இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் .
1.சிவகங்கை இராணி வேலு நாச்சியார் ஆட்சிக்காலம் கி.பி 1780- கி.பி 1783சிவகங்கை தலைநகரான காளையார்கோயிலை கிழக்கிந்திய கம்பெனியின் படை முற்றுகையிட்டபோது சிவகங்கை மன்னரின் மனைவியான வேலுநாச்சியார் வீரத்தோடு எதிர்த்ததன் மூலம் தமிழக மகளிர் வீரத்தில் குறைந்தவர்கள் இல்லையென்பதை நிரூபித்தார். ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையும் வேலுநாச்சியாருக்கே உரித்தாகும்.
2.1806-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10-ஆம் தேதி அதிகாலையில் வேலூர் படைவீரர்கள் புரட்சி செய்தனர்,பெண்களும் பங்கு கொண்டனர்.
3.ராணி சென்னம்மா கர்நாடக மாநிலம் 1824-1829
4.ராணி லட்சுமிபாய் வட இந்தியாவின் சான்சி நாட்டின் இராணி. 1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும் பங்காற்றி இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடி பிரித்தானியருக்கு எதிராகப் படைகளை திரட்டினார். 1857ம் ஆண்டு, முதல் விடுதலைப் போரில் தீவிரமாக குதித்தார்
5.ஜல்காரி பாய் 1857 - 58 ஆங்கிலேய அரசை ஏமாற்றும் நோக்கத்தில், ஜல்காரி பாய், ராணி லக்ஷ்மிபாயைப் போல் உடை அணிந்து கொண்டு, படைக்குத் தலைமை தாங்கினார்.
6.ராணி அவந்திபாய் நாட்டை ஆங்கிலேயர்களிடமிருந்து மீட்க உறுதி பூண்டார் அவந்திபாய். நான்காயிரம் வீரர்களைத் திரட்டிக் கொண்டு 1857 ஆம் வருடம், ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் படையெடுத்துப் புறப்பட்டார்
7.ஜானகி ஆதி நாகப்பன் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து, ஜான்சி ராணி படையில் துணைத் தளபதியாகப் பதவி உயர்ந்தவர். பர்மா இந்திய எல்லையிற் துப்பாக்கி ஏந்தி ஒரு போர் வீராங்கனையாகக் களம் கண்டவர்.
8.அன்னி பெசண்ட் ஆங்கில அரசின் அடக்குமுறைகள் அவரை வெகுவாகப் பாதித்தன. விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக காமன் வீல்' என்ற வாரப் பத்திரிகையை 1913 ஆம் ஆண்டில் ஆரம்பித்தார். 1914 ஆம் ஆண்டில் சென்னையில் இருந்து நியூ இந்தியா என்ற பெயரில் நாளேடு ஒன்றை ஆரம்பித்து நடத்தினார்.
9.சரோஜினி நாயுடு இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் இணைந்து தண்டி யாத்திரையில் ஈடுபட்டார்.
10.ருக்மிணி லட்சுமிபதி 1930ல் வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டதற்காக ஓராண்டு சிறையிலடைக்கப்பட்டார்
11.கஸ்தூரிபாய்காந்தி மகாத்மாகாந்தியின் துணைவியார்.
12.விஜயலக்குமி பண்டிட் ( ஜவகர்லால் நேருவின் சகோதரி)
13.சுசேதாகிருபளானி (ஆச்சாரிய கிருபளானியின் துணைவியார்)
14.மீராபென் (1892 – 1982) ஆங்கிலேய பெண்மணி இந்தியாவில் தங்கி இருந்தபோது மகாத்மாகாந்தியின் உதவியாளராக பணிபுரிந்தார், கிருஷ்ணபக்தையான இவருக்கு மகாத்மாகாந்தி வழங்கிய பட்டம் மீராபாய்.
வேலுநாச்சியார்
இராணி வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் போராளி ஆவார்.
இளமை
1730ஆம் ஆண்டு, இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகவாக பிறந்தார் வேலுநாச்சியார். எனினும் ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டார். ஆயுதப் பயிற்சி பெற்றார்; பல மொழிகள் கற்றார். 1746ல் சிவகங்கைச் சீமை மன்னர் முத்துவடுகநாதருக்கு மனைவியானார்.
ஆங்கிலேயர் படையெடுப்பு
1772ல் ஐரோப்பியரின் படையெடுப்பால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க இடம் மாறி மாறிச் சென்றார் வேலுநாச்சியார். இந்த படையெடுப்பை எதிர்க்க நினைத்த வேலுநாச்சியார் அவர்கள் விருப்பாட்சியில் தங்கி ஹைதர் அலியைச் சந்தித்து உருது மொழியில் ஆங்கிலேயர் எதிர்ப்பு பற்றி பேசி விளக்கினார். வேலு நாச்சியாரின் உருது மொழித் திறமையைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஹைதர் அலி உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார். ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் தமது எட்டு வயது மகளையும் பாதுகாக்க வேண்டிய நிலை அவருக்கு இருந்தது. அமைச்சர் தாண்டவராயன் பிள்ளையின் முயற்சியினால் சிவகங்கை மக்கள் பிரதிநிதிகள் வேலுநாச்சியாரோடு கலந்து பேசியதன் கம்பனி எதிர்ப்புப்படை ஒன்று உருவாக்கப்பட்டது. மருது சகோதரர்கள் இப்போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.
Image
ஆங்கிலேயர்களின் சட்டதிருத்தம்
ஆண் வாரிசு இல்லாமல் உள்ள நாட்டை (அரசாங்கத்தை) தாமே எடுத்து நடத்தலாம் என்று ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியின் சட்ட படி புதிய முறை (doctrine of lapse) தோற்றுவிக்கப்பட்டது. அதன் பின்பு, சிவகங்கையின் ஆட்சி அதிகாரத்தை காக்கும் பொறுப்பில் இருந்த மருது சகோதர்களே ஆட்சியை கைப்பற்றி இருபது வருடங்கள் சிறப்பாக ஆட்சி நடத்தினர்.மேலும், தங்களது இறப்பு வரையிலும் சிவகங்கையை சிறப்பான கட்டமைப்போடு ஆண்டு வந்தனர் என்பது இங்கே குறிப்பிடதக்கது.
படை திரட்டல்
1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். படை காளையார் கோயிலை கைப்பற்றியது. சிவகங்கையில் வேலுநாச்சியார், தம்மைக் காட்டிக் கொடுக்காது வெள்ளையரால் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு, தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார். இந்தக் கோயில் கொல்லங்குடி வெட்டுடையகாளியம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இறுதியாக சிவகங்கை நகரைக் கைப்பற்ற சின்னமருது, பெரிய மருது, தலைமையில் படை திரட்டப்பட்டது. சிவகங்கை அரண்மைனயில் விஜயதசமி, நவராத்திரி விழாவிற்காக கூடிய மக்கள் கூட்டத்தில் பெண்கள் படை மாறுவேடத்தில் புகுந்து அதில் குயிலி, என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள். வேலுநாச்சியார், தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார்.
இறுதி நாட்கள்
1793ல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்கு துயரம் அதிகமானது. அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் டிசம்பர் 25, 1796 அன்று இறந்தார். இதன் தொடர்ச்சியாக சிவகங்கைச் சீமையை ஆட்சி புரிந்த மன்னர்களின் பட்டியல் கீழே உள்ளது.
ராணி சென்னம்மா இந்திய நாட்டில் 1778 ஆம் வருடம் பிறந்தார். தனது சிறு வயதிலேயே சென்னம்மா குதிரையேற்றம், வாள் வீச்சு, வில்வித்தை போன்றவற்றில் தேர்ச்சி பெற்றார். கர்நாடக மாநிலத்தில், பெல்காம் என்ற ராஜ்ஜியத்தில், கிட்டூர் என்ற ஊரின் ராஜா முல்லசர்ஜா என்பவருடன் சென்னம்மாவுக்குத் திருமணம் நடந்தது. அவரது கணவர் 1816 இல் இறந்து விட்டார். அவர்களது ஒரே மகனும் 1824 இல் இறந்து விடவே, சென்னம்மா சிவலிங்கப்பா என்பவரைத் தன் மகனாக தத்து எடுத்துக் கொண்டு, அவருக்கே முடி சூட்டினார். ஆங்கிலேயர்களுக்கு இது பிடிக்கவில்லை ஆகவே அவர்கள் சிவலிங்கப்பாவை நாடு கடத்த ஆணையிட்டார்கள். ராணி சென்னம்மா இந்த ஆணையை மதிக்கவில்லை. ஒரு மிகப்பெரிய போர் மூண்டது. ஆங்கிலேயர்களை மிகவும் துணிச்சலுடனும், தைரியத்துடனும், பெரும் ஆற்றலுடனும் எதிர்த்துப் போரிட்டாள், சென்னம்மா. ஆனால் அவர்களை எதிர்த்து அதிக நேரம் தாக்குப் பிடிக்க முடியாமல், அவர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு பைல்ஹோங்கல் கோட்டையில் கைதியாக வைக்கப்பட்டாள். அங்கு 1829 ஆம் வருடம், பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி சென்னம்மாவின் மரணம் நேர்ந்தது.
ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்த சென்னம்மா கர்நாடக மாநிலத்தில் ஒரு பெரும் வீராங்கனையாக இன்றும் போற்றப் படுகிறார்.
இராணி இலட்சுமிபாய்
இராணி இலட்சுமிபாய் அல்லது சான்சி இராணி (Rani Lakshmibai, மராத்தி-झाशीची राणी, நவம்பர் 19, 1835–சூன் 17, 1858) வடமத்திய இந்தியாவின் சான்சி நாட்டின் இராணி. 1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும்பங்காற்றி இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடியாகக் கணிக்கப்படுகிறவர்.
வாழ்க்கைக் குறிப்பு
27.59.241.143 01:39, 10 அக்டோபர் 2013 (UTC)ஆரம்ப வாழ்க்கை நவம்பர் 19, 1835இல் வாரணாசியில் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த மௌரியபந்தர்-பகீரதிபாய் தம்பதியினருக்குப் பிறந்தவர் சான்சி இராணி. இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் மணிகர்ணிகா. இவர் மனு எனவும் அழைக்கப்பட்டார். இவருக்கு நான்கு வயதாகும்போது பகீரதிபாய் இறந்து போனார். இவர் சிறு வயதிலேயே குதிரையேற்றமும் வாள் வீச்சும் கற்றுக் கொண்டார். மணிகர்ணிகாவின் தந்தையாகிய மௌரியபந்தர் பித்தூரிலுள்ள பேஷ்வா நீதிமன்றத்தில் வேலை செய்தார்.] பித்தூரின் பேஷ்வா மணிகர்ணிகாவைத் தனது சொந்த மகள் போல வளர்த்தார்.
சான்சியை ஆண்ட ராஜா கங்காதர ராவ் நெவல்கர் என்பவருக்கு 1842இல் மணிகர்ணிகாவைத் திருமணம் செய்து வைத்தார் தந்தை. அதிலிருந்து, மணிகர்ணிகா இராணி இலட்சுமிபாய் என அழைக்கப்பட்டதுடன் சான்சியின் ராணியாகவும் பதவியேற்றார். 1851இல் அவர்களுக்குப் பிறந்த மகனான தாமோதர் ராவ் நான்கு மாதங்களில் இறந்து போனான். தாமோதர் ராவின் இறப்பின் பின், ராஜா கங்காதர ராவ் நெவல்கரும் இராணி இலட்சுமிபாயும் ஆனந்த் ராவைத் தத்தெடுத்தனர். பின்னர், அக்குழந்தைக்குத் தாமோதர் ராவ் எனப் பெயர் சூட்டப்பட்டது. ஆனாலும் தனது மகனின் இழப்பின் துயரத்திலிருந்து மீளாத ராஜா கங்காதரராவ் நவம்பர் 21, 1853இல் உடல்நலமிழந்து இறந்தார்.
Image
மன்னர் கங்காதர ராவ் மறைந்த பின், வளர்ப்பு மகன் தாமோதர் ராவை ஆட்சியில் அமர்த்த எண்ணினார் சான்சி ராணி. ஆனால், அப்போதைய ஆங்கியேல ஆளுநர் டல்லவுசி, பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் அவகாசியிலிக் கொள்கையின்படி, தத்துப்பிள்ளையை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ள மறுத்தார். ஒரு மன்னருக்கு நேரடி வாரிசு இல்லையென்றால், அந்த அரசு தங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடி வந்த ஆங்கிலேயர்கள் சான்சி நாட்டைத் தமது ஆட்சிக்குட்படுத்த முடிவெடுத்தனர். ஆங்கிலேயர்கள் 1854ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் ராணி லட்சுமிபாய்க்கு 60000 ரூபாயை ஓய்வூதியமாகக் கொடுத்து ஜான்சிக் கோட்டையை விட்டு வெளியேறச் சொன்னார்கள்.
முதல் இந்திய விடுதலைப்போர்
ஆயினும் 1857ஆம் ஆண்டு மே 10ஆம் திகதி இந்தியக் கிளர்ச்சி மீரட்டில் ஆரம்பமாகியது. போர் வீரர்களுக்குப் புதிதாக வழங்கப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளில் பசுவினதும் பன்றியினதும் கொழுப்புப் பூசப்பட்டதாகப் பரவிய வதந்தியையடுத்தே இக்கிளர்ச்சி ஏற்பட்டுப் பரவத் தொடங்கியது. இச்சந்தர்ப்பத்தில், ஆங்கிலேயர்கள் இந்தியக் கிளர்ச்சி சம்பந்தமாகவே கவனம் செலுத்தினர். ஜான்சி பற்றி அதிகக் கவனம் செலுத்தவில்லை. இதன் காரணமாக, இராணி இலட்சுமிபாய் தனியாகவே ஜான்சியை ஆட்சி செய்தார். வடமத்திய இந்தியாவிலே ஜான்சி அமைதியான பிரதேசமாக இருந்தமையைக் காட்டுவதற்காகவும் ஜான்சி எந்த விதமான முற்றுகையை எதிர்கொள்வதற்கான அபாயத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதனைத் தெளிவுபடுத்துவதற்காகவும் இராணி இலட்சுமிபாயால் ஹால்டி குங்குமப் பண்டிகை ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டாடப்பட்டது.
ஆனாலும் இராணி இலட்சுமிபாய் ஆங்கிலேயர்களை எதிர்க்கக்கூடும் என்ற அச்சம் ஆங்கிலேயர்களிடம் இருக்கவே செய்தது. இதனால், ஆங்கிலேயர்கள் 1857ஆம் ஆண்டு சூன் 8ஆம் திகதி ஜோக்கன் பாக்கில் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் அதிகாரிகளைப் படுகொலை செய்ததில் இராணி இலட்சுமிபாய்க்கும் பங்கு உள்ளதாகக் கூறினர். பொதுமக்களும் விவசாயிகளும் இராணி இலட்சுமிபாய் மீது வைத்திருந்த மதிப்பைச் சீர்குலைக்கவே இவ்வாறு கூறினர்.
இதனையே காரணமாக வைத்து, 1858ஆம் ஆண்டு மார்ச்சு 23ஆம் திகதி ஹீ ரோஸ் தலைமையில் ஆங்கிலேயர்களின் படை ஒன்று ஜான்சியைக் கைப்பற்றுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஜான்சியின் படைகளுக்கு உதவி செய்வதற்காகத் தாந்தியா தோபேயின் தலைமையில் 20000 பேரைக் கொண்ட படை அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் அப்படை மார்ச்சு 31ஆம் திகதி ஆங்கிலேயர்களின் படையுடன் இணைந்த காரணத்தினால் தாந்தியா தோபேயினால் ஜான்சி ராணிக்கு உதவ முடியாமல் போனது. ஆனாலும் சான்சி இராணி பிரித்தானியருக்கு அடிபணிய மறுத்துத் தமது படைகளுடன் இணைந்து கடுமையாகப் போர் புரிந்தார். தனது நாட்டை விட்டுக் கொடுக்க மறுத்த சான்சி இராணி இலட்சுமிபாய், தனது படை வீரர்களை முன்னின்று வழி நடத்திச் சென்று பெரும் ஆற்றலுடனும் மிகுந்த துணிச்சலுடனும் போர் புரிந்தார். எனினும் மூன்று நாட்களின் பின்னர், ஆங்கிலேயர்களால் அத்துமீறி நுழைந்து நகரத்தைக் கைப்பற்ற முடிந்தது. கடுங்கோபத்திலிருந்த பிரித்தானியர், அரண்மனையைச் சூறையாடிப் பொருட்களைக் கொள்ளையடித்தனர்.
