அலாவுத்தீன் கில்ஜி உண்மை வரலாறு.
கில்ஜி என்பது ஒரு பாரசீக மொழி 1290 முதல் 1320 வரை தெற்கு ஆசியா முழுவதும் பரவியிருந்த ஓர் மிகபெரிய அரசு.இதைத் தோற்றுவித்தவர் ஜலாலுதீன் கில்ஜி ஆவார்.இவர்கள் துருக்கியைச் சார்ந்தவர்கள்.தில்லியை ஆண்ட இரண்டாவது வம்சம் கில்ஜி வம்சம்.அலாவுதீன் கில்ஜியின் காலகட்டத்தில் இந்தியாவின் மீதான மங்கோலியர்கள் படையெடுப்பு முறியடிக்கப்பட்டது.கில்ஜி முறையாக திருமணங்கள் செய்து கொண்டவர்.
அவருடைய முதல் மனைவி அவருடைய மாமன் ஜலாலுதீன் கில்ஜியின் மகள்.இவருக்கு இரண்டு மகன்கள் ஒருவர்,ஷிஹாபுதீன்உமர்,இன்னொருவர் குதுபுதீன் முபாரக். வரலாற்றின் எங்கேயும் அலாவுத்தீன் கில்ஜி பெண்களுக்காக அல்லது மாற்றாரின் மனைவியரை கவருவதற்காகப் படை நடத்தினார், அந்தப்புர அழகிகளை வைத்திருந்தாா் என்றொரு எந்த வரலாற்று குறிப்பும் இல்லை.மாறாக,நிறைய வரலாற்று திரிப்புகள் மட்டுமே உள்ளது.
அதுபோல அவர் சித்தூர் ராணி பத்மாவதி அவர்கள் மீது காதல் கொள்ளவில்லை.
கவர்ந்து வர படை நடத்தவில்லை.
சித்தூர் ராணி பத்மாவதியும் அவர்களும் அவர்மீது காதல் கொண்டார் என்பதும் ஒரு வரலாற்று பொய்.
சித்தூர் பத்மாவதி அவர்களும் முறைப்படி ரட்டன் சிங் என்பவரை மணந்திருந்தார்.ரட்டன்சிங் இறந்த போது,அன்றைய வழக்கப்படி அவர் உடன்கட்டை ஏறி தன்னை மாய்த்துக்கொண்டார் என்பதுதான்
உண்மை வரலாறு.எத்தனையோ வரலாற்று திரிப்புகளில் இதுவும் ஒன்று!..
Book of : Alaudeen Khilji the Saviour of Hinduism
நன்றி−வைகறை வெளிச்சம் மாத இதழ்,ஜனவரி 2018.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக