தங்கம் பற்றிய சுவாரஸ்யங்கள்!!
அரசன் ஆனாலும், ஆண்டி ஆனாலும் கடுகளவாவது தங்கம் நிச்சயம் நம்மிடம் இருக்கும். ஏனெனில் தங்கமானது ஒவ்வொருவரின் வாழ்விலும் ஓர் அங்கமாக மாறிவிட்டது. நம்மை அலங்கரிக்கும், ஜொலிக்கும் தங்க ஆபரணம் இல்லாமல் எந்த ஒரு விசேஷமும் முழுமையடையாததாக இருக்கிறது. எத்தனை விதமான ஆபரணங்கள் வந்தாலும் தங்கம் மீதான மதிப்பும் மோகமும் நம்மிடையே குறையப்போவதில்லை. அந்த அளவுக்கு தனிப்பட்ட முறையில் நமது செல்வநிலையை மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்திலும் பெரும்பங்கு வகிக்கிறது தங்கம்.
கி.மு-க்களில் எகிப்திய பொற்கொல்லர்கள் முதன்முதலில் தங்கத்தை உருக்கி ஊதுகுழல் செய்தனராம். அதன் பிறகே தங்கத்தினாலான ஆபரணங்கள் செய்யப்பட்டுள்ளன. கிரேக்கம் லிடியாவின் அரசராக இருந்த க்ரோசிஸ், தங்கத்தை உருக்கி சுத்தம் செய்யும் தொழில்நுட்பத்தை வளர்த்துள்ளார். பின்பு கி.பி-களில் அமெரிக்க ஐக்கிய நாடான கலிபோர்னியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் தங்கச் சுரங்கங்களிலிருந்து தங்கம் வெட்டும் பணி தொடங்கியது என்று கூறப்படுகிறது. உலகிலுள்ள மிகவும் ஆழமான தங்கச் சுரங்கங்களில் இரண்டு, தென் ஆப்பிரிக்காவில் இருக்கின்றன. பெருமதிப்பிற்குரிய தங்கம் எளிதில் நமக்கு அபரணமாக கிடைத்துவிடுவதில்லை. பலரது முயற்சிக்கும், உழைப்புக்கும் பயனாகவே நம்மை அலங்கரிக்கூடிய அந்த ஆபரணம் கைக்கு கிடைக்கின்றன.
சிறப்புவாய்ந்த தங்கம் பற்றிய அறிவியல் ரீதியான சுவாரஸ்ய தகவல்கள்.....
* உலகத்தின் ஒவ்வொரு கண்டத்திலும் தங்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
* உடலில் 0.2 மில்லிகிராம் தங்கம் இருக்கிறது. பெரும்பாலும் ரத்தத்தில் தங்கம் இருக்கிறது.
* யூகலிப்டஸ் மரத்தின் இலைகளில், தங்கத்துக்கான சிறு தடயங்கள் காணப்படுகின்றன.
* ஒலிம்பிக் கோல்டு மெடலில் 1.34 % மட்டுமே தங்கம் சேர்க்கப்பட்டிருக்கும்.
* பல கோடி டன் எடையுள்ள தங்கம் சூரியனில் இருக்கிறது.
* உலகத்திலுள்ள கடல்கள் முழுவதிலும் சுமார் 20 மில்லியன் டன் தங்கம் இருக்கிறது.
* ஆரோஃபோபியா - தங்கத்தின் மீதான பயத்தைக் குறிக்கிறது.
* உலகத்தில் உள்ள அனைத்து தங்கத்தை ஒப்பிட்டால் இந்திய இல்லத்தரசிகளிடம் 11% தங்கம் உள்ளது. அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகள் தங்களின் கையிருப்புகளைச் சேர்த்தாலும் இத்தனை சதவிகித தங்கம் சேராதாம்!
* தலை முடியிலும் சிறு தடயங்களில் தங்கத்தைக் கண்டறிய முடியும்!
* தங்கம் அதிகளவு ஆபரணங்கள் தயாரிக்கவும், தொழிற்சாலை பயன்பாட்டுக்கும் உபயோகப்படுகிறது. இயற்கையின் அரியதோர் அறிவியல் நிகழ்வால் உருவாவதால் என்னவோ, தங்கத்தின் மதிப்பு எப்போதும் நம் மக்களிடையே குறைவதே இல்லை. பலவகை கலெக்ஷன்ஸ், டிசைன்ஸ் போன்றவற்றை எதிர்பார்க்கும் நாம், 916 ஹால்மார்க்குடன், செய்கூலி, சேதாரம் மற்றும் விலை குறைவான தங்க நகைகளை வாங்கவே விரும்புவோம். இப்படிப்பட்ட தங்கத்தை அணிந்துகொள்ள ஆசைப்படும் நாம், தங்கம் வாங்கும்போது கொஞ்சம் விழிப்புணர்வோடு இருப்பதும் அவசியம்.
பிரில்லியண்ட் கட்
புது நகை அல்லது பழைய நகைகளைக் கொடுத்து புதிதாக வாங்கும்போது ஷோரூம்களில் நாம் சந்திக்கும் பிரதான பிரச்னை அதிகப்படியான செய்கூலி மற்றும் சேதாரத்துக்கான விலை. ஆனால், உற்பத்தி விலையில் உயர்தர தங்கம் மற்றும் வைர நகைகளை வழங்குகிறது 'பிரில்லியண்ட் கட்' நிறுவனம். நகைகளை மெஷின்களில் தாங்களாகவே வாடிக்கையாளர்களுக்கு உற்பத்தி செய்து தருவதால் 30% சேதாரம் குறைகிறது. இதனால் நமது பணம் மிச்சப்படுகிறது. கைவினை நகைகளைவிட 50% லேசானதாகவும், வலிமையானதாகவும் பிரில்லியண்ட் கட் நகைகள் உள்ளன.
இங்கு விற்கப்படும் அனைத்து தங்க மற்றும் வைர நகைகளும் BIS ஹால்மார்க் ஆபரணங்களாகும் சர்வதேசத் தர நிர்ணய அமைப்புகளின் விதிப்படி வைர மற்றும் பிற ரத்தினக் கற்கள் பதித்த நகைகளும் விற்பனை செய்யப்படுகின்றன. பிரில்லியண்ட் கட்'டிடம் நாம் விரும்பிய டிசைன்களை ஆர்டர் செய்தும் பெற்றுக்கொள்ளலாம். நாம் திருப்தியடையும் வரை பலமுறை நகைகளில் வேண்டிய திருத்தங்கள் செய்து தரப்படுகிறது. இவர்கள் நேர்த்தியாக கையாளும் ரத்தினக் கற்களுக்கு சலுகையும் உண்டு. மெஷின்களில் தயாரிக்கப்படும் நகைகள் முழுமை பெறுவதில் குறையேதும் இருப்பதில்லை என்பதால் மனநிறைவோடு நகைகளை பெற்றுச்செல்லலாம்.
Posted by .
-புவனாமகேந்திரன்.
மதி கல்வியகம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக