புதன், 25 டிசம்பர், 2019

18 ம் படி என்றால் என்ன?

18 ம் படி என்றால் என்ன?

18 படிக்கு வைதீகம் தன் தேவைக்கேற்ப பல விளக்கங்கள் சொல்லும்.
அது கண்மாய்கரையில் இருக்கும் கருப்பசாமியும் தன் கடவுளின் அவதாரம்,அம்சம் என்று பெரும்பான்மை உழைக்கும் மக்களை தன்னுள் ஈர்க்க வைக்க பல்லிளித்தக் கதை.

திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நம்பூதிரி பார்ப்பனர்கள் உண்டு. இவர்கள் தங்களை கடவுளுக்கு அடுத்த நிலையில் தாங்கள் தான் என்று சொல்லிக் கொள்வார்கள். இவர்களால் அப்பகுதியில் ஒடுக்கப்பட்ட சாதிகள் 18.

1.சாணார் (நாடார்)
2.கருமறவர் (செங்கோட்டை மறவர்)
3.பாணர்
4.குயவர்
5.நசுரானியர்(சிரியன் கத்தோலிக்கர்)
6.துலுக்கப்பட்டர் (மாப்பிள்ளை)
7.குறவர்
8.ஈழவர்-தீயர்
9.வாணியர்
10.புலையர்
11.பறையர்
12.கம்மாளர்
13.கைக்கோளர்
14.இடையர்
15.நாவிதர்
16.வண்ணார்
17.பரவர் (தீவாரர்)
18 சக்கிலியர் (தெலுங்கர்)

இந்த 18 க்கும் மேலே தான் நாயர்களும்-நம்பூதிரிகளும் என்ற பொருளில் நம்பூதிரிகளால் நிலைநிறுத்தப்பட்ட 18 படி மேலே உள்ள ஐயப்பன். இந்த 18 சாதிகளுமே தோள் சீலை மறுக்கப்பட்ட சாதிகள் தான்.

18 பட்டியைக் கூட்டுடா என்ற பஞ்சாயத்துச் சொல்லும் இதையொட்டியதே.
18 சாதியையும் ஊர் அம்பலத்தில் கூட்டி தண்டனைகள் மற்றும் வரிகள் தீர்மானிக்கப்பட்டது.

பிராமணீய வைதீக கடவுள்களை
18 சித்தர்கள் கடுமையாய் சாடினர்.கிண்டல் கேலி செய்து மூடத்தனத்தை எதிர்த்தனர். கடவுளை வணங்கினால் நோய்
தீராது என்று வைத்தியம் செய்தனர்.

நட்ட கல்லும் பேசுமோ என்று
கேட்டனர்.இது இங்கு  புதிதாய் காலூன்றிய வைதீக மதம் இந்த சவாலை  சதிமூலம் தீர்வு கண்டது.18 சித்தர்கள் அழகர் மலை வந்திருந்தனர்.
அவர்கள் அழகர் கோவில் பொக்கிஷத்தை கொள்ளையடிக்க
வந்திருப்பதாய் பட்டரின் கனவில் கடவுள் சொன்னதாய்கூறி
18 பேரை வெட்டும்படி கூறப்பட்டது.மூடர்கள் வெட்டிச் சாய்த்தனர்.
               
அதன்பிறகு வைதீகமதம் நிம்மதியடைந்து அந்தப் 18
சித்தர்களை மிதித்தே தங்களின் கடவுள் மேலேறியதாய் பொருள்
கொண்டு 18 படிகளை அமைத்தனர்.அதுவே 18 ம்படியாகும். சித்தர்கள் காலம் 800 முதல் 1000 என வரையறுத்துள்ளனர்.

அழகர் கோவில் வரலாறு என்ற நூலை பேராசிரியர் தொ.பரமசிவன் எழுதி மதுரை காமராசர் பல்கலைக் கழகம்  வெளியிட்டது. சித்தர்கள் பற்றிய பதிவின் குறிப்புகள் அதையொட்டியதே.

18 படி குறித்த பார்ப்பனியக் கதையை மறுத்து,சாதிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்திய வரலாற்றை, சமூக சீர்திருத்தப் போராளி நாராயண குரு வரலாறில் படிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக