வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

எழுச்சிதமிழர் பொன்மொழிகள் 55 :



எழுச்சிதமிழர் பொன்மொழிகள் 55 :

அடங்கமறு! அத்துமீறு! திமிறி எழு! திருப்பிஅடி!

புதைந்த வரலாற்றை மீட்டெடுப்போம்! இழந்த விடுதலையை வென்றெடுப்போம்!

அடங்கா மத யானையைப் போல அதிரடி கலகம் செய்! அழிவிலே ஆக்கமுண்டு ஆகவே நீ தியாகம் செய்!

ஒருநாள் நிச்சயம் விடியும்! அது உன்னால் மட்டுமே முடியும்!

இந்துத்துவத்தை வேரறுப்போம்!
இழந்த முகத்தை மீட்டெடுப்போம்!

கூவி அழைக்காமல் சேரி திரளாது! - நீ மோதி மிதிக்காமல் சாதி ஒழியாது!

விளிம்பு நிலை மக்களை விழிப்புறச் செய்வோம்! - ஆதிக்க வரம்புகளை நொறுக்கி அதிகாரம் வெல்வோம்!

தலைநிமிர சேரி திரளும் - அன்று
தலைகீழாய் நாடு புரளும்!

விழ விழ எழுவோம்! வீழ்ந்து விட மாட்டோம்! விடுதலைப்பாதையை விட்டு விலகி விட மாட்டோம்!

கல்வி யாவருக்கும் பிறப்புரிமை! - அந்த கல்வியே மானுடத்தின் பெரு வலிமை!

நீ ஆத்திரங்கொண்டெழாமல் உன் அடுத்த வாரிசு உருப்படாது!

இருட்டும் திருட்டும் முடிவுக்கு வரும்!
எதிர்காலம் அதிகாரம் நம் கைகளுக்கு வரும்!

எரிபடும் சேரிகளில் இடிபடும் மசூதிகளில் புறப்படும் விடுதலைச் சூறாவளி!

கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம்!
எளிய மக்களுக்கும் அதிகாரம்!

கடைசி மனிதனின் கண்களில் கண்ணீர் மட்டுமல்ல! கனலும் தெறிக்கும்!

இனியும் நாங்கள் ஆடுகளல்ல! இளிச்சவாயர் கூட்டமுமல்ல! - சீறிப்பாயும் விடுதலைச் சிறுத்தைகள்!

விழிப்பாய் இரு! நெருப்பாய் எழு!

அச்சம் தவிர்த்து சினந்து கிளம்பு! சாதியமைப்பின் உச்சந்தலையில் இடியாய் இறங்கு!

மக்கள் விடுதலை மண்டியிட்டு பெறுவதல்ல! மண்ணை சிவப்பாக்கு! மடுவை மலையாக்கு!

மூளும் இங்கே விடுதலை நெருப்பு! திசைநாளும் நாறும் சாதிக்கொழுப்பு!

எதனையும் எதிர்கொள்ள இரு விழிப்பாய்! இமயம் போல் தடைவரினும் எகிரிப்பாய்!

அடக்க நினைத்திடும் சிறைச்சாலை! - எமக்கு அரசியல் கற்பிக்கும் பாடசாலை!

சேரியில் புரட்சியின் சினை வெடிக்கும்! ஆதிக்கவெறி சாதியத்தின் தலைநறுக்கிப் பகை முடிக்கும்!

வாள் கைமாறும் போது தான் - நம் வாழ்க்கை மாறும்!

குடிசைவாழ் மக்கள் குமுறி எழுந்தால் கோட்டை மேடும் குப்பை மேடாகும்!

வெறுப்பின்றி சலிப்பின்றி விடுதலைக்கு உழைப்போம்! - நம்மை வெறுப்பவர்கள் சுமத்துகின்ற வீண்பழிகளைத் துடைப்போம்!

உன்னைப் படி! தாய்மண்ணைப் பிடி!

இந்துப் பெயர்களை மாற்றுவோம்! இனிய தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவோம்!

படை பெருக்கு! தடை நொறுக்கு!

சிறை! சிறுத்தைகள் ஓய்வெடுக்கும் குகை!

பொய் வழக்கும் கொடுஞ்சிறையும் போராளிகளை என்ன செய்யும்!

சிந்திய இரத்தம் வீண் போகாது! சிறுத்தைப் படையோ பின் வாங்காது!

பாதையில் குறுக்கிடும் தடைமீறு! - அதிரடிப் பாய்ச்சலில் படைத்திடு வரலாறு!

அடித்தட்டு மக்களை அரசியல்படுத்துவோம்! - சாதிய அமைப்பின் அடிப்படையை அம்பலப்படுத்துவோம்!

அரசியல்படுத்துதல் நடந்தேற வேண்டும்! அது அடுத்தடுத்த தலைமுறைக்கும் தொடர்ந்திட வேண்டும்!

அதிகாரம் பரவாமல் ஜனநாயகம் மலராது! அரசியல் அமைப்பாக மாறாமல் ஆதிக்கம் வீழாது!

அரசு அதிகாரம் அனைவராலும் உருவானதாகும்! எனவே ஆட்சி அதிகாரம் அனைவருக்குமானதாகும்!

அடித்தட்டு மக்களின் நிலை மாற வேண்டும்! அதற்கு அரசியலதிகாரம் கை மாற வேண்டும்!

அரசியல் அதிகாரம் பொதுச்சொத்தேயாகும்! அதனை அனைவருக்கும் பகிர்ந்தால் தான் ஜனநாயகமாகும்!

கற்றலும் கற்பித்தலும் கடமையாதல் வேண்டும்! அந்த கடமையில் தலைவர்கள் உருவாதல் வேண்டும்!

தன் வழி மாற்றான் வழி மதிப்பிடல் வேண்டும்! சதிகளைத் தகர்த்திட கமுக்கமாய் திட்டமிடல் வேண்டும்!

உலகத்தை விடிய வைக்கும் உழைக்கின்ற வர்க்கம்! ஒருபோதும் கலகத்தை நடத்தாமல் கண்டதில்லை மார்க்கம்!

தனிநலன் உடைபடப் பொதுநலன் பிறக்கும்! - அதுவே தன்னையும் பிறரையும் அறிந்திட வைக்கும்!

அமைப்பை முறை செய்யும் விதிகள் மதிப்போம்! - வீணாய் ஆளுக்கொரு வழிசெல்லும் ஆணவம் தவிர்ப்போம்!

அடையாளத்தை இழந்தும் ஏற்றும் ஐய்க்கியமாவோம்! - கொடிய ஆதிக்கத்தை எதிர்க்கும் சிதைக்கும் ஆற்றல் பெறுவோம்!

பொது ஒழுங்கின் அடித்தளமாய் தனிஒழுங்கு அமையும்! - அது பொதுநலத்தைக் கொண்டதெனில் தலைநிமிர்வு விளையும்!

துரோகம் துள்ளும்!
தூய்மையே வெல்லும்!

தகவல் தொடர்பின்றி மக்கள் தொடர்பில்லை! கொள்கைசார் மக்கள் திரளின்றி அமைப்புக்கு வலுவில்லை!

கருத்துரிமை பறிபோனால் அடிமைத்தனம் வேர் விடும்! - அந்த கருத்துரிமை மீட்டால் தான் கைவிலங்கு அறுபடும்!

அடுத்த பாய்ச்சலுக்கு அணியமாவோம்! அடுத்த தலைமுறையை அணியமாக்குவோம்!
கொள்கை வெல்ல களமாடுவோம்! கோட்டையில் ஒருநாள் கோடியேற்றுவோம்!

நெருக்கடிகள் சூழ்ந்த போதும் கொள்கை நெறிப்படியே வாழ்தல் வீரம்! - நெருப்பலைக்குள் வீழ்ந்த போதும் அடிமை நெறி மீறிப் பாய்தல் தீரம்!

கொண்ட கொள்கையில் உறுதியை காட்டு! தேவையென்றால் கொள்கை சிதையாமல் உத்தியை மாற்று!

சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை!

கருத்தியலை ஆழமாக வேரூன்றச் செய்வோம்! களப்பணிகளைத் தீவிரமாக மேலோங்கச் செய்வோம்!

எம் பதிவுகள் வெறும் கண்ணீர்த்துளிகள் அல்ல! - கலகத்தின் சினைகள்.

#HBD_THIRUMA
#தலைவர்55

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக