வியாழன், 9 ஆகஸ்ட், 2018

நீங்கள் அறியாத தஞ்சை பெரிய கோவில் மர்மங்கள்...

நீங்கள் அறியாத தஞ்சை பெரிய கோவில் மர்மங்கள்...

கட்டி முடித்து ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்று தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவும் தொடங்கிவிட்டது. ஆனால் கோவிலைப் பற்றி நமக்கு தெரியாத பல விஷயங்கள் இருக்கின்றன.
1)விழுகின்ற நிழல்

தஞ்சை கோவிலைப் பற்றிய பல உண்மைகளோடு, சில பொய்களும் கலந்திருக்கின்றன. அதுவும் எது உண்மை என காலம்காலமாக நம்பும் அளவிற்கு. கோபுரத்தின் நிழல் கீழே விழாது என்று நானும் நம்பிக்கொண்டிருந்தேன். நீங்களும் நம்பிக்கொண்டிருந்தால் அதனை மாற்றிக் கொள்ளுங்கள். அது பொய் என்று படம் பிடித்து விளக்கியிருக்கின்றார்கள்.
2)யாளி வீரர்கள்

இந்த யாளியில் வீரர்கள் படையெடுத்து செல்வதை பார்த்தீர்களா. இதைப் போன்ற ஏகப்பட்ட வீரர்கள் தங்கள் யாளியுடன் கிளம்பிச் செல்கிறார்கள். இவர்களை தஞ்சைக் கோவிலில் பார்த்திருக்கின்றீர்களா?. இல்லையா ?. இத்தனை யாளிகள் எப்படி உங்கள் கண்களிலிருந்து தப்பின?. தெரிந்து கொள்ள ஆசையா அடுத்த சிற்பத்தினை பாருங்கள். ஒரு பேனா மூடியை வைத்து அந்த சிற்பம் எத்தனை சிறியதாக இருக்கிறதென சொல்லியிருக்கின்றார்கள். பெரிய கோவிலில் இத்தனை சிறிய சிற்பங்கள் கண்களில் படுபவது ஆச்சிரியமானதுதானே.
3)மோனோலிசாவை மிஞ்சும் சிவன்

டாவின்சியின் மோனோலிசாவை எத்தனை உச்சத்தில் வைத்துப் போற்றுகிறோம் நாம். அவள் சோகமாக இருக்கிறாள், அதே சமயம் மர்மப் புன்னகையையும் வீசுகிறாள் என்று அவளின் அழகை போற்றுகிறோம். ஆனால் இங்கே நம் தஞ்சையில் அப்படி ஒரு சிற்பம் இருப்பதை நாம் அறியாமல் இருக்கிறோம் என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா. உண்மைதான். இந்த சிற்பத்தில் கோபம் இருப்பதை போன்று அன்பான பக்கமும் இருக்கிறது. கோபமும், புன்னகையும் கொண்டது இந்த சிற்பம்.
4)பெரிய நந்தி

கோவிலின் முன்னால் இருக்கும் நந்தி வளர்ந்து கொண்டே இருந்தது. அதன் பிறகு அதன் தலையில் ஆணி அடித்து அது வளர்வதை தடுத்து நிறுத்தினார்கள் என்று சிறுவயதில் கதை கேட்டிருப்போம். நாமக்கல் ஆஞ்சிநேயர் சிலைக்கு கூட இதுபோல ஒரு கதை உண்டு. மிகப்பெரிய நந்தியை சிற்பமாக வடித்திருப்பதை நம்ப இயலாமல் சுவாரசியத்திற்காக சொன்ன கதைகள் இவை. ஆனால் உண்மையில் இந்த நந்தி சிற்பம் கோபுரத்தில் உள்ளது.
5)துவாரபாலகர்கள்

சரி, குட்டி குட்டி சிற்பங்களையெல்லாம் கண்டு கொள்வது கஸ்டம் தான். ஆனால் ஒரு யானை அளவிற்கு பெரிய சிற்பங்களையே நாம் கோட்டை விட்டிருக்கிறோம் தெரியுமா. பொதுவாக சிற்பத்தின் அளவை நமக்கு காட்ட அவர்கள் பேனாவின் மூடியை, கைப்பேசியை அருகே வைத்து புகைப்படம் எடுப்பது வழக்கம். இந்த சிற்பத்தின் பிரம்மாண்டத்தினைக் காட்ட யானையை உபயோகப்படுத்தியிருக்கின்றார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக