செவ்வாய், 18 ஜூலை, 2017

தமிழகத்தின் மிகப் பழமையான நகரம் எதுதெரியுமா ?


தமிழகத்தின் மிகப் பழமையான நகரம் எதுதெரியுமா ?


வைகை நதியோரம், 2600 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது தான் தற்போதைய மதுரை. முப்பெரும் தமிழ் வேந்தர்களில் ஒருவரான பாண்டியர்களின் தலைநகரமாய் விளங்கிய கோவில் மாநகர் எனும் மதுரை..

தமிழகத்தின் மிகப் பழமையான நகரம், ராமாயணத்திலும், கெளடில்யரின் அர்த்தசாஸ்திரத்திலும் போற்றிய பெருமை கொண்ட நகரம்…

மெகஸ்தனீஸ் (கி.. 302), பிளினி (கி.பி. 77), தாலமி (கி.பி.140) ஆகிய வெளிநாட்டுப் பயணிகள் மதுரைக்கு வந்து நம் தமிழரது அருமையும் பண்பாட்டின் பெருமையும் பயண குறிப்பாக எடுத்து சென்றுள்ளனர்..

உருவான வரலாறு..

தனஞ்செயன் என்ற விவசாயி ஒருறை வனப்பகுதியில் சென்றபோது கடம்ப மரம் ஒன்றிற்குக் கீழ் சுயம்பு லிங்கம் இருப்பதை பார்த்துள்ளார்..

உடனே இந்த செய்தியை மன்னர் குலசேகர பாண்டியனிடம் சென்று தெரிவித்துள்ளார்..

உடனடியாக மன்னர், சுயும்பு லிங்கத்தை சுற்றி வைத்து கோவில் கட்டவும், அக்கோவிலை மையமாக வைத்து புதிய நகரம் அமைக்கவும் ஆணை பிறபித்தாராம்.

அந்த நகரமே தற்போதைய மதுரை…

முதலில் மதுராபுரி என்று பெயர் சூட்டப்பட்டது. மதுரம் என்றால் இனிமை என்று பொருள்..

மதுரை நகரம்வலுவான கலாச்சாரப் பின்னணியைக் கொண்டது.

சிவன் தனது 64 திருவிளையாடல்களை நிகழ்த்திய இடம் என்று புராதான வரலாறு கூறுகிறது..

பிறகு வந்த விஜயநகரப் பேரரசின் ஒரு அங்கமாக மதுரை விளங்கியது.. தாங்கள் பிடித்த பகுதிகளை நாயக்கர்கள் எனப்படும் தங்களது ஆளுநர்களிடம் விட்டு விட்டுச் சென்று விடுவது விஜயநகர மன்னர்களின் வழக்கம்

ஆதலால் மதுரையும், நாயக்கர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

பிறகு நாயக்கர்கள் தங்களது கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை தாங்களே ஆளத்துவங்கினர். மதுரையை ஆண்ட நாயக்கர்கள் மத்தியில் திருமலை நாயக்கர் திறமையானவர்..

இவருக்கு பின் மதுரையின் நிர்வாகத்தைக் கவனிக்க, ஜார்ஜ் பிராக்டர் என்பவர் பிரதிநிதியாக கிழக்கிந்திய கம்பெனியாரால் நியமிக்கப்பட்டார்.

இவரே, மதுரையின் முதல் ஆட்சியர் என்பது குறிபிடத்தக்கது..

ஏனெனில், ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் மதுரையின் வளர்ச்சிக்காக பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது இவரால்..

வைகை நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.

நூறு ஆண்டுகளைக் ஆயிற்று, இன்றும், வட மற்றும் தென் மதுரை மக்களுக்கு இடையே உறவுப் பாலமாக நின்று உறவை கம்பீரத்துடன் பாதுகாக்கிறது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக