திருவாவூர் மாவட்டத்தில் சிறப்புகள் பெற்ற ஊர்கள் :
கூத்தாநல்லு}ர்:
சின்ன சிங்கப்பூர் என்ற பெயரைப் பெற்றது இவ்வூர். கிராமங்களுக்கு நடுவில் மாடமாளிகைகள் சூழ நகர் அமைந்துள்ளது. இவ்வூர் முழுவதும் முஸ்லீம்கள் நிறைந்து வாழ்கின்றனர். இவர்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் பரவி வணிகம், வேலைவாய்ப்பு பெற்று இந்நகரை செல்வச் செழிப்புமிக்கதாக மாற்றியுள்ளனர். ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் முன்பு யாராவது வீடு கட்டவேண்டும் என்றால் கூத்தாநல்லு}ரை ஒருமுறை சுற்றிவிட்டு வாருங்கள் என்று பொதுமக்கள் சொல்லும் அளவுக்கு பல மாளிகைகள் நிறைந்த ஊர். இன்றும்கூட ஐசா பேலஸை பார்க்கலாம். சாரணபாஸ்கரதாஸ் என்கிற பெயரில் அரபு இலக்கியங்கள் மொழிபெயர்த்த பெரியவரும் இவ்வூர்காரர்தான். இவ்வூரையொட்டிய அத்திக்கடை, மரக்கடை முதலிய இடங்களிலும் முஸ்லீம்கள் நிறையபேர் வாழ்கின்றனர்.
வடபாதிமங்கலம்:
ஆரூரான் சர்க்கரை ஆலையால் இவ்வூர் புகழ்பெற்றது. இந்த ஆலை இருப்பதால் இவ்வூர் அருகிலுள்ள பல கிராமங்களில் கரும்பு பயிரிடப்பட்டு இங்கு அனுப்பப்படுகிறது. ஒன்றுபட்ட தஞ்சைமாவட்டத்தில் ஏற்பட்ட முதல் ஆலைகளில் இதுவும் ஒன்று. இதன் உரிமையாளரான தியாகராஜ முதலியார் இம்மாவட்ட சிறப்பு பிரமுகராவார்.
நீடாமங்கலம்:
மாவட்டத்தில் அதிக நெல்விளைச்சல் உள்ள பகுதிகளில் இவ்வூர் முக்கியமானது. இங்கிருந்து நெல் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மராட்டிய மன்னர் பிரதாப் சிங் 1761இல் கட்டிய யமுனா பாய் சத்திரம் இவ்வூரில் இருக்கிறது. புகழ்பெற்ற தவில் வித்வான், கலியுக நந்தி மீனாட்சிசுந்தரம் இவ்வூர்காரரே ஆவார்.
மகாதேவபட்டினம்:
இவ்வூர் மன்னார் குடியிலிருந்து 10கி.மீ தொலைவில் இருக்கிறது. இங்கு ஐதருக்கும் பிரிட்டீ\; தளபதி பிரெய்த்வெயிட்டுக்கும் 1781இல் போர் நடைபெற்றது. கோட்டையில் சிதைந்த பகுதிகள் காணப்படுகிறது. மா, பலாவுக்கு இவ்வூர் புகழ்பெற்றது.
திருத்தருப்பூண்டி:
இவ்வூர் இவ்வட்டத்தில் தலைநகருமாகும். இன்று திருத்துறைப்பூண்டி என்று அழைக்கப்படுகிறது. பல்லவர் காலத்தில் இங்கு துறைமுகம் இருந்ததாகக் கருதப்படுகிறது. 1952லும், 1955லும் உருவான புயல்களால் கடல் நீர் இவ்வட்டத்துக்குள் புகுந்து பெருஞ்சேதத்தை உண்டாக்கியது. திருத்துறைப்பூண்டி என்பது வில்வவனத்தை குறிக்கும் என்பர். இவ்வூர் கோயிலில் பஞ்சமுக வாத்யம் இருக்கிறது. திருவாரூருக்குப் பிறகு இங்கு மட்டுமே இந்த இசைக் கருவியைக் காணலாம். இவ்வூருக்கு அருகில் உள்ள ஊரான மணலி தான் புகழ்பெற்ற வள்ளலான மணலி ராமகிரு\;ண முதலியாரின் பரம்பரை ஊராகும். புகழ்பெற்ற பொதுவுடைமைமிக்க தலைவரான மணலி கந்தசாமி இவ்வூரைச் சார்ந்தவரே ஆவார். இவ்வூர் இப்பகுதியில் முக்கியமான வணிகத்தலமாகும்.
மாவூர்:
திருநாட்டியத்தான்கூடிக்கு அருகில் உள்ளது. கல்கத்தாவிலுள்ள காளி கோயிலைப் போன்ற ஒரு கோயில் இங்கு இவ்வூரினரான சர்.ஆர்.எஸ்.சர்மாவால் கட்டப்பெற்றிருக்கிறது. சர்மா கல்கத்தாவில் பத்திரிகை நடத்தியவர். பிரிட்டி\; வைஸ்ராய்களின் ஆதரவு பெற்றவர். இந்தியாவிலிருந்து இலண்டனுக்கு ஆகாய விமானத்தில் சென்ற முதல் இந்தியர் இவர்தான் என்று சொல்லப்படுகிறது.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டத்தில் நெல்விளையும் பகுதிகளில் நன்னிலம் வட்டம் முக்கியமானது. இங்குள்ள மதுவனீசுவரர் கோயிலில், சிவபெருமானின் விக்கிரகத்துக்குப் பின்னால் தேன்கூடு இருக்கிறது. இக்கோயில் மிகப்பெரிய கோயிலாகும். இவ்வூர் திருவாரூரிலிருந்து 16 கி.மீ. தொலைவிலுள்ளது. நன்னிலத்துக்கு அருகில் உள்ள ஊரின் பெயர் மாப்பிள்ளைக் குப்பம் என்பதாகும்.
குடவாயில்:
இவ்வூரின் பெயர் இப்போது கொடவாசல் என்று மருவி வழங்கி வருகிறது. கும்பகோணத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் குடவாசல் இருக்கிறது. குடம் என்பது மேற்கைக் குறிக்கிறது. குடவாயில் ஒரு நகரின் மேற்குப் பகுதி. இங்கே குடந்தையைத் தலைநகராகக் கொண்ட அரசர்களின் அரண்மனை இருந்ததாக கூறப்படுகிறது. தண்குடவாயில் அன்னோள் என்று அகநானுறு கூறுவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
தலையாலங்காடு:
தலையாலங்கானம் என்பது இவ்வூரேயாகும். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் பெரும் போர்க்களம் இதுவே. நெடுநெல்வாடையும் மதுரைக் காஞ்சியும் இவ்வூரில் நிகழ்ந்த போர் வெற்றியைப் புகழ்கின்றன. இவ்வூர் குடவாசலிலிருந்து 8 கி.மீ. தொலைவில் இருக்கிறது. பெருவேள?ர், திருக்கரவீரம் என்ற பாடல்பெற்றத் தலமும் தலையாலங்காட்டுக்கு அருகே உள்ளன.
திருக்கண்ணபுரம்:
திருவாரூரிலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது. பெரியாழ்வார், குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் முதலிய ஆழ்வார்களால் இங்குள்ள பெருமாள்கோயில் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. இவ்வூரிலுள்ள கோயில் 12 ஆம் நு}ற்றாண்டில் சோழர் பாணியில் கட்டப்பட்டது. முனியதரையன் என்ற சிற்றரசன் அக்காலத்தில் ஏற்படுத்திய அறச்செயல்படி இன்றும் முனியதரையன் பொங்கல் இக்கோயிலில் வழங்கப்படுகிறது.
திருக்கண்ணங்குடி:
கீவள?ர் இரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் இவ்வைணவத்தலம் இருக்கிறது. பஞ்சலோகங்களால் செய்யப்பட்ட கருடாழ்வார் திருவுருவம் இக்கோயிலில் இருக்கிறது. அவ்வுருவம் கைகளை ஒன்றின்மேல் ஒன்றாகக் குறுக்கே மடக்கி வைத்த நிலையில் அமைந்து தோற்றப்பொலிவு பெற்றது. இரவில் மூடாத இலைகளையுடைய புளியமரம், பூத்துக் காய்த்தாலும் விதையை நட்டால் முளைக்காத வகுளமரம், வேறு எங்கும் நல்லநீர் இல்லாவிட்டாலும் ஓர் இடத்தில் மட்டும் நன்னீர் கிடைக்கும் கிணறு ஆகியவை இங்கு உள்ளன. இதையொட்டிய பழமொழி இங்கு நிலவுகிறது. உறங்காப்புளி ஊறாக்கிணறு, காயாவகுளம், தோரா வழக்கு திருக்கண்ணங்குடி என்பதாகும்.
திருக்கொள்ளம்பூதூர்:
இவ்வூர் வெட்டாற்றின் வடகரையிலிருக்கிறது. இவ்வூர் ஞானசம்பந்தருடைய புராணத்துடன் தொடர்புடையது. இவ்விழா ஐப்பசி அமாவாசை நாளில் நடைபெறுகிறது. விபுலானந்தர் எழுதிய யாழ்நு}ல் வெளிவர உதவிய பெ.ராம.ராம. சிதம்பரம் செட்டியார் ஆதரவால் இவ்வூர் கோயிலிலேயேதான் அரங்கேற்றம் செய்யப்பெற்றது.
முத்துப்பேட்டை
முத்துப்பெட் என்றும் அழைக்கப்படும் முத்துப்பேட்டை, தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்த ஒரு பஞ்சாயத்துக்குட்பட்ட சிறு நகரமாகும். இச்சிறுநகரம், உப்புக் காயல்கள் மற்றும் சதுப்பு நிலங்கள் நிறைந்து, மீன்பிடித் தொழிலுக்கு ஏதுவான இடமாக அமைந்துள்ளது. இது காவேரி படுகையின் கிழக்குக் கோடியில், கடலுக்கு அருகில் அமைந்துள்ளதால், இங்கு சாதகமான வானிலையே பெரும்பாலும் நிலவுகிறது. இவ்வூர், மாநிலத்தின் தலைநகரான சென்னையிலிருந்து சுமார் 360 கி.மீ. தொலைவில், திருத்துறைப்பூண்டிக்கும் பட்டுக்கோட்டைக்கும் நடுவில் அமைந்துள்ளது. முத்துப்பேட்டையில் உள்ள ஆலையத்தி காடு என்றழைக்கப்படும் சதுப்பு நிலக் காடு, இந்தியாவிலுள்ள் பெரிய சதுப்பு நிலக் காடுகளுள் ஒன்றாகும். முத்தெடுப்பதற்கு உகந்த இடமாகவும் இது விளங்குகிறது. இப்பகுதியில் உள்ள பெரிய நகரங்கள் மற்றும் சிறு நகரங்களிலிருந்து, இவ்வூருக்கு எளிதாக சென்று வரலாம். இவ்வூர் அருகேயுள்ள சம்புவானோடையில் புகழ்பெற்ற இரண்டு தர்க்காக்கள் உள்ளன. இங்கு நிகழும் சந்தனக்கூடு விழாவுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து முஸ்லீம்கள் வருவார்கள்.
திருப்புகலு}ர்:
இவ்வூர் நன்னிலத்திலிருந்து நாகை செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவிலுள்ள சிற்றுர். அப்பருடன் தொடர்புடைய ஊர். பாடல்பெற்ற தலம். இங்குள்ள கோவில் பெரியது. இதைச் சுற்றி மூன்று பக்கமும் அகன்ற அகழிகள் உள்ளன@ ஊருக்குத் தென்பக்கத்திலுள்ள முடிகொண்டான் ஆற்றிலிருந்து பாய்காலும் வடிகாலும் இருப்பதால் அகழி எப்போதும் தௌpந்த நீர் உடையதாக இருக்கிறது. இங்கு 67 பழமையான கல்வெட்டுக்கள் இருக்கின்றன. நெற்குன்றவாணர் என்ற புலவர் பாடியுள்ள திருப்புகலு}ர் அந்தாதி இலக்கியம் இவ்வூருக்கு உண்டு.
தீபங்குடி:
இவ்வூர், நன்னிலத்திற்குத் தென்மேற்கே எட்டு கி.மீ. தொலைவில் இருக்கிறது. இது - சமணர் கோயிலுள்ள இடம். இக்கோயில் 16 ஆம் நு}ற்றாண்டில் கட்டப்பெற்றதென்று கூறுகின்றனர். பழங்கோயில் ஆற்றால் அழிக்கப்பட்டதாம். இங்கு சமணர்கள் வாழ்கின்றனர். கலிங்கத்துப்பரணி பாடிய கவிச்சக்ரவர்த்தி செயங்கொண்டார் பிறந்த ஊர் இதுவே ஆகும்.
வலங்கைமான்:
கும்பகோணத்திற்கு தெற்கே 10 கி.மீ. தொலைவில் ஆற்றின் கரையில் உள்ளது. இவ்வூர்க் கோயிலில் சிவபெருமானின் வலதுகையில் மான் இருப்பதால், வலங்கைமான் என்னும் பெயர் ஏற்பட்டிருக்கிறது. புகழ்பெற்ற ஆங்கிலப் பேச்சாளர் சுiபாவ hழழெசயடிடந ளடைஎநச வரமெ வ.ச.சீனிவாச சாஸ்திரியார் பிறந்ததும் இவ்வூரே.
சுற்றுலாத்தாலங்கள்:
உதயமார்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் :
திருவாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள உதயமார்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம், 1999-ம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. திருவாருரில் இருந்து 65 கி.மீ., தொலைவிலும், தஞ்சாவூரில் இருந்து 68 கி.மீ. தொலைவிலும் உதயமார்தாண்டபுரம் அமைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீரே, உதயமார்தாண்டபுரம் சரணாலயத்திற்கு ஆதாரமாக உள்ளது. 45 ஏக்கர் பரப்பளவில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ள உதயமார்தாண்டபுரம் சரணாலயத்திற்கு ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை பறவைகளின் வருகைக் காலமாகும். கோடையின் துவக்கமான ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் நீர் வரத்தின்றி வறண்டு காணப்படும்.
பறவைகள்:
சாம்பல் நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், நத்தை குத்தி நாரை, வக்கா (அ) இராக் கொக்கு போன்ற பறவைகள் அதிகளவில் கூடுகின்றன. நத்தை குத்தி நாரை அதிகளவில் வந்து செல்கின்றன. ஒராண்டில் அதிகபட்சமாக 10,000 பறவைகள் வந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது. நவம்பர், டிசம்பர் மாதங்கள் சுற்றுலா பயணிகள் சுற்றி பார்க்க ஏற்ற காலமாகும்.
வேளாண்மை:
திருவாரூர் மாவட்டத்தின் முக்கியத் தொழிலே வேளாண்மைதான். கீழத்தஞ்சை மாவட்டமாக உள்ள இப்பகுதிகள் பொன் விளையும் பூமி. மேட்டூர் அணை கட்டிய பிறகு வடவாற்றுக் கால்வாயால் மன்னார்குடி வட்டம் பெரும்பயன் அடைந்திருக்கிறது. நன்னிலம் வட்டத்தையொட்டிய பகுதிகள் மிகுந்த வளம் அடைந்திருக்கின்றனநன்னிலம் வட்டம் நல்ல மழையும், நிலவளமும், ஆற்றுவளமும் ஒருங்கே பெற்றுள்ளது. நன்னிலம் வட்டம் தமிழ்நாட்டிலேயே மிகக் கூடுதலாக நிலவரி செய்யும் மாவட்டம் ஆகும்.
வெண்ணாற்றுக் கால்வாய் திருத்துறைப்பூண்டி வட்டம் வழியே கடலில் கலக்கிறது. ஆனால் இவ்வட்டத்துக்கு வரும் முன்னரே தண்ணீர் அனைத்தும் பாசனத்துக்குப் பயன்படுத்தப்பட்டு விடுகிறது. எனவே இவ்வட்டம் பெரும்பாலும் வானம் பார்த்த பூமியாகவே இருக்கிறது. இருந்தாலும் திருத்துறைப்பூண்டி வட்டாரங்களில் நன்செய் நிலங்களும், நாச்சிக்குளம், முத்துப்பேட்டை வட்டாரங்களில் தென்னந்தோப்புக்களும் உள்ளன.
சர்க்கரை ஆலை:
வடபாதிமங்கலத்தில் ஆரூரான் சர்க்கரை ஆலை நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் 1 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டு இன்றும் நல்ல முறையில் நடந்து வருகிறது. இதற்குத் தேவையான கரும்பை சுற்று வட்டாரங்களில் பயிர்செய்து இங்கு கொண்டுவரப்படுகிறது.
#Thiruvarur
#திருவாரூர்_சிறப்புகள்
Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .
*꧁☬@☬꧂* *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*