கிருஷ்ணன் செய்ததை இராதை செய்தால் அவளுக்கு கிடைக்கும் தேவடியா பட்டம்..
ஏன் இதை நாம் செய்தால் கலி தான் ...
அயோக்கிய தனம் நீ செய்யாதே அதை கடவுளும் இந்த அரசும் பார்த்துக்கும்...
இராதையின் லீலையை ஏற்பாரா கிருஷ்ணன் ???
இன்று கிருஷ்ண ஜெயந்தி.. இந்து மக்களின் மிக முக்கிய கடவுள்களில் ஒருவர் தான் இந்த கிருஷ்ணன்...
ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு தனித்தைமையை கொடுத்திருக்கிறது இலக்கியம் என்றால் கிருஷ்ணனுக்கோ "காதல் மன்னன்" கேரக்டர்..
அதாவது சிறிய வயதில் வெண்ணை திருடி மாட்டிக்கொள்ளும் குறும்புடையவனாக சித்தரிக்கிறது இலக்கியங்கள்.. அதை ஒரு சிறு குழந்தையின் குறும்பென ஏற்றுக்கொள்வோம். ஆனால் அதே மனநிலையில் அவரின் அனைத்து லீலைகளையும் ஏற்பது அறிவாகுமா...
நாம் வணங்கும் கடவுள்கள் நிஜமாகவே தகுதியானவர்களா ?? நாம் "Role Model" ஆக எடுத்துக்கொள்ளக் கூடியவர்களா ?? என சிந்திக்க வேண்டும்.
அன்று கிருஷ்ணன் செய்த விஷயங்கள் இன்று IPC படி தண்டிக்கக்கூடிய க்ரிமினல் குற்றங்கள்.
குளித்துக்கொண்டிருக்கும் பெண்களின் ஆடைகளை திருடி எடுத்து ஒளித்துக்கொண்டு "நீங்கள் உங்கள் உடலை மூடியுள்ள கைககளை உயர்த்தி வெளியே வந்து ஆடைகளை கேட்டால் தான் தருவேன் " என்ற மனநிலை ... அத்தனை பெண்களையும் ஆடையின்றி பார்க்கவேண்டுமென்ற இந்த ஆணின் மனநிலை ஒரு சைக்கோத்தனமான Rapist மனநிலை.
"கிருஷ்ண லீலைகள்" அதாவது எல்லா பெண்களுக்கும் பிடிக்கும் எல்லா பெண்களையும் மயக்கும் ஒரு Play Boy Character. இது போன்ற கதாபாத்திரங்களை தமிழ் சினிமாவில் முன்பெல்லாம் வில்லனாக சித்தரித்தார்கள்... இப்போது ஹுரோவாக சித்தரிக்கிறார்கள். அதையே நாம் கடவுளாக வணங்குகிறோம்.
கடவுள் என சித்தரிக்கப்பட்டவன் எது செய்தாலும் சரியா ??
ஒரு ஆண் கூட்டம் குளித்துக்கொண்டிருக்க அவர்களின் ஆடைகளை இராதை ஒளித்து வைத்துக்கொண்டு நீங்கள் அனைவரும் அப்படியே ஆடையின்றி வெளியே வந்தால் தான் உங்கள் ஆடைகளை தருவேன் என இராதை தன் லீலைகளை அரங்கேற்றினால், இராதைகளை ஏற்றுக்கொள்ளும் தைரியம் கிருஷ்ணன்களுக்கு இருக்கிறதா ??
WhatsApp ல் வந்தது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக