செவ்வாய், 1 மே, 2018

பறையர் என்பவர் உயர்குலத்தோரே தாழ்ந்தவர்கள் இல்லை சங்கப்பாடல் சொல்கிறது


பறையர் என்பவர் உயர்குலத்தோரே தாழ்ந்தவர்கள் இல்லை சங்கப்பாடல் சொல்கிறது

சும்மா எதற்கெடுத்தாலும் இரண்டாயிரம் வருடமாக தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வாதத்தை முன் வைப்பது நகைப்புக்குரியது.

அதற்கு ஏதாவது முகாந்திரம் வேண்டாமா?


உதாரணமாக பறையர்கள் எப்போது தாழ்ந்தவர்களாக குறிக்கப்படுகிறது? என்பதை சொல்ல முடியுமா?

பறையர் சத்திரியரா?

சிலர், பறையர்கள் என்றாலே  அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று கண்ணையும், காதையும் ,  கட்டிக்கொண்டு பாடிய பாட்டையே பாடுகின்றனர். பறையர்கள் அரசராகவும் இருந்திருக்கின்றனர். அடிமையாகவும் இருந்திருக்கின்றனர்.


சாதிவெறி கொண்ட  போலி வரலாற்று ஆசிரியர்கள்,  பறையர்  தாழ்த்தப்பட்டவர்   என்று  சொல்லி வருகிறார்கள்,


ஆம், அனைவருக்கும்  நல்லது செய்த பறையர் கீழ் சாதி என்றும் , திருடர்கள் , பிற உயிரை கொல்பவர்கள், ஏமாற்றுபவர்கள் போன்றோர்கள் இன்று மேல்சாதி என்று கூறி அலைகிறார்கள்   .


சிலப்பதிகாரம் தோன்றிய காலகட்டத்தில்   சேரர் ,  சாக்கியர் என்பதை ஆதிக்க வெறி வரலாற்று ஆசிரியர்கள் ஏன் ? கூற  தயங்குகிறார்கள் ,

கூறினால் பொறையர் என்பது    பறையர் என மருவிய உண்மை தெரிந்துவிடும் அல்லவா!.

பொறையர் என்றால் பொறுமையானவர்கள் என்று பொருள்.

அத்தகைய பொறுமை பறையர்களிடம் மிக அதிகமாகவே காணப்படுகிறது.


அதேபோல வீரமும் மிக அதிகமாக காணப்படுவது பறையர்களிடம் மட்டும்தான்.

சத்திரியர்களுக்கெல்லாம் சத்திரியர் பறையர் :

வீரம் என்றால் என்னவென்றே தெரியாத மடையர்கள்,
*பிற மனிதனை  கொல்வது, வீரம்
* பிற மனிதர்களிடம் பொருள் பறிப்பது, வீரம்
* ஐந்தாறு மனைவிகள் வைத்திருப்பது, வீரம்
* கலவரங்களில் ஈடுபடுவது, வீரம்
* ஆதரவுஅற்றவனை அடிப்பது, வீரம்  என்கிறார்கள்.

இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் வீரர்கள் அல்ல   மனிதரிலும் கேடுகெட்ட  மடையர்கள், சொல்லபோனால் அரக்கர்கள் .

உண்மையான  வீரம் என்பது பிறரை துன்புறுத்தாமல் தன்  உடல் மற்றும் மன திட்பத்தை வெளிப்படுத்துவதாகும். தன்  மக்கள்  நலத்திற்காக,  அஞ்சாமல் தன்  உயிரையும் கொடுக்க துணிபவனே  வீரன். அவனே உண்மையான சத்திரியன் .
பிற மனிதனை  கொல்வது:
         
                           பிற  மனிதனை  மனிதநேயமின்றி  கொல்வது  வீரமல்ல, அது கொலை. எந்த ஒரு காரணமும் கேட்காமல்   தன் நாட்டு   அரசர் யாரை கொல்ல சொல்கிறாரோ  அவர்களை  கொன்று ,  கொலையுண்டவரின்  குடும்பத்தை அனாதையாக்கி  தவிக்கவிடும், ஈவு இரக்கமற்ற கொலையாளியை சத்திரியன் என்று கூற முடியாது.

பிற மனிதர்களிடம் பொருள் பறிப்பது:

                         வழிமறித்து     பிறரின்   பசுக்களையும்,  உடமைகளையும்  பறிப்பவர்கள்  சத்திரியர்   அல்ல, அவர்கள்  திருடர்கள்.


           அது போன்று ஐந்தாறு மனைவிகள் வைத்திருப்பது, கலவரங்களில் ஈடுபடுவது, இத்தகைய ஈன செயலில் ஈடுபடுபவர்கள் கொடும் அரக்கர்கள் ஆவார்கள்.

சத்திரியருக்கான  அனைத்து  பண்புகளும் பறையரிடம் மட்டுமே உள்ளது. அவற்றை கீழே காண்போம்.


நாட்டை   ஆள்பவன்  அரையன்

நாட்டை   காப்பவன்  பரையன்

        என்ற பழமொழிக்கேற்ப   கடவுளை  போன்று    பறையர்கள்   நாட்டையும், ஊரையும்  பாதுகாத்து வந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டத்திலுள்ள காரையூர் திருமாங்கனி ஈஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டொன்று ஊரைப்பாதுகாக்கும் பணியில் பறையர் ஒருவர் நியமிக்கப்பட்டதை குறிப்பிடுகிறது.

ஆதனமழகியான் என்பவருக்கு காரையூர்ப் பறையன் என்றுபட்டம் கட்டி பாதுகாவல் உரிமையை ஊரார் வழங்கியுள்ளனர். என்ற செய்தி வாயிலாக நாம் அறியலாம்.

இன்னும் பாண்டியமன்னனின் மெய்க்காப்பாளராகப் பறையர் ஒருவர் பணியாற்றியமையைஅரையன் அணுக்க கூவன் பறையனேன் என்ற கல்வெட்டு வரிஉணர்த்துகிறது. (தெ.இ.க. 14; க.எ. 56).     .

பறையர்கள்  யாருக்கும்  துன்பம்  தராமல் நன்மை செய்து வாழ்ந்திருக்கிறார்கள்.

                   முன்னர் மழை நீரை கண்மாயில் சேமித்து தேவையானபோது கண்மாய் மடையை  திறந்து வரும் நீரை பயன்படுத்தி விவசாயம் செய்வார்கள்.

இப்படி திறக்கும்போது சில தடவைகளில் பாம்பு தண்ணீர் வரும் பகுதியை அடைத்துகொள்ளும் இத்தகைய சமயங்களில் யாராவது ஒருவர் தண்ணீருக்குள் போய் அடைத்துகொண்டிருக்கும் பாம்பை தேடி தண்ணீருக்குள் வெட்டி கொல்ல வேண்டும்.

இத்தகைய உயிருக்கு அஞ்சாத வீர செயலை எந்த    ஆண்ட பரம்பரையாவது அல்லது நாங்கள்  சத்திரியர் என கூவி திரிபவர்கள் செய்திருக்கிறார்களா ? இப்படி உயிருக்கு பயந்தவர்களை எப்படி சத்திரியன் என்று அழைக்கலாம்.
           
                ஆனால் பறையர் தண்ணீருக்குள் போய் அடைத்துகொண்டிருக்கும் பாம்பை தேடி தண்ணீருக்குள் வெட்டி மடை திறந்து அனைவரையும் மகிழ செய்தனர்.  

இத்தகைய யாரும்  செய்ய அஞ்சும் செயல்களையே பறையர் அஞ்சாமல் செய்தனர்.

 அதனாலேயே யாரும்  செய்ய அஞ்சும் செயல்களை யாரேனும் செய்தால் அவர்களுக்கு "பறையன்" என்கிற பட்டம் கொடுக்கபட்டிருக்கிறது.
                 
                      எத்தகைய வீர செயலாய் இருந்தாலும், அச்செயலால் பிறருக்கு துன்பம் ஏற்படும் என தெரிந்தால், அச்செயலை பறையர்கள் செய்ய மாட்டார்கள்.

இவ்வாறு அனைவர்மேலும் அன்பு கொண்டவர்களாகவும், ஆழ்ந்த பொறுமை உடையவர்களாகவும், பறையர் இருந்திருக்கின்றனர்.

தன்  மக்கள்  நலத்திற்காக,  அஞ்சாமல் தன்  உயிரையும் கொடுக்க துணிபவனே  வீரன்.

அவனே உண்மையான சத்திரியன் .எனவே  பறையர் சத்திரியரே.
               
சங்கப்பாடலில் மாங்குடி மருதனார்    ( மாங்குடி மருதனார் என்பவர் சங்ககால

நல்லிசைப் புலவர்களில் ஒருவர். )

எழுதிய பாடல் சொல்கிறது

இவர் தமது பாடலில் பல அரசர்களையும் குடிமக்களையும் பற்றிய செய்திகளைத் தந்துள்ளார்.

"துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று

இந்நான் கல்லது குடியும் இல்லை" என்று.

வாகைத்திணையில் பாடப்பட்ட பாடல் இது வாழ்வின் வெற்றிகரமான பக்கத்தை சொல்லும் திணை அதில் மூதின் முல்லை துறையில் சொல்கிறார்.

அந்த முதுமக்களின் பூக்கள்,உணவு,குடிகள் என எல்லாவற்றையும் புகழ்ந்துவிட்டு இவர்கள் அனைவரும் வணங்குவது நடுகல்லான வீரனையே.

இதை விட வேறென்ன தெய்வம் உண்டு என்று புகழ்கிறார்.

எனவே இது ஒரு தொல்குடிகளின் இணையற்ற வீரத்தை அவர்கள் வாழ்வை உயர்த்தி கூறும் பொருட்டே சொல்லப்படும் பாடல்.

இதே கவிஞர்தான் மதுரை காஞ்சி எழுதினார்.

ஆக இந்த குடிகளை தமிழ் நிலத்தின் தொன்மை மிக்க குடிகளாகவும் இவர்களுக்கு இணையில்லை என்றும் புகழ்கிற வண்ணம் உள்ளது.

சங்க காலத்தில் பறையர்களை இழித்து பேசுவது இல்லை.

பிற்கால சோழர் காலத்தில் கிடைத்த கல்வெட்டுகளிலும் பறையர்களை தீண்டாதவர்கள் என்றோ,சண்டாளர்கள் என்றோ சொல்லும் சாட்சிகள் இருப்பதாக தெரியவில்லை.

பறையர்கள் தனித்தனி சேரிகளில் வாழ்ந்தார்கள்.

அது கீழ் மேல் என்பதாக இல்லை.

பார்ப்பனச்சேரி,கம்மாளர்சேரி என்பது போலே பறைசேரியும் இருந்தது.

"சேரி" என்ற வார்த்தை இன்று Slum என்பதோடு பொறுத்திப் பார்க்கப்படுகிறது.

அது தவறானது

சேரி என்பது கூட்டுக்குடியிருப்பு என்பதாகவே பயின்று வந்தது வெகு காலமாக.

அதோடு எல்லா சமூகங்களை போலவே பறையர்களுக்கும் தனிச்சுடுகாடு இருந்தது.

பறையர்கள் பல்வேறு பிரிவுகளாக தனக்குள்ளே இருந்தனர்.


"உழுபறையன்"


"காவாக்கார பறையன்"


"ஊர்ப்பறையன்"


"வள்ளுவப்பறையன்" என்று அழைக்கப்பட்டன.



இதில் புல்லுபறிக்கிற பறையர்கள் தாழ்ந்தவர்களாக கருதப்பட்டார்கள் அது பறையர்களுக்குள்ளேயும் கூட.

அதே போல புலையர் என்பவர்களும்,ஈமச்சடங்கு செய்பவர்களும் தனியாக இருந்தனர்.

இதில் புலைத்தொழில் மற்றும் ஈமச்சடங்கு செய்பவர்களையே சமூகம் ஒதுக்கி வைத்துள்ளதாக தெரிகிறது.

மற்றபடி எல்லோரையும் போல சொத்துரிமை இருந்தது.

'ஊர்ப்பறையன் மண்டை சோமநாதன் ஏழிசை மோகப்படைச்சன்' என்பவன் ராஜராஜசோழன்-1 காலத்தில் கோவிலுக்கு சந்தி விளக்கு நிவந்தம் கொடுத்துள்ளான்.

கல்வெட்டுகளில்,கிராம தீர்மானங்களில் பறையர்கள் கையெழுதிட்டிருக்கிறார்கள்.

குலசேகர பாண்டியன் ஆட்சியில் திருமய்யத்தில் நீர்நிலை விற்பனை செய்யப்பட்டபோது  அதற்கான விற்பனை தொடர்பான ஆவணத்தில் பெரியநாட்டுப்பறையன், கானாட்டுப் பறையன், ஐநூற்றுப் பறையன், அரசர் மிகா பறையன், அகலிங்கப் பறையன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

கல்வெட்டு வடிக்கும் முன் ஓலையில் எழுதி கையெழுத்துவிடும் முறை இருந்தது.

கையெழுத்து போடத் தெரியாதவர்கள் ஓலையில் எழுத்தாணியால் கீறி விடுவார்களாம் அதற்கு பக்கத்தில் அவருடைய பெயரை எழுதி 'தற்குறி' என்று எழுதுவார்களாம்.

அவர்களுடைய பெயர் எழுதி பின் தற்குறியிடம் கேட்டறிந்தேன் என்று வேறொருவர் கையெழுத்திடும் முறை உள்ளது.

இதுதான் இன்றும் நாம் எழுதப்படிக்க தெரியாதவர்களை தற்குறி என்று அழைக்க காரணம்.

ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் நான்காவது ஆட்சியாண்டுக் காலத்திய கல்வெட்டொன்றில், துக்கைப்பட்டன், சொக்கப்பட்டன் என்ற சிவபிராமணர்கள் கையெழுத்திடத் தெரியாத நிலையில் தற்குறி இட்டுள்ளனர்.
ஆனால் இதே கல்வெட்டில் அரசர் மிகா பறையர்,கானாட்டுப்பறையன் என்பவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

ஆக சிவபிராமணர்கள் கையெழுத்திட தெரியாத நிலையில் பறையர்கள் கையெழுத்திட்டிருந்தால் அவர்கள் எப்படி தாழ்த்தப்பட்டிருப்பார்கள்?

நாயன்மார்களாக,ஆழ்வாராக,ஈடுஇணையற்ற தமிழின் சொத்தான திருக்குறள் கொடுத்த வள்ளுவர்களாக இருந்தவர்கள் எங்களால்தான் மேலே வந்தார்கள் என்று பாதிரியார்கள் சொல்வது யாரை ஏமாற்ற?


பெரியார்தான் உங்களுக்கு அநாதரட்சகர் என்று திராவிடம் ஏமாற்றும் அதே பண்ணையாரிய முறையைத்தான் வாடிகனும் செய்கிறது.

இவற்றிலெல்லாம் பறையர்கள் மயங்காமல் நாம் ஒரு மேன்மைமிக்க சமூகத்தை சேர்ந்தவர்கள்.

நாம்தான் இந்த தொல்பண்பாட்டின் கூறு என்று உணர வேண்டும்.

அவர்கள் என்றுமே தாழ்ந்தோர் இல்லை உயர்ந்தோரே


# நன்றி இணையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக