வியாழன், 31 ஆகஸ்ட், 2017

பூலித்தேவன் வரலாறு - poolithevar



பூலித்தேவன் வரலாறு - poolithevar

முதன் முதலில் விடுதலைக்கு குரல் கொடுத்தவர் வீரபாண்டிய கட்டபொம்மனோ அல்ல! ஜான்சிராணி லக்குமிபாயோ அல்ல!!
சிப்பாய் கலகமும் அல்ல!!! தென்னகத்து பூலித்தேவன் தான். ஏனோ வராலாறுகள் தமிழர்களை மூடிட்டு வைத்து மறைக்கின்றன. இவரை மட்டும் அல்ல முக்குலத்தோரையே அப்படித்தான் செய்கிறது.
மாவீரன் பூலித்தேவன் ஒரு மாபெரும் புரட்சித் தலைவன். தென்பாண்டி நாட்டில், திருநெல்வேலிச் சீமையில் தோன்றி தன்னிகரற்றுத் தலைநிமிர்ந்து வாழ்ந்த தமிழ் மறவன்! நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்ட செங்கோலொச்சிய பாளையக்காரனாவான். தன்பாளையத்திற்கு மட்டுமின்று மேற்குப் பாளையத்தார்களுக்கெல்லாம் தலைமையேற்று மாற்றாரை நடு நடுங்கச்செய்த மாபெரும் போர்வீரன்.
இந்திய விடுதலைக்காக வெள்ளையரை எதிர்த்து முதன் முதலில் ‘வெள்ளையனே வெளியேறு’ என்று முதல் முழக்கமிட்ட விடுதலைப் போராளி பூலித்தேவனேயாவான். இவனுடைய வீர வராலாறு இந்திய விடுதலை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அரை நூற்றாண்டுக்கு மேலாக தென்னகத்தை ஒரு கலக்குக் கலக்கிய மாவீரன் பூலித்தேவனின் சாதனைகள் பற்றி இன்னமும் சரித்திர ஆசிரியரகள் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தத் தமிழ் மறவன் பூலித்தேவனின் வரலாற்றுச் சுவடிகளில் சிலவற்றைக் இங்கு காண்போம்.
மதுரையில் நாயக்க மன்னர்களின் ஆட்சி 1529 முதல் 1736 வரை இருந்தது. இவர்களில் விசுவநாத நாயக்கர் முதல்வராவார். இவர் 1529 முதல் 1564 வரை ஆட்சி புரிந்தார். இவருடைய ஆட்சி காலத்தில் தான் பாண்டிய நாடு 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாளையமும் ஒருவரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு அவர்களுக்கு அந்த பாளையத்துக்கு உட்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டன.
இவ்வாறு பாளையங்களாக பிரிக்கப்பட்டதன் காரணம் பாண்டிய வமசத்தினர் மீண்டும் படைத் திரட்டி ஆட்சியைப் பிடிப்பதை தவிர்ப்பதற்காகத்தான். மதுரை, திருச்சி, கொங்குநாடு ஆகிய பகுதிகளில் தெலுங்கர்களையே நாயக்க மன்னன் நியமித்தான். திருநெவேலிச் சீமையில் தான் பெரும்பாலும் தமிழர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
மேலும் பாண்டிய வம்சத்தின் சிலரையும் பாளையக்காரர்களாக நியமித்து ஓரளவு வம்சாவழி எதிர்ப்பையும் அடக்கினான். மக்களிடத்து இவ்வாறு அதிகார வரம்பை பகிர்ந்தளித்ததால் மக்கள் எதிர்ப்பும் குறைந்தது. ஆனால் அதற்குப் பிறகு வந்த நாயக்க அரசர்களின் ஆட்சி பலவீனமடைந்தது. இதனால் ஓரளவு சுய அதிகாரம் பெற்றிருந்த பளையக்காரர்கள் சிறிது சிறிதாக நாயக்கராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விலகினார்கள்.
இத்தனைய பாளையங்களில் ஒன்றுதான் நெற்கட்டான் செவ்வல் பாளையம் இந்திய விடுதலைப் போருக்கான முதல் குரல் இந்த பாளையத்திலிருந்து தான் ஒலித்தது. அந்த குரலுக்கு உயிர் கொடுத்தவரின் பெற்றோர்கள் பெயர் சித்திர புத்திரத் தேவரும் சிவஞான நாச்சியாரும் ஆவர்.
1-9-1715 ல் மாவீரன் பூலித்தேவர் இவர்களின் புதல்வராக தோன்றினார். இயற்பெயர், ‘காத்தப்ப பூலித்தேவர்’ என்பதாகும் ‘பூலித்தேவர்’ என்றும் ‘புலித்தேவர்’ என்றும் அழைக்கலாயினர் பூலித்தேவர் பிறந்த பொழுது அந்த பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சியுற்றனர். அதற்கு காரணம் பூலித்தேவரின் தந்தை சித்தி புத்திரத் தேவரின் நல்லாட்சிதான். அவருடைய ஆட்சி நல்ல முறையில் இருந்ததால்தான் மக்கள் அவர் மீது மதிப்பு வைத்திருந்தார்கள். அதனால் தான் அவருக்கு பூலித்தேவர் பிறந்தபொழுது, மக்கள் மகிழ்வுற்றார்கள்.
சித்திரபுத்திரத் தேவர் எந்த பிரச்சினையும் இல்லாத அறுபத்து மூன்று ஆண்டுகள் மக்கள் போற்றும் வண்ணம் ஆண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாளைக்காரர்கள் மத்தயில் அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. இத்தகைய ஒரு சூழலில்தான் பூலித்தேவர் வளர்க்கப்பட்டார். சிறுவயதில் தாதிகளிடம் தன்னுடைய முன்னோர் பற்றிய வீர வரலாறுகளைக் கேட்டு மகிழ்ந்தார்.
மேலும் அந்த பிஞ்சு உள்ளத்தில் இறையுணர்வு பற்றிய தெளிவான விளக்கமும் பதிய வைக்கப்பட்டது. இவ்வாறு சிறுவயதில் ஊன்றப்பட்ட வீர உணர்ச்சியும், இறையுணர்வும் இறுதிவரை அவர் மனதில் இருந்தது. பூலித்தேவர் ஆறு வயது சிறுவனாக இருக்கும் பொழுது அவருக்கு முறைப்படியான கல்வி ஆரம்பிக்கப்பட்டது.
சிறு வயதிலேயே முன்னோர் பெருமைகளைப் பற்றிக் கேள்விப் பட்டதால் தாமும் அவர்களைப்போல் பேரும் புகழும் பெற்றுத் திகழ வேண்டும் என்ற உறுதி பூலித்தேவர் மனதில் இருந்தது. இலஞ்சியைச் சேர்நத சுப்பிரமணிய பிள்ளை என்பவரிடம் சன்மார்க்க நெறிகளைப் பூலித்தேவர் பயின்று வந்தார் மற்ற தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களையும் கற்று, தாமே கவிதை எழுதும் அளவுக்குத்திறம் பெற்று விளங்கினார்.
பூலித்தேவருக்கு பன்னிரண்டு வயதான பொழுது அவருக்குப் போர்ப் பயிற்சி தொடங்கப்பட்டது. குதிரை ஏற்றம், யானை ஏற்றம்,மல்யுத்தம், வாள் வீச்சு, வேல் எய்தல், அம்பு எய்தல், சிலம்பு வரிசைகள், கவண் எறிதல், வல்லயம் எறிதல் மற்றும் சுருள் பட்டா சுழற்றுதல் போன்ற சகலவிதமான வீரவிளையாட்டுக் களிலும் அவருக்குப் பயிற்சி அளிக்கப்ட்டது. மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள புலிகளைக் கொன்று விளையாடுவதில் அவருக்கு மிகுந்த விருப்பம் புலித்தோல் மற்றும் புலி நகங்களை அணிவதிலும் அவருக்கு விருப்பமுண்டு.
இதனால் பூலித்தேவரை எல்லோரும் புலித்வேர் என்றே அழைத்து வந்தனர் பூலித்தேவரைப் பார்த்தவுடன் அவர் ஒரு மாவீரன் என்று கூறுமளவிற்கு அவருடைய உடல்வாகு இருந்தது. அவரைப் பற்றிய ஒரு நாட்டு பாடலில் அவரின் உடல்வாகு பற்றிக் கூறப்பட்டுள்ளது. மாவீரன் பூலித்தேவர் ஆறடி உயரமுடையவர். சோதியைப் போல முகமிருக்கும், திண் தோள்களை உடையவர், பல்லோ பளபளக்கும், பவளம் போன்ற உதடுகளும், மார்பும் இருந்ததாக அப்பாடல் கூறுகின்றது.
காத்தப்ப பூலித்தேவரின் திறமையைக் கண்ட அவரது பெற்றோர் அவருடைய பன்னிரண்டாவது வயதில் அதாவது 1726 ல் அவருககுப் பட்டம் சூட்டி அரசராக்கினார்கள். பூலித்தேவரின் வயதுக்கு மீறிய ஆற்றலைக் கண்டுதான் அவருடைய பெற்றோர்கள் துணிந்து அவரை அத்தனை இளம் வயதில் மன்னராக்கினர். மன்னரைப்போலவே நெற்கட்டான் செவ்வல் மக்களும் இந்த முடிவை வரவேற்றார்கள்.
பின்னர் பூலித்வேருக்கு திருமண ஏற்டபாடுகள் நடைபெற்றன. அவருக்கு வாழ்க்கை துணைவியாக அமைந்தவர் அவருடைய மாமன் மகள் கயல்கண்ணி என்கின்ற இலட்சுமி நாச்சியார்தான். கயல்கண்ணி நல்ல அழகி மட்டுமல்ல, வீர விளையாட்டுக்கள் விளையாடுவதிலும் பூலித்தேவருக்கு உற்ற துணையாக விளங்கியவர். கயல் கண்ணியின் சகோதரர் சவுணத்தேவரும், பூலித்தேவரும் இணைபிரியாத நண்பர்கள். பூலித்தேவரின் இல்லற வாழ்ககை கண்ட அவருடைய பெற்றோர்கள் மிகவும் மகிழ்சியடைந்தார்கள். பூலித்தேவருக்கு கோமதி முத்துத் தலவசச்சி, சித்திர புத்திர தேவன் மற்றும் சிஞானப் பாண்டியன் என்று மூன்று நன்மக்கள் பிறந்தனர்.
பூலித்தேவருக்கு பதினெட்டு வயதிருக்கும் பொழுது கிழக்குப் பளையங்களைச் சேர்ந்த இலவந்தூர் , ஈராட்சி ஆகியவற்றிற்க்கு ஏற்பட்ட எல்லைத் தகராறைத் தீர்த்து வைக்கச் சென்றிருந்தார். அச்சமயம் சிவகிரிப் பாளையத்தான் வந்து கால் நடைகளைக் கவர்ந்து சென்றான். இந்தச் செய்தியை ஒற்றன் மூலம் பூலித்தேவருக்கு கூறப்பட்டது. உடனே அவர் தளபதியான சவனத்தேவருக்கு செய்தி அனுப்பி சிவகிரிப் பளைக்காரணை தடுத்து நிறுத்துமாறு கட்டளையிட்டார்.
உடனே 150 வீர்களுடன்ட புறப்பட்டு நேராக சிவகிரிப் படைகளைத் தாக்குவதற்குச் சென்றார். பூலித்தேவர் போர்க்களத்தில் நுழைந்ததும் சிவகிரி படைகளின் எண்ணிக்கை கனிசமாக் குறைந்து கொண்டே வந்தது. இதனைக் கண்டு மேலும் பலர் களத்தை விட்டு ஓடினர். பூலித்தேவர் இறுதியில் வெற்றிகரமாக கால்டைகளை மீட்டுச் சென்றார். அக்காலப்போர் முறையின் முதற்கட்டமே வேற்று நாட்டின் கால்நடைகளைக் கவர்ந்து செல்வதுதான்.
போரில் வெற்றிபெற்றாலும் சவணத்தேவர் கூடலூர் வரை எதிரிகளை துரத்திச் சென்று போரிட்டார். அவர்களின் எல்லைக் கருகில் சென்று விட்டதால் எதிரிகளின் எண்ணிக்கை கூடிவிட்டது.
ஆனாலும் மனம் தளராது போராடி பல பேரை சவணத்தேவர் கொன்று குவித்தார். ஆனால் களத்தில் அவர் தன்னுடைய ஒரு காலை இழந்தார். அதையும் பொருட்படுத்தாமல் அவர் போராடியதில், இறுதியில் அவருக்கு முழு வெற்றி கிடைத்தது. ஆனால் அதற்கு விலையாக தன் உயிரைக் கொடுக்க நேரிட்டது.



முதல் சுதந்திரப் போராட்ட மாவீரர் பூலித்தேவர்

இது முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவம்.
மதுரையில் பாண்டிய மன்னர்களின் ஆட்சி, அவர்களுக்குப் பின் வந்த அவர்களது வாரிசுகளில் சிறிது சிறிதாக மாற்றம் ஏற்பட்டு, இறுதியில் பாண்டிய வம்சத்தின் ஆட்சி முடிவுற்று, நாயக்க மன்னர்களின் ஆட்சி தொடங்கியது. தமிழ்நாடு, சங்க காலத்தில் 24 கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதில் ஒன்று புலியூர் கோட்டம். பூலியூர்க் கோட்டமே புலியூர்க் கோட்டமாக வழங்கியிருக்க வேண்டும். பாண்டிய அரசர்களால், பாண்டிய நாடு 32 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டது. அதில் ஒரு பாளையம்தான் நெற்கட்டான் செவ்வல் பாளையமாகும். பாண்டிய மன்னர்களினால் பாளையங்களின் அரசராக புலித்தேவரின் முன்னோர்கள் நெற்கட்டான் செவ்வல் பகுதியை ஆட்சி செய்து வந்தனர்.
பாண்டியரின் மறைவுக்குப் பிறகு, நாயக்கரின் ஆட்சி தொடங்கியதும் நாயக்க அரசர்களுக்கு ஒரு சிறு அச்சம் இருந்தது. பாண்டிய வாரிசுகள் மீண்டும் படையெடுத்து பாண்டிய நாட்டை கைப்பற்றிவிடுவார்களே என்று எண்ணி, தனது ஆட்சிக்குட்பட்ட நிலங்களை 72 பாளையங்களாகப் பிரித்தனர். அதில் ஒரு பாளையமாக நெற்கட்டான் செவ்வல் பகுதி இருந்தது. இது போன்று பாளையங்களைப் பிரிக்க நாயக்க அரசுக்கு அவர்களின் அமைச்சர் அரியநாத முதலியார் ஆலோசனை தெரிவித்திருந்தார்.
நெற்கட்டான் செவ்வல் பாளையத்தினை சீரும் சிறப்பாக ஆட்சி செய்து வந்தார் சித்திரபுத்திரத் தேவன் என்பவர். இவர் 63 ஆண்டுகள் இப்பகுதியை ஆண்டு வந்தார். இவரின் மனைவி சிவஞான நாச்சியார். இவர் 01.09.1715 அன்று வீரத் திருமகனை குழந்தையாகப் பெற்றெடுத்து, அக்குழந்தைக்கு தாய் தந்தையர் காத்தப்ப பூலித்தேவன் என்று பெயரிட்டு அழைத்து வந்தனர். அக்குழந்தை ஆறு வயதானதும், கல்வி கற்றியிட வேண்டி அவருடைய தந்தையார் சிறந்த ஆசிரியரிடம் பாடம் படிப்பதற்கு அனுப்பினார். காத்தப்ப பூலித்தேவன் கல்வியில் சிறந்து விளங்கி இலக்கணம், இலக்கியங்களை நன்கு படித்து, தமிழில் கவிதை, இலக்கணம் போன்றவற்றை எழுதும் விதத்தில் சிறந்த மாணவராக உருவானார். கல்வி கற்ற பின்னர் போர் பயிற்சி கற்கச் சென்றார். இவர் குதிரை ஏற்றம், யானை அடக்குதல், சுருள் வாள் வீச்சு, சிலம்பம், வேல் கம்பு, ஈட்டி எறிதல் போன்ற அனைத்து போர் பயிற்சிகளையும் சிறந்த முறையில் கற்றார்.
பின் இவருக்கு 11 வயதில் அரசர் பட்டம் சூட்டி மகிழ்ந்தார் இவரது தந்தை. 12 வயதில் அரசரான காத்தப்ப புலித்தேவன், மேற்குத் தொடர்ச்சி மலை காடுகளுக்குச் சென்று வேட்டையாடுதலை தனது பொழுது போக்காகவும், புலியை வேட்டையாடுவதில் மிகுந்த ஈடுபாடும் கொண்டிருந்தார். புலியை வேட்டையாடி, அதன் தோலில் உடை செய்து அணிந்து கொள்வார். இவரின் வீரத்தினையும், இவரது குலத்தின் பெருமையையும் எடுத்துரைக்கும் ஒரு சந்தர்ப்பம் அமைந்தது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வடக்குக் கோபுர பகுதியின் உள்ளே புலி ஒன்று புகுந்து, அங்கு இருந்த மக்களை கொன்றும், ஆடு, மாடுகளை வேட்டையாடியும், மக்கள் வீட்டை விட்டு வெளிவரவும், கிராமத்தை விட்டு வெளிவர அச்சம் கொள்ளும் அளவிலும் புலியின் செயல்பாடுகள் இருந்தது. இதனை அறிந்த அரசர் அந்த புலியைக் கொள்ளும் வீரருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று முரசு அடித்து பறைசாற்றினார். இந்த செய்தியை கேள்வியுற்ற புலித்தேவர், புலியை வேட்டையாடுவதில் இவர் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் அல்லவா, உடனே புறப்பட்டார். புலி இருந்த கிராமத்தினை அடைந்தார்.
புலியை எதிர் கொள்ளும் போது, புலி இவரைக் கண்டு தனது உறுமலையும், வாலை தரையில் அடித்தும் புலிப்பாய்ச்சலுக்குத் தயாரானது. புலி இடப்பக்கம் வீழ்ந்தால் உண்ணாது இறக்கும் என்பதை அறிந்த புலித்தேவர் புலியை எதிர்கொண்டு நின்றார். பாய்ந்து வந்த புலியிடம் சற்று விலகி புலியின் பின்னங்கால்கள் இரண்டையும் கையால் பிடித்து இழுத்து, புலியை கிறுகிறுவென்று சுழற்றி புலியை தூக்கி தரையில் அடித்துக் கொன்றார். அரசர் உடனே புலித்தேவருக்கு பட்டம், பொன், மாளிகை என அனைத்தும் கொடுத்து சிறப்பித்தார். வெற்றியுடன் தனது பாளையத்துக்குத் திரும்பினார். புலி இடதுபக்கம் வீழ்ந்தால் உண்ணாது என்பதை, நமது சங்ககால புலவர்கள் தனது பல பாடல்களிலும், பல அரசரின் வீரத்தினை புலியுடன் ஒப்பிடுகையிலும் குறிப்பிட்டுள்ளனர். புலி தனது இரையை வேட்டையாடும் போது இரையை, தான் இடது பக்கம் வீழ்த்தினால் தனது வீரத்திற்கு பேரிழுக்கு என்றும், தனது வீரத்தில் இழுக்கு ஏற்பட்டு விட்டது என்று எண்ணி எண்ணி உண்ணாது இறந்துவிடும்.
வெற்றி பெற்று திரும்பிய புலித்தேவருக்கு திருமண ஏற்பாடு நடந்தது. தனது மாமன் மகளை மணந்து சிறப்பான இல்லற வாழ்க்கை நடத்தி வந்தார். இவர் ஆன்மீகத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அந்தக் காலகட்டத்தில் நடந்த அரசுரிமைப் போரை கவனித்து வந்தார்.


ஹைதராபாத்தை ஆட்சி செய்து வந்த நிஜாம் 1748-ம் ஆண்டு இறந்துவிட்டார். பின் இவரின் மகன் நாசர்ஜங் பதவி ஏற்றார். இதனை நிஜாமின் பேரன் முசபர்ஜங் எதிர்ப்பு தெரிவித்தார். இதைப்போன்றே ஆற்காட்டில் அன்வாருதீன் தன்னுடைய மாமாவாகிய சந்தா சாகிப்பை எதிர்த்தார். முசபர் ஜங் மற்றும் சந்தா சாகிப் இருவரும் ஒன்றாக இணைந்து பிரெஞ்சுக்காரர்களின் உதவியை நாடினர், இதனால் போர் ஏற்பட்டது. 1749-ம் ஆண்டு பிரெஞ்சுப்படைகள், சந்தா சாகிப், முசபர்ஜங் ஆகிய மூன்று படைகளும் கூட்டாக ஆற்காடு என்னும் இடத்தில், அன்வாருதீன் படைகள் தோற்கடிக்கப்பட்டு அன்வாருதீன் கொல்லப்பட்டார். சந்தா சாகிப் கர்நாடக நவாபாக ஆட்சி ஏற்றார். பிரெஞ்சுப்படையின் தளபதி டியூப்ளேயின் உதவிக்கு வழுதாவூர், வில்லியனூர் மற்றும் பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ள பாகூர் ஆகிய இடங்களை சந்தாசாகிப் பிரெஞ்சுக்காரர்களுக்குக் கொடுத்தார்.
போரில் கொல்லப்பட்ட அன்வாருதீனின் மகன் முகமது அலி கர்நாடகத்தில் இருந்து தப்பி ஓடிச்சென்று திருச்சிராப்பள்ளி கோட்டையில் தஞ்சம் புகுந்தார். அக்கோட்டை சந்தாசாகிப்பால் முற்றுகையிடப்பட்டது. முகமது அலி ஆங்கிலேயரிடம் தம்மைக் காப்பாற்றும் படியும், ஆற்காட்டைத் தாக்கும்படியும் கேட்டுக் கொண்டார். ஆங்கில இராணுவ அதிகாரி இராபர்ட் கிளைவ் ஆற்காட்டைத் தாக்கினார். சந்தாசாகிப் ஆற்காட்டைத் தக்கவைத்துக் கொள்ளுவதற்கு ஒரு படையை அனுப்பினார். ஆனால் இராபர்ட் கிளைவ் திருச்சி மீது படை எடுத்தான், மேலும் ஒரு படை ஆரணி, காவேரிப்பாக்கம் ஆகிய இடங்களில் சென்று பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்து இதன் மூலம் முகமது அலி ஆற்காட்டின் நவாபாக பதவி ஏற்றார். இது இரண்டாம் கர்நாடக போர் என்று அழைக்கப்படுகிறது.
தனக்கு உதவிய ஆங்கிலேயர்களுக்கு கைமாறாக ஆற்காட்டின் நவாப்பான முகமது அலி, தனக்கு கப்பம் கட்டிய அரசர்களிடம் வரி வசூல் செய்யும் உரிமையை ஆங்கிலேயர்களிடம் முதல் முறையாக கொடுத்தான். தமிழ்நாட்டில் தென்னகத்தில் வரிவசூல் செய்ய அனுமதி பெற்ற ஆங்கிலேயர்கள் புலித்தேவரிடம் வரிவசூல் செய்ய ஆரம்பித்தனர். ஆற்காடு நவாப்புக்கு வரி கொடுக்காமல் சுதந்திர அரசராக இருந்த மறத்தமிழர் புலித்தேவர் வந்தேரிய பரங்கியனுக்கா வரி கொடுப்பார். வெள்ளையன் வரி கேட்டதும் அன்னியன் எவனும் வரி என்ற பெயரில் ஒரு நெல் மணியைக் கூட என் மண்ணில் இருந்து கொண்டு செல்ல முடியாது என்று உறுமினார் புலித்தேவர்.

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

மணிக்கிரிவன் என்ற காவல் பறையன்



காவல் பறையன்:
யார் இந்த காவல் பறையன்...? காவலுக்கும் பறையருக்கும் என்ன சம்பந்தம்...? பறையர்கள் காவல் தொழில் புரிந்தனரா..? ஆம் பறையர்கள் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர்... பறையர்கள் அந்த காலக்கட்டத்தில் அடிமைவேலை செய்து வந்தார்கள் என்று.   சொல்பவர்களுக்கு..

தலித் தலித் என்று சொல்லி  வரலாற்றை மறைக்கும் தலித்தியவாதிகளுக்கும்.... இதோ எம் இனம் அஞ்சாமை குணத்தோடு காவல் காத்து வந்த வரலாறு ஆதாரத்துடன்... திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்தில் உள்ள சங்கரநயினார் ஆலய தல வரலாறு காவற்பறையனைப்பற்றி குறிப்பிடுகின்றது. சங்க நயினார் ஆலயம் கட்டுவதற்க்கு முன்பு அங்கு காவற்பறையன் என்பவன் புன்செய் நிலத்தை பாதுகாத்து வந்த வேளையில் ஒரு புற்றை இடிக்கையில் அதில் இருந்து லிங்கமும் பாம்பும் வந்ததாகவும், இச்செய்தியை மணலூரில் ஆட்சி செய்து வந்த உக்கிரப்பாண்டியனிடம் சொல்ல உக்கிரப்பாண்டியன் இந்த ஆலயத்தை கட்டுகின்றார். காவற்பறையனை சிறப்பிக்கும் வகையில் இந்த ஆலயத்தில் காவல் பறையனுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.


இதே போல்.... புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டத்திலுள்ள காரையூர் திருமாங்கனி ஈஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டொன்று ஊரைப்பாதுகாக்கும் பணியில் பறையர் ஒருவர் நியமிக்கப்பட்டதை  குறிப்பிடுகிறது. ஆதனமழகியான் என்பவருக்கு காரையூர்ப் பறையன் என்றுபட்டம் கட்டி பாதுகாவல் உரிமையை ஊரார் வழங்கியுள்ளனர். இதற்காக அவரிடமிருந்து நூற்றுப் பத்துப் பணம் பெற்றுள்ளனர். இக்காவல்பணிக்காக இடையர்கள் நெய்யும், வலையர் முயலும், பள்ளர் பறையர் கோழியும் அவருக்கு வழங்கவேண்டுமென்று ஊரவர்கள் முடிவுசெய்துள்ளனர். பாண்டியமன்னனின் மெய்க்காப்பாளராகப் பறையர் ஒருவர் பணியாற்றியமையை "அரையன் அணுக்க கூவன் பறையனேன்" என்ற கல்வெட்டு வரிஉணர்த்துகிறது. சாக்கைப் பறையனார் என்பவர் தனக்கு கீழ் இருந்த சில வீரர்களுக்கு கட்டளை இட்டபதைப்பற்றி செங்கம் நடுகல் ஒன்று குறிப்பிடுகின்றது. இதன் மூலம் பறையர் ஒருவர் வீரர்களுக்கு கட்டளையிடும் பொறுப்பில் இருந்தமை தெரிகின்றது.


காவற் பறையன்
மணிக்ரீவன் என்ற தேவன் பார்வதி தேவியின் சாபத்தாற் பறையனாகிப் புன்னைவனக் காவலனாக இருந்தான். அதனால் அவன் காப்பறையன் என்றும், காவற் பறையன் என்றும் பெயர் பெற்றான். கரிவலம்வந்தநல்லூர்ப் பால்வண்ண நாதருக்குப் புன்னைவனத்திலே ஒரு பூந்தோட்டம் இருந்தது. அதற்கும் அவனே காவல். தோட்டத்தின் ஒரு பக்கம் புற்றொன்று வளர்ந்தது. அதை ஒரு நாள் அவன் வெட்ட அதிலிருந்த பாம்பின் வாலும் வெட்டுப் பட்டது. அப்போது அவன் புற்றின் பக்கத்தில் சிவலிங்கம் இருப்பதையும் கண்டான். அதே சமயத்தில் உக்கிரபாண்டியர் அடுத்த வனத்தில் வந்திருப்பதாக அறிந்து செய்தி தெரிவிக்க ஓடினான்.
உக்கிரபாண்டிய அரசர் கோவில் கட்டி ஊர் உண்டாக்கியது
திருநெல்வேலிக்கு மேலே பொருநையாற்றின் கரையிலுள்ள மணலூரில் அரசாண்டிருந்த உக்கிரபாண்டியர் அடிக்கடி மதுரை சென்று மீனாட்சியம்மையையும், சொக்கப்பெருமானையும் வழிபாடு செய்யும் வழக்கமுடையவர். காவற்பறையன் புற்றை வெட்டிச் சிவலிங்கத்தைக் கண்ட அன்று, பாண்டியருடைய யானை கொம்பினால் தரையைக் குத்திக் கீழே விழுந்து புரண்டது. பாண்டியர் ஒன்றும் செய்ய அறியாது திகைத்திருந்த போதுதான் காவற்பறையன் ஓடிவந்து அரசரிடம் செய்தி தெரிவித்து உடன் வர அழைத்தான். உக்கிரபாண்டியர் சென்று புற்றினையும் புற்றிடங் கொண்டாரையும், கூழைவாலினதாக்கிய பாம்பினையும் கண்டார். சங்கரனார் அசரீரியாக ஆனைதரப் பாண்டியர் காடு கெடுத்து நாடாக்கிக் கோவில் கட்டிச் சங்கரநயினார் கோவில் ஊரையும் தோற்றுவித்தார். கோவிலில் கோபுரத்தைத் தாண்டியதும் ( கோவில் நிர்வாக அலுவலக இடப்புறத் தூணில் ) காவற்பறையனுடைய திருவுருவத்தை இப்போதும் காணலாம்.
சங்கரலிங்கப் பெருமான் திருச்சந்நிதியுட் செல்லும்போது பலிபீடம், கொடிமரம் இவற்றைத் தாண்டியவுடன் தூண்களில் உக்கிரபாண்டியனையும், உமாபதி சிவாச்சாரியாரையும் காணமுடியும். யானை தனது பெரிய கொம்பினால் குத்தியமையினாலே அவ்விடத்தில் உண்டாயிருக்கிர ஊர் பெருங்கோட்டூர் என்று பெயர் பெற்றது. ( கோடு - கொம்பு ) உக்கிரபாண்டியர் கோயிற் பூஜைக்கு மிகுந்த நிலங்களைக் கொடுத்து ஒரு சித்திரை மாதத்திலே யானை மேலேறிக்கொண்டு தாம் இறைவனைக் காணக் காரணமாயிருந்த இடமாகிய பெருங்கோட்டூருக்குப் போய் யானை பிடிமண் எடுத்துத் தரக் கொண்டுவந்து பெருந்திருவிழா நடத்தி மகிழ்ந்தார். இத்திருவிழா இன்றும் நடைபெறுகின்றதை நாம் காணலாம்.
காவற்பறையனுக்கு ஊரில் தெற்கே ஒரு சிறு கோயில் இருக்கிரது. அது இருக்கும் தெரு காப்பறையந்தெரு என்று வழங்கிவந்தது. காப்பறையன் தெரு, தற்போது முத்துராமலிங்கம் தெருவென ஆகிவிட்டது. ஆனால், காவற்பறையன் கோவில் அதே தெருவில் இன்றும் உள்ளது. நித்திய பூஜைகளும் உண்டு. சித்திரைவிழா ஆரம்பமாகுமுன்பு, காவற்பறையனுக்குச் சிறப்பு வழிபாடு நடத்திய பின்னரே பெரிய கோயிலிலே கொடி ஏற்றம் நிகழும

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

ஒரு நாடார்நண்பரின் பதிவு

ஒரு நாடார்நண்பரின் பதிவு

யோசிச்சா சரிதான்னு தோணுது

 தமிழஅரசியலை மாற்றுவதுநாடார்தான் உங்களுக்கு ஏத்தனை பேருக்கு தெரியும் தமிழ் நாடு government நாடார்✊ கைக்குள இருக்கானு !!!  புரியல .....

இன்று பாஜகவில் நாடார்கள் அதிகம்.👇👇

#இந்த government அதிக Business Tax  கட்டுறது நம்மா நாடார் ஜாதிதகா
கிட்டத்தட்ட   62% (Tax for TN Government ).
நாடார் ஜாதி நாம நினைச்சியா இந்த Government 2 வாரத்துல கால் வில வைக்க முடியும்  எப்படி சொல்ல்ற தெரியுமா ,,, தமிழ்நாடு Government Employees மொத்தமா (2,12130) இரண்டு லட்சத்து பனிரெண்டாயிரத்து நூற்று முப்பது ஆனா நாடார் கிட்ட வேலை செய்ற Employees கிட்ட தட்ட 50 மடங்கு அதிகம் (52,42103)ஐம்பது இரண்டு லட்சத்து  நாற்பத்தி ரெண்டாயிரத்து நூற்று மூன்று ... Government விடா அதிகமா வேலை தராது நாம Nadar ஜாதிதகா No :1🙌🙌🙌🙌


இன்று வியாபாரத்தில்  #நாடார்கள் தான் பெரிய அளவில் உள்ளனர்

ஆரோக்யா பால்,

ஹட்சன் பால்,

கோமாதா பால் ,

அருண் ஐஸ் கிரீடம்,

opacity ஐஸ்கிரீம்,

Ibaco ice cream shop,

AVT தேயிலை,

Gold winner (இதயம்) நல்லெண்ணெய்,

VVD தேங்காய் எண்ணெய்,

AVM தேங்காய் எண்ணெய்,

ஆச்சி மசாலா,

 Bovonto cool Drinks,

ஸ்ரீ GOLD பருப்பு,

நந்தி டால் ,

ஐடியல் பிரஷர் குக்கர்,

 பிரிமியர் பிரஷர் குக்கர்,

அனிதா மெட்டல்,

சரவணா ஸ்டோர்ஸ்,

ஜெயசந்திரன Tax Titles,

சௌந்திரபாண்டியன் ஸ்டோர்ஸ்,

பொம்மீஸ் நைட்டிஸ்,

விகாஷ் நைட்டிஸ்,

⛲ VGP, (Chennai)

⛲MGM,(Chennai)

⛲QUEENS LAND,(Chennai)

🏦TAMILNADU MERCANTILE BANK, (நாம கிட்ட மட்டுமே Bank  இருக்கு Tamilnadu வேற எந்த oru  ஜாதி Bank இல்ல *TMB is a NADAR BANK*)

POWER  SOAP,

 ARASAN SOAP,

DISCOUNT SOAP,

GOBAl Tooth Powder,

வசந்த் &கோ,

உங்கள் Sathya,

🌐HCL (software solution company)Tamil Nadu No :1 business Man "Siva Nadar"..

🌆அருண் பில்டர்ஸ்,

🌆ரூபி பில்டர்ஸ்,

🏬திருநெல்வேலியின் மாவட்டத்தில்  உள்ள  70%கல்வி நிறுவனங்கள், சென்னையில் உள்ள 40% கல்வி நிறுவனங்கள், தமிழகத்தில் உள்ள 34% கல்வி நிறுவனங்கள்,(குறிப்பா சென்னை இருக்கற SSN engineering college )....

📚தமிழ் நடுல Goverment schools அடுத்தபடியா  அதிக schools வச்சருக்கறது நம்ம  Nadar ஜாதிதாக...

🎓Education &  🛃Technology systemtula நம்மள எந்த ஒரு ஜாதி கிட்ட கூட வரமுடியாது..
☸இன்று உலகம் use பண்ற Email 📩 கண்டுபுடிச்சருவாரு ஒரு நாடார்தகா (சிவா அய்யாதுரைநாடார் )

☸இந்தியாவில முதல் English Medium school   open பண்ணது நமதாக 1885 Kshatriya vidhayasala metric school from virudhunagar....

🎐சைக்கிள் அகர்பத்தி,

🎉 STANDARD பட்டாசு,

🎇குயில் மார்க் பட்டாசு ,

🎊அணில் மார்க் பட்டாசு,

🎆செஞ்சூரின் பட்டாசு,
70% பட்டாசு நிறுவனங்கள் நாடார்களுடையது ,

📁அலுமினிய சம்பந்தப்பட்ட 70% தாயாரிப்புகள் நாடார்களுடையது,
நிலா sea Food,

🏥தமிழகத்தில் உள்ள டாக்டர்களில் 24% நாடார்கள்,

📹(தமிழ்நாடுல அதிக  Media Power Television Network & News Paper இருக்கறதுமே நம்மா நாடார் ஜாதிதாக )

 📰தினத்தந்தி News Paper,
📰மாலை மலர் News Paper,
📰மாலை முரசு News Paper,
📰தினகரன் News Paper,
📒ராணி Story Book,
📺 தந்தி TV,📡
📺 வசந்த் TV, 📡
📺இமயம் TV , 📡
📺சத்திம்TV, 📡
📺News 7 TV, 📡
📺முரசு TV , 📡
📺ஆசீர்வாதம் TV,📡
📺தமிழன் TV, 📡

சென்னையில் உள்ள 83% சூப்பர் மார்கெட் மளிகைக் கடையும..
தமிழகத்தில் உள்ள 45% வணிக நிறுவனங்கள்  நாடார்களுடையது இன்னும் 60% நிறுவனங்களை நான் கூறவில்லை…

முக்கியமா சென்னை (T நகர் ,RK நகர் , திருவொற்றியூர் ,ஆவடி ,   பெரம்பூர்  இந்த தொகுதி நாடார் கோட்டை 33%பேர் ),மும்பை தாராவில 54% பேர்...

இந்த புகழுக்கு சொந்தகார ஒரே ஜாதி நாம நாடார் ஜாதிதாக
 இதனாலதான்எல்லா ஜாதியூம் நமமை அண்ணாச்சின்னுஅழைக்கிறார்கள்.
***நாடன் ல ஏதையுமே நாடாதவன் ல ***

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

தமிழர் கடவுள் முருகன் மட்டுமே பிள்ளையார் அல்ல!



தமிழர் கடவுள்முருகன் ஆரியர்(இந்து) கடவுள் பிள்ளையார்...


தமிழர் கடவுள் முருகன் மட்டுமே பிள்ளையார் அல்ல!

குமரிக்கண்டம் முதல் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் கலியுலகம் வரை தமிழினத்தின் அடையாளமாக விளங்குபவன் முப்பாட்டன் முருகன் குமரிக்கண்டம் தொடங்கி இந்தயா முழுக்க தமிழனுக்கு சொந்தமானது அதற்கு ஆதாரம் தமிழில் இயற்றப்பட்ட தொல்க்காப்பியம் சிலப்பதிகாரம் அகநானூறு, புறநானூறு உட்பட 46 இலக்கியங்களில் அதற்கு ஆதாரம் இன்றும் காணப்படுகிறது.

தற்போது, அறிஞர் குணா அவர்கள் எழுதிய #தமிழரின்_தொன்மை என்ற புத்தகத்தில் ஆதாரத்துடன் விளக்கப்பட்டுள்ளது

இந்தியா முழுமைக்கும் உள்ள தமிழர்கள் முப்பாட்டன் முருகனை முன்னிறுத்துவதால் ஏறக்குறைய 2800 வருடங்களுக்கு முன்பு இந்தியாவிற்கு பஞ்சம் பிழைக்க வந்த ஆரிய பிராமணர்களுக்கும் நம்பூதிரிகளுக்கும் ஒரு அடையாளம் தேவைப்பட்டது அதற்கென்று அவர்களால் உருவாக்கப்பட்ட ஓர் வழிபாட்டி முறை தான் விநாயகர் வழிபாடு தாங்களும் இந்தியாவின் பூர்வ குடிகள் தான் என்று நம்ப வைப்பதற்காக விநாயகரும் முருகனும் சகோதரர்கள் என்று திரித்தார்கள்.

இதுகுறித்து நாங்கள் முன்னிறுத்தும் கேள்விகள் ?

1 முருகனும் விநாயகரும் அண்ணன் தம்பி என்றால், இந்தியா முழுவதும் விநாயகரை தூக்கி பிடிக்கும் ஆரிய பிராமணர்கள் ஏன் முருகனை தமிழகம் தாண்டி முன்னிறுத்தவில்லை??

2 தமிழ்நாட்டில் ஏறக்குறைய 2800 வருடங்களுக்கு முன்பு முருகனுக்கு அறுபடை வீடுகள் அமைத்த தமிழர்கள் அவரது அண்ணன் என்று சொல்லப்படும் விநாயகருக்கு ஏன் அமைக்கவில்லை??

3 முருகன், சிவன், பார்வதி, விநாயகர் ஆகியோர் ஒன்றாக இருந்தது போன்று 2500 வருடத்திற்கு முன்பு(ஆரியர்களின் வருகைக்களுக்கு முன்பு)தமிழர்கள் கோவில் கட்டியதாய் ஆதாரம் உண்டா?

4 கந்தனுக்கு கந்த புராணம் இருக்கும்போது ஏன் விநாயகருக்கு விநாயக புராணம் இயற்றவில்லை??

5 ஆதியில் குறிஞ்சி நிலத்தில் தான் மனிதன் வேட்டையாடி வாழ்ந்தான் அந்த குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த முதல் தலைவன் தான் முருகன் நிலை இவ்வாறு இருக்கையில் 2500 வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட விநாயகரை முருகனுடன் தொடர்பு படுத்தி பேசுவது நகைப்புக்குரியது  

6 முருகனும் விநாயகரும் அண்ணன் தம்பி என்று சொல்லும் நீங்கள் ஏன் விநாயக சதுர்த்திக்கு கொண்டுக்கப்படு முன்னுரிமையை தைப்பூசத்திற்கு கொடுப்பதில்லை? 

தைப்பூசத்துக்கு நடைமுறையில் பொது விடுமுறை கூட இல்லையே??

7 தமிழகத்தை தவிர இந்தியாவின் பிற பகுதிகளில் ஏன் முருகனுக்கென்று கோவில்கள் அமைக்கப்படவில்லை??

8 தமிழர்களும் ஆரியர்களும் ஒன்றுதான் (இந்துக்கள்) என்றால் ஏன் ஈழத்தில் 85% முருகனை(உங்கள் பார்வையில் இந்து) வழிபடும் தமிழர்களை இலங்கை இனப்படுகொலை செய்யும்போது இந்தியா ஏன் தடுக்கவில்லை??

மாறாக ஏன் ஆயுதம் கொடுத்து அழித்தொழித்தது?

1 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் கோவில்களை இடிக்கும்போது, தமிழர்களை இந்துக்கள் என்று சொல்லும் இந்தியா ஏன் தடுக்கவில்லை?? 

9 கீழடியில் தற்போது மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியை ஏன் இந்திய அரசாங்கம் தடுத்து நிறுத்தியது?

காரணம் - கீழடியில் கிடைக்கப்பட்ட 5000த்திற்கும் மேற்பட்ட பொருட்களை ஆராயும்போது மதம் சார்ந்த எந்தவொரு ஆதாரமும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை நடுகல் வழிபாடு தொடர்பான ஆதாரங்களே தொடர்ந்து கிடைக்கப்பட்டு வருகிறது 

குறிப்பு - தமிழர்களின் வழிபாடு இயற்கை வழிபாடு, முன்னோர் வழிபாடு,குலதெய்வ வழிபாடு அகழ்வாராய்ச்சி முழுவதுமாக நடைபெற்றிருந்தால் இந்தியாவே தமிழர்க்கு சொந்தமானது என்பது நிரூபணமாகிவிடும் எனவே தான் கீழடி ஆய்வு நிறுத்தப்பட்டது 

'இந்து' என்ற சொல் ஏறக்குறைய 150 வருடங்களுக்கு முன்பு கால்டுவெல் என்ற வெள்ளைக்காரரால் ஆரியரின் துணையோடு தமிழர்கள் உட்பட பூர்வ குடிகள் மீது திணிக்கப்பட்டதே ஏறக்குறைய 150 வருடங்களுக்கு முன்பு உள்ள கல்வெட்டுகளிலோ தமிழகத்தில் இந்து என்ற சொல் இருந்ததற்கான மரபியல் ஆதாரத்தை நிரூபித்துவிட்டால் முருகனை இந்து என்று நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.


இந்து-பௌத்த மோதல்
........................................................................

"அகில இந்தியாவிலும் தனி மனிதர் ஒருவருக்கு சிலை வைத்து வணங்கப்பட்டது புத்தருக்கு மட்டும்தான். அப்போது கடவுளர்களுக்கு சிலை வைத்து வணங்கும் வழக்கம் ஏற்பட்டிருக்க வில்லை" --R.S.சர்மா-(பண்டைய இந்தியா நூலில்)

ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தோனேசியாவரை கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர்வரை புத்தர் சிலைகள் நிறைந்திருந்தன.

இன்றைக்கு அரசமரங்கள் தோறும் பிள்ளையார் சிலைகளை பார்க்கிறோம். அரச மரத்துக்கும் பிள்ளையார் சிலைகளுக்கும் என்ன தொடர்பு என்று ஆராய்ந்து பார்த்தால் இந்து பௌத்த மதப் போராட்டத்தின் ஒரு வரலாற்றுக் காலத்தை தோண்டி எடுக்கலாம். 

பாலி மொழியில் "போதி" என்பது அரச மரத்தை குறிக்கும்.புத்தர் அரச மரத்தின் அடியில் ஞானம் பெற்றார் என்பது புத்த மரபு.அதனால்  நாடு முழுதும் புத்த மதத்தை தழுவியவர்கள் எங்கெல்லாம் அரச மரங்கள் இருந்ததோ அங்கெல்லாம் புத்தர் சிலைகளை வைத்து வணங்கத் தொடங்கினார்கள். 

மதப் புரட்சி நடந்த காலத்தில் நாடு முழுவதும் உள்ள புத்தரின் சிலைகள் உடைத்து  நொறுக்கப்பட்டன.

புத்தரின் சிலைகளை கேவலப்படுத்துவதன் மூலம் பௌத்தர்களை  அவமானப்படுத்தும் வேலையையும் இந்துக்கள்  செய்தனர்.

புத்தர் அழகிய வடிவம் உடையவர்.  நீண்ட தவத்தின் மூலமும் முறைப்படியான் பயிற்சியின் மூலமும் அழகிய உடல் அமைப்பை பெற்றிருந்தார் புத்தர். இடை மெலிந்தும் அகன்ற மார்புகளுடனும் நீண்ட மெல்லிய நாசியுடனும் தோற்றமளிக்கும் புத்த சிலைகளை நாம் இன்றும் பார்க்கிறோம். புத்தரின் இந்த அழகிய தோற்றத்தை சிதைத்தபோது உருவானதுதான் பிள்ளையாரின் அசிங்கமான தோற்றம்.

புத்தரின் மெலிந்த உள்ளடங்கிய அழகான வயிற்றுப்பகுதியை கேலி செய்யும் வகையில் பெரிய தொப்பையுடைய உருவத்தை உண்டாக்கினார்கள். புத்தருடைய மெல்லிய நீண்ட நாசியை கிண்டல் செய்யும் வகையில் யானை மூக்கு உடைய உருவத்தை உண்டாக்கினார்கள். எலி வகை விலங்கான "மூஞ்சிறு" மிகவும் அருவருக்கத்தக்க விலங்கு. அதை தொப்பையும் யானைத் தலையும் உடைய அசிங்கமான சிலைக்கு வாகனமாக்கினர். இவை எல்லாமே புத்தரை அசிங்கபடுத்தி பௌத்தர்களை அவமானப்ப்டுத்துவதற்காக செய்ய்யப்பட்டவைகளே.

புத்தர் சிலகள் தொப்பையும் யானை முகத்தோடும் மூஞ்சிறு வாகனத்தோடும் அசிங்கப்படுத்தப்பட்ட போது அந்த நிலையிலும் புத்தரை வணங்கும் போக்கு தொடர்ந்ததால்  நாளடைவில் அந்த சிலைகளுக்கு கடவுள் அந்தஸ்து கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.இதனால் அது பிள்ளையார் என்றும்,வினாயகர் என்றும் நாமம் சூட்டப்பட்டது.பிறகு முருகக் கடவுளின் அண்ணன் என்றும் சிவனின் மூத்தமகன் என்றும் அதற்கான வரலாறுகள் புனையப்பட்டன.

அரசமரம்தோறும் பிளையார் சிலைகள் இருப்பதற்கான பிண்ணனின் இதுதான்.

பிள்ளையார் மூத்த கடவுள் என்று அழைக்கப்படுவதற்கான காரணம் என்ன?

.பிள்ளையாருக்கு தந்தை சிவன் இருக்கும்போது, அவருக்கு உறவினர்களான ப்ரம்மா விஸ்ணு இருக்கும்போது, மகாபாரதத்தை நடத்திக் காட்டிய கிருஷ்ணர் இருக்கும்போது வினாயகர் எப்படி முதல் கடவுள் ஆக முடியும்.பிள்ளையார் முதல் கடவுள் என்று அழைக்கப்படுவதன் காரணம் புத்தர்தான்.

முன்னரே கண்டோம் நாடு முழுக்க சிலை வைத்து வணங்கப்பட்ட முதல் கடவுள் புத்தர்தான் என்று.அந்த புத்தர்தான் பிள்ளையார் ஆனார் அந்த புத்த்ருக்கு உரிய முதல் கடவுள் என்ற பெயர்தான் பிள்ளையாருக்கும் வந்து சேர்ந்தது.இப்படிதான் பிள்ளையார் முதல் கடவுள் ஆனார். இன்றும் புத்தர் பிள்ளையார் வடிவில் வணங்கப்பட்டு வருவதையே இது காட்டுகிறது.

இந்து மத கடவுளை ஒருவ்ர் தான் விரும்பிய படி எல்லாம் சிலை வடித்து விரும்பிய பெயரை வைத்து விட முடியாது.ஆகம விதிகளின் படி புராணங்களின் நியதிகளின்படிதான் கடவுளர்களின் உருவச் சிலைகளை வடிக்க முடியும்.ஆனால் பிள்ளையாரைப்பொருத்தவரை எவர் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் உருவங்களை அமைத்துக்கொள்ளலாம்.விருப்பப்படி சிலைக்கு பெயர்களையும் வைத்துக்கொள்ளலாம்.

 ஏன் இப்படி.? 

பிள்ளையார் என்பது இந்துக்களின் புராணங்கள் வழிக் கடவுள் அல்ல. கடவுளர்களுக்கே உரிய ஆகம விதிகளின்படையான உருவமோ பெயரொ பிள்ளையார் கடவுளுக்கு கிடையாது. புத்தரை பழிப்பதற்காக த்ற்காலிகமாக உருவாக்கப்பட்டவர்தான் பிள்ளையார்அதனால்தான் பிள்லையாருக்கு மட்டும் லட்சக்கணக்கான பெயர்கள் வழங்கப்படுகின்றன.

இன்று புதிதாக அமைக்கப்படும் வினாயகர் கோவில்களில் வினாயகர் சிலைகளை திருடிவந்து குடி அமர்த்தும் ஒரு சடங்கு இன்று வரை நடை முறையில் இருப்பதை காணலாம்.

 இதன் பிண்ணனி என்ன? 


எங்கெல்லாம் புத்தர் சிலைகள் இருந்தனவோ அங்கெல்லாம் இரவோடு இரவாக பிள்ளையார் சிலைகளை வைத்து விடுவது வழக்கமாக இருந்தது. விடிந்து பார்க்கும்போது அங்கு இருந்த புத்த்ர் சிலைக்கு பதிலாக பிள்ளையார் சிலையைக் கண்டு பௌத்தர்கள் வேதனைப்படுவதும்  இந்துக்கள் சந்தோஷத்தில் குதிப்பதும் அன்றைக்கு வழக்கமான ஒன்று இதன் தொடர்ச்சிதான் திருட்டு பிள்ளையாரை புதிய கோயிகள் பிர்திஸ்டம் செய்யும் வழக்கம்.

எழுச்சிதமிழர் பொன்மொழிகள் 55 :



எழுச்சிதமிழர் பொன்மொழிகள் 55 :

அடங்கமறு! அத்துமீறு! திமிறி எழு! திருப்பிஅடி!

புதைந்த வரலாற்றை மீட்டெடுப்போம்! இழந்த விடுதலையை வென்றெடுப்போம்!

அடங்கா மத யானையைப் போல அதிரடி கலகம் செய்! அழிவிலே ஆக்கமுண்டு ஆகவே நீ தியாகம் செய்!

ஒருநாள் நிச்சயம் விடியும்! அது உன்னால் மட்டுமே முடியும்!

இந்துத்துவத்தை வேரறுப்போம்!
இழந்த முகத்தை மீட்டெடுப்போம்!

கூவி அழைக்காமல் சேரி திரளாது! - நீ மோதி மிதிக்காமல் சாதி ஒழியாது!

விளிம்பு நிலை மக்களை விழிப்புறச் செய்வோம்! - ஆதிக்க வரம்புகளை நொறுக்கி அதிகாரம் வெல்வோம்!

தலைநிமிர சேரி திரளும் - அன்று
தலைகீழாய் நாடு புரளும்!

விழ விழ எழுவோம்! வீழ்ந்து விட மாட்டோம்! விடுதலைப்பாதையை விட்டு விலகி விட மாட்டோம்!

கல்வி யாவருக்கும் பிறப்புரிமை! - அந்த கல்வியே மானுடத்தின் பெரு வலிமை!

நீ ஆத்திரங்கொண்டெழாமல் உன் அடுத்த வாரிசு உருப்படாது!

இருட்டும் திருட்டும் முடிவுக்கு வரும்!
எதிர்காலம் அதிகாரம் நம் கைகளுக்கு வரும்!

எரிபடும் சேரிகளில் இடிபடும் மசூதிகளில் புறப்படும் விடுதலைச் சூறாவளி!

கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம்!
எளிய மக்களுக்கும் அதிகாரம்!

கடைசி மனிதனின் கண்களில் கண்ணீர் மட்டுமல்ல! கனலும் தெறிக்கும்!

இனியும் நாங்கள் ஆடுகளல்ல! இளிச்சவாயர் கூட்டமுமல்ல! - சீறிப்பாயும் விடுதலைச் சிறுத்தைகள்!

விழிப்பாய் இரு! நெருப்பாய் எழு!

அச்சம் தவிர்த்து சினந்து கிளம்பு! சாதியமைப்பின் உச்சந்தலையில் இடியாய் இறங்கு!

மக்கள் விடுதலை மண்டியிட்டு பெறுவதல்ல! மண்ணை சிவப்பாக்கு! மடுவை மலையாக்கு!

மூளும் இங்கே விடுதலை நெருப்பு! திசைநாளும் நாறும் சாதிக்கொழுப்பு!

எதனையும் எதிர்கொள்ள இரு விழிப்பாய்! இமயம் போல் தடைவரினும் எகிரிப்பாய்!

அடக்க நினைத்திடும் சிறைச்சாலை! - எமக்கு அரசியல் கற்பிக்கும் பாடசாலை!

சேரியில் புரட்சியின் சினை வெடிக்கும்! ஆதிக்கவெறி சாதியத்தின் தலைநறுக்கிப் பகை முடிக்கும்!

வாள் கைமாறும் போது தான் - நம் வாழ்க்கை மாறும்!

குடிசைவாழ் மக்கள் குமுறி எழுந்தால் கோட்டை மேடும் குப்பை மேடாகும்!

வெறுப்பின்றி சலிப்பின்றி விடுதலைக்கு உழைப்போம்! - நம்மை வெறுப்பவர்கள் சுமத்துகின்ற வீண்பழிகளைத் துடைப்போம்!

உன்னைப் படி! தாய்மண்ணைப் பிடி!

இந்துப் பெயர்களை மாற்றுவோம்! இனிய தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவோம்!

படை பெருக்கு! தடை நொறுக்கு!

சிறை! சிறுத்தைகள் ஓய்வெடுக்கும் குகை!

பொய் வழக்கும் கொடுஞ்சிறையும் போராளிகளை என்ன செய்யும்!

சிந்திய இரத்தம் வீண் போகாது! சிறுத்தைப் படையோ பின் வாங்காது!

பாதையில் குறுக்கிடும் தடைமீறு! - அதிரடிப் பாய்ச்சலில் படைத்திடு வரலாறு!

அடித்தட்டு மக்களை அரசியல்படுத்துவோம்! - சாதிய அமைப்பின் அடிப்படையை அம்பலப்படுத்துவோம்!

அரசியல்படுத்துதல் நடந்தேற வேண்டும்! அது அடுத்தடுத்த தலைமுறைக்கும் தொடர்ந்திட வேண்டும்!

அதிகாரம் பரவாமல் ஜனநாயகம் மலராது! அரசியல் அமைப்பாக மாறாமல் ஆதிக்கம் வீழாது!

அரசு அதிகாரம் அனைவராலும் உருவானதாகும்! எனவே ஆட்சி அதிகாரம் அனைவருக்குமானதாகும்!

அடித்தட்டு மக்களின் நிலை மாற வேண்டும்! அதற்கு அரசியலதிகாரம் கை மாற வேண்டும்!

அரசியல் அதிகாரம் பொதுச்சொத்தேயாகும்! அதனை அனைவருக்கும் பகிர்ந்தால் தான் ஜனநாயகமாகும்!

கற்றலும் கற்பித்தலும் கடமையாதல் வேண்டும்! அந்த கடமையில் தலைவர்கள் உருவாதல் வேண்டும்!

தன் வழி மாற்றான் வழி மதிப்பிடல் வேண்டும்! சதிகளைத் தகர்த்திட கமுக்கமாய் திட்டமிடல் வேண்டும்!

உலகத்தை விடிய வைக்கும் உழைக்கின்ற வர்க்கம்! ஒருபோதும் கலகத்தை நடத்தாமல் கண்டதில்லை மார்க்கம்!

தனிநலன் உடைபடப் பொதுநலன் பிறக்கும்! - அதுவே தன்னையும் பிறரையும் அறிந்திட வைக்கும்!

அமைப்பை முறை செய்யும் விதிகள் மதிப்போம்! - வீணாய் ஆளுக்கொரு வழிசெல்லும் ஆணவம் தவிர்ப்போம்!

அடையாளத்தை இழந்தும் ஏற்றும் ஐய்க்கியமாவோம்! - கொடிய ஆதிக்கத்தை எதிர்க்கும் சிதைக்கும் ஆற்றல் பெறுவோம்!

பொது ஒழுங்கின் அடித்தளமாய் தனிஒழுங்கு அமையும்! - அது பொதுநலத்தைக் கொண்டதெனில் தலைநிமிர்வு விளையும்!

துரோகம் துள்ளும்!
தூய்மையே வெல்லும்!

தகவல் தொடர்பின்றி மக்கள் தொடர்பில்லை! கொள்கைசார் மக்கள் திரளின்றி அமைப்புக்கு வலுவில்லை!

கருத்துரிமை பறிபோனால் அடிமைத்தனம் வேர் விடும்! - அந்த கருத்துரிமை மீட்டால் தான் கைவிலங்கு அறுபடும்!

அடுத்த பாய்ச்சலுக்கு அணியமாவோம்! அடுத்த தலைமுறையை அணியமாக்குவோம்!
கொள்கை வெல்ல களமாடுவோம்! கோட்டையில் ஒருநாள் கோடியேற்றுவோம்!

நெருக்கடிகள் சூழ்ந்த போதும் கொள்கை நெறிப்படியே வாழ்தல் வீரம்! - நெருப்பலைக்குள் வீழ்ந்த போதும் அடிமை நெறி மீறிப் பாய்தல் தீரம்!

கொண்ட கொள்கையில் உறுதியை காட்டு! தேவையென்றால் கொள்கை சிதையாமல் உத்தியை மாற்று!

சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை!

கருத்தியலை ஆழமாக வேரூன்றச் செய்வோம்! களப்பணிகளைத் தீவிரமாக மேலோங்கச் செய்வோம்!

எம் பதிவுகள் வெறும் கண்ணீர்த்துளிகள் அல்ல! - கலகத்தின் சினைகள்.

#HBD_THIRUMA
#தலைவர்55

வியாழன், 24 ஆகஸ்ட், 2017

அறிஞர்கள் பார்வையில் ஆபாச விநாயகர்



அறிஞர்கள் பார்வையில் ஆபாச விநாயகர்

*விநாயகர் வரலாறு அசிங்கமும், ஆபாசமும் நிறைந்தது என்பதையும், தமிழின அறிவுநெறி நாகரிகப் பண்பாட்டுக் கொள்கைகட்கு ஒத்து வராது என்பதையும் நாம் ஆண்டாண்டு காலமாக விளக்கி வருகிறோம் எனினும், நம் கருத்துக்கு ஆதரவு தந்து வலியுறுத்தும் வகையில் பிற துறை அறிஞர்களின் கருத்துகளும் அமைந்துள்ளன என்பது கண்டு ஓரளவு மன ஆறுதல் அடையும் நாம், அவ்வாராய்ச்சி அறிஞர்களின் சிந்தனைக் கருத்துகளைத் தமிழக மக்கள் பார்வைக்குப் படைக்கிறோம்.*

*இந்த வழிபாடு இடைக்கால ஏற்பாடே:-*

அறிஞர்கள் சிலர், சங்க இலக்கியத்தில் விநாயகரைப் பற்றிய குறிப்பு காணப்படாததால் - இடைக்காலத்தில் வந்த வழிபாடுதான் விநாயகன் வணக்கம் என்பர். முதலாம் நரசிம்ம வர்மனின் தானைத் தலைவராகிய பரஞ்சோதியார் என்னும் சிவத்தொண்டர், இரண்டாம் புலிகேசியை வென்று அவன் தலைநகராகிய வாதாபி யிலிருந்து எடுத்து வந்த கணபதியின் திருவுருவச் சிலையைத் திருச்செங்காட்டங்குடியில் எழுந்தருளச் செய்தார் என்பர். இஃது - உண்மைதான். ஞானசம்பந்தர் பொடி நுகரும் சிறுத்தொண்டர்க்

கருள் செய்யும் பொருட்டாகக்


கடிநகராய் வீற்றிருந்தான்

கணபதீச் சுரத்தானே - என்று பாடுகிறார்.

------------------------------ *(டாக்டா சோ.ந. கந்தசாமி தமிழ்த் துணைப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், ஞான விநாயகர் என்னும் கட்டுரையில் பக்கம் 20.)*
*********************************************************************************

*பண்டை நூல்களில் வினாயகர்  இல்லை*


நம் தமிழ்நாட்டில் பண்டைத் தமிழ் நூல்களில் இவ்விநாயக வழிபாடு சொல்லப்படவில்லை. திருஞானசம்பந்தர் தன் தேவாரத்தில் விநாயகர் வழிபாட்டைப் பற்றிக் கூறியுள்ளார். உமை அம்மை பெண் யானையின் வடிவு கொள்ள சிவபிரான் ஆண் யானை வடிவு கொண்டு யானை முகத்தை உடைய கணபதியைத் தோற்றுவித்தான் என்கிறார். சிறுத்தொண்டர், பரஞ்சோதி என்ற பெயரோடு வடபுலத்தில் வாதாபி என்ற நகர்மேல் படை எடுத்துச் சென்று, அந்நகரை அழித்து வெற்றிகொண்டுவந்தபோது, அங்கு சிறப்பாக காணப்பட்ட கணபதியின் படிமத்தையும் கொண்டு வந்து தம்மூரில் கணபதீச்சுரம் செய்து வழிபட்டார் என்பதும் வாதாபியில் இருந்து கொணர்ந்ததால் வாதாபி எனப் பெயர் பெற்றார் என்பதும் இங்கு நினைவுகூர்தல் வேண்டும்.

--------------------------------------      *(தமிழாகரர் - வித்துவான் செ. வெங்கடராமச் செட்டியார், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், தன்னை நினையத் தருகின்றான் என்ற கட்டுரையில் பக்கம் 17)  மேற்கூறிய இரு கருத்துகட்கும் ஆதாரம் : சிதம்பரம் முக்குறுணி விநாயகர் திருக்குடமுழுக்கு விழா மலர் 8-9-1978*
*********************************************************************************


*விநாயகரின் பிறப்புக் கதைகள் ஆபாசமே!*


பிள்ளையார் பற்றிய கதையை விளக்கவேண்டியது அவசியம். இந்த உண்மையை உணர்ந்தபின், பிள்ளையார் கடவுள்தானா? பிள்ளையார் பொம்மையை உடைத்ததனால் பெரியார் என்ன அடாத செயலைத் செய்துவிட்டார் என்பதைத் தெளிவாக உணரமுடியும்.

புராணக் கதைகளில் கணபதியின் பிறப்போ பல்வேறு விதமாகக் கூறப்பட்டுள்ளது. எது உண்மை என்பதை யாரும் கூறமுடியாது. ஆனால் ஒன்று தெளிவு. கற்பனையின் விளைவே கணபதி. கீழ்க்கண்ட பல்வேறு கதைகள் இதைத் தெளிவாக நிரூபிக்கின்றன. கணபதி, பெண்ணில்லாமல் ஆணுக்குப் பிறந்தவர் என்றும், இதற்கு நேர்மாறாக ஆண் இல்லாமல் பெண்ணுக்குப்பிறந்தவர் என்றும் கூறப்படுகிறது.

புராணக் கதையில் கணபதியின் பிறப்பு அசிங்கமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. பார்வதி தன் உடல் அழுக்கை உருண்டை ஆக்கி விளையாடிக் கொண் டிருந் தாளாம். அந்த உருண்டையின்மீது அவள் அன்பு சொரிய அதற்கு உயிர் கொடுத்து அதைத் தன் மகன் என்று அழைத்தாளாம். மற்றொரு கதை கணபதியின் பிறப்பை வேறு விதமாக சித்தரிக்கிறது. பார்வதி தன் உடல் அழுக்கைக் கழுவி அதைக் கங்கா நதியின் முகத்து வாரத்தில் உள்ள யானைத் தலை ராட்சஷி மாலினியைக் குடிக்க வைத்தாளாம். இதன் விளைவாக மாலினி கர்ப்பம் தரித்து பிறகு ஒரு குழந்தையைப் பெற்றாளாம். அக்குழந்தையைப் பார்வதி எடுத்துச் சென்று விட்டாளாம்.


மேற்கூறிய கதைகள் அனைத்தும் கணபதிக்கு யானைத் தலை ஏன் வந்தது என்பதைத் தெளிவுபடுத்தவில்லை. பிரம்மாவை வதைத்த புராணத்தில் ஒரு கதை கூறப்பட்டுள்ளது. கணபதி பிறந்த நேரத்தில் சனிப்பார்வை தோஷத்தால்தலை இல்லாமல் பிறந்தாராம். கணபதியின் தாய் தன் குழந்தைக்குத் தலை இல்லையே என்று தேம்பித் தேம்பி அழ, விஷ்ணு பகவான் ஒரு யானைத் தலையை ஒட்ட வைத்தாராம். ஆனால், கந்த புராணம் இதை மறுக்கிறது. கணபதி தன் தாயின் வயிற்றில் இருந்தபோது சிந்துரா என்னும் ராட்சஷி வயிற்றுள் புகுந்து குழந்தையின் தலையைக் கடித்துத் தின்றுவிட்டாளாம். பிறந்த குழந்தைக்குத் தலை இல்லாமல் போகவே அக்குழந்தை யானைத் தலைகொண்ட கஜாசுரன் என்ற ராட்சஷன் தலையை வெட்டி தன் கழுத்தில் ஒட்ட வைத்துக் கொண்டதாம். தலையும் கண்ணும் இல்லாத இக்குழந்தைக்குத் தனக்குத் தலை இல்லை என்று எவ்வாறு தெரிந்தது? கஜாசுரனின் தலையை எப்படி வெட்டித் தன் கழுத்தில் ஒட்ட வைத்துக் கொண்டது என்பதை ஸ்கந்த புராணம் தெளிவுபடுத்தவில்லை.


சுப்ரபேத ஆகமம் என்ற நூல் கூறுவதாவது சிவனும், பார்வதியும் யானையைப் போல் சம்போகம் செய்தார்களாம். இதன் விளைவாகப் பிறந்தது யானைத் தலைக் குழந்தையாம்.

-------------------------------- *(பொதுவுடைமை இயக்க அறிஞர் ஏ.எஸ்.கே. அய்யங்கார் எழுதிய பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா. என்ற நூலில் பக்கம்* *36,40, 41,42).*

*********************************************************************************

*மறைமலை அடிகள்:-*

விநாயகர் பற்றிய வரலாற்றினை அறிவுடையோர் அருவருக்கத்தக்கதான ஒரு கதை வடிவிற் கட்டிவிட்டார்கள். யாங்ஙனமெனிற் கூறுதும்:

திருக்கயிலாயத்தில் சிவபிரானும் அம்மையும் மகிழ்ச்சியோடு அமர்ந்திருக்கையில் கோயிலின் ஒரு பக்கத்துச் சுவரில் ஆண்-பெண் யானைகளின் வடிவங்கள் தீட்டப்பட்டிருந்தனவாம். அவற்றைப் பார்த்ததும் அவ்வியானை வடிவெடுத்து அம்மையைப் புணரவேண்டும் என்னும் காம விருப்பம் இறைவனுக்கு உண்டாயிற்றாம். அக்குறிப்பினைத் தெரிந்துகொண்ட அம்மையார் உடனே ஒரு பெண் யானை வடிவடுக்க, இறைவனும் ஓர் ஆண் யானை வடிவெடுத்து அவளைப்புணர்ந்தானாம். அப்புணர்ச்சிமுடிவில் யானை முகமுடைய பிள்ளையார் பிறந்தானாம். இவ்வாறு கந்த புராணத்தில் கதை சொல்லப்பட்டுள்ளது. பாருங்கள் அறிஞர்களே உணர்ந்து பார்க்கும் எந்த உண்மைச் சைவருக்கேனும் இக்கதை அருவருப்பினையும் மானக் குறைவினையும் விளைவியாது ஒழியுமோ? மக்களுள்ளும் இழிந்தவர் செய்யாத இக்காமச் செயலினை இறைவன் செய்தானென்பது எவ்வளவு அடாததாயிருக்கிறது? தேவ வடிவில் நின்று புணரும் இன்பத்தை விட, இழிந்த விலங்கு வடிவில் நின்று புணரும் இன்பம் சிறந்ததென்று கூற எவரேனும் ஒருப்படுவரோ? அத்தகைய இழிந்த காம இன்பத்தினை இறைவன் விரும்பினான் என்றாலும், பேரின்ப உருவாயே நிற்கும் கடவுளிலக்கணத்திற்கு எவ்வளவு மாறுபட்டதாய்-எவ்வளவு தகாததாய் - எவ்வளவு பழிக்கத்தக்கதாய் இருக்கின்றது உணர்ந்து பார்மின்! இக்கதை விலங்கின் புணர்ச்சியைக் கண்டு வரம்புகடந்து காமங்கொண்ட ஒர் இழிந்த ஆரியப் பார்ப்பனனால் வடமொழியில் கட்டப்பட்டு வழக்கத்தில் வந்து விட்டது. பிள்ளையார் பிறப்பினைக் கூறும் கதைகள் அருவருக்கத் தக்கனவாய், கடவுளிலக்கணத்துக்குப் பெரிதும் மாறு கொண்டனவாய் நிற்கின்றன.

ஒரு காலத்தில் உமாதேவி அம்மையாருக்கு மூத்த பிள்ளையார் ஒருவர் பிறந்தனராம். அப்பிள்ளையைக் காணும் பொருட்டுத் தேவர்கள் எல்லாரும் அங்கு வந்தனராம். வந்தவருள் சனியனெனும் தேவனும் ஒருவனாம். இச்சனியன் தான் அப்பிள்ளையைப் பார்த்தால் அதற்குத் தீது உண்டாகு மென்று நினைத்து, தலை குனிந்து அதனைப் பாராதிருக்க அவன் கருத்தறியாது, அம்மை அவன் தம் மகனைப் பாராது இகழ்ந்தனனென்று சினங்கொள்ள அதற்கஞ்சி அவன் அப்பிள்ளையைப் பார்த்தனனாம். பார்த்த உடனே அப்பிள்ளையின் தலை எரிந்து சாம்பலாய்ப் போயிற்றாம். அய்யோ! அதனைக் கண்டதும் ஆற்றாமை மிகப்பெற்ற உமையம்மையார் அச்சனியன்மேல் சினங்கொள்ளல் ஆயினளாம். அது கண்ட நான்முகன் முதலான தேவர்கள் எல்லாரும் அம்மையை வேண்டி அவனை மன்னிக்கும்படி அவனுக்காகப் பரிந்து பேசினராம். அதன்மேற் சிவபிரானும் அம்மையின் சினத்தைத் தணிவித்து வடக்கு நோக்கிப் படுத்திருக்கும் ஒரு யானையின் தலையை வெட்டிக் கொணரும்படித் தேவர்களுக்குக் கட்டளையிட அவர்களும் அவ்வாறே சென்று ஒரு யானையின் தலையைக் கொண்டு வர அத்தலையை அப்பிள்ளையின் முண்டத்திற் பொருத்தி அதனை உயிர் பெற்றெழச் செய்தனராம். அது முதற்றான் பிள்ளையாருக்கு யானைமுகம் உண்டாயிற்று என்பது ஒரு கதை.

இங்ஙனமாக இக்கதை பிரமவைவர்த்த புராணத்தின்கட் சொல்லப்பட்டது. இக்கதையின் கண் உள்ள மாறுபாடுகளையும், இழிவுகளையும் ஒரு சிறிது உற்று நோக்குமின்காள்! அன்பர்களே, எல்லாம் வல்ல சிவபிரானுக்கும் அம்மைக்கும் ஒரு பிள்ளை பிறந்ததென்றால் அஃது எவ்வளவு தெய்வத் தன்மையும் எவ்வளவு பேராற்றலும் உள்ளதாயிருக்க வேண்டும்? அத்துணைச் சிறந்த தெய்வப் பிள்ளையைச் சனியன் என்னும் ஓர் இழிந்த தேவன் நோக்கின உடனே அதன் தலை எரிந்து சாம்பலாய் போயிற்றென்றால் அப்பிள்ளை தெய்வத்தன்மை உடையதாகுமோ! கூர்ந்து பாருங்கள்! மேலும், அத் தெய்வப் பிள்ளையைவிடச் சனியனன்றோ வல்லமையிற் சிறந்த பெருந்தெய்வமாய் விடுகிறான்? அதுவுமேயன்றி, முழுமுதற் கடவுளான அம்மையார் தம் பிள்ளையைப் பார்த்த சனியனின் பார்வைக் கொடுமையைத் தடை செய்யமாட்டாமற் போயினரென் றால் அச்சனியனல்லவோ அவர்களினும் மேலான தெய்வம் ஆகி விடுகிறான்?

அல்லாமலும், சனியனின் பார்வையால் எரிந்துபோன தம் பிள்ளையின் தலையை மீண்டும் உண்டாக்கிக் கொள்ளும் ஆற்றல் அம்மையப்பர்க்கு இல்லாது போயிற்றென்றோ சொல்லல் வேண்டும். அதுவல்லாமலும் அழகிற் சிறந்த தேவ வடிவங்களின் தலைகள் எல்லாம் இருக்க, அவை தம்மை எல்லாம் விட்டுவிட்டு அழகற்ற ஒரு யானையின் தலையை வெட்டிக் கொணர்ந்து பொருத்தினா னென்பது கடவுளின் இறைமைத் தன்மைக்கு இழுக்கன்றோ? இத்துணை மாறுபாடுகளும் இத்துணை இழிவுகளும், இத்துணை பொல்லாங்குகளும் நிறைந்த இப்பொல்லாத கதையை நம்புவோனெவனும் உண்மைச் சைவன் ஆவானோ? சொல்மின்காள் ஆழ்ந்து பார்க்குங்கால் எல்லாத் தேவர்களிலும் மேலாகச் சனியனைக் கொண்டாடி அவனை உயர்த்துவதற்கு விரும்பிய ஒர் ஆரியப்பார்ப்பனனே இக்கதையைக் கட்டி விட்டு எல்லாம் வல்ல சிவபெருமானையும், உண்மையிற் சிறந்த சைவ சமயத்தையும் இழிவு படுத்தி விட்டானென்பது உங்களுக்குப் புலப்படவில்லையா? இவ்வாறு சைவத்துக்கும் சிவபிரான் தன் முழுமுதற்றன்மைக்கும் முழுமாறான பொல்லாக் கதைகளை நம்பவேண்டாமென்னும் எமது அறிவுரையினைக் கண்டு குறைகூறும் குருட்டுச் சைவர்களே உண்மைச் சைவத்திற்குப் பெரும் பகைவர்கள் என்று தெரிந்து கொள்மின்காள்!

பிள்ளையார் பிறப்பு சிவமகாபுராணத்தின்கட் வேறொரு வகையாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. அதனையும் அதன் மாறுகோளினையும் இங்கு ஒரு சிறிது எடுத்துக் காட்டுதும்; ஒரு கால் உமையம்மையார் குளிக்கப் போயினராம். போகுமுன் தமது உடம்பிலுள்ள அழுக்கையெல்லாம் திரட்டி எடுத்து அதனைத் தமது கையாற் பிடித்து தமது குளிப்பறையின் முன் வாயிலில் வைத்து சிவபிரான் வந்தனராயின் தடை செய்க என்று கட்டளையிட்டுத் தாம் உள்ளே குளிக்கச் சென்றனராம். அங்ஙணம் பிடித்து வைக்கப்பட்ட அவ்வழுக்குத் திரள் உடனே உயிருள்ள பிள்ளையாராகி அக்குளியலறையின் வாயிலிற் காவலாய் இருந்ததாம். சிவபெருமான் அம்மையைத் தேடிக் கொண்டு அங்கு வந்தனராம். அவரைக் கண்டதும் அவ்வழுக்குப் பிள்ளையார் அவரை உள்ளே போகவேண்டா மெனத்தடை செய்ய இருவர்க்கும் போர் மூண்டதாம். நெடுநேரம் போராடிக் கடைசியாகச் சிவபெருமான் அப்பிள்ளையாரின் தலையை வெட்டினாராம். அப்போது உள்ளிருந்து வந்த உமையம்மையார் அய்யோ! என் பிள்ளையை வெட்டி விட்டீரே என்று கரைந்து ஆற்றாமல் அழுதனராம். அது கண்ட சிவபெருமான் தாமும் ஆற்றாதவராகி நம் பிள்ளை என்று அறியாமல்   வெட்டிவிட்டேன். ஆயினும் நீ வருந்தாதே இப்போதே இதனை உயிர் பெற்றெழச் செய்வம் என ஆறுதல் மொழிந்து வடக்கு நோக்கிப் படுத்திருந்த ஒரு யானையின் தலையை வெட்டிக் கொணர்வித்து அதனை அப்பிள்ளையாரின் உடம்பிற் பொருத்தி உயிர்பெற்றெழச் செய்தனராம்.

அடிகளாரின் ஆராய்ச்சி: அன்பர்களே! இக்கதை எவ்வளவு அருவருக்கற்பாலவான மாறுபாடுகள் நிறைந்ததாய் இருக்கின்றது? எல்லாம் வல்ல இறைவியான உமைப் பிராட்டியார்  வினை வயத்தால் பிறக்கும் நம் போல் ஊனுடம்பு உடையரல்லர். அவர்தம் திருமேனி சொல்லொணா அருள்ஒளி வீசித் துலங்குவதென்று தேணோப' நிடதம் நன்கெடுத்து மொழியா நிற்க, அவ்வறிவு நூலுக்கும்  கணத்துக்கும் முற்றும் மாறாத அம்மையார் திருமேனியில் அழுக்கு  யிருந்ததென்றும் அவ்வழுக்கினைத் திரட்டி எடுத்து . சமைத்தனள் என்றும் கூறும் அழுக்குப்புராணம் சிவமகாபுராணமெனப்  பெறுதற்குத் தகுதி யுடையதாமோ? ஆராய்ந்து கூறுமின்காள் ஊனுடம்பு படைத்த மக்களுள்ளும் அழகும், நாகரிகமும், தூய்மையும் வாய்ந்தார். சிலரின் உடம்புகள் அழுக் கில்லாதனவாய் மினுமினுவென்று மிளிரா நிற்கத் தூய அருட்பேரொளியின் வடிவாய் விளங்கும் அம்மையின் திருமேனி அழுக்குடைய தாயிருக்குமோ? சொன்மின்காள்!

மேலும் தன் மனைவியாரைத் தேடிக்கொண்டு வந்த சிவபிரான் தமக்குப் பிள்ளையென்று அறியாமல் அதன் தலையை வெட்டிவிட்டனரென்பது கடவுளிலக்கணத்திற்கு எவ்வளவு முரண்பட்டதாயிருக்கின்றது? எல்லா உயிர்க்கும் உயிராய் அறிவுக்கு மறிவாய் எல்லா உலகங்களிலும் எல்லாகாலங்களிலும் நிகழும் நிகழ்ச்சிகளை எல்லாம் ஒருங்கே உணரும் பெருமான் தன் பிள்ளையைத் தாமே அறியாமல் வெட்டினரென்றால் அஃது அறிவுடையோரால் ஒப்பத் தகுந்ததாகுமோ? இன்னும் பாருங்கள் வெட்டுண்ட பிள்ளையைத் தலையும் உடம்பும் பொருத்தி உயிரோடு எழுப்பிவிடலாகாதா? வெட்டுண்ட தலையை விடுத்து வேறொரு யானைத் தலையை வருவித்துப் பொருத்தினனென்பது எவ்வளவு தகாத செயலாய் இருக்கின்றது? இத்துணைத் தகாதனெவைன்பது கடவுளிலக்கணத்துக்கு அடுக்குமா? உண்மையாய் நோக்குங்கால் சிவபிரானையும், அருள் வடிவான பிராட்டியையும், ஒங்கார, ஒலி வடிவில் விளங்கும் இறைவனையும் இழித்துப் பேச விரும்பின எவனோ ஒர் ஆரியப் பார்ப்பனன் இக்கதையைச் சிவமகா புராணமென்னும் பெயராற் கட்டி விட்டனன் என்பது வெள்ளிடைமலை போல் விளங்கா நிற்கும். இப்பொல்லாத பார்ப்பனச் சூழ்ச்சியை ஆராய்ந்து பார்க்கும் அறிவு மதுகை இல்லாத குருட்டுச் சைவர்கள் இவ்வழுக்குப் புராணத்தைச் சிவமகாபுராணமெனக் கொண்டாடிச் சைவ சமயத்துக்குக் கேடு சூழ்வது பெரிதும் வருந்தற்பாலதாயிருக்கின்றது.

----------------------------- *(மறைமலை அடிகள் எழுதிய - சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ள கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா என்னும் நூல்.)*        

 -------------------------- *(தொகுப்பு: வய் .மு.கும்பலிங்கன், குடந்தை) --”விடுதலை”15-09-2015*

 இதை *நாத்திகம்  பேசும் பெரியார் மற்றும் அம்பேத்கரிஸ்ட்கள் சொல்லவில்லை வினாயகரின் புராணமே அப்படித்தான் சொல்கிறது.*


விநாயகர் சதுர்த்தியா - வெட்கமாக இல்லையா?...........

விநாயகர் எனும் கடவுள் இந்த நாட்டிலே உற்பத்தியான கடவுள் என்றும் சொல்ல முடியாது. வடநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டு இங்கே இவ்வளவு கூத்தடிக்கப்படுகிறது. ஆற்றங்கரையோரம், அரசமரத்தின் கீழ், குளத்தங்கரையிலும், வீதிகளின் சந்தியிலும் வைக்கப்பட்டு இருக்கும் இந்தக் கடவுளின் யோக்கியதையைச் சொல்லப்போனால் அது ஏனைய கடவுள்களுக்கு மிகவும் வெட்கக்கேடாகும்.

அதாவது, இவருடைய பிறப்பின் வரலாறு அந்தப் பார்ப்பனர்களாலேயே எழுதப்பட்ட புராணங்களில் இருந்து பார்த்தாலும் கூட மிக மிக மோசமாக உள்ளது. விநாயகர் பிறப்பு பற்றி மூன்று வரலாறு உள்ளது. நம் மக்களுக்கு இவற்றில் இருந்து இது உண்மையில் கடவுள் என்று சொல்ல முடியுமா என்பதை அறிய முடியவில்லை.

சிவன் என்ற கடவுளின் மனைவி பார்வதி குளிக்கப் போனாளாம். தான் குளிக்கின்றபோது யாராவது அந்த அறைக்குள் புகுந்துவிடக்கூடாதே என்று பயந்து குளிக்கும் அறைக்கு வெளியே காவல் வைப்பதற்கு ஒரு உருவத்தை உற்பத்தி செய்தாளாம். அந்த உருவத்தை எப்படி உற்பத்தி செய்தாள் என்பது தான் கடவுள் தன்மையை விளக்கும் அதிசயம்.

முதலாவதாக, பெண்கள் குளிக்கும்போது அங்கு அந்த அறைக்கு ஆண்கள் போவது சர்வ சாதாரணமாக இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால், யாராவது வந்து விடுவார்களோ என்ற பயம் இருந்திருக்கத் தேவையில்லை; காவல் செய்யவும் ஆள் தேவையில்லை. அடுத்தபடியாக, ஆண்கள் யாராவது வந்து விடுவார்கள் என்ற பயம் இருந்தால், விநாயகர் என்று செய்யப்பட்ட அந்த உருவம் ஆண் உருவம் தானே! ஆண்கள் வந்துவிடக் கூடா தென்ற நினைப்பினால் ஒரு ஆணையே உற்பத்தி செய்து சதா நேரமும் பார்த்துக்கொண்டு இருக்கச் செய்வது எவ்வளவு புத்திசாலித்தனம்?

குளிப்பதற்காகச் சென்ற பார்வதி, தன் உடம்பின் மேல் உள்ள அழுக்கை உருட்டி ஒரு உருண்டை பிடித்து, அதை வாசற்படியில் வைத்து உயிர்கொடுத்தாள் என்று கூறப்படுகிறது. இதுதான் விநாயகர்!

ஒரு மனிதனுடைய எடைக்கு ஏற்றவாறு அத்தனை பெரிய அழுக்கு பார்வதியின் மேல் இருந்தது என்பதை ஒப்புக்கொள்ளாமல் இருக்கமுடியுமா? ஒரு நாளாவது பார்வதி குளித்து இருப்பாளேயானால் இவ்வளவு அழுக்குப் பிடித்து இருக்குமா? எனவே, சுத்த ஆபாசமும், அசுத்தமும் நிறைந்தவளாகவே நாம் அவளைக் கருதவேண்டியுள்ளது.

அடுத்தபடியாக, அவள் குளிக்கும்போது அங்கே வருகின்றான் சிவன். சிவனைக் கண்டதும் உமா கேட்கின்றாள், "இங்கே எப்படி வந்தீர்? நான் குளிக்கும் போது நீர் வரலாமா? ஒரு ஆளை நடையில் காவல் வைத்து இருந்தேனே, அவனை எப்படி தட்டிக் கழித்துக்கொண்டு வந்தீர்கள்?" என்றதும், அதற்குப் பரம சிவன் கூறுகின்றார், "நான் வரும்போதுநடையிலே ஒருவன் நின்று கொண்டு வழி மறித்தான்; நான் இங்கே வரவேண்டும் என்று கூறினேன். அதற்கு அவன் விடமாட்டேன் என்றான்; யாராய் இருந்தாலும் சரி, கணவனாய் இருந்தாலும் விட மாட்டேன் என்றான்! என்னைவிடாமல் தடுத்தான். எனவே நான் என் கை வாளால் அவன் தலையைச் சீவினேன். பிறகு தடையின்றி உன்னைக் காண வந்தேன்" என்றான்.

இதிலே, குளிக்கும் பெண் தன் மனைவியாய் இருந்தாலும்கூட அவனுக்கு அங்கே என்ன வேலை? இரண்டாவது, அதற்காக ஒரு மனிதனையே கொலை செய்து விட்டுப் போகவேண்டிய அவ்வளவு பெரிய சங்கதி அங்கே என்ன நடந்துவிட்டது? மூன்றாவது, அவள் கணவனே என்று தெரிந்த பின்னும் பரமனை அவன் தடுத்தது எவ்வளவு முட்டாள்தனம்? இவற்றை எல்லாம் யோசனை செய்தால் இது ஒரு அண்டப்புளுகு என்பதும், முட்டாள்தனமான நடவடிக்கை என்பதும் விளங்கும்.

இதனை அறிந்த பார்வதி, துடிதுடித்துக் கொண்டு ஓடி வந்து பார்க்கின்றாள். தலை துண்டாக்கப்பட்டு உள்ளது. ஆனால் துண்டாக்கப்பட்ட தலையை அங்கே காணோம். உடனே பரமனை நோக்கி, "நாதா என் அருமைச் செல்வம் - என் குழந்தை போன்று நான் உற்பத்தி செய்த அந்த அருள் செல்வத்தை எனக்குத் தாங்கள் தந்தாக வேண்டும். இல்லையேல் என்னால் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது!" என்று கூறினாள்.

பிறகு இதைக்கேட்ட பரமன் என்ன செய்வதென்று யோசித்து, கடைசியாக ஒரு யானையின் தலையைக் கொய்து அந்த முண்டத்தின் மேல் வைக்கின்றான். உடனே அந்த முண்டம் யானைத்தலை கொண்ட விநாயகர் ஆகிறது. இது ஒருகதை.

மற்றொன்று -பரமனும், பார்வதியும் ஒரு நாள் வனத்திற்குச் சென்றபோது, ஒரு ஆண் யானையும், பெண் யானையும் கலவி செய்து கொண்டு இருந்ததைப் பார்வையிட்டனர். அதே ஆசையால் பரமனும், பார்வதியும் யானை வடிவில் உருமாறிக் கலவிசெய்து பெற்றதுதான் விநாயகர்.மூன்றாவது,ஒரு நாள் பார்வதியும், பரமனும் போய்க்கொண்டு இருக்கையில், ஒரு யானையின் உருவம் (பொம்மை) ஒன்றைக் கண்டார்களாம். ஆகவே, அதன் மேல் மோகம் கொண்ட பார்வதியும் அதுபோல் பிள்ளை பிறக்கவேண்டும் என்ற நினைத்தாளாம். ஆகவே, அப்படிப் பிறந்ததுதான் விநாயகர் என்றும் கூறுகிறார்கள்.ஆகவே இந்த மூன்று கதைகளையும் தெரிந்த மக்களே இந்தப்படி மண்டையை உடைப்பார்கள் என்றால், இவர்களின் புத்திகெட்டத் தன்மையை, முட்டாள்தனத்தைப் பொறுத்துக் கொண்டு இருக்க முடியுமா? இந்தப்படி ஆபாசமான கதையை எழுதி நம்மை நம்பும்படிச் செய்துவிட்டனர் பார்ப்பனர். ஆகவே, இது சிவனும், சுப்பிரமணியனும் வந்த காலத்திலே வந்தது, வடநாட்டான் இங்கு கொண்டுவந்து விளம்பரம் செய்துவிட்டான். அது இப்போது பெரிய கடவுளாக மதிக்கப்பட்டு எல்லாக் காரியங்களுக்கும் முன்னே வைக்கும் இடத்தைப் பெற்றுவிட்டது. ஆனதால் தான் பிள்ளையார் சதுர்த்தி - விநாயகர் சதுர்த்தி என்று ஆடம்பரமான நாளைக் கொண்டாடுகிறார்கள்.

எனவே, இதை எல்லாம் அறிவைக் கொண்டு ஆராய்ந்தால், பகுத்தறிவைப் பயன்படுத்திப் புகுந்து பார்த்தால் மனிதனுக்கு இதன் உண்மை புலனாகும். ஆனால் நாம் அப்படிச் செய்வது இல்லை.

இதைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம்.

இதை படித்தவுடன் அனைவருக்கும் share அதாவது பகிரவும் நண்பர்களே.


செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

மை லாய் படுகொலைகள் (My Lai Massacre)


மை லாய் படுகொலைகள் (My Lai Massacre)

என்பது தெற்கு வியட்நாமில் மார்ச் 16, 1968 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கப் படைகளினால் 347 முதல் 504 வரையான பொது மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாவர்.

இடம் சோன் மை கிராமம், தெற்கு வியட்நாம்
நாள் மார்ச் 16, 1968
தாக்குதலுக்கு
உள்ளானோர் மை லாய் 4, மை கே 4 சிற்றூர்கள்
தாக்குதல்
வகை படுகொலை
இறப்பு(கள்) 347 (அமெரிக்க இராணுவத் தகவலின் படி - மை கே படுகொலைகள் தவிர்த்து), வேறு தகவல்களின் படி 400 பேர் படுகொலை, ஏராளமானோர் காயம், வியட்நாமிய அரசுத் தகவலின் படி இரண்டு ஊர்களிலும் 504 பேர் படுகொலை
தாக்கியோர் அமெரிக்க இராணுவத்தின் அமெரிக்கல் பிரிவு,
2ம் லெப். வில்லியம் கேலி (குற்றவாளியாகக் காணப்பட்டார்)
மூடுக
கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த பெரும்பாலானோர் பாலியல் வதை, அடிக்கப்பட்டு, அல்ல்து துன்புறுத்தப்பட்டனர். பெரும்பாலானோரின் உடல்கள் பெரும் சிதைவுக்குள்ளாகிக் கண்டுபிடிக்கப்பட்டன. இப்படுகொலைகள் வியட்நாம் போரின் போது சோன் மை என்ற கிராமத்தில் மை லாய் மற்றும் மை கே ஆகிய பகுதிகளில் இடம்பெற்றது,. ஆரம்பத்தில் 26 அமெரிக்கப் போர்வீரர்கள் இப்படுகொலைகளுக்குக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தாலும், 2ம் லெப். வில்லியம் கேலி என்பவனுக்கு மட்டுமே தண்டனை கிடைத்தது. முதலில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டாலும், இது பின்னர் 3 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு, அத்தண்டனையை தனது வீட்டிலேயே கழித்தான்.

இப்படுகொலை நிகழ்வானது உலகின் பல இடங்களிலும் அமெரிக்காவுக்கெதிராக எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் வியட்நாம் போரில் ஐக்கிய அமெரிக்காவின் ஈடுபாடு குறித்து உள்நாட்டிலும் பெரும் எதிர்ப்புகள் தோன்றின.

நிகழ்வு
“ அவன் அந்தக் குழந்தையை .45 ஆல் சுட்டான். ஆனாலும் அது தப்பியது. நாம் எல்லோரும் சிரித்தோம். அவன் எழுந்து மீண்டும் மூன்று அல்லது நான்கு அடிகள் கிட்டவாகச் சென்று மீண்டும் சுட்டான். அதுவும் தப்பியது. நாங்கள் சிரித்தோம். அதன் பின்னர் அவன் மீண்டும் அக்குழந்தைக்கு நேர் முன்னாகச் சுட்டான். இம்முறை குறி தப்பவில்லை. ”

மார்ச் 16, 1968 : அமெரிக்க இராணுவத்தினர் சுட சற்று முன்னர் வியட்நாமிய பெண்கள், குழந்தைகள். (ரொனால்ட் ஹேபெல் எடுத்த படம்)
பின்னணி
டிசம்பர் 1967 இல் தெற்கு வியட்நாமில் அமெரிக்க இராணுவத்தின் ஒரு பகுதி தரையிறங்கியது. முதல் ஒரு மாதம் பெரிதாக எந்தத் தாக்குதலும் இடம்பெறவில்லை. ஆனாலும் அடுத்தடுத்த மாதங்களில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதல்களில் 28 அமெரிக்க இராணுவத்தினர் படுகாயமடைந்தனர். இவர்களில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

ஜனவரி 1968 இல் வியட் கொங் படைகள் அமெரிக்கப் படைகள் மீது தாக்குதலில் இறங்கினர். அவர்களில் பெரும்பாலானோர் சோன் மை கிராமத்தில் ஒளிந்திருப்பதாக அமெரிக்கப் படைகளுக்கு தகவல் எட்டியது.

அமெரிக்கப் படைகள் இக்குக்கிராமங்கள் மீது பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தத் திட்டமிட்டனர். அக்கிராமத்தைப் பலமாகத் தாக்கி அனைவரையும் கொன்று விடும்படி கேணல் "ஒரான் ஹெண்டர்சன்" என்பவன் தனது படைகளுக்கு உத்தரவிட்டான். அநேகமாக பொது மக்கள் காலை 07:00 மணிக்கு முன்னர் சந்தைகளுக்கு சென்று விடுவரென்றும் மீதமுள்ளோர் வியட் கொங் தீவிரவாதிகளாகவோ அவர்களின் ஆதரவாளர்களாகவோ இருப்பர் என்றும் தாக்குதல் தொடங்க முன்னர் கப்டன் ஏர்னெஸ்ட் மெடினா என்பவன் தனது படைகளுக்குக் கூறினான்.

படுகொலைகள்

இறந்த மனிதன் மற்றும் குழந்தையின் உடல்கள். ரொனால்ட் ஹேபேர்ல் எடுத்த படம்
மார்ச் 16 இல் சார்லி கம்பனி என்ற அமெரிக்க முதலாம் பட்டாலியன் முதலில் ஹெலிகப்டர் தாக்குதலை ஆரம்பித்துத் தரையிறங்கியது. அங்கு எதிர்ப்பு எதுவும் இருக்கவில்லை. அமெரிக்கப் படைகள் முதலில் சந்தேகத்துக்கிடமான பகுதிகளைத் தாக்கினர். முதலாவது பொதுமக்கள் தொகுதி ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் சந்தேகத்திக்கிடமாக அசையும் எதனையும் சுட்டுக் கொல்லப் பணிக்கப்பட்டனர். தானியங்கித் துப்பாக்கிகள் மூலம் பல பொது மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கிட்டத்தட்ட 70 முதல் 80 வரையான கிராம மக்கள் கிராமத்தின் நடுவில் வளைத்துப் பிடிக்கப்பட்டு இரண்டாம் லெப்டினண்ட் வில்லியம் கலி என்பவனினால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு தொகுதி மக்களைச் சுட்டுக் கொல்ல மறுத்த அமெரிக்கப் படையினன் ஒருவனின் துப்பாக்கியைப் பறித்து வில்லியம் கலி தன் கையால் அவர்களைச் சுட்டுக் கொன்றான்

இன்று சென்னைக்கு 379 வயதாகிறது ஆகஸ்டு_22_2017.



*இனிய_பிறந்தநாள்_வாழ்த்துக்கள் சென்னை*  !!!

*ஆகஸ்டு_22_2017*
*இன்று சென்னைக்கு 379* *வயதாகிறது*

பல்வேறு வசதிகளும், ஆச்சரியங்களும் உயிர்த் துடிப்பும் நிறைந்த சென்னை பிறந்து வளர்ந்த கதையை நாம் பார்க்கலாம்.

379ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் மாலையில் பிரான்ஸிஸ் டே என்னும் ஆங்கிலேயன் கப்பலில் வந்து மைலாப்பூர்க் கரையில் இறங்கினான். அவன் கண்களுக்குத் தெரிந்த கடற்கரை மணல் பரப்பு அவனை மிகவும் கவர்ந்தது. தான் வந்த வேலை முடிந்து விட்டது என்று டே முடிவு கட்டினான்.

374 ஆண்டுகளுக்கு முன்பு கோரமண்டல் கடற்கரை என்ற பெயர் பெற்ற வங்கக் கடலின் கரையோரம் மதராஸப்பட்டினம் என்ற பெயரில் சின்னஞ்சிறு கிராமமாக இருந்தது

*சென்னை*

*மைலாப்பூர்*

*எழும்பூர்*
 *திருவல்லிக்கேணி*

*திருவான்மியூர்*
 *திருவொற்றியூர்*

என்று பல்வேறு சிறுசிறு கிராமங்களாகவும், சிறு சிறு குறு நகர்களாகவும் காணப்பட்டது. அந்தக் கால

*சென்னைப் பட்டினம், புதர்கள், காடுகள் மரங்கள் சூழ்ந்த இந்த ஊர்களுக்கு இடையே கூவம், அடையாறு போன்ற ஆறுகள் ஓடின*

இந்தச் சென்னைப்பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாசனை திரவியம் மற்றும் ஜவுளி வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தது. போர்ச்சுகீசியர்களின் வருகைக்குப் பிறகே அது வளர்ச்சி அடையத் தொடங்கியது. கி.பி.1552ஆம் ஆண்டில் போர்ச்சுக்கீசியர்கள் சாந்தோமில் குடியேறி வியாபாரம் செய்தனர்.

சென்னைப் பட்டினத்தில் விலை உயர்ந்த ஜவுளி மூலப்பொருட்கள் கிடைத்தன. இதைக் குறிவைத்து இங்கு கால் பதிக்க ஆங்கிலேயர்கள் திட்டமிட்டனர். இதற்காக கிழக்கிந்திய கம்பெனி, பிரான்சிஸ் டே, ஆன்ட்ரு கோகன் ஆகிய இரண்டு அதிகாரிகளைச் சென்னைப் பட்டினத்திற்கு அனுப்பி வைத்தது. வணிக மையம் கட்டுவதற்காகச் சென்னைப் பட்டினத்தில் இடம் பார்க்க வேண்டிய பொறுப்பு டேக்கு அளிக்கப்ப்டடது.
கம்பெனியின் வியாபாரத்திற்காக ஒரு நல்ல இடத்தைத் தேடி டே பயணித்தபோது மைலாப்பூர் பற்றிக் கேள்விப்பட்டான். மைலாப்பூர் போர்ச்சுக்கீசியர்களின் வியாபார மையமாக இருந்தது. அதன் அருகிலேயே தங்கள் வியாபார மையம் அமைய வேண்டும் என டே முடிவு செய்தான்.

அப்படி அவன் வரும்போதுதான் மைலாப்பூரின் அழகில் மயங்கி நின்றான். மைலாப்பூர் மட்டுமல்ல மதராஸ் முழுவதுமே அவன் கண்களுக்குக்கு கவர்ச்சி மிகுந்த ஒரு பெண்ணைப் போலக் காட்சியளித்தது என்று, ‘சென்னையின் கதை’ எனும் நூலை 1921ல் எழுதிய கிளின் பார்லோ குறிப்பிடுகிறார். இதுதான் கம்பெனிக்கு ஏற்ற இடம் என்று அவன் முடிவு செய்தான்.
நினைத்தாலே மூக்கைப் பிடித்துக்கொள்ளும் அளவுக்கு நாற்றம் பிடுங்கும் கூவம் நதி, 370 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது தெரியுமா? பிரான்ஸிஸ் டேக்கு மதராஸ் பிடித்துப்போனதற்குக் காரணமே கூவம் நதிதான் என்கிறார் பார்லோ. அந்தக் காலத்தில் இந்த நதிக்குத் திருவல்லிக்கேணி ஆறு என்ற பெயரும் உண்டு. அந்த ஆற்றை அவன் கண்ட சமயம் குளிர்காலம். ஆற்று நீர் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது.

அந்தக் காலத்தில் கூவம் நதி சுத்தமான தண்ணீர் ஓடும் நதியாக இருந்தது. சென்னை மக்கள் அதில் குளித்து விட்டுத்தான் தங்கள் தினசரி வேலையைத் தொடங்குவார்கள். *வள்ளல் பச்சையப்பா முதலியார் தினமும் கூவம் நதியில் ஆசை தீரக் குளித்ததை எழுதி வைத்துள்ளார்* அவர் வாழ்ந்த காலம் 1754 முதல் 1794.
வங்கக் கடலை ஒட்டி மைலாப்பூருக்கு அருகே உள்ள பகுதியை வாங்க வேண்டும் என்று டே தீர்மானித்தான். அப்பகுதியை ஆண்டுவந்த நாயக்க மன்னர்களிடம் பேச்சு வார்த்தையைத் தொடங்கினான். ஆனால் நாயக்க மன்னரால் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது. விஜயநகரப் பேரரசின் பிரதிநிதியான சந்திரகிரி மன்னனுக்கு நாயக்க மன்னர்கள் கப்பம் கட்டி வந்தார்கள். எனவே இந்த நில பேரத்துக்கு சந்திரகிரி மன்னரின் ஒப்புதல் தேவைப்பட்டது.

பிரான்ஸில் டே சந்திரகிரி மன்னரைப் பார்த்து பேசினான். தான் விரும்பிய இடத்தை விலை கொடுத்து வாங்கினான். இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது 1639ம் ஆண்டு ஆகஸ்டு 22 ம் நாள். சென்னையில் இடம் வாங்குவதற்காகப் போடப்பட்ட இந்த வணிக ஒப்பந்தம் பின்னாளில் இந்திய மண்ணில் ஆங்கிலேய ஆட்சி உதயமாகக் காரணமாக அமைந்தது என்று பார்லோ குறிப்பிடுகிறார். ஆங்கிலேயர் ஆட்சி சந்திரகிரியில் கருவாகி, மதராஸப்ப்ட்டினத்தில் உருவாகிப் பிறகு இந்திய மண்ணில் பிறந்தது என்கிறார் இவர்.

ஆங்கிலேயர்கள் சென்னைப் பட்டினத்தை நவீன வசதிகள் கொண்ட நகரமாக உருவாக்கும் முயற்சியைத் தொடங்கினார்கள். லண்டனில் தாங்கள் அனுபவித்தும் வரும் சகல வசதிகளும் இங்கே கிடைக்க வேண்டும் என்பதற்கான காரியங்களைத் தொடங்கினார்கள். டேயும் அவனது மேலதிகாரியான ஆண்ட்ரு கோகனும் சேர்ந்து மதராஸில் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கினார்கள். இதன் காரணமாக சென்னை நகரம் மிகக்குறுகிய காலத்தில் வளர்ச்சி அடைந்தது. கிழக்கிந்திய கம்பெனியின் வணிக மையத்தையும், செயிண்ட் ஜார்ஜ் கோட்டையையும் கட்டினார்கள். இப்படித்தான் இன்று நாம் பார்க்கும் சென்னை நகரம் உருவாகியது இதனால்தான் சென்னையில் ஆங்கிலேயர்கள் இடம் வாங்கிய ஆகஸ்ட் 22ஐ சென்னையின் பிறந்த நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிலும் சுற்றுச் சுவர் கட்டப்பட்டது. வணிக வளாகம் கட்டப்பட்டதால் ஐரோப்பியர்கள் நிறையப்பேர் வந்தனர். அவர்கள் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிலும் வீடு கட்டிக் குடியேறினர். அந்தப் பகுதி வெள்ளைப் பட்டினம் என்று அழைக்கப்ப்டடது. அதற்கு வெளிப்புறப் பகுதியில் ஆந்திராவில் இருந்து வந்த ஏராளமான நெசவாளர்கள் குடியேறினர். இது கறுப்புப் பட்டினம் என்று அழைக்கப்பட்டது. இந்தப் பகுதிதான் பின்னர் ஜார்ஜ் டவுன் ஆனது.

இந்த இடத்தை மையமாகக் கொண்டு தொடங்கிய ஆங்கிலேயர்களின் வர்த்தகம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வடக்கே உள்ள பகுதி சென்னைப் பட்டினம் என்றும், தெற்குப் பகுதி மதராஸப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது. இந்த இரண்டு பட்டினங்களையும் ஒன்று சேர்த்து ஆங்கிலேயர்கள் மதராஸப்பட்டினம் என்றும், தமிழர்கள் சென்னைப் பட்டினம் என்றும் அழைத்தனர். விரைவிலேயே சென்னைப் பட்டினம் முழுவதும் கிழக்கிந்தியக் கம்பெனியின் வசமாயிற்று. தங்கள் படை பலத்தாலும், பண பலத்தாலும் தந்திரமான முயற்சிகளாலும் ஆங்கிலேயர்கள் இதைச் சாதித்தார்கள்.

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் காலூன்றுவதற்கு முக்கியமான களமாகச் சென்னை அமைந்திருந்தது.
*1653ல் சென்னைப்பட்டினம் சென்னை மாகாணமாக மாறியது*. அதன் பின்னர் 1702ல் முகலாயர்களாலும், 1741ல் மராட்டியர்களாலும் அது தாக்குதலுக்கு உள்ளானது. 1746ம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் கைவசமானது.

பின்னர் ஆங்கிலேயர்களின் கைக்குப் போனது. 1758ல் மீண்டும் பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றினர். ஆனால், இரண்டு மாதங்களிலேயே ஆங்கிலேயர்கள் சென்னையைத் திரும்பவும் மீட்டனர். அன்று முதல் 1947ம் ஆண்டு வரை சென்னை மாகாணம் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. சுதந்திரத்திற்குப் பின், சென்னை மாகானம் 1968ம் ஆண்டு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மெட்ராஸ் என்று இருந்த பெயர் 1997ம் ஆண்டு சென்னை என்று மாற்றப்பட்டது.

*30 ஆயிரம் மக்கள்* தொகையுடன் உருவான சென்னை நகரின் மக்கள் தொகை தற்போது ஒரு கோடியைத் தாண்டி விட்டது. சென்னை நகரின் பரப்பும் விரிவடைந்துகொண்டே போகிறது. சென்னைக்கு பிறந்த நாள் விழா எடுக்க வேண்டும் என்பதற்கு வரலாற்று ஆய்வாளர் எஸ்.முத்தையா 2004ம் ஆண்டு முன்முயற்சி எடுத்தார். அதற்குப் பலரும் உறுதுணையாக நின்றார்கள். புத்தக வெளியீட்டாளர் வின்சென்ட் டிசோஸா, பத்திரிக்கையாளர் சசி நாயர் ஆகியோர் அவர்களில் முக்கியமானவர்கள். 2004ம் ஆண்டு முதல் சென்னை பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது

   

ஷாஜஹானின் "காதல்" மனைவி மும்தாஜ் அழகியோ அல்லது உடல் வனப்பில் சிறந்தவளோ அல்ல



ஷாஜஹானின் "காதல்" மனைவி மும்தாஜ் அழகியோ அல்லது உடல் வனப்பில் சிறந்தவளோ அல்ல...

ஆட்டைய போடுறதுல இவனுங்க எக்ஸ்பர்ட்....அது...பொன்னோ, பொண்ணோ, மண்ணோ.........

ஒரு விஷயத்தை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவின் மீது படையெடுத்த எல்லா இஸ்லாமிய வெளிநாட்டவர்களும் இந்தியாவின் மீதும் அதன் மக்களின் மீதும் காதல் கொண்டவர்களாக ஒருபோதும் இருந்ததில்லை. அது கோரி முகமதாகட்டும், கஜினி முகமதகட்டும், பாபர், ஹுமாயூன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான் என அத்தனை பேர்களின் ஒரே நோக்கம் கொள்ளையடிப்பது மட்டும்தான். அப்படி அவர்கள் இருந்ததாக இந்தியப் பாடப்புத்தகங்களில் எழுதி வைத்து நம்மை மழுங்கடித்து வைத்திருக்கிறார்கள் என்பதனை நாம் உணர வேண்டும். அக்பர், ஷாஜஹான் போன்றவர்கள் இந்தியர்கள் மீது அன்பு செலுத்தினார்கள். அவர்கள் மண்ணின் மைந்தர்களான ஹிந்துக்களுக்கு  நன்மைகள் செய்தார்கள் என்பதெல்லாம் அப்பட்டமான கட்டுக்கதைகளே. அத்தனை முகலாய அரசர்களும் மத அடிப்படைவாத எண்ணம் கொண்ட, போதைக்கு அடிமையான, கொள்ளைக்கார, கொலைகார, பெண் பித்தர்கள். பெருமளவு பணம் செலவு செய்து இந்தியாவில் அழகான கட்டிடங்களைக் கட்ட அவர்கள் பைத்தியக்காரர்கள் இல்லை.

இந்தியாவின் செல்வங்களைக் கண்மூடித்தனமாகக் கொள்ளையடித்தாலும் எந்த முகலாய அரசனும் பணக்காரனில்லை. அவர்கள் அடித்த கொள்ளைகள் அவர்கள் வைத்திருந்த மிகப் பெரும் ராணுவத்திற்கே செலவாகியது. நாடெங்கிலும் அவர்களுக்கு எதிராக எழுந்த கலவரங்களை ஒடுக்குவதற்கு அவர்களுக்கு பெரிய ராணுவம் தேவையான ஒன்று. எனவே அவர்களுக்கு எந்த நேரமும் பணத்தேவை இருந்து கொண்டே இருந்தது. ஷாஜஹானின் காலத்தில் இந்தியாவில் பயணம் செய்த ஃப்ரெஙஞ்ச் நாட்டு வியாபாரி டாவர்னியர், ஷாஜஹானின் மொத்த செல்வத்தின் அளவு ஆறு கோடி ரூபாய்கள் மட்டுமே என்கிறார். அதையும் விட ஷாஜஹான் உலக மகா கஞ்சன் என்கிறார். அந்தப்புரத்துப் பெண்கள் கேட்கும் எந்தவொரு சிறு பொருளையும் வாங்கிக் கொடுக்க மனம் வராத ஒரு பிசிநாறியாகவே ஷாஜஹானைச் சொல்கிறார் டாவர்னியர்.

அப்படியாகப்பட்ட ஒரு மனிதன் பெரும் செலவும், நேரமும் பிடிக்கும் தாஜ்மஹாலை ஒரு போதும் கட்டியிருக்க வாய்ப்பில்லை. தாஜ்மஹால் ஏழுமாடிகளை உடைய, ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறைகளை உடையதொரு கட்டிடம். இன்று சமாதிகள் இருக்கும் தளத்திற்குக் கீழ் மேலும் இரண்டு அல்லது மூன்று தளங்கள் இருக்கின்றன. இவ்வளவு செலவு செய்து தாஜ்மஹாலைக் கட்டிய ஷாஜஹான் அந்தத் தளங்களை மூடிவைக்கக் காரணம்தான் என்ன? பி.என். ஓக்கின் புத்தகத்தைப் படித்து ஆச்சரியமடைந்த அமெரிக்க கல்லூரி புரொஃபசர் ஒருவர் இந்தியாவிற்கு வந்து பி.என். ஓக்குடன் தாஜ்மஹாலைச் சுற்றிப்பார்த்து அது ஒரு ஹிந்துக் கட்டிடம்தான் என்று உறுதிப்படுத்துகிறார். யமுனை நதிக்கரையை ஒட்டியிருந்த ஒருகதவின் ஒரு சிறிய பகுதியை அமெரிக்காவிற்கு எடுத்து வந்து கார்பன் டேட்டிங் செய்ததில் அந்தக் கதவு ஏறக்குறைய 230 வருடங்கள் பழமையானது எனக் கண்டுபிடிக்கிறார். அதாகப்பட்டது ஷாஜஹான் கட்டியதாகச் சொல்லப்பட்ட வருடத்திலிருந்து 230 வருடங்கள் பின்னால்.

எல்லோரும் நினைப்பது போல ஷாஜஹானின் "காதல்" மனைவி மும்தாஜ் அழகியோ அல்லது உடல் வனப்பில் சிறந்தவளோ அல்ல. ஷாஜஹானின் வரலாறான பாத்ஷாநாமாவில் மவுல்வி மொய்னுதீன் அகமது அந்தப் பெண்மணியின் உண்மையான பெயர் அர்ஜுமண்ட்பானு பேகம் என்கிறார். அதையும் விட மும்தாஜ் அரச குடும்பத்தில் பிறந்த பெண்ணும் இல்லை. ஜ்ஹாங்கீரிடம் அமைச்சராகப் பணிபுரிந்த மிர்ஸா கியாய் பெய்க்கின் பேத்தி அவள். மிர்ஸா கியாஸ் பெய்க் பாரசீக அரண்மனையில் பணியாளாக வேலை செய்தவர். ஆனால் அவரது அழகான மகள் ஜஹாங்கீரின் வைப்பாட்டியாக இருந்ததால் கியாஸ் பெய்க் ஜஹாங்கிரிடம் முதல் அமைச்சராகப் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றவர். அந்த வகையில் அவரது பேத்தியான மும்தாஜ் ஒரு சாதாரண குடும்பத்துப் பெண்தான். 1612-ஆம் வருடம் ஷாஜஹானுடன் திருமணம் நடக்கிறது என்றாலும் மும்தாஜ் பட்டத்தரசி அல்ல. ஷாஜஹானின் முதல் மனைவியும் பட்டத்தரசியுமானவள் பாரசீக அரசரான ஷா இஸ்மாயில் ஷ்ஃபியின் பேத்தியாவாள். எனவே மும்தாஜ் ஷாஜஹானின் அந்தப்புரத்திலிருந்த 5000 பெண்களில் ஒருத்தி மட்டுமே.

மும்தாஜ் பர்ஹான்பூரில் இறந்த வருடம் எதுவென்ற சரியான குறிப்புகள் எதுவும் இல்லை. 1629, 1630, 1631 என்று ஒவ்வொரு குறிப்பும் ஒவ்வொரு வருடத்தைக் கூறுகிறது. மனைவி மேல் மாளாக் காதலுள்ள ஷாஜஹான் அவள் இறந்த வருடத்தைக் கூடவா பாத்ஷாநாமாவில் எழுதி வைக்க மறந்துவிட்டார்? அதையும் விட மும்தாஜ் பிறந்ததாகக் கூறப்படும் வருடமும் போலித்தனமானதே. மும்தாஜின் மீது ஷாஜஹானுக்கு உண்மையான காதல் இருந்தால் அவள் இறந்த பர்ஹான்பூரிலேயே அவளுக்கு தாஜ்மஹாலைக் கட்டியிருக்க வேண்டும். அதையேன் அவர் செய்யவில்லை? புதைத்த ஆறுமாதம் கழித்து தோண்டியெடுக்கப்பட்ட மும்தாஜின் உடல் ஆக்ராவிற்குக் கொண்டுவரப்பட்டு மீண்டும் ஒரிடத்தில் புதைக்கப்படுகிறது. பிறகு ஒருவருடம் கழித்து தோண்டியெடுக்கப்பட்டு "கட்டப்பட்டுக் கொண்டிருக்கிற?!!" தாஜ்மஹாலில் புதைக்கப்படுகிறது.

மும்தாஜைக் குறித்து இன்னொரு விஷயத்தை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். மதவெறியில் மும்தாஜ் எந்த முகலாய அரசனுக்கும் சளைத்தவளில்லை என்பதுதான் அது. ஹிந்துக்களின் மீதும் இந்தியாவிற்குள் வர ஆரம்பித்திருந்த கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும் மும்தாஜின் நிலைப்பாடு மிகவும் அச்சமூட்டக் கூடிய ஒன்று. ஷாஜஹானின் அரண்மனையில் மருத்துவராகப் பணிபுரிந்த வெனிஸ் நாட்டவரான நிகோலோ மானுச்சி மும்தாஜின் மதவெறியைக் குறித்து இப்படிச் சொல்கிறார். "மும்தாஜின் காலத்தில் கிறிஸ்தவ போர்த்துக்கீசியர்கள் முகலாய அரசவையை வந்தடைந்திருந்தால் மும்தாஜ் அவர்களைப் பல துண்டுகளாக வெட்டியெறிய உத்தரவிட்டிருப்பாள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. பிடிபட்டவர்கள் பல குரூரமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டிருப்பார்கள். அவர்களின் மனைவிமார்கள் பிடிக்கபட்டு பலருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பார்கள். அவர்களில் அழகிகள் ஷாஜஹனின் அந்தப்புரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பார்கள்" என்கிறார்.


மும்தாஜின் தூண்டுதலால் ஷாஜஹான் வங்காளத்தின் ஹூக்ளி பகுதியில் போர்ச்சுக்கீசியர்களின் சர்ச் ஒன்றை தரைமட்டமாக்கியிருக்கிறார். கோவாவில் பிடிபட்ட 400 கிறிஸ்தவர்களில் முஸ்லிமாக மதம் மாறச் சம்மதித்தவர்களைத் தவிர்த்து அத்தனை பேர்களும் கொடுமையான முறையில் கொல்லப்பட்டார்கள். பிடிபட்ட கிறிஸ்தவர்களை யானைகளின் கால்களில் தலையை இடற வைப்பது ஷாஜஹானின் பொழுதுபோக்கில் ஒன்று. பனாரஸில் ஹிந்துக்கள் கோவிலொன்றைக் கட்டுகிறார்கள் என்பதறிந்து கோபமடையும் ஷாஜஹான் அதனை உடனே இடித்துத் தகர்க்க உத்தரவிடுகிறார். அப்படியும் கோபம் குறையாமல் தனது ஆட்சிக்காலம் ஆரம்பமானதில் இருந்து கட்டப்பட்ட அத்தனை காஃபிரி ஹிந்துக் கோவில்களையும் இடிக்க உத்தரவிட்டு அப்படியே செய்து முடிக்கப்படுகிறது.

அரச குலத்தில் பிறக்காத, அரசவையில் பெரும் பதவியிலிருக்காத ஒருவருக்குப் பிறந்த, அழகோ அல்லது உடல் வனப்போ இல்லாத சாதாரணப் பெண்ணான மும்தாஜின் மரணத்தைக் காரணம் காட்டி ஷாஜஹான் ராஜா ஜெய்சிங்கிடமிருந்து அரண்மனையைப் பிடுங்கி அதனைத் தனதாக்கிக் கொண்டார். இறந்து பலகாலம் வரைக்கும் அர்ஜுமன்பானு பேகமாகவே இருந்தவள் ஷாஜஹானுக்கு வசதியாக மும்தாஜ் (The chosen one) என அழைக்கப்பட ஆரம்பிக்கப்படுகிறாள்.

I will stop here. I had enough on this subject. If you need further information I would highly recommend you to read P.N. Oak's book. It got lots of interesting research information.
Narenthiran PS Ji.

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

மொத்த மனித இனம் அழிந்த நொடியிலிருந்து... உலகில் என்னவெல்லாம் நடக்கும்?



மொத்த மனித இனம் அழிந்த நொடியிலிருந்து... உலகில் என்னவெல்லாம் நடக்கும்?

ஒரு ஐந்து நொடிகளை ஒதுக்கி நீங்களாகவே கற்பனை செய்து பாருங்கள்... ஒட்டு மொத்த மனித இனமும் அழிந்த நொடியிலிருந்து இந்த உலகில் என்னவெல்லாம் நடக்கும்...

முதல் சில நொடிகள் :

- பெரும் அமைதி சூழும். மொத்த சத்தங்களும், இரைச்சல்களும் அடங்கிப் போயிருக்கும்.
- பறவைகளும், வீட்டுப் பிராணிகளும் அச்சத்தோடும், ஆச்சர்யத்தோடும் இறந்து கிடக்கும் உடல்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும்.



சில நிமிடங்கள் :

- பறவைகள் கூட்டம், கூட்டமாகப் பறக்கத் தொடங்கும்.
- பொந்துகளிலிருந்து எலிகளும், பாம்புகளும் வெளிவரத் தொடங்கும்.
- பூச்சிகள் அதிகம் பறக்கத் தொடங்கும்.
- புழுக்கள் நெளியத் தொடங்கியிருக்கும்.



சில மணி நேரங்கள் :

- கடுமையான துர்நாற்றம் வீசத் தொடங்கும்.
- இறந்துக் கிடக்கும் மனித உடல்களைப் புழுக்களும், கழுகுகளும் இன்னபிற உயிரினங்களும் உண்ணத் தொடங்கும்.
- கொஞ்சம், கொஞ்சமாக உலகம் இருளில் மூழ்கத் தொடங்கும்.
- ஓடிக் கொண்டிருந்த இயந்திரங்கள் ஒவ்வொன்றாக நிற்கத் தொடங்கும்.



சில நாள்கள் :

- வீட்டில் வளர்க்கப்பட்ட நாய்கள், பூனைகள், கூண்டில் அடைக்கப்பட்ட பறவைகள் உண்ண உணவில்லாமல், குடிக்க நீரில்லாமல் இறக்கத் தொடங்கும்.
- பண்ணைகளில் வளர்க்கப்பட்ட மாடுகள், கோழிகள் போன்றவை இறந்திருக்கும்.
- உலகின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியிருக்கும். சோலார் மற்றும் காற்றாலைகள் மட்டுமே மெதுவாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும்.


சில மாதங்கள் :

- வீட்டுப் பிராணிகள் மொத்தமும் இறந்துப் போயிருக்கும்.
- வீட்டில் வளர்க்கப்பட்ட பக், ஜெர்மன் ஷெப்பர்டு, லேப்ரடார் போன்ற நாய்கள் இறந்துப் போய்... நாட்டு நாய்கள் மட்டும் கூட்டம், கூட்டமாக வலம் வந்துகொண்டிருக்கும்.
- பராமரிப்பின்றி சோலாரும், காற்றாலைகளும் செயலிழந்து மொத்த உலகமும் இருளில் மூழ்கிப் போயிருக்கும்.
- பெரும்பாலான மனித உடல்கள், எலும்புகளாக மட்டுமே மிச்சமிருக்கும்.
- அணு உலைகளைக் குளிர்ச்சி செய்ய ஓடிக் கொண்டிருந்த குளிர்ந்த நீர் அனைத்தும் வற்றிப் போய், அணு உலைகளிலிருந்து ஆபத்தான கதிர்வீச்சுகள் வெளியேறத் தொடங்கியிருக்கும்.
- அந்தக் கதிர்வீச்சுக்குப் பல உயிரினங்கள் பலியாகியிருக்கும்.
- அணு உலைகள் மற்றும் பல தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் வாயுக்கள், ரசாயனங்கள் போன்றவை ஒன்றோடொன்று உரசி ஆங்காங்கே தீ விபத்துகள் நடைபெறும். அதை அணைக்க ஆளில்லாமல் பல தூரங்களுக்கு நெருப்பு பரவும்.
- விவசாய நிலங்களில், பராமரிப்பின்றி பயிர்கள் செத்துக் கொண்டிருக்கும்.
- அனைத்து சப்வேக்களிலும் நீர் புகுந்திருக்கும்.
- ஆங்காங்கே வெள்ளம் புகுந்திருக்கும்.

சில வருடங்கள் :

- வானில் சுழன்று கொண்டிருக்கும் பல செயற்கைக்கோள்களும் விழுந்து பூமிக்கருகே வெடித்துச்  சிதறும்.
- மொத்த நகரங்களும், கட்டடங்களும் செடி, கொடிகளால் சூழப்பட்டிருக்கும்.
- பாலைவனத்தை ஒட்டியிருக்கும் நகரங்கள் மொத்தமும் மணலால் மூடப்பட்டிருக்கும்.
- மொத்த கடலும் நாசமாகியிருக்கும்.
- எல்லா நீர்நிலைகளிலும் குப்பைகள் நிறைந்து காணப்படும். இதனால் பல உயிரினங்கள் இறக்கும்.
- புகை மற்றும் காற்று மாசுக்கள் குறைந்து வானம் தெளிவாகத் தெரியும்.
- கம்ப்யூட்டர், செல்போன், டிவி என மொத்தமும் செயலிழந்து மிகப்பெரிய "இ-வேஸ்ட்"  கிடங்காக பூமி மாறிப்போயிருக்கும்.

சில நூறாண்டுகள் :

- 300 ஆண்டுகள் கழித்து மனிதன் உருவாக்கிய ஈஃபில் டவர், புர்ஜ் துபாய் போன்ற பல கட்டுமானங்கள் சரிந்து விழுந்திருக்கும்.
- இரும்புப் பாலங்கள் துருப்பிடித்து தளர்ந்து விழும்.
- ஏரிகளை, சதுப்பு நிலங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டடங்கள் அழிந்து அங்கு மீண்டும் அந்த ஈரநிலங்கள் உயிர்பெற்றிருக்கும்.
- மிருகங்கள்தான் இந்த உலகை ஆளும்.
- இன்று அழியும் தருவாயிலிருக்கும் பல மிருகங்கள், இனப்பெருக்கம் ஆகி கூட்டங்களாக வலம் வந்து கொண்டிருக்கும்.
- குப்பைகள் ஆங்காங்கே ஒதுங்கி நீர்நிலைகள் சரியாகத் தொடங்கியிருக்கும்.
- இயற்கை தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்டு சீராக வாழத் தொடங்கியிருக்கும்.

10 ஆயிரம் வருடங்கள் :

- மனித இனம் வாழ்ந்ததற்கான தடங்கள் இல்லாமல் போயிருக்கும்.
- சீனச் சுவர் போன்ற சில கற்களால் ஆன இடங்களும், மலைகளும் மட்டுமே மனித இனம் வாழ்ந்ததற்கான சாட்சிகளாக நின்று கொண்டிருக்கும்.

பல ஆயிரம் வருடங்கள் :

- மொத்த பூமியும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு புதியதோர் உலகாய் செயல்படத் தொடங்கியிருக்கும். ஏலியன்கள் கூட பூமியைப் பார்க்க வந்திருப்பார்கள். இந்த பூமியின் அனைத்து விஷயங்களையும் ஆராய்ச்சி செய்து பல முடிச்சுகளை அவிழ்த்திருப்பார்கள். ஆனால், அவர்களுக்கு ஒன்றின் விடை மட்டும் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் . அது பிளாஸ்டிக். காரணம் பிளாஸ்டிக் அழிய 5 கோடி ஆண்டுகள் ஆகும்.


பூமி தோன்றி 450 கோடி ஆண்டுகள் ஆகின்றன. மனித இனம் தோன்றி 2 லட்சம் ஆண்டுகள்தான் ஆகின்றன. மனித இனத்திற்கு முன்பும் இந்த பூமி இருந்தது. மனித இனத்திற்குப் பின்பும் இந்த பூமி இருக்கும். மற்ற உயிரினங்களிலிருந்து மனித இனம் சற்று மாறுபட்டிருக்கலாமே தவிர, மேம்பட்டு இல்லை என்பதை மனித இனம் உணர்ந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.
-

வேலூர் C M C HOSPITAL சிஎம்சி மருத்துவமனை உருவானது எப்படி என்று பார்போம்.....


வேலூர் என்றால் அனைவருக்கும்
C M C HOSPITAL  தெரியும்
சிஎம்சி மருத்துவமனை உலக பிரசித்திவாய்ந்த ஒன்றாகும்
சற்று உருவானது எப்படி என்று பார்போம்...............

திண்டிவனம் என்றும் போல காரிருளில்மூழ்கியிருந்தது. அது இரவு நேரம். மின்சாரம் இல்லாத காலம். வருடம் 1870!அந்த மிஷன் பங்களாவில் சிம்னி விளக்குவெளிச்சத்தில் ஒரு இளம் அழகிய அமெரிக்கநங்கை ஆங்கில நாவல் படித்துக்கொண்டிருந்தாள் .அவளின் பெயர் ஐடா ஸோஃபியா ஸ்கடர் (Ida Sophia Scudder). வயது -  20.அமெரிக்காவில் இறைத் தூதர்(Missionary) பயிற்சியும் பெற்றவள் .ஆனால் அதில் ஆர்வம் இல்லாதவள் .இந்தியாவில் நிலவிய வறுமை,பஞ்சம்,வியாதி அவளை விரக்திக்குள்ளாக்கியது. அவளுடைய தந்தை ஒரு மருத்துவ இறைத்தூதர்(Medical Missionary) பெயர்மறைத்திரு டாக்டர் ஜான் ஸ்கடர். திண்டிவனம் பகுதியில் ஏசுவின்இறைப்பணியுடன் மருத்துவப்பாணியிலும் ஈடுபட்டிருந்தார். தாய்க்கு உடல் நலம் குன்றிய காரணத்தினால்ஐடா ஸ்கடர் அப்போது திண்டிவனம்வந்திருந்தாள்... தந்தையின் மருத்துவப் பணியின்போதுஉதவி வந்த தாய்க்கு உடல் நலம் குன்றியகாரணத்தால் இவள் உதவ வேண்டிய நிர்ப்பந்தம்உண்டானது. பாமர மக்கள் இவளையும் ஒருமருத்துவராக எண்ணினர்.

இறைத் தூதர் பணியில் அவளுக்குநாட்டமில்லாமல் போனதற்கு இந்தியாவின்பின்தங்கிய நிலை ஒரு காரணம். அவளுடைய குடும்ப உறுப்பினர்அனைவருமே இறைப் பணியாளர்கள் என்பதுஇன்னொரு காரணம். அவருடைய ஏழுசகோதரர் அனைவருமே இறைப்பணியாளர்கள்தான்! அதோடு அவளின் இளமை. பிடித்த ஒருவரை திருமணம் புரிந்துஅமெரிக்காவில் சொகுசாக வாழவேண்டும் என்ற கனவு! ஆனால் அன்றைய இருண்ட இரவு அவளுடையஉள்ளத்தில் ஒரு உள்ளொளியை உண்டுபண்ணியதை இறைவனின் செயல்என்றுதான் கூறவேண்டும்!

நாவலில் மூழ்கியிருந்தவளின் கவனத்தைகதவை வெளியில் யாரோ தட்டும் சத்தம்கலைத்தது. நள்ளிரவை நெருங்கும் நேரம். பெற்றோர் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். எழுந்து சென்றுகதவைத் திறந்தாள். லாந்தர் ஒளியில் ஒரு இஸ்லாமியர்தலையில் சமய குல்லா அணிந்தவாறுநிற்பது கண்டாள். அவரைப் பார்த்து அவள்திரு திருவென விழித்தாள். வந்தவர்பதற்றத்துடன் காணப்பட்டார். ”மிஸ்ஸியம்மா . நீங்கள்தான் என் மகளைக்காப்பாற்றணும்!” அவர் மன்றாடினார். ”உங்கள் மகளுக்கு என்ன?” எனும் அர்த்தம்படதமிழில் கேட்டாள் அந்த அமெரிக்க மங்கை.” தலைப் பிரசவம்! வலியால்துடிக்கிறாள்! உடனே வாருங்கள் அம்மா ”அவர் கெஞ்சுகிறார். ”ஐ ஆம் சாரி. நான் டாக்டர் இல்லே.பிரசவம் பாக்க எனக்கு தெரியலே.” அப்படி சொல்லாதீங்க மிஸ்ஸியம்மா.ஏதாவது செய்யுங்கள்.  அவரின் நிலைஅப்படி. ”இருங்கள். அப்பாவை எழுப்புறேன். அவர்உடன் வருவார்.” என்றவாறு மாடிஅறைக்குச் செல்ல திரும்பினாள்.” வேண்டாம் மிஸ்ஸி. அவரைஎழுப்பவேண்டாம்.” அவர் உரக்க கூறிதடுத்தார். ”ஏன் வேண்டாம்? உங்களுடைய மகள்?”, ”வேண்டாம் அம்மா வேண்டாம்! ஒரு முஸ்லீம்பெண்ணுக்கு ஆண் பிரசவம் பார்க்க எங்களின்வேதத்தில் இடம் இல்லை. அதைவிட அவள்செத்தாலும் பரவாயில்லை. நான்வருகிறேன் தாயே!” கைகள் கூப்பிவிடை பெற்று இருளில்மறைந்துபோனார்.அவள் செய்வதறியாது வியந்து நின்றாள்.கதவைத் தாழிட்டுவிட்டு நாவலைக்கையில் எடுத்தாள். விட்ட இடத்தில் தொடரமுயன்றாள். ஆனால் முடியவில்லை.மனதில் ஒரு நெருடல்.

அதிக நேரம் ஆகவில்லை.மீண்டும் கதவு தட்டப்பட்டது.ஒருவேளை அவர்தான் மனம் மாறி மீண்டும்வந்துள்ளாரோ என்ற எண்ணத்தில் கதவைத்திறந்து பார்த்தாள்அது வேறொருவர். நடுத்தர வயதுடையவர். நெற்றியில் பட்டை தீட்டியிருந்தது. அவ்ர்ஒரு இந்து. வணக்கம் கூறிவிட்டு அவர்சொன்னது அவளை வியப்பில் ஆழ்த்தியது.” மிஸ்ஸியம்மா . என் மனைவி பிரசவவலியால் துடிக்கிறாள். உடன் என்னோடுவாருங்கள் அம்மா . அந்த இரு உயிரையும்காப்பாற்றுங்கள்தாயே!” அவரும்கெஞ்சினார்.மீண்டும் அதே பதிலைத்தான் அவள்கூறினாள். தந்தையை அழைக்கவா என்றுகேட்டாள்.” வேண்டாம் தாயே! எங்கள் ஹிந்துசாஸ்த்திரத்தில்அதற்கு இடமில்லை . என்மனைவி செத்தாலும் சாகலாமே ஒரு ஆண்அவளுக்கு பிரசவம் பார்க்க முடியாதுதாயே.” அவரும் ஏமாற்றத்துடன்திரும்பினார்.அவர் சென்றபின்பு அவள் அமைதி இழந்துபோனாள். நாவலை மூடிவிட்டு படுக்கச்சென்றாள். உறக்கம் வரவில்லை.

 அப்போதுமீண்டும் கதவு தட்டப்படும் சதம் கேட்டுகுதித்தெழுந்தாள்.கதவைத் திறந்து பார்த்தபோதுவேறொரு நபர்! அவரும் ஒரு இந்துதான்.” மனைவிக்கு பிரசவ வலியா? ” இவளேகேட்டாள்.” ஆமாம் தாயே . அது எப்படி உங்களுக்குத்தெரிந்தது? உடனே வந்து என் மனைவியைக்காப்பாற்றுங்கள்மிஸ்ஸி.” அவரின் கெஞ்சல்.”அப்பாவை எழுப்பவா?” என்ன பதில் வரும்என்று தெரிந்துதான் கேட்டாள். ”அப்பாவா? வேண்டாம் தாயே. அது எங்கள்சம்பிரதாயத்தில்இல்லை தாயே. நீங்கள்தான்வரணும்.” அவர் உறுதியாகக் கூறினார். ”இல்லை. நான் டாக்டர் இல்லையே? அப்பாதான்வர முடியும்” அவள் உண்மையைக்கூறினாள். ”அதை விட என் மனைவி சாகலாம். ”என்றவாறே வந்த வழியே திரும்பினார்.அதன்பின்பு அவளின் தூக்கம்பறந்தோடியது. இது இந்திய நாடு.இங்குள்ள கலாச்சாரமே வேறு. பெண்கள்தான்பிரசவம் பார்க்கவேண்டும்என்பதில்நம்பிக்கைக்கொண்ட மக்கள் வாழும் நாடு.இதற்கு என்னதான் தீர்வு? பெண் டாக்டர்களேஇந்தியாவில் இல்லாத காலமாயிற்றே?தீவிரமாக யோசித்தாள் ஐடா என்ற அந்தஇருபது வயதுடைய அமெரிக்க இள நங்கை!

மறு நாள் மாலையில் பங்களா தோட்டத்தில்ஐடா அமர்ந்து நாவல் படித்துக்கொண்டிருந்த போது வீதியில் ஒன்றன்பின் ஒன்றாக மூன்று சவ ஊர்வலங்கள் சென்றுகொண்டிருப்பதைப்பார்த்தாள் . அந்தமூவரும் பிரசவ சிக்கலில் இரவில்இறந்துபோன பதின்ம வயது பெண்மணிகள்என்பதைத் தெரிந்து கொண்டபின் மனம்வெதும்பினாள்.இரவில் தோன்றிய உள்ளொளி அப்போதுமுழு வடிவம் பெற்றது! அப்போதே தனது கனவான அமெரிக்காவின்சொகுசு வாழ்க்கையை தியாகம்செய்து விட்டாள் ஐடா! இந்தியப் பெண்மணிகளுக்கு உடனடி தேவைபெண் மருத்துவர்கள் என்பதை அன்றே உணர்ந்துகொண்டாள்.அவர்களுக்காக தன்னையேஅப்போது அர்ப்பணம் செய்து கொண்டாள்.அதை கடவுளின் அழைப்பாகவும் நம்பினாள்.அவள் திருமணம் பற்றிய எண்ணத்தையும் அன்றேகைவிட்டாள். அதன்பின் நடந்தவை வரலாறு.

1899 ஆம் வருடம் நியூ யார்க் நகரில்கார்நெல் பல்கலைக்கழகமருத்துவக்கல்லூரியில் (Cornell University Medical College) சேர்ந்தாள். அதிலும் ஒருசிறப்பு . பெண்கள் மருத்துவம் பயிலஅனுமதிக்கப்பட்டமுதல் வகுப்பு அது!1899 ஆம் ஆண்டில் அவர் தேர்ச்சியுற்றுமருத்துவரானார். உடன் தமிழ் நாடு திரும்பி மருத்துவப்பணியை பிணியாளிகளுக்கு,குறிப்பாக பெண்களுக்கு செய்யவேண்டும்என்ற ஆர்வம் கொண்டார். பலரிடம் தனதுதிட்டத்தைக் கூறினார். மான்ஹாட்டான் நகரைச் சேர்ந்த வங்கியாளர்ஷெள்(Schell) என்பவர் தமிழ் நாட்டுபெண்களின் நலனுக்காக $10,000 அமெரிக்கடாலர்களை அவரின் மனைவியின்நினைவாக ஐடாவிடம் வழங்கினார்(அப்போது அதன் மதிப்பு மிகவும்அதிகமாகும்). அவர் தமிழ் நாடு திரும்பியபோதுஅவரின் தந்தை வேலூரில் மருத்துவப்பணியில் ஈடு பட்டிருந்தார். அவர்குடியிருந்த மிஷன் பங்களாவில் இரண்டுவருடங்கள் டாக்டர் ஐடாவும் 2000நோயாளிகளுக்கு சிகிச்சைஅளித்தார்... 1900 ஆம் ஆண்டில் அவரின் தந்தை மரணமுற்றார்மருத்துவப் பணியின் முழுப்பொறுப்பையும் ஐடா ஏற்றுக்கொண்டார். அமெரிக்காவிலிருந்து கொண்டுவந்திருந்த நன்கொடையைப் பயன்படுத்தி1902ஆம் வருடம் ஒரு சிறுமருத்துவமனையை வேலூரில் அமைத்துஅதற்கு ஷெல் மருத்துவமனை(Schell Hospital ) என்று பெயரிட்டார். சிகிச்சையும் மருந்துகளும் இலவசமாகதரப்பட்டன. தற்போது இது Mary TablerSchell Eye Hospital) என்று கண்மருத்துவமனையாக பெரிய அளவில்இயங்கி வருகின்றது சுற்று வட்டார மக்கள் அதிக அளவில் அங்குவந்து பயன் பெற்றனர். வருடத்தில் 40,000நோயாளிகளுக்கு சிகிச்சைஅளித்தார். அப்போது தமிழகத்தில் பரவலாக காணப்பட்ட ப்ளேக்(Plague), காலரா, தொழுநோய்ஆகியவற்றிலிருந்து மக்களைக்காப்பாற்றப் போராடினார். தமிழ் நாட்டு பெண்களின் நல்வாழ்வுக்காகதான் ஒருவர் மட்டும் முயற்சியைமேற்கொள்வது இயலாத காரியம் என்பதைஅவர் உணர்ந்தார்.

பெண்களுக்கான தாதியர் பயிற்சிப் பள்ளிநிறுவ எண்ணினார். அப்போதுஆசியாவிலேயே இது கேள்விப் படாதஒன்றாகும். சென்னைப் பல்கலைக்கழகசம்மதத்துடன் இந்தியாவிலேயே முதல்தாதியர் பயிற்சிப் பள்ளியைநிறுவினார்.1909 ஆண்டில் அவர் ஆரம்பித்த வீதியோரகிளினிக்(Roadside Clinic) திட்டம்கிராம மக்களிடையே பெரும்வரவேற்பைப் பெற்றது. அவர கிராமம்கிராமமாகச் சென்று மரத்தடியிலும், குளத்தங்கரையிலும் அமர்ந்து ஏழைஎளியோருக்கு மருத்துவச் சேவைபுரிந்தார். ஆனால் அவருக்கு அப்போதும் திருப்திஉண்டாகவில்லை. தானும் தன்னால்உருவாக்கப்பட்ட தாதியராலும்பெண்களுக்குத் தேவையான மருத்துவசேவையை வழங்குவது இயலாத காரியம்என்பதை உணர்ந்தார். பெண் மருத்துவர்களை உருவாக்குவதேஅதற்கு ஒரே வழி என்பதை உணர்ந்தார். இந்தவிபரீத எண்ணத்தைக் கேட்டவர்கள் இது நடக்கவேநடக்காது, அவரிடம் மூன்று மாணவிகள்வந்தாலே பெரிய ஆச்சரியம் என்று கேலிபேசினர். அப்போதிருந்த சமுதாயஅமைப்பு அப்படி! பெண் கல்வியே இல்லாதகாலம் அது! அந்த நிலையில் பெண்கள்மருத்துவம் பயில்வதா ?அரசு அனுமதியுடன் சென்னைப்பல்கலைக்கழக அங்கீகாரத்துடன்1918 ஆம் வருடம்பெண் மருத்துவர்களுக்கான கல்லூரிநிறுவப்பட்டது. அதில் சேர 151 பெண்கள்மனு செய்திருந்தனர்.அவர்களில் 17 பெண்கள்தேர்வு செய்யப்பட்டு வகுப்பில்சேர்க்கப்பட்டனர். இதுவே கிறிஸ்துவமருத்துவக் கல்லூரியின் ஆர்ம்பம்.


1928 ஆம் வருடத்தில் வேலூர் டவுனுக்குள்பெரிய மருத்துவமனை உருவாக்கப்பட்டது. அதுதான் இன்றைய சி.எம்.சி.மருத்துவமனை. 1928 ஆம் வருடத்தில் பாகாயத்தில் மலைகள்சூழ்ந்த அழகிய பள்ளத்தாக்கில் பரவலானநிலப்பரப்பில் மருத்துவக் கல்லூரியின்வளாகம் அமைக்கப்பட்டது.அப்போது நாட்டின் தந்தை மகாத்மாகாந்தி அவர்களும் கல்லூரியையும்மருத்துவமனையையும் விஜயம் செய்துசிறப்பித்தார்! இன்று கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி இந்தியாவின் தலைசிறந்த மருத்துவக்கல்லூரியாக விளங்குவதை நாடறியும்! ஒரு தனிப்பட்ட பெண்மணி இவ்வளவு பெரியசாதனைப் புரிய நிறையபொருளாதாரம் தேவை. இவரின்மருத்துவப் பணியை இறைப்பணியாகவேஏற்று 40 கிறிஸ்துவ சபைகள் ஓரளவுஉதவின. ஆனால் அது போதாததால்நன்கொடைகள் திரட்டும் நோக்கில் 1941 ஆம்வருடம் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டார். தேவையான நிதி திரட்ட அவர்அமெரிக்காவின் அனைத்துபகுதிகளுக்கும் (மாநிலங்களுக்கும்) பிரயாணம் செய்தார். அங்குள்ளதிருச்சபைகள் அவரின் நற்பணிக்கு ஆதரவுநல்கியதோடு ஆண்டுதோறும் பொருள்உதவிகள் செய்யவும் ஆர்வம்காட்டின. பொதுமக்களும் அவருடையபுனிதப் பணியைப் பாராட்டி உதவினர். 2 மில்லியன் அமெரிக்கப் பெண்மணிகளிடம்ஆளுக்கு ஒரு டாலர் என்று 2 மில்லியன்அமெரிக்க டாலர்கள் திரட்டினார்!அதுபோன்று பல மில்லியன் டாலர்களுடன்வேலூர் திரும்பி, மருத்துவமனையையும் மருத்துவக்கல்லூரியையும் நவீனப் படுத்தினார்.

1945 ஆம் ஆண்டில் மருத்துவக் கல்லூரியில்ஆண்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இன்று அனைத்து வசதிகளுடனும், நவீனசிறப்புப் பிரிவுகளுடனும், 2000படுக்கைகள் கொண்டு, ஆசியாவின் மிகப்பெரிய மருத்துவமனையாகவும் , உலகின்மிகப் பெரிய மிஷன் மருத்துவமனையாகவிளங்குகிறது! ஐடாவின் பெயர் உலகெங்கும் பரவியது.1952ஆம் வருடம் உலகின் சிறந்த 5 டாக்டர்களில் ஒருவராக டாக்டர். ஐடாஸோஃபியா ஸ்கடர் தேர்ந்தெடுக்கப்பட்டார். டாக்டர். ஐடா ஸ்கடர் வேலூர் நகரமக்களாலும், வட ஆற்காடு மக்களாலும்பெரிதும் போற்றப்பட்டார். அவரைபாசத்துடன் ஐடா அத்தை(Aunt Ida) என்றேஅழைத்தனர். இந்திய நாட்டின் பெண்களின்நல்வாழ்வுக்காக தமது வாழ் நாளைஅர்ப்பணித்த தியாகச் செம்மல் அவர். தாதியர் கல்வியையும், பெண்களுக்கானமருத்துவக் கல்வியையும் இந்தியாவில்அறிமுகப் படுத்திய முன்னோடி அவர். அவர் தமது முதிர் வயதில் கொடைக்கானல்மிஷன் பங்களாவில் ஓய்வு பெற்றார். தமது 85வது வயதில் ஒரு நாள் வழக்கம்போல்தபால்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.அமெரிக்காவிலிருந்து வந்திருந்தஒரு தபாலில் ”டாக்டர். ஐடா, இந்தியா.” என்று மட்டும் முகவரி எழுதப்பட்டிருந்தது. நாடு தழுவிய நிலையில் அவர்அறியப்பட்டிருந்தார்.

இந்தியப் பெண்களுக்காக அவர் செய்தமாபெரும் தியாகத்தையும்சேவையையும் பாராட்டும் வகையில்அவருடைய் நூற்றாண்டு தினமான ஆகஸ்ட் 12,2000 நாளன்று அவரின் படமும் சி.எம்.சி.மருத்துவக் கல்லூரியும், மருத்துவமனையும்பொறிக்கப்பட்டசிறப்பு தபால் தலை வெளியிட்டுபெருமை சேர்த்தது இந்திய அரசு!1960 ஆம் வருடம் மே மாதம் 24 ஆம் நாள்அதிகாலையில் வழக்கம்போல் எழுந்தார்.அவருக்கு வயது 90.வழக்கத்திற்கு மாறாக தலைசுற்றுவதாகக் கூறினார்.அவருக்கு உதவும் தாதி, ”காப்பிகுடியுங்கள் அம்மா தலை சுற்றல்நின்றுவிடும்” என்றாள் .அவர், ”வேண்டாம்” என்று பதிலளித்தார். ஐந்து நிமிடங்களில் அவர் இறைவனடிசேர்ந்துவிட்டார்! இவர் போன்றவர்கள் இந்தியா வந்ததினால்தான்மருத்துவ துறை இத்தகைய அசுர வளர்ச்சிகண்டிருக்கிறது.யாருக்காவது  மறுக்க முடியுமா?

Source : WP
இந்த செய்தியை உங்களுக்கு பகிர்ந்துகொள்வது என் பாக்கியம் என கருதுகிறேன் ..அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்....