அரேபிய, பாரசீக, துருக்கிய மொழிகளில் கொக்கோகநூல்கள் – ஆண்–பெண் உடலுறவுகள், குடும்ப பிறழ்சிகள், கொக்கோக இன்பங்கள்
[அக்பர், தீன் இலாஹி மற்றும் இஸ்லாத்துக்கு சாதகமாக இந்து நூல்கள் திருத்தப்பட்டது, மாற்றப்பட்டது மற்றும் புதியதாக உருவாக்கப்பட்டது (16)].
ஆண்–பெண் உடலுறவுகள், குடும்ப பிறழ்சிகள், கொக்கோக இன்பங்கள்: ஆண்-பெண் உடலுறவுகள் மிகச்சாதாரணமானது, ஆனால், இஸ்லாத்தில் “ஒரு ஆண், ஒரு பெண்” என்ற பந்தம், உடலுறவு, குடும்பம் போன்றவை இல்லாததாலும், பலதார குடும்பம், விவாகரத்து, பெண்களும் பல ஆண்களை திருமணம் செய்து கொள்வது போன்ற பழக்க-வழக்ககளினாலும் உறவுகள் குழப்பமாகின. போர்களில் ஆண்கள் இறந்து விடுவதால், அவர்களது மனைவிகள் தனியாகி விடுவதால், அவர்களுக்கு உதவும் வகையில் தான் “ஒரு ஆண்-நான்கு பெண்கள்” திருமணமுறை அறிமுகப்படுத்தப்பட்டு, சட்டமாக்கப் பட்டது என்று இஸ்லாம் முல்லாக்கள், காஜிக்கள் மற்றும் உலேமாக்கள் கூறுகின்றனர். திருமணம் பற்றி இஸ்லாமியப் பிரிவுகள் தத்தமக்கு ஏற்றமுறையில் சட்டங்களை ஏற்படுத்தியுள்ளன. ஒரே நேரத்தில் நான்கு மனைவிகளுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது என்று சட்டரீதியில் இருந்தாலும், அவர்களை எத்தனை காலத்திற்கு மனைவியாக வைத்திருக்கலாம் என்று உறுதியாகச் சொல்லப்படவில்லை. ஒருவன் ஒரே மனைவியை வைத்துக் கொண்டிருக்கலாம், அல்லது விவாகரத்து செய்து, தொடர்ந்து திருமணம் செய்து கொள்வது, விவாகரத்து செய்வது என்றமுறையைப் பின்பற்றினால், ஆண்-பெண் உறவுமுறைகள் சீரழியும் என்பதுதான் உண்மை. உடல் ரீதியால் மட்டுமல்லாது மனோதத்துவ ரீதியிலும் சிக்கல்கள், குழப்பங்கள், முரண்பாடுகள் ஏற்படும் என்பது நிதர்சனமான உண்மையாகிறது. “ஒரு ஆண்-நான்கு பெண்கள்” திருமணமுறை, “தலாக், தலாக், தலாக்” என்ற விவாகரத்து, மூத்தா திருமணங்கள், ஹேரங்கள் முதலியன, கொக்கோகங்களுக்கு வித்திட்டு, சிற்றின்ப இலக்கியங்கள் பெருகின. “மது-மாது” என்ற கிளர்ச்சிகொண்ட எண்ணங்கள் கவிதைகளாகி, மக்களை சதாய்த்தது.
உடலுறவு கொள்ள மற்றும் நீட்டிக்க கையாளும் முறைகள்.
பாரசீக மற்றும் இதர மொழிகளில் உள்ள நூல்களில் உதாரணத்திற்கு காட்டப்பட்ட சித்திரங்களில் சில.
உக்கா மூலம் போதைப் பொருள் உட்கொள்ளும் பழக்கம் இருந்தது.
அரேபிய, பாரசீக, துருக்கிய மொழிகளில் கொக்கோகநூல்கள்: அஹமது அல்-திபாஸி [Ahmad al-Tifashi (1184-1253 CE)], அஹமத் அல்-பலிதா [Ahamad al-Falitha], அப்தல் வஹாப் இபின் சஹ்நுன் [Abdal Wahab Ibn Sahnun (973-1031 CE)], அப்தல் ரஹ்மான் அல்-ஷன்ஜாரி [Addal Rahman al-Shanzari], அஹ்மத் அல்-திஜானி [Ahamad al-Tijani], அப்தல் ஸ்லாம் அல்-லகானி [Abdal Salam al-Laqani] முதலியோரின் நூல்கள் செக்ஸ், பாலியல் பற்றிய விவக்கரங்களைப் பற்றி விவரிக்கின்றன. அவற்றில் மொஹம்மது இபின் மொஹம்மது அல்-நப்ஜாவியின் (Muhammad ibn Muhammad al-Nafzawi) உடலின்பத்திற்கான சுகந்தமான தோட்டம் (الروض العاطر في نزهة الخاطر Al-rawḍ al-ʿāṭir fī nuzhaẗ al-ḫāṭir = The Perfumed Garden) என்ற கொக்கோகப் புத்தகம் அரேபிய வட்டாரத்தில், மொஹம்மதிய சமூகங்களில் மிகவும் பிரசித்தியானது[1]. அது “அரேபிய செக்ஸ் கையேடு” என்றெல்லாம் புகழப்படுகிறது. அதிலுள்ள அத்தியாயங்களின் தலைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன[2]:
- ஆணின் போற்றக்கூடிய தன்மைப் பற்றியது [Chapter 1: Concerning Praiseworthy Men].
- போற்றக்கூடிய பெண்களைப் பற்றியது [Chapter 2: Concerning Women Who Deserve To Be Praised]
- வெறுக்கக்கூடிய ஆண்களைப் பற்றியது [Chapter 3: About Men Who Are To Be Held in Contempt]
- வெறுக்கக்கூடிய பெண்களைப் பற்றியது [Chapter 4: About Women Who Are To Be Held in Contempt]
- வம்சவிருத்திப் பற்றியது [Chapter 5: Relating to the Act of Generation]
- உடலுறவு கொள்வதற்கான வசதியான நிலைமை [Chapter 6: Concerning Everything That Is Favourable to the Act of Coition]
- வம்சவிருத்தியை பாதிக்கக் கூடிய இசயங்கள் [Chapter 7: Of Matters Which Are Injurious in the Act of Generation]
- ஆண்குறியைக் குறிக்கும் மற்றப் பெயர்கள் [Chapter 8: The Sundry Names Given to the Sexual Parts of Man]
- பெண்களின் பாலியல் சம்பந்தப்பட்ட உறுப்புகளைக் குறிக்கும் மற்றப் பெயர்கள் [Chapter 9: Sundry Names Given to the Sexual Organs of Women]
- மிருகங்ளின் வம்சவிருத்தி சம்பந்தப்பட்ட உறுப்புகளைக் குறிக்கும் மற்றப் பெயர்கள் [Chapter 10: Concerning the Organs of Generation of animals]
- பெண்களின் ஏமாற்றும் மற்றும் மோசடி செய்யும் குணங்கள் [Chapter 11: On the Deceits and Treacheries of Women]
- ஆண்கள் மற்றும் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய உபயோகரமான விசயங்கள் [Chapter 12: Concerning Sundry Observations Useful to Know for Men and Women]
- வம்சவிருத்திக்காக செய்யும் செயல்களில் இன்பம் பெறுவதற்கான காரணங்களைப் பற்றியது [Chapter 13: Concerning the Causes of Enjoyment in the Act of Generation]
- கர்ப்பம் தரிக்க முடியாத பெண்களுக்கு சிகிச்சை அளிப்பது [Chapter 14: Description of the Uterus of Sterile Women, and Treatment of the Same].
- ஆண்களுக்கு ஆண்மையற்ற தன்மைக்கான காரணங்களை அறிவது மற்றும் சிகிச்சை அளிப்பது [Chapter 15: Concerning the Causes of Impotence in Men]
- ஆண்மையற்ற தன்மை மற்றும் பெண்மையற்ற தன்மை குணப்படுத்துவது, நீக்குவது [Chapter 16: Undoing of Aiguillettes (Impotence for a Time)]
- உறுப்புகளை பெரிதாக்குவது மற்றும் அழகாக்குவது பற்றிய பரிந்துறைகள் [Chapter 17: Prescriptions for Increasing the Dimensions of Small Members and for Making Them Splendid]
- கை-கால் மடிப்புகளில் வரும் துர்நாற்றம் மற்றும் உடலுறவுக்கு முன்னும், பின்பும் ஏற்படும் நாற்றத்தைப் போக்கும் முறைகள் [Chapter 18: Of Things that Take Away the Bad Smell from the Armpit and Sexual Parts of Women and Contract the Latter]
- கர்ப்பத்திற்கான விதிமுறைகள் [Chapter 19: Instructions with Regard to Pregnancy]
- இந்நூலின் முடிவுரை [Chapter 20: Forming the Conclusion of This Work]
மற்றும் பின்னிணைப்பு [Appendix]
12ம் நூற்றாண்டில் அத்தகைய பிரச்சினைகள் எல்லாமே அலசப்பட்டுள்ளன எனும்போது, அக்காலத்தில் அவற்றிற்குண்டான நிலைகள் ஏற்பட்டிருந்தன என்றாகிறது. அத்தகைய பாலியல் பிரச்சினைகள், அசௌகரியங்கள், நோய்கள் ஏற்பட்டிருந்து என்றால்,
பொதுவாக இஸ்லாமிய சமூகத்தில் காணப்பட்டப் பிரச்சினைகள்: இஸ்லாம் பரவிய நாடுகளில் எல்லாம், இத்தகைய அமைப்புகளைப் பார்ப்பதால், இவையெல்லாமே அவர்களது குணாதிசயங்களாகத் தெரிகின்றன. ஆண்கள்-பெண்கள் உறவுகள், குடும்பங்கள், போர்களால், மதச்சண்டைகளால், அடிமை வியாபாரத்தினால் சீரழிந்தன.
- பெண்களைத் தூக்கிவருதல், கடத்தி வருதல், அடிமைகளாக வாங்குதல்-விற்றல்.
- ஹேரத்தை உருவாக்கல் – தனியான கட்டிடம், காவல் முதலியன.
- உடலுறவுகள், உடலுறவுகளை நீட்டித்தல், அதற்கான மருந்துகள்.
- ஊக்குவிக்க கவிதைகள் பாடுதல், இசை-நடனம் ஏற்பாடு செய்தல்.
- கவிஞர்கள், நடன மாதருடன் உறவு கொள்வது.
- ஓவியக்காரர்கள், இத்தகைய கொக்கோகக் காட்சிகளை சித்திரங்களில் வடித்தல்.
- ஓவியங்களுக்காக, சித்திரக்காரர்கள் உடலுறவுகளைப் பார்ப்பது மற்றும் மாதிரிகளாக பெண்களைப் பயன்படுத்துக் கொண்டது. அப்பெண்களிடம், ஓவியக்காரர்கள் உறவு கொண்டது.
- ஆண்-பெண் உறவுகள் சீரழிந்ததால் விபச்சாரம் பெருகுதல்.
- உடலுறவுகள், கர்ப்பமாதல், கர்ப்பத்தை அழிப்பது, போன்றவற்றில் ஈடுபடல்.
- ஹேரத்தின் பாதுகாப்பு – அலிகளை பாதுகாவலர்களாக வைப்பது, அவர்களைக் கண்டுபிடிப்பது, உருவாக்குவது.
- குழைந்தைகள் பிறத்தல், அவர்களை வளர்ததல், ஆவண செய்தல்.
- உறவுமுறைகள் அறியாத, பந்தபாசங்கள் அறியாத குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆதல், மனோரீதியில் குரூரக்குற்றவாளிகளாக, கொடுங்கோலர்களாக மாறுதல்.
- இவையெல்லாம் காமச்சங்கிலிகளாக, கொக்கோக சுழற்சிகளாக, உடலுறவு வட்டங்களாக, பின்னிப்பிணைந்துள்ளதால், சிக்கிக்கொண்டு தொடர்ந்து நடந்து வந்தன.
இவ்வாறு இஸ்லாம் பரவிய நாடுகளில், இத்தகைய மாதிரிகள், அமைப்புகள், சமூக பிறழ்சிகள், பழக்க-வழக்கக்கள் பரவின, காணப்பட்டன[3].
வேதபிரகாஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக