திங்கள், 25 ஜூன், 2018

இந்து சமய சீர்திருத்தவாதிகள் போராடினார்களே ஏன், எதற்கு?


இந்து சமய சீர்திருத்தவாதிகள்
போராடினார்களே ஏன், எதற்கு? 

கஜினி முகமது. இந்தப் பெயர் இந்திய அரசியலில் இன்று வரை ஒரு வகையான அருவருப்பு அரசியலை அரங்கேற்றப் பயன்படுத்தப்படுகிறது.

யார் இவர்? அப்படி என்ன செய்தார்?

மன்னர்கள் என்றாலே மக்களை அடக்கியவர்கள் என்ற உண்மையை மறந்து விடலாகாது. அதில் கஜினி மட்டும் ஏன் கொடூர மனிதராக சித்தரிக்கப்படுகிறார் என்ற இன்றைய அரசியல் புரிதலுக்காகவே இந்தப் பதிவு.

அந்தக்கால அரசர்கள் எந்தப் பகுதியின் மீது படையெடுத்தால் பெருத்த செல்வத்தை அள்ளிக்கொண்டு வரலாம் என்று கணக்குப் போடுவதில் மட்டுமே குறியாய்
இருப்பார்கள். படையெடுத்துச் சென்று அகப்பட்டதை சுருட்டிக் கொண்டு போவது ஒரு வகை. கைப்பற்றிய பகுதியை தொடர்ந்து தன்னுடைய ஆட்சியின் கீழ் வைத்துக் கொண்டு வரி, தீர்வை, (தோற்ற மன்னனிடமே ஆட்சியை ஒப்படைத்து கப்பம் கட்ட பண்ணுதல் ஒரு வகை) என
மேலும் மேலும் கொள்ளையடிப்பது இன்னொரு வகை.

மொத்தத்தில் நோக்கம் ஒரே வகையானது தான் என்றாலும், அகப்பட்டதை சுருட்டிக்கொண்டு ஓடுபவர்கள் தங்கள் வரலாறை எழுதி வைப்பதில்லை. தொடர்ந்து ஆட்சி செய்பவர்கள் தங்களின் வீர, தீர பராக்கிரமங்களை எவ்வளவு கேவலாமானவனாய் இருந்தாலும், சிறப்பாக எழுதிவிடுவார்கள். அவனைப் புகழந்து பாடி பொரி, அவுல் வாங்கித் திண்ணும் புலவர் புடலங்காய்களும் புறப்பட்டு விடுவார்கள். அது பிறகு வரலாறு ஆகிவிடுகிறது.
(ஆயிரக்கணக்கான மக்களை கொன்ற நபரை யோக்கியர் என்று பேசி பிரதமர் ஆக்கியதைப்போல).

இத்தகைய இரு வகையினரில் முதல் வகையினர் கொள்ளைக்காரர்கள் என்றும், இரண்டாவது வகையினர் பொய், புரட்டு மூலம் யோக்கியவான்கள் ஆகிவிடுவார்கள்.
இதைதான் இன்று வரலாறு என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். இங்கேயே இருந்து கஜினி தன் வரலாறை எழுதியிருந்தால், அது எப்படி இருந்திருக்கும்.?அந்த வாய்ப்பு கஜினிக்கு கிடைக்காமல் போயிருக்கலாம், இல்லையேல் அதைப்பற்றி அவன் கவலைப்படாமல் போயிருக்கலாம்.

ஆனால் 17 முறை படையெடுத்து 18 வது முறை கொள்ளையடித்து சென்றது எப்படி, ஏன் என்பதைத் தான் நாம் யோசிக்க வேண்டும்.

இயற்பெயர் பெயர் முகமது தான். கஜினி என்ற பகுதியை ஆண்டதால் கஜினி முகம்மது. இந்தப்பதிவில் சொல்லப்போகும் கருத்துகள் எனது கருத்தல்ல. யார் இதைச் சொன்னார்கள் என்று இறுதியாகச் சொல்கிறேன். அப்பொழுது மிகவும் வியப்பில் ஆழ்ந்து விடுவீர்கள்.

"இன்றைய குஜராத் அந்தக்காலத்தில் ஆறு அரசர்களால் ஆளப்பட்ட பகுதி. இங்குள்ள சோமநாதர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. அதற்குக் காரணம் இந்தக்கோவிலின் லிங்கம். எந்தப் பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கியது தான்.(எப்படி என்று சொல்லாமல் பதிவு முடியாது).

இதன் சிறப்பு காரணமாக ஏராளமான பக்தர்களை அந்தக்கோவில் ஈர்த்ததில் ஆச்சரியம் இல்லை. எனவே சொல்ல முடியாத அளவு செல்வம் கோவிலில் பக்தர்கள் மூலம் குவிந்தது. குஜராத்தின் ஆறு அரசர்களும் அந்தக் கோவிலின் போஷகர்களாக இருந்தனர். கோவிலின்
அர்ச்சகர்கள் எத்தனை பேர் தெரியுமா? 11,000 பேர்.

எந்நேரமும் பரபரப்பாக இருந்த இந்தக் கோவிலில் கோடிக்கணக்கான சொத்தும் சேர்ந்து கொண்டிருந்தது. அதை எப்படியேனும் கொள்ளையடிக்க வேண்டும் என்ற திட்டமும் பலருக்கும் இருந்தது. (அரசியல் கட்சிகள் எப்படி மக்கள் சொத்தை கொள்ளையடிக்கலாம் என்று திட்டம் தீட்டுவதைப்போல).

கஜினி படையெடுத்து வந்த போதெல்லாம் குஜராத்தின் ஆறு அரசர்களும் ஒன்று சேர்ந்து அவனைத் தடுத்து தோற்று ஓடச் செய்தனர். (எனக்கு என்னவோ ஒவ்வொரு முறையும் கஜினி கொள்ளையடித்த பெருஞ்செல்வத்துடனேயே திரும்பிச் சென்று இருக்க வேண்டும் எனவே எண்ணத் தோன்றுகிறது) கி.பி 997 முதல் 1030 வரை 33 ஆண்டு காலம் கஜினி தன் முயற்சியை கைவிடவில்லை.
பரீட்சையில் தோற்கும் மாணவர்களுக்கு கஜினியே இன்றும் உந்து சக்தியாக இருக்கிறார்.

பதினெட்டாவது முறையாக 25,000 போர்வீரர்களுடன் சோமநாதபுரத்திலிருந்து எட்டு மைல் தூரம் முகாம்போட்டு
காத்திருந்தான் கஜினி.

கஜினி படையெடுத்து வந்ததை ஒற்றர்கள் மூலம் அறிந்த அரசர்கள் ஆறு பேரும் கோவிலின் தலைமை அர்ச்சகரிடம்
போய் ஒரு கோரிக்கை வைத்தனர். நம்மிடம் நாலரை லட்சம் வீரர்கள் உள்ளனர். கஜினியிடம் 25,000 பேர் மட்டுமே உள்ளனர். எளிதில் விரட்டி விடலாம் என்று அனுமதி கேட்டனர். ஆனால் தலைமை அர்ச்சகர் அதற்கு உடன்படவில்லை.

அர்ச்சகர் என்றால் சும்மாவா? அரசனுக்கும் மேலே உள்ளவன். அர்ச்சகர் சொல்கிறார் கேளுங்கள். "மிலேச்சன் படையெடுத்து வருவதை கணேசனும், காளியும் கனவில் வந்து தன்னிடம் சொன்னதாகவும், ஆனால் விசேஷமாய் ஹோமங்களும், அன்னதானம், சுவர்ணதானம், கன்னிகாதானம், ஆகியவை நடத்த வேண்டுமென கூறியதாகவும் சொல்லி, அரசர்களிடம் அதைச் செய்யுங்கள்" என்று கூறியுள்ளார். ஏன் இப்படிச் செய்தார்?

இந்த அரசர்களுக்கு வர வர புராணங்களிலும், பிராமனங் களிலும், நம்பிக்கை குறைந்து வருவதால் தான் இப்படிப் பட்ட இடையூறுகள் தொடர்ந்து வருவதாக அர்ச்சகர் அரசர்களைக் கடிந்து கொண்டார். இனிமேலாவது பிராமணர்களின் அறிவுரை கேட்டு நடக்கும்படியும், யுத்தத்திற்கு ஆகும் செலவை பிராமணர்களுக்கு தானம் கொடுத்து விடுமாறு கட்டளையிட்டு, யாகசாலை நிறுவும் பணியில் ஈடுபட்டார்.

தனது ஒற்றர்கள் செய்திக்காக கஜினி காத்திருக்க, சோமநாதபுரத்திலோ 1008 யாகசாலைகள் நிறுவி, குழிகளில் நெருப்பு வளர்த்து, நெய், கோதுமை, சந்தனம் முதலானவை எரிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. பல நூறு பேர் மிலேச்சனிடம் இருந்து காப்பாற்ற வேண்டி கழுத்தளவு தண்ணீரில் நின்று தவம் செய்தார்கள். போர் வீரர்கள் நமக்கு என்ன என்று தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
கஜினிக்கு இந்தத் தகவல் போய் சேர்ந்தது.

யாக சாலைகளில் நெருப்பு எரிவதையும், ஆயிரக்கணக்கான குழிகளில் புகை வருவதையும், நூற்றுக்கணக்கான தலைகள் தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பதையும் பார்த்த கஜினியின் ஒற்றர்கள் பயந்து போனார்கள். அவர்களுக்கு இது ஏன் என்று புரியவில்லை. இதை கஜினியிடம் சொன்னார்கள்.

கஜினி தனது மதகுருவான மவுல்லியிடம் ஆலோசித்தான்.
மவுல்லி உடனே இது காபரினுடைய ஜின்னுகளின் (சாத்தான்கள்) வேலை என்று சொல்லி, நான் குரான் வாசித்தால் ஜின்னுகள் ஓடிவிடும் நீங்கள் படையை நகர்த்துங்கள் என்று கட்டளையிட்டார்.

கஜினியின் படைகள் வரும் சேதி தெரிந்ததும், 11000 புரோகிதர்களில் தலைமை அர்ச்சகர் உட்பட எண்ணூறு புரோகிதர்கள் தவிர மற்ற புரோகிதர்களும், மேலும் பலரும்
அகப்பட்டதை அள்ளிக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

தலைமை அர்ச்சகர் தமது முத்துப் பல்லக்கை நன்றாகச் சிங்காரித்து சீடர்களையும், கோவில் தாசிகளையும் கஜினியை எதிர் கொண்டு வரவேற்று அழைத்து வர அனுப்பிவைத்தார்.

முத்துப்பல்லக்கை தனது ஒட்டகத்தின் மீது போடவைத்து, அதன் மீது ஏறி அமர்ந்து கஜினி கம்பீரமாக சோமநாதர் ஆலயத்திற்கு வந்து சேர்ந்தான். கோவிலின் உள்ளே கஜினி அமர சிங்காசனம் போடப்பட்டிருந்தது. அந்த சிங்காதனத்தின் பெயர் வியாசபீடம் என்பதாகும். இந்த சிங்காசனத்தின் அன்றைய மதிப்பு 50 லட்சம் ரூபாய் ஆகும்.

கஜினி கோவிலில் போடப்பட்ட வியாசபீடத்தில் கம்பீரமாய் அமர, தலைமை அர்ச்சகர் கஜினியிடம் "இங்கு போலி ராஜாக்கள் தங்களைப்பற்றி என்னென்னவோ சொன்னார்கள். ஆனால் நான் அவர்களை எல்லாம் அடக்கி வைத்தேன்" என்று கூறி விட்டு, "விஷ்ணு அல்லாதவன் அரசனாய் இருக்க முடியாது. (நா விஷ்ணு ப்ருத்வீ பதி)" என்று வேதங்கள் சொல்கிறது.

எனவே விஷ்ணுவின் அவதாரமான தங்களின் நேர்மையான ஆட்சி எங்களை ரட்சிக்க வேண்டும் என்று வேண்டு கோள் விடுத்துவிட்டு, எங்களுக்கு எந்த இடையூறும் செய்ய வேண்டாம் என்று கூறி 3 கோடி ரூபாய் காணிக்கை தருவதாகக் கூறினார்.

யாரையும் ரட்சிக்க நான் வரவில்லை. சொத்துக்கள் எங்கே இருக்கிறது காட்டுங்கள் என்று கஜினி கூற, அர்ச்சகர் கொண்டு வந்து கொடுக்க, அதை கணக்கிட்டுப் பார்த்தால் கேள்விபட்டதற்க்கும், கிடைத்த சொத்திற்கும் சம்பந்தமே இல்லை.

அர்ச்சகரே என்னிடம் இந்த வேலை ஆகாது என்று கஜினி கூறி விட்டு, அர்ச்சகரின் இரு கைகளிலும் எண்ணெய்யால் தோய்க்கப்பட்ட  துணிகளைச் சுற்றி கொளுத்துமாறு கட்டளையிட்டான். மிரண்டு போன தலைமை அர்ச்சகர் சொத்து இருந்த எல்லா இடத்தையும் காட்டிக் கொடுக்கிறார்.

தலைமை குருவின் தலைமையில் கோவில் இடிக்கப் படுகிறது. இடிக்க இடிக்க செல்வங்கள் கொட்டிக்கொண்டே இருக்கிறது. கோவில் சாயத் துவங்க, அதுவரை காந்தக் கற்களின் உதவியோடு அந்தரத்தில் நின்ற லிங்கமும் விழுந்து நொறுங்குகிறது.

நொறுங்கி விழுந்த லிங்கத்தின் உள்ளிருந்தும் நவரத்தினங்கள் கொட்ட வாரி வாரி அள்ளிப்போட்டுக் கொண்டு 800 புரோகிதர்கள், 5000 ஆண்கள், 6000 பெண்களை கைதிகளாகப் பிடித்துக் கொண்டு கஜினி சென்றான்.

கதை இன்னும் இருக்கு...
இவ்வளவு சுவாரஸ்யமாக நடந்த சம்பவங்களை சொல்லியது யார்?என்ன ஆதாரம்?அப்புடின்னு கேப்பீங்க.

இந்த விபரங்கள் சுவையான கதை போல தோன்றலாம். அதீதமான கற்பனை என்றும் நினைக்கலாம்.
குஜராத்தி, உருது மொழியிலுள்ள நூல்களில் தேடி எடுத்து
நூலாக எழுதியவர் வேறு யாருமல்ல. வேதங்களை நோக்கி திரும்புமாறு இந்திய மக்களை அறைகூவி அழைத்த, ஆரிய சமாஜத்தை நிறுவிய சுவாமி தயானந்த சரஸ்வதி தான்.

சுவாமி தயானந்த சரஸ்வதி குஜராத் மாநிலம் டன்காரா எனுமிடத்தில் பார்ப்பன குடும்பத்தில் பிறந்தவர். 1875 ல் ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர். 1883 அக்டோபர் 30 இறந்தார்.

அவர் இந்தியா முழுமையும் சுற்றி மதுராபுரியில் எழுதி வெளியிட்ட
"சத்தியார்த்தப் பிரகாசம்" என்ற நூலில் 11 வது அத்தியாயத்தில் கஜினி படையெடுப்பு குறித்து விலாவாரியாக எழுதியுள்ளார். இதுவரை தெரிவித்தக் கருத்துகள் அவர் நூலின் விளக்கம் தான். இப்போது இதிலிருந்து எளிதாக புரிந்து கொள்வது  இது தான்.

1. ஆறு அரசர்களிடமும் இருந்து பார்ப்பனர்கள் கோவிலைக் கைப்பற்ற சதி செய்துள்ளனர்.

2. கஜினியை உள்ளே கொண்டு வந்து அரசர்களை விரட்டி விட்டு, கஜினிக்கு தொகை கொடுத்து ஒதுக்கி விடலாம், கோவிலில் குவிந்து கிடக்கும் செல்வத்தை சூறையாடலாம் என்ற "அவாள்"களின் பருப்பு அங்கு வேகவில்லை.

3. கோவிலை இஸ்லாமியரான கஜினி இடிக்கவில்லை. பார்ப்பனர்களே இடித்தது தெளிவாகிறது.

4. விஞ்ஞானம் சார்ந்த நுட்பத்தைப் பயன்படுத்தி, லிங்கம் அந்தரங்கத்தில் தொங்குவதாய் மக்களை அந்தக்காலத்திலேயே ஏமாற்றியுள்ளனர்.

5. இந்துக்களை பார்ப்பனர்கள் ஏமாற்றிப் பிழைப்பு நடத்துகிறார்கள் என்ற நிகழ்வு வெளிச்சத்திற்கு வருகிறது.

மேலும் நீங்கள் நிரப்பிக் கொள்ளலாம்.

சொன்னது சுவாமி தயானந்த சரஸ்வதி என்பதால் அரை டவுசர்கள் அங்கு போய் தாக்குதல் நடத்தலாம். இசுலாமிய கைக்கூலி எனலாம். இஸ்லாமியர்கள் மேல் பழி போடுவது நியாயம் அல்ல.

கஜினி மற்றும் முகலாய மன்னர்கள் எல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் என்றும், இந்துக்களை வதைப்பதே அவர்கள் வேலை என்றும் RSSம் பாஜக வும் பிரச்சாரம் செய்கிறது. ஏன் இந்தப் பிரச்சாரம்? உண்மை என்ன?

முகலாயச் சக்கரவர்த்திகளுக்கு முன்னால் பல முஸ்லிம் ஆட்சியாளர்கள் இங்கு ஆண்டுள்ளனர். கிபி 6 ம் நூற்றாண்டின் முகம்மது பின் காசிம் முதல் கி.பி.1192 ல் முகமது கோரியும், கி.பி 1206ல் குதுப்-உத்-தீனும், கி.பி.1296 ல் அலாவுதீன் கில்ஜியும், கி.பி.1325 ல் முகமது -பின்-துக்ளக்கும், கி.பி.1414 முதல் கி.பி.1450 வரை டெல்லியில் சையதுகளின் ஆட்சியும், கி.பி 1451ல் ஆப்கானிஸ்தான் வம்சத்தின் பஹ்லுல் லோடியும், அதைத் தொடர்ந்து லோடி வம்ச ஆட்சியை பானிபட் போரில் வீழ்த்தி கி.பி 1526 ல் பாபர் முகலாய சாம்ராஜ்யத்தை நிறுவினார்.

இவ்வளவு காலப்பகுதியில் ஆட்சி புரிந்த முஸ்லிம் மன்னர்கள் இஸ்லாத்தை பரப்புவதற்கான வேலையை கடுமையாகச் செய்திருந்தால் இங்கு இஸ்லாமியர்கள் சிறுபான்மையினராக இருந்திருக்க மாட்டார்கள். முஸ்லிம் மன்னர்கள் அதிக காலம் ஆண்டாலும், பெரும்பாலான மக்கள் இந்துக்களாக இருந்தார்கள் என்பதை மறைக்க முடியுமா?

அவர்களின் நோக்கம் மதம் பரப்புவதல்ல,
சாதியை ஒழிப்பதல்ல,
அதை வைத்து அதிகாரம் செலுத்த வேண்டும் என்பதே.,
ஆளும் வர்க்க அரசியலே.

மன்னர்களுக்கு அதிகாரத்தை நிலைநிறுத்த அனைவரும் தேவைப்பட்டார்கள்.

பாஜக வும், RSSம் இந்து மதத்தை வளர்ப்பதையா நோக்கமாகக் கொண்டுள்ளது!? இந்திய இஸ்லாமியரைப் பகைவராகக் காட்டி பார்ப்பனியத்தின் செல்வாக்கை தக்க வைப்பதே நோக்கம் என்பதை அப்பாவி இந்து மக்கள் புரியவேண்டும்.

இருப்பினும் இஸ்லாமிய மன்னர்கள் இந்துக்களின் பால் எத்தகைய அணுகுமுறை கொண்டிருந்தார்கள் என்பதற்கு பாபர் தன் மகன் ஹுமாயூனுக்கு 11.1.1529 ல் எழுதிவைத்த உயில் மூலம் அறிவோம்.

இந்துக்கள் குறித்த அணுகுமுறை எப்படி இருக்கவேண்டும் என பாபர் தனது மகன் ஹிமாயூனுக்கு 11--1--1529 ல் எழுதிவைத்த உயில் இதுதான்.

"அருமை மகனே! பல வகையான மதங்களைப் பின்பற்றும் மக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் அல்லா உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி சொல்ல வேண்டும். ஆகவே உன் குடிமக்களின் மத சம்பந்தமான மென்மையான உணர்வுகளுக்கு எப்போதும் மதிப்பளித்து வரவேண்டும்.

மற்ற சமூகத்தின் வழிபாட்டுத் தளங்களை ஒரு போதும் இடித்து சேதப்படுத்தலாகாது.

அடக்குமுறை எனும் வாளை விட இந்துக்களின் அன்பு மற்றும் நன்றிக் கடன் என்ற தூண் மூலம் இஸ்லாமைப் பரப்பு.

ஷியா மற்றும் சன்னிப் பிரிவினரிடையே நிலவும் உட்பூசலை அலட்சியம் செய்.

குடிமக்களிடம் காணப்படும் வேறுபாடுகளை பருவ காலங்களுக்கு இடையேயான வித்தியாசம் போல் கருதி ஒதுக்கிவிடு."


இப்படிப்பட்ட அறிவுரைகளைக் கூறிய பாபரின் பேரன் அக்பர் இன்னும் ஒருபடி மேலே போய் மத வேறுபாடுகளற்ற ஒரு புதிய மார்க்கத்தையே "தீன் இலாஹி"என்ற பெயரில் முன் வைத்தார்.

இப்படிப்பட்ட முகலாய அரசர்கள் மீது அவதூறுப் பிரச்சாரத்தை RSSம்-BJPம் செய்வதன் நோக்கம் அவதூறுகளின் பால் உண்மையா, பொய்யா என்ற முடிவுக்கு வருவதல்ல,மாறாக...

இப்போது இந்தியாவில் வாழ்ந்து வரும் இஸ்லாமியர்கள் மீது பகையை வளர்த்து, அதை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் அருவருப்பான  சிந்தனையைத் தவிர வேறொன்றுமில்லை.

பார்ப்பனியமும் மனுவும் சேர்ந்து உருவாக்கிய கேடு கெட்ட கொள்கைகளுக்கு எதிராக இந்திய மண்ணில் ஏராளமான இந்து சமய சீர்திருத்த வாதிகள் உருவானார்கள்.
சுவாமி தயானந்த சரஸ்வதி
சுவாமி விவேகானந்தர்
இராஜாராம் மோகன்ராய்
தேவேந்திரநாத் தாகூர்
கேசப் சந்திர சென்
லாலா ஹன்ஸ் ராஜ்
நாராயண குரு
அய்யன் காளி
குருபிரசாத்
குருநானக்
குருசாயி
ராமானுஜர்
ஐயா வைகுண்டர்
வள்ளலார் என
இன்னும் இன்னுமாய் பட்டியல் நீளும்.

ஒரே கேள்வி தான்.
இத்தனை இந்து சமய சீர்திருத்தவாதிகள்
போராடினார்களே ஏன், எதற்கு? பார்ப்பனியம் உருவாக்கிய சீரழிவுகளுக்கு எதிராகத் தானே?

1925 ல் சித்பவன் பார்ப்பனர்களால் நாக்பூரில் தொடங்கப்பட்ட RSS இந்து சமூகத்தில் செய்த சீர்திருத்தம் என்ன என்று, ஏதாவது ஒன்றை சொல்லுங்கள் பார்ப்போம். கலவரம் செய்ததைத் தவிர வேறென்ன?

மக்கள் ஒற்றுமை காப்போம். மத நல்லிணக்கம் பேணுவோம். மதங்களைத் தாண்டி மனித நேயம் பேணுவோம்.

ஆபாசமே இந்துமதம் - இந்துக்கடவுள்களின் ஒழுக்கக்கேடான தகாத உடலுறவுகள் - இதன் மூலம் இந்துமக்களுக்கு இந்துமதம் என்ன சொல்ல வருது....?


ஆபாசமே இந்துமதம் - இந்துக்கடவுள்களின் ஒழுக்கக்கேடான தகாத உடலுறவுகள் - இதன் மூலம் இந்துமக்களுக்கு இந்துமதம் என்ன சொல்ல வருது....?

1. குந்தி – ( திருமணத்திற்கு முன் கள்ளஉறவு)
குந்தி திருமணத்திற்கு முன்பே சூரியனிடம் கள்ளஉறவு கொண்டமையால் பெற்றெடுத்த கர்ணனை ஆற்றில் விட்ட கதை அனைவரும் அறிந்ததே. திருமனத்திற்கு பின்பு ஐந்து பிள்ளைகள் பெற்றாலும் எவையுமே அவள் கணவன் பாண்டுவுக்கு பிறந்ததில்லை மகாபாரதம் படித்தவர்களுக்கு நல்லாவே தெரியும்.

2. பத்மை - (தகப்பன் மகள் உறவு)
சிவன் பார்வதி திருமணத்தில் பிரம்மா புரோகிதனாக இருந்து விவாக ஓமம் செய்தான். பார்வதி ஓமகுண்டத்தை இடது கையால் முந்தானையை பிடித்து சுற்றிவருகையில் அவளுடைய தொடை பிரமனின் கண்ணில்பட்டது. அதை பார்த்தவுடன் பிரம்மா மோகத்தால் இந்திரியம் (விந்து) ஸ்கலிதமாயிற்று. அந்த இந்திரியத்தை குலத்திலுள்ள தாமரை பூவில் விட அதில் பத்மை என்ற புத்திரி பிறந்தாள்.
பத்மை அழகில் மயங்கி மோகம்கொண்டு அவள் சம்மதிக்க மறுக்கவே சமாதான வேத மந்திர வாக்கியத்தை சொல்லுகிறான்.

" மாதாமுபைத்ய கசாரமுபைய, புத்ரார்த்தீக சகாமார்த்தி நாபாத்திரலோகா நாஸ்தீத ஸ்ரவம்பரவோ விந்து ஹாம் தஸ்மாத் புத்தார்த்தம் மாதரம், ஸூரஞ்சதி,ரோஹதி"

இதன் விளக்கம் :-
புத்திராத்த நிமித்தம் தாய், தமக்கை, மகன், பிள்ளை யாருடனும் கூடலாம்.
" தாயிடமும் மகளிடமும் படுத்து படுத்து பிள்ள பெத்துக்கிலாம் இதுதாங்க இந்துமத யோக்கியதை"

3.  (தாய், மகன் உறவு) - திருவிளையாடல் புராணம்..
அவந்தி என்ற ஊரில் ஒரு பார்ப்பான் வாழ்ந்து வந்தான். அவனுடைய மனைவி ஒப்பில்லா அழகுடையவள். அவளது மகன் வளர்ந்து வாலிபன் ஆனதும், அவனது தாயின் மேலேயே ஆசை கொண்டான்.
அவளும், நாணம், வெட்கம் எல்லாவற்றையும் விட்டு, தன்னுடைய மகனிடம் உடலுறவு கொண்டாள். இதற்கு இடையூறாக இருந்த அவளுடைய கணவனை (தகப்பனை) கொன்றான். இந்த பாவத்தை கழிக்க சிவராத்திரி நாளில் சிவனடியார்களுக்கு பணி செய்து சூரியன் உதிக்கும் முன் அருகம்புல்லை பசுமாட்டிற்கு கொடுத்து மூன்று காலமும் நீராடி108 முறை கோவிலை வலம் வரவேண்டும் என்று திருவிளையாடல் புராணம் 26ஆவது திருவிளையாடல் மாபாதகம், தீர்த்தபடலம். கூறுகிறது.

4.  லட்சுமி - (சகோதரனிடம் காமம்)
சமுத்திர தேவனின் செல்வ புதல்வி லட்சுமிதேவி தன் ககோதரன் அசுவனைக் கண்டு காமம் கொண்டாள்.
 இதை கண்ட விஷ்ணு கோபம் கொண்டு "கவர்ச்சி மிக்க கண்களைக் கொண்டுள்ள காமகி! நீ யாரைப் பார்க்கிறாய்? நான் சொல்லும் வார்த்தைகள் கூட உன் காதில் விழவில்லையா? காமக் கடலில் நீயும் மூழ்கி விட்டாயா?" என்று கோபத்துடன் சீறினான்.

அவள் கணவன் கேட்டதற்கு பதிலளிக்காது பெண்குதிரை வேஷம் எடுத்த தன் சகோதரனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டாள். இந்த புணர்ச்சியில் பிறந்த வம்சமே 'ஹெய்ஹயகானாக்கள்' என்று அழைக்கப்ட்டனர்.
ஆதாரம் - தேவிபாகவாத புராணம் (6,17,53)

5.  (சொந்தங்களுடன் உடலுறவு) மனுசாஸ்திரம்..
ஆண் பிள்ளை இல்லாமல், ஒரு குலம் நசிந்து போனால், அப்போது அந்தப் பெண், தன்கணவர்,மாமனார் முதலியோரின் உத்தரவு பெற்றுக்கொண்டு, தன் மைத்துனர் அல்லது தன்கணவனுக்கு ஏழு தலைமுறைக்குட்பட்ட
பங்காளி களுடன் புணர்ந்து ஒரே ஒரு பிள்ளையைபெற்றுக் கொள்ள வேண்டும்.
(மனு அத்தியாயம் 9; சாஸ்திரம் 59)

6. (அண்ணியுடன் உறவு) பிரகஸ்பதி முனிவர்.
இந்து மதத்தில் தேவர்களிக்கெல்லாம் குருவான பிரகஸ்பதி தனது அண்ணன் மனைவி கர்ப்பமாக இருந்த போது, அண்ணன் இல்லாத வேளையில் முறைகேடாக உறவு கொண்டுடான். அதில் பிறந்த குழந்தைதான் (த்வஜாபுத்திரன்) பரத்வாஜா ஆவர்.
இந்த மகன் தந்தையை மிஞ்சிய காம வெறியன். இந்த பரத்வாஜா கிராதிஸி அப்ஸரா என்ற பெண்ணை நினைத்து விந்து வெளியேறிய போது உருவனவரே, வேதவிற்பன்னர் துரோணர். எப்படி இருக்கு இந்துமத ரிஷிகள், முனிவர்களின் யோகியதைகள்.
(ஆதாரம் - மகாபாரதம் ஆதிபர்வம் அத் 131, ஸ்கந்த 9 அத் 20 )

7.  சிவன், விஷ்னு -(ஓரினச்சேர்க்கை)
விஷ்னுவின் மோகினி அவதாரக் கதை ஏகம் இருந்தாலும், சிவன் மோகினியின் மேல் கொண்ட காமத்தால் உடலுறவு கொண்டு ஐயப்பன் பிறந்தாக கூறப்படுதல் ஆண் ஓரகினச் சேர்க்கை தானே!.

8. விஷ்ணு, நாரதர் - ( ஓரினச்சேர்க்கை)
மகா விஷ்ணுவும் நாரதரும் கலவி (homosex) செய்ததில்அவர் இரண்டு பேருக்கும் அறுபத்திரெண்டு குழந்தைகள் பிறந்தது. அந்தக் குழந்தைகள் ஒவ்வொன்றுக்கும் பெயர் வைத்தார்கள். அதுதான் 62 தமிழ் வருடங்கள்.

9. சூரியபகவான்,அருணன் - (ஓரினச்சேர்க்கை)
சூரியனின் ரத சாரதியின் பெயர்அருணன். இவன் இந்திரலோக வினோதங்களைக் காண்பதற்கு என்றுபெண் வேடம் பூண்டு அங்குச் சென்றான். இதைக் கண்ட இந்திரன் பெண் வேடத்திலிருந்த அருணனை மோகித்துப் புணர்ந்தான் இதனால் வாலி என்பவன் பிறந்தானாம்.

இந்நிகழ்ச்சியால் அருணன் வேலைக்குத் தாமதித்து வர, சூரியன் காரணம் கேட்டு,
நடந்ததையறிந்து, மீண்டும் அருணனைப் பெண் வேடத்தில் வரச் செய்ய, அவன் அப்படியே வர, அவனைச் சூரியன் புணர்ந்தான் அதனால் சுக்ரீவன் பிறந்தானாம்.

10. ராமன் பிறப்பு - Animal sex (மிருக்கங்களுடன் புணர்ச்சி)..
தசரதன் புத்ர காமேஷ்டி யாகம் செய்தான்.
அந்த யாகத்தில் குதிரையுடன் மூன்று பட்ட மகிஷிகளும் ஓர் இரவை கழித்துள்ளார். வெட்டுண்ட குதிரையுடன் ஒரு இரவு முழுவதும் மூன்று மனைவியரும் கட்டிப் புரண்டதாக வால்மீகி ராமாயணத்தில் எழுதப் பட்டுள்ளது. அதன் பிறகே நான்கு புதல்வர்கள் பிறந்துள்ளனர்.

11.  விஷ்னு - (மாற்றான் மனைவியுடன் உறவு). சலந்தரன் எனும் அசுரனின் மனைவி பிருந்தை. அவன் சிவனுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, விஷ்னு சலந்திரனாக வந்து பிருந்தையுடன் இருந்தாக கூறப்படுகிறது. அவள் இட்ட சாபமே ராம அவதாரத்தில் சீதையை ராவணன் கவர்ந்து செல்ல காரணம் என்கின்றார்

12.  பாஞ்சாலி – (அண்ணி கொழுந்தன் உறவு அல்லது ஐந்து பேருடன் உறவு)..
திரௌபதி என்பது உண்மையான பெயர் பாண்டவர்கள் ஐவருக்கும் மனைவியானதால் பாஞ்சாலியாக மாறிப்போனது. ஆனால் சிலர் தர்மனின் மனைவி என்று அறிவி்க்கப்பட்டாலும், ஐந்து பேருக்கும் மனைவியாக கலவி சுகம் கொடுத்திருக்கிறாள். ஆதாரம் - மகாபாரதம்.

13.  ருமை - (தம்பியின் மனைவியுடன் உறவு)
சுக்ரீவனின் மனைவி ருமை. ஆனால் சுக்ரீவனை வஞ்சித்துவிட்டு அண்ணன் வாலி ருமையுடன் வாழ்ந்ததாக ராமயணம் கூறுகிறது.

14.  விவச்சாரிகளிடம் உறவு - மனுசாஸ்திரம்
சுலோகம்-
வேஸ்யாதர்சனம் புண்யம்
ஸ்பர்சனம் பாவ நாசனம்
சும்பனம் சர்வ தீர்த்தானம்
மைதுனம் மோட்ச சாதனம்

விளக்கம் :-
வேசிகளை (விபசாரிகளை)ப் பார்ப்பது புண்ணியம். அவர்களைத் தொட்டால் நீங்கள் செய்த பாவமெல்லம் போய்விடும்.
கார்ப்பரேசன் குழாய் தண்ணீரை ஒரு செம்பில் வைத்துக் கொண்டு புரியாத மந்திரங்களை, கங்கா, யமுனா, சரஸ்வதி, கோதாவரி, காவேரி என்று சொல்லிக்கொண்டு மா இலையால் வீடு முழுவதும் தெளிக்கிறாரே புரோகிதர் அந்த சகல தீர்த்தங்களும், அந்த விபச்சாரிகளை முத்தமிடும் பொழுது வாயில் ஊறும் எச்சிலுக்கு சமமாகும். அதற்கும் மேல் விபச்சாரிகளை புணர்வது மோட்சத்திற்கு வழியாகும்.

15.  இது எந்தமாதிரி உறவுனே தெரியல.. படித்துவிட்டு நீங்களே ஒரு பேரு வைங்க நண்பர்களே..

கலைவாணி, சரஸ்வதி என்ற பெண் கடவுள்கள், தமது கன்னி வயதில் விஷ்ணுவின் காதலிகளாக இருந்தனர்.

இவர்களுக்கிடையில் யார் விஷ்ணுவின் காதலியாக தனித்து இருப்பது என்ற சண்டையின் போது, விஷ்ணுவின் மனைவி லட்சுமி தலையிட்டு, "ஒரு மனிதன் ஒரு மனைவியை வைத்துக்கொண்டு இன்பம் அனுபவிக்க முடியாதபோது அதிகமான மனைவிகளை வைத்திருத்தல் அவனைப்பற்றி என்னவென்று சொல்வது என்று கணவனை குற்றம் சாட்டி, தீர்வாக, கலைவாணியை சிவனிடம் படுக்கும் படியும், சரஸ்வதியை பிரமாவிடம் படுக்கும் படியும் கூறி சக்களத்தி சண்டைக்கு தீர்வு கண்டாள். ஆதாரம் - தேவிபாகவாத புராணம் 47,49,53.

இப்படி ஆபாச வக்கிரங்களை கொப்பளிக்கும் இந்துமதத்தின் யோக்கியதைகளை திட்டாம வேற என்ன சொல்ல..?

மதம் என்பது மனிதனை ஒருபோதும் அறிவாக சிந்திக்க விடாது. மதம் மனிதனை மூடனாக்கும், முட்டாளக்கும், குருடர்களாக்கும் இந்த பாதிப்பில்தான் மனிதன் அறிவிழந்து மதவெறியோடு வன்முறையில் செயல்பட்டுக்கொண்டிருகிறார்கள்.

மதத்தின் வக்கிரங்களையும், மடத்தனத்தையும்  ஆதாரத்தோடுதான் பதிவிடுகிறேன். இது உண்மை என்று தெரிந்தும், அறிவாக சிந்திக்காமல் ஆபாசமான வார்த்தைகளால் என்னை திட்டி உங்கள் ஆபாச மதத்தை காப்பாற்றிக்கொள்ள பார்க்கிறீர்கள்.

சிந்திப்பதனாலேயே மனிதன் விலங்குகளிடமிருந்து வித்தியாசப்படுகிறான்.
கொஞ்சமாவது மனிதனாக சிந்திக்க பழகுங்கள் நண்பர்களே... ஜெய்பீம் நமோ புத்தாய

சனி, 23 ஜூன், 2018

பாளையங்கோட்டை... பற்றி




பாளையங்கோட்டை... பற்றி

தகவல்-1

முன்பு தனி நகராட்சியாக செயல்பட்டு
வந்த பாளையங்கோட்டை இப்போது
திருநெல்வேலி மாநகராட்சியின்
ஓர் அங்கமாக இருக்கிறது.

இங்கு தான்
கல்விநிறுவனங்களும்
அரசு அலுவலகங்களும்
அமையப்பெற்றுள்ளன.

தாமிரபரணி ஆற்றுக்கு
மேற்குப்பக்கம் திருநெல்வேலி.

கிழக்குப்பக்கம்
பாளையங்கோட்டையின்
பகுதிகளான கொக்கிரகுளமும்
வண்ணார்பேட்டையும்.

மூன்று கலை அறிவியல்
கல்லூரிகள் மாணவர்களுக்கு.

இரண்டு கலை அறிவியல்
கல்லூரிகள் மாணவிகளுக்கு.

அரசு மருத்துவக்கல்லூரி,
அரசு பொறியியல் கல்லூரி,
அரசு சட்டக்கல்லூரி,
அரசு சித்த மருத்துவக்கல்லூரி,
நீதிமன்றங்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மாவட்ட காவல்துறை அலுவலகம்
என்று இவை எல்லாம் உள்ளது  பாளையங்கோட்டையில் தான்.

மத்திய சிறைச்சாலை கூட
பாளையங்கோட்டையில் தான்.

அந்தக்காலத்திலேயே
நிறுவப்பட்ட "சேட்டிலைட் "
நகரப் பகுதிகள்தான்
இன்றைய
பெருமாள்புரமும்
மகராஜநகரும்.

மதுரையில் SS காலனி,
கோவையில் RS புரம் போலத்தான்
பாளையில் இவையிரண்டும்.

திருநெல்வேலியையும்
பாளையங்கோட்டையையும்
இணைப்பது
சுலோச்சன முதலியார் பாலம்.

தாமிரபரணி ஆற்றை அடுத்து
மாவட்ட அறிவியல் மையத்தை
ஒட்டினாற்போல்
சிறிய ஓடை ஒன்று உள்ளது.

இந்த ஓடை அருகிலேயே
ஓடும் ஆற்றில் போய்
கலந்துவிடும்.

1950 களுக்கு முன்பு பிறந்த
பெரியவர்கள் இந்த ஓடைபற்றி
நன்கு அறிவார்கள்.

இந்த ஓடையின் பெயர்
"பிள்ளையைப்போட்டு
பலாப்பழம் எடுத்த ஓடை."

இந்த ஓடையில் ஒரு நாள்
நீர் பெருக்கெடுத்துவருகிறது.

பலமாக வீசிய காற்றில்
பலா மரத்திலிருந்து
இந்த ஓடையில் விழுந்த
பலாப்பழம் ஒன்று நீரினால்
வேகமாக அடித்து வரப்பட்டு
மிதந்து வருகிறது.

கையில் கைக்குழந்தையுடன்
கரையில் நின்றுகொண்டிருந்த
பெண் ஒருத்தி
இதைப்பார்க்கிறாள்.

பலாப்பழத்திற்கு
ஆசைப்படுகிறாள்.

கையிலுள்ள குழத்தையை
கரையோரத்தில் வைத்துவிட்டு
பலாப்பழத்தை எடுக்க
நீரில் பாய்கிறாள்..

பழத்தை பிடித்து கரைக்கு
கொண்டு வருகிறாள்.

இதற்கிடையில் கரையில்
கிடத்தப்பட்ட குழந்தையை
நீரின் வேகம் இழுத்துக்கொண்டு
சென்று விடுகிறது.

பழத்தைப்பிடித்து கரைசேர்த்த
தாயால்  குழந்தையைக்காப்பாற்ற
இயலவில்லை..

இந்த ஓடையைத்தான்
"பிள்ளையைப்போட்டு
பலாப்பழம் எடுத்த ஓடை"
என்று கூறி வந்தனர்.

இப்போதும்
இந்த ஓடை உள்ளது.

தண்ணீர் வருவதுமாதிரி
தெரியவில்லை..

காரணப்பெயரும்
இப்போதைய மக்களுக்கு
தெரியாமல் போய்விட்டது...

--தொடரும்..

*பாளையங்கோட்டை பற்றி.....*

*தகவல்-2*

*அந்தக்காலத்தில்*
*பாளையங்கோட்டையில்*
*"மனோரமா பில்டிங்"* என்பது
பெயர் பெற்ற
*ஒரு பெருங்கட்டிடம்.*

*வ.உ.சி மைதானத்திற்கு*
*தெற்குபக்கம் .....*
இப்போது
எல்ஐசி கிளை அலுவலகம்,
கோட்ட அலுவலகம் மற்றும்
அலுவலர் குடியிருப்பு இருக்கும்
அந்த பெரிய மனையில்
கம்பீரமாக காட்சியளித்த
இரண்டடுக்கு கட்டிடமாக
காண்போர் *கண்கவர்*
*மாளிகையாக* *திகழ்ந்ததுதான்*
*"மனோரமா பில்டிங்"*

*மேற்குப்பக்கம்*
*திருவனந்தபுரம் சாலை* யும்
*கிழக்குப்பக்கம்*
*இக்னேஷியஸ்* *பள்ளி* யும்
இதன் வளாகத்தின்
*எல்லைகளாக இருந்தன.*

"மனோரா பில்டிங்" கின்
பரந்து விரிந்த *வளாகத்தில்*
*வேப்பமரங்களும்*
*புளியமரங்களும்*
நிறைந்திருந்து
*நிழல் கொடுத்துவந்தன.*

அந்த கட்டிடத்தை
வடிவமைத்து படைத்தவர்கள்
*திரு அப்பாசாமிபிள்ளை*
*-திருமதி மனோரமா*
*தம்பதியர்.*

*திருமதி மனோரமா அம்மையார்*
*பெயரைத்தான் இந்த கட்டிடம்*
*தாங்கிநின்றது.*

ஒரு காலகட்டத்தில்
இந்த சொத்தை
*இத் தம்பதியர்*
திருநெல்வேலியிலிருந்து
இயங்கிவந்த
*ஒரு தனியார்*
*ஆயுள் இன்ஷ்யூரன்ஸ்*
*நிறுவனத்திற்கு*
*நன்கொடையாக*
*வழங்கிவிட்டார்களாம்.*

*1956 ஜனவரியில்*
அவசரச்சட்டம்மூலம்
*ஆயுள் காப்பீட்டுத் தொழில்*
*நாட்டுடமையாக்கப்பட்டவுடன்*
*இந்த சொத்து* முழுவதும்
அப்படியே
*எல்ஐசி நிறுவனத்திற்கு*
*கை மாறிப் போனதாம்.*

எல்ஐசி கைக்கு வந்த
சில வருடங்களுக்குப் பின்னர்
எல்ஐசி நிறுவனத்தார்
*மேற்கு பகுதியில்* *தங்களுக்கு*
*கிளை* *அலுவலகக்கட்டிடம்*
கட்டியுள்ளனர்.

கிழக்குப்பகுதியில்
*"மனோரமா பில்டிங்"*
*இரண்டு மாடி கட்டிடமாக*
*ஒரு மாளிகை போல்*
*இருந்திருக்கிறது..*

*1960 களில் எல்லாம்*
*அந்த கட்டிடத்தில் தான்*
*மாவட்ட மைய நூலகம்*
*இயங்கி வந்திருக்கிறது.*

*மாவட்ட மைய நூலகம்*
தூய சவேரியார் கல்லூரிக்கு
எதிரில்  *இடம் மாறிய பிறகு*
"மனோரமா" கட்டிடத்தை
*மாவட்ட கல்வி அலுவலர்*
*அலுவலகத்திற்கு*
*வாடகைக்கு விட்டிருக்கின்றனர்.*

அரசுத்துறை அலுவலகம்
*மிகக்குறைந்த அளவு*
தொகையைத்தான்
*வாடகை* யாக கொடுத்து
வந்திருக்கின்றது.

அதையும் மாதந்தோறும்
*ஒழுங்காக*
*கொடுப்பதில்லை* யாம்.

*கட்டிடமும்*
*பராமரிப்பு இல்லாததால்*
*வலுவிழந்த நிலையில்*
*இருந்திருக்கிறது.*

இதை காரணமாகக்காட்டி
பல வருடங்களுக்குப்பிறகு
எல்ஐசி நிர்வாகம்
கட்டிடத்தை தங்களிடம்
திருப்பி ஒப்படைக்கும்படி
கல்வி அலுவலர்
அலுவலகத்தை
கேட்டுக்கொண்டிருக்கிறது.

அவர்கள் இடம் மாற
எந்த முயற்சியும்
எடுக்கவில்லையாம்.

எல்ஐசி நிர்வாகம்
வழக்குத்தொடுத்ததாம்.

வாதாடிய வழக்குரைஞர்
அலுவலகக் கட்டிடம்
பாதுகாப்பற்ற நிலையில்
உள்ளதாகவும்,
வாடகை கூட மிகக்குறைவாக
கொடுப்பதாகவும்,
அதைக்கூட  ஒழுங்காகக்
கொடுப்பதில்லை என்றும்
வாதாடினாராம்.

இதைக்கேட்ட நீதிமன்றம்
*வாடகையை ஒழுங்காகக்*
*கொடுக்கவேண்டும் என்று*
*தீர்ப்பளித்து வழக்கினை*
*முடித்துவைத்ததாம்.*

அதற்குப் பின்னரும்
மாத வாடகப்பணத்தை
ஆண்டுக்கொருமுறை
கொடுப்பதையே வழக்கமாகக்
தொடர்ந்து கொண்டிருந்தனராம்.

இந்த நேரத்தில்
எல்ஐசி நிறுவனத்தின்
கோட்ட அலுவலகம்
வாடகைக்கட்டிடத்தில்
வண்ணார்பேட்டையில்
இயங்கிவந்திருக்கிறது.

எனவே
*எல்ஐசி நிறுவனம்*
*கோட்ட அலுவலகத்திற்கு*
சொந்த *கட்டிடம் கட்ட*
*இடம் வேண்டும் என*
மாவட்ட கல்வி அலுவலர்
அலுவலகத்திற்கு *ஓலை*
*அனுப்பியிருக்கிறார்கள்.*

கல்வி அலுவலர்
அலுவலக நிர்வாகிகள்
வேறு இடம் பார்க்க
ஏற்பாடு செய்து
வந்திருக்கின்றனர்.

வேறு ஊர்களில் வேலை
பார்க்கும் சில அரசு
ஊழியர்கள் தங்கள்
இருசக்கர வாகனங்களை
இந்த அலுவலக வளாகத்தினுள்
நிறுத்திவிட்டு பாளை
பஸ் நிலையத்திலிருந்து
வேறு ஊர்களுக்கு பஸ்சில்
செல்வார்களாம்.

அவர்கள்  எல்லாம்
ஒன்று சேர்ந்து
தனிப்பட்ட முறையில்
*மாவட்ட அமைச்சரை சந்தித்து*
இடமாற்றத்திற்கு
*தொடர் தடைபோட்டு*
*வந்திருக்கின்றனர்.*

புதிய அலுவலக்கட்டிடம் கட்ட
தங்களுடைய சொந்த இடம்
கிடைப்பதில் எல்ஐசிக்கு
கால தாமதம் ஏற்பட்டிருக்கிறது.

இதனால்
*காலியாக இருந்த*
*குறுகிய இடத்திலேயே*
*மூன்று மாடி யில்*
*கோட்ட அலுவலகம்*
*கட்டிமுடிக்க* திட்டமிட்டு
*கட்டிடப்பணிகளை*
எல்ஐசி நிர்வாகத்தினர்
*தொடங்கினார்களாம்.*

அதன் பிறகு
ஒரு கால கட்டத்தில்
அந்த அரசு அலுவலகமும்
பாதுகாப்பற்ற
அந்த கட்டிடத்தை விட்டு
வெளியேறி  வேறு
இடத்திற்கு  இடம்
மாறியிருக்கின்றனர்.

அதற்குப்பிறகு
*பாதுகாப்பு காரணங்களுக்காக*
*வலுவிழந்து பாழடைந்த*
*"மனோரமா கட்டிடம்"*
இடிக்கப்பட்டு
*தரைமட்டமாக்கப்பட்டதாம்.*

அதற்குப்பின்னர்
அந்த இடத்தில்
எல்ஐசி நிறுவனம்
அலுவலர் குடியிருப்பை
கட்டி முடித்ததாம்..

பெருமை மிகு
*”மனோரமா கட்டிடம்"*
இப்போது
*மறைந்தும் போய்விட்டது.*
*மறந்தும் போய்விட்டது.*

*--தொடரும்*

*பாளையங்கோட்டை பற்றி....*

*தகவல்-3*

பாளையங்கோட்டை
*வ.உ.சி திடல்.*

இது பாளையின்
மிகப்பெரிய அழகு..

*பழமைகளுள் ஒன்று.*
*பெருமைகளுள் ஒன்று.*

வெள்ளைக்காரர்கள்
நம்மை ஆண்ட காலத்தில்
இந்த திடல் இருக்கும் இடம்
*கர்சன் பிரபு பெயரால்*
*அழைக்கப்பட்டு வந்ததாம்.*

*திரு சுப்பிரமணியபிள்ளை அவர்கள்*
பாளையங்கோட்டை
நகர்மன்றத்தின் தலைவராக
செயல்பட்ட *காலத்தில்தான்*
*வ.உ.சி திடல்* என்று
*பெயர் மாற்றம்*
*செய்யப்பட்டதாம்..*

*10-1-1965* அன்று
*பாளையங்கோட்டை*
*நகராட்சியின்*
*நூற்றாண்டுவிழா*
கொண்டாடப்பட்டபோது
வ உ சி திடலின் மேற்குப்பக்கம்
கட்டப்பட்ட கேலரிகளும்
தெற்குப்பக்க கட்டிடம் ஒன்றும்
திறந்து வைக்கப்பட்டன.

அந்ந நேரத்தில்
கிழக்குப்பக்கமாக
மரக்கம்புகளால்
அமைக்கப்பட்டிருந்த
கேலரிகள் சரிந்து விழுந்தன.

பிற்காலத்தில்
கிழக்குப்பக்கத்திலும்
சிமெண்ட் காலரிகள்
கட்டி முடிக்கப்பட்டன.

நாற்றாண்டுவிழா
கொண்டாட்டத்தின்
ஓர் அங்கமாக
*இந்தியா - ஃப்ரான்ஸ்*
*ஆக்கி அணிகளுக்கிடையே*
*ஒரு போட்டி நடத்தப்பட்டது.*

வெற்றி வாகை சூடியது
இந்திய அணி.

*இரண்டு அணி வீரர்களுக்கும்*
*பத்தமடை பட்டுப்பாய்*
*நினைவுப்பரிசாக*
*வழங்கப்பட்டது.*

அப்போதைய
*நகர்மன்றத்தலைவர்*
*திரு மகராஜபிள்ளை.*

*சட்டமன்ற உறுப்பினர்*
*திருமதி இராஜாத்தி*
*குஞ்சிதபாதம் அம்மையார்.*

இந்த திடலில் 1960-70 களில்
"பால்-ஆப்பா நினைவு
ஆக்கி  டோர்ணமென்ட்"
என்ற பெயரில்
*அகில இந்திய அளவில்*
*ஆக்கி போட்டிகள்*
ஆண்டுதோறும்
*நடைபெற்றுவந்தன.*

பாளை நகர இளைஞர்களும்
மாணவச்செல்வங்களும்
ஆர்வத்துடனும்
பேரானந்தத்துடனும்
பார்த்து மகிழ்ந்தனர்.

இந்த திடலில் நடைபெற்ற
ஆக்கி போட்டியில்
*பெங்களூர் MEG அணி,*
சென்னையிலிருந்து
*தெற்குரயில்வே அணி,*
*திருச்சி பொன்மலை அணி,*
கோவில்பட்டி
*லஷ்மி மில் அணி,*
பாளையங்கோட்டை
*வெட்ரன்ஸ் அணி,*
*ஆர்னஸ்ட் அணி,*
சமாதானபுரத்தின்
*சாம்டான் ஸ்போர்ட்ஸ்*
கிளப் அணி,
*யாதவாலெவன் அணி,*
ஜோதிபுரம் அணி,
*சவேரியார்கல்லூரி அணி,*
என்று பல தலை சிறந்த
அணிகள் கலந்து கொண்டு
*விளையாடியிருக்கின்றன.*

மாணவர்கள் இடையில்
ஹாக்கி மீதான ஆர்வத்தை
நன்றாக வளர்த்ததில்
இந்த திடலுக்கு
பெரும்பங்குண்டு.

ஒலிம்பிக் ஆக்கி போட்டியில்
கலந்துகொண்டு
இந்திய அணியில்
விளையாடிய
வீரர்களில் சிலர்
இங்கு நடைபெற்ற
போட்டிகளில் விளையாடி
பாளை ரசிகர்களை
மகிழ்வித்திருக்கின்றனர்.

*ஒலிம்பியன்கள்*
*திரு பீட்டர்,*
*திரு முனீர் சேட்*
போன்றவர்கள்
*குறிப்பிடத்தக்கவர்கள்.*

போட்டி நடைபெறும்
காலங்களில்
ரசிகர்பட்டாளம்
அவர்களையே
சுற்றி சுற்றி வரும்.

உள்ளூர்  அணிகளில்
விளையாடி புகழ் பெற்ற
வீரர்கள் பலர் உண்டு.

ஒரே குடும்பத்தின்
மூன்று சகோதரர்களான
*பால் முஹம்மது,*
*ஷேக் முஹம்மது,*
*ரிஃபாய் முஹம்மது*
சிறந்த வீரர்களாக
மின்னினார்கள்.

மூவரில் கடைசி சகோதரர்
திரு ரிஃபாய் முஹம்மது
மிகச் சிறந்தவீரர்.

எனது வகுப்புத்தோழர்கள்
*திரு குணபாலன்,*
*திரு மனோகரன்*
போன்ற சிறந்தவீரர்கள்
சவேரியார் கல்லூரி அணியில்
இந்த மைதானத்தில்
விளையாடி புகழ்
பெற்றிருக்கிறார்கள்.

திருநெல்வேலி
மருத்துவக்கல்லூரியில்
மருத்துவம் படித்துவந்த
*தெற்கு பஜார்*
*திரு கு.கிருஷ்ணன்*
அவர்கள் சிறந்த
வீரராக பெயரெடுத்தார்.

இளைஞர்களின்
மனங்கவர்ந்த வீரர்களில்
*திரு பென்னி,திரு வசந்த்,*
*திரு குமாரவேல்,*
*திரு ஷேக்மதார்*
*கோல்கீப்பர் சேவியர்*
போன்ற வீரர்கள் உண்டு.

*SGKR* பஸ் கம்பெனி
குடும்பத்து இளவல்
*திரு செந்தில்* என்ற ஒரு
விளையாட்டுவீரரும்
இந்த வ.உ.சி  திடல்
உயர்த்திய பிள்ளைதான்.

*மாவட்ட ஆக்கி*
*பயிற்சியாளரான*
*பெரியவர் ஜார்ஜ்*
*இந்த திடலில்தான்*
*வீரர்களை பயிற்றுவித்தார்.*

பாளை நகர ரசிகர்களால்
போற்றப்படுபவராக
விளங்கினார்.

விளையாட்டிற்கென்று
அரசாங்கத்தால்
அண்ணா ஸ்டேடியம்
என்ற ஒரு திடல் தனியாக
அமைக்கப்பட்ட பிறகு
*வ உ சி திடலில் நடக்கும்*
*விளையாட்டு போட்டிகளும்*
*பிற பயிற்சிகளும்*
*மறைந்துவிட்டன.*

இந்தத்திடலின்
தெற்குப்பகுதியில்
ஓர்  உள்ளரங்கு
விளையாட்டுக்கட்டிடம்
புதிதாகக் கட்டப்பட்டு
வ உ சி திடலுக்கு
பெருமை சேர்த்திருக்கிறது.

ஒவ்வொருவருடமும்
*சுதந்திர நாளிலும்*
*குடியரசுநாளிலும்*
*காவலர்* மற்றும்
*தேசிய மாணவர்படை* யின்
*அணிவகுப்பு* தவறாமல்
*இந்த மைதானத்தில்*
*நடைபெறுவது வழக்கம்.*

இரண்டு முறை
சவேரியார் கல்லூரி
தேசிய மாணவர்படையின்
சீனியர் அண்டர் ஆபீசர்
என்ற நிலையில் நானே
தேசிய மாணவர் படையின்
அணிவகுப்பை முன்னின்று
வழிநடத்தியிருக்கிறேன்.

சில பல நேரங்களில்
நகர்மன்ற நிர்வாகம்
பல எதிர்ப்புக்களையும்
மீறி *விளையாட்டுக்கு*
*சற்றும் தொடர்பில்லாத*
*பல்வேறு  நிகழ்ச்சிகளுக்கு*
*அனுமதி கொடுத்த*
*அவலமும் நடந்ததுண்டு.*

1970 களின் துவக்கத்தில்
இந்த திடலில்
திரு கான் அப்துல்
கபார்கான் மற்றும்
நடிகர் திலகம் சிவாஜி
பங்குகொண்ட
பொதுக்கூட்டங்கள்
நடந்திருக்கின்றன.

அவர்கள் கலந்துகொண்ட
பொதுக் கூட்டத்திற்கு
நான் சென்றது இன்றும்
என் நினைவில்
பசுமையாக உள்ளது.

ஒன்றிரண்டு முறை
*சர்க்கஸ் கூட நடத்த*
*அனுமதித்தார்கள்.*

இதுபோன்ற
பல நிகழ்வுகளால்
*இந்த திடல் மிகவும்*
*சேதப்பட்டுப்போனது.*

பல  பெருமைகளை
தன்னகத்தே வைத்துள்ள
இந்த வ உ சி திடலானது
*இன்று நடைப்பயிற்சி*
*செய்பவர்களுக்கு*
*நல்லதொரு இடம்.*

*குழந்தைகளின்*
*பொழுது போக்கிற்கும்*
*நல்லதொரு களமாக*
*திகழ்ந்து வருகிறது.*

திடலின் சுற்றுச் சுவர்களை
ஒட்டிய பகுதிகளில்
தள்ளு வண்டிகள் மூலம்
நடைபெறும்
தின் பண்டங்களின்
விற்பனை நன்றாகவே
நடந்துகொண்டிருக்கிறது.

*பாளை மக்களின்*
*நெஞ்சில் நீங்காத*
*இடம்பெற்றுள்ள*
*உயிரோட்டமுள்ள*
*ஓர்  அங்கம் தான்*
*வ.உ.சி திடல்.*

இந்த திடலை
*வளர்க்காவிட்டாலும்*
*பரவாயில்லை.*

அதனை சிதைக்காமல்
*பாதுகாக்கவேண்டிய*
*பெரும் பொறுப்பு*
*ஒவ்வொரு*
*பாளையங்கோட்டை*
*இளைஞனுக்கும்*
*நிறையவே உண்டு.*

*---தொடரும்*




*தகவல் -5*

திருநெல்வேலியும்
பாளையங்கோட்டையும்
*இரட்டை நகரங்கள்* என்றாலும்
இரண்டு ஊர்களுக்குமிடையே
*நிறைய வேறுபாடுகள்* உண்டு.

*திருநெல்வேலி* யில்
*சுடுகாடு* இருக்கும் இடத்தின்
பெயர் *கருப்பந்துறை..*

*பாளையங்கோட்டை* யில்
*சுடுகாடு* இருக்கும் இடத்தின்
பெயர் *வெள்ளக்கோயில்.*

*திருநெல்வேலி* யில்
1970க்கு முன்னர்
குடிநீருக்காக
தாமிரபரணி ஆற்றில்
*ஓடும் நீரை* பம்ப் செய்து
குறுக்குத்துறை அருகில்
ஒரு இடத்தில் சேமித்துவைத்து
நகர் முழுதும் *விநியோகம்*
*செய்துவந்தார்கள்.*

*பாளையங்கோட்டை* யில்
நகர மக்களின்
குடிநீர் தேவைக்காக
அருகில் உள்ள
மணப்படைவீடுஎன்ற ஊரில்
*ஆழ்துளைக் கிணறு* போட்டு
தண்ணீரை பம்ப் செய்து
பெரிய குழாய்கள் மூலம்
பாளையங்கோட்டை
சமாதானபுரத்தில் இருக்கும்
வாட்டர்டாங்கில் ஏற்றி
அதிலிருந்து *விநியோகம்*
*செய்தார்கள்..*

*திருநெல்வேலி* யில் தான்
*நிறைய திரையரங்குகள்*
அமைக்கப்பட்டிருந்தன.

1970 வரை *பாளையில்*
*அசோக் டாக்கீஸ்* மட்டுமே.

*திருநெல்வேலி* யில்
*இந்துக்கல்லூரி* மட்டுமே.
1967க்குப்பிறகு தான்
*ராணி அண்ணா*
*மகளிர் கல்லூரி.*

*பாளையங்கோட்டை* யில்
*சவேரியார் கல்லூரி,*
*யோவான் கல்லூரி,*
*சாரா டக்கர் கல்லூரி,*
*அரசு மருத்துவக்கல்லூரி*
என பல கல்விக்கூடங்கள்.

*சதக்கத்துல்லா கல்லூரி,*
*அரசு சித்த மருத்துவக்கல்லூரி,*
*அரசு பொறியியற்கல்லூரி,*
*சாரதா கல்லூரி,*
*அரசு சட்டக்கல்லூரி,*
என பிற்பாடு
பல கல்வி  நிறுவனங்கள் வந்தன.

*பள்ளிப்படிப்பில்*
பல முறை *மாநிலள அளவில்*
*முதலிடம்* பெற்று பெருமை சேர்த்த
மாணவச்செல்வங்கள்
*பாளையங்கோட்டை*
*பள்ளிகளிலிருந்துதான்.*

இதனால் தானோ என்னவோ
*பாளையங்கோட்டை*
*Oxford of South* என்று
*புகழ் பெற்றது.*

பாளையங்கோட்டை
கல்வி நிலையங்களால்
சூழப் பட்டதால்
*தெற்கு வீதியில் மட்டும்*
அந்தோணிஸ்கூல்
சர்ச்சிலிருந்து தொடங்கி
ராமர் கோவில்வரை
*நூறுக்கும் கூடுதலான*
*தையற்கடைகள் இருந்தன.*

இப்போது அவைகள்
குறைந்துவிட்டன.

இரண்டு நகரங்களுக்குமிடையே
*கலாச்சார வேறுபாடுகளும்*
*நிறையவே உண்டு.*

*திருநெல்வேலி ஆசாரம்*
என்று  தங்களை  உயர்த்தியும்
பாளையங்கோட்டைக்காரர்களை
மட்டந்தட்டியும் பேசி
*திருநெல்வேலிக்காரர்கள்*
*மகிழ்ச்சியடைவார்கள்.*

முதலில் மாவட்ட
*அரசு மருத்துவமனை*
பாளைப்பகுதியான
*வண்ணாரப்பேட்டை*
*சாலைத்தெரு* வில்
செயல்பட்டு வந்தது.

மாவட்ட புதிய மருத்துவமனை
ஹைகிரவுண்டில்
செயல்படத் தொடங்கியதும்
*வண்ணாரப்பேட்டை மருத்துவமனை*
*பழைய ஆசுபத்திரி* யாக மாறியது.

*மனோன்மணியம் சுந்தரனார்*
*பல்கலைக்கழகம்*
நிறுவ முடிவுசெய்த போது,
பல்கலைக்கழகத்தை
பாளையில் அமைப்பதற்காக
*சீவலப்பேரி ரோட்டில்*
இடம் எல்லாம் பார்த்து
*கையகப்படுத்தியிருந்தனர்.*

அடுத்து ஏற்பட்ட
*ஆட்சி மாற்றத்தினால்*
*அரசியல் காரணங்களுக்காக*
*நெல்லைப்பகுதிக்கு* புதிய
பல்கலைக்கழகம்
*கடத்திச் செல்லப்பட்டது.*

திருநெல்வேலி
பாளையங்கோட்டை
பகுதிகளில்
*தனியார் மருத்துவமனை*
என்று  தனியார் ஒருவரால்
முதலில் அமைக்கப்பட்டது
*திரு வேலாயுதம்பிள்ளை* அவர்களின்
*மருத்துவமனைதான்.*

இதற்குப்பிறகே மற்ற
மருந்துவமனைகள் வந்தன.

*கண் மருத்துவத்திற்கென்று*
*டாக்டர் போத்திலிங்கம்*
*மருத்துவமனை* தான்
பாளையங்கோட்டையில்
முதன் முதலில் வந்தது.

*திருநெல்வேலியில்*
*ENT க்கு டாக்டர் முத்தையாவும்*
*பல் மருத்துவத்திற்கு*
*டாக்டர் CHEN* என்ற
சைனாக்காரரும்
*சிறந்த நிபுணர்கள்.*

பாளையங்கோட்டை
முருகன் குறிச்சியின்
*ஊசிக் கோபுரம்*
பாளையங்கோட்டையின்
*ஓர் அடையாளச்சின்னம்.*

அந்தக் காலகட்டத்தில்
நூற்றாண்டு மண்டபம்
அருகிலிருந்த
*எட்வர்ட் அன்கோ*
புகழ்பெற்ற ஒரு கடை.

*நூற்றாண்டு மண்டபம் அருகே*
1960 களில் இந்திய முறை
*சித்த மருத்துவ கல்லூரி*
*மற்றும் மருத்துவமனை*
தொடங்கப் பட்டது.

*நூற்றாண்டு மண்டபம்,*
*நேருஜி சிறுவர் அரங்கம்,*
திருச்செந்தூர் சாலையிலிருந்த
*பால் ஆஸ்பத்திரி* போன்றவை
பாளையின் *பெருமைகளில்*
*முக்கியமானவை.*

சீவலப்பேரி சாலையில்
சாந்திநகர் எதிரில்
*பேராசிரியர் ராஜேந்திரன்*
அவர்களின் *பாம்புப்பண்ணை*
அமைந்திருந்தது.

*இப்போது* அங்கு
*அந்த பண்ணை இல்லை*
என்றாலும் அதனை
நினைக்கும்போது
வயிற்றில்
புளியைக்கரைக்கத்தான்
செய்கிறது.

ஒருமுறை
*தமிழ்நாட்டில்*
*சிறுசேமிப்பில்*
*நெல்லை* மாவட்டம்
*முதலிடம் பெற்றது.*

அதற்குக்கிடைத்த
*ஊக்கப்பணத்தில்*
பாளை சாந்திநகரில்
*திம்மராஜபுரம் விலக்கருகில்*
*மணிக்கூண்டு* ஒன்று
நிறுவப்பட்டது.

இப்போது நேரத்தினை
காட்ட *கடிகாரம்* ஏதும்
*இல்லாவிட்டாலும்*
அந்த மணிக்கூண்டு
*பாளையின் அடையாளமாகவே*
திகழ்கிறது.

இப்படி *பழம் பெருமைகளை*
*எப்போது நினைத்துப்பார்த்தாலும்*
*மனம் துள்ளல் போடுகிறது.*

*--தொடரும்*

#பாளையங்கோட்டை பற்றி...

தகவல்-6

அந்தக்கால
பாளையங்கோட்டை..

பாளையங்கோட்டை
வடக்குப்பகுதியில்
மனகாவலம்பிள்ளை
மருத்துவமனை பிரபலம் என்றால்
தென்பகுதியில்
மதர் ஆசுபத்திரி
மிகவும் பிரபலம்.

1960 வரை
குழந்தைகளின் பிறப்பு
ஆயாக்களின் தயவிலும்
வீட்டுப் பெரியவர்களின்
அனுபவங்களின் மூலமும்
அவரவர் இல்லங்களில்
வைத்துதான் நடந்தது.

1960 லிருந்து
விஞ்ஞான முன்னேற்றத்தால்
மகப்பேறு மருத்துவமனைகள்
கொஞ்சம் கொஞ்சமாக
நகர்ப்பகுதிகளில்
முளைக்கத் துவங்கின.

தென்பகுதி மதர் ஆசுபத்திரி
முழுக்கமுழுக்க
இயேசு திருச்சபையின்
வெள்ளைக்கார
அன்னையர்களால்
இலவச சேவையாக
நடத்தப்பட்டுவந்தது.

மகப்பேறுகள் வீட்டிலிருந்து
மருத்துவமனைகளுக்கு
மாறத்தொடங்கின.

மத வேறுபாடின்றி
அனைத்து மதத்துக் குடும்பங்களும்
அந்த வசதியைப்பயன்படுத்த
தொடங்கினர்.

எனக்கு நன்கு தெரிந்த
ஒன்றிரண்டு குடும்பங்களில்
பிரசவம் பார்த்த
வெள்ளைக்கார அன்னையர்கள்
நினைவைப்போற்றும் வண்ணம்
பெண் குழந்தை பிறந்தால்
துரைச்சி என்றும் ஆண்குழந்தை
பிறந்தால் துரைராஜ் எனவும்
தாங்களே மனமுவந்து
பெயரிட்டு நன்றி பாராட்டினர்.

பாளையங்கோட்டை
தெற்குப்பகுதியில்
பல கல்விமனைகளும்
மாணவர் தங்கும் விடுதிகளும்
அமையப்பெற்றிருந்தன.

தூய அந்தோணியார் பள்ளி,
செவன் டாலர்ஸ் பள்ளி,
கிறிஸ்துராஜா பள்ளி,
தூய யோவான் உயர்நிலைப்பள்ளி,
தூய சவேரியார் உயர்நிலைப்பள்ளி,
லயோலா காண்வெண்ட்,
இக்னேஷியஸ் காண்வெண்ட்,
STC உயர்நிலைப்பள்ளி,
தூய சவேரியார் கல்லூரி,
தூய யோவான் கல்லூரி,
தூய சவேரியார் கல்வியியல் கல்லூரி,
சேவியர் ஆஸ்டல்,
பிரிட்டோ ஆஸ்டல்,
தூய இருதய ஆஸ்டல்,
செல்வின் ஆஸ்டல் ,
என மாணவ மாணவியர்களால்
தென்பகுதி மிகவும்
கலகலப்பாகக்காணப்பட்டது.

பெருமாள் புரம் STC கல்லூரி
முருகன்குறிச்சி கதீட்ரல்பள்ளி,
மேரி சார்ஜண்ட் பள்ளி,
பார்வையற்றோர்பள்ளி,
பேசமுடியாதவர் பள்ளி என்றும்
பல வகை கல்விமனைகள்.

இதன் பொருட்டு
பாளையங்கோட்டை ஒரு
கல்வி ஆலயமாக திகழ்ந்து
பெருமை பெற்றது.

திரு வை.கோபால்சாமி,
திரு வலம்புரிஜாண்,
திரு பீட்டர் அல்போன்ஸ்
திரு தளவாய் சுந்தரம்,
திரு தங்கராஜ் பாண்டியன்,
முன்னாள் அமைச்சர்கள்
திரு திருநாவுக்கரசர்,
திரு முத்துசாமி போன்ற
புகழ்பெற்ற பல
அரசியல் கட்சித்தலைவர்களையும்
உருவாக்கி உலகுக்கு அளித்தது
தூய சவேரியார் கல்லூரி.

உச்சமன்ற நீதிபதியாக
உழைப்பால் உயர்ந்த
உச்சநீதிமன்ற  நீதியரசர்
திரு ரத்தினவேல்பாண்டியன் ஐயா
அவர்களை வளர்த்து மகிழ்ந்தது
சவேரியார் கல்லூரியே.

ஆலடி அருணா போன்றோரை
யோவான் கல்லூரி உயர்த்தியது.

இன்னும் எத்தனையோ
விஞ்ஞானிகளையும்
IAS,IPS அலுவலர்களையும்
பாளையங்கோட்டையின்
கல்வி ஆலயங்கள்
உருவாக்கியுள்ளன.

பாளையங்கோட்டை
மத்திய சிறைச்சாலையும்
பெரியதொரு வளாகத்தில்
குலவணிகர புரத்திற்கும்
பெருமாள்புரத்துற்கும்
நடுவே அமைந்துள்ளது.

இதுகூட  ஒரு வகையில்
குற்றவாளிகளைத்திருத்தும்
நல்ல தொரு பள்ளிக்கூடம்தானே..

பாளை வடக்குப்பகுதியில்
காந்தி தினசரி சந்தைக்கு கிழக்கு,
மனகாவலம்பிள்ளை
மருத்துவமனைக்கு மேற்கு,
திருச்செந்தூர் ரோட்டிற்கு தெற்கு,
மனகாவலம்பிள்ளை மருத்துவமனை
ரோட்டிற்கு வடக்கு என்பதை
தனது எல்கையாகக்கொண்ட
"ஜவஹர் திடல் " என்ற
ஒரு பெரிய திடல் உள்ளது

நல்ல பள்ளத்தில்
இந்த திடல் இருந்தது.
சிறு வயதில் அதாவது 1960 களில்
இங்கு ஹாக்கி கூட
விளையாண்டிருக்கிறேன்.

இப்போது பள்ளம் நிரப்பப்பட்டு
ரோடு உயரத்தில்
திடல் உள்ளது.

1960-70 களில்
அரசியல் பொதுக்கூட்டங்கள்
இங்கு தான் நடைபெறும்.

அண்ணா, மொரார்ஜி, கலைஞர்,
எம்ஜியார், சம்பத், நம்பூதிரிபாட் டில்
தொடங்கி தீப்பொறி ஆறுமுகம் வரை
பலர் பேசிய மைதானம் இது.

இன்றும் அரசியல் கூட்டங்கள்
உண்ணாவிரதப போரட்டங்கள்
என்று பல நிகழ்ச்சிகள்
நடைபெற்றுக்கொண்டுதான்
இருக்கின்றன.

லாரி வேன் என நிறுத்தப்பட்டு
மூக்கை மூடவைக்கும்
மூத்திரக்காடாக
சீரழிந்த நிலையில் இருக்கிறது.

வடநாட்டு வீர்ர்களான
கிங்காங், தாராசிங் போன்றோர்
பங்கெடுத்த பல
மல்யுத்தப்போட்டிகள்
இந்த திடலில்
நடைபெற்றிருக்கின்றன.

புகழ்பெற்ற தசரா பண்டிகை
கொண்டாட்டத்தின்போது
ராட்சச ராட்டினம், குடை ராட்டினம்,
மரணக்கிணறு, நாக கன்னிகை,
என பல பொழுதுபோக்கு
கொண்டாட்டங்கள்
இந்த திடலில் தான்
நடைபெற்றிருக்கின்றன.

இந்த திடல் முழுதும்
பல வருடங்களுக்கு முன்
ஒரு தனியாருக்குத்தான்
சொந்தமாக இருந்துள்ளது.

உரிமையாளரான அம்மையார்
காந்திமார்கெட்டிலிருந்து
சமாதானபுரம் வரை
நீண்டிருந்த மொத்த இடத்தையும்
பாளை நகராட்சிக்கு
சில நிபந்தனைகளோடு
எழுதி வைத்தாராம்.

அந்த இடத்தில்
மருத்துவமனை,
பள்ளிக்கூடம்,
விளையாட்டுத்திடல்போன்று
பொதுமக்களுக்கு
பயன் தரக்கூடியவைகளை
ஏற்படத்திக்கொள்ளலாம்,
வேறு எந்த கட்டிடங்களும்
கட்டக்கூடாது என்பது தான்
போடப்பட்ட நிபந்தனைகள்.

வாட்டர்டாங்க் கட்டப்பட்டது.
மருத்துவமனை கட்டப்பட்டது.
முன்னாள் ராணுவவீரர்கள்
நடத்திய பஸ் கம்பெனிக்கு
இடம் ஒதுக்கப்பட்டது.

இந்த தகவல்களை
வயதில் பெரியவர்கள்
பேசிக்கொண்டிருந்போது
ஒட்டுக்கேட்டிருக்கிறேன்.

தசராக் கொண்டாட்டங்களின்போது
தெருச்சண்டை,
வடபகுதி தென்பகுதிச்சண்டை
ஜாதிச் சண்டை என்று
பேச்சில் தொடங்கி
அடிதடியில் வளர்ந்து
கொலை வரை கூட சென்ற
அசம்பாவித சம்பவங்கள்
நடைபெற்றிருக்கின்றன.

தலை நிமிர்த்து
பெருமைப்படக்கூடிய நிகழ்வுகள்
பல நடந்திருந்தாலும்
தலகுனிந்து  வருந்தவேண்டிய
மேற் கூறிய நிகழ்வுகளை
மனதிலிருந்து அகற்றவேண்டும்.

பெருமைப்படக்கூடிய ஊர்தான்
#எங்கள்_பாளையங்கோட்டை.
================#பாளையங்கோட்டை... பற்றி

தகவல்-1

முன்பு தனி நகராட்சியாக செயல்பட்டு
வந்த பாளையங்கோட்டை இப்போது
திருநெல்வேலி மாநகராட்சியின்
ஓர் அங்கமாக இருக்கிறது.

இங்கு தான்
கல்விநிறுவனங்களும்
அரசு அலுவலகங்களும்
அமையப்பெற்றுள்ளன.

தாமிரபரணி ஆற்றுக்கு
மேற்குப்பக்கம் திருநெல்வேலி.

கிழக்குப்பக்கம்
பாளையங்கோட்டையின்
பகுதிகளான கொக்கிரகுளமும்
வண்ணார்பேட்டையும்.

மூன்று கலை அறிவியல்
கல்லூரிகள் மாணவர்களுக்கு.

இரண்டு கலை அறிவியல்
கல்லூரிகள் மாணவிகளுக்கு.

அரசு மருத்துவக்கல்லூரி,
அரசு பொறியியல் கல்லூரி,
அரசு சட்டக்கல்லூரி,
அரசு சித்த மருத்துவக்கல்லூரி,
நீதிமன்றங்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மாவட்ட காவல்துறை அலுவலகம்
என்று இவை எல்லாம் உள்ளது  பாளையங்கோட்டையில் தான்.

மத்திய சிறைச்சாலை கூட
பாளையங்கோட்டையில் தான்.

அந்தக்காலத்திலேயே
நிறுவப்பட்ட "சேட்டிலைட் "
நகரப் பகுதிகள்தான்
இன்றைய
பெருமாள்புரமும்
மகராஜநகரும்.

மதுரையில் SS காலனி,
கோவையில் RS புரம் போலத்தான்
பாளையில் இவையிரண்டும்.

திருநெல்வேலியையும்
பாளையங்கோட்டையையும்
இணைப்பது
சுலோச்சன முதலியார் பாலம்.

தாமிரபரணி ஆற்றை அடுத்து
மாவட்ட அறிவியல் மையத்தை
ஒட்டினாற்போல்
சிறிய ஓடை ஒன்று உள்ளது.

இந்த ஓடை அருகிலேயே
ஓடும் ஆற்றில் போய்
கலந்துவிடும்.

1950 களுக்கு முன்பு பிறந்த
பெரியவர்கள் இந்த ஓடைபற்றி
நன்கு அறிவார்கள்.

இந்த ஓடையின் பெயர்
"பிள்ளையைப்போட்டு
பலாப்பழம் எடுத்த ஓடை."

இந்த ஓடையில் ஒரு நாள்
நீர் பெருக்கெடுத்துவருகிறது.

பலமாக வீசிய காற்றில்
பலா மரத்திலிருந்து
இந்த ஓடையில் விழுந்த
பலாப்பழம் ஒன்று நீரினால்
வேகமாக அடித்து வரப்பட்டு
மிதந்து வருகிறது.

கையில் கைக்குழந்தையுடன்
கரையில் நின்றுகொண்டிருந்த
பெண் ஒருத்தி
இதைப்பார்க்கிறாள்.

பலாப்பழத்திற்கு
ஆசைப்படுகிறாள்.

கையிலுள்ள குழத்தையை
கரையோரத்தில் வைத்துவிட்டு
பலாப்பழத்தை எடுக்க
நீரில் பாய்கிறாள்..

பழத்தை பிடித்து கரைக்கு
கொண்டு வருகிறாள்.

இதற்கிடையில் கரையில்
கிடத்தப்பட்ட குழந்தையை
நீரின் வேகம் இழுத்துக்கொண்டு
சென்று விடுகிறது.

பழத்தைப்பிடித்து கரைசேர்த்த
தாயால்  குழந்தையைக்காப்பாற்ற
இயலவில்லை..

இந்த ஓடையைத்தான்
"பிள்ளையைப்போட்டு
பலாப்பழம் எடுத்த ஓடை"
என்று கூறி வந்தனர்.

இப்போதும்
இந்த ஓடை உள்ளது.

தண்ணீர் வருவதுமாதிரி
தெரியவில்லை..

காரணப்பெயரும்
இப்போதைய மக்களுக்கு
தெரியாமல் போய்விட்டது...

--தொடரும்..

*பாளையங்கோட்டை பற்றி.....*

*தகவல்-2*

*அந்தக்காலத்தில்*
*பாளையங்கோட்டையில்*
*"மனோரமா பில்டிங்"* என்பது
பெயர் பெற்ற
*ஒரு பெருங்கட்டிடம்.*

*வ.உ.சி மைதானத்திற்கு*
*தெற்குபக்கம் .....*
இப்போது
எல்ஐசி கிளை அலுவலகம்,
கோட்ட அலுவலகம் மற்றும்
அலுவலர் குடியிருப்பு இருக்கும்
அந்த பெரிய மனையில்
கம்பீரமாக காட்சியளித்த
இரண்டடுக்கு கட்டிடமாக
காண்போர் *கண்கவர்*
*மாளிகையாக* *திகழ்ந்ததுதான்*
*"மனோரமா பில்டிங்"*

*மேற்குப்பக்கம்*
*திருவனந்தபுரம் சாலை* யும்
*கிழக்குப்பக்கம்*
*இக்னேஷியஸ்* *பள்ளி* யும்
இதன் வளாகத்தின்
*எல்லைகளாக இருந்தன.*

"மனோரா பில்டிங்" கின்
பரந்து விரிந்த *வளாகத்தில்*
*வேப்பமரங்களும்*
*புளியமரங்களும்*
நிறைந்திருந்து
*நிழல் கொடுத்துவந்தன.*

அந்த கட்டிடத்தை
வடிவமைத்து படைத்தவர்கள்
*திரு அப்பாசாமிபிள்ளை*
*-திருமதி மனோரமா*
*தம்பதியர்.*

*திருமதி மனோரமா அம்மையார்*
*பெயரைத்தான் இந்த கட்டிடம்*
*தாங்கிநின்றது.*

ஒரு காலகட்டத்தில்
இந்த சொத்தை
*இத் தம்பதியர்*
திருநெல்வேலியிலிருந்து
இயங்கிவந்த
*ஒரு தனியார்*
*ஆயுள் இன்ஷ்யூரன்ஸ்*
*நிறுவனத்திற்கு*
*நன்கொடையாக*
*வழங்கிவிட்டார்களாம்.*

*1956 ஜனவரியில்*
அவசரச்சட்டம்மூலம்
*ஆயுள் காப்பீட்டுத் தொழில்*
*நாட்டுடமையாக்கப்பட்டவுடன்*
*இந்த சொத்து* முழுவதும்
அப்படியே
*எல்ஐசி நிறுவனத்திற்கு*
*கை மாறிப் போனதாம்.*

எல்ஐசி கைக்கு வந்த
சில வருடங்களுக்குப் பின்னர்
எல்ஐசி நிறுவனத்தார்
*மேற்கு பகுதியில்* *தங்களுக்கு*
*கிளை* *அலுவலகக்கட்டிடம்*
கட்டியுள்ளனர்.

கிழக்குப்பகுதியில்
*"மனோரமா பில்டிங்"*
*இரண்டு மாடி கட்டிடமாக*
*ஒரு மாளிகை போல்*
*இருந்திருக்கிறது..*

*1960 களில் எல்லாம்*
*அந்த கட்டிடத்தில் தான்*
*மாவட்ட மைய நூலகம்*
*இயங்கி வந்திருக்கிறது.*

*மாவட்ட மைய நூலகம்*
தூய சவேரியார் கல்லூரிக்கு
எதிரில்  *இடம் மாறிய பிறகு*
"மனோரமா" கட்டிடத்தை
*மாவட்ட கல்வி அலுவலர்*
*அலுவலகத்திற்கு*
*வாடகைக்கு விட்டிருக்கின்றனர்.*

அரசுத்துறை அலுவலகம்
*மிகக்குறைந்த அளவு*
தொகையைத்தான்
*வாடகை* யாக கொடுத்து
வந்திருக்கின்றது.

அதையும் மாதந்தோறும்
*ஒழுங்காக*
*கொடுப்பதில்லை* யாம்.

*கட்டிடமும்*
*பராமரிப்பு இல்லாததால்*
*வலுவிழந்த நிலையில்*
*இருந்திருக்கிறது.*

இதை காரணமாகக்காட்டி
பல வருடங்களுக்குப்பிறகு
எல்ஐசி நிர்வாகம்
கட்டிடத்தை தங்களிடம்
திருப்பி ஒப்படைக்கும்படி
கல்வி அலுவலர்
அலுவலகத்தை
கேட்டுக்கொண்டிருக்கிறது.

அவர்கள் இடம் மாற
எந்த முயற்சியும்
எடுக்கவில்லையாம்.

எல்ஐசி நிர்வாகம்
வழக்குத்தொடுத்ததாம்.

வாதாடிய வழக்குரைஞர்
அலுவலகக் கட்டிடம்
பாதுகாப்பற்ற நிலையில்
உள்ளதாகவும்,
வாடகை கூட மிகக்குறைவாக
கொடுப்பதாகவும்,
அதைக்கூட  ஒழுங்காகக்
கொடுப்பதில்லை என்றும்
வாதாடினாராம்.

இதைக்கேட்ட நீதிமன்றம்
*வாடகையை ஒழுங்காகக்*
*கொடுக்கவேண்டும் என்று*
*தீர்ப்பளித்து வழக்கினை*
*முடித்துவைத்ததாம்.*

அதற்குப் பின்னரும்
மாத வாடகப்பணத்தை
ஆண்டுக்கொருமுறை
கொடுப்பதையே வழக்கமாகக்
தொடர்ந்து கொண்டிருந்தனராம்.

இந்த நேரத்தில்
எல்ஐசி நிறுவனத்தின்
கோட்ட அலுவலகம்
வாடகைக்கட்டிடத்தில்
வண்ணார்பேட்டையில்
இயங்கிவந்திருக்கிறது.

எனவே
*எல்ஐசி நிறுவனம்*
*கோட்ட அலுவலகத்திற்கு*
சொந்த *கட்டிடம் கட்ட*
*இடம் வேண்டும் என*
மாவட்ட கல்வி அலுவலர்
அலுவலகத்திற்கு *ஓலை*
*அனுப்பியிருக்கிறார்கள்.*

கல்வி அலுவலர்
அலுவலக நிர்வாகிகள்
வேறு இடம் பார்க்க
ஏற்பாடு செய்து
வந்திருக்கின்றனர்.

வேறு ஊர்களில் வேலை
பார்க்கும் சில அரசு
ஊழியர்கள் தங்கள்
இருசக்கர வாகனங்களை
இந்த அலுவலக வளாகத்தினுள்
நிறுத்திவிட்டு பாளை
பஸ் நிலையத்திலிருந்து
வேறு ஊர்களுக்கு பஸ்சில்
செல்வார்களாம்.

அவர்கள்  எல்லாம்
ஒன்று சேர்ந்து
தனிப்பட்ட முறையில்
*மாவட்ட அமைச்சரை சந்தித்து*
இடமாற்றத்திற்கு
*தொடர் தடைபோட்டு*
*வந்திருக்கின்றனர்.*

புதிய அலுவலக்கட்டிடம் கட்ட
தங்களுடைய சொந்த இடம்
கிடைப்பதில் எல்ஐசிக்கு
கால தாமதம் ஏற்பட்டிருக்கிறது.

இதனால்
*காலியாக இருந்த*
*குறுகிய இடத்திலேயே*
*மூன்று மாடி யில்*
*கோட்ட அலுவலகம்*
*கட்டிமுடிக்க* திட்டமிட்டு
*கட்டிடப்பணிகளை*
எல்ஐசி நிர்வாகத்தினர்
*தொடங்கினார்களாம்.*

அதன் பிறகு
ஒரு கால கட்டத்தில்
அந்த அரசு அலுவலகமும்
பாதுகாப்பற்ற
அந்த கட்டிடத்தை விட்டு
வெளியேறி  வேறு
இடத்திற்கு  இடம்
மாறியிருக்கின்றனர்.

அதற்குப்பிறகு
*பாதுகாப்பு காரணங்களுக்காக*
*வலுவிழந்து பாழடைந்த*
*"மனோரமா கட்டிடம்"*
இடிக்கப்பட்டு
*தரைமட்டமாக்கப்பட்டதாம்.*

அதற்குப்பின்னர்
அந்த இடத்தில்
எல்ஐசி நிறுவனம்
அலுவலர் குடியிருப்பை
கட்டி முடித்ததாம்..

பெருமை மிகு
*”மனோரமா கட்டிடம்"*
இப்போது
*மறைந்தும் போய்விட்டது.*
*மறந்தும் போய்விட்டது.*

*--தொடரும்*

*பாளையங்கோட்டை பற்றி....*

*தகவல்-3*

பாளையங்கோட்டை
*வ.உ.சி திடல்.*

இது பாளையின்
மிகப்பெரிய அழகு..

*பழமைகளுள் ஒன்று.*
*பெருமைகளுள் ஒன்று.*

வெள்ளைக்காரர்கள்
நம்மை ஆண்ட காலத்தில்
இந்த திடல் இருக்கும் இடம்
*கர்சன் பிரபு பெயரால்*
*அழைக்கப்பட்டு வந்ததாம்.*

*திரு சுப்பிரமணியபிள்ளை அவர்கள்*
பாளையங்கோட்டை
நகர்மன்றத்தின் தலைவராக
செயல்பட்ட *காலத்தில்தான்*
*வ.உ.சி திடல்* என்று
*பெயர் மாற்றம்*
*செய்யப்பட்டதாம்..*

*10-1-1965* அன்று
*பாளையங்கோட்டை*
*நகராட்சியின்*
*நூற்றாண்டுவிழா*
கொண்டாடப்பட்டபோது
வ உ சி திடலின் மேற்குப்பக்கம்
கட்டப்பட்ட கேலரிகளும்
தெற்குப்பக்க கட்டிடம் ஒன்றும்
திறந்து வைக்கப்பட்டன.

அந்ந நேரத்தில்
கிழக்குப்பக்கமாக
மரக்கம்புகளால்
அமைக்கப்பட்டிருந்த
கேலரிகள் சரிந்து விழுந்தன.

பிற்காலத்தில்
கிழக்குப்பக்கத்திலும்
சிமெண்ட் காலரிகள்
கட்டி முடிக்கப்பட்டன.

நாற்றாண்டுவிழா
கொண்டாட்டத்தின்
ஓர் அங்கமாக
*இந்தியா - ஃப்ரான்ஸ்*
*ஆக்கி அணிகளுக்கிடையே*
*ஒரு போட்டி நடத்தப்பட்டது.*

வெற்றி வாகை சூடியது
இந்திய அணி.

*இரண்டு அணி வீரர்களுக்கும்*
*பத்தமடை பட்டுப்பாய்*
*நினைவுப்பரிசாக*
*வழங்கப்பட்டது.*

அப்போதைய
*நகர்மன்றத்தலைவர்*
*திரு மகராஜபிள்ளை.*

*சட்டமன்ற உறுப்பினர்*
*திருமதி இராஜாத்தி*
*குஞ்சிதபாதம் அம்மையார்.*

இந்த திடலில் 1960-70 களில்
"பால்-ஆப்பா நினைவு
ஆக்கி  டோர்ணமென்ட்"
என்ற பெயரில்
*அகில இந்திய அளவில்*
*ஆக்கி போட்டிகள்*
ஆண்டுதோறும்
*நடைபெற்றுவந்தன.*

பாளை நகர இளைஞர்களும்
மாணவச்செல்வங்களும்
ஆர்வத்துடனும்
பேரானந்தத்துடனும்
பார்த்து மகிழ்ந்தனர்.

இந்த திடலில் நடைபெற்ற
ஆக்கி போட்டியில்
*பெங்களூர் MEG அணி,*
சென்னையிலிருந்து
*தெற்குரயில்வே அணி,*
*திருச்சி பொன்மலை அணி,*
கோவில்பட்டி
*லஷ்மி மில் அணி,*
பாளையங்கோட்டை
*வெட்ரன்ஸ் அணி,*
*ஆர்னஸ்ட் அணி,*
சமாதானபுரத்தின்
*சாம்டான் ஸ்போர்ட்ஸ்*
கிளப் அணி,
*யாதவாலெவன் அணி,*
ஜோதிபுரம் அணி,
*சவேரியார்கல்லூரி அணி,*
என்று பல தலை சிறந்த
அணிகள் கலந்து கொண்டு
*விளையாடியிருக்கின்றன.*

மாணவர்கள் இடையில்
ஹாக்கி மீதான ஆர்வத்தை
நன்றாக வளர்த்ததில்
இந்த திடலுக்கு
பெரும்பங்குண்டு.

ஒலிம்பிக் ஆக்கி போட்டியில்
கலந்துகொண்டு
இந்திய அணியில்
விளையாடிய
வீரர்களில் சிலர்
இங்கு நடைபெற்ற
போட்டிகளில் விளையாடி
பாளை ரசிகர்களை
மகிழ்வித்திருக்கின்றனர்.

*ஒலிம்பியன்கள்*
*திரு பீட்டர்,*
*திரு முனீர் சேட்*
போன்றவர்கள்
*குறிப்பிடத்தக்கவர்கள்.*

போட்டி நடைபெறும்
காலங்களில்
ரசிகர்பட்டாளம்
அவர்களையே
சுற்றி சுற்றி வரும்.

உள்ளூர்  அணிகளில்
விளையாடி புகழ் பெற்ற
வீரர்கள் பலர் உண்டு.

ஒரே குடும்பத்தின்
மூன்று சகோதரர்களான
*பால் முஹம்மது,*
*ஷேக் முஹம்மது,*
*ரிஃபாய் முஹம்மது*
சிறந்த வீரர்களாக
மின்னினார்கள்.

மூவரில் கடைசி சகோதரர்
திரு ரிஃபாய் முஹம்மது
மிகச் சிறந்தவீரர்.

எனது வகுப்புத்தோழர்கள்
*திரு குணபாலன்,*
*திரு மனோகரன்*
போன்ற சிறந்தவீரர்கள்
சவேரியார் கல்லூரி அணியில்
இந்த மைதானத்தில்
விளையாடி புகழ்
பெற்றிருக்கிறார்கள்.

திருநெல்வேலி
மருத்துவக்கல்லூரியில்
மருத்துவம் படித்துவந்த
*தெற்கு பஜார்*
*திரு கு.கிருஷ்ணன்*
அவர்கள் சிறந்த
வீரராக பெயரெடுத்தார்.

இளைஞர்களின்
மனங்கவர்ந்த வீரர்களில்
*திரு பென்னி,திரு வசந்த்,*
*திரு குமாரவேல்,*
*திரு ஷேக்மதார்*
*கோல்கீப்பர் சேவியர்*
போன்ற வீரர்கள் உண்டு.

*SGKR* பஸ் கம்பெனி
குடும்பத்து இளவல்
*திரு செந்தில்* என்ற ஒரு
விளையாட்டுவீரரும்
இந்த வ.உ.சி  திடல்
உயர்த்திய பிள்ளைதான்.

*மாவட்ட ஆக்கி*
*பயிற்சியாளரான*
*பெரியவர் ஜார்ஜ்*
*இந்த திடலில்தான்*
*வீரர்களை பயிற்றுவித்தார்.*

பாளை நகர ரசிகர்களால்
போற்றப்படுபவராக
விளங்கினார்.

விளையாட்டிற்கென்று
அரசாங்கத்தால்
அண்ணா ஸ்டேடியம்
என்ற ஒரு திடல் தனியாக
அமைக்கப்பட்ட பிறகு
*வ உ சி திடலில் நடக்கும்*
*விளையாட்டு போட்டிகளும்*
*பிற பயிற்சிகளும்*
*மறைந்துவிட்டன.*

இந்தத்திடலின்
தெற்குப்பகுதியில்
ஓர்  உள்ளரங்கு
விளையாட்டுக்கட்டிடம்
புதிதாகக் கட்டப்பட்டு
வ உ சி திடலுக்கு
பெருமை சேர்த்திருக்கிறது.

ஒவ்வொருவருடமும்
*சுதந்திர நாளிலும்*
*குடியரசுநாளிலும்*
*காவலர்* மற்றும்
*தேசிய மாணவர்படை* யின்
*அணிவகுப்பு* தவறாமல்
*இந்த மைதானத்தில்*
*நடைபெறுவது வழக்கம்.*

இரண்டு முறை
சவேரியார் கல்லூரி
தேசிய மாணவர்படையின்
சீனியர் அண்டர் ஆபீசர்
என்ற நிலையில் நானே
தேசிய மாணவர் படையின்
அணிவகுப்பை முன்னின்று
வழிநடத்தியிருக்கிறேன்.

சில பல நேரங்களில்
நகர்மன்ற நிர்வாகம்
பல எதிர்ப்புக்களையும்
மீறி *விளையாட்டுக்கு*
*சற்றும் தொடர்பில்லாத*
*பல்வேறு  நிகழ்ச்சிகளுக்கு*
*அனுமதி கொடுத்த*
*அவலமும் நடந்ததுண்டு.*

1970 களின் துவக்கத்தில்
இந்த திடலில்
திரு கான் அப்துல்
கபார்கான் மற்றும்
நடிகர் திலகம் சிவாஜி
பங்குகொண்ட
பொதுக்கூட்டங்கள்
நடந்திருக்கின்றன.

அவர்கள் கலந்துகொண்ட
பொதுக் கூட்டத்திற்கு
நான் சென்றது இன்றும்
என் நினைவில்
பசுமையாக உள்ளது.

ஒன்றிரண்டு முறை
*சர்க்கஸ் கூட நடத்த*
*அனுமதித்தார்கள்.*

இதுபோன்ற
பல நிகழ்வுகளால்
*இந்த திடல் மிகவும்*
*சேதப்பட்டுப்போனது.*

பல  பெருமைகளை
தன்னகத்தே வைத்துள்ள
இந்த வ உ சி திடலானது
*இன்று நடைப்பயிற்சி*
*செய்பவர்களுக்கு*
*நல்லதொரு இடம்.*

*குழந்தைகளின்*
*பொழுது போக்கிற்கும்*
*நல்லதொரு களமாக*
*திகழ்ந்து வருகிறது.*

திடலின் சுற்றுச் சுவர்களை
ஒட்டிய பகுதிகளில்
தள்ளு வண்டிகள் மூலம்
நடைபெறும்
தின் பண்டங்களின்
விற்பனை நன்றாகவே
நடந்துகொண்டிருக்கிறது.

*பாளை மக்களின்*
*நெஞ்சில் நீங்காத*
*இடம்பெற்றுள்ள*
*உயிரோட்டமுள்ள*
*ஓர்  அங்கம் தான்*
*வ.உ.சி திடல்.*

இந்த திடலை
*வளர்க்காவிட்டாலும்*
*பரவாயில்லை.*

அதனை சிதைக்காமல்
*பாதுகாக்கவேண்டிய*
*பெரும் பொறுப்பு*
*ஒவ்வொரு*
*பாளையங்கோட்டை*
*இளைஞனுக்கும்*
*நிறையவே உண்டு.*

*---தொடரும்*




*தகவல் -5*

திருநெல்வேலியும்
பாளையங்கோட்டையும்
*இரட்டை நகரங்கள்* என்றாலும்
இரண்டு ஊர்களுக்குமிடையே
*நிறைய வேறுபாடுகள்* உண்டு.

*திருநெல்வேலி* யில்
*சுடுகாடு* இருக்கும் இடத்தின்
பெயர் *கருப்பந்துறை..*

*பாளையங்கோட்டை* யில்
*சுடுகாடு* இருக்கும் இடத்தின்
பெயர் *வெள்ளக்கோயில்.*

*திருநெல்வேலி* யில்
1970க்கு முன்னர்
குடிநீருக்காக
தாமிரபரணி ஆற்றில்
*ஓடும் நீரை* பம்ப் செய்து
குறுக்குத்துறை அருகில்
ஒரு இடத்தில் சேமித்துவைத்து
நகர் முழுதும் *விநியோகம்*
*செய்துவந்தார்கள்.*

*பாளையங்கோட்டை* யில்
நகர மக்களின்
குடிநீர் தேவைக்காக
அருகில் உள்ள
மணப்படைவீடுஎன்ற ஊரில்
*ஆழ்துளைக் கிணறு* போட்டு
தண்ணீரை பம்ப் செய்து
பெரிய குழாய்கள் மூலம்
பாளையங்கோட்டை
சமாதானபுரத்தில் இருக்கும்
வாட்டர்டாங்கில் ஏற்றி
அதிலிருந்து *விநியோகம்*
*செய்தார்கள்..*

*திருநெல்வேலி* யில் தான்
*நிறைய திரையரங்குகள்*
அமைக்கப்பட்டிருந்தன.

1970 வரை *பாளையில்*
*அசோக் டாக்கீஸ்* மட்டுமே.

*திருநெல்வேலி* யில்
*இந்துக்கல்லூரி* மட்டுமே.
1967க்குப்பிறகு தான்
*ராணி அண்ணா*
*மகளிர் கல்லூரி.*

*பாளையங்கோட்டை* யில்
*சவேரியார் கல்லூரி,*
*யோவான் கல்லூரி,*
*சாரா டக்கர் கல்லூரி,*
*அரசு மருத்துவக்கல்லூரி*
என பல கல்விக்கூடங்கள்.

*சதக்கத்துல்லா கல்லூரி,*
*அரசு சித்த மருத்துவக்கல்லூரி,*
*அரசு பொறியியற்கல்லூரி,*
*சாரதா கல்லூரி,*
*அரசு சட்டக்கல்லூரி,*
என பிற்பாடு
பல கல்வி  நிறுவனங்கள் வந்தன.

*பள்ளிப்படிப்பில்*
பல முறை *மாநிலள அளவில்*
*முதலிடம்* பெற்று பெருமை சேர்த்த
மாணவச்செல்வங்கள்
*பாளையங்கோட்டை*
*பள்ளிகளிலிருந்துதான்.*

இதனால் தானோ என்னவோ
*பாளையங்கோட்டை*
*Oxford of South* என்று
*புகழ் பெற்றது.*

பாளையங்கோட்டை
கல்வி நிலையங்களால்
சூழப் பட்டதால்
*தெற்கு வீதியில் மட்டும்*
அந்தோணிஸ்கூல்
சர்ச்சிலிருந்து தொடங்கி
ராமர் கோவில்வரை
*நூறுக்கும் கூடுதலான*
*தையற்கடைகள் இருந்தன.*

இப்போது அவைகள்
குறைந்துவிட்டன.

இரண்டு நகரங்களுக்குமிடையே
*கலாச்சார வேறுபாடுகளும்*
*நிறையவே உண்டு.*

*திருநெல்வேலி ஆசாரம்*
என்று  தங்களை  உயர்த்தியும்
பாளையங்கோட்டைக்காரர்களை
மட்டந்தட்டியும் பேசி
*திருநெல்வேலிக்காரர்கள்*
*மகிழ்ச்சியடைவார்கள்.*

முதலில் மாவட்ட
*அரசு மருத்துவமனை*
பாளைப்பகுதியான
*வண்ணாரப்பேட்டை*
*சாலைத்தெரு* வில்
செயல்பட்டு வந்தது.

மாவட்ட புதிய மருத்துவமனை
ஹைகிரவுண்டில்
செயல்படத் தொடங்கியதும்
*வண்ணாரப்பேட்டை மருத்துவமனை*
*பழைய ஆசுபத்திரி* யாக மாறியது.

*மனோன்மணியம் சுந்தரனார்*
*பல்கலைக்கழகம்*
நிறுவ முடிவுசெய்த போது,
பல்கலைக்கழகத்தை
பாளையில் அமைப்பதற்காக
*சீவலப்பேரி ரோட்டில்*
இடம் எல்லாம் பார்த்து
*கையகப்படுத்தியிருந்தனர்.*

அடுத்து ஏற்பட்ட
*ஆட்சி மாற்றத்தினால்*
*அரசியல் காரணங்களுக்காக*
*நெல்லைப்பகுதிக்கு* புதிய
பல்கலைக்கழகம்
*கடத்திச் செல்லப்பட்டது.*

திருநெல்வேலி
பாளையங்கோட்டை
பகுதிகளில்
*தனியார் மருத்துவமனை*
என்று  தனியார் ஒருவரால்
முதலில் அமைக்கப்பட்டது
*திரு வேலாயுதம்பிள்ளை* அவர்களின்
*மருத்துவமனைதான்.*

இதற்குப்பிறகே மற்ற
மருந்துவமனைகள் வந்தன.

*கண் மருத்துவத்திற்கென்று*
*டாக்டர் போத்திலிங்கம்*
*மருத்துவமனை* தான்
பாளையங்கோட்டையில்
முதன் முதலில் வந்தது.

*திருநெல்வேலியில்*
*ENT க்கு டாக்டர் முத்தையாவும்*
*பல் மருத்துவத்திற்கு*
*டாக்டர் CHEN* என்ற
சைனாக்காரரும்
*சிறந்த நிபுணர்கள்.*

பாளையங்கோட்டை
முருகன் குறிச்சியின்
*ஊசிக் கோபுரம்*
பாளையங்கோட்டையின்
*ஓர் அடையாளச்சின்னம்.*

அந்தக் காலகட்டத்தில்
நூற்றாண்டு மண்டபம்
அருகிலிருந்த
*எட்வர்ட் அன்கோ*
புகழ்பெற்ற ஒரு கடை.

*நூற்றாண்டு மண்டபம் அருகே*
1960 களில் இந்திய முறை
*சித்த மருத்துவ கல்லூரி*
*மற்றும் மருத்துவமனை*
தொடங்கப் பட்டது.

*நூற்றாண்டு மண்டபம்,*
*நேருஜி சிறுவர் அரங்கம்,*
திருச்செந்தூர் சாலையிலிருந்த
*பால் ஆஸ்பத்திரி* போன்றவை
பாளையின் *பெருமைகளில்*
*முக்கியமானவை.*

சீவலப்பேரி சாலையில்
சாந்திநகர் எதிரில்
*பேராசிரியர் ராஜேந்திரன்*
அவர்களின் *பாம்புப்பண்ணை*
அமைந்திருந்தது.

*இப்போது* அங்கு
*அந்த பண்ணை இல்லை*
என்றாலும் அதனை
நினைக்கும்போது
வயிற்றில்
புளியைக்கரைக்கத்தான்
செய்கிறது.

ஒருமுறை
*தமிழ்நாட்டில்*
*சிறுசேமிப்பில்*
*நெல்லை* மாவட்டம்
*முதலிடம் பெற்றது.*

அதற்குக்கிடைத்த
*ஊக்கப்பணத்தில்*
பாளை சாந்திநகரில்
*திம்மராஜபுரம் விலக்கருகில்*
*மணிக்கூண்டு* ஒன்று
நிறுவப்பட்டது.

இப்போது நேரத்தினை
காட்ட *கடிகாரம்* ஏதும்
*இல்லாவிட்டாலும்*
அந்த மணிக்கூண்டு
*பாளையின் அடையாளமாகவே*
திகழ்கிறது.

இப்படி *பழம் பெருமைகளை*
*எப்போது நினைத்துப்பார்த்தாலும்*
*மனம் துள்ளல் போடுகிறது.*

*--தொடரும்*

#பாளையங்கோட்டை பற்றி...

தகவல்-6

அந்தக்கால
பாளையங்கோட்டை..

பாளையங்கோட்டை
வடக்குப்பகுதியில்
மனகாவலம்பிள்ளை
மருத்துவமனை பிரபலம் என்றால்
தென்பகுதியில்
மதர் ஆசுபத்திரி
மிகவும் பிரபலம்.

1960 வரை
குழந்தைகளின் பிறப்பு
ஆயாக்களின் தயவிலும்
வீட்டுப் பெரியவர்களின்
அனுபவங்களின் மூலமும்
அவரவர் இல்லங்களில்
வைத்துதான் நடந்தது.

1960 லிருந்து
விஞ்ஞான முன்னேற்றத்தால்
மகப்பேறு மருத்துவமனைகள்
கொஞ்சம் கொஞ்சமாக
நகர்ப்பகுதிகளில்
முளைக்கத் துவங்கின.

தென்பகுதி மதர் ஆசுபத்திரி
முழுக்கமுழுக்க
இயேசு திருச்சபையின்
வெள்ளைக்கார
அன்னையர்களால்
இலவச சேவையாக
நடத்தப்பட்டுவந்தது.

மகப்பேறுகள் வீட்டிலிருந்து
மருத்துவமனைகளுக்கு
மாறத்தொடங்கின.

மத வேறுபாடின்றி
அனைத்து மதத்துக் குடும்பங்களும்
அந்த வசதியைப்பயன்படுத்த
தொடங்கினர்.

எனக்கு நன்கு தெரிந்த
ஒன்றிரண்டு குடும்பங்களில்
பிரசவம் பார்த்த
வெள்ளைக்கார அன்னையர்கள்
நினைவைப்போற்றும் வண்ணம்
பெண் குழந்தை பிறந்தால்
துரைச்சி என்றும் ஆண்குழந்தை
பிறந்தால் துரைராஜ் எனவும்
தாங்களே மனமுவந்து
பெயரிட்டு நன்றி பாராட்டினர்.

பாளையங்கோட்டை
தெற்குப்பகுதியில்
பல கல்விமனைகளும்
மாணவர் தங்கும் விடுதிகளும்
அமையப்பெற்றிருந்தன.

தூய அந்தோணியார் பள்ளி,
செவன் டாலர்ஸ் பள்ளி,
கிறிஸ்துராஜா பள்ளி,
தூய யோவான் உயர்நிலைப்பள்ளி,
தூய சவேரியார் உயர்நிலைப்பள்ளி,
லயோலா காண்வெண்ட்,
இக்னேஷியஸ் காண்வெண்ட்,
STC உயர்நிலைப்பள்ளி,
தூய சவேரியார் கல்லூரி,
தூய யோவான் கல்லூரி,
தூய சவேரியார் கல்வியியல் கல்லூரி,
சேவியர் ஆஸ்டல்,
பிரிட்டோ ஆஸ்டல்,
தூய இருதய ஆஸ்டல்,
செல்வின் ஆஸ்டல் ,
என மாணவ மாணவியர்களால்
தென்பகுதி மிகவும்
கலகலப்பாகக்காணப்பட்டது.

பெருமாள் புரம் STC கல்லூரி
முருகன்குறிச்சி கதீட்ரல்பள்ளி,
மேரி சார்ஜண்ட் பள்ளி,
பார்வையற்றோர்பள்ளி,
பேசமுடியாதவர் பள்ளி என்றும்
பல வகை கல்விமனைகள்.

இதன் பொருட்டு
பாளையங்கோட்டை ஒரு
கல்வி ஆலயமாக திகழ்ந்து
பெருமை பெற்றது.

திரு வை.கோபால்சாமி,
திரு வலம்புரிஜாண்,
திரு பீட்டர் அல்போன்ஸ்
திரு தளவாய் சுந்தரம்,
திரு தங்கராஜ் பாண்டியன்,
முன்னாள் அமைச்சர்கள்
திரு திருநாவுக்கரசர்,
திரு முத்துசாமி போன்ற
புகழ்பெற்ற பல
அரசியல் கட்சித்தலைவர்களையும்
உருவாக்கி உலகுக்கு அளித்தது
தூய சவேரியார் கல்லூரி.

உச்சமன்ற நீதிபதியாக
உழைப்பால் உயர்ந்த
உச்சநீதிமன்ற  நீதியரசர்
திரு ரத்தினவேல்பாண்டியன் ஐயா
அவர்களை வளர்த்து மகிழ்ந்தது
சவேரியார் கல்லூரியே.

ஆலடி அருணா போன்றோரை
யோவான் கல்லூரி உயர்த்தியது.

இன்னும் எத்தனையோ
விஞ்ஞானிகளையும்
IAS,IPS அலுவலர்களையும்
பாளையங்கோட்டையின்
கல்வி ஆலயங்கள்
உருவாக்கியுள்ளன.

பாளையங்கோட்டை
மத்திய சிறைச்சாலையும்
பெரியதொரு வளாகத்தில்
குலவணிகர புரத்திற்கும்
பெருமாள்புரத்துற்கும்
நடுவே அமைந்துள்ளது.

இதுகூட  ஒரு வகையில்
குற்றவாளிகளைத்திருத்தும்
நல்ல தொரு பள்ளிக்கூடம்தானே..

பாளை வடக்குப்பகுதியில்
காந்தி தினசரி சந்தைக்கு கிழக்கு,
மனகாவலம்பிள்ளை
மருத்துவமனைக்கு மேற்கு,
திருச்செந்தூர் ரோட்டிற்கு தெற்கு,
மனகாவலம்பிள்ளை மருத்துவமனை
ரோட்டிற்கு வடக்கு என்பதை
தனது எல்கையாகக்கொண்ட
"ஜவஹர் திடல் " என்ற
ஒரு பெரிய திடல் உள்ளது

நல்ல பள்ளத்தில்
இந்த திடல் இருந்தது.
சிறு வயதில் அதாவது 1960 களில்
இங்கு ஹாக்கி கூட
விளையாண்டிருக்கிறேன்.

இப்போது பள்ளம் நிரப்பப்பட்டு
ரோடு உயரத்தில்
திடல் உள்ளது.

1960-70 களில்
அரசியல் பொதுக்கூட்டங்கள்
இங்கு தான் நடைபெறும்.

அண்ணா, மொரார்ஜி, கலைஞர்,
எம்ஜியார், சம்பத், நம்பூதிரிபாட் டில்
தொடங்கி தீப்பொறி ஆறுமுகம் வரை
பலர் பேசிய மைதானம் இது.

இன்றும் அரசியல் கூட்டங்கள்
உண்ணாவிரதப போரட்டங்கள்
என்று பல நிகழ்ச்சிகள்
நடைபெற்றுக்கொண்டுதான்
இருக்கின்றன.

லாரி வேன் என நிறுத்தப்பட்டு
மூக்கை மூடவைக்கும்
மூத்திரக்காடாக
சீரழிந்த நிலையில் இருக்கிறது.

வடநாட்டு வீர்ர்களான
கிங்காங், தாராசிங் போன்றோர்
பங்கெடுத்த பல
மல்யுத்தப்போட்டிகள்
இந்த திடலில்
நடைபெற்றிருக்கின்றன.

புகழ்பெற்ற தசரா பண்டிகை
கொண்டாட்டத்தின்போது
ராட்சச ராட்டினம், குடை ராட்டினம்,
மரணக்கிணறு, நாக கன்னிகை,
என பல பொழுதுபோக்கு
கொண்டாட்டங்கள்
இந்த திடலில் தான்
நடைபெற்றிருக்கின்றன.

இந்த திடல் முழுதும்
பல வருடங்களுக்கு முன்
ஒரு தனியாருக்குத்தான்
சொந்தமாக இருந்துள்ளது.

உரிமையாளரான அம்மையார்
காந்திமார்கெட்டிலிருந்து
சமாதானபுரம் வரை
நீண்டிருந்த மொத்த இடத்தையும்
பாளை நகராட்சிக்கு
சில நிபந்தனைகளோடு
எழுதி வைத்தாராம்.

அந்த இடத்தில்
மருத்துவமனை,
பள்ளிக்கூடம்,
விளையாட்டுத்திடல்போன்று
பொதுமக்களுக்கு
பயன் தரக்கூடியவைகளை
ஏற்படத்திக்கொள்ளலாம்,
வேறு எந்த கட்டிடங்களும்
கட்டக்கூடாது என்பது தான்
போடப்பட்ட நிபந்தனைகள்.

வாட்டர்டாங்க் கட்டப்பட்டது.
மருத்துவமனை கட்டப்பட்டது.
முன்னாள் ராணுவவீரர்கள்
நடத்திய பஸ் கம்பெனிக்கு
இடம் ஒதுக்கப்பட்டது.

இந்த தகவல்களை
வயதில் பெரியவர்கள்
பேசிக்கொண்டிருந்போது
ஒட்டுக்கேட்டிருக்கிறேன்.

தசராக் கொண்டாட்டங்களின்போது
தெருச்சண்டை,
வடபகுதி தென்பகுதிச்சண்டை
ஜாதிச் சண்டை என்று
பேச்சில் தொடங்கி
அடிதடியில் வளர்ந்து
கொலை வரை கூட சென்ற
அசம்பாவித சம்பவங்கள்
நடைபெற்றிருக்கின்றன.

தலை நிமிர்த்து
பெருமைப்படக்கூடிய நிகழ்வுகள்
பல நடந்திருந்தாலும்
தலகுனிந்து  வருந்தவேண்டிய
மேற் கூறிய நிகழ்வுகளை
மனதிலிருந்து அகற்றவேண்டும்.

பெருமைப்படக்கூடிய ஊர்தான் பாளையங்கோட்டை.
.

வியாழன், 21 ஜூன், 2018

யார் இராவணன்.....???


யார் இராவணன்.....???

அரக்கனா....???

நர மாமிசம் உண்ணும் கோரியா...???

அயோக்கியனா.....???

இல்லை. இவற்றில் எதுவும் இல்லை.

பிறகு இராவணன் யார்....???

*கலை பத்தில் தலைசிறந்த கலைஞன்.*

*யாழிசை வித்தகன்.*

*பெண்களை கண்ணெனப் போற்றும் பேராண்மை வாய்ந்தவன்.*

அப்படியென்றால் புராணத்தில் சொல்லப்பட்டவை....???

கேள்வி எழும் எனில் அதற்கான விடை வெறும் புரட்டு என்பதே.

புராணங்கள் இதிகாசங்கள் யாவும் *பண்டைத் தமிழர்களை அரக்கர்களாகவும் கோர வடிவம் கொண்டவர்களாகவுமே சித்தரிக்கின்றன.*

இந்த புராணங்கள் எல்லாம் *வடமொழியான சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டவை.*

*நமது வரலாற்றை திரித்து,   ஆரியர்களை மேன்மை தங்கியவர்களாகவும், தமிழர்களை காட்டுமிராண்டிகளாகவும் காட்டுவதற்கே*

இந்த புனைவுக்கதைகள். பெரும்பாலான புராணங்கள் தமிழர்களை
*அசுரர்* என்றே அடையாளப்படுத்துகிறது.

*"சுரர் என்றால் மது அருந்துபவன்.  அசுரன் என்றால் மது அருந்தாதவன்"*

இதை தவறாக எடுத்துக்கொண்ட நமது சமூகம் அசுரன் என்றால் அரக்கன் என்ற தவறான புரிதலுக்குள் விழுந்து விட்டது.

ஒருவேளை உண்மையில் இராவணன் கொடியவனாக இருந்திருந்தால் சீதையை கவர்ந்த அந்நொடியே அவள் கற்பிழந்திருப்பாள், இராமன் வந்திருக்க மாட்டார், இராமயணம் பிறந்திருக்காது.

சீதை சிதையில் இறங்கியது கூட இராவணன் கற்பை நிரூபிக்கத்தான்.

இராமாயணமே பதிவு செய்கிறது இராவணன் ஆட்சியில் இலங்கை செல்வ செழிப்போடு இருந்ததென்று.

*கட்டுக்கோப்பான ஆட்சி வழங்கியவர் இராவணன்.*

வீரம் செறிந்தவன், மிகச்சிறந்த சிவபக்தன், எழுத்தாளன், மருத்துவன், மாண்புமிக்க போராளி, இன்னும் இன்னும்....

ஆனால் இன்று, தன் இனத்தான் இறந்த நாளையே கொலுவைத்து கொண்டாடுகிற அடிமைத்தனத்தில் ஊறியவர்களாய் மாறி நிற்கிறோம்.

*டெல்லி ராம்லீலா மைதானத்தில் எரியப்போவது வெறும் இராவணன் பொம்மையல்ல,*

நமது ஆண்மையும், வீரமும், இனமானமும் தான்.
ஆரியரின் இராவண எதிர்ப்பு என்பது மறைமுக  தமிழர்  எதிர்ப்பு.

ஆரியத்தை நேரடியாக எதிர்த்த தமிழ் மன்னன் என்பதற்காகவே, இன்றளவும் எரியூட்டப்படுகிறார் நமது பாட்டன் இராவணன்.

*ஆரியத்தின் சூழ்ச்சியால் ஆரியன் ராமன் கடவுள் ஆனான். எங்கள் பாட்டன் இராவணன் அரக்கனான்.*

வரலாற்றில் தெளிவு பெறாத எந்த இனமும் வாழாது. படித்தறிவோம் வரலாற்றை.

*போற்றுவோம் நமது மூதாதை இராவணன் பெரும்புகழை.

இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் சாதிப் பெயா்கள்


இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் சாதிப் பெயா்கள்.

1. வடிகால்
2. ஆர்கோன்
3. அன்சாரி
4. பாக்பான்
5. பால்டி
6. பெஹானா
7. பாத்திரி
8. பீதி
9. பிஸதி
10. பர்கி
11. சௌஷ்
12. Dard
13. டோபி
14. கூசி
15. குஜார்
16. ஹைதராபாத்
17. தமீமி ஈராக்
18. கான்ஸாதா
19. காஷ்மீரி
20. குஞ்ஞா
21. மல்கானா
22. மானீர்
23. மாப்பிளா
24. மீஓ
25. முகலாயர்
26. பாத்தான்கள்
27. கஸ்ஸாப்
28. முஸ்லீம் ராஜ்புட்
29. ரங்கர்
30. ரங்கெஸ்
31. சைஃபி
32. ஷேக்
33. சையத்
34. சல்மானி
35. சித்தி
36. டெலி
37. அசாமிஸ்
38. பெங்காலி
39. பில்லி
40. டோக்ரா
41. கோண்டி
42. குஜராத்தி
43. கொங்கனி
44. நவீதாத்
45. மராத்தி
46. ​​மீட்டி
47. ஒரியா
48. தமிழ்
49. தெலுங்கு
50. லாபே
51. கோன் முஸ்லிம்கள்
52. அப்துல்
53. அன்சாரி
54. பாக்கோ
55. பிஸதி
56. சாமெய்ல்
57. சூரிஹர்
58. சிக்
59. கேடி
60. இட்ரிஸ்ஸி
61. கான்ஸாதா
62. குலையா
63. லால் பெக்கி
64. பீகார் மாலிக்
65. மீராசி
66. மிர்சிகார்
67. முகலாயர்
68. முகர்
69. பாசி
70. நாட்
71. பம்ரேரியா
72. பீகார் பதான்
73. ராய்ன்
74. சாய்
75. சப்பேரா
76. சையத்
77. சையத் (மல்லிக்)
78. பீகாரில் ஷேக்
79. ஷெர்ஷாஹபாடியா
80. தாகூரை
81. டெலி
82. அப்துல்
83. அலவி போஹிரா
84. அன்சாரி
85. அரேபியர்கள்
86. அட்டார்வாலா
87. பாபான்
88. பலோச்
89. பஞ்ஜாரா
90. பெஹிம்
91. பதாலா
92. பார்பூஞ்சா
93. பீஷ்ட்டி
94. சிபியா
95. சுனாரா
96. சுண்டிகர்
97. தாவூதி போஹிரா
98. டோபி
99. துல்ஹோயா
100. தூத்வாலா
101. Faqir
102. கலியாரா
103. கஞ்சி
104. கஞ்சி-பிஜாரா
105. ஹால்போட்ரா
106. ஹிங்கோரோஜா
107. ஹிங்கோரா
108. ஜாக்கின் ஜாட்கள்
109. ஜுன்ஜா
110. கடியா
111. கஜி
112. கெர்
113. கலீஃபா
114. காஸ்கெலி
115. Khoja
116. மச்சியார்
117. மக்ரானி
118. குஜராத்தின் மாலிக்
119. மண்டலி
120. மக்வானா
121. மேங்கா
122. மன்ஸோரி
123. மெமோன்
124. மெட்டா குரேஷி
125. மியானா
126. மோல்ஸலாம்
127. அம்மா
128. முகலாயர்
129. முல்தானி
130. முல்தானி லோஹார்
131. மத்வா
132. நாகோரி
133. நாயக்
134. கணு
135. பனார்
136. பார்மர்
137. பதானி பொஹ்ரா
138. பட்னி ஜமாத்
139. குஜராத்தின் பத்தான்கள்
140. சலாம்
141. சம்மா
142. சாந்தாய் முஸ்லிம்கள்
143. சங்கர்
144. குஜராத்தின் ஷாகிகளும்
145. ஷாக்டா 146. குஜராத்தின் சையத்
147. சித்தி
148. சிபாஹி
149. சோமிரா
150. சுலைமான் பொஹ்ரா
151. சுன்னி போஹரா
152. தை
153. துர்க் ஜமாத்
154. வோரா படேல்
155. வியாபரி
156. வாக்ஹர்
157. பாக்பான்
158. பீரி
159. சாவ்ஷ்
160. சபாபர்ட்
161. கொடவா மாப்பிள்
162. மாப்ளே
163. கொங்கனி முஸ்லிம்கள்
164. நிவேதா
165. பின்ஜாரா
166. சித்தி
167. மாப்பிளா
168. கெயி
169. தங்கல்
170. மகரகர்
171. ஓசான்
172. புஷனல்
173. துளுக்கர்
174. அன்சாரி
175. பஞ்ஜாரா
176. தாவூதி போஹிரா
177. முகலாயர்
178. டோபி
179. மத்தியப் பிரதேசத்தின் பத்தான்கள்
180. ஷேக்
181. சையத்
182. அட்டார்
183. பாக்பான்
184. பைஷ்தி
185. சாவ்ஷ்
186. சபாபர்ட்
187. தாவூதி போஹிரா
188. தவாத்
189. ஃபாக்கிர்
190. கரோடி
191. கவாண்டி
192. கச்சார்
193. காக்கி
194. கொங்கனி முஸ்லிம்கள்
195. அம்மான்
196. முஸ்லிம் ராஜ் கோன்ட்
197. கஸ்ஸாப்
198. குட்டி போஹரா
199. சாகல்கார்
200. தத்வி பாள்
201. அன்சாரி
202. பூட்டா
203. சீதா
204. சட்வா
205. தாவூதி போஹிரா
206. தேஷ்வாலி
207. கேடி
208. கோஸி
209. ஹெல மெஹ்தார்
210. ஹிரன்பாஸ்
211. கந்தரா
212. கதாம்
213. கான்சாடா
214. லங்கா
215. மாங்கனி
216. மெரட்
217. மீஓ
218. முகலாயர்
219. ராஜஸ்தான் பாத்தர்கள்
220. பிஞ்சா
221. கும்ஹானி
222. ரங்கெஸ்
223. ரத்
224. ராஜஸ்தானின் ஷாகிஸ்
225. சில்வா
t226. சிந்தி-சிபஹி
227. சிங்கிவாலா
228. சோர்கார்
229. கயலார்
230. லேபே
231. மகரகர்
232. Rowther
233. மாப்பிளா
234. அஹ்பான்ஸ் கான்ஸாதா
235. அன்சாரி
236. அத்திஷ்பாஸ்
237. பச்சோதி கான்ஜாதா
238. பாக்பான்
239. பாலூச்
240. பந்த்தாட்டி
241. பஞ்ஜாரா
242. பாராயி
243. பெஹிம்
244. பன்னு இஸ்ரேல்
245. பெஹானா
246. பாண்ட்
247. பார்பூஞ்சா
248. பாலே சுல்தான் கானாடா
249. பாட்டி கான்ஸாதா
250. பாடிரா
251. பிஷ்தி
252. பூமிஹார் மஸ்மான்மன்
253. பிஸென் கானாடா
254. பிசதி
255. சண்டேல் கானாடா
256. சிக்
257. தஹினி
258. தபலி
259. தாகி
260. தர்ஹி
261. டோபி முகல்மன்
262. டோக்கார்
263. ஃபரேடி
264. ஃபாக்கிர்
265. காடி
266. கர்ஹா (கௌர் பிராமண-முகல் சமுதாயம்)
267. கவுதம் கான்ஸாதா
268. கூசி
269. கோரிய
270. குஜர் மஸ்மான்மன்
271. ஹால்கல்ஹோர்
272. ஹல்வாய்
273. இட்ரிஸ்ஸி
274. தமீமி ஈராக்
275. ஜட் மஸ்மான்மன்
276. ஜோகா
277. காபரியா
278. காகோர்வி ஷேக்
279. கமன்கர்
280. காம்போ
281. கஸ்கர்
282. கயஸ்தா மஸ்மான்மன்
283. கான்ஸாதா
284. கோகார் கான்ஸாதா
285. குமுரா
286. கிங்ஹரியா
287. குஞ்ச்ரா
288. லால் பேகி
289. லால்கானி ராஜ்புட்
290. மடரி
291. மண்டர்கியா
292. மல்கானா
293. மானீர்
294. மீஓ
295 மில்கி
296. மிரிஸ்ஸி
297. முகலாயம்
298. முஜவேர்
299. முகர்
300. நகர் முஸ்லிம்கள்
301. நல்ப்பன்
302. நான்பாய்
303. நாகல்
304. பாஞ்ச்ரியா
305. பாங்கி
306. உத்திரப்பிரதேசத்தின் பத்தான்கள்
307. புட்லிவாலே
308. கலந்தர்.

மர்ம குகை நீடிக்கும் மர்மம் காட்டுவாசிகளின் அட்டகாசம் உள்ளே சென்றால் உயிருடன் வருவது கடினம் நீடிக்கும் மர்மம்...


மர்ம குகை நீடிக்கும் மர்மம் காட்டுவாசிகளின் அட்டகாசம் உள்ளே சென்றால் உயிருடன் வருவது கடினம் நீடிக்கும் மர்மம்...

மர்ம குகை
மால தீவு செல்லும் வழியில் பிரேஷிஷ் தீவு உள்ளது. இப்படி ஒரு தீவு இருப்பது யாருக்கும் அதிகமாக தெரியாது.அந்த தீவிற்கு ஆட்கள் செல்வது அரிது.


மாலத்தீவிலிருந்து 59.8km ,தொலைவில் உள்ளது.ஒருமுறை மாலத்தீவிலிருந்து சென்ற மீனவர்கள் படகு காற்றினால் அந்த தீவிட்கு அடித்து செல்லப்பட்டது..
அந்த மீனவக்குழுவில் ஒருவர் அந்த தீவை சுற்றியுள்ளார்..அப்போது ஒரு குகைக்கு அருகில் சென்றுள்ளார்.. அப்போது அந்த குகையில் வாயிலில் எலும்பு மற்றும் மண்டை ஓடுகள் கிடைத்துள்ளது...இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அணைவரிடம் கூறியுள்ளார்..
DOCUMENTRY TEAM
இதனையடுத்து அந்த தீவிட்கு documentryகுழு சென்றுள்ளது..அப்போ தான் அந்த கட்டுவாசிகள் அவர்களின் கண்களில் பட்டுள்ளனர்..
இவர்கள் அனைவரும் 4 அடி அளவில் இருந்துள்ளனர்...எப்போதும் கையில் கூறிய ஆயுதமாக கற்களை வதிர்பார்க்கலாம்...இவர்கள் மான்களை வேட்டையாடி உண்பார்களாம்..அந்த தீவிற்கு யாரேனும் சென்றால் அவர்களின் உயிர் போவது உறுதி..
இதனை அடுத்து அந்த documentary  குழுவை கஆடுவாசிகள் துரத்தியுள்ளனர்...அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் வந்ததால் தப்பினார்களாம்...அந்த தீவிற்கு மனிதர்கள் செல்ல அரசாங்கம் தடை விதித்துள்ளது...

புதன், 20 ஜூன், 2018

மனித உயிரை விட அக்கிரஹார புனிதம் காக்க புறப்பட்ட வரலாறு இன்று வரை மறைக்கப்பட்டு வருகிறது.


மனித உயிரை விட அக்கிரஹார புனிதம் காக்க புறப்பட்ட வரலாறு  இன்று வரை மறைக்கப்பட்டு வருகிறது.

''குற்றால அருவியில்....
குறிப்பிட்ட ஒரு குலத்தவரே குளிக்க முடியும்,
ஏனைய சாதியைச் சார்ந்த யாரும்
குளிக்க கூடாது....???
என்றிருந்த ஜாதி வெறியை உடைத்து அனைவரும் குளிக்கலாம் என்று உத்தரவிட்டவர்
ஆஷ்'' என்ற வெள்ளைக்கார கலெக்டர்
என்பது....
நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ????.
இது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளினாலேயே ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் துரை....
வாஞ்சி நாதனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.


ஒரு நாள் ஆஷ் துரை
மாலை நேரத்தில்
தனது குதிரையோட்டி
முத்தா ராவுத்தர் உடன் நடைபயிற்சி போகிறார்.
நடந்து கொண்டிருந்தவர் காதில் ஏதோ அலறல் சத்தம் பலமாக  கேட்கிறது.
ஓசை வந்த திசை நோக்கினார் ஆஷ் துரை.

அங்கு போவதற்காய் பாதையிலிருந்து இறங்கி குடிசை நோக்கி நடந்தார்.
பின்னால் வந்த ராவுத்தர்
ஓடி வந்து
"துரை அங்கு போகாதீர்கள்"
என்று தடுக்கிறார்.
ஏன் என்று வினவிய
துரைக்கு "
அது தாழ்த்தபட்டவர்களின் குடிசை என்றும்
நீங்கள்
அங்கு போகக் கூடாது
என்றும்
சொல்லுகிறார்....!!!


உடனே ஆஷ் துரை
ராவுத்தரை பார்த்து
சரி நீ போய்
பார்த்து வா என்றார்.
சேரிக்குள் போன
முத்தா ராவுத்தர் திரும்பி வந்து சொன்னார்
 " முதல் பிரசவம் துரை....
சின்ன பொண்ணு
ரெண்டு நாளா கத்திக்கிட்டு இருக்காளாம்,
பிள்ளை வயித்துல  தலை மாறிக் கிடக்காம்"
பரிதாபம்.....
இனி எங்கிட்டு துரை
பொழைக்கப் போகுது
என்றார்.

ஏன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாமே என்று துரைக் கேட்க ,
அவங்க ஊருக்குள்ளேயே வரக்கூடாதுங்க
அய்யா....
பின்ன எப்படி வண்டி கட்டி டவுணுக்கு கொண்டு போறது ???
என்றார் ரவுத்தர்.

இதனிடையே சாரட்டில் அமர்ந்திருந்த திருமதி.ஆஷ்துரை இறங்கி
அக் குடிசை நோக்கி போனார். மருத்துவமனைக்கு  கொண்டு சென்றால்.....
ஒரு உயிரையேனும் காப்பாற்றலாம் என்று துரையிடம் சொன்னார்.
அருகிலிருக்கும் ஊருக்குள்
சென்று
உடனே ஒரு மாட்டுவண்டியை கொண்டு வருமாறு குதிரையோட்டியைப் பணித்தார் துரை.


 ஓடிப் போன ராவுத்தர்
ஊரின் மேற்கு பகுதியில் உள்ள அக்கிரஹாரம்  தாண்டிய பொழுது.....
துரையின் வண்டியோட்டி எனத் தெரிந்த ஒரு பார்ப்பனர் வழிமறிக்கிறார்.
விசயத்தை சொல்லி
ஒரு குடியானவனின் வீட்டிலிருந்த மாட்டு வண்டியை ஒட்டி வந்தார்.

அந்த வழியாய் செல்ல....
வண்டிப்பாதை பிராமணர்களின்  அக்கிரஹாரத்தை தாண்டித் தான் சென்றாக வேண்டும். சரியாய்
அக்கிரஹாரத்துக்குள் மாட்டுவண்டி மறிக்கப்படுகிறது.

ஒரு சேரிப்பெண்ணை
ஏற்றப் போகும்
வண்டி
இப் பாதை வழியே
போகக் கூடாது என்று பார்ப்புகள் வழி மறித்து
வழி விட மறுக்கிறார்கள்...!!!
வண்டி கொடுத்த குடியானவனையும்
ஊர்
நீக்கம் செய்து விடுவோம் என எச்சரிக்கிறார்கள்...???

வண்டி கொண்டு வரச் சொன்னது
துரையும்
அவரின்
மனைவியும் தான் என்று விபரம் சொன்ன
பிறகும்
ஏற்க மறுக்கிறார்கள் ....!!!

இந்த விபரத்தை துரையிடம் போய் சொல்லுகிறார்
ராவுத்தர்.
இதைக் கேட்ட ஆஷ் துரை அவர்கள்,
தனது வண்டியில்
அந்த பெண்ணை ஏற்றுமாறு உத்தரவிட்டார்.

குதிரையோட்டியின் பக்கதிலேறி
அமர்ந்தும்  கொண்டார்.
வண்டி அக்கிரஹாரத்திற்குள்  நுழைகிறது.
பார்ப்புகள் கூட்டமாய்
வழி மறிக்கிறார்கள்
"ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை ஏற்றிக் கொண்டு
இந்த அக்கிரஹாரத்துக்குள் வருவது யாராய்
இருந்தாலும் அனுமதிக்கமுடியாது"
என்கிறார்கள்.

வழி விட சொல்லிப் பார்த்த துரை 
அவர்கள் வழி விட மறுக்கவே.... வண்டியைக் கிளப்பு
என்று
உத்தரவிடுகிறார்.
மீறி  வழி மறித்த பார்ப்புகளின் முதுகுத் தோல்
துரை அவர்களின் குதிரை சவுக்கால் புண்ணாக்கப்படுகிறது.
அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டாள்.

ஆஷ் துரை அவர்களிடம் அடி வாங்கிய கும்பலில்
ஒரு 16 வயது இளைஞனும் இருந்தான்
அவன் பெயர் வாஞ்சிநாதன்.

அப்போது வாஞ்சிநாதன் எடுத்த
சபதம் தான்......
17.06.1911 அன்று
ஆஷ் துரை
சுட்டுக் கொல்லப்பட  வஞ்சகமாக
அமைந்து விட்டது.

மனித உயிரை விட அக்கிரஹார புனிதம் காக்க புறப்பட்ட வரலாறு
இன்று வரை மறைக்கப்பட்டு வருகிறது.

இதுவும் "ழான் வோனிஸ் எழுதிய
Ash Official
Notes.....
என்னும் குறிப்புகளில்
அரசு ஆவணக் காப்பகங்களில் தெரிந்தே உறங்கிக் கொண்டிருக்கிறது...???!!!