எல்லோராவின் எழிலான 34 குகைகள்..!!
எல்லோராவின் எழிலான 34 குகைகள்..!!
வடக்கிலிருந்து தெற்காக, 2 கி.மீ, துாரம் வரை, பரவி இருக்கும், எல்லோராவில் 34 குகைகள் இருக்கின்றன. முதன் முதலாக, புத்த மதத்திற்காகவும், புத்தனுக்காகவும், முதல் 12 குகைகள் உருவாக்கப் பட்டுள்ளன.
அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டு பிடிக்கப்பட்ட, மிகப் பழமையான குகைகளில் எல்லாம், புத்தரின் பிரம்மாண்ட தோற்றமும், அவர் உறங்கிக் கொண்டே, ஒரு கையை தலைக்கு வைத்து ஒருக்கழித்து, பார்வையிடுவது போன்ற சிலையை, மலையைக் குடைந்து அளவெடுத்து, உருவாக்கி இருக்கிறார்கள்.
இது புடைப்புச் சிற்பம் என்று நம்புவதற்கு கடினமாக இருக்கிறது. மற்றொரு குகையில், நெருக்கமான துாண்கள் உள்ளன. மேல் விதானம், நீள் வட்ட வடிவில், அழகிய டிசைன்களில் உருவாக்கி இருக்கிறார்கள்.
ஒரு அரசவை போன்ற தோற்றத்தில், இந்தக் குகை குடையப் பட்டிருக்கிறது. அங்கே மன்னரைப் போன்ற தோற்றத்தில், புத்தன் சித்தார்த்தனைப் போன்ற தோற்றத்தில், வடிவமைக்கப் பட்டிருப்பது, புத்தனின், துவக்க வாழ்வினை வெளிப்படுத்துவது போல் மட்டுமல்லாமல் புத்தன் இளவரசனாக இருந்து, அதே பெருமையை விட்டுக் கொடுக்காமல், புத்தனாக தன் வாழ்நாள் இறுதி வரை வாழ்ந்தான் என்பதனை அடையாளப் படுத்துகிறது.
11, 12 குகைகள், மிக வித்தியாசமாக மூன்று அடுக்குகள் கொண்டதாக இருக்கிறது. இந்த மூன்றடுக்கு குகைத் தளங்கள், தீன்தள் என்றழைக்கப் படுகிறது. இந்த குகைகளில், புத்த பிட்சுகள் படுத்து உறங்குவதற்காக, கற் படுக்கைகளை உருவாக்கித் தந்துள்ளனர். அதனுள், சிறிய அறைகளும் காணப் படுகின்றன. இவை, புத்த மத குருமார்கள், தங்கும் அறைகளாக இருந்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக