யார் இராவணன்.....???
அரக்கனா....???
நர மாமிசம் உண்ணும் கோரியா...???
அயோக்கியனா.....???
இல்லை. இவற்றில் எதுவும் இல்லை.
பிறகு இராவணன் யார்....???
*கலை பத்தில் தலைசிறந்த கலைஞன்.*
*யாழிசை வித்தகன்.*
*பெண்களை கண்ணெனப் போற்றும் பேராண்மை வாய்ந்தவன்.*
அப்படியென்றால் புராணத்தில் சொல்லப்பட்டவை....???
கேள்வி எழும் எனில் அதற்கான விடை வெறும் புரட்டு என்பதே.
புராணங்கள் இதிகாசங்கள் யாவும் *பண்டைத் தமிழர்களை அரக்கர்களாகவும் கோர வடிவம் கொண்டவர்களாகவுமே சித்தரிக்கின்றன.*
இந்த புராணங்கள் எல்லாம் *வடமொழியான சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டவை.*
*நமது வரலாற்றை திரித்து, ஆரியர்களை மேன்மை தங்கியவர்களாகவும், தமிழர்களை காட்டுமிராண்டிகளாகவும் காட்டுவதற்கே*
இந்த புனைவுக்கதைகள். பெரும்பாலான புராணங்கள் தமிழர்களை
*அசுரர்* என்றே அடையாளப்படுத்துகிறது.
*"சுரர் என்றால் மது அருந்துபவன். அசுரன் என்றால் மது அருந்தாதவன்"*
இதை தவறாக எடுத்துக்கொண்ட நமது சமூகம் அசுரன் என்றால் அரக்கன் என்ற தவறான புரிதலுக்குள் விழுந்து விட்டது.
ஒருவேளை உண்மையில் இராவணன் கொடியவனாக இருந்திருந்தால் சீதையை கவர்ந்த அந்நொடியே அவள் கற்பிழந்திருப்பாள், இராமன் வந்திருக்க மாட்டார், இராமயணம் பிறந்திருக்காது.
சீதை சிதையில் இறங்கியது கூட இராவணன் கற்பை நிரூபிக்கத்தான்.
இராமாயணமே பதிவு செய்கிறது இராவணன் ஆட்சியில் இலங்கை செல்வ செழிப்போடு இருந்ததென்று.
*கட்டுக்கோப்பான ஆட்சி வழங்கியவர் இராவணன்.*
வீரம் செறிந்தவன், மிகச்சிறந்த சிவபக்தன், எழுத்தாளன், மருத்துவன், மாண்புமிக்க போராளி, இன்னும் இன்னும்....
ஆனால் இன்று, தன் இனத்தான் இறந்த நாளையே கொலுவைத்து கொண்டாடுகிற அடிமைத்தனத்தில் ஊறியவர்களாய் மாறி நிற்கிறோம்.
*டெல்லி ராம்லீலா மைதானத்தில் எரியப்போவது வெறும் இராவணன் பொம்மையல்ல,*
நமது ஆண்மையும், வீரமும், இனமானமும் தான்.
ஆரியரின் இராவண எதிர்ப்பு என்பது மறைமுக தமிழர் எதிர்ப்பு.
ஆரியத்தை நேரடியாக எதிர்த்த தமிழ் மன்னன் என்பதற்காகவே, இன்றளவும் எரியூட்டப்படுகிறார் நமது பாட்டன் இராவணன்.
*ஆரியத்தின் சூழ்ச்சியால் ஆரியன் ராமன் கடவுள் ஆனான். எங்கள் பாட்டன் இராவணன் அரக்கனான்.*
வரலாற்றில் தெளிவு பெறாத எந்த இனமும் வாழாது. படித்தறிவோம் வரலாற்றை.
*போற்றுவோம் நமது மூதாதை இராவணன் பெரும்புகழை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக