யானை ஏறும் பெரும் பறையர்
திருவாரூர் கோயில் ஆட்சிப் பொறுப்பை இழந்த "மறையர்"களுக்கு முதல் மதிப்பு இன்றளவும் வழங்கப்படுகிறது.
இக்கோயில் திருவிழாவின் போது " பெரும் பறையன் " ஒருவனுக்கு முதல் மதிப்பு செய்யும் வண்ணம் பரிவட்டம் கட்டி , உருத்திராட்சை மாலை அணிவித்து வெண் குடையின் கீழ் யானை மீது அமரச் செய்து பிற பெருமக்களெல்லாம் யானையின் பின் ஊர்வலமாக செல்வர்.
யானை ஏறும் "பெரும்பறையரில்" ஒரு பிரிவினர் இன்றும் திருவாரூர் பகுதியில் வசிக்கின்றனர்.
இவர்களில் ஒருவனுக்குத் தான் காப்பு கட்டி திருமணம் செய்விக்கப்படும் , இதற்காக இவர்களுக்கு " மோகினித் தொகை " எனும் கொடை இன்றும் வழங்கப்படுகிறது.
பங்குனி உத்திர பெருவிழாக் கொடியேற்றத்தின் முதல் நாளன்று
கோயில் கொண்ட வீதி
விடங்கனுக்கும் பெரும்பறையர் சாதி பெண் ஒருத்திருக்கும் திருமணம் நடத்தப்படுகின்றது.!
இப் பெண்ணை அல்லியங்கோதை என்றழைப்பர் ... ((அல்லியங்கோதை என்பது கோயில் கொண்ட வீதிவிடங்கனின் துணைவியார் என்பதை நினைவிள் கொள்க)))
அப் பெண் வீட்டார் திருக்கோயில் தாலி வழங்க, ஆதி சண்டேச்சரர் முன்னிலையில நடைபெறும் திருமணத்தில் "யானை ஏறும் பெரும்பறையனே" அந்த பெண்ணுக்கு மாப்பிள்ளையாக அமர்கின்றான்...
இவ் விழாவினை அறிவிக்கும்
"பெரும்பறையனுக்கு" "விழுப்பரையன்" என்று பெயர்...
ஆண்டாண்டு காலமாக அரச குலத்தினருக்கு கொடுக்கும் இந்த முதல் மரியாதை திருவாரூர் தியாகராஜ சுவாமிகள் கோயிலில் மட்டுமல்ல,
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமிகள் கோயிலிலும் நடைபெறுகிறது.
Sabaaash
பதிலளிநீக்குஅந்த பூர்வீக குடும்பத்து பெண்ணை மனைவியாக கொண்ட பேறு பெற்றவன் நான்...
பதிலளிநீக்கு🙏🙏
நீக்கு