செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

எகிப்திய மம்மிகளின் உடலை பதப்படுத்தும் ரகசியம் வெளியானது..!


எகிப்திய மம்மிகளின் உடலை பதப்படுத்தும் ரகசியம் வெளியானது..!


⭕6000 ஆண்டுகள் பழமையான நார்த் துணி துண்டுகளில் சடலங்களை பதப்படுத்தும் ரசாயன ரகசியம் புதைந்துள்ளது.

⭕ஒரு பேழையில் பதப்படுத்தப்பட்டுள்ள எகிப்திய மம்மி தான் பழங்கால நாகரிகத்தின் அடையாளமாக விளங்கி வருகிறது.ஆனால் எகிப்தின் பழங்கால கல்லறைகளை கடந்து வடக்கு இங்கிலாந்தில் உள்ள போல்டன் (Bolton) அருங்காட்சியகத்தின் பராமரிப்பகத்தில் எகிப்திய மிம்மியின் ரகசியம் வெளிவந்துள்ளது.

⭕அதை பதப்படுத்துவதில் அந்த கால துணிகளுக்கு முக்கியத்துவம் உள்ளதை தற்போதைய கண்டுபிடிப்பு நிரூபித்துள்ளது. எள் எண்ணையை மையமாகக் கொண்டு இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாறு மூலம் சடலம் பதப்படுத்தப்பட்டுள்ளது.

⭕எகிப்தில் தற்போதும் Gum arabic என்ற சாறு விற்பனை செய்யப்படுகிறது. உடல் கெடாமல் காக்கும் பைன் மர பிசின் இதில் முக்கிய பங்காகும்.கி.மு.3000 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மியில் இதே கலவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக