தமிழா இதற்கல்லாம் எங்கே சென்றாய்? நூறு வருடங்களில் அழிக்கப்பட்ட தலித்துகள் பற்றி தெரியுமா ? செந்தமிழ் நாட்டின் கொடூர கொலை பட்டியல் இதோ….
1921 தலித் மில் தொழிலாளர்கள் மீது தாக்குதல்
1923 நாடு திரும்பிய பர்மா தலித் அகதிகள் மீது தாக்குதல்-ராமநா
தபுரம்
1957 முதுகளத்தூர் கலவரம் – மாவீரன் இம்மாவேல் சேகரன்
படுகொலை
1968 வெண்மணி 44 தலித் கூலி தொழிலாளர்கள் படுகொலை
1978 விழுப்புரம் 12 தலித்துகள் படுகொலை – சேரிகள் மீது தாக்குதல்
1979 உஞ்சனை 5 தலித்துகள் படுகொலை – வாழ்வாதாரம் அழிப்பு
1981 மீனாட்சிபுரம் கலவரம் 180 தலித் குடும்பங்கள் இஸ்லாத்தை தழுவுதல்
1985 காட்டுமன்னார்குடி ரெட்டியூர் பாண்டியன் படுகொலை
1989 மதுரை சவரக் கடைகளில் தீண்டாமை – உள்ளாட்சி தேர்தலின்போது சேரிகள் தாக்குதல்
1990 தர்மபுரி மேனாசி சேரி மீது தாக்குதல்
1992 சிதம்பரம் பத்மினி போலீஸ் கூட்டு பாலியல் வன்முறை
1992 சென்னகரம்பட்டி 2 தலித்துகள் படுகொலை
1992 பொன்னூர் சேரி மீது போலீஸ் தாக்குதல்
1994 காரணை பஞ்சமி நில மீட்பு போராட்டம் 2 தலித்துகள் படுகொலை
1995 ஜலகண்டபுரம் பள்ளியில் தீண்டாமை – மாணவி தனம் கண் பார்வை பறிப்பு
1995 புலியங்குடி கலவரம்
1995 கொடியங்குளம் சேரி மீது போலீஸ் தாக்குதல்
1996-2006 பாப்பாபட்டி கீரிப்பட்டி உள்ளாட்சி தேர்தல் வன்கொடுமை
1997 மேலவளவு 6 தலித்துகள் படுகொலை
1997 போக்குவரத்து நிறுவனங்கள் பெயர் மாற்றம் தலித்துகள் மீது தாக்குதல்
1998 ஒகளூர் சேரி மீது போலீஸ் தாக்குதல்
1998 கடலூர் புலியூர் சேரி மீது தாக்குதல்
1998 திண்டுக்கல் குண்டுபட்டி சேரி மீது போலீஸ் தாக்குதல்
1998 பெரம்பலூர் அனுக்கூர் சேரி குடிசை தீவைப்பு
1999 தாமிரபரணி 17 தலித்துகள் படுகொலை
1999 கோஆதனூர் பொன்னருவி படுகொலை
1999 சிதம்பரம் பாராளுமன்ற தேர்தல் – சேரிகள் மீது தாக்குதல்
1999 செகுடந்தாளி முருகேசன் படுகொலை
2000 சிதம்பரம் புளியங்குடி 3 தலித்துகள் தலை துண்டிப்பு
2001 தர்மபுரி மருக்காளம்பட்டி சேரி மீது தாக்குதல்
2001 தூத்துக்குடி சங்கரலிங்கபுரம் சேரி மீது போலீஸ் தாக்குதல்
2002 திண்ணியம் தலித் வாயில் மலம் திணிப்பு
2003 பண்ருட்டி சிறுதொண்டமாதேவி தலித் பெண்கள் மீது பாலியல் வன்முறை
2003 திருமங்கலம் கீழஉறப்பனூர் தலித் பெண் மீது மனித மலம் ஊற்றப்பட்டது
2003 புதுகூரைபேட்டை கண்ணகி முருகேசன் ஆணவ படுகொலை
2004 காலாபட்டி சேரி மீது தாக்குதல்
2005 சேலம் திருத்தலைகிரி இரட்டை குவளை முறை தலித் இளைஞர் மீது தாக்குதல்
2005 கண்டதேவி தேரோட்டம் தலித்துகள் உரிமை மறுப்பு
2006 கடலூர் பத்திரக்கோட்டை சேரி தாக்குதல்
2007 மானூர் ராஜா ஆணவ படுகொலை
2007 கோபிசெட்டிபாளையம் திருமண அரங்கு மறுப்பு 144 தடை விதிப்பு
2008 அருப்புக்கோட்டை கல்லூரணி தலித்துகள் மீது தாக்குதல்
2009 வண்டிபாளையம் ராஜா படுகொலை
2010 விழுப்புரம் ஆனாங்கனூர் தலித் மாணவன் படுகொலை
2011 தாழையூத்து ஊராட்சி மன்ற தலைவி தலித் பெண் கிருஷ்னவேணி மீது தாக்குதல்
2011 ராமநாதபுரம் பள்ளப்பசேரி தலித் மாணவன் படுகொலை
2011 பரமக்குடி 6 தலித்துகள் போலீஸ் துப்பாக்கிசூட்டில்
படுகொலை
2012 தர்மபுரி மூன்று சேரிகள் மீது தாக்குதல்
2012 தர்மபுரி தலித் இளைஞர் இளவரசன் ஆணவ படுகொலை
2012 விருதாச்சலம் நிறமணி சேரி தலித்துகள் சமூக புறக்கணிப்பு
2012 வடலூர் பாச்சாரப்பாளையம் சேரி மீது தாக்குதல்
2012 விழுப்புரம் சேஷசமூத்திரம் கோவில் தேர் உரிமை மறுப்பு
2013 பண்ருட்டி மேலிருப்பு சேரி மீது தாக்குதல்
2013 தூத்துக்குடி கே.வேலாயுதபுரம் தலித்துகள் மீது தீண்டாமை
2013 மரக்காணம் கட்டையன் தெரு சேரி மீது தாக்குதல்
2013 தலித்துகளுக்கு எதிரான தலித்தல்லாத சாதிகளின் கூட்டமைப்பு
2014 சிதம்பரம் வடக்குமாங்குடி சேரி மீது தாக்குதல்
2015 சேலம் தலித் பொறியியல் மாணவன் கோகுல்ராஜ் ஆணவ படுகொலை
2015 விழுப்புரம் சேஷசமூத்திரம் தலித்துகளின் கோவில் தேர் எரிப்பு
2016 நாகப்பட்டினம் திருநாள்கொண்டச்
சேரி தலித் பிணத்திற்கு பொதுப் பாதை மறுப்பு
2016 உடுமலைப்பேட்டை தலித் இளைஞர் சங்கர் ஆணவ படுகொலை
2017.அரியலூர் நந்தினி
ஏன் நீங்கள் இவர்களுக்காக போரடாவில்லை? இவர்கள் யாரும் தமிழர்கள் இல்லயா? ஐந்து அறிவு படைத்த மாடுக்காக போராடும் இந்த சமூகம் ஏன் ஆறு அறிவு படைத்த மனிதர்களுக்காக போராட முன்வரவில்லை இந்த சமூகம்.உங்களை தடுப்பது எது? உங்கள் சாதி வெறியா? செல்லூங்கள் பார்க்கலாம்.
நுட்பமான பதிவு.
பதிலளிநீக்குவரலாறு வாழ்த்தும்