மூதேவி என்பது தமிழர்கள் வணங்கிய பெண் தெய்வம்.
மூதேவிக்கு மாற்றாக வைணவம் முன்னிறுத்திய பெண் தெய்வம் தான் சிரீதேவி.
மூதேவி என்பது மூத்தவள் என்பது தான்.
சிரீதேவி மூதேவிக்கு இளையவள்.
தமிழ்நாட்டில் மூதேவிக்கு கோவில் உண்டு.
மூதேவி எனும் பெண் தெய்வம் நிலம் சார்ந்த பெண் தெய்வம்
உரம் சார்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது.
வயல்வெளிகளில் மூதேவி சிலைகள் பல இடங்களில் கண்டெடுக்கப்பட்டது.
மூதேவியின் மார்புகள் திரண்டும்
வயிறு புடைத்தும் திரண்டு காணப்படுவது வளமையின் அடையாளமே.
பார்ப்பனியம் சிரீதேவியை முன்னிறுத்தி மூத்த தமிழ் பெண் தெய்வத்தை இழிவாக மூதேவி என்று சொல்லுமளவுக்கு மாற்றியது.
நாமும் சிரீதேவிகளின் சிவப்பு தோலுக்குப் பின்னால் அணி திரண்டோம்.
மூதேவியே
நமக்கான மூத்த தேவி.
அவள் கையிலிருந்த கிளி தான்
சமணர்கள் காலத்தில் இயக்கி என்ற பெண் தெய்வமாக மாற்றப்பட்டது. அந்த இயக்கி என்ற பெண் கடவுள் தான் இசக்கி என்று இன்று அழைக்கப்படுகிறது.
மூதேவியிடம் இருந்த கிளியைத்தான் ஆண்டாள் தோளில் வைணவமும், மீனாட்சி,காமாட்சி தோள்களில் சைவமும் கொடுத்து தன்னை நிலைநிறுத்தியது.
சிரீதேவி அடக்கம் செய்யப்படட்டும்
மூதேவிகள் முன்னிலை பெறட்டும்
பின் இணைப்பு :
1) நிலம் சார்ந்த தெய்வம் மூதேவி.
*
குறிஞ்சி,முல்லை,மருதம் என்ற மூன்று நிலங்களில் விவசாயம் செய்யப்பட்டது.
*
குறிஞ்சியில் திணை வகைகள்,கிழங்குகள் பயிரிடப்பட்டன.
*
முல்லையில் காட்டு வேளாண்மையாகிய சிறுதானியங்கள்,கொடிக் கிழங்குகள் பயிரிடப்பட்டன.
*
மருதத்தில் நெல் வகைகள்,கரும்பு,காய்வகைகள் பயிரிடப்பட்டன.
*
இம்மூன்று நிலங்களிலும் வளமை தரும் தாய் ஆதலால்,மூதேவி என்று அழைக்கப் பட்டாள்.
*
அவளின் துணை தெய்வங்கள்,மாடன்,மாடத்தி.அதாவது காளை,பசு.
*
இங்குபகிர்ந்த சிற்பத்தில் மாடன்,மாடத்தி இருப்பதைக் காணுங்கள்.
2)இது கூட மறிவிய உருவம் தான் எருமை தலையுடன் அருகில் அமர்ந்ததாக காட்டப்பட்டிருப்பது எருமயை பயன்படுத்தி வேளாண்மை செய்ததற்கு அடையாளம் அது கிளியல்ல தமிழ் தேசியபறவை மரகதம்(குமரி மாவட்டத்தில் குக்கில் என்று அழைக்கப்படுகிறது) சிலை உருவமாக நீங்கள் காட்டியிருப்பதை விட கருத்து தெரிவிப்பதற்காக அருணாசங்கர் அவர்கள் போடப்பட்டிருக்கும் செப்பு தகட்டில் காட்டப்பட்டிருக்கும் உருவம் ஓரளவுக்கு பொருந்தும் காதில் பாம்படம் என்ற அணிகலன் தான் காட்டப்பட்டிருக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக