புதன், 31 ஜூலை, 2019

"பிறவிடை சாம்பான்" என்பாரது சமாதியின் மேல் எழுப்பப்பட்டதே தஞ்சை பெருவுடையார் கோவில்



பரையர் குல சோழ மன்னன்
"பிறவிடை சாம்பான்" என்பாரது சமாதியின் மேல் எழுப்பப்பட்டதே தஞ்சை பெருவுடையார் கோவில்

தமிழக அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட
"இடங்கையர் வலங்கையர் சரித்திரம்" என்னும் நூலில்
இது ஆதாரபூர்வமாக உள்ளது

வலங்கையர் வரலாறு ( டி 462 ) என்னும் சுவடியில்
"பிறவிடை சாம்பான்" மன்னரது வரலாறு விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
இந்த சுவடிகள் இன்றும் தமிழ்நாடு கீழ்த்திசை சுவடிகள்
நூலகத்தில் பாதுகாக்கப்படுகிறது

சுவடி கூறும் வரலாறு
ராவணன் என்னும் மல்லியை பெருமானுக்கு
மூன்று மகன்கள் இருந்தனர்
1)சாம்புகன்
2)பிறவிடை சாம்பான்
3)தியாகன் என்னும் தியாகச் சாம்பான்

இவர்கள் அக்கால சோழ மண்டலத்தில்
சிறிய கோட்டை கட்டி
பழங்குடி மன்னர்களாக வாழ்ந்துள்ளனர்

பிறவிடை சாம்பானது கோட்டை
"விளாறுகோட்டை"
அதுவே பின்னாளில்
'விளாரிகோட்டை' என்று திரிந்தது என்கின்றனர்.

இந்த கோட்டை வெண்கலத்தாலும் இரும்பு தூண்களாலும் மண்ணாலும்
கட்டப்பட்டது என்றும் அதனால் இக்கோட்டையானது
என்றும் 'மலாரிகோட்டை" என்றும் வழங்கப்பட்டது

சோழ மன்னன் "பிறவிடை சாம்பான்" மரித்த பின்
இந்த கோட்டையில் தகனம் செய்யப்பட்டான்

கணவன் மரித்த துயரத்தில் அவனது மனைவி
பெரிய நாயகியும் அவ்விடத்திலே தீ குளித்து இறந்தால்

"பிறவிடை சாம்பான்" மரணித்த அந்த இடத்திலே
ஒரு வேப்ப மரமும் ஒரு அரசமரமும் வைத்து
திண்ணை அமைத்து இரண்டு செங்கல் வைத்து
அவர்களை "தெய்வமாக" அந்த ஊர் மக்கள் வணக்க துவங்கினர்

அந்த இடத்திலே நந்தவனமும் கிணற்று
தண்ணீர் பந்தலும் பிற்காலத்தில் அமைக்கபட்டது

பிற்காலத்தில் "பரகேசரி சோழ மாமன்னர்" இவ்விடத்திற்கு வந்த பொழுது
"பிறவிடை சாம்பான்" தகனம் செய்யப்பட்ட
அவ்விடத்தின் சிறப்பை கேட்டு  இரண்டு நாள் அங்கு தங்கினார்

அவ்வாறு "பரகேசரி மாமன்னர்" அங்கு தங்கும் பொழுது
"பிறவிடை சாம்பனும்" அவரது மனைவி "பெரிய நாயகியும்"
பரகேசரி மாமன்னர் கனவில்

தோன்றி அவ்விடத்தில் அவர்களுக்கு திருப்பணி செய்யுமாறு கூறினார் என்றும்
பரகேசரி மன்னர் அவ்விடத்தில் வேண்டிய காரியம் கைகூடியதால்
அதன் பேரில் அவ்விடத்திலேயே
"பிறவிடை சாம்பானுக்கு கோவில்" கோவில் எழுப்புவதாக
பிரதிக்கினை செய்ததை இச்சுவடி குறிப்பிடுகிறது

பின்னாளில் தான் எடுத்த பிரதிக்கினை நிரைவேற்றும் விதமாக
விவசாய பூமியாய் இருந்த பகுதியில் சுற்றிலும் மதில் எழுப்பி
கோபுரம் வைத்து "பிறவிடைசாம்பானுக்கு"
உலகம் வியக்கும் வகையில் பெரிய கோவிலை காட்டினார்

அக்காலத்தில் "பிறவிடை சாம்பான் கோவில்" என்று அழைக்கபட்ட இக்கோவிலானது
பின்னாளில் "பெருவிடை நயினார் கோவில்" என்று பெயர் மாற்றி பூசிக்கப்பட்டது என்றும்

அதுவே பிற்காலத்தில் "வடுக தெலுங்கு மன்னர்கள்" கட்டுப்பாட்டில்
 "பெருவிடை ஈசுவரன் கோவில்" என்று அழைக்கப்பட்டதாகவும்

மராட்டிய மன்னர்கள் கட்டுப்பாட்டில் வந்தபொழுது
முழுக்க வடமொழியில் திரிந்து "பிரகதீஸ்வரர் கோவில்" என்று வழங்கப்படுகிறது
என்று அறிய முடிகிறது

படையெடுப்புகள் பல நிகழ்ந்தாலும் பெயர்கள் வடமொழியில் திரிந்தாலும்
பரையர் குல மன்னர் "பிறவிடை சாம்பான்"
அவர்களது புகழ் கதிரவன் போல்
இன்றும் என்றும் மறைக்க முடியாமல்
நிலைத்திருக்கிறது

நூல்: தமிழ்நாடு கீழ்த்திசை சுவடிகள் பதிப்பகம் வெளியிட்ட
"இடங்கையர் வலங்கையர் வரலாறு"

#சாக்கிய_பரையன்

Pulivendhan Uzhavu Paraiyan

#பரையர்வரலாற்றுமாதம்

வியாழன், 25 ஜூலை, 2019

வேளாண்மையில் முதுகுடி பரையர்கள்


வேளாண்மையில் முதுகுடி பரையர்கள்:
~~~~~~~~~~~~~~~~

🌾சாம்பவபரையர்கள் உருவாக்கிய சம்பா நெல் வகைகள்...

🌾முல்லைச் சம்பா
🌾சம்பா அரையன்
🌾வாடன சம்பா
🌾களர் சம்பா
🌾இலுப்பைப்பூ சம்பா
🌾மாப்பிள்ளை சம்பா
🌾கருடன் சம்பா
🌾சீரகச் சம்பா
🌾வாசனைச் சீரகச்சம்பா
🌾கைவரைச் சம்பா
🌾கிச்சடிச் சம்பா
🌾தேங்காய்பூ சம்பா
🌾குதிரைச் சம்பா
🌾கஸ்தூரி சம்பா
🌾நெல் சம்பா
🌾குணா சம்பா
🌾குண்டுமணி சம்பா
🌾கொத்தமல்லி சம்பா
🌾தூயமல்லி சம்பா
🌾கீர சம்பா
🌾கல்லன் சம்பா
🌾செரிய சம்பா
🌾முன் சம்பா
🌾சம்பா
🌾பின் சம்பா
🌾சின்ன சம்பா
🌾சடவாள் சம்பா
🌾குதிரைவாள் சம்பா
🌾தங்க சம்பா
🌾நீலன் சம்பா
🌾களியன் சம்பா
🌾சம்பா மொசானம்
🌾கரப்பிச் சீரகச் சம்பா
🌾கட்டிச் சம்பா
🌾கம்பஞ்சம்பா
🌾மொழிகருப்புச் சம்பா
🌾காட்டுச் சம்பா
🌾சேலம் சம்பா
🌾புழுதிச் சம்பா
🌾துளசிவாசச் சீரகச் சம்பா
🌾கொட்டாரச் சம்பா
🌾கைவிரச் சம்பா
🌾சன்னச் சம்பா
🌾செம்பிளி சம்பா
🌾கிச்சிலிச் சம்பா
🌾வைவரச் சம்பா
🌾வாழைப்பூ சம்பா
🌾நீலச் சம்பா
🌾கட்டைச் சம்பா
🌾புவன் சம்பா
🌾சம்பா போசளம்
🌾கண்டவாரிச் சம்பா
🌾வெள்ளைமிளகுச் சம்பா
🌾கலியன் சம்பா
🌾கம்பம் சம்பா
🌾கொச்சி சம்பா
🌾அனுபாதாம் சம்பா
🌾குங்குமச் சம்பா
🌾பழனிச் சம்பா
🌾சொல்லைச் சம்பா
🌾சுந்தர புழுகு சம்பா
🌾சம்பா முத்து
🌾பொன்னிரச் சம்பா
🌾சூரியச் சம்பா
🌾சின்னட்டிச் சம்பா
🌾வரகஞ் சம்பா
🌾பொட்டிச் சம்பா
🌾பவாச் சம்பா
🌾மூங்கில் சம்பா
🌾முத்துச் சம்பா
🌾கோட்டைச் சம்பா
🌾குண்டைச் சம்பா
🌾பொய்கைச் சம்பா
🌾மிளகுச் சம்பா
🌾கோதுமைச் சம்பா
🌾கார்த்தியச் சம்பா
🌾கனகச் சம்பா
🌾கடம்புச் சம்பா
🌾ஈர்க்கச் சம்பா
🌾கருவாயன் சம்பா
🌾வாசிச் சம்பா
🌾புன்னைச் சம்பா
🌾உவர்ச் சம்பா
🌾சிறுமணிச் சம்பா
🌾பூவன் சம்பா
🌾வெங்குச் சம்பா
🌾செம்பவளச் சம்பா


மேற்கண்ட நெல் வகைகளை போல் இந்தியா முழுவதும் ஒரு இலட்சம் நெல் வகைகள் இருந்து வந்தன.

தமிழகத்தில் மட்டும் சுமார் 10000 பாரம்பரிய நெல் வகைகளை நம் முன்னோர்கள்
பயிரிட்டு வந்துள்ளனர்.
இரசாயணம் பூச்சி கொல்லி மருந்துகளுடன் கூடிய நவீன வேளாண்மையின் வரவு ஆயிரக்கணக்கான பாரம்பரிய நெல் நம் மண்ணில் இருந்து அழிந்துவிட்டது

உழவுகுடிகள் என்போர் அந்த குடியின் பெயரால் இது போன்ற வித்துகளை காட்ட இயலுமா!

#உழவுப்பரையர்

வெள்ளி, 19 ஜூலை, 2019

பாணர் குலம் (எ) மதங்கர் குலம்.



பாணர் குலம் (எ) மதங்கர் குலம்.

பாணர், பரையர், துடியர், கடம்பர் இவை நான்கல்லாது வேறு குடிகள் இல்லை .  இசைக்கு அதிபதிகள் என்றால் அது பாணர்களே. அவர்களில் சிலர் அரசர்களாகவும் இருந்துள்ளார்கள்.

        பண், பாண், பாட்டு என்னும் சொற்கள் தமிழில் ஆதியிலிருந்தே உள்ளன. பாணர்களே முதலில்  பாடுநராக இருந்தனர். முல்லைத் திணைக் காலத்தில் அரசன் உருவான பின்னர் அரசவைப் பாணர்களும், புலவர்களுமாக உயர்வடைந்த அவர்கள், தமிழரிடையே ஆதியிலிருந்து மதிக்கப்பட்டனர். தூய தமிழ்ப்பண்பாடு தொடங்கிய நீண்ட நெடுங்காலத்தில் பாணர், அரசன் நண்பர்களாகவும், அறிவுரை கூறுநராகவும் இருந்தனர்.
பாணர்கள், முத்தமிழும் இசை நாடகம் என்னும் இரண்டையும் வளர்ப்பதாலும் இசையில் தமிழர்க்கும் தமிழரசர்க்கும் இருந்த பேரார்வத்தினாலும் அவர்களுக்கு அரசர் அவைக் களங்களிலும் தடையில்லாத நுழைவு கிடைத்தது. பரிசுகளும் மரியாதைகளும் கிடைத்தன. அரசர் பாணர்க்குப் புலவுச் சோறு, இனிய மது, பொன்னரி மாலை, வெள்ளி நாரால் தொடுத்த பொற்றாமரைப்பூ, களிறு, குதிரை பூட்டிய தேர் முதலியவற்றை நிரம்பக் கொடுத்ததாகப் புறநானூறு பதிவு செய்திருக்கிறது. பாணர் பல அரசரிடம் சிறப்புப் பெற்றனர் என்றாலும் பொதுவாக வறுமையால்
வருந்தினார்கள். வள்ளல்களைத் தேடி மலை, காடு என்று திரிந்தனர் என்கிறது தொல்காப்பியம்.

நா நிலத்துக்கும் உரிய தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, பறை, யாழ், பண் இவற்றைக் ‘கருப்பொருள்’ என வகைப்படுத்துவர். மக்கள் வாழ்வியலுக்கு ஏற்பவும், நிலத்தின் தட்ப வெப்பங்களுக்கு ஏற்பவுமே உற்பத்தி உறவுகள் அமையும். ஆதலால் உணவுப்பொருளும் நிலத்துக்கு ஏற்பவே உற்பத்தி செய்யப்படும். இவற்றுள் குறிப்பிடத்தக்கன இரண்டு. ஒன்று பறை பற்றியது. மற்றொன்று யாழ் பற்றியது. பண்ணுக்குரிய கருவிகளை எல்லாம் யாழ் என்பதில் அடக்குகின்றனர்.
பறை வாசிக்கும் பாணர் பறைபாணர் என்றும் யாழ் மீட்டும் பாணரை யாழ் பாணர் என்றும் அழைக்கபட்டனர்.
பறை  வகைகளில் ஒன்றான இணைப்பறை, பாணர்கள் இசைத்து வந்த ஒரு கண்பறை யாகும். பாணர்கள் இசைப்பாடலுக்குக் கிணையை முழக்கினார்கள். காலையில் வள்ளல்களைத் துயில் எழுப்பிக் கிணையை இசைத்துப் பாடினார்கள். கிணையை இசைத்துக் குறிஞ்சி நிலத்தைப் பாடினார்கள். உழவினையும், எருதுகளையும் போற்றி யாழிலிட்டு இசைத்துக் கிணையைக் கொட்டி நாள்தோறும் பாட விரும்பினர். புறநானூற்றில் இடம் பெறும் செய்திகள் இவை.  யாழ் மீட்டுபவரே யாழ் பாணர்.றிஞ்சி யாழ், முல்லையாழ், மருதயாழ், நெய்தல் யாழ், பாலையாழ் என்று ஐவகை யாழின் அமைப்புக்கு ஏற்ப பெரும்பாணர் என்றும் சிறுபாணர் என்றும் இவர்கள் அழைக்கப்பட்டனர். தமிழரின் வாழ்வோடு இணைந்து வளர்ந்த இசையின் வளர்ச்சியில் இப்பாணர்களின் வளர்ச்சியும் அமைந்திருந்தது. இந்த வாணர்கள் பறைகளை முழக்கி, போர்க்களத்திலும், ஏர்க்களத்திலும் பாடியதுடன் அரசுச் செய்திகளை மக்களுக்கு அறிவிப்பதிலும் பெரும் பங்காற்றினர்.
யாழ் மீட்டும் பாணர்களை யாழ் பாணர் என்பர்.

  யாழ்ப்பாணர் குலத்தை வடமொழியில் மதங்கர் குலம் என்பர். அந்த குலத்தில் வந்தவர் மதங்க முனிவர்.  ராமாயண காலத்தில், ராமரின் வரவுக்காகக் காத்திருந்த சபரியின் குருநாதர் இவரே. மதங்க முனிவரின் தந்தை  சக்தியை வழிபடுபவர். நாத சைவத்தில் சிவ வவழிபாட்டிற்கு இணையாக சக்தியையும் வழிபடுவர். சிவம் - இரண்டையும் வேறாக நினைப்பவரில்லை.  மதங்க முனிவர் தன் தந்தையிடமே  மந்திர உபதேசம் பெற்று பிறகு கடும் தவம் மேற்கொண்டார். அன்னையின் அருள் தரிசனத்தைப் பெற்றார்.

மதங்கர் முன் தோன்றிய அன்னையிடம் அவர் எதையும் வேண்டவில்லை.
அன்னையும் விடவில்லை. “”தவம் செய்து தரிசித்தவர்களுக்கு வரம் ஈவது மரபு. எனவே நான் வரம் தந்தேயாக வேண்டும். நீ பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றாள். மதங்கர் உடனே தாயே தாங்களின் அம்சமாக எனக்கு மகளாகப் பிறக்க வேண்டும். அந்த பாக்கியத்தை அருளவேண்டும்” என்றார். அன்னையும் இணங்கினாள்.
சக்தியின் ஆசியினால்
மதங்கர்- சித்திமதி தம்பதிக்குத் சக்தியின் அம்சமாக மாதங்கி பிறந்தால்.
மதங்கரின் மகள் என்பதால் மாதங்கி எனப்பட்டாள். அவளுடன் பல தேவகன்னியர் மதங்க கன்னிகைகள் என உதித்தனர் என்றும்  அனைவரும் கடம்ப மரங்கள் நிறைந்த வனத்தில் வீணை மீட்டி இன்புற்றிருந்தனர் என்றும் கூறப்பபடுவர்.

இவளே பேச்சியம்மன், வன பேச்சி, காட்டு மீனாட்சி என்ற பெயரால் அழைக்கபடுகிறால். இவளை வடநாட்டில் தேவியை சியாமா என்பார்கள். சியாமளம் என்றால் நீலம் கலந்த பச்சை நிறம். காளிதாசன் போன்றவர்கள் மாதங்கி என்னும் பேச்சியம்மனால் வாக்கு திரனும் கவிதா சக்தியும் பெற்றனர்.

பாணர்களின் இசை ஞானத்திற்கு அஸ்திவாரமாக இருந்தவள் மாதங்கியே.
பாணர்கள் ஓதியதே சாம வேதத்தம். சாம வேதத்திலிருந்து பிறந்தது என கூறபடுகிறது. இன்று கர்நாடக இசை எனப் பெயர் கொண்டு உலவுவது தமிழிசையே. இதுவே 1565க்குப் பிற்காலத்தில் கர்நாடகச் சங்கீதம்’ என்று அழைத்தனர். சீர் – சீரை – சீர்மை; சீரன் – கீரன்; சீர்த்தி-கீர்த்தனை; ஆக தமிழ்ச் சிந்தனை கீர்த்தனையாகியது. இக்கீர்த்தனை வடிவம் (அதாவது பல்லவி, அனுபல்லவி, சரணம்) சங்க காலத்தில் உருவானதே.
இசையொரு (ஆடலும் நடனமும்) கூத்தும் சங்ககாலத்திலேயே சிறந்து விளங்கின. சிலப்பதிகாரத்தில் இந்தக் கலைகளின் உச்சநிலையைக் காணலாம். அடியார்க்கு நல்லார் உரை அக்கலை நுட்பங்களை விளக்குகிறது.
தமிழ் ஆடல் கலை 1925 வரை சதிக்கச் சேரி என்றே அழைக்கப்பட்டது. அப்பெயரை மாற்றி ‘பரத நாட்டியம்’ எனப் புதுப் பெயரிட்டவர் ஈ.கிருஷ்ண ஐயர். தமிழ் ஆடற்கலை ‘பரதர்’ பெயரில் வழங்கும் நாட்ய சாஸ்திரத்தில் இருந்து பிறந்தது எனக்கூறுவது பிதற்றல் என்பதை பாவேந்தர் பாரதிதாசன் தம் நூல்கள் பலவற்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சைவ பக்தி இலக்கியங்களை இசையமைத்து பாடியோர்கள்
பாணர் குலத்துப் பெண்களே.அவர்கள்  கல்வியறிவும் கலையறிவும் பெற்றிருந்தனர். அவர்கள் பாடினிகள் எனப்படுவர்.
பாணரோடு சேர்ந்து அவர்கள் துணைவியரும் பண் பாடுவர், பாட்டிசைப்பர். இவர்களைப் பாடினி என்று அழைப்பர். பாடினியர் கூத்துக் கலையிலும் வல்லவர்கள். அபிநயங்கள் காட்டி ஆடுவார்கள். யாழ்க் கருவியிலும், இனிய இசையை மீட்டுவார்கள். பாணரைப் போலவே, பாடினியரும் பலவகைப்படுவர். பாடினிகளுக்குப் பாண்மகள், விறலி, பாடினி, மதங்கி, பாட்டி, பாடன்மகடு எனப் பல பெயர்கள் இருந்தன.
பாடினியர், இனிய குரல்வளம் கொண்டவர்கள். மென்மையான அழகுள்ளவர்கள். மயில் போன்ற சாயல் கொண்டவர்கள். அறிவுக்கூர்மை மிக்கவர்கள். இது போன்ற பல செய்திகளை முடத்தாமக்கண்ணியார், சங்கத் தொகை நூல்களுள் ஒன்றான பத்துப்பாட்டுக்களின் கீழ் அடங்கும் பொருநராற்றுப்படை என்னும் நூலில் தருகிறார்.  காக்கைப் பாடினியார்,
ஔவையார்,  போன்ற பல சாதாரன  குடும்பப் பெண்கள் புலமையினால் புகழ் பெற்றிருந்தர்.

பாணர், பரையர், துடியர், கடம்பர் இவை நான்கல்லாது வேறு குடிகள் இல்லை .  இசைக்கு அதிபதிகள் என்றால் அது பாணர்களே. அவர்களில் சிலர் அரசர்களாகவும் இருந்துள்ளார்கள்.இந்நாண்கு குலங்களில் இருந்தே நாம் காணும் பலவாரான சாதிகள் தோன்றியுள்ளன. இதற்கு ஆதாரமாக கே கொங்கு வேளாளர் தொடங்கி  நாடு முழுக்க பல சாதிகளில் பரையரை ஒரு பிரிவினராக இருப்பதை காணமுடிகிறது. கொண்டையன் கோட்டை மறவர்களில் சாம்பான் கிளை & ஔவையார் கிலை இருப்பதை இன்றும் காணமுடிகிறது. திருவள்ளுவரும் தன் ஞான வெட்டியானில் ""ஔவை வழி வந்த சாம்பவன் நான்" என்றே பதிவு செய்கிறார்.

பாணர் குலம் (எ) மதங்கர் குலத்தவரின் பெருமைகளை ஒரே பதிவில் சொல்ல முடியாது.

தென்காசி மாவட்டத்தின் சிறப்புகள்


தென்காசி மாவட்டத்தின் சிறப்புகள்

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும் சுற்றுச்சூழலில் அமைந்துள்ளது. குற்றாலம் அருவிகள் இந்நகரத்தில் அருகாமையில் உள்ளதால் இது சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் ஒரு நகரமாக அமைந்துள்ளது. இவ்வூர் பருவ மழைத் தூறலுக்குப் பெயர் போனது. மக்கள் இதை சாரல் மழை என்றும் அழைப்பதுண்டு.

இவ்வூரின் அமைவிடம் 8.97°N 77.3°E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143 மீட்டர் (469 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 62,828 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள் இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். தென்காசி மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தென்காசி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

வரலாறு

முன்னொரு காலத்தில் தென்காசியை ஆட்சி செய்த பராகிராம பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றி தெற்கில் உள்ள என்னுடைய பக்தர்கள் சிலர், வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும் போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர். அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் தென்காசி கோபுரத்தை கட்டுமாறு ஆணையிட்டுள்ளார். அதனை ஏற்று பராகிரமபாண்டிய மன்னனால் கட்டப்பட்டதுதான் தென்காசி கோபுரம் ஆகும். இந்த கோயிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது.
முற்காலத்தில், சோழர்கள் புகழ் மங்கி பாண்டியர்களின் கை ஓங்கியது. அந்தக் காலகட்டத்தில், பாண்டியர்களும் இலங்கை மீது படையெடுத்தனர். தென்காசியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி நடத்திய அரிகேசரி பராக்கிரமபாண்டியன் (கி.பி.1422-61) இலங்கை மீது படையெடுத்து சிங்களரை பலமுறை வென்றதாக கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.


இது திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து புதிய மாவட்டமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் 18 ஜுலை 2019 அன்று பிரிக்கப்பட்டுள்ளது.

வணிகம்

தென்காசியில் வணிகம் மிகவும் முன்னேற்றம் அடைந்து காணப்படுகிறது. எனினும் எந்த தொழிற்சாலையும், பெரிய உற்பத்தி நிலையமோ இல்லை. எனினும் பல பாரம்பரியம் மிக்க துணியகங்கள் இங்கு உள்ளன. தற்போது வந்துள்ள நவீன உணவகங்களால் இந்நகரம் சிறப்படைந்துள்ளது. நகை கடைகள், பல்பொருள் அங்காடி என எல்லா வகை வணிகமும் நடைபெறுகின்றன.

கல்வி நிறுவனங்கள் கல்லூரிகள் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி சட்டநாத கரையாளர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஸ்ரீராம் நல்லமணி யாதவா மருந்தியல் கல்லூரி ஜே. பி . பொறியியல் கல்லூரி ஜே. பி . கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருள்மகு செந்திளாண்டவர் தொழில்நுட்ப கல்லூரி

பள்ளிகள் வீரமாமுனிவர் ஆர்.சி மேல்நிலைப்பள்ளி புனித மிக்கேல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி புனித அருளானந்தர் மேல்நிலைப்பள்ளி இராமசாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளி வள்ளி நாயக தொடக்க பள்ளி செய்யத் மெட்ரிக் பள்ளி அக்பர் பிரேமரி பள்ளி இ. சி. இ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இந்து மேல்நிலைப் பள்ளி- கீழப்புலியூர் நேரு மேல்நிலைப் பள்ளி எம்.கே.வி. கந்தசாமி நாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஸ்பெக்ட்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி USP மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நல்லமணி மெட்ரிக்குலேஷன் பள்ளி AG மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இம்மானுவேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இசக்கி வித்யாலயா CBSC பள்ளி

வங்கிகள்

பாரத ஸ்டேட் வங்கி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
இந்தியன் வங்கி
கனரா வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி
கார்ப்பரேஷன் வங்கி
ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர்
கரூர் வைஸ்யா வங்கி
சிட்டி யூனியன் வங்கி
பேங்க் ஆஃப் பரோடா
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, குத்துக்கல்வலசை
IDBI வங்கி

தேவாலயங்கள்

புனித மிக்கேல் அதிதூதர் கத்தோலிக்க திருத்தலம் - தென்காசி கத்தோலிக்க வட்டாரத்தின் முதன்மை ஆலயமாகும். இது நூற்றாண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்தது. ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இவ்விழாவில் இங்குள்ள இசுலாமியர்களும் பங்கு கொண்டு ஒற்றுமையின் சின்னமாக திகழ்கிறார்கள். கேரள பக்தர்கள் அதிகம் பேர் வருவதால் மலையாள மொழியிலும் வழிபாடு நடைபெறுகிறது. சர்வேசுவரன் கோவில் என்று பிற மதத்தவரால் அழைக்கப்படுகிறது.

கோயில்கள்

தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில்
குலசேகரநாதர் கோயில்
மேல முத்தார அம்மன் கோயில்
திருவிலஞ்சி பெருமான் கோவில்
குற்றாலநாதர் திருக்கோவில்
Sidhambareshwarar koil
Sankaran Koil
Thenpalani Aandavar koil
Porundhinindra Perumal koil

பள்ளிவாசல்கள்

வேம்படி மலுக்கர்ஷா ஜூம் ஆ பள்ளிவாசல்,
புதுமனை - சொர்ணபுரம் மஸ்ஜிதுல் முபாரக் ஜூம் ஆ பள்ளிவாசல்
செய்யது சுலைமான் பிர்ஜதே ஜூம் ஆ பள்ளிவாசல்,
தவளபுரம் ஜூம் ஆ பள்ளிவாசல்,
ஐந்து வர்ணம் பெரிய ஜூம் ஆ பள்ளிவாசல்,
இஸ்மாயீல் மீயான் ஜும்மா பள்ளிவாசல்,
நடுபேட்டை ஜூம் ஆ பள்ளிவாசல்,
மஸ்ஜிதுர் ரஹ்மான், (தமுமுக)
பஜார் ஜூம் ஆ பள்ளிவாசல்
மரைக்காயர் ஜூம் ஆ பள்ளிவாசல்,
ராஜ் மீயான் ஜூம் ஆ பள்ளிவாசல்,
ஜாமியா அல்தாபூர் ரப்பானிய அரபிக் கல்லூரி ஜூம் ஆ பள்ளிவாசல்,
மஸ்ஜிதுத்தவ்ஹீத் (JAQH)
ஆபாத் ஜூம் ஆ பள்ளிவாசல்,
ஜமாலியா நகர் ஜும்மா பள்ளி வாசல்,
மாலிக்நகர் ஜும்மா பள்ளி வாசல்,
ஹௌத்துல் ஆலம் ஜூம்மா பள்ளி வாசல்,
மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜூம் ஆ பள்ளிவாசல் (புதிய பேருந்து நிலையம்)
மஸ்ஜிதுஸ் (TNTJ)
மஸ்ஜிதுஸ் (TNTJ)
மதரஸத்துல்யா (TNTJ)


சுற்றுலா தலங்கள்

ராமநதி அணை
கடனாநதி அணை
உலக அம்மன் கோவில்
குற்றாலம்
ஐந்தருவி
புலியருவி
பழைய குற்றாலம்
குண்டாறு நீர்த் தேக்கம் (செங்கோட்டை)
திருமலைக் கோவில்
அடவிநயினார் நீர்த்தேக்கம்
அச்சங்கோவில் (கேரள மாநிலம்)
புகழ்பெற்ற சிலர்
தொகு
திரிகூட ராசப்பகவிராயர்
ரசிகமணி டி. கே. சி
தியாகி சட்டநாத கரையாளர்
சு. மச்சேந்திரநாதன் (இ.ஆ.ப.)
முக்கிய இடங்கள்
தொகு
அகரக்கட்டு
ஆசாத் நகர்
மார்க்கெட்
கீழப்புலியூர்
S வளைவு சிக்னல்
கோட்டை வாசல்
நீதிமன்றம்
மேம்பாலம்
மவுண்ட் ரோடு
கொடிமரம்
தவளபுரம்
புதுமனை & செக்கடி
காட்டுபாவா கார்னர்
அரசு குடியிருப்பு வாரியம் காலனி
மேலகரம்
வாய்கால் பாலம்
யானைப்பாலம்
மின்சார வாரியம் சிக்னல்
பழைய பேருந்து நிலையம்
புதிய பேருந்து நிலையம்
நடு பெட்ரோல் பங்க்
ஐடிஐ

போக்குவரத்து

தொடருந்து போக்குவரத்து

தென்காசியின் மையப்பகுதியில் இரயில் நிலையம் அமைந்துள்ளது.

சென்னை‍‍- செங்கோட்டை- சென்னை பொதிகை அதிவிரைவு வண்டி தினமும் உண்டு.
சிலம்பு விரைவு வண்டி (செங்கோட்டை-சென்னை-செங்கோட்டை),
சென்னை-கொல்லம் தினசரி எக்ஸ்பிரஸ் (வழி: செங்கோட்டை)
மதுரையிலிருந்து (வழி - விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர்) செங்கோட்டை வரையான பாசஞ்சர் ரயில் தினசரி காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளும் இயக்கப்படும். தினமும்  மதியம் திருநெல்வேலியிலிருந்து கொல்லத்துக்கு பயணிகள் ரயில் இயக்கம் உள்ளது.
திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டை (வழி - டவுன், பேட்டை, சேரன்மாதேவி, வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், ஆழ்வார்குறிச்சி, கீழக்கடையம், பாவூர்சத்திரம்) வரையான பாசஞ்சர் காலை மாலை என நான்கு வேளையும் உள்ளது.

பேருந்து போக்குவரத்து

இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. அவை தென்காசி நகராட்சி புதிய பேருந்து நிலையம் மற்றும் அறிஞர் அண்ணா பழைய பேருந்து நிலையம்.

தென்காசியிலிருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், ராமேஸ்வரம், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருச்செந்தூர், அம்பாசமுத்திரம், பாபநாசம், செங்கோட்டை, சங்கரன்கோவில், கோவில்பட்டி, இராஜபாளையம், மதுரை, தேனி, குமுளி, போடி,விருதுநகர், திருச்சி, திருப்பூர், சிவகாசி, சென்னை, கோயமுத்தூர், சேலம், ஈரோடு, சத்தியமங்கலம், வேளாங்கண்ணி, சிதம்பரம்,புதுச்சேரி, திருவண்ணாமலை, வேலூர் என தமிழ்நாட்டின் ஏனய பகுதிகளுக்கு செல்ல நேரடியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், கேரள மாநிலத்தின் கொல்லம், சங்கனாச்சேரி, திருவனந்தபுரம், புனலூர், கொட்டாரக்கரை, பத்தனம்திட்டா போன்ற முக்கிய நகரங்களுக்கும், பெங்களூரு, திருப்பதி, பாண்டிச்சேரி போன்ற வெளிமாநில நகரங்களுக்கும் பேருந்து வசதி உள்ளது.

விமான நிலையங்கள்

மதுரை விமான நிலையம் (சிற்றுந்தில் 3 மணி நேர பயணம்),
திருவனந்தபுரம் விமான நிலையம் (சிற்றுந்தில் 3 மணி நேர பயணம்),
தூத்துக்குடி விமான நிலையம் (சிற்றுந்தில் 3 மணி நேர பயணம்)

எல்லைகள்

கிழக்கில் சீதபறப்ப நல்லூரையும் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தையும்; மேற்கில் கேரளத்தையும்; வடக்கில் விருதுநகர் மாவட்டத்தையும்; தெற்கில் திருநெல்வேலி மாவட்டத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

அரசியல்

நாடாளுமன்றத் தொகுதி 1

தென்காசி மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிகள் 5

தென்காசி (சட்டமன்றத் தொகுதி)
ஆலங்குளம் (சட்டமன்றத் தொகுதி)
வாசுதேவநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)
சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி)
கடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி).

மாவட்ட நிர்வாகம்

வருவாய் வட்டங்கள்

ஆலங்குளம்
சங்கரன்கோயில்
செங்கோட்டை
சிவகிரி
தென்காசி
கடையநல்லூர்
திருவேங்கடம்

உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்

நகராட்சிகள்

சங்கரன்கோவில்
தென்காசி
கடையநல்லூர்
செங்கோட்டை
புளியங்குடி

பேரூராட்சிகள்

அச்சம்புதூர் · ஆலங்குளம் · ஆய்குடி  · குற்றாலம் · இலஞ்சி · கீழப்பாவூர்  · மேலகரம் · முக்கூடல் · பணகுடி·பண்பொழி  · இராயகிரி · சம்பவர் வடகரை  · சிவகிரி · சுந்தரபாண்டிபுரம் · சுரண்டை · திருவேங்கடம்· · வாசுதேவநல்லூர் ·

ஊராட்சி ஒன்றியங்கள்

ஆலங்குளம்
கடையநல்லூர்
கடையம்
கீழப்பாவூர்
குருவிகுளம்
சங்கரன்கோவில்
செங்கோட்டை
பாப்பாக்குடி
மேலநீலிதநல்லூர்
தென்காசி
வாசுதேவநல்லூர்


இந்து சமயக் கோயில்கள்

திருக்குற்றால தலபுராணம், தென்காசி தலபுராணம், கருவை தலபுராணம், திருச்செந்தூர் புராணம் போன்ற நூல்களில் தென்பாண்டி நாட்டில் உள்ள சிவாலயங்கள் திரி (3), பஞ்ச (5), அஷ்ட (8), நவ (9), தச (10) போன்ற எண்ணிக்கையில் பிரித்து நம் முன்னோர்கள் வழிபட்டுள்ளனர். குற்றாலத்தில் குற்றாலம் குற்றாலநாதர் கோயில் அமைந்துள்ளது.

சித்ர சபை - திருக்குற்றாலம்

தென்பாண்டி நாட்டின் பஞ்ச பூத தலங்கள்

சங்கரன்கோவில் - சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில் - மண் தலம் (ப்ருத்திவி)
கரிவலம்வந்தநல்லூர் - பால்வண்ணநாதர் - அக்னி தலம்
தாருகாபுரம் - நீர் தலம்
தென்மலை- காற்று தலம்
தேவதானம் - ஆகாய தலம் (இது தற்போதைய விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது)


வாலி வழிபட்டத் தலங்கள்

கீழப்பாவூர் - திருவாலீஸ்வரர் திருக்கோயில்
தென்காசி வாலியன்பத்தை - திருவாலீஸ்வரர் திருக்கோயில்

தேவாரத் திருத்தலம்

குற்றாலம் குற்றாலநாதர் திருக்கோயில், .

வேறு சில ஆலயங்கள்

தென்காசி. தென்னிந்தியாவின் காசி (வாரணாசி) என்று அழைக்கப்படும் இந்நகர் சுமார் 400 ஆண்டுகால வரலாறு கொண்டது.
சங்கரன்கோவில் எனும் ஊரில் உள்ள சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில் தனிச்சிறப்பு பெற்று விளங்குகிறது. இந்நகர் கி.பி.11ஆம் நூற்றாண்டில் உருவானது.

ஆற்றுவளம்

மேற்குத் தொடர்ச்சி மலை இருப்பதால் பல சிற்றாறுகளும், பேராறுகளும் இங்கு உற்பத்தியாகி நீர்வளத்தைத் பெருக்கியுள்ளன.


சிற்றாறு

இதன் நீளம் 62 கி.மீ. இந்த ஆற்றினால் தென்காசி-திருநெல்வேலி வட்டங்களில் 27,000 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. குற்றாலமலை அருவியிலிருந்து ஆறாக உருபெறுகிறது.

அணைகள்

ஸ்ரீமுகப்பேரி அணை
தென்காசி வட்டத்திலிருந்து வரும் கறுப்ப நதி மூன்று மைல்கள் தூரம் ஓடி, பிறகு அனும நதியோடு இணைகிறது. இவ்விடத்தில் மோட்டை அணையும், ஸ்ரீமுகப்பேரி அணையும் உள்ளன. இராமாநதித்திட்டத்தின் மூலம் 1,500 ஏக்கரும், கருணையாற்றின் திட்டத்தால் 7,500 ஏக்கரும் பாசனம் பெறுகின்றன.

மலைவளம்

திருநெல்வேலியிலுள்ள பணகுடிக்கு அருகில் இருந்து ஆரம்பிக்கும் மேற்கு தொடர்ச்சி மலை மும்பை வரை செல்கிறது. சிவகிரியில் உள்ள மலையில் 20 மலை முகடுகள் உள்ளன. இவற்றின் சராசரி உயரம் 1500 மீட்டர் ஆகும்.

அகத்தியமலை

பொதிகை மலை என்பது இதுதான். இதன் உயரம் 1800 மீ. இங்குதான் தாமிரபரணி உற்பத்தியாகிறது. அகத்தியர் மலை மலைமுகடுகளால் போர்த்தப்பட்டே காட்சி தரும். இரண்டு பருவக்காற்றாலும் இம்மலை நன்மை அடைகிறது.

காட்டு வளம்

தென்காசி வட்டங்கள். செங்கோட்டை வட்டத்துக் காடுகளில் இரயில் பாதை போடப்பயன்படும் 'ஸ்லீப்பர்' கட்டைகளுக்கு உதவும் மரங்கள் உள்ளன. அம்பாசமுத்திரம் காடுகளில், மயிலை, நெடுநாரி, மதகிரிவேம்பு, நங்குல், செங்குரஞ்சி மரங்களும், பிரம்பு வகை களும், ஈச்ச மரங்களும், தேக்கு, கோங்கு தோதகத்தி, நாங்கு மரங்களும் அடர்த்தியாக உள்ளன. செங்கோட்டை காடுகளில் காகிதக் கூழ் செய்ய உதவும் ஈடா ரீட் மரங்கள் ஆண்டுதோறும் 10,000 டன் அளவுக்குப் பயிராக்கப்படுகின்றன. மரங்களைத் தவிர பிசின் மரம், மஞ்சக்கடம்பன், கரையானால் அரிக்க முடியாத விடத்தேரை ஆகிய மரங்களும் மிகுதியாக வளர்கின்றன.

காட்டு விலங்குகள்

செங்கோட்டை காடுகளில் யானை, காட்டெருமை இன்னும் பல வகையான விலங்குகள் காணப்படுகின்றன. சங்கரன் கோவில்,  காட் டெருதுகள் காணப்படுகின்றன. புலிகள் மேற்கு தொடர்ச்சி மலை முழுவதும் உள்ளன. சிறுத்தைக் குறைவு. தேனுண்ணும் கரடி வகை அதிகம். தலை சிறுத்த சாம்பர் மானும், குற்றாலம்,  பகுதிகளில் மலையாடுகளும் உள்ளன. எலிமான்கள் போன்ற இவை கண்களுக்குத் தெரிவதில்லை. மான் போன்ற தோற்றம் கொண்ட மறிமான்களும், காட்டு நரிகள், நீண்டவால் குரங்குகள் போன்றவையும் காணப்படுகின்றன.

பறவைகள்

உள்ளான்களும், மரஉள்ளான்களும் தாழ்ந்த மலைக் குன்றுகளில் அதிகமாக வாழ்கின்றன. மேற்கு தொடர்ச்சி மலையில் பல்வேறு விதமாகப் பூச்சிகள் வாழ்கின்றன.

நிலவளம்

மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகள் குறிஞ்சி நிலமாகவும், முல்லை நிலமாகவும் உள்ளன.

வேளாண்மை

சங்கரன்கோயில் வட்டத்தில் பருத்தியும், மிளகாயும் மிகுதியாக விளைகின்றன. இம்மாவட்டத்து நெல் வகைகளுள், ஆனைக் கொம்பன் என்னும் வகை குறிப்பிடத்தக்கது. 19-ஆம் நூற்றாண்டில் பருத்தி விளைச்சல் அதிகம் இருந்தது. தற்போது குறைந்தளவே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தென்காசி வட்டத்தில் உளுந்து, சோளம் ஆகிய வையும் சங்கரன்கோயில்  வட்டங்களில் மிளகாயும், தென்காசி வட்டத்தில் மிளகும் விளைகின்றன. இங்கு மாம்பழ விளைச்சலும் அதிகம். இவை எல்லாக் காலங்களிலும் இங்குக் கிடைக்கின்றன. .

பணப்பயிர்கள்

குற்றாலத்திற்கு மேல் மலைப்பகுதியில் இருக்கும் தெற்குமலை எஸ்டேட்டுகளும், ஹோப் எஸ்டேட்டுகளும் குற்றாலத்துத் தேனருவிக்குச் செல்லும் வழியில் உள்ள தெற்குமலை எஸ்டேட்டுகளும் குறிப்பிடத்தக்கனவாகும்.


சுற்றுலாத் தலங்கள்

இம்மாவட்டத்தில் கட்டாயம் காணவேண்டிய இடங்களாக கீழேகண்ட இடங்களைக் குறிப்பிடலாம் :

சஙகரன் கோவில் .

புளியங்குடி  தலைணை.

குற்றாலம்

பேரருவி

ஐந்தருவி

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் குற்றாலம் நகரும் ஒன்று. குற்றாலம் குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய நிலங்களை தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது. இங்கு குளித்து மகிழ இயற்கையாக அமைந்த அருவிகளான பேரருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, செண்பகாதேவி அருவி, பேரருவி, சிற்றருவி, புலி அருவி, பழைய குற்றால அருவி, தேனருவி என்று பல நீர்விழ்ச்சிகள் உள்ளன. இங்கு குளிப்பதால் உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கிறது என்று 1811 ஆம் ஆண்டில் ஆங்கில ஆட்சியாளர்களான கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் அனுப்பிய மருத்துவ குழுவினர் தங்களது ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளனர். தென்பொதிகைச் சாரலில் அமைந்துள்ள இந்த குற்றால மலையில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் உள்ளன. இந்த மூலிகைச் செடிகள் மீது பட்டு விழும் மழைத்துளிகள் பின்னர் அருவியாக ஓடி வருவதால் இதில் அனைத்து மூலிகை செடிகளின் மருத்துவ குணங்களும் கலந்துள்ளது என்கிறார்கள்.

இங்கு ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் அருவிகளில் குளிக்க திரளான மக்கள் கூடுவர். சில ஆண்டுகளில் இயற்கை மாற்றங்களினால் மே மாத துவக்கத்திலே அருவிகளில் நீர் கொட்ட துவங்கிவிடும்.

குற்றாலத்தில் பல அருவிகள் உள்ளன. அதில் மிகவும் ஆபத்தானது தேனருவி, இங்கு தேன்கூடுகள் பல உள்ளதால் இப்பெயர் பெற்றுள்ளது. இங்கிருந்து இரண்டரை கி.மீ கீழே செண்பகா தேவி அருவி உள்ளது. இங்கு செண்பகா தேவியம்மன் ஆலயம் இருக்கிறது.

தமிழகத்தில் நடராஜர் நடனமாடிய 5 சபைகளில் திருகுற்றாலநாதர் ஆலயம் சித்திர சபை என்று அழைக்கப்படுகிறது. இங்கு குறுமுனி என்றழைக்கப்பட்ட தமிழ் மாமுனிவர் அகத்தியர் வழிபட்ட குற்றாலம் குற்றாலநாதர் கோயில் சன்னதி உள்ளது.

சிறப்புக்கள்

பழம் பொருட்கள் கண்டுபிடிப்பு

உக்கிரபாண்டியன் கட்டிய கோட்டையும், அகழியும் இன்றும் உக்கிரன்கோட்டையில் காணலாம். வீரகேரளம்புதூரில் ஊற்றுமலை ஜமீன்களின் அரண்மனை இன்றுள்ளது. மலையடிக் குறிச்சியிலும் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


பூலித்தேவன் நினைவகம்

ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக முதன்முதலாக போர் முரசு கொட்டியவன் மாவீரன் பூலித்தேவன். 1715 ஆம் ஆண்டு பிறந்த பூலித்தேவன் ப1755 ஆம் ஆண்டு ஆங்கிலத் தளபதி ஆரோனுக்கு வரி தர மறுத்து சுதந்திரப் போராட்டத்தைத் தொடங்கினான். தொடர்ந்து ஆங்கிலேயருடன் போரிட்டு அவர்களை புறமுதுது காட்டச் செய்தான். இத்தகைய மாவீரனை சங்கரன்கோயிலில் தனது இஷ்ட தெய்வத்தை வணங்கிக் கொண்டிருந்த போது வஞ்சகமாகக் பிடிக்க சுற்றி வளைத்தது ஆங்கிலேயப் படை. ஆனால் அவரோ அங்குள்ள குகை ஒன்றினுள் போனான். எதிரிகளிடம் சிக்கவும் இல்லை. என்ன ஆனான் என்று தெரியவும் இல்லை. இந்த மாவீரனுக்கென்று சிவகிரி வட்டம் நெற்கட்டும்செவலில் ஒரு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.

பிரானூர் பார்டர் புரோட்டா

இதேபோல், செங்கோட்டை அருகில் உள்ள பிரானூர் பார்டர் புரோட்டாவும் உலக அளவில் தமிழர்கள் மத்தியில் சிற்பபு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதுத

சங்கரன்கோவில் பிரியாணி

தமிழ்நாட்டின் சங்கரன்கோவில் பகுதியில் இந்த வகை ஆட்டிறைச்சி பிரியாணி மிகவும் பெயர் பெற்றது. இங்குள்ள ஆடுகளின் வளர்ப்பும் அரிசியின் தரமும் இதன் சிறப்புகளாக உள்ளன.தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் வளர்க்கப்படும் கன்னி என்ற வகையைச் சேர்ந்த ஆடுகள் சுவையில் சிறந்தவை. சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டுமே அல்லாமல் வெளி ஊர் மற்றும் வெளிமாநில மக்களின் நல்லாதரவைப் பெற்றது

செவ்வாடு

இந்த மாவட்டத்திற்கு உட்பட்ட மேலநீலிதநல்லூர், மானூர், பாப்பாகுடி, ஆலங்குளம், நாங்குநேரி,மற்றும் பாளையங்கோட்டை போன்ற பகுதியில் வளர்க்கப்படும் செவ்வாடுகள் உடற்கூறு மற்றும் மரபு அமைப்பின்படி சர்வதேச அங்கீகாரம் பெற்று விளங்குகிறது. இவற்றுள் அரிச்செவ்வாடு, கருஞ்செவ்வாடு என இவை இரண்டுவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள்

இரத்தினவேல் பாண்டியன் - முன்னாள் திமுக மாவட்டச் செயலாளர் , உயர்நீதிமன்ற நீதிபதி
சங்கரன்கோவில் சொ. கருப்பசாமி - முன்னாள் அதிமுக அமைச்சர்.
சங்கரன்கோவில் ச. முத்துசெல்வி - சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி)
புளியங்குடி க.பழனிச்சாமி - நகைச்சுவைப் பேச்சாளர் & மதிமுக தலைமை அரசியல் ஆலோசகர்
வைகோ - மதிமுக பொதுச்செயலாளர்
ஆலடி அருணா - முன்னாள் திமுக அமைச்சர்
பூங்கோதை ஆலடி அருணா -முன்னாள் திமுக அமைச்சர்
கருப்பசாமி பாண்டியன் - திமுக மாவட்டச் செயலாளர்
பீட்டர் அல்போன்ஸ் - காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர்
பூ. செந்தூர் பாண்டியன் - அமைச்சர் அதிமுக மாவட்டச் செயலாளர்
எம். அருணாசலம், முன்னாள் மத்திய அமைச்சர்.

தென்காசி மாவட்டத்தில் இடம் பெறும் பகுதிகள்.. தாலுகாக்கள் விவரம் தமிழக அரசு அரசாணையில் வெளியிட்டுள்ளது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தென்காசி மாவட்டத்தின் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அவற்றின் விவரங்களை தமிழக அரசு அரசாணையில் வெளியிட்டுள்ளது. அவற்றின் விவரங்களை பார்க்கலாம்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து தென்காசி மாவட்டம் உருவாக்கப்படும் என்ற அண்மையில் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் தென்காசி மாவட்டத்திற்கான எல்லைகள் மற்றும் வருவாய் தாலுகாக்கள், கோட்டங்கள் தொடர்பாக அரசாணையை தமிழக அரசு  வெளியிட்டுள்ளது.

இதன்படி தென்காசி மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில் (புதியது) ஆகிய இரண்டு கோட்டங்களுடன் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வி.கே.புதூர், சங்கரன்கோவில், திருவேங்கடம், ஆலங்குளம் என எட்டு தாலுகாக்களும் இடம் பெறுகிறது.

#tenkasi_district

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி மற்றும் சேரன்மாதேவி ஆகிய இரண்டு கோட்டங்கள் உள்ளது. அத்துடன் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மானூர், நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி, திசையான்விளை ஆகிய 8 தாலுகாக்கள் இடம் பெறுகிறது.

இதற்கான அரசாணையை தமிழக அரசின் முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*


வெள்ளி, 12 ஜூலை, 2019

முன்பக்கம் மனித உரு ! பக்கவாட்டில் காளை வடிவம் கொண்ட வித்தியாசமான நந்தியெம்பெருமானின் அற்புத சிலை !!


முன்பக்கம் மனித உரு ! பக்கவாட்டில் காளை வடிவம் கொண்ட வித்தியாசமான நந்தியெம்பெருமானின் அற்புத சிலை !!

மகாராஷ்டிரா மாநிலம், சதாரா மாவட்டம் பாதேஸ் கிராமத்தில் அருள்மிகு பாதேஸ்வர் மகாதேவ் திருக்கோயில் உள்ளது. எட்டு பெரிய குகைகளையும் பல சிறிய குகைகளையும் கொண்ட பெரியதொரு வளாகம்.

பதினாறாம் நூற்றாண்டு காலத்தவை இவை என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆயிரம் சிவலிங்கங்களைக் கொண்ட ஒருசில சிவாலயங்களில் இதுவும் ஒன்று. அற்புத சிற்ப வேலைகளுக்கு இந்த தலம் புகழ் வாய்ந்தது.

நேராகப் பார்க்கும் பொழுது மனித முகத்துடன், ஏழு திருக்கரங்களும் இரு கால்களும் கொண்டு அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். பாதங்களின் உட்பகுதிகள் இரண்டும் பட்டுக்கொண்டிரும் அமர்ந்தநிலை.

வலப்பக்கத் திருக்கரங்களில் அம்பும் மழுவும் கொண்டும் மற்றொரு கரம் வரதஹஸ்தமாகவும் உள்ளது.
இடப்பக்கத் திருக்கரங்களில் கேடயமும் வில்லும் கொண்டு, மற்றொரு கரம் அபயஹஸ்தமாக உருத்திராக்க மாலையைக் கொண்டுள்ளது.

இப்படி மனித முகத்துடன் ஏழு கரங்கள், இரண்டு கால்கள் கொண்டு முன்பக்கத்தில் நந்தியெம்பெருமான் காட்சி தருகிறார். முன்பக்கம் பார்க்கும் பொழுது மனித முகத்தோடு காட்சிதரும் நந்தி தேவர், இருபுறமும் பக்கவாட்டில் பார்க்கும் பொழுது காளை முகத்துடன் காட்சி தருகிறார்.

காளைக்குரிய நான்கு கால்களும் வாலும் காட்டப்பட்டுள்ளன. இந்த அற்புதத் தலத்தைக் காண எல்லாம் வல்ல சிவப்பரம்பொருள் திருவருள் கூட்டவேண்டும்.


வியாழன், 4 ஜூலை, 2019

சீன நாட்டில் உள்ள சிவன் கோயிலில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..


சீன நாட்டில் உள்ள சிவன் கோயிலில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ராஜ், தமிழக கடல்சார் தொல்லியல் ஆய்வாளர் ஒரிசா பாலு, சீன யுனான் மின் ஆ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெண் பேராசிரியர் கிகி ஜாங் என்ற நிறைமதி, பழனி தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி உள்ளிட்டோர் இணைந்து ஆய்வுக் குழு அமைத்துள்ளனர்.

இது குறித்து ஆய்வாளர் நாராயணமூர்த்தி தெரிவித்ததாவது: கடந்த மாதம், தென் கிழக்கு சீனாவின் பண்டைய பன்னாட்டுத் துறைமுகப் பட்டணமான குவான்ஸோ என்ற ஊரில் உள்ள கோயிலில் இருந்து, சீன தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்த கல்வெட்டு படியை, கிகி ஜாங் என்ற நிறைமதி இக்குழுவுக்கு அனுப்பி அதற்கான விளக்கத்தை கேட்டிருந்தார்

அந்த கல்வெட்டின் மேல் பாதியில் தமிழ் எழுத்துகளும், கீழ் பாதியில் சீன எழுத்துகளும் பொறிக்கப்பட்டிருந்தது. தமிழ் எழுத்துகள் குறித்து சீன ஆய்வாளர்களுக்கு விளக்கப்பட்டது.

இந்த கல்வெட்டின் காலம் கி.பி. 13 ஆம் நூற்றாண்டாகும். இந்த கல்வெட்டு மூன்று வரியில் ஆசிரியப்பா பாடல் வடிவில் எழுத்துப் பிழைகளுடன் பொறிக்கப்பட்டுள்ளது. இதில், "ஹரி ஓம் எனத் தொடங்கி, வைய்ய நீடுக, மாமழை மன்னுக மெய் விரும்பிய அன்பர் விளங்குக சைய்வ நன்நெறிதான் தழைத்தோங்குக, தெய்வ (வெண்) திருநீறு சிறக்கவே' எனப் பொறிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று, பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிடைத்த பல கல்வெட்டுகள் மற்றும் ஓலைச்சுவடிகளில் காணப்படுகின்றன. எனவே, இப்பாடலின் துவக்கம் பழனியாக இருக்க வாய்ப்புள்ளது. "சைவ நன்நெறி தழைத்தோங்க' என எழுதப்பட்டுள்ள இந்த கல்வெட்டு பெரியபுராண ஏட்டுச் சுவடிகளில் இருப்பதாக, தஞ்சைப் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியர் புலவர் ராசு தெரிவித்துள்ளார்.

இந்த கல்வெட்டு கிடைத்துள்ள அதே ஊரிலேயே கடந்த ஆண்டு வேறொரு கல்வெட்டும் கிடைத்துள்ளது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த சம்பந்தப் பெருமான் என்ற பெயர் கொண்ட சித்தர் பொறித்துள்ளார். அதில், அவரது பெயர் தவச்சக்கரவர்த்தி எனவும் பொறிக்கப்பட்டுள்ளது. சீனாவை ஆண்ட மங்கோலியப் பேரரசர் குப்ளாய்கான் முதுமை காரணமாக உடல்நலம் குன்றியிருந்துள்ளார். அப்போது, அங்கு வாழ்ந்த தமிழகத்தைச் சேர்ந்த சம்பந்தப் பெருமான், பேரரசர் உடல்நலம் பெறவேண்டி திருக்கானீசுரம் என்ற பெயரில் சிவன் ஆலயத்தை உருவாக்கியதாக, அங்குள்ள கி.பி. 1281 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு மூலம் தெரியவந்துள்ளது. இந்த கல்வெட்டு, தமிழ் மற்றும் சீனமொழியில் பொறிக்கப்பட்டுள்ளது.

தற்போது கிடைத்துள்ள கல்வெட்டும் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதுடன், சைவநெறி தழைத்தோங்க என துவங்கப்பட்டுள்ளதால், அதே சம்பந்தப் பெருமான் அமைத்திருக்கலாம் என உறுதியாக நம்பலாம்.

தமிழ் மொழிக்கு கீழே சிதைந்த நிலையிலுள்ள சீன மொழி எழுத்துகள், அக்கோயிலை துறவி ஒருவர் கட்டியுள்ள தகவல் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளதாக, சீன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவுடன் பழந்தமிழகம் நல்ல தொடர்பில் இருந்துள்ளது. சீனாவை குப்ளாய்கான் ஆண்ட நேரத்தில், தமிழகத்தை குலசேகரபாண்டியன் ஆண்டுள்ளார். பாண்டிய நாட்டைச் சேர்ந்த குறிப்பாக, பழனி பகுதியைச் சேர்ந்த சித்தர் சம்பந்தர் பெருமான் சீனாவுக்குச் சென்று, அங்கு குப்ளாய்கான் காலத்தில் அந்நாட்டு அரசின் சார்பிலேயே சிவன் கோயில் அமைத்து, தமிழ் மொழியில் கல்வெட்டு பொறித்து வழிபட்டார் என்பது மிகவும் பெருமைக்குரியதாகும் என்றார்.

நம் முன்னோர்கள் விமானம்,நவீன கப்பல்கள் போன்ற வசதிகள் இல்லாத போதே,பல ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து சென்றுள்ளார்கள்..சென்ற இடம் எல்லாம் நம் கலாச்சாரம்,மொழி போன்றவற்றை வளர்த்துள்ளார்கள்.. அப்பொழுதே யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று சொல்லும் அளவுக்கு பரந்த மனப்பான்மை கொண்டவர்களாக இருந்துள்ளார்கள்..இன்று..?சென்னை மக்களுக்கு குடிநீர்  எடுத்து சென்றால் போராடுவோம் என பக்கத்து ஊர்காரர்  சொல்கின்ற நிலைக்கு நம் மனம் குறுகிவிட்டது..

நம் உலகம்,நம் நாடு,நம் மாநிலம், நம் மாவட்டம், நம் ஊர்,நம் உறவு,நம் குடும்பம் என்பது எல்லாம் படிப்படியாக குறைந்து நான் என்றாகிவிட்டது..அறிவு வளர்ந்ததா?குறைந்ததா?