விண்ணை தொட்ட உண்மை பாகுபலி..!! ஒரே கல்லால் ஆனா உலகில் ஒரே சிலை..!! இந்திய வரலாற்றில் பெரும் பங்கு..!!!
விண்ணை தொட்ட உண்மை பாகுபலி..!! ஒரே கல்லால் ஆனா உலகில் ஒரே சிலை..!! இந்திய வரலாற்றில் பெரும் பங்கு..!!!
உலகிலேயே, ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட பாகுபலியின் சிலை….
சமண மதம் என்பதனை உலகிற்கு அறிமுகப் படுத்திய சமணர்கள், 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே வாழ்ந்தவர்கள். கர்நாடக மாநிலத்தில் உள்ள சரவணபெலகோலாவிலிருந்து தான், நம் தேசத்தின் பல பகுதிகளுக்கு, சமணர்கள் சென்று, அந்தந்த இடங்களில் உள்ள குன்றுகளில் தங்கினார்கள்.
அவர்களின் தலைமையிடம் சரவணபெலகோலா, கர்நாடக மாநிலத்தில் உள்ளது. சமண மதத்தை உலகம் முழுவதும் சென்று பரப்பினர். துவக்கத்தில், இவர்களுக்கு உருவ வழிபாடு கிடையாது.
கி.பி.7-ஆம் நுாற்றாண்டுக்குப் பிறகு, உருவ வழிபாட்டிற்கு மாறினார்கள். இந்த சமணர்களின் தெய்வமாகப் போற்றப் படுபவர், பாகுபலி. இவர் சமண மதத்தைத் தோற்றுவித்த ஆதிநாதரின் மகன். மன்னராக இருந்த இவர், தன் சகோதரருடன் போரிட்டார். ஆனால், போரிலே தோல்வி அடைந்தார்.
பாகுபலி என்ற அந்த கோமதீஸ்வரர், தனது தோல்வியை மனமார ஏற்றுக் கொண்டார். தனது சகோதரருடன் நடத்திய போரிலிருந்து, “போரினால், எந்தப் பயனும் இல்லை, என்பதைப் புரிந்து கொண்டார். அதனால், துறவி ஆனார்.
இவருக்குத் தான், சரவணபெலகோலாவில், 17 மீட்டர் உயரமுள்ள, ஒரே கல்லால் ஆன சிலை செய்யப்பட்டு நிறுவப் பட்டுள்ளது. உலகிலேயே, ஒரே கல்லில் செய்யப்பட்ட உயரமான சிலை இது ஒன்று தான். இது சமணர்களின் கோயிலாகவும், சிறந்த சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது.
இங்குள்ள பாகுபலியின் சிலையின் அருகே ஒருவர் நின்றால், அந்த சிலையின் கணுக்கால் வரை தான் இருப்பார். இந்தச் சிலையை உருவாக்கிய சிற்பி அர்த்ஸ்மனி என்பவர். ராக்கமல்லா என்ற கர்நாடக மன்னர் தான், இந்த சிலையை உருவாக்கிய சிற்பியை நியமித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக