செவ்வாய், 24 மார்ச், 2020

பதினெட்டு சித்தர்களுக்கு முன் இரேதாயுகத்தில் இரண்டு லட்சம் திரேதாயுலகத்தில் ஒரு லட்சம் துவாபரயுகத்தில் ஐம்பதாயிரம் கலியுகத்தில் இருபத்தைந்தாயிரம் ஆகமொத்தம் 375000 சித்தர்கள் தோன்றினர்


பதினெட்டு சித்தர்களுக்கு முன்
இரேதாயுகத்தில் இரண்டு லட்சம்
திரேதாயுலகத்தில் ஒரு லட்சம்
துவாபரயுகத்தில் ஐம்பதாயிரம்
கலியுகத்தில் இருபத்தைந்தாயிரம்
ஆகமொத்தம் 375000 சித்தர்கள்
தோன்றினர் .

சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர்.இந்தப் பதினெட்டுச் சித்தர்கள் யார், யார்? என்பதில் பலரது கூற்றுக்களில், சில பெயர்கள் மாறுபடுகின்றன. எனினும், முற்காலத்தில் உயரிய இறைநிலையை எய்தியவர்களின் எண்ணிக்கை பதினெட்டிற்கும் மேற்படும் என்பதில் சிறிதும்
சந்தேகமில்லை. சித்தர்கள் அனைவருமே, தாம் உயர்நிலை எட்டியது மட்டுமின்றி,
உலக மக்கள் நலனுக்காக பல விதங்களிலும், உயரிய நுட்பங்களை வெளிப்படுத்தியதன் மூலமும், தம்முடைய காலத்தில் பிறருக்காக செயல்கள் புரிந்தும், சேவை புரிந்துள்ளனர்.

சுருக்கமாகச் சொன்னால், இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்களாவர்.சாதி, சமயம், சாத்திரம், சடங்குகள் மீறிய
உலக நோக்கு, பொது இல்லற, துறவற வாழ்முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு முறைகள். விந்தையான செயல்கள், பட்டறிவு தமிழ், சீரிய ஆராய்ச்சி ஆகிய அம்சங்கள் சித்தர்களை வருணிப்பன எனலாம்.நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள், 

இன்னமும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். அவர்கள் நம்முடைய தகுதிக்கேற்ப அவர்கள் உதவத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது தூய்மையான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே. சொல்லப்போனால், சித்தத்தை அடக்கி, தாங்களும் சிவமாய், இறையாய் வீற்றிருக்கும் அளவிற்கு சக்தி படைத்தவர்கள். நினைத்ததை, நினைத்தவாறு செய்யும் ஆற்றல் மிக்கவர்கள். இயற்கையை வென்றவர்கள்.

முதல் தகுதி: சித்தத்தை அடக்க வல்லவர்கள்.

இரண்டாம் தகுதி: எண்வகை சித்துக்களை செய்ய வல்லவர்கள்.

மூன்றாம் தகுதி: முற்றும் துறந்தவர்கள் பாச இருளகற்றவர்கள் யான் என்ற அழுக்கற்றவர்கள்.

நான்காம் தகுதி: பிறப்பிற்குத் காரணமான வினைவித்தைக் கெடுத்து தூய உணர்வில் மாறி ஐம்புலன்களை அடக்கி சித்தத்தை ஒருமுகப்படுத்தி ஆன்மீக
ஆற்றலைப் பெற்று புற உணர்வில் செத்துக்கிடப்பவர்கள்.

ஐந்தாம் தகுதி: உயிரினங்களின் இன்னல்களை நீக்க இடையராது சிந்தித்து முழு
முயற்சியுடன் தெரிந்து ஆயக்கலைகள் அறுபத்தி நான்கையும் உணர்ந்து இயற்கையோடு இணைந்த எளிய வாழ்வே உடல் நலனுக்கும் உள்ள நலனுக்கும் சாலச் சிறந்தது எனக் கண்டறிந்து மக்களினத்திற்கு ஏற்ற மருத்துவ முறையைக்
கொண்டு வந்தவர்கள்.முக்காலமும் உணர்ந்த முழுமுதல் ஞானிகள். எக்காலமும் எத்தி போற்றப்பட வேண்டிய தமிழ் குலத் தலைவர்கள்.

இப்பதினெட்டு சித்தர்களுக்கு முன்
இரேதாயுகத்தில் இரண்டு லட்சம்
திரேதாயுலகத்தில் ஒரு லட்சம்
துவாபரயுகத்தில் ஐம்பதாயிரம்
கலியுகத்தில் இருபத்தைந்தாயிரம்
ஆகமொத்தம் 375000 சித்தர்கள்
தோன்றினர் என்று தேரையர்
கூறுகின்றார். 

திங்கள், 23 மார்ச், 2020

ரகசியங்கள் பொதிந்திருக்கும் ஜெர்மனியின் வைரஸ் தீவு! - ஒரு சுவாரஸ்யப் பகிர்வு


 ரகசியங்கள் பொதிந்திருக்கும் ஜெர்மனியின் வைரஸ் தீவு! - ஒரு சுவாரஸ்யப் பகிர்வு

புதிய நோய்கள் அறியப்படும்போதெல்லாம் உலக சுகாதார அமைப்புகளின் கவனம் ஜெர்மன் நாட்டின் வடபகுதியில், பால்டிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் சின்னஞ்சிறு தீவான ரெம்ஸ் தீவுக்கு திரும்பும்...

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்குதல் உலகம் முழுவதும் பரவிவிட்டது. உலக சுகாதார அமைப்பின் அதிகாரபூர்வமான அறிக்கையின்படி நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டி, நாலாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமலுக்கு வந்துவிட்டது. போர் மூளாத காலகட்டத்தில் ஒரு ஐரோப்பிய நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்படுவது இதுவே முதல்முறை. பிரான்ஸ் நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்படுகின்றன.

மூன்றே மாதங்களில் உலகம் முழுமைக்கும் ஒரு நோய் பரவிவிட்டது மனிதகுல வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாகும். மனிதகுலம் மொத்தமும் பாதிப்புக்குள்ளாகும் அபாயத்தினால் இந்தச் சூழலை மூன்றாம் உலகப்போர் எனக் குறிப்பிட்டாலும் அது மிகையாகாது. கத்தி, ரத்தம், சப்தமின்றி மூண்டிருக்கும் இந்தப்போர் மனிதனுக்கும் கிருமிக்குமான போர்!

புதிய நோய்கள் அறியப்படும்போதெல்லாம் உலக சுகாதார அமைப்புகளின் கவனம் ஜெர்மன் நாட்டின் வடபகுதியில், பால்டிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் சின்னஞ்சிறு தீவான ரெம்ஸ் தீவுக்குத் திரும்பும். இங்குதான் உலகின் மிகப் பழைமையான கிருமி ஆராய்ச்சி மையங்களில் ஒன்றான பிரெடெரிக் லோப்லர் ஆராய்ச்சி மையம் அமைந்திருக்கிறது. ஹிட்லரின் நாஜி அரசாங்கத்தால் ரசாயனப்போர் ஆராய்ச்சிக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த மையம் இன்று புதிய நோய்க்கிருமிகளின் தன்மையையும், அவை மிருகங்களின் மீது ஏற்படுத்தும் பாதிப்புகளையும் ஆராய்வதில் முக்கியப் பங்காற்றுகிறது! மஞ்சள் காமாலை, ரேபீஸ், காலரா தொடங்கி எய்ட்ஸ் எபோலா வரை நூற்றுக்கணக்கான கொடிய நோய்க்கிருமிகளுடன், மனிதனுக்கு நோயை பரப்பும் கொசுக்கள், வவ்வால் போன்ற உயிரினங்களும், ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படும் வளர்ப்பு பிராணிகளும் இத்தீவில் அடக்கம்.

மனிதனுக்கு பரவும் நோய்க்கிருமிகளை வளர்ப்பு பிராணிகளுக்கு செலுத்தி இங்கு செய்யப்படும் ஆராய்ச்சிகள் நோய்த்தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்கு மட்டுமல்லாது வருங்காலங்களில் புதிதாய் பரவும் நோய்களை விரைவாகக் கட்டுப்படுத்தவும் இன்றியமையாதவைகளாகும்.

உதாரணமாக, கொரோனா வைரஸ் ஆடு மாடு கோழி போன்ற வளர்ப்பு பிராணிகளுக்கும் பரவுமா? கிருமி தாக்கிய பிராணிகளை நெருங்குவதாலோ அல்லது அவற்றின் மாமிசத்தை உண்பதாலோ மனிதனுக்கு தொற்றுமா? வளர்ப்பு பிராணிகளின் தொழுவங்களிலும் கொட்டகைகளிலும் கிருமிகள் தேங்குவதின் மூலம் அவற்றைப் பராமரிக்கும் மனிதனுக்கு பரவும் வாய்ப்புகள் உண்டா என்பது போன்ற கேள்விகளுக்கான விடைகளுக்கு இங்கு நிகழும் ஆராய்ச்சிகள் மிகவும் அவசியமானதாகும்.

இத்தீவில் நூற்றுக்கணக்கான வைரஸ் கிருமிகள் அவற்றின் தன்மையைப் பொறுத்து நான்கு வகைகளாய் பிரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. இரண்டாம் வகையிலிருந்து நான்காம் வகை வரையிலான ஆபத்தான கிருமிகள் பல கதவுகளை கொண்ட காற்று புகாத அறைகளில், மைனஸ் எண்பதிலிருந்து மைனஸ் நூற்று தொன்னூறு டிகிரி குளிரூட்டப்பட்ட கலன்களில் உறைநிலையில் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன.

இரும்புக் கம்பி வேலி, முள் கம்பி சுருள் பாதுகாப்பு போன்ற பல அடுக்கு பாதுகாப்புடன் திகழும் இத்தீவில் உயிரியல் விஞ்ஞானிகள், மருத்துவர்கள் என நானூற்றுக்கும் அதிகமானோர் பணிபுரிந்தாலும், எபோலா, ஹென்ரா போன்ற மிகக்கொடிய நான்காம் வகை கிருமிகள் சிறை வைக்கப்பட்டிருக்கும் எல்லைக்குள் நுழையும் அனுமதி இந்த ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் தொடங்கி ஒரு பத்து பேருக்கு மட்டுமே உண்டு. அவர்களும் தனியாகச் செல்ல முடியாது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஜோடியாய் செல்பவர்களுக்கு காற்றழுத்தத்துடன் கூடிய கவச உடை, அந்த உடையை கழற்றுவதற்கு முன்னால் வெளியேறும்போது பெனோல் எனப்படும் கார்போலிக் ஆசிட் கலந்த குளியல் என பல கட்டாயங்கள் உண்டு.


இத்தீவில் உபயோகப்படுத்தப்பட்ட எந்த ஒரு பொருளும் முழுமையான கிருமி நீக்கத்துக்குப் பிறகே வெளியே அனுப்பப்படும். கிருமி நீக்கத்தில் சிறு சந்தேகம் எழுந்தாலும் அந்தப் பொருள் அத்தீவிலேயே மின்சாரத்தின் மூலம் பொசுக்கப்பட்டுவிடும் !

இத்தனை பாதுகாப்புகள் மற்றும் கெடுபிடிகளுடன் திகழ்வதால் இத்தீவுக்கு ``வைரஸ்களின் அல்கட்ராஸ் சிறைச்சாலை" என்ற பெயரும் உண்டு !

ஜெர்மனியில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட வைரஸ் கிருமிகளை சோதனைச் சாலையில் செயற்கை முறையில் பெருக்கி, ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படும் மிருகங்களின் உடல்களில் செலுத்தி சோதனைகளை ஆரம்பித்துவிட்டது பிரெடெரிக் லோப்லர் ஆராய்ச்சி மையம்! காதலர் தினமான பிப்ரவரி 14-ம் தேதிதான் கொரோனா வைரஸ் இத்தீவுக்கு கொண்டுவரப்பட்டது என்பது முரன்நகையான ஒரு கொசுறுத் தகவல்.


சில மாதங்கள் நீடிக்கப்போகும் இந்தச் சோதனைகளின் அறிக்கை, தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் முக்கிய பங்காற்றப்போவதுடன் நம்முடைய வருங்கால உணவுப் பழக்கங்கள் மற்றும் பிராணிகள் வளர்ப்பு முறைகளை நிர்ணயம் செய்வதிலும் உதவும்.

பிணி, பஞ்சம், போர் என எத்தனையோ அவநம்பிக்கைகளை போராடி எதிர்த்து ஒழித்ததினால்தான் மனிதகுலம் இன்றும் காலூன்றி நிற்கிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்துவதுடன் நில்லாமல் இனி இதுபோன்ற நிகழ்வுகளை எதிர்கொண்டு முறியடிக்கும் திறன் கொண்ட மருத்துவ வசதி உலகின் கடைக்கோடி மனிதனுக்கும் கிடைக்கும் வசதியை ஏற்படுத்துவதில்தான் ஒட்டுமொத்த மனித குலத்தின் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது.

மாமல்லபுரத்தில் மறைந்துள்ள அதிசயம்


#வெண்ணெய்_பந்து

மாமல்லபுரத்தில் மறைந்துள்ள அதிசயம்!

 கற்களையெல்லாம் கவின்மிகு கலைகளாக்கி தமிழர்களின் பெருமையையும், புகழையும் உலகுக்கு உணர்த்திச் சென்றவர்கள் பல்லவ மன்னர்கள். அப்படி, கலைக் கருவூலங்களாக விளங்கும் மாமல்லபுர கோவில்கள் நம் பண்பாட்டுச் சின்னங்கள். இவை யுனெஸ்கோ பாரம்பரிய நினைவுச்சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளன.

😯 விடை தெரியாத மர்மங்களுள் இன்று நாம் பார்க்க இருப்பது... மாமல்லபுரத்தில் உள்ள கிருஷ்ணரின் வெண்ணெய் பந்து தான்...

😯 தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மாமல்லபுரத்தில் கடற்கரை அருகே கிருஷ்ணரின் வெண்ணெய் பந்து பாறை அமைந்துள்ளது. இது வான் இறைக் கல் என்றும் அழைக்கப்படுகிறது.

😯 இந்து தொன்மவியலின் படி, கிருஷ்ணர் தன் தாய் யசோதையின் பெரும் பானையிலிருந்த வெண்ணெயை திருடி சாப்பிட்ட செயலை நினைவுக்கூறும் வகையில் இக்கல்லை கிருஷ்ணரின் வெண்ணெய் பந்து என அழைக்கப்படுகிறது.

சிறப்பு :

😯 உலகமே வியந்து பார்க்கக்கூடிய மர்மங்கள் நிறைந்த கிருஷ்ணனின் வெண்ணெய் பந்து பாறை, சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மர்மம் :

😯 இந்தப் பெரிய உருண்டை வடிவப் பாறாங்கல் 6 மீட்டர் உயரமும், 5 மீட்டர் அகலமும், 250 டன் எடையும் கொண்டது. இதன் எடையை ஒப்பிடும்போது இது மலையிலிருந்து உருண்டு விழவேண்டும், ஆனால் தகுந்த பிடிப்பு ஏதும் இல்லாமல் 45 டிகிரி சாய்வான பாறைத்தளத்தில் புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து நிற்பதன் மர்மம் இன்றுவரை புரியவில்லை.

😯 இங்கு வரும் சுற்றுலா பயணிகள் எவ்வித பயமுமின்றி பாறையின் அடியிலேயே நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதும், அமர்ந்து இளைப்பாறுவதும் அன்றாடம் நடைபெறும் காட்சியாகும்.

மக்களின் நம்பிக்கை :

😯 கிருஷ்ணரின் வெண்ணெய் பந்து என்றழைக்கப்படும், இந்த கருங்கல் உருண்டையை குன்றிலிருந்து கீழே இறக்க செய்த பல்லவ மன்னர் முதலாம் நரசிம்ம பல்லவனின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

😯 அதைத்தொடர்ந்து 1908ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்த ஆர்தர் ஹேவ்லாக், எந்நேரத்திலும் கீழே விழும் நிலையில் இருக்கும் இந்த பாறையை பாதுகாப்பு காரணம் கருதி ஏழு யானைகளின் உதவியால் குன்றிலிருந்து கீழே இறக்க முயற்சி எடுத்தார். ஆனால் இவரது முயற்சியும் வெற்றிப்பெறவில்லை.

😯 கண்ணுக்குப் புலப்படாத அமானுஷ்ய சக்தியே இந்தப் பாறையை இந்தச் சாய்வு தளத்திலிருந்து மேலும் நகர முடியாதபடி நிலை நிறுத்தியுள்ளது என்பது சிலரின் நம்பிக்கை. இந்தப் பாறையை அதன் இடத்தில் நிலைத்து நிற்க வைத்துக் கடவுள் தன் சக்தியைப் புலப்படுத்தியுள்ளார் என்றும் பலர் நம்புகிறார்கள். மேலும், இது இயற்கையான உருவாக்கம் என்பது புவியியல் விஞ்ஞானிகளின் கருத்தாகும்.

வெள்ளி, 20 மார்ச், 2020

குஜராத் - கலாச்சாரம்


குஜராத் - கலாச்சாரம்

கலாச்சாரம் என்பது வாழ்வின் கலை
குஜராத்திகள் தங்கள் வம்சாவளியை ஹன்ஸுடன் இந்தியாவுக்கு வந்த குர்ஜர்களிடமிருந்து பெறுகிறார்கள், அவர்கள் பயணம் செய்தபோது பஞ்சாப் வழியாக செல்ல வேண்டியிருந்தபோது அவர்கள் குஜராத்தில் குடியேறினர். குஜராத்திகள் முக்கியமாக இந்தோ ஆரிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், இவர்களில் குறைந்தது 20% பேர் பழங்குடியினர் குழுவான பில்ஸ், கோலிஸ், துப்லா, நாய்க்தா மற்றும் மச்சி-கார்வா போன்றவர்களாக உள்ளனர்.  வடக்கிலிருந்து வந்த ஆரியர்களால் அரசு படையெடுத்த போதிலும், விரைவில் குஜராத்தின் பாரம்பரிய ஆட்சியாளர்களாக மாறிய பில் சமூகத்தின் பழங்குடியினரை அவர்களால் வெல்லவோ அனுப்பவோ முடியவில்லை. குர்ஜார்களின் கோலி சமூகம் ஆரியர்களுக்கும் பில்ஸுக்கும் இடையில் நிலையான நிலையை வகிக்கிறது.  குஜராத்தின் கலாச்சாரம் பின்வருவனவற்றை உள்ளடக்கியதாக சிறப்பாக வெளிப்படுத்த முடியும்:

தோற்றம்
குஜராத் விரைவில் பல மத கலாச்சாரமாக மாறியது, இடைக்காலத்தில் மாநிலத்தில் ஏராளமான குடியேற்றங்கள் இருந்தன, இது இஸ்லாம் மற்றும் ஜோராஸ்ட்ரியனிசத்தை நிறைய பின்பற்றுபவர்களுடன் கொண்டு வந்தது. பதினான்காம் நூற்றாண்டில் ச ura ராஷ்டிராவில் குடியேறிய குஜராத்தியின் ஆதிக்கம் காதிஸ் என்று அழைக்கப்பட்டது, அவர்கள் சூரிய கடவுளை வணங்கியவர்கள்.  குதிரைகள் வளர்க்கும் கலையில் கதிர்கள் நாடோடிகளாக இருந்தனர். ஆனால் மீண்டும் குஜராத்தின் இந்த பகுதிக்கு குடியேறியவர்கள் காரணமாக பல இன கலாச்சாரத்திற்கு வழிவகுத்தது. ச ura ராஷ்டிரா விரைவில் அரச குடும்பங்களைச் சேர்ந்த ராப்ரிஸால் ஆதிக்கம் செலுத்தியது.  ரப்ரி சமூகம் முக்கியமாக கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் ராஜபுத்திர குலத்தைச் சேர்ந்தவர்கள்.

ETHNICITY
குஜராத்திகள் குஜராத்தி மொழியைப் பேசுகிறார்கள். குஜராத்தி இனத்தைச் சேர்ந்தவர்கள் முதன்மையாக இந்திய துணைக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில், குறிப்பாக குஜராத், ராஜஸ்தான் மற்றும் இந்தியாவின் மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசங்களில் உள்ளனர். நாட்டின் பிற பகுதிகளான தமன் மற்றும் டியு மற்றும் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் பாகிஸ்தானிலும் குஜராத்தி வாழ்ந்தவர்கள் கணிசமான அளவு உள்ளனர். குறிப்பாக 1947 இல் பிரிவினைக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்த குஜராத்திகளில் சிலர் தங்களை முஸ்லிம்களாக மாற்றியுள்ளனர், முக்கியமாக பின்வரும் சமூகங்களான மேமன், கோஜா மற்றும் போஹ்ரா குழுக்களின் கீழ் வருகிறார்கள், அவர்களில் பெரும்பாலோர் கராச்சியில் குடியேறினர், அவர்கள் தங்கள் இனத்தை குஜராத் என்று கருதுகின்றனர் அவர்கள் குஜராத்திகள்.

கலாச்சாரம்
குஜராத்திகள் பல்வேறு கலாச்சார பாரம்பரியம் மற்றும் வளமான மரபுகளுக்கு பெயர் பெற்றவர்கள். இது இந்து மதம், இஸ்லாம், சமணம் மற்றும் ப Buddhism த்தம் ஆகியவற்றின் துடிப்பான கலவையாகும், மேலும் குஜராத்தியின் கலை, நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், மரபுகள், நிறுவனங்கள், கண்டுபிடிப்புகள், மொழி, தொழில்நுட்பம் மற்றும் மதிப்புகள் போன்ற பல்வேறு கலாச்சாரங்களின் கலவையாகும். மக்களின் கலாச்சாரம் ஒரு குறிப்பிட்ட தலைமுறையினருடன் நின்றுவிடாது, மாறாக எதிர்கால தலைமுறையினரும் இதைப் பின்பற்றுவதை சமூகத்தின் பெரியவர்கள் பார்க்கிறார்கள், இது கலாச்சார மரபுகள் மற்றும் வாழ்க்கை முறைகளின் ஞானத்திற்கும் பாராட்டுக்கும் தானாக வழிவகுக்கிறது. அவர்களும் தங்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக விருந்தினர்களையும் பெரியவர்களையும் வாழ்த்துவதற்காக கைகோர்க்கிறார்கள்.  குஜராத் மக்களின் வாழ்க்கை முறை மிகவும் சீரானது, ஏனெனில் அவர்கள் ஒரு சரியான கற்றல் முறை, மத நடைமுறைகள் மற்றும் சிறந்த கலை வெளிப்பாடுகளைக் கொண்டுள்ளனர். குஜராத்தியின் கலாச்சாரம் குஜராத்தில் மட்டுமல்ல, இது உலகின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக இருந்து இப்போது ஒரு சர்வதேச கலாச்சாரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. குஜராத் மக்களில் கலாச்சார அதிர்ச்சி அதிகம் காணப்படவில்லை, எனவே இது உலகளாவிய சூழ்நிலையால் எழுப்பப்படும் வெவ்வேறு சவால்களை எதிர்கொள்ள அதிக ஆற்றலுடன் மக்களை தைரியமாகவும் தைரியமாகவும் ஆக்குகிறது.

தனிப்பயனாக்கங்கள் மற்றும் பரிமாற்றங்கள்

குஜராத்தில் நவீன மற்றும் அதிநவீன வீடுகள் வந்திருந்தாலும், அவற்றின் பாரம்பரிய வீடுகள் மற்றும் மர வீடுகளைக் கொண்ட இடங்கள் இன்னும் உள்ளன. பாரம்பரியமாக கட்டப்பட்ட இந்த வீடுகளில் பெரும்பாலானவை அழகாகவும் சிக்கலாகவும் வடிவமைக்கப்பட்ட உட்புறங்களைக் கொண்டிருக்கின்றன, ஆனால் ஒரு வழக்கமான நடைமுறையாக ஒவ்வொரு வீட்டிலும் பறவை உணவிற்காக கட்டப்பட்ட ஒரு சிறப்பு "சபுதாரா" உள்ளது. பச்சிகம் நகைகள் குஜராத் மக்களின் பாரம்பரிய நகைகளில் ஒன்றாகும், அங்கு தங்கத்திற்கு பதிலாக, இந்த ஆபரணத்தை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் உலோகம் வெள்ளி.

 குஜராத்தி பெண்கள் தங்கள் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இடுப்பில் ஒரு சில சாவியை எடுத்துச் செல்கிறார்கள் மற்றும் மோதிரம் வைத்திருப்பவர் பொதுவாக வெள்ளியால் ஆனார். பெண்கள் தங்கள் பழக்கவழக்கங்களின் ஒரு பகுதியாக அணியும் வேறு சில நகைகளில் மங்கல்சூத்ரா, காதணிகள், நெக்லஸ், மோதிரங்கள் மற்றும் வளையல்கள் உள்ளன.  குஜராத்திகளுக்கு பல்வேறு தெய்வங்கள் மற்றும் தெய்வங்கள் மீது நிறைய நம்பிக்கை உள்ளது. மாடு தாய் கடவுள் அல்லது "க au- மாதா" என்று கருதப்படுகிறது, மேலும் குஜராத்திகள் மீது அவர்கள் மீது அதிக நம்பிக்கை உள்ளது. குஜராத் மக்களால் கொண்டாடப்பட வேண்டிய சில விழாக்கள் பிறப்பு, நூல் விழா, திருமணம் மற்றும் இறப்பு.  இந்த விழாக்களில் சடங்குகள் மற்றும் பூஜைகள் பிராமணர்களால் செய்யப்படுகின்றன. குஜராத்தியின் வழக்கம் மற்றும் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக அவர்கள் நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகைகளை கொண்டாடுகிறார்கள்.

உடையில்
நாட்டின் வேறு எந்த கலாச்சாரத்தையும் போலவே, குஜராத்திகளும் தங்களை மங்கல் சூத்திரங்கள், கழுத்தணிகள், மூக்கு மோதிரங்கள், காதணிகள், வளையல்கள் மற்றும் மோதிரங்கள், கால் மோதிரங்கள் மற்றும் வளையல்களால் அலங்கரிக்கின்றனர். குஜராத்தின் திருமணமான பெண்கள் மத்தியில் சிவப்பு பிண்டி அணிய வேண்டியது அவசியம், இது அவர்களின் நெற்றியில் தூள் அல்லது ஸ்டிக்கராக இருக்கலாம். திருமணமான பெண்கள் 'சிண்டூர்' என்று அழைக்கப்படும் சிவப்பு பொடியை உச்சந்தலையில் ஒரு குறுகிய நேர் கோட்டில் நீட்டி, மயிரிழையின் அருகே தொடங்கி, முடி பொதுவாகப் பிரிக்கப்பட்ட பகுதியை மூடி விடுகிறார்கள்.  குஜராத்தி பெண்களுக்கு மிகவும் பொதுவான பாரம்பரிய அலங்காரங்கள் குறிப்பாக சந்தர்ப்பங்களில் புடவைகள் உள்ளன, அவை பல்லு அவர்களின் வலது தோள்பட்டையின் முன்புறம் மற்றும் இடுப்பில் வளைந்திருக்கும் மார்பின் குறுக்கே வரும். சல்வார் கமிஸும் நடைமுறையில் உள்ளது திருமணமான மற்றும் வயதான பெண்கள். குஜராத்தின் ஆண்களின் பாரம்பரிய உடைகள் தோத்திகள் மற்றும் ஒரு குர்தா மேலே அணியப்படுகின்றன. பெண்களின் பாரம்பரிய ஆடைகள் சானியா சோலி மற்றும் ஆண்களுக்கு இது கெடியா உடை என்று அழைக்கப்படுகிறது.

கலை மற்றும் கைவினைப்பொருட்கள்
இமாச்சலப் பிரதேச மக்கள் மர கைவினைப்பொருட்களுக்கு பெயர் பெற்றவர்கள், ஏனெனில் இப்பகுதியில் பைன், செட்ரஸ் டியோடர், வால்நட், குதிரை கஷ்கொட்டை மற்றும் காட்டு கருப்பு மல்பெரி போன்ற மரங்கள் ஏராளமாக உள்ளன, அவை கைவினைப் பணிகளுக்கும் கதவுகள், ஜன்னல்கள், பால்கனி பேனல்கள் போன்றவற்றின் செதுக்கல்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. அவை உலோக கைவினைக்காகவும் அறியப்படுகின்றன.  இமாச்சல பிரதேசத்தின் பல கோயில்களில் பழங்கால உலோக சிலைகள் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும்.  தெய்வங்கள் மற்றும் தெய்வங்களின் சிலைகள் மொஹ்ராக்கள் அல்லது உலோக தகடுகளிலும் தோன்றும். வீட்டுப் பாத்திரங்கள் மிகவும் பிரபலமான பித்தளைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன.  பெட்டிகள், சோஃபாக்கள், நாற்காலிகள், கூடைகள் மற்றும் ரேக் போன்ற மூங்கில் பொருட்களிலிருந்து பொருட்களை தயாரிப்பதிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.  பஷ்மினா சால்வை மற்றும் வண்ணமயமான இமயமலை தொப்பிகள் வெளிநாடுகளிலும் தேவை.

சமையல்
 பெரும்பாலும் குஜராத்தி உணவு சைவமானது, ஏனெனில் மாநிலத்தில் சமணர்கள் மற்றும் வைணவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.  அவற்றின் பிரதான உணவில் கோதுமை மற்றும் தினை வகைகளான ஜோவர் மற்றும் பஜ்ரி ஆகியவை அடங்கும். குஜராத்தியின் எந்த உணவும் பல்வேறு வகையான காய்கறி கறி மற்றும் உணவுகளுடன் ரோட்டியை இழக்காது. உணவு பொதுவாக ஒரு உலோக தட்டில் பரிமாறப்படுகிறது, இது தாலி என்றும் 4-5 சிறிய கிண்ணங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தாலி முக்கியமாக ரோட்டி, பருப்பு அல்லது காதி, சப்ஸி ஷாக் மற்றும் அரிசி என்றும் அழைக்கப்படுகிறது.  குஜராத்திகள் இனிமையான நாக்குக்காகக் குறிப்பிடப்படுகின்றன, மேலும் ஒவ்வொரு உணவிலும் இனிப்பு உணவும் இருக்கும்.  சர்க்கரை சில சமயங்களில் வெல்லத்தால் மாற்றப்படுகிறது. குஜராத்திகள் தாலியில் அவசியம் இருக்க வேண்டிய பிற பொதுவான உணவுகள் பருப்பு, வேகவைத்த காய்கறிகள், வீட்டில் தயாரிக்கப்பட்ட ஊறுகாய், மோர் மற்றும் சாலட். வாகர் என்பது மசாலாப் பொருட்களின் கலவையாகும், இது சூடான எண்ணெயில் சுத்திகரிக்கப்பட்டு பின்னர் பருப்பில் சேர்க்கப்படுகிறது. குஜராத்திகள் பொதுவாக தங்கள் உணவுகளில் நிறைய உப்பு, சர்க்கரை, தக்காளி மற்றும் எலுமிச்சை பயன்படுத்துகிறார்கள். பண்டைய காலங்களில் பண்டிகை அல்லது சில சிறப்பு சந்தர்ப்பங்களில் மட்டுமே வழங்கப்பட்ட இனிப்புகள், இப்போது அன்றாட உணவில் தங்கள் வழியைக் கண்டறிந்துள்ளன.  குஜராத்தியின் உணவில் நெய் அவசியம். ஸ்ரீகண்ட் தயிர் கொண்டு தயாரிக்கப்பட்ட மற்றும் குங்குமப்பூ, ஏலக்காய், கொட்டைகள் மற்றும் பழங்களால் மசாலா செய்யப்படுகிறது. குஜராத்திகள் மாலை சிற்றுண்டியில் 'பக்ரி-ஷாக்' அல்லது கிச்சடி காதி அடங்கும்.

OCCUPATION
 குஜராத் மக்களின் முக்கிய தொழில் விவசாயம் என்பது மொத்த நிலப்பரப்பில் குறைந்தது ஒரு பகுதியையாவது சாகுபடி செய்யக்கூடியது.  பொருளாதாரம் மற்றும் வேலைத் துறையின் பிற பகுதி பால் பண்ணை, முதன்மையாக பால் உற்பத்தியில் அக்கறை கொண்டுள்ளது.  உரங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழில்கள் நிறைய உள்ளன.

FAMOUS PERSONALITIES
சாம் பிட்ரோடா- பிசினஸ்மேன் மற்றும் நவீன இந்தியாவின் தகவல் தொடர்பு புரட்சியின் தந்தை.

சாம் மானேக்ஷா-இராணுவத் தளபதி மிலிட்டரி மற்றும் இந்தியாவின் முதல் இந்திய பீல்ட் மார்ஷல்.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி - சுதந்திர போராளி மற்றும் இந்திய தேசத்தின் தந்தை


வியாழன், 19 மார்ச், 2020

கேரளா வரலாறு

கேரளா வரலாறு

ஒரு கண்ணோட்டம்
பருவகாலங்கள்
புவியியல்
மக்கள்
வரலாறு
வாழ்க்கைத்தரம்
பொறுப்பு சுற்றுலா
கேரள புதுப்பிக்கப்பட்ட பொறுப்புசுற்றுலா
தரிசு நில வேளாண்மை மற்றும் வேளாண் உற்பத்தியைப் பெருக்குதல்
பாரம்பரிய உணவு கார்னர்கள்
சுற்றுலாத்தல வளம் பற்றிய கையேடு
விழா காலண்டர்
நினைவுப் பொருள் மேம்பாடு
பொறுப்புமிக்க சுற்றுலா - குமரகோம்
ஒரு கண்ணோட்டம்
கேரளா 14 செயலாட்சி பிரிவுகள் அல்லது மாவட்டங்களைக் கொண்ட இந்திய குடியரசின் ஒரு மாநிலமாகும். திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு ஆகியவை இதன் முக்கிய நகரங்கள். உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகளுக்காக இம்மாநிலத்தில் மூன்று விமான நிலையங்கள் உள்ளன.

இம்மாநிலத்தில் பிரயாணம் செய்பவர்களுக்குப் பயன்படும் வகையில் சில உடனடித் தகவல்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

(i) அமைவிடம் : இந்தியாவின் தென்மேற்கு முனை

(ii) பரப்பு   :   38,863 சதுர கி.மீ

(iii) மக்கள் தொகை   :   31,84,1374

(iv) தலைநகர்   :   திருவனந்தபுரம் (ட்ரிவேண்ட்ரம்)

(v) மொழி   :   மலையாளம், ஆங்கிலம் பரவலாக பேசப்படுகிறது

(vi) சமயம்   :   இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம்

(vii) நேரம்  :  GMT +5.30

(viii) நாணயம்  :  இந்திய ரூபாய்

(ix) காலநிலை   :   அயனமண்டல காலநிலை

(x) கோடை  :  பிப்ரவரி - மே (24-33°C )

(xi) மழைக்காலம்   :   ஜூன் - ஆகஸ்ட் (22 - 28°C) அக்டோபர் - நவம்பர்

(xii) குளிர்காலம்   :   நவம்பர் – ஜனவரி (22 - 32°C)

(xiii) மாவட்டங்கள் : பழைய பெயர்

xiv. காசர்கோடு

xv. கன்னூர்  :  கன்னனூர்

xvi. வயநாடு

xvii. கோழிக்கோடு : காலிகட்

xviii. மலப்புரம்

xix. பாலக்காடு  :  பால்காட்

xx. திரிசூர்  :  டிரிச்சூர்

xxi. எர்ணாகுளம்

xxii. இடுக்கி

xxiii. கோட்டயம்

xxiv. ஆலப்புழா  :  ஆலெப்பி

xxv. பத்தனம்திட்டா

xxvi. கொல்லம் :  கொய்லோன்

xxvii. திருவனந்தபுரம் : ட்ரிவேண்ட்ரம்

முக்கிய நகரங்கள் : பழைய பெயர்

திருவனந்தபுரம் : ட்ரிவேண்ட்ரம்

கொச்சி  : கொச்சின்

கோழிக்கோடு : காலிகட்

திருவனந்தபுரம் பன்னாட்டு விமான நிலையம்

தொலைபேசி : + 91 471 2501424

உள்நாட்டு விமானங்கள் (நேரடி) : முதல் / வரை :  டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை

பன்னாட்டு விமான நிலையங்கள் (நேரடி) : முதல் / வரை :  கொழும்பு, மாலத்தீவுகள், துபாய், ஷார்ஜா, பக்ரைன், டோபா, ராஸ்-அல்-ஹைமா, குவைத், ரியாத், பிஜ்யாய்ரா, சிங்கப்பூர்.

ஏர் இந்தியா தொலைபேசி : + 91 471 2310310

இந்தியன் ஏர்லைன்ஸ் தொலைபேசி : + 91 471 2318288

ஜெட் ஏர்வேஸ் தொலைபேசி : + 91 471 2500710, 2500860

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொலைபேசி : + 91 471 2471810

கல்ஃப் ஏர் தொலைபேசி : + 91 471 2728003, 2501206

ஓமன் ஏர்வேஸ் தொலைபேசி : + 91 471 2728950

குவைத் ஏர்வேஸ் தொலைபேசி : + 91 471 2720013

சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் தொலைபேசி : + 91 471 2723141

கத்தார் ஏர்வேஸ் தொலைபேசி : + 91 471 3919091, 3919092

பாரமெளண்ட் தொலைபேசி : + 91 99954 00003

கிங்பிஷர் தொலைபேசி : + 91 471 2508822

ஜெட்லைட் தொலைபேசி : + 91 471 4010033

கொச்சின் பன்னாட்டு விமான நிலையம் (CIAL), நெடும்பசேரி

தொலைபேசி : + 91 484 2610113

உள்நாட்டு விமானங்கள் (நேரடி) : முதல்/ வரை : மும்பை, சென்னை, கோவா, அகாத்தி, பெங்களூரு

பன்னாட்டு விமானங்கள் (நேரடி) : முதல்/ வரை : ஷார்ஜா, துபாய், அபுதாபி, டெக்ரான், பக்ரைன், ரியாத், மஸ்கட்

ஏர் இந்தியா தொலைபேசி : + 91 484 2610050

இந்தியன் ஏர்லைன்ஸ் தொலைபேசி : + 91 484 2371141

ஜெட் ஏர்வேல்ஸ் தொலைபேசி : + 91 484 2610037

சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் தொலைபேசி : + 91 484 2352689

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தொலைபேசி : + 91 484 2358131

குவைத் ஏர்வேஸ் தொலைபேசி : + 91 484 2382576

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொலைபேசி : + 91 484 2361263

எமிரேட்ஸ் தொலைபேசி : + 91 484 40844444

கத்தார் ஏர்வேஸ் (கால் சென்டர : 0124 – 4566000)

ஜெட்லைட் தொலைபேசி : + 91 484 2611340

ஏர் டெக்கான் தொலைபேசி : + 91 484 2610289

பாராமெளண்ட் தொலைபேசி : + 91 484 2610404

காலிகட் பன்னாட்டு விமான நிலையம், காரிபூர்

தொலைபேசி : +91 483 2710100

உள்நாட்டு விமானங்கள் (நேரடி) : முதல்/ வரை :  மும்பை, சென்னை, கோயம்புத்தூர்

பன்னாட்டு விமானங்கள் (நேரடி) : முதல்/ வரை : ஷார்ஜா, பக்ரைன், துபாய், தோஹா, ராஷ்-அல்-கைமா, குவைத், ரியாத், ஃபுஜாரியா

ஏர் இந்தியா தொலைபேசி : + 91 483 2766669

இந்தியன் ஏர்லைன்ஸ் தொலைபேசி : + 91 483 276643

ஜெட் ஏர்வேல்ஸ் தொலைபேசி : + + 91 483 2740052

காவலர் உதவிக்கு

நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் போது + 91 98461 00100

இரயில் பயணங்களின் போது + 91 98462 00100

பருவகாலங்கள்
கேரளா, கீழ்நோக்கி நீளவாக்கில், முழுவதும் கடற்கரையைக் கொண்ட வெப்ப மண்டல நிலத்தையும் வடக்கிலிருந்து வரும் உலர்ந்த காற்றை தடுத்து நிறுத்தும் பாதுகாப்பு அரணாக மேற்கு தொடர்ச்சி மலை இருப்பதாலும் ரம்மியமான மற்றும் சீரான காலநிலையை ஆண்டு முழுவதும் பெற்றிருக்கிறது. மழைக்காலம் (ஜூன்-செப்டம்பர் மற்றும் அக்டோபர் - நவம்பர்) மற்றும் கோடைகாலம் (பிப்ரவரி - மே) ஆகியவை குறிப்பிடத்தக்க பருவங்களாகும். குளிர்காலத்தில் வெப்பநிலை இயல்பான அளவை விட சற்று குறைந்து 28–32°C வரை இருக்கும்.

புவியியல்
மேற்கில் அரபிக்கடல், கிழக்கில் 500-2700 மீட்டர் மேற்குத் தொடர்ச்சி மலை, மற்றும் நாற்பத்து நான்கு ஆறுகள் ஆகியவற்றை கொண்டிருப்பதன் காரணமாக கேரளா மாறுபட்ட புவியியல் அமைப்பை கொண்டுள்ளது. உயர்ந்த மலைகள் மற்றும் ஆழமான பள்ளத்தாக்குகள் முடிவில்லா காயல்கள் மற்றும் பரந்த கடற்கரை என்று கேரளா அனைத்து புவியியல் கூறுகளையும் பெற்றிருக்கிறது.

மக்கள்
இந்தியாவின் மிகவும் படிப்பறிவுள்ள மற்றும் சமூகத்தில் முன்னேறிய நிலையில் கேரள மக்கள் இருப்பதால் அவர்கள் ஒரு தனித்தன்மையான பரந்தநோக்குக் கொண்டுள்ளனர் என்பது, அவர்களது பொறுமை மற்றும் சகிப்பு தன்மை மூலம் பிரதிபலிக்கிறது. இதன் மூலம் கேரளாவின் பண்பாடு உலகெங்கிலும் உள்ள பல இடங்கள் மற்றும் இனங்களோடு இணைந்து குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துவருகிறது.

புதிய மரபுகளை ஏற்றுக் கொள்ளுதல் மற்றும் மனித சிந்தனை மற்றும் முயற்சி ஆகிய மதிப்பு மிக்க குணங்களை ஏறத்தாழ ஒவ்வொரு நிலையிலும் கொண்டிருத்தல் ஆகியவை காலங்கடந்து நிற்கும் கேரள மக்களின் குறிப்பிடத்தக்க திறன்களாக இருக்கின்றன. இந்த நேர்மறை எண்ணம் மாற்றத்தைத் தந்ததோடு கேரள மக்கள் எத்தகையவர்கள் என்பதையும் காட்டுவதோடு, சமூகத்திலிருந்து அவர்களை தனித்தன்மை உடையவர்களாகவும் காட்டுகிறது.

கேரளத்தினர் அதிக விழிப்புணர்வும் அரசியல் உணர்வும் மிக்கவர்கள். கல்வித் துறையிலும் கேரளத்தினர், ஒரு சிறப்பிடத்தைப் பெற்றுள்ளனர். ஆசியாவிலேயே பெண்கள் கல்வி அறிவு விகிதம் கேரளாவில்தான் அதிகமாக உள்ளது. ஒரு வேளை, இது, குடும்பத்திலும் சமூகத்திலும் இம்மாநில பெண்கள் தனி உரிமையை பெற்றிருந்தமையால் கூட இருக்கலாம்.

வரலாறு
கேரளாவின் வரலாறு வணிகத்தோடு நெருங்கிய தொடர்புடையது. இன்றும் நறுமணப் பொருட்கள் வணிகம் தொடர்ந்து வருகிறது. இந்தியாவின் நறுமணப் பொருட்கள் வியாபார மையமாக இருந்ததோடு, கிரேக்கம், ரோமானியம், அரேபியா, சீனர், போர்த்துகீசியர், டச்சுக்காரர்கள், பிரஞ்சுக்காரர் மற்றும் பிரிட்டீஷ்காரர்கள், யாத்ரீகர்கள் வணிகர்கள் என உலகெங்கிலும் உள்ளவர்களுக்கு விருந்தளிக்குமிடமாகவும் பழங்கால கேரளா இருந்துள்ளது. அநேகமாக அனைவரும் தம் நாட்டின் கட்டடக்கலை, சமையற்கலை, இலக்கியம் யாவற்றின் சுவட்டினையும் ஏதோ ஒரு வடிவில் இங்கு விட்டுச் சென்றுள்ளனர்.

வாழ்க்கைத்தரம்
“கேரளா வளர்ந்த நாடுகளுள் விநோதமான முரண்பட்ட கொள்கையும், வருங்காலத்தில் மூன்றாம் உலகத்தை படைக்கும் என்ற உண்மையான நம்பிக்கை தரும் மாநிலமாகவும் உள்ளது. பெரும்பாலான நிலப்பகுதி நெற்பயிரால் சூழப்பட்ட சமவெளிகளை கொண்டது, புள்ளி விவரப்படிப் பார்த்தால் கேரளாவின் சமூக வளர்ச்சி எவரெஸ்ட் சிகரம் அளவிற்கு உயர்ந்து நிற்கிறது” என்று பில் மிக்கிபென், தேசிய புவியியல் பயணி என்ற வெளியீட்டில் அக்டோபர் 1999-இல் குறிப்பிட்டுள்ளார்.

சமூக நலம் மற்றும் தரமான வாழ்க்கை என்ற நிலையில் பார்க்கும் போது கேரளா இந்தியாவின் மிகவும் வளர்ச்சி பெற்ற மாநிலமாகும். இந்தியாவின் மற்ற மாநிலங்களிலிருந்தும் பிற குறைந்த வருவாய் நாடுகளிலிருந்தும் மாறுபட்டு கேரளத்தினர் கல்வியிலும் உடல் நலத்திலும் மேலை நாடுகளுக்கு இணையான நிலையை அடைந்துள்ளனர். இந்தியாவின் அதிகப்படிப்பறிவு விகிதம், உயர்வான வாழ்க்கைத்தரம், குறைந்த குழந்தை இறப்பு விகிதம் ஆகியவை இம்மாநிலத்தின் வரமாகும்.

கேரளாவின் அனைத்து சமுதாய நிலையில் உள்ள மக்களுக்கும் பெருமளவில் சேவைகளும் வாய்ப்புகளும் கிடைப்பதோடு, பெருமளவில் கட்டுப்பாடு மிக்கவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த மாநிலம் நகரமயமாக்கலில் முதன்மையாகவும் சட்டம் ஒழுங்கு பராமரித்தலை நல்ல முறையில் கடைபிடிக்கும் மாநிலமாகவும் உள்ளது.

பொறுப்பு சுற்றுலா
சுற்றுலாவின் நேர்மறை விளைவுகளை அதிகப்படுத்தி எதிர்மறை விளைவுகளை குறைப்பதற்கு பொறுப்பு சுற்றுலா (RT) ஒரு நல்ல வழி என்று உலகெங்கிலும் பெருமளவில் இது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள கேரள மாநிலம் இந்த RT முறையை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் முன்னோடியாக உள்ளது. இந்த மாநிலத்திலுள்ள குமரகோம் இந்தியாவிலேயே முதன்முதலாக RT –ஐ வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திக் காட்டிய இடம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு உதவுதல், அங்குள்ள மக்கள் மற்றும் அங்கு வியாபாரம் செய்பவர்களுக்கு சுற்றுலா மூலம் இயலக் கூடிய விதத்தில் ஆதாயம் பெற முடிகிறது. சுற்றுசூழலிக்கு உதவும் விதத்தில் இயற்கையாக அல்லது சமுதாய சீர்கேடு நடைபெறாவண்ணம் இவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய சுற்றுலா உருவாக்கமாக இது உள்ளது. இதில் மிகவும் குறிப்பிடத்தக்க உண்மை யாதெனில் RT உள்ளுர் மக்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கைச்சூழலை அமைத்து தருகிறது என்பதுவே ஆகும்.

கேரள புதுப்பிக்கப்பட்ட பொறுப்புசுற்றுலா
பொறுப்பு சுற்றுலா(RT) கேரள சுற்றுலா துறையின் ஒரு புதுமையான மற்றும் தொலைநோக்குக் கொள்கையாகும். இது தனது கட்டத்தின் ஒரு செயலை முடித்திருப்பது குறிப்பிடத்தகுந்த மைல் கல்லாக உள்ளது. ஒரு முன்னோடி பக்கமாக இந்த முயற்சிகள் கோவளம், குமரகோம், தேக்கடி மற்றும் வயநாடு ஆகிய நான்கு சுற்றுலாத்தலங்களில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. இந்த அனைத்து இடங்களிலும் குமரகோம் பொறுப்பு சுற்றுலாவை நடைமுறைப்படுத்துவதில் ஒரு வெற்றி பெற்ற மாதிரி இடமாக உள்ளது. இது கேரளாவின் சிறந்த பொறுப்பு சுற்றுலாமுயற்சி இடம் என்று இந்திய சுற்றுலா அமைச்சகத்தால் பெருமைப் படுத்தப்பட்டுள்ளது.

தரிசு நில வேளாண்மை மற்றும் வேளாண் உற்பத்தியைப் பெருக்குதல்
மீன் பண்ணைகள் மற்றும் தாமரை பயிரிடுதல்
ஹோட்டல் தொழில்களுக்கிடையே உறவை உருவாக்குதல் மற்றும் உள்ளூர் உற்பத்திகளுக்கு கிராக்கியை ஏற்படுத்துதல்
நினைவுப்பொருள் தொழிலை மேம்படுத்துதல்
சமூக அடிப்படையிலான சுற்றுலா தயாரிப்புகள்
உள்ளூர் கலைவடிவங்கள் மற்றும் கலாச்சார மேம்பாடு
கலாச்சார சுற்றுலா மற்றும் பாரம்பரிய  சமையல்வகை
சமூக விழிப்புணர்வு மற்றும் சுற்றுலா மேலாண்மை
சுற்றுச் சூழல் பாதுகாப்பு
ஆற்றல் சேமிப்பு அளவுகள்
விரிவான ஆற்றல் வரைபடம் இடுதல்
பாரம்பரிய உணவு கார்னர்கள்
இது வயநாட்டிலுள்ள ஒரு மாடல் முயற்சியாகும். எடக்கல் குகைகள் மற்றும் போக்கெட் ஏரி பகுதியில் RT செல் இரண்டு பாரம்பரிய உணவு கார்னர்களை தொடங்கியுள்ளது. எடக்கல் குகைகளுக்கு அருகிலுள்ள கடை வயநாட்டிலுள்ள பழங்குடி சமுதாய மக்களால் நடத்தப்படுகிறது. போக்கெட் ஏரியில் உள்ள கடை குடும்பஸ்ரீகளால் நடத்தப்படுகிறது. எடக்கலில் உள்ள பாரம்பரிய உணவு கார்னரில் பழங்குடி, பாரம்பரியம் மற்றும் சுவையான சிற்றுண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு மாதத்திற்கு உள்ளாக 1.25 லட்சம் வரை வருவாய் இதன் மூலம் ஈட்டப்பட்டுள்ளது.

இதை நடைமுறைப் படுத்தும் போது உள் பகுதிகளின் சமூகப் பொறுப்பும் கருத்தில் கொள்ளப்படுகிறது. இந்த செயல்பாட்டினை மேலும் மெருகூட்டும் வகையில் புனித தளங்களோடு தொடர்புடைய விழாக்கள் மற்றும் திருவிழாக்கள், சுற்றுலாவோடு தொடர்புடைய முதன்மை சமுதாய சிக்கல்கள், பாதுகாப்பு சிக்கல்கள் தொடர்பான அறிவினை உருவாக்குதல் பாரம்பரிய உணவு, உள்நாட்டு படகு பயணம், உள்கட்டமைப்பு இடைவெளி கணக்கீடு, ஒழுங்கு நடவடிக்கையை உருவாக்குதல், சமூக அடிப்படையிலான சுற்றுலா உற்பத்திகளை கண்டறிதல் வயநாடு நினைவுப் பொருட்கள் மேம்பாடு சுற்றுலாத் தல கையேடு, வளங்களின் வரைபடம், சமூக ஆய்வு, உள்ளக சுற்றுலாதல ஆய்வு மற்றும் தொழிலாளர் கையேடு ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. இந்த எல்லா பிரிவுகளிலும் RT செல் விரிவான அறிக்கைகளையும் திட்டங்களையும் அளித்துள்ளது.

சுற்றுலாத்தல வளம் பற்றிய கையேடு
வயநாடு மாவட்டத்தின் முக்கிய வளங்கள் மற்றும் கிடைக்கும் முக்கிய பொருட்கள் ஆகியவை அடங்கிய கையேடு ஒன்றினை RT செல் தயாரித்துள்ளது. இந்த கையேட்டினை உருவாக்குவதற்கு முன்பாக RT செல் அப்பகுதி பற்றிய விரிவான தகவல்களை திரட்டி உள்ளது. இது அடிமட்ட அளவில் இருந்தது மொத்தமாக அனைத்து வளங்களின் வரைபடத்தையும் கொண்டதாக உள்ளது. இயற்கை பாரம்பரியம், வரலாறு, புவியியல், சமுதாயம், முதலியவற்றை உள்ளடக்கியதாக இந்த கையேடு உள்ளது.

விழா காலண்டர்
கலாச்சார சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக RT செல் வயநாட்டிலுள்ள முக்கிய புனித தளங்கள் அடங்கிய விவரமான விழா காலண்டர் ஒன்றினை தயாரித்துள்ளது. இதில் வரலாறு, திருவிழாக்கள், பழக்கவழக்கங்கள், சடங்குகள், கோவில் கலைகள் ஆகியவை பற்றிய விரிவான தகவல்கள் அடங்கியுள்ளன. இது சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு சமுதாயத்தினரின் நம்பிக்கை மற்றும் வழிபாடுகள் ஆகியவற்றைப் பற்றி அதிகமாக அறிந்து கொள்ள உதவுகிறது.

நினைவுப் பொருள் மேம்பாடு
உள்ளூர் கலைஞர்கள், கைவினைஞர்கள் மற்றும் நறுமணப் பொருட்கள் விவசாயிகள் ஆகியோருக்கு இந்த சுற்றுலா தலம் பற்றிய புதிய பக்கத்தை தருவதற்கான தூண்டு கோலாக இந்த நினைவுப் பொருட்கள் உள்ளது. மூன்று வகையான நினைவு பொருட்கள் மூட்டைகள், எடக்கள் குகைகளின் சித்திரம் மற்றும் காப்பி கொழுந்து தயாரிப்புகள் ஆகியவை ஆகும். இப்போது இந்த நினைவு பொருட்கள் யாவும் சாம்ருதி கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

எடக்கல் குகைகளுக்கான பார்வையாளர் மேலாண்மை திட்டம்

வயநாட்டிலுள்ள மிகவும் அழகான மிகவும் பழைமையான பாறை குகையான எடக்கல் குகைகள் அதிக மக்கள் வந்து போகும் சுறுசுறுப்பான இடங்களுள் ஒன்றாகும். சுற்றுலாத் தலத்தில் வந்து குவியும் பயணிகளுக்கு அதிக வசதிகளை செய்து தருவதற்காக ஒரு பயனுள்ள பார்வையாளர் மேலாண்மை திட்டத்தை RT செல் தயாரித்துள்ளது.

வயநாட்டின் கிராமப்புற வாழ்க்கை அனுபவம்

வயநாட்டின் கிராமப்புற வாழ்க்கை அனுபவத்தை அனுபவிப்பதற்காக RT செல் இரண்டு தொகுப்புகளை வழங்கியுள்ளது. அவற்றில் ஒன்று ஃப்ராக்னெண்ட் ஹில் மற்றது இயற்கை ஆன்மாவிற்கான பயணம் ஆகியவை ஆகும். பொழுத்தானா கிராமப் பஞ்சாயத்தில் சுகந்தகிரியில் ஃப்ராக்னெண்ட் ஹில் –க்கான சாலை அமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய கலை வடிவங்களான மூங்கில், களிமண் மற்றும் கோரைப்புல் ஆகியவற்றால் செய்யப்பட்ட உள்ளூர் பொருட்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டு கிடைக்கின்றன.

ஆத்மார்த்தமான இயற்கையை காண கோட்டத்தாரா கிராம பஞ்சாயத்தின் காரியம்குட்டிக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும். இந்தச் சுற்றுலா தொகுப்பு பழசிராஜாவின் வீரர்களின் அரச கலாச்சார குரிச்சியஸ்யை வழங்குகிறது. இங்குள்ள கூட்டுக் குடும்ப முறையில் அவர்களின் வாழ்க்கை முறையின் தனித்துவம், பாரம்பரியம், சடங்குகள், பழக்கவழக்கங்கள் மற்றும் நாட்டுப்புற வேளாண்மை மற்றும் மருத்துவ முறைகள் ஆகியவற்றைக் கண்டு கொள்ளலாம். இந்தத் தொகுப்பின் மற்றுமொரு கவர்ச்சிகரமான அம்சம் யாதெனில் பட்டு தயாரிப்பின் ஒவ்வொரு நிலையையும் விளக்கும் காட்சிகள் உள்ள பட்டுத் தயாரிப்பு மையம் மற்றும் காப்பி, கழுகு, தென்னை, வாழை, இஞ்சி, மஞ்சள், மிளகு, ஜாதிக்காய் போன்றவற்றின் காட்சிகளாகும். மற்றுமொரு முக்கியமான கவர்ச்சி யாதெனில் மீன்கள் உள்ள குளம். இங்கு பாரம்பரிய முறை மீன்பிடி முறைகளை கண்டு மகிழலாம்.

இந்தத் தொகுப்புகளின் மூலம் சுற்றுலா பயணிகள் உள்ளூர் விவசாயிகள், குழந்தைகள், பாரம்பரியமிக்க மருத்துவ பயிற்சியாளர்கள் முதலியவர்களிடம் பழகும் ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது. இந்தப் பிரத்தியேக தொகுப்பு அரிய அனுபவம் மற்றும் கவரும் விதத்திலுள்ள கிராமங்கள் ஆகியவற்றிற்கு சுற்றுலாத்துறையின் பயனை பரிந்துரை செய்து உள்ளூர் சமூகம் அதனை நகரும்படி செய்கிறது.

இவற்றோடு சேர்த்து RT பிரிவானது சமூக கள ஆய்வு மற்றும் உள்ளக சுற்றுலா தள ஆய்வு என அவற்றை நன்கு ஆய்வு செய்து உள்ளூர் மக்களின் அறிவு மற்றும் தொழில்களை அடையாளம் கண்டு அதனைச் சுற்றுலாத்துறையை நோக்கி ஈர்க்கிறது. இது சுற்றுலாத்தலங்களில் வசிக்கும் உள்ளூர் மக்களின் தரத்தை கண்டறிய உதவியாக இருக்கும். பாதுகாப்பு முறைகள், நடத்தை நெறி, துண்டு பிரசுரங்கள், சமூக பிரச்சனைகளைக் குறைத்தல் போன்றவற்றையும் ஆய்வு செய்து அதற்கான தீர்வுகளை இந்தப் பிரிவு வழங்குகிறது.

சுற்றுச்சூழல் பொறுப்பு

பிற முக்கிய பொறுப்பான செயல்களைப் போல சுற்றுச்சூழல் பொறுப்பு வேலையும் RT பிரிவு மூலம் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. வயநாடு தூய்மை சோச்சி பாரா திட்டம், பூக்கோட் ஏரியில் பிளாஸ்டிக்கால் மாசுபடுவதைக் கட்டுப்படுத்துதல், சுற்றுச்சூழல் ஆய்வு, தெருவிளக்கு ஆய்வு மற்றும் அரிய மரங்கள் பற்றிய தலையீட்டின் மூலம் நடைபெறும் சில முக்கிய நடவடிக்கைகள் ஆகும்.

தூய்மை சோச்சிபாரா

சோச்சிபாரா வயநாட்டிலுள்ள மிகவும் கவர்ச்சியான ஆற்றல் மிக்க நீர்வீழ்ச்சிகளுள் ஒன்றாகும்.

பூக்கோட் ஏரி

பூக்கோட் ஏரி வயநாட்டிலுள்ள சுத்தநீர் ஏரியாகும். இது ஒவ்வொரு வருடமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதாக உள்ளது.

சுற்றுச்சூழல் ஆய்வு

RT செல் வயநாட்டில் 17 பொருட்கள் பற்றிய சுற்றுச்சூழல் ஆய்வினை மேற்கொண்டுள்ளது. இது அடிப்படைத் தகவல், சுற்றுச் சூழல் கொள்கைகள் மற்றும் ஆற்றல் மேலாண்மை ஆகியவற்றை ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதைப் பற்றிய விவரங்களைத் தருகிறது.

தெருவிளக்கு ஆய்வு

வைத்திரி பஞ்சாயத்தின் தெருவிளக்குகளை நல்ல முறையில் மேளாண்மை செய்வதற்கு RT செல் அந்தந்த பகுதிகளில் உள்ள தெரு விளக்குகள் பற்றி ஆய்வு நடத்தி தெரு விளக்குகள் பற்றி பஞ்சாயத்து அலுவலகத்தில் அரிக்கை சமர்பிக்கப்படுகிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில் பஞ்சாயத்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

அரிய மரங்கள் பற்றி கற்றல்

மனிதனால் சீராக்கப்பட்ட நில அமைப்புகளில் அரிய மர வகைகளை இயற்கை முறை பயிரிடுதல் மூலம் பயிரிடப்படுகிறது. அவற்றிற்கு பிரத்தியேக இயல்வு மற்றும் பல்லுயிர் பரவல் வளமான இடமாக இடம் தேவைப்படுவதால் அவை நன்றாக பாதுகாக்கப்படுகின்றன. இவற்றை பின்புலமாகக் கொண்டு இந்த குறிப்பிட்ட பகுதியில் உள்ள அனைத்து அரிய வகை மரங்களையும் உள்ளடக்கிய ஒரு விரிவான கற்றலுக்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

பூஜ்யம் சகிப்பு பிரச்சாரம்

பொறுப்புள்ள சுற்றுலாத்துறை என்ற குடையின் கீழ் கோவளத்தில் குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்படுவதற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கையாகும். இது உண்மையான நிலவரம், சூழல், ஆதாரம் மற்றும் இந்தச் சமூக சீர்கேட்டிற்கான காரணம் ஆகியவற்றை உற்றுநோக்கிய பின்னர் நன்கு திட்டமிடப்பட்டுள்ளது.

தொழிலாளர் விவரகையேடு

சுற்றுலா பிரிவில் உள்ளூர் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் நோக்கோடு கோவளத்திலுள்ள வெவ்வேறு பிரிவுகளைச் சார்ந்த தொழிலாளர்களின் விவரங்களை RT செல் திரட்டியது. இது தேவைக்கு ஏற்ப வெவ்வேறு துறையைச் சார்ந்த வல்லுநர்கள் பற்றி முன் கூட்டியே அறிய வைக்கிறது.

கிராம வாழ்க்கை அனுபவ தொகுப்புகள்

கடற்கரை மற்றும் ஏரிப்பகுதியில் ஒரு முழுநாள் சுற்றுலா சென்றுவந்த பின்னர் கோவளத்தில் பார்க்கத்தக்க அரைநாள் சுற்றூலா சென்றுவர கிராம வாழ்க்கை அனுபவ (VLE) தொகுப்புகள் உள்ளன. VLE தொகுப்பு கேரள சுற்றுலாத்துறை மூலம் வரைவு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமப்புற வாழ்க்கை அனுபவத் தொகுப்பு என்னும் தனிப்பட்ட மிகவும் புதுமையான வெகு தொலைவு வரை சென்றடையும் பொறுப்பு சுற்றுலா(RT) என்ற முத்திரையில் இது நடைபெற்றது. சுற்றுலா செயல்பாடுகளை புதிய கண்ணோட்டத்தில் வெளிப்படுத்தவும் பொருளுள்ள மற்றும் ஒருவருக்கொருவர் பயனுள்ள சுற்றுலாவாக மாற்றவும் இலக்கு நிர்ணயித்து புதிய கோணங்களில் அவற்றை உருவாக்கி வந்தது. இங்கு சுற்றுலா பயணிகள் மற்றும் ஹோட்டல் நடத்துவோர் ஒருவருக்கொருவர் பரஸ்பர நம்பிக்கை வைத்துள்ளனர். கிராமப்புற வாழ்க்கை அனுபவத் தொகுப்புகள் என்னும் கருத்தை சமூக பொறுப்புணர்வின் ஒரு பகுதியாக அளித்துள்ளது.

ஒரு சுற்றுலாத் தலத்தின் வாழ்க்கை முறை, கலாச்சாரம், வாழ்க்கைத் தேவைகள் ஆகியவற்றை அடிப்படையாக்க் கொண்டு கிராமப்புற வாழ்க்கை அனுபவத் தொகுப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. VLE தொகுப்புகள் என்று அழைக்கப்படும் இந்த தொகுப்புகளின் முக்கிய அம்சம் யாதெனில் ஈட்டப்படும் வருவாயில் அதிக பங்கு சமுதாயத்திற்கே சென்றடைவதாகும். இந்தத் தொகுப்புகளின் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்ட அதன் மூலம் 65-70% இலாபம் உள்ளூர் மக்களுக்கு அதாவது இந்த தொகுப்பில் பங்காளர்களாக இருப்பவர்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது. உள்ளூர் மக்களின் திறமையை மதிக்கவும் அவர்கள் தங்கள் பாரம்பரிய தொழில்கள் மூலம் தமது தேவைகளை நிறைவு செய்யவும் சுற்றுலா மூலம் கூடுதல் வருமானம் ஈட்டச்செய்யும் வகையில் VLE ஆனது உள்ளூர் மக்களை ஊக்கப்படுத்தி தொடர்ந்து தமது பாரம்பரிய தொழிலைச் செய்ய வைக்கிறது.

குமரகோம் - கேரளாவின் முதல் RT ஆய்வு களம்

ஒரு குறிப்பிட்ட குறைந்த கால அளவிற்குள் இந்த கருத்து ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இந்த மாநிலத்தில் ஒரு வெற்றிகரமான வளர்ச்சியை கண்டு வருகிறது. நான்கு முக்கிய சுற்றுலாத்தலங்களான குமாரகோம், வயநாடு, கோவளம் மற்றும் தேக்கடி ஆகியவை கேரளாவின் பொறுப்பு சுற்றுலாமையங்களாக புகழ்பெற்று வருகின்றன. பொறுப்புச் சுற்றுலா மூலம் இந்த இடங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏற்படுத்தப்பட்ட வளர்ச்சிகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

குமரகோம் கோட்டயம் மாவட்டத்திலுள்ள ஒரு சுற்றுலா கிராமம் ஆகும். இந்த இடம் பல்வேறு வகையான வெப்ப மண்டல காலநிலைக்கு நன்றாக ஈடுகொடுத்துவரும் ஒரு இடமாக இருப்பதால் இது உலக சுற்றுலா வரைபடத்தில் ஒரு அருமையான சுற்றுலாத்தலம் என்னும் இடத்தை பிடித்துள்ளது.

சுற்றுசூழலின் சிறப்புத் தன்மைகள்

பறவைகள் சரணாலயத்தில் 90 வகை உள்ளூர் பறவைகள் மற்றும் 50 வகை இடம்பெயர்ந்து வந்த பறவைகள் உள்ளன.
1970 மற்றும் 1980 –இன் ஆரம்ப காலத்தில் நைட் ஹெரான்ஸ் –இன் இனப்பெருக்க பகுதியாக மட்டும் இருந்தது.
எண்ணற்ற வகை மீன்களுக்கு உணவூட்டம் மற்றும் இனப்பெருக்க தலமாகும்.
ஏராளமான சதுப்புநில காட்டு வகைகளுள் குமரகோமில் மூன்று மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறுப்புமிக்க சுற்றுலா - குமரகோம்
பொறுப்பு சுற்றுலா குமரகோமில் 2007 ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்டது. ஆனால் அது மார்ச் 2008 லேயே அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

a. பெண்கள் மேம்பாடு

பொறுப்பு சுற்றுலாமூலம் பெண்கள் பணம் பண்ணும் வாய்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள இது உதவுவது மிகவும் பாராட்டதக்க ஒரு விசயமாகும்.

b. வேலைவாய்ப்பு

குமரகோம் பொறுப்பு சுற்றுலா அப்பகுதியை வருவாய் ஈட்டும் தொழிலின் சுவர்க்க பூமியாக மாற்றியுள்ளது. சிறுதொழில் உற்பத்தி மற்றும் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் மற்றும் கலைப் பொருட்கள் விற்பனை ஆகியவை மூலம் உள்ளூர் மக்கள் தங்கள் வாழ்க்கைகான வருவாயை ஈட்டிக்கொள்கின்றனர். இவ்வாறு பொறுப்பு சுற்றுலா உள்ளூர் மக்களை நேரடியாக சுற்றுலா பொருள் விற்பனை சொந்தக்காரர்களாக்கி வெறுமனே சேரிட்டிகள் லாபம் ஈட்டுவது போல் அல்லாமல் பொருளாதார பங்களிப்பை உள்ளூர் மக்கள் வழங்க உதவுகிறது. உள்ளூர் அமைப்புகளும் லாபம் ஈட்டும் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனைகளை குமரகோமில் வெற்றிகரமாக செய்து வருகிறது.

c. திட்டமிடப்பட்ட வளர்ச்சி

மாநில சுற்றுலாத்துறை மற்றும் குமரகோம் கிராம பஞ்சாயத்து ஆகியவற்றோடு இணைந்து பொறுப்புமிக்க சுற்றுலாகுழு பல ஹோட்டல்களையும் ஓய்வு விடுதிகளையும் நடத்தி வருகிறது. இந்த கூட்டு முயற்சியினால் பாரம்பரிய பொருட்களுக்கான விற்பனை சந்தையின் கதவுகள் திறந்துள்ளன. பொறுப்பு சுற்றுலா சாதாரணமாக லாபம் ஈட்டும் மற்ற சுற்றுலா தலங்களில் இருந்து குமரகோம் இந்த பிரிவில் முதல் நிலையைப் பெறுகிறது.

d. பொறுப்பு சுற்றுலாத்தல செல் மற்றும் அதன் பணிகள்

பொறுப்பு சுற்றுலா சேவையை ஆதரிக்கவும் அதன் செயல்திறனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு ஏதுவாகவும் செப்டம்பர் 2009 –இல் பொறுப்பு சுற்றுலாத்தல செல் தொடங்கப்பட்டது. தொழில்நுட்பம், பொருளாதாரம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான அனைத்து கூடுதல் தேவைகளும் வழங்கப்படுகின்றன. இந்த சம்ருதி குழுக்களின் செயல்திறனானது உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் விற்பனை சவால்களுக்கு ஒப்பானதாக இருக்கிறது. நிலையான வருமானமும் ஈட்டபட்டது. இந்த குழுக்கள் மக்களுக்கு குறைவான விலையில் திறந்தவெளி சந்தை மூலம் தமது பொருட்களை விற்று வருகின்றன.

e. தயாரிப்பு பிரிவு

விற்பனையில் தடை ஏற்படாமல் இருக்க விற்பனை தளங்கள் தோரும் குடும்பஸ்ரீ குழுக்கள் திறக்கப்பட்டது. தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றி காய்கறி பயிரிடுதல் மாபெறும் வெற்றி பெற்றது. இதன் மூலம் விற்பனை வரைபடமும் நல்ல ஒரு முன்னேற்றம் கண்டது. தரை மட்டத்தில் இருந்து உற்பத்தியை சீர் செய்வதற்காக குமரகோமில் ஒன்பது சமிதி குழுக்களும், அறுகாமையில் உள்ள மன் ஜாடிக்கரையில் ஒன்றும் அமைக்கப்பட்டது. சிறிய அளவிலான 250 நபர்களை கொண்ட குடும்பஸ்ரீ குழுக்களும் 512 குடும்பங்களை கொண்ட குடிசை தொழில் அமைப்பும் மற்றும் 450 நபர்களை கொண்ட கர்ஷா சமிதியும் குமரகோமில் இருந்து பொறுப்பான விற்பனையை மேலாண்மை செய்து வருகிறது.

f. தேவையும் வழங்கலும்

கிராமவாசிகளிடமிருந்து உணவகங்கள் மற்றும் தங்கும் தலங்களுக்கு தேவையான காய்கறிகள், கனிகள், முட்டை, பால் மற்றும் இறைச்சி முதலானவற்றை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. வழங்கப்படும் பொருட்களின் தரத்தை கண்காணிக்க குடும்பஸ்ரீ குழுக்கள் மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதன் மூலம் குடும்பஸ்ரீ மற்றும் ஹரிதா ஸ்ரீ குழுக்கள் லாபம் ஈட்டத் தொடங்கின. விலை நிர்ணய குழு (DLRTC நியமித்த விலை நிர்ணய குழு கிராம பஞ்சாயத்து குடும்பஸ்ரீ, DTPC மற்றும் உணவகங்களின் கொள்முதல் தொழிலாளர்களை கொண்டது) மற்றும் தர நிர்ணய குழு (கிராம பஞ்சாயத்து, குடும்பஸ்ரீ, DTPC, உணவக சமையல் தொழிலாளர், கால்நடை மருத்துவர், வேளாண்மை அலுவலர் மற்றும் உடல்நிலை ஆய்வாளர் ஆகியோரை கொண்டது) பொருட்களின் தரத்தை ஆராய்கிறது.

ஆதாரம் : கேரளா மாநில சுற்றுலா வலைதளம்

Posted by .
 -புவனாமகேந்திரன்.
    மதி கல்வியகம்.

திங்கள், 16 மார்ச், 2020

கூழ் வரலாறு


கூழ் வரலாறு

கூழ், இலங்கையிலும் இந்தியாவிலும் வெப்பம் நிறைந்த பகுதிகளில் அதிக அளவில் உண்ணப்படும் ஒரு உணவாகும். ஒடியல், கேழ்வரகு, கம்பு போன்றவற்றை அரைத்து தயிர் சேர்த்துத் தயாரிக்கப்படும் கூழ்ம நிலையிலுள்ள உணவு இது. கூடுதலான அளவு நீர் சேர்வதாலும், குறைந்த செலவில் கூடுதல் அளவில் உணவு தயாரிக்க முடியும் என்பதாலும் உழவர்களும்வெயிலில் நெடுநேரம் வேலை செய்ய வேண்டியுள்ள தொழிலாளிகளும் இவ்வுணவை விரும்பி உண்கின்றனர். அண்மைக் காலங்களில் உடல்நலம் கருதி பல்வேறு பிரிவு மக்களும் இவ்வுணவை உண்ணத் துவங்கியுள்ளனர். யாழ்ப்பாணம் இலங்கையில் கூழ் தயாரிப்பிற்கு பெயர் போன இடமாகும்.

கூழ் வார்த்தல்

கூழ் தமிழரின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று. தமிழர்கள் ஒவ்வொரு ஆடி மாதமும் ஆண்டுக்கு ஒரு முறை கூழ் ஊற்றுவதை மரபாக கொண்டுள்ளனர். தமிழர்களில் பெரும்பான்மையானோர் இந்து மதத்தை பின்பற்றுகின்றனர். அவர்கள் மரபுப்படி ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கூழ் ஊற்றுவார். அம்மனுக்கு வேண்டிக்கொண்டு இந்த கூழ் ஊற்றப்படுகிறது. பழங்காலங்களில் ஊர் தோறும் அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றப்பட்டு வந்தது. இந்த நிகழ்வை கிராமம் மக்கள் விழாவாக சிறப்பாக கொண்டாடிவந்தனர் ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த கூழ் ஊற்றப்படும். வேப்பிலை, மஞ்சள், பிற பூசைப் பொருட்களுடன் பூசை நடைபெறும். முந்தைய நாட்களில் கிராமத்தினர் அனைவரும் காப்பு கட்டி கொள்வர். காப்பு கட்டிய நாள் முதல் கூழ் ஊற்றி முடியும் வரை ஊரை விட்டு யாரும் வெளியேறவோ, மற்றவர்கள் உள்ளே வரவோ கூடாது என்னும் விதி பின்பற்றப்படுகிறது.


தயாரிக்கும் முறை

மாங்காய் பச்சடியுடன் கூழ்
கேழ்வரகு, அரிசி, உப்பு ஆகியவற்றைக் கொண்டு கேழ்வரகு கூழ் செய்யலாம். ஒரு குவளை கேழ்வரகு மாவை எடுத்துகொள்ள வேண்டும் அந்த மாவு நன்கு சலித்து எடுத்து சுத்தமாக வைத்து கொள்ளவேண்டும். அதனுடன் கால் குவளை உடைத்த நொய் அரிசியை எடுத்து கொள்ள வேண்டும். இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கிளறி விடவேண்டும். பிறகு அதில் இரண்டு குவளை தண்ணீரை உற்ற வேண்டும் நன்றாக மாவு அடிபிடிக்காமல் கரைத்து விட வேண்டும். தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து கொள்ள வேண்டும். 6 மணி நேரம் புளிக்க வைக்கவேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து தீயை சீராக வைத்து கொள்ள வேண்டும். பிறகு நாம் சற்று கனமான பாத்திரத்தில் கரைத்து வைத்து இருந்த கரைசலை ஒரு முறை நன்கு துழவிவிட்டு பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும். பிறகு மெதுவாக கரைசல் கூழ் பதத்திற்கு வரும் வரை துழவி விடவேண்டும். சுமார் 5 முதல் 10 நிமிடத்துக்குள் கூழ் நன்றாக கொதித்து விடும். கூழை தொடர்ந்து மரக்கரண்டியால் துழவ வேண்டும். இடையில் விட்டு விட்டால் அடிபிடித்து கட்டியாக மாறிவிடும். கூழ் நன்றாக கொதித்து விட்டது உறுதி செய்துகொண்டு இறக்கி வைத்து அதில் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து இருந்த சின்ன வெங்காயத்தை கொட்டி ஒரு முறை கிளறி விட வேண்டும்.

கூழ் குடிப்பதால் ஏற்படும் பயன்கள் தொகு
கூழ் கேழ்வரகிலிருந்து தயார் செய்வதால் அதில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது எலும்புகளுக்கு மிகவும் முக்கியம். பசியின் பொது சுரக்கும் அமிலத்தை சற்றுக் குறைத்து உடல் எடையை நிலையாக வைத்து இருக்க உதவும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதைக் காலை சிற்றுண்டியாக பருகுகின்றனர். கேழ்வரகு கூழை தொடர்ந்து காலையில் உட்கொள்ளுவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு அவர்களுடைய சர்க்கரை அளவு சற்று குறைந்து விடும். நிலங்களிலும், வயல்களிலும் வேலை செய்யும் பல கூலித் தொழிலாளிகள் விரும்பி உண்ணும் உணவாக இது கருதப்படுகிறது. உடலில் இருக்கும் தேவை அற்ற கெட்ட கொழுப்பை அகற்ற மட்டுமின்றி குடலுக்கு வலு சேர்ப்பதாக உள்ளது. கூழில் நார் சத்து அதிகமாக உள்ளது. குருதியில் இருக்கும் கொழுப்பையும் குறைக்க வல்லது.


கூழ் வகைகள்

கேழ்வரகுக்கூழ்
தேவையான பொருட்கள் தொகு
கேழ்வரகு மாவு - 200 கிராம், அரிசி நொய் - 100 கிராம், தண்ணீர் - 600 கிராம், உப்பு - தேவையான அளவு.

சத்துமாவுக் கூழ்
சுடக்கூழ்
பனிக்கூழ்(milk shake)
புளித்தக்கூழ்
குழந்தைகளுக்குக் கொடுக்கும் போது அவர்களுக்கு இதன் சுவை பிடிக்காது. ஆகையால் அதில் உலர்ந்த பழங்களைச் சேர்த்து சற்று இனிப்பாகக் கொடுக்கப்படும். மற்றும் சிலர் கூழ் துழவும் போது சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்தும் கூழின் சுவையை இனிப்பாக்கி உட்கொள்வர். கூழ் உண்ணுவதற்கு வயது ஒரு தடை இல்லை. 5 வயது முதல் அனைவரும் உட்கொள்ளும் எந்த வித பக்க விளைவுகளும் கொடுக்காத ஒரு உணவாகும். வெயில் வாட்டி வதைக்கும் கோடைக் காலங்களில் இந்தக் கூழ் உணவு (புளித்த கூழ்) மக்களால் பெரிதும் விரும்பி பருகப்படுகிறது. கோடையில் உடல் சூட்டைத் தணித்து உடலைச் சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. சளி பிடித்து இருக்கும்போது சுட கூழ் மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது

சத்துமாவு கூழ் என்பது நவதானியங்களை ஒன்ற சில விகிதாசாரத்தில் ஒன்று சேர்த்து அரிது பின் அதனைச் சலித்து அதில் இருந்து செய்யப்படும் கூழ் ஆகும். இதைப் பெருபாலும் சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கும் வளரும் குழந்தைகளும் உட்கொள்ள கொடுக்கப் படுகிறது

பனிக்கூழ் என்பது சில வகை பழங்களைப் பிழிந்து அவற்றின் சாற்றை எடுத்து குளிரூட்டியில் வைத்து உருவாக்கப்படும் ஒரு சிற்றுண்டி. இது வெயில் காலங்களில் பெரிதும் விரும்பி உண்ணப் படும் பல வகை பழச்சாறு மட்டும் இன்றி பழங்களுடன் பாலாடை சேர்த்துத் தரப்படுகிறது. இவற்றை வணிக நோக்கில் பல நிறுவனங்கள் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றன. அவ்வாறு விற்கப்படுபவை நாம் வாங்கும் போது அவற்றின் காலவதியாகும் தேதி கண்டு வாங்க வேண்டும் என் என்றால் குளிர்ந்த நிலையில் இருக்கும் போது அதன் சுவையில் மாற்றம் தெரிவது இல்லை ஆனால் அவை காலாவதி ஆகி இருந்தால் பல பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புகள் இருக்கின்றன. சில நிறுவனங்கள் பழச் சாற்றுக்குப் பதிலாக சில வேதிப்பொருட்கள் துணை கொண்டு அதே சுவை கொண்டு வந்து விடுகின்றன ஆகையால் கேழ்வரகு, சத்துமாவு கூழை போல் இந்தப் பனிக் கூழ் உடல் பிணிகளை தராமல் இருக்கும் என்று உறுதியாக கூற இயலாது.

பனிக்கூழில் கொழுப்பு சத்து மிகவும் அதிகமாக உள்ளது பெரும்பாலும் 10 முதல் 16 சதம் கொழுப்பு பனிக்கூழில் இருக்கும் ஆகையால் தொடர்ந்து இதனை உண்பவர்கள் உடல் எடை அதிகரிக்க வைப்புகள் உள்ளன. அது மட்டும் மின்றி உடல் எடை அதிகரிப்பதால் பல நோய்களும் அவர்களைத் தாக்கும் அபாயம் உள்ளது . சர்க்கரை அளவும் இதில் அதிகமாக காணப்படுகிறது. அதனால் உடலில் பல கலோரிகள் கூடிக் கெட்ட கொழுப்பாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.

உடல் எடை அதிகரிக்க ஆசைப் படுபவர்கள் பனிக்கூழை விரும்பி உண்ணலாம். மேலும் மட்டற்ற கூழ் வகைகளைப் போல இந்த பனிக்கூழை வீட்டில் அதிகமாக தயார் செய்வது இல்லை.

பற்களை பிடுங்கி எடுக்க பட்டவுடன் அந்த இடத்தில வீக்கமும் வலியும் இருக்கும் அதனைக் குறைக்க இந்தப் பனிக்கூழை உண்ண மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். இந்தப் பனிக்கூழ் பல சுவைகளில் கிடைக்கும்.


ஒடியல் கூழ்

ஒடியல் கூழ் என்பது பனங்கிழங்கை நன்றாகக் காயவைத்துக் கிடைக்கும் ஒடியலை மாவாக திரித்து எடுக்கப்பட்ட மாவைக் (ஒடியல் மா) கொண்டு தயாரிக்கப்படும் உணவு. கூழ் பதம் வருவதற்கும், பிரத்தியேகமான கூழ் வாசனைக்கும் ஒடியல் மா கட்டாயம் தேவை.

ஒடியல் கூழ் செய்யும் முறை

தேவையானவை தொகு
ஒடியல் மா - 1/2 கிலோ
மீன் - 1 கிலோ (வகை வகையான சிறு மீன்கள். முள் குறைந்த மீன்களாக இருப்பது நல்லது)
நண்டு - 6 துண்டுகள் (இவை கூட மிகச் சிறிய நண்டுகளாக இருந்தால் நல்லது)
இறால் - 1/4 கிலோ
சின்ன சின்ன கணவாய்கள்.
நெத்தலி மீன் கருவாடு 100 கிராம்
பயிற்றங்காய் - 250 கிராம் (1 அங்குல நீள துண்டுகள்)
பலாக்கொட்டைகள் - 25 (கோது நீக்கி பாதியாக வெட்டியது)
ஒரு பிடி கீரை, அல்லது கீரை வகைகள் ஒரு பிடி
அரிசி - 50 கிராம்
பச்சை மிளகாய் 10 இரண்டாக பிளந்தது
செத்தல் மிளகாய் - 15 அரைத்தது
பழப்புளி - 100 கிராம்
உப்பு - சுவைக்கேற்ப

யாழ்ப்பாணத்து ஒடியல் கூழ் வகை

யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் கூழ்களின் தன்மை மாறுபடும். அதாவது கூழில் சேர்க்கப்படும் பொருட்கள், அவை பின் வருமாறு :

முக்கிய குறிப்பு:  நீங்கள் கூழ் வைப்பதற்காக தேவைப் படும் பொருள்கள் 1 கி.கிராம் மாவுக்கு, இரண்டு லிட்டர் தண்ணீர் தேவை. இப்படி சரியான அளவில் இரண்டும் இருந்தால்தான் கூழ் சரியான பதத்துக்கு வரும்.

செய்முறை

முதலில் ஒடியல் மாவை ஒரு சிரு பாத்திரத்தில் கொஞ்சம் நீர் விட்டு ஊறவிடவும். நீரில் மிதக்கும் தும்புகளை அகற்றி மாவை நன்றாக நீரில் கரைக்கவும். 2மணி நேரமாவது ஒடியல் மா ஊற வேண்டும். செத்தல் மிளகாய் எனப்படும் காய்ந்த மிளகாயை நீர் தெளித்து அம்மியில் நன்றாக விழுது போல் அரைக்கவும். காரம் அதிகமாக இருக்க வேண்டுமானல் 3 அல்லது 4 காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும். பழப் புளியை ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் விட்டு அதிகம் நீர்த்தன்மையில்லாமல் கரைத்து வைக்கவும்.

இன்னொரு பெரிய பாத்திரத்தில் சரியான அளவு நீர் விட்டு கொதிக்க வைக்கவும். (கூழில் நிறைய பொருட்கள் போடுவதால் அவை நன்றாக வேகுமளவுக்கு தண்ணீர் அதிகமாய் இருக்க வேண்டும். அதே போல் பாத்திரமும் பெரிதாக இருந்தால் தான் பொருட்கள் அடி பிடிக்காமல் பதமாக இருக்கும்.) அதனுள் கழுவிய அரிசி, பயற்றங்காய், பலாக்கொட்டைகள், மீன்துண்டுகள்,மீன்தலைகள், நண்டு, இறால்,நெத்தலி கருவாடு, கீரை ஆகியவற்றை போட்டு நன்றாக அவிய விடவும்.

நன்றாக அவிந்ததும் ஒடியல் மா (நீரை வடித்துவிட்டு கரைசலான ஒடியல் மாவை மட்டும் எடுக்கவும்.) அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுது, கரைத்த புளி என்பவற்றைப் போட்டு கலந்து சுவைக்கேற்ப உப்புச் சேர்த்து குறைந்த நெருப்பில் வைத்து கூழ் தடிப்பானதும் சூடாக பரிமாறவும்.மிகவும் நல்லது

ஒடியல் கூழ் அருந்தும் முறை தொகு
ஒடியல் கூழ் அருந்துவதில் சில நுனுப்பங்கள் இருக்கின்றன, ஒரு சாதாரண பாத்திரத்தில் ஒடியல் கூழை விட்டு குடித்தால் அதன் சரியான சுவை தெரியாது, அதானால் பனை ஓலையில் பிளா தயாரித்து அதில் கூழ் குடிக்கும்போது அதிக சுவயைத் தரும். அடுத்ததாக உறவினர் நண்பர்களோடு சேர்ந்து, அதாவது பலருடன் சேர்ந்து கூழ் குடிக்கும் போது அதன் உணர்வுகள் புரியும். கூழ் குடித்து அரை மணி நேரத்துக்கு முன் நீர் அருந்தல் ஆகாது. கூழ் குடிக்கும் போது பேச கூடாது, காரணம் கூழில் உள்ள மீன் முற்கள் தொண்டை பகுதியில் போறுக்க கூடும், சிறு குழந்தைகள் கூழ் குடிக்கும் போது அதிக கவனம் எடுக்கவும், காரணம்: கூழின் கார தன்மை, மற்றும் கூழில் இருக்கும் மீன் முள்ளுகள். கூழ் எப்பொழுதும் அதிக சூடாகவே குடிக்க வேண்டும்.

Posted by .
 -புவனாமகேந்திரன்.


    மதி கல்வியகம்.

தமிழக வேளாளர்களின் வரலாறு

தமிழக வேளாளர்களின் வரலாறு

வேளாண்மை = விருந்தோம்பல்

சூத்திர வர்ணத்தவரே தமிழில் வேளாண் மாந்தர் எனக் குறிப்பிடப்பட்டனர் என்பதை ஏற்றுக்கொள்வதில் முதன்மையான ஓர் ஆட்சேபனை எழுப்பப்பட வாய்ப்பு உள்ளது. தமிழ் வேதமாகக் கருதிப் போற்றப்படும் திருக்குறளில் வேளாண்மை என்ற சொல் மிகவும் சிறப்பான பொருளில் பயன்படுத்தப்படுகிறது. ஆள்வினையுடைமை என்ற அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறளில் “வேளாண்மை என்னும் செருக்கு” என்ற தொடர் இடம்பெற்றுள்ளது. வேளாண்மை என்பது சூத்திர வர்ணத்தவரின் தொழில் சார்ந்த தன்மை என்று பொருள்படுமெனில் திருக்குறள் அதனைப் பெருமிதமிக்க ஒரு பண்பு நலனாகக் குறிப்பிடவேண்டிய அவசியம் யாது? என்ற கேள்வி எழுகிறது. இது குறித்து விரிவாக ஆராய்வோம்.

திருக்குறள் அறத்துப்பாலில் விருந்தோம்பல், ஒப்புரவு அறிதல் என்ற இரண்டு அதிகாரங்களிலும் பொருட்பாலில் ஆள்வினையுடைமை என்ற அதிகாரத்திலும் வேளாண்மை என்ற சொல் இடம்பெற்றுள்ளது. விருந்தோம்பல் அதிகாரத்தில்,

இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு

- என்ற குறள் இடம்பெற்றுள்ளது. விருந்தினரின் தேவையறிந்து அவற்றை நிறைவுசெய்வதே வேளாண்மை என்ற சொல்லால் இக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒப்புரவு அறிதல் அதிகாரத்தில்.

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு

என்ற குறள் இடம்பெற்றுள்ளது. பாடுபட்டுப் பொருள் சேர்ப்பதே தகுதி உடையவர்களை உபசரித்து அவர்களின் தேவைகளை நிறைவு செய்வதற்காகத்தான் என்பது இக்குறளின் பொருளாகும். இக்குறளிலும் வேளாண்மை என்பது உபசரித்தல், பேணுதல், தேவைகளை உரிய வகையில் நிறைவுசெய்தல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.

பொருட்பாலில் இடம்பெற்றுள்ள ஆள்வினையுடைமை அதிகாரத்தில்,

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு

- என்ற குறளும்,

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மைப் போலக் கெடும்

- என்ற குறளும் இடம்பெற்றுள்ளன. இக்குறள்களில் இடம்பெற்றுள்ள தாளாண்மை என்ற சொல், தகுந்த செயல்திட்டத்தின் அடிப்படையிலான முயற்சியைக் குறிக்கும். தாளாண்மை உடையவன் மட்டுமே “பிறரை உபசரித்து அவர்களின் தேவைகளை நிறைவு செய்யக்கூடியவன் நான்” என்ற இறுமாப்பு அடையத் தகுதியுடையவன்; தாளாண்மை இல்லாதவன் பிறரை உபசரித்து அவர்களின் தேவைகளை நிறைவுசெய்ய முயல்வது நெஞ்சுரமற்ற பேடி வாட்போர் புரிவது போன்றதாகும் என்பனவே இக்குறள்களின் கருத்தாகும்.

மேற்குறித்த நான்கு குறள்களிலுமே வேளாண்மை என்பது பிறரை உபசரித்தல், அவர்களின் தேவையறிந்து அவற்றை நிறைவுசெய்தல் என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளமையைக் காணலாம். அறத்துப்பாலில் இடம்பெற்றுள்ள அதிகாரத் தலைப்புகளே இதனை உணர்த்தும். குறிப்பாக, ஒப்புரவறிதல் என்ற அதிகாரத் தலைப்பில் இடம்பெற்றுள்ள ஒப்புரவு என்ற சொல் சமாதான சகவாழ்வு, பிறருடன் இணங்கி நடத்தல், பொதுநலனுக்காகத் தன்முனைப்பைக் குறைத்துக்கொண்டு செயல்படுதல், ஒரு குழுவாகக்கூடி எடுத்த முடிவுக்குக் கட்டுப்படுதல் போன்ற உயரிய பண்புநலன்களைக் குறிக்கும் ஒரு சொல்லாகும். திருக்குறள் எத்தகைய வாசகர்களை முன்னிறுத்தி எழுதப்பட்டது; எப்படிப்பட்ட பண்பு நலன்களை முன்னிறுத்துகிறது என்பவற்றை ஆராய்ந்தால், வேளாண்மை என்ற சொல் திருக்குறளில் உயர்ந்த பொருளில் பயன்படுத்தப்படுவது குறித்த சிக்கல் எளிதில் தீர்ந்துவிடும்.

திருக்குறள் ஒரு நீதி நூல்; வேளாண் மாந்தர் எழுச்சிபெற்ற காலகட்டத்தில் விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாகக்கொண்ட ஓர் அரசமைப்பினை இலட்சியபூர்வமான ஒன்றாக முன்னிறுத்துகிற நூல். அரசியல் தொடர்பான நீதிகளைக் கூறுகின்ற பொருட்பாலில் முதல் அதிகாரமான இறைமாட்சியில் ஓர் அரசின் ஆறு அங்கங்களைக் குறிப்பிடும்போது கருவூலம் (அல்லது வருவாய்த் துறை) என்ற அங்கத்தைக் ‘களஞ்சியம்’ என்ற பொருளில் ‘கூழ்’ என்ற சொல்லால் வள்ளுவர் குறிப்பிடுகின்றார். பொருட்பாலில் பொருள் செயல்வகை என்ற அதிகாரத்தில் ஒரே ஓரிடத்தில் உலகுபொருள், அதாவது சுங்க வரியால் கிடைக்கின்ற வருமானம் குறிப்பிடப்படுகிறது. வாணிகத்தின் இன்றியமையாமை பொருட்பாலில் வலியுறுத்தப்படவில்லை. அறத்துப்பாலில் நடுவுநிலைமை அதிகாரத்தில்,

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்

- என்ற ஒரே ஒரு குறளில்தான் வாணிகம் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. பொருட்பாலில் ஓர் அரசுக்கு அடிப்படையான கூழ் (களஞ்சியம்) உருவாக்குகின்ற துறையாக உழவு முதன்மைப்படுத்திக் குறிப்பிடப்படுகின்றது. கொற்றக்குடையுடன் உலா வருகின்ற அரசர்களும் உழவர்களின் ஏர்க்கலப்பையின் நிழலில்தான் தங்கள் அரசாட்சியைச் செலுத்த முடியும் என்று பொருள்படுகின்ற,

பலகுடை நீழலும் தம் குடைக்கீழ்க் காண்பார்
அலகுடை நீழலவர்

- என்ற குறள் உழவு என்ற அதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது.

திருக்குறள் களப்பிரர் ஆட்சியின் தொடக்கக் கட்டத்தில், கி.பி. 4ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இயற்றப்பட்ட நூலாகவே இருக்க வாய்ப்புள்ளது. விவசாயப் பொருளாதாரத்தை அடித்தளமாகக்கொண்ட ஓர் அரசமைப்பினை முன்னிறுத்துகின்ற ஒரு நீதிநூலில் வேளாண்மை என்ற கருத்தோட்டத்தின் சிறப்பான கூறுகள் மட்டும் வெளிப்படுத்தப்படுவது இயல்புதானே.

இந்த இடத்தில் மற்றொரு வரலாற்றுத் தரவினைக் கவனத்தில் கொள்வது பொருத்தமாகும். கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 7ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் காசுகள் அச்சிட்டுப் புழக்கத்தில் விடப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால், கேரள மாநில (மேலைக் கடற்கரை) வணிக நகர்களைவிடத் தமிழகத்தின் வணிக முதன்மை கி.பி. 3ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் அதிகரித்தது என்பதற்குச் சான்றாக ரோமானிய வெள்ளி தினார்கள் அதிக எண்ணிக்கையில் தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ளன எனத் தெரிகிறது. வெளிநாட்டு வாணிகத் தொடர்பு பெருகிய அதே வேளையில் உள்நாட்டு அரசு விவசாயப் பொருளாதாரத்தை அடித்தளமாகக் கொண்ட அரசாகவே இருந்தது என்பதற்கு இது முதன்மையான சான்றாகும்.1

யதார்த்தமான, நடைமுறையில் இருந்த வாழ்வியல் நெறிகளை நீதிநூலின் கண்ணோட்டத்தில் இல்லாமல் ஓரளவு அறச்சார்புடன் இலக்கணப்படுத்தும் தொல்காப்பியத்தில் வேளாண்மை என்பது விருந்துபசாரம் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்படுகின்றது. களவுக் காலத்தில் தோழி, தலைவி ஆகியோரது கூற்று நிகழ்கின்ற சந்தர்ப்பங்களைப் பட்டியலிடும்போது, “வேளாண் எதிரும் விருந்தின்கண்” தலைவி பேசுகின்ற சந்தர்ப்பம் வாய்க்கும் என்றும், “வேளாண் பெருநெறி வேண்டிய இடத்து”த் தோழிக்குப் பேசுகின்ற சந்தர்ப்பம் வாய்க்கும் என்றும் தொல்காப்பியம் களவியல் நூற்பாக்கள் 16, 24 ஆகியவை குறிப்பிடுகின்றன.

களவுக் காலத்தில் காதலன் காதலியின் வீட்டில் விருந்தினனாகத் தங்கிச் செல்வதுண்டு. அப்போது தலைவியுடன் களவுப் புணர்ச்சி மேற்கொள்வதும் உண்டு. இதுவே, வேளாண் எதிரும் விருந்தாகும். வேளாண் பெருநெறி என்பதும் இத்தகைய விருந்து உபசாரமே ஆகும். இந்த இலக்கணத்திற்கு உரிய சங்க இலக்கிய எடுத்துக்காட்டுகள் என “நாள்வலை முகந்த கோள்வல் பரதவர்” எனத் தொடங்கும் அகநானூற்றுப் பாடலும் (பா. 300) “பன்னாள் எவ்வம் தீர” எனத் தொடங்கும் அகப்பாடலும் (பா. 340) உரையாசிரியர் நச்சினார்க்கினியரால் மேற்கோள் காட்டப்படுகின்றன.2 விருந்துபசாரம் என்பது தொல்காப்பியத்தில் களவு மணம் தொடர்பான வேளாண் நெறியாகக் குறிப்பிடப்படுவது கவனிக்கத்தக்கது. இது “வேளாண் பெருநெறி” என்று குறிப்பிடப்படுவதன் காரணம் ஆராயத்தக்கது.

பாணர், பொருநர் போன்றோருடைய இசைக்கலை, ஆடற்கலை மரபுகள் நாட்டுப்புறக் கலை வடிவங்கள் ஆகும். இவற்றைப் பொதுவியல் என்ற பிரிவில் வகைப்படுத்துவது மரபு. ஆனால், வேளாண் வாயிலோரின் கலை மரபு என்பது ‘வேத்தியல்’ என்று வகைப்படுத்தப்படுகிற, வேந்தர்களின் அரசவை சார்ந்த அரங்கக்கலை மரபாகும். இத்தகைய ஆடல் பாடல் கலை வடிவங்களால் தலைமகனை மகிழ்வித்து விருந்துபசாரம் செய்து கூடுவதே வேளாண் பெருநெறி எனத் தொல்காப்பியரால் கூறப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு நாம் பொருள்கொள்வதற்கு இரண்டு ஆதாரங்கள் உள்ளன. “தாவில் நல்லிசை” எனத் தொடங்கும் தொல்காப்பிய நூற்பாவில் (புறத்திணையியல்: 36) ஆற்றுப்படை என்ற துறையைக் குறிப்பிடும்போது தலைவனிடம் ஆற்றுப்படுத்துவோராகக் கூத்தரும், பாணரும், பொருநரும், விறலியும் குறிப்பிடப்படுகின்றனர். இதற்கு விளக்கம் கூறுகின்ற நச்சினார்க்கினியர், “கூத்தர் எனப்படுவோருக்குச் சாதி வரையறை இல்லை” என்றும், “பாரசவரும், வேளாளரும் பிறரும் அவ்வாடல் தொழிலுக்கு உரியோர்” என்றும் விளக்குகிறார்.3 இத்தகைய வேளாளக் கூத்தர்களே பரிசில் நாடி வருவோரைத் தலைமகனிடம் ஆற்றுப்படுத்தும் வேளாண் வாயிலோர் ஆவர். இவர்களுள் பலர் பழங்குடி நிலையினரான கிணைப் பொருநர், பறையடித்தும் யாழிசைத்தும் பாடும் பாணர் ஆகியோராக இருந்து அரசு அதிகார வர்க்கத்தின் அங்கமாக மாறியிருக்க வேண்டும். எனவேதான், ‘வேளாண் பெருநெறி’ என்று இத்தகைய செவ்வியல் நெறி குறிப்பிடப்பட்டுள்ளது எனத் தோன்றுகிறது.

கி.பி. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் திவாகர நிகண்டு ‘வேளாளர் அறுதொழில்’ பட்டியலில் குயிலுவம் என்பதையும் ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளது. இச்சொல் ‘குஷீலவ’ என்ற வடிவில் அர்த்தசாஸ்திரத்தில் (அதிகரணம் 1, அத்தியாயம் 3) பயன்படுத்தப்படுகிறது. திவாகரம் குறிப்பிடுகின்ற அறு தொழில்களாவன: உழவு, பசுக்காத்தல், வாணிகம், இரு பிறப்பாளர்க்கு ஏவல் செய்தல், காருகம், குயிலுவம் ஆகியன ஆகும். இவற்றை சூத்திரர்க்குரிய ஆறு தொழில்களாக அர்த்தசாஸ்திரம் வகைப்படுத்துகிறது. இருபிறப்பாளர் என்பது பிராம்மணர், சத்திரியர், வைசியர் ஆகிய மூன்று வர்ணத்தவரையும் குறிப்பதாகவே அர்த்தசாஸ்திரம் பொருள்படுத்தியுள்ளது. காருகம் என்பது ‘காருக கர்ம’ என்ற வடிவிலும், குயிலுவம் என்பது ’குஷீலவ கர்ம’ என்ற வடிவிலும் இடம்பெற்றுள்ளன.4 காருகம் என்பது நெசவுத் தொழிலைக் குறிக்கும் என்ற பொருள் விளக்கம் சிலப்பதிகாரக் குறிப்பிலிருந்து (5:16-17) கிடைக்கிறது. குஷீலவ என்ற சொல் பாணன் (bard), பாடகன், நடனக்காரன், நடிகன், செய்தி கொண்டு செல்லுவோன் (வாயிலோன்) ஆகியோரைக் குறிக்கும் என்று சமஸ்கிருத அகராதி பொருள் கூறுகிறது.5 ’குயிலுவம்’ என்பது குஷீலவரின் தொழிலையே குறிக்கும் என்பது வெளிப்படை.

இவ்வாறு ஆடல் பாடல் மூலம் மகிழ்வித்தல், விருந்துபசாரம் செய்தல் போன்றவற்றினை விருந்துபசாரத் தொழில் (hospitality industry) என்றே தற்காலத்தில் பெயரிட்டுள்ளனர். வேற்று நாட்டுத் தூதுவர்களை மகிழ்வித்தல், அந்நாடுகளை நட்பு நாடாக ஆக்கிக்கொள்ளுதல் ஆகிய நோக்கங்கள் கொண்ட இத்தகைய விருந்துபசாரத் துறைப் பணியாளர்கள் அல்லது அரசவை வரவேற்பாளர்களே வேளாண் வாயிலோர் எனலாம். அறுபத்து மூன்று நாயன்மார்களுள் வேளாளர் குல நாயன்மார் ஒருவர் பெயரே ’வாயிலார் நாயனார்’ என்பதாகும்.

இது இவருடைய குடிப்பெயர் எனப் பெரியபுராணம் (கறைக்கண்டன் சருக்கம், பா. 30-31) குறிப்பிடுகிறது.

தொன்மை நீடிய சூத்திரத் தொல்குல
நன்மை சான்ற நலம் பெறத் தோன்றினார்
வாயிலாரென நீடிய மாக்குடித்
தூய மாமரபின் முதல் தோன்றியே
நாயனார் திருத் தொண்டின் நயப்புறு
மேயகாதல் விருப்பின் விளங்குவார்

வேளாளக் கூத்தர்கள் முதலிய அரசவைப் பணியாளர்களை வாயிலார் குடியினர் எனக் குறிப்பிடப்படுவது வழக்கமானதன் விளைவாக வாயிலோன் என்ற சொல்லே தமிழ்க் கூத்தனைக் குறிக்கும் எனக் கி.பி. 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிங்கல நிகண்டு குறிப்பிட நேர்ந்தது. வாயில் என்ற சொல் தலைமக்களுடைய அகத்திணை சார்ந்த செயல்பாடுகள் குறித்துத் தூது செல்வோர் என்ற பொருளிலிருந்து வளர்ச்சியுற்று அரசமைப்புச் சார்ந்த தூதர்கள் என்ற பொருளையும் பெற்றுவிட்டமை இதனால் தெரிகிறது. கி.பி. 6-7ஆம் நூற்றாண்டுகள் அளவில் எழுதப்பட்ட பெருங்கதையில் (1:37:88-89) அரசவையில் நிகழும் கூத்து ‘வாயிற்கூத்து’ என்றே குறிப்பிடப்படுகிறது. ‘வாசல் கேள்வி’ என்றாலே அரச ஆணையைக் கேட்டு எழுதுகின்ற அரசவை அலுவலரைக் குறிக்கின்ற ஒரு தொடராகக் கி.பி. 10ஆம் நூற்றாண்டைய கல்வெட்டுகளில் பயன்படுத்தப்படுகிறது. 6

அரசு சார்ந்த விருந்துபசாரத் துறை அலுவலர்களாகத் தம் நிலையை உயர்த்திக்கொண்ட வேளாண் வருணத்தவர் அரச (சத்திரிய) வருண அந்தஸ்தை மட்டும் தாங்கள் பெறவில்லையே தவிர, அரசவையில் ஆளும் வர்க்கத்தவர்க்குரிய பெருமிதத்துடன் நடந்துகொள்பவர்கள் என்பதை உணர்த்தும் வகையில் ஆடை கீறிச் சிலந்தி காட்டியோர் என்று தம் குல மூதாதை ஒருவரின் பெருமிதமான நடத்தையைக் குறிப்பிடுகின்றனர். இது குறித்த கதையாவது: வேளாளர் குல மூதாதை ஒருவர் தொடைப் பகுதியில் நரம்புச் சிலந்தி நோய் வந்து அவதிப்பட்டார். அந்த நிலையிலேயே ஒருநாள் அவர் அரசவையில் அமைச்சர், சேவகர் போன்ற பரிவாரத்தாருடன் இருக்கும்போது, அரசவைக்கு வந்திருந்த மருத்துவர் ஒருவர் இவர் நரம்புச் சிலந்தி நோயால் அவதிப்படுவதைக் கேள்விப்பட்டு அதனைத் தாம் குணப்படுத்துவதாகக் கூறி நரம்புச் சிலந்திப் புண்ணைப் பரிசோதிக்க விரும்பினார். அரசவையில் பலர் முன்னால் ஆடையைத் தூக்கித் தொடையைக் காட்டுவது கண்ணியக் குறைவானது என்று கருதிய வேளாளர் குல மூதாதை தாம் அணிந்திருப்பது விலை உயர்ந்த ஆடை என்பதையும் பொருட்படுத்தாமல் தொடைப் பகுதியில் அதனைக் கிழித்து மருத்துவரிடம் தம் நரம்புச் சிலந்தியைக் காட்டினார். இதனை ஆறுநாட்டு வேளாளர்களின் தாமிரப் பட்டய நகல் பின்வருமாறு குறிப்பிடுகிறது:

அரசனென்னு மவ்வண்ணம் தவிர விரவிய சிலந்தி தான் பட வேண்டி ஆடை கீறி அச்சபை மகிழ நாடிய துடையில் காட்டிய நண்போர்.7

இத்தகைய பரிணாம வளர்ச்சி என்பது அரசியல் மாற்றத்தினால் விளைந்த சமூகவியல் மாற்றமே என்பதை நாம் எளிதில் உணரலாம். அதே வேளையில், வேளாண்மை என்பது ஆடல் பாடலுடன் நிகழ்த்தப்படும் விருந்து உபசாரமாகவே தொடங்கிற்று என்பதை உணர்த்துகின்ற எச்சங்களாகச் சில சொல் வழக்குகள் இன்றும் நீடித்து வருகின்றன. மேளம் என்ற சொல் இசைக் கருவிகளின் தொகுதி, இசைக் கருவிகளை இயக்குதல் போன்ற பொருள்களில் இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருவது இதனை உணர்த்தும். மேளம், வேளம் – இரண்டு சொற்களும் ஒரே கருத்தோட்டத்தின் அடிப்படையில் தோன்றியவையாகவே இருப்பதால்தான் இவை இரண்டு நிறுவனங்களின் பிற்கால வளர்நிலைகள் முற்றிலும் வேறுபட்டவையாய் அமைந்தபோதிலும், இவற்றிற்கு இடையிலான பொருள், தொடர்பு ஓர் எச்சமாக நீடித்து நிற்கிறது.

விருந்துபசாரம் என்பது அறம் சார்ந்த ஒன்றாக, குறிப்பாக இல்லறம் சார்ந்த ஒன்றாகக் கையாளப்படும்போது விருந்தினரை உபசரிக்கின்ற இல்லறத்தார்க்குரிய பஞ்சமகா யக்ஞங்களில் ஒன்றாக மாறுவதைத் திருக்குறளில் காணமுடிகிறது.

தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்றாங்கு
ஐம்புலத்தா ஓம்பல் தலை

தொல்காப்பியம் கற்பியலில் (நூற்பா 11) “வல்லிதின் விருந்து புறந்தருதல்” என்ற துறை குறிப்பிடப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் (16:72-73) இல்லறத்தார்க்குரிய கடமைகளுள் ஒன்றாகக் கண்ணகி குறிப்பிடுகின்ற “தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடல்” என்பது இத்தகைய இல்லற தர்மங்களுள் ஒன்றே. ஆனால், திருக்குறள் பொருட்பாலில் குறிப்பிடப்படுகின்ற வரைவின் மகளிர், சூது ஆகிய அதிகாரங்கள் சங்க கால வாழ்வியலில் அனுமதிக்கப்பட்ட, வேளாண் பெருநெறி சார்ந்த விருந்தோம்பல் நெறிமுறைகளே என்பதையும் நீதிநெறி சார்ந்த ஓர் அரசு இத்தகைய துறைகளின் மூலம் வருவாய் ஈட்டக்கூடாது என்ற கருத்து இவ்வதிகாரங்களில் திருவள்ளுவரால் வலியுறுத்தப்படுவதையும் நாம் உணரலாம். சூது என்பது வேளாண் பெருநெறி சார்ந்ததே என்பதற்குச் சூதில் கிடைத்த பொருளைக் கொண்டு சிவபெருமானுக்குத் திருப்பணி புரிந்த திருவேற்காடு மூர்க்க நாயனார் என்ற வேளாளரைப் பற்றிய பெரியபுராணக் குறிப்பே (வம்பறா வரிவண்டுச் சருக்கம் 1720-1731) சான்றாகும். பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றாகிய திரிகடுகம் (பா. 42) வேளாண் குடிக்கு எது அழகு என்ற நீதியை வரையறுத்துக் கூறுகையில் சூதாடுவதால் கிடைக்கிற பொருளை விரும்பாதிருத்தல் (கழகத்தால் வந்த பொருள் காமுறாமை) எனக் குறிப்பிடுகிறது. இதில், திருக்குறள் சுட்டுகின்ற நீதியின் தொனி அமைந்திருப்பதைக் காணலாம்.

யதார்த்தத்தில் வேளாண்மை என்பதன் முதன்மையான தன்மைகளுள் ஒன்றாகக் குயிலுவம் (இசைக்கருவிகளை இசைத்தல்) என்பதைத் திவாகர நிகண்டு குறிப்பிடுவது போலவே, பாரதி தீப நிகண்டு என்ற பிற்கால நிகண்டு மெய்யுபசாரம் என்பதையும் ஒன்றாகக் குறிப்பிடுகிறது. இத்தகைய மெய்யுபசாரங்களுள் தலைமக்களின் (அல்லது விருந்தினரின்) உடலில் நறுமணத் தைலங்களைப் பூசி உடலைப் பிடித்துவிட்டு (மசாஜ் செய்து) நீராட்டுதலும் ஒன்றாகும். இத்தகைய நீராட்டுவித்தல் நிகழ்கின்ற விடுதிகளை ‘மன்னரின் காதலிமார் வேளம்’ என்றே கம்பர் குறிப்பிட்டதாகத் தமிழ் நாவலர் சரிதை குறிப்பிடுகிறது.8 ’மஞ்சனத்தார் வேளம்’ என்ற பெயரிலேயே மேற்குறிப்பிட்ட மசாஜ் தொழில் நிறுவனம் சோழர் காலக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றது.9

சங்க காலத் தலைமக்களது அக வாழ்க்கையில் வாயிலோராக செயல்பட்டவர்களுள் வருண அந்தஸ்தில் உயர்ந்தவராகக் கருதப்பட்ட பார்ப்பன வாயிலோர் முதல் பாணர், பாங்கர் என்று பலவகைப்பட்டோர் இருந்துள்ளனர். இவர்களுள் பார்ப்பன வாயிலோர் “பேணுதகு சிறப்பின் பார்ப்பான்” என்று தொல்காப்பியத்திலும் (பொருளதிகாரம், செய்யுளியல், 182) “வெறிது நின் புகழ்களை வேண்டார் இல் எடுத்து ஏத்தும் அறிவுடை அந்தணன்” என்று கலித்தொகையிலும் (பா. 72:17-18) குறிப்பிடப்படுகின்றனர். இத்தகைய பார்ப்பன வாயிலோர்களுள் பலர் பாணர் குலத்தவருடன் மிக நெருங்கிய உறவு கொண்டு வாழ்ந்தமையைச் சிலப்பதிகாரம் புறஞ்சேரி இறுத்த காதை (வரி. 56-105) குறிப்பிடுகிறது. இத்தகைய பார்ப்பன வாயிலோர், பாணர் குல வாயிலோருக்கிடையே நிலவிய மண உறவுகளின் விளைவாகவே வள்ளுவர் குலம் என்ற கணியர் குலம் உருவாகியிருக்க வாய்ப்புண்டு. இவ்வாறு உருவான ஆசான் வர்க்கம் சங்க காலத்தில் பிராம்மண வர்ணம் சார்ந்த பிரிவாகவே அங்கீகரிக்கப்பட்டுப் பின்னர் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் வேளாள வர்ணத்தவர்க்குக் குல குருக்கள் போன்று செயல்பட்டமையால்தான் பிற்கால வேளாளர் மெய்க்கீர்த்திகளில் தம்முடைய பூர்விக குல குருக்களுடன் தமக்கு இருந்த உறவினை மறைமுகமாக அங்கீகரிக்கும் வகையில் பாணன் பிணம் சுமந்தோர், பறையனோடு சோறுண்டோர் என்று வேளாளர்கள் பறைசாற்றினர் போலும்.

(தொடரும்)

அடிக்குறிப்புகள்:

[1] கேரள மாநிலத் தொல்லியல் துறையின் மேனாள் இயக்குநர் தியாக. சத்தியமூர்த்தி அவர்கள் ரோமானியக் காசுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்துள்ளார். அவருடனான உரையாடலில் கிட்டிய தகவல்.

[2] தொல்காப்பியம், பொருளதிகாரம், நச்சினார்க்கினியம், பகுதி 2, பக். 48, 108. பதிப்பாசிரியன்மார்: தி.வே. கோபாலையர், ந. அரணமுறுவல், தமிழ்மண் பதிப்பகம், சென்னை-17, 2003.

குறிஞ்சி, நெயதல் திணைப் பாடல்கள் சிலவற்றில் களவுப் புணர்ச்சியோடு தொடர்புடைய இத்தகைய விருந்தயர்தல் மரபு பதிவுபெற்றுள்ளதைத் திரு. ராஜ் கௌதமன் பதிவுசெய்துள்ளார். பார்க்க: ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும், பக். 70-73, தமிழினி, சென்னை-14, 2009.

[3] தொல்காப்பியம், பொருள்., நச்சினார்க்கினியம், பகுதி 1, பக். 415.

[4] கௌடலீயம் பொருணூல், தமிழ் மொழிபெயர்ப்பு, முதற்பகுதி, பக். 27, அண்ணமலைப் பல்கலைக்கழகம், 1979. காருகம் என்பது சிற்பத் தொழிலைக் குறிக்கும் என்றும், தமிழக வேளாளர்கள் அர்த்தசாஸ்திரத்தில் சூத்திரர் என்று குறிப்பிடப்படும் வர்ணத்தவர் ஆகார் என்றும் அர்த்தசாஸ்திரத்தின் இப்பகுதியை மொழிபெயர்த்த பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் அவர்கள் இது குறித்துத் தெரிவித்துள்ள விளக்கம் தவறானதாகும். அர்த்தசாஸ்திரத்தின் இப்பகுதியில் சூத்திரர் அறுதொழில்களாகக் குறிப்பிடப்படுவன திவாகர நிகண்டுக் குறிப்புடன் துல்லியமாகப் பொருந்துவதை எனக்குச் சுட்டிக்காட்டியவர் ஆய்வாளர் ப்ரவாஹன் ஆவார்.

[5] p. 156, The Students Sanskrit English Dictionary, V.S. Apte, Motilal Banarsidass, 1967.

[6] South Indian Inscriptions, Vol XIX, No. 169.

[7] ஆறு நாட்டு வேளாளர்கள் தாமிரப் பட்டய நகல், குமாரி லீலா, கல்வெட்டு காலாண்டிதழ், இதழ் 16, நள ஆண்டு தைத் திங்கள், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை.

[8] கூளம் பிடித்தெள்ளின் கோதுவைப் பானங் குலக்கவிக்குக்
காளம் பிடித்திடிற் சின்னம்படும் மன்னர் காதலிமார்
வேளம் பிடித்தகண் வெள்ளம் பிடிக்க வெம்பேய்க் கிளம்பேய்
தாளம் பிடிக்கத் தனிவேல் பிடித்த சயதுங்கனே

- என்ற பாடல் தமிழ் நாவலர் சரிதையில் குறிப்பிடப்படுகிறது. தாதன் எனும் வணிகனைத் தமக்கு விருது பிடிக்கும்படி கூறி கம்பர் இக்கவிதையைப் பாடியதாகக் குறிப்பிடப்படுள்ளது.

[9] South Indian Inscriptions, Vol. XIX, No. 193.

(நன்றி: தமிழினி, ஏப்ரல் 2010.)


Posted by .
 -புவனாமகேந்திரன்.
    மதி கல்வியகம்.

வியாழன், 12 மார்ச், 2020

தங்கம் பற்றிய சில தகவல்கள் - ஹால்மார்க் கேள்விகள் சந்தேகங்கள்


தங்கம் பற்றிய சில தகவல்கள் - ஹால்மார்க் கேள்விகள் சந்தேகங்கள்

ஹால்மார்க்  கேள்விகள் சந்தேகங்கள்

ஹால்மார்க் முத்திரை பதிக்கப்பட்டதால் மட்டும் தரம் உயர்ந்த தங்கம் என நினைக்கக்கூடாது.

தங்கம் எத்தனை கேரட்டில் உள்ளது என்பதை தெரிவிப்பதுதான் ஹால்மார்க் முத்திரை. அதாவது 23 (958), 22 (916), 21 (875), 18 (750), 17 (708), 14 (585) மற்றும் 9 (375) காரட் நகைகளுக்கும் இந்த முத்திரை போடப்படும்.. அதனால், எந்த காரட்டுக்கான ஹால்மார்க் முத்திரை இடப்பட்டிருக்கிறது என்று பார்ப்பது அவசியமாம்.

இதையெல்லாம் தாண்டி, எத்தனை காரட்டுக்கான முத்திரை என்று பார்த்து தங்கம் வாங்கினாலும்...

ஹால்மார்க் சீல் இருக்குமாம். ஆனால் ஹால்மார்க் முத்திரை வைப்பதற்கு அனைத்து நகைகளையும் தனித்தனியாக செக் செய்வதில்லை என்பதால் தரக் குறைவான நகையும் இருக்கலாமாம்.

சரி..கடை சீல் இருப்பதால் அந்தக் கடை, தரக் குறைவுக்கு பொறுப்பு ஏற்குமா என்றால் அதுவும் ஏற்காதாம்.

மொத்தத்தில்..

யாரும் எதற்கும் பொறுப்பு ஏற்க மாட்டார்கள்.

ஹால்மார்க் வந்தது எப்படி?
தங்கத்தின் மீது ஹால்மார்க் முத்திரை பதிக்கும் வழக்கம் 13 ஆம் நூற்றாண்டில் பிரான்சில் தொடங்கியது. பின்னர் அது இங்கிலாந்துக்கு பரவி லண்டனில் உள்ள பிரசித்தி பெற்ற பொற்கொல்லர் அரங்கில் (Goldsmiths' Hall) வழக்கமானது. இந்த பொற்கொல்லர் அரங்கில்தான் தங்கத்தின் சுத்தத்துக்கான பொற்கொல்லர் 'முத்திரை' அந்த காலத்தில் பதிக்கப்பட்டு வந்தது. அந்த Goldsmith's Hall என்ற சொல்லே காலப்போக்கில் மருவி Hallmark என்றாகிவிட்டது.

கேரட்

சுத்தமான தங்கம் என்பதன் அடையாளமாக காட்டப் படுவதுதான் ஹால்மார்க் முத்திரை. தங்கத்தில் 24, 22, 18, 14, 10, 9, 8 கேரட்கள் உள்ளன. இதில் 24, 22, 18 கேரட் மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. 24 கேரட் என்பது 99.9% சுத்தமான தங்கம். முதலீட்டு அடிப்படையில் தங்கக் கட்டிகளாக வாங்குகிறவர்கள் இந்த 24 கேரட் தங்கத்தையே வாங்குவார்கள். இந்த 24 கேரட் தங்கத்தின் விலை 22 கேரட் தங்கத்தைவிட சற்று கூடுதலாக இருக்கும். இந்த சுத்த தங்கத்தைக் கொண்டு ஆபரணங்கள் செய்ய முடியாது என்பதால், சில உலோகங்களைச் சேர்த்து 22 கேரட் மற்றும் 18 கேரட்களில் நகை செய்கிறார்கள். இந்த நகையைதான் ஆபரணத் தங்கம் என்கிறோம்.


யார் வழங்குகிறார்கள்?

இந்திய அரசின் தரக்கட்டுப்பாடு அமைப்பான 'பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்டு’ (பி.ஐ.எஸ்.) என்கிற அமைப்புதான் இந்த ஹால்மார்க் முத்திரையைத் தருகிறது. ஹால்மார்க் முத்திரை வழங்கும் டீலர்கள் நாடு முழுக்க இருக்கிறார்கள். இந்த முத்திரை வழங்குவதற்கு பி.ஐ.எஸ். அமைப்பு இவர்களுக்கு லைசென்ஸ் தந்திருக்கிறது. இந்த லைசென்ஸ் பெற்ற டீலர்கள் மட்டுமே ஹால்மார்க் முத்திரை வழங்க முடியும்.

 சென்னை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் இந்த  'பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்டு’ (பி.ஐ.எஸ்.)  அலுவலகம் இருக்கிறது.

தங்க நகைகளுக்கு இனி 'ஹால்மார்க் முத்திரை' கட்டாயம்!
நுகர்வோர் நலன் கருதி, தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரையை கட்டாயமாக்கும் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

இதுதொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை, 1986 ஆம் ஆண்டின் இந்திய தரச் சட்டத்தில் (Bureau of Indian Standards-BIS) திருத்தம் கொண்டு வர ஒப்புதல் கொடுத்துள்ளது.

பி.ஐ.எஸ்., முத்திரை : பொதுமக்கள், தரம் குறைவான தங்க, வெள்ளி நகைகளை வாங்கி ஏமாறாமல் இருக்க, இந்திய தர நிர்ணய ஆணையம் (பி.ஐ.எஸ்.,), "ஹால்மார்க்' முத்திரைத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்காக, அங்கீகரிக்கப்பட்ட, " ஹால்மார்க்' மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்கள், வியாபாரிகள் தரும் தங்கத்தை மதிப்பீடு செய்து, அதன் தரம் குறித்து பதிவு செய்து தருவர். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் துவாரா நகரில், விசாகா, "ஹால்மார்க்' மையம் உள்ளது. தரமில்லாத நகைகளுக்கும், "ஹால்மார்க்' முத்திரையை பதிப்பது தெரிய வந்ததால், அந்த மையம், முத்திரை பதிக்க, இந்திய தர நிர்ணய ஆணையம் தடை விதித்தது.
தடையை மீறியும், அந்த நிறுவனம், "ஹால்மார்க்' முத்திரை பதிக்கும் பணியில் ஈடுபடுவதாக வந்த புகாரையடுத்து, நேற்று முன்தினம், இந்திர தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
தடையை மீறி, விதிமுறைக்கு மாறாக, வியாபாரிகள் தரும் நகைகளுக்கு, முத்திரையிடுவது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த மையத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, இந்திர தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. சமீபத்தில், கேரள மாநிலம், திருச்சூரில் உள்ள மையம் ஒன்றில், நகைகளை பரிசோதனை செய்யாமலேயே, "ஹால்மார்க்' முத்திரை பதிவது கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தகவல் தெரிவிக்கலாம் : இதுகுறித்து, இந்திய தர நிர்ணய ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு: "ஹால்மார்க்' முத்திரையிடுவதில் முறைகேடு நடப்பது தெரிந்தால், "துணை இயக்குனர் ஜெனரல் (தெற்கு), இந்திய தர நிர்ணய அமைவனம், தென் பிராந்திய அலுவலகம், நான்காவது குறுக்குத்தெரு, தரமணி, சென்னை -113' என்ற முகவரி  தெரிவிக்கலாம்; தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் ஒரு பவுன் ரூ. 20 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. இவ்வாறு அதிக விலை கொடுத்து வாங்கும் நகைகளின் உண்மயான மதிப்பு குறித்து சரியாக தெரிவதில்லை. நகைகளை வாங்குவோருக்கு, அது 22 காரட்டா, 20 காரட்டா என்பதில் சந்தேகம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக உள்ளது.
 இதைப் பயன்படுத்தி, ஒரு சில கடைகளில் 20 காரட் தங்க நகைகளை 22 காரட் என்று கூறி விற்பனை செய்வதாக புகார் கூறப்படுகிறது. இது போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க, ஹால்மார்க் முத்திரை பதிக்கப்பட்ட நகைகளை வாங்குவதே சிறந்தது.
 ÷தங்க நகைகளின் தரத்தை உறுதி செய்யும் இந்திய தர நிர்ணய நிறுவனம் (பி.ஐ.எஸ்.) 2000-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிறுவனத்தில், ஹால்மார்க் தங்க நகைகளை விற்க விரும்பும் வியாபாரிகள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
 ÷இவ்வாறு பதிவுபெற்ற வியாபாரிகள் மட்டுமே ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட தங்க நகைகளை விற்பனை செய்ய முடியும்.
 5 முத்திரைகள்: ஹால்மார்க் தங்க நகைகளில் பி.ஐ.எஸ் முத்திரை, தங்கத்தின் நேர்த்தி முத்திரை (916), ஹால்மார்க் மையத்தின் முத்திரை, ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட ஆண்டு, நகை விற்பனையாளரின் முத்திரை என 5 முத்திரைகள் காணப்படும்.
 இதை வெறும் கண்களால் பார்க்க முடியாது. பூதக்கண்ணாடி மூலம் இந்த 5 முத்திரைகள் இருக்கின்றனவா? என்பதை சோதித்துப் பார்த்து வாங்க வேண்டும். இதில் ஏதேனும் ஒரு முத்திரை குறைந்தாலும் அது ஹால்மார்க் தங்க நகை என்ற அந்தஸ்தை இழந்துவிடும்.
 23 காரட், 22 காரட், 21 காரட், 18 காரட், 17 காரட், 14 காரட், 9 காரட் நேர்த்தித் தன்மை கொண்ட நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை வழங்கப்படுகிறது. மேலும் ஹால்மார்க் நகைகளுக்கு அதன் விலையில் இருந்து கூடுதலாக ரூ. 20 மட்டும் செலுத்த வேண்டும். அதாவது நாம் எத்தனை கிராம் நகை வாங்கினாலும், கட்டணம் ரூ. 20 மட்டுமே. நகை வாங்குவதற்கான ஆதாரமாக வாட் வரி செலுத்தப்பட்டு ரசீது பெற்றிருக்க வேண்டும்.
 ஹால்மார்க் தங்கநகையில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் உள்ள பி.ஐ.எஸ். அங்கீகாரம் பெற்ற மையங்களில் சோதனை செய்து கொள்ளலாம். இதற்கு ரூ. 100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
 புகார் தெரிவிக்கலாம்: ஹால்மார்க் அங்கீகாரம் பெறாத நகைக் கடைகளில், ஹால்மார்க் பெயரில் தங்க நகை விற்பனை செய்வதாக தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது புகார் தெரிவிக்கலாம்.
 ÷இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 044-2254 1442, 2254 1216 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
 எனினும், இவற்றை சோதித்துப் பார்த்து வாங்குவது பலருக்கும் இயலாது என்பதால், தங்கத்தின் விலையைக் கருத்தில் கொண்டு அனைத்து நகை வியாபாரிகளும் ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளை விற்பனை செய்வதற்கான அங்கீகாரத்தைப் பெறுவதைக் கட்டாயமாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

ஹால்மார்க் முத்திரை பதிக்கப்பட்டதால் மட்டும் தரம் உயர்ந்த தங்கம் என நினைக்கக்கூடாது.

தங்கம் எத்தனை கேரட்டில் உள்ளது என்பதை தெரிவிப்பதுதான் ஹால்மார்க் முத்திரை. அதாவது 23 (958), 22 (916), 21 (875), 18 (750), 17 (708), 14 (585) மற்றும் 9 (375) காரட் நகைகளுக்கும் இந்த முத்திரை போடப்படும்.. அதனால், எந்த காரட்டுக்கான ஹால்மார்க் முத்திரை இடப்பட்டிருக்கிறது என்று பார்ப்பது அவசியமாம்.

இதையெல்லாம் தாண்டி, எத்தனை காரட்டுக்கான முத்திரை என்று பார்த்து தங்கம் வாங்கினாலும்...
ஹால்மார்க் சீல் இருக்குமாம். ஆனால் ஹால்மார்க் முத்திரை வைப்பதற்கு அனைத்து நகைகளையும் தனித்தனியாக செக் செய்வதில்லை என்பதால் தரக் குறைவான நகையும் இருக்கலாமாம்.
சரி..கடை சீல் இருப்பதால் அந்தக் கடை, தரக் குறைவுக்கு பொறுப்பு ஏற்குமா என்றால் அதுவும் ஏற்காதாம்.
மொத்தத்தில்..
யாரும் எதற்கும் பொறுப்பு ஏற்க மாட்டார்கள்.

ஹால்மார்க் வந்தது எப்படி?

தங்கத்தின் மீது ஹால்மார்க் முத்திரை பதிக்கும் வழக்கம் 13 ஆம் நூற்றாண்டில் பிரான்சில் தொடங்கியது. பின்னர் அது இங்கிலாந்துக்கு பரவி லண்டனில் உள்ள பிரசித்தி பெற்ற பொற்கொல்லர் அரங்கில் (Goldsmiths' Hall) வழக்கமானது. இந்த பொற்கொல்லர் அரங்கில்தான் தங்கத்தின் சுத்தத்துக்கான பொற்கொல்லர் 'முத்திரை' அந்த காலத்தில் பதிக்கப்பட்டு வந்தது. அந்த Goldsmith's Hall என்ற சொல்லே காலப்போக்கில் மருவி Hallmark என்றாகிவிட்டது.

கேரட்

சுத்தமான தங்கம் என்பதன் அடையாளமாக காட்டப் படுவதுதான் ஹால்மார்க் முத்திரை. தங்கத்தில் 24, 22, 18, 14, 10, 9, 8 கேரட்கள் உள்ளன. இதில் 24, 22, 18 கேரட் மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. 24 கேரட் என்பது 99.9% சுத்தமான தங்கம். முதலீட்டு அடிப்படையில் தங்கக் கட்டிகளாக வாங்குகிறவர்கள் இந்த 24 கேரட் தங்கத்தையே வாங்குவார்கள். இந்த 24 கேரட் தங்கத்தின் விலை 22 கேரட் தங்கத்தைவிட சற்று கூடுதலாக இருக்கும். இந்த சுத்த தங்கத்தைக் கொண்டு ஆபரணங்கள் செய்ய முடியாது என்பதால், சில உலோகங்களைச் சேர்த்து 22 கேரட் மற்றும் 18 கேரட்களில் நகை செய்கிறார்கள். இந்த நகையைதான் ஆபரணத் தங்கம் என்கிறோம்.

யார் வழங்குகிறார்கள்?

இந்திய அரசின் தரக்கட்டுப்பாடு அமைப்பான 'பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்டு’ (பி.ஐ.எஸ்.) என்கிற அமைப்புதான் இந்த ஹால்மார்க் முத்திரையைத் தருகிறது. ஹால்மார்க் முத்திரை வழங்கும் டீலர்கள் நாடு முழுக்க இருக்கிறார்கள். இந்த முத்திரை வழங்குவதற்கு பி.ஐ.எஸ். அமைப்பு இவர்களுக்கு லைசென்ஸ் தந்திருக்கிறது. இந்த லைசென்ஸ் பெற்ற டீலர்கள் மட்டுமே ஹால்மார்க் முத்திரை வழங்க முடியும்.
சென்னை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் இந்த 'பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்டு’ (பி.ஐ.எஸ்.) அலுவலகம் இருக்கிறது.
தங்க நகைகளுக்கு இனி 'ஹால்மார்க் முத்திரை' கட்டாயம்!
நுகர்வோர் நலன் கருதி, தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரையை கட்டாயமாக்கும் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இதுதொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை, 1986 ஆம் ஆண்டின் இந்திய தரச் சட்டத்தில் (Bureau of Indian Standards-BIS) திருத்தம் கொண்டு வர ஒப்புதல் கொடுத்துள்ளது.

பி.ஐ.எஸ்., முத்திரை : பொதுமக்கள், தரம் குறைவான தங்க, வெள்ளி நகைகளை வாங்கி ஏமாறாமல் இருக்க, இந்திய தர நிர்ணய ஆணையம் (பி.ஐ.எஸ்.,), "ஹால்மார்க்' முத்திரைத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்காக, அங்கீகரிக்கப்பட்ட, " ஹால்மார்க்' மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்கள், வியாபாரிகள் தரும் தங்கத்தை மதிப்பீடு செய்து, அதன் தரம் குறித்து பதிவு செய்து தருவர். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் துவாரா நகரில், விசாகா, "ஹால்மார்க்' மையம் உள்ளது. தரமில்லாத நகைகளுக்கும், "ஹால்மார்க்' முத்திரையை பதிப்பது தெரிய வந்ததால், அந்த மையம், முத்திரை பதிக்க, இந்திய தர நிர்ணய ஆணையம் தடை விதித்தது.
தடையை மீறியும், அந்த நிறுவனம், "ஹால்மார்க்' முத்திரை பதிக்கும் பணியில் ஈடுபடுவதாக வந்த புகாரையடுத்து, நேற்று முன்தினம், இந்திர தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
தடையை மீறி, விதிமுறைக்கு மாறாக, வியாபாரிகள் தரும் நகைகளுக்கு, முத்திரையிடுவது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த மையத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, இந்திர தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. சமீபத்தில், கேரள மாநிலம், திருச்சூரில் உள்ள மையம் ஒன்றில், நகைகளை பரிசோதனை செய்யாமலேயே, "ஹால்மார்க்' முத்திரை பதிவது கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தகவல் தெரிவிக்கலாம் : இதுகுறித்து, இந்திய தர நிர்ணய ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு: "ஹால்மார்க்' முத்திரையிடுவதில் முறைகேடு நடப்பது தெரிந்தால், "துணை இயக்குனர் ஜெனரல் (தெற்கு), இந்திய தர நிர்ணய அமைவனம், தென் பிராந்திய அலுவலகம், நான்காவது குறுக்குத்தெரு, தரமணி, சென்னை -113' என்ற முகவரி தெரிவிக்கலாம்; தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் ஒரு பவுன் ரூ. 20 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. இவ்வாறு அதிக விலை கொடுத்து வாங்கும் நகைகளின் உண்மயான மதிப்பு குறித்து சரியாக தெரிவதில்லை. நகைகளை வாங்குவோருக்கு, அது 22 காரட்டா, 20 காரட்டா என்பதில் சந்தேகம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக உள்ளது.
இதைப் பயன்படுத்தி, ஒரு சில கடைகளில் 20 காரட் தங்க நகைகளை 22 காரட் என்று கூறி விற்பனை செய்வதாக புகார் கூறப்படுகிறது. இது போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க, ஹால்மார்க் முத்திரை பதிக்கப்பட்ட நகைகளை வாங்குவதே சிறந்தது.
÷தங்க நகைகளின் தரத்தை உறுதி செய்யும் இந்திய தர நிர்ணய நிறுவனம் (பி.ஐ.எஸ்.) 2000-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிறுவனத்தில், ஹால்மார்க் தங்க நகைகளை விற்க விரும்பும் வியாபாரிகள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
÷இவ்வாறு பதிவுபெற்ற வியாபாரிகள் மட்டுமே ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட தங்க நகைகளை விற்பனை செய்ய முடியும்.
5 முத்திரைகள்: ஹால்மார்க் தங்க நகைகளில் பி.ஐ.எஸ் முத்திரை, தங்கத்தின் நேர்த்தி முத்திரை (916), ஹால்மார்க் மையத்தின் முத்திரை, ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட ஆண்டு, நகை விற்பனையாளரின் முத்திரை என 5 முத்திரைகள் காணப்படும்.
இதை வெறும் கண்களால் பார்க்க முடியாது. பூதக்கண்ணாடி மூலம் இந்த 5 முத்திரைகள் இருக்கின்றனவா? என்பதை சோதித்துப் பார்த்து வாங்க வேண்டும். இதில் ஏதேனும் ஒரு முத்திரை குறைந்தாலும் அது ஹால்மார்க் தங்க நகை என்ற அந்தஸ்தை இழந்துவிடும்.
23 காரட், 22 காரட், 21 காரட், 18 காரட், 17 காரட், 14 காரட், 9 காரட் நேர்த்தித் தன்மை கொண்ட நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை வழங்கப்படுகிறது. மேலும் ஹால்மார்க் நகைகளுக்கு அதன் விலையில் இருந்து கூடுதலாக ரூ. 20 மட்டும் செலுத்த வேண்டும். அதாவது நாம் எத்தனை கிராம் நகை வாங்கினாலும், கட்டணம் ரூ. 20 மட்டுமே. நகை வாங்குவதற்கான ஆதாரமாக வாட் வரி செலுத்தப்பட்டு ரசீது பெற்றிருக்க வேண்டும்.
ஹால்மார்க் தங்கநகையில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் உள்ள பி.ஐ.எஸ். அங்கீகாரம் பெற்ற மையங்களில் சோதனை செய்து கொள்ளலாம். இதற்கு ரூ. 100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.


புகார் தெரிவிக்கலாம்:

ஹால்மார்க் அங்கீகாரம் பெறாத நகைக் கடைகளில், ஹால்மார்க் பெயரில் தங்க நகை விற்பனை செய்வதாக தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது புகார் தெரிவிக்கலாம்.
÷இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 044-2254 1442, 2254 1216 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
எனினும், இவற்றை சோதித்துப் பார்த்து வாங்குவது பலருக்கும் இயலாது என்பதால், தங்கத்தின் விலையைக் கருத்தில் கொண்டு அனைத்து நகை வியாபாரிகளும் ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளை விற்பனை செய்வதற்கான அங்கீகாரத்தைப் பெறுவதைக் கட்டாயமாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அல்ஜிப்ரா கணக்கு என்ன, ஐன்ஸ்டீன் சொன்ன அணுப்பிளவு கொள்கையைக்கூட புரிந்துகொண்டுவிடலாம், ஆனால், தங்க நகைகளுக்குக் கடைக்காரர் சொல்லும் சேதாரக் கணக்கை மட்டும் யாராலும் புரிந்துகொள்ளவே முடியாது. உள்ளபடி சேதாரம் என்றால் என்ன, சேதாரம் என்கிற பெயரில் ஏன் இவ்வளவு பணத்தை நம்மிடம் வாங்குகிறார்கள், கடைக்காரர்கள் அந்தச் சேதாரத்தை என்ன செய்வார்கள் என்கிற மாதிரியான பல கேள்விகளை ஜெம் அண்டு ஜுவல்லரி டெக்னாலஜி டிரெய்னிங் சென்டர் இயக்குநர் சுவாமிநாதனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

''எந்தப் பொருளை தயாரித்தாலும் அதில் சேதாரம் என்பது கட்டாயம் இருக்கும். மற்ற பொருட்களில் நாம் இந்தச் சேதாரத்தைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. காரணம், பொருளின் அடக்கவிலையிலேயே சேதாரத்தைச் சேர்த்திருப்பார்கள். ஆனால், தங்கத்தின் விலை அதிகம் என்பதால் தங்க நகைகளின் சேதாரம் நம்முடைய கவனத்தை ஈர்க்கிறது.
இயற்கையாகக் கிடைக்கும் தங்கம் ஒவ்வொரு கட்டமாக இழைத்து, ஆபரணமாக மாற்றப்படுகிறது. இப்படி மாறும்போது ஒவ்வொரு நிலையிலும் சேதாரம் ஏற்படும். இந்தச் சேதாரத்தைத் தவிர்க்கவே முடியாது. தங்க நகைகளை கைகளாலும் செய்யலாம்; இயந்திரங்கள் மூலமும் செய்யலாம். நம்மூர் வாடிக்கையாளர்கள் கையால் செய்த நகைகளை அதிகம் விரும்புகிறார்கள். காரணம், அது நீடித்து உழைக்கும். கைகளினால் செய்த நகையில் ஏதாவது பிரச்னை என்றால் அதை எளிதில் சரிசெய்யமுடியும். அதே இயந்திரத்தில் செய்தது எனில், அதன் உறுதித்தன்மையானது குறிப்பிட்ட காலத்திற்கே இருக்கும். ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், அதை சரி செய்தது அப்படியே தெரியும். ஆனால், மெஷின் கட்டிங் மூலம் செய்யும்போது கைகளினால் செய்த நகைக்கு ஆகும் சேதாரத்தைவிட குறைவாகவே இருக்கும்.
கைகளால் நகை செய்யும்போது அதிகமான தங்கத்தைத் தரவேண்டி இருக்கும். அதாவது, 24 கிராம் எடைகொண்ட செயினை செய்ய 30 கிராம் தங்கத்தை நகை செய்பவரிடம் தரவேண்டியிருக்கும். 30 கிராம் தங்கக் கட்டியை முதலில் நெருப்பால் சுட்டு, அதை கொல்லன் பட்டறையில் அடித்து சதுரமாக ஆக்கவேண்டும். ஒவ்வொருமுறை நெருப்பில் சுடும்போதும்
30 கிராம் தங்கக் கட்டியில் 0.010 கிராம் எடை குறையும். பிறகு கம்பி பிடிக்கும் இயந்திரத்தில் தங்கக் கட்டியை கம்பியாக்கி முடிக்கும்போது சுமார் 0.100 கிராம் முதல் 0.150 கிராம் வரை எடை குறையும். பிறகு கம்பியைத் துண்டு, துண்டாக வெட்டி அந்த துண்டுகளை டிசைனுக்கேற்ற வடிவத்தில் மடக்கவேண்டும். அதன்பிறகு மடக்கிய கம்பிகளை ஒன்றுக்கொன்று மாட்டி இணைக்கவேண்டும். கடைசியாக இணைப்பான் (soldring) மூலமாக இணைக்கப்படும்.

இறுதியாக, கட்டிங் இயந்திரத்தில் டைமண்ட்டூல் மூலமாக கட்டிங் செய்வார்கள். இதுதான் நகை தயாரிப்பின் கடைசி நிலை. இப்படி செய்யும்போது நகை மினுமினுப்பு ஏற்படும். அந்தச் சமயத்தில் தங்கம் மணல் தூள்போல் பறக்கும். இதை ஓரளவிற்கு சேகரித்துவிடுவார்கள். அந்தக் கட்டத்தில் 0.100 கிராம் முதல் 0.200 கிராம் வரை எடை இழப்பு ஏற்படும். ஆக, கட்டித் தங்கம் செயினாக முழுமையடையும்போது சேதாரம் 0.600 கிராமிலிருந்து 0.800 கிராம் வரை இருக்கும். இது டிசைனைப் பொறுத்து எடை இழப்பு மாறுபடும். அதோடு கூடுதலாகக் கொடுத்த 6 கிராம் தங்கத்தில் சேதாரம்போக மீதமுள்ள 5.200 கிராம் தங்கத்தை திரும்பக் கொடுத்துவிடுவார்கள்.

இப்படி செய்த செயின் நகைக் கடைக்கு வரும்போது சுமார் 1.400 கிராம் வரை சேதாரம் கணக்கிட்டு விற்பனை செய்கிறார்கள். ஆக உண்மையான சேதாரம் 0.800 கிராம்தான். கடைக்காரர்கள் 0.600 கிராம் கூடுதலாக வைத்து லாபம் சம்பாதிக்கிறார்கள். இதனுடைய தற்போதைய விலை 1,700 ரூபாய். பெரும்பாலான கடைகளில் சேதாரத்தை சதவிகிதத்தில்தான் கணக்கிடுகிறார்கள். ஒரு நகைக்கு 5 சதவிகிதம்தான் சேதாரம் என்றால் நகைக் கடைக்காரர்கள் சேதாரத்தை 3-லிருந்து 5 சதவிகிதம் வரை கூடுதலாக வைத்து விற்கிறார்கள்.

தங்கத்தின் விலை உலகளவில் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆகவே பெரிய, சிறிய என அனைத்து கடையிலும் ஒரே விலைதான். ஐந்து, ஆறு வருடங்களுக்கு முன்பு ஒரு சில தங்க நகை வியாபாரிகள் தங்கத்தின் தரத்தைக் குறைத்து சேவையை வாடிக்கையாளர்களுக்குத் தந்தனர். ஆனால், தற்போது சரியான தரத்தைக் கொடுத்து சேதாரத்தில் லாபத்தை வசூல் செய்துவிடுகிறார்கள்.
சேதாரம் என்பது நகையில் உள்ள வேலைபாட்டிற்குதான். எடை அதிகமாக இருந்து வேலைபாடு குறைவாக இருந்தால் அந்த நகைகளுக்குச் சேதாரம் குறைவாக இருக்கும். அதேசமயத்தில் எடை குறைவாக இருந்து வேலைபாடுகள் அதிகம் இருந்தால் சேதாரம் அதிகமாகும். ஆண்டிக் (பாரம்பரிய வடிவமைப்பு) நகைகளுக்குச் சேதாரம் அதிகமாகக் காரணம், அதிலுள்ள அதிக வேலைபாடுகளே. அதோடு அந்த நகைகளைச் செய்ய அதிக நாட்கள் ஆகும்.
ஒவ்வொரு நகைக் கடையிலும் ஒவ்வொரு மாதிரியான சேதாரம் அல்லது கழிவுக்கான சதவிகிதத்தைக் கணக்கிடுகிறார்கள். இதனை வாடிக்கையாளர்களால் லேசில் புரிந்துகொள்ள முடிவதில்லை. இதனால் அவர்களுக்குச் சந்தேகம் வருகிறது. தங்கத்தின் தினசரி விலையை லண்டனில் ஐவர் கொண்ட குழு நிர்ணயிக்கிறது அதனை அடிப்படையாக வைத்துதான்
நகை வியாபாரிகள் சங்கம் ஒரு பவுன் தங்கத்தின் விலையில் 2 அல்லது 3 சதவிகிதத்தை லாபமாக கூடுதலாக வைத்து நகையின் விலையை அறிவிக்கிறது. இந்த லாபம் போகத்தான் இந்தச் சேதாரத்தின் மூலம் கிடைக்கும் லாபம்!'' என்று முடித்தார் சுவாமிநாதன்.

தங்க நகையில் சேதாரம் என்பதெல்லாம் தென் மாநிலங்களில்தான். வட மாநிலங்களில் எல்லாம் தங்க நகைகளுக்கு தனியாகச் சேதாரம் கணக்கிடுவதில்லை. மற்ற பொருட்களை போலவே சேதாரத்தை நகையின் விலையில் சேர்த்து விற்கிறார்கள்.

தங்கத்தின் தரத்திற்கான சான்றிதழை இந்திய அரசு வழங்குகிற மாதிரி சேதாரத்திற்கு ஓர் அளவை நிர்ணயம் செய்யவேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, சேதாரம் என்கிற பெயரில் சாதாரண மக்களின் பணம் கொள்ளை போவதைத் தடுக்க முடியும்!

Posted by .
 -புவனாமகேந்திரன்.
    மதி கல்வியகம்.