ஜான்சி இராணி 1858ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் திகதி இரவு நேரத்திலே தனது மகனுடன் மதிலிலிருந்து பாய்ந்து தப்பித்தார். அதிகம் பெண்களைக் கொண்ட பாதுகாவலர் படையணியின் பாதுகாப்புடன் ஜான்சி ராணி நகரத்தை விட்டு நீங்கினார்.ஆக்ராவிலுள்ள ராணி லட்சுமிபாயின் சிலை.
மறைவு
சான்சி ராணி இராணி இலட்சுமிபாய், தாமோதர் ராவுடனும் தமது படைகளுடனும் கல்பிக்குச் சென்று தாந்தியா தோபேயின் படையுடனும் ராவ் சாஹிப் பேஷ்வாவின் படையுடனும் ஏனைய புரட்சிப் படைகளுடனும் இணைந்து கொண்டார். இவர்கள் குவாலியருக்குச் சென்று குவாலியரின் மகாராஜா ஜயாஜிராவ் சிந்தியாவின் படையைத் தோற்கடித்து, குவாலியரின் கோட்டையொன்றைக் கைப்பற்றிக் கொண்டார்கள். வெள்ளையரின் படை குவாலியரைக் கைப்பற்ற முகாமிட்டது. 1858ஆம் ஆண்டு சூன் 17ஆம் திகதி, கோட்டாகி சேராய் என்ற இடத்தில் வெள்ளையரை எதிர்த்துச் சான்சி ராணி போரிட்டார். துரதிர்ஷ்டவசமாக இப்போரின்போது படுகாயமடைந்து அத்தினத்திலேயே வீரமரணம் அடைந்தார் இந்த வீரப் பெண்மணி. பிரித்தானியர் மூன்று நாட்களின் பின்னர் குவாலியரைக் கைப்பற்றினர்.
புகழ்
ஆங்கிலேயர்களின் படையை வழிநடத்திய ஹீ ரோஸ் வீரத்துக்காகவும் விவேகத்துக்காகவும் விடாமுயற்சிக்காகவும் குறிப்பிடத்தக்கவர் என்றும் அனைத்துப் புரட்சித் தலைவர்களிலும் மிகவும் ஆபத்தானவர் என்றும் இராணி இலட்சுமிபாயைப் புகழ்ந்து கூறினார்.
இவரது வீரதீரச் செயல்களும் ஆங்கிலேயரை எதிர்த்து இவர் புரிந்த போரும் இந்திய நாட்டில் இன்றும் நாட்டுப்புறப் பாடல்களாகவும் நாடகங்களாகவும் பலரால் போற்றப்படுகின்றன. அமரத்துவம் பெற்ற ஒரு வீராங்கனையாக என்றென்றும் இவர் பெயர் அழியாப் புகழ் பெற்றுள்ளது.
ஜல்காரிபாய்
ஜல்காரிபாய் (Jhalkaribai, ஹிந்தி: झलकारीबाई, நவம்பர் 22, 1830-1890) 1857 இந்தியக் கிளர்ச்சியின்போது ஜான்சிப் போரில் முக்கிய பங்கு வகித்த ஓர் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஆவார். இவர் ஜான்சியின் ராணி லட்சுமிபாயினுடைய பெண்கள் படையில் சேர்ந்திருந்தார். வறிய குடும்பமொன்றில் பிறந்த ஜல்காரிபாய், ராணி லட்சுமிபாயின் பெண்கள் படையில் ஒரு சாதாரண படை வீராங்கனையாக இணைந்தாலும் பின்னர், மிக முக்கியமான முடிவுகளை எடுப்பதில் ராணி லட்சுமிபாயுடன் பங்குபற்றவும் அவருக்கு அறிவுரை கூறவும் கூடிய நிலைக்கு உயர்ந்தார். இந்தியக் கிளர்ச்சியின்போது ஜான்சிப் போரின் உச்சகட்டத்திலே, ஜல்காரிபாய் ஆங்கிலேய அரசை ஏமாற்றும் நோக்கத்தில் ராணி லட்சுமிபாயைப் போல் உடை அணிந்து கொண்டு படைக்குத் தலைமை தாங்கி, ராணி லட்சுமிபாய் கோட்டையை விட்டுப் பாதுகாப்பாக வெளியே செல்வதற்கு உதவி செய்தார்.
ஜல்காரிபாயின் வீர வரலாறு பல நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் கூடப் புந்தேல்கண்டில் நினைவுகூரப்பட்டு வருகின்றது. புந்தேல்கண்ட் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாடும் நாட்டுப்புறப் பாடல்கள் எல்லாம் ஜல்காரிபாயின் வாழ்க்கை வரலாற்றையும் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் படையை எதிர்த்துப் போரிட்ட வீரத்தையும் சொல்கின்றன.
வாழ்க்கை
விவசாயிகளான சடோபா சிங்-ஜமுனா தேவி தம்பதியினருக்குப் பிறந்தவர் ஜல்காரிபாய். இவர் 1830ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் திகதி ஜான்சிக்கு அருகிலுள்ள போஜ்லா எனும் கிராமத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே இவரின் தாயான ஜமுனா தேவி இறந்து போனார். அதன் பின்னர், சடோபா சிங் இவரை ஓர் ஆணைப் போல் வளர்த்தார். ஜல்காரிபாய் குதிரையேற்றத்தையும் ஆயுதங்களைக் கையாளும் விதத்தையும் அறிந்து கொண்டார். அக்கால சமூக நிலைமையின்படி, ஜல்காரிபாய் முறையான கல்வியைப் பெறவில்லை. ஆயினும் விரைவிலேயே நன்றாகப் பயிற்றப்பட்ட வீராங்கனையாக வந்தார். காட்டிலே ஒரு புலியால் தாக்கப்பட்டப் போது, தனது கோடரியைப் பயன்படுத்திப் புலியைக் கொன்றதிலிருந்து புந்தேல்கண்டில் ஜல்காரிபாயின் புகழ் பரவத் தொடங்கியது. இன்னெர்ரு சந்தர்ப்பத்தில் செல்வர் ஒருவரின் வீட்டில் கொள்ளையிட வந்த ஆயததாரிகளிடம் சவால் விட்டு, அவர்களைப் பின்வாங்கச் செய்தார்.
ஜல்காரிபாய், தோற்றத்தில் ராணி லட்சுமிபாய் போலவே இருந்தார். இச்சந்தர்ப்பத்திலே, ராணி லட்சுமிபாயின் பீரங்கிப் படையைச் சேர்ந்த பூரண் சிங்கை ஜல்காரிபாய் திருமணம் செய்து கொண்டார். பூரண் சிங், ஜல்காரிபாயை ராணி லட்சுமிபாயிடம் அறிமுகம் செய்து வைத்தார். இதன் பின்னர், ஜல்காரிபாய் ராணி லட்சுமிபாயின் பெண்கள் படையில் இணைந்து கொண்டார். ஜான்சியின் படையில் இணைந்ததிலிருந்து போர் முறைகளின் அனைத்துப் பிரிவுகளிலும் மேலும் நிபுணத்துவத்தைப் பெற்றுக் கொண்டார் ஜல்காரிபாய். துப்பாக்கி சுடுவதிலும் பீரங்கிகளை இயக்குவதிலும் தனது திறமையை வளர்த்துக் கொண்டார். பார்ப்பதற்குத் தன்னைப் போல் இருப்பதால் ராணி லட்சுமிபாய்க்கு ஜல்காரிபாயின் மேல் ஒரு கரிசனம் உண்டாகியது. ராணி லட்சுமிபாய்க்கு மிகவும் பிடித்த போர் வீராங்கனையாக விளங்கினார் ஜல்காரிபாய்.
1857-58ஆம் வருடங்களில் ஜான்சிக் கோட்டையின் மீது ஆங்கிலேய அரசு பல முறை படை எடுத்தது. ஒவ்வொரு முறையும் ராணி லட்சுமிபாய் அந்தப் படையெடுப்புக்களைச் சாமர்த்தியமாக எதிர்கொண்டு முறியடித்தார். 1857 இந்தியக் கிளர்ச்சியின்போது, 1858ஆம் ஆண்டு ஏப்பிரல் 3ஆம் திகதி ஹீ ரோஸ் பாரிய படையுடன் வந்து ஜான்சியை முற்றுகையிட்டார். ராணி லட்சுமிபாய் பாரிய படையை எதிர்த்துப் போர் புரியக்கூடிய நிலையில் இருக்கவில்லை. அவர் கல்பியிலுள்ள ஏனைய புரட்சிப் படைகளுடன் இணைவதாகவே திட்டம் போட்டிருந்தார். இதனையடுத்து, ஜல்காரிபாய் தான் ஜான்சி ராணி போல் முன்னின்று போர் புரிவதாகவும் அச்சந்தர்ப்பத்தில் ராணி லட்சுமிபாய் கோட்டையை விட்டுத் தப்பிச் செல்ல முடியும் என்று ஒரு வேண்டுகோளை ராணி லட்சுமிபாயிடம் முன்வைத்தார். ஜல்காரி பாயும் பெண் படையைச் சேர்ந்த சிலரும் ராணி லட்சுமிபாயை மிகுந்த பிரயாசைக்குப் பிறகு தப்பிச் செல்ல வைத்தார்கள். ஏப்பிரல் 4ஆம் திகதி இரவில் ராணி லட்சுமிபாய் கோட்டையிலிருந்து தப்பித்துக் கல்பிக்கு விரைந்து சென்றார். அதே சமயத்தில், ஜல்காரிபாய் ராணி லட்சுமிபாயைப் போல் உடை அணிந்து கொண்டு, படைக்குத் தலைமை தாங்கியபடி ஹீ ரோசின் முகாமுக்குச் சென்றார். ஜல்காரிபாய் மிகுந்த பராக்கிரமத்துடன் ஆங்கிலேயப் படையுடன் சண்டையிட்டார். ஆனால், கடைசியில் அவர்களிடம் பிடிபட்டார். ஆங்கிலேய அதிகாரிகள், தாம் ராணி லட்சுமிபாயை உயிருடன் பிடித்ததாக எண்ணி ஜல்காரிபாயிடம் அவரை என்ன செய்ய வேண்டும் என்று கேட்டனர். ஜல்காரிபாய் துணிச்சலுடன் தூக்கிலிடுங்கள்! என்று கூறினார். ஆனாலும் ஆங்கிலேயர்கள் உண்மையைச் சிறிது தாமதமாக அறிந்து கொண்டனர். ஆனால், அதற்குள் ராணி லட்சுமிபாய் நீண்ட தூரம் சென்றிருந்தார். ஆங்கிலேய அதிகாரிக்கு ஜல்காரிபாயின் வீரமும் எசமான விச்வாசமும் மிகவும் பிடித்துப் போயிற்று. ஆகவே, அவர் ஜல்காரிபாயை மிகுந்த மரியாதையாக நடத்தி விடுதலையும் செய்தார்.
ஜல்காரிபாயின் பிற்கால வாழ்க்கை பற்றிய மூலாதாரங்கள் சிலவே கிடைத்துள்ளன. ஜான்சிப் போரில் ஜல்காரிபாய் இறந்ததாகச் சில ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. ஆனாலும் சில ஆதாரங்கள் ஜல்காரிபாய் ரோசால் விடுதலை செய்யப்பட்டு 1890 வரை வாழ்ந்ததாகக் குறிப்பிடுகின்றன.
ராணி அவந்திபாய்
ராணி அவந்திபாய் ராம்கட் நாட்டின் ராஜா விக்ரமாதித்ய சிங், தனது மனைவி அவந்தி பாய் அவர்களை நிர்கதியாக விட்டுவிட்டு இறந்தார். ஆட்சியில் அடுத்து அமர்வதற்கு ஒரு வாரிசும் இல்லாத நிலையில், ஆங்கிலேய அரசு அவர்களது நாட்டை சட்டத்தின் பாதுகாப்பின் கீழ் வைத்தது. தனது நாட்டை ஆங்கிலேயர்களிடமிருந்து மீட்க உறுதி பூண்டார் அவந்திபாய். நான்காயிரம் வீரர்களைத் திரட்டிக் கொண்டு 1857 ஆம் வருடம், ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் படையெடுத்துப் புறப்பட்டார் அவந்திபாய்.
மிகவும் தைரியமாகப் போர் புரிந்தும் கூட ஆங்கிலேயர்களின் பெரும் படைக்கு முன் அவந்திபாயால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. தனது தோல்வியைத் தெரிந்து கொண்ட ராணி அவந்திபாய், 1858 ஆம் வருடம், மார்ச் மாதம் 20 ஆம் தேதி,தனது வாளைக் கொண்டு தன்னைத் தானே மாய்த்துக் கொண்டார். வீரமரணம் அடைந்த அவந்திபாய்க்கு நமது வணக்கங்கள்.
புவான்ஸ்ரீ ஜானகி ஆதி நாகப்பன்
புவான்ஸ்ரீ ஜானகி ஆதி நாகப்பன், (Puan Sri Janaki Athi Nahappan, பிறப்பு: 1925) மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். மலாயா என்று அழைக்கப்பட்ட மலேசியாவின் சுதந்திரத்திற்குப் போராடிய பழம் பெரும் முன்னோடிகளில் ஒருவர். நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்திற் சேர்ந்து இந்தியாவின் விடுதலைக்காகப் போராடியவர்.
தன்னுடைய 18 வயதிலேயே இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து, ஜான்சி ராணி படையில் துணைத் தளபதியாகப் பதவி உயர்ந்தவர். பர்மா இந்திய எல்லையிற் துப்பாக்கி ஏந்தி ஒரு போர் வீராங்கனையாகக் களம் கண்டவர்.
நேதாஜியின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகத் திகழ்ந்து பிரித்தானியர்களுக்கு எதிராகச் செயற்பட்டவர். இந்தியாவின் பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் மலேசியப் பெண்.
சுபாஷ் சந்திர போஸ், மலாயாவில் இருந்த இந்தியர்களைச் சந்தித்து இந்தியாவின் விடுதலைக்குத் தங்களால் இயன்றதை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். உடனே ஜானகி ஆதி நாகப்பன், தான் அணிந்திருந்த தங்கக் கம்மல்களைக் கழற்றிக் கொடுத்தார்.
இந்திய நாட்டுப் பற்று
சுபாஷ் சந்திரபோஸ் மலாயாவிற்கு வந்து பேருரைகள் ஆற்றிய போது தமிழர்கள் தங்கள் வீடுகளில் இருந்த நகைகளை எல்லாம் எடுத்துக் கொடுத்தனர். நகையும் தமிழரும் பிரிக்க முடியாதவையாக இருந்த கால கட்டத்தில், இருந்ததை எல்லாம் மலாயாத் தமிழர்கள் சுபாஸ் சந்திரபோசிடம் அள்ளிக் கொடுத்தனர். அப்போது மலாயாத் தமிழர்களுக்கு இந்திய நாட்டுப் பற்று மட்டுமே முதன்மையானதாக விளங்கியது.
1946 ஆகஸ்ட் மாதம் மலேசிய இந்தியர் காங்கிரஸ் தொடங்கப்பட்டபோது அது இந்தியாவின் சுதந்திரத்திற்காகவும், இந்திய தேசிய இராணுவத்திற்காகவும், சிறைக்குச் சென்றவர்களை மீட்பதற்காகவும் தொடங்கி வைத்த கட்சியாகவே இருந்தது. மலேசிய இந்தியர்களை வழிநடத்த ஓர் அரசியல் அமைப்புத் தேவை என்று அப்போதைய சுதந்திரப் போராளிகள் முடிவு எடுத்தனர்.
இந்திய தேசிய இராணுவத்தில் சேவை
இந்தியத் தேசிய இராணுவத்தில் சேர்ந்து சேவையாற்றுவது என்றும் முடிவு செய்தார். அவருடைய குடும்பத்தில் இருந்து பலமான எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, ஜானகி ஆதி நாகப்பனின் தந்தையாருக்கு இது பிடிக்கவில்லை. ஜானகி ஆதி நாகப்பன் பிடிவாதமாக இருந்து இறுதியில் பெற்றோர்களின் சம்மதத்தைப் பெற்றார்.
மலாயாவில் சப்பானியர்கள் ஆட்சி செய்த போது, இந்தியாவைப் பிரித்தானியர்கள் ஆட்சியிலிருந்து விடுவிக்க இந்திய தேசிய இராணுவம் தோற்றுவிக்கப்பட்டது. இந்திய தேசிய இராணுவத்தில் முதன்முதலில் சேர்ந்த மலாயாப் பெண்களில் ஜானகி ஆதி நாகப்பனும் ஒருவராவார். அவர் வசதியான குடும்பத்தில் பிறந்து சொகுசான வாழ்க்கை வாழ்ந்தவர். முதல் நாள் படையிற் கொடுக்கப்பட்ட உணவைப் பார்த்து ஜானகி ஆதி நாகப்பன் அழுததாகவும் சொல்லப்படுகின்றது. ஜானகி ஆதி நாகப்பனாற் போர்ப்படையின் கடுமையான விதிகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும், நெறி முறைகளுக்கும் ஈடு கொடுக்க முடியவில்லை. தொடக்க காலத்தில் மிகவும் அவதியுற்றார்.
காலப் போக்கில் இராணுவ வாழ்க்கை அவருக்கு பழகிப்போனது. படை அதிகாரிகளுக்கான தேர்வில் ஜானகி ஆதி நாகப்பன் முதல் நிலையில் தேர்ச்சிப் பெற்றார். பின்னர், இந்திய தேசிய இராணுவத்தின் ஜான்சி ராணிப் படையில் துணைத் தளபதியாகப் பொறுப்பேற்றார். பின்னாளில் அவர் ஜான்சி ராணிப் படையைப் பற்றி ஒரு நூலையும் எழுதியுள்ளார்.
பத்மஸ்ரீ விருது
ஆயுதம் ஏந்திய ஜான்சி ராணிப் படைக்குத் துணைத் தளபதியாகப் பதவி ஏற்ற ஜானகி ஆதி நாகப்பன், பர்மா-இந்தியா போர் முனையிற் போரில் ஈடுபட்டார்.[2] காயம் அடைந்து பரிகாரமும் பெற்றுள்ளார்.
இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் அவரின் அரிய சேவைகளைப் பாராட்டி இந்திய அரசாங்கம் பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்து இருக்கிறது. 1997ஆம் ஆண்டு தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விருந்தளிப்பில், இந்தியக் குடியரசுத் தலைவர் கே. ஆர். நாராயணன், ஜானகி ஆதி நாகப்பனுக்கு அந்த விருதை வழங்கிச் சிறப்பித்தார்.
Image
இந்தியாவின் பத்மஸ்ரீ விருதைப் பெறும் முதல் மலேசியர் எனும் பெருமையும் இவரையே சாரும். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜானகி ஆதி நாகப்பன் சமூக பொதுச் சேவைகளிற் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டார். 1946ஆம் ஆண்டு, மலேசிய இந்திய காங்கிரசின் முதற் தலைவர் ஜான் திவியுடன் இணைந்து மலேசிய இந்திய காங்கிரஸ் எனும் ம.இ.காவை உருவாக்கினார்.
மலேசிய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினர்
ம.இ.காவின் மகளிர் பகுதி சார்பில் மலேசிய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக 1980 ஆம் ஆண்டில் நியமனம் செய்யப்பட்டார். அந்தப் பதவியை 1986 ஆம் ஆண்டு வரை ஆறு ஆண்டுகள் வகித்தார். மலேசிய நாடாளுமன்றத்தின் மேலவையில் இடம் பெற்ற முதல் இந்திய வம்சாவளிப் பெண்மணி இவர்தான்.
1946 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3, 4, 5 ஆம் தேதிகளில் நடைபெற்ற ம.இ.கா. அமைப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட டான்ஸ்ரீ ஆதி நாகப்பனுக்கும் இவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அதன் பின்னர் அவர்களுக்கு 1949 இல் திருமணம் நடைபெற்றது.
டான்ஸ்ரீ ஆதி நாகப்பன் இலக்கிய விருது
டான்ஸ்ரீ ஆதி நாகப்பனின் அரசியல் ஈடுபாட்டிற்கும் பொதுப் பணிகளுக்கும் தொடக்க காலத்தில் இருந்து பேருதவியாக இருந்து வந்தார். 85 வயதைத் தாண்டிவிட்ட இவர் இப்போது கோலாலம்பூரில் அமைதியாக வாழ்ந்து வருகிறார்.
இவருடைய கணவரின் பெயரில் ஆண்டுதோறும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ‘டான்ஸ்ரீ ஆதி நாகப்பன் இலக்கிய விருது’ வழங்கப்பட்டு வருகிறது. மலேசியாவில் மிகச் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு அந்த விருது வழங்கப் படுகிறது.
ஆதி நாகப்பன் தமபதியினருக்கு ஒரு மகன் இருக்கிறார். அவருடைய பெயர் ஈஸ்வர் நாகப்பன். அவர் சிங்கப்பூரில் வீடு விற்பனை தொழிற்றுறையில் ஈடுபட்டுள்ளார்.
அன்னி வூட் பெசண்ட்
அன்னி வூட் பெசண்ட் (Annie Wood Besant; அக்டோபர் 1, 1847 – செப்டம்பர் 20, 1933) என்பவர் பெண் விடுதலைக்காகப் போராடியவர், எழுத்தாளர், பேச்சாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
ஒரு சாதாரண ஐரியக் குடும்பத்தில் லண்டனில் 1847 ஆம் ஆண்டில் பிறந்தவர் அன்னி வூட். தந்தை வில்லியம் பைஜ்வூட் அயர்லாந்தில் பிறந்து லண்டனில் குடியேறியவர். அன்னி ஐந்து வயதாக இருக்கும் போது தந்தையை இழந்தார். அன்னை ஹரோ நகரில் ஆண்கள் பாடசாலை ஒன்றை நடத்தி வந்தார். அன்னி தனது 19வது வயதில் 1867 ஆம் ஆண்டில் பிராங்க் பெசண்ட் என்ற 26 வயது மத குருவை மணந்தார். டிக்பி, மேபேல் என்ற இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். கனவருடன் இணைந்து வாழ்வது அன்னிக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. பெண்ணுக்கு ஏற்பட்ட நோயினால் மனமுடைந்து போன அன்னி நாத்திகரானார். கணவர் பெசண்ட், மனைவியை கோயிலுக்குச் செல்லும் படியும், கிறிஸ்தவ மதக் கொள்கைக்கு ஏற்ப நடக்கும் படியும் வற்புறுத்தினார். சுதந்திர மனப்போக்குக் கொண்ட அன்னி கணவரிடம் இருந்து 1873 இல் பிரிந்து வாழ முடிவெடுத்தார்.
1880களில் அன்னி பெசண்ட் கணவரிடம் இருந்து பிரிந்த பின்னர் நிறைய கட்டுரைகள் எழுதத் தொடங்கினார் அன்னி. சிறுவர்களுக்கான கதைகள், கட்டுரைகள் எழுதினார். அன்னியின் அரசியல் போக்குகணவரிடம் இருந்து அவரை மேலும் பிரித்தது. பண்ணை விவசாயிகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார். இறுதியாக கணவன், குழந்தைகளை விட்டுப் பிரிந்து லண்டனுக்குத் திரும்பினார். அதிகாரபூர்வமாகப் பிரிவினை கிடைக்கவில்லை. இரண்டு குழந்தைகளும் பிராங்கின் பொறுப்பிலேயே இருந்தனர்.
லண்டன் பல்கலைக்கழகத்தில் பகுதிநேரப் படிப்பைத் தொடர்ந்தார். மூடப் பழக்கவழக்கங்களுக்கெதிராகப் பரப்புரையை ஆரம்பித்தார். இதனால் மத சமூகத்தினரின் எதிர்ப்புக்கு ஆளானார்.
சீர்திருத்தவாதி
"நியூமால் தூசியன் அமைப்பு" என்ற சீர்திருத்தச் சங்கத்துக்குத் தலைவியானார் அன்னி பெசண்ட். நாடாளுமன்ற அங்கத்தினர்கள் கடவுளின் பெயரால் சத்தியம் செய்யத் தேவையில்லை என்று வற்புறுத்தி கூட்டங்களில் பேசினார். "லிங்க்" என்ற பெயரில் பத்திரிகையைத் தொடங்கி, இந்தியாவிலும் அயர்லாந்திலும் விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவாக எழுதினார். பெண்கள் விடுதலை, தொழிலாளர் உரிமைகள், குடும்பக் கட்டுப்பாடு போன்ற பலவற்றிலும் தனது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்தார்.
பிரும்மஞான சங்கம்
The Secret Doctrine என்ற நூலை எழுதிய பிளேவட்ஸ்கி அம்மையாரை பாரிசில் 1889 ஆம் ஆண்டில் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. இது அன்னி பெசண்டின் வாழ்க்கையில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது. தன்னுடைய நாத்திக வாதத்தைக் கைவிட்டு ஆத்திகரானார். பிளேவட்ஸ்கியின் பிரும்மஞான சங்கத்தில் உறுப்பினரானார். இதனை அடுத்து மார்க்சியவாதிகளுடன் தனக்கிருந்த உறவுகளைத் துண்டித்துக் கொண்டார். 1891 இல் பிளேவட்ஸ்கி இறந்ததை அடுத்து பிரும்மஞானத்தில் ஒரு முக்கிய புள்ளியானார். அன்னி பெசண்ட். அச்சபையின் சார்பில் 1893 ஆம் ஆண்டில் சிகாகோவில் இடம்பெற்ற உலக கொலம்பிய கண்காட்சியில் கலந்து கொண்டார்.
1893 ஆம் ஆண்டில் பிரும்மஞான சபையின் உறுப்பினராக முதற் தடவையாக இந்தியா வந்தார். சபையின் அமெரிக்கக் கிளையின் தலைவரான வில்லியம் ஜட்ஜ் என்பவருடன் ஏற்பட்ட கருத்து மோதல்களைத் தொடர்ந்து அமெரிக்கக் கிளை தனியாகப் பிரிந்தது. மீதமிருந்த சபை ஹென்றி ஸ்டீல் ஒல்கொட் என்பவராலும் அன்னி பெசண்டினாலும் தலைமை வகிக்கப்பட்டது. 1874 லண்டனில் (Colby Road, London SE19) அன்னி பெசண்ட் வாழ்ந்த வீடு.
இந்தியாவில் அன்னி பெசண்ட்
இந்தியா வந்த அன்னி பெசண்ட், சென்னையில் அடையாறில் பிரும்மஞான சங்கத்தின் தலைமை நிலையத்தை நிறுவினார். இந்து சாத்திரங்களை ஆழ்ந்து படித்துபல நூல்களை எழுதினார். பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். காசியில் சில காலம் வசித்த அன்னி பெசண்ட் அங்கு இந்து சமய விளக்கங்களை முறைப்படி பெற்றார். இந்திய உடை தரித்து இந்துவாகவே வாழலானார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் இணைவு
அன்னி இயற்கையிலேயே புரட்சி மனப்பான்மை கொண்டவராதலால், ஆங்கில அரசின் அடக்குமுறைகள் அவரை வெகுவாகப் பாதித்தன. விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக காமன் வீல்' என்ற வாரப் பத்திரிகையை 1913 ஆம் ஆண்டில் ஆரம்பித்தார். 1914 ஆம் ஆண்டில் சென்னையில் இருந்து நியூ இந்தியா என்ற பெயரில் நாளேடு ஒன்றை ஆரம்பித்து நடத்தினார். இதன் மூலம் அவர் அரசியலில் இழுக்கப்பட்டார்.
காங்கிரஸ் தலைமைப் பதவி
1907 ஆம் ஆண்டில் சூரத் நகரில் இடம்பெற்ற இந்திய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். இம்மாநாட்டில் மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால் ஏற்படவிருந்த பெரும் பிளவைத் தவிர்த்து, லக்னோவில் இடம்பெற்ற மாநாட்டில் இரு பிரிவினரையும் இணைத்து வெற்றி கண்டார். ஹோம் ரூல் (சுயாட்சி) இயக்கத்தை தொடங்கினார். நாடு முழூவதிலும் அதன் கிளைகள் உருவாயின. அன்னி பெசண்ட் தனது தலைமைப் பதவிக் காலத்தில் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, விடுதலை இயக்கத்தை வலுப்பெறச் செய்தார்.
அன்னி பெசண்டின் சுற்றுப் பயணங்களுக்கும் பொதுக் கூட்டங்களுக்கும் ஆங்கிலேய அரசு தடை செய்தது. 1917, ஜூன் 15 ஆம் நாள் ஏனைய காங்கிரஸ் தலைவர்களுடன் அன்னி பெசண்டையும் கைது செய்தது. இவர்களின் கைதைக் கண்டித்து காங்கிரஸ் இயக்கம், மற்றும் முஸ்லிம் லீக் ஆகியன சத்தியாக்கிரகம் செய்யப்போவதாக அறிவித்தது. இதனால் நிலை குலைந்த ஆங்கில அரசு செப்டம்பரில் இவர்களை விடுதலை செய்தது.
டிசம்பர் 1917 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த மாநாட்டில் இந்திய காங்கிரசின் தலைவராக ஓராண்டிற்குத் தெரிவானார். லாகூரில் ஜவகர்லால் நேருவின் தலைமையில் 1929 இல் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் முழுமையான சுயாட்சி கோரி அறிக்கை வெளியானது. காங்கிரஸ் சோசலிச சார்பாக கருத்துக்களை வெளியிட்டமை அன்னி பெசண்டின் கொள்கைகளுக்கு உரியதாக இருக்க வில்லை. இதனால் அவர் மகாத்மா காந்தியின் சத்தியாக்கிரக இயக்கங்களில் சேரவில்லை. காங்கிரசில் இருந்து விலகி இருந்தார். ஆனாலும் இந்திய விடுதலையில் முன்போலவே ஈடுபாடு காட்டி வந்தார். இந்தியாவில் மட்டுமல்லாமல் பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொண்ட போது அங்கும் இந்திய விடுதலைக்கு ஆதரவாக பொது மேடைகளில் உரையாற்றினார். 1929 இல் "பொதுநலவாய இந்தியா" என்ற பெயரில் ஒரு அறிக்கையை எழுதி பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அனுப்பினார்
.
இறுதிக் காலம்
தனது எண்பத்தியோராவது அகவையில் தீவிர அரசியலில் இருந்து விலகிய அன்னி பெசண்ட் இறுதிக் காலங்களில் இந்திய மெய்யியலாளரான ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியுடன் நெருங்கிய தொடர்பைப் பேணினார். பிரும்மஞான சபையின் முன்னேற்றத்தில் முனைப்பாக ஈடுபட்டார். எண்பத்தேழாம் அகவையில் 1937 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 இல் சென்னையில் உள்ள அடையாறில் அன்னி பெசண்ட் காலமானார். அவரது மறைவிற்குப் பின்னர், அவரது நண்பர்கள் ஜே. கிருஷ்ணமூர்த்தி, ஆல்டஸ் ஹக்ஸ்லி, ரோசலின் ராஜகோபால் ஆகியோர் இணைந்து கலிபோர்னியாவில் ""ஹப்பி வலி பாடசாலை"யை அமைத்தார்கள்.இப்பாடசாலை தற்போது அன்னி பெசண்டின் நினைவாக பெசண்ட் ஹில் பாடசாலை எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. அன்னி பெசண்ட் அமைத்த சென்னை அடையாறில் உள்ள பிரும்மஞான சபை இன்றும் அவர் புகழ் பரப்பிக் கொண்டிருக்கிறது.
மேற்கோள்கள்
சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா (பிப்ரவரி 13,1879, ஹைதராபாத் _ மார்ச் 2,1949, லக்னோ) அவர் பாரத்திய கோகிலா (இந்தியாவின் நைட்டிங்கேல்) என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், சுதந்திரப் போராளி, கவிஞர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார். அவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இளமைக் காலம்
சரோஜினி சட்டோபாத்தியாயா, பின்னாளில் நாயுடு, பெங்காலிய குலின் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் இணைந்து தண்டி யாத்திரையில் ஈடுபட்டார். காந்தி, அப்பாஸ் தியாப்ஜி மற்றும் கஸ்தூரி பாய் காந்தி ஆகியோர் கைதுக்குப் பின் தர்சண சத்தியாகிரகத்தில் துடிப்புடன் பங்கேற்றார்.
இந்தியாவின் ஹைதாராபாத் மாநிலத்தில் ஒரு வங்காள குடும்பத்தின் மூத்த மகளாக சரோஜினி நாயுடு அவர்கள் பிறந்தார். இவரது தந்தை விஞ்ஞானியும் தத்துவவியலாளரும் கல்வியாளராகவும் விளங்கிய அகோர்நாத் சடோபத்யாயா. இவரது தாய் பரத சுந்தரி ஒரு பெண் கவிஞர் ஆவார். இவரது தந்தை நிஸாம் கல்லூரியின் நிறுவனர் ஆவார். மேலும் இவரது நண்பர் முல்லா அப்துல் காமுடன் இந்திய தேசிய காங்கிரசின் முதல் உறுப்பினராக விளங்கினார். அவர் பின்னர் அரசியலில் ஈடுபட்டதற்காக அவரது தலைமை ஆசிரியர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
12 ஆவது வயதில் சரோஜினி நாயுடு அவரது மெட்ரிகுலேஷன் பரீட்சையில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்றார். அவர் மாநில அளவில் முதலிடம் பெற்றார். 1891 முதல் 1894 வரை அவர் தன்னுடைய படிப்பில் சிறு இடைவெளி விட்டு, பல்வேறு தலைப்பிலான புத்தகங்களைப் படித்தார். 1895 ஆம் ஆண்டு, பதினாறு வயதில் முதன் முதலாக லண்டனிலுள்ள கிங்ஸ் கல்லூரி மற்றும் கேம்பிரிட்ஜ் கிர்டன் கல்லூரியில் படிப்பதற்காக சென்றார்.
உருது, தெலுங்கு, ஆங்கிலம், பாரசீகம், பெங்காலி ஆகிய மொழிகளைப் பேச சரோஜினி நாயுடு கற்றுக்கொண்டார். அவருக்கு பிடித்தமான கவிஞர் பெர்சி பைஷ் ஷெல்லி ஆவார்.
மகாத்மா காந்தியுடன் சரோஜினி நாயுடு
1905 ஆம் ஆண்டில் வங்காளம் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். 1903-17 காலகட்டத்தில் சரோஜினி அவர்கள் கோபால கிருஷ்ண கோகலே, ரபீந்திரநாத் தாகூர், முகம்மது அலி ஜின்னா, அன்னி பெசண்ட், சி.பி.ராமஸ்வாமி ஐய்யர், மோகன்தாஸ் காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோரின் அறிமுகத்தைப் பெற்றார்.
1915 முதல் 1918 ஆண்டுகளுக்கிடையில் அவர் இந்தியா முழுவதும் இளைய சமுதாயத்தினரின் நல்வாழ்வு, பணியாளர் நலன், பெண் கொடுமை மற்றும் தேசியப் பற்று குறித்து பல்வேறு சொற்பொழிவுகளை மேற்கொண்டார். ஜவகர்லால் நேருவை 1916 ஆம் ஆண்டு சந்தித்ததற்குப் பின் அவர் சம்பரன் இன்டிகோ பணியாளர்கள் பிரச்சினையைக் கையில் எடுத்தார். 1925 ஆம் ஆண்டில் அவர் காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவிக்கு தேந்தெடுக்கப்பட்ட முதல் பெண் இவரே ஆவார்.
1919 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் ரௌலெட் சட்டத்தினைப் பிறப்பித்தது. இதன் வழியாக விழிப்புணர்வு ஆவணங்களை வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பானதாகக் கருதப்பட்டது; மோகன் தாஸ் காந்தி அவர்கள் எதிர்த்துப் போராட ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கினார், இதில் முதலில் இணைந்தவர் சரோஜினி நாயுடு ஆவார்.
ஜுலை 1919 ஆம் ஆண்டு சரோஜினி அவர்கள் இங்கிலாந்திற்கான ஹோம் ரூல் லீக்கின் தூதர் ஆனார். ஜுலை 1920 இல் அவர் இந்தியாவிற்கு திரும்பினார். ஆகஸ்ட் 1 அன்று மகாத்மா காந்தி அவர்கள் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கினார். 1924 ஆம் ஆண்டு, கிழக்கு ஆப்பிரிக்க இந்திய காங்கிரசில் பங்கேற்ற இரண்டு இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர்களுள் ஒருவராக சரோஜினி அவர்கள் திகழ்ந்தார்.
அக்டோபர் 1928 ஆம் ஆண்டு நாயுடு நியூ யார்க்கிற்கு சென்றார். அங்கு நிலவிய ஆப்ரிக்க அமெரிக்க மற்றும் அமெரிக்க இந்திய இனப் பாகுபாடுகளைக் கண்டு கவலையுற்றார். அங்கிருந்து திரும்பிய பின்னர் காங்கிரஸ் காரிய கமிட்டியின் உறுப்பினரானார்.
ஜனவரி 26, 1930 இல் தேசிய காங்கிரஸ் பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து சுதந்திரம் கோரியது. மே 5, அன்று மோகன் தாஸ் காந்தி கைது செய்யப்பட்டார். அதன் பின் சில நாட்களிலேயே நாயுடு அவர்களும் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். காந்தி அவர்களுடன் ஜனவரி 31, 1931 இல் அவர் விடுதலை செய்யப்பட்டார். அந்த ஆண்டின் பிற்பகுதியில் அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டனர். மோசமான உடல் நிலை காரணமாக நாயுடு உடனடியாகவும் காந்தி 1933 ஆம் ஆண்டும் விடுதலை செய்யப்பட்டனர். 1931 ஆம் ஆண்டு அவர் காந்திஜி மற்றும் பண்டிட் மாலவியாஜி ஆகியோருடன் இணைந்து வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்றார். அக்டோபர் 2, 1942 ஆம் ஆண்டு அவர் வெள்ளையனே வெளியேறு போராட்டம் காரணமாக கைது செய்யப்பட்டார். அவர் காந்திஜியுடன் 21 மாதங்கள் சிறையில் இருந்தார். மோகன் தாஸ் காந்தி அவர்களுடன் நாயுடு அவர்கள் ஒரு பாசமான உறவினைக் கொண்டிருந்தார். காந்தி அவரை செல்லமாக "மிக்கி மவுஸ்" என்று அழைப்பார்.
1947 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஆசிய உறவுகள் மாநாட்டில் நாயுடு பங்கேற்றார். 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு அவர் யுனைட்டட் ப்ரொவின்சஸ் (தற்போது உத்தரப்பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது) _ ன் ஆளுனராக பதவியேற்றார். இதன் வழியாக இந்தியாவின் முதல் பெண் ஆளுனரானார். மார்ச் 2, 1949 அன்று மாரடைப்பால் அவர் மரணமைடைந்தர்.
17 வயதில் சரோஜினி அவர்கள் டாக்டர்.முத்யாலா கோவிந்தராஜுலு அவர்களை சந்தித்து அவர் மீது காதல் வயப்பட்டார். 19 வயதில் தனது படிப்பினை முடித்த பின்னர், ஜாதி விட்டு ஜாதி மேற்கொள்ளப்படும் திருமணங்கள் செல்லாத காலகட்டத்தில் அவரை திருமணம் செய்து கொண்டார். அவருடைய திருமண வாழ்வு மிகவும் மகிழ்ச்சிகரமானதாகக் கழிந்தது. 1898 ஆம் ஆண்டு சட்டப்படி (1872) சென்னையில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். ஜெயசூர்யா, பத்மஜா, ரந்தீர், லீலாமணி என அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர். பின்னர் அவரது மகள் பத்மஜா மேற்கு வங்காளத்தின் ஆளுனர் ஆனார்.
சரோஜினி நாயுடு கவிதைத் துறைக்காக பல பாராட்டுகளைப் பெற்றுள்ளார். இவரது கவிதைகளில் அழகான வார்த்தைகள் இருக்கும். அதன் காரணமாக அதை பாடவும் முடியும். 1905 ஆம் ஆண்டு அவரது முதல் பாடல்கள் தொகுப்பு தி கோல்டன் த்ரெஷோல்டு என்னும் பெயரில் வெளியிடப்பட்டது. மேலும் இரண்டு பகுதிகள் வெளியிடப்பட்டது: தி பேர்ட் ஆஃப் டைம் (1912) மற்றும் தி புரோக்கன் விங் (1917) பின்னர் அவரது தி விஸார்டு மாஸ்க் மற்றும் எ டிரஷரி ஆஃப் போயம்ஸ் ஆகிய புத்தகங்கள் வெளியிடப்பட்டன. 1961 ஆம் ஆண்டு அவரது மகள் பத்மஜா வெளியிடப்படாத தனது தாயின் கவிதைகளை தி ஃபெதர் ஆஃப் டான் என்னும் தலைப்பில் வெளியிட்டார்.
ருக்மிணி லட்சுமிபதி (ருக்மிணி லக்ஷ்மிபதி, பி. டிசம்பர் 6, 1892 – இ. ஆகஸ்ட் 6, 1951) ஒரு இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை மற்றும் இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த அரசியல்வாதி. இவர் சென்னை மாகாண சட்டமன்றத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் உறுப்பினர் மற்றும் சென்னை மாகாணத்தின் முதல் பெண் அமைச்சருமாவார்.
வாழ்க்கைக் குறிப்பு
ருக்மிணி சென்னையில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தாத்தா ராஜா டி. ராம்ராவ் ஒரு நிலக்கிழார். சென்னை பெண்கள் கிருத்துவக் கல்லூரியில் இவர் பி.ஏ பட்டம் பெற்றார். இவரது கணவர் டாக்டர். அசண்ட லட்சுமிபதி ருக்மிணி 1923ல் காங்கிரசில் சேர்ந்தார். 1926ல் பாரிசில் நடந்த சர்வதேச பெண்கள் வாக்குரிமை கூட்டணி பேராயத்தில் இந்தியப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார்.1930ல் வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டதற்காக ஓராண்டு சிறையிலடைக்கப்பட்டார். உப்பு சத்தியாகிரக இயக்கத்தில் சிறை சென்ற முதல் பெண் இவர் தான். 1934ல் சென்னை மாகாண சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1937லும் வெற்றி பெற்று ஜூலை 15, 1937ல் சட்டமன்றத்தின் துணைச் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மே 1, 1946 முதல் மார்ச் 23, 1947 வரை சென்னை மாகாணத்தில் (முதலமைச்சர் த. பிரகாசத்தின் அமைச்சரவையில்) பொதுச்சுகாதாரத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.
சென்னை மாகாணத்தில் அமைச்சர் பதவி வகித்த பெண் இவர் மட்டும் தான் சென்னை எழும்பூரிலுள்ள மார்ஷல் சாலைக்கு இப்போது ”ருக்மிணி லட்சுமிபதி சாலை” என்று இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது1997ல் இவர் நினைவாக ஒரு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. கஸ்தூரிபாய் (Kasturba Gandhi, ஏப்ரல் 11 1869 – பெப்ரவரி 22 1944) மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் வாழ்க்கைத் துணைவியார். கணவர் ஏற்ற தேசிய விரதத்திற்காக தானும் உடன் உழைத்தவர். காந்தியுடன் சேர்ந்து தென்னாப்பிரிக்காவில் கறுப்பர்களின் மீதான இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர். இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டு சிறை சென்றவர்.
இளமை
இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பெரும்வணிகர் குடும்பத்தில் கோகுல்தாஸ் கபாடியாவின் மகளாக 11.04.1869 ல் பிறந்தார் கஸ்தூரிபா. இவரது தாய் மொழி குஜராத்தி. 1883-ல் இவர் தனது 13ஆம் வயதில் தம் வயதேயான, குடும்ப உறவினரான மோகன்தாஸ் காந்தியை மணந்தார். திருமணத்தின் போது எழுதப்படிக்கத் தெரியாத இவருக்கு இவருடைய கணவர் கல்வி கற்பித்தார் கணவர் மேல்படிப்பிற்காக 1888ல் இலண்டன் சென்றபோது இந்தியாவிலேயே தங்கியிருந்தார். காந்தி பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபட்டதால் குடும்பப் பொறுப்பு முழுவதும் கஸ்தூரிபா கவனித்துக் கொண்டார். இத் தம்பதியினருக்கு, ஹரிலால் (1888), மணிலால் (1892), ராமதாஸ் (1897), தேவதாஸ் (1900) ஆகிய நான்கு புதல்வர்கள் பிறந்தனர்.
அரசியல்
கணவரின் சத்தியம், அகிம்சை, இந்திய விடுதலை இயக்கம் ஆகிய கொள்கைகளுக்கு தன் வாழ்நாள் முழுவதும் முழு ஒத்துழைப்பையும் அளித்தார். 1897 ல் தொழில்நிமித்தமாக, வழக்கறிஞர் பணிக்காக தென்னாபிரிக்காவின் டர்பன் நகருக்குச் சென்ற கணவருடன் கஸ்தூரிபாவும் சென்றார். அங்கு அவர் போராட்டமயமான வாழ்க்கை நடத்த வேண்டியிருந்தது. 1904 முதல் 1914 வரை டர்பன் நகரில் காந்தி குடும்பம் வசித்தது. தென் ஆப்பிரிக்காவில் நிலவிய நிறவெறிக் கொடுமைக்கு எதிரான கணவரின் போராட்டத்தில் துணை நின்றார் கஸ்தூரிபா.
இந்தியா வம்சாவழித் தொழிலாளர்கள் மீதான கொடிய சட்டங்களைக் கண்டித்து காந்திஜி நடத்திய அறப்போராட்டங்களில் கஸ்தூரிபா காந்தியும் பங்கேற்றார். 1913 ல் நடந்த அறப் போராட்டத்தில் கலந்துகொண்ட கஸ்தூரிபா, கைது செய்யப்பட்டு, மூன்று மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டார். காந்திஜி கைதான நேரங்களில் அறப் போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்திய பெருமையும் இவருக்கு உண்டு.
விடுதலைப் போரில் ஈடுபாடு
1915ல் இந்தியாவிற்கு திரும்பியபின்இந்திய விடுதலைப் போரில் களமிறங்கினார் காந்தி. அவருக்கு உற்ற துணையாக கஸ்தூரிபா காந்தி விளங்கினார். சபர்மதி ஆசிரமத்தில் தங்கி இந்திய விடுதலை இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடுகொண்டார்.
சிறு வயதிலேயே ஏற்பட்ட நுரையீரல் நோயால் பதிக்கப்பட்ட அவர் வாழ்நாள் முழுவதும் அதனால் சிரமப்பட்டார். ஆயினும், கணவருடன் எளிய வாழ்வு வாழ்ந்தார். சபர்மதி ஆசிரமத்தின் சூழல் அவருக்கு ஒத்துக்கொள்ளாத போதும், கணவரின் பாதையே தனது பாதை என, ஒரு இந்திய குடும்பத் தலைவியாகவே அவர் வாழ்ந்தார். அங்கு ராட்டை நூற்றல் உள்ளிட்ட காந்தியப் பணிகளில் ஈடுபட்டு மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கினார்.
Image
இறுதிகாலம்
வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது (1942) கைது செய்யப்பட காந்தியுடன் கஸ்தூரிபாய் காந்தியும் கைதானார். இருவரும் பூனாவிலுள்ள ஆகா கான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டனர். அங்கு, நாட்பட்ட நுரையீரல் அழற்சி, மூச்சுக்குழல் அழற்சி நோயினால் மிகுந்த வேதனையுற்றார். சிறையில் இருக்கும்போது சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் (22.02.1944) கஸ்தூரிபாய் காந்தி.
நன்றி– கோ.ஜெயக்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக