வியாழன், 2 ஏப்ரல், 2020

ஜுன்னர்- மிக பழமையான வரலாற்று நகரம் பற்றி தெரியுமா!

ஜுன்னர்- மிக பழமையான வரலாற்று நகரம் பற்றி தெரியுமா!


இந்திய சுற்றுலாப்பயணிகளிடையே பிரபலமாக அறியப்படுகின்ற சுற்றுலாத்தலங்களில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஜுன்னர் நகரமும் ஒன்றாகும். இது தன் ஆன்மீக, வரலாற்று மற்றும் புராண ஐதீகப் பின்னணிக்காக புகழ் பெற்று விளங்குகிறது. இங்கு பல தொன்மையான கோயில்கள், அற்புதமான குகைக்கோயில்கள் மற்றும் கோட்டைகள் ஆகியன நிறைந்துள்ளன. சஹயாத்ரி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இந்த ஜுன்னர் நகரம் புனேயிலிருந்து வடக்காக 94 கி.மீ தூரத்திலும், மும்பையிலிருந்து 100 கி.மீ தூரத்திலும் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து தலை சுற்ற வைக்கும் 2260 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது.
ஜுன்னர் – வரலாற்று நகரம்: ஆயிரம் வருடங்களுக்கு பின் செல்லும் வளமான வரலாற்றை இந்த ஜுன்னர் நகரம் கொண்டுள்ளது. மிகச்சிறந்த மராத்தா வீரரான சத்ரபதி சிவாஜி ராஜே போஸ்லே பிறந்த ஷிவ்னேரி கோட்டை இந்த ஸ்தலத்துக்கு அருகில் உள்ளது. ஆதியில் ஜீமா நகர் என்று அறியப்பட்ட இந்த ஜுன்னர் நகரம் ஷாக் வம்சத்தைச் சேர்ந்த நாஹபன் மன்னரின் அரசுக்கு தலைநகராக விளங்கியிருக்கிறது. பின்னர் இது சாதவாஹன மன்னரான சாதகர்னியாவால் கைப்பற்றப்பட்டு இங்கு ஷிவ்னேரி கோட்டையும் அவரால் கட்டப்பட்டிருக்கிறது. அக்காலத்தில் ஒரு வணிகப்பாதையாக இருந்த நானேகாட் பகுதியை கருத்தில் கொண்டு இந்த கோட்டை கட்டப்பட்டுள்ளது.
ஜுன்னர் பகுதியிலுள்ள குகைகள் இந்த நகருக்கு கட்டிடக்கலை கேந்திரம் என்ற புகழைத் தேடித்தந்துள்ளது. இங்கு மூன்று குகைக்கோயில் தொகுப்புகள் உள்ளன. மன்மோடி மலைக்குகைகள், கணேஷ் லேனா குகைகள் மற்றும் துலிஜா லேனா குகைகள் என்பவையே அவை. இவை யாவும் ஒரு அற்புதமான பாறைச்சிற்ப சின்னங்களாக விளங்குகின்றன. இவை தவிர 30 பாறைக்குடைவு குகைகளை கொண்டுள்ள லென்யாத்ரி குகைகளும் முக்கியமான அம்சமாக உள்ளது.
ஜுன்னர் பற்றிய மற்றொரு விசேஷமான அம்சம் என்னவெனில் இது அதிகமான சிறுத்தை எண்ணிக்கையை 500 ச.கி.மீ பரப்பளவில் கொண்டிருப்பதாகும். விமானம், ரயில், சாலை போன்ற மூவழிகளிலும் எளிதாக பயணிக்கும் விதத்தில் அமைந்துள்ள இந்த ஜுன்னர் நகரம் குளுமையான இதமான பருவநிலையை வருடமுழுவதும் கொண்டு ஒரு அற்புதமான விடுமுறை சுற்றுலாத்தலமாக திகழ்கிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக