புதன், 31 ஜூலை, 2019

"பிறவிடை சாம்பான்" என்பாரது சமாதியின் மேல் எழுப்பப்பட்டதே தஞ்சை பெருவுடையார் கோவில்



பரையர் குல சோழ மன்னன்
"பிறவிடை சாம்பான்" என்பாரது சமாதியின் மேல் எழுப்பப்பட்டதே தஞ்சை பெருவுடையார் கோவில்

தமிழக அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட
"இடங்கையர் வலங்கையர் சரித்திரம்" என்னும் நூலில்
இது ஆதாரபூர்வமாக உள்ளது

வலங்கையர் வரலாறு ( டி 462 ) என்னும் சுவடியில்
"பிறவிடை சாம்பான்" மன்னரது வரலாறு விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
இந்த சுவடிகள் இன்றும் தமிழ்நாடு கீழ்த்திசை சுவடிகள்
நூலகத்தில் பாதுகாக்கப்படுகிறது

சுவடி கூறும் வரலாறு
ராவணன் என்னும் மல்லியை பெருமானுக்கு
மூன்று மகன்கள் இருந்தனர்
1)சாம்புகன்
2)பிறவிடை சாம்பான்
3)தியாகன் என்னும் தியாகச் சாம்பான்

இவர்கள் அக்கால சோழ மண்டலத்தில்
சிறிய கோட்டை கட்டி
பழங்குடி மன்னர்களாக வாழ்ந்துள்ளனர்

பிறவிடை சாம்பானது கோட்டை
"விளாறுகோட்டை"
அதுவே பின்னாளில்
'விளாரிகோட்டை' என்று திரிந்தது என்கின்றனர்.

இந்த கோட்டை வெண்கலத்தாலும் இரும்பு தூண்களாலும் மண்ணாலும்
கட்டப்பட்டது என்றும் அதனால் இக்கோட்டையானது
என்றும் 'மலாரிகோட்டை" என்றும் வழங்கப்பட்டது

சோழ மன்னன் "பிறவிடை சாம்பான்" மரித்த பின்
இந்த கோட்டையில் தகனம் செய்யப்பட்டான்

கணவன் மரித்த துயரத்தில் அவனது மனைவி
பெரிய நாயகியும் அவ்விடத்திலே தீ குளித்து இறந்தால்

"பிறவிடை சாம்பான்" மரணித்த அந்த இடத்திலே
ஒரு வேப்ப மரமும் ஒரு அரசமரமும் வைத்து
திண்ணை அமைத்து இரண்டு செங்கல் வைத்து
அவர்களை "தெய்வமாக" அந்த ஊர் மக்கள் வணக்க துவங்கினர்

அந்த இடத்திலே நந்தவனமும் கிணற்று
தண்ணீர் பந்தலும் பிற்காலத்தில் அமைக்கபட்டது

பிற்காலத்தில் "பரகேசரி சோழ மாமன்னர்" இவ்விடத்திற்கு வந்த பொழுது
"பிறவிடை சாம்பான்" தகனம் செய்யப்பட்ட
அவ்விடத்தின் சிறப்பை கேட்டு  இரண்டு நாள் அங்கு தங்கினார்

அவ்வாறு "பரகேசரி மாமன்னர்" அங்கு தங்கும் பொழுது
"பிறவிடை சாம்பனும்" அவரது மனைவி "பெரிய நாயகியும்"
பரகேசரி மாமன்னர் கனவில்

தோன்றி அவ்விடத்தில் அவர்களுக்கு திருப்பணி செய்யுமாறு கூறினார் என்றும்
பரகேசரி மன்னர் அவ்விடத்தில் வேண்டிய காரியம் கைகூடியதால்
அதன் பேரில் அவ்விடத்திலேயே
"பிறவிடை சாம்பானுக்கு கோவில்" கோவில் எழுப்புவதாக
பிரதிக்கினை செய்ததை இச்சுவடி குறிப்பிடுகிறது

பின்னாளில் தான் எடுத்த பிரதிக்கினை நிரைவேற்றும் விதமாக
விவசாய பூமியாய் இருந்த பகுதியில் சுற்றிலும் மதில் எழுப்பி
கோபுரம் வைத்து "பிறவிடைசாம்பானுக்கு"
உலகம் வியக்கும் வகையில் பெரிய கோவிலை காட்டினார்

அக்காலத்தில் "பிறவிடை சாம்பான் கோவில்" என்று அழைக்கபட்ட இக்கோவிலானது
பின்னாளில் "பெருவிடை நயினார் கோவில்" என்று பெயர் மாற்றி பூசிக்கப்பட்டது என்றும்

அதுவே பிற்காலத்தில் "வடுக தெலுங்கு மன்னர்கள்" கட்டுப்பாட்டில்
 "பெருவிடை ஈசுவரன் கோவில்" என்று அழைக்கப்பட்டதாகவும்

மராட்டிய மன்னர்கள் கட்டுப்பாட்டில் வந்தபொழுது
முழுக்க வடமொழியில் திரிந்து "பிரகதீஸ்வரர் கோவில்" என்று வழங்கப்படுகிறது
என்று அறிய முடிகிறது

படையெடுப்புகள் பல நிகழ்ந்தாலும் பெயர்கள் வடமொழியில் திரிந்தாலும்
பரையர் குல மன்னர் "பிறவிடை சாம்பான்"
அவர்களது புகழ் கதிரவன் போல்
இன்றும் என்றும் மறைக்க முடியாமல்
நிலைத்திருக்கிறது

நூல்: தமிழ்நாடு கீழ்த்திசை சுவடிகள் பதிப்பகம் வெளியிட்ட
"இடங்கையர் வலங்கையர் வரலாறு"

#சாக்கிய_பரையன்

Pulivendhan Uzhavu Paraiyan

#பரையர்வரலாற்றுமாதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக