செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

மணிக்கிரிவன் என்ற காவல் பறையன்



காவல் பறையன்:
யார் இந்த காவல் பறையன்...? காவலுக்கும் பறையருக்கும் என்ன சம்பந்தம்...? பறையர்கள் காவல் தொழில் புரிந்தனரா..? ஆம் பறையர்கள் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர்... பறையர்கள் அந்த காலக்கட்டத்தில் அடிமைவேலை செய்து வந்தார்கள் என்று.   சொல்பவர்களுக்கு..

தலித் தலித் என்று சொல்லி  வரலாற்றை மறைக்கும் தலித்தியவாதிகளுக்கும்.... இதோ எம் இனம் அஞ்சாமை குணத்தோடு காவல் காத்து வந்த வரலாறு ஆதாரத்துடன்... திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்தில் உள்ள சங்கரநயினார் ஆலய தல வரலாறு காவற்பறையனைப்பற்றி குறிப்பிடுகின்றது. சங்க நயினார் ஆலயம் கட்டுவதற்க்கு முன்பு அங்கு காவற்பறையன் என்பவன் புன்செய் நிலத்தை பாதுகாத்து வந்த வேளையில் ஒரு புற்றை இடிக்கையில் அதில் இருந்து லிங்கமும் பாம்பும் வந்ததாகவும், இச்செய்தியை மணலூரில் ஆட்சி செய்து வந்த உக்கிரப்பாண்டியனிடம் சொல்ல உக்கிரப்பாண்டியன் இந்த ஆலயத்தை கட்டுகின்றார். காவற்பறையனை சிறப்பிக்கும் வகையில் இந்த ஆலயத்தில் காவல் பறையனுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.


இதே போல்.... புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டத்திலுள்ள காரையூர் திருமாங்கனி ஈஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டொன்று ஊரைப்பாதுகாக்கும் பணியில் பறையர் ஒருவர் நியமிக்கப்பட்டதை  குறிப்பிடுகிறது. ஆதனமழகியான் என்பவருக்கு காரையூர்ப் பறையன் என்றுபட்டம் கட்டி பாதுகாவல் உரிமையை ஊரார் வழங்கியுள்ளனர். இதற்காக அவரிடமிருந்து நூற்றுப் பத்துப் பணம் பெற்றுள்ளனர். இக்காவல்பணிக்காக இடையர்கள் நெய்யும், வலையர் முயலும், பள்ளர் பறையர் கோழியும் அவருக்கு வழங்கவேண்டுமென்று ஊரவர்கள் முடிவுசெய்துள்ளனர். பாண்டியமன்னனின் மெய்க்காப்பாளராகப் பறையர் ஒருவர் பணியாற்றியமையை "அரையன் அணுக்க கூவன் பறையனேன்" என்ற கல்வெட்டு வரிஉணர்த்துகிறது. சாக்கைப் பறையனார் என்பவர் தனக்கு கீழ் இருந்த சில வீரர்களுக்கு கட்டளை இட்டபதைப்பற்றி செங்கம் நடுகல் ஒன்று குறிப்பிடுகின்றது. இதன் மூலம் பறையர் ஒருவர் வீரர்களுக்கு கட்டளையிடும் பொறுப்பில் இருந்தமை தெரிகின்றது.


காவற் பறையன்
மணிக்ரீவன் என்ற தேவன் பார்வதி தேவியின் சாபத்தாற் பறையனாகிப் புன்னைவனக் காவலனாக இருந்தான். அதனால் அவன் காப்பறையன் என்றும், காவற் பறையன் என்றும் பெயர் பெற்றான். கரிவலம்வந்தநல்லூர்ப் பால்வண்ண நாதருக்குப் புன்னைவனத்திலே ஒரு பூந்தோட்டம் இருந்தது. அதற்கும் அவனே காவல். தோட்டத்தின் ஒரு பக்கம் புற்றொன்று வளர்ந்தது. அதை ஒரு நாள் அவன் வெட்ட அதிலிருந்த பாம்பின் வாலும் வெட்டுப் பட்டது. அப்போது அவன் புற்றின் பக்கத்தில் சிவலிங்கம் இருப்பதையும் கண்டான். அதே சமயத்தில் உக்கிரபாண்டியர் அடுத்த வனத்தில் வந்திருப்பதாக அறிந்து செய்தி தெரிவிக்க ஓடினான்.
உக்கிரபாண்டிய அரசர் கோவில் கட்டி ஊர் உண்டாக்கியது
திருநெல்வேலிக்கு மேலே பொருநையாற்றின் கரையிலுள்ள மணலூரில் அரசாண்டிருந்த உக்கிரபாண்டியர் அடிக்கடி மதுரை சென்று மீனாட்சியம்மையையும், சொக்கப்பெருமானையும் வழிபாடு செய்யும் வழக்கமுடையவர். காவற்பறையன் புற்றை வெட்டிச் சிவலிங்கத்தைக் கண்ட அன்று, பாண்டியருடைய யானை கொம்பினால் தரையைக் குத்திக் கீழே விழுந்து புரண்டது. பாண்டியர் ஒன்றும் செய்ய அறியாது திகைத்திருந்த போதுதான் காவற்பறையன் ஓடிவந்து அரசரிடம் செய்தி தெரிவித்து உடன் வர அழைத்தான். உக்கிரபாண்டியர் சென்று புற்றினையும் புற்றிடங் கொண்டாரையும், கூழைவாலினதாக்கிய பாம்பினையும் கண்டார். சங்கரனார் அசரீரியாக ஆனைதரப் பாண்டியர் காடு கெடுத்து நாடாக்கிக் கோவில் கட்டிச் சங்கரநயினார் கோவில் ஊரையும் தோற்றுவித்தார். கோவிலில் கோபுரத்தைத் தாண்டியதும் ( கோவில் நிர்வாக அலுவலக இடப்புறத் தூணில் ) காவற்பறையனுடைய திருவுருவத்தை இப்போதும் காணலாம்.
சங்கரலிங்கப் பெருமான் திருச்சந்நிதியுட் செல்லும்போது பலிபீடம், கொடிமரம் இவற்றைத் தாண்டியவுடன் தூண்களில் உக்கிரபாண்டியனையும், உமாபதி சிவாச்சாரியாரையும் காணமுடியும். யானை தனது பெரிய கொம்பினால் குத்தியமையினாலே அவ்விடத்தில் உண்டாயிருக்கிர ஊர் பெருங்கோட்டூர் என்று பெயர் பெற்றது. ( கோடு - கொம்பு ) உக்கிரபாண்டியர் கோயிற் பூஜைக்கு மிகுந்த நிலங்களைக் கொடுத்து ஒரு சித்திரை மாதத்திலே யானை மேலேறிக்கொண்டு தாம் இறைவனைக் காணக் காரணமாயிருந்த இடமாகிய பெருங்கோட்டூருக்குப் போய் யானை பிடிமண் எடுத்துத் தரக் கொண்டுவந்து பெருந்திருவிழா நடத்தி மகிழ்ந்தார். இத்திருவிழா இன்றும் நடைபெறுகின்றதை நாம் காணலாம்.
காவற்பறையனுக்கு ஊரில் தெற்கே ஒரு சிறு கோயில் இருக்கிரது. அது இருக்கும் தெரு காப்பறையந்தெரு என்று வழங்கிவந்தது. காப்பறையன் தெரு, தற்போது முத்துராமலிங்கம் தெருவென ஆகிவிட்டது. ஆனால், காவற்பறையன் கோவில் அதே தெருவில் இன்றும் உள்ளது. நித்திய பூஜைகளும் உண்டு. சித்திரைவிழா ஆரம்பமாகுமுன்பு, காவற்பறையனுக்குச் சிறப்பு வழிபாடு நடத்திய பின்னரே பெரிய கோயிலிலே கொடி ஏற்றம் நிகழும

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக