வெள்ளி, 19 ஜூலை, 2019

பாணர் குலம் (எ) மதங்கர் குலம்.



பாணர் குலம் (எ) மதங்கர் குலம்.

பாணர், பரையர், துடியர், கடம்பர் இவை நான்கல்லாது வேறு குடிகள் இல்லை .  இசைக்கு அதிபதிகள் என்றால் அது பாணர்களே. அவர்களில் சிலர் அரசர்களாகவும் இருந்துள்ளார்கள்.

        பண், பாண், பாட்டு என்னும் சொற்கள் தமிழில் ஆதியிலிருந்தே உள்ளன. பாணர்களே முதலில்  பாடுநராக இருந்தனர். முல்லைத் திணைக் காலத்தில் அரசன் உருவான பின்னர் அரசவைப் பாணர்களும், புலவர்களுமாக உயர்வடைந்த அவர்கள், தமிழரிடையே ஆதியிலிருந்து மதிக்கப்பட்டனர். தூய தமிழ்ப்பண்பாடு தொடங்கிய நீண்ட நெடுங்காலத்தில் பாணர், அரசன் நண்பர்களாகவும், அறிவுரை கூறுநராகவும் இருந்தனர்.
பாணர்கள், முத்தமிழும் இசை நாடகம் என்னும் இரண்டையும் வளர்ப்பதாலும் இசையில் தமிழர்க்கும் தமிழரசர்க்கும் இருந்த பேரார்வத்தினாலும் அவர்களுக்கு அரசர் அவைக் களங்களிலும் தடையில்லாத நுழைவு கிடைத்தது. பரிசுகளும் மரியாதைகளும் கிடைத்தன. அரசர் பாணர்க்குப் புலவுச் சோறு, இனிய மது, பொன்னரி மாலை, வெள்ளி நாரால் தொடுத்த பொற்றாமரைப்பூ, களிறு, குதிரை பூட்டிய தேர் முதலியவற்றை நிரம்பக் கொடுத்ததாகப் புறநானூறு பதிவு செய்திருக்கிறது. பாணர் பல அரசரிடம் சிறப்புப் பெற்றனர் என்றாலும் பொதுவாக வறுமையால்
வருந்தினார்கள். வள்ளல்களைத் தேடி மலை, காடு என்று திரிந்தனர் என்கிறது தொல்காப்பியம்.

நா நிலத்துக்கும் உரிய தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, பறை, யாழ், பண் இவற்றைக் ‘கருப்பொருள்’ என வகைப்படுத்துவர். மக்கள் வாழ்வியலுக்கு ஏற்பவும், நிலத்தின் தட்ப வெப்பங்களுக்கு ஏற்பவுமே உற்பத்தி உறவுகள் அமையும். ஆதலால் உணவுப்பொருளும் நிலத்துக்கு ஏற்பவே உற்பத்தி செய்யப்படும். இவற்றுள் குறிப்பிடத்தக்கன இரண்டு. ஒன்று பறை பற்றியது. மற்றொன்று யாழ் பற்றியது. பண்ணுக்குரிய கருவிகளை எல்லாம் யாழ் என்பதில் அடக்குகின்றனர்.
பறை வாசிக்கும் பாணர் பறைபாணர் என்றும் யாழ் மீட்டும் பாணரை யாழ் பாணர் என்றும் அழைக்கபட்டனர்.
பறை  வகைகளில் ஒன்றான இணைப்பறை, பாணர்கள் இசைத்து வந்த ஒரு கண்பறை யாகும். பாணர்கள் இசைப்பாடலுக்குக் கிணையை முழக்கினார்கள். காலையில் வள்ளல்களைத் துயில் எழுப்பிக் கிணையை இசைத்துப் பாடினார்கள். கிணையை இசைத்துக் குறிஞ்சி நிலத்தைப் பாடினார்கள். உழவினையும், எருதுகளையும் போற்றி யாழிலிட்டு இசைத்துக் கிணையைக் கொட்டி நாள்தோறும் பாட விரும்பினர். புறநானூற்றில் இடம் பெறும் செய்திகள் இவை.  யாழ் மீட்டுபவரே யாழ் பாணர்.றிஞ்சி யாழ், முல்லையாழ், மருதயாழ், நெய்தல் யாழ், பாலையாழ் என்று ஐவகை யாழின் அமைப்புக்கு ஏற்ப பெரும்பாணர் என்றும் சிறுபாணர் என்றும் இவர்கள் அழைக்கப்பட்டனர். தமிழரின் வாழ்வோடு இணைந்து வளர்ந்த இசையின் வளர்ச்சியில் இப்பாணர்களின் வளர்ச்சியும் அமைந்திருந்தது. இந்த வாணர்கள் பறைகளை முழக்கி, போர்க்களத்திலும், ஏர்க்களத்திலும் பாடியதுடன் அரசுச் செய்திகளை மக்களுக்கு அறிவிப்பதிலும் பெரும் பங்காற்றினர்.
யாழ் மீட்டும் பாணர்களை யாழ் பாணர் என்பர்.

  யாழ்ப்பாணர் குலத்தை வடமொழியில் மதங்கர் குலம் என்பர். அந்த குலத்தில் வந்தவர் மதங்க முனிவர்.  ராமாயண காலத்தில், ராமரின் வரவுக்காகக் காத்திருந்த சபரியின் குருநாதர் இவரே. மதங்க முனிவரின் தந்தை  சக்தியை வழிபடுபவர். நாத சைவத்தில் சிவ வவழிபாட்டிற்கு இணையாக சக்தியையும் வழிபடுவர். சிவம் - இரண்டையும் வேறாக நினைப்பவரில்லை.  மதங்க முனிவர் தன் தந்தையிடமே  மந்திர உபதேசம் பெற்று பிறகு கடும் தவம் மேற்கொண்டார். அன்னையின் அருள் தரிசனத்தைப் பெற்றார்.

மதங்கர் முன் தோன்றிய அன்னையிடம் அவர் எதையும் வேண்டவில்லை.
அன்னையும் விடவில்லை. “”தவம் செய்து தரிசித்தவர்களுக்கு வரம் ஈவது மரபு. எனவே நான் வரம் தந்தேயாக வேண்டும். நீ பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றாள். மதங்கர் உடனே தாயே தாங்களின் அம்சமாக எனக்கு மகளாகப் பிறக்க வேண்டும். அந்த பாக்கியத்தை அருளவேண்டும்” என்றார். அன்னையும் இணங்கினாள்.
சக்தியின் ஆசியினால்
மதங்கர்- சித்திமதி தம்பதிக்குத் சக்தியின் அம்சமாக மாதங்கி பிறந்தால்.
மதங்கரின் மகள் என்பதால் மாதங்கி எனப்பட்டாள். அவளுடன் பல தேவகன்னியர் மதங்க கன்னிகைகள் என உதித்தனர் என்றும்  அனைவரும் கடம்ப மரங்கள் நிறைந்த வனத்தில் வீணை மீட்டி இன்புற்றிருந்தனர் என்றும் கூறப்பபடுவர்.

இவளே பேச்சியம்மன், வன பேச்சி, காட்டு மீனாட்சி என்ற பெயரால் அழைக்கபடுகிறால். இவளை வடநாட்டில் தேவியை சியாமா என்பார்கள். சியாமளம் என்றால் நீலம் கலந்த பச்சை நிறம். காளிதாசன் போன்றவர்கள் மாதங்கி என்னும் பேச்சியம்மனால் வாக்கு திரனும் கவிதா சக்தியும் பெற்றனர்.

பாணர்களின் இசை ஞானத்திற்கு அஸ்திவாரமாக இருந்தவள் மாதங்கியே.
பாணர்கள் ஓதியதே சாம வேதத்தம். சாம வேதத்திலிருந்து பிறந்தது என கூறபடுகிறது. இன்று கர்நாடக இசை எனப் பெயர் கொண்டு உலவுவது தமிழிசையே. இதுவே 1565க்குப் பிற்காலத்தில் கர்நாடகச் சங்கீதம்’ என்று அழைத்தனர். சீர் – சீரை – சீர்மை; சீரன் – கீரன்; சீர்த்தி-கீர்த்தனை; ஆக தமிழ்ச் சிந்தனை கீர்த்தனையாகியது. இக்கீர்த்தனை வடிவம் (அதாவது பல்லவி, அனுபல்லவி, சரணம்) சங்க காலத்தில் உருவானதே.
இசையொரு (ஆடலும் நடனமும்) கூத்தும் சங்ககாலத்திலேயே சிறந்து விளங்கின. சிலப்பதிகாரத்தில் இந்தக் கலைகளின் உச்சநிலையைக் காணலாம். அடியார்க்கு நல்லார் உரை அக்கலை நுட்பங்களை விளக்குகிறது.
தமிழ் ஆடல் கலை 1925 வரை சதிக்கச் சேரி என்றே அழைக்கப்பட்டது. அப்பெயரை மாற்றி ‘பரத நாட்டியம்’ எனப் புதுப் பெயரிட்டவர் ஈ.கிருஷ்ண ஐயர். தமிழ் ஆடற்கலை ‘பரதர்’ பெயரில் வழங்கும் நாட்ய சாஸ்திரத்தில் இருந்து பிறந்தது எனக்கூறுவது பிதற்றல் என்பதை பாவேந்தர் பாரதிதாசன் தம் நூல்கள் பலவற்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சைவ பக்தி இலக்கியங்களை இசையமைத்து பாடியோர்கள்
பாணர் குலத்துப் பெண்களே.அவர்கள்  கல்வியறிவும் கலையறிவும் பெற்றிருந்தனர். அவர்கள் பாடினிகள் எனப்படுவர்.
பாணரோடு சேர்ந்து அவர்கள் துணைவியரும் பண் பாடுவர், பாட்டிசைப்பர். இவர்களைப் பாடினி என்று அழைப்பர். பாடினியர் கூத்துக் கலையிலும் வல்லவர்கள். அபிநயங்கள் காட்டி ஆடுவார்கள். யாழ்க் கருவியிலும், இனிய இசையை மீட்டுவார்கள். பாணரைப் போலவே, பாடினியரும் பலவகைப்படுவர். பாடினிகளுக்குப் பாண்மகள், விறலி, பாடினி, மதங்கி, பாட்டி, பாடன்மகடு எனப் பல பெயர்கள் இருந்தன.
பாடினியர், இனிய குரல்வளம் கொண்டவர்கள். மென்மையான அழகுள்ளவர்கள். மயில் போன்ற சாயல் கொண்டவர்கள். அறிவுக்கூர்மை மிக்கவர்கள். இது போன்ற பல செய்திகளை முடத்தாமக்கண்ணியார், சங்கத் தொகை நூல்களுள் ஒன்றான பத்துப்பாட்டுக்களின் கீழ் அடங்கும் பொருநராற்றுப்படை என்னும் நூலில் தருகிறார்.  காக்கைப் பாடினியார்,
ஔவையார்,  போன்ற பல சாதாரன  குடும்பப் பெண்கள் புலமையினால் புகழ் பெற்றிருந்தர்.

பாணர், பரையர், துடியர், கடம்பர் இவை நான்கல்லாது வேறு குடிகள் இல்லை .  இசைக்கு அதிபதிகள் என்றால் அது பாணர்களே. அவர்களில் சிலர் அரசர்களாகவும் இருந்துள்ளார்கள்.இந்நாண்கு குலங்களில் இருந்தே நாம் காணும் பலவாரான சாதிகள் தோன்றியுள்ளன. இதற்கு ஆதாரமாக கே கொங்கு வேளாளர் தொடங்கி  நாடு முழுக்க பல சாதிகளில் பரையரை ஒரு பிரிவினராக இருப்பதை காணமுடிகிறது. கொண்டையன் கோட்டை மறவர்களில் சாம்பான் கிளை & ஔவையார் கிலை இருப்பதை இன்றும் காணமுடிகிறது. திருவள்ளுவரும் தன் ஞான வெட்டியானில் ""ஔவை வழி வந்த சாம்பவன் நான்" என்றே பதிவு செய்கிறார்.

பாணர் குலம் (எ) மதங்கர் குலத்தவரின் பெருமைகளை ஒரே பதிவில் சொல்ல முடியாது.

1 கருத்து: