திங்கள், 20 ஏப்ரல், 2020

சோழனை பரையன் என அழைக்கும் கல்வெட்டு


சோழனை பரையன் என அழைக்கும் கல்வெட்டு
*******************************
 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

கல்வெட்டுகளின் ஆய்வுகளை வைத்து ஆய்வாளர்கள் கூறும் முக்கிய விடயம்
சோழனை பரையன் என அழைக்கப்பட்டுள்ளார்கள்.

Note:- (This Author While Studying Stone Inscriptions Kolar District Belonging to the 10th Century A.D Imperial Cholas Found the Term 'Paraiyar' in it.)

கோலார் மாவட்டத்திலுள்ள கோலாரம்மா கோவிலில் (Kolaramma Temple) பெரும்பாலும் தமிழ்கல்வெட்டுகளே உள்ளது, அதில் இராசேந்திர சோழன் உருவம் தாங்கிய கல்வெட்டுகளும் இடம்பெறுகிறது.

Source:- Kolar Gold Field (Unfolding the Untold)


வெள்ளி, 17 ஏப்ரல், 2020

வீரபத்திரர் தோன்றி வரலாறு...


விரபத்திரர் யார்...

வீரபத்திரர் தோன்றி வரலாறு...

தென்னாடு உடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று தினமும் ஈசனை மனம் உருகி வழிபடுபவர்களுக்கு 'வீரபத்திரர்' பற்றி தெரிந்து இருக்கும். என்றாலும் பெரும்பாலானவர்கள் வீரபத்திரர் பற்றியும், அவரது அவதார சிறப்புப் பற்றியும் அறிந்து கொள்ளாமலே உள்ளனர். 'சிவனின் ஒரு அம்சம்தான் வீரபத்திரர்' என்று ஒரே வரியில் வீரபத்திரர் பற்றி சொல்லி விடலாம்.

ஆனால் அந்த அவதார சிறப்பை நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சிவனின் 64 வடிவங்களில் ஒரு வடிவான வீரபத்திரர், 'அகந்தையை அகற்றி நீதியை நிலை நாட்டிட தோன்றியவர்' தவறு செய்தவனுக்கு தண்டனை தந்து நீதியை காக்கும் நீதி தேவனாக அவதரித்தவர். இது பற்றிய விவரம் வருமாறு:-

தீயவர்களையும், தீயச் செயல்களையும் அழிக்க சிவபெருமான் எட்டு தடவை போர்க்கோலம் பூண்டார். இந்த 8 போர்களும் 8 இடங்களில் நடந்தன. அந்த இடங்கள்தான் அட்ட வீரட்ட தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த 8 நிகழ்வுகளில் 6 தலங்களில் ஈசனே நேரடியாக சென்று போரிட்டு அசுரர்களை அழித்தார். மீதமுள்ள இரண்டில் ஈசன் நேரடியாக பங்கேற்கவில்லை.

அதற்கு பதில் தன் அருட்பார்வையால் உருவான வீரபத்திரர், பைரவர் ஆகிய இருவரையும் அனுப்பி தட்சன், பிரம்மன் ஆகியோரை வதம் செய்து அருள்புரிந்தார். இதில் வீரபத்திரரை அனுப்பி பெற்ற வெற்றி, உன்னதமான வெற்றியாகக் கருதப்படுகிறது. அந்த வெற்றி வீரவரலாறாக புராணங்களில் இடம் பெற்றுள்ளது.

அந்த வகையில் வீரபத்திரரின் அவதாரம் ஒப்பற்ற ஒன்றாகக் கருதப்படுகிறது. அது மட்டுமின்றி, வீரபத்திரர் பெற்ற வெற்றி தனித்துவம் கொண்டது. ஏனெனில் அட்ட வீரட்டங்களில் 7 வீரட்ட தலங்களில் நடந்த போர்களில், தேவர்களுக்கு உதவி செய்யவே சிவபெருமான் போர் புரிந்தார். ஆனால் வீரபத்திரரை அனுப்பி ஈசன் நடத்திய போர், தேவர்களை எதிர்த்து நடத்தப்பட்ட போராகும்.

வீரபத்திரரின் ஆவேசத்தால் எல்லா தேவர்களும் நிலகுலைந்து போனார்கள். வீரபத்திரரால் தேவர்கள் ஒவ்வொருவரும் கடுமையாக தண்டிக்கப்பட்ட விதம், வீர பராக்கிரமமாகப் போற்றப்படுகிறது. இந்த பராக்கிரம கதை உங்களுக்குத் தெரிந்ததுதான். நடிகர் திலகம் சிவாஜிகணேசன், சாவித்திரி நடித்த 'திருவிளையாடல்' படத்தில் இந்த கதை இடம் பெற்றுள்ளது.

பிரம்மனின் மகன் தட்சன். இவனது மகள் தாட்சாயினி. இவளை உலகை ஆளும் சிவபெருமான் திருமணம் செய்து கொண்டார். இதனால் ஈசனுக்கு தட்சன் மாமனார் ஆனான், இது தட்சனை கர்வம் கொள்ள வைத்தது. அதோடு நாளடைவில் சிவனை விட தானே உயர்ந்தவன் என்று தட்சன் அகந்தை கொண்டான். ஒரு தடவை அவன் மிக பிரமாண்டமான யாகம் நடத்தினான்.

30 ஆயிரம் மகரிஷிகளைக் கொண்டு நடத்தப்பட்ட அந்த வேள்விக்கு ஈசனைத் தவிர தேவர் உலகத்தில் உள்ள அனைவரையும் அவன் அழைத்தான். சிவபெருமானை அவமதிக்க வேண்டும் என்பதற்காகவே அவரை அழைக்காமல் இந்த யாகத்தை நடத்தினான். திருமால், இந்திரன் உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்கள் அந்த யாகத்தில் பங்கேற்றனர்.

விதி வசமோ... அல்லது தந்தை பாசமோ தெரிய வில்லை. தட்சனின் மகளான தாட்சாயினியும், 'என் தந்தை நடத்தும் யாகத்தை காணச் செல்கிறேன். அனுமதி தாருங்கள்' என்று ஈசனிடம் வேண்டினாள். ஈசன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தாட்சாயினி கேட்கவில்லை. 'சிவத்தை விட சக்திதான் பெரிது' என்று சொல்லி விட்டு தட்சன் நடத்தும் யாகப் பகுதிக்கு வந்தாள்.

அங்கு வந்த பிறகு தான், ஈசனுக்கு இழைக்கப்படும் அவமானங்களை உணர்ந்தாள். தந்தை தட்சனை திருத்த அவள் செய்த முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கவில்லை. கணவர் பேச்சை கேட்காமல் வந்தததற்கு தக்க தண்டனை கிடைத்து விட்டதாக வருத்தம் அடைந்த தாட்சாயினி, அங்கிருந்த யாகக் குண்டத்தில் பாய்ந்து உயிரைப் போக்கிக் கொண்டாள்.

தாட்சாயினி மறைவு செய்தி கேட்டதும் சிவபெருமான் கடும் கோபம் கொண்டார். தட்சனையும், அவன் நடந்தும் யாகத்தையும் அழிக்க முடிவு செய்தார். அது மட்டுமின்றி நீதி, நெறிதவறி தட்சனுக்கு துணைபோன எல்லா தேவர்களையும் தண்டிக்கவும் அவர் முடிவு செய்தார். இதற்கு தானே நேரில் சென்று போரிடுவதற்கு பதில், தன் பிரதிநிதியை அனுப்ப தீர்மானித்தார்.

அதன்படி அவரது நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறிகள் வெடித்துக் கிளம்பின. அதில் இருந்து வீரபத்திரர் தோன்றினார். சிவபெருமான் போலவே மூன்று கண்கள், அக்னி சடை, 8 கைகள், அந்த கைகளில் கட்கம், கேடயம், வில், அம்பு, மணி, கபாளம், திரிசூலம் ஆகியவற்றை ஏந்தி, நாகமாலை அணிந்து வீரபத்திரர் வெளிப்பட்டிருந்தார்.

தன் அவதார நோக்கத்தை நிறைவேற்ற, சிவ நின்தனை செய்த தட்சனின் யாகம் நடந்த இடத்துக்கு உடனடியாக வீரபத்திரர் விரைந்தார். முதலில் அவர் தட்சனின் தலையை வெட்டி வீசினார். இதை கண்டதும் யாக புருஷன், மான் வடிவம் கொண்டு ஓடினார். அவரையும் வீரபத்திரர் வதம் செய்தார். பிரம்மன் தலைகளும் வெட்டப்பட்டன.

தோளில் வெட்டுப்பட்ட இந்திரன், குயிலாக மாறி மறைந்தான். கையில் வெட்டுபட்ட அக்னி தேவன் கிளியாக மாறி பறந்தான். சூரியனின் பற்கள் உடைந்தன. சரஸ்வதி மூக்கு அறுக்கப்பட்டது. முப்பத்து முக்கோடி தேவர்களும் சிதறி ஓட யாகசாலை அழிக்கப்பட்டது. அப்போது திருமால், வீரப்பத்திரரை எதிர்த்தார்.

அப்போது திருமாலின் சக்கரத்தை வீரபத்திரர் அணிந்திருந்த கபால மாலையில் உள்ள ஒரு முகம் கவ்விக் கொண்டது. இதன் மூலம் தட்சனோடு சேர்ந்திருந்த எல்லா தேவர்களும் தண்டிக்கப்பட்டனர். வீரபத்திரரின் ஆவேசத்துக்கு முன்பு இனி தப்ப முடியாது என்பதை உணர்ந்த முப்பத்து முக்கோடி தேவர்களும் அடி பணிந்தனர்.

தாங்கள் செய்த தவறை மன்னித்து பொறுத்து அருளும் படி வேண்டினார்கள். இதையடுத்து அங்கு சிவபெருமான், ரிஷப வாகனத்தில் தோன்றினார். அவர் அருளால் முப்பத்து முக்கோடி தேவர்களும் மீண்டும் உயிர் பெற்றனர். தலை இழந்த தட்சனுக்கு ஆட்டுத்தலை பொருத்தப்பட்டது.

அப்போது தட்சன், யாகசாலை இருந்த இடத்தில் தோன்றிய ஈசன், அங்கு இருந்தபடியே மக்கள் அனைவருக்கும் அருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். இது தான் வீரபத்திரரின் அவதார கதை. இந்த அவதார நிகழ்வு எங்கு நடந்தது?

அதன் பிறகு வீரபத்திரர் மக்களுக்கு எப்படி அருள் புரிகிறார்? வீரபத்திரரை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? வீரபத்திரரை வழிபட்டால் வீரம், விவேகம், வெற்றிகள் தேடி வரும்.

ஜெய்பீம் வெற்றி முழக்கம்


#ஜெய்பீம்_வெற்றி_முழக்கம்

1800-களில் பார்ப்பன பேஷ்வாக்கள் மராட்டியத்தை ஆண்டு வந்தனர்.
அப்போது, இந்துமத , மனுசாஸ்திரக் கொடுமைகளும் மிகக்கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டன.

தலித்துகள் பகலில் தெருக்களில் நடமாடக்கூடாது;நடந்தாலும் தெருவில் எச்சில் துப்பிவிடக்கூடாது;எச்சிலைத் துப்புவதற்கு தம் கழுத்தில் ஒரு மண் கலயத்தைக் கட்டித்தொங்க விட்டுக்கொண்டு வரவேண்டும்
தலித்களின் கால் தடத்தைப் பார்ப்பனர்கள் மிதித்தால் பார்ப்பனர்களுக்குத் தீட்டாகிவிடும்.

அதனால் அவர்கள் பின்பகுதியில் ஒரு பனை ஓலையைக் கட்டிக்கொண்டு நடக்க வேண்டும்.அந்தப் பனைஓலை தனது கால் தடத்தை அழித்துக்கொண்டே வரவேண்டும்.

கல்வி கற்கக்கூடடாது.ஆயுதம் வைத்திருக்கக் கூடாது. இவைபோன்ற எண்ணற்ற சாஸ்திர, சம்பிரதாயக் கொடுமைகளுக்கு எதிராக, தாழ்த்தப்பட்ட மகர் மக்களும்,பிற்படுத்தப்பட்ட மக்களும், முஸ்லீம்ங்களும் இணைந்து ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

 1817 டிசம் 31 இரவு. புனே நகருக்கு அருகே கோரிகான் என்ற ஊரில் உள்ள ‘பீமா’ என்ற நதிக்கரைதான் போர்க்களம்.

2-ஆம் பாஜிராவ் என்ற பார்ப்பன மன்னனின் தளபதியான, ‘கோகலே’ தலைமையில் 28000 பார்ப்பனப்படைவீரர்கள் ஒருபுறம்.500 மகர் சமுதாய வீரர்களும்,100 பிற்படுத்தப்பட்ட, முஸ்லீம் சமுதாய வீரர்களும் இணைந்த படை மறுபுறம்.

 போர் தொடங்கிய 12 மணி நேரத்தில் 600 பார்ப்பனப் படைவீரர்கள் கொல்லப்பட்டனர்.
பார்ப்பனப் படைத்தலைவன் கோகலே களத்திலேயே படுகொலை ஆனான்.ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களும், அவர்களின் ஆதரவுப் படைகளும் சிதறின. பாஜிராவ் கைதானான்.

பார்ப்பன பேஷ்வாக்களின் மராட்டியப் பேரரசுக்கு இரத்தத்தால் முடிவுரை எழுதியது மகர் ரெஜிமண்ட்.

வெற்றியின் நினைவாக, சாதி ஒழிப்புப் போராளிகள் விதைக்கப்பட்ட ‘பீமா’ நதிக்கரையில் ஒரு வெற்றிச்சின்னம் நிறுவப்பட்டது.

 1927 ஜனவரி 1 ல் தோழர் அம்பேத்கர் இந்த நினைவிடத்திற்குச் சென்றார். அன்றுதான் பீமா நதிக்கரை வெற்றியின் நினைவாக “ஜெய் பீம்” எனும் வெற்றி முழக்கம் வெடித்தது.

புரையோடிப்போன சாஸ்திர,சம்பிரதாயங்களுக்கு எதிராகவும், பார்ப்பனர்களுக்கு எதிராகவும்,தலித்துகளும்,பிற்படுத்தப் பட்டவர்களும், முஸ்லீம்களும் இணைந்து நடத்திய ஆயுதப் போராட்டம்.

அதன் வெற்றி முழக்கமே ஜெய்பீம்.

செவ்வாய், 14 ஏப்ரல், 2020

தமிழ் புத்தாண்டு சிறப்பு பார்வை


சித்திரைத்திருநாள் வாழ்த்துகள்.

தமிழ் புத்தாண்டு சிறப்பு பார்வை.

*சுறவம்*
தை முதல்நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப்புத்தாண்டு என்று எடுத்து உரைத்தவர்கள் யாரெல்லாம் தெரியுமா?

01. மறைமலை அடிகளார் (1921)
02. தேவநேயப் பாவாணர்
03. பெருஞ்சித்திரனார்
04. பேராசிரியர் கா.நமசிவாயர்
05. இ.மு. சுப்பிரமணியனார்
06. மு.வரதராசனார்
07. இறைக்குருவனார்
08. வ. வேம்பையனார்
09. பேராசிரியர் தமிழண்ணல்
10. வெங்காலூர் குணா
11. கதிர். தமிழ்வாணனார்
12. சின்னப்பத்தமிழர்
13. கி.ஆ.பெ. விசுவநாதர்
14. திரு.வி.க
15. பாரதிதாசனார்
16. கா.சுப்பிரமணியனார்
17. ந.மு.வேங்கடசாமியார்
18. சோமசுந்தர் பாரதியார்
19. புலவர் குழுவினர் (1971)

மலையகத்தில்
01. கோ.சாரங்கபாணியார்
02. சா.சி. குறிஞ்சிக்குமரனார்
03. அ.பு.திருமாலனார்
04. பேராசிரியர் இர.ந. வீரப்பனார்
05. கம்பார் கனிமொழி குப்புசாமி
06. மணி. வெள்ளையனார்
07. திருமாறன்
08. இரெ.சு.முத்தையா
09. இரா. திருமாவளவனார்
10. இர. திருச்செல்வனார்

இவர்களோடு 500க்கும் அதிகமான தமிழறிஞர்கள் கூடி விவாதித்து ஆரிய திணிப்பான சித்திரை வருடப்பிறப்பினை விடுத்து தை முதல் நாளே தமிழாண்டின் துவக்கம் என்று முடிவு செய்து அறிவித்தார்கள்.

இன்று பிறக்கும் புத்தாண்டு தமிழ்ப்புத்தாண்டு அல்ல என்பதற்கு ஒரே ஒரு விளக்கம் மட்டும்.

1. பிரபவ 2. விபவ 3. சுக்கில 4. பிரமோதூத 5. பிரஜோத்பத்தி 6. ஆங்கீரஸ 7. ஸ்ரீமுக 8. பவ 9. யுவ 10. தாது 11. ஈஸ்வர 12. வெகுதான்ய 13. பிரமாதி 14. விக்கிரம 15. விஷு 16. சித்ரபானு 17.சுபாணு 18. தாரண 19. பார்த்திப 20. விய 21. சர்வகித்து 22.சர்வதாரி 23. விரோதி 24. விக்ருதி 25. கர 26. நந்தன 27. விஜய 28. ஜய 29. மன்மத் 30. துர்முகி 31. ஹேவிளம்பி 32. விளம்பி 33. விகாரி 34. சார்வரி 35. பிலவ 36. சுபகிருது 37. சோபகிருது 38. குரோதி 39. விசுவாசு 40. பராபவ 41. பிலவங்க 42. கீலக 43. செமிய 44. சாதரண 45. விரோதிகிருது 46. பரிதாபி 47. பிரமாதீச 48. ஆனந்த 49. ராஷஸ 50. நள 51. பிங்கள 52. காளயுக்தி 53. சித்தாத்திரி 54. ரெத்திரி. 55. துன்பதி 56. துந்துபி 57. ருத்ரோகாரி 58. ரக்தாஷி 59. குரோதன 60. அக்ஷய

இந்த அறுபதில் எது தமிழ் வார்த்தை...

யாராவது சொல்ல முடியுமா?

தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் பிரம்மிப்பானது. தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். *ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாக* பிரித்து வைத்திருந்தார்கள்.

*வைகறை*
*காலை*
*நண்பகல்*
*எற்பாடு*
*மாலை*
*யாமம்*

என்று அவற்றை அழைத்தார்கள்.

அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் *அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள்*. அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். *ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்*.

அதாவது *பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன*.

தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, _தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்_.

(1 நாழிகை - 24 நிமிடங்கள்
60 நாழிகை - 1440 நிமிடங்கள்
இதனை இன்றைய கிருத்தவ கணக்கீட்டின் படி பார்த்தால்
1440 நிமிடங்கள் - 24 மணித்தியாலங்கள்
24 மணித்தியாலங்கள் - 1 நாள்)

*பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள்*.

ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, *ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்*.

1. இளவேனில் - (தை---மாசி)
2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை)
3. கார் - (வைகாசி - ஆனி)
4. கூதிர் - (ஆடி - ஆவணி)
5. முன்பனி (புரட்டாசி - ஐப்பசி)
6. பின்பனி (கார்த்திகை - மார்கழி)

மேற்கண்ட மாதக்கணக்கில் இளவேனில் என்பது சித்திரை-  வைகாசி மாதங்களுக்கு உரிய காலம் என சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு.

சித்திரை மாதத்தில் (வேனில்) வெயில் தன் அதிகபட்ச உக்கிரத்தை அடைவதால் அதை முதுவேனில் என்றும் தைமாதத்தில் தொடங்கும் வெயிலை 'இளவேனில்' எனவும் பண்டைத் தமிழர்கள் அழகாகப் பகுத்திருந்தார்கள்.

காலத்தை, அறுபது நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் (தை) தொடங்குகின்றான்.

இங்கே ஒரு மிக முக்கியமான செய்தியை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்!

பண்பாட்டுப் பெருமைகொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள்.

*தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்*.

தமிழர்கள்  நாம் மட்டும் ஆரியப் பழக்கத்துக்கு மாறிவிட்டோம்! *இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை* இது. நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால்தான் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம். தமிழர்க்கு எதிரான சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், தமிழின், தமிழரின் பெருமையைப் பாதுகாக்கும் பொருட்டுத் தமிழர் யாவரும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்வோம். இதுகுறித்துப்  பாவேந்தர் பாரதிதாசன் நமக்குத் தரும் அறிவுரையைக் கேளுங்கள்.

நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம்                                                  கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!
- *பாவேந்தர் பாரதிதாசன்*

அப்படியானால் பழக்கப்பட்டுப்போன  இந்த நாளை எப்படிக் கொண்டாடலாம்?

 *சித்திரை திருநாளாக

 சித்திரை திருநாளாக

சித்திரைத் திருநாளாக

கொண்டாடுவோம்
மகிழ்வோம்

திங்கள், 13 ஏப்ரல், 2020

தை முதலே தமிழ்ப் புத்தாண்டு :

தை முதலே தமிழ்ப் புத்தாண்டு :
தமிழர் புத்தாண்டு தை முதல் நாளா? அல்லது சித்திரையா? என்ற விவாதம் தொடர்ந்து வருகிறது. அதற்கான இலக்கிய மற்றும் அறிவியல் ஆய்வு பார்வையை முன் வைக்கிறது இக்கட்டுரை.

தமிழர்களின் புத்தாண்டு தையிலா அல்லது சித்திரையிலா என்ற ஒரு வழக்காடல் நீண்ட காலமாகவே நடைபெற்று வருகின்றது. அது தொடர்பான ஒரு பார்வையாகவே இக் கட்டுரை அமைகின்றது.

முதலில் தமிழர்களிடம்  ஆண்டு  என்றொரு  காலக்கணிப்பு முறை இருந்ததா?  எனப் பார்ப்போம். ‘யாண்டு’ என்ற பழந்தமிழ்ச் சொல்லே மருவி ஆண்டு என வழங்கலாயிற்று. யாண்டு என்ற சொல்லானது தொல்காப்பியத்தின் முதற்பொருளான நிலம், பொழுது ஆகிய இரண்டையும் குறிக்கும். ‘யாண்டு’ என்ற சொல் இடம்பெற்ற சில பாடல்களைப் பார்ப்போம்.

“வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.” (குறள் 4)

இப்போது காலத்தைத் தெளிவாகக் குறிக்கும் யாண்டு என்ற சொல் இடம்பெற்ற சங்ககாலப் பாடலைப் பார்ப்போம்.

‘பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன
நீர் உறை மகன்றிற் புணர்ச்சி போலப்’ (குறு:57:1)

இப் பாடலில் ‘யாண்டு கழிந்தன்ன’ என்பது ‘அக்காலம் பல யாண்டுகள் கடந்தாற் போன்ற’ என்ற பொருளில் இடம்பெறுகின்றது. இந்த ஆண்டு தற்போதைய நாட்காட்டி ஆண்டு போன்றது (365.2425 days) என நான் கூறவரவில்லை, ஏனெனில் தற்போதைய நாட்காட்டி ஆண்டு (Gregorian calendar) நடைமுறைக்கு வந்தது சில நூற்றாண்டுகளிற்கு முன்புதான்.

ஏதோ ஒரு வகையான காலப்பகுதியினை யாண்டு எனச் சங்க காலத் தமிழர்கள் அழைத்துள்ளனர் என்பதுதான் இங்கு தெளிவாகின்றது. எனவே தமிழர்களிற்கு என ஒரு ஆண்டுக் கணிப்பு இருந்திருந்திருப்பின், அந்த ஆண்டிற்கு ஒரு தொடக்கமும் இருந்திருக்கும்.

யாண்டின் தொடக்கமாக தை மாதமே இருந்துள்ளது என்பதற்கு நேரடித் தரவுகள் சங்ககாலப் பாடல்களில் காணமுடியவில்லை என்றபோதும், அதற்கான இரு சான்றுகளை உய்த்துணரலாம்.

முதலாவதாக : தை மாதமளவிற்கு வேறு எந்தவொரு மாதமும் சங்ககாலப் பாடல்களில் சிறப்புப்படுத்தப்படவில்லை. (தை மாதச் சிறப்பின் 10% அளவிற்கு கூட வேறு எந்த மாதமும் சிறப்புப் பெறவில்லை). “தைத்திங்கள் தண்கயம் படியும்” (நற்றிணை 80) , “தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” (குறுந்தொகை 196) என்பன உட்படப் பல சங்க காலப்பாடல்கள் தையினைச் சிறப்பித்துக் கூறுகின்றன.

இரண்டாவதாக : தை என்ற சொல்லிற்குச் சேர்த்தல் என்ற பொருளும் உண்டு (இரண்டு துணிகளை இணைத்து தைத்தல்). இங்கு ‘தை’ என்பது இரண்டு யாண்டுகளை (காலப்பகுதிகளை) இணைக்கின்றது. இவ்விரு காரணங்களையும் அடிப்படையாகக் கொண்டே தை மாதமே ஆண்டின் தொடக்கமாகவிருந்திருக்கும் என உய்த்தறியலாம்.

இதனைவிட, தை மாதமே ஆண்டின் தொடக்கமாகக் கொள்ள இயற்கைசார்ந்த இரு காரணங்களும் உண்டு. அவையாவன வருமாறு.

அறுவடைக்காலம் : செல்வ வளம்பொருந்திய காலமே புத்தாண்டாகக் கொண்டாடப் பொருத்தமாகவிருந்திருக்க முடியும். (இன்று பலர் உழவுத்தொழிலில் தங்கியிராத நிலையில், இதன் எச்சமாகவே பொங்கல் மிகைப்பணம் (Bonus) அரசால் வழங்கப்படுகின்றது. அன்று அந்த வாய்ப்பு இல்லாமையால், அறுவடைக்காலமே பொருத்தமானதாகும்).
காலநிலை: தை மாதத்தின் தண்மை (குளிர்மை) பல பாடல்களில் குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறான ஒரு மகிழ்ச்சியான காலப்பகுதியே யாண்டின் தொடக்கமாகக் கொள்ளப் பொருத்தமானதாகும். (மாறாக தாயகத்தில் சித்திரையில் கொளுத்தும் வெயிலே சுட்டெரிக்கும் காலப்பகுதி பொருத்தமானதாகக் காணப்படமாட்டாது.)
படிக்க :
♦ இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் | நா. வானமாமலை – புதிய தொடர்
♦ ‘தை’ரியமாகச் சொல் நீ தமிழறிஞன் தானா?

மேலும் எளிய மக்களின் வழக்காற்று மொழிகளிலும் கூட பழைய வரலாற்று எச்சங்களைக் காணலாம். அந்த வகையில், “தை பிறந்தால் வழி பிறக்கும்” , “தீய்ந்த தீபாவளி வந்தாலென்ன? காய்ந்த கார்த்திகை வந்தாலென்ன? மகா ராசன் பொங்கல் வரவேண்டும்” என்பன போன்ற சொல்லடைகளும் தை மாதத்தின் முதன்மையினைக் காட்டுகின்றன.

அண்மையில் இராமநாதபுரம் கீழக்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும் சில நூற்றாண்டுகளிற்கு முன்னர்வரைத் தையே புத்தாண்டாகக் கருதப்பட்டதனைக் காட்டுகின்றது. வரலாற்று தொல்லியல் ஆய்வாளர் விஜயராமு 300 ஆண்டுகளுக்கு முன்பு வரை தை மாதமே தமிழ் ஆண்டின் முதல் மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கலாம் என்பதற்குச் சான்றாக இந்த பழங்கால கல்வெட்டு உள்ளது என்கின்றார் (சான்று – தினத்தந்தி 03-01-2019).

சித்திரை மாதக் கணிப்பீடு :

சித்திரைப் புத்தாண்டு கணிப்பீட்டு முறையானது சாலிவாகணன் என்ற அரசனால் (சிலர் கனிஷ்கன் என்கின்றனர்) கி.பி 78-ம் ஆண்டளவில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது எனக் கூறப்படுகிறது. இவ்வாறு அக் காலத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்ட போதும், மக்களிடம் அந்தப் புத்தாண்டு வரவேற்புப் பெற்றிருக்கவில்லை என்பதனையே மேற்கூறிய கல்வெட்டுச் சான்றும், நாம் ஏற்கனவே பார்த்த வழக்காற்றுச் சான்றுகளும் காட்டுகின்றன.

கடந்த இரு நூற்றாண்டுகளிலேயே மதப் புராணங்கள் மூலம் சித்திரை, புத்தாண்டாக எளிய மக்களிடம் திணிக்கப்பட்டுள்ளது. இதற்காகக் கூறப்பட்ட புராணக்கதை வேடிக்கையானது. அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392-ஆம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.

ஒருமுறை நாரதமுனிவர், ‘கடவுள்’ கிருஷ்ணனை “நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?” என்று கேட்டாராம். அதற்குக் கிருஷ்ணன், “என்னுடன் இல்லாமல்  வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள்” என்றாராம். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி “நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்” என்றார்.

கிருஷ்ணன் நாரதரை “யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்” எனச் சொல்ல, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினாராம். பின் ‘கடவுள்’ கிருஷ்ணனுடன் அறுபது வருடம் உடலுறவு கொண்டு, அறுபது மகன்களைப் பெற்றார். அவர்கள் பிரபவ தொடங்கி அட்சய முடிய என பெயர் பெற்றார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமாகும் வரம் பெற்றார்கள். இதுதான் அந்தப் புராணக்கதை.  இதில் மேலும் வேடிக்கை என்னவென்றால் இவ் அறுபது ஆண்டுகளில் 15 ஆண்டுகள் சூத்திர ஆண்டுகளாம் (ஆண்டுகளில் கூட வர்ணப் பிரிவினை).

வேறு சிலர் வியாழனை அடிப்படையாகக்கொண்ட 60 ஆண்டுக் கணிப்பீட்டு முறையினையே, பிற்காலத்தில் புராணம் ஆக்கிவிட்டார்கள் எனக் கூறுவதுமுண்டு. இராசியினை அடிப்படையாகக் கொண்டு சோதிட விளக்கம் கூறுவோரும் உண்டு.

இன்னொரு சாரார் தொல்காப்பியப் பாடல் ஒன்றினை அடிப்படையாகக் கொண்டு ஆவணியினை புத்தாண்டாகக் கருதுவோருமுண்டு (இன்றும் சிங்க மாதமே (ஆவணி) மலையாளப் புத்தாண்டு : கொல்லமாண்டு). இத்தகைய குழப்பங்களைத் தீர்ப்பதற்காக 1935 -ம் ஆண்டில் தமிழறிஞர்கள் இணைந்து ஒரு தீர்வு கண்டிருந்தார்கள்.

படிக்க :
♦ ஜே.என்.யூ : ஏ.பி.வி.பி. குண்டர்கள் வெறியாட்டம் ! கொலைவெறி தாக்குதல்கள் !
♦ சென்னை புத்தகக் காட்சியில் புதுப் பொலிவுடன் கீழைக்காற்று !

குழப்பத்திற்கான அறிஞர்களின் தீர்வு :

இக் குழப்பத்திற்கு தீர்வு காணும்பொருட்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1935 -இல் மறைமலை அடிகளார் தலைமையில் பல அறிஞர்கள் ஒன்றுகூடி தை முதலே தமிழ்ப் புத்தாண்டு என முடிவு செய்திருந்தனர். பின்பு அதேபோன்று திருவள்ளுவரின் பிறப்பினை அடிப்படையாகக் கொண்டு ஆங்கில ஆண்டுடன் 31 ஆண்டுகளைக்கூட்டி திருவள்ளுவர் ஆண்டு தமிழாண்டாகக் கொள்வது எனவும் அறிவித்திருந்தார்கள். இவ்வாறு  முடிவு செய்தவர்களில் தலையான தமிழ் அறிஞர்கள் பலர் இருந்தார்கள். அவர்களில் சிலர் வருமாறு.

தமிழ்க்கடல் மறைமலை அடிகள்,
தமிழ்த் தென்றல் திரு.வி. கலியாணசுந்தரனார்,
தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியபிள்ளை,
சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை,
நாவலர் நா.மு. வேங்கடசாமி நாட்டார்,
நாவலர் சோமசுந்தர பாரதியார்,
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்,
பேராசிரியர் சா. நமச்சிவாயனார்,
உ.வே. சாமிநாத ஐயர்
தமிழில் புலமையும் காதலும் கொண்ட இந்த தமிழறிஞர்கள் சமய வேறுபாடுகளையும் கொள்கை மாறுபாடுகளையும் மறந்துவிட்டு; ஆரியக் கலப்பையும் வடமொழிக் குறுக்கீட்டையும் உதறிவிட்டுத் தமிழ் ஒன்றையே முதன்மைப்படுத்தி முறையான ஆய்வியல் பார்வையோடு ‘தை முதலே தமிழ்ப் புத்தாண்டு’ எனும் அறிவிப்பை வெளியிட்டனர்.

இங்கு டாக்டர் மு.வ கூறுகின்றார் “முற் காலத்தில் வருடப் பிறப்பு, சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல்நாள் தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள்” ( சான்று – 1988 கோலாலம்பூர் பொங்கல் மலர், மு.வ. கட்டுரை மீள் பதிப்பு ). இறையன்பர்களான மறைமலை அடிகள், திரு. விக, உ.வே.சா போன்றோர் முதல் இறை மறுப்பாளரான பெரியார் ஈ.வெ.ரா வரை தமிழின் பெயரில் ஒன்றுபட்ட வேளை அது.

தமிழ்நாடு அரசு, இதனை ஏற்றுக் கொண்டு 1972 முதல் அரசுப் பயன்பாட்டிலும் ஆவணங்களிலும் திருவள்ளுவர் ஆண்டினை நடைமுறைப்படுத்தி வருகிறது.  இருந்தபோதிலும், 2006-2011 இடைப்பட்ட கலைஞர் ஆட்சியிலேயே ‘தை முதல் தமிழ்ப் புத்தாண்டு’ ஆக அதிகாரபூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. மீண்டும் ஜெயலலிதா ஆட்சியில் தமிழர்கள் தமது புத்தாண்டு மரபினைத் தொலைத்துவிட்டார்கள். அக் காலப்பகுதியில் ஈழத்திலும் தைமுதலே புத்தாண்டாக விடுதலைப்புலிகளால் தமது அதிகாரத்திற்குட்பட்ட பகுதியில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது. இங்கும் வரலாற்று  இன்னலாக புலிகளின் அழிவிற்குப் பிறகு அந்த முயற்சி தொடரப்படவில்லை.

அறிவியல் பொருத்தப்பாடு :

அரசியல், தமிழறிஞர்களின் அறிவிப்பு என்பன எல்லாம் போகட்டும், அறிவியல்ரீதியாக எந்தப் புத்தாண்டு பொருத்தம் எனப் பார்ப்போமா!

முதலாவதாக திருவள்ளுவர் ஆண்டானது எண்களில் வருவதனால் சிறப்பானது, மறுபுறத்தில் சித்திரைக் கணிப்பீடானது ஒரே பெயர்களில் 60 ஆண்டுகளிற்கொரு முறை மறுபடியும் மீள வருவதனால் குழப்பகரமானவை. எடுத்துக் காட்டாக சுக்கில ஆண்டு என்றால், எந்தச் சுக்கில ஆண்டைக் கருதுவீர்கள். மேலும் இப்பெயர்கள் எதுவுமே தமிழில் இல்லாதிருப்பதுடன் அவற்றின் கருத்துக்கள் ஆபாசமானவை அல்லது எதிர்மறையானவை. (சுக்கில-விந்து, துன்மதி-கெட்டபுத்தி).

இரண்டாவதாக ஒருவரின் (திருவள்ளுவரின்) வாழ்க்கைக் காலத்தினை அடிப்படையாகக்கொண்ட கணிப்பீடானது அனைத்துலக நடைமுறைகளுடன் ஒத்துப்போகின்றது. மறுபுறத்தில் சித்திரைக் கணிப்பீட்டிற்கான நாம் ஏற்கனவே பார்த்த புராணக்கதையினை மதநம்பிக்கையாளரில் பெரும்பாலானோரே நம்பமாட்டார்கள். அதேபோன்று சித்திரைக்கணிப்பீட்டிற்குச் சொல்லப்படும் இராசிக்கணிப்பும் அறிவியலிற்கு முரணான புவிமையக் கொள்கையினை அடிப்படையாகக்கொண்டது.

படிக்க :
♦ இங்கிலாந்துத் தேர்தலில் தடம் பதித்த இந்துத்துவா : வி.இ.குகநாதன்
♦ சுற்றுலாப் பயணிகளை கவரும் ஸ்டாலின் பிறந்த வீடு ! | கலையரசன்

மூன்றாவதாக, தைக் கொண்டாட்டமானது சங்க இலக்கியங்களினடிப்படையில் வரலாற்றுத் தொன்மையானதாகக் காணப்பட, மறபுறத்தில் சித்திரை ஆண்டுப் பிறப்பானது இடைக்காலத்தில் வெளியாரின் திணிப்பால் உள்நுழைக்கப்பட்டதாகக் காணப்படுகிறது.

நான்காவதாக தைத்திருநாளானது மதசார்பற்றதாகக் காணப்படுவதால் எல்லாத் தமிழரும் கொண்டாடக்கூடியதாகவிருக்க, மறுபுறத்தில் சித்திரையானது இந்துக்களிற்கு மட்டுமே அதுவும் பார்ப்பன ஆதிக்கத்தினை ஏற்றுக்கொண்டவரிற்கே பொருத்தமானதாகக்  காணப்படுகின்றது.

இறுதியாக தைத்திருநாளானது தமிழரின் வாழ்க்கையுடன் இணைந்தும், உழவுத்தொழிலுடன் தொடர்பானதாகவும் காணப்படுகிறது.

முடிவுரை:

இதுகாறும் இலக்கியச் சான்றுகள், மக்களின் வழக்காற்றுச் சான்றுகள், கல்வெட்டுச் சான்று, அறிஞர்களின் முடிவு, அறிவியற் பொருத்தப்பாடு என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு தை முதலே தமிழ்ப் புத்தாண்டு எனப் பார்த்தோம்.

யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்,  கிரிகேரியன் நாட்காட்டி (Gregorian calendar) சனவரி 15 ம் திகதியினைக் காட்டும், அந்த நாளே திருவள்ளுவர் ஆண்டு 2051 (2020+31) ஆகும் நாளன்றே (தை முதலே) தமிழ்ப் புத்தாண்டாகும்.

முடிவாக  தைத்திருநாள், தைப்பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு (தை) என்பன அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த ஆயிரமாயிரமாண்டு தமிழர் மத சார்பற்ற பண்பாட்டு நிகழ்வுகளே. பாவேந்தரின் பாடலுடன் இக் கட்டுரையினை முடிப்பதே சிறப்பானதாக அமையும்.


“நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் , கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!”

-பாவேந்தர் பாரதிதாசன்

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
நன்றி வி.இ.குகநாதன் வினவு.

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 1

முன்னுரை - ஆங்கில ஆண்டின் வரலாறு

தமிழ்ப் புத்தாண்டு தொடர்பான விவாதங்கள் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவ்வாண்டின் தொடக்கத்தில் தமிழக முதல் 'தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு' என்று அரசாணை பிறப்பித்தார். அதன்பிறகு, காலங்காலமாக சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடிவரும் உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களிடையே பல்வேறு ஐயங்களும் குழப்பங்களும் சலசலப்புகளும் தோன்றின. சித்திரையை ஒதுக்கவும் முடியாமல் தைத்திங்களை ஏற்கவும் முடியாமல் தமிழ் மக்கள் இன்னும் தினறிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில், தமிழ்ப் புத்தாண்டு எது? ஏன்? எப்படி? ஆராய்வோம் வாரீர்.

மாந்த நாகரிகம் தொடங்கிய காலம் தொட்டு வெவ்வேறு இன மக்கள் வெவ்வேறு நாட்களைத் தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள். இன்று சமய அடிப்படையில் கிறித்தவர்கள் சனவரி முதல் நாளையே புத்தாண்டின் தொடக்கமாகக் கொண்டாடுகிறார்கள். இசுலாமியர்கள் முகமது நபி மெக்காவில் இருந்து மதினாவிற்குப் புலம்பெயர்ந்த நாளில் இருந்தே ஆண்டுகளைக் கணக்கிடுகிறார்கள். இப்படியே புத்த சமயத்தவர் புத்தர் பிறந்த நாளில் இருந்து ஆண்டுகளை எண்ணுகிறார்கள்.

கிறித்தவர்களுக்கு சனவரி முதல்நாள் எப்போதுமே புத்தாண்டின் தொடக்கமாக இருந்ததில்லை. பதினெட்டாம் நூற்றாண்டுவரை யேசுபிறந்த திசம்பர் 25 ஆம் நாளே புத்தாண்டின் தொடக்கமாக இருந்தது. ஆயினும், கிறித்துவ நாட்காட்டியின் அடிப்படையிலேயே சனவரி முதல் நாள் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்காட்டி காலத்துக்குக் காலம் திருத்தப்பட்டு ஒழுங்குபடுத்தி வரப்பட்டிருக்கிறது.

உரோம சக்கரவர்த்தி யூலியசு சீசர் அவர்கள் கி.மு. 45 ஆம் ஆண்டு ஒரு புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தினார். அதற்கு யூலியன் நாட்காட்டி என்று பெயர். அதற்கு முந்தி ஒரு ஆண்டில் பத்து மாதங்களும் 304 நாட்கள் மட்டுமே இருந்தன. கிறித்துவ பாதிரிமார்கள் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக நாட்காட்டியில் உள்ள நாட்களையும் மாதங்களையும் கூட்டியும் குறைத்தும் சமயத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்தினார்கள். சில சமயங்களில் கையூட்டு வாங்கிக் கொண்டு ஆண்டை நீட்டியும் குறைத்தும் காட்டினார்கள்! யூலியஸ் சீசர் அந்தக் குளறுபடிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். தனது பெயரில் ஒரு மாதத்தைக் கூட்டினார். அவர் கணித்த நாட்குறிப்பு கிபி 1,500 வரை பயன்பாட்டில் இருந்தது. கிமு 45ஆம் ஆண்டில் நாட்காட்டியைத் திருத்தி அமைத்ததால் அந்தக் குழப்ப ஆண்டு மொத்தம் 445 நாட்களைக் கொண்டிருந்தது.

அதன் பின் கிரிகோறியன் (Gregorian) நாட்காட்டி நடைமுறைக்கு வந்தது. ஆனால் கிபி 1900 வரை பழைய நாட்காட்டியை கிரேக்கம், உருசியா போன்ற நாடுகள் கைவிடவில்லை. இன்றும் உருசியாவின் பழைமைவாத தேவாலயங்கள் யூலியன் நாட்காட்டியைத்தான் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன.

யூலியன் நாட்காட்டி ஒரு ஆண்டில் 365 1/4 நாட்கள் இருப்பதாகக் கணக்கிட்டது. கணக்கைச் சரிசெய்ய நாலாண்டுக்கு ஒருமுறை (Leap Year) ஒரு நாள் பிப்பிரவரி மாதத்துக்குரிய நாட்களோடு கூட்டப்பட்டது. ஆனால் உண்மையில் ஒரு ஆண்டு 365 நாட்கள், 5 மணி, 49 நிமிடம், 12 வினாடியைக் (365.2424) கொண்டது. இதனால் ஒரு புதிய சிக்கல் உருவாகியது. 128 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 நாள் வித்தியாசம் ஏற்பட்டது. எனவே 1582இல் போப் கிரிகோறியன் அதைச் சரிசெய்ய 10 நாட்களைக் குறைத்தார். அதன் பின்னர் 400 ஆல் பிரிக்கக்கூடிய நூற்றாண்டுகளில் (1700, 1800, 1900) ஒரு நாள் கூட்டப்பட்டது. ஆனால் 2000இல் கூட்டப்படவில்லை.

அப்படியும் கிபி 4,000 அல்லது 5,000 ஆண்டளவில் 12 நாட்கள் வித்தியாசம் ஏற்பட்டுவிடும் எனத் தெரிய வந்தது. எனவே இந்தத் தொல்லையில் இருந்து விடுபட 1972 ஆம் ஆண்டு அணு மணிப் பொறி ஒன்றினைக் கண்டு பிடித்தார்கள். அது காட்டும் நேரமே உலகத்தின் முறைமைப்பட்ட (official) நேரம் என எல்லா நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது.

வரலாற்றில் எகிப்தியர்கள்தான் முதன் முதலில் ஒரு ஆண்டில் 365 நாட்களைக் கொண்ட நாட்காட்டியை கிமு 4236இல் கண்டு பிடித்ததாகச் சொல்லப்படுகிறது.


தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 2


தமிழர் கண்ட கால அளவீடு

பழந் தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது. பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது.
ஆனால் தமிழர்கள் ஞாயிறு ஆண்டைக் (365 1/4); கொண்ட நாட்காட்டியை உருவாக்கியதாகத் தெரியவில்லை. உருவாக்கியதற்கான சான்று எதுவும் இல்லை.

திங்களின் வளர்பிறை தேய்பிறை கொண்டே தமிழர்கள்; ஆண்டைக் கணித்தனர். அதனால்தான் மாதத்தை திங்கள் என்று அழைத்தனர். திங்கள் ஞாயிற்றைச் சுற்றிவர எடுக்கும் நேரம் 27 நாட்கள், 7 மணி, 43 மணித்துளிகள்.

பண்டைய நாட்களில் காலத்தைப் பெரும்பொழுது சிறுபொழுது என வகுத்தனர். இளவேனில் (சித்திரை, வைகாசி ) முதுவேனில் (ஆனி, ஆடி), கார் (ஆவணி, புரட்டாதி) கூதிர் (ஐப்பசி, கார்த்திகை) முன்பனி ( மார்கழி, தை, ) பின்பனி ( மாசி, பங்குனி) ஆறு பெரும் பொழுதாகும்.

வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை. யாமம் என்பதே ஒரு நாளில் அடங்கிய ஆறு சிறுபொழுதாகும். மேலும் ஒரு நாள் 60 நாளிகை கொண்டது என்று கணக்கிட்டனர். ஒரு நாளிகை 24 நிமிடங்களாகும்.

சங்க காலத் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, திங்கள், ஆண்டு, ஊழி என்று வானியல் அடிப்படையில் வரையறை செய்துள்ளன. முழுமதி நாளில் ஞாயிறும் திங்களும் எதிர் எதிராக நிற்கும் என்ற வானவியல் உண்மையைப் புறநானூற்றுப் பாடல் (65) ஒன்று தெரிவிக்கிறது.

சங்க இலக்கியங்களில் தமிழ் மாதப்பெயர்கள் காணக்கிடைக்கின்றன. தை, மாசி (பதிற்றுப்பத்து) பங்குனி (புறநானூறு) சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தொல்காப்பிய ஆசிரியர் இகரவீற்றுப் புணர்ச்சி, ஐகாரவீற்றுப் புணர்ச்சியை விளக்கும்போது 'திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன' எனக் கூறுவதைக் காணலாம். எல்லாத் திங்கள்களின் பெயர்களும் இந்த இரண்டு எழுத்தில் (இ, ஐ) முடிந்தன என்கிறார். "நாள்முன் தோன்றும் தொழில்நிலைக் கிளவி" எனும் பாடல் நாள்மீன்(நட்சத்திரம்) பற்றி பேசுகிறது. "திங்கள் முன்வரின் இக்கே சாரியை" என்ற பாடல்வரி மாதத்தைப் பற்றியது. எனவே இன்றுள்ள 12 மாதங்களும் அவர் காலத்தில் இருந்து வருகின்றன எனத் துணியலாம்.

மேலும் தொல்காப்பியர் அ,இ,உ,எ, ஒ என்னும் ஐந்து உயிர் எழுத்துக்களும் ஒரு மாத்திரை ஒலிக்கும் குறில் எழுத்துக்கள் என்கிறார். ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, ஒள என்னும் ஏழு உயிர் எழுத்துக்களும் இரண்டு மாத்திரை ஒலிக்கும் நெடில் எழுத்துக்கள். மூன்று மாத்திரைகளில் எந்த எழுத்தும் ஒலிக்கப்படுவதில்லை. ஒலி மிகுதல் தேவைப்பட்டால் அந்தளவிற்குத் தேவையான எழுத்து ஒலிகளை எழுப்புதுல் வேண்டும்.

இதே போல் மெய் எழுத்துக்கு ஒலி அரை மாத்திரை. மாத்திரையின் கால அளவைச் சொல்லும்போது இயல்பாகக் கண் இமைத்தலும், விரல் நொடித்தலுமே ஒரு மாத்திரை என்னும் ஒலி அளவு. இது தெளிவாக அறிந்தோர் வழி என்கிறார் தொல்காப்பியர்.

"கண்இமை நொடிஎன அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே" (தொல்)
காலத்தை இவ்வளவு நுணுக்கமாகக் கணக்கிட்ட புலவர்கள், இலக்கண ஆசிரியர்கள், அறிஞர்கள் தமிழர்களுக்கென ஒரு பொதுவான தொடர் ஆண்டை வரையறை செய்யாது போயினர். அதனால் அரசர்கள் புலவர்கள் சான்றோர்கள் பிறப்பு ஆண்டு, மறைவு ஆண்டு இவற்றைத் தொடர் ஆண்டோடு தொடர்பு படுத்தி வரலாற்றைப் பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது.

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 3

தைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு

ஆண்டுகள் வரலாற்றைத் தொடர்ச்சியாக பதிவு செய்யப் பயன்பட வேண்டும். அவை குழப்பத்திற்கு இடமின்றி இருத்தல் வேண்டும். தமிழர் வரலாற்றில் காலக் குழப்பம் இருப்பதற்கு தொடராண்டு முறை இல்லாதது முக்கிய காரணமாகும்.

பழந்தமிழரிடையே வியாழ ஆண்டு என்கிற அறுபதாண்டு கணக்குமுறை இருந்துவந்துள்ளது என்பதை வரலாற்றில் அறிய முடிகிறது. இந்த அறுபதாண்டு கணக்குமுறையை பின்னாளில் ஆரியர்கள் தங்கள் கையகப்படுத்திக் கொண்டு ஆரியமயமாக்கி 60 ஆண்டுகளுக்கும் சமற்கிருதப் பெயர்களைச் சூட்டி, காலப்போக்கில் தமிழரின் ஆண்டு முறையையும் வானியல் கலையையும் ஐந்திற அறிவையும் அழித்து ஒழித்தனர். தமிழரிடையே தொடராண்டு முறை இல்லாமல் போனதால் இன்று நாம் காணுகின்ற பல்வேறு தாக்குறவுகளும் பின்னடைவுகளும் தமிழினத்திற்கு ஏற்பட்டுவிட்டது.

இந்தக் குழப்பத்தை நீக்க ஐந்நூறு தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள் மறைமலை அடிகளார் தலைமையில் 1921 ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி ஆராய்ந்தார்கள். திருவள்ளுவர் பிறந்த ஆண்டை கி.மு 31 எனக் கொண்டு, திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டை ஏற்படுத்துவதென முடிவு செய்தனர். இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமென அவர்கள் அறிவித்தனர்.

சைவம், வைணவம், புத்தம், சமணம், கிறித்துவம், இசுலாம் என பல்வேறு சமயத்தைத் தழுயிய அந்த ஐந்நூறு சான்றோர்கள் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்ததற்குச் சரியான காரணங்களும் சான்றுகளும் இருக்க்கின்றன.

தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு ஈராயிரம் அண்டுகளுக்கும் முற்பட்ட கழக இலக்கியன்களில் காணப்பெறும் சான்றுகள் சில:-

1. "தைஇத் திங்கள் தண்கயம் படியும்" – நற்றிணை

2. "தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" – குறுந்தொகை

3. "தைஇத் திங்கள் தண்கயம் போல்" – புறநாநூறு

4. "தைஇத் திங்கள் தண்கயம் போல" – ஐங்குறுநூறு

5. "தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" – கலித்தொகை

தைப் பிறந்தால் வழி பிறக்கும், தை மழை நெய் மழை முதலான பழமொழிகள் இன்றும் தமிழ் மக்கள் நாவில் இன்றும் பயின்று வருகின்றன. இவை வாழையடி வாழையாக வாய்மொழிச் சான்றாக அமைந்துள்ளன.

இனி, தை முதல் நாளே புத்தாண்டு என்பதற்குரிய வானவியல் அடிப்படையிலான காரணத்தை காண்போம். பூமி ஒரு முறை கதிரவனைச் சுற்றிவரும் காலமே ஓர் ஆண்டாகும். இச்சுழற்சியில் ஒருபாதிக் காலம் கதிரவன் வடதிசை நோக்கியும் மறுபகுதிக் காலம் தென்திசை நோக்கியும் செல்வதாகக் காணப்படுகிறது. இதனால் ஓராண்டில் சூரியனின் பயணம், வடசெலவு (உத்ராயணம்) என்றும் தென்செலவு (தட்சனாயணம்) என்றும் சொல்லப்படும். தை முதல் ஆனி வரை ஆறு மாதம் வடசெலவும் ஆடி முதல் மார்கழி வரை தென்செலவுமாகும். அந்தவககயில், கதிரவன் வடசெலவைத் தையில்தான் தொடங்குகிறது. இந்த வானியல் உண்மையை அறிந்த பழந்தமிழர் தைத்திங்களைப் புத்தாண்டாக வைத்தது மிகவும் பொருத்தமானதே.

இப்படியும் இன்னும் பல அடிப்படை காரணங்களாலும் தை முதல் நாளை ஐந்நூறு தமிழ்ச் சான்றோர்கள் புத்தாண்டாக அறிவித்தனர். தமிழ்நாடு அரசு அதனை ஏற்றுக் கொண்டு 1972 முதல் அரசுப் பயன்பாட்டிலும் ஆவணங்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.

'பத்தன்று நூறன்று பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தை முதல் நாள், பொங்கல் நன்னாள்''

என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடலும் தமிழருக்குத் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பதைத் தெளிவாக்குகிறது.

தமிழ் மொழி, இன, சமய, கலை, பண்பாடு, வரலாற்று மீட்பு வரிசையில் பிற இனத்தாரின் தாகுதலால், படையெடுப்பால், மறைப்புகளால், சூழ்ச்சிகளால் இடைக்காலத்தில் சிதைக்கப்பட்ட தமிழரின் வானியல் கலையை – ஐந்திரக்(சோதிடம்) கலையை நாம் மீட்டெடுக்க வேண்டும். அப்போதுதான் தமிழரின் செவ்வியல் நெறியை நிலைப்படுத்த முடியும்.

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 4

சித்திரைப் புத்தாண்டு புராண வரலாறு

தமிழரின் ஆண்டு என்ற பெயரில் இன்று இருப்பது 60 ஆண்டுகளைக் கொண்டு சுழன்றுவரும் ஆண்டு முறைதான. இதற்கு, விக்கிரம ஆண்டு, சாலிவாகன ஆண்டு(சாலிவாகன சகம்), கலியாண்டு என்று பல பெயர்கள் விளங்குகின்றன. தமிழரின் வியாழ ஆண்டு முறையாக 60 ஆண்டு சுழற்சி முறை ஆரியமயமாக மாறிப்போன பிறகு அதற்கு தெய்வீகம் கற்பிக்கப்பட்டது. இறைவனால் உருவாக்கப்பட்டது என நம்பவைக்கப்பட்டது. மதச்சார்பு செய்யப்பட்டுப் புராணங்களில் இணைக்கப்பட்டது. மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த கடவுளர்களின் பெயர்களோடு தொடர்புபடுத்தி மதநூல்களில் ஏற்றப்பட்டது.

அவ்வகையில், புராணக் கதையின்படி ஒரு காலத்தில் நாரத முனிவர் காமம் மேலோங்கி அலைந்தபோது அவருக்கு அறுபதினாயிரம் கோபியரோடு கொஞ்சிக் குலாவும் கிருஷ்ண பகவான் நினைவு வந்ததது. நேராக அவர் முன் போய் "'கிருஷ்ணா, சதா கோபியரோடு கொஞ்சி இன்பம் அனுபவிக்கும் தேவனே, எனக்கு யாராவது ஒரு கோபியைத் தந்து எனது காம இச்சையைத் தீர்த்து வைக்க வேண்டும்''; என வேண்டினார்.

அதற்குக் கிருஷ்ண பரமாத்மா ''நாரதரே, எந்தவொரு பெண்ணின் மனதில் நான் இல்லையோ அந்தப் பெண்ணை நீ அனுபவித்துக்கொள்'' என ஆறுதல் மொழி கூறினார்.

ஆண்டவன் அருள்வாக்கு அருளப்பெற்ற நாரதர் வீடு வீடாய் (நாயாய்) அலைந்தார். அனைத்துப் பெண்கள் மனதிலும் கிருஷ்ணனே நீக்கமறக் குடி கொண்டிருந்தார். ஒரு கோபியும் அதற்கு விதி விலக்கல்ல. ஏக்கமும், ஏமாற்றமும் அடைந்த நாரதர் மானம், வெட்கம் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு மீண்;டும் கிருஷ்ண பரமாத்மாவிடமே வந்தார்.

'கிருஷ்ணா! எல்லாக் கோபியர் மனதிலும் தாங்களே இருக்கக் கண்டேன். தேவரீர் என்னை இவ்விதம் சோதிக்கலாமா? காம வேட்கை எனை வாட்டுகிறது. என்னைப் பெண்ணாக மாற்றி நீரே என்னை அனுபவித்து என் வேட்கையைப் போக்க வேண்டும்"' என வேண்டி நின்றார்.

பரிதாபப் பட்ட பகவானும் அவ்விதமே நடப்பதாகக் கூறி, நாரதரைப் பெண்ணாக்கி அவரோடு கலந்து அறுபது குழந்தைகளைப் பெற்றார்.

அந்த அறுபது குழந்தைகள் தான் பிரபவ முதல் அட்சய வரையிலான ஆண்டுகள். அந்தப் பெயர்கள் ஒன்றேனும் தமிழ் அல்ல. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத இவ்வாண்டு முறை வரலாற்றுக்கு உதவாத வகையில் உள்ளது.

இந்த அறுபது ஆண்டுகளின் பெயர்களை ஆத்திரம் கொள்ளாமல் ஆன்மீகத் தமிழர்கள் ஆர அமர அலசிப் பார்க்க வேண்டும்.

பிரபவ முதல் அட்சய வடமொழிப் பெயர்களாவது தமிழர்கள் பெருமை கொள்ளத் தக்கவாறு உள்ளதா என்றால் அப்படியும் இல்லை. எடுத்துக் காட்டாக மூன்றாவது ஆண்டின் பெயரான ""சுக்கில"" ஆண் விந்தைக் குறிக்கிறது. இருபத்துமூன்றாவது ஆண்டான விரோதி எதிரி என்ற பொருளைத் தருகிறது. முப்பத்தெட்டாவது ஆண்டு குரோதி. இதன் பொருள் பழிவாங்குபவன் என்பதாகும். முப்பத்துமூன்றாவது ஆண்டின் பெயர் விகாரி. பொருள் அழகற்றவன், ஐம்பத்து ஐந்தாவது ஆண்டான துன்மதி கெட்டபுத்தி என்று பொருள்.

இப்படிப்பட்ட அருவருக்கத்தக்க வரலாற்றக் கொண்டுவந்து தமிழனின் தலையில் கட்டிவைத்து இதுதான் தமிழ்ப் புத்தாண்டு என்று பறைசாற்றுவதில் உண்மையும் நேர்மையும் இருப்பதாகத் தோன்றவில்லை. வரலாற்றில் மாபெரும் சருக்கல் ஏற்பட்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெரிகிறது.

ஆகவே, காலங்காலமாக அறிவாராய்ச்சி இன்றி குருட்டுத்தனமாகத் தமிழர்கள் சித்திரையைப் புத்தாண்டாகக் கொண்டாடி வந்திருக்கின்றனர் என்பது புலப்படுகிறது. இன்று, நிலைமை அவ்வாறு இல்லை. தமிழ்ப் புத்தாண்டு தொடர்பில் பல்வேறு ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் நடைபெற்று மறைந்துகிடந்த உண்மைகள் வெளிப்பட்டுவிட்டன. இனியும் தமிழ் மக்களை மடையர்கள் என்று எண்ணிக்கொண்டு ஆதிக்க(ஆரிய)க் கூட்டம் ஆட்டம் போடாமல் அடங்கிப் போவதுதான் நல்லது. ஆரிய வழிசார்ந்தவர்கள் தங்களுக்கு எந்த ஆண்டு வேண்டுமோ வைத்துக்கொள்ளட்டும்; எந்த நம்பிக்கை வேண்டுமோ வைத்துக்கொள்ளட்டும்; சமற்கிருத மொழி வேண்டுமானால் வைத்துக்கொள்ளட்டும்; கிரந்தம் வேண்டுமானால் வைத்துக்கொள்ளட்டும்; ஆரிய வாழ்க்கை முறையை வைத்துக்கொள்ளட்டும். இவை அனைத்தையும் அவர்களுடன் வைத்துக்கொள்ளட்டும்.

ஆரியக் கூட்டத்தின் மூடத்தனங்களை எந்த நிலையிலும் – எந்தச் சூழலிலும் – எந்த வடிவத்திலும் – எந்த முறையிலும் – எந்த ஊடகத்திலும் உலகின் நனிசிறந்த இனமாகிய தமிழ் இனத்தின்மீது திணிக்க வேண்டாம்! தமிழர்மீது திணிக்க வேண்டாம்! காரணம், அவ்வாறு திணிப்பது ஆதிக்க மனப்பான்மை மட்டுமன்று மனித உரிமை மீறல் என்பதையும் எவரும் மறக்கலாகாது.
நன்றி திருத்தமிழ்.

தை முதல் நாள் - தமிழ்ப் புத்தாண்டு


தை முதல் நாள் - தமிழ்ப் புத்தாண்டு

மலர்ந்தொளிரும் தைத் திங்கள் முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டு பிறக்கின்றது. அதனை முன்னிட்டு உலகத் தமிழர்கள் அனைவருக்கும் "தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்" கூறும் அதேவேளையில், இந்தத் தமிழ்ப் புத்தாண்டு தொடர்பான வரலாற்றினைத் திரும்பிப் பார்க்க அன்போடு அழைக்கிறேன்.

கடந்த திருவள்ளுவராண்டு 2039 (அதாவது ஆங்கில ஆண்டு 2008)இல், தமிழ்நாட்டு அரசு தமிழகத்தின் ஆளுநர் வழியாகத் தைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என உலகத்திற்கு அறிவித்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அறிவிப்பை உலகத் தமிழர்கள் அனைவரும் ஒருமுகமாக வரவேற்றுப் பேருவகை அடைந்தனர்.

இந்த அறிவிப்பின் வழியாக, தமிழர்களிடையே பலகாலம் நிலவிவந்த "தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாளா? அல்லது சித்திரை முதல் நாளா?" என்ற கருத்து வேறுபாட்டுக்கு முடிந்த முடிவாக ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்த அறிவிப்புக்கு முன்பாக...

தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டுமுறையை அதிகாரப்படியாக ஏற்றுக்கொண்டு 1971ஆம் ஆண்டுமுதல் அரசு நாட்குறிப்பிலும் அதன்பின்னர் 1972 முதற்கொண்டு அரசிதழிலும் 1981 தொடங்கி அரசாங்கத் தொடர்புடைய அனைத்து அலுவல்களிலும் பின்பற்றி வந்துள்ளது.

இதற்கும் முன்பாக...

1921ஆம் ஆண்டு தமிழ்க்கடல் தவத்திரு மறைமலையடிகள் தலைமையில் 500 தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கூட்டம் நடத்தப்பெற்றது. சைவம், வைணவம், புத்தம், சமணம், இந்து, கிறித்துவம், முகமதியம் என எல்லா சமயங்களையும் சார்ந்த தமிழ்ப் பேரறிஞர்கள் ஒன்றுகூடி ஆய்வுமுறைகளின் அடிப்பையில் முப்பெரும் உண்மைகளை உலகத்திற்கு அறிவித்தனர்.

1.தைமுதல் நாளே தமிழாண்டுப் பிறப்பு
2.திருவள்ளுவர் பெயரில் தமிழாண்டைப் பின்பற்றுதல்
3.ஆங்கில ஆண்டுடன் (ஏசு கிறித்து பிறப்பாண்டு) 31 ஆண்டுகளைச் கூட்டித் திருவள்ளுவராண்டைக் கணக்கிட வேண்டும்.

தமிழுக்கு அரணாக இருந்துவிளங்கிய 500 தமிழறிஞர்கள் சமய வேறுபாடுகளையும் கொள்கை மாறுபாடுகளையும் மறந்துவிட்டு; ஆரியக் கலப்பையும் வடமொழிக் குறுக்கீட்டையும் உதறிவிட்டு தமிழ் ஒன்றையே முன்படுத்தி முறையான ஆய்வியல் பார்வையோடு தமிழ்ப் புத்தாண்டு அறிவிப்பை வெளியிட்டனர்.

அன்றுதொடங்கி உலகம் முழுவதுமுள்ள தமிழ்ப் பற்றாளர்கள் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக ஏற்றிப் போற்றி கொண்டாடி மகிழ்கின்றனர். தமிழாண்டு முறைப்படி தங்கள் வாழ்வியலை அமைத்துக்கொண்டு தமிழியல் நெறிப்படி வாழ்ந்தும் வருகின்றனர்.

இதற்கெல்லாம் முன்பாக...

தைப் பொங்கல் விழா நாளைத் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கமாக தமிழர்கள் பலகாலமாகக் கொண்டாடி வந்துள்ளனர். இதற்கான அகநிலைச் சான்றுகள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன.

"தைஇத் திங்கள் தண்கயம் படியும்" என்று நற்றிணையும்
"தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" என்று குறுந்தொகையும்
""தைஇத் திங்கள் தண்கயம் போல்" என்று புறநானூறும்
"தைஇத் திங்கள் தண்கயம் போல" என்று ஐங்குறுநூறும்
"தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" என்று கலித்தொகையும்

தைத் திங்களில் புத்தாண்டு தொடங்கிய தமிழரின் வரலாற்றை இன்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இலக்கியப் பாடல்களில் சான்றுகள் இவ்வாறு இருக்க, பாமர மக்கள் வழக்கிலும் பழமொழி வடிவத்தில் சில சான்றுகளும் இருக்கின்றன.

"தைப் பிறந்தால் வழி பிறக்கும்" என்ற பழமொழியும்
"தை மழை நெய் மழை" என்ற பழமொழியும்

தமிழர் புத்தாண்டுக்கான வரவேற்பையும் தமிழர் வாழ்வில் தைப் பிறப்புக்கு இருக்கின்ற சிறப்பிடத்தையும் பறைசாற்றுகின்றன.

மேற்சொன்ன அனைத்துக்கும் மேலாக...


உலகத்தில் இயற்கை என்று ஒன்று இருக்கின்றது. அது இயங்கிக்கொண்டே இருக்கிறது. இயற்கையின் இயக்கத்திற்கு ஏற்பவே உலகத்தின் அனைத்து நடப்புகளும் அமைகின்றன. அந்தவகையில், இயற்கைக்கும் தைப் பிறப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தைத்திங்கள் அதாவது சுறவ மாதம் முதல் நாளில் சூரியன் வடதிசை நோக்கி தன்னுடைய பயணத்தைத் (அயணம்) தொடங்குகிறது. இதனைத் தமிழில் வடசெலவு எனவும் வடமொழியில் உத்தராயணம் என்றும் கூறுவர்.

ஆக, சூரியன் வடதிசை நோக்கிப் புறப்படும் புதிய பயணத்தைத் தொடங்கும் நாளில் தமிழர்கள் பொங்கல் வைப்பதும் அதனைச் சூரியப் பொங்கல் என்று வழங்குவதும் மிகப் பொருந்த அமைந்துள்ளன. ஆகவே, இதனைத் தமிழர்கள் ஆண்டுத் தொடக்கமாகக் கொண்டது இயற்கையின் சட்டத்திற்கும் உட்பட்டு இருப்பது கவனிக்கத்தக்கது.

இத்தனைக்கும் இடையில்...

ஆதியிலிருந்து தைத் திங்களையே தமிழ்ப் புத்தாண்டாக இருந்தாலும், இடைக்காலத்தில் சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கிய மரபும் தமிழரிடையே இருந்துள்ளது. கி.மு 317ஆம் ஆண்டுக்குப் பின்னர் சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக உருவாகியது. சித்திரைப் புத்தாண்டுக் கணக்கும் தமிழருக்கு உரியதே.

பிற்காலச் சோழர் காலத்தில் சித்திரைப் புத்தாண்டுக்குப் பெரும் செல்வாக்கு ஏற்பட்டது. இதற்குக் காரணம், சோழநாட்டில் தமிழியத்தின் தலைமை கொஞ்சங் கொஞ்சமாக மாறியும் மறுவியும் திரிந்தும்போய் ஆரியப் பார்ப்பனியம் தலையெடுக்கத் தொடங்கியதுதான்.

இதனால், அதுவரை தூயத்தமிழாக இருந்த தமிழரின் வானியல் கண்டுபிடிப்புகளும், ஐந்திரக் குறிப்புகளும், நாள், நாள்மீன், பிறைநாள், திங்கள், ஓரை (ஜோதிடம், தினம், நட்சத்திரம், திதி, இராசி, மாதம்) ஆகிய அனைத்தும் வடமொழிக்கு மாற்றப்பட்டன. தமிழர் கண்ட வானியல் மரபு ஆரியமயமாக்கப்பட்டு அடியோடு மறைக்கப்பட்டது.


இதுமட்டுமல்லாது, தொல்காப்பியர் காலத்தில், அதாவது கி.மு 5ஆம் நூற்றாண்டுக்கும் கி.மு.7ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஆவணி முதல்நாளில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கப்பட்டுள்ளது. தொடிதோட் செம்பியன் எனும் முசுகுந்த சோழன் என்ற மன்னன் ஆட்சிக்காலத்தில் ஆவணிப் புத்தாண்டுக்குப் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாக மணிமேகலைக் காப்பியம் தெரிவிக்கின்றது.

முடிவும் விடிவும் இதுதான்!

ஓர் இடைக்கால மாற்றம் என்பதாலும், ஆரிய வலைக்குள் சிக்கிக் கொண்டதாலும், மீட்க முடியாத அளவுக்குக் கலப்படம் நேர்ந்துவிட்டதாலும், பார்ப்பனியக் கூறுகளும் மத ஊடுறுவல்களும் அளவுக்கதிமாக நேர்ந்துவிட்டதாலும் சித்திரையைத் தமிழ்ப் புத்தாண்டாக ஏற்கமுடியாது என 1921இல் 500 தமிழறிஞர்கள் எடுத்த முடிவு முற்றிலும் சரியானதே என்பதை ஆய்வுப்பார்வையும் அறிவுநோக்கும் கொண்ட எவரும் ஒப்புவர். அதுபோலவே ஆவணிப் புத்தாண்டும் வழக்கற்றுப் போனதோடு காலச்சூழலும் மாறிப்போய்விட்டது.

இந்நிலையில், அகநிலையிலும் புறநிலையிலும் தமிழர்கள் விடுதலை பெற்ற இனமாக வாழவும் உயரவும் தனித்திலங்கவும் தைப்பிறப்பையே தமிழாண்டுப் பிறப்பாக – தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்! கடவுளின் தீர்ப்பு!

உலகின் பழமையான இனமாகிய தமிழினம் தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால், தமிழரின் வாழ்வியல் தமிழியலைச் சார்ந்திருக்க வேண்டும்; தமிழியத்தின் விழுமியங்களைத் தாங்கியிருக்க வேண்டும்; தமிழிய மரபுவேர்களில் எழுந்துநிற்க வேண்டும். இந்த முடிவொன்றே தமிழருக்கு விடிவாக அமையும்.

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

புனித_மொழி


#புனித_மொழி

பண்டைய ஐரோப்பாவில் மிகவும் தொன்மையான புனித மொழியாக லத்தீன் மொழி கூறப்படுகிறது. புனித ரோம் சாம்ராஜ்யத்தின் ஆட்சி மொழியாக, கடவுள் மொழியாக, சட்ட மொழியாக, அறிவியல் மொழியாக லத்தீன் மட்டுமே இருக்க வேண்டும் என்று ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டது.

எனவே அங்கு புழக்கத்தில் இருந்த மற்ற மொழிகள் இழிவானது என்ற கருத்து தோன்றியது. லத்தீன் மொழி தெரிந்தவர்களே உயர்வானவர்கள். உயர்வானவர்கள் மட்டுமே அதனை கற்க முடியும் என்ற நிலை உருவானது.

லத்தீன் மொழியின் மீது இருந்த புனித தன்மையும் ஆதிக்க தன்மையும் அந்த மொழியை சாதாரண எளிய மக்களிடம் இருந்து அந்நியப்பட்டும் இருந்தது. மேலும், லத்தின் மொழியின் புனிதமும் பரிசுத்தமும் அந்த மொழியை கடினமானதாகவும் நெகிழ்வு தன்மையற்றதாகவும் மாற்றியது.

லத்தீன் கையாள கடினமான மொழியாக மாறியதால் அறிவியலாளர்கள், படைப்பாளிகள், எழுத்தாளர்கள் என்று படைப்பாளிகள் அனைவரும் அனைத்து மக்களுக்கும் புரியும் தம் தாய்மொழியில் எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.

அதே காலக்கட்டத்தில் இழிவானதாக கருதப்பட்ட ஆங்கிலம் புதிய கண்டுபிடிப்புகளுக்கு இடம் கொடுத்து. வெவ்வேறு மொழியில் இருந்து சொற்களை கிரகித்து தன் சொல்லடக்கத்தை அதிகரித்தது. எனவே பல அறிவியலாளர்கள் தங்கள் கருத்துக்களை பகிர எளிமையான நெகிழ்வு தன்மை கொண்ட ஆங்கிலத்தை கையிலேடுத்தார்கள்.

மிக புனிதமானதாக உயர்வானதாக பரிசுத்தமானதாக கருதப்பட்ட லத்தீன் அந்த புனித தன்மையினாலயே இன்று வழக்கொழிந்து போனது. ஆங்கிலம் உலக மக்களால் பரவலாக பரவலாக பேசப்பட்டு உலக மொழியாக இருக்கிறது.

ஆக, ஒரு மொழியின் வளர்ச்சி, உயிர்ப்பு அனைத்தும் அதை பயன்படுத்தும் வெகு மக்களின் எண்ணிக்கையையும் அதன் நெகிழ்வு தன்மையையும் சார்ந்தே அமைகின்றது. இதன் காரணத்தால் அம்மொழியில் நிகழும் படைப்புகள், கலை இலக்கிய அறிவியல் ஆராய்ச்சிகள் அதை மேலும் செம்மை படுத்துகிறது.

கோத்திரம்_என்றால்_என்ன?


#கோத்திரம்_என்றால்_என்ன?
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
அகராதியில் இந்தச் சொல்லுக்கு வம்சம் என்று பொருள்.

இந்த வம்சத்தைச் சார்ந்தவர் என்பதைச் சொல்லுவதுதான் கோத்திரம். இந்தக் கோத்திரங்களின் முக்கியமானவர்களாக ஏழு ரிஷிகள் கூறப்பட்டுள்ளனர். இவர்களைக் கோத்திர பிரவர்த்தகர்கள் என்று சொல்லுவர்.

#கோத்திரம்_என்பது இவர்கள் எந்த முனிவருடைய வழியில் வந்தவர்கள் என்பதைக் குறிக்கும். இந்துக்கள் எல்லோருமே ரிஷி பரம்பரையினர் என்று கூறப்படுவதால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கோத்திரம் உண்டு.

இந்த ரிஷிகளின் பெயர்கள் பின்வருமாறு

1. பிருகு
2. அங்க்ரஸர்
3. அத்ரி
4. விச்வாமித்ரர்
5. வஸிஷ்டர்
6. கச்யபர்
7. அகஸ்த்யர்

*#பிரவர்த்தகர்கள்*

ஒரு சில கோத்திரங்கள் ஒரு ரிஷியையும் சில இரண்டு ரிஷிகளையும் சில மூன்று ரிஷிகளையும் சில ஐந்து ரிஷிகளையும் சில ஏழு ரிஷிகளையும் பிரவரமாகக் கொண்டவை.

கோத்ரம் பிராமணாளுக்கு மட்டுமே உரியது என்பதே நடைமுறையாக உள்ளது. அவர்களே ரிஷிகளின் வம்சாவளிகள் என்பது அவர்களால் தீர்மானிக்கப்பட்ட விஷயம்.

இந்தக் கோத்திரங்கள் எல்லா இனத்தவருக்கும் உண்டு. குறிப்பாகப் பிராம்மணர்கள் இடையே இது அதிகமாகப் பழக்கத்தில் உள்ளது. கோத்திரம் தெரியாதவர்கள் சிவ கோத்திரம், விஷ்ணு கோத்திரம் என்று தங்களைச் சொல்லிக் கொள்வதும் நடைமுறையில் உள்ளது.

ஆண்களுக்கு மட்டும்தான் கோத்திரம் என்பது இல்லை. பெண்களும் தங்களின் கோத்திரத்தைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். பெண்கள் திருமணம் செய்துகொண்ட பின் கணவனுடைய வம்சத்தைச் சார்ந்தவர்களாகி, அந்த வம்ச ஸந்ததியை விருத்தி செய்பவர்கள் என்பதால் கணவனுடைய கோத்திரத்தைச் சார்ந்தவர்களாக ஆகிவிடுகிறார்கள்.

ஆண்கள் கோத்திரம் திருமணத்தால் மாறுவதில்லை. ஒரு ஆண் மற்றொரு குடும்பத்திற்குத் தத்து (ஸ்வீகாரம்) அளிக்கப்பட்டுவிட்டால் அந்த வம்சத்து வாரிசாக மாறிடுவதால் அந்தக் கோத்திரத்தைச் சார்ந்தவராகி விடுவதால் பிறந்த கோத்திரம் மாறிவிடும். ஆண் பெண்
களுக்குத் திருமணம் நிச்சயிக்கப்படும்போது முதலில் கோத்திரத்தின் அடிப்படையிலேயே தான் செய்யப்படுகிறது. ஒரே கோத்திரத்தைச் சார்ந்த ஆணும் பெண்ணும் உடன்பிறந்தவர்கள் என்று கருதப்படுவதால் இவர்களுக்குத் திருமணம் செய்யப்படுவதில்லை. ஆணின் கோத்திரத்திற்காக அல்லது பெண்ணின் கோத்திரத்திற்காக அன்னியமான கோத்திரத்தில்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.
பிரவரத்தில் உள்ள ரிஷியின் பெயர் ஆண், பெண் கோத்திரங்களில் ஒன்றாக இருந்தாலும் திருமணம் செய்வதற்கில்லை.

உதாரணத்திற்கு ஒன்றைக் காட்டலாம். ஆணின் கோத்திரம் ஓமதக்னி. பெண்ணின் கோத்திரம் கர்கிய. ஓமதகனியும், கர்கியரும் வேறு வேறு ரிஷிகள் என்றிருந்தாலும் இவர்கள் பிருகு வம்சத்தில் வந்தவர்கள் என்பதால் பிரவரத்தில் பகுதி ரிஷியின் பெயர் கட்டாயம் இருக்கும். ஆக, இந்த இரண்டு கோத்திரங்களைச் சார்ந்த ஆண் பெண்களுக்கும் திருமணம் செய்ய கோத்திரப் பொருத்தம் இல்லை.

ஆண் பெண் திருமணத்திற்குப் பார்க்கும் பத்து வித பொருத்தங்களில் முதன்மையானது கோத்திரப் பொருத்தம். இது இல்லை எனில் மற்ற எல்லா வகையிலும் நூறு சதம் சரியாகப் பொருந்தி இருந்தாலும் திருமணம் செய்வதற்கில்லை. அங்ஙனம் திருமணம் செய்வது சகோதர சகோதரிக்கு இடையே செய்த திருமணமேயாகும்.

ஆண் தன்னுடைய கோத்திரத்தைத் தெரிந்துகொள்வதுடன் தன் மனைவியின் தந்தை கோத்திரத்தையும் கட்டாயம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

*#விஸ்வகர்மா*

கோத்திரங்கள் பஞ்ச கம்ஸலர்கள் எனவும் கம்மாளர்கள் எனவும் விஸ்வகர்ம பெருமக்கள் எனவும் அழைக்கப்படுகின்ற குலத்தினருக்கு ஐந்துவித கோத்திரங்கள் (பூர்வீக ரிஷிகள்) உள்ளன.

தங்கள் செய்யும் தொழிலைப்பொருத்து தங்கள் கோத்திரத்தை அவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

இரும்பு , மரம், கல், உலோகம், தங்கம் முதலிய பொருட்களைக் கொண்டு படைக்கும் தொழிலைச் செய்யும் கைவினைஞர்கள் “விஸ்வகர்மா” என பொதுப்பெயர் கொண்டுள்ளனர்.

1) இரும்பு தொடர்பான வேலையில் ஈடுபடும் கலைஞர்கள் – சானக ரிஷி கோத்திரம்

2) மர வேலைக் கலைஞர்கள் – ஸநாதன ரிஷி கோத்திரம்

3) உலோகத்தில் தேர்ந்த கலைஞர்களுக்கு – அபுவனஸ ரிஷி கோத்திரம்

4) கல்லில் கலைவண்ணம் காண்போருக்கு – ப்ரத்னஸ ரிஷி கோத்திரம்

5) பொன்னில் எண்ணத்தைப் பொறிப்போருக்கு – ஸூபர்ணஸ ரிஷி கோத்திரம்

*இந்தியாவில் வாழும் விஸ்வகர்மாக்கள் குறித்து அறிவோம்*

1) தமிழகம் :
தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் விஸ்வகர்மாக்கள் வாழ்கின்றார்கள், தச்சர், பொற்கொல்லர், ஆச்சாரி, விஸ்வபிராமணர், சில்பி, கன்னார், தட்டார், கம்மாளர் என பலவகையாக அழைக்கப்படுகின்றனர், பெரும்பான்மையோர் தமிழும், சிலர் தெலுங்கையும் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்.

2) ஆந்திர மாநிலம் :
விஸ்வபிராமணர்கள் என்றும், கம்ஸலர்கள் என்றும் ஆந்திராவில் பொதுவாய் அழைக்கப்படும் இவர்கள் கம்சாலி, முசாரி, வத்ராங்கி, காசி, சில்பி என உட்பிரிவுகள் பலவற்றைக் கொண்டுள்ளனர்.

3) கேரளம் :
கேரள தேசத்தில் ஆச்சாரிகள், விஸ்வ பிராமணர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.

4)கர்நாடகம்:

கர்நாடக மாநிலத்தில் விஸ்வகர்மா என பொதுப் பெயரினையும், குசாலர், சிவாச்சார், சத்தராதி என உட்பிரிவுகளையும் கொண்ட இவர்களின் சிலர் அசைவ உணவு வகைகளை உண்ணும் பழக்கம் கொண்டவர்கள். வட கர்நாடகத்தில் உள்ளவர்கள் சிலர் ‘லிங்காயத்’ என்னும் வழிபாட்டு முறையைப் பின்பற்றி வருகிறார்கள்.

5) கோவா:

கோவாவில் விஸ்வகர்மாக்கள் ‘சாரி’கள் என அழைக்கப்படுகிறார்கள், மனு மய பிராமணர்கள் எனவும் இவர்கள் அறியப்படுகிறார்கள், போர்ச்சுகீசியர்களின் காலத்தில் இவ்வினத்தினர் சிலர் கிறிஸ்தவ மதத்தினைத் தழுவியுள்ளனர்.

6) ராஜஸ்தான்:

ராஜஸ்தானத்தில் ஜங்கித் பிராமணர்கள் என அழைக்கப்படும் இவர்கள் இன்றளவும் இறைவனின் உருவங்களையும் ரதங்களையும் வடிவமைத்துப் புகழ் சேர்க்கிறார்கள். பெரும்பாலும் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் வாழும் இவர்கள் உயர் பொருளாதார நிலை முதல் மிகவும் ஏழ்மையான நிலைவரை தங்களது வாழ்க்கை நிலையைக் கொண்டுள்ளார்கள்..

தற்போது தொழிற்புரட்சி மற்றும் தானியங்கி இயந்திரப்புரட்சி ஆகியவற்றின் ஆதிக்கத்தினால் வேலைவாய்ப்பை இழக்கும் இவர்கள் தங்களது குலத்தொழில்களை விடுத்து மற்ற வேலைகளுக்கும் செல்கின்றனர்.

*கோத்திரம்*

நமது கோவிலில் ஐந்து கோத்திர குடி மக்கள் உள்ளனர். அவைகளின் விவரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

பருத்திக்குடையான் மகரிஷி கோத்திரம் - ஸ்ரீ வீரிய பெருமாள் ஸ்வாமி வழி வந்தவர்கள்
தென்னவராயன் மகரிஷி கோத்திரம் - ஸ்ரீ பெரிய நாச்சியம்மன் வழி வந்தவர்கள்
பயிராலழக மகரிஷி கோத்திரம் - நமது பெரிய நாச்சியம்மனிடம் பிள்ளை வரம் வேண்டி, பெற்று பின்னாளில் இணைந்தவர்கள்
பாக்குடையான் மகரிஷி கோத்திரம் - நமது கோவிலில் தாம்பூலம் மடித்து கொடுத்து பின்னாளில் இணைந்தவர்கள்

மாத்துடையான் மகரிஷி கோத்திரம் - நமது கோவிலில் விரிப்பு , ஜமுக்காளம் கொடுத்து பின்னாளில் இணைந்தவர்கள்

விஞ்ஞான ரீதியிலேயே கோத்திரம்

கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு

பெண் திருமணம் ஆகிக் கணவன் வீடு வருவதையும், அவளுக்குக் கணவனின் கோத்திரமே தான் கோத்திரமாக மாறுகிறது.

விஞ்ஞான ரீதியிலேயே இதற்கான பதிலைக் காண்போமா.

விஞ்ஞான முறையில் யோசித்தால் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே. ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம். இது தாய் மூலம் 23 தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம். இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது. தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன. ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும் இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டுக் கூறி உள்ளது.

ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யக் கூடாது என்பதன் காரணமும் இதை ஒட்டியே. ஒரே கோத்திரத்தில் பிறந்த பெண்ணோ, ஆணோ ஒருவரை ஒருவர் அறியாதவர்களாகவே இருந்தாலும் அவர்கள் சகோதர, சகோதரியாகவே கருதப் படுகிறார்கள்.

பெண் குழந்தையை உருவாக்கும் x க்ரோமோசோம் இருவரிடமும் இருக்கையில் ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் மட்டும் ஆணிடம் தான் உள்ளது. பெண்ணிற்கு y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை. ஆனால் அதே ஆண் குழந்தைக்குத் தந்தையிடம் இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன. தந்தையிடம் இருந்து மகன் பெறுவதும் அவன் பரம்பரையின் y க்ரோமோசொம்கள் மட்டுமே.

இருந்தும் x க்ரோமோசோம்கள் மகளுக்குக் கிடைக்கின்றது. ஆனால் இயற்கையின் மாபெரும் அதிசயமாக y க்ரோமோசோம்கள் பெண்களுக்குக் கடத்தப்படுவதில்லை

ஏனெனில் அவன் மூலம் தான் வம்சம் மீண்டும் வளரப் போகின்றது வழி வழியாக.
முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத் தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டுத் தொடர்ந்து காப்பாற்றப் பட்டு வருகின்றது. .

இதே முப்பாட்டி, பாட்டி, மகள், பேத்தி, கொள்ளுப்பேத்தி, எள்ளுப்பேத்தி என x க்ரோமோசோம்கள் வழி வழியாக வருவதில்லை.

பெண் எப்போதும் பெண்; 100% பெண். ஆனால் ஆணோ 50% பெண் எனலாம்.

மேலும் தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்குச் சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம். ஆகவே தான் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடரக் கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப் படுகிறது.

பெண்கள் மட்டுமே பிறக்கும் குடும்பத்தில் அந்தத் தந்தையுடன் அவர் கோத்திரம் முடிவடையும். இதனால் தான் கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு என்று சொல்லி இருக்கிறார்கள்.

வெள்ளி, 10 ஏப்ரல், 2020

சித்தூர் தென்கரை மகாராசா கோவில் வரலாறு


சித்தூர் தென்கரை மகாராசா கோவில் வரலாறு

 நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா  வள்ளியூருக்கு அருகே உள்ளது சித்தூர் தென்கரை மகாராசா கோவில்  நம்பியாற்றின் தென்கரையில்  அமைந்திருப்பதால் தென்கரைமகாராசா கோவில் என அழைக்கபட்டதாக தெரிகிறது   கோவில் அமைய பெற்ற  சித்தூரின் பழைய பெயர் வன்னி களத்தி ஆகும்  வன்னியராசா சாம்பான் ஆண்ட பகுதி என்பதால் வன்னியராசா வின் வழி வந்த சாத்தன் சாம்பானின் ஆளுகைக்கு உட் பட்ட  எல்லைகளுக்குள் இவ்வூர் வருவதாலும்   இப்பெயர் பெற்றதாக அறியமுடிகிறது  (பார்க்க: தினகரன்  நாளிதல் வசந்தம் இணைப்பு   சாத்தான்குளம்  ஜமீன்  வரலாறு  பகுதி:129 பக்கம்:13)     கோவிலின் தென் மேற்கு மூலையில் தளவாய்  மாடசாமி கோவில் உள்ளது தளவாய் மாடசாமி தென்கரை மகாராசா சான்பானின் தளவாய்(தளபதி) ஆக இருக்கலாம்  தென் திருவிதாங்கூர்  பகுதியில்  தளபதிகள் தளவாய் என்றே அழைக்கபட்ட வரலாறுகளை  வி.வி.சர்மாவின் திருவிதாங்கூர் சரித்திரம்(1932), தளவாய் வேலுத்தம்பியும் மார்ஷல் நேசமணியும் -தியாகி ஆ. சிங்காராயர்,  வேலுத்தம்பி தளவாய் -கே.பி.சுகுமார்,  மற்றும் கன்னியாகுமரி  மாவட்ட கல்வெட்டுகள்  மாவட்டதொல்லியல் வரலாறு போன்ற நூல்களின் வாயிலாகவும்  அறியலாம்  பண்டைய திருவிதாங்கூர் ஆளுகை நெல்லை வரை 18ம் நூற்றாண்டில் நிலை பெற்றிருந்ததாலும் இவ்வழக்கு சொல் இங்கும் நிலை பெற்றிருக்கலாம்,  வடக்கு பிறகாரத்தில்  மருதானி மரத்தின் கீழ் பேச்சியம்மன் கோவிலும் உள்ளது,   நம்பியாற்றின் கரையை ஒட்டி வடக்கு பக்கம்  வன்னியராசா ( தற்போது வன்னியன் கோவில் என மறுவி விட்டது)கோவிலும்,  வட கிழக்கு மூலையில் வீரமனி சாம்பானின் கோவிலும் உள்ளது   இக்கோவிலின் முன்னெதிரே  வெளி ஓட்டுக்கூரை மண்டபம் உள்ளது இக்கோவிலை  பெரிய கோவிலில் அருள் பாலிக்கும்  மகாராசா சாம்பானே கி.பி:18 5ல் (கொல்லம் ஆண்டு:1060) கட்டியிருக்கிறார்    பெரிய கோவிலை மேற்கூறிய வீரமணி சாம்பான் வன்னியராசா சாம்பான் போன்றோரின் வழி தோன்றலும் இப்பகுதியை கடைசியாக ஆட்சி புரிந்த மன்னர்  சாத்தன் சாம்பானே கட்டியிருக்கிறார்   இவர்களின்  வரலாற்றை பார்க்கும் போது சாத்தன் சாம்பானுக்கு முன் மகாராசா சாம்பான்  அவருக்கு முன் வன்னியராசா சாம்பான் என்ற ஆதிச்சன் சாம்பான்  (இன்றும் தென் பகுதியில் உள்ள தென் கிளை சாம்பவர் இன மக்கள் வன்னியன் என்ற பெயரை வழிவழியாக இட்டு கொள்கிறார்கள்)  இவர் பெயரில் ஆதிச்சன்காடு என்ற ஊர் உள்ளது  வன்னிய ராசா சாம்பானுக்கு முன்  அரசபுத்தன் சாம்பான்  இவர் பெயரில் அரசூர் புத்தன் தருவை போன்ற ஊர்கள் உள்ளன இவருக்கு முன்  சடையன் சாம்பான், சடையன் சாம்பான் பெயரில் இன்றும் சடையனேரி என்ற ஊரும்  இவர் வெட்டிய கால்வாய் இன்றும் சடையனேரி மணிமுத்தூறு இனைப்பு  கால்வாய் ஆக இன்றும் இப்பகுதியில் உள்ளது  அவருக்கு முன்  வீரமணி சாம்பான், அடைக்கல சாம்பான் என்று தொடர்ச்சியாக நீண்டு செல்கிறது   இவர்கள் பாண்டிய வழி தோன்றல்கள் என்றும்  மூன்றாம் குலோத்துங்கனுக்கும் பாண்டியர்களுக்கும் நடந்த போரில் பாண்டியர்கள் வீழ்த்தபட்டு  மீண்டும் சோழர்கள் க்கு கட்டுப்பட்டு பட்டு ஆட்சி புரிய சோழ பாண்டியர் களாக ஒப்பு கொண்ட போது பாண்டியர்களுக்குள்ளான நடந்த வாரிசுகளை போரில்   முதலாம் சடையன் மாறவர்மனின் வழி தோன்றல்களான பாண  சூர பாண்டிய வானகோவரைய சாத்தன் சாம்பவருக்கே வாரிசுரிமையை குலோத்துங்கன் அளித்து மணிமுடி சூட்டியதாகவும் அந்த வழி தோன்றள்களே இவர்கள் என்றும் படிப்படியாக  முகலாயர்களின் படையெடுப்பிலும் நாயக்கர்களாலும்  வீழ்த்தபட்டு  படிப்படியாக ஜமீன் நிலைக்கு தள்ளபட்டதாகவும்    மறைக்கபட்ட ஜமீன்களின் கதையை  வணக்கம் மும்பை இதழில்  எழுதியும்     தேரிக்காட்டு சரித்திரம் எனும் நூலிலும்   குங்குமம் ஆன்மீக இதழிலும் பதிவு செய்து இருக்கிறார் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி  காமராசு  பொக்கிஷம் வேண்டி பிரார்த்திக்கிறார்கள்! - Kungumam Tamil Weekly Magazine: Aanmeega palan, aanmeega palan magazine, anmega palan, aanmeegam, Tamil Magazine Aanmeega palan, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine ,                                                                                                                             நம்பியாற்றின் வடக்கே பெரிய கோவிலின் எதிரே 1 கிலோ மீட்டர்  தொலைவில் வடக்கு வாய் செல்லியம்மன் அம்மன் கோவில் உள்ளது பெரிய கோவிலுக்கும்  வடக்குவாய் வாய் செல்லியம்மன் கோவிலுக்கும்  இடையே தேரோடும் வீதியும் வன்னி குத்து  சடங்கு மேடையும் உள்ளது
 கோவிலின் கருவறையில் சுவாமி  சாய்ந்த நிலையில் உள்ளார்  மூலவர் கையில் வேல் இருப்பதற்கு காரணம்  திருச்செந்தூர்  கோவிலில் கொடிமரம் நடுவதற்கு மகேந்திரகிரிமலையில் மரம் வெட்டி நம்பியாற்றில் பட்டுள்ளனர்  மரம் ஆற்றில் மிதந்து வருவது தடைபட்டது தடை குறித்து பார்த்த போது சித்தூரில் அருள் பாலிக்கும்  தென்கரை
 மகாராசாவே தடைக்கு காரணம் என அறிந்து திருச்செந்தூர்  முருகனை போல் தென்கரை மகாராசா சாம்பவர் க்கும் வேல்  இட்டு வணங்கி வழி கேட்டனர்  பின்னரே நம்பியாற்றில் கொடி மரத்தை  இழுத்து செல்ல முடிந்தது


  தென்கரை மகாராசா விற்கு  பங்குனி ஆனி மாதங்களில் வருகிற உத்திர நட்சத்திரத்திலும்  ஒவ்வொரு மாத இறுதியில் சனிக்கிழமைகளிலும் திருக்கார்த்திகை சிவராத்திரி ஆகிய சிறப்பு விழாக்களிலும் பூஜைகள் நடைபெறும்

  மூலவரான தென்கரை மகாராசா சாம்பானுக்கு  மூன்று வேலையும் பூஜை நடக்கிறது  பங்குனி உத்திரம் 6ல் நாளொன்றுக்கு தளவாய் மாடசாமிக்கும் சிறப்பு பூஜை நடக்கிறது   இத்திருவிழா காலங்களில் தென்கரை மகாராசா வின் வழி வந்த தென்கிளை சாம்பவர் மக்கள் மட்டுமின்றி வெள்ளாளர் நாடார் மறவர் பிராமணர் போன்ற சமூக மக்களும் திரளாக வந்து கலந்து கொள்கின்றனர்  திருவனந்தபுரம் தொடங்கி இராமநாதபுரம் வரை பரவியுள்ள தென்கிளை  சாம்பவர்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவருக்காவது  வன்னியராசன் மகராசன் சாத்தன் போன்ற பெயர்களை இன்றும் இட்டு கொள்வதை இன்றும் கானபடுகிறது  

மறைக்கபட்ட மாவீரன் மருதநாயகம்


மறைக்கபட்ட மாவீரன் மருதநாயகம்
                                                       
மறைக்க பட்ட மாவீரன் மருதநாயகம் இராமநாதபுரம் மாவட்டம் பனையூரில், இந்து  வேளாளர்  குடும்பத்தில் பிறந்ததாக., sharlace shkill என்ற ஆங்கிலேயர்   yusuf khan  The  Rebell Commander  என்ற  தலைப்பில் தன்னுடைய மனைவிக்கு அனுப்பிய கடிதத்தில் இதை குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார்   இதை தழுவியே அத்தனை வரலாற்று ஆய்வாளர்களும்  அவருடைய வரலாற்றை பதிவு செய்திருக்கிறார்கள்
                                             
விவசாயம்    செய்த அனைவரையுமே வேளான்மக்கள் என பொதுவாக அழைக்கும் அந்த பன்பு பெயரோடு  மட்டுமே  இதை அவர் இதை  பதிவு  செய்திருக்க கூடும் மருதநாயகம் குறித்த
  முதல் கள ஆய்வு நூலான மறைக்கபட்ட பரையர் வரலாறு நூலின் ஆசிரியர் செ.மு. இமயவரம்பன் தன்னுடைய கள ஆய்வில் மருதநாயகம் தென் பகுதியில் பிரதான வேளான் சமுகமான சாம்பவர் குல மரபில் வந்தவர் என பதிவு செய்திருக்கிறார்     

மருதநாயகம் பிறந்த பனையூர் கிராமத்தின் பெயரே பரையனூர் என்றும்   பின்னாளில் பனையூர் என மருவி தாகவும் கூறுகிறார்   மருதநாயத்தை உரிமை கொொண்டாடி  வரும்  பிரதான சமுகமான வெள்ளாளர்/வேளாளர்   சமுகங்களே ஒரே சமுகம்  கிடையாது எல்லாமே வெவ்வேறு சமூகங்கள் என்பதாலும் தங்கள் பங்கிற்கு    மருதநாயகத்கதை சைவ வேளாளர் என்றும் சிலர்  அவர் இல்லத்து(ஈழவர்) பிள்ளை என்றும் சிலர் கொடிக்கால் பிள்ளை என்றும் சிலர் வீரகுடி வெள்ளாளர் என்றும்   சிலர் சோழியபிள்ளை  என்றும் சிலர் வீரகுடிவெள்ளாளர் என்றும் கூறி வருகிறார்கள்  வீரகுடி  வெள்ளாளரை   தவிர்த்து பனையூரில் பிற சாதிகள்  வாழ்ந்த சான்றே கிடையாது   என அறிய முடிகிறது   சேனைத்தலைவர் எனும் சாதியும்  தாங்களே கொடிக்கால் வெள்ளாளர் என்றும்  கூறி கொள்கிறார்கள்


    வீரகுடி வெள்ளாளரையையும்   இராமநாதபுரம் மன்னர்  அப்பகுதி   பரையர்களின் விளை நிலங்களில் வெற்றிலை பயிர் செய்ய பட்டையம்  எழுதி  கொடுத்ததும் அவர்கள் அதற்கு  நன்றியாக தினசரி வெற்றிலையில் ஒரு பங்கை  அவர்கள் அதை  மன்னருக்கு அவர்கள் கொடுத்தனர்  அவர்களின்  வேளான் தொழில் ஈடுபாட்டை  பார்த்து  அனைத்து பொது நிலங்களையும் அவர்களுக்கு குத்தகைக்கு விடுகிறார்                           

பின்பு அதற்கு கணக்கு வழக்கு  எழுத சேலம் பகுதியில் இருந்து வீரகுடி வெள்ளாளர் சமுகத்தை சேர்ந்த இருசகோதரர்களை கணக்கை வழக்குநிமித்த பனிக்காக  இராமநாதபுரம் மன்னர் குடியேற்றி இருக்கிறார்
  அவர்களின் பாதுகாப்பிற்கு பின்பு கள்ளர் குடும்பத்தையும் குடி வைத்ததாக  அவ்வூரில் வசிக்கும் 80 வயது மதிக்க தக்க பெரியவரான  வீரகுடி வெள்ளாளர் சமுதாயத்தை சார்ந்த திரு ராஜரத்தினம் அவர்கள் தகவல் தருகிறார்
                                                   

மருதநாயகம் இந்து மதத்திலிருந்து இஸ்லாம் தழுவியவர்  அங்கு உள்ள வீரகுடி வெள்ளாளர் குடும்பங்கள் புனித அருளானந்தர் என்பவரால்  கத்தோலிக்க கிறிஸ்தவ மார்க்கத்திற்கு மாரியிருக்கிறார்கள்  அங்கு வெள்ளாளர் இருந்த தெருவே கிறிஸ்தவர் தெருவென அழைக்கபடுகிறது  இன்றும் அங்கு வெள்ளாளர்களால் உருவாக்கபட்ட தேவாலயம் உள்ளது                                         

எந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்களும்  இது வரை இஸ்லாம் ஏற்றதாக தரித்திரம் இல்லை   ஆனால் தென் பகுதியில் சிவகங்கை இராமநாதபுரம் கீழக்கரை கன்னியாகுமரியின் ஆளூர்  தஞ்சை பகுதியில் திருப்பானாந்தாள்   போன்ற பகுதியில் பெருமளவு  பரையர்கள் இஸ்லாம் ஏற்றதையும் அறிய முடிகிறது                                   

இஸ்லாம் ஏற்ற காரணத்தினால் முகம்மது யூசுப்கான் சாஹிப் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இவர் மருதுநாயகம், கான்சாஹிப், மருதநாயகம் முகம்மது கான் சாஹிப் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறார்.  இன்றும் மதம் மாறாத   சுற்றுவட்டார18 கிராம சாம்பவர்/பரையர்களால் வணங்கபடும் பெரிய நாச்சியப்பன் கோவில்  முன் வெள்ளாளர் திரு ராஜரத்தினம் அவர்களுடன்  மறைக்கபட்ட பரையர் வரலாறு இதழின் ஆசிரியர் சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன் அவர்கள்



  சிறு வயதில் பனையூரிலிருந்த மருதநாயகம்  அப்பகுதி வழியே சென்ற பிரெஞ்சுகாரர் ஏற்பட்ட நட்பால்  பெற்றோரிடம் சொல்லி விட்டு  அவருடன் பாண்டிச்சேரி சென்று விடுகிறார்    அங்கு  அவருக்கு உதவியாளராக பணி செய்கிறார்  அங்கு பிரெஞ்சு ஆங்கிலம்  மற்றும் போர்த்துகீசிய மொழிகளையும்  கற்று கொள்கிறார் தன்னுடைய  அதி மிகு ஆர்வத்தால்  மருத்துவர், தையல் தொழிலாளி, படகோட்டி, விளையாட்டு வீரர், வித்தகர் என பல திற மைகள் வெளிப்பட்டாலும் தன்னை போர்க் களத்தில் ஈடு படுத்திக் கொள்வதிலேயே அவரது ஆர்வம் இருந்தது

 பின்பு  அந்த பிரெஞ்சுகாரர் உடன்  தஞ்சை செல்கிறார் தஞ்சாவூரை தலைமையகமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னன் துக்காஜி படை பிரிவில் நிறைய தமிழர்களை சேர்க்கிறார்  1729ல் சேர்ந்து    கொஞ்ச காலம்  துக்காஷியின் படை பிரிவில் ப  புதுச்சேரிக்குச் செல்கிறார்  1727-.முதல் 1729 வரையிலான கால கட்டங்களில்  வலங்கை பரையர்கள்   தஞ்சை அரண்மனை பகுதியிலேயே 40 க்கும் மேற்பட்ட  உரிமைகள் மறுக்கப்பட்ட இடங்கை சமூகமான கம்மாளர்களை குத்தி கொன்றதாக டச்சு ஆவணங்களில் பதிவு செய்யபட்டுள்ளது

 வலங்கை பரையர்களுக்கு பயந்து இடங்கை தாழ்த்தபட்ட மக்கள் தஞ்சை பகுதியில் இருந்து வெறியேறியதாகவும்  அதனால் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க அரசர் கேட்டு கொண்டும்  துக்காஜியின் படை பிரிவில் இருந்த  பரையர் மற்றும் ஏனைய வலங்கை சாதிகள் வலங்கை சமுகங்களுக்கு  ஆதரவாகவே இருந்ததாகவும்  அதனால் மன்னர் துக்காஜியின் கோபத்துக்கு பயந்து சிலர் தலைமறைவாகி விட்டதாகவும் டச்சு ஆவணங்களில் பதிவு செய்யபட்டுள்ளது மருதநாயகமும் அதனாலே படையில் இருந்து விலகி  புதுச்சேரி சென்று பிரெஞ்சு படையில் சேர்ந்திருக்க வேண்டும்                                           

                         
 புதுச்சேரியை மையமாகக் கொண்டு ஆட்சி புரிந்த பிரெஞ்சுப் படையில் சாதாரண படைவீரனாக தன்னை இணைத்துக் கொண்டார்.  அங்கே தான் அன்னை மாஷாவை மணம் முடிக்கிறார்  அவரை மலையாள புலையர்  பெண்ணுக்கும்  பிரெஞ்சு தந்தைக்கும் பிறந்தவர் என்றும்  பரையர் என்றும் இருவேறு கருத்துக்களை  கூறுகிறார்கள்                     

 பிரெஞ்சு ஆவணங்களிலும் துபாஷிகளின் குறிப்புகளிலும்  கேரளபுலையர் குடியிருப்புகள் இருநததாக  எந்த தகவலும் இல்லை அதனால் பரையராகவே  இருக்க வேண்டும்
  மருதநாயகம் போல் 60 க்கும் மேற்பட்ட பரையர்களும் பிரெஞ்சு படையில்  இருந்ததாகவும் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுகாரர்களுக்கும் நடந்த  வழுதாவூர்,செஞ்சி  போர்களில்  அவர்கள் பங்கு பெற்றதாகவும் பிரெஞ்சு ஆவண குறிப்புகள் சொல்கின்றன   பிரெஞ்சு படையில் இருந்த போது ஏற்பட்ட கருத்து மோதலால் வெளியேறி   கருப்பர் நகரம் என்றும் பிற்காலத்தில்  மதராஸ் என அழைக்கபட்ட பகுதிக்கு சென்று குடியிருக்கிறார்                   

 காலணி ஆதிக்க போட்டியில் இருந்த பிரெஞ்சு ஆங்கியருக்குமான ஏழு ஆண்டு போர் என்பது தங்களது கடல் வணிகத்தை  தென் பகுதியில் வழுப்படுத்த தொடர்ச்சியாக  இரு நாட்டு கம்பெனிகளும்  கடலூர் தஞ்சை  என தொடர்ச்சியாக  கடல் சார்பு பகுதிகளை பிடிக்க போர் செய்தனர் அது மூன்று கர்நாடக போர்களுக்கு வழி வகுத்தது பிரெஞ்சுக்காரர்கள்   17 58-ல்  சென்னையை  முற்றுகையிட்டனர்   ஆங்கிலேயர்களிடம் போதுமான படைவீரர்கள் இல்லாததால்     மேஜர் ஜார்ஜ் கோட்  துபாஷியாான முத்து கிருஷ்ணமுதலியை  அழைத்து கொண்டு பெரிய பரச்சேரி பகுதிக்கு செல்கிறார்.                       
 போரில் பங்கு பெற்று மதராஸ் நகரை காக்க வேண்டுமென  பரையர்களின் தலைவராக இருந்த நல்லதம்பி பிள்ளையிடம் கோரிக்கை வைக்கிறார்                   
அவரின்  ஒப்புதல் பேரில்   பரையர் ரெஜிமென்ட் உருவாக்க படுகிறது  பின்னாலில் இது   மெட்ராஸ் ரெஜிமென்ட் என குறிக்க பட்டாலும் அன்றைய ஆவணங்களில் பரையர் ரெஜிமென்ட் என்றே குறிக்கபட்டுள்ளது                                 அந்த பரையர் ரெஜிமென்டில் கலந்து கொண்ட  மருதநாயகம்  உள்ளிட்ட  பரையர்களால் பிரெஞ்சு படை விரட்டி அடிக்க படுகிறது    பரையர்கள் தாங்கள் பயன்படுத்தும்  ஈட்டி உள்ளிட்ட ஆயுதங்களில் நஞ்சை தோய்த்து பயன்படுத்தியதாகவும் அதனால் பிரெஞ்சு படைகளால் அவர்களை எதிர் கொள்ள முடியவில்லை என ஆங்கிலேய அதிகாரி வால்ஷ்புர்க்   பிரிட்டிஸ் கவர்னருக்கு அனுப்பிய அறிக்கையில் பதிவு செய்திருக்கிறார்  மருதநாயகம்  சாம்பவர்/பரையர் என நிறுவுதற்கு இதுவே வலுவான ஆதாரம் இதில்  வெள்ளாளர்கள் பங்கு பெற்றதாக எந்த ஆவணமும் காணபடவில்லை               

   போரில் ஆங்கிலேயர்களுக்கே வெற்றி கிடைக்கிறது வெற்றிக்கு முழு காரணமான ஒரு சில பரையர்களுக்கு  பதவி உயர்வும்  மற்றவர்களுக்கு நிலமும் வீடும் வழங்க படுவதாக உறுதியளிக்கபடுகிறது    அந்த பதவி உயர்வு பெற்ற பரையர்களில்  முக்கிய   நபரான மருதநாயகம் மதுரை கவர்னராக நியமிக்க படுகிறார்         

அனைத்து பாளையக்காரர்களும் வந்து வணங்கி செல்கிறார்கள் சிவகங்கை ஜமீனை தவிர             
சிவகங்கை ஜமீனுக்கு ஓலை அனுப்புகிறார் மருதநாயகம்  பதிலுக்கு சிவகங்கை ஜமீனின் தானாதிபதியான  தாண்டவராயபிள்ளை  உன் மனைவியை சகோதரியாகவும் உன்னை மைத்துனர் ஆகவும் பாவித்து பொன்னும் பொருளும் அனுப்புவதாக பதில் ஓலை அனுப்புகிறார்                     

தன்னை வணங்கி செல்லாமல் திமிராக   பதில் ஓலை அனுப்பியதால்  சிவகங்கை ஜமீனை முற்றுகை இட போவதாக பதில் அனுப்புகிறார் மருதநாயகம்   பதிலுக்கு தாண்டவராயன் சிவகங்கையை நெருங்கினால் மறவர் ஜமீனும்  இந்த தாண்டவராயனும் வேடிக்கை பார்க்க மாட்டார்கள் என்றும்
   மிரட்டல் விடுக்கிறார்   கொடிக்கால் கிள்ளும் சாதியான(கொடிக்கால் வெள்ளாளர்) உனக்கு படை கெட்ட  தெரியாது என்றும்   நீ என்னை எதிர்ப்பதா என்று ஏலனம் செய்கிறார் மருதநாயகம். 

                  மருதநாயகத்தை பகைத்து   விட்டதால்  தன்னுடைய  உறவினரும் இராமநாதபுரம் சேதுபதியின் தானாதிபதியான தானுப்பிள்ளையை நாடுகிறார் இருவரும் தொன்டைமண்டலத்தை சேர்ந்த தன்னுடைய உறவினர் மூலம் ஆர்க்காடு நவாப்பை நாடுகின்றனர்  ஏற்கனவே நாட்டு மக்களுக்கு  வரி விதிப்பு போன்ற விடயங்களில் ஆர்க்காடு நாவாப்பின் உத்தரவு படி செயல்பட ஆங்கிலேயர் வழியுரித்தியதால் ஆர்க்காடு நவாப்பின் உத்தரவுகளுக்கு தன்னால் கட்டுப்பட முடியாது என மருதநாயகம் ஆங்கிலேயரிடம் சொல்லி விட்டதால் ஆர்க்காடு நவாப்பின் எதிப்பை பெற்றிருந்தார் மருதநாயகம்

அதற்கு பழி தீர்க்க  சமயம் பார்த்து கொண்டிருந்த ஆர்க்காடு நவாப் இந்த சமயத்தை பயன்படுத்தி கொள்ள தயாரானார்  மருதநாயகம் தன்னாட்சி நிர்வாகம் செய்வதாகம் தனக்கு கட்டுபடுவதில்லை என்றும் பாளையக்காரர்களின் வரி வசூலை  அவரே வைத்து கொண்டதாகவும் ஆங்கிலேயருக்கு தகவல் சொன்னார் கம்பெனி நிர்வாகம்  மருதநாயத்தை கைது செய்யவும்  ஆனை பிறப்பித்து  ஒரு படையை அனுப்பியது                     

சூழ்நிலையை புறிந்து கொண்ட  மருதநாயகம் தன்னுடைய ஆளுகைகுட்பட்ட பகுதிகளை சுதந்திர பகுதிகளாக அறிவித்து ஆங்கிலையரை எதிர் கொள்ள தயாரானார் மருதநாயகம்  மதுரையில் ஆட்சி செய்த  7 ஏழு ஆண்டுகளில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிலங்களும் அதற்கு பாத்திர பட்ட சத்திரங்கள்  வெளி நபர்களால் ஆக்கிரமிக்கபட்டிருந்தது  அதைை  மீட்டு மீண்டும் நிர்வாகத்திற்கு கொடுத்திருக்கிறார்   தாமிரபரணியில் அனைக்கட்டும்  திருநெல்வேலி மேம்பாட்டு கால்வாய் திட்டத்தையும் வடிவமைத்திருக்கிறார்   கொடைக்கானலுக்கு முதலில் பாதை அமைத்து அது சுற்றுலா தளமாக  பெரும் பங்களிப்பு செய்திருக்கிறார்  நத்தம் பகுதியில்  பொது மக்களுக்கு அதிகமாக இடையூறாக இருந்த கள்ளர்களை  ஒடுக்கியிருக்கிறார்                     

197 6-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மருதநாயகம் படைக்கும் ஆங்கிலேய படைக்கும்  போர் மூண்டது  தொடர்ந்து போர் 70நாட்களுக்கும் மேலாக நீடித்தது  மருதநாயகம் பக்கம்  இருபத்தி ஏழாயிரம்  படைவீரர்கள் இருந்ததாலும் மருதநாயத்தை வீழ்த்துவது தொடர்ந்து சிக்கலாக   இருந்ததால் ஆங்கிலேய படை  பின் வாங்கி சென்றது    தனது திட்டம் தடை பட்டதை என்னிய தாண்டவராயபிள்ளை இவனை விட்டு விட்டால் நவாப்பும் கம்பெனிகாரர்களுக்கும்  பாளையக்காரர்கள் மத்தியில் மரியாதை இருக்காது என்று சொல்லி மீண்டும் தூபம் போட்டான்             

 அதே நேரம் அதிகமான துருப்புகளை  ஆங்கிலேய படை  திரட்டி நவாப் மும்மதலிக்கு தகவல் சொல்லியது நவாப்புடன் ஆங்கிலேய படை  19-2-17 5ல் மீண்டும் மதுரையை முற்றுகை இட்டது   முகலாய சாம்ராஜ்யம் முமுவதுமாக  ஆட்டம் கண்டு போன நிலையில் கர்நாடக நவாப் ஐதராபாத் நிஜாம்  என தனி தனியாக செயல் பட துவங்கின ஆற்காடு நவாப்க்கான போட்டியில்   பிரெஞ்சு படை சாந்தாசாகிப்பையும் ஆங்கிலேயர் முகமது அலியையும் ஆதரித்தனர்

ஆங்கிலேயரின் உதவியால் ஆற்காடு நவாப் பதவியை முகமது அலி  கைப்பற்றி கொண்டிருந்தார் மருதநாயகம்  முகமது அலி யை காரணம் காட்டி சாந்தா சாகிப்பின் உதவியை நாடினார்  அவர் சுலைமான் என்ற தளபதி தலைமையில் ஒரு படையையும் அனுப்பி  சாந்தாசாகிப் பிரெஞ்சுகாரர்களின் உதவியையும் பெற்று கொடுத்தார்   பாண்டிச்சேரி தவிர்த்து அனைத்து பகுதிகளையும் இழந்த பிரெஞ்சு படை மருதநாயகத்திற்கு உதவி செய்ய முன் வந்து படை அனுப்பியது  இந்த கூட்டு படையை எதிர் கொள்ள முடியாத ஆங்கியே துருப்புகள்  மீண்டும் தோல்வியோடு திரும்பி சென்றனர்                                                 
   மீண்டும்  போர் துவங்கிய போது தற்போது சுதந்திர போராட்டக்காரர்களாக காட்டபடும் பூலித்தேவன்   முதலாம் கெட்டி பொம்மு(வீரபாணடிய  கெட்டி பொம்முவின் பாட்டன்) போன்றவர்கள்  ஆங்கிலேயருக்கும் முகமதலிக்கும் ஆதரவாக மருதநாயத்துடன் போர் செய்ய வந்தனர்  ஒரு பக்கம் பாளையக்காரர்கள் மறுபக்கம் ஆற்காடு நவா  மறுபக்கம் ஆங்கிலேயர் என மூன்று கூட்டு படைகளை எதிர் கொள்ள தயாரானார் மருதநாயகம் தொடர்ந்து 22 நாட்களுக்கும் மேலாக போர்  நடந்தது

மருதநாயத்தின் கோட்டையை  நான்கு பக்கமும் சுற்றி வளைத்தனர்   உணவு உள்ளிட்ட அன்றாடம் தேவையான பொருட்களை எடுத்து செல்ல தடை ஏற்பட்டது   வீரர்கள் சோரத்து போயினர்   கடைசி வரை போரிட்டு மாண்டாலும் பரவாயில்லை  எக்காரனம் கொண்டும் மண்டியிட போவதில்லை என்று உறுதியாக    இருந்தார்  எந்த சூழ்நிலையையும் மருதநாயகம் எதிர் கொள்வார்  அவரை போரில் வெல்வது கடினம் அதனால்  சூழ்ச்சியால் வெல்ல சதித்திட்டம் தீட்டினர் வெள்ளாள கணக்கு பிள்ளைகள் சதி வலை பின்னுவதில் கெட்டிக்காரர்களாக இருந்தனர்                                             
 திருவிதாங்கூரில் ரவி வர்மனுக்கு துனையாய் இருந்து சூழ்ச்சியால் அவனையே வீழ்த்தும் அளவு துனிவு பெற்றிருந்தார் கள்  எட்டு வீட்டு பிள்ளைமார். எனில் அவர்களின் மதி நுட்பத்தை நாம் அறிந்து கொள்ள முடியும் 
 தாண்டவராயபிள்ளையும் தானுபிள்ளையும் இந்த முறை   மருநதாயகத்திற்கு நம்பிக்கையான சீனிவாசராவ் எனும் பிராமனரைை அனுகினர்   மருநதாயகம் உடன் இருக்கும் துருப்புக்கள்  ஆயுதங்கள் போன்ற விவரங்களை கேட்டனர்  முதலில் மறுத்தார் சீனிவாசராவ்

ஆங்கிலேயரும் ஆற்காடு நவாப்பும் பொன்னும்  பொருளும்  திருநெல்வேலி பேட்டையும்  பரிசாக தருவதாக உறுதி அளித்தனர் தயங்கினார் சீனிவாசராவ்  சிவகங்கை ஜமீன் சார்பாக  திருபுவனம் பகுதியையும்  பள்ளிமடையையும்  எழுநூறு குதிரையையும் தருவதாக உறுதி அளித்தார்  சீனிவாசராவ் ஒப்பு கொண்டு  மருதநாயகத்திற்கு மிகவும் நம்பிக்கையுரியவர்களாயிருந்த  பாபாசாஹிப்  சேகுகான்   உள்ளிட்டோரையும் திட்டத்துக்கு  உட் படுத்த  மருதநாயகம் தன் குடும்பத்தோடு தப்பி செல்ல விருப்பதாகவும், அதன் பிறகு உங்கள் கதி அதோ கதிதான் என்றும் அவர்களிடம் அவதூறு பரப்பினார்                               

அவர்கள் மருதநாயகத்தின் மீது சந்தேகம் கொண்டனர். இதைத்தான் ஆங்கிலப்படை எதிர்பார்த்தது. அது நடந்தது. கான்சாஹிப் மருதநாய கத்தை பிடித்துக் கொடுத்தால், பொதுமன்னிப்பும், சலுகைகளும் உங்களுக்கு வழங்கப்படும் என்று பேரத்தை       அவர்களும்     நம்பி உடன்பட்டனர்
மருதநாயகத்தை யாராலும் அவ்வளவு எளிதில் நெருங்க முடியாது. அடக்க முடியாது. பிடிக்க முடியாது. போர் யானையை எப்படி முடக்க முடியும்? அவரை எப்போதும், கெடுபிடி இன்றி சந்திக்க கூடிய அந்த நால்வரும் இப்போது எதிரிகளின் கையில்! இதை அறியாதவராக மருதநாயகம் இருந்தார்
   மருதநாயகம்   தொழுது கொண்டிருந்த போது  துரோகிகள் மூவரும் கயிற்றால் கட்டி பட்டனர்                                                                                              சூழ்நிலையை அறிந்து அன்னை மாஷா  ஒரு படையெடுத்து வர அதுவும் தடுத்து நிறுத்த பட்டது  சிறை பிடிக்க பட்ட மாவீரன் மருதநாயகத்தை மூலைக்கரை கொத்தளம் கொண்டு  சென்று  தற்போதைய சம்மட்டியாபுரம் எனும் இடத்தில் 14-01-1764ஆம் நாள் தூக்கிலிடட் னர்  மருதநாயகத்தை காட்டி கொடுத்த சீனிவாசராவ்  இவ்வளவு நாள் மருதநாயகத்திற்கு  விசுவாசமாக இல்லாதவர்கள் நாளை நமக்கும் கூட நம்பகமாக இருக்க மாட்டார்கள் என கருதி கண்களில் பச்சை கற்பூரம் வைத்து கட்டி   குருடனாக்கி விட்டனர்   பின்பு மருதநாயத்தை தூக்கிலிட்டனர் சில நேரம் கழித்து கயிற்றை அவிழ்த்து பார்த்த போது  அதிர்ச்சியில் உறைந்தனர் பகையாளிகள்,   கயிற்றை அவிழ்த்து பார்த்த போது உயிருடனே    இருந்தார் மருதநாயகம்    மீண்டும் தூக்கிலிட்டனர் அப்போதும் அவர் இரக்க வில்லை   செய்வதறியாது  திகைத்தனர் மருதநாயகம் மூச்சடக்கும் வித்தை தெரிந்தவர் என பின்பே தெரிந்தது                                                                                                      மறுபடியும் தூக்கிலிட்டு கீழே ஆழமாக குழி தோன்றி கயிற்றை வெட்டி விட்டு புதைத்தனர்              மருதநாயகத்தை வீழ்த்திய பெருமையோடு சென்றவர்களுக்கு  கனவில்  மருதநாயகம்  வந்து  உங்களை மீண்டும்  கருவருப்பேன் என சொல்லியதாகவும் இரண்டு    முறை மூச்சடைக்கி        தங்களை பயம் சொல்ல செயத மருதநாயகம்  மீண்டும் எழுந்து வந்து விடுவான் என அச்ச பட்டு   விடிய விடிய காத்திருந்து விடிந்ததும்     உடலை தோன்டி எடுத்து தலைப்பகுதி      உடல் கை கால் என தனி தனியாக வெட்டி எடுத்தனர்         தலையை       திருச்சி        மலைகோட்டைக்கும்    கைகளை      தேனி பெரியகுளத்திற்கும்   கால்களை  திருநெல்வேலிக்கு எடுத்து சென்று புதைத்து விட்டு  உடலை  மதுயை சம்மட்டியாபுரத்திலும் புதைத்தனர்  அதன் மேல் தற்போது தர்ஹா எழுப்ப பட்டுள்ளது                                                                                                     உலகின் பெருவாரியான நாடுகளை வெற்றி கொண்டு  சூரியன் மறையாத தேசம் வரை எங்கள் ஆட்சி என யார்  தட்டி நின்ற ஆங்கிலேயர்கள்   ஒரு தமிழனின் வீரத்தின் முன்  நடு நடுங்கி போனார்கள் என்பது  உலக வரலாற்றில் மட்டுமல்ல  தமிழக வரலாற்றிலும் இருட்டடிப்பு செய்யபட்டு விட்டது

தகவல் திரட்டு:-                                 

மறைக்க பட்ட பரையர் வரலாறு.   

நாயக்கர் வரலாறு                       

வட ஆர்க்காடு ஜில்லா  கையேடு(1951).

காலனியத் தொடக்க காலம் (1500-1800)எஸ்.ஜெயசீலஸ்டீபன்.             

கான்சாஹிப் சண்டை
நா.வானபாமாலை.                           

The viev of the English Interests in India

உலகின் முதல் தற்கொலை படை வீர பெண் யார் தெரியுமா?


உலகின் முதல் தற்கொலை படை வீர பெண் யார் தெரியுமா?
வேலு நாச்சியாரின் போர்ப்படையில் வாள் படை, வளரிப் படை, பெண்கள் படை ஆகிய மூன்றும் பிரதானமானவை. பெண்கள் படைக்குத் தலைமையேற்றவர்தான் குயிலி. குயிலி தலைமையிலான பெண்கள் படைக்கு ‘உடையாள் பெண்கள் படை’ எனப் பெயர் சூட்டியிருந்தார் இராணி வேலு நாச்சியார். உடையாள் என்பவள் ஒரு மாடு மேய்க்கும் சிறுமி. காளையார் கோவிலில் தன் கணவரைப் பறிகொடுத்த வேலுநாச்சியார் அரியாக்குறிச்சி என்கிற ஊருக்கு அருகில் வரும்போது உடையாள் என்கிற மாடு மேய்க்கும் சிறுமி எதிர்ப்பட்டாள்.

அவளுக்கு விடை கொடுத்துவிட்டுச் சென்ற வேலு நாச்சியாரைப் பின்தொடர்ந்து வந்த எதிரிகள் உடையாளிடம் வேலுநாச்சியார் சென்ற பாதை குறித்துக் கேட்டபொழுது காட்டிக் கொடுக்க மறுத்தாள். ஆகவே, எதிரிகளால் தலை வேறு உடல் வேறாக உடையாள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டாள்.

தமக்காக, தன் நாட்டுக்காக உயிரை ஈந்த உடையாளின் நினைவாகவே வேலுநாச்சியார் குயிலி தலைமையிலான மகளிர் படைக்கு உடையாள் மகளிர் படை எனப் பெயர் சூட்டியிருந்தார். மகளிர் படைக்குக் குயிலியை விடத் தகுதியானவர் வேறெவரும் இருக்க முடியாது என்பது வேலுநாச்சியாரின் இணையற்ற நம்பிக்கை.

வேலு நாச்சியாரின் போர்ப் பயிற்சிக்கான ஆசிரியர்களில் சிலம்பு வாத்தியார் வெற்றிவேலு மிக முக்கியமானவர். வேலுநாச்சியாரை சிறுவயது முதலே கண்காணித்து வருபவர். வேலுநாச்சியார் தனது கணவருடன் தேனிலவுக்காக மேற்குத் தொடர்ச்சி மலைக்குச் சென்றிருந்த சமயத்தில்கூட பாதுகாவலராக அரண்மனையால் அனுப்பப்பட்டவர் வெற்றிவேலு.

அதேபோல், தன் கணவரைப் பறிகொடுத்த பிறகு திண்டுக்கல் – விருப்பாச்சி பாளையத்தில் தங்கியிருந்து படை திரட்டிய கால கட்டத்தில் தன் மெய்க்காப்பாளராக வேலுநாச்சியார், சிலம்புவாத்தியார் வெற்றிவேலுவையே நியமித்திருந்தார். இவ்வளவு நம்பிக்கைக்குரியவராக விளங்கிய சிலம்புவாத்தியார் எதிரிகளால் விலை பேசப்பட்டார். வேலு நாச்சியாரின் திட்டங்களை, ஆதரவு சக்திகளை, அன்றாட நிகழ்வுகளை எதிரிகளுக்குக் காட்டிக்கொடுத்து வந்தார்.

அன்று ஒரு நாள் குயிலியின் தாயார் உடல்நிலை சரியில்லாத தால், குயிலி சிவகங்கைக்குச் செல்ல விருந்தார். இதை அறிந்த சிலம்பு வாத்தியார் உனக்கு எழுதப் படிக்கத் தெரியுமா என்று கேட்டார். குயிலிக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருந்தும் தெரியாது எனக் கூறினார். மிகவும் மகிழ்ச்சியடைந்த சிலம்பு வாத்தியார் ஒரு கடிதத்தைக் கொடுத்து சிவகங்கை அரண்மனைக்கு அருகிலிருக்கின்ற மல்லாரிராயன் என்பவரிடம் ஒப்படைக்கச் சொன்னார்.

அதற்கு ஈடாக கை நிறைய பணமும் கொடுத்தார். குயிலி, ”தாயைப் பார்க்கப் போகத்தான் போகிறேன். போகிற போக்கில் இக்கடிதத்தை எப்படியும் ஒப்படைத்து விடுகிறேன் பணம் வேண்டாம்” என மறுத்து விடுகிறார். புறப்படுவதற்கு முன்னதாக அன்று இரவு ஓய்வாக இருக்கும் நேரத்தில் கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் படித்துப் பார்க்கிறார். வேலுநாச்சியாரின் அன்றாட அசைவுகளையும், அவரை வீழ்த்திட அடுத்து எதிரிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் சிலம்பு வாத்தியார் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இராணியார் தன் தந்தையைப் போல பாவிக்கும் சிலம்பு வாத்தியாரா இப்படிக் காட்டிக்கொடுக்கிறார் என்பதை அறிந்து அதிர்சசியடைந்து ஆவேசமானார் குயிலி. குத்தீட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு சிலம்பு வாத்தியாரின் இருப்பிடம் விரைந்தார். அடுத்த நிமிடம் சிலம்பு வாத்தியாரின் குடிசையிலிருந்து அலறல் சத்தம்.

இரத்த வெள்ளத்தில் மிதந்துகிடந்த சிலம்புவாத்தியாரின் உடலையும் அருகே ஒரு கையில் குத்தீட்டியோடும் மறு கையில் சிலம்பு வாத்தியாரின் கடிதத்தோடும் கண்கள் சிவக்க தலைவிரி கோலமாக நின்ற குயிலியையும் வேலு நாச்சியார் உள்ளிட்ட அனைவரும் கண்டார்கள்.

நம்பிக்கைக்குரியவராக இருந்த சிலம்பு வாத்தியார் தன் காலைச் சுற்றியிருந்த நச்சுப்பாம்பு என அறிந்து வேலுநாச்சியார் அதிர்ச்சியுற்றார். தன் மீதும் நாட்டின் மீதும் கொண்ட பற்றின் காரணமாக ஒரு பெண் துணிச்சலாக மேற்கொண்ட செயலைக் கண்டு அகமகிழ்ந்தார்.

கூட்டத்தில் பத்தோடு பதினொன்றாகப் பார்க்கப்பட்ட குயிலி அன்றிலிருந்து இராணி வேலுநாச்சியாரின் மெய்க் காப்பாளரானார். இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் இராணி வேலுநாச்சியாரும் அவரது மகள் வெள்ளை நாச்சியாரும் குயிலியும் அறையில் உறங்கிக் கொண்டிருந்த நேரம் அறைக்கு வெளியே காலடிச் சத்தம் கேட்டது.

கேட்டும், கேட்காததுபோல் குயிலி படுத்துக் கிடந்தார். சன்னலைத் திறந்து நோட்டமிட்ட ஓர் உருவம் சட்டென வேலு நாச்சியார் படுத்துக்கிடந்த கட்டிலை நோக்கி சூரிக் கத்தியை வீசியது. பாய்ந்து தடுத்த குயிலியின் கையை கத்தி பதம் பார்த்தது. வலியால் அலறிய குயிலியின் சத்தம் கேட்டு எழுந்த வேலுநாச்சியார் ரத்தம் வடிந்த குயிலியின் கையைப் பார்த்து அதிர்ச்சியுற்றார்.

ஒரு தாயின் அரவணைப்போடு குயிலியைக் கட்டி அணைத்துக் கைகளுக்கு முதலுதவி செய்து கொண்டிருந்தார். கத்தி வீசிய உருவமோ சிவகங்கையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. இச்சூழலில் சிவகங்கைச் சீமையில் ஆற்காடு நவாப்பும் ஆங்கிலேயரின் கைக்கூலிகளான மல்லாரிராயனும், அவன் தம்பி ரங்கராயனும் குயிலியை மையப்படுத்தி சாதிவெறிக்குத் தூப மிட்டுக்கொண்டிருந்தனர்.

அதாவது மேல்சாதியைச் சார்ந்த சிலம்பு வாத்தியார் வெற்றிவேலுவை கீழ்சாதிப் பெண்ணான குயிலி குத்திக் கொலை செய்திருக்கிறார். ஒடுக்கப்பட்ட சமூகமான சக்கிலியர் குலத்தில் பிறந்த குயிலிக்கு ஆதரவாக வேலுநாச்சியார் செயல்பட்டால் நம் சாதி கவுரவம் என்ன ஆவது? தாழ்த்தப்பட்டவர்கள் நம்மை எள்ளி நகையாட மாட்டார்களா? என குயிலியின் செயலுக்கு நியாயம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

இதையெல்லாம் கேள்விப்பட்டு வேலுநாச்சியார் தம் படைவீரர்களுக்குப் பகிரங்கமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ”எதிரிகள் சிவகங்கை மண்ணிலிருந்து விருப்பாச்சியிலுள்ள நம் இருப் பிடத்திற்கு வந்து தூங்கிக் கொண்டிருந்த என் அறையில் கத்தி வீசியிருக்கிறார்கள்.

இது என்னைக் கொல்வதற்கா? அல்லது குயிலியைக் கொல்வதற்கா? ஆனால் இத்தனைத் துணிச்சலாக என் அறைக்கு அவர்கள் எப்படி வந்தார்கள்? என்பதுதான் என் கேள்வி. நம் படை வீரர்களின் ஆதரவு இல்லாமல் அவர்களுக்கு இந்தத் துணிச்சல் வந்திருக்காது. சிவகங்கையில் நம் எதிரிகள் கடைசியாக என்னை வீழ்த்துவதற்காக எடுத்துள்ள சாதி என்னும் ஆயுதம் நம் வீரர்களையும் பாதித்திருப்பதாகவே நான் கருதுகிறேன்.

என்னுடைய அத்தனைவிதமான சலுகைகளையும் சன்மானங்களையும் பெற்றுக் கொண்ட சிலம்பு வாத்தியார் எனக்குத் துரோகம் செய்தார். ஆனால் எந்தவிதமான சலுகையினையும் எதிர்பாராத குயிலி என் உயிரைக் காப்பாற்றியிருக்கிறாள்.

”சிலம்பு வாத்தியார் என் சொந்த சாதிக்காரராக இருந்தாலும் அவர் எனக்கு துரோகமல்லவா இழைத் தார்? ஆனால் குயிலி சக்கிலியர் குலத்தில் பிறந்திருந்தாலும் நம் நாட்டிற்கு துரோகமிழைத்தவர் களைக் கண்டறிந்து களையெடுத்திருக்கிறாளே, உங்களுக்குச் சாதிதான் முக்கியம் என்றால் நீங்கள் இந்த நிமிடமே என்னுடைய படையிலிருந்து விலகிக் கொள்ளலாம். சாதிவெறி பிடித்தவர்கள் எனக்குத் தேவையில்லை.”

வேலுநாச்சியாரின் இந்த அறிவிப்பு கடுமையாக இருந்தாலும்கூட அது நியாயமாகப்பட்டதால் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். ஆனால் குயிலி வேலுநாச்சியாரின் நெஞ்சில் பன்மடங்கு உயர்ந்தார். மெய்க்காப்பாளராக விளங்கிய குயிலி பெண்கள் படைக்குத் தலைமையாக்கப்பட்டார்.

8 ஆண்டுகளுக்குப் பிறகு போருக்குத் தேவையான தளவாடங்கள் வந்து சேர்ந்தன. பன்னிரண்டு பீரங்கி வண்டிகள், நூற்றுக் கணக்கான துப்பாக்கிகள் திப்பு சுல்தானால் வேலு நாச்சியாரிடம் ஒப்படைக்கப்பட்டன. 1780ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 5ஆம் நாள் விருப்பாச்சி பாளையத்திலிருந்து சிவகங்கையை நோக்கி வேலு நாச்சியாரின் படை புறப்பட்டது. உடையாள் பெண்கள் படைக்குத் தலைமையேற்று குயிலி கம்பீரமாக வந்து கொண்டிருந்தார்.

முதலாவதாக வேலுநாச்சியாரின் படையை மதுரை கோச்சடையில் எதிர்த்து நின்றான் மல்லாரிராயன். ஒரு மணிநேரப் போரிலேயே மல்லாரி ராயன் குத்திக் கொலை செய்யப்பட்டான். வேலு நாச்சியாரின் படைகள் வீறு நடைபோட்டன. அடுத்து திருப்புவனத்தில் மல்லாரிராயனின் தம்பி ரங்கராயன் பெரும்படையோடு எதிர்த்து நின்றான்.

மருது சகோதரர்கள் அவனைத் தவிடு பொடியாக்கினர். அடுத்து வெள்ளைக்கார அதிகாரிகள் மார்டின்ஸ், பிரைட்டன் மற்றும் நவாபின் படைத் தளபதி பூரிகான் தலைமையில் மானாமதுரையில் மாபெரும் படை எதிர்த்து நின்றது. வேலு நாச்சியாரின் பீரங்கிப்படை அதனை அடித்துத் துவம்சம் செய்தது. அன்று மானாமதுரை வைகை ஆற்றில் தண்ணீருக்குப் பதிலாக இரத்தம் ஓடிக்கொண்டிருந்தது.

முத்துவடுகநாதரின் படுகொலையில் பெரும்பங்கு வகித்த ஆங்கிலத் தளபதி ஜோசப் சுமித் காளையார் கோவிலில் வேலுநாச்சியாரின் படையை எதிர்கொண்டான். அங்கும் வேலு நாச்சியார் படை வெற்றிக்கொடி நாட்டியது. ஆங்கிலப் படைகள் புறமுதுகிட்டு ஓடின.

வேலுநாச்சியாரின் படைகள் சிவகங்கைச் சீமையில் வெற்றி முழக்கத்துடன் நுழைந்தன. ஆனால் அங்குதான் யாரும் எதிர்பாராத ஆபத்து காத்துக்கொண்டிருந்தது.

தனது நயவஞ்சகத்தால் மறைந்திருந்து வேலு நாச்சியாரின் கணவரது உயிரைப் பறித்த கொடுங்கோலன் ஆங்கிலத் தளபதி பாஞ்சோர் காளையார் கோவிலிலிருந்து சிவகங்கை அரண்மனை வரையிலும் அடிக்கு ஒரு போர் வீரனை நிறுத்தியிருந்தான். அனைவரது கைகளும் துப்பாக்கி ஏந்தியிருந்தன. பீரங்கிகளும் அரண்மனையைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான துப்பாக்கி களும் வெடிபொருட்களும் அரண்மனைக் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.

என்னதான் வீரமறவர்கள் வேலுநாச்சியாரின் படையில் இடம்பெற்றிருந்தாலும் ஆங்கிலேயரின் நவீன ஆயுதங்கள் மிகப்பெரிய சவாலாக இருந்தன. விருப்பாச்சியிலிருந்து தொடர் வெற்றிகளைக் குவித்து வந்த வேலுநாச்சியார் இறுதிப் போரில் தோற்றுவிட்டால் என்ன ஆவது என நினைப்பதற்கே அச்சமாக இருந்தது. இருப்பினும் நம்பிக்கையைக் கைவிடவில்லை.

யாருக்கும் தெரியாமல் மாறுவேடத்தில் ஊர் நிலவரம் அறிந்து வந்த குயிலி, “நாளை விஜயதசமித் திருவிழா. சிவகங்கையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் கொலு நடைபெறவிருக்கிறது. பெண்களுக்கு மட்டுமே அனுமதி. நாம் அனைவரும் மாறுவேடத்தில் கோயிலுக்குள் செல்வோம். அங்கிருந்து போரைத் தொடங்குவோம்” என்று யோசனையை முன்வைத்தாள்.

குயிலியின் யோசனையை அரசியும் ஏற்றுக்கொண்டார். அரசியின் தலைமையில் அனைவரும் மக்களோடு மக்களாகக் கோயிலுக்குள் புகுந்தனர். மருதுபாண்டியர்களின் தலைமையில் படைவீரர்கள் ஊருக்கு வெளியே காத்துக்கொண்டிருந்தனர். ஆயுத பூஜைக்காக வெள்ளையர்கள் ஆயுதங்கள் அனைத்தையும் கோட்டையின் நிலா முற்றத்தில் வைத்திருந்தனர். உள்ளே நுழைந்ததுமே அதைக் கண்டுகொண்டார் குயிலி.

சரியான தருணம் பார்த்துக் கொண்டிருந்த அரசியும் பெண்கள் கூட்டம் கலையும் நேரம் கையை உயர்த்தி, ‘வெற்றிவேல்! வீரவேல்’ என்று முழங்கினார். மாலைகளுக்குள் இருந்த வாள் வெள்ளையர்களின் தலையை நோக்கிச் சீறிப்பாய்ந்தது.

ஆபத்தை உணர்ந்த ஆங்கிலேயத் தளபதி பான்சோர் ‘சார்ஜ்’ என்று கத்தினான். வெள்ளையர்களும் தங்களுடைய ஆயுதக் கிடங்குக்கு ஓடினர். அவர்களுக்கு முன்னே குயிலியும் ஓடினார். அவரது மேனியில் விளக்குக்காகக் கோயிலில் இருப்பு வைக்கப்பட்டிருந்த எண்ணெய் வழிந்து கொண்டிருந்தது.

தீப்பந்தத்தால் தன்மேல் தீயிட்டுக்கொண்டு ஆயுதக் கிடங்குக்குள் குதித்தார். ஆயுதங்கள் அனைத்தும் வெடித்துச் சிதறின. தன்னையே மாய்த்துக்கொண்டு வெள்ளையர்களின் ஆயுதங்களைத் தீக்கு இரையாக்கினார் குயிலி. மீதமிருந்த வெள்ளையர்களை, நாச்சியாரின் படைவீரர்கள் துவம்சம் செய்தனர்.

ஊர் எல்லையிலிருந்து மருது சகோதரர்களும் கோட்டையை நோக்கி முன்னேறியிருந்தனர். இழந்த நிலம் அனைத்தையும் மீட்டாயிற்று. “எங்கே குயிலி?” என்று தேடுகிறார் அரசி. தன்னுயிர் தந்து மண்ணுயிர் மீட்டது குயிலிதான் என்பதை அறிந்து அவரின் வீரத்தையும் தியாகத்தையும் கண்டு நெகிழ்ந்து போனார். உலகின் முதல் தற்கொலைப் போராளியானார் வீரப்பெண் குயிலி.

அன்றிலிருந்து, தங்கள் மண்ணையும் மானத்தையும் காத்த குயிலியை அம்மனாகவே வழிபடத் தொடங்கினார்கள் இப்பகுதி மக்கள். சிவகங்கை- மதுரை சாலையில் முத்துப்பட்டி என்னும் கிராமத்தில் ஒரு கோயில் கட்டப்பட்டது. அங்கிருந்த அம்மனை ‘தீப்பாய்ந்த அம்மன்’ என்ற பெயரிட்டு மக்கள் வணங்குகிறார்கள்.

இக்கோயில் குயிலிக்காகக் கட்டப்பட்டது என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். இப்போது அந்தக் கோயில் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகிக் கிடக்கிறது. உள்ளே, குயிலியின் நினைவாக நடப்பட்ட நடுகல்லும், சூலாயுதம் ஒன்றின் முனைப்பகுதியும் மட்டுமே மிஞ்சியிருக்கின்றன.