன.

வியாழன், 10 மே, 2018

தமிழ் மொழியை வளர்த்த சமணர்களின் மலை கோவில்..!! வாழ்வில் ஒரு முறையேனும் காண வேண்டும்..!!!

தமிழ் மொழியை வளர்த்த சமணர்களின் மலை கோவில்..!! வாழ்வில் ஒரு முறையேனும் காண வேண்டும்..!!!



தமிழ் மொழியை வளர்த்த சமணர்களின் மலை கோவில்..!! வாழ்வில் ஒரு முறையேனும் காண வேண்டும்..!!!

சமணர்களின் புனிதமான கோயில்…
உலகமெங்கிலும் பரவியிருக்கிற சமணர்கள், தமிழ் நாட்டிற்கு வந்து, தமிழ் மொழியை வளர்த்தனர். அவர்கள் வாழ்ந்த மலையில் உள்ள மிகப் பழமையான தமிழ் பிராமி கல்வெட்டுகள் இதனை நிரூபிக்கின்றன. உலக மக்கள் அனைவரும் ஒரே இனம், என்ற கொள்கை உடைய சமண மதத்தின் தலைமையிடமான சரவணபெலகோலா கர்நாடக மாநிலத்தில் உள்ளது.
பெங்களுரிலிருந்து, 158 கி.மீ. தொலைவில், ஹாசன் மாவட்டத்தில், சந்திரராயன் என்ற நகருக்கு அருகிலேயே உள்ளது. சரவணபெலகோலாவில் ரயில் நிலையம் இருக்கிறது. எனவே, ரயிலில் செல்பவர்கள், இந்த வசதியைப் பயன் படுத்திக் கொள்ளலாம்.
இந்த மலையின் மற்றொரு பெயர், பேர்கல் காப்பு. விந்தியகிரி மலை என்றும் அழைக்கப் படுவது உண்டு. கடல் மட்டத்திலிருந்து, 1020 மீட்டர் உயரமுள்ள, இந்த மலைக்குச் செல்ல, விந்தியகிரியின் மலை உச்சியை அடைய 614 படிகளில் ஏற வேண்டும்.
மலையிலேயே குடைந்து படிக்கட்டுகளை அமைத்திருக்கிறார்கள். மேலே செல்பவர்களுக்கு, ஒரு படிக்கட்டு, இறங்குவதற்கு ஒரு படிக்கட்டு என்று தனித்தனியாக, அருகருகே அமைக்கப் பட்டுள்ளது. சரவணபெலகோலா, இந்திரகிரி, சந்திரகிரி என்ற இரண்டு மலைகளுக்கு இடையே உள்ள மலையில் அமைந்துள்ளது. 
மலையேறும் போதே, துாரத்தில் அந்தப் பிரம்மாண்ட சிலையின் தலைப்பகுதி தென் படும். படிகளில் ஏறிச் செல்வது கடினமாக இல்லை. ஆங்காங்கே, சற்று இளைப்பாறிக் கொண்டே, செல்லலாம். சமணர்களின் புனிதக் கோயிலான இங்கு, வாழ்நாளில் ஒரு முறையாவது வந்து வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள், சமண மதத்தைச் சார்ந்தவர்கள்.
சிலையைச் சுற்றி, வசதியான மண்டபங்களும், உண்டு. இரவில் மின்னொளியில் இந்த சிலையை ரசிப்பது அலாதியான அனுபவம். மண்டபத்தின் மேலே சென்று, சிலையையும், சுற்றுப் புறத்தையும் ரசிக்கலாம்.
 

விண்ணை தொட்ட உண்மை பாகுபலி..!! ஒரே கல்லால் ஆனா உலகில் ஒரே சிலை..!! இந்திய வரலாற்றில் பெரும் பங்கு..!!!


விண்ணை தொட்ட உண்மை பாகுபலி..!! ஒரே கல்லால் ஆனா உலகில் ஒரே சிலை..!! இந்திய வரலாற்றில் பெரும் பங்கு..!!!



விண்ணை தொட்ட உண்மை பாகுபலி..!!   ஒரே கல்லால் ஆனா உலகில் ஒரே சிலை..!! இந்திய வரலாற்றில் பெரும் பங்கு..!!!

உலகிலேயே, ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட பாகுபலியின் சிலை….
சமண மதம் என்பதனை உலகிற்கு அறிமுகப் படுத்திய சமணர்கள், 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே வாழ்ந்தவர்கள். கர்நாடக மாநிலத்தில் உள்ள சரவணபெலகோலாவிலிருந்து தான், நம் தேசத்தின் பல பகுதிகளுக்கு, சமணர்கள் சென்று, அந்தந்த இடங்களில் உள்ள குன்றுகளில் தங்கினார்கள்.
அவர்களின் தலைமையிடம் சரவணபெலகோலா, கர்நாடக மாநிலத்தில் உள்ளது. சமண மதத்தை உலகம் முழுவதும் சென்று பரப்பினர். துவக்கத்தில், இவர்களுக்கு உருவ வழிபாடு கிடையாது. 
கி.பி.7-ஆம் நுாற்றாண்டுக்குப் பிறகு, உருவ வழிபாட்டிற்கு மாறினார்கள். இந்த சமணர்களின் தெய்வமாகப் போற்றப் படுபவர், பாகுபலி. இவர் சமண மதத்தைத் தோற்றுவித்த ஆதிநாதரின் மகன். மன்னராக இருந்த இவர், தன் சகோதரருடன் போரிட்டார். ஆனால், போரிலே தோல்வி அடைந்தார்.
பாகுபலி என்ற அந்த கோமதீஸ்வரர், தனது தோல்வியை மனமார ஏற்றுக் கொண்டார். தனது சகோதரருடன் நடத்திய போரிலிருந்து, “போரினால், எந்தப் பயனும் இல்லை, என்பதைப் புரிந்து கொண்டார். அதனால், துறவி ஆனார்.
இவருக்குத் தான், சரவணபெலகோலாவில், 17 மீட்டர் உயரமுள்ள, ஒரே கல்லால் ஆன சிலை செய்யப்பட்டு நிறுவப் பட்டுள்ளது. உலகிலேயே, ஒரே கல்லில் செய்யப்பட்ட உயரமான சிலை இது ஒன்று தான். இது சமணர்களின் கோயிலாகவும், சிறந்த சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது.
இங்குள்ள பாகுபலியின் சிலையின் அருகே ஒருவர் நின்றால், அந்த சிலையின் கணுக்கால் வரை  தான் இருப்பார். இந்தச் சிலையை உருவாக்கிய சிற்பி அர்த்ஸ்மனி என்பவர். ராக்கமல்லா என்ற கர்நாடக மன்னர் தான், இந்த சிலையை உருவாக்கிய சிற்பியை நியமித்தார்.

    

புதன், 9 மே, 2018

இம்மண்ணை ஆண்ட தமிழன் கதை தெரியும்..!! விண்ணை ஆண்ட கதை தெரியுமா உங்களுக்கு..?

இம்மண்ணை ஆண்ட தமிழன் கதை தெரியும்..!! விண்ணை ஆண்ட கதை தெரியுமா உங்களுக்கு..?


இம்மண்ணை ஆண்ட தமிழன் கதை தெரியும்..!! விண்ணை ஆண்ட கதை தெரியுமா உங்களுக்கு..?!

விண்வெளியைப் பற்றி, சங்க காலத்தில் கூறப்பட்டிருக்கிறதா?
தற்போது பூமியில் மனிதர்களாகிய நாம் வாழ்ந்தாலும், வானில் உள்ள கிரகங்கள் பற்றிய தெளிவு இன்னும் சரிவர புரியாமல் தான் இருக்கிறது. தொடர்ந்து ராக்கெட்டுகள் விண்வெளியில் பயணித்துக் கொண்டிருந்தாலும், நாம் இன்று சாதாரணமாக கண்ணில் நட்சத்திரமாகத் தெரியும் கிரகங்கள் எல்லாம், கோடிக் கணக்கான, விண்வெளி மைல் துாரத்தில் அமைந்துள்ளன.
இவற்றுக்குச் சென்று விடலாம், என்று எளிதாகக் கூறி விட முடியாது. ஏனெனில், அந்த கிரகங்களுக்கு எல்லாம், ராக்கெட்டில் சென்றால் கூட, 100 வருடங்களுக்கு மேல் ஆகி விடும். அந்த அளவிற்கு, எரிபொருளை ராக்கெட்டில் நிரப்ப இயலாது.
அந்த அளவு துாரத்திற்குச் செல்ல காலமும் போதாது. இப்படிப்பட்ட விண்வெளி ரகசியங்கள் ஏராளமாக உள்ளன. நிலவிலும், செவ்வாய் கிரகத்திலும் மனிதர்கள் கால் பதித்து விட்டனர்.
இந்த கிரகங்களைப் பற்றி ஆய்வில், 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே, நம் தமிழர்கள் இறங்கி இருக்கிறார்கள். அறிவியலும், விஞ்ஞான தொழில் நுட்பம் ஏதுமற்ற அந்தக் காலத்தில், சலனமில்லாத குளத்தில் தெரியும், கிரகங்களின் பிம்பத்தை வைத்து, அதன் துாரத்தைக் கணக்கிட்டிருக்கிறார்கள்.
ஆர்யபட்டர், நிலவினைக் குளத்தில் பார்த்து, தோரயமாக, அதன் துாரத்தைக் கணக்கிட்டுச் சொன்னார். இருபதாம் நுாற்றாண்டில், நிலவிற்கு மனிதன் சென்ற போது, இந்த துாரத்தையும், நாசாவிலிருந்து, செல்லும் தொலைவினையும் கணக்கிட்டுப் பார்த்த போது, வித்தியாசம் சிறிய அளவில் தான் இருந்தது, என்பது ஆச்சர்யப் படுத்துகிறது.
அந்த அளவிற்கு, மதி நுட்பம் வாய்ந்தவர்கள் அந்தக் காலத்திலேயே இருந்திருக்கிறார்கள். தற்போதுள்ள வசதிகள் ஏதும், அந்தக் காலத்தில் இருந்தால், நிச்சயம், தற்போதுள்ள மனிதர்களை விட நிச்சயம், அதிக அளவில் சாதித்திருப்பார்கள், என்றே, அறிவியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

செவ்வாய், 1 மே, 2018

பறையர் என்பவர் உயர்குலத்தோரே தாழ்ந்தவர்கள் இல்லை சங்கப்பாடல் சொல்கிறது


பறையர் என்பவர் உயர்குலத்தோரே தாழ்ந்தவர்கள் இல்லை சங்கப்பாடல் சொல்கிறது

சும்மா எதற்கெடுத்தாலும் இரண்டாயிரம் வருடமாக தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வாதத்தை முன் வைப்பது நகைப்புக்குரியது.

அதற்கு ஏதாவது முகாந்திரம் வேண்டாமா?


உதாரணமாக பறையர்கள் எப்போது தாழ்ந்தவர்களாக குறிக்கப்படுகிறது? என்பதை சொல்ல முடியுமா?

பறையர் சத்திரியரா?

சிலர், பறையர்கள் என்றாலே  அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று கண்ணையும், காதையும் ,  கட்டிக்கொண்டு பாடிய பாட்டையே பாடுகின்றனர். பறையர்கள் அரசராகவும் இருந்திருக்கின்றனர். அடிமையாகவும் இருந்திருக்கின்றனர்.


சாதிவெறி கொண்ட  போலி வரலாற்று ஆசிரியர்கள்,  பறையர்  தாழ்த்தப்பட்டவர்   என்று  சொல்லி வருகிறார்கள்,


ஆம், அனைவருக்கும்  நல்லது செய்த பறையர் கீழ் சாதி என்றும் , திருடர்கள் , பிற உயிரை கொல்பவர்கள், ஏமாற்றுபவர்கள் போன்றோர்கள் இன்று மேல்சாதி என்று கூறி அலைகிறார்கள்   .


சிலப்பதிகாரம் தோன்றிய காலகட்டத்தில்   சேரர் ,  சாக்கியர் என்பதை ஆதிக்க வெறி வரலாற்று ஆசிரியர்கள் ஏன் ? கூற  தயங்குகிறார்கள் ,

கூறினால் பொறையர் என்பது    பறையர் என மருவிய உண்மை தெரிந்துவிடும் அல்லவா!.

பொறையர் என்றால் பொறுமையானவர்கள் என்று பொருள்.

அத்தகைய பொறுமை பறையர்களிடம் மிக அதிகமாகவே காணப்படுகிறது.


அதேபோல வீரமும் மிக அதிகமாக காணப்படுவது பறையர்களிடம் மட்டும்தான்.

சத்திரியர்களுக்கெல்லாம் சத்திரியர் பறையர் :

வீரம் என்றால் என்னவென்றே தெரியாத மடையர்கள்,
*பிற மனிதனை  கொல்வது, வீரம்
* பிற மனிதர்களிடம் பொருள் பறிப்பது, வீரம்
* ஐந்தாறு மனைவிகள் வைத்திருப்பது, வீரம்
* கலவரங்களில் ஈடுபடுவது, வீரம்
* ஆதரவுஅற்றவனை அடிப்பது, வீரம்  என்கிறார்கள்.

இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் வீரர்கள் அல்ல   மனிதரிலும் கேடுகெட்ட  மடையர்கள், சொல்லபோனால் அரக்கர்கள் .

உண்மையான  வீரம் என்பது பிறரை துன்புறுத்தாமல் தன்  உடல் மற்றும் மன திட்பத்தை வெளிப்படுத்துவதாகும். தன்  மக்கள்  நலத்திற்காக,  அஞ்சாமல் தன்  உயிரையும் கொடுக்க துணிபவனே  வீரன். அவனே உண்மையான சத்திரியன் .
பிற மனிதனை  கொல்வது:
         
                           பிற  மனிதனை  மனிதநேயமின்றி  கொல்வது  வீரமல்ல, அது கொலை. எந்த ஒரு காரணமும் கேட்காமல்   தன் நாட்டு   அரசர் யாரை கொல்ல சொல்கிறாரோ  அவர்களை  கொன்று ,  கொலையுண்டவரின்  குடும்பத்தை அனாதையாக்கி  தவிக்கவிடும், ஈவு இரக்கமற்ற கொலையாளியை சத்திரியன் என்று கூற முடியாது.

பிற மனிதர்களிடம் பொருள் பறிப்பது:

                         வழிமறித்து     பிறரின்   பசுக்களையும்,  உடமைகளையும்  பறிப்பவர்கள்  சத்திரியர்   அல்ல, அவர்கள்  திருடர்கள்.


           அது போன்று ஐந்தாறு மனைவிகள் வைத்திருப்பது, கலவரங்களில் ஈடுபடுவது, இத்தகைய ஈன செயலில் ஈடுபடுபவர்கள் கொடும் அரக்கர்கள் ஆவார்கள்.

சத்திரியருக்கான  அனைத்து  பண்புகளும் பறையரிடம் மட்டுமே உள்ளது. அவற்றை கீழே காண்போம்.


நாட்டை   ஆள்பவன்  அரையன்

நாட்டை   காப்பவன்  பரையன்

        என்ற பழமொழிக்கேற்ப   கடவுளை  போன்று    பறையர்கள்   நாட்டையும், ஊரையும்  பாதுகாத்து வந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டத்திலுள்ள காரையூர் திருமாங்கனி ஈஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டொன்று ஊரைப்பாதுகாக்கும் பணியில் பறையர் ஒருவர் நியமிக்கப்பட்டதை குறிப்பிடுகிறது.

ஆதனமழகியான் என்பவருக்கு காரையூர்ப் பறையன் என்றுபட்டம் கட்டி பாதுகாவல் உரிமையை ஊரார் வழங்கியுள்ளனர். என்ற செய்தி வாயிலாக நாம் அறியலாம்.

இன்னும் பாண்டியமன்னனின் மெய்க்காப்பாளராகப் பறையர் ஒருவர் பணியாற்றியமையைஅரையன் அணுக்க கூவன் பறையனேன் என்ற கல்வெட்டு வரிஉணர்த்துகிறது. (தெ.இ.க. 14; க.எ. 56).     .

பறையர்கள்  யாருக்கும்  துன்பம்  தராமல் நன்மை செய்து வாழ்ந்திருக்கிறார்கள்.

                   முன்னர் மழை நீரை கண்மாயில் சேமித்து தேவையானபோது கண்மாய் மடையை  திறந்து வரும் நீரை பயன்படுத்தி விவசாயம் செய்வார்கள்.

இப்படி திறக்கும்போது சில தடவைகளில் பாம்பு தண்ணீர் வரும் பகுதியை அடைத்துகொள்ளும் இத்தகைய சமயங்களில் யாராவது ஒருவர் தண்ணீருக்குள் போய் அடைத்துகொண்டிருக்கும் பாம்பை தேடி தண்ணீருக்குள் வெட்டி கொல்ல வேண்டும்.

இத்தகைய உயிருக்கு அஞ்சாத வீர செயலை எந்த    ஆண்ட பரம்பரையாவது அல்லது நாங்கள்  சத்திரியர் என கூவி திரிபவர்கள் செய்திருக்கிறார்களா ? இப்படி உயிருக்கு பயந்தவர்களை எப்படி சத்திரியன் என்று அழைக்கலாம்.
           
                ஆனால் பறையர் தண்ணீருக்குள் போய் அடைத்துகொண்டிருக்கும் பாம்பை தேடி தண்ணீருக்குள் வெட்டி மடை திறந்து அனைவரையும் மகிழ செய்தனர்.  

இத்தகைய யாரும்  செய்ய அஞ்சும் செயல்களையே பறையர் அஞ்சாமல் செய்தனர்.

 அதனாலேயே யாரும்  செய்ய அஞ்சும் செயல்களை யாரேனும் செய்தால் அவர்களுக்கு "பறையன்" என்கிற பட்டம் கொடுக்கபட்டிருக்கிறது.
                 
                      எத்தகைய வீர செயலாய் இருந்தாலும், அச்செயலால் பிறருக்கு துன்பம் ஏற்படும் என தெரிந்தால், அச்செயலை பறையர்கள் செய்ய மாட்டார்கள்.

இவ்வாறு அனைவர்மேலும் அன்பு கொண்டவர்களாகவும், ஆழ்ந்த பொறுமை உடையவர்களாகவும், பறையர் இருந்திருக்கின்றனர்.

தன்  மக்கள்  நலத்திற்காக,  அஞ்சாமல் தன்  உயிரையும் கொடுக்க துணிபவனே  வீரன்.

அவனே உண்மையான சத்திரியன் .எனவே  பறையர் சத்திரியரே.
               
சங்கப்பாடலில் மாங்குடி மருதனார்    ( மாங்குடி மருதனார் என்பவர் சங்ககால

நல்லிசைப் புலவர்களில் ஒருவர். )

எழுதிய பாடல் சொல்கிறது

இவர் தமது பாடலில் பல அரசர்களையும் குடிமக்களையும் பற்றிய செய்திகளைத் தந்துள்ளார்.

"துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று

இந்நான் கல்லது குடியும் இல்லை" என்று.

வாகைத்திணையில் பாடப்பட்ட பாடல் இது வாழ்வின் வெற்றிகரமான பக்கத்தை சொல்லும் திணை அதில் மூதின் முல்லை துறையில் சொல்கிறார்.

அந்த முதுமக்களின் பூக்கள்,உணவு,குடிகள் என எல்லாவற்றையும் புகழ்ந்துவிட்டு இவர்கள் அனைவரும் வணங்குவது நடுகல்லான வீரனையே.

இதை விட வேறென்ன தெய்வம் உண்டு என்று புகழ்கிறார்.

எனவே இது ஒரு தொல்குடிகளின் இணையற்ற வீரத்தை அவர்கள் வாழ்வை உயர்த்தி கூறும் பொருட்டே சொல்லப்படும் பாடல்.

இதே கவிஞர்தான் மதுரை காஞ்சி எழுதினார்.

ஆக இந்த குடிகளை தமிழ் நிலத்தின் தொன்மை மிக்க குடிகளாகவும் இவர்களுக்கு இணையில்லை என்றும் புகழ்கிற வண்ணம் உள்ளது.

சங்க காலத்தில் பறையர்களை இழித்து பேசுவது இல்லை.

பிற்கால சோழர் காலத்தில் கிடைத்த கல்வெட்டுகளிலும் பறையர்களை தீண்டாதவர்கள் என்றோ,சண்டாளர்கள் என்றோ சொல்லும் சாட்சிகள் இருப்பதாக தெரியவில்லை.

பறையர்கள் தனித்தனி சேரிகளில் வாழ்ந்தார்கள்.

அது கீழ் மேல் என்பதாக இல்லை.

பார்ப்பனச்சேரி,கம்மாளர்சேரி என்பது போலே பறைசேரியும் இருந்தது.

"சேரி" என்ற வார்த்தை இன்று Slum என்பதோடு பொறுத்திப் பார்க்கப்படுகிறது.

அது தவறானது

சேரி என்பது கூட்டுக்குடியிருப்பு என்பதாகவே பயின்று வந்தது வெகு காலமாக.

அதோடு எல்லா சமூகங்களை போலவே பறையர்களுக்கும் தனிச்சுடுகாடு இருந்தது.

பறையர்கள் பல்வேறு பிரிவுகளாக தனக்குள்ளே இருந்தனர்.


"உழுபறையன்"


"காவாக்கார பறையன்"


"ஊர்ப்பறையன்"


"வள்ளுவப்பறையன்" என்று அழைக்கப்பட்டன.



இதில் புல்லுபறிக்கிற பறையர்கள் தாழ்ந்தவர்களாக கருதப்பட்டார்கள் அது பறையர்களுக்குள்ளேயும் கூட.

அதே போல புலையர் என்பவர்களும்,ஈமச்சடங்கு செய்பவர்களும் தனியாக இருந்தனர்.

இதில் புலைத்தொழில் மற்றும் ஈமச்சடங்கு செய்பவர்களையே சமூகம் ஒதுக்கி வைத்துள்ளதாக தெரிகிறது.

மற்றபடி எல்லோரையும் போல சொத்துரிமை இருந்தது.

'ஊர்ப்பறையன் மண்டை சோமநாதன் ஏழிசை மோகப்படைச்சன்' என்பவன் ராஜராஜசோழன்-1 காலத்தில் கோவிலுக்கு சந்தி விளக்கு நிவந்தம் கொடுத்துள்ளான்.

கல்வெட்டுகளில்,கிராம தீர்மானங்களில் பறையர்கள் கையெழுதிட்டிருக்கிறார்கள்.

குலசேகர பாண்டியன் ஆட்சியில் திருமய்யத்தில் நீர்நிலை விற்பனை செய்யப்பட்டபோது  அதற்கான விற்பனை தொடர்பான ஆவணத்தில் பெரியநாட்டுப்பறையன், கானாட்டுப் பறையன், ஐநூற்றுப் பறையன், அரசர் மிகா பறையன், அகலிங்கப் பறையன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

கல்வெட்டு வடிக்கும் முன் ஓலையில் எழுதி கையெழுத்துவிடும் முறை இருந்தது.

கையெழுத்து போடத் தெரியாதவர்கள் ஓலையில் எழுத்தாணியால் கீறி விடுவார்களாம் அதற்கு பக்கத்தில் அவருடைய பெயரை எழுதி 'தற்குறி' என்று எழுதுவார்களாம்.

அவர்களுடைய பெயர் எழுதி பின் தற்குறியிடம் கேட்டறிந்தேன் என்று வேறொருவர் கையெழுத்திடும் முறை உள்ளது.

இதுதான் இன்றும் நாம் எழுதப்படிக்க தெரியாதவர்களை தற்குறி என்று அழைக்க காரணம்.

ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் நான்காவது ஆட்சியாண்டுக் காலத்திய கல்வெட்டொன்றில், துக்கைப்பட்டன், சொக்கப்பட்டன் என்ற சிவபிராமணர்கள் கையெழுத்திடத் தெரியாத நிலையில் தற்குறி இட்டுள்ளனர்.
ஆனால் இதே கல்வெட்டில் அரசர் மிகா பறையர்,கானாட்டுப்பறையன் என்பவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

ஆக சிவபிராமணர்கள் கையெழுத்திட தெரியாத நிலையில் பறையர்கள் கையெழுத்திட்டிருந்தால் அவர்கள் எப்படி தாழ்த்தப்பட்டிருப்பார்கள்?

நாயன்மார்களாக,ஆழ்வாராக,ஈடுஇணையற்ற தமிழின் சொத்தான திருக்குறள் கொடுத்த வள்ளுவர்களாக இருந்தவர்கள் எங்களால்தான் மேலே வந்தார்கள் என்று பாதிரியார்கள் சொல்வது யாரை ஏமாற்ற?


பெரியார்தான் உங்களுக்கு அநாதரட்சகர் என்று திராவிடம் ஏமாற்றும் அதே பண்ணையாரிய முறையைத்தான் வாடிகனும் செய்கிறது.

இவற்றிலெல்லாம் பறையர்கள் மயங்காமல் நாம் ஒரு மேன்மைமிக்க சமூகத்தை சேர்ந்தவர்கள்.

நாம்தான் இந்த தொல்பண்பாட்டின் கூறு என்று உணர வேண்டும்.

அவர்கள் என்றுமே தாழ்ந்தோர் இல்லை உயர்ந்தோரே


# நன்றி இணையம்