தமிழர் கடவுள்முருகன் ஆரியர்(இந்து) கடவுள் பிள்ளையார்...
குமரிக்கண்டம் முதல் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் கலியுலகம் வரை தமிழினத்தின் அடையாளமாக விளங்குபவன் முப்பாட்டன் முருகன் குமரிக்கண்டம் தொடங்கி இந்தயா முழுக்க தமிழனுக்கு சொந்தமானது அதற்கு ஆதாரம் தமிழில் இயற்றப்பட்ட தொல்க்காப்பியம் சிலப்பதிகாரம் அகநானூறு, புறநானூறு உட்பட 46 இலக்கியங்களில் அதற்கு ஆதாரம் இன்றும் காணப்படுகிறது.
தற்போது, அறிஞர் குணா அவர்கள் எழுதிய #தமிழரின்_தொன்மை என்ற புத்தகத்தில் ஆதாரத்துடன் விளக்கப்பட்டுள்ளது
இந்தியா முழுமைக்கும் உள்ள தமிழர்கள் முப்பாட்டன் முருகனை முன்னிறுத்துவதால் ஏறக்குறைய 2800 வருடங்களுக்கு முன்பு இந்தியாவிற்கு பஞ்சம் பிழைக்க வந்த ஆரிய பிராமணர்களுக்கும் நம்பூதிரிகளுக்கும் ஒரு அடையாளம் தேவைப்பட்டது அதற்கென்று அவர்களால் உருவாக்கப்பட்ட ஓர் வழிபாட்டி முறை தான் விநாயகர் வழிபாடு தாங்களும் இந்தியாவின் பூர்வ குடிகள் தான் என்று நம்ப வைப்பதற்காக விநாயகரும் முருகனும் சகோதரர்கள் என்று திரித்தார்கள்.
இதுகுறித்து நாங்கள் முன்னிறுத்தும் கேள்விகள் ?
1 முருகனும் விநாயகரும் அண்ணன் தம்பி என்றால், இந்தியா முழுவதும் விநாயகரை தூக்கி பிடிக்கும் ஆரிய பிராமணர்கள் ஏன் முருகனை தமிழகம் தாண்டி முன்னிறுத்தவில்லை??
2 தமிழ்நாட்டில் ஏறக்குறைய 2800 வருடங்களுக்கு முன்பு முருகனுக்கு அறுபடை வீடுகள் அமைத்த தமிழர்கள் அவரது அண்ணன் என்று சொல்லப்படும் விநாயகருக்கு ஏன் அமைக்கவில்லை??
3 முருகன், சிவன், பார்வதி, விநாயகர் ஆகியோர் ஒன்றாக இருந்தது போன்று 2500 வருடத்திற்கு முன்பு(ஆரியர்களின் வருகைக்களுக்கு முன்பு)தமிழர்கள் கோவில் கட்டியதாய் ஆதாரம் உண்டா?
4 கந்தனுக்கு கந்த புராணம் இருக்கும்போது ஏன் விநாயகருக்கு விநாயக புராணம் இயற்றவில்லை??
5 ஆதியில் குறிஞ்சி நிலத்தில் தான் மனிதன் வேட்டையாடி வாழ்ந்தான் அந்த குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த முதல் தலைவன் தான் முருகன் நிலை இவ்வாறு இருக்கையில் 2500 வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட விநாயகரை முருகனுடன் தொடர்பு படுத்தி பேசுவது நகைப்புக்குரியது
6 முருகனும் விநாயகரும் அண்ணன் தம்பி என்று சொல்லும் நீங்கள் ஏன் விநாயக சதுர்த்திக்கு கொண்டுக்கப்படு முன்னுரிமையை தைப்பூசத்திற்கு கொடுப்பதில்லை?
தைப்பூசத்துக்கு நடைமுறையில் பொது விடுமுறை கூட இல்லையே??
7 தமிழகத்தை தவிர இந்தியாவின் பிற பகுதிகளில் ஏன் முருகனுக்கென்று கோவில்கள் அமைக்கப்படவில்லை??
8 தமிழர்களும் ஆரியர்களும் ஒன்றுதான் (இந்துக்கள்) என்றால் ஏன் ஈழத்தில் 85% முருகனை(உங்கள் பார்வையில் இந்து) வழிபடும் தமிழர்களை இலங்கை இனப்படுகொலை செய்யும்போது இந்தியா ஏன் தடுக்கவில்லை??
மாறாக ஏன் ஆயுதம் கொடுத்து அழித்தொழித்தது?
1 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் கோவில்களை இடிக்கும்போது, தமிழர்களை இந்துக்கள் என்று சொல்லும் இந்தியா ஏன் தடுக்கவில்லை??
9 கீழடியில் தற்போது மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியை ஏன் இந்திய அரசாங்கம் தடுத்து நிறுத்தியது?
காரணம் - கீழடியில் கிடைக்கப்பட்ட 5000த்திற்கும் மேற்பட்ட பொருட்களை ஆராயும்போது மதம் சார்ந்த எந்தவொரு ஆதாரமும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை நடுகல் வழிபாடு தொடர்பான ஆதாரங்களே தொடர்ந்து கிடைக்கப்பட்டு வருகிறது
குறிப்பு - தமிழர்களின் வழிபாடு இயற்கை வழிபாடு, முன்னோர் வழிபாடு,குலதெய்வ வழிபாடு அகழ்வாராய்ச்சி முழுவதுமாக நடைபெற்றிருந்தால் இந்தியாவே தமிழர்க்கு சொந்தமானது என்பது நிரூபணமாகிவிடும் எனவே தான் கீழடி ஆய்வு நிறுத்தப்பட்டது
'இந்து' என்ற சொல் ஏறக்குறைய 150 வருடங்களுக்கு முன்பு கால்டுவெல் என்ற வெள்ளைக்காரரால் ஆரியரின் துணையோடு தமிழர்கள் உட்பட பூர்வ குடிகள் மீது திணிக்கப்பட்டதே ஏறக்குறைய 150 வருடங்களுக்கு முன்பு உள்ள கல்வெட்டுகளிலோ தமிழகத்தில் இந்து என்ற சொல் இருந்ததற்கான மரபியல் ஆதாரத்தை நிரூபித்துவிட்டால் முருகனை இந்து என்று நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
இந்து-பௌத்த மோதல்
........................................................................
"அகில இந்தியாவிலும் தனி மனிதர் ஒருவருக்கு சிலை வைத்து வணங்கப்பட்டது புத்தருக்கு மட்டும்தான். அப்போது கடவுளர்களுக்கு சிலை வைத்து வணங்கும் வழக்கம் ஏற்பட்டிருக்க வில்லை" --R.S.சர்மா-(பண்டைய இந்தியா நூலில்)
ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தோனேசியாவரை கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர்வரை புத்தர் சிலைகள் நிறைந்திருந்தன.
இன்றைக்கு அரசமரங்கள் தோறும் பிள்ளையார் சிலைகளை பார்க்கிறோம். அரச மரத்துக்கும் பிள்ளையார் சிலைகளுக்கும் என்ன தொடர்பு என்று ஆராய்ந்து பார்த்தால் இந்து பௌத்த மதப் போராட்டத்தின் ஒரு வரலாற்றுக் காலத்தை தோண்டி எடுக்கலாம்.
பாலி மொழியில் "போதி" என்பது அரச மரத்தை குறிக்கும்.புத்தர் அரச மரத்தின் அடியில் ஞானம் பெற்றார் என்பது புத்த மரபு.அதனால் நாடு முழுதும் புத்த மதத்தை தழுவியவர்கள் எங்கெல்லாம் அரச மரங்கள் இருந்ததோ அங்கெல்லாம் புத்தர் சிலைகளை வைத்து வணங்கத் தொடங்கினார்கள்.
மதப் புரட்சி நடந்த காலத்தில் நாடு முழுவதும் உள்ள புத்தரின் சிலைகள் உடைத்து நொறுக்கப்பட்டன.
புத்தரின் சிலைகளை கேவலப்படுத்துவதன் மூலம் பௌத்தர்களை அவமானப்படுத்தும் வேலையையும் இந்துக்கள் செய்தனர்.
புத்தர் அழகிய வடிவம் உடையவர். நீண்ட தவத்தின் மூலமும் முறைப்படியான் பயிற்சியின் மூலமும் அழகிய உடல் அமைப்பை பெற்றிருந்தார் புத்தர். இடை மெலிந்தும் அகன்ற மார்புகளுடனும் நீண்ட மெல்லிய நாசியுடனும் தோற்றமளிக்கும் புத்த சிலைகளை நாம் இன்றும் பார்க்கிறோம். புத்தரின் இந்த அழகிய தோற்றத்தை சிதைத்தபோது உருவானதுதான் பிள்ளையாரின் அசிங்கமான தோற்றம்.
புத்தரின் மெலிந்த உள்ளடங்கிய அழகான வயிற்றுப்பகுதியை கேலி செய்யும் வகையில் பெரிய தொப்பையுடைய உருவத்தை உண்டாக்கினார்கள். புத்தருடைய மெல்லிய நீண்ட நாசியை கிண்டல் செய்யும் வகையில் யானை மூக்கு உடைய உருவத்தை உண்டாக்கினார்கள். எலி வகை விலங்கான "மூஞ்சிறு" மிகவும் அருவருக்கத்தக்க விலங்கு. அதை தொப்பையும் யானைத் தலையும் உடைய அசிங்கமான சிலைக்கு வாகனமாக்கினர். இவை எல்லாமே புத்தரை அசிங்கபடுத்தி பௌத்தர்களை அவமானப்ப்டுத்துவதற்காக செய்ய்யப்பட்டவைகளே.
புத்தர் சிலகள் தொப்பையும் யானை முகத்தோடும் மூஞ்சிறு வாகனத்தோடும் அசிங்கப்படுத்தப்பட்ட போது அந்த நிலையிலும் புத்தரை வணங்கும் போக்கு தொடர்ந்ததால் நாளடைவில் அந்த சிலைகளுக்கு கடவுள் அந்தஸ்து கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.இதனால் அது பிள்ளையார் என்றும்,வினாயகர் என்றும் நாமம் சூட்டப்பட்டது.பிறகு முருகக் கடவுளின் அண்ணன் என்றும் சிவனின் மூத்தமகன் என்றும் அதற்கான வரலாறுகள் புனையப்பட்டன.
அரசமரம்தோறும் பிளையார் சிலைகள் இருப்பதற்கான பிண்ணனின் இதுதான்.
பிள்ளையார் மூத்த கடவுள் என்று அழைக்கப்படுவதற்கான காரணம் என்ன?
.பிள்ளையாருக்கு தந்தை சிவன் இருக்கும்போது, அவருக்கு உறவினர்களான ப்ரம்மா விஸ்ணு இருக்கும்போது, மகாபாரதத்தை நடத்திக் காட்டிய கிருஷ்ணர் இருக்கும்போது வினாயகர் எப்படி முதல் கடவுள் ஆக முடியும்.பிள்ளையார் முதல் கடவுள் என்று அழைக்கப்படுவதன் காரணம் புத்தர்தான்.
முன்னரே கண்டோம் நாடு முழுக்க சிலை வைத்து வணங்கப்பட்ட முதல் கடவுள் புத்தர்தான் என்று.அந்த புத்தர்தான் பிள்ளையார் ஆனார் அந்த புத்த்ருக்கு உரிய முதல் கடவுள் என்ற பெயர்தான் பிள்ளையாருக்கும் வந்து சேர்ந்தது.இப்படிதான் பிள்ளையார் முதல் கடவுள் ஆனார். இன்றும் புத்தர் பிள்ளையார் வடிவில் வணங்கப்பட்டு வருவதையே இது காட்டுகிறது.
இந்து மத கடவுளை ஒருவ்ர் தான் விரும்பிய படி எல்லாம் சிலை வடித்து விரும்பிய பெயரை வைத்து விட முடியாது.ஆகம விதிகளின் படி புராணங்களின் நியதிகளின்படிதான் கடவுளர்களின் உருவச் சிலைகளை வடிக்க முடியும்.ஆனால் பிள்ளையாரைப்பொருத்தவரை எவர் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் உருவங்களை அமைத்துக்கொள்ளலாம்.விருப்பப்படி சிலைக்கு பெயர்களையும் வைத்துக்கொள்ளலாம்.
ஏன் இப்படி.?
பிள்ளையார் என்பது இந்துக்களின் புராணங்கள் வழிக் கடவுள் அல்ல. கடவுளர்களுக்கே உரிய ஆகம விதிகளின்படையான உருவமோ பெயரொ பிள்ளையார் கடவுளுக்கு கிடையாது. புத்தரை பழிப்பதற்காக த்ற்காலிகமாக உருவாக்கப்பட்டவர்தான் பிள்ளையார்அதனால்தான் பிள்லையாருக்கு மட்டும் லட்சக்கணக்கான பெயர்கள் வழங்கப்படுகின்றன.
இன்று புதிதாக அமைக்கப்படும் வினாயகர் கோவில்களில் வினாயகர் சிலைகளை திருடிவந்து குடி அமர்த்தும் ஒரு சடங்கு இன்று வரை நடை முறையில் இருப்பதை காணலாம்.
இதன் பிண்ணனி என்ன?
எங்கெல்லாம் புத்தர் சிலைகள் இருந்தனவோ அங்கெல்லாம் இரவோடு இரவாக பிள்ளையார் சிலைகளை வைத்து விடுவது வழக்கமாக இருந்தது. விடிந்து பார்க்கும்போது அங்கு இருந்த புத்த்ர் சிலைக்கு பதிலாக பிள்ளையார் சிலையைக் கண்டு பௌத்தர்கள் வேதனைப்படுவதும் இந்துக்கள் சந்தோஷத்தில் குதிப்பதும் அன்றைக்கு வழக்கமான ஒன்று இதன் தொடர்ச்சிதான் திருட்டு பிள்ளையாரை புதிய கோயிகள் பிர்திஸ்டம் செய்யும் வழக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக