"தக தகக்க வைக்கும் தங்கத்தின் வரலாறு"
தங்கத்தின் பயன்பாடு, முதன்முதலாக கி.மு., 3600ல் ஆரம்பித்தது. இக்காலத்தில் எகிப்து நாட்டைச் சேர்ந்த கொல்லர்கள், தங்கத்தை உருக்கி ஊதுகுழல் செய்தனர். தங்க நகைகள் கி.மு., 2600ல் தான் வடிவமைக்கப்பட்டன.
கி.மு.595ல் கிரேக்க அரசர் ஒருவர் தங்கத்தை உருக்கி சுத்தம் செய்தார். இதன் பயனாக கி.மு.564ல் தங்க நாணயம் உருவாக்கப்பட்டது. அதன் மதிப்பு தெரியாமலேயே பலர் பயன்படுத்திக் கொண்டிருந்தனர்.
ஒரு நாட்டில் உள்ள தங்கத்தின் இருப்பை வைத்துதான், பணம் அச்சிடப்படுகிறது. இதனால் நாட்டின் செல்வத்தை, தங்கத்தைக் கொண்டு அளவிடலாம். அதிகமான தங்கம், தென்ஆப்ரிக்காவில் தான் வெட்டி எடுக்கப்படுகிறது. கனடா, அமெரிக்கா, கொரியா, ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற நாடுகளிலும் தங்கம் கிடைக்கிறது. சுரங்கங்களில் உள்ள பாறைகளின் மீது தங்கம் படிந்திருக்கும். பாறைகளை வெட்டியெடுத்து, அதிலுள்ள தங்கத்தை வேதியியல் முறைப்படி பிரித்தெடுக்கின்றனர்.
இதுவரை 1 லட்சத்து 71 ஆயிரத்து 300 டன் தங்கம், சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இதில் 50 சதவீதம் நகைகளாகவும், 40 சதவீதம் கட்டிகளாகவும், 10 சதவீதம் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
காரட் என்றால் என்ன?
தங்கத்தின் மதிப்பு காரட் என்ற அலகால் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது தூய தங்கம். அதில் ஆபரணம் செய்ய முடியாது. 9 முதல் 22 காரட் வரையுள்ள தங்கத்தில், நகை செய்யலாம். தங்கத்தில் செம்பு, வெள்ளி போன்ற பிற உலோகங்களை கலக்கும் போது தான், ஆபரணம் செய்ய முடியும்.
916 என்பது 22 காரட் தங்கத்தை குறிக்கும். அதாவது அதில் 91.6 சதவீதம் தங்கமும், 8.4 சதவீதம் செம்பு அல்லது வெள்ளியும் கலந்திருக்கும். தங்கத்தை மெல்லிய கம்பியாகவும், தகடாகவும் மாற்ற முடியும். மின்சாரம், வெப்பத்தை நன்கு கடத்தும். துருப்பிடிக்காது. வலிமையானது. எப்போதும் பளபளப்பாகவே காணப்படும், நிறம் மங்காது என்பதே இதன் சிறப்பு.
தங்கம், ராஜதிராவகத்தில் மட்டுமே கரையும். ராஜதிராவகம் என்பது ஒரு பங்கு நைட்ரிக் அமிலமும், மூன்று பங்கு ஹைட்ரோ குளோரிக் அமிலமும் சேர்ந்த கலவை.
தங்கத்தின் குறியீடு வேதியியலில் "அத' என குறிக்கப்படுகிறது. இதன் அணு எண் 79, அடர்த்தி 19.3. தங்கம் மஞ்சள் நிறத்தில் மட்டுமல்லாது, பிற உலோகங்களை கலந்து வெள்ளை, ரோஸ், கறுப்பு போன்ற வண்ணங்களிலும் உருவாக்கப்படுகிறது.
Posted by .
-புவனாமகேந்திரன்.
மதி கல்வியகம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக